Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19125Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20018Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/24/24 in Posts
-
"நானே வருவேன்"
3 points"நானே வருவேன்" உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக [தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எடுத்தால் 50 % அல்லது சற்றுக் கூட தமிழ் பேசும் மக்களாக இருப்பார்கள். எனவே கொழும்பில் வாழ்வது பெரிதாக வித்தியாசம் தெரியாது. நான் 2019 /04 /21 ஞாயிறு காலை, சில முக்கிய விடயங்களாக, வேலைத் தளத்துக்கு போகவேண்டி இருந்தது. எனவே அப்பொழுது, 'பயப்பட வேண்டாம் ... தனியே இருக்கிறேன் என்று .. தொலைக்காட்சி பெட்டி இருக்குது .. தொலைபேசி இருக்குது .. நீ அதை பாவிக்கலாம் .. நீ என்னில் நல்ல காதல் பக்தி கொண்டு இருப்பதால் .. உனக்கு ஒரு சங்கடமோ .. தேவையோ ஏற்பட்டால், 'நானே வருவேன்' [ஒரு பகிடியாக] மற்றது பொன்னம்பலவாணேசுவரர் கோயில் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் .. இங்கிருந்து சொற்ப தூரத்திலேயே .. ஒரு 15 அல்லது 20 நிமிட நடக்கும் தூரத்திலேயே ... இரண்டும் அருஅருகே இருக்கு .. நீ விரும்பினால் போய் பார்த்தும் வரலாம்', என்று அன்பாக அவள் கையை பிடித்து அணைத்துக்கொண்டு கூறி விடை பெற்றேன். முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை துன்புறுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுவது போலத் தான் - அவளிடம் சொல்லி விட்டு, கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு, பேரூந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். ஏன் என்றால் அவள் கொழும்புக்கு புதிது என்பதால்! நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் (St. Anthony's Shrine) அருகில் பேரூந்தில் ஏறி வேலைக்கு போனேன். நான் பொதுவாக எந்த ஆலயமும் போய் கடவுள் / தூதுவர் இப்படி எவரையும் வணங்குவதில்லை. 'நானே வருவேன்' என்றவர் வந்தபின்பு வணங்குவோம் என்று அதை பொருட் படுத்துவதில்லை. பேரூந்தில் இருக்கும் பொழுது கொஞ்சம் என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். அதற்குப் பின்பு, ஆயிரம் அல்லது ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, எந்த பெரும்பான்மையான மதங்களின் தூதுவர்களோ இல்லை கடவுளோ 'நானே வருவேன்' என்று வந்ததாக எந்த பிற்கால புராணமும் வரலாறும் இல்லை! நான் என் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த தருவாயில், திடீரென என் சக நண்பர் வந்து ஒரு அதிர்ச்சி தகவல் கூறினார். 'இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் சுமார் 290 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், அதிலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலேயே பெரும் உயிர் சேதம் என்றும் கூறினார். நான் உடனடியாக என் மனைவிக்கு தொலை பேசி எடுத்தேன். ஆனால், அவரின் தொலைபேசி பதில் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. உடனடியாக வாடகை மோட்டார் [Taxi] எடுத்துக்கொண்டு வீடு போனேன். வீடு பூட்டி இருந்தது. எனவே தேவாலயத்தைச் நோக்கி நடக்க தொடங்கினேன். அப்ப அந்த வழியில் இருந்த, நான் வழமையாக போகும் பலசரக்கு கடைக்காரர் , என்னைக் கண்டதும், ஓடி அருகில் வந்து, உங்க மனைவி, மெழுகுதிரியும், அர்ச்சனை சாமான்களும் வாங்க்கிக்கொண்டு, தான் தேவாலயத்துக்கும் சிவன் கோயிலுக்கும் போவதாக கூறிச் சென்றதாக கூறினார். அது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது, தேவாலயம் சுற்றி ஒரே ராணுவம். கிட்ட போக எவரையும் விடவில்லை. இன்னும் அங்கிருந்து இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் , தேவையான முதல் உதவி செய்து வைத்தியசாலைக்கு அவசரம் அவசரமாக கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். எனவே நான் முதலில் பக்கத்தில் இருந்த சிவன் கோவில் போனேன். நான் பதறிக்கொண்டு வருவதைக் கண்ட குருக்கள், கிட்ட வந்து, நான் உங்களை, சிலவேளை பேரூந்து தரிப்பில் நிற்கும் பொழுது கண்டுள்ளேன், ஆலயத்தில் ஒரு நாளும் காணவில்லை, என்ன நடந்தது என்று ஆறுதலாக அமைதியாகக் கேட்டார். நான் என் தொலைபேசியில் இருக்கும் மனைவியின் படத்தை காட்டி, இவர் என் மனைவி, இவர் கிட்டடியில் தான் என்னை திருமணம் செய்து கொழும்பு வந்தவர், ஆலயம் அர்ச்சனை செய்ய வந்ததாக அறிந்தேன், இவரை பார்த்தீர்களா என்று கவலையாகக் கேட்டேன். குருக்கள் என் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டு, பயப்பட வேண்டாம், அவளுக்கு ஒன்றும் நிகழவில்லை. நல்ல காலம் அவர் என்னுடன் ஆலய வரலாறு, பெருமைகளை, கடைசி நேரத்தில் கேட்டுக் கொண்டு இருந்ததால், குண்டு வெடிக்கும் பொழுது இங்கு தான் நின்றார். எனினும் அந்த சத்தம், அதிர்வு அவரைப் பயப்படுத்தி, அதனால் மயங்கி விழுந்து விட்டார், நான் நோயாளர் ஊர்தியில் (Ambulance) பக்கத்தில் இருந்த சர்வதேச மருத்துவ - அறக்கட்டளை தனியார் வைத்திய சாலையில் [International Medi-Trust (Pvt) Ltd] சேர்த்துள்ளேன் என்று கூறினார். மேலும் அவர் உண்மையில் அவள் கொஞ்சம் முந்தியே தேவாலயம் போய் இருக்கவேண்டும். இன்றைக்கு என்று எம் ஆலய மணியில் ஏற்பட்ட திடீர் கோளாறால், கொஞ்சம் சுணங்கிவிட்டது. உங்க மனைவியின் கடவுள் பக்தி, ஆண்டவனை குளிர்ச்சிப்படுத்தி, அவரை அந்த விபத்தில் இருந்து காப்பாற்ற, இப்படி செய்திருக்கலாம் என்று ஒரு போடும் போட்டுவைத்தார். எனக்கு இப்ப அவரின் 'கடவுள் நம்பினாரை விடமாட்டார் 'நான் வருவேன்' என்று சரியான நேரத்தில், எதோ ஒரு வழியில் காப்பாறுவார்' என்ற கூற்றை எதிர்த்து வாதாட விரும்பவில்லை. என்ன இருந்தாலும் என் மனைவியை கதையினால் தாமதித்ததே அவர்தானே! ஆனால் என் மனம் 'தேவாலயத்தில் இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் அநேகமானோர் தமிழரே, அதிலும் சிலர் சைவரே! அப்படி என்றால் ஏன் அவர்களை காப்பாற்றவில்லை. உயிர்களில் ஆண்டவனுக்கு வேறுபாடு இல்லையே!' என்று அலட்டிக்கொண்டு இருந்தது. நான் உடனடியாக வாடகை மோட்டாரில் அந்த குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு போனேன். நானும் அவருக்கு அருகில், அவர் இருந்த அறைக்குள் போக, அவரும், கண் துறக்க நேரம் சரியாக இருந்தது. 'நான் வருவேன் , என் செல்லத்துக்கு பக்கத்தில் எப்பவும்' என்று ஒரு நம்பிக்கைக்காக, தெம்பு கொடுப்பதற்காக சொல்லிக் கொண்டு அணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன்! அவள் தான் அந்த குருக்களிடம் முதலில் ஆசீர்வாதம் பெற்று, அங்கு சிவனை வழிபட்டு பூசை செய்தபின்பே வீடுபோவோம் என்று என்னிடம் உருக்கமாக கெஞ்சி கேட்டார். அந்த நேரம் அதற்கு ஆமா போடுவதைவிட எனக்கு வேறுவழி தெரியவில்லை? 'நான் வருவேன்' என்று அவரை காப்பாற்றியது கடவுளா ? குருக்களா? இல்லை தற்செயலான ஒன்றா ? இதைத்தான் பாக்கியம் [அதிர்ஷ்டம்] என்பதா? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
ஏதேது….சும்மா புட்டு….புட்டு வைக்கிறீர்களே🤣. நட்பு வட்டமோ 🤣 (பகிடிக்குத்தான்). நீங்கள் சொல்வது சரியே என்றாலும் ஆடிய காலும் களவெடுத்த கையும் சும்மா இராது கண்டியளே🤣. இப்படியாகொத்த கள்ளர் பலர் இலங்கையில் இப்படி பணத்தை வைப்பில் இட்டு வைத்துள்ளார்கள். பின்னர் தேவைப்படும் போது உண்டியல் மூலம் எடுப்பது. கணக்கில் காட்டாமல் கலியாணம், சாமத்திய சடங்கில் கைக்காசாக செலவழிப்பது. வெளித்தோற்றத்துக்கு கனவான் வேசம் போட்டாலும் - தொழில் எப்போதும் களவுதான்🤣. அதேபோல் இப்போ மட்டும் அல்ல, எப்போதும் சோசல் களவு செய்வோர் காட்டில் மழைதான்🤣. ஆனால் இப்படி களவு செய்வோர் வாழ்க்கை வேற மாரி - என்னதான் பண வரவு இருந்தாலும் அது தரித்தரிரம் பிடிச்ச வாழ்க்கை. பிள்ளையள் கூட என்றால் நல்ல பெரிய வீடு கிடைக்கும் ஆனால் சொந்தமா வீடு வாங்கேலாது. அதிஸ்டம் என்றால் ரைட் டு பை மூலம் கிடைக்கலாம். கையில் காசுக்கு வேலையும் செய்து காசும் பார்க்கலாம்தான் ஆனால் வேலை தாறவன் யார்? நான் மேலே சொன்ன வரி ஏய்க்கும் கள்ள முதலாளிகள் - அவர்கள் இவர்களை தெரு நாயை போல நடத்துவார்கள். என்ன ஆபீஸ் வேலையா தரப்போகிறார்கள், பெட்டியை கிழித்து அடுக்கும் வேலைதான். சக்கையாக பிழிந்து விடுவார்கள். இப்படி வாழும் பலரை பார்த்தீர்களானல் அவர்கள் முகத்தில் ஒரு செந்தழிப்பு இருக்காது - வறுமை என நடித்தாலும் - அதுவும் ஒரு தரித்திரம்தான். இவர்கள் இலங்கை போனாலும் அங்கே இப்போ பலர் இவை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துள்ளார்கள் - சில கேள்விகளிலேயே பிடித்து விடுவார்கள். தவிரவும் அங்கேயும் போய், கால் முதல் தலைவரை டிசைனைர் உடுப்பு போட்டு கொண்டு, 80 ரூபாய் வடைக்கு எட்டு தரம் விலை பேசுவார்கள்🤣. முன்னர் நாம் கொழும்பில் இருக்கும் போது இப்படியானவர்களை “ஓமான்” என அழைப்பார்கள். இப்போ “இலண்டன்” என அழைக்கிறார்கள். இப்படி தினுசு…தினுசா…இருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். ஆனால் பொதுவெளியில் கதைக்க விட்டால், ரொமேனியன் கள்ளன், சிங்களவன் கள்ளன் என நீட்டி முழக்குவார்கள் - தங்கள் சீத்துவம் மற்றையவர்களுக்கு தெரியாது என நினைத்தபடி.3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣2 points
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
இது, கனடா பொலிஸ் அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்.... கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ் அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது. சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂2 points
-
அப்பா உடனே வாங்கோ.
2 pointsசித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.2 points
-
மைத்திரிபால இராஜினாமா?
2 pointsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தோவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள். சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்து இலங்கையில் ஓற்றுமையாக இருந்த இனம் மீது, விஷ விதையை விதைத்து... சிங்கப்பூர் மாதிரி இருக்க வேண்டிய நாட்டை குட்டிச் சுவராக்கியதன் பலனை அந்தக் கட்சி அனுபவிக்கின்றது.2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.2 points
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
எனக்கு இவர்கள் மீது கோபம் வரக் காரணம் இவர்கள் தான் தாயக மக்களுக்கு தவறான தமது நடத்தைகள் மூலம் வெளிநாட்டு மோகத்தை அந்த மக்களுக்கு புகுத்தி விடுகிறார்கள். இவற்றை நம்பி இங்கே வந்து சீரழிந்த சீரழியப்போகும் மக்கள் பலர்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வணக்கம் அப்பன்! நான் வேடிக்கை பார்க்க வரவில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு நேரகாலமும் இல்லை. மன நிலையும் இல்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும் இல்லை. 😂2 points
-
அப்பா உடனே வாங்கோ.
2 pointsபேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉) 2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎 3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் )🥷 4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️ 5) Original மூலப்பிரதியை கூரியர் மூலம் அனுப்பவும் . இதையடுத்து, உங்கள் லாயர் 😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். அதன் பின்னர் உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏 6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌 வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶 7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில் 1% 😳 குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும் அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%) கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁 Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited) கொடுப்பது பாதுகாப்பானது. 🤣 எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴 காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨 (Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼♂️) அம்புட்டுதே. 😁2 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக. POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT Principal's Information: Name: [Your Full Name] Address: [Your Address] Contact Information: [Your Phone Number and Email Address] Attorney-in-Fact's Information: Name: [Attorney-in-Fact's Full Name] Address: [Attorney-in-Fact's Address] Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address] Original Power of Attorney Details: Date of Execution: [Date the Original Power of Attorney was Signed] Place of Execution: [Place where the Power of Attorney was executed] Revocation Statement: I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document. Reason for Revocation (Optional): [Briefly state any reasons for the revocation, if you wish to disclose them] Notification: A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.]. Signature: Signed on this ___ day of [Month], [Year]. [Your Full Name, as Principal] Witnesses (If required by law): Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Notarization (If required by law): On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained. In witness whereof, I hereunto set my hand and official seal. [Notary Public's Signature] [Notary's Printed Name] My Commission Expires: ___________________ Instructions: Make sure to fill in all brackets ([ ]) with the relevant information. Check if your state or country requires the revocation to be witnessed or notarized. Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation. This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney. மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.1 point
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை.1 point
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
13,14,15,16,17,18,19 வயது பருவங்களிலை சம்பளமில்லாத வேலையும் செய்யேல்லையோ? 😎 மதகுல.....தேத்தண்ணி கடைக்கு முன்னால நிண்டு சேக்கஸ் காட்டினதெல்லாம் கணக்கில எடுபட மாட்டாது. 🤣1 point
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கையில் நான் வேலை செய்யவில்லை. இதுவரை ஒரு வங்கிக் கணக்கு கூட திறக்கவில்லை.1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
- "நானே வருவேன்"
1 pointகடவுள் நம்பிக்கை இருந்தால், எந்த வடிவமும் கடவுளே. இவ்வளவு விஞ்ஞான மேற்கு சமூகத்திலும், god help us, நாங்கள் அப்பனே முருகனே, சிவனே, சண்முகனே என்பது போல , அவர்கள் அழைப்பது Jesus (என்று சற்று சத்தமாக) ஆய்வுக்கு அப்பால் என்பதை விஞ்ஞான சமூகம் ஏற்றுக்கொள்கிறது.1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
விசுகு நீங்கள் சொல்வது சரி.இளமையில் உழைத்து வரிகட்டினார்கள்.வயது போக அவர்களின் வட்டியில் வரி எடுக்குறார்கள். ஆனால் வயது போனபின் அவர்களை பராமரிக்க எத்தனையோ திட்டங்கள் உள்ளது. இளைப்பாறும் வயதை 62 இல் இருந்து 65 ஆக மாற்ற முனைய என்ன நடந்தது?முழு பிரான்சையும் முடக்கினார்கள். இலங்கையில் இளமையிலும் முதுமையிலும் சாகும்வரை அரசுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டே தான் இருக்க வேண்டுமா? பதிலுக்கு வயது போனவர்களுக்கு குறைந்த பட்சம் மெடிக்கல் காப்புறுதியாவது கொடுக்க வேண்டாமா?1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
புலம்பெயர் தமிழர்கள் குளிருக்குள் இருந்து கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை இனவாத சிங்கள அரசு நடாத்தும் வங்கிகள் ஏமாற்றி வாங்கி விட்டு இப்போ 1லட்ஷத்துக்கு வரி கட்டணும் என்கிறார்கள். அது சரியா ? @colomban நீங்கள் கலாநிதி எம்.கணேசமூர்த்தியை விட அதிகம் படித்து விட்டிர்கள் ஆக்கும் ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓடும் என்றவர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இதை சொல்வதுக்கு ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை என்று சொல்ல சீ என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று . யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 😀1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இந்த வடைப் பிரச்சினை இன்னும் தீரவில்லையா. 😂 🤣1 point- சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்கள் நிற்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு இந்த சோலியஸ் தசை மிகவும் அவசியம். கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபேல் அபுசைப் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாக சோலியஸ் தசை (சோலியஸ் தசை - Soleus) குறித்து மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் சக்தி வாய்ந்தவை. நிற்கவும் நடக்கவும் உதவுவதை தாண்டி உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சோலியஸ் துணைப்புரிகிறது. காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். பன்முக இயக்கங்களை மேற்கொள்ளும் உறுப்புகளில் ஒன்றாகும், நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கியமான நரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக தான் வல்லுநர்கள் சோலியஸ் தசையை "இரண்டாம் இதயம்" என்று வரையறுத்துள்ளனர். பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மருத்துவப் பள்ளியில் நிபுணரான டாக்டர் கார்லஸ் பெட்ரெட், பிபிசி முண்டோவுக்கு அளித்த பேட்டியில், "சோலியஸ் தசையில் காணப்படும் ஆக்கக் கூறுகள் தான் அதன் சிறப்பம்சம்” என்கிறார். "சோலியஸ் தசை பிற தசைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியது. அதிகளவிலான தசை நிறை (muscle mass) கொண்டுள்ளது. இணைப்பு திசுக்களாக இல்லாமல் முற்றிலும் தசை நார்களால் ஆனது" என்றும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். நிலைத்தன்மை ”நின்று கொண்டு செய்யும் செயல்பாடுகள், நடப்பது, ஓடுவது என எந்த ஒரு செயலுக்கும் சோலியஸ் தசை மிக அவசியம் ” என்று டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மார்க் ஹாமில்டன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். நம் உடலில் உள்ள தசைகள் ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து, பல்வேறு தசை நார்களால் உருவாக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, உங்கள் முதுகு பகுதியில் அமைந்திருக்கும் தசைகள் உடலின் கட்டமைப்பைப் பராமரிக்கும் தசைகள் ஆகும். அது, உங்கள் முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்திருக்க உதவும். எனவே, அந்த தசை மெதுவாக சுருங்கும் தசை நார்களை கொண்டிருக்கும் (slow-twitch fibers). மேலும் இந்த தசைகள் திடீர் அசைவுகளை செய்ய உருவாக்கப்படவில்லை என்றாலும், நீண்ட நேர அசைவுகளுக்கு உதவும். நீண்ட தூரம் ஓடுவது, நடப்பது, நிற்பது, உட்காருவது உள்ளிட்ட நீண்ட நேர அசைவுகளுக்கு அனுமதிக்கிறது. மறுபுறம், உங்கள் கைகள், கால்கள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் இருக்கும் தசைகள் வேகமாக சுருங்கும் தசை நார்களை (fast-acting fibers) கொண்டிருக்கின்றன, அதாவது, நம்மால் இயன்ற அதிக எண்ணிக்கையிலான இயக்கங்களை குறுகிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தசைகள் வேகமாக சுருங்கி விரிந்து செயல்படும். கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். இது, மெதுவாக சுருங்கும் தசை நார்களின் (slow-twitch fibers) பெரிய கலவையைக் கொண்டுள்ளது. எனவே சோலியஸ் தசை, நீண்ட நேர இயக்கங்களை சோர்வடையாமல் செய்ய அதிக அளவு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. கெண்டைக்கால் தசையான சோலியஸில் அதிக அளவிலான தசை நார்கள் உள்ளன. மேலும், அந்த தசை நார்களில் ஆற்றல் உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மைட்டோகாண்ட்ரியா உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மைட்டோகாண்ட்ரியா இருப்பதால், நம் செயல்பாடுகள் மூலம் அதை தூண்டும் போது, அதிக அளவு ஆற்றலை உருவாக்கும்" என்று மருத்துவர் பெட்ரெட் விளக்குகிறார். இந்த தசை நார்களின் அடர்த்தி, உடல் எடையில் 1% மட்டுமே இருக்கும். ஆனால், உடலில் உள்ள பல உறுப்புகளை விட அதிக ஆற்றல் திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோலியஸ் தசை இதயத்தின் செயல்பாட்டிற்கு முக்கிய உதவி செய்கிறது. இதயத்திற்கு உதவும் சோலியஸ் சோலியஸ் ஒரு முக்கிய செயல்பாட்டை கொண்டுள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது. சோலியஸ் தசை இதயத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர். ஹாமில்டன் பிபிசி முண்டேவிடம் விளக்கினார்: "சோலியஸ் தசையின் உடற்கூறியல் மற்ற தசைகளை காட்டிலும் வேறுபட்டது. உங்கள் கெண்டைக்காலில் சில பெரிய நரம்புகள் உள்ளன. நம் உடல் அமைப்பின்படி சோலியஸினுள் அந்த நரம்புகள் அமைந்திருப்பது ஒரு முக்கிய காரணத்திற்காக தான். அதாவது, புவியீர்ப்பு விசை உங்கள் கெண்டைக்கால்களிலும் கணுக்கால்களிலும், கால்களிலும் ரத்தத்தை தேங்கி நிற்க செய்கிறது . வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். உடல் இயக்கம் குறைந்த இளைஞர்களுக்கு கூட ஏற்படலாம்." ஆனால் நம் இயற்கை புத்திசாலித்தனமாக, மனித உடல் அமைப்பில், இந்த நரம்புகளை சோலியஸினுள் வைத்துள்ளது. இதனால் தசைகள் சுருங்கும்போது அவை அழுத்தம் அடைகின்றன. தசைகள் அழுத்தம் அடையும் போது, அந்த நரம்புகள் ரத்தத்தால் நிரப்பப்பட்டு காலியாகி, மீண்டும் அந்த திரவத்தை இதயத்திற்குள் அனுப்புகின்றன." அடிப்படையில், நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். இந்த அமைப்பில் பாதத்தில் இருக்கும் பல நரம்புகள் மற்றும் காஸ்ட்ரோக்னீமியஸ் தசைகளும் இணைந்து செயல்படும். இந்த செயல்பாட்டை 'பாப்லைட்டல் பம்ப்’ (popliteal pump) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். சிறந்த பராமரிப்பு உடலில் உள்ள அனைத்து தசைகளையும் போலவே, சோலியஸ் தசைகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க இயக்கம் அவசியம். ஆனால் வேகமாக சுருங்கும் தசை நார்கள் போலல்லாமல் சோலியஸின் தசைகள் மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். எனவே வேகமான இயக்கங்களுக்கு உட்படுத்தாமல், நிலையான இயக்கங்களை மேற்கொள்வது நல்லது” இதற்காக நடைப்பயிற்சி செய்வது சிறந்தது என்கிறார் மருத்துவர் பெட்ரெட். "கெண்டைக்காலில் இருக்கும் தசைகள் நிறைய வேலை செய்வதன் மூலம் பலப்படும், ஆரோக்கியமாக இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் அது சற்று மிருதுவான ஒரு தசை, அதற்குத் தேவையானது நீடித்த செயல்பாடு தான், நாம் அதனை அதிகமான இயக்கங்களுக்கு ஆட்படுத்த கூடாது." "சோலியஸுக்கு தேவைப்படுவது வெறுமனே மெதுவான இயக்கங்கள் மட்டும் தான். ஆனால் இயக்கங்கள் இன்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மாதிரியான வாழ்க்கை முறை சோலியஸ் தசைகளை மோசமாக பாதிக்கும். அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். சோலியஸை பொறுத்தவரை, கடுமையான இயக்கங்களும் வேண்டாம். இயக்கங்களே இல்லாத வாழ்க்கை முறையும் வேண்டாம்" இந்த விதி நம் அனைத்து தசைகளுக்கு பொருந்தும் பொற்கால விதியாகும், இது நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இந்த விதி முக்கியம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். "மக்கள் பொதுவாக வயதான காலத்தில் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பதை சிறந்த வாழ்க்கைத் தரமாக சொல்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஆனால் என்னை பொறுத்தவரையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பது, நம் ஆரோக்கியமான தசைகள் தான்" என்று பெட்ரெட் மீண்டும் வலியுறுத்துகிறார். "அதாவது, தசைகள் தொடர்ந்து வேலை செய்வது உடலின் ஆரோக்கியமான பராமரிப்புக்கு அதிக அளவு நன்மைகளை வழங்குகிறது. நல்ல தசை செயல்பாடு மற்றும் நல்ல தசை நிறையை (Muscle tone) பராமரிப்பது முழு வளர்சிதை மாற்ற அமைப்பும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இது நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதனால் மூளையும் சிறப்பாக செயல்படுகிறது, எனவே, டிமென்ஷியா அபாயமும் குறையும், அதாவது மன நலனுக்கு வழிவகுக்கும்" https://www.bbc.com/tamil/articles/clkexdv0r2ro1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
யாழ் களத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவதால்… @nilmini ஐ போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றேன். 🙂1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
🤣 ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- ஏமாற வேண்டாம்! 8 நிறுவனங்களின் பட்டியல் வெளியானது!
பிரமிட் திட்டம் என்றால்…. தமிழில் எழுத பஞ்சியாக உள்ளது. இந்த விக்கி இணைப்பில் விளக்கம் உள்ளது. சுருக்கமாக: ஒரு போலியான முதலீட்டு கூம்பகம் (பிரமிட்). இதில் ஒவ்வொருவரும் மேலும் மேலும் ஆட்களை முதலிட வைத்து அதன் மூலம் தாம் பிரமிட்டின் முதல் படிக்கு போய் பெருந்தொகை பணத்தை ஈட்டல். நிகழ்தகவின் படி இந்த பிரமிட்டில் ஆரம்பத்தில் இருப்போர் மட்டுமே இலாபம் ஈட்டுவர். பெரும்பாலான முதலீட்டாளர் மேலே போகும் அளவுக்கு புதிய முதலீட்டாளர்கள் சேர மாட்டார்கள். ஆகவே ஆரம்பித்த சிலரை தவிர மீதம் ஆட்கள் நட்டம் அடைவர். https://en.m.wikipedia.org/wiki/Pyramid_scheme முன்னர் இலங்கையில் பல வகைகளில் இந்த களவு நடந்தது. இப்போ கிரிப்டோ புது டிரெண்ட் என்பதால் அதையும் வைத்து கிளம்பியுள்ளார்கள்.1 point- அப்பா உடனே வாங்கோ.
1 pointபாவம் சிறியர்! அவர்கள் பெயர் வைப்பதில் முந்திவிட்டார்கள். பரவாயில்லை, நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன். களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1 point- "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
1 point- அப்பா உடனே வாங்கோ.
1 pointநன்றி அல்வாயன். சன்பிரான்சிஸ்கோவில் இன்னுமொரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.1 point- "சாதனைகள் தூரத்திலில்லை"
1 pointஇதில் கற்பனைகள் பரவி இருந்தாலும் சாதாரண வகுப்பு, உயர் வகுப்பு, ஆசிரியர் சிவசேகரம் போன்றவற்றில் சில உண்மைகள் அடங்கித்தான் உள்ளன. அது மறுப்பதற்கு இல்லை இந்த ஆசிரியரை நான் மறக்கவே முடியாது. என்றாலும் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் பார்வையாளராக ஜூலை 2019 இல் நான் பங்குபற்றிய போது, சிவசேகரம் ஆசிரியரின் தங்கையை அங்கே கண்டேன். அவர் தான் தன் அண்ணா இறந்துவிட்டார் என்ற செய்தியை எனக்கு கூறினார். அதன் பின் தான் இந்த கதை அண்மையில் எழுதினேன் , பல கற்பனைகளையும் சேர்த்து நன்றி1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 124 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார். 14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱 விராட் 124க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .1 point- அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா? சந்தோசம் 🤣. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும். 2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல. எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும். https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in. இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம். இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது. வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர். # கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point1 கப் கோதுமை மாவில் இதுவரை சுவைக்காத முற்றிலும் புதுமையான டிபன் ரெசிபி1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.1 point- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
@Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂1 point- இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
1 point- ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கா இஸ்ரேல் பிரிட்டன்.. மேற்கு ஐரோப்பா.. சண்டித்தனத்தில் நம்பிக்கை வைப்பது அதிகரித்து விட்டது. மேலும் அமெரிக்காவின் எதேச்சதிகார.. ஏகாதபத்தியம் தலைவிரித்தாடுவதும் அதிகரித்துவிட்டது. ஐநா வை கூட இஸ்ரேல்.. உக்ரைன் செவிமடுக்காத அளவிற்கு அமெரிக்காவின் செல்வாக்கு கூடி இருப்பது மொத்த உலகிற்கும் அதன் நலனிற்கும் நல்லதல்ல.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்1 point- இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.1 point- பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
வங்கிளாதேஸ்ச சொந்த மண்ணில் வெல்வது கடினம் ஆனால் 20 ஓவர் தொடரில் இலங்கை வெற்றி ஒரு நாள் தொடரில் வங்களாதேஸ் வெற்றி 5நாள் தொடரில் இலங்கை அமோக வெற்றி....................... இப்ப எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிரம் முடிந்து விடுது விளையாட்டு சம நிலையில் முடியனும் என்றால் மழை வந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வருடத்தை முன்னோக்கி பார்த்தா நிறைய விளையாட்டு சம நிலையில் முடியும்.....................20 ஓவர் வந்தாப் பிறக்கு ஜந்து நாள் விளையாட்டை கூட 20ஓவர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகினம்😁.................................1 point- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்... வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சீமேந்துத் தொழிற்சாலை அமையக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவது அரசியல் விடயமா? எப்படி? ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், காங்கேசந்துறைத் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் ஏன் இன்று தரிசாகக் கிடக்கின்றன என்று சென்று பாருங்கள். அப்பகுதிகளில் காணப்படும் பாரிய அகழிகளால் ஏற்பட்டிருக்கும் சூழல் நாசத்தைச் சென்று பாருங்கள். குறுகிய கால வேலைவாய்ப்பிற்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு பிரதேசத்தினை நாசமாக்குவதைத் தடுக்க அப்பிரதேச மக்கள் போராடுவதை அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.1 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 pointபாடல்: நான் ரொம்ப பிசி படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க இசை: டி.இமான் பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன், சரண்யா கோபிநாத் வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா Subscriber not reachable at the moment மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன் நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப் ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக் Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ நான் எத்தன தடவ சொன்னாலும் நீ சுத்தம காதுல வாங்கிகல நா சொலுரது உனக்கு கேக்குதா இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன் கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ கார்டுக்குள்ள யெல்லா காட்டு பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா மனதை மயக்கும் மாய வா வா வா வா ஏன் வயதை நீயும் வெல்ல வா Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று கட்டு கட்டு தாலி கட்டு பேபி ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன் நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம் நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி1 point - "நானே வருவேன்"
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.