Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்14Points19163Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points88007Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்7Points8910Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/27/22 in all areas
-
புட்டினும் புதுமாத்தளனும்
7 pointsகாலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட். மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான். பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய? எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான். இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான். ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். எங்கட ஊரில? நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்? எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான். 1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான். மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான். ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம். ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான். அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள். நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான். ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும். சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது. தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை. குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், உடான்ஸ் சாமியார் (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)7 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது. கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய சிங்களம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றிவந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு "உங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது" எனும் மிரட்டலினை விடுத்து ஒரே நாளில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. பின்னர், சர்வதேசச் செய்தியாளர்கள் எவரும் யுத்தம் நடைபெறும் பகுதிக்குச் செல்லமுடியாதெனும் கட்டளையினை விடுத்து விரியவிருக்கும் கொலைக்களத்திலிருந்து உண்மைச் செய்திகள் வெளியே கசிவதை அது தடுத்துக்கொண்டது. சர்வதேசத்தையும், உள்நாட்டுச் சிங்களவர்களையும் ஏமாற்றும் நோக்கில் தமிழினம் மீது தான் நடத்தத் திட்டமிட்டிருந்த இனவழிப்பிற்கு " மனிதாபிமான மீட்பு நடவடிக்கை" என்று பேர்சூட்டிக்கொண்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மாவட்ட அரச அதிபர்களின் கணிப்பீட்டின்படி உள்ளே தஞ்சம் அடைந்திருந்த மக்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இருபதினாயிரம் என்றிருக்க, அவ்வெண்ணிக்கையினை வேண்டுமென்றேகுறைத்து மதிப்பிட்டு வெறும் எழுபதினாயிரம் மட்டுமே என்று சர்வதேசத்தை ஏமாற்றி வந்தது. ஆனால், தான் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்ட எண்ணிக்கையான 70,000 மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்குப் பதிலாக வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான உணவுப் பொருட்களை அனுப்பிவைத்து சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றிவந்தது. உணவையும், மருத்துவப் பொருட்களையும் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல் கூடாது எனும் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு முரணாக உணவையும் மருந்தினையும் உள்ளே தஞ்சமடைந்த மக்களுக்கு வழங்கமறுத்து அவர்களை பட்டினிச் சாவினுள் தள்ளுவதன் மூலம் மக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், போரிடும் மனோவலிமையினையும் அடித்து நொறுக்கியது. வேண்டுமென்றே குரைத்து மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை, அக்குறை மதிப்பீட்டிற்கும் கூட போதாத உணவுப் பொருட்கள் என்ற சதிகளின் மேல், உணவுப்பொருட்களைக் காவிச் சென்ற பாரவூர்திகளையும் தனது வான்படையைக் கொண்டு அழித்துக் கொண்டது.4 points
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 20223 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
வணக்கம் அண்ணா. கண்டது சந்தோசம். இங்கே நான் ரஞ்சித்துக்கு எழுதியது என் மனதில் பட்டது. யாழில் எனக்கு இருப்பதாக நீங்கள் சொல்லும் இடம், அதை நான் தாழ்த்தி கொள்வது இவை எதையும் விட ரஞ்சித்தின் மன நிம்மதி எனக்கு முக்கியமாக பட்டதால் எழுதிய வார்த்தைகள் அவை. அதை அவர் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. கண்டது சந்தோசம் ரதி அக்கா.2 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தொடர்ந்து எழுதுங்கள்... வாசிப்பதும் தீர்மானிப்பதும் வாசகராகட்டும்.2 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித், நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது. Save your sanity 🙏🏾.2 points
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் சிங்கள அரசின் நேரடிப் பங்களிப்போடு.. அமெரிக்கா.. ரஷ்சியா.. ஹிந்தியா.. சீனா.. ஐநா.. உட்பட எல்லாரும் சேர்ந்து நடத்தியது. இனப்படுகொலை தொடர்பான.. எந்த ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடத்தினார்கள். அதுவும் உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக போராடாத மக்களை கொன்று குவித்தார்கள். சொந்த மண்ணில் சொந்த வாழும் உரிமையைக் கோரியது ஒன்றே அந்த மக்கள் செய்த குற்றம். அது பயங்கரவாதமாக்கப்பட்டது. ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம். ஆக.. தமக்கான எதிரி சீனா.. என்பதோடு இருக்க விரும்பும் மேற்குலகம்.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த நடத்தும் ஒரு யுத்தத்தில் ரஷ்சியா தன் இருப்பை தக்க வைக்கும் நடவடிக்கையும்.. தமது உயிர்வாழ்வுக்காக.. உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை தமிழர் என்பதற்காகவே கொன்று குவித்ததும் ஒன்றல்ல. முள்ளிவாய்க்கால்.. ஒரு கூட்டு இனப்படுகொலையின்.. ஆதாரமற்று நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையின் அடையாளம். ரஷ்சியாவால் மரியுப் போல் சிதைக்கப்பட்டது போல்.. உக்ரைனால்.. ரஷ்சியர்கள் வாழ்ந்த Donbas பிராந்தியம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு பெரிந்துரோக இனப்படுகொலைக்கு ஆளான நாமே.. மேற்குலகின் பிரச்சாரங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சிந்தனைக்குள் வைச்சுக் கொண்டு மரியுப் போலுக்காக குரல் எழும்பி.. Donbas பிராந்திய அழிவுகளை உக்ரைனின் அரச பயங்கரவாதத்தை மறைப்பது மிகக் கேவலமான செய்லாகும். உண்மையில் ரஷ்சியா பலவீனப்படுவது.. உலக யுத்த சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு.. அமெரிக்க சார்பு சக்திகளின் ஏகாதபத்தியத்துக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் உலகெங்கும் ஆதாரமற்ற படுகொலைகள் மூலம் இலக்காகும் அபாயமே அதிகம்.2 points
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
2 points
- அந்த மனிதன்
1 pointநான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........1 point- சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??! இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்.. இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும். நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள். பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து.. பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்றும் தான்.. கொழும்பு துறைமுக நகர் உலகின் பிரதான நகரங்களை விட விஞ்சும் அளவுக்கு அமையும் ஒப்பீட்டு விளம்பரங்கள் மத்தியில்.. அது இப்படித்தான் அமையும் என்ற ஓவிய விளம்பரம். கண்ணுக்கு கவர்ச்சியாக அமைந்தாலும்.. இதன் பின்னால்.. எழும் வினாக்கள் ஆயிரம்..?! அதில் ஒன்று இது எப்போ முடியும்.. அதற்கான சாத்தியம் என்ன..??! === இப்போ இந்தப் பூமி.. கடும் வெயில் சுடும் இலங்கையின் சகாரா என்றால் மிகையல்ல.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஓம் மரியோபுலில் நடப்பது புரினின் மனிதமீட்பு மருத்துவமனைகள் புனரமைப்பு பணிகள். அதை நீங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்துடன் ஒப்பிட்டு எழுதும் போது பலர் வந்து விமர்சிப்பார்கள் தான்.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தலைப்பே உள்ளடக்கம் எப்படி அமையப் போகிறது என்று செப்பிவிட்டது. எம்மீதான இன அழிப்புப் போரில் நேரடிப் பங்களிப்பு செய்த உக்ரைன்.. எம் மக்கள் மீது எரிகுண்டு எனும்.. பொஸ்பரஸ் குண்டு வீசியவர்கள்..இன்று தங்கள் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதாகச் சொல்லி மேற்கு நாடுகளிடம் பல்வேறு இராணுவ உதவிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு ஊடகங்களும் உக்ரைனின் டொன்பாஸ் (DONBAS) ரஷ்சிய மொழி பேசும் மக்களின் இன அழிப்பை மறைத்தும் குறைத்தும் பேசி வருகின்றன. நாமும் அதற்கு இசைவது போல் பக்கச் சார்புக் கட்டுரைகள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பொருண்மிய தடையும்.. தொடர் குண்டு வீச்சும் நடத்தி மக்களை வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்த போது இதே மேற்குலக ஊடகங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்கள் விடுவிப்பு என்றும் புலிகள் மனிதக் கேடயமாக மக்களை பாவிப்பதாகவும் உச்சரித்தன. இன்று ரஷ்சியா அப்படிச் செய்வதாக உக்ரைன் சொல்லும் போது... ரஷ்சியா குண்டு வீசி மக்களை தன் பக்கம் இழுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இது மேற்குலகின் இரட்டை வேடத்தனத்திற்கு நல்ல உதாரணமும் கூட. அப்படியான மேற்குலக செய்தி ஆதிக்கங்களின் அடிப்படையில்.. எமது மக்களின் வலியை இழப்பை அழிவை தவறான ஒப்பிடலுக்குள் கொண்டு செல்வது எம் மக்களின் வலியை இழப்பை மலினப்படுத்தும்.. அவர்களின் நீதிக்கான குரலை ஓரங்கட்டுவதுமாகிவிடும். உக்ரைன் - ரஷ்சிய போரின் உள்..வெளி நோக்கம் வேறானது. எமக்கு தெரியாத பலதும் அதற்குள் உண்டு. ஆனால்.. எம் மக்கள் மீது எம் மண்மீதும் திணிக்கப்பட்ட போர் மற்றும் இனவழிப்பை தெளிவாகத் தெரிந்திருந்தும்.. அதனை புலிகளோடு சேர்த்து கேள்விக்குட்படுத்தியவர்கள்.. உக்ரைனுக்கு வெள்ளையடிப்பது ஏனோ..??! எம் மக்களைப் பொறுத்த வரை.. உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் தமிழின அழிப்பிலான பங்களிப்பு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் பங்களிப்பில் இருந்தும் சற்றும் குறைந்ததல்ல.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு நீங்கள் மட்டும் திரும்ப வருவீர்களாக்கும்😫1 point- புட்டினும் புதுமாத்தளனும்
1 pointஉடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால், இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
எண்ணையை ஊத்துவதில் உங்களை விட யாழில் ஒருவர் இருக்க முடியாது. ---------------------------------------------------------------------------------------------------- ரகு அவர்கள் எழுதியது ஒரு அரசியல் கட்டுரை. அவரின் ஆதங்கம், நம்பிக்கை என்ற வகையில் எழுதி உள்ளார். அவரின் சுய ஆக்கம் எனினும் பதில் கருத்து எழுத முடியாது என யாழ் கள விதிகள் உள்ளதா என தெரியவில்லை.1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இங்கே நெடுக்ஸ் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் போல இருக்கிறது. ரஞ்சித் முதல் எழுதிய இரு பந்தியிலும் ரசிய உக்ரேன் போரைப் பற்றி எதுவுமே எழுதவில்லை. ஆடறுக்க முதல் என்னவோ அறுத்த மாதிரி போகுது. ரஞ்சித் நெடுக்ஸ் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரே தவிர அவரையோ யாரையுமே கருத்தெழுதக் கூடாது என்று நீங்கள் சொல்லது மிகவும் தவறு. இது கோவிலில் நடக்கும் அன்னதானம் மாதிரி.யார்யார் சாப்பிட வேண்டும் எம்மால் உத்தரவிட முடியாது. வணக்கம் கோசான் இந்த வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. யாழில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருக்கிறீர்கள். தயவு செய்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இதுவரை காலமும் ரஞ்சித்தின் ஆக்கங்களுக்கு எல்லோரும் மிகுந்த ஆதரவு கொடுத்தே வந்துள்ளனர். ஆக இந்த உக்ரேன் ரசிய போரில் அவரவர் தங்கள் கருத்தை வைக்கிறார்கள்.இதனால் புரிந்திராத எத்தனையோ விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது. நன்றி.1 point- சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
பார்க்க அலங்காரமாய் தெரிந்தாலும், கடலுக்குள் மண்ணை நிரப்பி கையை சுட்டுக்கொண்ட நாடுகள் உண்டு. எதிர்பார்த்தளவு வருமானம்,வரவேற்பு இல்லாமல், பணிகள் இன்னும் முடியாமல் இருக்கும் மணற்திட்டுகள் அதிகம்.1 point- அந்த மனிதன்
1 pointபகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஏன் இந்த கைபிற்ஸ் கோவம் அண்ணா.✍️வராதீங்கோ பார்க்காதீங்கோ எழுதாதீங்கோ என்றால் எப்படி உங்கள் ஆக்கங்களைப் படிப்பது நாங்கள்.வாசிப்பதற்கு யாரும் இல்லாத விடத்து எழுதியும் பிரியோசனம் இல்லயே..சற்று யோசிச்சு பாருங்கோ..அப்புறம் என்னோடும் கத்தக் கூடா..மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டு போறன்.நன்றி.🖐️1 point- அதிசயக்குதிரை
1 point1 point- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
யுத்தத்தில் பொதுமக்கள் தஞ்சமடையும் முகாம்கள், காயப்பட்டவர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்பவற்றின்மீது போரிடும் எத்தரப்பாக இருந்தாலும் தாக்குதல் நடத்தமுடியாதென்பது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடைமுறையும், சட்டமும் ஆகும். இதுபோலவே பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பனவும் யுத்தத்தில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட முடியாதவை என்றும் சட்டம் இருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, தானே பிரகடனம் செய்த இரு யுத்த சூனிய வலயங்களுக்குள் மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து, அப்பகுதி மீது தனது விமானப்படையினரைக் கொண்டும், நீண்டதூர எறிகணைகளைக் கொண்டும் அதிகளவு பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் ஒரே நோக்கில் நோக்கில் கர்ணகடூரமான , தொடர்ச்சியான தாக்குதலினை மேற்கொண்டது. ஒரு தாக்குதல் முடிவடைந்து, கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்க ஏனையவர்கள் அப்பகுதியில் திரளும்போது, தனது இரண்டாவது தாக்குதலினை நடத்தி இன்னும் இன்னும் அதிகமான மக்கள் உயிரிழப்புக்களை அது உருவாக்கியது. தாக்குதல்களில் உயிர் தப்பியவர்கள் தப்பியோடி, தஞ்சமடையும் பகுதிமீதும் அவர்களைத் தொடர்ந்துசென்று தாக்குவதன் மூலம் காயப்பட்டவர்களைக் கூடக் காப்பாற்றும் அம்மக்களின் முயற்சிகளைத் தோற்கடித்திருந்தது. யுத்த சூனியப் பிரதேசங்கள் மீது சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை வானிலிருந்து வீசி, வெண்பொசுபரசு எனும் இரசாயணம் மக்கள் மேல் சிதறிவெடித்து பலர் எரிகாயங்களுடன் உயிரிழக்கும் அவலத்தை ஏற்படுத்தியது. இது போதாதென்று பல்குழல் எறிகணை செலுத்திகளில் தேர்மோபேரிக் எனும் அதிவெப்ப எறிகணைகளைச் செலுத்தி, வீழ்ந்து வெடிக்கும் இடத்தின் ஒக்ஸிஜன் வாயுவை ஊரிஞ்சியெடுத்து பலர் மூச்சுத் திணறியும், காற்றில் எரியுண்டும் கருகிச் சாவதை உறுதிப்படுத்திக்கொண்டது. இவ்வாறே, போரில் கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டிய மிக முக்கிய இடங்களில் ஒன்றான வைத்தியசாலைகள் மீது சிங்களம் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் அகோரமானவை. "இந்த அமைவிடங்களில் இருக்கும் வைத்தியசாலைகளைத் தவிருங்கள்" என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ராணுவத்திடம் கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிட விபரங்களைப் பாவித்தே குறைந்தது இரு வைத்தியசாலைகள் மீதும், புலனற்றோர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபரைப் பராமரிக்கும் இடங்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு பல நூற்றுகணக்கான அப்பாவிகளைக் கொன்று தள்ளியது. முதலாவது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் மீட்கவந்த மருத்துவ பணியாளர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழப்பதையும் இதன்மூலம் சிங்களம் உறுதிப்படுத்திக்கொண்டது.1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- அதிசயக்குதிரை
1 pointமுற்றும் துறந்த குரு ஒருவர் இருந்தார்.... ஒரு ஊரில் அவரைப் பிரசங்கம் செய்வதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு அங்கு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான், "ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருந்து, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்" என்றான். அந்தக் குருவுக்கு படாரென்று அறைந்தது போல் இருந்தது. அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்..... தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார். அவன், "ஐயா, நான் ஒரு குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்" என்றான் அவன்...... அவ்வளவு தான்! அந்தக் குரு அதிர்ந்து விட்டார்...1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- பார்வை ஒன்றே போதுமே.......!
1 pointபார்வை ஒன்றே போதுமே..... ( 4). உறவினரா என்று சோமு கேட்க ஒரு வினாடி சுதாகரித்த முத்து, ம்....அப்பா வழியில் சொந்தம் என்று சொல்லி விட்டு அவரை தன்னோடு அழைத்துச்சென்று தான் வேலை செய்யும் இடத்தில் இருத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சூடாக பால்தேனீரும் வடையும் வாங்கி வந்து அவருக்கும் குடுத்து தானும் சாப்பிட்டான். பின் வாடிக்கையாளர்கள் வர வர முத்துவும் வேலையில் மூழ்கி விட்டான். அவன் வேலை செய்யும் வேகத்தையும் லாவகத்தையும் பணம் வாங்குவதும் மிகுதியை குடுப்பதுமாக அவனது சுறு சுறுப்பைப் பார்த்த சாமிநாதனுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.தன்னையறியாமல் அவனுக்கு கூடமாட எல்லா உதவிகளையும் செய்கிறார். மத்தியானம் அவருக்கும் சேர்த்து முத்து சாப்பாடு வாங்கி வர இருவரும் சாப்பிடுகின்றனர். இரவு இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவதைக் கண்ட மகேஸ்வரி ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்கிறாள்.அப்போது முத்து காலையில் இருந்து நடந்ததை தாயிடம் சொல்கிறான். நாட்கள் மாதங்களாக உருண்டோடுகின்றன.சாமிநாதனும் இப்போது அவர்களில் ஒருவராகி விட்டார். அவரும் செருப்பு தைக்கும் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு விட்டார். அதனால் முத்துவும் இவரை அங்கே விட்டு விட்டு தான் வீடுகளுக்கு பேப்பர் போடுதல், டிப்போவில் இருந்து பால் வீடுகளுக்கு மற்றும் கடைகளுக்கு எடுத்து சென்று குடுத்தல் போன்று வேறு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். சாமிநாதனின் வழிகாட்டலில் அந்தக் குடும்பம் மாணிக்கம் பட்ட கடன்களை அடைத்துக் கொண்டே வந்தது. முத்து சாமிநாதனுக்கு பணம் தர முற்பட்டபோதும் அவர் வாங்கவில்லை.மறுத்து விட்டார். ஆயினும் மகேஸ்வரி அவருக்கென்று ஒரு சிறு தொகையை தனியாக சேமித்துக்கொண்டு வருகிறாள். அவரது ஊர் மற்றும் குடும்பம் பற்றி எதுவும் தெரியாததால் நாளைக்கு ஒரு பிரச்சினை மனக் கசப்பு வரக்கூடாது என்று அந்தச் சேமிப்பு. அதில் அவள் உறுதியாய் இருக்கிறாள். சித்ராவும் பரீடசைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்தாள். இப்போது அவர்களின் கையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பணமும் சேர்ந்து கொண்டிருந்தது. கூடவே மகேஸ்வரியையும் சாமிநாதனையும் இணைத்து வதந்திகள் அக்கம் பக்கம் எல்லாம் பரவி எல்லோரும் கதைத்து மகிழ்ந்து அலுத்து அது அப்படியே புஷ்வாணமாகிப்போய் அந்தக் குடும்பத்துக்கென்று ஒரு கௌரவமும் மதிப்பும் உண்டாகியிருந்தது. சாமிநாதன் வீட்டுக்கு வெளியே திண்ணையில் இருக்கும் கட்டிலில் படுத்தபடி வானத்தைப் பார்க்கிறார். நல்ல நிலா வெளிச்சமாக இருக்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர தான் வீட்டை விட்டு கிளம்பிய அன்றும் இப்படித்தான் நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அன்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.அங்கு அவர் மனைவி ரேகா இல்லை. கைபேசியில் அழைத்தும் அழைப்பில் இல்லை. வேலைக்காரியிடம் கேட்ட பொழுது அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு கிளப்புக்கு சென்றிருப்பதாக சொன்னாள். காத்திருந்தார் வரவில்லை.நேரம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. காரை எடுத்துக் கொண்டு அவள் வழக்கமாகப் போகும் கிளப்புக்கு போனார்.ஹோலில் இருந்த கூட்டத்தில் ரேகா இல்லை.எங்கு போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டு மதுவுக்கு ஓடர் குடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது அவள் ஆடைகள் விலகிய நிலையில் ஓர் அந்நிய ஆணின் அணைப்பில் போதையில் தள்ளாடியபடி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கு கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்து அங்கேயே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கொன்று விடலாம் போலத் தோன்றியது. எதுக்கும் வீட்டுக்கு வரட்டும் என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். உள்ளே கோபம் தணலாக எரிந்து கொண்டிருந்தது. மேசை லாச்சியைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து அதில் ரவைகளைப் போட்டு தயார் நிலையில் வைத்துவிட்டு "குட்டி போட்ட பூனைபோல்" அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்......! பார்ப்போம் இனி.........! ✍️1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
0 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தமிழின முள்ளிவாய்க்காலின் மணற்கரைகளில் வடிந்தோடிய குருதி இன்னும் ஈரமாகவிருக்க, இன்னொரு முள்ளிவாய்க்கால் சுமார் 5,847 கிலோமீட்டர்கள் தொலைவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ராணுவம் ஒன்று சிங்களப் பிசாசுகள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து "விசேட மனிதாபிமானப் படை நடவடிக்கை" என்கிற பெயரில் பாரிய இனவழிப்பொன்றை உக்ரேன் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையில், தனது இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் பகுதியென்று சுதந்திர உக்ரேனின் இரு நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் தன்னுடன் வல்வளைத்துக்கொண்ட ரஸ்ஸிய அரச பயங்கரவாதம், தன்னால் வல்வளைக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளுக்கும் இடையில் அகப்பட்டிருக்கும் உக்ரேனிய துறைமுக நகரான மரியோபுலை முற்றான முற்றுகைக்குள் கொண்டுவந்து, சாட்சியங்களற்ற மிகப்பெரிய இனவழிப்பினை முடுக்கி விட்டிருக்கிறது. தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும், இன்று உக்ரேனின் மரியோபுல்லில் ரஸ்ஸியா நடத்திவரும் முற்றான அழித்தொழிப்பு - இனவழிப்பிற்கும் இடையே இருக்கும் நெருங்கிய ஒற்றுமைகளை ஒப்பிடுவதே எனது ஆக்கத்தின் நோக்கம். குறிப்பு : இங்கே என்னுடன் விதண்டாவாதம் செய்ய முனைவோர் தயவுசெய்து அரசியற் களத்திலோ அல்லது உலக நடப்பிலோ அல்லது நிகழ்வும் அகழ்விலுமோ அதைச் செய்யுங்கள். உங்களுடன் வீண் விதண்டாவாதங்களில் எனது நேரத்தை இங்கே நான் விரயமாக்க விரும்பவில்லை. உங்களுக்கான பதில்களை நான் ஏற்கனவே மேல் குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கிவிட்டேன். தயவுசெய்து, இங்கே வேண்டாம் , நன்றி !0 points- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தனது ராணுவத்தின் முன்னேற்றம் தடைப்பட்ட கணங்களிலும், தனது ராணூவத்திற்கு அதிக இழப்புக்கள் ஏற்பட்ட கணங்களிலும் பொதுமக்கள் மீதான தனது அகோரக் குண்டுவீச்சினை முடுக்கிவிட்ட சிங்களம் அவ்வப்போது தனது இயலாமையினை அப்பாவிகள் மீது காட்டுவதன் மூலம் வஞ்சம் தீர்த்துக்கொண்டது. தமிழ் மக்கள் மீதான தனது இனவழிப்பின் சாட்சியங்களை முற்றாக மறைத்துவிட்ட சிங்களம், தன்னுடைய வீரப் பிரதாபங்களை தெற்குச் சிங்களவர்களுக்கும், தனது நேச நாடுகளான ரஸ்ஸியா, இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகியவற்றிற்குக் காட்டுவதற்காக அரச தொலைக்காட்ட்சியின் படக்குழுவை தன்னுடன் போர் முன்னரங்கிற்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் தனது ராணூவம் அடைந்துவரும் வெற்றிகள் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு, போரில் அழிக்கப்பட்டுவரும் பொதுமக்களின் விபரங்களை முற்றாக இருட்டடிப்புச் செய்தது. சர்வதேச நாடுகளால் இலங்கையின் போர் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட கரிசணைகளையும், கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் பொய்யென்று வாதாடி மறுத்ததுடன், தனது படக்குழுவினரால் சோடிக்கப்பட்டு படமாக்கப்பட்ட "புலிகள் பொதுமக்களைக் கொல்கிறார்கள், யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயுதங்களைக் குவித்து வைக்கிறார்கள், யுத்த சூனிய வலயத்தின் இதயப்பகுதியிலிருந்து எம்மீது எறிகணைத் தாக்குதல் நடத்துகிறார்கள், வைத்தியசாலையின்மீதிருந்து தாக்குதல்கள் நடத்துகிறார்கள், பொதுமக்களின் உணவைப் பறித்துச் செல்கிறார்கள்" பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கிறார்கள்" என்று கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு தன்னால் கொல்லப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலையினை ஒன்றில் புலிகள் கொன்றார்கள் எம்றோ அல்லது புலிகள் இம்மக்களை கேடயமாகப் பாவித்துத் தாக்கினார்கள் என்றோ கூறி நியாயப்படுத்திக்கொண்டது. போரின் இறுதிநாட்களில், புலிகளின் ஆயுதங்கள் மெளனித்திருக்க, பதுங்குகுழிகளிலும், இன்னும் இடிபடாத வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மீது தாங்கிகளை ஏற்றிச் சென்றதுடன், தாங்கிகளின் பின்னால் அணிவகுத்து வந்த ராணுவக் காலாற்படை இன்னும் முனகல்கள் கேட்ட பதுங்கு குழிகளுக்குள் நூற்றுக்கணக்கான கைய்யெறிகுண்டுகளை எறிந்து அம்மக்கள் தாம் தஞ்சமடைந்திருந்த குழிகளுக்குள்ளேயே சமாதியாவதை உறுதிப்படுத்திக் கொண்டது . உச்சகட்ட இனவழிப்பு அரங்கேறிக்கொன்டிருக்க, இனவழிப்பு ராணுவத்தின் இன்னொரு படையணி சரணடைந்தவர்களை கூட்டாக இழுத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி தலையில் சுட்டுக் கொன்று இனவாதப்பசி தீர்த்துக்கொள்ள, இன்னொரு அணி கட்டாயமாக பிடித்து இழுத்துவரப்பட்ட தமிழ்ப் பெண்களையும் சிறுமிகளையும் கூட்டாக வன்புணர்ந்து தனது இன இச்சையினைத் தீர்த்துக்கொண்டது. துப்பாக்கிகளின் ரவை தீரும் வரைக்கும், தமது ஆண்குறிகளின் விந்தணுக்கள் நீர்த்துப் போகும்வரையும் இச்சைதீர்த்த சிங்களப் பிசாசுகள் அப்பிரதேசமெங்கும் குவிந்துகிடந்த தமிழினத்தை கூட்டாக கனரக வாகனங்கள் கொண்டு பாரிய புதைகுழிக்குள் தள்ளி மூடி சாட்சியங்களை அழித்து, தனது வெற்றியை பறைசாற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டது. இனக்கொலை யுத்தத்தின் முடிவில், சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்ட 280, 000 அப்பாவிகளை முட்கம்பி முகாமினுள் அடைத்து, விசாரணை என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், பெண்களும் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கும், அதன்பின்னரான படுகொலைகளுக்கும் உள்ளானார்கள். பல பெண்கள் இராணுவத்தாலும், துணைராணுவக் குழுக்களாலும் இழுத்துச் செல்லப்பட்டு கட்டாய விபச்சாரத்தில் தெற்கில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே சிங்களத்தால் சர்வதேசத்திடமிருந்து முற்றாக மரைக்கப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை ஆரத்தழுவி வரவேற்கும் ராணுவம், அவர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்களைக் கொடுக்கிறது, களைத்துப்போய் , நடக்க திராணியற்று வரும் வயோதிபர்களையும், சிறுவர்களையும் தனது கைகளில் ஏந்தி நீரைக் கடந்து மீட்டு வருகிறது, முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கொடுத்து மகிழ்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தன்மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்து, சர்பதேசத்தில் தன்மீதான தீர்மானங்களை தனது நீண்டகால நண்பர்களான ரஸ்ஸியா, பாக்கிஸ்த்தான், சீனா, இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் இன்றுவரை தடுத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ வெற்றிகரமாக இயங்கிவருகிறது. முதலாவது, இது எனது ஆக்கம், நீங்கள் கருத்துக் கூறவேண்டிய தேவையில்லை. யாழ்க் களத்தின் 24 ஆவது ஆண்டு நிறவிற்காக எழுதப்படும் எனது சொந்த ஆக்கம். உங்களுக்குத் தேவையென்றால் ரஸ்ஸியாவைன் இனக்கொலையினை நியாயப்ப்டுத்தி சொந்தமாக ஒரு ஆக்கத்தினை எழுதுங்கள். இங்கே வந்து எனது ஆக்கத்தினை சிதைக்குமாறு நான் கோரவில்லை. இரண்டாவது, நான் என்ன எழுதப்போகிறேன் என்பதை தீர்மானிக்கவோ அல்லது எனது ஆக்கம் எத்திசையில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவோ நீங்கள் யார். இது ஒன்றும் அரசியல் விவாதக் களம் அல்ல. புரிந்துகொள்ளுங்கள். உங்களின் விதண்டாவாதங்கள் இங்கே எனக்குத் தேவையில்லை. அகலுங்கள்.0 points- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
இந்த கட்டிடத்தில் தமிழை இப்படி போட்டு தரந்தாழ்த்தி விட்டார்கள் .0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அந்த மனிதன்