Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19134
    Posts
  2. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1488
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/12/24 in all areas

  1. "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04 ‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம்’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது. அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார். 1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 - February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும். இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் 'பசித்துப் புசி' என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் 'நீரை உண், உணவைக் குடி' என்பர் எம் பெரியோரும்! மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது. இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை. உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம். இன்றைய நவீன காலத்தில், தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல, இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 05 தமிழ் மருத்துவத்தின் வரலாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை தொகுத்து, மருந்து, மருந்துக்கான மூலப் பொருட்கள், மருத்துவன், மருத்துவம், நோய் , நோயாளி, நோயில்லா நெறி, உணவே மருந்து, உணவு பொருள்கள், அறுசுவை, மருத்துவக் கோட்பாடு .... போன்ற பல தலைப்புகளில் இன்று ஆராயப் படுகிறது. ஒருவருக்கு நோய் தீரவேண்டுமாயின் அவரின் சித்தம் அல்லது மனம் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக " நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீயாகிறாய்" என்பதை கவனிக்க! அதாவது உன்னை பலவீனன் அல்லது நோயாளி என்று நினைத்தால், நீ அப்படியே ஆகிவிடுவாய் என்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது. எது எவ்வாறாகினும் நாம் மனிதனின் உடற்கூறுகளை என்றும் மாற்ற முடியாது. ஆனால் நீரிழிவு நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது என இன்று எம் அனுபவம் எடுத்துரைக்கிறது. தேரையரின் மனதுக்கினிய சீடரான யூகிமுனி வைத்திய முறைகளை எளிமையாய் சொல்லக்கூடியவர். இவரின் வைத்திய காவியம் ஒன்று நீரிழிவு நோய்க்கு காரணம் கூறுகிறது. "கட்டளைமிகுந்திட்டாலுங் காலங்கள்தப்பினாலும் இட்டமாம் பாலும் நெய்யும் ரத்தமும்புளிப்பும் மிஞ்சில் வட்டமாம் முலையார் தங்கள் மயக்கத்தின் கலவியாலும் நெட்டிலைகோரை போலே நீரிழிவாகுந்தானே." [யூகிமுனி வைத்திய காவியம்] அதாவது ஓய்வு அற்ற, கூடிய வேலை [அதிக வேலை பழு, மன அழுத்தம்] , ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், கொழுப்பு கூடிய நெய், பால், மிருக இறைச்சி / கொழுப்பு போன்ற உணவு முறை. வட்ட வடிவான நகில்களை [முலைகளை] உடைய மகளிருடன் பாலியல் செயல்களில் அதிக ஈடுபாடு வைப்பது, நீண்டு (140 செ.மீ / 55 அங்குலம்) வளரக்கூடிய கோரை புல்லு [Nut grass] அல்லது தரமற்ற பொருட்கள் / உணவுகள் போல இது தானாக நீரிழிவு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்கிறது. கோரை புல் ஒரு களை (Weed) ஆகும். களை என்பது பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் என பொருள் படும். உடல் உறவு அல்லது பாலியல் நடவடிக்கை என்பது உண்மையில் மெதுவோட்டம் [நடையோட்டம்] அல்லது உயிர்வளிக்கோரும் பயிற்சி போன்ற ஒரு பயிற்சியே. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும் [Sex is an exercise, like jogging or aerobics, and it can bring on low blood sugar, says the American Diabetes Association (ADA)], எனவே கூடிய பாலியல் நடவடிக்கைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது ஒரு தவறான புரிந்துணர்வு என்று நம்புகிறேன். "பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆமாம் அமெரிக்கா நீரிழிவு கூட்டமைப்பு சர்க்கரை குறைவதை தடுப்பதற்கு சற்று முன்போ அல்லது சற்று பின்போ உண்ண சொல்லுகிறது [To avoid low blood sugar, plan to eat food either immediately before or shortly after sex to cover the glucose you use.] அதனால் தான் 'பாலும் பழமும்' பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்ன என்று யூகிமுனி மேலும் இன்னும் ஒரு பாடலில் கூறுகிறார். "முகமுங்காந்துநெஞ்சலர்ந்து முறிந்தவுடலுநடுநடுங்கி நகமேலறிந்து நாவறண்டு நஞ்சுண்டவர்போல் மிகசோர்ந்து பகலுமிரவி முறங்கிஉடல் பரிந்தே தட்டி மெலிந்து உழன்று மிக வேதனை உண்டாகி வேண்டாதன்னம் வேண்டாதே". அதாவது, முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு, தாகம் கூடி நெஞ்செரிவு உண்டாகி, உடல் நடுநடுங்கி, நாவறண்டு, நஞ்சு உணடவர் போல் மிக சோர்ந்து, உடல் மெலிந்து, வேதனை உண்டாக்கும் என்கிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பாண், பாஸ்தா (Pasta), கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்து விட வேண்டும். மேலும் சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவை கட்டுப்பாடுடன் கொஞ்சமாக எடுக்கலாம். முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி [Ragi Barley] போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய் [Olive oil], பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (walnut / வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. சுருக்கமாக, “நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] தற்காலிகமாக முடிவுற்றது
  2. கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று நினைத்தேன். புலிகளை தூற்ற சேறடிக்க எதையும் தூக்கி திரிவீர்கள் என்று புரிந்து கொண்டேன்.
  3. மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன். அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே விவசாயி சின்னத்தை கேட்டு கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், இப்படியான எந்த காரணத்தையும் பிஜேபி கூட்டணியில் நிற்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் ஆணையம் கூறாமல், கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது. பி.கு: இந்தியாவின் சனநயகம் என்பதே ஒரு கேலிக் கூத்து. வெறுமனே 4.3 வீதம் உள்ள பார்பனர்களால் 95.7 வீதமுள்ளவர்கள் ஆளப்படும் தேசம் அது. இதில் வேறு எதனை எதிர்பார்க்கலாம்?
  4. நான் நினைக்கிறேன் சீமானின் திரி என்றால் நம்ம கோசான் சார் நரசிம்ம அவதார் எடுத்து விடுவார் ஆக்கும் .😀 ஏன் என்றால் அந்த வைரவன் அவதாரம் குறிப்பிட்ட சில திரிகளுக்குள் மாத்திரம் உலாவ படைக்கப்பட்ட ஒன்று போல் உள்ளது சில பிரச்சனையான கருத்துக்களை வைரவன் மூலம் இறக்கி விட்டால் முதலில் அடி வாங்குவது அந்த அவதார் தானே . ரெம்ப ரெம்ப புத்தி சாலிகள் ஆம் .
  5. கவலை வேண்டாம் சேர். உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு. ”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”. (சேகுவாரா மன்னிக்கவும்). போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது. 😆 அட அவங்க கேட்டததானே ஆணையம் செஞ்சிருக்கு😀
  6. சச்சிமா மட்டும் அல்ல… இந்துக்கள் பக்கமும், கிறிஸ்தவர்கள் பக்கமும் பல புஜ்ஜிமாக்களும் இதே அஜெண்டாவுடன் இறக்கப்பட்டுள்ளனர். சிலர் இந்து மத காவலர்கள் என வேடமிடுவர். சிலர் கிறிஸ்தவ காவலர்கள் என வேடம் இடுவர். இன்னும் சிலர் தாம் இந்தியாவின் எதிரிகள் - இந்தியாவின் சதியை அம்பலப்படுத்துகிறோம் என வேடமிடுவர். ஆனால் மூன்றுதரப்பும் வேலை செய்வது இந்தியாவுக்கே. ஊரிலும், புலம்பெயர் நாட்டிலும், குறிப்பாக யாழ் களத்தில் இவர்கள் யார் - எப்படி பட்ட உட்டாலக்கடி வேலைக்காரார் என்பதை மக்கள் தெரிந்தே வைத்துள்ளார்கள்.
  7. நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம் என்று புரிந்து கொண்டு தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது. சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.
  8. லௌ(வ்)கீகம் இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது .சாதி, மதம் தாண்டி “ லவ்” எண்டாலே ஒரு தீண்டாமையான விசயமா இருந்திச்சுது . பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பெடியளுக்கு லவ் ஏன், எப்பிடி வாறதெண்டு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் “அநேமா மச்சான் அவள் உன்னைத்தான் பாக்கிறாள்”எண்டு உசுப்பேத்திவிட வாற காதல் தான் கூட. Friend உசுப்பேத்திறதோட மட்டுமில்லை ஊரெல்லாம் பரப்பியும் விடுவான். “ ஏன்டா எண்டு கேட்டா“ ஏற்கனவே ஒருத்தன் பாக்கிறான் எண்டு தெரிஞ்சா வேற ஒருத்தனும் பாக்க மாட்டான்டா” எண்டு விளக்கம் சொல்லுவான். பழகிப்பாத்து பாத்து வாறதில்லை பெடியளின்டை லவ். பாத்தோன்னயே வரும் , எதைப்பாத்து பிடிக்குது எண்டு தெரியாது. “மச்சான் ஏன்டா அவளை லவ் பண்ணிறாய்” எண்டு கேட்டா விளக்கம் சொல்லத் தெரியாது. பாக்கத் தொடங்கேக்க சிலவேளை தானாப் பாத்தாலும் இன்னொருத்தன்டை தயவில்லாமல் ஒப்பேத்த முடியாது. பாக்கிற மட்டும் தான் அவன்டை வேலை, மிச்சம் எல்லாத்தையும் பக்கத்தில இருக்குறவன் பாத்துக்கொள்ளுவான். தனக்கு ஏலாததை இன்னொருத்தன் செய்யிறான் எண்டோ, இல்லாட்டி இதோட இவன் அழிஞ்சு போகட்டும் எண்டோ தெரியேல்லை. என்னொருத்தன்டை “லவ்வுக்கு” உதவிறதெண்டால் பெடியள் எல்லாம் ஒற்றுமையாச் செய்வாங்கள். சில வேளை மற்றவன் எல்லாம் பாக்கிறான் எண்டு போட்டு ஒருத்தன் தானும் ஒண்டைப் பாப்பம் எண்டு போட்டு கோயில்லயோ, ரியூசனிலயோ கண்ட பெட்டையை சைக்கிளில விட்டுக்க கலைக்கிறாக்கள் கனபேர். அநேமா அது சைக்கிளில போகேக்க நாய் கலைக்கிற மாதிரி கொஞ்சத் தூரத்தில நிண்டிடும். சிலர் மட்டும் sincere love பண்ணிற எண்டு சொல்லித் திரிவினம். ஆனால் serous ஆ love பண்ணிற ஆக்கள் மட்டும பிள்ளைகளை விட்டுக் கலைச்சுப் பின்னால போய் எந்த ஊர், எங்க வீடு எண்டு கண்டு பிடிக்கிறது முதல் வேலை. அதுக்குப் பிறகு அந்நபர் பிள்ளை வீட்டால வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் இல்லாட்டி ரியூசன் போய்த் திருப்பி வாற வரை முன்னுக்கும் பின்னுக்குத் திரிய வேணும். இப்பிடித் திரியேக்க சந்தேகப்பட்டு ஆரும் மறிச்சுக்க கேட்டா சொல்லக்கூடிய மாதிரி அடுத்த வீடு, பக்கத்து ரோட்டில இருக்கிற ரெண்டு பேரின்டை பேரைத் தேடி அறிஞ்சு வைக்க வேணும். ஒருக்கா ஒருத்தன் சொன்னதைக் கேட்டு நட்புக்காக இப்பிடி ஒரு காதல் தூது போகேக்க மறிச்சுக் கேட்டவனுக்கு சேட்டை வெளீல இழுத்து விட்டிட்டு இயக்கம் மாதிரி காட்ட, அவன் கொஞ்சம் எங்களை முறைக்க பாத்தா மறிச்சவன் அந்தப் பெட்டையின்டை தமையன், அதோட உண்மையில இயக்கம். ஒரு மாதிரிக் காலில விழாக் குறையா கெஞ்சித் தப்பி ஓடினதோட அந்தக்காதல் முடிஞ்சு போனது. இதையும் எல்லாம் தாண்டிப் போய் love பண்ணிற எண்டால், கடைசி வரை பின்னால போய் எங்கடை லவ் strong எண்டு காட்ட வேணும்.முதல்ல தனியப் போனவளவை நாங்கள் பின்னால போறது தெரிய வர ரெண்டு body guards friend எண்டு கூட்டிக்கொண்டு போவினம். அநேமா எரிச்சலில அந்த ரெண்டு friend இல ஒண்டாவது குட்டையைக் குளப்பும். அதை சமளிச்சு, வேறயாரும் போட்டியாப் பாத்தா அவனை ஒரு மாதிரிக் வெருட்டி பாக்கிறதை விடப் பண்ணி அப்பன் காரனிலும் மோசமான bodyguard வேலை பாக்கோணும். அதுக்குப் பிறகு வாயைத் துறந்து கதைக்காம அவை கண்ணால வாயால குடுக்கிற soft signalஐ கண்டு பிடிக்க வேணும். இதை எல்லாம் கவனிச்சுக் கடைசீல என்னைப் பாத்துச் சிரிக்கிறாள் எண்டு நம்பிப் போய்க் கேட்டா வாற பதில் இருக்குதே; “நான் இப்ப படிக்கோணும் , ஐயோ இங்க ஆரும் கண்டாப் பிரச்சனை, நான் டொக்டரா வரோணும், அப்பா அம்மாக்குப் பிடிக்காது, அதில வாறது தெரிஞ்ச ஆக்கள் “ , எண்டு அவளவை சொல்லிற மறுமொழி ஓமா இல்லையா எண்டு தெரியாம குழம்பித்திரிய, அடுத்த நாள் friends இல்லாமத் தனிய வரத்தான் விளங்கும் அது green signal தான் எண்டு. அவள் சொன்னது என்ன எண்டு விளங்காமல் இண்டைக்கும் தேவதாஸாக இருக்கிறாக்களும் இருக்கினம். இது பள்ளிக்கூட காலத்தில ஆனால் கம்பஸ் போற நேரத்தில எல்லாம் மாறீடும். “ கம்பஸுக்குப் போறாய் , படிப்பில மட்டும் கவனமாய் இரு அவன் இவனைப் பாத்து காதல் கீதல் எண்டு வந்தால் “ எண்டு அம்மா சொல்ல முதல் ,“ வந்தால் என்ன எண்டு “ மகள் கேக்க , “ வந்து பார் தெரியும் “ எண்டு அம்மா சொல்ல , அதுக்கு அம்மம்மா ஒத்து ஊத, அப்பர் ஒண்டும் கேக்காத மாதிரி இருக்க”, இந்தச் சம்பாசணை அநேமா எல்லா வீட்டையும் கம்பஸ்ஸுக்கு போற முதல் நாள் இருக்கும். அப்பாடா இயக்கத்திக்குப் போகாமல் பெடி ஒருமாதிரி கம்பஸ் போட்டான் எண்டு சந்தோசப்பட்ட அம்மாமாருக்கு கம்பஸுக்கு பிள்ளைய அனுப்பேக்க வாற அடுத்த கவலை பிள்ளை அங்க ஆரையும் பாத்திடுமோ எண்டு. அது பெடியனோ பெட்டையோ அம்மாமருக்கு படிப்பிலும் பாக்க இது தான் பெரும் கவலை. அம்மான்டை கதையால கம்பஸ் போறது ஏதோ love visa கிடைச்ச மாதிரி எண்டு நெச்சு உசுப்பேறிற பெடியள் கம்பஸு்ககுள்ள எப்பிடியும் ஒண்டு சரிவரும் எண்டு நம்பி வந்து கடைசிவரை கரைசேராமல் போன கதை கனக்க இருக்கு. கடுவன் பள்ளிக்கூடத்தில படிச்சவனுக்கு கம்பஸுக்க போன காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி இருக்கும் , ஆனால் போனாப்பிறகு தான் தெரியும் அங்க இருக்கிற கஸ்டம். கல்வியே கண்ணாய் வாறதுகள் கண்ணெடுத்துப் பாக்காதுகள். அதுகும் medical faculty எண்டால் அது எட்டாக் கனி தான். அதால தான் கனபெடியள் stethoscope ஐ வெளீல விட்டபடி திரிஞ்சு பத்தாம் வகுப்பு படிக்கிறதில வெள்ளைப் பிள்ளையாப் பாத்துச் சுத்தித் திரிவாங்கள். பாக்கிற பெட்டை மட்டும் பாக்காது மாதிரி திரியப் பக்கத்தில போறது உதவிக்கு வரும் கேக்காமலே. “அவர் doctor ஆம்” எண்டு தூது செல்ல, செலவில்லாமல் கரைசேருது எண்டு அம்மாமார் ஓம் சொல்ல, படிச்சு முடிச்சுப் பட்டத்தோட போகேக்க கட்டிக்கொண்டு போயிடுவாங்கள். ஆனாலும் கம்பஸில வந்த நாள் முதல் கடைசீல போற நாள் வரை போராடி விக்கிரமாதித்தன் மார் வேதாளத்தை பிடிக்கேலாமல் போன கதைகள் இருக்கு. அதே போல படிக்கேக்க தம்பதிகளாய் திரிஞ்சிட்டு தம் பாதைகளை பாத்துப் போன கதையும் இருக்கு . கடைசிவரை இவனுக்கு இந்தப் பெட்டை சரிவராதெண்டவன் கடைசிக்காலத்தில சேந்த கதை எண்டு நிறையக் கதை இருக்கு. வெளீல இருந்து பாக்கிறாக்களுக்கு சனம் வாகனம் ஓட license கிடைச்ச மாதிரித்தான் கம்பஸுக்கு வந்தால் love பண்ண license கிடைச்சிடும் எண்டு நெக்கிறது. ஆனால் அதுக்குள்ளயும் love பண்ணி ஒப்பேத்திறது arrears முடிக்கிறதலும் பாக்கக் கஸ்டம். ஒருத்தருக்கும் தெரியாமத்தான் love பண்ணிறம் எண்டு love பண்ணிறவை மட்டும் நெச்சுக் கொண்டிருக்க, FB profile, what’s app status எண்டு ஒண்டும் இல்லாத காலத்திலேம் love பண்ணினனாம் எண்ட கதை ஊரில பரவீடும். “ என்ன என்னமோ கேள்விப்பட்டன் , ஆர் பெட்டை” எண்ட விடுப்புக் கேள்விகளில இருந்து தப்பிறது பெரிய பிரச்சினை. பெட்டைகள் தாங்களாகவே friendsக்கு ஒருத்தருக்கும் சொல்லவேணாம் எண்டு சொல்லியே எல்லாருக்கும் சொல்லிப்போடுங்கள். வீட்டை தெரியாம love பண்ணேக்க முதல் தெரிய வாறது அநேமா பெட்டைகள் வீட்டில அம்மாவா இருக்கும். பொறாமை பிடிச்ச ஒருத்தனோ இல்லாட்டி ஒருத்தியா தெரியாம செய்யிற உதவி இது. பிறகு மெல்ல அம்மா அப்பாவுக்குச் சொல்ல எண்டு வட்டம் விரியும். ஆனால் பெடியள் வீட்டில அம்மாமார் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருப்பினம். என்னதான் இருந்தாலும் love பண்ண முடிவெடுத்து , அலைஞ்சு திரிஞ்சு, ஒமா எண்டு கேட்டு Visa apply பண்ணீட்டு முடிவுக்காக wait பண்ணிற மாதிரி பாத்துக் கொண்டிருந்து, முடிவு தெரியாம அலைஞ்சு, ஓம் எண்டு சொன்னாப் பிறகு ஒழுங்கை வழிய ஒளிஞ்சு கதைச்சுத் திரிஞ்சு , அப்பப்ப வாற சண்டைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முகம் குடுத்து, பிறகு கட்டும் வரை வேற ஆரும் பா(தூ)க்காமப் பாத்து , கட்டிற நிலைமை வர வீட்டில விசயத்தை சொல்லி , அந்தப் பூகம்பத்தையும் ஒரு மாதிரி சமாளிச்சு கலியாணம் எண்டு முடிவாக கையில இருக்கிறதை வைச்சு ஒருமாதிரிக் கலியாணமும் கட்டீட்டு முதல் நாள் கட்டில படுத்துக் கொண்டு யோசிக்க … Dr .T. கோபிசங்கர் யாழப்பாணம்
  9. என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது சமய நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே! நீங்கள் எடுத்துக் காட்டியது போல, எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்தி ரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்று கிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்தி கத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் . எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
  11. தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன். தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள். பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன. குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள். இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள். விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ?
  12. ப்ரோ நீங்க சதவீதம் எழுதினா எப்ப சொன்னேன்? நீங்கள் போட்ட பிரச்சார வீடியோவால் நான் பிழையான முடிவுக்கு வந்தேன்.
  13. காட்டுங்கள் பார்க்கலாம். பெருமாள் சாமிக்கு! கோஷான் பிரச்சனை எண்டால் திருப்பதி லட்டும் பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட பீலிங் வரும் போல...... 🤣
  14. கொஞ்ச நாளைக்கு கெரில்லா போரை செய்து கொண்டிரு ...இப்படிக்குநெட்டோ
  15. @goshan_che, இனதும் @வைரவன்னதும் அவதார் ஒரே மாதிரி எனக்கு மட்டுமா தோன்றுகிறது... ? ஒரே கன்பியூஷன்..50 இனை நெருங்குவாதால் இப்படி தோன்றுகிறது போல...
  16. சச்சியும், புஜ்ஜியும் ஒண்ணு (🇮🇳) இதை அறியாதோர் வாயில் பஜ்ஜி😁
  17. வெற்றிகரமாக இலக்கைப் பிடித்த மகிழ்வில் இரு வீராப்புகள் மறந்தபுலவு மற்றும் கஞ்சாவீரன்😏 🤣🤣🥲 எமது மக்களுக்கு மறந்தி அதிகம். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க 😏😂
  18. "கனவில் வந்த நங்கை" ஒருமுறை நான் வாலிபனாக இருந்த காலத்தில், இயற்கை மணம் பரப்பும் மலைநாட்டின், எழில் மிகு மாநகரம் கண்டியில், 1752 ஆம் ஆண்டில், கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கன் அரசனாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட, கண்டி செல்வ விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அன்று இருந்த செல்வன் கஃபேயில், சைவ உணவு சாப்பிட்டுவிட்டு, சில்லறை காசு திருப்பி வாங்கும் பொழுது ஒரு ஐந்து ரூபாய் தாள் என்னை எனோ திடீரென கவர்ந்தது. அதில் யாரோ ஒரு பெண், தமிழில் தன் பெயரும், கண்டி விலாசமும் எழுதி இருந்தார். நான் பேராதனை வளாக விடுதிக்கு சென்றதும், நீங்க யார்?, உங்க ஐந்து ரூபாய் இப்ப என்னிடம் என, சிறு குறிப்புடன், என் விடுதி விலாசத்தையும் சேர்த்து அன்றே தபால் அனுப்பினேன். என்றாலும் ஒரு மாதமாகியும் ஒரு பதிலும் இல்லை. நானும் அதை மறந்துவிட்டேன். ஒரு வார இறுதிநாள், நண்பர்களுடன் மகாவலி ஆற்றங்கரையில் பொழுது போக்கிவிட்டு, அன்று இரவு நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென யாரோ கதவை தட்டுவது போல் இருந்தது. களைப்பாக இருந்தாலும், ஓரளவு என்னை தேற்றிக்கொண்டு, கதவை திறந்தேன். அங்கே, தேவலோக ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போல அழகிய ஒப்பனைகளுடன், கண்ணை கவரும் அழகு எழிலுடன், ஓரு நங்கை நின்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. திகைத்தே விட்டேன்! " பெண்ணுக்கு அழகு செய்ய பொட்டிட்டுப் பார்ப்பது" என்பது தமிழரின் ஒரு வழக்கு!, என்றாலும் இவள் நெற்றியில் அப்படி ஒரு பொட்டும் இல்லை. ஆனால் இயற்கையான வனப்பும், வசிகரமும் நிறைந்து இருந்தாள். கருங்குழல் சரிந்து விழ, விரிந்த கயல் விழிகள் மண்ணோக்கி பின் நாணம் விடுபட்டு வாள் வீச்சையும், வேல் பாய்ச்சலையும் மழுக்கிவிடும் பார்வையால் என்னை பார்த்தாள்!. இல்லை இல்லை கொன்றாள்!! வயிரமணிக் கழுத்து, துடித்த மார்பு, துலங்கு கரம். இவைகளுக்கு துணையாகும் தோள். கைம்மணம் காட்டும் காந்தள் விரல்கள், இல்லாதது போல இருக்கின்ற மெல்லிடை ... எப்படி நான் அவளை சொல்வேன்!! அவள் என் வியப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எதோ நாம் பலநாள் பழகிய நண்பர்கள் போல், எந்தவித அச்சமும் இன்றி, புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தாள். வந்ததும் வராததுமாக எங்கே என் ஐந்து ரூபாய் என்று கேட்டு, என் அறையில் அதை தேடவும் முற்பட்டாள். நான் மலைத்தே விட்டேன்! பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு நேர் சந்தித்ததில் எனக்கு ஆனந்தம் தான், என்றாலும் நான் இப்படி நடக்கும் என என்றும் எதிர்பார்க்க வில்லை. தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி கலகல பேச்சால் நெஞ்சைப் பறித்தவள், எப்படியோ அந்த ஐந்து ரூபாயை எடுத்து விட்டாள். அவ்வளவு தான், துள்ளி குதித்தாள் சந்தோசம் தாங்காமல். என்றாலும் என் நெஞ்சம் இன்னும் திக்குத்திக்கு என துடித்துக்கொண்டு தான் இருந்தது. கைகால்கள் எனோ ஓடவில்லை. ஆனால் அவளோ தரதர என்று என்னை இழுத்து, படபட என இமைகள் கொட்ட, கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி, சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு, சரசரவென்று துள்ளி ஓடி விட்டாள்!! நான் அவளை எட்டிப்பிடிக்க கையை ஓங்கினேன். ஆனால் அது என் தலைமாட்டுக்கு மேல் தொங்கிய ஒரு படத்தை தட்டி விட்டது தான் மிச்சம்!! என்னை கொஞ்ச நேரம் கதிகலங்க வைத்து இன்பம் மூட்டியது 'கனவில் வந்த நங்கை' என்று படம் நிலத்தில் விழுந்து உடையும் பொழுது தான் உணர்ந்தேன்!! "மஞ்சள் நிலாவில் கொஞ்சம் அயர்ந்தேன் மஞ்சத்தில் நெருங்கி நங்கை வந்தாள்! நெஞ்சை பறித்தாள் அன்பை கொட்டினாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள்!!" "துஞ்சிய கண்கள் அகல விரிந்தன பஞ்சாய் மிதந்து மறைந்து விட்டாள்! நெஞ்சம் வருடிய கள்ளிக்கு ஏங்குகிறேன் எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது தாண்டி எண்பது வரவோ ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. பின்ன, அண்ணை முன்னரங்கில் நின்று போர் புரிந்தவர் பிள்ளைகளை போராட அனுப்பியவர் முதல் வெடி வெடிக்கும் முன் ஒடி வராதவர் போர் முடிந்த பின் எஞ்சிய போராளிகளின் வாழ்வுக்காக கடுமையாக பாடுபடுகின்றவர்... இல்லையா பின்ன
  21. சிவசேனை என்பது தமிழரை பிரிக்க இந்தியாவால் களமிறக்கப்பட்ட குழுவினர் என்பதை இலங்கையில் உள்ள சாமானியர்களே உணரத் தலப்பட்டுவிட்டனர் என்பதை மேலேயுள்ள செய்தி காட்டுகிறது. ஆனால் இந்த விடயத்தில் சில பல புலம்பெயர்ஸ்,....... ....... ☹️
  22. இது நடந்திருந்தால் நிச்சயமாக மேம்பட்ட நிலையில் இருந்திருப்போம். இப்போது, மீள முடியாத‌ ஆளத்தில்க் கிடக்கிறோம். ஆனால், புலிகளை மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே எவற்றையுமே மீளப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா? அக்காலத்தில் தமிழினத்திற்காக தம்மால் இயன்றதை அவர்கள் செய்தார்கள். எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாமே சரியானவைதானா என்பது விவாதத்திற்குரியது. இறுதி வருடங்களில் நடந்த நிகழ்வுகள் எமது முடிவிற்குக் குறிப்பிடத் தக்க பங்கினையாற்றின என்பதையும் மறுக்கவில்லை. ஆனால், எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இப்போரைக் கையாண்டது அப்பட்டமான உண்மை. அதற்கெதிராக எம்மால் செய்யக்கூடியவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதே எனது எண்ணம். ஒன்றுமட்டும் உண்மை. தமிழர்கள் போராட்டத்தினை 80 களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தபோது அது ஆரம்பிக்கப்படத் தேவையாக இருந்த காரணங்களை விடவும் இப்போது அதிகளவான காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, எமது மக்களின் விடிவிற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். புலிகளை விமர்சிப்பதால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது.
  23. பட மூலாதாரம்,KANYIRNINPA JUKURRPA MARTU RANGERS கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 11 ஏப்ரல் 2024 உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது. இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் உள்ளது. இதற்குச் சிறிய வாலும், துடுப்பு போன்ற கைகளும் உள்ளன. இது மறைந்து வாழும் தன்மை கொண்டதால், மிக அரிதாகவே தென்படுகிறது. இந்த விலங்கினத்தில் மொத்தம் எத்தனை இருக்கின்றன என்று அதிகாரிகளுக்கே தெரியாது. கடினமான பாலைவனத்தில் இருப்பதாலும், மறைந்து வாழ்வதாலும், இவ்விலங்கு ஒரு தசாப்தத்தில் வெகு சில தடவைகளே மக்களுக்குத் தென்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் பெரும் மணல் பாலைவனம் எங்கு தென்பட்டது? தற்போது இவ்விலங்கு, ஆஸ்திரேலியாவின் பெரும் மணல் பாலைவனம் (கிரேட் சாண்டி டெஸர்ட் - Great Sandy Desert) எனும் பகுதியின் உரிமையாளர்களான கன்யிர்னின்பா, ஜுகுர்பா மர்து பழங்குடி மக்கள் கண்டிருக்கின்றனர். இவர்கள் இந்நிலத்தின் உரிமையாளர்கள். தங்கள் கலாசார அறிவைக்கொண்டு இப்பகுதியைக் கண்காணித்துக்கொள்ளும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாஇவ்ன் பெர்த் நகரிலிருந்து 1,500கி.மீ தொலைவில் இருக்கும் இந்தப் பாலைவனத்தில் இப்பழங்குடியினர் வேலை செய்துகொண்டிருந்த போது இவ்விலங்கினைக் கண்டனர். வன உயிரி நிபுணரான காரெத் கேட், இவ்விலங்குகளைப் பார்ப்பது மிக அரிதானதனால், இவற்றின் இருப்பே பல மக்களுக்கு மர்மமாக இருக்கிறது என்றார். “இந்த விலங்கைக் கண்ட ஒருவருக்கு இது என்னவென்றே தெரியவில்லை. அவர் இதனை ஒரு கினி பன்றியின் குட்டி என்று நினைத்துவிட்டார்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தார்னி டெவில் (thorny devil) எனப்படும் தோலில் முட்கள் நிறைந்த பல்லியினம் பாலைவனத்தின் வினோத விலங்குகள் நிலத்தில் வளைபறித்து வாழும் இந்த விலங்குகள் மணற்குன்றுகளுக்குள் வசிக்கின்றன. மிகக்குறைவான நேரத்தையே தரையின்மீது செலவிடுகின்றன. “இவை மணலில் கிட்டத்தட்ட நீந்திச் செல்கின்றன. குழிகள் மற்றும் அகழிகளைத் தோண்டி இவை தங்கள் வளைகளுக்குச் சென்றடைகின்றன,” என்றார் காரெத் கேட். இந்த விலங்கைப் பற்றி இதுவரை மிகச் சொற்பமாகவே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிரது. அதனால்தான் ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக இவ்விலங்கு தென்படுவது ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலைவனத்தில் அதிகளவில் உயிரினங்கள் இல்லை என்று பலரும் நினைக்கின்றனர், என்கிறார் கேட். “ஆனால் பாலைவனங்கள் பல விசித்திரமான விலங்குகளால் நிறைந்துள்ளன,” என்கிறார் அவர். உதாரணமாக, பில்பி (bilby) எனப்படும் பெரிட காதுகளுடைய முயல்போன்ற விலங்கு. இது தனது காதுகள் வழியே வெப்பத்தை வெளியிடுகிறது. மற்றொன்று, தார்னி டெவில் (thorny devil) எனப்படும் தோலில் முட்கள் நிறைந்த பல்லியினம். இது தனது மேனி முட்களின் உதவியோடு தண்ணீரை தனது வாய்வரை இழுத்து அருந்துகிறது. இப்படி, பாலைவனத்தில் வாழும் விலங்குகள் தங்கள் விசித்திர குணங்களின்மூலம் கடினமான சூழ்நிலையில் வாழப் பழகிக்கொண்டன. “பாலைவனத்தின் உயிரினங்களை வேறு ஓரிடத்தில் பார்த்தால், அவை என்னவென்று ஹெரியாதவர்களுக்கு அவை மிகவும் வினோதமாகத் தெரியும்,” என்கிறார் கேட். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cjq53k21898o
  24. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/
  25. அமெரிக்கா மட்டுமல்ல தமிழர்களாகிய நாமும் அப்படித்தான். 1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக மூச்சசுகூட விடவில்லை. ஏன்? 1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக மூச்சு கூட விடவில்லை. ஏன்? சுயநலம். நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.
  26. சுடுத் தண்ணீர்ச் சமைச்சிருக்கேன்...
  27. நானும் கேள்விப்பட்டேன்….மாதம் மும்மாரி பொழிந்ததாம்…. கோழிகள் எல்லாம் தங்க முட்டை இட்டதாம்…. புல்லை போட்டால் நெல்லு விளைந்ததாம்… நெல்லை போட்டு….சோறாகவே அறுவடை செய்தார்களாம்…. எல்லாம் குலசாமி இருக்கும் மட்டும்தான்.
  28. கார்த்திக் எனும் பெயரில் எனக்கும் ஒரு பேரன் இருக்கிறான். வடைப் பாட்டு அருமை.
  29. ஏழரையிலும். டபிள். திரில்,... ....என்று வகைகள் உண்டா?? ஆண்களுக்கு. ஏழரை நடக்கும் போது திருமணம் நடக்கும் என்றால் அது உண்மையான ஜோதிடம் தான் 😀
  30. 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி என்று எழுதினேன் இன்னொரு க‌ள‌ உற‌வு என் கூட‌ ம‌ல்லுக் க‌ட்டினார் இவ‌ரை எப்ப‌டி இப்ப‌டி சொல்லலாம் என்று......................2000ம் ஆண்டு கூட‌ த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் ஆன‌ தினம‌ல‌ர் தின‌க‌ர‌ன் தின‌ம‌னி போன்ற‌ ப‌த்திரிகைக‌ள் தான் இணைய‌த்தில் அதிக‌ம் வாசிப்பேன் அப்போது வீர‌ப்ப‌னை ப‌ற்றி ந‌ல்ல‌ மாதிரி வ‌ருவ‌தில்லை.........................பிற‌க்கு ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தை பார்த்த‌ பிற‌க்கு தான் வீர‌ப்ப‌னின் உண்மையான‌ வ‌ர‌லாற்றை தெரிந்து கொண்டேன் அதில் இருந்து வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு அதிக‌ க‌ருணை வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் அதிக‌ பாச‌ம்.....................ராஜிவ் காந்தி செய்த‌து எல்லாம் முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் என்று வீர‌ப்ப‌ன் சொன்ன‌ அனைத்தையும் ந‌க்கிர‌ன் கோபாலு காணொளி மூல‌ம் வெளியிட்டார்....................அதுக்கு பிற‌க்கு தான் தெரிந்த‌து இப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ ம‌னித‌னையா கெட்ட‌வ‌ர் போல் சித்த‌ரித்தார்க‌ள் ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ள்......................வீர‌ப்ப‌ன் வாழ்ந்த‌ ஊரில் இப்ப‌வும் ம‌க்க‌ள் வீர‌ப்ப‌னை புக‌ழ்ந்து தான் சொல்லிகின‌ம் வீர‌ப்ப‌ன் இருந்த‌ போது காவேரில‌ இருந்து த‌மிழ் நாட்டுக்கு த‌ண்ணீர் தொட‌ர்ந்து வ‌ந்திட்டே இருந்த‌தாம் வீர‌ப்ப‌னின் ம‌றைவுக்கு பிற‌க்கு காவேரி த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை பூதாக‌ர‌ம் ஆகி விட்ட‌து வீர‌ப்ப‌ன் அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு எவ‌ள‌வோ ந‌ல்ல‌து செய்து இருக்கிறார் ................வீர‌ப்ப‌னின் ம‌க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சார்பாக‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாள‌றா நிக்கிறா........................கிருஷ்ணகிரி தொகுதியை வெல்ல‌க் கூடும் அல்ல‌து இர‌ண்டாம் இட‌ம் வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்............................
  31. ஒரு விடயத்தை தெளிவாக, பலருக்கும் விளங்குவது போல சொல்வதில் இவருக்கு சின்ன சிக்கல் இருக்கின்றது. இவருடைய வேறு சில பேச்சுகளையும் கேட்டிருக்கின்றேன். நான் நினைக்கின்றேன் இவர் தான் அப்பொழுது வாசித்து, அறிந்து கொண்டிருக்கும் வேறு சில விடயங்களையும் இவரின் அன்றாட பேச்சில் கலந்து விடுகின்றார் என்று. பெரும்பாலும் ஒரு தேவையும், தொடர்பும் இல்லாமல்.
  32. தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.
  33. Chai Time at Cinnamon Gardens - தெய்வீகன் ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் இந்துவின் வெளியான முழுமையான கட்டுரை) காலனித்துவ ஆக்கிரமிப்பின் வழியாக உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தியதன் வழி உருவான நவ - ஆஸ்திரேலியா என்ற பெருந்தேசம் எழுபதுகள்வரை நிறவாதப் பெரும் திமிரோடு தன்னை உலக அரங்கில் பெருமையோடு முன்நிறுத்திய நாடாகும். அதன்பின்னர், உருவான சில கனிவான மாற்றங்கள், அரசாட்சியில் மெல்லிய ஜனநாயக விழுமியங்களைத் தூவத்தொடங்கியது. ஆட்சிப் பீடத்தில் ஒட்டியிருக்கும் பழைய கறைகளை கழுவிக்கொள்வதற்கு, நவ-ஆஸ்திரேலிய தேசமானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல புண்ணியங்களைச் செய்து, ஜனநாயகத்தின் வழி பல பூஜை - புனஸ்காரங்களை நடத்திவருகிறது. ஒருபடி மேலே சென்று, ஜனநாயகம் என்றால் என்ன தெரியுமா? மக்கள் உரிமை என்றால் எவ்வளவு புனிதமானது தெரியுமா என்று ஏனைய நாடுகளுக்கே பாடங்களைச் சொல்லித்தருகிறது. ஆனால், நவ-ஆஸ்திரேலியாவின் இந்த மாற்றம் உண்மையிலேயே ஆத்மார்த்தமானதா? பெரும்பான்மை ஆஸ்திரேலியர்களின் மனதில், ஜனநாயகப் பண்பும் மக்களாட்சியின் மாண்பும் நீக்கமற நிலைக்கவேண்டும் என்ற தூய சிந்தனையுடன் கூடியதா? ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த - Miles Franklin - இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிக்கொண்டுள்ள சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens என்ற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்கனை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி என்ற கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டத்துறையில் கற்றுத் தேர்ந்து, தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். தற்போது, தலைநகர் கன்பராவில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளோடு வசிக்கிறார். Chai Time at Cinnamon Gardens அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல். Chai Time at Cinnamon Gardens நாவலின் மூலம் சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கிய கேள்வி - "இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு? அதனை யார் தீர்மானிப்பது" எழுபதுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரத்தொடங்கிய பல நாட்டவர்களினதும் வரவால், ஆஸ்திரேலிய தேசம் புதிய பரிணாமத்தை எட்டத்தொடங்கியது. அதன்பிறகுதான், ஆஸ்திரேலியா பல் கலாச்சார விழுமியங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் பரந்துபட்ட பண்பாட்டு ஞானத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறி வந்த சமூகங்களின் குற்ற உணர்வு - எல்லா மேலைத்தேய நாடுகளைப்போலவும் - ஆஸ்திரேலியாவுக்கு வசதியான அதிகாரத்தினை கையளித்தது. போகப்போக வரலாற்று ரீதியாகப் புதிய வடிவங்களிலான திமிர்களை அரசுக்கு உருவாக்கியது. அந்தத் தேசிய இறுமாப்பின் வழியாக பல கொடூரமான குடிவரவுக் கொள்கைகள் எழுந்து, காலப்போக்கில் அவை சட்டங்களாகவும் மாறின. அந்த வகையில், வேறு நாடுகளிலிருந்து வந்து குடியுரிமை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ஆஸ்திரேலியா இன்றுவரை அறைகூவிக்கொண்டிருக்கும் தேசிய முழக்கம்தான் "இந்த நாட்டில் நல்ல ஆஸ்திரேலியனாக இரு" (Be an Australian) சங்கரி தனது நாவலில், நவ-ஆஸ்திரேலியா பெருமையாகப் பீற்றிக்கொள்கின்ற இந்த அறைகூவலை கிழித்துத் தொங்கப்போட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா தனது பெருமைகளாகப் பேணிவைத்திருக்கும் பல்வேறு பாவனை விழுமியங்களையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்துகின்ற இந்த நாவலை நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் யாரும் பதிப்பிக்க முன்வரப்போவதில்லை என்று தான் முன்னமே எண்ணிக்கொண்டதால், நாவலை முழுமையாக தான் நினைத்தபடி எழுதுவதில் எந்த மனத்தடையும் இருக்கவில்லை என்று நாவல் எழுதிய அனுபவம் குறித்துக் குறிப்பிடும்போது சங்கரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சிட்னிக்கு வருகின்ற கணவனும் (ஸாகிர்) மனைவியும் (மாயா) தங்கள் வயதை ஒத்த முதியவர்களுக்கென, வயோதிபர் இல்லமொன்றை நடத்துகிறார்கள். அங்கு தங்குவதற்காக வருகின்ற பல்வேறு நாட்டு முதியவர்களின் ஊடாகவும் ஆஸ்திரேலிய தேசம் என்பது அவர்களுக்கு உண்மையில் எப்படிப்பட்ட புகலிடமாக அடைக்கலம் அளித்திருக்கிறது என்பதை விரித்துச் சொல்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர் என்று நவ-ஆஸ்திரேலியர்களால் போற்றப்படுகின்ற கப்டன் குக் என்பவரது உருவச்சிலை, இந்த வயோதிபர் இல்ல வளாகத்தில் முன்னர் இருந்திருக்கிறது. அந்தச் சிலையை ஒருநாள், ஸாகிர் அகற்றிவிடுகிறார். அதனைப் பெருங்குற்றமாக அடையாளம் கண்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது அப்பகுதி கவுன்ஸில். இந்தச் சம்பவத்திலிருந்து Chai Time at Cinnamon Gardens நாவல் முற்றிலுமான ஒரு அரசியல் பிரதியாக - ஆஸ்திரேலிய அரசின் போலியான ஜனநாயகப் பெருமிதங்களை சவாலுடன் எதிர்க்கின்ற - வரலாற்று உண்மைகளை மீள ஞாபகமூட்டுகின்ற நூலாக - உருமாறிக்கொள்கிறது. ஆஸ்திரேலிய நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்தரப்படுத்தி விரித்துச் சொல்லும் இந்த நாவல், வரலாற்று ரீதியாக ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் முகங்கொடுத்த பேரவலங்களைத்தான் சிறிலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்துள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோர்த்துச் சொல்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவினை பின் தள்ளிவிட்டு, ஆஸ்திரேலிய வரலாறு என்பது கப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலிய சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்ஸத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்று தனது பூர்வீக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்தினை ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார். நவ-ஆஸ்திரேலிய நிறவாதமெனப்படுவது மிகவும் நுட்பமானது. சாமர்த்தியமாக சனங்களுக்குள் நுழைத்து, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சமன் செய்யக்கூடியது. அந்தவகையில், சட்டங்களை முன்வைத்து சனங்களைப் பயம்காட்டுவது என்பது அந்நிய நாடுகள் அனைத்திற்கும் சம்பிரதாயமான சாகசங்களில் ஒன்று. ஆனால், சங்கரி தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி என்ற காரணத்தினால், நாவலின் முக்கிய இடங்களில், அஞ்சலி என்ற பாத்திரத்தின் வழியாக, ஒரு சட்டத்தரணியாகவே மாறிவிடுகிறார். தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சட்டங்களுக்குள் சடைந்து வைத்திருக்கும் அரசின் லாவகங்களை, தனது தர்க்கங்களால் உடைக்கிறார். முற்று முழுதாக ஒரு அரசியல் நாவலென்றாலும், இலங்கைக் குடும்பமொன்றின் அன்றாட ஆஸ்திரேலிய வாழ்வின் வழியாக, புலம்பெயரிகள் மீதான நுட்பமான தனது அவதானிப்புக்களை சங்கரி சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். சன் டி.வியுடன் லயித்திருக்கும் சிட்னி வயோதிபர் இல்லமொன்றின் அன்றாடங்கள் எப்படியான - புதிரான - நிகழ்வுகளால் - உரையாடல்களால் - துயரங்களால் - எதிர்பார்ப்புக்களால் நிறைந்துகிடக்கிறது என்பதை பல இடங்களில் அங்கதச்சுவையோடு எழுதியிருக்கிறார். ஆஸ்திரேலிய அரசினைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி - அதன் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்ற - எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீண்டகாலமாகக் குடிவரவு அமைச்சின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி, தடுப்பிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை No Friend But the Mountains என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019 ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்திற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட, அவர் தடுப்பிலிருந்து விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரியின் Chai Time at Cinnamon Gardens நாவல், வெறுமனே ஆஸ்திரேலிய அரசின் பல்வேறுபட்ட முரண்பாடான குடிவரவு அணுகுமுறைகளை - அடிப்படை அரசியல் சிந்தாந்தங்களை - பாவனை ஆட்சிமுறையை - கேள்விக்கு உட்படுத்துவது என்பதற்கு அப்பால், சங்கரி என்ற புலம்பெயர்வின் எந்த வலியையும் அனுபவித்திராத ஒரு எழுத்தாளர், மிகக்கூர்மையான அரசியல் பிரதியொன்றை எவ்வாறு எழுதுவதற்கு களத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற பின்னணியையும் - தேவையையும்கூட - வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Michelle de Kretser என்ற பெண்மணி 2013 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டுகளில் இதே Miles Franklin விருதினை வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.theivigan.co/post/10005
  34. உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்? அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா? இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது. அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு. அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா? இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது. இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன். ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம். இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும். அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர். ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது. இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது. இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன்.
  35. அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.
  36. அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....
  37. எதையுமே சாப்பிடக்கூடாது எண்டத எப்பிடிமாறி மாறி சொல்லுறாங்க பாருங்க.. 😋
  38. இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.
  39. தாக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகமாக இவள் தலைவர் மீதும், போராட்டம் மீதும் சேற்றை அள்ளி வார்க்கிறாள் என்று அறியக் கிடைத்தது. இப்படியானவர்கள் அடங்கப்போவதில்லை. அவள்பாட்டில் விட்டிருக்கலாம். ஒரு நாய்க்குக் கல்லெறிந்து, ஊரிலிருக்கும் நாய்களெல்லாம் குரைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவள் சிங்களத்தியாக இருக்கலாம். இவள் பேசும் தமிழ் கொச்சையானது. இவளுக்கும் குடு சித்தாத்துக்கும் தொடர்பிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.
  40. Published By: VISHNU 02 APR, 2024 | 08:19 PM ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவ் மூவரும் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், இதன்படி மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180279
  41. [TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT] இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங்கு’ (Rules-Based International Order) என்று விளித்துக் கட்டமைத்து வந்தன. இதற்கு இன்னொரு பெயர் தாராளவாத சர்வதேச ஒழுங்கு (Liberal International Order). இந்த ஒழுங்கு ஏற்படுத்திய ஆழமான வடுக்களில் ஒன்றே தமிழீழ மெய்நடப்பு அரசு மீதான 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு. ஒரு துருவ உலக ஒழுங்கு (unipolar world order) தனிப்பெரும் உலக ஓட்டமாகக் கோலோச்சிய காலத்தில் (1990-2017) இன அழிப்பு என்ற உச்சக் குற்றத்தை எங்கு அனுமதிப்பது, எங்கு மறுப்பது, எங்கு ஒளிப்பது என்பதை அமெரிக்கா தீர்மானித்து வந்தது. யூதர்கள் மீது நடைபெற்ற பெருங்குற்றத்தோடு ஏனைய இன அழிப்புகளை ஒப்பிட இயலாது என்ற மன நிலையை அரசியல் சியோனிஸ்டுகள் கொண்டுள்ளனர். இதனால் இந்தச் சொல்லை வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் ஒருபுறம் இயங்கிவந்தனர். மறுபுறம், மேற்குலக தாராளவாத மேலாண்மை (Liberal Hegemony) எனும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்த அணிவகுப்பானது, தனது தேவைக்கேற்ப, சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னிய மக்களின் அவலத்திலும், மியான்மாருக்கு எதிராக ரொஹங்கியா மக்களின் அவலத்திலும், சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பு என்ற பார்வையில் குறித்த குற்றங்கள் எடுத்தாளப்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் இடமளித்தது. ஆனால், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைப் பேசாப்பொருளாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. அமெரிக்காவின் இந்த வெளியுறவுக் கொள்கைக்கு பலத்த அடியைத் தற்போது தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இஸ்ரேல் மீது இன அழிப்பு என்ற அடிப்படையில் வழக்குத் தொடுத்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது தென்னாபிரிக்காவுக்கு முன்னரே தெரிந்த ஒன்று. இருந்தபோதும், அந்தக் கோபத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்ற துணிவை மாறிவரும் உலக ஒழுங்கு அந்த நாட்டுக்கு வழங்கியிருந்தது. இஸ்ரேல் காசாவில் புரிவது இன அழிப்பு அல்ல என்றும், அவ்வாறான பார்வையில் தென்னாபிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுத் தகுதியற்றது (meritless) என்றும் கருத்து வெளியிட்ட அமெரிக்காவுக்கு அந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை சர்வதேச நீதிமன்று ஏற்றுக்கொண்டுள்ளமை, ‘விதிகள்-சார்ந்த சர்வதேச ஒழுங்கு’ என்ற கட்டுக்குள் இன அழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டிய சர்வதேச நீதி இனிமேலும் முடக்கப்பட முடியாதது என்பதை முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லிவைத்துள்ள மகத்தான நகர்வாகும். கனடா நாட்டின் மொன்றியலில் இருந்து பலஸ்தீனிய பகுப்பாய்வாளர் மொயின் ரபானி 2024 ஜனவரி 27 அன்று யூரியூப் ஒளியலை நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்: உலக ஒழுங்கு மாறிவருவதால் ஏற்பட்டுள்ள சூழலில் தனது நலன் சார்ந்த பலப் பரீட்சையாக மட்டும் தென்னாபிரிக்கா இந்த வழக்கை முன்னெடுக்கவில்லை. உண்மையில், இதற்கான நெறியமைக்கும் முன்தீர்ப்பு (precedent setting) மாற்றம் – அதாவது சர்வதேசச் சட்டத்தில் வழமைச் சட்டமாக (customary law) மாறிய நிகழ்வு – கம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாடு பதினோராயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மியன்மார் அரசு மீது ரொஹிங்யா மக்கள் மீது மியன்மார் இராணுவம் புரியும் இன அழிப்புத் தொடர்பாகத் தொடுத்த வழக்கில் அனைத்து அரச தரப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக சர்வதேச சட்டம் வழங்கும் Erga Omnes partes என்ற கடப்பாட்டை நிறைவேற்றும் பொறுப்பு என்ற அடிப்படையில், ஒரு முக்கிய மைற்கல் நிகழ்வாக, நான்கு வருடங்களுக்கு முன்னர் 2020 ஜனவரி 23 அன்று நிறுவப்பட்டுவிட்டது. ரொஹிங்யா இன அழிப்பு வழக்குத் தொடர்பான 23 ஜனவரி 2020 அல் ஜஷீரா ஒளிபரப்பு நிகழ்ச்சியிலிருந்து: TamilNet article (23 December 2019): Tamils learning lessons from ICJ-case against Myanmar, ICC-investigation on Israel மியான்மார் மீது கம்பியாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அடுத்ததாக பலம் பொருந்திய இஸ்ரேல் மீது ஆபிரிக்கக் கண்டத்தின் முக்கிய நாடான தென்னாபிரிக்கா அதே நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் சர்வதேசச் சட்டம் சார்ந்த இந்தப் படிமை மாற்றம் (paradigm-shift) கெட்டியாகியுள்ளது. அது மட்டுமல்ல, குறித்த நகர்வுக்கான அறம் நெல்சன் மண்டேலாவின் நிலைப்பாட்டோடு தொடர்புபட்ட விடுதலை அரசியலின் நீட்சியுமாகும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. பலஸ்தீனம் விடுதலை பெறாமலும், கிழக்குத் தீமோர், சூடான் உள்ளிட்ட உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் சிக்கல்கள் தீர்த்துவைக்கப்படாமலும், தென்னாபிரிக்க விடுதலை முற்றுப்பெறாது என்று நெல்சன் மண்டேலா 1997 இல் வெளிப்படுத்தியிருந்த நிலைப்பாடு இதற்கான சான்று: “But we know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians; without the resolution of conflicts in East Timor, the Sudan and other parts of the world.” (மூலம்: 04 டிசம்பர் 1997 - Address by President Nelson Mandela at International Day of Solidarity with Palestinian People, Pretoria) இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான பின் அமெரிக்காவுக்கு நெல்சன் மண்டேலா சென்றிருந்தபோது, 11 பெப்ரவரி 1990 அன்று மேற்கொண்ட வெளிப்படுத்தலும் இத்தோடு ஒருசேர நினைவுபடுத்தி நோக்கப்படவேண்டியது: ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் போரை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மனிதாபிமான அவலம் என்றும், இரண்டு தரப்புகள் இழைத்த சர்வதேசக் குற்றங்கள் என்றும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் மட்டுப்படுத்தியது. அதே அமெரிக்கா, பலஸ்தீனத்தின் காசா மீதான இன அழிப்புப் போர் தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்புச்சபையை வீற்றோ மூலம் முடமாக்கிவந்துள்ளது. இந்தப் பின்னணியில் தான், மறைந்த நெல்சன் மண்டேலாவின் வழிவந்த தென்னாபிரிக்கா எந்தவொரு இஸ்லாமியத் தேச அரசும் செய்ய முன்வராத அளப்பரிய துணிவோடும் ஆற்றலோடும் உலக மனச்சாட்சியை ஆழமாகத் தொடும் தனது நகர்வை சர்வதேச நீதிமன்றில் 2023 டிசம்பர் 29 ஆம் நாள் முன்னெடுத்தது. ஆபிரிக்க நோக்கு நிலையில் இருந்து இஸ்லாமிய நாடுகளை நோக்கி முன்வைக்கப்படும் ஒளியலைப் பார்வை ஒன்று வருமாறு: South Africa's application instituting proceedings against Israel at ICJ இதன் விளைவாக, 2024 ஜனவரி 26 அன்று வெளியான இடைக்கால நடவடிக்கைகள் (provisional measures) தொடர்பான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்போடு தென்னாபிரிக்காவின் வழக்கு இன அழிப்புக் குற்றங்களை அணுகும் உலகளாவிய சட்ட அடிப்படையில் விசாரணைக்குத் தேவையான நம்பத்தக்க இன அழிப்புக் குற்றச்சாட்டாகக் (plausible genocide) கையாளப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ICJ verdict on Provisional Measures இவ்வாறு சர்வதேச சட்டத்தில் இன அழிப்புத் தொடர்பான படிமை மாற்றம் ஏற்படுகையில், சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட வேண்டிய படிமை மாற்றம் தொடர்பான ஈழத்தமிழர் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கைத் தீவில் ‘இரண்டு-அரசுத் தீர்வு’ (Two-State Solution) என்ற விடயத்தை இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா பேசாப்பொருளாக்கியது ஏற்கனவே தெரிந்த உண்மை. ஒரு துருவ உலக ஒழுங்கின் உச்சத்தின் போது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றால் ஒன்றில் விடுதலைப் புலிகளே தாமாக தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படவேண்டும் அன்றேல் அவர்கள் அழியவேண்டும் என்று பிராந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் ஒத்திசைந்து செயற்பட்டன. பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யசீர் அரபாத்துடன் இஸ்ரேல் 1993 ஆம் ஆண்டு உடன்படவேண்டியிருந்த ஒஸ்லோ உடன்படிக்கைகளை இஸ்ரேல் தனது நகர்வுகள் மூலம் ஆப்பு வைத்து மடைமாற்றம் செய்தது. அதே போன்ற மடைமாற்றத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சமாதான நடவடிக்கை திணிக்க முயன்றபோது, அதை மிக நுட்பமாக மறுத்து இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (ISGA) என்ற திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். Tigers release proposal for Interim Self Governing Authority (01 November 2003) LTTE issues Communiqué in Oslo (09 June 2006) TamilNet releases LTTE documents of 2006 talks (31 December 2011) ஒஸ்லோ உடன்படிக்கையை எப்படித் தான் அமெரிக்க உதவியுடன் தடுத்துக்கொண்டதாக பந்தய ஓட்டக் குதிரையின் வாயிலிருந்து நேரடியாக வெளிப்பட்ட சாட்சியம் போல பெஞ்சமின் நேத்தன்யாகு 2001 ஆம் ஆண்டு சொல்லியது: இதைப்போலவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையை மிலிந்த மொராகொட போன்றோர் அமெரிக்க உறவோடு ஒருதலைப் பட்சமாக மடைமாற்றம் செய்தனர். Wikileaks US Cable: Ranil Wickramasinghe tilts towards US, Moragoda's startling proposal to U.S. officials (29 May 2003) ஜோர்ஜ் புஷ் தலைமயிலான அமெரிக்காவினதும், சோனியா காங்கிரஸ் தலைமையில் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டு பிரதமராகிய போதான தீக்ஷிற் மீள்வருகையுடனான இந்தியாவினதும் ஒன்றித்த ஆசி இதற்கு அடித்தளமிட்டது. இதன் விளைவான முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழருக்கான அரசியற்தீர்வு எப்போதோ கிழிந்து உக்கிப்போன 13 ஆம் திருத்தத்தில் மட்டுமே இன்றும் தொங்குவதாக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் – அவை இணைந்து இயங்கினாலும் சரி தனித்தனியே இயங்கினாலும் சரி – போதித்து வருகின்றன. இதிலே பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தற்போதைய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜய்சங்கர் (தீஷித்தோடு 1987 இல் கடமையாற்றியவர்) ஈழத்தமிழர் தொடர்பாகக் கையாளும் வெளியுறவுக்கொள்கையும் –காங்கிரஸ் விட்ட அதே வழியில் பயணித்து – ஈழத்தமிழர்களுக்குப் பாதகமாகச் செயற்பட்டுவருகிறது. இந்தப் பின்புலத்தில், எவ்வாறு பலஸ்தீன மக்களுக்கான வாக்குறுதியாக ஐ.நா. வில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு-அரசுக் கொள்கை ஒருதுருவ உலக ஒழுங்கில் வெற்றுப் பேச்சாக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுத், திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீனர்களின் தாயகம் சூறையிடப்படுகிறதோ, அதைப் போல, தமிழீழ மெய் நடப்பு அரசு அழிக்கப்பட்ட பின் ஈழத் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படைகள் சிதைக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சிதைத்து இரண்டு இயக்கங்களை பெரும் பிளவாக்கி மோதவிட்ட சூழ்ச்சியை எவ்வாறு இஸ்ரேல் செய்து முடித்ததோ அதைப்போல தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உச்ச நிலையிலும் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை இஸ்ரேல் வழங்கியது. ஏதோ, முள்ளிவாய்க்கால் தொடர்பாக இஸ்ரேல் இலங்கையிடமிருந்து கற்றுக்கொண்டு காசாவில் இன அழிப்புப் போரை முன்னெடுப்பதாகச் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மை அதுவல்ல. மாறாக, முள்ளிவாய்க்காலைத் தனக்குத் தேவையான முன்னோடிப் பரிசோதனைக் களமாக இலங்கையூடாக இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது என்பதே நடைமுறையில் நடந்தேறிய விடயம். அதுமட்டுமல்ல, இலங்கை அரசு ஆரம்ப காலத்தில் இருந்து இஸ்ரேல் மாதிரியை ஈழத்தமிழர் தொடர்பாக நகலெடுத்துப் பின்பற்றிவருகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஜோன் பில்ஜர் (1939–2023) போன்ற ஒரு சில உலக ஊடகவியலாளர்கள் இதை 2009 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருந்தனர். Tamils need to be heard - John Pilger (17 May 2009) இன்றுவரை மத்திய கிழக்குத் தொடர்பாகப் பேசாப் பொருளாயிருந்த இரண்டு-அரசுத் தீர்வு என்பது தற்போது மீண்டும் உலகளாவிப் பரவலாகப் பேசப்படும் பேசுபொருளாகியுள்ளது. இதைப் போல ஈழத்தமிழர் தேசம் குறித்தும் இரண்டு அரசுத் தீர்வு என்பது மீண்டும் பேசுபொருளாக்கப்படவேண்டும். ஒரு துருவ உலக ஒழுங்கு நலிவடைந்து பல்துருவ ஒழுங்கு உருவாகிவரும் சூழலில் அமிலப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சர்வதேசச் சட்டமும் (International Law) உலக மக்களின் கருத்தை உதறித்தள்ளிவிடமுடியாது கருத்திற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ள சர்வதேச அரசியலும் (international politics) படிமை மாற்றத்துக்கு உள்ளாகிவரும் தவிர்க்கப்பட இயலாத நியதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பயமின்றித் தென்னாபிரிக்காவால் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகவும், எங்கோ தொலைவில் இருக்கும் கம்பியாவால் மியான்மாருக்கு எதிராகவும் ஏற்படுத்த இயலுமாயுள்ள Erga Omnes partes கடப்பாட்டை இலங்கை தவிர்ந்த 152 தேச அரசுகளில் ஒன்றால் ஈழத்தமிழர் தொடர்பாக, இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டுமல்ல தேவையானால் சீனாவையும் ரஷ்யாவையும் கூட மீறிச் செய்ய முடியும். 153 State Parties to Genocide Convention as of April 2022 ஜெனீவாவிலிருக்கும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இன அழிப்பு நீதி தொடர்பான கோடிகாட்டல்கள் எதுவும் வெளிவராது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடுத்துவந்துள்ளன. ஆனால், அங்கு சாதிக்க இயலாததை ஐ.நா. உயர் நீதிமன்றம் என்று வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றில் சாதிக்கச் செய்யத் தேவையான வழி முறைகளை ஈழத்தமிழர் மேற்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனையை பிரபல சர்வதேசச் சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் காலம் தவறாமல் அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறிய போதும் தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவை அணுகுமுறைக்குள் அல்லது எதுவித பலனும் தர இயலாத வேறு கற்பனைகளுக்குள் தமது வளங்களை, அதுவும் அவற்றைக்கூட மிகவும் மட்டுப்படுத்தி, பயன்படுத்திவந்துள்ளன. Boyle prefers IIIM demand over ICC-referral, says specific reference to genocide essential (07 January 2021) Professor Boyle calls for BSD Campaign against genocidal Sri Lanka (28 October 2018) Stopping Sri Lanka's genocide at ICJ, UN- Prof. Boyle (11 March 2009) இருப்பினும், சாத்தியமில்லை என்பதைச் சாத்தியமாக்குவதே விடுதலைப் போராட்ட அரசியல் என்பதை உணர்ந்து இனியாவது நல்ல ஆலோசைனைகளத் தரம்பிரித்து இனங்கண்டு நம்பிக்கை பெற்றுச் செயலாற்றவேண்டும். பதினான்கு வருடங்களாக அறிந்தோ அறியாமலோ செயற்பாடின்றி இருந்த ஈழத்தமிழர்களும், கண்மூடித்தனமாகச் செயற்பட்டுத் தவறாகப் பயணித்துப் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களும், மேற்கினதும் இந்தியாவினதும் இணைந்த அல்லது வெவ்வேறான பலதரப்பட்ட சூழ்ச்சிகளுக்குப் பலியாகியுள்ளோரும் தம் தவறுகளை உணர்ந்து தோல்வி நிலையில் இருந்து வெளிப்பட்டு தம்மைத் தாமே தடவழித் திருத்தத்துக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டும். அதேவேளை, ஏற்கனவே காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பலனளிக்கவிடாது தடுத்த உட்காரணிகளால் நலிவடைந்தோர் மீண்டும் உரம்பெற்று இறுதி ஆட்டத்திற்கு எழுந்தாக வேண்டிய வரலாற்றுத் தருணத்துக்குத் தம்மைத் தயார்ப்படுத்தவேண்டிய காலம் இது. மாறும் உலக ஒழுங்கு தானாக ஈழத்தமிழருக்காக எதையும் கொண்டுவந்து தராது. வாளாவிருந்து ஈழத்தமிழர் எதையும் சாதிக்க இயலாது. ஆதலால், உலக ஒழுங்கின் மாற்றத்தில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தக்கதாக தேசியக் கொள்கை நிலைப்பாட்டை நங்கூரமிட்டு நிலைப்படுத்திக்கொள்வது வரலாற்றுக் கடமையாகிறது. * * * முள்ளிவாய்க்காலின் பின்னான 14 வருடங்களின் பின்னர் தற்போது இந்த தாராளவாத மேலாதிக்கம் தோற்க ஆரம்பித்துள்ளமை மனத் திருப்தியையும் உற்சாகத்தையும் அளிக்கும் நற்செய்தியாகும். அமெரிக்காவின் தாராளவாத மேலாதிக்கத்தின் உலகளாவிய கதை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதை ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களும் அரசியலாரும் கருத்துருவாக்கிகளும் சமகால உலகின் முதன்மையான நடப்பியல்வாத (Realism) அரசறிவியலாளரும் பேராசிரியருமான ஜோன் மியஸ்ஹைமர் என்ற அமெரிக்கர் வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்த பின்வரும் மூன்று கருத்துரைகளையும் கிரகிப்பது மிகவும் பலனளிப்பதாய் இருக்கும். ஒருவகையில், மியஸ்ஹைமரை விட உலகில் எவராலும் இதை மேலும் தெளிவாகவும் அழகாகவும் விளக்க இயலாது எனலாம். நடப்பியல்வாதியான இவரது விரிவுரைகளும் விளக்கங்களும் – இரண்டு அரசுத் தீர்வு தொடர்பான இவரின் மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக்கு அப்பால் – சர்வதேச உறவுகள் என்ற துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளங்கிக்கொள்ளப் பெரிதும் உதவும். 1. மூன்று மாதங்களுக்கு முன்னர் (23 ஒக்டோபர் 2023) இஸ்ரேல் - ஹமாஸ், உக்ரைன் - ரஷ்யா, சீனா தொடர்பாக அவுஸ்திரேலிய சுயாதீன ஆய்வுகளுக்கான மையத்தில் (CIS) மீயஸ்ஹைமர் வழங்கிய விரிவுரை: 2. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் (29 ஒக்டோபர் 2007) அமெரிக்க இஸ்ரேல் அணைவுக் குழுவின் (Israel Lobby) ஆபத்தை விளக்கும் நூலின் வெளியீட்டோடு மீயஸ்ஹைமர், ஸ்டீபன் வோல்ற் ஆகியோர் கேம்பிரிஜ் விவாத அரங்கில் வழங்கிய விரிவுரையும் கேள்வி-பதிலும்: 3. ஆறு வருடங்களுக்கு முன்னர் (15 நவம்பர் 2017) அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் வழங்கிய தாராண்மைவாத மேலாதிக்கம் பற்றிய 101 விரிவுரை: * * * எதிரிகளை விட இரண்டகர்கள் ஆபத்தானவர்கள் என்பது பல போராட்டங்கள் தரும் பட்டறிவு. ஆனால், இவர்கள் இருதரப்பினரை விடவும் ஈழத்தமிழருக்குள் இருக்கும் "தொடை நடுங்கிகள்" மிகுந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலம் தரும் முக்கிய படிப்பினை. இன்றைய ஈழத்தமிழர் அரசியல், கருத்துருவாக்கம் உள்ளிட்ட செயற்படுபரப்பு தொடை நடுங்கிகளால் நிரம்பி வழிகின்றது. இரு துருவ உலக ஒழுங்கும் அதைத் தொடர்ந்த ஒரு துருவ உலக ஒழுங்கும் ஈழத்தமிழருக்குள் ஏற்படுத்திய பாதகமான உள்ளிருந்தே முடக்கும் நோய் இதுவாகும். சமகால சர்வதேச அரசியலைக் கூர்மையாகக் கிரகிக்கும்போது தான் இந்த நோயின் ஆபத்தான தார்ப்பரியம் புரியும். குறிப்பாக, தாராளவாத மேலாதிக்கத்துக்கும் (Liberal Hegemony), அணைவுக்குழு மனநிலைக்குள்ளும் (Lobbyist mindset) சிறைப்பட்டுள்ள இந்தத் தொடை நடுங்கித்தனத்தின் பிடியில் இருந்து முதலில் ஈழத் தமிழர் விடுதலை பெற வேண்டும். ஆகவே, இந்த நோயின் மூலம் எது என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. குறிப்பாக இதன் சர்வதேச ஊற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உய்த்துணர்ந்துகொள்வது மிகவும் பயன் தருவதாகும். இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு ஈழத்தமிழர் விடுதலைக்குக் குந்தகமாக இருந்துவந்துள்ளது என்பதை ஒப்பீட்டளவில் ஈழத்தமிழர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். இருந்தும், இந்தியா தொடர்பாகக் கூட அமிர்தலிங்கத்தைத் துரோகியாக்கிய இந்திராகாந்தி பற்றிய பார்வையில் ஈழத்தமிழர்களிடையே இன்றும் கணிசமான தெளிவின்மை நிலவுகிறது. இந்தியாவை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் மட்டுமல்ல பட்டறிவும் கொண்டதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விளங்கியது. இந்தியாவால் தனித்து அழிக்கப்பட இயலாத போராட்ட இயக்கமாக அது கூர்ப்படைந்திருந்தது. ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இந்தியாவையும் விஞ்சிய தளத்தில் முள்ளிவாய்க்கால் முடிவை நிருணயித்தது. இந்தப் புவிசார் அரசியல் எவ்வாறு நடைமுறையில் பாரதூரமான வெளியுறவுக்கொள்கையாக இயங்கியது என்பது பற்றிய வரலாற்றுப் புரிதல் பெருமளவு ஈழத்தமிழரிடையே இன்னும் ஏற்படவில்லை. அந்தப் புரிதல் ஏற்படும்போது தான் முள்ளிவாய்க்காலில் சரணாகதியாகாத போராட்டத்தின் கனதியும், அடுத்த கட்டத்துக்கான பொருள்கோடலும் பொருத்தமாக எடுத்தாளப்படும் சூழல் தோன்றும். அமெரிக்காவின் புவிசார் அரசியற் பார்வைகள் பற்றி ஏற்கனவே பலரும் நன்கு அறிந்துள்ளனர். இந்தப் புரிதலுக்கு தமிழீழ விடுதலைப் போரின் உச்சக் காலத்தில் மாமனிதர் சிவராம் பொதுவெளியில் இட்ட அடித்தளம் கணிசமாகப் பங்காற்றியிருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பின் புவிசார், அரசியல் இராணுவ நகர்வுகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு நகர்த்தவல்ல தலைமை ஈழத்தமிழரிடம் இருப்பதை நன்கு உணர்ந்துகொண்ட சிவராம், அரச, அரச சார்பற்ற சக்திகள் தீர்மானித்துவந்துள்ள ஆபத்தான போக்குகளை எதிர்கொண்டு முன்னேறத்தக்க அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது பற்றிய ஆழமான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த போது, சந்திரிகா அரசின் காலத்தில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய அரச புலானாய்வுத் துறையால் அரசியற் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார். சிவராமின் படுகொலைக்குப் பின்னர் கணினியில் இருந்து மீட்கப்பட்டு வெளியான கட்டுரை அவரது புரிதல் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. US's strategic interests in Sri Lanka- Taraki (30 July 2005) தாராளவாத மேலாதிக்க அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்குள் அணைவு அரசியல் மூலம் பலியாகாது ஈழத்தமிழர் விடுதலை அரசியலைக் காக்கும் கருத்தியலை உருவாக்குவதிலும், அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் சியோனிசத்தாலும் இன்ன பிற காரணிகளாலும் ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள தொடை நடுங்கித்தனத்தைப் பிய்த்தெறிவதிலும் இருந்து அடுத்த கட்ட நகர்வு நடைமுறைப்படுத்தப்படவேண்டியது. ***************************************************** தேசியவாதத்துக்கு எதிரான தனது உலகப் பார்வையாற் தூண்டப்பட்டு, இன அழிப்புக்கு எதிரான நேர்மறையான சமய சார்பற்ற முற்போக்குத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆபத்தாக நோக்கி, தான் பின்னிய சர்வதேச தன்னார்வ வலைப்பின்னல் மூலம் மனித உரிமைக்கும் சன நாயகத்துக்கும் உதவுதல் என்ற போர்வையிற் செயற்பட்டு, பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் புலி-எதிர்ப்புவாதத்துக்கு நிதியூட்டம் புரிந்த நிறுவனங்களிற் பல ஜோர்ஜ் சோரோசிடமிருந்து நிதியுதவி பெற்றவை. The Guardian: The George Soros philosophy – and its fatal flaw (06 July 2018) பின்வரும் ஒளியலை விவரணம் ஓர் அமெரிக்க வலதுசாரிப் பார்வையாய் இருப்பினும், இடதுசாரி போல மாயத் தோற்றமளிக்கும் சோரோசை அறியாதவர்கள், அவரின் ஊட்டத்தில் இயங்கும் வலைப்பின்னலை அறிந்து கொள்ளப் பொருத்தமான வகையில் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் இங்கு இணைக்கப்படுகிறது: * * * அமெரிக்காவின் அதிகாரபூர்வ வெளியுறவுக்கொள்கையைக் கணிசமாகத் தீர்மானித்த சியோனிசத்துக்குப் பயன்பட்ட இராஜதந்திரத்தின் சிகரமாயிருந்து அண்மையில் நூறு வயதில் மறைந்த அமெரிக்க யூதரான ஹென்றி கிசிஞ்சரும் அவர் வழி வந்தோரும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிந்து தெளிவதன் ஊடாகவும்; சியோனிசத்துக்கு எதிரான அமெரிக்க யூதராயிருந்த போதும் தனது பொருண்மிய வளத்தையும், கருத்தியலையும், தன்னார்வ வலைப்பின்னலையும் அமெரிக்க அரசு போர்களின் ஊடாகச் செய்த உலகளாவிய அரசாங்க மாற்றங்களுக்கு ஈடாகத் தானும் தனது தாராளவாத மேலாதிக்கப் பார்வையூடாக மேற்கொண்டு இன்றும் தொண்ணூறு வயதுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறிதொரு பேர்வழியான ஜோர்ஜ் சோரோஸின் உலகளாவிய திறந்த வலைப்பின்னல் ஈழத்தமிழர்களுக்குள் வளர்த்த புலி எதிர்ப்பு, தேசியக் கோட்பாட்டு எதிர்ப்பு போன்ற போக்குகளை இனங்கண்டுகொள்வதன் ஊடாகவும்; அமெரிக்க சியோனிச அணைவுக்குழு (AIPAC), அதையும் விஞ்சி சியோனிசத்தோடு விவிலேயப் பிணைப்பில் இருக்கும் அமெரிக்கச் சுவிசேசக அணைவுக்குழு ஆகியவற்றையும் அவற்றின் தன்மைகளையும் சரிவரப் புரிந்து கொள்வதன் ஊடாகவும் இந்தத் தொடை நடுங்கித் தன்மையின் மூலங்கள் ஈழத்தமிழர்களுக்குள் எங்கிருந்து புகுந்துகொள்கின்றன என்பதை அடையாளங் கண்டுகொள்ளலாம். ******************************************************************* ஹென்றி கிசிஞ்சர் பற்றிய சில ஒளியலைப் பார்வைகள்: * * *
  42. சியோனிச யூதர்களுடன் எவ்வாறு அமெரிக்க கிறிஸ்தவ சுவிசேசக அமைப்புகள் ஒன்றித்துள்ளன என்பது பற்றிய ஆழமான பார்வையும் புரிதலும் ஈழத்தமிழர்களுக்குத் தேவை. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழமாகப் பயணித்துவந்துள்ள கத்தோலிக்கர் இந்த விடயத்தில் ஈழத்தமிழர் தேசத்தின் தேர்ந்த கேடயங்களாகத் தொடர்ந்தும் விளங்கமுடியும். மறைந்த சிங்கராயர் அடிகளார், எஸ். ஏ. டேவிட் போன்றோர் ஆரம்பித்துவைத்த முனைப்பில் இருந்து மறைந்த மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப் வரை சுயாதீனமான தளத்தில் நின்றவாறு ஈழத் தமிழர் விடுதலையை நெஞ்சில் சுமந்து பங்காற்றிய கத்தோலிக இயக்கம் மீண்டும் இது தொடர்பில் வலுப்பெற வேண்டும். அமெரிக்காவில் சியோனிஸ்டுகள் கையாளும் அணைவுக்குழு அணுகுமுறையைத் தாமும் நகலெடுத்து அதன் மூலம் அமெரிக்காவின் இலங்கைத் தீவு தொடர்பான வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர்களுக்குச் சார்பாக மாற்றிவிடலாம் என்ற சிந்தனை அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் கணிசமானோரிடம் இயல்பான ஒரு தரகு முதலாளித்துவ மனநிலையாக நிலவிவந்துள்ளது. இந்த மனநிலைப் பீடிப்பின் தாக்கத்தினால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஒரு விடுதலை இயக்கம் இன அழிப்புப் போர் ஊடாக அழிக்கப்படுவதற்கு இவர்களும் ஒருவகையிற் காரணமாயினர் என்பது கசப்பான உண்மை. இஸ்ரேலிய யூதரும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான பிரபல ஊடகவியலாளருமான கிடியன் லெவி 2015 ஏப்ரல் 10 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை: அமெரிக்க கிறிஸ்தவ சியோனிசம் பற்றி அருட்திரு டொன் வாகனர் 06 மார்ச் 2022 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை: அதேவேளை, அமெரிக்க யூதராயிருந்தும் சியோனிசத்துக்கு எதிராகவும் மதசார்பற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களின் முற்போக்குத் தன்மையை இனங்கண்டு ஆதரிக்கக் கூடிய மனப்பாங்கைக் கொண்டவராகவும், அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கிய சிந்தனையாளராகவும் மட்டுமல்ல உலகின் முதன்மை வெளியரங்க நுண்ணறிஞராக மிளிர்ந்து மூப்படைந்திருக்கும் நோம் சோம்ஸ்கியை ஈழத்தமிழர்கள் தகுந்த முறையில் அணுகத் தவறிய தொடை நடுங்கித்தனம் குறித்த அசை மீட்டலும் இங்கு அவசியமாகிறது. அமெரிக்கா ஏன் இஸ்ரேலின் குற்றங்களுக்கு முழுத் துணையாக இருக்கிறது என்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன் நுண்ணறிஞர் நோம் சோம்ஸ்கி கொடுத்த ஆழமான ஒரு விளக்கம்: ஹாமாசின் தாக்குதலைப் புரிந்து கொள்ளலாமே அன்றி, கண்டிக்க இயலாது என்று பியர்ஸ் மோர்கனுக்கு மறுத்துரைத்துப் பதிலடி கொடுத்த பலஸ்தீனருக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களைப் பதிவு செய்தவரும், நோம்ஸ்கி வழி வந்தவருமான யூதப் பேராசிரியர் நோமன் பிங்கெல்ஸ்ரைன்: 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஈழத் தமிழரைப் பீடித்துள்ள தொடை நடுங்கி நோயின் பக்க விளைவுகளைக் களைவதை விடுத்து, நோயின் மூலத்தை அறிந்து அதை மாற்றியமைப்பதே காலத்தின் தேவை. இதற்கான புரிதல்களைப் பெற்று, தொடைநடுங்கித் தனத்தை அறுத்தெறிந்து, கழிவன கழிந்த புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்படுவதற்குரிய அறிவியற் கருத்துருவாக்கம் இன்றி அடுத்த கட்டம் இல்லை. எதிர்வருங்காலத்து ஈழத்தமிழர் தலைமுறை தொடை நடுங்கிகளைப் போலச் சிந்திக்கப்போவதில்லை. அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிக்கும் துணிவுபெற்ற சமூக மனநிலையை மாறிவரும் உலக ஒழுங்கும் விழிப்புணர்வுபெறும் மக்கள் சமூகமும் விரைவாக ஏற்படுத்திவருகின்றன. உக்ரைன் போரோடு அமெரிக்காவின் அநீதியான தாராளவாத மேலாதிக்கம் என்ற வெளியுறவுக்கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக அம்பலமாகிவருகிறது. எவ்வாறு வியட்நாம் போரில் இருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட அமெரிக்க மக்கள் பரப்பில் உருவான கருத்துமாற்றம் பெரிதும் உதவியதோ, அதைப் போல தவறான அமெரிக்க வெளியுறவுக்கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டுவரும் கருத்துமாற்றமும் எதிர்கால மாற்றங்களை ஏற்படுத்தும். மிகப்பலமாக இவற்றை அம்பலப்படுத்திவருபவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க சியோனிசத்தை எதிர்க்கின்ற அமெரிக்க அறிஞர்களாகக் காணப்படுகின்றனர். ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல வெளியுறவுக்கொள்கையின் தவறான தாராளவாத மேலாதிக்கத்தைக் கோட்பாட்டுரீதியாகச் சிதைத்துவருகிறார் பிரபல அமெரிக்க அரசியல் அறிஞர் மியர்ஸ்கைமர். இவரைப்போல, அமெரிக்க இராணுவ வட்டாரப் பின்னணியில் இருந்து அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் காரசாரமாக விமர்சித்து உலகளாவிய கருத்துருவாக்கத் தளத்தில் அமெரிக்கக் காலாட்படையின் முன்னாள் கேணல் டக்ளஸ் மக்ரகரும் அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் முன்னாள் புலனாய்வாளரும் ஈராக் தொடர்பான முன்னாள் ஐ.நா. ஆயுதப் பரிசோதகருமான ஸ்கொட் ரிற்றரும் மிகவும் பிரபலமாகியுள்ளனர். ஸ்கொட் ரிற்றர் (07 நவம்பர் 2023): கேணல் டக்ளஸ் மக்ரகர் (31 ஜனவரி 2024): இவர்களைப் பார்த்து ஆதல் உலக ஓட்டங்களைப் புரிந்து, சற்றேனும் துணிவு பெற்று, ஈழத்தமிழரின் தொடைநடுங்கி அணைவுக்குழுச் செயற்பாட்டாளர்கள் தம்மை முன்னேற்றிக் கொள்ளவேண்டும். அமெரிக்காவிலுள்ள சியோனிச இஸ்ரேல் லொபியும் சியோனிசத்துக்கு மாற்றான யூத பரோபகாரியின் நிதிமூலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கான ஊற்றுக்களாக இருக்கையில், அதே லொபி வழிமுறையை நாமும் எமது மிகச் சொற்பமான வளங்களைப் பயன்படுத்திக் கையாண்டு மாற்றிவிடலாம் என்ற சிந்தனை, அடிப்படையிலேயே கோளாறான சிந்தனை மட்டுமல்ல, கணக்கியல் ரீதியாகத் தப்பான கணக்குமாகும். லொபி வேலைக்குப் புறப்பட்ட ஈழத்தமிழர் செயற்பாட்டாளர் கருத்துரீதியாக எதிர்லொபியாளர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் இதன் விபரீத விளைவாகியுள்ளது. இது தொடைநடுங்கித் தனத்தின் ஆபத்தான தாக்கங்களில் ஒன்று. ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறி மாறிக் காவடி எடுக்கவேண்டியிருந்த ஒரு துருவ உலக ஒழுங்கின் அழிவில் இருந்து ஈழத்தமிழர் விடுதலை அரசியல் புதிய படிமைக்குள் புத்தாக்கத்தோடு அடுத்த நகர்வுகளை விரிக்கவேண்டும். அமெரிக்க, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கத் துணிந்த புதிய தலைமுறை ஈழத்தமிழர் செயற்பாட்டாளரின் வருகை தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும். https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39986
  43. சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.