Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88812
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19667
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20351
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16859
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/20/24 in all areas

  1. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  2. @புலவர், @nunavilan, @suvy, @Eppothum Thamizhan, @விசுகு@புரட்சிகர தமிழ்தேசியன், @சுப.சோமசுந்தரம், @நிழலி, @ரசோதரன், @ஏராளன், @Kandiah57, @பெருமாள், @நியாயம், @satan, @Kapithan, @நீர்வேலியான், @நன்னிச் சோழன், @நந்தன், @MEERA, @தமிழன்பன், @kandiah Thillaivinayagalingam
  3. அப்பாவுக்கும் அன்பு காட்டத் தெரியும்........! 👍
  4. சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video பார்ததேன். அந்த விடியோவில், “திமுக, அதிமுக தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று லண்டனில் உள்ள, நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று தம்பிகளும் கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா? ஆனால் ரசிகர்களாகிய எமக்கு பார்த்து ரசிக்க நல்ல கொமடி. வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள் கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂
  5. இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம். உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை. ”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது. புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை. ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.
  6. போட்டி விதிமுறைகளுக்குள் உட்பட்டுத்தான் பதில்களைப் போட்டிருந்தீர்கள் @புலவர் ஐயா!
  7. வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
  8. நிச்சயமாக @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
  9. நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
  10. பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
  11. பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம் ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  12. # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK
  13. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  14. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  15. ஏன் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே தெரியும் என்று எழுதுவதற்காகவா? என்னைப் பொறுத்தவரை 2022 இல் இருந்த நிலை வராது என்றே எண்ணுகிறேன். வழங்களில் பற்றாக்குறை வந்தாலும் QR கோட்டினை மீண்டும் அமுல்படுத்தி நிலமையை சமாளிப்பார்கள்.
  16. "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !! சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை," சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்கு கிறது: "எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514] நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா?????? முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" [குறுந்தொகை-2] பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, ''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. [குறுந்தொகை-269] சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம். ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்? காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்! ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா? முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல", ஆகவே: "சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டை தான் உண்டு” வட்டுக்கோட்டை இலங்கையில் அல்லவா இருக்கிறது ....சீமான் இலங்கையிலும் அரசியல் செய்கிறாரா??? 🤣🤣🤣 இதை தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் கேட்டால் தானே?? 🤣🤣
  18. சென்னையில் இருக்கும் பிபிசி இதை யாழ்பாண தமிழர்களை கொப்பி பண்ணி கண்டுபிடித்த மாதிரி தெரிகின்றது சொக்லேற் எல்லாம் கன்டோஸ் என்பது போல் தற்காலிக வதிவிட உரிமை, நிரந்தர வதிவிட உரிமை எல்லாமே அமெரிக்கன் கிரீன் காட்😂 நானும் நினைத்தேன் யாழ்பாணத்து தொகுதிகளில் ஒரு 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றார்கள் .அவர்களுக்கே வாக்குக்கு 25 000 கொடுக்க முடியாதே ஜனதொகை வெடிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பல இலட்சங்கள் வாக்குகள் கொண்ட தொகுதிக்கு வாக்குக்கு 25000 கொடுப்பது என்றால் சீமான் எதை சொன்னாலும் நம்புவது என்ற பரவச நிலையை அடைந்துவிட்டனர்.
  19. இவ‌ரின் அருவ‌ருக்க‌ த‌க்க‌ கூத்தை அறிவுள்ள‌ இளைஞ‌ர்க‌ள் இன‌ம் க‌ண்டு வில‌கி இருக்க‌ தான் பாப்பின‌ம் இப்டியான‌ கேவ‌ல‌மான‌ கூத்தை அவ‌தூற‌ 200 கொத்த‌டிமைக‌ள் தான் அதிக‌ம் செய்கிற‌வை....................அவ‌ர்க‌ளின் குருப்பில் இவ‌ரும் இணைந்து இருந்தா ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை ஹா ஹா............................... நேற்று க‌ருணாநிதி குடும்ப‌ம் செய்த‌ அசிங்க‌த்தை எல்லாம் வெளிப்ப‌டையாய் கேட்டேன் ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து சென்ற‌வ‌ர்.................................... இவ‌ர் கூட‌ விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளை மாதிரி சும்மா இருக்கலாம் ஹா ஹா😁.................................
  20. தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂 யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼 ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. மேன் மேலும் சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
  21. "பண்டைய சங்க தமிழரின் உணவு & நீராவி சமையல் எப்ப தமிழர்களிடம் ஆரம்பித்தது மற்றும் இட்டலி, தோசை போன்றவை ஆரம்பித்த இடம்" "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்"[63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை, மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக் கேற்றபடி தயாரிக்கவும் அறிந்து இருந்தது. இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப்பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை. உதாரணமாக, கரியசட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சுடப்பட்ட நிகழ்வை பெரும்பாணாற்றுப்படை, வரிகள் ,377-378 "கூவியர் பாகொடு பிடித்த, இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்" என்ற வரிகள் விளக்குகின்றன. உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா[Dr. K.T. Achaya] தனது "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India)" என்ற புத்தகங்களில் தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்கிறார். கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே என்னும் பழமையான சமஸ்கிருத, கன்னட நூலில், இட்டலியை ‘இட்டலிகே ’ என குறிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்தே இட்டலி என்ற சொல் பிறந்தது என்கிறார். ஆனால், இந்த இட்டலிகே, உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும். மேலும் இது புளிக்க வைக்கப்படவில்லை. மேலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்ற ஒரு பிரமச்சாரிக்கு உபசாரம் செய்த 18 உணவுகளில் ஒன்றாக இது குறிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கி பி 1130 இல் எழுதப்பட்ட மற்றொரு சமஸ்கிருத, கன்னட நூலான, மனசொல்லசாவில் (Manasollasa) 'இட்டரிக்க' என குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும். இது சிறு உருண்டைகளாக, மிளகு தூள், சீரகத் தூள், பெருங்காயம் போன்றவற்றால் வாசனைப் படுத்தப்பட்டன என்கிறது. என்றாலும் இன்று இட்டலி செய்யும் முறைகளான உளுந்துடன் தீட்டப்படாத அரிசி, நீண்ட நேரத்திற்கு கலவையை புளிக்க வைத்தல், நீராவியில் முழுமையாக அவித்தல் ஆகிய இந்த மூன்று முறையும் அங்கு காணப் படவில்லை. கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடைமுறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார். அது மட்டும் அல்ல சீன காலவரிசையாளர் Xuang Zang ,கி பி 700 ஆண்டு இந்தியர் நீராவி சமையலை அறிந்து இருக்கவில்லை என்று மிக அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். இட்டலி இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையும் முன்வைக்கப்படுகிறது. இது அங்கு கேட்லி [Kedli ] என அழைக்கப்பட்டது. அத்துடன் அவர் சங்க காலத்தில் செய்யப்பட்ட தோசை அதிகமாக அரிசியை மட்டுமே பாவிக்கப்பட்டதாக இருந்ததாகவும், அது கள்ளு முதலியவற்றால் புளிக்க வைக்கப்பட்டது என்றும், கட்டாயம் உளுந்து பாவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.மேலும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மனசொல்லசாவில் குறிக்கப்பட்ட தோசக [“dhosaka”], முற்றிலும் உளுந்த்தில் செய்யப்பட்டது. அரிசி அங்கு பாவிக்கப்படவே இல்லை. இந்த தோசையானது தோன்றிய இடம் தோராயமாக கர்நாடக மாநிலம் மைசூர் தான் என்றும் அதுவும் உடுப்பியில் என்றே கருதப்படுகிறது. இடியப்பமும் அப்பமும் காழியர், கூவியர்களால் கடற்கரை வீதிகளில் விற்கப்பட்டதாக கூறுகிறார். இது பிந்திய சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலையில் விவரிக்கப்பட்டுள்ளது. "பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் ", என்ற கச்சிமாநகர் புக்க காதை, மணிமேகலை 31,32 ஆவது வரி-பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும்-என கூறுகிறது. புளியோதரை எனப்படும் புளி சாதம் பற்றியும் புளி,நெல்லிக்காய் சேர்ந்த ஒரு வகை பானம் பற்றியும் அங்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கீரை, பூசனிக்காய், முருங்கைக்காய், மற்றும் மூன்று பருப்பு வகைகள்- உளுந்து, பயத்தம் பருப்பு,துவரம் பருப்பு -அங்கு பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல அரிசி, தயிர், தயிரில் நனைத்த வடை போன்றவையாகும். மற்றும் முக்கனிகளான மா, பலா வாழையும் அவர்களின் உணவில் தாராளமாக இருந்தன. சங்க இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ சித்திரிக்கும் மதுரை நகரம் இன்றளவும், இரண்டாயிரமாண்டு களைக் கடந்த பின்னரும் குதூகலத்துடன் கண் விழித்திருக்கின்றது. இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய காட்சி ஒன்றை , வரிகள், 624-627: "நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இதில், நல்ல வரிகளையுடைய தேனிறால் போன்ற அடை, மற்றும் காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது. சங்கத்தமிழரின் உணவுமரபை ஒரு இளமனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167. மேலும் அந்த இளம் குடும்பப் பெண் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க் குழம்பை அல்லது புளிக் குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும் அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது. தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாதபடி மறைவாக கண்டு காதல் கொண்டு, பெற்றோரின் சம்மதம் இன்றி, களவு மணம் செய்து இருவரும் தனிக் குடித்தனம் சென்றனர். துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய். பொறுப்பேதுமின்றி, செல்வச் செழிப்புடன், உலாவித் திரிந்தவளால் தனக் குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப்போடுவாள்? அமைதி கொள்ள முடியாத தாய், தன் தோழியை அழைத்து மகளின் தனிக் குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறும் கேட்டுக் கொண்டாள். அதன் படி, எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது. தலைவன் வெளியே சென்று விட்டான், தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி. முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து, அந்த கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்; அவ்வேளை, அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது, அவள் அணிந்திருந்த சேலை நழுவிவிட்டது. கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டு விடும் என்பதால், அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும், உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். அப்படி முறைப்படி தாளிக்கும்போது, கடும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது, கண்களில் புகை நிறைகிறது ; கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக் கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிடும் என்பதால். இவ்வாறு புளிக்குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். தலைவியின் முகத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக்குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப்பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” குறுந்தொகை 167 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. ஈழ‌த்தை நேசித்த‌ வீர‌ப்ப‌ன் பாட‌ல் ஈழ‌த்தையே நெஞ்சில் வைச்சு வ‌ரிபுலி வ‌ள‌ந்த‌த‌டி🙏🙏🙏........................
  23. ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.
  24. தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும். பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம். சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம். எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.
  25. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 2ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 34 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 - குமரி, திருநெல்வேலி
  26. முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே? பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும். ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும். எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள். சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன. சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.
  27. @suvy எங்கை என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவை நேற்றில் இருந்து இந்த‌ திரிக்குள் காணும்..................................
  28. பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம். வட்டுக்கோட்டை!🤣
  29. இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர். ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி, ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார். சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும், தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன) உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார். தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன். ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார். வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார், "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார். யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
  30. போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀 போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
  31. 1 point
    "ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல் பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்! அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை. அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான். எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை? ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர். ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க, காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது. அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள். அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  32. எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
  33. எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣. ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன்.
  34. நாராயானா ஒருத்தர் ஊர் போய் கண்டபடி புளுகி தொலைக்கிறார் என்று செய்தியில் தேட இந்த செய்தி நேரம் பார்த்து வர அதை நான் இணைக்க நாராயானா இவ்வளவு குழப்பம் அதுவும் ஐந்து பக்கம் நாராயணா மன்னித்துகொள்.
  35. சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
  36. எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
  37. அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
  38. இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் அதனைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய் வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
  39. வடை போய் தங்கம் வந்தது டும் டும் டும்☺️
  40. அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக செய்து முடிக்கலாம். தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
  41. தில்லையில் படித்த பொறியாளன் நான், தில்லை அவர்களை வாழ்த்தி வருக வருகவென வரவேற்கிறேன்.🙏 இப்போதைக்கு நான் ஓய்வு பெறுவதாக எண்ணமில்லை..!😍
  42. https://www.facebook.com/share/r/ux7vdTmqzsGpJYro/?mibextid=xCPwDs தமிழக முதல்வரின் புதிய கணக்கு.
  43. உங்களுக்குத் தனிநாடும் இல்லை சமஷ்ட்டியும் இல்லை. தமிழ்நாட்டில் போராளிகள் இயங்க விடமாட்டேன் - ‍ ரஜீவ் காந்தி பண்டாரியின் விஜயம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வைகாசி 28 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி. இந்தியாவால் வரையப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான நகலையும் அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அந்த நகல், சக்சேனாவுடன் ஜெயாரும், லலித்தும் நடத்தியை பேச்சுக்களின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. பண்டாரி நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்களில் ஈடுபடவிருக்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த விபரம், அரசியல்த் தீர்விற்கான அடிப்படை மற்றும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் ஆகியவையே அந்த நான்கு விடயங்களுமாகும். முதல் மூன்று விடயங்கள் குறித்து ஜெயாரும், லலித் அதுலத் முதலியும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதுலத் முதலி, நகலில் இருந்த சொற்பிரயோகங்கள் குறித்து சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருந்தார். யுத்தநிறுத்தம் எனும் சொல் பாவிக்கப்பட்டதை அவர் ஆட்சேபித்தார். தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமக்கான பிரதேசம் ஒன்றினை வைத்திருக்காதவிடத்து யுத்த நிறுத்தம் என்கிற சொல் பாவிக்கப்படலாகாது என்றும், வன்முறை தவிர்ப்பு என்று அதனை மற்றவேண்டும் என்று தர்க்கித்தார். ஆனால் பண்டாரியோ லலித்தின் கோரிக்கையினை நிராகரித்தார். வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போராளின் தாக்குதல்களின் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்று ஜெயார் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். தமிழ் நாட்டிலிருந்து போராளிகளும் ஆயுதங்களும் இலங்கைக்குள் வருவதை இந்தியா தடுத்தாலே வன்முறைகள் குறைந்துவிடும் என்று அவர் கூறினார். ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக பாக்கு நீரிணையூடாக போராளிகளும், ஆயுதங்களும் கடத்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தவிடயத்தில் பண்டாரி விட்டுக்கொடுக்க முன்வந்தார். அடுத்ததாக நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையென்பதால், போராளிகளின் தாக்குதல்களால் மூடப்பட்ட பொலீஸ் நிலையங்கள் மீளத் திறக்கபட அரசாங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார் ஜெயவர்த்தன. அதனையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ள பண்டாரி சம்மதித்தார். ரஜீவ் காந்தி தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் புளொட் ஆகிய போராளி அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் பங்குகொள்வார்கள் என்ற இந்தியாவின் பரிந்துரையினை ஜெயார் ஏற்க மறுத்தார். பயங்கரவாத குழுக்களுடன் பேசுவதில்லை என்கிற தீர்க்கமான முடிவினை தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களுடன் பேசுவது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஆகிவிடும் என்று அவர் தர்க்கித்தார். அதற்குப் பதிலளித்த பண்டாரி, அந்நியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஒன்றின் அரசியல் அபிலாஷைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம், அங்கீகாரம் போன்ற‌ விடயங்கள் குறித்துப் பேசுவது பயனற்றது என்றும், தற்போதுள்ள நிலைமை அதனைக் கடந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். பஞ்சாப் மற்றும் அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடன் ரஜீவ் காந்தி நடத்திவரும் பேச்சுக்களை இதற்கு உதாரணமாக முன்வைத்தார் பண்டாரி. அதன்பின்னர் போராளி அமைப்புக்களுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும் பேசுவதற்கு ஜெயார் ஒத்துக்கொண்டார். ஜெயாரின் இந்த இசைவை இந்தியாவின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று ரஜீவும், பண்டாரியும் கிலாகித்து நின்றனர். ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்று ஆனி 1 ஆம் திகதி அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக ஜெயவர்த்தன தில்லி சென்றார். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது பஞ்சாப்பிய, அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடனனான தனது பேச்சுவார்த்தை அனுபவங்களை ரஜீவ் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆயுத அமைக்களுடன் பேசுவதற்குச் சம்மதித்த ஜெயாரின் இசைவினை "துணிவான முடிவு" என்று ரஜீவ் பாராட்டினார். பதிலளித்த ஜெயார், அநுராதபுரம் மீதான தாக்குதலையடுத்து சிங்கள மக்கள் தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக க் கூறினார். ஆகவே, தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுடன் பேசப்போவது தெரிந்தால், சிங்கள மக்கள் தன்மீது அதிருப்தியடைவார்கள் என்றும், அதனைச் சமாளிக்க ரஜீவ் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக, இருவிடயங்கள் குறித்து இந்தியா, இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயார் கூறினார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சிங்களவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஜெயார் ரஜீவிடன் முன்வைத்த இரு கோரிக்கைகளாவன, 1. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு உதவுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 2. தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவை இரண்டையும் ரஜீவ் உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். தனது விஜயத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஜெயவர்த்தன. தொடர்ந்து பேசிய ஜெயார், பாக்குநீரிணையை இந்திய இலங்கைக் கடற்படைகள் கூட்டாக கண்காணிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பயணிக்கும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ரஜீவ், இதுகுறித்து தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஜெயாரின் விஜயத்தின் இரண்டாம் நாளான ஆனி 2 ஆம் திகதி, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த அயல்நாடான பங்களாதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்றார் ரஜீவ். தில்லியிலிருந்து டாக்காவிற்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும் இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்தார்கள். இந்தப் பேச்சுக்களின்போது, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகாக இலங்கையரசு முன்வைத்துவந்த மாவட்ட சபையினைக் கைவிட்டு மாகாண சபையினை ஜெயார் ஏற்றுக்கொள்ள வைப்பதில் ரஜீவ் வெற்றி கண்டார். ஜெயார் தான் போராளிகளுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னண்னியினருடனும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். ஆனி 3 ஆம் திகதி ஜெயார் நாடுதிரும்பினார். ஜெயவர்த்தன தில்லியிலிருந்து புறப்படுமுன்னர் ஆறு பந்திகளைக் கொண்ட அறிக்கையொன்று இந்தியாவினால் வெளியிடப்பட்டது. அவற்றில் இரு முக்கியமான பந்திகள் இவ்வாறு கூறியிருந்தன, "இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வு ஒன்றினை அடைவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருக்கிறார்கள்". "மேலும், அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வழமை நிலை உருவாக்கப்படுவதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்கள் தாமதமின்றி மீள நாடு திரும்புவதும் இதன்மூலம் ஏதுவாக்கப்படும்". தில்லியிலிருந்து ஜெயாரை வழியனுப்பி வைத்தபின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசினார் ரஜீவ். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதனூடாகவே அரசியல்த் தீர்விற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்று தாம் இருவரும் ஏற்றுக்கொண்டதாக‌ அவர் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தான் முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், பாக்கு நீரிணையூடாக ஆட்களும் ஆயுதங்களும் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன்பிறகு இலங்கையரசாங்கமும் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் ரஜீவ் கூறினார். "இலங்கையில் தனிநாடொன்றினை உருவாக்க போராடிவரும் தமிழ் கெரில்லாக்கள் இந்தியாவை அதற்கு ஒரு தளமாகப் பாவிப்பதை நான் இனிமேல் அனுமதிக்கமாட்டேன். அடுத்ததாக, இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று தனிநாடு ஒன்றினை எதிர்பார்க்க முடியாது. சமஷ்ட்டி முறையிலான தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களையொத்த தீர்வொன்றினை அவர்கள் எதிர்பார்க்க முடியும்" என்று தீர்க்கமாகக் கூறினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களளைச் சந்தித்துவிட்டு தனது அலுவலகம் திரும்பிய ரஜீவ், தமிழ்நாட்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் பேசினார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தன என்று கூறிய ரஜீவ், இலங்கைத் தீவின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படும் சூழ்நிலை விரைந்து உருவாகி வருகிறது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராகவிருந்த இரா நெடுஞ்செழியன் தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆருடன் ரஜீவ் காந்தி பேசிய விடயங்கள் குறித்து விபரித்ததுடன், தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக ரஜீவ் காந்தி நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபின்னர், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ரஜீவ் காந்தி இறங்குவார் என்றும் நெடுஞ்செழியன் தெரிவித்தார். ஆனி மாதத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்காவிற்கும், ரஸ்ஸியாவிற்கு ரஜீவ் காந்தி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ரொனால்ட் ரீகனுடனும், மிக்கெயில் கொர்பச்சேர்வுடனும் அவர் நடத்திய பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் பிரச்சினை குறித்தும் பேசினார். ஆனி 18 ஆம் திகதி ரஜீவ் நாடு திரும்பினார். அதேநாள் இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி நாடுதிரும்பிய ஜெயார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, இறுதியாக இந்தியா களநிலவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களைத் தமிழர்களுக்கு தான் வழங்கவிருப்பதாகவும், ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் அலகு மாவட்டங்கள் தான் என்றும் கூறினார். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம், தில்லியில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கை மற்றும் கட்டுநாயக்காவில் ஜெயார் வழங்கிய செவ்வி ஆகியவை குறித்து தனது கருத்தினைப் பதிவுசெய்தார். இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கையினை வரவேற்ற அவர், "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா இப்பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கினை ஆற்றுவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்" என்று கூறினார். ஆனால், கட்டுநாயக்காவில் ஜெயார் தெரிவித்த மாவட்ட சபைகளே அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகுகள் என்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார். தில்லியில் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையினைப் பாராட்டிய லலித், இந்தியாவின் நிலைப்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது என்றும் புகழ்ந்தார்.
  44. இந்தியாவின் தலையீட்டினை எதிர்த்த போராளிகளும், இந்தியாவிடம் தமிழர் நலன்களைத் தாரைவார்த்த அமிர்தலிங்கமும் நற்பிட்டிமுனை படுகொலைகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே நற்பிட்டிமுனை. அநுராதபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர், கடும்பச்சை நிற காக்கி சீருடை அணிந்த, இங்கிலாந்தின் விசேட படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பொலீஸின் ஒரு பிரிவினரான விசேட அதிரடிப் படையினர், வைகாசி 17 ஆம் திகதி இரவு, நற்பிட்டிமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள இரு கிராமங்களுக்குள்ளும் நுழைந்தனர். அப்பகுகளை முற்றாக முடக்கிவிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் அவர்கள் கைதுசெய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படும் போது சில இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள பெளத்த மிருகங்கள் - விசேட அதிரடிப்படை அம்பாறை, தை முதலாம் திகதி, 2007 கிராமத்திற்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர்களின் காலில் வீழ்ந்த அவர், தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடியதுடன், போராளி அமைப்புக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். அவர்கள் கேட்கவில்லை, அவ்விடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற அவர்கள், உள்ளிருந்து இளைஞர் ஒருவரை வெளியே இழுத்துவந்து, அவரது மனைவி பார்த்திருக்க தலையில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவரது உடலை இழுத்துச் சென்ற அதிரடிப்படையினர், "பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் இதுதான் கதி" என்று சத்தமிட்டவாறே சென்றனர். தம்மால் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 40 இளைஞர்களை நற்பிட்டிமுனை மயானத்திற்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பகுதியில் கிடங்குகளை வெட்டுமாறு கட்டளையிட்டனர். கிடங்குகள் வெட்டி முடிக்கப்பட்டதும், அவற்றின் அருகிலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் வெட்டிய கிடங்குகளை அவர்களைத் தள்ளி நிரவினர். கல்முனை பிரஜைகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு இப்படுகொலைகள் தொடர்பான விலாவாரியான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. சர்வதேச மன்னிப்புச்சபை இப் படுகொலைகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இளைஞர்களைக் கைதுசெய்ததையோ அல்லது படுகொலை செய்ததையோ முற்றாக மறுத்தது இலங்கையரசு. ஆனால், அங்கிருந்து காணாமற்போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி இலங்கையரசு எதுவுமே கூறவில்லை. ஆனால், கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவரான போல் நல்லநாயகம் இதனை இப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார். அரசாங்கம் குறித்தும், அதிரடிப்படையினர் குறித்தும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார் என்கிற பெயரில் நல்லநாயகத்தை பொலீஸார் மறுநாள் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஆடி 1986 இல் நீதிபதி அவர் குற்றம் அற்றவர் என்று கூறி அவரை விடுவித்தார். தீர்ப்பு வழங்கப்படும்போது, "1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதி நற்பிட்டிமுனையில் கைதுகள் எதுவும் நடைபெறவில்லை எனும் அதிரடிப்படையினரின் கூற்றினை எனக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பொய்யென்று நிரூபிக்கின்றன" என்றும் நீதிபதி மேலும் கூறினார். நற்பிட்டிமுனை படுகொலைகள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் புலிகள் மீண்டும் தாக்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்த ஜீப் வண்டியொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் ஊர்காவற்படையினரும், அப்பகுதியிலிருந்த இரு கிராமங்களில் இருந்து 37 இளைஞர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்று சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதவாறு அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டன. டிக் ஷிட் 2004 வன்முறைகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே டிக் ஷிட் இந்தியாவுக்கான தூதராக கொழும்பில் பொறுப்பேற்றுக்கொண்டார். வைகாசி 27 ஆம் திகதி எனக்கு வழங்கிய நேர்காணலில், அதிகரிக்கப்பட்டு வரும் வன்முறைகள், வன்முறைகளின் தீவிரம் குறித்த தனது கவலையினைத் தெரிவித்திருந்தார். "திரு பண்டாரியின் விஜயம் நண்மை பயப்பதாக‌ அமையவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு இந்த அழகான தீவு காக்கப்படுதல் வேண்டும்" என்று கூறினார். ஆனால், அவர் வேண்டிக்கொண்டதுபோல எதுவுமே அமையவில்லை. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் அப்போதைய சூழ்நிலை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே, பண்டாரியின் கொழும்பு விஜயம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் மீண்டும் கூடினர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன பண்டாரியையும் தனது தாளத்திற்கு ஆடவைக்கப் போகிறார் என்று கூறினார். பண்டாரியுடன் மிகவும் கனிவாகப் பேசி, அவரையும் தன்பக்கம் இழுத்துவிடப் போகிறார் ஜெயார் என்று அவர் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் போராளிகளுக்குமிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தவும் ஜெயார் முயல்வார் என்றும் அவர் கூறினார். "நாம் கவனமாக இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார். இந்தியா தம்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை என்கிற முடிவிற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வந்தார்கள். ஈழத்தமிழர்களின் நலன்களே தமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே, தமிழர்கள் சார்பாக இந்தியா முடிவெடுப்பதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வினை தீர்மானிக்கும் நடவடிக்கையில் இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மூன்று நிபந்தனைகளையும் அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார், 1. அனைத்துப் போராளி அமைப்புக்களும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். 2. பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக நடைபெற வேண்டும். 3. எடுக்கப்படும் தீர்விற்கு இந்தியா எழுத்துறுதி தரவேண்டும். அமிர்தலிங்கத்தின் முடிவினையடுத்து பிரபாகரன் மிகவும் கோபமுற்றார். தமிழர்களின் தலைவிதியினை இந்தியா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார். "எமது தலைவிதியினை நாமே தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தமது தலைமையினைப் பாதுகாத்துக்கொள்ள தமிழரின் நலன்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்தியாவிடம் அடகுவைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து இலங்கையரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கேட்டுக்கொண்டனர்.
  45. கட்டுறவன் தான் அதைப் பற்றி கவலைப்படணும் பணத்தை ஒதுக்குபவன் எதுக்கு???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.