Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    12678
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/09/24 in Posts

  1. இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html
  2. பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 34 2 பிரபா USA 32 3 ரசோதரன் 32 4 ஈழப்பிரியன் 30 5 சுவி 30 6 நந்தன் 30 7 வாதவூரான் 28 8 ஏராளன் 28 9 குமாரசாமி 26 10 தமிழ் சிறி 26 11 கிருபன் 26 12 கந்தப்பு 26 13 வாத்தியார் 26 14 எப்போதும் தமிழன் 26 15 நீர்வேலியான் 26 16 வீரப் பையன்26 24 17 நிலாமதி 24 18 தியா 24 19 புலவர் 24 20 P.S.பிரபா 24 21 நுணாவிலான் 24 22 அஹஸ்தியன் 24 23 கல்யாணி 24
  3. கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.
  4. 🤣.... 13 முட்டைகளை கூடுதலாக பொரிச்சிட்டமோ....🤣 👍... பார்த்தேன்....16 ஓவரிலிருந்து தான் பார்த்தேன்......👍
  5. நான் இந்த ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தேன் 1-0 நிலையில் நமது பிளை;ளைகள் நீண்ட நேரம் முன்னிலை வகித்த போதும் பனால்ட்டி உதை மூலம் சமப்படுத்தியிருந்த வேளையில் 84 வது நிமிடத்தில் அவர்கள் அடுத்த கோலையும் போட்டு வெற்றி பெற்றார்கள். கலந்து கொண்ட இறுதிப் போட்டியியேயே இறுதிப் போட்டி வரைக்கும் வந்த நமது பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்.
  6. நான் இப்ப எந்த இடத்தில் நிக்கிறேன்........! 😴
  7. மண்ணோடும் மானோடும் விளையாடும் மனமே .........! 😂
  8. சிட்டாக துள்ளி வா ........! 😍
  9. 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) - 1ம் இடம் வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 69 புள்ளிகள் 2)கிருபன் - 69 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 60 புள்ளிகள் 5)பிரபா - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 56 புள்ளிகள் 7)நுணாவிலான் - 49 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 43 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 39 புள்ளிகள் 11)சுவி - 37 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 34 கேள்விகளுக்கு (79 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  10. 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, கிருபன் , நிழலி 1)நிழலி - 67 புள்ளிகள் 2)கிருபன் - 67 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 58 புள்ளிகள் 5)பிரபா - 58 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 54 புள்ளிகள் 7)நுணாவிலான் - 47 புள்ளிகள் 8)வாத்தியார் - 43 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 41 புள்ளிகள் 10)கந்தையா57 - 37 புள்ளிகள் 11)சுவி - 35 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 33 கேள்விகளுக்கு (77 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  11. 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , நிழலி ,பிரபா 1)நிழலி - 62 புள்ளிகள் 2)கிருபன் - 62 புள்ளிகள் 3)கோஷான் சே - 58 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 56 புள்ளிகள் 5)பிரபா - 55 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 52 புள்ளிகள் 7)வாத்தியார் - 43 புள்ளிகள் 8)நுணாவிலான் - 43 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 33 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 36, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 32 கேள்விகளுக்கு (72 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  12. வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது. எவருடனும் கூட்டணியில்லை. பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. ஊடக ஆதரவு இல்லை பண பலம் இல்லை. அரசியல் பின்புலம் இல்லை. இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து 8% ஆக வாக்குகளைப் பெற்றிருப்பது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன? தமிழக அரசியல் ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு, பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? வெறுப்பும் வஞ்சகக் குணமும் மனிதர்களின் கண்களை மறைக்கிறது.
  13. விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை! அதே நேரம் எனது கட்டுரை, கதை , கவிதைகளுக்கு, -- அதைச் சரியாக படித்து விளங்காமல், அல்லது அதற்கான தனது கருத்தை அறிவுபூர்வமாக பதியாமல், எதோ தானோ என்று ஏதேதோ அலட்டுவதை நானும் எதிர்கொண்டுள்ளேன். கேட்கப்பட்ட கேள்விக்கு அல்லது கொடுக்கப்பட்ட பதிலுக்கு விடையை அல்லது தங்கள் கருத்துக்களை பதியாமல், தேவையற்ற, பொருத்தமற்ற வாதங்களை பதிவதை அண்மையில் கூட அனுபவித்தேன். அதனால் தான் என் மனதில் தோன்றுவதை இங்கு பதிவிடுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன். முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதைச் சொல்லலாம். திருக்குறளில், அதிகாரம்: கல்வி குறள் எண்:m391 இல் "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்று தான், வள்ளுவர் கூறியிருக்கிறார். எனவே எவருக்கும் எதைக் கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மை தான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளு வரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப் பாலை 169-171, "பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவ சமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம். பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth, he that reapeth]. எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish]. ஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே . அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும். "வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
  14. கையில் துடைக்கும் காகிதம் வைத்துக் கொண்டு பார்க்கவும் ......! 😂
  15. மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் அமித்ஷா நிதின் கட்காரி ஜே.பி.நட்டா சிவராஜ் சிங் சவுகான் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் மனோகர் லால் கட்டார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பியூஷ் கோயல் தர்மேந்திர பிரதான் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங் சர்வானந்த சோனாவால் வீரேந்திர குமார் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு பிரகலாத் ஜோசி ஜூவல் ஓரம் கிரி ராஜ் சிங் அஸ்வினி வைஷ்ணவ் ஜோதிராதித்ய சிந்தியா பூபேந்தர் யாதவ் கஜேந்திர சிங் ஷெகாவத் அன்னபூர்ணா தேவி கிரண் ரிஜிஜூ ஹர்தீப் சிங் புரி மன்சுக் மாண்டவியா ஜி.கிஷன் ரெட்டி லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் சி.ஆர்.பாட்டீல் இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு: ராவ் இந்திரஜித் சிங் ஜிதேந்திர சிங் அர்ஜுன்ராம் மேக்வால் சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி இணை அமைச்சர்கள்: ஜித்தன் பிரசாதா சிரிபத் நாயக் பங்கஜ் சவுத்ரி கிருஷ்ணன் பால் குர்ஜால் ராம்தாஸ் அத்வாலே நித்யானந்த் ராய் அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல் சோமன்னா பெம்மசாணி சந்திரசேகர் எஸ்.பி.சிங் பாகேல் சோபா கரந்லாஜே கீர்த்தி வர்தன் சிங் பி.எல்.வெர்மா சாந்தனு தாகூர் கமலேஷ் பாஸ்வான் பண்டி சஞ்சய்குமார் அஜய் தாம்தா எல்.முருகன் சுரேஷ் கோபி ரன்வீத் சிங் பிட்டு சஞ்சய் சேத் ரக்‌ஷா கட்சே பாகிராத் சவுத்ரி சதீஷ் சந்திரடூபே துர்கா தாஸ் உய்கி சுகந்தா மஜும்தார் சாவித்ரி தாக்கூர் டோக்கான் சாவ் ராஜ் பூஷன் சவுத்ரி பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஹர்ஸ் மல்ஹோத்ரா நிமுபென் பாம்பனியா முரளிதர் மொஹோல் ஜார்ஜ் குரியன் பபித்ரா மார்கரீட்டா https://news7tamil.live/modi-3-0-who-are-the-union-ministers-full-list-here-it-is.html
  16. கடந்த 9 மாதங்களில் 40 ஆயிரம் அப்பாவி பலஸ்தீனிய குழந்தைகள், தாய்மார் (பெரும்பாலும்) கொல்லப்பட்டதற்கு ஒரு வரி கூட எழுதாமல் 4 பணய கைதிகளுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் என்ன?
  17. "தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] "தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே! மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் பேசும் மொழியைக் கலக்காமல் கதைப்போம்! கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!" "நிலைத்த புகழை அது பரப்பட்டும் பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே! சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் முழுமையான முறைப் படி வளரட்டும்! வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. நாங்க‌ளே ஜ‌ந்து ப‌த்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க‌ நாங்க‌ள் வில்கேச்சா அல்ல‌து அம்பானி குடும்ப‌மா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ர‌ன்ஸ் சிர‌ம‌ ப‌ட்டு அடிச்சால் க‌ண்ண‌ முடிட்டு சொல்லுவேன் 140ர‌ன்ஸ் அடிச்ச‌ அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்ப‌டி இன்று ம‌ழை பெய்த‌தால் பிச்சின் த‌ன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்ற‌ம் இல்லா பிச்................................................
  19. இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் திரும்பி போக ஒரே பிளைட்டை புக் செய்யலாம்.......
  20. "பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்தை குறைப்பதற்கும் கட்டாயம் வழிசமைக்கும். இதைத்தான், விஞ்ஞானமும், இலக்கியமும் சமயமும் செய்கின்றன. என்றாலும் அவைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக, அறிவிற்கு ஒவ்வாததாக இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை. என்றாலும் மரணத்தை பற்றிய அல்லது மரணத்தின் பின் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளும் அப்படி அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வேண்டாத, அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை, நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றினாலும் தூக்கி எறியவேண்டும். இதைத்தான் அறிஞர்களும் சித்தர்களும் கூறினார்கள். மேலும் பொதுவாக ஆண்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஓரளவு சமரசம் செய்கிறார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. மற்றும், மரணம் பற்றிய கவலை, அதிக மத நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் குறைவாக காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சில 'சமயங்கள்', இறப்பை இன்னும் ஒரு தொடக்கத்தை குறிப்பதாக கருதுவதாகும் [some religions associate death with another beginning]. இது ஓரளவு பாதிப்பில்லா மூடநம்பிக்கை. அப்படியான, ஆத்மாவின் விடுதலை அடையும் வரை, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் இறையியலில் திருவள்ளுவர் நம்பினார் [theology of cycle of births and deaths till the liberation of soul is attained]. அதன் விளைவுதான் குறள் 339 எனலாம். அதில் அவர்: "உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்று கூறுகிறார். உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள். என்றாலும் தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தான் இறப்பது. அதாவது தூங்குவது போன்றதே இறப்பு, தூங்கிய பின்னர் விழிப்பது போன்றதாம் [மீண்டும்] பிறத்தல் என்கிறது. இந்த சிந்தனையில், பாவ புண்ணியங்களை பொறுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நம்பிக்கையும், அதை ஒட்டிய கருத்துக்களும் கூட தெரிகிறது. ஒருவர் நன்றாக ஆழ்ந்து தூங்கும் போது, இவ்வுடம்பைப் பற்றிய எண்ணத்தையோ, அது இருக்கும் நிலையைப் பற்றியோ மூளை நினைவு படுத்திக் கொண்டிருப்பதில்லை. அது ஓரளவுக்கு உயிரியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும். தானும் ஓய்வு கொண்டு, உயிர், உடல் இவற்றுக்கும் ஓய்வினைத் தந்து இயங்குகிறது. தூக்கம் என்பது ஏறக்குறைய இறந்த நிலை தான். ஒருவருக்கு. ஒவ்வொரு நாளும் உறங்கி விழிப்பது, பிறப்பது போல என்பது, தூங்குவது இறப்பானால், விழிப்பது பிறப்புதானே என்கிற ஒரு வாதத்தை ஒட்டிய கருத்து ஆகும். நாம் தூங்கி விழிக்கும் போது நமக்கு நேற்று நடந்தது, இன்று நடக்க வேண்டியது, நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றிய அறிவும் நினைவும் இருக்கின்றன. ஆனால் பிறக்கும் ஓர் உயிருக்கு - ஒரு கருத்துக்கு, மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் கூட? - கடந்த பிறவிகளின் நினைவுகள் வருவது இல்லை, ஒரு சிலருக்கு இருப்பதாக நாம் செய்திகள் மூலம் கேள்விப் பட்டாலும் கூட அது இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப் படுத்த வில்லை. பொதுவாகப் பார்க்கையில், இறப்பு என்பது நினவுகளை முற்றிலும் மறக்கச் செய்கிற நிகழ்வு. பிறப்பு என்பது எவ்வித நினைவுகளையும் சுமந்து வராத நிகழ்வு. பிறப்பை ஒரு தற்செயலாக தன்னிச்சையான செயலாகச் சொல்லலாம். இறப்பை ஒரு உறுதியான இறுதி செயலாகச் சொல்லலாம். இந்த கருத்தை யொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய வற்றிலும் பார்க்கலாம். “விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” என்கிறது நாலடியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், “ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி” என்கிறது. “பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மை யின்” என்கிறது மணிமேகலை. இந்நிலையாமையை நாம் உணர்வதில்லை என்று சுந்தரர், இன்னும் ஒரு தேவாரத்தில், "நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்" என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் "வறிதே நிலையாத இம்மண் ணுலகில் நரனா கவகுத் தனைநா னிலையேன்" என்று பாடுகிறார். இவை எல்லாம் இறப்பை பற்றிய அன்றைய சிந்தனைகள். அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர், திருநாவுக்கரசர், நாம் யாருக்கும் குடி அல்ல; நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். நரகத்தில் இடர்ப்படோம். அதாவது ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம். அதாவது, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது. என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறார். இங்கும் இறப்பை பற்றிய அன்றைய கருத்து தெளிவாகிறது. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை." திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மேலும் சில பாடல்களைக் காண்கிறோம். உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படுத்தி, குறள் 334 “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்" என்று சிறப்பாக சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டு போகிறது. யமனின் வாள் போன்றது நாள் என்கிறது. இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம். அதாவது ஒரு நாள் முடியும் போது, யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு, இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது. இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது. என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான். வாளின் இறுதி பிரயோகத்தில், அவனது வாழ்வு எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது. இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது. இதை உறுதி படுத்துவது போல பட்டனத்தார், "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று கூறுகிறார். இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது, கண் ஒன்றையும் பார்க்காது, காது ஒன்றையும் கேட்காது, எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும், நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும், கடைசி மூச்சு விக்கலாக வரும் - அந்த நேரத்தில் புகழ்த் தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது. அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும் முன், உடனடியாக நற்பணபுள்ள, நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக. நேரத்தை வீணாக்க வேண்டாம். இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திருவள்ளுவர், தனது குறள் 335 இல் "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்" என ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான். தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால், அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான். பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்: அண்ணா, எனக்கு அதிசயமாக இருக்கிறது, நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா? தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது. உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் என்கிறது அந்த கதை. ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது. ஆயினும், எவரையும் பயம் கொள்ள வைத்த குறள் – ”நேற்று வரை உயிரோடு இருந்தான், ஆனால் இன்று இல்லையே” என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம் என்று கூறும், குறள் 336 ஆகும். அது, ."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு". எனக் கூறுகிறது. “நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன இந்த குறள். எவ்வளவு கொடுமையானது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும். நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும் பெரியது?. ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார். வாழ்வு நிலையற்று இருக்கும் போது, நிலையற்ற பொருட்களை, நல்ல செயல்களை செய்யாமல், வைத்திருப்பதால் என்ன பயன்? இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்? மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர் / யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான். யக்கர்: இந்த உலகில் மிகவும் வியப்படையச் செய்வது எது ? தருமர்: ஒவ்வொரு நாளும் மக்கள் மரிணிக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான். இது தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதே போல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும் என்ற கருத்தை உடையவர். இவர் தனது ஒரு பாடலில் " ... பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர் கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே என்னபயன் கண்டீர் சுட்டே ... பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேய ரேநீர் ... " [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5609] என்று கேட்கிறார். மேலும் இவர் "இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்?" [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5600] என்றும் தனது அவாவை வெளிப்படுத்துகிறார். அதாவது உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும் போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள் என கேட்க்கிறார். அது மட்டும் அல்ல, பறை மேளத்தின் சத்தம் கேட்டு தான் கலங்குவதையும் கூறுகிறார். "மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம் காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்" [திருவருட்பா 3428.] மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கை என்கிறார். இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்: "நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிரமாணமே கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே." உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர். இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. யார் கண்பட்டதோ தெரியல்ல அந்த இடமும் போய்விட்டுது..
  22. நான்கு பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் செய்த மனிதப்படுகொலைகளை கண்டிக்கும் அதேவேளை, ஹமாஸ் பயங்கரவாதிகள் பாலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக, அதுவும் அகதி முகாம்களைக் கூட பயணக் கைதிகளை சிறை வைக்கும் சிறைக் கூடங்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் கண்டிக்க படல் வேண்டும். போரில் வெல்ல மக்களை மனிதக் கேடயங்களாக எவர் பயன்படுத்தினாலும் அது கண்டிக்கபடல் அவசியம்.
  23. நக்கல் ஒண்டும் கிடையாது.......நெசமாத்தான் அப்பு........! 😂
  24. 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 ஈழப்பிரியன், வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 71 புள்ளிகள் 2)கிருபன் - 71 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 4)பிரபா - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள் 7)நுணாவிலான் - 51 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 41 புள்ளிகள் 11)சுவி - 39 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 35 கேள்விகளுக்கு (81 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  25. தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு (ஆதவன்) தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:- * தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும் * தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும் * தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலும் மருத்துவமனைகளில் மனிதவளம் குறிப்பாகத் தமிழ்த் துணை மருத்துவ ஆளணி மேம்பாட்டை அதிகரிக்கும் வேலைத்திட்ட முன்னெடுப்பும் * தமிழர் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்புச் சவால்களை வெற்றிகொள்ளலும், ஏழைத்தமிழரின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும் *இளையோர் எதிர்கொள்ளும் போதை, தற்கொலை, விபத்துப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்தலும், தமிழ் மாணவர்களின் அறநெறிக் கல்வியை வலுப்படுத்தலும்ஆகியனவே இந்த ஐந்து அம்சத் திட்ட யோசனைகளாகும். இதேவேளை நிபுணர் குழுவில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் எமக்கு அறியத்தரலாம் என்பதுடன், பொருத்தமானவர்களை முன்மொழியலாம் - என்றுள்ளது.(ஏ) https://newuthayan.com/article/தமிழர்_இருப்புக்காக_செயற்றிட்ட_வரைவு!
  26. தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. இது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவின் அறிக்கையின் இறுதிப்பகுதி. அப்பொழுது நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக மேற்படி சுயாதீனக்குழு உழைத்தது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்தித்தது. எனினும் சந்திப்பின் விபரங்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டதுக்குமப்பால் அக்குழு தொடர்ந்து செயல்படவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டபடி ஒரு மக்கள் அமைப்புக்கான தேவை தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த விவாதத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி சுயாதீன குழுவிலும் அங்கம் வகித்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வவுனியாவில் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தினார்கள். 32பொதுமக்கள் அமைப்புகள் கலந்துகொண்ட சந்திப்பின் முடிவில் வவுனியா தீர்மானம் என்று அழைக்கப்படும் ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சித் தலைவர்களையும் கட்சிப் பிரமுகர்களையும் கட்சி சாரா முக்கியஸ்தர்களையும் சந்தித்தது. அதேசமயம் அச்சத்திப்புகளுக்குச் சமாந்தரமாக மக்கள் அமைப்புகள், மாவட்ட மட்ட ஒன்றியங்கள் போன்றவற்றையும் அக்குழு சந்தித்தது. கூட்டுறவாளர் ஒன்றியங்கள்; கடல் தொழிலாளர் ஒன்றியங்கள்; வணிகர் கழகங்கள்; பார ஊர்திகள் சங்கங்கள் போன்றவற்றை அக்குழு சந்தித்தது. இச்சந்திப்புக்களின் போது மக்கள் ஒரு பொது வேட்பாளருக்கு அமோகமாக ஆதரவு தெரிவித்தார்கள். எந்த ஒரு சந்திப்பிலும் யாரும் அது தேவைதானா என்று கேட்கவில்லை. கடந்த 15 ஆண்டு கால அரசியல் செயற்பாடுகளின் மீது அவர்கள் சலிப்பும் விரக்தியும் அடைந்து விட்டார்கள். அவர்கள் மாற்றத்தைக் கேட்கிறார்கள் என்று சந்திப்பில் கலந்து கொண்ட குடிமக்கள் சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகளுடான சந்திப்பின் விவரங்களை அக்குழு கடந்த வாரம் ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு வெளியிட்ட அறிக்கையோடு ஒரு விடயத்தில் அதிகம் ஒத்திருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில கட்சிகளைத்தவிர பெரும்பாலான ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகள் ஏறக்குறைய ஒன்றுதான் என்பதே அந்த ஒற்றுமை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு கட்டத்துக்கு மேல் செயல்பட முடியவில்லை.ஏனெனில் கட்சிகளை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதாவது மக்கள் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்யக்கூடிய சக்தி மையங்களாக இருக்கவில்லை. ஆயின், மக்கள் அமைப்புக்கள் தங்களைப் பலமான சக்தி மையங்களாக வளர்த்தெடுத்துக் கொண்டால்தான் தமிழ் அரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கிச் செலுத்தலாம் என்பதே கடந்த 15 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட பாடமாகும். இந்தப் பட்டறிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் கூடிய குடிமக்கள் அமைப்புகள் மீண்டும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் கடந்த ஐந்தாம் திகதி, தியாகி சிவக்குமாரனின் நினைவு நாளன்று, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் கூடின. இக்கூட்டத்தில் மேற்படி குடிமக்கள் சமூகங்களின் ஒன்றிணைவானது தன்னை “தமிழ்மக்கள் பொதுச்சபை” -Tamil people’s Assembly- என்று பெயரிட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் பொதுச் சபையானது தனது செயற்பாட்டுத் தேவைகளுக்காக கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி கட்டமைப்புகள் தேவையான புதிய கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் பொதுச்சபையைப் பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 15ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய தமிழ் மக்கள் பேரவை; தமிழ் மரபுரிமைப் பேரவை; பி2 பி மக்கள் இயக்கம் போன்றவற்றின் தொடர்ச்சியாக மற்றொரு புதிய மக்கள் அமைப்பு உதயமாகியிருக்கிறது. தமிழ்மக்கள் பொதுச்சபையானது ஒரு நிரந்தர பெயர் அல்லவென்றும் எதிர்காலத்தில் அதன் பெயர் அதன் கட்டமைப்புக்குள் உட்பட அனைத்தும் பொருத்தமான விதங்களில் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடிமக்கள் சமூகங்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கைதான். அதற்குச் சமாந்தரமாக பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த பின் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து ஒரு கலப்புப் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது. இக்கலப்புப் பொதுக் கட்டமைப்பு அதற்கு வேண்டிய உப கட்டமைப்புகளை உருவாக்கி அவற்றின்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் என்றும் தெரிகிறது. பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஓர் உபகுழு; வேட்பாளருக்குடைய தேர்தல் அறிக்கை தயாரிக்க ஓர் உபகுழு; நிதி நடவடிக்கைகளுக்கு ஓர் உபகுழு என்று பல்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு பொது வேட்பாளர் முன்னுறுத்தப்படுவார் என்றும் தெரிகிறது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து கூட்டாக உழைத்தால் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தும் விடயம் ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும். அது மட்டுமல்ல தமிழ் அரசியலில் அது ஒரு புதிய பண்பாட்டை வளர்க்கும். தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு பண்பாடு அது. அவ்வாறு பொறுப்புக் கூறும் பண்புடைய ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினால் அதன் விளைவாக கண்ணியமான, நேர்மையான, அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் அதிகமாக மேலெழுவார்கள். தனி நபர்களுக்காக, கட்சிக்காக வாக்குத் கேட்கும் மிதவாத அரசியல் பண்பாட்டை மாற்றி, தேசத்துக்காக வாக்கைத் திரட்டும் ஒரு புதிய பண்பாடு வளர்த்து எடுக்கப்படும். ஒருபுறம் தமிழ்மக்கள் தங்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளை சந்தேகிக்கின்றார்கள்; திட்டுகிறார்கள். இன்னொருபுறம் தமிழ்மக்கள் பல துண்டுகளாக உடைந்துபோய்க் காணப்படுகிறார்கள். அவிழ்த்து விடப்பட்ட பாக்கு மூட்டை போல சிதறும் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒவ்வொரு நெல் மணியாகத் திரட்ட ஒரு புதிய அரசியல் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு ஜனாதிபதித் தேர்தலை ஒரு களமாகப் பயன்படுத்துவது. தமிழ் மக்கள் பொதுச்சபையானது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தையொட்டி உருவாக்கப்பட்டாலும் அதன் இறுதி இலக்கு நீண்ட காலத் தரிசனத்தைக் கொண்டது என்பது வவுனியா தீர்மானத்தின் இறுதிப் பந்தியில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உச்சபட்ச தீர்வு ஒன்றைப் பெறும் விதத்தில் தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கு இவ்வாறான மக்கள் அமைப்புக்கள் அவசியம். தமிழரசியலை ஒரு புதிய பண்பாட்டை நோக்கித் திரட்டுவதற்கு இது போன்ற மக்கள் அமைப்புக்கள் அவசியம். கடந்த நூற்றாண்டில் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பு தமிழ் அரசியலில், மக்கள் அமைப்புக்கள்,மகா சபைகள்,வாலிப காங்கிரஸ்கள் போன்றன தோன்றின. கடந்த நூற்றாண்டில் முதலாவது தசாப்தத்தில் யாழ்ப்பாண சங்கம், மட்டக்களப்புச் சங்கம் போன்றன தோன்றின. அதன்பின் 1921இல் தமிழர் மகாசபை தொடங்கியது. 1924இல் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் தொடங்கியது. அதன்பின் கட்சிகள் அரங்கினுள் பிரவேசித்தன. கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் முதலில் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் 1968ல் தொடங்கியது. பின்னர் தமிழ் மாணவர் பேரவை 1970இலும், தமிழ் இளைஞர் பேரவை 1973இலும், 1976அளவில் “மனிதன்” இயக்கமும் தோன்றின. ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும் முதல் இரண்டு கட்ட ஈழப் போர்களின் போதும் அன்னையர் முன்னணிகள், பிரஜைகள் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகள் தோன்றின. 1980களின் ஆரம்பத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கம் தோன்றியது. 1981இல் யாழ் பல்கலைக் கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் தோன்றியது. 1985இல் யாழ் பல்கலைக்கழக கலாசாரக் குழு தோன்றியது. அதன் தொடர்ச்சியம் வளர்ச்சியாக, 1990களின் தொடக்கத்தில் அரங்கச் செயற்பாட்டுக்குழு தோன்றியது. அரங்கச் செயற்பாட்டுக்கு குழுவே பொங்கு தமிழ் பேரெழுச்சியை நொதிக்கச் செய்தது. யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின் யாழ்ப்பாணத்தில் முதலில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கான மக்கள் அமைப்பு என்ற அமைப்பு இயங்கியது. அதன் தொடர்ச்சியாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் என்ற ஓர் அமைப்பு இயங்கியது. இறுதிக்கட்டப் போரில் அதாவது நாலாம் கட்ட ஈழப் போரில், சில கிறிஸ்தவ மனிதநேய அமைப்புகளைத் தவிர, குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் இயக்கங்கள் எவையும் இயங்க முடியாத அளவுக்கு சிவில் வெளி ஒடுக்கப்பட்டிருந்தது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தமிழ்மக்கள் பேரவை, தமிழ் மரபுரிமைப் பேரவை, பி2 பி மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகள் தோன்றின. அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக மக்கள் அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அரசியல் இயக்கங்கள்; இளையோர் இயக்கங்கள்; மத மறுமலர்ச்சி இயக்கங்கள்; பிரஜைகள் குழுக்கள்; அன்னையர் முன்னணிகள்; கலாசாரக் குழுக்கள்…. என்று தமிழ்மக்கள் ஏதோ ஒரு மக்கள் இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கி வந்திருக்கிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்மக்கள் மத்தியில் மகத்தான மக்கள் அமைப்பு உருவாக்கிகளும் நிறுவன உருவாக்கிகளும் தோன்றியிருக்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழ் மக்களிடம் மிகச் செழிப்பான ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த செழிப்பான பாரம்பரிய அடித்தளத்தில் இருந்து இப்பொழுது ஒரு புதிய மக்கள் இயக்கம் தோன்றியிருக்கிறது. https://www.nillanthan.com/6787/
  27. வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும். -தோழர் பாலன்- இரண்டுக்கு ஒன்று என்று, நிறைவு பெற்றது. தேசியகீதம், தமிழீழ அணி என தமிழில் எழுதப்பட்டவை தேசியக் கொடி இவை நமது நோ்மறையான குறியீடுகள். இலங்கை இந்திய அரசுகளுக்குத்தான் இன்னும் வயிற்றெரிச்சல். -Nagamany Sathasivam- இந்த உலகிற்கு தமிழீழ அணி என்று சொல்ல வைத்து உள்ளோம். இதுவே ஒரு வெற்றிதான் அண்ணா விரைவில் தமிழீழ அணி அங்கிகாரத்துடன் அதன் வெற்றியை உறுதி செய்யும் ... -இராஜேஷ் இராஜேந்திரன்- தோல்வியில்லை. வெற்றி பெறவில்லை. இறுதி சுற்றில் எத்தனயோ பெரிய குழுவெல்லாம் அசால்டா தட்டி வந்ததே மிகப்பெரிய வெற்றி. -Vijayakumar Tharmalingam-
  28. தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄
  29. 4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல் 08 JUN, 2024 | 01:34 PM 4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/185589
  30. பதினாறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து டேவிட் மில்லரின் நிதானமாக ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினேழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 165 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினேழு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 28 2 பிரபா USA 26 3 ரசோதரன் 26 4 நந்தன் 26 5 ஈழப்பிரியன் 24 6 சுவி 24 7 ஏராளன் 24 8 வாதவூரான் 22 9 குமாரசாமி 20 10 தியா 20 11 தமிழ் சிறி 20 12 புலவர் 20 13 நுணாவிலான் 20 14 கிருபன் 20 15 கந்தப்பு 20 16 வாத்தியார் 20 17 எப்போதும் தமிழன் 20 18 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 20 நிலாமதி 18 21 P.S.பிரபா 18 22 அஹஸ்தியன் 18 23 கல்யாணி 18
  31. சரியான கணிப்பு. அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 % 40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 8.10 %
  32. இந்த குற்ற சாட்டு யாருக்கு ? எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ? விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே மற்றது "கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம்" ............................................................................... அது என்ன புதுக்கதை ?? யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ??? பெருமாள் இன்னும் விடை தரவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன் திருப்பவும் எங்கோ போய்விட்டார் போலும்???
  33. இன்னமும் தீட்டவில்லை போலத் தென்படுகிறது 🤣
  34. ச‌கோத‌ரி இதுக்கு க‌வ‌லைப் ப‌ட‌க் கூடாது எதிர் பார்த்த‌ அணிக‌ள் எல்லாம் ஏமாற்றி போட்டினம் கூட்டி க‌ழிச்சு பார்த்தா இல‌ங்கையும் நியுசிலாந்தும் சூப்ப‌ர் 8க்கு போவ‌து ச‌ந்தேக‌ம் கிரிக்கேட் வ‌ர‌லாற்றில் நியுசிலாந் அணி அப்கானிஸ்தான் அணியிட‌ம் தோத்த‌து இது தான் முத‌ல் முறை ர‌சித் ஹான் ப‌ந்தை ந‌ல்லா சுழ‌ட்டி போடுகிறார்............................. உங்க‌ளை விட‌ இர‌ண்டு புள்ளி தான் எங்க‌ளுக்கு கூட‌ கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ என‌க்கு தொட‌ர்ந்து இற‌ங்கு முக‌ம் வீர‌ர்க‌ள் அணிக‌ளை எல்லாம் ச‌ரியா பார்த்து போட்டி ப‌திவை பதிஞ்சேன் ஆனால் போட்டி முடிவில் முட்டை 16விட்டு மேல‌ போகிறேன் இல்லை அந்த‌ 16ஓட‌ அப்ப‌டியே தொட‌ர்ந்து நிக்கிறேன்...............................
  35. 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 9 தொகுதிகள் 9 தொகுதிகள் - 3 புள்ளிகள் 8 தொகுதிகள் - 2 புள்ளிகள் 7,6 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலி, நுணாவிலான்,பிரபா 1)நிழலி - 57 புள்ளிகள் 2)கிருபன் - 57 புள்ளிகள் 3)கோஷான் சே - 55 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 50 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 49 புள்ளிகள் 7)நுணாவிலான் - 41 புள்ளிகள் 8)வாத்தியார் - 40 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 30 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 31 கேள்விகளுக்கு (67 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  36. 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 22 தொகுதிகள் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி, கிருபன் 22 தொகுதி - 5 புள்ளிகள் 21 தொகுதி - 4 புள்ளிகள் 20 தொகுதி - 3 புள்ளிகள் 19 தொகுதி - 2 புள்ளிகள் 18 தொகுதி - 1 புள்ளிகள் 1)கோஷான் சே - 54 புள்ளிகள் 2)நிழலி - 54 புள்ளிகள் 3)கிருபன் - 54 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 47 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 46 புள்ளிகள் 7)வாத்தியார் - 39 புள்ளிகள் 8)நுணாவிலான் - 38 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 10)கந்தையா57 - 36 புள்ளிகள் 11)சுவி - 28 புள்ளிகள் 12)புலவர்- 27 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,39, 40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 30 கேள்விகளுக்கு (64 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  37. வணக்கம் பாஞ்ச் ஐயா. நலமுடன் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள்🙏.
  38. பாஞ்ச் அண்ணா மீண்டுவந்தது பெருமகிழ்ச்சி.🙏
  39. மீண்டு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.🙏 தங்களை நேரில் சந்தித்ததில் பல மடங்கு மகிழ்ச்சி. கடல் கடந்த தேசத்தில் இனிய உறவாக, அண்ணனாக தங்களை கிடைக்க வழி சமைத்த யாழ்களத்திற்கும் நன்றி.😍 தாங்கள் என்றும் நலமுடன் நீடூழி வாழ வேண்டுதல்கள்.🙏
  40. தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன் அவசியம் என்பதை தாயகத்தில் உள்ள மக்களிடையே தெளிவினை உண்டாக்குவது இப்போது மிகவும் அவசியமானது. இதற்கான அவசியத்தினை உணரவைப்பதன் மூலமே தமிழ் மக்கள் இந்த பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலையினை உருவாக்கிக்கொள்ள முடியும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான அவசியத்தை உணரவைக்கும் அதேவேளை, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோர், எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் உண்மையான நோக்கத்தையும், அவர்கள் எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பதனையும் மக்களுக்கு புரியவைப்பதும் அவசியம். அடுத்ததாகச் செய்ய வேண்டியது, இலங்கையில் ஜனாதிபதி தேதல் நடைபெறும் நாளில், அதற்குச் சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் அதே நோக்கத்தை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது. இதற்கு, புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழர் நலன்சார்ந்த, தேசியம் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை ஒற்றுமையுடன் வெளிப்படுத்த முடியும்.
  41. சுமந்திரனோ அல்லது அவரது தலைவர் சம்பந்தனோ தமிழ் பொதுவேட்பாளர் என்பதை முற்றாக நிராகரித்துவிட்டவர்கள். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் உறுதியாக நிற்பவர்கள். ஆகவே, சுமந்திரன் அழைத்திருக்கும் இந்தக் கலந்துரையாடல் என்பது தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருதுகோள் மீது மக்களுக்கு ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி, மக்களை அதிலிருந்து விலகிச் செல்ல வைக்கும் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. சுமந்திரனின் இந்தக் கோரிக்கையினை சிவில் அமைப்பினர் நிராகரித்தமை நியாயமானதே. சரியான முடிவு. இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கவில்லை. சைவம், கத்தோலிக்கம் ஆகிய தமிழர்களின் இரு பிரதான மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களை வழிநடத்தவேண்டிய அரசியல்த் தலைவர்கள் அடுத்த சிங்கள ஜனாதிபதியை உருவாக்கும் நோக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும்போது, மக்களுக்குத் தலைமை தாங்க மதத் தலைவர்கள் முன்வருவது வரவேற்கப்படவேண்டிய செயலே. பாராட்டுக்கள்.
  42. உங்களைப் பற்றியும் கதைத்தோம். யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால் அது உலக அதிசயம்.
  43. "அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் ." ........................................................................................................... இந்த குற்ற சாட்டு யாருக்கு ? எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ? விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே மற்றது "கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம்" ............................................................................... அது என்ன புதுக்கதை ?? யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ??? "எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒன்றே இறைவன்" எத்தனை பேர் இதை பின்பற்றுகிறார்கள், இலங்கை விடயம் உங்களுக்கு தெரியாதா ? நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள், முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட வரலாறு கதையல்ல, உண்மை நிகழ்வு! அதேபோல ஒரு சமயத்தை வளர்ப்பதற்காக மற்ற சமயத்தை தாக்குதல் அல்லது பணங்கள், வசதிகள் கொடுத்து மாற்றுதல் இன்றும் நடைபெறுகிறது. நல்லகாலம் இனி நீங்கள் வந்துவிட்டதால் , அங்கே போய் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதை காப்பீர்கள் என்று நம்புகிறேன்!!!
  44. பாஞ்ச், மீண்டும் நலமுடன் உங்களை யாழில் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
  45. மண்ணோடும் விண்ணோடும் விளையாடும் வீடுகள்........! 😂
  46. காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......! 😍 (ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.