Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3057Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20018Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/09/24 in all areas
-
ஆரோக்கிய நிகேதனம்
6 pointsஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கின்றோம், இப்பத்தான் எங்களின் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று குறைபட்டுக்கொண்டே, டீயா, கோப்பியா என்று கேட்டனர். இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பில், டீ என்று சொல்லிவிட்டேன். நாங்கள் டீ காப்பி குடிப்பதில்லை, அவை உடம்பிற்கு நல்லதில்லை, ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு போட்டுக் கொடுப்போம் என்றபடியே அவர் உள்ளே போனார். ஸ்மால் சைஸ் உடுப்புக்குள் அதைவிட ஸ்மால் சைஸில் அவர் இருந்தார். திரும்பி வந்தார். பிளாக்கா, மில்க்கா என்று கேட்டார். இரண்டில் ஒன்று மீண்டும். மில்க் என்றேன். நாங்கள் ஸ்கிம் மில்க் மட்டும் தான், ஃபுல் மில்க்கில் கொலஸ்ட்ரோல். ஹார்ட்டை அட்டாக் பண்ணி விடும் என்றார். அவர் பெரிய படிப்பாளி, இலக்கண சுத்தமாகவே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பவும் வந்தார். எத்தனை ஸ்பூன் சுகர் என்று நின்றார். அவரையே பார்த்தேன், அவர் இரண்டு எண்கள் சொன்னால் அதில் ஒன்றைத் தெரிவு செய்வதற்காக. அவரும் அப்படியே நின்றார், அதனால் நான் மூன்று என்று ஒரு எண்ணை சொல்லிவைத்தேன். நோ நோ, மூன்று அதிகம், சுகர் தான் தி வேர்ஸ்ட் என்றார். அப்ப இரண்டு என்று நான் இழுக்க, அவர் இரண்டும் அதிகம், ஒன்று போடுகின்றேன் என்று மீண்டும் உள்ளே போய்விட்டார். ஒரு பெரிய குவளையில் ஸ்கிம் மில்க், ஒரு ஸ்பூன் சுகர், தேயிலைச்சாயம் கலந்து என் முன்னால் இருந்தது. கிளம்பும் போது, அடிக்கடி அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை ஒன்றையும் போட்டார். இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.6 points
-
உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம்.அதனால் தங்கக்குழம்பு வைக்க வேண்டிய பரிதாப நிலை.3 points
-
மயிலம்மா.
3 pointsமயிலிறகு ....... 09. அக்கா நீங்கள் இப்பொழுது எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அஞ்சலா கேட்க மயிலம்மாவும் எங்களுக்கு ஒரு ஒரு லட்சம் வரை தேவைப்படும்போல இருக்கு என்கிறாள். உங்களின் நகைகளை நான் பார்க்கலாமா .... அதுக்கென்ன என்று சொல்லி அங்கிருந்த கிணற்றுக் கட்டில் அருகில் அமர்கிறார்கள்.பின் மயிலம்மாவும் நகைப் பையையும் பத்திரப் பையையும் அவளிடம் தருகிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வாமன் அந்தப் பெரிய கிணற்றையும் அருகிலே மோட்டர் பம்ப் அறையையும் பார்க்கிறான்.கிணற்றுக்குள் இரண்டு பெரிய குழாய்கள் இறங்கி இருக்கின்றன.மிகவும் ஆழமான கிணறு. இந்த வெய்யில் காலத்திலேயே ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கின்றது. அப்படியே நடந்து வர கிணற்றை ஒட்டி மரக்கறி வகைகள், வெற்றிலைக்கொடிகள் சற்று தள்ளி வாழைத்தோட்டம் கரும்பு எல்லாம் செழிப்பாக இருக்கின்றன. கீரைப் பாத்திகள்தான் நீரின்றி சோர்ந்துபோய் இருக்கு. அவற்றைக் கடந்தால் பெரிய நெல் வயல் பல ஏக்கருக்கு பரந்து கிடக்கு.ஆங்காங்கே கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கொட்டில்களில் மாடு, ஆடுகள்,பரணில் கோழிகள் மற்றும் தகரக் கொட்டகையில் இரண்டு டிராக்டர்கள் நிக்கின்றன . எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு வயல் பக்கம் வரும்போது ஒரு வயதான பெண்மணி வரப்போரம் தட்டுத் தடுமாறி நடந்து தள்ளாடி வரப்பில் சரிந்து விழுகிறாள்.வாமன் பதறிப்போய் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணையும் கூப்பிட்டுக்கொண்டு ஓடிப்போய் அந்த அம்மாவிடம் என்னம்மா செய்யுது என்று கேட்க அந்த அம்மா இடுப்பில் இருந்த பையைகாட்ட அதற்குள் ஒரு சீசாவில் சீனியும் சிறிய போத்தலில் பழச்சாறும் இருப்பதைக் கண்டு அவற்றை எடுத்து உங்களுக்கு சீனி வருத்தமா என்று கேட்டு சீனியை அவவின் வாயில் போட்டு பழசாற்றைக் குடிக்கக் கொடுக்கிறான்.அந்த அம்மாவை நிமிர்த்தி இருக்க வைக்கும்போது அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள்.அவள் சிறிது சிறிதாக நீரைப் பருக்கிக் கொண்டு மார்பை கைகளால் நீவி விடுகிறாள்.கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாள் சரியாகி விடுகிறாள்.பின் இருவரும் கைத்தாங்கலாக அவவைக் கொண்டுவந்து வீட்டுத் திண்ணையில் விடுகிறார்கள்.அந்தப் பெண்ணை அவாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு வாமு அங்கிருந்து கிளம்பி வருகிறான். அஞ்சலா உறுதியை மேலோட்டமாய் பார்த்து விட்டு நகைகளைப் பார்க்கிறாள். எல்லாம் கனமான நல்ல நகைகள்.அதிகம் பாவிக்காது இருந்ததால் பொலிவிழந்து கிடக்கு. புன்னைக்காய் நீரில் ஊறவைத்து பிரசால் தேய்த்தால் புதிதாக மினுங்கும் என்று நினைத்துக் கொண்டு சரி அக்கா நான் முன்பே சொன்னபடி இந்தத் தொழில் இனிமேல் செய்வதில்லை என்னும் முடிவில் தான் இருந்தேன்.ஆனால் உங்களின் நிலமையைப் பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதனால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.என்னிடம் பணம் வாங்கியதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பின் அந்தப் பணத்துக்கு உரிய வட்டிகள் பற்றி கதைத்து விட்டு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். அங்கு அவர்களின் இரும்புப் பெட்டியைத் சாவி போட்டு திறந்து பல இடங்களில் திருகித் திறந்து அவற்றை வைக்கும்போது பார்க்கிறாள் அதில் அவள் பெற்றோர்களின் காணி உறுதி மற்றும் அவர்களது நகைகள் இன்னும் யார்யாருடையதோ எல்லாம் இருக்கின்றன.அதை அப்பப்ப திறந்து பார்த்து நினைப்பதுண்டு இதற்காகத்தானே எங்கள் குடும்பமும் அழிந்து,எனது படிப்பும் பாழாக்கி, வாழ்க்கைக் கனவுகளையும் இந்த மனிதன் அழித்து விட்டாரே.ஆனால் இப்ப இவையாவும் என் கையில்.என் பெற்றோரும் என்னுடன் வந்து இருக்கிறார்கள். இவர் போகும்போது மக்களின் வயித்தெரிச்சலைத் தவிர வேறு என்னத்தைக் கொண்டு போனவர். இந்தக் காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது. சிறிது நேரம் தன்னிரக்கத்தில் மூழ்கியவள் பின் தன் கையிலிருந்த பைகளை உள்ளே வைத்து விட்டு தேவையான சில பணக்கட்டுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டும்போது என்ன நினைத்தாளோ தெரியாது அந்த நகைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மயிலம்மாவிடம் வருகிறாள். அவளிடம் பணத்தைக் குடுத்து எண்ணிப்பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பையுடன் நகைகளை அவளிடம் தந்து அக்கா நான் அந்தக் காணிப் பத்திரத்தை மட்டும் எடுத்து வைத்துள்ளேன், நீங்கள் இந்த நகைகளைக் கொண்டுபோய் மகளின் திருமணத்தை நன்றாக நடத்துங்கள். கூடிய சீக்கிரம் பணத்தைத் தந்து பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மயிலம்மாவும் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளை இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன், நீ நல்லா இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறாள். என்னக்கா நீங்கள்......அன்று எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தனீங்கள். சரி....சரி....இங்கு காத்தடிக்குது நீங்கள் அங்கு திண்ணையில் போய் இருந்து பணத்தை எண்ணி எடுங்கள் என்று சொல்ல ....அவளும் உன்னை நான் நம்புகிறேன் அஞ்சலா ......அப்படி சொல்லாதையுங்கோ, பணம் சம்பந்தப்பட்ட விசயம் நீங்கள் எண்ணி எடுப்பதுதான் சரி. அங்க அந்தத் திண்ணையில் இருந்து ஆறுதலாய் எண்ணுங்கள் என்று அனுப்பி வைக்கிறாள். பின் மோட்டாரையும் கிணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாமுவிடம் வருகிறாள். மயிலம்மாவும் பணத்தை எண்ணுவதற்காக அந்தத் திண்ணைக்குப் போகிறாள். அங்கு மயங்கி விழுந்த அம்மா களைப்புடன் இருக்க பக்கத்தில் அந்தப் பெண் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு இருக்கிறாள். மயிலம்மாவும் சென்று கொஞ்சம் தள்ளி அமர்கிறாள். அந்த அம்மாவும் அந்தப் பெண்ணிடம் பிள்ளை அந்தமருந்தை எடுத்துத் தானை என்று சொல்ல அதை புரிந்து கொண்டு அந்தப் பெண்ணும் அங்கிருந்த போத்தல் சாராயத்தை எடுத்து வந்து குவளையில் விட்டு நீர் கலந்து கொடுக்கிறாள். சரி பிள்ளை நீ போய் வேலையைப்பார் இவ இங்கு இருக்கிறாதானே என்று சொல்ல அவளும் அம்மா இவவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் அங்கு மயங்கி விழுந்துட்டா என்று சொல்லிவிட்டு போகிறாள். மயிலம்மாவும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அது பிள்ளை சீனி குறைஞ்சு போச்சு அதுதான் மயக்கமாயுட்டன். நல்ல காலம் ஒரு பொடியன் கண்டுட்டு ஓடிவந்து காப்பாற்றி இங்க கொண்டுவந்து விட்டவன். மயிலம்மா பக்கத்தில் போத்திலைப் பார்க்க அது அப்பப்ப கொஞ்சம் மருந்து குடிக்கிறது. காலம் முழுக்க காணி, பூமியோட கிடந்து உழைஞ்சு உடம்பு களைச்சுப் போச்சு. இரவில நித்திரையும் வருகுதில்லை.நீங்கள் எடுக்கிறனீங்களோ. சீ சீ எப்போதும் இல்லை. நீங்கள் சொன்னமாதிரி வயல் வேலைகள் செய்துபோட்டு வந்தால் உடம்பு அலுப்பாய் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் எடுக்கிறதுதான். அப்ப அந்த அம்மா தண்ணியையும் தண்ணிப் போத்தலையும் அவள் பக்கம் அரக்கி வைக்கிறாள். மயிலம்மாவும் தங்கள் வந்த வேலை சுலபமாய் முடிந்ததால் மனசுக்குள் ஒரு புளுகம் ஏற்பட அவற்றை எடுத்து சீராகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டு பணக்கட்டைப் பிரித்து எண்ணுகிறாள்.......! 🦚 மயில் ஆடும்.........! 09.3 points
-
ஆரோக்கிய நிகேதனம்
3 pointsஅப்படி, தண்ணீர் மட்டும் கேட்டாலும்….. 🚰 Gas தண்ணி வேணுமா… Gas இல்லாத தண்ணி வேணுமா ? “கிளாசில்“ ஊற்றி தரவா… இல்லாட்டி போத்திலோடை தரவா? அதற்குள் ஐஸ் கட்டி போடவா… வேண்டாமா ? என்று கேட்டு கடுப்பேத்துவார்கள். 😁 😂 அவர்கள் அலுப்பு தாறதெண்டு முடிவெடித்தால், எந்த ரூபத்திலும் தந்தே தீருவார்கள். 🤣3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
எம்மவர்கள் சட்டங்களை மீறுவது ஏன் என்று விளங்கவில்லை.2 points- ஆரோக்கிய நிகேதனம்
2 points- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?2 points- வல்வை மண்ணில் பிரித்
1 pointபுலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.1 point- இந்த ஏழு நாட்கள்
1 pointஇந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍 பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர். இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍 எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣 மிக்க நன்றி கள உறவுகளே....🙏1 point- இந்த ஏழு நாட்கள்
1 pointஇப்ப தானே இறங்கியுள்ளீர்கள். இனித் தான் என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.1 point- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தமிழர் மட்டும் சிங்களவருடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் .. சிங்களவர்கள் துட்ட இணக்கத்துடன் துட்டகெமுனுவின் கொள்கைபடி வாழ்வார்கள் தமிழர்கள் சகித்து கொள்ள வேணும் கண்டியளோ ....இதுதான் சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பும் விதம்....1 point- யாழில் விமானப்படையின் கண்காட்சி
1 pointசுயமா உழைக்கும் காசு என்றால் இப்படி எல்லாம் ஊதாரித்தனம் செய்ய முடியாது இது உலகம் பூரா இருக்கும் வயசு போனவர்கள் கஸ்ரபட்டு உழைக்கிறவர்களும் சேர்ந்து பின் பலத்தில் நிற்பதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்..நான் கடந்த சில நாட்களுக்கு பின் இப்படியான இடங்களில் எழுதக் கூடாது என்று நினைத்து விட்டேன்.இப்படியானவற்றைக் கண்டால் நம்மையறியாமலே செய்யக் கூடாத என்ற தப்பை செய்ய வைக்கிறார்கள்.🖐️1 point- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தடை செய்திருந்த காலத்தில் புத்த பிக்குகளுடன் ராணுவமும் சேர்ந்தே போனது. அப்போது எங்கே போனார்கள் இந்த பொலிசார்?1 point- போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
அது பெண்டிர்க்கு அண்ணோய்! இவர்கள் சிறுமிகள் எல்லோ?1 point- மயிலம்மா.
1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை நிமித்த முடியுமா ?1 point- யாழில் விமானப்படையின் கண்காட்சி
1 pointசாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு இது ஒன்றுதான் கேடு1 point- அஸ்வினின் 100வது டெஸ்ட்
1 pointகுல்தீப் யாதவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அஸ்வின்: வைரலாகும் வீடியோ இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100 ஆவது போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருவார்கள். அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100 ஆவது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார். அதற்கு அஸ்வின் இல்லை… இல்லை… நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என குல்தீப் யாதவிடமே பந்தை மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர். https://thinakkural.lk/article/2949631 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
1 point- கருத்து படங்கள்
1 point1 point- உணவகத்தில் தங்கத்தூள் கலந்து செய்த பருப்பு குழம்பு
இருக்கும்,...இதை சாப்பிட்ட பிறகு வாழ் நாளில் மலம். கழிக்க வேண்டிய தேவை இருக்காது 🤣🤣🤣. குறிப்பு,..உடனும். வன்னியனுடன். தொடர்பு கொள்ளவும் ..அவர் கூட்டிகொண்டு போய் வாங்கி தருவார் 🙏1 point- ஆரோக்கிய நிகேதனம்
1 point- இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
சில வருடங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் நிதானமாக A9 வீதி வழியாகப் போய்க்கொண்டு இருந்த என்னுடைய அப்பாவின் முன்னால் யாரோ ஒருவரின் வளவுக்குள் இருந்து திடீர் என்று ஓடி வந்த ஒரு நாய் வாகனத்தின் சக்கரத்துக்குள் சிக்கி அப்பாவை கீழே விழுத்தி விட்டு பறந்தடித்து இன்னொரு வளவு வேலிக்குள் புகுந்து ஓடி விட்டது, அப்பாவுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் 2 நாள் இருந்தார். அப்பா அம்மாவை இலங்கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு எந்நேரம் என்ன நிகழுமோ என்று பதை பதைக்கும் இங்கே வாழும் பிள்ளைகள் நிலையை யோசிச்சுப் பாருங்கள். கேள்வி கேட்டால் மனிதாபிமானம், விலங்கு நலன், பௌதம், ஹிந்து என்று ஆயிரத்தெட்டு நோட்டு நொசுக்குகள்1 point- இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிங்கள நாய்களுக்கு மனிதாபிமானம் தெரியுமா? 2009-ல் நாங்கள் முட்களின் வாயில் சிக்கி இறந்தபோது, அவர்கள் தங்களுடைய முக்கிய உன்வஹன் கிருபாத்தை சக சிங்களவர்களிடம் கொடுத்து வெடி வைத்து கொண்டாடினார்கள்.இப்போது எப்படி? கூகிள் மொழிபெயர்ப்பு.1 point- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
1 pointநான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்1 point- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
1 pointசரியாகச் சொன்னீர்கள். இது வெளிநாடுகளில் வெளிநாட்டு தமிழர்கள் உள்பட மற்றவர்களும் நடந்து கொள்கின்ற மிக வழக்கமான நடைமுறை உண்மை உரைகல் என்ற மேட்டு குடியானவர் ஒரு மாத சுற்றுலா சென்றிருக் வேண்டிய அவருக்கு ஏற்ற இடம் இலங்கை யாழ்ப்பாணம் இல்லை.அவர் இந்தியா கஷ்மீருக்கு சென்றிருக்கலாம்.1 point- இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
1 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
நீங்கள் எழுதினதில் உடன் பாடு இல்லை நீங்கள் அறியாததை எழுதுகிறேன் மூத்தவரே............போன வருடம் தமிழ் நாடு மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது...........அண்ணன் சீமான் தொட்டு கட்சி பிள்ளைகள் மக்கள் சேவ்வை செய்தார்கள் அவர்களின் நேரம் அதோடையே போச்சு சென்னைய தாண்டி பல ஊர்களில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்தார்கள்...................கட்சி விடையத்தில் தேர்தல் ஆனையம் தான் பெரும் பிழை அல்லது தவறு செய்து இருக்கினம்...............கர்நாடாகவில் ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டு அவர் வாங்கின ஓட்டு 100க்கும் குறைவு..............அவர் 7அல்லது 8மானிலத்தில் பாராளமன்ற தேர்தலில் நிக்கிறார் இந்த முறை ஹா ஹா .............தமிழ் நாட்டில் அவருக்கு என்று கட்சி அலுவலகமும் கிடையாது 40 தொகுதியில் வேட்பாளர்களும் இல்லை😁😁😁😁😁...........இது தான் அந்த கட்சியின் நிலை😜............அப்படி பட்ட கட்சிக்கு 30லச்சம் ஓட்டு வாங்கி தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு கொடுப்பது முறைகேடு😡.................உந்த சங்கி மங்கியல் திட்டம் போட்டு கட்சி சின்னத்தை பறித்ததால் அண்ணன் சீமானுக்கு முன்பை விட ஆதரவு கூடிட்டு போகுது🙏🙏🙏..................நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வைப்பதே இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் தான்............குடும்பம் குடும்பமாய் இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர் உறவினருக்கு சொல்லி அப்படியே காட்டுத் தீ போல் பரவுது தமிழகம் எங்கும்................ விஜேப்பி , திமுக்கா இவர்களின் ஜடிம் காசுக்காக வேலை செய்கினம்..........நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இனத்துக்கா இணையத்தில் இணைந்து இருக்கினம்................முன்னேர்கள் இரட்டை இழைக்கும் உதய சூரியனுக்கும் ஓட்டு போட்ட காலம் மாறும்..............இனி வளந்து வரும் பிள்ளைகளிடம் சில்லறை காசு எடுபடாது.................இன்னும் 10வருடம் கழித்து பார்த்தால் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பது முக நூல் ரிவிட்டர் யூடுப்...................இப்பவே எங்கட ஜரிம் மிக பலமாய் இருக்கு............கால போக்கில் நாம் தமிழர் ஜரிம்ம அடிக்க யாராலும் முடியாது................. படையை பெருக்கு தடையை நொறுக்கு............. வாழ்க பிரபாகரன் நாமம் 🙏🥰 வாழ்க சீமான் 🙏💪 நன்றி 🙏1 point- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
1 pointஎம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர். நேற்றும் இங்கு நடைபாதையில் கொஞ்சம் வயதான ஒரு தம்பதியினரை பார்த்தேன். இந்தியர்கள் போன்றிருந்தனர், இந்த இடத்திற்கு புதியவர்கள். 'ஹலோ...' என்று சொல்லி புன்னகைத்தேன். அவர்கள் முகங்களை திருப்பிக்கொண்டு போய்விட்டனர். என்ன ஆனாலும், நாங்கள் ஹலோ என்று சொல்லி புன்னகைக்க வேண்டுமாம். அது எங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லதாம்............. என்ன, 'இப்படியே எந்த நேரமும் எல்லாரையும் பார்த்து ஈ என்று சிரித்தால் உங்களை பைத்தியம் என்று நினைக்க போயினம்' என்ற ஒரு குறிப்பு பக்கத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கும்.......🤣🤣1 point- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
1 pointராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள். நானும் இதை அவதாத்தேன். கால்வாய்கள் தண்ணீர் ஓடாமல் தேங்கிநின்று மணக்கிறது. இது மக்களின் தவறும் தான். கிராமப் புறங்களில் வீடுவீடாக சென்று குப்பை விடக்கு கோம்பை கவிட்டு வைக்கவில்லை என்று தண்டம் அறவிடுகிறார்கள்.1 point- சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
இவர்களல் தான் யாழ்பாணம் எங்கும் இப்பத்த பெடியங்கள் போதையில் மிதக்கினம் 2009களில் எம் இனத்தை அழிக்க துணை போனார்கள் இப்போது கஞ்சா மூலம் இளையதலைமுறை பிள்ளைகளின் எதிர் காலத்தை நாசம் செய்கினம்................திராவிட மாடல் ஆட்சி சும்மா சொல்லக் கூடாது அந்த மாதிரி நடக்குது முகா ஸ்ரேலின் ஜயாவுக்கு எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ...................1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........ 08. மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள். அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன் யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான். பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள். சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள். கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே. அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம். இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும். மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு பின்னால் போகிறார்கள். அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........! 🦚 மயில் ஆடட்டும்........ 08.1 point- இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
ஒவ்வொரு மாதமும் அடி வேணுமா?? சீனா சிங்களவனை ஆதரிக்காமால். தமிழனை ஆதரித்து இருக்கலாம் இந்தியா அடக்க ஒடுக்கமாக. இருந்து இருக்கும்1 point- கருத்து படங்கள்
1 point1 point- பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம்
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?1 point- நிஜ சாந்தன் இவரில்லையா ?
1 point- சுமந்திரனின் சுயபரிசோதனை
1 pointசுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு எதிர்ப்பு என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களையும் நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம். “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள், பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும் இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும் அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.” இறுதியாக கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார். தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார். அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது. அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது. இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும். தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார். ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப் பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை. இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம். திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும் விளக்கிக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது. அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார். தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார். மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார். நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது. தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும். வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும். மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது) நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது. https://arangamnews.com/?p=104651 point- சுமந்திரனின் சுயபரிசோதனை
1 pointஇந்த கேள்வியில் ஒரு நியாயம் உண்டு அதைவிட்டு தந்தை தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பாதை அமைத்தார் தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற தத்துவத்தை உதிர்த்தார் என்பதெல்லாம்... நூறுவீதம் உண்மை.1 point- சுமந்திரனின் சுயபரிசோதனை
1 point, """பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களையும் நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச்செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும் இல்லை.""" உது பலருக்கு கசக்கத்தான் செய்யும். சுமந்திரனும் ஒரு புலிக்கொடியை தூக்கியிருப்பாரானால் எங்கள் புலம்பெயர்ஸ் சும்மை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். 🤣1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை. UPDATED: உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 35-year-old Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake. Seven-year-old Inuka Wickramasinghe. Four-year-old daughter Ashwini Wickramasinghe. Two-year-old Rinyana Wickramasinghe. Two-month-old Kelly Wickramasinghe. தர்ஷனி பண்டாரநாயக்கா / ஏகநாயக்க (மனைவி – 35 வயது) இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது) அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது) றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது) கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்) கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது. குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சா (Febrio De-Soyza), முதல் தரத்தில் கொலை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார். அவர் கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார். நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு பார்ஹேவனில் (Barrhaven, Ottawa) உள்ள பெரிகன் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா காவல்துறை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. புதன் இரவு 11 மணிக்கு (March 06, 2024) 911 அழைப்புகளுக்கு பதிலளித்ததாக போலீசார் கூறுகின்றனர். இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது. சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீட்டு பேஸ்ட்மென்டில் (Basement) வாடகைக்கு குடியிருந்த சிங்கள இளையராலேயே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவருகின்றது. கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் (Algonquin College) மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.torontotamil.com/sinhala-srilankan-family-six-people-dead-including-four-children-ottawa-canada/#google_vignette0 points - வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.