Leaderboard
-
MEERA
கருத்துக்கள உறவுகள்14Points5418Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19134Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46793Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/26/24 in Posts
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம் உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட) இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made6 points
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். நாங்கள் என்ன செய்தோம். போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம். 2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள். ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?4 points
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
@goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால் இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில் கிடைக்காது.4 points
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.3 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வீரத்துடன் போட்டியில் குதித்துள்ள @தமிழ் சிறி. மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையளுக்கு ஒரு சல்யூட்🤪 பாத்தியளே பெரிசுக்கு குசும்ப🤣. விட்டால், வீரப்பா, நம்பியார், செந்தாமரை, ரகுவரன், பிரகாஷ்ராஜ் எண்டு போடுவார் போல கிடக்கு🤣3 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் நினைக்கிறேன் பையன் போனில் இருந்து வேக வேகமாய் அடித்து பதிவுக்கு அனுப்புவதால்தான் எழுத்துக்கள் சரியாக வேகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்பிழைகள் ஏற்படுக்கின்றன ....... அதைக் கவனித்து சரிசெய்ய அவருக்கு அவகாசம் குடுக்காமல் வருகிற எல்லோரும் அவரோடு மோதினால் அவரால் என்ன செய்ய முடியும்.......மற்றும்படி நான் பார்த்தவரை பையனுக்கு நல்ல தமிழ் விளக்கம் இருக்கு........! 😁2 points
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இத வாசிக்க வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள் பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣 இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ? ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂2 points
-
சந்தி சிரிக்கும் திருமா அரசியல்.
2 pointsதமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.2 points
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100% அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள். U.K. வரும் எல்லா கொள்கலன்களும் திறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசோதித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு இறக்குமதியாளர்கள் பயப்படுவார்கள்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
கோசானின் புண்ணியத்தால் எம்மவர்களின் இறக்குமதி வியாபாரம் தொடர்பாக ஆராய வெளிக்கிட்டு இப்ப பல விடயங்கள் தெரிய வந்துள்ளது.2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
யாழ்ப்பாணம் மயோசின் காலத்தில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்களின் எச்சங்கள் மூலம், பின்னர் தரை உயர்வால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் (கிட்டதட்ட 20 மில்லியன் ஆண்டுகள்). அதனால் யாழ்ப்பாணம் சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசம் என வகைப்படுத்துகிறார்கள் (அதனால நிலத்தடி நீர் கொண்டுள்ளது). இந்த சுண்ணாம்புக்கற்கள் உறுதியானவை இல்லை, அதனாலேயே சில குகை அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இலகுவாக காணப்படுகிறது. இந்த சீமெந்து தயாரிப்பு நிலத்தடி நீரினையும் யாழ்ப்பாண நிலப்பரப்பின் உறுதித்தன்மையினையும் பாதிக்கும் அத்துடன் காற்று மாசுபட்டுதலலால் மக்களுக்கு பெருமளவில் சுவாச சம்பந்தமான நோய் ஏற்படுவதுடன் புற்றுநோயும் ஏற்படலாம். தற்போது சுவாச சம்பந்தமான நோய் உலகில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது, இந்த துறை ஒரு செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக உள்ளது இந்த நோய் ஒரு நீண்ட கால நோயகிவிடுவதால் இந்த வியாதிகளுக்கான மருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிற்கும் அதிகரித்து செல்லுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் மூலம் பெறுவதினை விட பல மடங்கு அந்த மக்கள் இழப்பார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னரும் கிளிங்கரில் (சீமெந்தாக இல்லாமல்) தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக நினைவுள்ளது சின்ன வயதில் தெருவில் பச்சை சிறிய கற்கள் பார்த்த நினைவுள்ளது. மக்கள் சிந்தனையில்லாத தலைவர்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டங்களால் எந்த பிரயோசனமும் கிடையாது என்றே நினைக்கிறேன், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆகவேண்டும் எனும் நிலையில் எமது மக்களின் நிலை!2 points- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
2 points- புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
படித்த முட்டாள்கள் நல்லதொரு பெயர் 😃1 point- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
நானும் ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதில் சிங்கம் தான். எங்கடை ஆக்களுக்கு போத்தில் தூள் இல்லையெண்டால் சமைக்கவே தெரியாது எண்ட முடிவுக்கு வரலாம். உங்களுக்கு உறைப்பு காரம் வேணும் எண்டால் உறைப்பு பச்சை மிளகாயை வெட்டி போடலாம் இல்லை செத்தல் மிளகாயை நொருக்கிப்போட்டு போடலாம்.. ஆனால் போத்திலில் வரும் மிளகாய் தூளை என்றுமே பாவிக்காதீர்கள். இது என் 25 வருடங்களுக்கு முன்னரான சொந்த அனுபவம். வயிற்று வலி உபாதைகளும் அதற்கான பரிசோதனைகளும் என்னை ஒரு வழி பண்ணி விட்டது. இது எனது சொந்த அனுபவம் மட்டுமே. மிளகாய்த்தூள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கெடுதல் என நான் சொல்ல வரவில்லை. என் தனிப்பட்ட கருத்து இது யாழ்களத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் இந்த என் கருத்தை நீக்கி விடுங்கள். @இணையவன் @நிழலி1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தலைவரே உங்களுக்கு அறிவோ அறிவு.................எப்படி கண்டு பிடிச்சிங்கள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேகமாக எழுதும் போது சில எழுத்துக்கள் சரியா ரைப் பண்ணு படுதில்லை காரணம் கை நிகம் வளந்தால் இன்னொரு எழுத்தையும் கூட பதியுது நிதானமாய் எழுதினால் ஒரு பிரச்சனையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட தட்ட 9வருடமாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சா......என்னா அடி ........ நாய் பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........! 😂1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- "நிம்மதியைத் தேடுகிறேன்"
1 pointவாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- "நிம்மதியைத் தேடுகிறேன்"
1 point1 point- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இந்தியாவில் இருந்து தானே சகல சாமான்களும் வருகின்றன?1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
சிலவேளை பிஜேபி வரக்கூடாததிற்காக திமுக காங்கிரசுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு நடந்த தேர்தலில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தலில் மக்கள் மகிந்தா தோற்பதற்காக சரத் பொன்சேகாவுக்கு அதிகளவு வாக்களித்தார்கள். அத்தேர்தலில் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரத்னா , சிவாஜிலிங்கத்துக்கு யாழில் குறைந்த வாக்குகளே கிடைத்தது. அத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் சரத் பொன்சேகா 63.84%. மகிந்தா 24.75% சிவாஜிலிங்கம் 1.8% விக்கிரமபாகு கருணரட்னா 0.63% வீத வாக்குகளை பெற்றார்கள்.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 51 point- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.1 point- புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
பணம் சேர்க்க வந்து விடுவார் கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ??1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
உங்களுக்கு தெரியுமா, யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான தமிழரசு கட்சியின், மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன. கூறப்பட்ட காரணம், இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை, அதன் பெருமைகளை அழிக்கவே அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும். அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான அபிவிருத்தி திட்டங்கள் கூட தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர். அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது. அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன. சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும். ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார். இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம். இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் ........! 👍1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- Lunch Box (சோறு)
1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
மன்சூர் அலிகான் 1994 காலப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு . (அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். ) 1999 இல் Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் கிட்டதட்ட ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார். ( புதிய தமிழகம் இம்முறை அதிமுக கூட்டணி). 2009 இல் சுயேட்சையாக கேட்டார். (நாடாளுமன்ற தேர்தல்). 2019 இல் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதன் பிறகு ‘தமிழ்த் தேசிய புலிகள்’ என்ற கட்சியை உருவாக்கினார். இப்பொழுது காங்கிரஸ். அடுத்தது ?1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
உங்கள் கொள்கையை ஏற்கனவே அறிந்ததுதானே. ஏனவே ஆச்சரியம் ஏதுமில்லைலை.1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
பல வாட்டி அதை சொல்லி பெரும் தலைவரை புகழ்ந்து இருக்கிறார்.......................பெரும் தலைவர் காலத்தில் இருந்த காங்கிரஸ் மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவோடு இருந்தவர்கள் பெரும் தலைவரின் மறைவுக்கு பிறக்கு தமிழ் நாட்டில் காணாம போச்சு காங்கிரஸ் 2013ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராக அகிம்சை வழியில் போராடின மாணவர்களை தமிழ் நாட்டு காங்கிரஸ் குண்டர்கள் தாக்கினார்கள் அதில் ஒரு சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது உறவே......................... 10ஆண்டு ஆட்சியை இழந்து விட்டினம் மோடி வட நாட்டு மக்களின் ஆதரவோடு மீண்டும் பிரதமர் ஆகுவார் அடுத்த 5 ஆண்டுக்குள் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..............................1 point- "தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
நான் இலங்கை சென்ற போது ஆசைபட்டு அரச போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய விரும்பியதை உறவினர்கள் விரும்பவில்லை.1 point- அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
நாங்கள் கொழும்புக்கு போறம்....😂 நாலு கொத்துரொட்டி கடை திறக்கிறம்....😁 வெள்ளவத்தையிலை அஞ்சு...அஞ்சு வடே வடே கடை திறக்கிறம்...🤣 சிலோன்ரை ஒட்டுமொத்த கடனையும் அடைக்கிறம்.... 🙃 திரும்பி வாறம் ஜெயவே வா 😎1 point- அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
1 pointநான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை? ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் நா.க வில் இருந்து விலகிச் சென்ற சிலர், திமுக வில் இணைந்து, திராவிட சிந்தாந்தத்தை போற்றி வருவது போன்றது தான் மன்சூர் அலிகானும் ஈழத் தமிழர்களை நாசம் செய்த செய்த காங்கிரஸை நா.க வில் இருக்கும் வரைக்கும் எதிர்த்து விட்டு, இன்று அதே காங்கிரசில் சேர்ந்து அவர்களைப் போற்றுகின்றார்... அதுவும் சோனியாவின் மகள் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றார். இந்திய, தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கையில் இன்றிருக்கும் தமிழ் கட்சிகளும் ஒரே குட்டைக்குள் ஊறிக் கிடக்கும் கட்சிகள். இவற்றில் இது நல்லது, அது நல்லது என்ற வித்தியாசம் எதுவும் இல்லை.1 point- "விசுவாசம்"
1 point"விசுவாசம்" நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம் அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம். ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல! எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது. நாம் அந்த நிகழ்வின் பின், மாற்று வழியாக நீண்ட தூரம் வாடகை மோட்டார் வண்டியில் பயணித்தே பட்டணம் போனோம். ஆனால் இன்றைய வாழ்க்கை செலவின், எதிர்பாராத அதிகரிப்பு அதற்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டது. எனவே நான் என் தங்கையிடம், ' என் குட்டி செல்லமே, என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு வா, அப்படி என்றால் பயம் இல்லை' என்றேன். ஆனால், என் புத்திசாலி தங்கையோ, 'இல்லை அண்ணா, நீங்களே என் கையை பற்றிக் கொண்டு வாருங்கள்' என்றார். எனக்கு ஒரே கோபம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்னை சமாளித்துக் கொண்டு, தங்கையிடமே ஏன் என்று விளக்கம் கேட்டேன். தங்கையோ, சிரித்துக் கொண்டு, அதில் பெரிய வித்தியாசம் உண்டு என்றார். 'நான் உங்கள் கையை பிடித்துக் கொண்டு போனால், ஏதாவது தற்செயலாக நடந்தால், அநேகமாக நான் பிடியை தளர்த்தி விடுவேன், ஆனால் அண்ணா, நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் கட்டாயம், உயிரைக் கொடுத்து, உங்க பிடியை விடமாட்டீர்கள்' என்றார். அப்ப தான் என் தங்கை என் மேல் வைத்த மாறாத பற்று, நம்பிக்கை எவ்வளவு என்று உணர்ந்தேன்! தங்கை சொன்ன பாடம் எனக்கு புது தெம்பையும் தந்தது. பிழை விடுபவர்கள் [ஆசிரியர் போல்] , ஏமாற்றுபவர்கள் [அரசியல்வாதிகள் போல்] தவறான வழியில் போகாமல் [விழாமல்] தடுக்க வேண்டின் , நாம் அவர்களை பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் நாம் இல்லை என்றால், தாம் இல்லை என்பதை உணர வேண்டும். ஆமாம் அவர்களின் நம்பிக்கை, பற்று [விசுவாசம்], எமக்கு அவர்கள் மேல் இருப்பது போல, அவர்களுக்கும் எம் மேல் இருக்கவேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- "தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest"
உங்க கருத்து முற்றிலும் சரி , வாழ்த்துக்கள் !1 point- கருத்து படங்கள்
1 point1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
1987 முதல் 1990 வரையான இந்திய ஆக்கிரமிப்புப்படை தமிழர் தாயகத்தில் செய்த அட்டூழியங்களை வெற்றியாக ஒருவரால் பார்க்கமுடிகிறதென்றால், அந்த அட்டூழியங்களில் பங்குகொண்ட ஒருவராலேயே அது முடியும் என்பது வெளிச்சமாகிறது. புலிநீக்கம் செய்துவிட்டு இந்திய கூலிகளின் மீளுருவாக்கம் செய்யலாம் என்கிறீர்களா? எதை மறைத்தாலும், மண்டையில் உள்ள கொண்டையை மறைக்க முடியாது போய்விட்டதே??!!1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
பத்மநாபாவின் கூலிப்படையான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பே வடக்குக் கிழக்கில் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் இணைந்து தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தனது பொம்மையான வரதராஜப் பெருமாளையும், சுரேஷ் பிரேமச்சந்திரனையும் கொண்டு அவர் தமிழர் தாயகத்தில் செய்தது அக்கிரமங்களேயன்றி வேறில்லை. இந்திய ரோவின் பூரணப் பாதுகாப்பில் இருந்துகொண்டு, தான் எந்த மக்களுக்காகப் போராடக் கிளம்பினாரோ அதே மக்களை அடிமைகளாக, அந்நியப் படையொன்றின் உதவியுடன் ஆண்டபோது , தமிழ் மக்களின் விடுதலை வீரன் எனும் தகமையினை இழந்து பலநாளாயிற்று. கொல்லப்பட்டபோது அவர் அந்நிய ஆக்கிரமிப்பு அரசொன்றின் கைக்கூலிதான். ரஜீவினல் தமிழர் அடைந்த நலன் என்று எதுவும் இல்லை. அவர் செய்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கானது மட்டுமே. அவரைக் கொன்றதால் புலிகள் அடைந்ததும் ஒன்றுமில்லை. கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை. புலிநீக்க அரசியல் தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. இதனைச் சொல்வதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் அராஜக ஆட்சியை நியாயப்படுத்துவதோடு, இந்திய நலன்காக்க உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இவர் நியாயப்படுத்துகிறார். ஆக, இவர் வருவதும் பதம்நாபா, வரதர் முகாமிலிருந்துதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?