Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20019
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19134
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/09/24 in Posts

  1. நாங்களும் இங்குதான் நிக்கிறம் சாத்தன்....... இந்தத் திரி "கோம்பைக்குள் கை விட்ட குரங்கு"மாதிரி கையில் இருக்கும் வழுக்களையும் விட முடியுதில்லை, கோம்பையும் கையை விடுகுதில்லை.......! 😂
  2. சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை. நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய் மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.
  3. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)
  4. ஆனந்த சங்கரி, டக்லஸ் இப்படி ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றால் எங்கள் ஆட்களுக்கு போர் அடிக்கப்போகிறது. சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள்.
  5. லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎 ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது. எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.
  6. படங்கள் IV கல்கிசையில் தெருவோர கடை ஒன்றில் விற்பனைக்கு இருக்கும் டிவியில் ஆப்கான்-இலங்கை கிரிகெட் போட்டி ஓடுகிறது. ஏழைகள் நிரம்பி வழியும் “நரகாபுரியில்” வீதியோர சோரூம் கடை ஒன்றில் ஏன் இந்த டிவியை வைத்துள்ளார்களோ, அதை வாங்கத்தான் யாரிடமும் காசில்லையே🤣. 👆🏼துறைமுக நகர் நுழைவுவாயில் அருகே. உள்நுழையும் போது👆🏼 👆🏼து.மு.ந வில் இருந்து கொழும்பு ஆகாய-கோடு (skyline). 👆🏼பாலம், நடை பயிலும் பாதை, செயற்கை கடற்கரை 👆🏼வெளியாகும் வழி. தனியே ஆங்கிலம், சீன மொழி மட்டுமே பாவனையில்.
  7. படத்துடன் தகவலை சொன்னால்தான், நம்புவார்கள். 😂
  8. எல்லோருக்கும் அதிஷ்டம் அடித்தால் போட்டி ஏன்?😂 சறுக்கு மரத்தில் ஏறாமல் மேலே போகமுடியாது! இறுதி நாளுக்குப் பின்னரும் 36 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் இருக்கின்றன! எத்தனை பேர் கடைசி நேரத்தில் பங்குபற்றினாலும் ஒருவர்தான் முதல்வர்😃 விதிகளின்படி பையன் ஏற்கனவே போட்டியில் குதித்துவிட்டார்! கால்பந்து விளையாடும்போது பந்து அப்படி இப்படிப் போனால் மீளவும் முயன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். ஆனால் கிரிக்கெட்டில் இன்னொரு சான்ஸ் இல்லை. ஒரு தருணம் கவனம் பிசகினால் அதை மீளவும் கேட்கேலாது! டெஸ்ட் போட்டியில் மூன்று நாள் காத்திருந்து முதல் பந்தில் அவுட்டாக வேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றமுடியாது!
  9. காங்கேசந்துறை-கொழும்பு தொடருந்து. இப்போ தற்காலிகமாக அனுராத புரம் வரை ஓடுகிறது. குளிரூட்டிய பெட்டி. யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் துட்ட காமினி, எல்லாளனின் நாற்பதாண்டு கால ஆட்சியை போரில் வென்ற பின் அமைத்த ருவான் வலிசாயா. சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரசு மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லாளன் சமாதி என நம்பப்பட்டு, இப்போ விகாரை என புதுக்கரடி விடப்படும் தலம். நான் ஒரு வீரவணக்கம் போட்டு வந்தேன். இசுறுமுனி காதலர்கள். இதை பார்க்க போகும் வெளி நாட்டுக்காரர் 10 டொலர் அழுகிறார்கள். பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள் 🤣.
  10. சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.
  11. "மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. (குறுங்கதை) குரு தட்சணை ----------------------- அம்மாச்சி கதையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். எப்பவோ பெய்ய ஆரம்பித்திருந்த மழை இன்னும் விடவில்லை. ஓடும், தகரமும் சேர்ந்த வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு விதமான ஒலிகள் கலந்து வந்து கொண்டிருந்தன. மழைக்கு இதமாக அம்மாச்சிக்கு அவரின் கையில் ஒரு சுருட்டு இருந்தது. அம்மாச்சியின் அருகில் ஒரு பணிஸூம் ஒரு கடதாசியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கதைகளின் நடுவில் சில இடைவெளிகளை இடைக்கிடை எடுத்து, அம்மாச்சி அந்த பணிஸில் ஒரு துண்டை சாப்பிடுவார். சுருட்டும், பணிஸும் அவன் அம்மாச்சிக்கு வாங்கிக் கொடுப்பவை. அம்மாச்சி சொல்லும் கதைகளுக்கு அது அவர் கேட்கும் கூலி. ஒரு ஏழு வயதுப் பையனிடம் ஏது காசு? ஆனாலும் ஏதோ ஒரு வழியில் அவன் அந்தக் காசை அடிக்கடி சேர்த்து விடுவான். இங்கு வேறு எவரும் அவனின் அம்மாச்சிக்கு சுருட்டோ அல்லது பணிஸோ வாங்கிக் கொடுப்பது இல்லை. அம்மாச்சியின் கதைகளை வேறு எவரும் கேட்பதும் இல்லை. ஆனால் சுடு சோறும், சிவப்பு மீன் குழம்புக்கும் அடுத்த படியாக அம்மாச்சி சொல்லும் கதைகளே அவனுக்கு இந்த உலகத்தின் உன்னதங்களாக இருந்தன. அவனின் அம்மாவும், அம்மாச்சியும் அவ்வளவாக கதைப்பது இல்லை. வெளியில் கொட்டும் மழையின் நடுவில், அம்மாச்சியின் அனுமார் இலங்கையை எரித்துக் கொண்டிருந்தார். அசோகவனம் தவிர்ந்து இலங்காபுரி முழுவதும் அனுமாரின் வால் நீண்டு, அது நீண்டு தொடும் இடம் எல்லாம் பற்றி எரிந்தது. இலங்காபுரியில் பச்சை வாழைகள் எங்களூர் சிவன் கோவிலில் வருடம் ஒரு தடவை எரிக்கப்படும் சொக்கப்பனை போல் கொழுந்து விட்டு எரிந்தன. பெரும் தீயிலிருந்து பறக்கும் சாம்பல்கள் வானத்தை மூடியது, கடல் நிறம் மாறியது என்று அம்மாச்சி சொல்லிக் கொண்டே போனார். அவன் பயத்தில் அம்மாச்சியுடன் ஒட்டி, மெதுவாக அவரின் சேலைத் தொங்கலுக்குள் போய்க் கொண்டிருந்தான். அம்மாச்சிக்கு ஆயிரம் கதைகள் தெரியும். சில கதைகளை உண்மைக் கதைகள் என்று சொல்லிச் சொல்வார். பருத்தித்துறை சந்தையில் தான் வியாபாரம் செய்ததாக அம்மாச்சி சொல்லியிருக்கின்றார். பல நாட்களில் அவரின் வியாபாரம் முடிய இருட்டி விடும். சிலர் ஒன்றாகச் சேர்ந்து பருத்தித்துறையிலிருந்து எங்களூரிற்கு அந்த இருட்டில் நடந்தே வருவார்களாம். வழியில் சில சுடலைகளை தாண்டியே அவர்கள் வரவேண்டும். ஒரு தடவை, முழு அமாவாசை, அம்மாச்சியும் மற்றவர்களும் நடந்து ஊர் எல்லை வரை வந்து விட்டனர். அம்மாச்சி எல்லோருக்கும் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார். திடீரென்று, 'சுந்தரி, சுருட்டுக்கு நெருப்பு இருக்குதா?' என்று அவரின் பின்னால் இருந்து ஒரு குரல். அம்மாச்சி திரும்பிப் பார்க்கின்றார். அங்கே ஒரு உருவம். அதன் ஒரு கை நீண்டிருக்கின்றது. நீண்டிருக்கும் கை முழுவதும் நெருப்பு சுவாலைகளாக எரிகின்றது. அதன் முகம் முழுவதும் எரிகின்றது. அம்மாச்சி அப்படியே மயங்கி விழுந்து விட்டார். பின்னர் பல ஆங்கிலப் படங்கள், தமிழ்ப் படங்களில் இப்படியான காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். ஆனால், இவர்களுக்கு எத்தனையோ வருடங்களிற்கு முன்னேயே அவனின் அம்மாச்சி இந்தக் காட்சியை, ஒரு அழுக்கு சேலையையே எப்போதும் கட்டிக் கொண்டு, தன்னந்தனி ஆளாக, உருவாக்கி இருந்தார். அம்மாச்சி என்ன படித்தார் என்பதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அம்மாச்சி படிக்கவேயில்லை, ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் போனதில்லை என்று அவனின் மாமா சொல்லுவார். அம்மாச்சிக்கு பல பிள்ளைகள் பிறந்தாலும், உயிர் தப்பி இருப்பவர்கள் அம்மாவும், அம்மாவின் தம்பியான மாமாவும் மட்டுமே. அம்மாச்சி எதையும் வாசித்தும் அவன் பார்த்ததில்லை. ஆனால், அம்மாச்சி தான் பள்ளிக்கூடம் போனதாகவும், முதலாம் வகுப்பு முடித்ததாகவும் சொல்வார். அம்மாச்சியின் மகாபாரதத்தில், 'அம்மா, கனி ஒன்று கொண்டு வந்திருக்கின்றோம்...' என்று பாண்டவர்கள் ஐவரும் குந்திதேவியிடம் சொல்கின்றனர். 'ஐவரும் அதை சமமாக எடுத்துக் கொள்ளுங்கள்..' என்று குந்திதேவி உள்ளிருந்து பதிலுரைக்கின்றார். தாயின் சொல்லை மீற முடியாததால், அவ்வாறே பாஞ்சாலி ஐவரினதும் மனைவி ஆகின்றார் என்று அம்மாச்சி தன் காவியத்தில் ஒரு நியாயம் சொன்னார். பஞ்ச தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள், கூனன் கதைகள் என்று அம்மாச்சியின் உலகம் பெரியது. அம்மாச்சி சொன்ன சில கதைகளை பின்னர் அவன் எங்கும் பார்த்ததே இல்லை. அம்மாச்சிக்கு அவரின் அம்மாச்சி சொல்லியிருப்பார் போல. அம்மா ஒரு கதையும் சொல்லவில்லை, அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை. சில காலத்தின் பின், அம்மாச்சி அவனின் மாமா வீட்டிற்கு போய் விட்டார். இனிமேல் மாமாவுடனேயே அம்மாச்சி இருக்கப் போகின்றார் என்று அவனின் அம்மா சொன்னார். மாமா பக்கத்து ஊரில் இருந்தார். மாமா எப்போதாவது அவனின் வீட்டிற்கு வருவார். அவன் மாமாவின் வீட்டிற்கு போவது மிக அரிது. மாமாவிற்கும் பல பிள்ளைகள். ஒரு வருடம் ஓடினது. அம்மாச்சிக்கு உடம்பிற்கு முடியாமல் போய் விட்டது. ஒரு நாள் அம்மா அம்மாச்சியை பார்க்க அவனின் மாமா வீட்டிற்கு போனார். ஒருவாறு இவனும் அம்மாவுடன் சேர்ந்து மாமா வீட்டிற்கு போனான். அம்மாச்சி படுத்திருந்தார். கண் மூடி இருந்தது. மெல்லிய அணுங்கல்கள் அம்மாச்சியிடம் இருந்து வந்து கொண்டிருந்தன. 'அம்மாச்சி, நான் வந்திருக்கின்றேன்' என்றான். அம்மாச்சி கண்ணைத் திறந்து, மெதுவாக எழும்ப முயன்றார். இவன் பின்பக்கமாக கைகளில் மறைத்து வைத்திருந்த சுருட்டையும், பணிஸையும் அம்மாச்சியின் முன் நீட்டினான். அப்படியே எழும்பின அவனின் அம்மாச்சி அதை கையில் வாங்கிக் கொண்டே, இங்கு எவரும் அவரிடம் கதை கேட்பதில்லை என்றார். சுருட்டும், பணிஸும் கூட ஒருவரும் வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் சொன்னார். 'இரு, நான் உனக்கு ஒரு கதை சொல்கின்றேன்.' 'இல்லை அம்மாச்சி, கதை ஒன்றும் வேண்டாம்' என்றான் அவன்.
  13. தாங்ஸ் ப்ரோ, குடும்ப சுமை, வேலைப் பளு காரணமாக யாழில் அதிகம் எழுத முடியவில்லை, புலம் பெயர்ந்த சூழ்நிலையில் தமிழை மறக்க கூடாது என்பதற்க்காக அடிக்கடி தட்டிப் பார்ப்பதுண்டு. அத்துடன், தற்போது யாழில் அரைத்த மாவை அரைப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது. அவர் ஒரு அம்மையார் ஆவார். https://youtu.be/52b-vgWKrpw?si=yecq9b63-ytAfYy5&t=184 வி.நி, நலம் நன்றி
  14. கோசான் கவனத்திற்கு, டக்ளஸ் பயணம் செல்லும் பாதை மண் சாலையாக உள்ளது😁,
  15. தமிழ் யேர்மன்ஸ்சுக்கு இலங்கை போவதும் ரஷ்யா போவது போன்று பிடிக்காத ஒன்று என்று நான் நினைத்திருந்தேன். இவர் மாமா அப்படி இல்லை.
  16. ஈழ விடுதலை போராட்டத்தையும், மரணித்த மாவீரர்களையும் யாரும் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கொச்சைப்படுத்தக்கூடாது. அது ஈழ தமிழினம் சம்பந்தப்பட்டது. மற்றும் படி உங்கள் தனிப்பட்ட டிங் டொங் விளையாட்டுக்களை உங்களுடனே வைத்துக்கொள்ளங்கள். இது கட்டளை அல்ல வேண்டுதல்.
  17. உண்மை தான். புலிகளை சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று அழுத கூட்டம் பத்தாயிரம் பாலகர்கள் பலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட போது கண்களை மூடிவிட்டனர்.
  18. நானும் ஒருகாலம் சந்தியில் நின்று வம்பளத்தேன். உண்மை தான் தேனும் விசமும் சேர்ந்தே உள்ளன.
  19. இந்தியாவின் ரூபாவை விட அமெரிக்கன் டொலர் பெறுமதி அதிகம் என அவருக்கு தெரியாத என்ன‌
  20. அது தப்பியோட்டம் எப்படி நீங்கள் சொல்ல முடியும்?😄 கெரில்லா போர் முறையில் இதெல்லாம் சகயம்...பனங்காட்டு நரி ஒடியது பாய்வதற்கே...தொகுதிவாரியான தேர்தல் வரும் என அறிந்து கொண்டார் போலும்...
  21. ஓம். கியூபா, வெனிசுவெலா குடிவரவு, அமெரிக்க கடவுச் சீட்டில் தங்கள் சீல் எதுவும் குத்துவதில்லை. மெக்சிகோ போய், கனடா போய் அங்கிருந்து போகிறார்கள். நமக்கு "சிங்கிள் எஞ்சின் செஸ்னா" வாழ்க்கை பொருந்திப் போய் விட்டது! இனி போற காலத்தில ஏன் மாத்துவான்😂?
  22. கியூப்புரட்சியால் கியூபப்பெண்கள் இழந்தது கொஞ்சம், அடைந்தது அதிகம். இழந்தவை லிஸ்டில் இதையும் சேர்க்கலாமோ😂? 1ம் வகுப்பு ரயில் டிக்கெட் கடினம்தான். ஆனால் நான் கொஞ்ச நேரத்திலேயே 2ம் வகுப்பில் வந்து இருந்து விட்டேன். யன்னல் காத்து முகத்தில் அறையாவிட்டால் - அது இலங்கை ரயில் பயணமே இல்லையே. எந்த புத்தகத்திலும் குத்துவதில்லை. ஏனென்றால் பிறகு அமெரிக்கா விசா எடுக்க கஸ்டம். கையில் ஒரு சீட்டில் ஸ்டாம்பை குத்தி கொடுப்பார்களாம். அண்ணை என்ன bucket list டோ? 😎 மோட்டார் சைக்கிளில் ஒரு சுத்து சுத்கினால் livin la vida loca!
  23. அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர். இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு. திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான். அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு. நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான். சரியே. அவர்களுக்கு அவர்கள் முதிசத்தை பார்க்க அதிக விலை போட்டால், வர மாட்டார்கள். ஆகவே சலுகை விலை. ஆனால் இங்கே எம்மிடம் கொள்ளை அடித்ததை விண்சர் மாளிகையில் போய் பார்க்கவே எமக்கு டிக்கெட் போடும் இவர்களுக்கு அங்கே ஏன் சலுகை விலையில் கொடுக்க வேண்டும். இந்தியாவிலும் இதேதான்.
  24. இதே போல் சுமத்திரனும் வெகு விரைவில் ஓடுவார் . ஸ்டார்ட் மியுசிக் 😀 இவ்வளவும் காணும்....................................
  25. "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப் பட்டுள்ளதை கவனித்தேன். அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை / விளக்கத்தை கிழே தருகிறேன். போர்ச் சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில், தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில், 96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் முட்டால், நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு, அல்லது கூச்சம். இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம். தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம். "ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம். இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை. அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி, இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது -- பயப்படுவது -- ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக் கொள்வது மற்றொரு வகை. இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும் -- அலட்ட வேண்டாம் -- இனி காணும் -- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம். இன்னும் கொஞ்சம் போக, "சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு ..". இது பொய் நாணம். "எனக்கு இது பிடித்துத் தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம். இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன. தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன் / அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும் போது உண்டாகும் இயல்பான அருவருப் புணர்ச்சி பயிர்ப்பு ஆகும். இந்த உணர்ச்சி பொதுவானது. அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம். அவ்வளவுதான்! இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது! இது பொதுவாக சொல்லப் படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் ! இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ? இது சொல்லப் பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும். அதை விட்டு பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக் குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? பண்டைக் காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது. "கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும் இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை மடமொழி எவ்வம் கெட" [நூல்: கார் நாற்பது (#33) / பாடியவர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்] பல நாள்களுக்கு முன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலை மீது மழை பெய்யும் போது நான் திரும்பி விடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன். இப்போது, அந்த நேரம் வந்து விட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்ப வேண்டும். தேரை வேகமாக ஓட்டு! என்கிறான். அது என்ன "மடமொழி"? காதலியை ‘மடத்தனமாகப் பேசுகிறவள்’ என்கிறானா இந்தக் காதலன்? பெண்களுக்கான குணங்கள் "அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த ‘மடம்' தான் இங்கேயும் வருகிறது. பொதுவாக ‘மடம்’ என்றால் பேதைமை, அழகு, மென்மை என பொருள் படும். அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135: "வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது. அதாவது ஆண் மக்களுக்குத் தொழில் தான் உயிர் என்பது இதன் பொருள். அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" என்பது காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும். இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம். ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர், அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது". அவள் அச்சம் கொள்ளவில்லை? முட்டாளாக பேசவில்லை? நாணம் கூட பட வில்லை? வீரமாக முழங்கினாள்! இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி. இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம். ஆகவே எங்கு சொல்லப்பட்டது, எந்த சூழலில் சொல்லப் பட்டது, ஏன் சொல்லப் பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. ஓடி... தாவிப் பாயாத, மதிலா... என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  27. அடிக்கு சுணைக்கிற தோல் இல்லை அந்தாளுக்கு. அவர் வாங்காத அடியா? குத்தா? வெடியா?
  28. போனகிழமை செய்தியில் கிளிநொச்சி அல்லது பூநகரி பக்கமாய் இருக்கனும் சனம் அடிக்க கலைக்க ரோட்டால் போன மோட்டார் சைக்கிளை மறித்து ஆள் மட்டு மட்டா தபியோடினவர் அதன் பின் வந்த முடிவாய் இருக்கும் .
  29. எத்தனையோ தலைவர்மாரிடம் கேட்டு கேட்டு புழித்துப் போச்சு. இவருடைய தலைவர் மகிந்தவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
  30. இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல
  31. சிறுவர் முதல் பெரியோர் வரை ஆண் பெண் பேதமற்று பழகவேண்டியது நீச்சல். சுற்றி அடைத்து வைத்துள்ள கோவில் கேணிகளை திறந்து விடுங்கோப்பா! பல ஆயிரம் பேர் நீச்சல் வல்லுனர்களாக போட்டிகளிலும் வெல்லலாம்.
  32. இந்த ரெக்னிக்கை நானும் பாவிக்கவேணும். ஒருநாள் குளிக்காமல், தலையிழுக்காமல், ஷேவ் எடுக்காமல் விட்டால்கூட ஆடுஜீவிதம் பிரித்விராஜின் மூன்றாவது கோலத்தில் வந்துவிடலாம்😆
  33. ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்? அங்கே, வார இறுதியில் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான் நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை...... எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே? அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ? சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி. எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....
  34. 11 வது தொடங்கும் வரை, 10 பக்கம் வந்து விட்டதென்று மார் தட்ட முடியாது! @satan என்ன பம்மல்? ஏன் மௌனம்😎?
  35. அண்மையில் சிட்னியில் தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டார்கள் போதை பொருள் விற்பனை செய்த குற்றசாட்ட்டின் பெயரில்ல் ....இந்த இளைஞர்கள் மூவரும் பட்டதாரிகள் என நினைக்கிறேன் ..ஒருவர் சட்டத்தரணி ...வசதியாக வாழக்கூடிய நிலமை இருந்தும் ஏன் இப்படியான செயலில் ஈடுபதின்றனர் என தெரியவில்லை... அடி வாங்கின மாணவர்களும் தப்பு செய்கின்றனர் அடி வாங்காத மாணவர்களும் தப்பு செய்கின்றனர்..
  36. உங்கள் கருத்து மீது முரண்பாடு இல்லை ஆனால் எனது பிள்ளை என்றால் அ, ஆ சொல்லு பார்ப்போம் என்று தான் விசாரணை தொடங்கும். எவருமே எனது பிள்ளைகளை தண்டிப்பது தவறு என்று நினைப்பவன் நான். ஆனால் அதற்கு நான் இடம் வைப்பதில்லை. இதற்கு வாத்திமாரே பரவாயில்லை என்ற நிலை தான் என் வீட்டில்.
  37. வணக்கம் நொச்சி, இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார்.
  38. இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன். சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,
  39. பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......! 😂 (விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).
  40. கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை “வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்” "கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து -ஆங்கு, இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!" ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி, திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது "அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல" அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Indra Vizha chapter from Puhar Kandam in Silapathikaram [Poet: Illango Adikal], under the heading "One of the young men thus celebrated his beloved lady"[“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”], mentioned about eclipse as below. “The Moon, in fear of Rahu, monster who devours her on the days of her eclipse, fled from the sky in search of shelter. framed in the dark clouds of you hair, she reappeared then as your pallid face. she chased away the hairs from your fair cheeks, painted two soot- black fish- shaped eyes, and in the middle placed kumil flower, that since then passes for your pretty nose.” A solar eclipse occurs when the moon passes between the Sun and the Earth so that the Sun is fully or partially covered but this celestial spectacle also brings along with it a string of superstitions all over the world. In India & Sri Lanka, people believe when the sun rays are covered by the moon, the atmosphere becomes polluted. Therefore, for the whole day -- about 12 hours of the day time -- people observe fast and do not eat any food in the polluted atmosphere. People pray during the eclipse period so that they did not indulge in any evil activity. The same is done during Lunar Eclipse but the period of fast is only nine hours. “There are several false beliefs prevalent in our society regarding solar eclipse. Some people even lock themselves up in their homes to avoid ‘the bad rays’ from the eclipse,” Many also take a dip in holy rivers to cleanse themselves after the eclipse and some avoid cooking and eating during the eclipse. There are others who believe that pregnant women should refrain from coming out during the eclipse as it can lead to deformities in the foetus. . There is no basis in truth for these superstitions, All these superstitions originate when human beings do not have the knowledge to explain away natural phenomena. The eclipse causes emission of UV rays and hence you should not watch it with naked eyes. This is one of the reasons; why it is not considered good. Later stories were built around it as above. Lastly as per "panchangam" [பஞ்சாங்கம் / Hindu astrological almanac] the presence of Rahu and Ketu makes it bad time for a birth or to conduct any good ceremony. Actually there is no truth in it; if you trust science. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  41. கோசான் ஜனரஞ்சகம் என்றால் என்னென்று தெரிந்தவர் என நினைக்கின்றேன். ஒரு விடயத்தில் எல்லா விடயங்களும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார். ஒரு மனிதனுக்குரிய சகல அம்சங்களும் தான் இணைக்கும் திரியிலும் இருக்கவேண்டும் என நினைக்கின்றார் போலும்...அதுவும் சரிதான்....🤣 சிரிக்காமல் வந்து சிரிக்காமல் கருத்தெழுதி தண்டனை மாதிரி கருத்து எழுதி சுவாரசிய எழுதக்கூடாது என்று நினைக்கிறார்...... இப்பவெல்லாம் செத்தவீட்டிலையே சிரிக்காமல் இருக்காமல் இருக்கிறார்கள் இல்லை😂
  42. நமக்கும் அதிஸ்டம் அடிக்குதோ பார்ப்போம்! 😂
  43. ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரணி தவராஜா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு. இப்போதான் சுமந்திரன் சரியான முகவரிக்குப்போன கடிதமாக அங்க இங்க எண்டு திரிஞ்சு செல்லிடம் சென்றிருக்கிறார். மாகாப்பிரபு இங்கையும் வந்திட்டியளோ எனச் சிங்களவன் தலையில கைவைக்கப்போகிறான். ஆமை புகுந்தவீடும் ஆமினா புகுந்தவீடும் உருப்படாது எனச்சொல்வது சுமந்திரன் விடையத்தில சரியாகப்படுகுது. அதுசரி நீதிமன்றில் குட்டையை குழப்பிவிட்டு கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏன் போனவராம் கடவுளே கண்பியூஸ் ஆகப்போகிறார். இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.