Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12 இருந்து 14 வரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12)

749084937_BHyMQ-L.jpg

ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ....

இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு ....

சொல்லுங்கோ மச்சாள்.

வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு.

ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,

அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் யோசிக்காதேங்கோ, இனியா நீங்கள் வேறு நாங்கள் வேறு அல்ல நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் இதைக்கூட நாங்கள் செய்யாவிட்டால் உடன்பிறந்த சகோதரம் சொந்தம் என்று சொல்வதற்கு தகுதி அற்றவர்களாகி விடுவோம், இப்போது அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வளவு காசுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் மச்சாள் ? கொஞ்சம் பொறுங்கோ,.......

மச்சாள் நானும் அண்ணாக்களிடம் கதைத்துவிட்டு சொல்கின்றேன்.

சரி இனியா ..... நான் திரும்ப கூப்பிடுகின்றேன்.

சரி மச்சாள்.

என்னம்மாச்சி ஏதாவது பிரச்சனையோ ......? யார் போணில் ? உன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது !

என்ன நடந்தது ?

ஒன்றும் இல்லை .... வாங்கோ வீட்டுக்கு போவோம்.

ஏன் விசாரிக்காமல் வீட்டுக்கு போவோம் என்று சொல்கின்றாய் .....

எல்லாவற்றையும் வீட்டுக்கு போய் அப்பாவுடனும் கலந்து கதைப்பம் யோசிக்காதேங்கோ அம்மா நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள் எங்களை கைவிடாது .....

ஏன் பிள்ளை எனக்கு சொல்லிபோட்டு அப்பாவுக்கு சொல்லலாம்தானே,.....

அப்படி நீங்கள் யோசிக்கின்றமாதிரி ஒன்றுமில்லை .....

ம் ...... ஒரு ஆட்டோவை கூப்பிடு பிள்ளை அதில போவோம் அம்மாவால் நடக்க முடியுதில்லை ....

அண்ணே ஆட்டோ வருமோ மூலைக்கடைக்கு ....

ஓம் ... வாங்கோ கவனமாக ஏறுங்கோ, வடிவாக பிடிச்சுக்கொண்டு இருங்கோ

6458622011_62af8b26c8_o.jpg

(ஆட்டோவில் ஒலித்த பாடல் இவளின் மனதை சற்று ஆறுதல் படுத்துவதாக இருந்தது )

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு

கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை

அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுவதும் அவனது வீடு

கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்

இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்

எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ

அதுவரை நாமும் சென்றிடுவோம்

விடைபெறும் நேரம் வரும்போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்

தீராமல் இங்கே வாழுவோம்

அம்மா இந்த பாடலின் வரிகள் எவ்வளவு மனதிற்கு சுகமளிக்கின்றது ......

நீ யார் பிள்ளை ..... ஒரு கதாசிரியரின் மகள் தானே ....

அப்படியா அம்மா (என்று கூறி மனதுக்குள் பூரித்து கொள்கின்றாள் )

sunset-27.jpg

சூரியன் சற்று ஓய்வு எடுப்பதற்காக தென் மேற்கு திசையில் செல்லும் வேளையில் அங்கே புகழும் தினாவும் வாய்விட்டு சொல்ல முடியாத சூழ் நிலையில் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தகரத்தால் சுற்றி அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் பூச்சி புழுக்களின் மத்தியில் சோறு தண்ணீர் இன்றி இருவரும் பேசிக்கொள்கின்றார்கள் ......

(ரகசியமாக) இப்படிதானே மூன்று வருடங்களுக்கு முன் எம் இனத்தை கொன்றிருப்பாங்கள் இந்த கொடியவங்கள்.

புகழ் ....... இப்போது இரவா? பகலா? என்ன நேரம் என்று கூட தெரியவில்லை, இதென்ன வாழ்க்கை மச்சான் எதாவு வழி தெரிகின்றதா......?

இந்த இடம்பற்றி அறிந்ததை விட அதை நாங்கள் அனுபவிக்கும் போதுதான் ஆதன் வலிகளும் ரணங்களும் புரிகின்றது ...... ம்,......

''காத்திரு ..... மச்சான் ...... காத்திரு, காலமும் கடவுளும் வெகுவிரைவில் எம் பக்கம் மாறும், அப்போது சரித்திரம் வெல்லும்''

தினா, .....என்ன ஆகிற்று ....? ஏதாவது தலையில் அடிகிடி விழுந்து விட்டதோ ?(கிண்டலாக)

திடீரென தத்துவம் பேசுகின்றீர்கள்.

இல்லை ..... மச்சான், (சலிப்புடன்) ஒரு வேளை எங்களுக்கு ஏதாவது நடந்தாலும் கடைசியாக ஒரு பாடல் வரிகளை படிக்கவேண்டும் போல் தோன்றுகின்றது .....

ம் ..... எங்கிருக்கின்ராரோ? எப்போது வருவாரோ!

படியட ..... மச்சான் ..... படி ..... இந்த பாடலாவது ரணத்தை ஆற்ருதோ என பார்ப்போம். ஐயோ......, என்ன வலி வலிக்குது .....

என் இனமே... என் சனமே...

என்னை உனக்குத் தெரிகிறதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

என் இனமே... என் சனமே...

அன்னை தந்தை எனக்குமுண்டு

அன்பு செய்ய உறவும் உண்டு

என்னை நம்பி உயிர்கள் உண்டு

ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

பாசறை நான் புகுந்த இடம்

பதுங்கு குழி உறங்குமிடம்

தேசநலன் எனது கடன்

தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே... என் சனமே...

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...

(யாரோ வரும் சத்தம் கேட்கின்றது)

hand_gun.jpg

அடே .... என்ன சத்தங் ..... மொனுவதே கத்தாக்கரண்ட ....

முடிஞ்சுதட ..... மச்சான் ..... கதை, இண்டைக்குத்தான் கடைசியோ ?

இனியாவின் தவிப்பு தொடரும் ........

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு பாகம் 12 படிச்சாச்சு...அணில் படம் சுப்பர்..ஏன் தனித்,தனியாக கதையை இணைக்கிறீங்கள் என்று கேக்கலாமா...முதல் தொடருடனயே இணைத்துக் கொண்டால் ஒரு தொகுப்பாகவே சேர்ந்து விடும் அல்லவா...எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

நன்றி யாயினி

தொடர்ந்து இணைப்பதற்கு கேட்டுள்ளேன் முடிந்தால் கோப்பாக இணைப்பார்கள்.

தனித்தனியாக இணைக்கும் போது வாசகர் அதிகமாக வாசிக்கின்றார்கள்.

< என் இனமே என் சனமே

என்னை உனக்குத் தெரிகின்றதா

எனது குரல் புரிகிறதா

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்

அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் முடிவில் விடிவிருக்கும்

எதிரிகளின் அழிவிருக்கும்

சந்ததிகள் சிரித்து நிற்க

சரித்திரத்தில் நிறைந்திருப்பேன் >

கதையின் மகுடமே இதுதான் . உங்கள் பாணி கதைகதையாம் பகுதியில் புதுப் பரணி படிக்கட்டும் !!!!!!!!!!!! :):):) 2 .

கோமகன் நன்றிகள்....

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் தமிழரசு... :) :)

நன்றி புரட்சி

கதை அருமை ..அணில் படம் கவர்ச்சியாய் இருக்கிறது

நன்றி நிலாமதி

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசங்களை சுமந்துவருகின்றீர்கள் தமிழரசு.

உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள்!

முக்கியமாக அந்த அணில் படத்துக்கும், பாடல் வரிகளுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்! :)

நன்றிகள் கவிதை

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையுமாக இனிதாக நகர்ந்து கொண்டிருக்கிறது இனியாவின் தவிப்பு. கதையை அலங்கரிக்கும் படங்களும் உயிரோட்டம் தருகின்றன.

நிஜத்தில் நடப்பவைகளை அழகாக அதே நேரம் எளிமையாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்..

நன்றிகள் கல்கி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது...:)

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 13)

northern_sri-lanka_lands.jpg

அடே ...... வரங் ....... இங்கின வரங் ...... இதிங் உங்கட உடுப்பி போறாங்,

ஆ .... சரி சரி,

ஏறுங்கட வானுல .....

நாங்கள் கண்கள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றப்பட்டோம், பின்னர் வான் வேகமாக செல்வதை எங்களால் உணரமுடிந்தது இரண்டு மூன்று மணிநேரத்தின் பின் கைகட்டு அவிழ்க்கப்பட்டு நிலையில் வான் சற்று வேகம் குறைந்த பொழுது இருவரையும் வீதியில் தள்ளி விட்டாங்கள் .......

ஐயோ ...... அம்மா என்ன கொடுமையடா ...... ? இது எந்த இடம் ?

புகழ் மச்சான் பாரடா ...... ரெண்டு பேரின் சூட்கேசும் இருக்கு மச்சான்

இதைத்தன்னும் விட்டு வச்சாங்களே பாவியள் (சூட்கேசில் கைத்தொலைபேசியை தேடி எடுத்து

உடனே வீட்டுக்கு அழைப்பை மேற்கொண்டார்.

ஹலோ ..... யாரப்பு கதைக்கின்றீர்கள் .............?

அது ..... நான் ...... தினா ..... அப்பா

தினாவோ இப்போது எங்கு இருக்கின்றீர்கள் ..........?

உங்களை விட்டு விட்டாங்களோ ?

ஓம், அப்பா நானும் புகழும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்,

எங்கு இருக்கின்றீர்கள் ?

இது முற்றிலும் சிங்களவர்கள் உள்ள இடம் இங்கு யாரிடமும் எதையும் கேட்க முடியவில்லை ....... அப்பா ,

அது சரி அம்மா....... தங்கச்சி எப்படி இருக்கின்றார்கள் ?

அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள், தினா எப்படி இந்த இரவு நேரம் வருவீர்கள் ?

எவ்வளவோ பிரச்சனைகளை தாங்கி விட்டோம் இது சின்ன பிரச்சனை,

அப்பா போனில் சாஜ் குறைந்து போகின்றது புகழின் வீட்டாருக்கு சொல்லி விடுங்கோ (என்று சொல்லி முடியும் போது போனில் சாஜ் முற்றிலுமாக போய்விட்டது)

என்ன புகழ் எதோ யோசிக்கின்றீர்கள் ? என்ன அப்படி ......?

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

அது சரிமச்சான் இனியாவுடன் கதைத்தீர்களா ? எப்படி இருக்கின்றார்கள் ? அவள் பாவம் கற்பனையில் இருந்திருப்பாள்..

ஏய் ..... புகழ் எப்போதிருந்து இந்த பாசம், என்னும் தாலி கட்டவில்லை ஞாபகம் இருக்குத்தானே ? உங்களுக்கு இனியா மென்மையான மனம் படைத்தவள் பண்பும் பாசமும் கேக்காமலேயே அள்ளி வீசுவாள் யாருடைய மனசையும் புண்படுத்த மாட்டாள் அப்படி பட்ட என் பாசக்கார தங்கை உங்களுக்கு மனைவியாக கிடைக்க கொடுவைத்திருக்கவேண்டும்.

ம் ....... புகழ்ந்தது போதும் இருந்தாலும் கொஞ்சம் அதிகம்தான்.

என்ன நேரம் என்றுகூட தெரியவில்லை எல்லாவற்றையும் உருவிபோட்டு விட்டுவிட்டாங்கள் இதை நினைக்கும் போதுதான் எமக்கென்றொரு நாடு இருந்தால் இந்தமாதிரியான பிரச்சனை இருந்திருக்காது !

மாச்சான் ஒரு பஸ் வருகின்றது போட்டைப்பார்த்து மறி மச்சான்

4284942831_0d1d932b6b_b.jpg

பருத்தித்துறை என்ற போட்டுடன் வருகின்றது .....

மறி ...... மச்சான் மறி இதைதான் சொல்வார்களோ கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததுமாதிரி என்று !

(பஸ் நிற்கின்றது)

கொய்தென்ன மல்லி ?

அண்ணை நாங்கள் ........

என்ன தம்பியவை இந்த இடத்தில .... வாங்கோ எங்கே போகவேணும்

அதொரு பெரிய கதை அதை விடுங்கோ பருத்திதுறைக்குதான் போகவேண்டும்,

அந்த சீற்றில் இருங்கோ ........ அண்ணை பஸ்சை எடுங்கோ .....

இதமான இரவு வேளையில் மனசை தொட்ட அந்த பாடல் வரிகள் ............

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

மச்சான் சூப்பர் பாட்டுமச்சான்

எனக்கு இந்தப்பாட்டை கேக்கும் போது

என்னவோ செய்கின்றது .........

ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால்

கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

தனியாகத்தேடிப்பார்த்தேன்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே

என் விழி உனை காணும் கண்ணே

என் ஜீவன் ஓயும் முன்னே, ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே, ஓடோடி வா…

moonlitUnightUsky.jpg

இனியா ....... இனியா இங்கே வாம்மா

ஓம், அப்பா என்ர நாய்க்குட்டியளுக்கு சாப்பாடு வைத்துவிட்டு வருகின்றேன் உடனே வருகின்றேன்

சரியம்மா கெதியில் வா பிள்ளை

ஏன் ..... அப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா ?

ஓம் ஓம் காலை பெரும்பாலும் வந்து விடுவினமாம்

என்ன இனியா காலை தம்பிதினா வந்துவிடுவாரோ ?

ஓம், அம்மா .....

(இனியா சந்தோசத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பரபரப்பாக இருக்கின்றாள்)

பிள்ளை ...... இனியா ....... சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்.

அப்பா, நானும் அம்மாவும் பக்கத்தில்தான் இருப்போம்.

புகழ் ....... ஏதோ சத்தம் கேட்கின்றது என்ன என்று பாருங்கோ....

என்ன ..... மச்சான் திரும்பவும் செக்கிங்கோ ?

கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம்.

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படையினரிடம் இருந்து மீண்டது சந்தோஷம்.........கொஞ்சம் எழுத்துப்பிழைகள்....

நன்றி நிலாமதி,

எழுத்துப்பிழைகளை நான் நினைக்கின்றேன் திருத்தம் செய்து விட்டேன் என்று என்னும் தவறு இருந்தால் அறியத்தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13 எப்போ வரும்....ரொம்ப தான் பிறேக் எடுக்கிற மாதிரி தெரிகிறது... :)

நன்றி யாயினி,

13 வது பாகம் பற்றி உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

அண்ணா..... கதை, பாடல், படங்கள் என அனைத்துமே நன்றாக உள்ளது.

இந்த பகுதியில் விறுவிறுப்பை கூட்டி அடுத்த பகுதி எப்ப வரும் என்று எங்கள் எல்லோரையும் எதிர்பார்க்க வைத்துள்ளீர்கள். waiting for part 13.

நன்றி காதல்,

பாகம் 13 ஐ பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

தமிழரசு உங்கள் கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஆனால் கருத்து எழுதுவதில்லை நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி ரதி,

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

ஒன்றுமில்லை ...... பத்து வருடங்களின் பின் இந்த நாட்டுக்கு வருகின்றேன்,

நான் அங்கிருந்தபோது எனக்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி சொல்வார் சிறிலங்காவில் ஒருபிரச்சனையும் இல்லை இங்கு உள்ள தொலைகாட்சியிலும் பத்திரிகைகளிலும் தான் அங்கு எதோ பிரச்சனை போன்று காண்பிக்கின்றனர் என்று சொல்லுவார் ஆனால் இங்கு நடப்பதைப்பார்த்தால் எல்லாம் தலைகீழாக இருக்கின்றது

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

அப்பா சாச் குறைந்து போகின்றது

சாஜ் என்று வர வேண்டும்.

(என்று சொல்லி முயும் போது போணும் சாச் முற்றிலுமாக போய்விட்டது)

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள் ...... இனியா ....... சில வேளை அண்ணா நாளிரவு தொலைபேசி எடுத்தாலும் அசதியாக நித்திரை கொள்ளவேண்டும் நான் குளிசைகள் அதிகம் பாவிப்பதால் அசந்து தூங்கிவிடுவேன்

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சன் பொறுங்கோ பார்ப்போம்.

கொஞ்சம் என்று வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

இனியாவின் தவிப்பு இரட்டிப்பாகிறது. ஆனாலும் சுபமாக முடியும் என நினைக்கிறேன். பாடல் வரிகள் அருமையாக உள்ளன... பாராட்டுக்கள்...

இந்த கதை இழுபடுறதே “........தவிப்பு” ஆலை தான். தவிப்பை விட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 14)

lotus-flower.jpg

அதிகாலை வேளையில் வானத்தில் கதிரவன் மங்களகரமான உடையணிந்து புலருகின்றான்,

கடல் நதிகளோ தூக்கத்தைவிட்டு தன் இறகுகளான அலைகளோடு நீந்துவதற்கு எழுகின்றது ........ கோழிகள் கதிரவனைப்பார்த்து பாடல் வரிகளை சொல்லி வரவேற்கின்றன ........

பறவைகளோ தமக்கு இரை தேட தம்மினத்தை இனிமையான ...... மொழிகளில் அழைக்கின்றன ........ மிருகங்களோ ஒன்றுகூட்டி ஒன்றுக்கொன்று கதை சொல்லி ஓடி, .... மகிந்து, விளையாடுகின்றன ....... தெய்வீக திருப்பணி செய்ய அழைகின்றதோ ! கோவிலின் மணி ஓசை ....... !!!!

நம் இனமோ வாழ்வின் விடியல்தேடி ........!வாசலைப்பெருக்கி தண்ணீர் தெளித்து அவர்கள் விரும்பும் சுகந்தத்தை வரவேற்க காத்து இருக்கின்றனர்,

பூக்களின் வாசனையோ வண்ண வண்டுகளை அழைத்து முத்தமிட்டு கதை பேசி மகிழ்கின்றன .......

இந்த இனிமையான காலை வேளையில் பேரூந்து பருத்தித்துறை வந்தடைந்தது, அந்தவேளையில்

என்ன தினா கனவோ ...... ? நான் ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்,

தம்பியவை என்ன ..... கனவோ !

கனவில் வாய்விட்டு சத்தமிட்டு எங்களை பயம் உறுத்திவிட்டீர்கள்,

அது அண்ணா ....... உங்களுக்கு எங்களின் நிலை தெரியாது !

இல்லை .... தம்பி எங்களுக்கும் எல்லாம் தெரியும், எங்களின் சூழ்நிலை என்ன நடந்தாலும் தெரியாததுபோல் வாழ்வதுதான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயம் !

அண்ணா எங்களை தப்பாக நினைக்கவேண்டாம்

அதெல்லாம் ஒன்றும்மில்லை ........

இடம் வந்துவிட்டது இறங்குங்கோ ......

மச்சான் ஒரு கார் பிடிப்போம் வீட்டுக்கு போவதற்கு

(இருவரும் காரில் எரிச்செல்கின்றனர் )

சரி புகழ், என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு

நீங்கள் போங்கோ

என்வீடுதாண்டித்தானே உங்கள் வீடு மதியம் எல்லோரும் ஒன்றாக வீட்டில் சந்திப்போம்.

சரி மச்சான் சந்திப்போம் வாறன்.

அஹ ..... அப்பா கார் சத்தம் கேட்கிறது ஒருவேளை அண்ணாவாக இருக்குமோ !

எங்க ...... பிள்ள ஒருக்கா பார்ப்போம்

இன்செரிங்கோ ..... இன்சபாருங்கோ,

பிள்ள தினா வந்திட்டான், அஹ வாப்பு .....

தினா, ..... என்ர அய்யா வந்துவிட்டியோ! வா ...... வாப்பு (என்றவாறே கட்டிதளுவினார்கள் இருவரும்)

வாங்கோ அண்ணா ..... வாங்கோ (என்றவாறே அண்ணாவை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்)

அம்மா ... புகழும் அவர்களின் அம்மா அப்பாவும் மதியம் வீட்டுக்கு வருவதாக இருக்கின்றார்கள், அவர்களுக்கு சாப்பாட்டு ஒழுங்கு செய்யவேணும் .....

சரி ..... இந்த காப்பியை குடித்துவிட்டு குளித்துவிட்டு வா ராசா, எங்க, ஏதாவது உடம்பில காயம் இருக்கோ ஒருக்கா பார்ப்போம்,

அப்படி ஒன்றும் இல்லை அம்மா நிறைய அழுக்காக இருக்கு, குளித்துவிட்டு வாறன் தொடாதீர்கள் அம்மா,

நீங்கள் போய் ஒரு இடத்தில் இருங்கோ .......

சரி .... அப்பு கெதியில வாங்கோ தங்கச்சி உங்களுக்கு விருப்பமான கருவாட்டு பொரியலும் அரிசிமா புட்டும் செய்து வைத்திருக்கின்றார்,

DSC00974-orig1-569x484.jpgkuzhalputtu.jpg

கருவாட்டு பொரியலோ ......? ம் ...... யம்மா ஒரு பிடிக்கலாம்.

இனியா வீட்டு வேலை எல்லாவற்றை செய்து முடித்தபின்பு வீட்டு வாசலை வழிமேல் விழிவைத்து புகழின் வருகைக்காக மலர்ந்த செந்தாமரைபோல் காத்துகொண்டு இருக்கின்றாள்

(ரேடியோவில்) ........

அறிவுப்பாளர் ........

கல்லாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய். சிலையாய் வடித்தது மட்டுமல்லாமல் சிலையுருக்கொண்ட என்னைக் காதல் உயிர்தந்து வளர்த்தாய். தேன் எனினும் இன்பச் சுவையை உணர்வில் தினம் தினம் உண்டு திளைக்கும்போதில் நீ தீண்டுவாய் எனத்தினம் தினம் துடிக்கின்றேன்.

இதோ .... பாடலை கேட்டுப்பாருங்கள் ..........

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய்

சிலையாய் வளர்ந்தேன்

உயிரை ஏன் கொடுத்தாய் ......

உன் நெஞ்சின் உணர்வுகள்

இங்கு என்னுள்ளில் புகுந்ததே

சொல்லி வருமோ வருமோ

சொல்லை எடுத்துத் தருவாய்

கல்லாய் இருந்தேன்

சிலையாய் ஏன் வடித்தாய் .....

உன்னைப் பார்த்த கண்கள்

விலகாது என்றும்

உன்னிலே பதியும் .....

யார் யார்க்கு மண்ணில்

நிலைக்காத அழகு

காலத்தின் ஒழுங்கு

இனியா ..... இனியாக்குட்டி,

ஓம் ...... இதோ ...... வருகிறேன்.

என்ன எல்லாம் அசத்தலாக இருக்கு,

அண்ணா ..... உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்,

இனியா .... இன்னொரு விஷயம்,

என்ன ... அண்ணா .....

ஒன்றுமில்லை ....... என்ன, எல்லாம் புகழைப்பற்ரியதுதான் ...... அழகுக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லை ...... அதில இருக்கும் மன்குண்டான் மாதிரி (என்று கிண்டலாக சொன்னார்)

அது ...... பரவாயில்லை, அவர் மனசு எனக்கு பிடிச்சிருக்கு (கிண்டலாக சிரித்தாள் )

நான் சும்மாதான் சொன்னேன் தங்கச்சி, புகழ் பார்க்க அழகான தோற்றம் நல்ல அறிவு நல்ல பழக்கவழக்கம் உங்களின் குணத்திற்கு ஏற்றவர்.

அண்ணா உங்களுக்கு பிடித்தமாதிரி மீன் வகையில் அசத்தி விடுகிறேன்.

panamafishmarket1.jpg

இனியா ..... அண்ணாவுக்கு உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் ஆனால் வரப்போகும் மாமா மாமிக்கு பிடிக்கவேணுமே !

அண்ணா யோசிக்காதேங்கோ மனசு ஒத்து போனால் உணவும் ஒத்து போகும் கொஞ்சம் பொறுத்துதான் பாருங்கோவேன்.

அதுசரி ......

எங்கே அம்மா அப்பா ?

அம்மாவும், அப்பாவும் அன்றில் பறவைபோல் இணைபிரியாமல் எங்காவது இருப்பினம் வாங்கோ பார்ப்போம்

அண்ணா இங்கே பாருங்கோ என்ன ....... பாட்டு பார்க்கினம் என்று ......... நான் சொன்னது சரிதானே ?

தொலைக்காட்சியில் .........

http://youtu.be/aHR0BfPNF7U

இனியாவின் தவிப்பு தொடரும் ........ ?!

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழரசு. இப்போ தான் உங்கள் தொடரை வாசிக்க தொடங்கி உள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியும் விறுவிறுப்பாக தான் செல்கிறது. இப்பகுதியில் அவர்கள் மயிரிழையில் தப்பி விட்டது போல் கூறி மீண்டும் இறுதியில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்க்குமாறு முடித்துள்ளீர்கள்.

உண்மையை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

நீங்கள் விட்ட சில எழுத்துப்பிழைகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன், வரும் பாகங்களில் திருத்துங்கள். எழுத எழுத எல்லாம் சரி வந்து விடும்.

கொடுமைய என்பது கொடுமையடா என்றும்

மேற்க்கொண்டார் என்பது மேற்கொண்டார் என்றும்

கேட்க்என்பது கேட்க என்றும்

எவளவோ என்பது வ்வளவோ என்றும்

போணில் என்பது போனில் என்றும் வர வேண்டும்.

சாஜ் என்று வர வேண்டும்.

முடியும் என்றும் போனில் சாஜ் என்றும் வர வேண்டும்

ஜோசிக்கின்றீர்கள் என்பது யோசிக்கின்றீர்கள் என்றும்

பாசக்காதங்கை - பாசக்கா தங்கை என்றும்

ரிவிபோட்டு - ருவிபோட்டு என்றும் வர வேண்டும்.

பிள்ளை என்றும் நள்ளிரவு என்றும் வர வேண்டும்.

அத்துடன் இவ்வரியில் தெளிவில்லை. "சில வேளை அண்ணா நள்ளிரவு தொலைபேசி எடுத்தாலும், அசதியாக நித்திரை கொள்ள வேண்டாம்" என்று வர வேண்டுமா?

கொஞ்சம் என்று வர வேண்டும்.

நன்றி காதல்,

நான் விட்ட தவறுகளை சுட்டிகாட்டியதினால் இப்போது அந்த தவறுகளை கருத்தில் கொண்டு புதிய பாகத்தை எழுதியுள்ளேன் படித்துவிட்டு உங்கள் கருத்தைதாருங்கள்.

பாகம் 13ம் படிச்சாச்சு..என்ன ஒரே எங்காவது உயிர் ஆபத்துக்களில் அகப்படுவது போல எழுதி வெளியில் கொண்டு வாறீங்கள்.அப்புறம் வேறை என்ன வளமைபோல் நன்று தான்..

நன்றி யாயினி,

தொடந்தும் உங்கள் கருத்து அறிய ஆவலாகவுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.