Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி கைது! அடிமேல் விழுந்த அடியால் தி.மு.க அதிர்ச்சி

வெள்ளி, 20 மே 2011 14:45

உலகின் மிகப் பெரும் தொலைத்தொடர்பு ஊழலான ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

  • Replies 70
  • Views 8k
  • Created
  • Last Reply

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு :

நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளார். கனிமொழி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார்.

அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கனிமொழி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.

இந்தநிலையில் பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மனு விசாரணைக்கு வந்தபோது கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மேலும் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

-நக்கீரன்

கனிமொழியை கைது செய்ய

சிபிஐ கோர்ட் உத்தரவு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கனிமொழி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் படி கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்.

-நக்கீரன்

அடுத்தது கஸ்பார்.

மிகவும் நல்லசெய்தி.

கருணாநிதியை விட இவர்களே உண்மையான துரோகிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

subiththiran அப்படித்தான் இருக்கும்.

Edited by tamil arasu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திகார் சிறையில் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.

கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இரண்டு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து எனக்கு "இனிப்பான" செய்திகளாகவே வந்து கொண்டிருக்குது (செய்தி முதலே வந்திருந்தாலும் நான் வெள்ளிக்கிழமை விடியத்தான் பார்த்தன்!). முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களுக்கு, பொறுத்தது போதும் எண்டு கடவுளே இறங்கி வந்து நீதி கொடுக்க வெளிக்கிட்டது மாதிரி நடக்குது இதெல்லாம்!

கனிமொழி கைது-கருணாநிதி வீட்டில் திமுக தலைவர்கள்

May 20, 2011

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ள திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதி வீட்டில் குவிந்துள்ளனர்.

karu1112.jpg

கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் வீட்டில் அவர்கள் குவிந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு மேலும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என்ற எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர். விரைவில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர்கள், கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனிமொழி கைது குறித்து இதுவரை திமுக சார்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. பெரும் அமைதியும், இறுக்கமான சூழ்நிலையும் காணப்படுகிறது.

திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு அவர் கோபமாக சென்று விட்டார். பதிலளிக்க மறுத்து விட்டார்.

-----

கனி‌மொழி கைது : கருணாநிதி அதிர்ச்சி – சிகிச்சை

May 20, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அவரது குடும்ப டாக்டர் கோபால் சிகிச்சை செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐடி நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர்.

-அலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

கனி‌மொழி கைது : கருணாநிதி அதிர்ச்சி – சிகிச்சை

May 20, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அவரது குடும்ப டாக்டர் கோபால் சிகிச்சை செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஐடி நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர்.

-அலைகள்

இப்படித்தான்... முள்ளிவாய்க்காலில் தமிழர் செத்துக்கொண்டிருக்கும் போது......

டெல்லிக்கு.... தந்தியும், கடிதமும் அனுப்பிவிட்டு....

மெரினாவில் மூண்று மணித்தியால உண்ணாவிரதம் இருந்த அரசியல் சாணக்கியன், ஞானமுனி கருணாநிதிக்கு இது எல்லாம் எல்லாம்... அல்வா சாப்பிடுற மாதிரி. இதிலிருந்து அவர் மீண்டு வருவார்.

இப்படித்தான்... முள்ளிவாய்க்காலில் தமிழர் செத்துக்கொண்டிருக்கும் போது......

டெல்லிக்கு.... தந்தியும், கடிதமும் அனுப்பிவிட்டு....

மெரினாவில் மூண்று மணித்தியால உண்ணாவிரதம் இருந்த அரசியல் சாணக்கியன், ஞானமுனி கருணாநிதிக்கு இது எல்லாம் எல்லாம்... அல்வா சாப்பிடுற மாதிரி. இதிலிருந்து அவர் மீண்டு வருவார்.

என்னதான் இருந்தாலும் உள்ள போனது அவரின்ர சொந்த ரத்தமல்லோ? :unsure:

:D அது உண்மையாக இருந்தால் ஒரு சின்னத் தாக்கம் என்றாலும் இருக்கத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் உள்ள போனது அவரின்ர சொந்த ரத்தமல்லோ? :unsure:

:D அது உண்மையாக இருந்தால் ஒரு சின்னத் தாக்கம் என்றாலும் இருக்கத்தான் செய்யும்.

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் கருணாநிதி.

அவருக்கு, இப்ப சாவு வரவே.... வராது.

இது, சும்மா... சோனியாவை தன் மேல், இரக்க வைக்கப் படும் நாடகம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர் செத்துக் கொண்டிரிக்கும் போதும்.... அவர், சரியான முதுகு வலியால் கஸ்ரப்பட்டு... ஆஸ்பத்திரியில் போய் படுத்திருந்தவர்.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவச் சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ

ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,

அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்

தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி

பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

மனிதன் என்ற போர்வையில்,

மிருகம் வாழும் நாட்டிலே

நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....

(அங்கே சிரிப்பவர்கள் )

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?

அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

தர்மத் தாயின் பிள்ளைகள்

தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித்

தலைகுனிய வைப்பதா?

(அங்கே சிரிப்பவர்கள் )

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்

நேரம் வரும் கேட்கிறேன்

பூனை அல்ல புலி தான் என்று

போகப் போகக் காட்டுகிறேன்

போகப் போகக் காட்டுகிறேன்

(அங்கே சிரிப்பவர்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இரத்தம் காய முதல் வந்த கள்ளக் கோஷ்டிகள்....

கனிமொழியின் தலையாட்டலையும், பாலுவின் பல்லையும் பார்க்கச் சகிக்க முடியவில்லை.

இதுகள் செய்த பாவத்துக்கு... நரகத்திலும் இடம் கிடைக்காது.

“உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” - தி.மு.க., தலைவர் கருணாநிதி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=243761

சில பின்னூட்டங்கள்

எல்லோரும் பெண்ணை பெற்றவர்கள் தான். அவர்கள் கருணாநிதியை போல, மகளை தான் செய்யும் ஊழலில் பங்கு பெற செய்தால் சிறைக்கு போக வேண்டியது தான். சட்டம் தன் கடமையை செய்யும். -K Sanckar

வேற என்ன செய்ய காங்கிரஸ் எதிர்த்தா தயாளு வும் உள்ள...- kumar swamy

மூன்றாவது மனைவியின் மகள் முன்றாவது மாமியார் வீட்டில். - jkcongress

விகடனில் வந்த ஒரு பின்னூட்டம். ஈசன் என்பவர் எழுதியிருக்கின்றார்

"கனி மொழி

தந்தையின் மொழி

2ஜி வழி

பணம் கொழி

சிபிஐ வழி

விழுந்தது பழி

தேர்தலில் சுழி

பிதுங்கியது விழி

திஹாரில் கழி

கசங்கியது விழி

வாழ்வில்வந்தது குழி

பேசைல்லை மொழி"

‎2011 : செம்மொழியான தமிழ்மொழியாம் ........

2010 : கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் ......

-Thanks to fb!

மன் மோகன் சிங் தான் ஒரு நேர்மையான அரசியல் வாதி என நிருப்பிக்கிறார். அல்லது காங்கிரஸை பொறுத்த மட்டில் ராஜீவின் கொலையை திமுக தடுத்து இருக்கலாம் என்பதே,

அதனால் திமுகவை வைத்து தமிழ்நாட்டை அமைதியாக்கி புலிகளை அழித்தார்கள் இனி திமுக்காவை அழிப்பார்கள் போல்?

  • கருத்துக்கள உறவுகள்

மன் மோகன் சிங் தான் ஒரு நேர்மையான அரசியல் வாதி என நிருப்பிக்கிறார். அல்லது காங்கிரஸை பொறுத்த மட்டில் ராஜீவின் கொலையை திமுக தடுத்து இருக்கலாம் என்பதே,

அதனால் திமுகவை வைத்து தமிழ்நாட்டை அமைதியாக்கி புலிகளை அழித்தார்கள் இனி திமுக்காவை அழிப்பார்கள் போல்?

இந்த பணகொள்ளையில் முக்கிய நபரே மன்மோகன் சிங்குடைய மகள்தான். அவரை காப்பாற்றதான் இப்போ கனிமொழியை உள்ளே போட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுகிறார்கள்போல் உள்ளது. கனிமொழியின் அதிகாரத்தை வைத்து கையெழுத்து வாங்கி அதில் ஒரு தொகையை கனிமொழிக்கு தருவாத டெல்லியில் இருந்து பறந்துவந்திருக்கிறார் சிங்கின் மகள். இது உலகளாவிய ரீதியான பணமோசடி என்பதால் சர்வதேச சந்தைகளை (ஸ்ரொக் மார்கெட்) சார்ந்த செய்திகள் சிங்கின் மகளையே முதன்மைபடுத்தி எழுதுகின்றன கனிமொழி இராண்டாவது இடத்தில்தான் இருக்கிறார். இந்திய செய்திகள் அதை இருட்டடிப்பு செய்கின்றன இந்தியசெய்திகளை பிரதியெடுப்பதால் தமிழ் செய்திகளிலும் சிங்கின் மகள் பாதுகாக்கபடுகிறார்.............

ஒரு துரதிஸ்ட செய்தி சென்ற கிழமைதான் நியூயார்கில் நடந்துகொண்டிருக்கும் ராஜரட்ணத்திற்கான வழக்கில் அவர் குற்றவாழி என்பது நிரூபிக்கபட்டுள்ளது இப்போது கனிமொழி. பல முதன்மை செய்திகிளில் "தமிழ்" "தமிழர்கள்" என்ற சொற்கள் அடிபடுகின்றது.

பிரபல்யமான தி எக்னோமிஸ்ட் சஞ்சிகை இரண்டு செய்திகளை பற்றியும் கட்டுரை எழுதியுள்ளது அதில் இரண்டிலும் தமிழர்கள் என்பது சுட்டிகாட்டபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

‎2011 : செம்மொழியான தமிழ்மொழியாம் ........

2010 : கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் ......

-Thanks to fb!

கம்பிக்கு பின்னால்... கனிமோழி இருந்த, ஆண்டை திருத்த வேண்டும் என நினைக்கின்றேன்.

கனிமொழி மேல்முறையீடு செய்யலாம் :

ராம்ஜெத்மலானி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கில் கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ‘’கைது நடவடிக்கைய‌ை எதிர்த்து கனிமொழி மேல்முறையீடு செய்யலாம்’’ என்று கனிமொழிக்காக வாதாடிய பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.

-நக்கீரன்

கனிமொழி கைது: பாஜக வரவேற்பு

First Published : 20 May 2011 06:08:08 PM IST

புதுதில்லி, மே 20- 2ஜி முறைகேடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் 2ஜி விசாரணை நடைபெறுவதால் தான் இது சாத்தியமாகியுள்ளது என்று அக்கட்சி கருத்து கூறியுள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர் இன்று மாலை தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

"தில்லி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான விசாரணையிலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2ஜி முறைகேட்டில், 2008 முதலே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை கடந்த 13 மாதங்களாக சிபிஐ விசாரித்து வருகிறது. எனினும், உச்சநீதிமன்றம் நேரடியாக கவனிக்கத் தொடங்கிய பின்னரே விசாரணையில் வேகம் காட்டப்படுகிறது." என்று பிரகாஷ் ஜாவெத்கர் கூறினார்.

இன்று பிற்பகல், கனிமொழியும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-தினமணி

---

பின்னூட்டம்:

1 76 ,000 கோடி அனுமான இழப்போ, அல்லது 32 ,000 ஆயிரம் உண்மையான இழப்போ, அதனை விசாரிப்பது இந்த 234 கோடி ஊழலை விசாரிப்பதில் மறந்து போய்விடக்கூடாது. இவர்கள் சொத்தினை முதலில் பறிமுதல் செய்து, நாட்டின் வறுமையினை ஒழிக்கப் பயன்படுத்தலாம். ஆட்சி இழந்த கருணாநிதியினை அடிக்கக் காங்கிரசுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதன் மூலம், பாராளுமன்றத் தேர்தலுக்கு பேரம் பேசத் தயாராகிவரும் மத்திய அரசின் அமைச்சர்களும் மற்றவர்களும் அடித்த பல்லாயிரக் கணக்கான கோடி ஊழல் மறக்கப்படக் கூடாது. ஊடகங்கள் எச்சரிக்கையாக அவ்வப்பொழுது மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஊழல் செய்தவர்கள் இறப்பினால்கூட உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெரும் வரை இந்த வழக்கு குறித்த நினைவுகள் மக்கள் மனதில் மறக்கக்கூடாது. குற்றவாளிகள் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும். அது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படும். நீதி மன்றங்கள் இதைச் செய்யத் தவறினால் மக்கள் செய்ய வேண்டும். By spr

தேர்தலுக்கு முன்பாக கனிமொழி கைதாகி இருந்தாலதி மு க விற்கு இருபத்திமூன்று இடங்கள் கூட கிடைத்திருக்காது !!! டெபாசிட் பறி போய் இருக்கும் !!! அதுசரி ,,கருனாகநிதியின் மனைவியான தயாளு அம்மாள் ஏன் காது செயப்படவில்லை ??? :D

By எல் சி நாதன்

-------------

டில்லி செல்ல கருணாநிதி திட்டம்?

First Published : 20 May 2011 05:56:22 PM IST

Last Updated : 20 May 2011 06:15:28 PM IST

சென்னை, மே 20: கனிமொழியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கனிமொழியின் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி, இது தொடர்பாக புதுதில்லி செல்ல முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாநிதி எந்நேரமும் புதுதில்லி செல்ல வாய்ப்புள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் கருணாநிதியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். எனினும், ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இருப்பதாக கூறினார்.

பின்னூட்டம்:

நன்றும் தீதும் பிறர் தர வாரா...! கடவுள் நம்பிக்கை இருப்பவராக இருந்தால் காசி, ராமேஸ்வரம் என்று போக வேண்டிய வயதில் திஹார் புக வேணுமா எனக் கேட்கலாம். நமக்குதான் சாமி கெடயாதே ... டெல்லி, புழல், பாளையங்கோட்டை ..எங்க வேண்ணா போவலாம். மத்த மக்கள் ஓய்வு குடுத்தாலும் பெத்த மக குடுக்க மாட்டேங்கிறா ...தமிழ் மக்களுக்கு தொண்டு செய்ய முடியலயேன்னு வருத்தத்தோட டெல்லி போறேன்.. ..இதுக்கு அறிக்கை உட முடியாது..தந்தியும் அடிக்க முடியாது.. பாப்பும்

By அசோகன் S

ஆஹா ஓஓஹோ பாசம் பிச்சுக்குது தாத்தாக்கு அஞ்சு பைசாவோ அஞ்ச்சுறுவாயோ ஆயிரம் றுவாயோ எல்லாமே திருட்டுத்தான் சாமி கொஞ்சமா கொள்ளை கோடிலேயே பதுக்கிட்டு இப்போ ஞீ நு முலிக்குதுங்க மாட்டிக்கொண்டால் அந்தா வேடிக்கை கானக்கனாயிரம் இல்ல கோடிக்கண்கள் வேண்டுமே உலஹமே பாக்குது இந்த கண்ராவிய

By skveni

அங்கே நேரில் போனால் தானே சோனியா காலில் விழுந்து கெஞ்ச முடியும்? இங்கே இருந்து அறிக்கை விட்டால் எதுவும் நடக்காது என்பது தானை தலைவனுக்கு நன்கு தெரியும்.

By vel

Lesson learnt by Kanimozhi and family in the hard way by eating 'kali' instead of 'kani' in Tihar Jail with her 'Muzhi' (eyes view) is changed from 'பொய்' 'Mozhi'

By ஸ்ரீதர் madurai

அருமை அருமை அருமை வாழ்க வையகம் வாழ்க தமிழ் மொழி வாழ்க வாழ்க வாழ்க தமிழ் வாழ்க - தமிழ் என்று பொய் சொல்லி திரிந்த உன்னக்கு நல்ல படம். ஆண்டவன் மிக பெரியவன்

By umabhar1

இன்னமும் நீ ண் ஊஎரோட இருக்கே

By mittu

பட்டியன் அண்ணன் சொன்ன மாதரி அங்க போயி என்னத்த கிழிக்க போறீக? போடா போ திகார் ஜெயில் முன்னாடி எதாவது ஆட்டம் போட்டேனா டுவசர் அன்துரும்

By முருகன்

கடிதம் எலுதல்லாமெ?

By senthi

தமிழ் துரோகிக்கு ஆண்டவனின் தண்டனையின் தொடக்கம். லட்ச கணக்கான் ஈழ தமிழர்களின் உயிருடன் அரசியல் செய்த, ஊழல் பெருச்சாளிக்கு, மனை, துணையுடன் சிறை சென்றாலும் பாவம் குறையாது.

By சுரேஷ்

இலங்கை தமிழர்களின் சாபம் இது. தப்ப முடியாது கலைஞரே! இப்போது உங்கள் மகள்.அடுத்தது முழு குடும்பமும் சந்தி சிரிக்க போகிறது. அப்போதான் தமிழ் ஈழம் மலரும்.

By mai arokianathan

ராஜாத்தியை தனது மனைவி இல்லை என்றும் அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு யார் தந்தை என்பது தனக்கு தெரியாது என்றும் நாற்பது வருடத்திருக்கு முன்னர் கருணாநிதி சொல்லி ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கம்பி என்ன வைத்தார். அதற்கு நல்ல தண்டனை.

By ராதாகிருஷ்ணன்

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?&artid=420736&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

கருங்காலி அம்மையார் கலியாணமே வேண்டாமெண்டிருக்கும் கன்னித்துறவியாமே...

ஜெயிலில் எத்தனை பெண்கள் இவரின் சீடர்களாவர்களோ... :unsure:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு கொள்ளி வைக்க..... எத்தினை கிளம்பியிருக்காக......

அவ்வளவு பகிடியும், A 1

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இதில் எழுத எதுவுமில்லை

இனி இது அவர்களது அரசியல் விளையாடடுக்கள். எந்தநேரமும் எதுவும் நடக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை தி.மு.க.வை அதிகம் சோர்வடைய வைப்பது சரியல்ல. அது ஜெயலலிதாவிற்கு உற்சாகத்தையும்தட்டிக்கேட்க ஆளி;லாத தைரியத்தையும் கொடுக்கும். இது எமக்கு பாதகமானது. :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.