Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 06/02/24 in all areas
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
5 pointsஒரு பெண் சுயமாக வாழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ தலைக்கணம் என்று பெயர் வைக்காதீர்கள்..அவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் விருப்பு வெறுப்புக்கள் என்று எவ்வளவோ இருக்கும்.எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் வெளி உலடகில் தானும் ஒரு ஜீவன் என்று வாழ முற்படுகிறார்கள்..அது சரி சக கருத்தாளரை ஒழுங்காகத் தானே மதிக்கிறீங்கள் எல்லோரும்.5 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான் புலம்பெயர்ந்து வந்து நான்கு வருடங்கள் என் மனைவி பிள்ளகளப் பார்க்க முடியாது தவித்த தாக்கத்தையும் சோகத்தையும், திரும்பவும் யாழ்களம் செல்ல இயலாதிருந்த இரண்டு வருடங்களில் அனுபவித்தேன், இடைஇடையே சிறீ மற்றும் வன்னியரின் இவர்களின் தொடர்புகள் சற்று ஆறுதல் தந்ததை மறுக்க முடியாது. இந்நேரத்தில் தமிழ் சிறீ அவர்கள், கள உறவு குமாரசாமி அவர்களை நாளை சந்திப்போமா என்று கேட்டது கனவுபோல் இருந்தது. எங்கு எப்படி எவ்வாறு என்பதெல்லாம் விபரமாகக் கூறினார், சிறீயருக்கும் கால்கள் இன்னமும் பூரண குணமாகாதபடியால் அவர் மகன் அல்லது மகள் கூட்டிச்செல்வார்கள் என்ற எண்ணத்தில் சரி வருகிறேன் என்றேன். மறுநாள் காலை 10.30மணிக்கு ஒரு வியாபார நிலையத்தில் சந்தித்துச் செல்வதாகவும், என்மகள் என்னை அந்த நிலையத்திற்குக் கூட்டிச் செல்வதாகவும் முடிவாயிற்று. சூரியன் பார்த்து நேரம் கணிக்கும் பண்பாட்டிலிருந்து பாஞ் இன்னமும் விடுபடவில்லையோ என்ற ஐயத்தினால் போலும் “பாஞ் எங்குள்ளீர்கள்” என்ற சிறீயரின் கேள்வி என் போனில் ஒலித்தது. போன் ஒலிக்கவும் நாங்கள் அவருக்குக் கைகாட்டிக் கடக்கவும் சரியாக இருந்தது. மகிழூந்தில் சிறீயர்மட்டுமே இருந்தார். “உங்களுக்கு கால்கள் இயலுமா? தூரம் ஓட்ட முடியுமா? என்று கேட்டதுதான் தாமதம், அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததுபோல் திறப்பை என்னிடம் தந்துவிட்டார். நான் பலமுறை ஓடி அனுபவப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, சில மணித்துளிகளில் மகிழூந்து வைபவம் நடைபெறும் மண்டபத்தை அடைந்தது. நாங்கள் அழையா விருந்தாளிகள். ஓசிச் சோற்றுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று விழி பிதுங்கிநிற்க “அண்ணைவாங்கோ” என்ற வரவேற்பு அதிசயிக்கவைத்தது. பல காலமாக சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காத என் நண்பன். “வாங்கோசிறி” தமிழ்சிறியோடு வேலைபார்த்த அவரது நண்பன். மனம் அமைதிபெற வந்தவிடையத்தை ஆரம்பித்தோம், “கனோவரில் இருந்துவந்த குமாரசாமி என்பவரைத் தெரியுமா?” எங்களைப் பார்த்து புன்முறவல் பூத்தவர்கள் எல்லோரிடமும் இந்தக் கேள்வி பாய்ந்தது. முகமெல்லாம் மலர்ந்த புன்முறுவலோடு பட்டுவேட்டி சரசரக்க ஒரு குமரன் வரவே அவரிடமும் எங்கள் கேள்வி தொடர்ந்தது. அவரோ வாருங்கோ இருங்கோ” என்று எங்களை வரவேற்றவர், பக்கத்தில் ஒருவருக்கு சைகைகாட்ட காப்பியோடு பலகாரத்தட்டுகள் பறந்து வந்தன. குமாரசாமி அவர்களின் தமிழ்மொழி ஆற்றலை அவரது எழுத்தில் அறிந்து வியந்தேனே தவிர அவரோடு அதிகம் கதைத்துப் பேசியதில்லை, ஆனால் அதிகம் கதைத்து குரல் அறிந்த தமிழ்சிறி அந்தக் குமரனைக் கட்டியணைத்து சாமியண்ணை என்றார். மொட்டைத் தலையோடு வயதான ஒரு பெரியவராக என் மனதில் பதித்துவைத்த குமாரசாமியரை குமரன்சாமியாக கண்ட அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில்தான் குறைந்த வெற்றி இலக்காகிய 137 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை இழந்து அடையமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் என எல்லோருமே கணித்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் இரு போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 4 2 வீரப் பையன்26 4 3 நிலாமதி 4 4 குமாரசாமி 4 5 தியா 4 6 தமிழ் சிறி 4 7 நுணாவிலான் 4 8 பிரபா USA 4 9 வாதவூரான் 4 10 ஏராளன் 4 11 கிருபன் 4 12 ரசோதரன் 4 13 அஹஸ்தியன் 4 14 கந்தப்பு 4 15 எப்போதும் தமிழன் 4 16 நந்தன் 4 17 நீர்வேலியான் 4 18 கல்யாணி 4 19 கோஷான் சே 4 20 சுவி 2 21 புலவர் 2 22 P.S.பிரபா 2 23 வாத்தியார் 24 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எமது அன்றைய காலம் போய்....இன்றைய சமுதாயம் பல்கி பல வழிகளில் பரந்து விட்டனர். விரிவடைந்த எமது சமுதாயங்களில் ஒருவரையொருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் விரைவில் வரலாம்.யார் கண்டார்? வெகு விரைவில் உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா நீங்கள் சிறித்தம்பியர் நான் என குறுகிய சந்திப்பு இல்லாமல்.....பல மணி சந்திப்பாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். இதனுள் பழைய/புதிய உறவுகளும் இணைந்து கொண்டால் நிறை குட சந்திப்பாக இருக்கும்.4 points
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
3 pointsவிவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும். தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும். எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல். எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும். தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும். தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது. புத்து கண்டு கிணறு வெட்டு கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். காணி தேடினும் கரிசல்மண் தேடு. சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது. களர் கெட பிரண்டையைப் புதை களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும். கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும். ஆடிப்பட்டம் பயிர் செய். ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது. மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை. மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம். களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ. மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது. அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல். வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும். புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும். குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது. ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும். ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும். கூளம் பரப்பி கோமியம் சேர். கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும். ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும். தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம். நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும். கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை. களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும். சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும். ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம். ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும். கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும். விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.3 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
A/L Fail ஆன பிள்ளையள் இரவிரவா ஒரே அழுகை.... அப்புறம் என்னாச்சி..... கனடா போன பெடியளுக்கு ரெண்டு வருஷத்தால #PR வர வெளிநாட்டு சம்மந்தம் பேசுவம்னு சொல்லித்தான் தூங்க வைச்ச #VIP_1546... All reactions3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கவலையில்லை........முதல்பிடிக்கும் மீன் நாறும் .......! 😴3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வடை... வயித்துக்கு பிரச்சினையான சாமான் என்ற படியால், ஒன்பது உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரொன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்துடன் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய நால்வருக்கும் புள்ளிகள் இல்லை!3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பட்டு வேட்டி சரசரக்க அன்னநடை போட்டுக்கொண்டு காலை உணவு பகுதிக்கு போனால் எங்கடை சனம் ஒரு 30,40 பேருக்கு கிட்ட கோப்பை முழுக்க நிரப்பி வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்திச்சினம்...அதிலை பிரான்ஸ்,சுவீஸ்,நோர்வே,டென்மார்க்,மொரீசியஸ் எண்டு எங்கட சன கூட்டம்.....😎 எனக்கு தெரிஞ்சவையள் அங்கையிருந்து கையை காட்ட நானும் அவளையளோட இருந்து ஊர்க்கதையள் கதைச்சுக்கொண்டே ஒரு பாண்துண்டை கடிக்க வெளிக்கிட.......மனிசியிட்ட இருந்து ஒரு வாட்ஸ் அப் மசேஜ் வந்த சத்தம் கேட்டுது...அதை பார்த்தால் கட்டிக்கொண்டு வாறதை மறக்க வேண்டாம் எண்டு ஞாபகப்படுத்தியிருந்தார்.🤪 இதுக்குப்பிறகும் நான் வெறுங்கையோடை றூமுக்கு போனனெண்டால்.....வெளியிலை சொல்லேலாத அளவுக்கு சம்பவங்கள் பெரியாய் இருக்கும் எண்டதாலை....எதை கட்டிக்கொண்டு போகலாம் எண்டு மாஸ்ர் பிளான் போட வெளிக்கிட்டன்...🤣3 points
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
2 pointsமோசமான உணவு நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதுடன் பல நோய்களையும் உண்டு பண்ணுகிறது. எது மோசமான உணவு என்றால் எது மலிவானதோ, எளிதாக கிடைக்கிறதோ அதுவே மோசமான உணவு. கடந்த சில ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது. உடல் நலத்தை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இன்று அரிசி, கோதுமை விலை குறைவு, அதை விட மைதா விலை மலிவு. பலவிதமான காய்கறிகளையும் பனீர், டோபு, சிக்கன், சீஸ் உள்ளிட்ட புரதங்களையும் சேர்த்த சாலட்டைப் பண்ணுவதற்கு ஆகும் செலவுக்கு இரண்டு நாளைக்கு சோறு, குழம்பு வைத்து சாப்பிடலாம் (காய்கறி விலை மிக மிக அதிகமாகி விட்டது; சிக்கன் கிலோ முன்னூறைத் தாண்டி விட்டது. அரிசி விலை என்றுமே உயராது. இலவசமாகவே கிடைக்கிறது. மைதா விலை ஏறுவதே இல்லை.). ஒருவருக்கு ஒருநாளைக்கான 60-80 கிராம் புரதத்தை அடைய செய்யும் செலவுக்கு பத்து நாட்களுக்கு மாவுச்சத்து உணவுகளை ஜாலியாக சாப்பிடலாம். மேலும் காய்கறிகளை வாங்கி கழுவி நறுக்கி வாயிலிட்டு மென்று சாப்பிடும் சிரமத்துக்கு ரெண்டு தோசை ஊற்றி சாப்பிடுவது, புரோட்டாவை பிய்த்துப் போட்டு முழுங்குவது எளிது. மூன்று முட்டைகள் சாப்பிட்டால் ஒருநாளைக்குத் தேவையான புரதத்தின் நான்கில் ஒரு மடங்கே கிடைக்கும். நீங்கள் கவனமாக தேடிப் பிடித்து சாப்பிடாவிட்டால் மொத்த நாளுக்குமான புரதத்தை அடைய முடியாது. ஆனால் ஒருநாளைக்கான மாவுச்சத்தை ஒரே மதிய வேளை சாப்பாட்டில் அடைந்துவிடலாம். இது சாப்பாட்டுக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த உலகில் பயனற்றவை சுலபமாக, மலிவாக கிடைக்கும். கடந்த ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த மலிவான உணவை சுவையாக மாற்ற முடிந்ததும், அதன் உற்பத்தியை தொழில்மயமாக்கி அதை உறையிலிட்டு செயற்கை சுவையூட்டிகளையும் அதிக சர்க்கரையை / உப்பை சேர்த்து மலிவான விலையில் நமக்குத் தர முடிந்ததுதான். இதனால் இந்தியாவில் சாப்பிட உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் இன்று அனேகமாக இல்லை, ஆனால் சத்தான உணவு இன்றி நோயுறுபவர்கள் அதிகம். அமெரிக்காவில் இதைக் குறித்து செய்த ஆய்வில் வேலையின்றி தெருவில் வசிப்பவர்கள் அங்குள்ள பீட்ஸா துரித உணவுக் கடைகளில் இருந்து மீதமாகும் உணவை வாங்கி சாப்பிடுவதால் மிகவும் உடல் பருத்து பல நோய்களுடன் வாழ்வதைப் பற்றி கண்டறிந்தார்கள். அதாவது நாம் பகட்டு உணவாக கருதுவதே இன்று ஏழைகள் உண்டு உடல் நலிவது. இன்னொரு பக்கம், மேல்மத்திய வர்க்கமும் பணக்காரர்களும் இந்த சுவையான மலிவான உணவை விட்டு விலகி சுவையற்றதாக கருதப்படும் காய்கறிகள், சுட்ட கறி, மாவுச்சத்து குறைவான உணவுகளை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளில் இருந்து மத்திய வர்க்கம் வரை இன்று அதிகமாக கொழுத்து நீரிழிவு, மாரடைப்பு ஆகிய நோய்களால் தவிக்க மேல்மத்திய, மேற்தட்டினர் அதிக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இந்த மலிவான உணவைப் பற்றிப் பேசும் போது இன்று உடலுழைப்பு குறைந்துவிட்டதால் மாவுச்சத்து தேவைக்கு மிகுதியாகிறது எனக் கூறுகிறோம். இது உண்மையல்ல. 300-400 கிராம் மாவுச்சத்தானது கடுமையாக உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் அதிகமானதே. எந்த உடலுழைப்பாளியாலும் இந்தளவுக்கு உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது, சாப்பிட்டவுடன் தூங்கவே தோன்றும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உடலுழைப்பாளிகள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நொறுக்குத்தீனி, சாக்லேட், பிரியாணி, சரக்கு, பொரித்த கறித்துண்டுகள் என நள்ளிரவு இரண்டு மணிவரை உண்டார்களா? இல்லை. 2-3 முறைகள் தான் அவர்கள் உண்டார்கள். என்னதான் அரிச்சோறு உண்டிருந்தாலும் அவர்களால் 160 கிராமுக்கு மேல் மாவுச்சத்தை உண்டிருக்க முடியாது (அரைக்கிலோ சோறிலே கூட140 கிராம் மாவுச்சத்து தான்.). பிரச்சினை உடலுழைப்பு குறைந்ததல்ல நமது மலிவான உணவு உற்பத்தி மிகுந்துவிட்டதே. சூமோ மல்யுத்த வீரர்கள் ஒருநாளைக்கு 7000-10000 கலோரிகள் (சிலநேரங்களில் 20,000 கலோரிகள்) உட்கொள்வார்கள் எனில் நம்மில் பலரும் 5000 கலோரிகளாவது குறைந்தது சாப்பிடுகிறோம். நமது உணவுச்சந்தை அனைவரையும் சூமோ மல்யுத்த வீரர்களை போல சாப்பிட வைக்கிறது. நம் உடலால் இதை கையாள முடியவில்லை. சூமோ மல்யுத்த வீரர்களைப் போல நம்மால் 6-8 மணிநேரங்கள் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி செய்யவும் முடியாது. பிரச்சினை நம் உடலுழைப்பு இன்மை அல்ல. இன்றைய நோய்வாய்ப்பட்ட நவீன சமூகம் மலிவான உணவு சந்தையின் சோதனை எலிகள் மட்டுமே. இந்த தொழில்மயமாக்கப்பட்ட உணவுச்சந்தையில் இருந்து விடுபடும் போதே நம்மால் தரமான உணவை நோக்கி கவனம் செலுத்த முடியும். காய்கறிகளின், பழங்களின், புரத உணவின் விலையை குறைக்க முயல முடியும். ஜப்பானியர்கள் சோயா உணவுகளை புரதத்துக்காக பயன்படுத்துவது இதற்கு நல்ல உதாரணம் - அவர்கள் சோயாவை டோபூ, மிஸோ, நாட்டோ என பலவிதங்களில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருநாளைக்கு தேவையான புரதத்தின் பாதியை அனேகமாக அவர்கள் சோயாவில் இருந்து பெறுகிறார்கள். மிருக கறியைப் போல் அன்றி சோயா உணவில் கொழுப்பு மிக மிக குறைவு. (சோயாவில் உள்ள ஐசோபிளேவேன்கள் ஆபத்து விளைவிப்பது மிக மிக அதிகமாக தினமும் உட்கொள்ளும் போது மட்டுமே. ஜப்பானியர்களுக்கு அதனால் எஸ்டிரோஜென் பிரச்சினையே ஏற்படுவதில்லை. பாரம்பரிய ஜப்பானியர் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள்.) அவர்களுடைய மரபான உணவு புரதத்தை அதிகமாக இவ்வாறு சோயாவில் இருந்து இயற்கையாக கிடைக்கும் மீனில் இருந்து பெற்றுத் தருகிறது. நார்ச்சத்தும் ஊரில் கிடைக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது வழி கிடைக்கிறது. மேலைநாட்டு உணவுகளின் தாக்கம் வரும்வரை ஜப்பானியருக்கு சத்தான உணவுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. சத்தான உணவுகளை மலிவாக அவர்கள் உற்பத்தி செய்தார்கள். ஆனால் மேற்கத்திய மலிவான உணவுகள் பரவிட, மூன்றாம் உலக நாட்டு அரசுகள் அரிசி, கோதுமை உற்பத்தியிலே கவனம் செலுத்த சத்துணவுகளின் (காய்கறிகள்) உற்பத்தி குறைந்து விலை அதிகமாகியது (நம்மூரில் பசுமைப்புரட்சி). முதலாம் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிய, வேலைகள் குறைய அங்கும் சத்தான உணவு விலை அதிகமாகி பீட்ஸா, சாண்ட்விட்ச் ஒப்பீட்டளவில் மலிவாகியது. இப்போது இந்தியாவில் ஒரு கிலோ கேரட் வாங்கும் பணத்தில் பாதியிருந்தாலே நீங்கள் ஒரு பெரிய கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். மூன்று பாக்கெட் கிரீம் பிஸ்கட் / ஐந்து கேக்குகள் / பெரிய சாக்லேட் பார் சாப்பிடலாம். கவனியுங்கள் - சர்க்கரை, மைதா, எண்ணெய்யால் செய்யப்படும் அவசியமற்ற உணவுகளின் விலை பெரிய மாற்றமின்றி தொடர்கிறது. ஆனால் காய்கறி, பழம், தண்ணீர் என அவசியமானவற்றின் விலை அதிகமாகி விட்டன. பொதுவாக தேவை அதிகமாக விலை அதிகமாகும் என்பார்கள். இது உண்மையெனில் சர்க்கரை, மைதாவின் விலையே உலகெங்கும் அதிகமாக வேண்டும். ஆனால் எது குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதன் விலையே அதிகமாகிறது. ஏனெனில் சந்தை அதன் உற்பத்தியை திட்டமிட்டு குறைக்கிறது. ஒரு கிலோ வெள்ளரிக்காயின் விலைக்கு நான்கில் ஒரு மடங்கு இருந்தால் இரண்டு சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். ஒரு கிலோ நாட்டுத்தக்காளியின் விலைக்கு 12 சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். நமது உணவு சந்தையும் அரசும் சேர்ந்து ஏன் துரித உணவை மட்டும் அனைவராலும் வாங்கக் கூடிய அளவுக்கு மலிவாக வைத்திருக்கிறது? ஒரு நல்ல கடையில் இரண்டு தோசை சாப்பிடும் பணத்தில் நீங்கள் ஆறு வேளைகள் துரித நூடில்ஸ் சாப்பிட முடியும் எனில் இந்த சந்தை நம் சாமான்யர்களிடம் சொல்வதென்ன? அரசும், சந்தையும் நமது பெரும்பான்மை மக்கள் சமூகத்தை வெறுமனே மைதா, சர்க்கரை, ரசாயன நிறமூட்டி, சுவையூட்டிகளை மட்டும் சாப்பிட விரும்புகின்றன. இன்று சின்ன குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை பசிக்கும் போது சாப்பிட விரும்புவது மாகி நூடுல்ஸ் எனும் விஷத்தை தான். சுவையினால் மட்டுமல்ல அதன் விலையினாலும் தான். சமச்சீராக உணவு உண்ட மரபான சமூகங்களையும் இவர்கள் பருவச்சூழலை மாற்றி, அரசின் திட்டங்களை திருத்த வைத்து, சந்தையின் போக்கை மாற்றி மலிவான சத்தில்லாத உணவுகளை மட்டும் உண்ண வைத்து கெடுத்துவிட்டார்கள். இந்த சந்தையை ஆதரிப்பவர்கள் இரண்டு பெரும் இந்திய பஞ்சங்களைக் குறிப்பிட்டு இன்று நாம் பசியில்லாமலாவது இருக்கிறோமே, நவீன சந்தை நம்மை காப்பாற்றவே செய்துள்ளது என்பார்கள். ஆனால் ஒரு வசதியான உண்மையை மறைத்துவிடுவார்கள் - அந்த பஞ்சங்கள் காலனிய ஆட்சியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. வெள்ளையர்கள் வரும் முன்பு இங்கு அப்படியான பஞ்சங்கள் இருக்கவில்லை. காலனியாதிக்க அரசு நமது வளத்தை முழுமையாக சுரண்டி, உற்பத்தி முறைகளை ஒழித்து, பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியதாலே நாம் மீண்டு வர அரை நூற்றாண்டுக்கு மேலானது. அல்லாவிடில் நாம் உலகின் வளமான தேசங்களில் ஒன்றாக இருந்திருப்போம். நவதாராளவாதம் வழியாக தொடுக்கப்படும் இரண்டாம் நவகாலனியாதிக்க யுத்தமே இந்த மலிவான உணவுகளால் நம் சந்தையை நிறைக்கிறது. அதுவே நம்மை நோயாளிகளாக, பலவீனர்களாக ஆக்குகிறது. என்ன வித்தியாசம் எனில், முன்பு போல் அன்றி, நாடுகள் குறித்த பாரபட்சமின்றி அமெரிக்கர்களையும், இங்கிலாந்தினரையும் நம்மை இந்த தாராளவாத உணவு லாபி ஒரே போல அழிக்கிறது. உலகம் முழுக்க மெலிந்த எலும்புக் கூடுகளுக்குப் பதில் கொழுத்து நோய்வாய்ப்பட்டவர்கள். முன்னவர்கள் விரைவில் செத்தார்கள் எனில் பின்னவர்கள் மெல்ல மெல்ல துன்புற்று சாகிறார்கள். Posted 3 hours ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/06/blog-post_1.html @Justin அண்ணை உங்கள் கருத்துகளை சொல்லுங்கோ.2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
@goshan_che @பெருமாள் இரண்டு பேரையும் கொஞ்சநாளாய் காணேல்லை. நான் நினைக்கிறன் இரண்டு பேரும் ஒரே ஆள். வேறை வேறை ஐடியில வந்து எழுதீனம் எண்டு நினைக்கிறன். 😂2 points
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
2 pointsஆரம்பத்தில் செய்தியின் பாரதூரத் தன்மையை உணராமல் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்துவிட்டேன். தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏 (கருத்தை நீக்கும்படி விரும்புவீர்களானால் நீக்கிவிடுகிறேன்)2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள். கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே..........2 points
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
சரி, பேசலாம். 2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்? ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம், 2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா? சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களே? ரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா? அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க முடியும்? நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்? ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா? மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன? 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்றத்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான். இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா? உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.2 points
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
2 pointsநம் பண்டைய விவசாயப் பழமொழிகள்... தவளை கத்தினால் மழை அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் தும்பி பறந்தால் தூரத்தில் மழை எறும்பு ஏறில் பெரும் புயல் மார்கழி மழை மண்ணுக்கு உதவாது தை மழை நெய் மழை மாசிப் பனி மச்சையும் துளைக்கும் தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு புற்று கண்டு கிணறு வெட்டு வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் காணி தேடினும் கரிசல் மண் தேடு களர் கெட பிரண்டையைப் புதை கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய் ஆடிப்பட்டம் பயிர் செய் விண் பொய்த்தால் மண் பொய்க்கும் மழையடி புஞ்சை மதகடி நஞ்சை களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ அகல உழவதை விட ஆழ உழுவது மேல் புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் கூளம் பரப்பி கோமியம் சேர் ஆற்று வண்டல் தேற்றும் பயிரை நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும் காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம் கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை சொத்தைப் போல் விதையை பேண வேண்டும் விதை பாதி வேலை பாதி காய்த்த வித்திற்கு பழுது இல்லை பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும். யாரையும் நம்பாதீர்கள். உழவே தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறி, கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும் - இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது. பகிர்ந்நால் நம் மண் மீண்டும் செழிக்கும். Joseph Anthony Raj2 points
-
விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்
1 point‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’ என அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும் என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர். வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர். யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் ஆகியவற்றை வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம் .1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இருப்பு கொள்ளாமல் இந்த இஸ்ரேல் காரனால் அவன் இவனுக்கு அடிக்க இவன் அவனுக்கு அடிக்க கடைசியில் கப்பல் பாதை சுற்றி வர அதே போல் பிளைட் கூட்டமும் ஏகத்துக்கு எகிறல் அடிக்க பெருமாளை இந்தபக்கம் வர விடாமல் பண்ணி விட்டது கொஞ்சம் பிசி தான் நிறைய சொரிலங்கன் ரென்சன் இருக்கு யாழில் இறக்கணும் அதுக்காவது வருவேன் சாமியார் 😀1 point
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உணவின் அளவு விடயத்தில் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான். வயசு போகப்போக பசி எனக்கும் கூடுகின்றது. உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கின்றது. வடை மட்டுமா அருகில் பாகு/உருண்டை/முறுக்கு என எது கிடந்தாலும் அம்பிடுவது எல்லாம் தட்டுடன்/பையுடன் காலியாகிவிடும். சாப்பிடுவதில் அப்படியொரு வெறித்தனம் இப்போது.1 point
-
அதிசயக்குதிரை
1 pointஆம்பளைங்க பெரும்பாலும் வீட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம், கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே.... Wife: இது யாரு Bret Lee-ஆ? Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர். Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்..... Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி... Wife: அப்போ Bruce Lee யாரு?.. Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு... Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ. Husband: அடியே... இது ஆக்ஷன் ரீப்ளேடி... கடவுளே..... Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே.... Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு... Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி.... Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?.... Husband: ???? Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?... Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்.... Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா... Husband: ? Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?... Husband: 72 in 36 balls.... Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்... இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!.. இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க... அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்.... Husband: அதாரு ஆனந்தி?... Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்.... நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா.... Husband: இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை...1 point
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்....😄 பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்.... உடனேயே வாட்ஸ் அப்பில் கவியரும் சிலநேரம் வரலாம் என எழுதியிருந்தார்....நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி எண்டு எழுதி அனுப்ப....அடுத்த கணமே அவர் வரமாட்டார். கவி சுற்றுலா போகின்றாராம்....வரமாட்டார் என அடுத்த மசேஜ் வந்தது.வந்த மகிழ்சியில் ஒரு கவலை என்றாலும்...... கட்டளைக்கமைய இரண்டு பணிஸ்களை கட்டிக்கொண்டு றூமுக்கு விரைந்தேன். அந்த 11.30 நேரத்தோட நிக்கணும் எண்ட ரெஞ்சன் கூடக்கூட நானும் குடும்பமும் அள்ளிக்கட்டிக்கொண்டு விழா மண்டபத்தை நோக்கி நெருப்பாய் பறந்தோம்1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் . 😀1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்த மைதானத்தில்தான் விளையாட போகுது. இந்தியா அணியில் 15 பேரில்சுழல் பந்து வீச்சாளர்கள் 4 பேர் இருக்கிறார்கள்1 point
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
1 pointயாயினி, நியாயம் மிகச் சரியான கருத்து. கபிதனின் பொறுப்பான பதில்.1 point
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இன்னும் ரணிலை மீட்பராக நினைத்து கொண்டிருப்பவர்களை விதண்டாவாதத்திற்கு நான் பிடிச்ச காலுக்கு 3 கால் என்று நிற்பவர்களாகவே என்ப்குப் படுகிறது. ரணில் ஒரு பதவியாசை பிடித்த சுயநலவாதி. அவர் ஒரு உண்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் மக்களால்நிராகரிக்கப்பட்டவர் இப்படிக் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகி உள்ளுராட்சிசபைத>மாகாணசபைத்தேர்தல்களை நடத்ததாது பின்போட்டு ஜனாதிபதித் தேர்தலையும் பின் போட சிந்திக்கிற ஒருவராக இருக்க மாட்டார். சிங்கள மக்களுக்கே ஜனநாயகத்தை வழங்காத ஒருவர் தமிழ்மக்களுக்கு எப்படி நியாயமான தீர்வை வழங்குவார்.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (03 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 22 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் ஓமான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஓமான் தியா இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 4) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA இரண்டுபேர் மாத்திரம் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் மற்றைய 21 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சிறிலங்கா வீரப் பையன்26 வாதவூரான் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?1 point
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்ப அண்ணை வடை சாப்பிட்டுக் கனகாலமோ?! நான் நம்பமாட்டன் நீங்கள் எங்களை உசுப்பேற்ற சொல்றது போல இருக்கு! இனி அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க!!1 point
-
சவக்காலைக்கு பெண்ணை அழைத்துச்சென்று தலையில் பெற்றோல் ஊற்றி தீவைப்பு : ஒருவர் கைது - யாழில் கொடூரம்!
1 pointசெய்தியின் பிரகாரம் பார்க்கும்போது கொலையை செய்த சந்தேகநபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இப்படியான குரூரமான கொலையை செய்யக்கூடும் என நான் நினைக்கின்றேன். போதையை அடித்துவிட்டும் கொலை செய்யப்பட்டதோ தெரியாது. அதுசரி, ஒரு ஆளின் தலையில் பெற்றோலை ஊத்தி கொழுத்துவது உங்களுக்கு நகைச்சுவையாக உள்ளதோ? 😟1 point
-
சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடுத்த விளையாட்டில் எல்லாருக்கும் இரண்டு புள்ளி கிடைக்கும் உறவுகள் பதட்ட பட தேவை இல்லை ஹா ஹா😁.........................வெஸ்சின்டீஸ் அணிக்கு மட்டைய தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைச்சா இன்று ரன்ஸ் மழை தான்😂😁🤣..........................................................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣 🤣.... நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த கனடா நண்பர்களை அமைதியாக நித்திரை கொள்ளவிடுங்கோ😁1 point- பெற்றோர் வடிவில் கடவுள்
1 pointஜூன் 1, 2024 இன்று உலக பெற்றோர் தினம் போரில் வாழ்ந்த குழந்தைகள் போல் போருள் வாழ்ந்த பெற்றோரும் பரிதாபத்துக்குரியவர்களே குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின இடியோசை மரண பயத்தைத் தந்தது குழந்தைகளின் பெறுமதியான நாட்கள் பதுங்குகுழிகளில் கழிந்தன இரைதேடும் பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின ஒருநாள் பெற்றோர் வடிவில் கடவுள் பூமிக்கு இறங்கி வந்தார் பானையில் எஞ்சியிருந்த பழைய சோற்றை கவளமாகக் திரட்டி குழந்தைகளுக்குக் கொடுத்தார் எஞ்சிய சோற்றில் ஒருபிடி தானுண்டு சிறுபசியாறினார் அன்றைய நாளின் பின்னிரவில் பதுங்கு குழியை குழந்தைகள் நிறைத்தனர் பதுங்குகுழி வாசலில் அமர்ந்தபடி ஆசீர்வதிக்க தன் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள் தியா - காண்டீபன்1 point- அமெரிக்க புளோரிடாவில் 12 வயது புருகத் சோமா தேசிய ஸ்பெல்லிங் பீ யில் வென்றுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்த ப்ருஹத் சோமா, 12, வியாழன் இரவு 96வது ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீயில் மற்ற ஏழு இறுதிப் போட்டியாளர்களையும் தோற்கடித்து, தேனீயின் இரண்டாவது ஸ்பெல்-ஆஃபில் தனது இறுதிப் போட்டியாளரை தோற்கடித்து வென்றார். ப்ருஹத் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார், அதே நேரத்தில் டெக்சாஸைச் சேர்ந்த 12 வயது பைசான் ஜாக்கி 20 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். ப்ருஹத் இந்த ஆண்டு சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் கைகுலுக்கினர். ஸ்பெல்-ஆஃப்கள் என்பது ஸ்பெல்லிங் பீயின் விதிகளின்படி, போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எஞ்சியிருந்தால், ஒரு சாம்பியனைத் தீர்மானிக்கச் செயல்படுத்தப்படும் சிறப்புச் சுற்றுகள் ஆகும். ஒரு எழுத்துப்பிழையில், 90 வினாடிகளில் அதிக வார்த்தைகளை சரியாக உச்சரிக்கும் போட்டியாளர் வெற்றி பெறுகிறார். "ஒரு ஸ்பெல்-ஆஃப் இருப்பதாக அவர்கள் முதலில் அறிவித்தபோது, என் இதயம் மிக வேகமாக துடித்தது, ஆனால் பின்னர் நான் உணர்ந்தேன் - நான் ஆறு மாதங்களாக ஸ்பெல்-ஆஃப்களை பயிற்சி செய்ததால் - 'ஒருவேளை நான் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கலாம்' என்பதை உணர்ந்தேன்," புருஹத் வெள்ளிக்கிழமை காலை CNN இன் ஜான் பெர்மன் மற்றும் கேட் போல்டுவானிடம் கூறினார். "மற்றும் நான் செய்தேன்." https://www.cnn.com/2024/05/30/us/scripps-spelling-bee-2024-winner/index.html1 point- அமெரிக்க புளோரிடாவில் 12 வயது புருகத் சோமா தேசிய ஸ்பெல்லிங் பீ யில் வென்றுள்ளார்.
அநேகமாக இந்தியர்கள் தான் வெல்லுவார்கள். இவர் 28 ஆவது தெலுங்கு பின்னணியை கொண்ட வெற்றியாளராம்.1 point- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
எனக்கும் இதே கேள்வி எழுந்தது ...ஆனாலும் நான் எழுதி அதை சர்ச்சையாக்கி விடுவதை விட அமைதியாக இருப்பதேே மேல் என்று போய் விடுவது வழமை.அதே மீனவர்கள் பிடித்து தரும் மீனைத் தானே நாம் வயிறாற கறியாக ,பொரியலாக , கூழாக உண்டு தள்ளுகிறோம்.அப்படி இருக்கையில் மீன் விபாரியின் மகன், மகள் என்று ஒருவரது வறுமையை சுட்டிக் காட்டி செய்தி பிரசுரிப்பதை விட இவர்கள் எல்லாம் பேசாமல் இருப்பதே மேல்.. நிறைய கஸ்ரங்களுக்கு மத்தியிலும் படித்து திறமைச் சித்திகளை பெற்று கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...அதே நேரம் குறைந்த சித்திகளை பெற்றவர்களும் மனம் தளராது மறுபடியும் முயற்சித்து முன்னுக்கு வரலாம் வர வேண்டும்.ஆகவே முயற்சியுங்கள்.1 point- ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
எமது ஊர் வேலிகளில் படர்ந்த உணவே மருந்து என்ற செடிகளும் கொடிகளும்,முருங்கை போன்ற கேட்பாரற்ற உணவுகள் இன்று விலையுயர்ந்த உணவுகளாகவே கருதப்படுகின்றது. இன்றைய உலகில் சுகாதாரமற்ற உணவுகளையே குப்பை மலிவில் விற்கின்றார்கள்.1 point- ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
🤣 நான் இன்று தொடக்கம் விலை மிகவும் அதிகாமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழப் போகின்றேன்.1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
[அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! ] மிகச்சரியாக சொன்னீர்கள். எம்மவர்களிடமும் இந்தியர்களிடமும் இப்படியானவர்களை காணமுடியும். ]1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் காருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன், இதில் புத்திசாலிகள் யார் என்பதனையே வரையறுக்கமுடியாது இதில் எவ்வாறு முட்டாள்களை அடையாளாம் காணமுடியும்? முட்டாள்கள் கருத்து கூறாது மெளனமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- அதிசயக்குதிரை
1 point1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் நான் சற்று முரண்படுகின்றேன். சர்வதேசத்தின் அழுத்தத்தில் இவ்வாறு ஒரு தீர்வை ரணில் வழங்க முன்வந்திருந்தாலும், தென்னிலங்கையின் இனவாத சக்திகள் மகிந்தவின் பின்னாலும் விமல் வீரசிங்க போன்றவர்களின் பின்னாலும் அணி திரண்டு, எதிர்த்து தீர்வை கைவிட வைத்து இருக்கும். அரகலய அன்றே உருவாகி இருக்கும். கடும் இனவாத அரகலயவாக அது இருந்திருக்கும். அவ்வாறு நடந்து இருப்பின், சமாதானத்துக்கான அவா தமிழர்களிடம் மட்டுமே உள்ளது, சிங்களத்திடம் இல்லை என தெளிவாக காட்டி தமிழர்களின் அரசியல் பலம் அதிகரித்து இருக்கும். இப்படியான ஒரு நிலையை ஏற்படுத்தவே அன்ரன் பாலசிங்கம் அண்ணா தன்னளவில் முயன்றார் என நம்புகின்றேன்.1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இப்பொழுது பிளவு ஏன் வந்தது? சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகளால்தான் என்பது என் அவதானிப்பு. அதனால்தான் இவர்கள் கூறுவதை நம்பக்கூடாது என நினைக்கிறேன்/எழுதுகிறேன். ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடத்தைத்தான் வழங்கி வருகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்தான் இன்னமும் தெளியவில்லை, பாடத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் இல்லை சுயநலத்தைத் தவிர. அவ்வளவுதான்.1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இலங்கை தமிழ் மக்கள் தம் நலன் வேண்டி மாறி மாறித்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். தனியே ஒரே பெரும்பான்மை இன கட்சிக்கு வாக்களித்த வரலாறு இன்றுவரை இல்லை. அந்த கட்சிக்கு வாக்களித்தால் ஏதாவது பலன் உண்டா அல்லது இந்த கட்சிக்கு வாக்களித்தால் பலன்கள் வருமா என சிந்தித்துத்தான் வாக்களித்து வந்துள்ளார்கள். அப்படியிருந்தும் தமிழினத்திற்கு கிடைத்த பரிசு இரத்தக்களரி மட்டுமே.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
1. புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று நீங்களும், அரசியல் கட்டுரைகளை எழுதுகின்ற பலரும் கூட தொடர்ந்து தவறாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள். 2000 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த தேர்தலில் திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெல்லவில்லை. மட்டக்களப்பிலும் 2 பேர் மாத்திரமே தெரிவானார்கள். அதே போன்று, யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஐ.தே,க. ஒரு இடத்தில் வென்றது. வவுனியாவில் 3 தமிழர்கள் மட்டுமே வென்று இருந்தனர். இந்த அரசியல் ரீதியிலான பாதக நிலையை உணர்ந்த கிழக்கிலங்கை புத்திசீவிகளும், கிழக்கு இலங்கை பத்திரிகையாளர்களும், 2001 இல் கிழக்கு பல்கலைகழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தி (டி, சிவராம் தலைமை வகித்தார்), தமிழ் கட்சிகள் / தமிழ் இயக்கங்கள் கூட்டாக அணி திரண்டு ஒரு கூட்டணியாக நிற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்துரைத்தனர். அதன் பின்னான தொடர்ச்சியான செயற்பாடுகளின் பின்னால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, இந்த கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு இனி மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வாய்மூல உறுதிப்பாட்டை பெற்று இருந்தனர். இந்த உறுதிப்பாடை கொடுத்தவர்கள் கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலனும், கருணாவும் ஆகும். த.தே.கூ இன் அன்றைய தேவையை உணர்ந்தது புலிகள் அல்ல. அதே போன்று த.தே.கூ இன் உருவாக்கமும் அவர்களால் நிகழ்த்தப்படவில்லை. த.தே.கூ சந்தித்த முதல் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு அதிகம் இடம்பெற்று இருக்கவில்லை வேட்பாளார் தெரிவில் கூட அவர்கள் செல்வாக்கு செலுத்தாமல் இருந்தனர். பின்னர் தான், பேச்சுவார்த்தை காலத்தில் அவர்கள் த.தே. கூ இற்கு தமது ஆசிர்வாதத்தை பகிரங்கமாக தெரிவித்து இருந்ததுடன், வேட்பாளர் தெரிவு வரைக்கும் தம் அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர். ஒரு கட்டத்தில் விடுதலப் புலிகளின் அரசியல் கட்சி போன்றே த.தே.கூ வை அவர்கள் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். தலைவர் த.தே,கூ இல் அங்கம் வகித்த தலைவர்களை வன்னிக்கு அழைத்து கைலாகு கொடுத்து வரவேற்று இருந்தார். இதில் தமிழ் மக்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து படுகொலை செய்த சுரேஸ் பிரேமச்சத்திரனுக்கு கைலாகு கொடுத்த கூத்து கூட நடந்து இருந்தது. 2. 2004 இன் பின் புலிகளின் இராணுவ அரசியலுக்கு சமாந்தரமாக த.தே.கூ 2009 வரைக்கும் செயற்பட்டு வந்தமையால், 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு அது அரசியல் செய்வதற்கான பலத்தை இழந்து விட்டது. உறுதியான தீர்மானங்கள் எடுக்க கூட திறனற்ற தலைவர்களையும், மாவை, சம்பந்தன் போன்ற, விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான அரசியல் செய்து தோற்றுப் போன மூத்த தலைவர்களையும், இலங்கை / இந்திய இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்த டெலோ, ஈபி போன்ற அமைப்பின் தலைவர்களையும் கொண்ட த.தே,கூ எதையும் சாதித்து விடக் கூடிய அளவுக்கு திறனற்ற, அரசியல் தெளிவுள்ள ஒரு கூட்டணி யாக இருக்க வாய்ப்பில்லை. 2009 இன் பின் கையாலாகாத அரசியல்வாதிகள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு மிச்சமிருக்கின்றனர். காத்திரமான அரசியல் செய்யக்கூடியவர்கள் ஒன்றில் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். என் பதிலில் இதற்கு புலிகள் மட்டுமே காரணம் என பொருள்பட எழுதியது என் தவறு. இதற்கு ஏனைய இயக்கங்களும், கருணா குழுவும் கூட காரணங்களாக உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இன்று இவ்வாறு எச்சங்களாக மிச்சம் இருப்பவர்கள் மூலம் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்று நானும் நம்பவில்லை, தமிழ் மக்களும் இனி நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே வழி, இருப்பதை தக்கவைத்துக் கொண்டு முடிந்தவரை தம்மை முன்னேற்றுவதே. @விசுகு,தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், ஒன்று கூடல்களுக்கு அதிகமாகவும் செல்கின்றனர் என அங்கலாய்த்து இருந்தார். இதுக்கு காரணமும் இதுவே. தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களின் கையாலாகாத்தனத்தையும், செயற்திறனற்ற நடவடிக்கைகளையும், வெற்று முழக்கங்களையும், வெற்றியளிக்காத முயற்சிகளையும் முன்னெடுக்கின்றவார்களின் நிகழ்வுகளுக்கு செல்வதை விட, அவற்றை தவிப்பது தமக்கு நன்மை பயக்கும் என நம்புவதானாலேயே. நன்றி போகின்ற போக்கில் இப்படியெல்லாம் ஜோக் அடிக்க கூடாது சசி.😆1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிலரை சந்தோசப்படுத்த பெரிசாய் கஷ்டப்பட தேவை இல்லை. எங்கட கஷ்டங்களை சொன்னாலே போதும்......1 point- ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ - இதய தானம் கொடுத்தவரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்த நபர்
1 pointகண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார். அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html1 point - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.