Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88023
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/20/21 in all areas

  1. இப்போ தென் இந்தியா போல யாழ்ப்பாணத்தில் பல வித்தியாசமான பல தெருவோர கடைகள் வந்துட்டு, ஒரு 8 - 10 வருசத்துக்கு முதல் (மணியம் )கரம் சுண்டல் ( சந்திரா ) ஐஸ் பழம் இப்பிடி ஒண்டு ரெண்டு கடை தான் இருந்துச்சு இப்போ சந்திக்கு சந்தி பல கடைகள் வந்து இருக்கு, அப்பிடி ஒரு அப்ப கடைக்கு போய் சாப்பிட்டு பாத்திருக்கம், பாருங்க. (18) யாழ்ப்பாணத்தில இப்பிடி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க | Jaffna Street foods ft@Inthusan Raveendran - YouTube
  2. கண்ணன் வருகின்ற நேரம்.😁 அத்தான்! மனம் புண்படாமல் இருக்க நீங்காத நினைவலைகளுடன்.....😎 ஆகா...நாணமென்ன....கோணமென்ன......கண்ணன் வருகின்ற நேரம்....போன ஆவியெல்லாம்....😁
  3. யாழ்ப்பாண சுண்டல் கடை..👌
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லாமே நீதான்! வல்லோனே அல்லாஹ் கவிஞர் நாகூர் காதர் ஒலியின் இன்றைய பதிவு: 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻 🛑கடந்த 9.10.20 அன்று இந்த தகவலை மட்டும் பதிந்தேன். அதை பார்த்து பலரும் அவருடைய பாடல்களை தனக்கு அனுப்பும் படி வேண்டினர். அனுப்பியும் வைத்தேன்.இன்று ஒரு பாடலை இணைத்து பதிந்துள்ளேன். தொடர்ந்து மற்ற பாடல்களையும் பதிய இருக்கிறேன்...... 🛑இஸ்லாமிய பாடகர் வடகரை( மாயவரம்) A.M. தாலிப்.. 🛑 இந்த பாடகரைப் பற்றி சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால் இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டு மூலமும், கேசட்கள் மூலமும் அனைவரும் கேட்டு மகிழ்ந்து உள்ளத்தில் பதிய வைத்து இருக்கலாம்.இந்தப் பதிவை வாசிக்கும்போது அவரைப் பற்றியும், அவர் பாடிய பாடலின் வரிகளும் உங்கள் நினைவில் நிச்சயமாக மலரும். 🛑 1970 காலக்கட்டங்களில் தமிழ் வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் இசுலாமிய பாடல்களில் அதிகமாக இசைமுரசு, S M A காதர், இசைமணி யூசுப், மதுரை ஹுசைன்தீன், மொஹிதீன் பேக் ஆகியோரின் பாடல்களைதான் கேட்க முடியும். இதில் இசைமுரசு பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.இலங்கை வானொலியில் அழகிய வர்ணனையோடு ஒலிப்பரப்பாகும்.k அந்த நாளையில் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் வற்றாத வெள்ளமாய் எங்கள் நினைவலைகளில் இன்றளவும் பொங்கி பாய்கிறது. 🛑அந்த நேரத்தில் தான் இந்த A.M. தாலிப் அவர்களின் பாடல்கள் வானொலி வழியாக பலரது செவிகளையும், சிந்தைகளையும் ஈர்க்கிறது.இனிமையான குரல், அருமையான வரிகள், புதுமையான இசையமைப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.யார் இந்த பாடகர், யார் இந்த யார் பாடகர் என்ற கேள்விகளுடன் புருவங்கள் நெளிங்கின்றன.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே என்ற பாராட்டு விமர்ச்சனங்களும் குவிகின்றன.o சவுண்டு சர்விஸ்க்காரர்கள் இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.முஸ்லிம்கள் வீட்டு அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களிலும், தர்காக்கள் நிகழ்ச்சி, இசுலாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி அனைத்திலும் இவரது பாடல்கள் இடம் பிடிக்க தொடங்கின.இசைமுரசு பாடலுக்கு அடுத்த இடத்தை அந்நாளில் இவரது பாடல்கள் தக்க வைத்துக் கொண்டன.. 🛑இவ்வளவுக்கும் இவரை மேடை பாடகர் என சொல்லி விட முடியாது.அந்த முத்திரையையும் அவர் தமிழ்நாட்டில் பெறவில்லை. அதிக பேர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.அப்படி இருக்க இவரது பாடல்கள் எப்படி ஹிட்டானது.அதுதான் மக்கள் விரும்பும் மாற்றம். இந்த புதிய குரலைக் கேட்டதும் உள்ளத்தில் ஒருவிதமான ஆனந்தம்.உற்சாகம். 🛑 70 களில் ஒரே நேரத்தில் இவர் பாடிய 8 பாடல்கள் இசைத்தட்டு வாயிலாக வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எட்டு பாடல்களில் சில பாடல்கள் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.m சரியாக ஞாபகமில்லை. குறிப்பாக தென்னகத்தின் திருவிளக்கு தெய்வம் தந்த ஒரு விளக்கு, நன்னாகூர் புகழ் விளக்கு, நானிலத்தின் பொது விளக்கு என்ற பாடல் சலிம் அண்ணனின் வரிகள். இது அந்நாளில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் கவிதையாக வெளியானது. அந்த கவிதையை பாடகர் மெட்டமைத்து பாடலாக பாட விரும்பியதால் கவிஞர் அவர்களின் அனுமதிப் பெற்று அதை பாடினார். இச்செய்தி கவிஞர் அவர்கள் என்னிடம் நேரில் சொன்னது. 🛑மீண்டும் 1975 ,80க்குள் இன்னுமொரு இசைத்தட்டில் 4 பாடல்களை பாடி வெளியிட்டார்.அந்த 4 பாடல்களும் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் அவர்கள் எழுதியது.k ஒரு பாடல் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.ஏன்டி முத்தம்மா ,ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பாடிய திரைப்படப் பாடல்( படத்தின் பெயர் ஆறு புஷ்பங்கள்) அந்த மெட்டில் *ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்* என ஒரு பாடலை கவிஞர் அவர்கள் எழுதினார்கள். இப்பாடலை நண்பர் கலைமாமணி குல்முஹம்மது, மற்றும் பல பாடகர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடி இருக்கின்றனர். தாலிப் அவர்கள் இசைத்தட்டில் பாட போகும்போது திரைப்பட பாடல் மெட்டை மாற்றி சொந்த மெட்டமைத்து பாடினார்.இசைத்தட்டில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.. (12 பாடல்கள் தான் குறிப்பில் உள்ளது. மேலும் பல பாடல்கள் பாடி இருக்கலாம்) தாலிப் அவர்களுடன் சேர்ந்து பாடியிருப்பவர் பாடகி S. சரளா அவர்கள்... 🛑பாடகரின் சொந்த ஊர் வடகரை(மாயவரம்) என்ற போதிலும், அவர் வாழ்ந்தது, தொழில் புரிந்தது எல்லாமே மலேசியாவில்தான்.அதனால் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை.. அவர் பாடுவதை தொழிலாக கொள்ளாத காரணத்தால் மேடைகளில் ஒளி வீசவில்லை..1982 ல் ஒரே ஒருமுறை அவரை நாகூரில் சந்தித்து இருக்கிறேன்.. அவரிடமிருந்து சில தகவல்கள் அப்போது பெற்றேன்.. அதன் பிறகு தொடர்பு கொண்டதில்லை..2010ல் இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்து விட்டாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மனதில் நிறைந்து வாழும்..o அவர் இசைத்தட்டில் பாடிய 12 பாடல்களின் விபரம்..... 🔻1, இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ் ஏகன் அல்லா கட்டளை ஏற்று, 🔻2,எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவிமீதிலே, 🔻3, தென்னகத்தின் திருவிளக்கு, 🔻4, அருளான அன்பான அல்லாஹூவே, 🔻5, அல்லா அல்லா எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நீதானே, 🔻6, வானில் உதித்த வெண்மதிபோல் தீனில் உதித்த ஜோதியே, 🔻7, இருள் சூழ்ந்த நேரம்( நபிமணியே எங்கள் நாயகமே), 🔻8, வான்மேவும் வல்லோனின் புகழ் பாடுவோம், 🔻9, அல்லாவை தவிர யாரிடமும் கையேந்தி விடாதீர்கள், 🔻10,ஏங்கி நிற்கின்றேன் ( எஜமானே எங்கள் நாகூரா), 🔻11, அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யாநபி, 🔻12, செல்வோம் செல்வோம் செம்மல் நபியை கண்டு வருவோம். சிந்தைத் திகழ் மதினா...... என்ன நண்பர்களே இப்போது இந்த பாடல்கள் உங்கள் இதய வானொலியில் ஒலிக்க தொடங்கி இருக்குமே.உங்கள் எண்ணச் சுடரை பதியுங்கள்... +++++++++++++++++++ கவிஞர் நாகூர் காதர்ஒலி
  5. பொழிப்புரை :- ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது
  6. எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.
  7. குரக்கன் புட்டுக்கு தேங்காய் பூ தூவினாப்போல அங்கங்கை வெள்ளை முடியை பாக்க ஆசைப்படுறியள் பெருமாள்.🌚 உந்த நண்டனுக்கும் அந்த ஆசானை அறிமுகப்படுத்தி விடுங்கோ. அதுதானே எண்டாலும் கால் அந்தப்பக்கம் போ போவெண்டு சொல்லியிருக்குமே ?😊
  8. நோய் வந்தவர்களும் மீண்டும் வந்துள்ளது எனவே கவனமாக இருக்கவும் . உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் .
  9. எல்லா பக்கமும் சும்மா சுத்தி பாக்கிறது தானே.. மிக்க நன்றி, இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சம் பழகி கொண்டு இருக்கன், பிழைகள் இருந்தால் பொறுத்து கொள்ளவும்
  10. வந்ததும் வந்தியள் என்ன ஆப்பகடையில் நின்று உருட்டுறியள் நன்றாக இருக்கிறது வீடியோ குரலும் நன்றாக இருக்கிறது
  11. வணக்கம் வாத்தியார்........! ஆண் : பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி பெத்தவள கண் முன்னே கொண்டு வந்த நேத்து ஆண் : என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம் என் மேல என்ன பூவே ரோசம் ஆண் : முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம் வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம் ஆண் : வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட என் உலகம் உன்னோட என்று இருந்தேனே ஆண் : யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல உன் மேலே தப்பே இல்ல இல்ல ஆண் : என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே இப்ப மெல்ல மெல்ல ஆண் : நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு ஆண் : நீ எப்போ நீ எப்போ நீ எப்போ புள்ள சொல்ல போற........! --- நீ எப்போ புள்ள சொல்ல போற ---
  12. உங்களுக்கு கள உறுப்பினர்கள் என அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இனி அனைத்துப் பகுதிகளில் புதிய பதிவுகளை எழுதிக் கொள்ள முடியும்.
  13. Poovum Pottum (1968) ast: AVM Rajan, Bharathi Vishnuvardhan Crew: Dada Mirasi (Director), R Govardhanam (Music Director) Genres: Drama Release Dates: 01 Jan 1968 நின்றால் கோயில் சிலை அழகு நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு நடந்தால் அன்னத்தின் நடை அழகு நாடகமாடும் இடை அழகு அழகில் இது புதுவிதமே இறைவனுக்கே அதிசயமே
  14. மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மாமணியே 1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த அன்னையரே உருவில்லா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே 2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே இருள்திரை அகற்றி அருள்வழி காட்டி வானக வாழ்வை அளிப்பாயே. ஒளியாம் இறையே வாராய்
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இருளுக்கு நிலவாய் பிறந்தார்... எஜமானே என்றழைத்தால் அருள்வீர்
  16. 44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் . போன இடத்தில் இருந்தது சனம் கூடவாக இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀 யாழில் ஒராளை காணவில்லை என்றால் அவ்வளவுதான் மலர்வளையமும் வைத்துவிடுவார்கள் இனி போனில் போட்டுக்கொள்ளவேனும் 😁 எங்கள் இஷ்டத்துக்கு ஓடி காலை வதம் பண்ணாமல் பயிற்சி யாளருடன் தொடங்குவது மிகவும் இலகுவாக உள்ளது .
  17. 6அடியில ஒரு கிடங்கு வெட்டி வச்சிட்டுத்தான் நான் தொடங்கவேனும் .
  18. கடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 அரந்தலாவையில் சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கருணாவே கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவ்வாறே 1990 இல் புலிகளிடம் சரணடைந்த 600 சிங்கள, முஸ்லீம் பொலீஸாரை இழுத்துச்சென்று சுட்டுக்கொன்றபோதுகூட கருணாவே கிழக்கு மாகாண விசேட தளபதியாக இருந்தார். இதே காலப்பகுதியில் கருணாவின் கட்டளையின் கீழ் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள், சம்மாந்துறைப் படுகொலை, பல்லியகொடல்ல மற்றும் கொணேகல படுகொலைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இப்படுகொலைகள் எவையுமே கருணாவின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் , இன்றுவரை எந்த சிங்கள, முஸ்லீம் அரசியவாதியோ தமது மக்கள் படுகொலைசெய்யப்படக் காரணமான கருணாவினை கேள்விகேட்க முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமது அரசியல் லாபங்களுக்காக கருணாவின் பாவங்களை அவர்கள் மன்னித்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. கருணாவை அரசுடன் இணைத்து செயற்படுவது குறித்து அவர்கள் விருப்பம் கூடத் தெரிவித்திருக்கிறார்கள். சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழித்து, தமிழரை ஆட்கொள்வதுடன் ஒப்பிடும்போது, கருணாவின் படுகொலைகள் பற்றிப் பேசுவது முக்கியமற்ற ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம் தலைவர்களுக்கு என்னவாயிற்று? தமது மக்களைப் படுகொலைசெய்து, தமது வர்த்தகர்களைப் பணத்திற்காகக் கடத்திச்சென்று கொன்று, காணாமலாக்கிய கருணா மீது ஏன் இதுவரை ஒரு முஸ்லீம் தலைவர் தன்னும் கேள்வி எழுப்பவில்லை?
  19. திருமலை சிறுமி வர்ஷாவின் கொலையைச் செய்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக் குழுவே சிறிலங்கா டயஸ்போரா இணையத்தள செய்திச் சேவையில் வெளிவந்த கட்டுரை கார்த்திகை 2, 2009 ****************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** **** **** **************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************** தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் குழுவினரால் 30 லட்சம் ரூபாய்கள் கப்பப் பணத்திற்காககக் கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனும் 6 வயதுச் சிறுமியின் கொலைபற்றி அறிந்திருப்பீர்கள். இக்கடத்தல் மற்றும் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்ட இரு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் அடைத்துவைகப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தது நினைவிலிருக்கலாம். தற்போது வந்துள்ள தகவல்களின்படி இவ்விரு உறுப்பினர்களும் இப்படுகொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சம்பந்தப்பட்டிருப்பதை மறைப்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்த சம்பவங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக, இக்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் இருவர் இருநாட்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இப்படுகொலை மற்றும் இதன் பின்னாலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக சில உறுப்பினர்களைக் கொலை செய்திருக்கும் பொலீஸார், இந்த இரு உறுப்பினர்களின் மரணங்களை புலிகள் மேல் போட்டுவிட்டு தப்பிக்க முயல்கிறது. திருகோணமலை பொலீஸ் அத்தியர்ட்சகர் வாஸ் குணவர்த்தண இதுபற்றிக் கூறிகையில், கைதுசெய்யப்பட்டிருந்த இருவரையும் அழைத்துக்கொண்டு தற்கொலை அங்கிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் ஒன்றினைப் பார்வையிடச் சென்ற வேளையில் அங்கிருந்த புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தியவேளை அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகவும், சில பொலீஸாரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் கூறுகிறார். இத்தளத்தில் முன்னர் வெளிவந்த செய்திகளின்படி, சிறுமி வர்ஷாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைதுசெய்யப்பட்டிருந்தவர்களை அகற்றும் முயற்சிகள் ஆளும்தரப்பிற்கு விசுவாசமான நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறியிருந்தோம். வர்ஷாவின் கடத்தல் மற்றும் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான ஒஷ்வின் மேர்வின் ரினவுஷன் எனப்படும் ஆயுததாரி பொலீஸ் வாகனத்தில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பொலீஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவ்வாறே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் உப்புவெளி அலுவலகத்தின் பொறுப்பாளர் மரியராஜன் ஜனார்த்தன் சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமடைந்ததாக உப்புவெளி பொலீஸார் கூறியிருந்தனர். இக்கொலை பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலீஸ் அதிகாரியை காரணங்கள் ஏதுமின்றி இடமாற்றம் செய்திருந்தது, அரசின் அதிகார மட்டங்கள் இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே என்பது தெளிவாகிறது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய தினேஸ் குணவர்த்தன இக்கொலையின் பின்னாலிருந்தவர்களை மறைக்கும் கைங்கரியத்தில் வெளிப்படையாகவே பேசியது நினைவிலிருக்கலாம். அடுத்ததாக , இக்கொலையின் இரண்டாவது குற்றவாளியான ஜனார்த்தனின் முகம் முற்றாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது, அவர் சயனைட் உட்கொண்டுதான் இறந்தாரா இல்லையா என்பதை பிரேதப் பரிசோதனைமூலம் கண்டறிவதை இதன் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் விரும்பியிருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. இப்படுகொலையினைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பல விடயங்கள் இதன் பின்னால் அரசுக்கு ஆதரவான குழுவொன்று இருந்திருக்கிறதென்பத்கை கோடிட்டுக் காட்டுகின்றது. அண்மையில் அரசின் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன், பிள்ளையான் குழுவினர் தாம் வாக்குறுதியளித்தபடி தமது ஆயுதங்களை அரசிடம் இன்னும் முற்றாகக் கையளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். கண்துடைப்பிற்காக ஒரு சில ஆயுதங்களை மட்டுமே கையளித்த பிள்ளையான் குழுவினர், கொள்ளைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் உட்பட பல்வேறான குற்றச் செயல்களுக்காக இன்னும் பெருமளவு ஆயுதங்களை தம் வசம் வைத்திருப்பதாக கருணா மேலும் தெரிவித்திருந்தார். அண்மையில் தினமின எனும் நாளிதழுக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர் கெகெலிய ரம்புக்வெல்ல, "பிள்ளையான் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார் என்பது உண்மையானாலும் கூட, அவர் கையளித்த ஆயுதங்களின் அளவைப் பார்க்கும்பொழுது இதனைக் காட்டிலும் அதிகமாக அவரிடம் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதினோம்" என்று கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், "அவர்களிடம் இன்னமும் ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது எமக்கு ஒரு பிரச்சினையல்ல, அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க ஒத்துக்கொண்டதே நல்ல முயற்சிதான், அவர்களிடம் மேலும் ஆயுதங்கள் இருப்பின் அவற்றினை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகளை எம்மால் செய்யமுடியும்" என்றும் கூறியிருந்தார். ஆகவே, பிள்ளையான் தனது குழுவினரிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையுமே கைய்யளிக்கவில்லையென்பதும், அரசாங்கம் இதுபற்றி அதிகம் அக்கறை காட்டவில்லையென்பதும் புலனாகிறது. வர்ஷாவின் கொலையில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருப்பதை மறைக்க பொலீஸார் எடுத்த முயற்சியின் ஒரு அங்கம்தான் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சாட்சியமளிக்கும் முன்னரே பொலீஸாரால் நாடகபாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது. அதே போல, ஏனைய இரு உறுப்பினர்களின் கொலைகளும் பொலீஸாரினால் மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு பிள்ளையானின் கொடிய கரம் சிறுமி வர்ஷாவின் படுகொலையின் பின்னால் இருந்ததை மறைத்திருக்கிறார்கள். கடத்தலுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் நால்வரும் கொல்லப்பட்டு, சாட்சியங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதானது பிள்ளையானைக் காப்பாற்ற அரசு எவ்வளவு தூரம் முயன்று வருகின்றது என்பதையே காட்டுகிறது. பிள்ளையான் ஆயுததாரிகளால், கடத்தப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்ட 6 வயதுச் சிறுமியான வர்ஷாவின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், அரசு அவரைப் பாதுகாக்க இறுதிவரை துணைநின்றதும் இச்சம்பவங்கள் மூலம் நிரூபணாமாகிறது. ஆங்கிலத்தில் சுகத் குமார அழகக்கோன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.