Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3055
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33035
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/07/24 in all areas

  1. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.
  2. இது கொஞ்சம் ரூ மச்சாக தெரியவில்லையோ நெடுக்கர்😎? நீங்களுட்பட இங்கேயிருக்கும் பலர், தீவிரமான இன அழிப்பு யுத்தம் நடந்த காலப் பகுதியில், அதே இனவெறி அரசின் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சையை எழுதி, சித்தி பெற்று, மஹாபொலவும் பெற்று, பிறகு அதே இனவெறி அரசின் தென்பகுதிப் பல்கலையில் படித்து, அந்த மூலதனத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளாகி , பவுண்டசையும், டொலரையும் விசுக்கி சிறி லங்கா ரூர் எல்லாம் போய் வருகிறீர்கள்! ஆனால், அங்க இருக்கிறவன், இலவசமாக ஹெலியில் ஊர் பார்க்கும் வாய்ப்பை உதறாவிட்டால், தூங்கில் தொங்க வேணும்? யார் உண்மையில் முதலில் தொங்க வேணும்😂?
  3. அண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது. பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது. அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது. ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள். யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள். சிறிய காற்றாலையின் சிறகு. காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி. ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம். திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.
  4. மயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07.
  5. ஒன்றை சொல்லவேண்டியிருக்கு ஜஸ்டின், யுத்ததின் சமகாலத்தில் அங்கு வாழ்ந்து பின்பு புலம்பெயர்ந்து இங்கிருந்தபடி புலிகோஷம் போட்டுவிட்டு பின்னர் பூனைபோல இலங்கைக்கும் புலத்துக்கும் போக்குவரத்து செய்தவர்களின் ஒரு தொகுதி பணம் குண்டுவீச்சு விமானமும், குண்டுகளும் வாங்க இலங்கை அரசுக்கு உதவியிருக்கு அதைபற்றி எந்த குற்ற உணர்வும் நம்மிடம் இல்லை. சிங்களவன் ஹெலியில் பறந்தாலும் ,அத்தனை அடக்குமுறை மத்தியிலும் அதே மக்களும் மாணவர்களும் மாவீரர்நாள் வந்தால்பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடுகின்றனர் நினைவுகூருகின்றனர். குண்டுவிச்சும் போரும் ஏறக்குறைய பிறர் சொல்லிகேட்டறியும் வயதிலிருப்பவர்கள் அவர்கள், இருந்தாலும் இனத்தின் அழிவை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை, அதனால்தான் அனைத்து போராட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அங்கிருக்கிறது. அதேநேரம் எந்தவித அடக்குமுறை இல்லாத புலத்திலிருந்தபடி ஆவேசம் பொங்க பேசும் எம்மில் பலர் மாவீரர்நாள் வந்தால், சிங்கள அரசுக்கெதிரான கண்டன போராட்டங்கள் என வந்தால் இப்போலாம் எத்தனைபேர் போயிருக்கிறார்கள் என்று கணக்கு கேளுங்கள், தாயகத்திலிருப்பவர்களை குறிப்பாக மாணவர்களை விமர்சிக்க தகுதியிழந்து போய்விடுவார்கள்.
  6. ஆகா.... நாம எல்லாரும் சிறிலங்கா ஏர் லைன்ஸ்ல ஜாப்னாக்கு டூர் போவம். மூல ஊர் சிறிலங்கா என்டுவம் (போருக்கு முன்னும் பின்பும்). வாயிலை தப்பியும் பிறந்த இடம் தமிழீழம் என்ட மாட்டம், பிள்ளையளுக்கும் சொல்லித் தர மாட்டம்! 😎 ஆனால், அங்க இருக்கிற பொடியள் எல்லாரும் மட்டும் எதுவும் செய்யப் படாது. என்ன?! ஏனெண்டால் நாங்கள் மட்டும் தான் லெவல் காட்டனும். எங்கட பிள்ளையள் மட்டும் தான் நல்லா இருக்கோனும்! செக்கில ஆட்டின சுத்தமான சிறிலங்கன் 😎🥲😉 பி.கு: யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. உறைச்சால் நிறுவனம் பொறுப்பல்ல!
  7. மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்? காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.
  8. சதாம் குசைன் 900 பேரைக் கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். மிலேசவிச் 30,000 மக்களை கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். கடாபி 250 விமானப் பயணிகளைக் கொன்றதால்.. போர்க்குற்றவாளி ஆனார். ஆனால்.. இலங்கையில்.. அவைட கணக்குப் படி.. 1983 முதல்.. 6 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கினம். ஜே ஆர் முதல் மகிந்த வரை... இதில் கூட்டுப் பங்களிப்புச் செய்திருக்கினம். இடையில் 15,000 தமிழர்களை ராஜீவ் காந்தியும் கொன்றார். இவை எல்லாம் எப்ப போர்க்குற்றவாளியாவது.. இவையை எந்த அமெரிக்கா.. மேற்குலகம் வந்து தண்டிக்கப் போகுது..????!
  9. அதாகப்பட்டது.. சில ஆக்களின் கொள்கை... உல்லாசப் பயணம் போக.. சொறீலங்கா விமான சேவையை தருவதால்.. தமிழர் தாயகத்தில்.. தமிழர் தலையில் குண்டு போடலாம். கொல்லலாம். குடிமனைகளை அழிக்கலாம். வாழ்வாதாரங்களை அழிக்கலாம்.. சொறீலங்கா வான்படைக்கு நில அபகரிப்புச் செய்யலாம். புலம்பெயர் தமிழர்கள்.. சொறீலங்கா விமான சேவையை பயன்படுத்துவதற்கும்.. இனப்படுகொலை நடந்த இடத்தில்.. நீதிக்கான கோரிக்கைகள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி தேடப்படும் நிலையில்... போர்க்குற்றவாளிகள்.. தமக்கு வெள்ளையடிக்கும் கைங்கரியத்தில்.. திட்டமிட்டு.. செய்யும் காரியங்களுக்கு துணை போவதென்பது... எப்படி சமன்படும்.. எப்படி சமன்பாடுகளை போடினம்..??! காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் தான் இஸ்ரேலின் அநியாயத்தைச் சொல்ல முடியும். வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் அல்ல. வெளிநாட்டில் உள்ள பலஸ்தீனர்கள் தார்மீக ஆதரவளிக்கலாம். ஒரு தனியார் ஹெலிக்கொப்டரை வாடகைக்கு அமர்த்தி இதை செய்ய பாடசாலைகளால்.. அல்லது பழைய மாணவர் சங்கங்களால் முடியாதா..?! சாமத்திய வீட்டுக்கு ஹெலில பறக்கினம்..????! தன் குடும்பத்தை.. இனத்தை கொன்று வாழ்விடத்தை ஆக்கிரமிச்சு நிக்கிறவனிடம்.. போய்.. கேடயம் வாங்கனும் என்ற நிலைக்கு ஒரு மாணவனை தள்ளுவது போல் இழி நிலைமை எதுவுமில்லை. அதனை வரவேற்பதிலும் தூக்கில் தொங்கலாம். என்ன.. இந்த தலைப்பில் சிலரின் புலி வேசம் கலைந்து தொங்குது. எப்பவோ கலையத் தொடங்கினது.. இப்ப தொங்குது.
  10. 06 MAR, 2024 | 10:03 PM வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. https://www.virakesari.lk/article/178106
  11. இதை எழுதி பதிந்த பின் ஒரே யோசனையாக இருந்தது. இதில் ஏதாவது குறியீடு, படிமம் அப்படி இப்படி ஏதாவது இருப்பதாக ஏதேனும் சிக்கல்கள் வந்து விடுமோ என்று.... நான் புதிய உறுப்பினர் என்றாலும், களத்தை நீண்ட காலம் வாசித்து வருபவன். கள நிலவரம் ஓரளவு தெரியும். இது உண்மையிலேயே 'எலியும் நானும் என் பின்னே அம்மணியும்' தான். சொந்த வீட்டுப் பிரச்சனை......... 😀😀....
  12. தமிழ் மாணவர்கள் தான் விளக்கம் கொடுக்கின்றனர் ..
  13. நியூயோர்க் நிலகீழ் தொடரூந்து நிலையங்களுக்கு போனால் எலியா?பூனையா? என்று திகைத்து நிற்பீர்கள். வீட்டிலே கட்டுப்படுத்த தொடங்கினால் நியூயோர்க்கில் பெரியதொரு ஒப்பந்தமே செய்யலாம். கோடீஸ்வரனாக வருவதற்கு நம்மாலான உதவி. சப் கொன்ராக் இருந்தா சொல்லுங்க பாஸ்.
  14. உலங்கு வானுர்தி பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை வாழ்த்துக்கள் மாணவர்களே
  15. யூட்டியூப்பர்கள் அனைவருக்கும் பொதுவாக: நீங்கள் எல்லோரும் செய்வது நல்ல விடையம் தான். நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வியலை தொடர்ந்து வெளியுலகிற்கும் அணுக்கமற்றோருக்கும் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். இவ்விடையத்தில், யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத ஆனால் பார்க்க ஆசையுள்ள மக்கள் தம் வீடுகளிலிருந்தே இதனை அறிந்து/ பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளீர்கள். குறிப்பாக, இது போன்ற அறிவியல் கண்காட்சிகளை மக்களுக்கு காட்டுவது நல்ல விடையமே. எமது மக்களுக்கும் இது போன்ற வானூர்திகளை நேரில் கண்ட அனுபவமும் சிறார்களுக்கு இத்துறை மீதான ஆர்வத்தையும் இது அதிகரிக்கும். தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். எல்லைக்கு வாவென்ற போது எல்லை கடந்தவர்கள் தான் இன்று உங்களை தூற்றுபவர்களின் வரிசையில் முன்னிற்பவர்கள்! இவர்கள் எல்லாம் கூலிங் கிளாசோடு சொறிலங்கா ஏர்லைன்சில் ஏறி நல்ல ஹைஃவையாக ஊருக்கு வருவினம். வெளிநாட்டவர்களிடம் கேளுங்கள், தாய்நாடு எதுவென்று. ஒரு ஈ-காக்கா தாய் நாடு "தமிழீழம்" என்று போரின் போதோ இல்லை போருக்கு பின்போ வெளிநாட்டில் சொன்னதில்லை, 99.99 வீதமானோர். கேட்டால் நல்ல ஸ்ரைலாக "சிறிலங்கா" என்பர். இந்த இரட்டை வேடதாரிகளை/ போலிகளின் கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம். நாற்பது நல்லது செய்யும் போது பொறாமையால் நாலு கல்லடி விழுவது பரவலானதே. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது தான். ஆகையால் தொடர்ந்து மக்கள் வாழ்வியலை படம்பிடியுங்கள். உங்கள் மூலம் நான் பல நன்மை அடைந்திருக்கிறேன். மனதார வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் பணியும் தொடரட்டும்.
  16. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
  17. அக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!
  18. நிச்சயமாக புத்தன், அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை. அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான சிங்கள அரசியலால் சிறிதளவாயினும் கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு, அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள், இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள். நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள். இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர் தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின் நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள். நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன். அவர்கள் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள். இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.
  19. மன்னாரும் இப்படி பாலவனமாகிவிடுமா..
  20. எலியோக் என்று பேரை மாத்திடுன்க அய்யா.
  21. எல்லொருக்கும் பயிற்சி வழங்குபவர் ஒரே விரிவுரையாளர் போல ....
  22. இந்தக் காணொளி யுரியுப்பரும் எமது ஆதங்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார். அதனை நேரடியாக சொறீலங்கா விமானப்படையிடம்.. கேள்வியும் ஆக்கி இருந்தார். சொறீலங்கா விமானப்படை பேச்சு ஆள்.. தாங்கள் யுத்த விமானங்களை கொண்டு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. சொறீலங்கா விமானப்படைக்குள் கூட ஒரு சிறிய புரிதல் இருந்திருக்குது.. இந்த நிகழ்வை இந்த மண்ணில் வேறுவிதமாகக் கையாளனுன்னு. அதுதான் அந்த மண்ணில் ஏற்படுத்திய வலிகளுக்கான ஒரு சிறிய மாற்றமாக இருக்கலாம்.
  23. விபு க்கள் ஏறியது பிழை அல்ல. என்ன நோக்கத்திற்காகப் பாவிக்கப்படுகிறது என்பது முக்கியம். 1997-2000 ஆண்டுகளில் எனது தலைமையில் யாழ் மாவட்ட. ........... அணிகளை தென்பகுதிக்கு இலங்கை விமானப்படை விமானங்களில் அழைத்துச் சென்றிருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் விபுக்களின் அனுமதி பெறப்பட்டிருந்தது. அப்படியான செயற்பாடுகளை விபுக்கள் வரவேற்றனர்.
  24. போங்க போங்க. ஆனால் கோடை காலத்தில் போயிடாதீங்க. பொரிந்து விடுவீர்கள்.
  25. என் தகுதிக்கு மீறியவற்றுக்கு என் அகராதியிலயே இடம் இருக்காது..அது பிள்ளையா இருந்தா என்ன...குட்டியா இருந்தா என்ன..🖐️😒
  26. நீங்கள் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி ......நீங்கள் செய்வது ஒரு தலைப்பட்ச ஒப்பந்தமாகத்தான் இருக்கும்.......! 😂
  27. அவரும் பாவம் ..அதிக வாக்குகள போன தடவை பெற்றார் ...அதற்கு ராஜபக்சாக்களின் "கை" கைகொடுத்தது ...இந்த தடவை ராஜபக்சாக்களே ஏனையோரின் கையை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ... இப்படி பக்க சார்பாக செயல் பட்டு வாக்கு பெற வேண்டிய நிலை
  28. ஐயனின் அனுபவம்.
  29. 👍👍..... லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லாஸ் வேகாஸ் போகும் பாதை நெடுக, நகர எல்லைகளை தாண்டிய பின், இப்படியானவற்றை பார்த்திருக்கின்றேன். மணலும், சிறு கள்ளிச் செடிகளும் நிறைந்த, பகலில் கொதித்து இரவில் உறையும், வெறும் பாலை நிலம். அடுத்த தடவை போகும் பொழுது இறங்கி உள்ளே போய் பார்க்க வேண்டும்.
  30. எனது தந்தையாரும் ஒருநாள் வல்லிபுர மாயவனுடன் சென்று ..மேலுலகம் பார்த்தபின் மீளவந்து..6வருடம் எம்முடன் இருந்துவிட்டுச் சென்றவர்...அங்கு கண்ட காட்சிகளை வருணித்த விதமே ஒரு அழகுதான்...சொர்க்கம் என்றுதான் சொன்னவர்..
  31. அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும் போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?
  32. சம்பளத்துக்கு வேலை செய்பவன்...மகள் பாட்டு பாடி புகழ் பெற வேணும் என்ற ஆசை உடையவன்....தன்ட தலைவனை காப்பாற்றுவானா? ஆனால் சீனாவுக்கு பிடிச்சிருக்கே😃
  33. என்ன இருந்தாலும் பாட்டிமாரை அழைக்காதது பெரும் பிழை. அவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போல இருக்கும் .சில பாட்டிமார் வைன் அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் இந்த பாகுபாடு அடுத்த முறை பாட்டிமாருக்கும் அழைப்பு வேண்டும். பார்ட்டியில் தாத்தாமார் "ஏத்திக்" கொண்டு வீட்டில் வந்து என்ன அலடடலோ?(கூத்தோ ) அதை யாரு சகித்து கொள்வது .
  34. மக்கள் நிலத்தை காப்பாற்றினால் தான் தொடர்ந்து வாழ முடியும் ..நிலம் இல்லாத பொழுது மக்களின் தேசியம் அடையாளம் அற்று போய்விடும் .. இங்கு உசுப்பேத்தல்,புலம்பல் போன்ற வசனக்களே தேவையற்றது... இருந்தாலும் அது உங்கள் சுதந்திரம்... இஸ்ரேல் அரசும்,சிறிலங்கா அரசும் ஒரே கொள்கையுடன் தான் செயல் படுகின்றது. ஒர் இனம், நிலப்பரப்பை உரிமை கோருவதை ஏற்று கொள்ளாமல் ,அந்த நிலத்தை கூறுபோட்டு தங்களது மேலாதிக்கத்தை திணித்து நிலத்தை அபகரித்து அந்த இனத்தின் தனித்துவத்தை அழித்து விடுவது. பலஸ்தீனத்திற்கு தனிநாடு கொடுப்பதில்லை என்பது இஸ்ரேலின் கொள்கை ... எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் எல்லாவற்றையும் ஆட்சிக்கு வரும் இஸ்ரேலிய பிரதமர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.. பலஸ்தீன விடுதலை இயக்கம் மட்டும் போராடவில்லை ..அங்கு பல குழுக்கள் போராடினார்கள்..இறுதியில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் நொர்வே தூதுவர்கள் உள் நுழைந்து அந்த இயக்கத்தை இல்லாமல் பண்ணி விட்டனர்.பலஸ்தீன பிரதமர் பதவியும் வழங்கப்பட்டது,ஐ.நா வில் பிரதிநித்துவமும் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தை இழந்து கொண்டே வருகின்றனர் ..பலஸ்தீன நிலத்தை இல்லாமல் பண்ணி இஸ்ரேல் தங்களது நிலத்தை விரிவாக்குவதே அவர்கள் கொள்கை... மேற்கு கரை,காசா இரண்டையும் துண்டாடி தமது நிலப்பரப்பை அகலமாக்கின்றனர்..காலப்போக்கில் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் உரிமை கோரி பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலின் ஆட்சியை நிலைநாட்டி பலஸ்தீன தனித்துவத்தை காசாவில் இல்லாது செய்து விடுவார்கள் .... சிறிலங்காவிலும் அதே நடை பெற்றது,நடைபெறுகிறது,நடை பெறும்.. பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன,யாவும் கிழித்தெரிந்தனர்..இறுதியில் வடக்கு/கிழக்கு மாகாணசபைகள் அமைக்கப்பட்டு 30 வருடங்காளாகிறது .ஆனால் அதை நடை முறைப்படுத்த பல தடங்களை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர் ..முக்கியமாக காணி அதிகாரம் (நில பங்கீடு) கொடுப்பதை முற்றாக எதிர்க்கின்றனர்..ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்படி நில அபகரிப்பு செய்ய முடியாது என்பதற்காக.... அமேரிக்காவும்,ஏனைய நாடுகளும்,ஐ.நா.சபையும் பலஸ்தீனருக்காக உருவாக்கிய ஒப்பந்ததை அமுல் படுத்தாமல் இஸ்ரேல் தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருந்தது செய்து கொண்டேயிருக்கிறது... ... ஒப்பந்தத்தை உருவாக்கியவர்களும் இஸ்ரேலுக்கு ஆதரவு... இந்தியா மாகாணசபை ஒப்பந்தந்தை உருவாக்கியது ஆனால் அதை நடை முறைப்படுத்தாமல் சிறிலங்கா அரசும் 75 வருடங்களாக‌ தனது நிகழ்ச்சி நிரல் படி நில அபகரிப்பு செய்து கொண்டேயிருக்கிறது ....ஒப்பந்தந்தை உருவாக்கிய இந்தியா சிறிலங்காவுக்கு ஆதரவு ... பலஸ்தீன மக்கள் புலம்பிக் கொண்டேயிருப்பதால் அவர்கள் தேசியம் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது ...எம் தேசியத்தை காப்பாற்ற நாம் தான் புலம்ப வேணும் எமக்கு பலஸ்தீன மக்களை போல வேறு நாடுகள் இல்லை புலம்ப... அவர்ள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் ஏனையவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர்
  35. மத்திய கிழக்கி ஏமன்.. ஏடன் முனைக்கு அருகில் இன்று நடந்த கடல்வழி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான பாபேடோஸ் நாட்டுக்கொடியுடைய True Confidence கப்பலில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த கப்பலில் தீப்பிடித்துள்ளது. அதில் 20 கப்பல் சிற்பந்திகளும் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களும் இருந்துள்ளனர். அதில் 3 ஆயுதம் தாங்கிய காவலர்களில் இருவர் இலங்கையை சேர்ந்திருக்கிறார்கள். மற்றவர் நோபாளம். கப்பல் சிற்பந்திகளில் 1 இந்தியர், 4 வியட்நாமியர்கள் மற்றும் 15 பிலிப்பினோ காரர்கள் இருந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான கப்பலில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகிருந்த கப்பல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலுக்கு அமெரிக்க கடற்படை தற்போது உதவிவருவதாகச் சொல்லப்பட்டாலும் கப்பல் நிர்வகிக்கும் நிறுவன முகாமைத்துவம்.. இந்தக் கப்பல் மற்றும் கப்பல் பணியாளர்களின் நிலை காவலுக்கு போனவர்கள் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் Houthi நிலைகள் மீது விமானத் தாக்குதலை ஆரம்பித்த பின் மிக மோசமான தாக்குதல்களை ஹவ்தி நடத்தி வருகிறது. இது பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அநியாயத்தை எதிர்த்தே இத்தாக்குதல்களை நடத்துவதாக உரிமை கோரி வருகிறது. Two crew members have been killed in a Houthi missile strike on a cargo ship off southern Yemen, US officials say - the first deaths the group's attacks on merchant vessels have caused. The Barbados-flagged True Confidence had been abandoned and was drifting with a fire on board, managers said. It was hit in the Gulf of Aden at about 09:30 GMT, they added. The Houthis say their attacks are to support the Palestinians in the war between Israel and Hamas in Gaza. The vessel had a crew of 20, comprising one Indian, four Vietnamese and 15 Filipino nationals. Three armed guards - two from Sri Lanka and one from Nepal - were also on board. https://www.bbc.co.uk/news/world-middle-east-68490695
  36. நன்றாக ஆட்சி செய்தது சிங்கள மக்களுக்கும் மேற்குக்கும் பிடிக்கவில்லை போல.🙂
  37. முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு. மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம்.
  38. தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
  39. நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁
  40. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  41. இது ஒரு பெண் உரிமை சம்பந்தப்பட்டது. அவளது சம்மதம் இல்லாமல் இது நடக்கக் கூடாது என்பதே இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
  42. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
  43. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  44. விளக்கத்திற்கு நன்றி. கசிப்பு காச்சுவதையும் ஊறல் என்று தான் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் 😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.