Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    24
    Points
    8907
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7051
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20018
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/16/24 in Posts

  1. 5 points
    2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  2. 5 points
    அவனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க, அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம் ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன். அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன்.
  3. 4 points
    மண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன‌. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது. அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன். 16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள். அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான். அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன். முற்றும்.
  4. ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி, அறிமுகமில்லாத வேற்று மனிதர்களை வீட்டோடு சேர்த்துக்கொள்ளவோ குழந்தைகளை தொடவோ தூக்கி கொஞ்சவோ , மாமாக்கு ஒரு அவ்வா கொடுங்கோ என்று கேண தனமா உறவு கொண்டாட அனுமதிக்கவோ தனியாக எங்கும் அனுப்பி வைக்கவோ அனுமதிப்பது சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டுவதற்கு சமம். ஒருசில மேலைநாடுகளில் குறிப்ப்பிட்ட வயதுக்கு பின்னர் பெற்ற தந்தையே தன்னோட மகளுக்கு உடை மாற்றுவது சட்டப்படி குற்றம், ஆரம்பத்தில் என்னடா இது கேவலமான சட்டம் என்று தோன்றியது, பின்னர் பெற்ற மகள் மீதே கை வைத்த கேவலமான ஒரு சில மனிதர்களை பார்த்த பின்பு சட்டம் பற்றி கேவலமா சிந்திச்சது நான்தான் என்று பின்பு தோன்றியது. அஞ்சலிகள் அந்த பிஞ்சுக்கு.
  5. 3 points
    நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  6. 3 points
    2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
  7. அவர் தயாரித்த தீர்வுப் பொதி பற்றி அறியலாமா?
  8. சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
  9. @Justin @Kandiah57 எனது பார்வையில், கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது. 2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே உள்ளனர். அவ்வாறாக சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன் அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும்.
  10. இதில் சூசை அவர்களின் சிங்கபூர் பயணம் தொடர்பாக உள்ளது. https://eelamaravar.wordpress.com/2024/01/06/praba-soosai/ 2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா? இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது? அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார். இதில் தளபதி பால்ராஜ் https://www.tccnorway.no/2015/05/20/சமர்க்கள-நாயகன்-பிரிகேடி/ அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.
  11. இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.
  12. 2 points
    ஒரு ஏழெட்டு நாட்கள் இருக்கலாம். அவந்து சகோதரன் தொலைபேசியில் அழைத்தான்."நான் இன்றைக்கு வேலைக்கு வரவில்லை, அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு வருகிற வாரம் கொண்டு செல்லவிருக்கிறோம், அம்மாவாலும், அப்பாவாலும் அதனைத் தனியே செய்ய முடியாது. ஆகவேதான் நான் லீவெடுத்து அதனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நாளைக்கு நிச்சயம் வருவேன், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். "ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமாக எடு. நாளைக்கும் நீ வரவேண்டும் என்றில்லை, பார்த்துச் செய்" என்று கூறினேன். நன்றியென்று குறுந்தகவல் வந்தது. மறுநாள் அவன் வரவில்லை, நானும் அவனை அழைத்துத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. பணி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கைத்தொலைபேசிக்குக் குருந்தகவல் ஒன்று வந்திருந்தது. அது இப்படிச் சொல்லிற்று, "வணக்கம் அன்பர்களே, துரதிஸ்ட்டவசமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நாங்கள் எங்கள் சகோதரன் ஜோஷை இழந்துவிட்டோம். அவனின் மனைவியும், எங்கள் குடும்பமும் அவனைச் சூழ்ந்திருக்க, அவன் அமைதியாக எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். தயவு கூர்ந்து உங்களின் வேலைத்தள அணிகளில் இருக்கும், எனது சகோதரன் குறித்து அக்கறைப்படும் எல்லோருக்கும் இதனைத் தெரியப்படுத்துவீர்களா? உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றி. உங்களுடன் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்" என்று அது சொல்லியது. மனதில் இடி இறங்கியது போன்ற உணர்வு. கண்கள் கலங்கிவிட்டேன். முதன்முறையாக ஒரு வெள்ளைக்காரனுக்காக மனம் அழுதது. அவன் எனக்குச் சொந்தமில்லை, எனது இனமில்லை, எனது நெருங்கிய நண்பர் வட்டத்திலும் அவன் இல்லை. ஆனாலும் மனம் அழுதது. இது எப்படிச் சாத்தியம்? ஏன் அவனுக்கு? இதுதான் எனது மனதில் எழுந்த கேள்விகள். அவனைச் சென்று பார்க்கமுடியாத வருத்தமும் சேர்ந்து அழுத்த முழுவதுமாக மனமுடைந்து போனேன்.
  13. நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன் 1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர் 2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார் 5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர் 6) மேற்குக்கு விசுவாசமானவர் 7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை 8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும் 9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭) 11) தி மு க அனுதாபி
  14. யாப்பின் படி நடக்காது பிழை செய்துவிட்டு இப்பொழுது பிடி பட்ட பின்பு ஐயோ தமிழ் மானம் காற்றில் பறக்குதே, பிழை பிடித்தவர்கள், வழக்குப் போட்டவர்கள் துரோகிகள், சகுனிகள் என்று புலம்பி என்ன பிரியோசனம்? "செய் வினை திருந்தத் செய்
  15. 2 points
    ரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத் தான் இருக்கும்..! தொடருங்கள்…!
  16. ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த. ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம்.
  17. முதலில் கடந்தகால சம்பவங்களை பற்றி நன்கு படித்து விட்டு யாழில் கருத்து எழுத வாங்க பயங்கரவாதிகள் என்று தடை செய்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் Some officers smiled and shook hands with Balraj.https://dbsjeyaraj.com/dbsj/?p=81881 தமிழ் ஆக்கம் வேணுமென்றால் ஜஸ்டின் ஐயாவை கேளுங்க கூகிளை பிழிந்து எடுத்து தமிழில் தருவார் .😆
  18. நம்பும்படியாக இல்லையே. இதற்காகவா புலிகள் கோபமடைந்தார்கள்??
  19. 2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால் அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது: காசு வாங்கிக் கொண்டு அரச வேலை எடுத்துக் கொடுத்தல் பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்). வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார். இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.
  20. 1 point
    உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.
  21. இதைப் பற்றி பல இடங்களில் விவாதித்திருப்பதால் மீள உரைத்தல் அலுப்புத்தரலாம்: ஆனால் இந்தப் பின் கதவால் வந்தார்கள் என்ற கருத்துக் கூட ஒரு மென்மையான சதிக்கதையே தவிர ஆதாரங்கள் கொண்ட கருத்துக்கள் , சந்தேகங்கள் அல்ல. என்னைப் பொறுத்த வரை, காழ்ப்புணர்வு தான் இவற்றின் மிக ஆழமான வேர். "போரை, ஆயுத வழியை அரசியலுக்கு வரமுதலே ஆதரிக்கவில்லை" என்று சுமந்திரன் சொல்வதை அந்த வழியில் தான் தமக்கு பிழைப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்போர் அச்சத்துடன் பார்ப்பதும் இன்னொரு காரணம். ஆனால், முதலில் தேசியப் பட்டியலில் வந்தவர் அதன் பின்னர் இரு தேர்தல்களில் அதே தீவிர தேசியம் சாராத கொள்கையைச் சொல்லியும் வென்றார் அல்லவா? எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான். இத்தகைய தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் காழ்ப்பிலும், வெறுப்பிலும் உழல்வோர், பூடகமாக சுமந்திரன் வாழ்க்கை முடிவு பற்றியெல்லாம் எழுதி தங்கள் இருண்ட ஆன்மாவைத் தான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
  22. பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  23. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி அக்கா.
  24. 1 point
    இப்படியான. ஒருவருடன் கூடவே பயணித்திருக்கிறீர்கள் என்று வாழ்நாளில் சந்தோசப்படுங்கள். ஒரு விளையாட்டு வீரன் மிகவும் பரந்த மனப்பான்கும் எல்லோருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் வெற்றி தோல்விகளை தாங்கக் கூடியவனாகவும் இருப்பார்கள் என்பதை உங்கள் நண்பன் நிரூபித்துள்ளான். அதேநேரம் விளையாட்டு வீரர்கள் பலர் சிறிய வயதில் ஆங்காங்கே அடிபட்ட பழைய காயங்களால் இளமையிலோ முதுமையிலோ இப்படியாக சுகவீனமடைகிறார்கள். உங்களுடன் எங்களையும் சேர்த்து வேலைத் தளத்திலிருந்து கடைசி ஊர்வலம்வரை அழைத்து சென்றுவிட்டீர்கள். HATS OFF.
  25. 1 point
    நன்றி ரஞ்சித் அண்ணை. இயற்கையின் விடை காணமுடியாத கேள்விகளில் மனம் தொலைகிறது. உங்கள் பதிவும் ஒவ்வொருவருக்கும் பாடமாகிறது.
  26. யாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுனாவிலானுக்கு என் வாழ்த்துக்கள். வளமோடும் மகிழ்வோடும் வாழ்க
  27. 1 point
    பொறுமையாக உங்கள் மன ஒடடத்தை உடனுக்குடன் கள உறவுகளுடன் பகிர்ந்தமைக்கு நனறி. உங்கள் மனச்சுமை சற்று இறங்கியிருக்கும். வாசிக்கும் போது இறுதிக் கட்ட்த்தை நெருங்க கண்கள் அந்த ஒரு இதயத்துக்காக பனித்தன. palliative care இந்த சொல்லை சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன். பலியாக போகும் களமா என்று எண்ணத்தோன்றியது .மரணம் கொடிது ..எல்லோரும் சந்திக்க வேண்டிய ஒன்று. யார் தடுத்தாலும் அழுதுபுலம்பினாலும் வந்தே தீரும். இளம் வயது பாவம் .அவனைப்பற்றிய உங்கள் ஆரம்ப கால மன நிலையை மாற்றிய பதிவு. அவனுக்காக பிராத்தியுங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் நலனைப்பார்த்துக் கொள்ளுங்கள். கள உறவுகளின் அஞ்சலி அவரை சேரும்.
  28. முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும் இது சாதாரணமானது ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர் அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு மூன்று பேர் தேசிய மாகாநாட்டில் பங்கு பற்றி வாக்கு போட்டு தலைவர் பொருளாளர் செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள் Berlin Düsseldorf Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு இந்த கிராமங்களின். தலைவர்கள் தான் நாளடைவில் நகரம் மாநிலம் நாட்டு தலைவர்களாக பதவியேற்று இருக்கிறார்கள் அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான் பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள் தற்போதைய பிரதமர் கூட ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர் நாட்டின் பிரதமர் பதவி வகிக்கிறார் நான் அறிந்த வகையில் எவருமே திடீரென ஒடிவந்து மாநில அரசில் சரி மத்திய அரசில் சரி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை அது முடியாத காரியம் கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து அனுபவங்களை பெற்று மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள் 65 வயதுக்கு மேல் ஐனதிபதி பதவி தவிர மற்ற பதவிகளில் இருப்பது இல்லை தங்களாகவே வெளியோறி விடுவார்கள் தமிழரசு கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை??? யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர் யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? கைதடி யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம் அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் இவற்றை தவிர்ப்பது யார் ??? எனது அப்பா சொன்னார் இங்கே பார் படிக்கும் போது வேலைகளை பழக வேண்டும் அப்போ தான் எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை பார்க்க முடியும் உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும் அதாவது அழிவடையும் நாங்கள் ஒரு சிறு குடும்பம் இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி அழிந்து போகாமல் இருக்க என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது
  29. 1 point
    சிறப்பாக எழுதி உள்ளீர்கள் நன்றி
  30. தலையை எங்கு முட்டுவது என்று தெரியலை.................. முடியலை 😃 அப்ப இவ்வளவு காலமும் நடந்தவை தெரியாமல் தான் இங்கு கருத்துக்கள் வைத்து உள்ளீர் கள் ? யாழிலே அந்த செய்தி இணைக்கபட்டு இருந்தது பால்ராஜ் அண்ணா கட்டுநாயக்காவில் வந்து இறங்கும்போது பல சிங்கள படைத்தளபதிகள் அவரை நேரில் பார்க்க தள்ளுமுள்ளு பட்டு கொண்டிருந்தவை .(ஒரு 13 வருடம் தான் கண் மூடி முழிக்கையில் போயிட்டுது கடந்த காலம்களில் நடந்தவை தெரியாமலே கருத்துக்கள் வைப்பதுக்கு தில்தான் வேணும் )😃
  31. 1 point
    கதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.
  32. ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்! kugenFebruary 16, 2024 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர்,திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார். திருக்கோவில் மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர். https://www.battinews.com/2024/02/blog-post_767.html
  33. 1 point
    அண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁
  34. 1 point
    மிகவும் சோகமான நிகழ்வு ..
  35. பலஸ்தீனத்திற்காக பல ஆயுத குழுக்கள் உருவாகி அழிந்து போகின்றது..பேச்சுவார்த்தை என பல நிகழ்வுகள் நடை பெறுகிறது ...PLO போய் காலங்கள் கடந்தும் பலஸ்தீனம் என்ற கருத்தியல் இன்னும் நிற்கின்றது அது போல புலிகள் போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க்கும் ...தமிழ் தேசியம் குறும் தேசியம் என சிலர் புலம்பி கொண்டிருப்பார்கள் அது அவர்கள் சுதந்திரம் ...
  36. Yov Kands 😡 அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின் தளபதி ஒருவரை, ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச் சந்திப்பது என்பது சாத்தியமா ? இதுதான் கேள்வி? 🤨
  37. புத்திசாலி மட்டுமே சகுனியாகலாம் இல்லாவிட்டால் மங்குனி என்றுதான் அழைப்பார்கள். 🤣
  38. இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார்.
  39. சீனாவில இருந்து பெற்றோல்.. பாகிஸ்தானில இருந்து உருளைக்கிழங்கு.. மாம்பழம்.. ஹிந்தியாவில இருந்து முட்டை.. வெங்காயம். அப்ப நாட்டில என்னத்தை தான் உற்பத்தி பண்ணுறியள்..??! யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் கூட உருளைக்கிழங்கு.. உள்ளூரில விளைஞ்சது. இப்ப பாகிஸ்தான் உருளைக்கிழங்கு விக்கினம். போர் காலத்தில வித்த உள்ளூர் கருவாடு போய்.. இப்ப இந்தோனிசியா.. தாய்லாந்தில் இருந்து கருவாடு யாழ்ப்பாணத்திற்கு வருகுது..??! இந்தக் கொடுமைகளை என்னென்பது..?! சொறீலங்கா சின்ன வெங்காயம்.. கண் எரியுமாமில்ல... பெரிய வெங்காயம் தானாம் வேணும். இது நான் சொல்லேல்ல.. யாழ்ப்பாணப் பெண்டிர் பேசிக் கொண்டதில் இருந்து.
  40. இதற்கான காரணத்தை கோசான் குறிப்பிட்ட நினைவு: "மத்திய கிழக்கின் பாரிஸ்" என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட லெபனான், பலஸ்தீன அகதிகளை ஏற்றுக் கொண்டது. அங்கே வேரூன்றி வாழ்ந்த பலஸ்தீன வழி மக்கள், இஸ்ரேல்/மேற்கு எதிர்ப்பு வன்முறையை ஆதரித்து ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் உருவாக வழி வகுத்தார்கள். இன்று லெபனானின் அரச இராணுவம் கூட ஹிஸ்புல்லாவின் பகுதிக்குள் செல்ல முடியாதளவு லெபனான் சீரழிந்து கிடக்கிறது. இந்த நிலையைக் கண்டு பயந்து தான் எகிப்து, ஜோர்தான், அமீரகம் ஆகிய எல்லா அரபு நாடுகளும் பலஸ்தீன மக்களை செற்றிலாக அனுமதிப்பதில்லை!
  41. சுமந்திரனைப் புத்திசாலி என்கிறீர்கள்? எல்லோரினது கண்களிலும் விரலை விட்டு ஆட்டுகிறார் அல்லவா? 🤣
  42. மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது. மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு 20 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார். இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை. தமிழரசு கட்சியின் மகாநாடு : =================== சுமார் ஒரு தசாப்தகாலமாக “நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது. 2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே. ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது. பொதுச்செயலாளர் : ============= இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது. தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார். மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர். பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை’ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர். பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம்’ என்ற வாக்குகளும் ‘இல்லை’ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன. சண்முகம் குகதாசன் : ===========•== செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர். தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர். சேனாதிராஜா அப்போது “விசித்திரமான” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார். இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார். சிறிதரனும் சுமந்திரனும் : =============== சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது. பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல. சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார். சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா “கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார். சட்டரீதியான நிலைப்பாடு =============== அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார். அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான தற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும். இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலமாக ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம். ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார். மகன் கலையமுதன் : ============= மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார். இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன. மாவையின் கடந்த காலம் ========= தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன். அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை “சேனாதி அண்ணை” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே! https://arangamnews.com/?p=10461
  43. குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது
  44. தற்போதைய அரசியல் நிலவரத்தையும் அதற்காக நடக்கும் நாடகங்களையும் அலசியுள்ளீர்கள் ......பார்ப்பம் என்ன நடக்குதென்று.......! 😁
  45. 1 point
    ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.
  46. மாவையின் வாரிசு சசிகலா ரவிராஜின் மருமகன் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். 2020 தேர்தல் நேரம் "சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையத்தினுள் சென்று சசிகலாவுக்கு விழுந்த வாக்குகளை தன் பெயருக்கு மாற்றி கொண்டார்" என்று இங்கே "ட்ரம்ப் சின்ட்றோமினால்" பாதிக்கப் பட்ட உறவுகள் பறையடித்த போது கூட இந்த conflict of interest😂 பற்றி எதுவும் மூச்சு விடவில்லையென நினைக்கிறேன்! தமிழக அரசியல் கட்சிகள், வாரிசு அரசியலும் செய்து ஏதோ மக்களுக்கும் சில நன்மைகள் செய்து கொண்டிருக்கும் போது போட்டுத் தாக்கும் "ஊழல் எதிர்ப்பு நீதிமான்கள்" எல்லோரும் இங்கே கப்சிப்! #தொண்டையில முள்ளு😎
  47. சும் மிற்கும் சிறீதரனின் இந்தப் பேச்சுக்கும் என்ன தொடர்பு? 🤨

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.