Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88014
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/29/21 in all areas

  1. நல்லாருங்க மக்கா#வீட்டில்_பார்த்த_மாப்பிள்ளைய_பிடிக்கல.பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.வருமானம் அதிகமில்லை என்பதாலும்,இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டேஇருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்."வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல. நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். முகநூலில் இருந்து.....
  2. எதையும் சரியாக கணக்கிட முடியாது ... இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள். இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.
  3. ஊரில் எங்கள் வீட்டுக்கு பின் வளவுக்காரரும் இப்படி ஒரு பிரச்சினை வந்து (எல்லாம் உறவினர்கள்) பின் எல்லையுடன் அவர்கள் ஒரு குழி வெட்டி சரிபண்ணிக் கொண்டனர்......! 🙂 அவர்கள் நேரடியாக அப்படி செய்தது தவறு.....அந்த இடத்தில் பன்றிகளையும் நாய்களையும் விட்டு வளர்த்திருக்கலாம்.....பின்பு பன்றி உணவாக மாற நாய் வீட்டைக் காக்கும்.....! 😁
  4. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  5. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  6. உயிரை காலில் பிடித்து கொண்டு தாவி ஓடும் மலை ஆடுகள்........! 👏
  7. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "நான் இந்த நாட்டில், சாதாரண கல்வித்தரத்தினைக் கொண்ட சாதாரண குடிமகன்.என்னைப்பொறுத்தவரை இந்த நாட்டின் சமூகவியல், சமூக விழுமியங்கள் தொடர்பாக தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை, குறிப்பாக இந்த நாட்டின் நீதித்துறை பற்றி மிகவும் குழப்பகரமான பார்வையே எனக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சார விடுதிகளில் தொழில்புரியும் பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைதுசெய்து இழுத்துச் செல்லும் பொலீஸார் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதள்ளி, அப்பாவிகளை வலிந்து கடத்திச் சென்று காணாமலாக்கிய ஆயுததாரியான கருணாவை கைதுசெய்யாது, அவரைப் பாதுகாத்து, கெளரவப்படுத்தி அன்புடன் "சேர்" என்று அழைக்கக் காரணமென்ன? " "இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கெதிராக கொடுமைகளை நிகழ்த்திவரும் சட்டத்திற்கும் மேலான அரச ராணுவத்தை ஒருவர் நீதியின் முன்னால் நிறுத்துவதென்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. போர் வெற்றி நாயகர்களாக அலங்கரிக்கப்பட்டு, கடவுள்களுக்குச் சமமாக பூசிக்கப்படும் இந்த வெற்றி நாயகர்கள் தமிழினத்திற்கெதிராகச் செய்த அக்கிரமங்கள் எல்லாம் "விடுதலைப் புலிகளை அழித்தல் எனும் முக்கிய நோக்கத்திற்காக" பெரும்பான்மையினச் சிங்களவர்களால் "அவசியமான நடவடிக்கைகள் தான்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது". "கடந்த காலங்களில் இந்தக் கருணா அம்மாண் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு நிகராக சிங்களவர்களையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றுவரை சிங்களத் தலைமைகள் இவருக்கெதிராக நடவடிக்கை எதனையும் எடுக்க விரும்பவில்லையே, அது ஏன்? கருணாவுக்கெதிராகக் எடுக்கும் நடவடிக்கைகள் சங்கிலித் தொடர்போல மீண்டும் தமது காலடியிலேயே வந்து நிற்கும் என்கிற பயம் இருக்கிறதா அவர்களுக்கு ? இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள ராணுவ வீரர்கள் கடவுள்களுக்குச் சமமானவர்கள் என்றால் கருணா அம்மாண் கடவுளுக்கும் மேலானவர் என்பதுதானே?" "மைத்திரி ரணில் நல்லிணக்க அரசாங்கத்தில்க்கூட இந்த நிலைமை மாறும் என்று நான் நம்பவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன, இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இலங்கையின் மக்களுக்கெதிராக மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. இத்தனை தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் பின்னரும்கூட தான் கொடுத்த நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது". "இந்த அக்கிரமங்களைச் செய்தது யாரென்று எங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எமக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நாம் பாசாங்குசெய்துகொண்டு ஏதோவொருநாள் விசாரணைகள் நடைபெறும் என்று எங்களை நாங்களே எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறோம்? இன்றுவரை காணாமல்ப்போன தமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பித் தவமிருக்கும் அந்த அப்பாவித் தாய்மார்களையா? அல்லது மனிதவுரிமைகளுக்காக வேலைசெய்வதாகக் கூறும் அமைப்புக்களையா? அல்லது எமது குடும்பத்தில் எவருக்கு இந்த அக்கிரமங்கள் நிகழும்வரை எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடும் மனோநிலைக்கு வந்துவிட்டோமா? "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எமது சக இன மக்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை புரிந்து, கடத்திச்சென்று காணாமலாக்கிய ஒரு இரத்தவெறிபிடித்த கயவனை இன்னும் "சேர், ஐய்யா" என்று அழைத்து மகிழப்போகிறோம்?" ஆங்கில மூலம் : வி. கந்தைய்யா
  8. திரைப்படம்:வண்ணக்கிளி இசை: K. V. Mahadevan பாடகர்: சீர்காழி கோவிந்தராஜன் எழுத்தாளர்: A.மருதகாசி அருமையான பாடல்.
  9. அதை நான் விளங்கி பல காலம்🤣😂
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  11. கல்கட்டா புடலங்காய் கத்தரிக்காய் அளவுதான் இருக்கும்.......! 😁
  12. எல்லாம் அவன் செயல்....
  13. பொம்புளை வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன புருசன்மாரின்ரை சோகக்கதை பெரிய கதை. அதுவும் வடமராட்சியாளுக்கு வாழ்க்கைப்பட்டு போனால்.........போனவர் ஏழேழு ஜென்மத்திலையும் பஞ்சமாபாதகம் செய்தவர் எண்ட கோட்பாட்டுக்குள்லை வருவார்.
  14. பக்கத்துத் தோட்டம்....புடலங்காய்த் தோட்டமாக இருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை, கிருபன்....!🤪
  15. கத்தரிக்காய் நீளம் புடலங்காய் அளவு வந்திருக்கு! கல்லுக்கட்டி விட்டதா?😁
  16. மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சக மனிதர்களுடன் சண்டையிட்டு அழித்தும் அழிந்தும் வருகின்றார்கள். எனவே, சண்டையில்லா நிலை கனவில் மட்டும்தான் வரும்! சிங்களவர்கள் மேலாதிக்க உணர்வுடன் வாழும்வரை இலங்கைத் தீவில் முறுகல்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.
  17. காயாத கானகத்தே........கூண்டுக்கிளி ........! 👍
  18. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.....! நிஜமான கருத்துக்கள் .......கோபி......! 👏
  19. யோவ்... நாதமுனி, கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது. இந்த மனிசப்பயல்.... இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை, மீன், திருக்கை, திமிங்கிலம் என்று... கண்ட கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்... பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣
  20. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை?
  21. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 கொழும்பு ரமடா ரினைஸன்ஸில் அழகியுடன் நடனமாடும் கருணா இலங்கையின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள். அவர்களின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்க எவராலும் முடியாது. ஆனால், துணைராணுவக் குழுக்கள் இலங்கையின் மக்கள்மீதும், ஒட்டுமொத்த மானிடத்தின்மீதும் நடத்திவரும் வலிந்த கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுக்காக அவர்களை தண்டிக்க முடியாமலிருப்பது ஏன்? அவர்கள் தமது கொலைகளுக்கான சாட்சியங்களை ஒருபோதும் விட்டுச் செல்வதில்லையென்பதாலா? இல்லையே, பெரும்பான்மையான கருணாவின் கடத்தல்களும் படுகொலைகளும் பல மக்கள் பார்த்திருக்க, பலர் சாட்சியங்களாக இருக்க பபகலில்தானே நடந்திருக்கின்றன? எத்தனை தடவைகள் பேரூந்துகளில் பயணித்த இளைஞர்களை வெளியே இழுத்துச் சென்ற கருணா, கெஞ்சி அழும் தாய்மாரை அடித்து விரட்டியிருக்கிறார்? இவ்வாறு எத்தனை கடத்தல்களை நாம் பார்த்தாயிற்று? அப்படியானால் இந்தக் கடத்தல்க்காரர்கள் தொடர்ச்சியாக எங்கோ ஒளிந்து மறைந்து வாழ்கிறார்களா? இல்லை, அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். எங்கள் கண்முன்னேயே, அவர்களின் குடும்பங்களுடன் எம்முன்னால் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் சிரித்து அகமகிழ்ந்தும், நடனமாடியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் பிரபாகரனைக் கொன்றதெப்படி, புலிகளை வீழ்த்தியதெப்படி என்று வீரப்பிரதாபங்களை நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்று, படுகொலை செய்து, பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்து, கப்பத்திற்காக அப்பாவிகளைக் கடத்திக் கொன்றபின்னரும்கூட அவருக்கு "கெளரவ கருணா அம்மாண்" எனும் நாமம் சூட்டப்பட்டு அழகுபார்க்கப்பட்டுத்தான் வருகிறது. கடந்த 2013 கார்த்திகை மாதத்தில் பொதுநலவாய அமைப்புக்களின் மாநாடு ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருணா தொடர்பாக பின்வருமாறு கூறினார். "எம்முன்னே இன்று வீற்றிருக்கும் கருணாவின் பிரசன்னம் முன்மாதிரியானது. புலிகள் இயக்கத்திலிருந்து போராளிகள் பிரிந்துவந்து சமாதானத்தைத் தழுவிக்கொள்கிறார்கள் என்பதனைக் காட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பமே போதுமானது" என்று அவர் கூறினார். நீதித்துறை அமைச்சராக அன்றிருந்த ரவூப் ஹக்கீமின் இந்த பேச்சு விசித்திரமானது. 2004 பங்குனியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா நடத்திய நரவேட்டைகளின் கொடூரங்களை அவர் எப்படி மறந்தார் என்பது கேள்விக்குறியது. அவர் கூறுவதுபோல "சமாதானத்தைத் தழுவிக்கொண்ட கருணா" எவ்வாறு வலிந்த கடத்தல்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினார் என்பதை அவர் எப்படி மறந்தார்? துணைராணுவக் குழுத் தலைவர்கள் கருணாவும் டக்கிளஸும் அவர்களின் எஜமானாருடன் மஹேந்திர பேர்சி ராஜபக்ஷவின் கொடுங்கோலாட்சி கருணாவுடனான தனது அரசின் ஒருங்கிணைவினை "ஒரு பயங்கரவாதியின் ஜனநாயதினை நோக்கிய சாய்வு" என்று சந்தைப்படுத்திவருகிறது. மகிந்தவின் அரசு, கருணாவை லைபீரியாவின் " நிர்வாண, மனிதமாமிசம் உண்ணும்" ஒரு ஆயுததாரியின் மனமாற்றத்துடன் ஒப்பிட்டுக் கிலாகிக்கிறது. கருணாவினதும் லைபீரியாவின் மனித மாமிசம் உண்ட ஆயுததாரியினதும் இன்றைய நிலைகள் வேறு வேறாகவிருந்தாலும், இவர்கள் இருவரது மானிடத்தின்மீதான சொல்லில் வடிக்கமுடியாத அக்கிரமங்களும் பாதகங்களும் ஒரேவகையானவை. ஆனால், லைபீரியாவின் கொலைகார ஆயுததாரியோ லைபீரியாவின் யுத்தத்தில் தான் செய்த கொடுமைகள் பற்றியோ, கொன்று தின்ற மனிதர்கள் பற்றியோ எதனையும் மறைக்கவில்லை. தனது குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளவும் தயார் என்றே சொல்லியிருக்கிறான். அப்படியானால், கருணா எனப்படும் கொலைகாரனின் நிலையென்ன? கருணாவின் கொடூரங்கள் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க விமர்சித்தபோது கொதித்தெழுந்த கருணா, "உங்களின் முன்னாள் தலைவர் பிரேமதாசா புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதை மறந்துவிட வேண்டாம், எனது வாயைக் கிளறினீர்கள் என்றால் இன்னும் பல ரகசியங்களை வெளியே விடுவேன்" என்று பாராளுமன்றத்தில் எகிறிப் பாய்ந்தது நினைவிற்கு வரலாம். கருணாவுக்கும் அவரது எஜமானர்களுக்கும் இடையே இருக்கும் உறவு சுவாரசியமானது. பிரபாகரனுக்குத் துரோகமிழைத்து அவரிடமிருந்து பிரிந்துசெல்லும்வரை அவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், கிழக்கில் எவருமே கேள்விகேட்க முடியாத அதிகாரத்தில் இருந்தவர். ஆனால், புலிகளிடமிருந்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் அவர் இணைந்துகொண்டவுடன் உடனடியாகவே கிழக்கு மாகாணத்தில் வலிந்த கடத்தல்கள், சிறுவர்களை ஆயுதப் போருக்கு இணைத்தல், கப்பம் கோருதல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்று பல கொடூரங்களில் இறங்கினார். கருணாவின் இந்த மனிதவுரிமை மீறல்களையும், மானிடத்திற்கெதிரான குற்றங்களையும் ஊக்குவித்த மகிந்தவின் அரசு, புலிகளுக்கெதிரான போருக்கு கருணாவின் அவசியமான நடவடிக்கைகள் என்று நியாயப்படுத்தியே வந்தது. புலிகளுக்கெதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் கருணா நிகழ்த்திய கொடூரங்களுக்காக மகிந்த அரசு அவருக்கு 2008 இல் நீர்ப்பாசனத்திற்கான துணையமைச்சர் பதவியினை வழங்கியிருந்தது. கருணா இன்றும்கூட அதேவகையான செல்வாக்கினையே ரணில் - மைத்திரியின் "நல்லாட்சி" அரசாங்கத்திலும் அனுபவித்து வருகிறார். கருணா தனது வாழ்வில் ஒரேயொருமுறை மட்டும் தான் சவாலுக்கு முகம்கொடுத்தார். அதுகூட தனது சகாவான பிள்ளையானின் வடிவில் அவருக்கு வந்தது. மொத்தக் கிழக்கு மாகாணமுமே இந்த இரு கொலைகார ஆயுததாரிகளினதும் போர்க்களமாக மறியது. இந்த மோதல்களிலேயே கருணா குழுவின் புலநாய்வுத்துறைப் பொறுப்பாளனும், தமிழர் புணர்வாழ்வுக்கழக பிரதம ஆய்வாளர் பிரேமினியைக் கடத்திச்சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை புரிந்தவனுமாகிய சிந்துஜனை பிள்ளையான் குழு சுட்டுக் கொன்றது.
  22. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண் கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "பிரேமினிக்கு நடந்த கொடூரம் மிகவும் மிருகத்தனமானது. சற்று நிறங்குறைந்தவராக இருந்தாலும், அவர் அழகானவர்தான். கடத்தி இழுத்துச் செல்லப்பட்ட அவரை இன்னொரு முகாமிற்குக் கொண்டுசென்று முதலில் வன்புணர்வில் ஈடுபட்டவர் அவரைக் கடத்திய சிந்துஜன் தான். அதற்குப் பிறகு நடந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுததாரிக் குழுவினரால் அவர் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு. அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக அந்தப் பெண்மீது தமது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டனர். எல்லாமாக 14 கருணா குழு ஆயுத தாரிகள் அன்று பிரேமினியைக் கூட்டாக வன்புணர்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் கத்திக் கதறிய பிரேமினியின் அழுகுரல்கள் நேரம் போகப் போக உயிரற்ற முனகல்களாக மாறி இறுதியில் ஓய்ந்துபோயின". "எமது இச்சைகளைத் தீர்த்துக்கொண்ட பின்னர் அவரைக் கட்டிற்குள் இழுத்துச் சென்றோம். அவர் அழவில்லை, அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை" என்று பிரேமினியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை புரிந்த கருணா குழு ஆயுததாரி ஒருவர் பின்னர் கூறினார். அவரது கூற்றுப்படி பிரேமினியை வாட்களால் துண்டு துண்டுகளாக வெட்டி அந்தக் காட்டுப்பகுதியெங்கும் வீசியெறிந்திருக்கிறார்கள் கருணா குழுவினர். நீர்வேலியைச் சேர்ந்த காணாமல்போன இளைஞர் ஒருவரின் தாயாரை நான் அறிந்திருந்தேன். அவரது இழப்பின் வலி மிகக் கொடியது. உங்களின் உறவொன்று கடத்தப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பின்னர் கொடூரமாகக் கொல்லப்படுவதும் அதனை நீங்கள் வேறு வழியின்றி அமைதியாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவதும் கொடுமையானது. உங்களின் குடும்பத்தில் ஒருவர் காணாமற் போய்விட்டால் அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா, அவர் உயிருடன் இருந்தால் எங்கிருக்கிறார், அவரைக் கடத்தியவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள், அவருக்கு என்னவகையான கொடுமைகளை அவர்கள் வழங்குகிறார்கள், அவரை விடுவிப்பதென்றால் நாம் யாரை அணுகவேண்டும் என்று பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். ஒருவர் கடத்தப்படும்பொழுது, கடத்தப்பட்டவரைப் போலவே, அவரைப் பறிகொடுத்த உறவுகளுக்கு இருக்கும் வலியும் மிகவும் கொடியது. தனது மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று நிச்சயமில்லாது, அச்சத்தினுள் வாழும் அந்தத் தாயாரின் வலி பெரியது. தேடிக் களைத்த நிலையில் தனது மகன் எங்கே என்று சாத்திரிகளை அவர் போய்க் கேட்டார். அவர்களில் பலர் உனது மகன் உனது வீட்டிலிருந்து தெற்குத்திசையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அந்தத் தாயும் தனது மகன் தென்னிலங்கையில் எங்கோவொரு இடத்தில் இன்னும் உயிர்வாழ்வதாக எண்ணி வாழ்ந்துவருகிறார். தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் எனும் நினைவே அவனைத் தேடும் அவரது முயற்சியில் அவரைச் சளைக்காமல் இயங்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் தொலைபேசி அழைக்கும்போது அது தனது மகனாகவோ அல்லது மகனின் இருப்பைப் பற்றி தெரிந்தவர்கள் ஆராவதோ இருக்கக் கூடாதோ என்று அவர் ஏங்குகிறார். அவரது மகன் காணமலாக்கப்பட்டு இத்துடன் ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர்போன்றே இன்னும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் வடக்குக் கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். வலிந்து காணமலாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது பிள்ளைகளையோ, துணையினையோ, பெற்றோர்க்களையோ கடத்தியவர்கள் யாரென்பது அவர்களின் உறவுகளுக்குத் தெரிந்திருந்தது. கடத்தியவர்கள் கருணா குழுவா, டக்கிளஸ் குழுவா, ராணுவமா அல்லது பொலீஸா என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தார்கள். முக்கியமாக கடத்தியவர்கள் எந்த முகாமிலிருந்து வந்திருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கே தெரிந்திருந்தது. பலநேரங்களில் தமது உறவுகளைக் கடத்திச்சென்ற தனிநபர்கள் பற்றிய விபரங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இன்றுவரை இந்தக் கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவுமில்லை, அவர்கள்மேல் இலங்கையின் நீதித்துறை வழக்குகள் எதனையும் பதிவுசெய்யவுமில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியமளித்த பலநூற்றுக்கணக்கான தாய்மார்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றது கருணா குழுதான் என்று வெளிப்படையாகவே சாட்சியமளித்திருந்தாலும் இன்றுவரை எந்தச் சிங்கள அரசும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்தே வருகின்றன
  23. நிழலி, அந்த வளவுக்குள் மூன்று கிணறு உள்ளது. ஒரு கிணற்றை மட்டும் தான் பாவிப்பார்கள். மற்றைய இரண்டும்.... பாழுங் கிணறாக நீண்ட நாட்கள் பாவனையில் இல்லாமல் இருந்தது. அதில் ஒரு கிணற்கும், அவர் வெட்டியிருந்த குழிக்கும்... இடையில் உள்ள தூரம் சரியாக பேணப் படவில்லை என்று, மாநகரசபை... அதனை அப்புறப் படுத்த சொல்லி சொல்லி விட்டது. அத்துடன்... நில அளவையாளரையும் பிடித்து, காணியை அளந்து பார்த்த போது, எமது காணிக்குள் அந்தக் குழி இருந்தது உறுதி செய்யப் பட்டது. சுவியர்... இந்த விளையாட்டு, ஊரில் வழமையாக... நடக்கின்றது போலுள்ளது.
  24. பெருமாள்.... நல்லதொரு படிப்பினை. சுமார்... ஐந்து வருடங்களுக்கு முன்பு, தக்காளிப் பழத்தை உண்டவர்களுக்கு... ஒரு வித நோய் தாக்கியதை அறிந்து, சோதித்துப் பார்த்தால்... ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட தக்காளிப் பழங்களில் அந்த நோய் இருந்தது... கண்டு பிடிக்கப் பட்டு, சிறிது காலம் காலம் அதன் ஏற்றுமதியை தடை செய்திருந்தார்கள். அவர்கள் அந்த தக்காளி செடிகளுக்கு, கழிவு நீர் குழாய்களிலிருந்து வரும் நீரை பாய்ச்சியது தெரிய வந்தது. சாதாரணமாக ஒரு கிலோ தக்காளி 2 € விற்பார்கள். அத்த நேரம்... ஒரு கிலோ 20 சதத்திற்கு விற்றும், ஒருவரும் வாங்காமல் வீணாகியது.
  25. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  26. ஆழமாக தோண்டியதால் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லைதானே! யாழ்ப்பாணத்தில் மலக்குழிகளை வீட்டுக்கு வீடு வெட்டி தரைக்கீழ் நீரை மாசுபடுத்துவதை விட சரியான சுத்திகரிப்பு வடிகால்களை திட்டமிடவேண்டும்.
  27. மற்றவன்ரை பனங்காணி வடலியளுக்கு பின்னாலை குந்தியிருந்த பழக்கம் கக்கூஸ் கட்டேக்கையும் மாறேல்லை....கட்டையிலை போவார்…🚽
  28. aadai katti vantha nilavo singer, t r mahalingam & p susheela movie, amudhavalli (1959) எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள் தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள் வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை
  29. நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே! ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை! அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்! இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃
  30. சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பலதும் துறந்து உதிரம் தந்துயிர் தந்திடுவாள் பெற்றவர்க்காகப் பெருமை துறந்து மற்றவர்க்காக மனதைப் புதைத்து கற்றிருந்தாலும் கலைகள் மறந்து பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க பாரங்கள் பலவும் சுமந்திடுவாள் குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள் தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை தயங்காது உழைத்திடும் அவளின் மேன்மை திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம் காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப் போவதும் கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும் காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள் மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள் பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள் பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள் பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள் பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம் குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும் பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும் பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர் ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன் ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள் ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம் உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில் பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும் மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும் மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும் தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும் கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும் பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும் காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும் பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும் ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும் கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும் கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு
  31. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  32. காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!
  33. நேரம் வேலையும் பிள்ளையும் இருப்பதால முற்றாக எழுதி முடிக்க முடியல கணணியை திறந்தால் ஏறி மடியில் இருந்து கீ போட்டை தட்டுகிறாள் ரெண்டு மூணு கீ போர்ட் மாத்தியாச்சு என்றால் பாருங்கோவன் கருத்துக்கு மிக்க நன்றி விரைவில் கதை முடியும் ( தணிக்கைகைகளுக்குள் கதையும் கட்டுப்படுகிறது) நன்றி புத்து கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி தோழர் நன்றி உடையார் ஒரு பக்க விமர்ச்னம் என்பதை உன்மையெனவும் ஏற்றுக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் பயிற்ச்சி ஆரம்பமானது அரைகாற்சட்டையுடன் முடி ஒட்டையாக வெட்டி பயிற்ச்சிகள் கனமாக இருந்தது எனது பெயரோ மாற்றப்பட்டு கங்கையாழியன் என அழைக்கப்பட்டது கங்கா எனவும் சுருக்கமாக‌ அழைத்தார்கள் நாள் தோறும் காலையில் அம்மா வருவா ஆனால் சந்திக்க முடியாது பயிற்சி முடிவடைந்ததும் தளபதிகள் முன்னிலையில் அணி வகுப்பு நடந்து பாசறையிலிருந்து வெளியேறுகிறோம். அன்றுதான் முக்கியமான தளபதிகளை நேரில் காண்கிறோம் அன்று பூசிக்கப்பட்டவர்கள் அவர்கள். வன்னிக்கான படையும் செல்ல தயாராக இருந்தது கிழக்கில் பெரும் சண்டைகள் தொடர்வதில்லை அதனால் வன்னிக்கே படையணிகளில் அதிகமானவர்கள் அனுப்பப்படுவதுண்டு போராட்டத்தின் இதயம் அது தலைவர் தலைவரே எல்லாம் என எங்களுக்கும் உரம் ஊட்டப்பட்டது அவரின் நாமத்துக்கே பலபேர் இணைந்தார்கள் என்றும் சொல்லலாம் அந்த அணியில் என் பெயர் இல்லை ஆயிரக்கணக்கில் போராளிகள் மட்டக்களப்பில் இருந்ததை அன்று காணக்கிடைத்தது மட்டக்களப்பில் பொருட்களுக்கு பஞ்சம் இல்லை ஆனால் மாற்று இயக்கத்திற்கும் , ஆளஊடுவல் செய்யும் ஆட்களும் மிகவும் சவாலாக இருந்தார்கள். அதையும் சமாளித்து போராட்டம் வலுபெற்றிருந்த காலம் அது. அதற்கு புலனாய்வு துறையை சிறப்பாக செய்த தளபதியை பாராட்டலாம் கிழக்கை அக்குவேர் ஆணிவேராக அறிந்திருந்தவர் வன்னி போல் அல்லாமல் கிழக்கில் எந்தப்பக்கமும் இருந்தும் எதிரிகள் உள் நுழையலாம் அத்தனை பேரையும் சமாளிக்கும் துணிச்சல் மிக்க அணிகள் அவர்கள் அப்போது மாவீரர் நாள் வருகிறது துயிலுமில்லங்கள் வண்ணக்கோலம் பூண்கிறது போராட்டம் , இழப்பு , பாராமரிப்பு என அத்தனை விடயங்களும் கற்று அன்றைய நாளுக்காககவும் நினைவு கூரலுக்காகவும் புலிப்படை திரள்கிறது அதில் நானும் எனும் போது பிரமிப்பாக இருக்கிறது .அன்றைய நாளில் எனைக்காண வந்த அம்மா, அண்ணா , தங்கச்சியை கண்டதில் மிகுந்த சந்தோசம் எனக்கும். எல்லாச்சாப்பாடும் கிடைக்குமாடா ஓமோம் அங்க கிடைக்காத சாப்பாடு எல்லாம் கிடைக்கும் இங்க அதுக்கு கவலையே இல்ல அம்மா. எனது குடும்பம் சந்தோசத்திலிருக்க மற்ற அம்மாக்கள் அழ துளிர்விட்டசந்தோசமும் அழுகையாக மாறுகிறது அம்மாவை தேற்றியவனாக அங்கே துயிலும் எங்கள் உறவுகளின் கனவுகளை சொல்லி அம்மாவை தேற்றுகிறேன். மாவீரர் நாள் முடிந்ததும் அழைக்கப்படுகிறோம் சின்ன தாக்குதலுக்கு அன்றுதான் முதல் சண்டையென்பதால் ஒரு பத பதப்பும் , பயமும் தொற்றிக்கொள்கிறது நாங்கள் 10 பேரும் சில‌விபரங்களுடன் காட்டுக்கு செல்கிறோம் பல கிலோ மீற்றர் நடந்து சென்று சருகுக்குள் ஆளை மறைத்து படுத்துக்கொள்கிறோம் காலை விடிகிறது நேரம் 6 மணி இருக்கும் சருகு மெல்ல சரசரக்கிறது சிங்கள உரையாடலுடன். பேச்சு சத்தம் எங்களை நோக்கி வருகிறது இன்னும் பயம் அதிகரிக்கிறது போர் என்றால் ஆளையாள் சுடுவார்கள் என்ற நினைப்பு அந்த நொடி எனக்குள் வரும் போது அது என்னை மிரட்டும் நொடியாக அந்த நிமிடம் இருந்தது . எந்த ஒரு அசைவும் வராமல் நாங்கள் பதுங்கியே இருந்தோம். இன்னும் ஒரு பகுதி மட்டும் மீதம் இருக்கிறது ....................
  34. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  35. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  36. கைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.
  37. அப்போது பார்த்தால் கள்ள மரம் வெட்டுபவர்கள் அவர்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எழும்பி துப்பாக்கியை நீட்ட அவர்கள் அலறினார்கள் எங்களுக்கு சிங்களம் தெரியாது. அவர்களோ கைபாஷையில் மரம் வெட்ட வந்ததாக சொன்னார்கள் இவர்களை விடுவதா? அல்லது சுடுவதா? அல்லது கைது பண்ணி செல்வதா? என எங்களுக்குள் பாரிய வினா எழுகிறது ?? அப்போது எனது அப்பா ஞாபகமும் வருகிறது இப்படித்தான் எனது அப்பாவும் அகப்பட்டிருப்பாரோ படையினரிடம் என நினைத்து கொடிகளால் அவர்கள் கைகளை கட்டி மரக்கிளையுடன் அமர வைக்கிறோம் சத்தம் போட கூடாது என‌. நேரம் 3 மணி ஆனதும் அன்றய தாக்குதல் சம்பவங்களோ சண்டையோ இடம்பெறவில்லை அவர்களை விடுவதா அல்லது முகாமுக்கு கொண்டு செல்வதா என கேள்விகள் மீண்டும் எழ நான் விட்டு விடுவோம் ஆனால் இனிமேல் இங்கே வரக்கூடாது என சொல்ல கைகூப்பி கும்பிட்டு அவர்கள் காட்டுக்குள் ஓடுகிறார்கள் ஆனால் அவர்களால்தான் பல போராளிகள் சுடப்பட்டார்கள் என்பது தெரிந்தும் விட்டு செல்கிறோம். இந்த சம்பவம் பொறுப்பாளருக்கு தெரிய எனக்கு பணிஸ்மென்ற் கொடுக்கப்படுகிறது சமையல் பிரிவில் அந்த நேரமே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யுத்த நிறுத்தம் வருகிறது போராளிகளுக்கு சரியான சந்தோசம் பலர் அரசியல் நடவடிக்கயென எல்லா இடங்களுக்கு செல்கிறார்கள். மனிதர்களும் மனதும் மாறக்கூடியவை இதில் போராளிகளும் விதிவிலக்கல்ல நகர் புறங்களில் சென்றவர்கள் பலர் நாள் தோறும் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் சிலர் வெளிநாடு செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை வெளிநாடு செல்ல காசும் இல்ல. பேச்சு வார்த்தையின் இடையில் போராட்டமும் நியாயப்படுத்தலால் பிளவுறுகிறது எங்களுக்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என தெரியவில்லை ஒர் நாள் கர்ணா அம்மானால் அனைத்து போராளிகளும் அழைக்கப்படுகிறார்கள் நான் போராட்டத்திலிருந்து விலகுறன் இல்லாட்டால் கிழக்கு பகுதிய நாம் வச்சிருக்கணும் அப்படி இல்லையென்றால் அண்ணன் ஏதும் செய்ய வெளிக்கிட்டால் யாரும் இங்க நிற்கக்கூடாது எல்லோரும் அவங்கவங்க வீட்ட போகலாம் என்றார் அடியும் தெரியல முடியும் தெரியாமல் போராளிகள் முளித்துக்கொண்டிருந்தார்கள் பல ஆயிரக்கணக்கான போராளிகள் விலகி செல்ல ஆரம்பித்தார்கள் என்பதை விட அம்மாமார் வந்து அழைத்து செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். முக்கியமானவர்கள் சிலரே இருந்தார்கள் போராட்டம் தலைகீழாக மாறியது ( அது யாவரும் அறிந்தது) என்னையும் அம்மா அழைத்து சென்றுவிட்டார் நானும் நகர் பகுதிதில் வந்து ஒளிந்து கொண்டேன் அழைப்புக்கள் வந்தன இணையச்சொல்லி ஆனால் மீண்டும் சேரவோ இணையவோ மனதும் உறவுகளும் விரும்பல ஆனால் காட்டிக்கொடுப்பால் சிறை செல்ல அங்கே சகோதர யுத்தமும் அரங்கேறுகிறது இந்த நேரத்திலே அரசு வெற்றி கொண்டது என்றும் சொல்லலாம். சிறையிலிருந்து வந்தால் எல்லாமே வேதனையான வெற்றியுடன் முற்று முழுதாக முற்றுப்பெற்றிருந்தது. படிப்பும் இல்லை தொழிலும் இல்லை அம்மாவை தேடி நானும் செல்ல அம்மாவோ படுக்கையில் அண்ணன் மிருக வைத்திய துறையில் தங்கை திருமணம் முடித்து இருந்தாள் நம்மவர் யாரிடமாவது ஓர் வேலையை பெற்று வாழலாம் என நினைத்தால். வாழ்க்கையை இந்த சமுதாயத்தில் வாழ முடியாது ஓடி விடு என துரத்திக்கொண்டே இருக்கிறது துரோகியென்ற‌ பட்டத்துடன். திடிரென யாரோ என் மீது விரலால் தட்ட துப்பாக்கி முனைதானோ என‌ துடித்து எழும்புகிறேன் தம்பி கடையை திற சனம் வந்துட்டுது என்று சொன்னார் அந்த முஸ்லீம் கடை முதலாளி முகத்தை கழுவி முன்கண்ணாடியில் பார்க்கிறேன் கண்ணாடி மட்டும் பொய் சொல்லாமல் என்னைப்பார்கிறது. பொய்யென்றும் சொல்ல முடியல கற்பனையென்றும் சொல்ல முடியல‌ முற்றும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.