Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனிமொழி கைது. திமுக வை காங்கிரஸ் திட்டமிட்டு கருவறுத்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kanimozi.jpg

சொக்கத்தங்கம்.. சோனியா என்று வழிந்து வழிந்து சோனியாவிற்கு புகழாரங்களாகச் சூட்டினார் ஐயா கறுப்புத் தங்கம் கருணாநிதி. இன்று அவரின் அன்பு மகள் கனிமொழி.. அதே சொக்கத்தங்கத்தால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சோனியா நினைத்திருந்தால் இந்த வழக்கில் இருந்து கனிமொழியை என்ன ராசாவையே காத்திருக்க முடியும். அப்பேற்பட்ட.. போர்பாஸ் பீரங்கி ஊழலையே தூக்கிச் சாப்பிட்ட சோனியாவிற்கு இவை என்ன புதிதா..??!

இருந்தாலும்.. கருணாநிதி மீது சோனியாவிற்கு உள்ளூர பல ஆத்திரங்கள். பகைகள். ஆனால் அரசியலுக்காக அதனை வெளியில் காட்டாது கூட்டணி அமைத்து முதலில் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினார் சோனியா. கருணாநிதியும் வருவாய் கருதி வாயைப் பிளந்து கொண்டு கிடந்தார். கூட்டணி ஆட்சியில் கருணாநிதியின் எம் பிக்களின் தயவு வேண்டி சோனியாவும் நல்லா சேர்ந்து நடித்தார்.

தமிழர்களை கருவறுத்தார். வேலை முடிந்ததும்.. கருணாநிதிக்கு அரசியல் பாடம் எடுக்க முற்பட்டார் சோனியா. அந்தக் காய் நகர்த்தலின் விளைவே.. 2ஜி ஊழல். அதை சுப்பிரமணியம் சுவாமி போன்ற காங்கிரஸ் விசுவாசிகளை வைச்சே கிளறி விட்டார். இப்போ அதை வைச்சே கருணாநிதிக்கு அரசியல் சமாதியும் கட்டப் போகிறார் சோனியா.

2ஜி ஸ்பெக்ரம் ஊழல்.. என்பது குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதியின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக ஜெயிலுக்குள் தள்ளக் கூடியது. கருணாநிதியின் மகள் மட்டுமல்ல.. மகன்கள்.. மருமகன்கள்.. மனைவி.. துணைவி என்று எல்லாரையுமே அந்தக் கொடியால் சுற்றிக் கட்டி.. கழுவில் தொங்கவிட சோனியாவால் முடியும். திமுக வின் இருப்பையே அவரால் கேள்விக்குறியாக்க முடியும்.

முறையாக சோனியாவின் வலையில் சிக்கி இருக்கிறது.. கருநாகம். அவர் எனி எப்படி தப்பிப்பாரோ.. என்பது கிடக்க.. இப்போ திமுகவினரும் ஈழத்தமிழர்களும் இன்னொரு சமன்பாட்டில் வந்து சந்திக்க சந்தர்ப்பம் உருவாகி வருகிறது.

அதுதான் பழி தீர்ப்பு. ஈழத்தமிழர்களுக்கு சோனியா செய்த கொடுமை என்பது இன வரலாற்றில் மறக்கக் கூடிய ஒன்றல்ல. அதேபோல்.. கருணாநிதிக்கும் இது ஒன்றும் மறக்கக் கூடிய சொக்கத் தங்கம் அல்ல. அந்த வகையில்.. எந்த திராவிடக் கட்சிகளை ஈழத்தமிழர்களுக்கு எதிராக இயங்க வைத்து ஈழத்தமிழர்களை அழித்தாரோ அந்த திராவிடக் கட்சிகளையும் சோனியா பதம் பார்க்காமல் விடப் போறதும் இல்லை. அந்த வகையில்... ஜெயலலிதா ரீ பார்ட்டிக்கு போக.. கருணாநிதி திகார் சிறையில் களி தின்னும் மகளைப் பார்க்கப் போகிறார்..! அங்கு நல்ல அரசியல் பகையை தூண்டி விட்டு வளர்க்க போகிறார்.. சோனியா.

பாவம்.. ஈழத்தமிழரின் துயரில் ஒரு துளி கண்ணீர் கூட சிந்த மறுத்து சொக்கத் தங்கத்திற்கு கால் அமுக்கி விட்டவருக்கு.. இப்போ மகளின் கண்ணீர் தரும் வலியோடு.. ஈழத்தமிழரின் வலி உணரும் வேளையும் கூடவே சேர்ந்து வந்திருக்கிறது.

அந்த வகையில்.. திமுக.. ஈழத்தமிழருக்கு தானிழைந்த துரோகத்திற்கு பரிகாரம் தேட விளையுமா.. அல்லது... மகளை காப்பாற்ற காங்கிரஸ் என்ற வெட்டரிவாளை பிடிச்சுக்கிட்டு தொங்குமா.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் உலகத் தமிழர்களுக்கு நாம் தமிழர்களுக்கு தமிழகத்தில் காங்கிரஸிற்கு வலுவான பாடை கட்ட நல்ல சந்தர்ப்பம் தோன்றியுள்ளது. அம்மா ரீ பாட்டிக் போய் சொக்கத்தங்கத்தின் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டால்.. அப்புறம் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அக்காச்சி கனிமொழியின் சிறைக் களி வாசம்.. நிச்சயம்.. ஒரு ஊக்க மருந்தாக அமையும். சோனியாவிற்கோ எல்லாம் வெற்றி மேல் வெற்றி என்ற தோற்றம் நிலவினாலும்... அவரின் பேய் முகத்தை தமிழக மக்கள் முற்றாக உணரும் நிலை வரும். அப்போது.. ஈழத்தமிழர்களுக்கு அவர் செய்த துரோகத்திற்கு அவர் தண்டனை அனுபவிக்கும் வேளையும் வரும்...!

இந்த நிலையில்.. தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் கொஞ்சம் உசார்படுத்தி காங்கிரஸை விட்டு தூர வைத்திருக்க ஈழத்தமிழர்கள் அவருக்கும் ஒரு பொன்னாடை போர்த்தி விடுதல் தவறன்று.

உலக அரங்கில் இராஜதந்திர அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்ட நாம்.. கூனிக் குறுகி கும்பிட்டாவது.. இலட்சியத்தை அடைய முனைவதே நன்று. அதற்கு..

நாம் தொடர்ந்து நிலைமைகளை அவதானித்து.. செயற்படுவதே இன்றைய தேதியில் நல்லது.

செய்திகளின் தொகுப்பு: நெடுக்ஸ்.: படம்: நக்கீரன்.

Edited by nedukkalapoovan

முதல் வரிகளைப் படித்ததுமே, இப்படி ஒரு எழுத்தை இதற்கு முன்பு வாசிச்ச ஞாபகம் என்று நினைத்துப் பார்த்தால்

'செய்திகளின் தொகுப்பு நெடுக்ஸ்...' ^_^:D தொகுப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள், தொடருங்கள்... :)

இந்த நிலையில்.. தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் கொஞ்சம் உசார்படுத்தி காங்கிரஸை விட்டு தூர வைத்திருக்க ஈழத்தமிழர்கள் அவருக்கும் ஒரு பொன்னாடை போர்த்தி விடுதல் தவறன்று.

ஆக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ்.

தேர்தலுக்கு ஒரு வாரத்தின் முன்னர் விஜயகாந்த் பிரான்ஸுக்கு வந்தது பற்றி யாருக்காவது தெரியுமா ? அவரை ஒட்டுக்குழு ஆதரவாளர்களே உபசரித்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மையா ?

kanimozi.jpg

உலக அரங்கில் இராஜதந்திர அரசியல் செய்ய வெளிக்கிட்டு விட்ட நாம்.. கூனிக் குறுகி கும்பிட்டாவது.. இலட்சியத்தை அடைய முனைவதே நன்று. அதற்கு..

சரியான வரிகள் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் : கலைஞர் கடிதம்

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில்,

‘’கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54413

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் : கலைஞர் கடிதம்

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில்,

‘’கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54413

எதுக்கெடுத்தாலும்.......நல்லதோ கெட்டதோ........உந்த வசனத்தையே சாகும் மட்டும் சொல்லிக்கொண்டிரு(நக்கல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கெடுத்தாலும்.......நல்லதோ கெட்டதோ........உந்த வசனத்தையே சாகும் மட்டும் சொல்லிக்கொண்டிரு(நக்கல்)

இது வெறும் வசனமாகத் தெரியவில்லை. கருணாநிதிக்கு தெரிகிறது தான் ஒரு கருவேப்பிலையாக சோனியாவால் பாவிக்கப்பட்டிருப்பது. அதன் பெறுபேறே இது. ஆனால் கருணாநிதி தான் கருவேப்பிலையாக பாவிக்கப்படுவதை அறியாதிருந்தார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. குடும்ப நலனுக்காக அதனை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதுதான் பொருந்தும். இருந்தாலும்.. பழிவாங்கும் படலம் எங்கு போய் முடியுமோ.. அங்கு கருணாநிதியின் கண்ணீரோடு ஈழத்தமிழரின் கண்ணீரும் கலக்கும்..! அப்போது தான் கருணாநிதிக்கு ஈழத்தமிழரின் துயரின் வலி புரியும். கவிதை பாடவும் கூடும்..!

எ‌ன் ‌மீது வ‌ஞ்ச‌ம் ‌தீ‌ர்‌க்கு‌ம் படல‌‌ம் - கருணா‌நி‌தி

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ரு‌ம், மு‌ன்னா‌ள் முத‌ல்வருமான கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக தொ‌ண்ட‌ர்களு‌க்கு அவ‌ர் எழு‌‌தியு‌ள்ள கடித‌‌த்‌தி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1105/22/1110522001_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்குடும்பமும் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு.....

அறப்போர், இறுதிப்போர் என்று வாய்ப்பேச்சுக்கு மட்டும் குறைவில்லை.

[இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1105/22/1110522001_1.htm

தொண்டர்களை வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும்படி தலைவர் சமிக்ஞ்சை கொடுக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா'-வைகோ

ஆலங்குளம்: சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் 18வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த 58 வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியினரையும் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதற்காக வாழ்த்து சொல்ல வேண்டும்?.

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் தோற்று, மகள் கனிமொழியும் சிறையில் இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் நிராயுதபாணியாக நிற்கும் கருணாநிதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறார். அவர் மீண்டு வந்து போரிடுவார். வெல்வார். ஈழம் நிச்சயம் மலரும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/24/why-sonia-wish-jaya-asks-vaiko-aid0128.html

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாய் கருணாநிதி தன்னை நம்பியவர்களுக்கும் , அண்டியவர்களுக்கும் விதைச்ச துரோகத்தை முதன் முதலாய் சோனி மூலம் அறுவடை செய்கிறார். இது ஆரம்பம். அவரது ஏறுமுகம் முடிந்து இறங்கு முகம் தொடங்கிவிட்டது. ஏழைகள், ஏதிலிகள் அழுத, அழுதுகொண்டிருக்கும் கண்ணீர்.......... !

ஆக்கத்திற்கு நன்றி நெடுக்ஸ்.

தேர்தலுக்கு ஒரு வாரத்தின் முன்னர் விஜயகாந்த் பிரான்ஸுக்கு வந்தது பற்றி யாருக்காவது தெரியுமா ? அவரை ஒட்டுக்குழு ஆதரவாளர்களே உபசரித்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மையா ?

ஒட்டுக்குழுக்களுக்கு தெரிந்த ராஜதந்திரம் தேச அனுமானிகளுக்கு தெரியவில்லையாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.