Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    39346
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88827
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20357
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3127
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/08/24 in Posts

  1. ஐயோ…. முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣. ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏. கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.
  2. பதின்நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 75 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினைந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைந்த வெற்றி இலக்கை விக்கெட்டுகளை இழந்த தட்டுத்தடுமாறி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினைந்து போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 24 2 ஈழப்பிரியன் 22 3 பிரபா USA 22 4 ரசோதரன் 22 5 நந்தன் 22 6 சுவி 20 7 ஏராளன் 20 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாதவூரான் 18 12 கிருபன் 18 13 வாத்தியார் 18 14 எப்போதும் தமிழன் 18 15 கல்யாணி 18 16 வீரப் பையன்26 16 17 நிலாமதி 16 18 புலவர் 16 19 நுணாவிலான் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14 முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!
  3. பையன், உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில் இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.
  4. பதினாறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து டேவிட் மில்லரின் நிதானமாக ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினேழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 165 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினேழு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 28 2 பிரபா USA 26 3 ரசோதரன் 26 4 நந்தன் 26 5 ஈழப்பிரியன் 24 6 சுவி 24 7 ஏராளன் 24 8 வாதவூரான் 22 9 குமாரசாமி 20 10 தியா 20 11 தமிழ் சிறி 20 12 புலவர் 20 13 நுணாவிலான் 20 14 கிருபன் 20 15 கந்தப்பு 20 16 வாத்தியார் 20 17 எப்போதும் தமிழன் 20 18 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 20 நிலாமதி 18 21 P.S.பிரபா 18 22 அஹஸ்தியன் 18 23 கல்யாணி 18
  5. யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்தார். அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார். குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருந்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாணவியின் உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://athavannews.com/2024/1386708
  6. கண்டியுங்கள். ஆனால் அவர்கள் 15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது? எப்படியான அழுத்தங்களை, லொபியிங்கை யார்மீது பிரயோகிக்கின்றார்கள்? இவர்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளும் இல்லை, புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் இல்லை. வெறும் zoom மீற்றிங்கும், தேநீர், வடையோடு நேரடியாக சந்தித்து அறிக்கைவிடும் கோமாளிக்கூட்டம்
  7. நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢
  8. என்ன நடக்கின்றது இந்த முறை கிரிக்கெட் T 20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமான நிலையில் பலரும் எதிர்பார்த்த மாதிரியே ஸ்ரீலங்கா அணி இரண்டு விளையாட்டுக்களில் தோல்வி . அடுத்து இலங்கைக்கு இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியும் இரண்டாவது விளையாட்டில் அவுஸிடம் தோல்வியடைந்ததது. யாரும் எதிர்பாராத அமெரிக்க அணி முதல் இரண்டு விளையாட்டுக்களிலும் வெற்றி- அவுஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தாங்கள் விளையாடிய இரு விளையாட்டுக்களிலும் வெற்றி, இருந்தாலும் இன்னும் சில விளையாட்டுக்கள் இருப்பதால் இன்றைய நிலை நாளை மாறும் என்பதைப்போல எல்லா அணிகளும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றார்கள் .😂
  9. கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎
  10. நீங்க, போங்க... நாங்க பின்னாலை வாறம். 😂
  11. 23 P.S.பிரபா 14 NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹 இனிமேல் இயலாது😥 என்னால நம்பவே முடியவில்லை😳😳
  12. வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது. எவருடனும் கூட்டணியில்லை. பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. ஊடக ஆதரவு இல்லை பண பலம் இல்லை. அரசியல் பின்புலம் இல்லை. இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து 8% ஆக வாக்குகளைப் பெற்றிருப்பது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன? தமிழக அரசியல் ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு, பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? வெறுப்பும் வஞ்சகக் குணமும் மனிதர்களின் கண்களை மறைக்கிறது.
  13. பரதியாரின் மறுபக்கம்.தெரிந்திராத தகவல் தெரியபடுத்தியமைக்கு நன்றி. ஈழதமிழர்களும் மேற்குலக நாடுகளில் நல்ல பாதுகாப்பான வசதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டு தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் அப்படி போராட வேண்டும் இப்படி போராட வேண்டும் என்று பொங்குவார்கள்.
  14. இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன் தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும். 10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!
  15. அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்
  16. கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.
  17. "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!" இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403: "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்." கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார் "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ" என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!! இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன். மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், "இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. ஓம் ஓம் உங்கட கண்ணூறு தான். கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறன். சந்தோசம் தானே.
  19. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ளுக்கு கீழ‌ நின்று ப‌ல‌ வாட்டி முக்கு ப‌ட்ட‌வ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குருட் ல‌க் க‌ட்ட‌த்துரைக்கு ந‌ல்லா புள்ளிய‌ பெற்றுக் கொடுக்குது தாத்தா😁.................................................................
  20. சரியான கணிப்பு. அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 % 40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 8.10 %
  21. ஐயா நீங்க முஸ்லீமா? அடிக்கடி தொப்பி பிரட்டுறீங்க. 12 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் ஏனைய 11 பேரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா சுவி புலவர் P.S.பிரபா நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் கந்தப்பு நந்தன் நீர்வேலியான் கோஷான் சே இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி கிருபன் அஹஸ்தியன் வாத்தியார் எப்போதும் தமிழன் கல்யாணி
  22. நாம் ஒரு அமைப்பிலும் இருந்து நாமே தலைவர்கள் என்றும், இடையிடையே நாமே மீண்டும் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டிகின்றோம் என்றும் கோமாளித்தனம் செய்யவில்லையே😃 இவர்கள் பைல்களைக் கட்டி வைத்திருப்பது அதைக் காட்டி விசுகு ஐயா போன்றவர்களிடம் இருந்து மாதா சந்தா வாங்கத்தான் என்று தெரிகின்றது😁. அவர்கள் வேறு ஒருவரிடமும் கொடுக்கவும் மாட்டார்கள். அமைப்பைப் கலைத்துவிட்டு போகவும் மாட்டார்கள்.. பெரிதாகச் செய்ய பெரிய இரகசியத் திட்டம் எல்லாம் இருக்கு என்று சொல்லிச் சொல்லியே இன்னும் சந்தா கறப்பார்கள்! இங்கு சம்மர் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு கிழமையும் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடக்கும். ஆனால் சேர்ந்து செய்யமாட்டார்கள். போன கிழமை தமிழீழ அரசியல்துறை என்று தலைமைச் செயலகக்காரர்கள் நடத்தினார்கள். நாடு கடந்த அரசாங்கமும் போன வருடம் நடத்தியது. இந்த வருடமும் நடாத்துவார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் விளையாடுபவர்களைத் தவிர மக்கள் பெரிதாக வருவதில்லை. நிறையப் பணம் செலவு செய்துதான் இப்படியான போட்டிகள் நடாத்தமுடியும். அதை பாங்க்ரோல் செய்ய யாரிடம் போகின்றார்கள் என்று தெரியவில்லை.
  23. அப்புறம் என்ன உங்களை பொதுவேட்பாளரா இறக்கிட வேண்டியது தான். தம்பிமாரே அவித்த முட்டை அதிகம் சாப்பிட்டால் அப்புறம் பின்னால பறியும். சும்மா கிடந்த சங்கை நீங்க தான் ஊதி கெடுத்தது.
  24. ஏனக்கா இவ்வளவு சீரியஸ்? என்னைப் பாருங்க முட்டையை அவிச்சு சாப்பிட்டிட்டு சும்மா இருக்கிறேன்!
  25. 1 கோஷான் சே 24 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
  26. 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 9 தொகுதிகள் 9 தொகுதிகள் - 3 புள்ளிகள் 8 தொகுதிகள் - 2 புள்ளிகள் 7,6 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலி, நுணாவிலான்,பிரபா 1)நிழலி - 57 புள்ளிகள் 2)கிருபன் - 57 புள்ளிகள் 3)கோஷான் சே - 55 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 50 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 49 புள்ளிகள் 7)நுணாவிலான் - 41 புள்ளிகள் 8)வாத்தியார் - 40 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 30 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 31 கேள்விகளுக்கு (67 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  27. பீ க் கா . க‌ட்சி த‌லைவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் கோஷானுக்கு வாழ்த்துக்க‌ள்🤣😁😂.................................................... @goshan_che
  28. 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 22 தொகுதிகள் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி, கிருபன் 22 தொகுதி - 5 புள்ளிகள் 21 தொகுதி - 4 புள்ளிகள் 20 தொகுதி - 3 புள்ளிகள் 19 தொகுதி - 2 புள்ளிகள் 18 தொகுதி - 1 புள்ளிகள் 1)கோஷான் சே - 54 புள்ளிகள் 2)நிழலி - 54 புள்ளிகள் 3)கிருபன் - 54 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 47 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 46 புள்ளிகள் 7)வாத்தியார் - 39 புள்ளிகள் 8)நுணாவிலான் - 38 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 10)கந்தையா57 - 36 புள்ளிகள் 11)சுவி - 28 புள்ளிகள் 12)புலவர்- 27 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,39, 40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 30 கேள்விகளுக்கு (64 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  29. தமிழ்க் கவிதைகளின் நவீன கால வரலாறு சுப்ரமணிய பாரதியில் இருந்து தொடங்குகிறது என்பது பரவலான பார்வை. அவரது முறுக்கு மீசையையும், மிடுக்கான கோட்டையும் போலவே உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்ற அவரது வரிகளும், அவரது அடையாளத்தோடு கலந்தவை. ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும். தமது எழுச்சிமிகு விடுதலைப் போராட்டப் பாடல்களால் பெரிதும் அறியப்பட்ட சுப்ரமணிய பாரதியின் வரலாற்றிலும், அப்படி ஒரு பக்கம் உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்து புதுவைக்கு சென்ற பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் எழுச்சிமிகுந்த பாடல்கள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார். முதல் உலகப் போர் முடிந்த நிலையில், புதுவையில் இருந்து சென்னை மாகாணத்துக்குள் நுழைய முயன்ற பாரதியாரை கடலூர் அருகே கைது செய்து கேப்பர் மலை சிறைச்சாலையில் அடைத்தது பிரிட்டீஷ் இந்திய போலீஸ். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வாரத்துக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாரதியார் சிறை நிலைமைகளைத் தாங்க முடியாமல் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி மெட்ராஸ் மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் என்பவருக்கு மிகப் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதத்தை எழுதினார். இந்தக் கடிதம் பாரதி குறித்த சித்திரத்தை மாற்றிவிடும் மொழியில் அமைந்திருக்கும். ஒருபுறம் இந்தக் கடிதத்துக்காக சிலர் பாரதியை விமர்சித்தாலும், பாரதி ஆர்வலர்கள் அவரை அவரது சூழ்நிலையில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எந்த சூழ்நிலையில் பாரதி இந்தக் கடிதத்தை எழுத நேர்ந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள். கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்? ‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ என்ற தலைப்பில் பாரதியின் படைப்புகளை 12 தொகுதிகளாக தொகுத்துள்ளார் சீனி.விஸ்வநாதன். இந்த நூலில் பாரதி எழுதிய அந்த ஆங்கிலக் கடிதம் இடம் பெற்றுள்ளது. சென்னை ஆவணக் காப்பகத்தில் இருந்து பெற்ற அரசு ஆணை நகலின் அடிப்படையில் அவர் இந்தக் கடித வாசகத்தை தந்துள்ளார். அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் இதோ: மாட்சிமைதாங்கிய பெண்ட்லன்ட் பிரபு, சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம். மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும். புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும். அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார். அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட. மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும். மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன். https://www.bbc.com/tamil/articles/c0dr20r0rd2o?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR27njOTiSSmpcP8lP4WqNuLxqAanLnhQKUNO2UMYGm5qdmyay1XEmxS8l8_aem_AVKmtKS1HTidUaIDyTN4pfJUe_RT7JidNIF6iXfCg7z0rAoy-MN47KOY3lmfKdxtsC8VLAOlF6BBSL9UV9R18JbR
  30. சீமான் விஜேய் 2026க‌ளில் சாத்திய‌ம் ஆகுமா தெரிய‌ வில்லை த‌னித்து நின்று இல‌க்கை அடைவ‌தென்ப‌து த‌மிழ் நாட்டில் முடியாது அண்ணா நீங்க‌ள் சொல்வ‌து போல் த‌மிழ் நாட்டில் பீஜேப்பி வ‌ள‌ர்வ‌து சிறுதுளி கூட‌ என‌க்கும் விருப்ப‌ம் இல்லை அவ‌ங்க‌ள் வ‌ள‌ந்தால் த‌மிழ் மொழிய‌ அழித்து ஹிந்திய‌ தினிப்பாங்க‌ள் ஆனால் பீஜேப்பி கூட்ட‌னி வைச்ச‌தால் தான் 11ச‌த‌ வீத‌த்தை பெற்றார்க‌ள் இல்லையெனில் அவ‌ர்க‌ள் 4 ,6 ச‌த‌ வீத‌ம் தான் எங்க‌டை த‌மிழ் நாட்டு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு ப‌ல‌ நாக்கு அண்ணா த‌மிழ் நாட்டில் பீஜேப்பிக்கு பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று சொன்ன‌ ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் ஜ‌யா பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைக்காட்டி பீஜேப்பி இந்த‌ தேர்த‌லில் பெரிசா வ‌ள‌ந்து இருக்காது அண்ணா ச‌ர‌த்குமார் அவ‌ரும் அவ‌ரின் க‌ட்சியை பீஜேப்பியுட‌ன் இணைத்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் மூல‌ம் பீஜேப்பிக்கு ஒரு ச‌த‌ வீத‌ வாக்கு த‌ன்னும் கூடி இருக்கும் ச‌ர‌த்குமார் சொன்ன‌து பீஜேப்பி யார் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌லும் த‌ன் க‌ட்சி அவ‌ர்க‌ளுட‌ன் கூட்ட‌னி வைக்காது என்று....................................... விஜேய் திராவிட‌ம் பேசாம‌ த‌மிழ் தேசிய‌ பாதையில் ப‌ய‌ணித்தால் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ப‌ல‌ தொகுதியில் வெல்ல‌லாம் அண்ணா...........................அண்ண‌ன் சீமான் விஜேய் ம‌றைமுக‌ பேச்சு வார்த்தை ந‌ட‌ந்து கிட்டு இருக்கு பாப்போம்................................ந‌ல்ல‌தை நினைப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்........................................................
  31. கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி
  32. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி ஆவணி 15 ஆம் திகதி, தமிழ் மக்கள் சார்பாகப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ தன்மை பற்றி அரசுதரப்பு எழுப்பிய கேள்வி குறித்த விளக்கத்தினை தமிழர் தரப்பு கோரியது. ஆவணி 12 ஆம் திகதிய ஆரம்ப அறிக்கையில் ஹெக்டர் , "இலங்கையில் வாழும் தமிழர்களின் குறித்த ஒரு குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். தமிழர் தரப்பினர் விடுத்த ஒருங்கிணைந்த அறிக்கை கீழே, இலங்கை அரசாங்கம் எமக்குத் தரவிருப்பதாகக் கூறிக்கொள்ளும் தீர்வினை நீங்கள் முன்வைக்கும் முன்னர், இரு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை தமிழர் தரப்பு கோருகிறது. இதற்கான உங்களின் பதிலிலேயே நாம் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கேற்பது தங்கியிருக்கிறது. ஆகவே, நான் கூறவிருக்கும் இவ்விடயங்களைக் கவனமாகச் செவிமடுத்து, அதற்கான பதிலை நன்கு ஆராய்ந்து, தீவிரத்தன்மையினை உணர்ந்து பதிலளிக்குமாறு கனவான்களான உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். முதலாவது விடயம், தமிழர்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத் தன்மை குறித்த இலங்கை அரசு தரப்பின் கேள்வி. ஆவணி 12 ஆம் திகதியில் தனது ஆரம்ப உரையினை ஆற்றிய ஹெக்டர் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளை "இலங்கையில் வாழும் தமிழர்களின் ஒரு பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று விழித்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சிங்கள அரசு, தமிழர் தரப்பினை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் செய்தியினைச் சொல்லியிருந்தார். திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளான நாம், ஏதோ வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் அல்ல, மாறாக நாம் தமிழ் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மக்களை உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே விடுதலைப் போராளிகள் என்பதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்த் தேசத்தின் ஒரே பிரதிநிதிகள் நாங்கள். மேலும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு வானில் இருந்து வீழ்வதல்ல, மாறாக அடக்குமுறைக்குத் தொடர்ச்சியாக முகம்கொடுத்து வரும் இனம் ஒன்றின் எதிர்வினையிலிருந்து உருவாவது, அம்மக்களின் ஆதரவினாலும், நம்பிக்கையினாலும் வளர்ந்துவருவது. எமது தேசத்தின் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் இலட்சியத்துடன் ஆயுதம் ஏந்தி நிற்கும் விடுதலைப் போராளிகளே நாம் அன்றி ஆயுத மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இல்லையென்பதையும் கூறிக்கொள்கிறோம். தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி தமிழினம் சிங்கள‌ அரசுகளுடன் காலம் காலமாக ஜனநாயக வழிகளில் முயன்ற அனைத்துமே தோல்விகண்டதன் விளைவாகவே நாம் ஆயுதங்களை ஏந்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எமது ஆயுதப் போராட்டம் விளைவித்த அழுத்தம் காரணமாகவே உங்களின் அரசாங்கம் எம்மை தமிழ் மக்களின் நியாயமான பிரதிநிதிகள் என்பதை நன்றாக உணர்ந்தே "ஆறு ஆயுத அமைப்புக்களுடன்" பேசவென்று உங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறது என்பதைக் கனவான்களான நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். ஆனால், இந்த யதார்த்தம் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே புரிந்தால்ப் போதுமானது அல்ல. திம்புப் பேச்சுக்களின் ஊடாக இப்பிரச்சினைக்குச் சர்வதேச பரிமாணம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதனால், இந்த யதார்த்தங்கள் பேச்சுவார்த்தைகளில் முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மேலும், இதுகுறித்த இன்னொரு நடைமுறைச் சிக்கல் ஒன்று குறித்தும் பேசுவது அவசியம் என்று நான் கருதுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்களின் தேசத்தையும் பிரதிநிதித்துவம் செய்யாது, ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு ஆயுத அமைப்புக்களுடன் உங்களின் அரசு பேச்சுக்களில் சமமாகப் பேச அமர்ந்திருப்பதனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் எப்படி விளக்கப்போகிறீர்கள்? எம்மை, எமது மக்களின் சட்டபூர்வப் பிரதிநிதிகள் இல்லையென்று பிடிவாதம் செய்து, அகம்பாவத்துடன் எமக்கு முன்னால் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் என்பதை நாமும் தான் எமது மக்களிடம் எப்படிக் கூறப்போகிறோம்? திம்புப் பேச்சுக்கள் தொடரவேண்டுமானால் இந்த நடைமுறைச் சிக்கல் களையப்படவேண்டும் என்பதுடன், இதனைக் களைவதற்கான முழுப் பொறுப்பும் அரச தரப்பிடமே இருக்கிறதென்பதையும் நான் கூறிக்கொள்கிறேன், ஏனென்றால் இச்சிக்கலினை உருவாக்கியவர்களே நீங்கள்தான். எமது சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி கேட்பதற்கு, மக்களின் விருப்பிற்குப் பயந்தோடி, தேர்தலை இரத்துச் செய்து, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆனால், மக்களின் விருப்பிற்கு மாறாக, அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து, சர்வஜன வாக்கெடுப்புக்கள் மூலம் மக்களை அடக்கியாளும் உங்களைப் போன்ற, மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அற்ற சர்வாதிகார அரசுகள் உலகில் காணப்படுவதால் அதுகுறித்து சர்ச்சையொன்றினை உருவாக்குவதை நாம் தவிர்த்துவிடுகிறோம். பேச்சுக்களைத் தொடர்வதற்கு முன்னர், நாம் முன்னர் குறிப்பிட்ட இரண்டாவது விடயம் குறித்துப் பேசலாம். அரசு தரப்புக் குழுவின் தலைவர் காணி தொடர்பாக தனது நிலைப்பாட்டினை சபையில் தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார். ஆனால், நாம் முன்னர் பல தடவைகள் கூறியது போல, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்னவென்பது குறித்த தெளிவான முடிவொன்று எடுக்கபாடதவிடத்து, அதிகாரப் பரவலாக்கத்திற்காகக் கருத்தில் கொள்ளப்படும் விடயங்கள் குறித்து பேசுவதில் எந்தபயனும் இல்லையென்பதனால் அவை குறித்து நாம் பேசப்போவதில்லையென்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்விற்கான கட்டமைப்பு என்று உங்களால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் சரியான காரணங்களுடன் முற்றாக நிராகரித்திருக்கிறோம். ஆகவே, முன்னைய ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய ஆலோசனைகளை நீங்கள் முன்வைக்கப்போவதாகக் கூறுவது எம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே, எமது கேள்விகளுக்காக நீங்கள் வழங்கப்போகும் பதில்களிலேயே இப்பேச்சுக்கள் தொடரப்படவேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது. தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அறிக்கை, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அச்சுருத்தலாக இருக்கப்போகிறது என்கிற நிலை தோன்றியது. இலங்கையரசாங்கம் இதனால் கொதிப்படைந்தது. தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்த அரசாங்கத்தின் கேள்வியே தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்வதற்கான வழியினைத் திறந்துவிட்டிருப்பதை அரசு உணர்ந்துகொண்டது. திம்புவில் இருந்து தனது சகோதரரான ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார் ஹெக்டர். தாமே உருவாக்கிய சிக்கலில் இருந்து வெளிவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.
  33. 6.5% இருந்து 8.1 % எடுத்தது சீமானின் அதிரடி பாய்ச்சல் ,சாதனை ,மற்ற கட்சிகளுக்குபெரும் அச்சுறுத்தல் 🤣 தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லாமல் ஹிந்திகாரர்களா
  34. 'Saving Private Ryan' இந் நிகழ்வை அடிப்படையாக வைத்து 1998 இல் அந்த அருமையான ஒரு படம். இது 1999 இல் நிறைய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில விருதுகளையும் வென்றது. என்னுடன் வேலை செய்யும் ஒருவர் அவரின் தாத்தா, அவர் ஒரு முன்னாள் படை வீரர் மற்றும் நார்மண்டி தரையிறக்கத்தில் பங்குபற்றியவர், இந்த வாரம் அங்கு போயிருப்பதாகச் சொன்னார்.
  35. சரி என்ன செய்வது தண்ணி கொஞ்சம் குடிங்க.2019 இலும்பார்க்க திமுக இந்த முறை குறைந்த சதவுPதத்தைப் பெற்றிருக்கிறது. அதிமுகவும் 2019 வை விட கூடிய சதவிதத்தைப் பெற்றிருக்கிறது. பல கட்சிக் கூட்ணியோடு சேர்ந்த பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்i இழக்கிறது. அந்த மாம்பழத்துக்கு இந்த முறை விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தயராகிவிட்டதாகவும் திமுகவாகன உதவி செய்ய விருப்பதாகாவும் தகவல் அடிபடுகிறது.
  36. அநேகமாக இந்த நாலு பேரும் மேலே போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.
  37. இங்கு சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தினம் தினம் சிங்கள அரசுகளால் எமது மக்கள் படும் துன்பங்களையோ அநிஞாயங்களையோ பற்றி பேசுவதில்லை. ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் பலர் இருந்தும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் எந்த ஒரு விடயத்தையும் குறைந்த பட்சம் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு எழுத கூட மாட்டார்கள். கேட்டால் உலகத்துக்கு தெரியாததா என்பார்கள். வீட்டில் களவு போனால் கூட முறைப்பாடு செய்தால்த் தான் பொலிசே வருவான். எந்த ஒரு பொலிசும் வீடு தேடி வந்து உங்க வீட்டில் களவு போட்டுதா என்று கேட்க மாட்டான்.
  38. ஓணாண்டியார், சுகமா? கனகாலம் கண்டு. அவசரப் பட்டுட்டியள். புலிகள் தத்துவத்தைப் பேச லைசென்ஸ் வேண்டுமென்றோ அல்லது பேசவே கூடாதென்றோ சொல்லவில்லை. எதற்காகப் பேசுகிறோம், பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். ஒரு தமிழக அரசியல் வாதி, தன் ஊரில் வாக்குகள் பெற, ஈழவரிடம் நிதி பெற, அதனால் தன் அரசியல் கட்சியை ஆட்சியில் அமர்த்த புலிகளின் கொடியை, பிரபாகரன் படத்தைப் பயன்படுத்துவது தவறு என்பது என் அபிப்பிராயம். ஆனால், யாராவது "ம்.." என்றால் "ஐயோ கொச்சைப் படுத்தி விட்டார்" என்று ஒப்பாரி வைக்கும் யாழ் கள சீமான் விசிறிகளுக்கு சீமான் செய்வது "மகிமைப் படுத்தலாக" தெரிவதில் ஆச்சரியமில்லை என நினைக்கிறேன்😎. டிசைன் அப்படி!
  39. திரு திருமதி பாஞ்ச அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி நலமே வாழ என் வாழ்த்துக்கள்
  40. திருமணநாள் வாழ்த்துகள் பாஞ்ச் ஐயா & அம்மா, வாழ்க வளத்துடன்.
  41. 53 ஆவது திருமண நாள் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்க வளம் நலம் மகிழ்ச்சி உடன் ❤️🤣👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.