Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    39343
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19667
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3125
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/07/24 in Posts

  1. பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடையமுடியாமல் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கனடா வெல்லும் எனக் கணித்த @kalyani க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த ஏனைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை! பதின்மூன்றாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 கல்யாணி 18 14 வீரப் பையன்26 16 15 நிலாமதி 16 16 புலவர் 16 17 நுணாவிலான் 16 18 வாதவூரான் 16 19 கிருபன் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14
  2. சீமான் மட்டுமல்ல உலகத்தில் வாழும் யாரும் புலிகளையும் தலைவரையும் அதன் கொள்கைகளையும் பேசலாம்.. அது ஒரு தத்துவம்.. தலைவர் தமிழ்தேசிய உலகிற்கு தந்துவிட்டு போனது.. மார்க்சியம் போல லெனினியம் போல் பெரியாரிசம் அம்பேத்கரிசம் போல் பிரபாகரனும் புலிகளும் அந்த சோரம்போகாத போராட்டம் மூலம் வாழ்ந்துகாட்டிவிட்டு போன தத்துவமும் இந்த உலகம் முழுதுக்குமானது.. நீங்கள் வெளிநாடுகளில் துரோகிப்பட்டம் கொடுக்கும் புலிகளை குத்தகைக்கு தாம் மட்டுமே எடுத்துவிட்டோம் என்பதுபோல் செயல்படும் புலிகளின் காசை ஆட்டையப்போட்டவர்கள் போல பேசுகிறீர்கள்.. அவர்களுக்கு பலம் சேர்ப்பதுபோல் இருக்கிறது புலிகளையும் அவர்கள் தத்துவத்தையும் யாரும் பேசக்கூடாது என்பது.. புலிகளையும் அவர்கள் கட்டமைத்து வாழ்ந்து காட்டிவிட்டுபோன அந்த தமிழ்தேசிய தத்துவமும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் நாம் இறந்த பின்னாலும் இன்னும் சில நூற்றாண்டுகளில் திராவிடம்போல் ஒரு பெரும் தத்துவமாக எழுச்சி பெறும்.. வரலாறு அதன் தடங்களில் காலம் சென்றாலும் உண்மைக்கும் அதன் வழி நின்று செய்யப்பட்ட தியாகங்களுக்கும் பெரும் பக்கங்களை அதன் வழிநெடுக ஒதுக்கி வைத்திருக்கிறது.. அவற்றை இன்றும் நாம் படித்து புளகாங்கிதம் அடைகிறோம்... அது போல் புலிகளின் போராட்டமும் தியாகமும் பேசப்படும்.. தமிழ் தேசியம் எழும்..
  3. இது பல மரமண்டைகளுக்கு விளங்குதில்லை விசுகர்! தமிழக வாக்காளர்கள் உட்பட!!
  4. வணக்கம் சகோ இந்த கருத்தை பார்த்தபோது சிலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். சிறீலங்கா சிங்களத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பௌத்த மதமே சிறீலங்கா என்று சொல்லி எம்மை அடித்து துரத்தும் எதிரியுடன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று நாம் இன்னும் எத்தனை நாள் எத்தனை முறை மண்டியிட்டு அழமுடியும்? உலகெங்கும் இல்லாததையா நாம் தமிழர் சொல்கிறது? பிரெஞ்சுக் காரர்களுக்கே பிரான்சு தேசம் சொந்தமானது என்று சொல்லி நூற்றிற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளமை தானே நிஜம் களம். அந்தந்த பிரதேசத்தை அந்தந்த க்கள் கூட்டம் ஆள்வது தானே நடைமுறையில் உள்ளது. உங்கள் எழுத்து நாம் மற்றவர் போல் இல்லை பண்பானவர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதற்கு மட்டுமே உதவும். ஆனால் இந்த போக்கு எம்மை இதுவரை காப்பாற்றாது கச்சையுடன் விட்டிருப்பது மட்டுமே வரலாறு. தமிழர்கள் தமிழராக ஒன்று திரள்தால் அன்றி விடிவில்லை எமக்கு. நாம் தமிழர். நாம் சீமான் அல்ல. நன்றி.
  5. ஆனால், சீமான் தம்பிகளும் (சில சமயங்களில் சீமானும்) ஆள்வது பற்றியா சொல்கிறார்கள்? பல தசாப்தங்கள் முன்பு ஒன்றாக இருந்த தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர் என்ற மொழி வாரி இனங்களில் இருந்து வந்த வம்சாவழியினர் "தமிழர்" அல்ல என்றும், அயல் மாநிலத்தவர் தொழில் தேடி வந்து குடியிருப்பதையும் கூட தன் பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள அல்லவா செய்கிறார்கள்? இது தமிழனை தமிழன் ஆள்தல் என்ற வகைக்குள் அல்ல வருகிறது. இது கடைந்தெடுத்த இனத்தூய்மை வாதம். அப்படி இனத்தூய்மை வாதம் பேசும் சீமானுக்கே மலையாள அடி இருக்கிறது என்கிறார்கள், மனைவி தெலுங்கர் வழி என்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறை இருக்க, இனத்தூய்மை வாதம் பேசி வாக்குக் கேட்கும் வரை, நா.த.க ஒரு முதன்மைக் கட்சியாக உருவாகாது என்பது தான் என் கருத்து. தற்போது ஈழவரிடையேயும் உருவாகிக் கொண்டிருக்கும் "கிறிஸ்தவன் தமிழனா" என்ற கேள்வியின் தோற்றுவாய் எங்கேயிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்? அதைக் கேட்கும் பலர் நாதக ஆதரவாளர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன். சிங்களம் - ஈழத்தமிழ் வேறு பிரச்சினை.அது மட்டுமன்றி தமிழ் நாட்டில் நா.த.க என்ற இனத்தூய்மை வாதக் கட்சி ஆண்டால் ஈழவருக்கு நன்மை கிடைக்கும் என்று உங்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும் ஆதாரங்களற்றது.
  6. 1 ஈழப்பிரியன் 22 இந்தா.... மலையாள மாந்திரீகம் படிக்கிறன்😎 சிங்கனை தொங்கலுக்கு இறக்கிறன்🙃
  7. 🤣........ குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது. நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........
  8. பிரித்தானிய நேரப்படி நாளை சனி (08 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 14) முதல் சுற்று குழு C : சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 19 பேர் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் நால்வர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பிரபா USA வாதவூரான் நந்தன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 15) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 19 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் நால்வர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பங்களாதேஷ் சுவி கிருபன் ரசோதரன் கோஷான் சே இந்தப் போட்டியில் எவர் புள்ளிகளைப் பெறுவார்கள்? 16) முதல் சுற்று குழு D : சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA ஒரே ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் ஏனைய 22 பேரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா சுவி புலவர் P.S.பிரபா நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் கந்தப்பு நந்தன் நீர்வேலியான் கோஷான் சே இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி கிருபன் அஹஸ்தியன் வாத்தியார் எப்போதும் தமிழன் கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?
  9. ச்சா கனடா வென்று விட்ட்து .புகுந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருப்போம் என்று போட்ட நான். திசை மாறிப்போச்சே கன காலத்துக்கு பின் கிடைச்ச வெற்றியல்லவா அது தான் கால் நிலத்திலே நிற்குதில்லை .😁
  10. வாழ்த்துக்கள் நாம்தமிழர்.. என்னைப்போன்று உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ்த்தேசியவாதிகளிற்கு இது உற்சாகம் தருகிறது..
  11. அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣
  12. அவர் என்னைப் போல விண்ணன் இல்லை! நானெண்டால் டக்கெண்டு “அடப்பேயா! என்ன விழல்க்கேள்வி கேட்கிறாய்! 10000 மைல் போற சாத்தான் மிஸைல்ஸை 500 மைலுக்குள்ள இருக்கிற உக்கிரேனுக்கு பாவிக்கிறதுக்கு ரஷ்யன் என்ன ஆட்டு மூளையே வச்சிருக்கிறான்! உக்கிரேனுக்கு அடிக்க சோவியத்கால டப்பாக் குண்டுகளுக்கு ரெக்கை கட்டி ஜிபிஎஸ் நவிகேசன் போட்டு அடிஅடியெண்டு அடிக்கிறான்! பத்தாதே?” எண்டு சொல்லியிருப்பன்👻
  13. 🤣....... நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜 நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.
  14. @Eppothum Thamizhan @விசுகு யாழ்களத்தில் ஏனைய உறவுகள், தமிழக வாக்காளர் போல் நீங்கள் மரமண்டைகள் இல்லை, ரொம்ப உர-மண்டைகள். ஆனாலும் பின் வருவதை ஏன் புரியமாட்டேன் என்கிறீர்கள். சீமான் தமிழரை தமிழன் ஆள வேண்டும் என சொல்வதை எதிர்க்க 2 காரணங்கள் முக்கியமானவை. 1. சீமானே ஒரு மலையாளி. அவர் மனைவி பாதி தெலுங்குகாரி - அவர் எப்படி இதை சொல்லலாம்? 2. சீமான் 600 வருடமாக தமிழ்நாட்டில் வாழ்வோரை தமிழர் இல்லை என ஆக்குகிறார். அதுவும் சாதி அடிப்படையில். தமிழ்நாட்டை தமிழந்தான் ஆள வேண்டும் என்றால் - முதலில் சீமான் 1. மொழி வழி மாநில பிரிப்பில் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அனைவரும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும். 2. இல்லை என்றால் மலையாளியாகிய தனக்கும் ஆளும் உரிமை இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
  15. சீமான் அவர்கள் நாம் தமிழர் என மேடைக்கு மேடை உரக்க கூறிக்கொண்டு,தலைவர் பிரபாகரனை தன் தலைவர்/ அண்ணன் என கூறிக்கொண்டும் புலிக்கொடியை ஏந்திக்கொண்டும் பயணித்து.... இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்த்தியிருக்கின்றார். அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣
  16. 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை , சரியாக பதில் அளித்தவர்கள் - நிழலி, கிருபன், பிரபா ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 3 புள்ளிகள் 1 தொகுதி - 2 புள்ளிகள் 2 & 3 தொகுதிகள் - 1 புள்ளி 1)கோஷான் சே - 48 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 48 புள்ளிகள் 3)நிழலி - 47 புள்ளிகள் 4)கிருபன் - 47 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 43 புள்ளிகள் 6)பிரபா - 43 புள்ளிகள் 7)கந்தையா57 - 36 புள்ளிகள் 8)வாத்தியார் - 35 புள்ளிகள் 9)நுணாவிலான் - 35 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள் 11)சுவி - 27 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,40 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 28 கேள்விகளுக்கு (57 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  17. நாடுகடந்த அரசாங்கம் இதுவரையில் செய்ததென்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ருத்திரகுமாரைத் தவிர வேறு எவராவது இந்த அரசில் இருக்கிறார்களா என்றும் தெரியாது. இவர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் வாயிலாகத்தான் இப்படியொரு அமைப்பு இன்னமும் இருக்கிறதென்றே தெரிகிறது. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து இவர் கூறும் விடயங்களை நான் எதிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால், நானும் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பதைக் கொள்கையளவில் ஆதரிக்கிறேன். பலருக்கு தமிழ் வேட்பாளர் எனும் கருதுகோள் தேர்தல் அரசியல் அடிப்படையிலே மட்டும் அமைந்ததாகவே தெரிகிறது. ஏனென்றால், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் தமிழருக்கு அரசியலில் அல்லது தேர்தலில் வரப்போகும் ஒரு சிங்கள வேட்பாளரினூடான சலுகைகள் மட்டுமே தெரிகின்றன. ஆனால், தமிழ் வேட்பாளர் எனும் கொள்கை தேர்தல் அரசியலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளுடன், கருத்துக்களுடன், அபிலாஷைகளுடன் சம்பந்தப்பட்டது. அப்படி இல்லையென்றால், அதனை சம்பந்தப்படுத்துவது தமிழர்களின் அனைவரினதும் கடமையென்றே நான் நினைக்கிறேன். இத்தேர்தலை தமிழர்கள் தமது உண்மையான அபிலாஷைகளை, ஒற்றுமையினை, தமது அடையாளத்தை நிரூபிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாக கருதுவது அவசியம். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எந்தச் சிங்கள வேட்பாளர் வருவார், அல்லது எவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாதுபோய்விடும் என்று நாம் கவலைப்படுவது அநாவசியமானது. ஏனென்றால், நாம் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவது சிங்கள தேசத்தின் இன்னொரு சிங்கள பெளத்த இனவாதியைத் தலைவராக்குவதற்காக அல்ல. இந்தத் தெளிவு இருந்தால்ப் போதும்.
  18. விசுகு வணக்கம் எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும் ஏனெனில் அவர்கள் உரிமைக்காகவும் போராடவில்லை மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள் அப்படி இருக்கையில் வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம் ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது 🙏
  19. 23 P.S.பிரபா 14 It’s okay.. எனக்குப் பிடித்த number தானே
  20. பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 14
  21. இன்று எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, கூடப்பிறந்த சகோதரங்கள் யாருமே இல்லை. தனித்துவிட்டேன் என்று கலங்கினேன், மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்தான் உலகம் என்றிருந்தேன். என் பதிவை இந்த யாழ்களத் திரியில் பார்த்தபின்புதான் எனக்கு எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன் வியந்தேன். என்னைத் தேடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!! எனக்க இப்போ வயது கீழிறங்கிப் 18 ஆகிவிட்டது.😍😁🙏
  22. தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் - உருத்திரகுமாரன் Published By: RAJEEBAN 06 JUN, 2024 | 09:55 AM தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் - என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்காலத்தின் முதலாவது தொலைத்தொடர்பு அமர்வு ஜூன் மாதம் 1ந் திகதி நடைபெற்றது. அதில் சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதில் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தினார்கள். இந்த அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது 1972 அரசியல் அமைப்புச்சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ நாங்கள் தமிழர்கள் பங்குதாரர்கள் அல்ல அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக்கட்டுப்படுத்த முடியாது. கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அத் தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையிதான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகவேதான் இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டுசந்திரிக்காவின் தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்கவில்லை. 2005 இல் ரணில் விக்கிரமசிங்க எங்களிற்கு எதிராக சர்வதேச சதிவலைப் பின்னலை பின்னுவதன் காரணமாக அவர் ஜனாதிபதியாக வருவது தமிழர்களிற்கு நன்மை பயக்காது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்ததனர். சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எப்போதுமே ஒரு உத்தி சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது. நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அவ் அடிப்படையிலேயே சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. இன்று மூன்றுதெரிவுகள் சிறிலங்கா தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன. 1- சிங்களத்துடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளைதருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். 2- ஜனாபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். 3- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் 70 ஆண்டு கால அரசியல் வரலாறு சிங்களத்துடன் எவ்வளவுபேரம் பேசினாலும் சிங்களம் எதனையுமே அமுல் நடத்தாது. சிங்கள புத்திஜீவிகள் மாறிவிட்டார்கள் என்ற ஒது கருத்து இன்றைக்கு முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள்ஆகிவிட்டன. இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ ஒருசிங்கள அரசியல் தலைவரோ ஒரு சிங்கள மாணவத்தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும்இல்லை மன்னிப்பும் கேட்கவும் இல்லை. “அறகளவில்” சிங்களவர்கள் போட்ட கோஷம் கோத்தபாய ஒரு திருடன்என்று ஆனால் கோத்தபாய ஒரு கொலைகாரன் என்றுகூறவில்லை. பேரினவாதம் சிங்கள அரசியல் கலாச்சாரம்தமிழர்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்க சம்மதிக்காது. எனவே பேரம் பேசுவது என்ற கதையை தமிழ்த்தலைவர்கள் கைவிடவேண்டும். சிங்களத்துடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட அமுல் நடத்த முடியவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் இரண்டாவது தெரிவு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண்டுவரலாம்இ சுயநிர்ணயத்திற்கான திரட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறினார். தமிழ் பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை சிங்கள தொலைக்காட்சியில் பேசலாம்என்று கூறி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை சிறுமைப்படுத்தவேண்டாம் என அரசியல் தலைவர்களைகேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன் நாங்கள் இன்று பேசவேண்டிய சமூகம் உலக சமூகம். மேலும் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாடு எமது அடுத்த கட்ட அரசியல் நிகழ்வான பொதுவாக்கெடுப்பிற்கு உதவும் எனவும் கூறினார். நாங்கள் சிங்களத் தலைமையை பகிஷ்கரிக்கின்றோம் என்ற அடிப்படையில் இரண்டாவது தெரிவை தமிழர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் எனக் கூறினார். இதன் மூலம் தமிழ்பொதுவேட்பாளர் நிலைப்பாட்டையும் தமிழ் தேசிய மக்கள்முன்ன்ணியின் பகிஷ்கரிப்பின் நிலைப்பாட்டையும் இணைக்கலாம் தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை தமிழ்மக்களிடம் இருந்து பெறமுடியாமல் இதுக்கக்கூடும். ஆனால் நாங்கள் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கத்தான் வேண்டும். சிலர் சர்வதேச சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை விரும்பமாட்டார்கள் எனக் கூறலாம். நாங்கள் சர்வதேச சக்திகளின் விருப்பிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கத் தேவையில்லை. எங்களுடையஅரசியல் விருப்பங்களை நாங்கள் சர்வதேச சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். இன்றுவரை சர்வதேச சக்திகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களுடைய பூகோள அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்றார்களேயொழிய தமிழர்களிற்கு நீதி வழங்க வேண்டிய செயற்பாடுகளில்ஈடுபடவில்லை. 2015 ஆம் ஆண்டு மகிந்தா சீனாவின் பக்கம்சாய்வதால் நல்லாட்சி வரும் என்று சொல்லி தமிழர்களை பாவித்து சர்வதேச சமுதாயம் மகிந்தாவை நீக்கியது சர்வதேச சமுதாயத்திடம் நாம் பேரம் பேச வேண்டுமேயொழிய அவர்களை சந்தோஷப் படுத்திக் கொள்ளக்கூடாது. https://www.virakesari.lk/article/185418
  23. அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்
  24. அடுத்தவர் என்ன புடுங்குகிறார் என்பதிலேயே காலத்தைக் கடத்துவோம்.
  25. இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள். கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள். வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான். எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.
  26. எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்
  27. ஆகா… இரண்டு பேரும் தங்கடை புகுந்த நாட்டுக்கு அந்த மாதிரி முரட்டு முட்டுக் கொடுக்கிறார்கள். 😁 ம்ம்ம்ம்… நடக்கட்டும். 😂 🤣
  28. USA team என்ற பெயர்தானே.. வென்று கொடுத்தது எல்லாம் வேற நாட்டு வீரர்கள்.. பிறகு எப்படிஅமெரிக்கா வென்றது.. அவர்களுக்கு cricketல் எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்றாவது தெரியுமோ??? நான் நினைக்கலே.. “ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்” இப்படி பாடேலாது தானே.. அதான் number சொல்லி கொஞ்சம் தேத்திக்கிறேன்🤭
  29. எதிர்க்கருத்து வைப்போரை யாரும் மரமண்டைகள் என்று சொல்லவில்லையே! எல்லா மாநிலத்தையும் அந்தந்த மாநிலக்காரனே ஆளும்போது, தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று கூறும் ஒருவரை கேலிசெய்வோருக்கானது அது!!
  30. பிறகுதான் ஐ சி சி பொறுப்பேற்றதா🤣? அஸ்கு புஸ்கு. நான் joint second place🤣
  31. மிச்சப் புள்ளிகள் வர முதலாம் படியில் நிற்பேன்!
  32. 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? ஒரு தொகுதியிலும் வெல்லமட்டார்கள் என எல்லப்போட்டியாளர்களும் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)தமிழ்சிறி - 44 புள்ளிகள் 2)கோஷான் சே - 42புள்ளிகள் 3)நிழலி - 42 புள்ளிகள் 4)கிருபன் - 40 புள்ளிகள் 5)பிரபா - 40 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 38 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள் 8)கந்தையா57- 32 புள்ளிகள் 9)நுணாவிலான் - 32 புள்ளிகள் 10)வாத்தியார் - 30 புள்ளிகள் 11)சுவி - 26 புள்ளிகள் 12)புலவர்- 22 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 13, 14, 15, 18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32, 33, 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 24 கேள்விகளுக்கு (48 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  33. அப்படியா? மூவருக்கும் மிக்க நன்றி. 🙏 5 வருசத்துக்கு முன் நான் பார்த்த பாஞ், இப்பொழுது பார்த்தபோது கொஞ்சம் உடலால் தளர்ந்து இருந்தார். ஆனால் மென்மையான பேச்சில், அதே துள்ளல்..! அடுத்த முறை வரும்போது என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று காண்பிப்பதாக சொல்லியிருக்கார்.😍 என்றும் நலமுடன் வாழ்க.🙏 ஆமாம், சமயம் கிட்டும்போதெல்லாம் அவரிடம் தொலைபேசியில் பேசி, நலம் விசாரிப்பதுண்டு.
  34. உண்மையாகவா? நீங்கள் மிகவும் பிஸியாக இருக்கும் ஒருவர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
  35. அவர்களும் கைவிட்டு விடுவார்கள் போலுள்ளது. பத்தாதக்கு, கோசான் வேறு 6ஆவது இடத்தில் இருக்கிறார்
  36. கிருபன், இந்த லிஸ்டை கொஞ்ச நாளைக்கு மறைக்க முடியுமா?
  37. ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது. கொலஸ்ரரோல் கூடப் போகுது. சரி சரி திண்டுடுட்டு 5 ைமல் ஓடுங்கோ.
  38. ஒரே நாளில் மூன்று முட்டை 😳 இவர் முன்பே USA என்று பதிந்திருக்கிறார். பையன் நீங்கள்தான் அவரை குழப்பி விட்டுடீங்கள்
  39. முதலே சொல்லியிருந்தால் லீவு எடுத்திருப்பன் எல்லே? 😎 அவ்வளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவன் இல்லை இந்த குமாரசாமி.
  40. தொலைபேசி தொடர்ந்து அடித்து கொண்டிருக்கிறது ஆனால் அழைப்பை. ஒருவரும். எடுக்கவில்லை .......பாஞ்ச். ஐயா தான் அழைக்கிறார் போல உடனே குமாரசாமி அண்ணையும். கூட்டிக்கொண்டு. போகவும் 😂🤣
  41. அமைச்சரே இப்படி பயனற்ற வேலையை செய்யாதீர்கள். இந்திய சிலை கலாச்சாரம் வேண்டாம். குவியும் சிலைகளையும் , சிலைகளின் கனத்தையும் ஈழ தமிழர்ளின் பூமி தாங்காது.
  42. தமிழக அரசியல் அறிவை யூடியூப்பர்களிடம் இருந்து கற்றவர்கள் யாரென்று புள்ளி நிலைகளில் கீழே நிற்பவர்களைப் பார்த்தால் தெரிகின்றது!
  43. நீங்கள் சொன்னது மூன்று வகையில் சரி. 1. இலங்கையில் சிங்கள இனவாதம் தீராது. இது மிக சரி. அதே போல் 2. இனவாதம் தீரும் மட்டும் (அதாவது ஒரு போதும் இல்லை) எல்லாராலும் காத்திருக்க முடியாது. 3. அதே போல் மிக மோசமான இனவாதம், இன ஒதுக்கல் இருக்கிறது ஆனால்….. @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.