Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    30
    Points
    38756
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3055
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/18/24 in all areas

  1. கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்: 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ WI AFG PNG UGA போட்டியாளர் ஈழப்பிரியன் NZ WI வீரப் பையன்26 NZ WI சுவி NZ AFG நிலாமதி NZ WI குமாரசாமி NZ WI தியா NZ WI தமிழ் சிறி NZ WI புலவர் NZ AFG P.S.பிரபா NZ WI நுணாவிலான் NZ AFG பிரபா USA WI AFG வாதவூரான் NZ AFG ஏராளன் NZ AFG கிருபன் NZ WI ரசோதரன் NZ WI அஹஸ்தியன் NZ WI கந்தப்பு NZ WI வாத்தியார் NZ WI எப்போதும் தமிழன் NZ WI நந்தன் NZ AFG நீர்வேலியான் NZ WI கல்யாணி NZ WI கோஷான் சே NZ WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) இருவர் மாத்திரமே இரண்டு அணிகளின் வரிசையைச் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் WI NZ வீரப் பையன்26 WI NZ சுவி NZ AFG நிலாமதி WI NZ குமாரசாமி WI NZ தியா WI NZ தமிழ் சிறி WI NZ புலவர் NZ AFG P.S.பிரபா NZ WI நுணாவிலான் NZ AFG பிரபா USA WI AFG வாதவூரான் AFG NZ ஏராளன் NZ AFG கிருபன் WI NZ ரசோதரன் WI NZ அஹஸ்தியன் NZ WI கந்தப்பு WI NZ வாத்தியார் NZ WI எப்போதும் தமிழன் WI NZ நந்தன் WI AFG நீர்வேலியான் NZ WI கல்யாணி WI NZ கோஷான் சே WI NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 09 பேர் மாத்திரமே சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PNG வீரப் பையன்26 UGA சுவி PNG நிலாமதி UGA குமாரசாமி UGA தியா PNG தமிழ் சிறி UGA புலவர் UGA P.S.பிரபா UGA நுணாவிலான் UGA பிரபா USA PNG வாதவூரான் PNG ஏராளன் PNG கிருபன் UGA ரசோதரன் PNG அஹஸ்தியன் UGA கந்தப்பு UGA வாத்தியார் UGA எப்போதும் தமிழன் UGA நந்தன் PNG நீர்வேலியான் UGA கல்யாணி UGA கோஷான் சே PNG 49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 86 2 ரசோதரன் 83 3 நந்தன் 80 4 ஈழப்பிரியன் 78 5 கோஷான் சே 78 6 சுவி 76 7 கந்தப்பு 76 8 நீர்வேலியான் 74 9 வாதவூரான் 73 10 கிருபன் 73 11 எப்போதும் தமிழன் 73 12 ஏராளன் 72 13 அஹஸ்தியன் 72 14 வீரப் பையன்26 71 15 நிலாமதி 71 16 குமாரசாமி 71 17 தமிழ் சிறி 71 18 வாத்தியார் 71 19 P.S.பிரபா 70 20 தியா 69 21 கல்யாணி 69 22 புலவர் 67 23 நுணாவிலான் 65
  2. முதல் சுற்றின் இறுதிப் போட்டியாகிய 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிக்கொலஸ் பூரனின் அதிரடியான 98 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 66 2 ரசோதரன் 66 3 ஈழப்பிரியன் 64 4 நந்தன் 64 5 கோஷான் சே 64 6 சுவி 60 7 தமிழ் சிறி 60 8 கிருபன் 60 9 கந்தப்பு 60 10 வாத்தியார் 60 11 எப்போதும் தமிழன் 60 12 நீர்வேலியான் 60 13 வீரப் பையன்26 58 14 நிலாமதி 58 15 குமாரசாமி 58 16 தியா 58 17 வாதவூரான் 58 18 ஏராளன் 58 19 அஹஸ்தியன் 58 20 P.S.பிரபா 56 21 கல்யாணி 56 22 புலவர் 54 23 நுணாவிலான் 52 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!
  3. சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க. அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ? ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145. (ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்; யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்; கரணம் - மணமுறைகள்) தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல ! பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம் தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை. அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் ! பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும். நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும். https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk
  4. கேள்விகள் 50) இலிருந்து 52) வரைக்கான புள்ளிகள்: 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA SL BAN NED NEP போட்டியாளர் ஈழப்பிரியன் SA SL வீரப் பையன்26 SA SL சுவி SA BAN நிலாமதி SA SL குமாரசாமி SA SL தியா SA SL தமிழ் சிறி SA SL புலவர் SA SL P.S.பிரபா SA SL நுணாவிலான் SA SL பிரபா USA SA SL வாதவூரான் SA SL ஏராளன் SA SL கிருபன் SA BAN ரசோதரன் SA BAN அஹஸ்தியன் SA SL கந்தப்பு SA SL வாத்தியார் SA SL எப்போதும் தமிழன் SA SL நந்தன் SA SL நீர்வேலியான் SA SL கல்யாணி SA NEP கோஷான் சே SA SL 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) மூன்று பேர் மாத்திரமே இரண்டு அணிகளின் வரிசையைச் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் SA SL வீரப் பையன்26 SL SA சுவி SA BAN நிலாமதி SL SA குமாரசாமி SA SL தியா SA SL தமிழ் சிறி SA SL புலவர் SA SL P.S.பிரபா SA SL நுணாவிலான் SA SL பிரபா USA SA SL வாதவூரான் SL SA ஏராளன் SA SL கிருபன் SA BAN ரசோதரன் SA BAN அஹஸ்தியன் SA SL கந்தப்பு SA SL வாத்தியார் SA SL எப்போதும் தமிழன் SA SL நந்தன் SA SL நீர்வேலியான் SA SL கல்யாணி NEP SA கோஷான் சே SA SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! மூன்று பேரைத் தவிர எல்லோரும் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் NEP வீரப் பையன்26 NEP சுவி NEP நிலாமதி NED குமாரசாமி NEP தியா NEP தமிழ் சிறி NEP புலவர் NEP P.S.பிரபா NEP நுணாவிலான் NEP பிரபா USA NEP வாதவூரான் NEP ஏராளன் NEP கிருபன் NED ரசோதரன் NEP அஹஸ்தியன் NEP கந்தப்பு NEP வாத்தியார் NEP எப்போதும் தமிழன் NEP நந்தன் NEP நீர்வேலியான் NEP கல்யாணி BAN கோஷான் சே NEP முதல் சுற்றுப் போட்டிகளுக்கான 52 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 91 2 ரசோதரன் 91 3 நந்தன் 85 4 சுவி 84 5 ஈழப்பிரியன் 83 6 கோஷான் சே 83 7 கந்தப்பு 81 8 கிருபன் 80 9 நீர்வேலியான் 79 10 எப்போதும் தமிழன் 78 11 ஏராளன் 77 12 அஹஸ்தியன் 77 13 குமாரசாமி 76 14 தமிழ் சிறி 76 15 வாதவூரான் 76 16 வாத்தியார் 76 17 P.S.பிரபா 75 18 வீரப் பையன்26 74 19 தியா 74 20 நிலாமதி 73 21 புலவர் 72 22 கல்யாணி 71 23 நுணாவிலான் 70
  5. கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) அனைவரும் சரியான பதில்களைத் தந்துள்ளனர்! ENG AUS NAM SCOT OMA போட்டியாளர் ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி ENG AUS நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் ENG AUS P.S.பிரபா ENG AUS நுணாவிலான் ENG AUS பிரபா USA ENG AUS வாதவூரான் ENG AUS ஏராளன் ENG AUS கிருபன் ENG AUS ரசோதரன் ENG AUS அஹஸ்தியன் ENG AUS கந்தப்பு ENG AUS வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் ENG AUS நீர்வேலியான் ENG AUS கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) 12 பேர் மாத்திரமே சரியான வரிசையைக் கணித்துள்ளனர்! போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் ENG AUS வீரப் பையன்26 ENG AUS சுவி AUS ENG நிலாமதி ENG AUS குமாரசாமி ENG AUS தியா ENG AUS தமிழ் சிறி ENG AUS புலவர் AUS ENG P.S.பிரபா AUS ENG நுணாவிலான் AUS ENG பிரபா USA AUS ENG வாதவூரான் AUS ENG ஏராளன் AUS ENG கிருபன் ENG AUS ரசோதரன் AUS ENG அஹஸ்தியன் AUS ENG கந்தப்பு AUS ENG வாத்தியார் ENG AUS எப்போதும் தமிழன் ENG AUS நந்தன் AUS ENG நீர்வேலியான் AUS ENG கல்யாணி ENG AUS கோஷான் சே ENG AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! @theeya ஐத் தவிர எல்லோருக் சரியாகக் கணித்துள்ளனர்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் OMA வீரப் பையன்26 OMA சுவி OMA நிலாமதி OMA குமாரசாமி OMA தியா NAM தமிழ் சிறி OMA புலவர் OMA P.S.பிரபா OMA நுணாவிலான் OMA பிரபா USA OMA வாதவூரான் OMA ஏராளன் OMA கிருபன் OMA ரசோதரன் OMA அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA வாத்தியார் OMA எப்போதும் தமிழன் OMA நந்தன் OMA நீர்வேலியான் OMA கல்யாணி OMA கோஷான் சே OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 78 2 ரசோதரன் 78 3 நந்தன் 74 4 ஈழப்பிரியன் 73 5 கோஷான் சே 73 6 சுவி 72 7 கந்தப்பு 72 8 நீர்வேலியான் 72 9 வாதவூரான் 70 10 அஹஸ்தியன் 70 11 கிருபன் 69 12 வாத்தியார் 69 13 எப்போதும் தமிழன் 69 14 P.S.பிரபா 68 15 ஏராளன் 68 16 வீரப் பையன்26 67 17 நிலாமதி 67 18 குமாரசாமி 67 19 தமிழ் சிறி 67 20 கல்யாணி 65 21 தியா 64 22 புலவர் 64 23 நுணாவிலான் 62
  6. கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் ஐக்கிய அமெரிக்கா அணியைத் தெரிவு செய்யவில்லை! IND PAK CAN IRL USA போட்டியாளர் ஈழப்பிரியன் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND IRL நிலாமதி IND PAK குமாரசாமி IND PAK தியா IND PAK தமிழ் சிறி IND PAK புலவர் IND PAK P.S.பிரபா IND PAK நுணாவிலான் IND PAK பிரபா USA IND PAK வாதவூரான் IND PAK ஏராளன் IND PAK கிருபன் IND PAK ரசோதரன் IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK வாத்தியார் IND PAK எப்போதும் தமிழன் IND PAK நந்தன் IND PAK நீர்வேலியான் IND PAK கல்யாணி IND PAK கோஷான் சே IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND IRL நிலாமதி IND PAK குமாரசாமி IND PAK தியா PAK IND தமிழ் சிறி PAK IND புலவர் PAK IND P.S.பிரபா IND PAK நுணாவிலான் PAK IND பிரபா USA IND PAK வாதவூரான் IND PAK ஏராளன் PAK IND கிருபன் IND PAK ரசோதரன் IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK வாத்தியார் IND PAK எப்போதும் தமிழன் IND PAK நந்தன் PAK IND நீர்வேலியான் IND PAK கல்யாணி IND PAK கோஷான் சே IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஒருவரும் அயர்லாந்து அணியைத் தெரிவு செய்யவில்லை! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் CAN வீரப் பையன்26 CAN சுவி USA நிலாமதி CAN குமாரசாமி CAN தியா CAN தமிழ் சிறி CAN புலவர் USA P.S.பிரபா USA நுணாவிலான் CAN பிரபா USA CAN வாதவூரான் CAN ஏராளன் USA கிருபன் CAN ரசோதரன் CAN அஹஸ்தியன் CAN கந்தப்பு CAN வாத்தியார் USA எப்போதும் தமிழன் CAN நந்தன் CAN நீர்வேலியான் CAN கல்யாணி CAN கோஷான் சே CAN 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 70 2 ரசோதரன் 70 3 ஈழப்பிரியன் 68 4 கோஷான் சே 68 5 நந்தன் 66 6 சுவி 64 7 கிருபன் 64 8 கந்தப்பு 64 9 வாத்தியார் 64 10 எப்போதும் தமிழன் 64 11 நீர்வேலியான் 64 12 வீரப் பையன்26 62 13 நிலாமதி 62 14 குமாரசாமி 62 15 தமிழ் சிறி 62 16 வாதவூரான் 62 17 அஹஸ்தியன் 62 18 தியா 60 19 P.S.பிரபா 60 20 ஏராளன் 60 21 கல்யாணி 60 22 புலவர் 56 23 நுணாவிலான் 54
  7. இவற்றில் எதையும் பார்சல் கட்டிக் கொண்டு செல்ல அனுமதியில்லை........"விழா உபாயக்காரர்"........! 😂
  8. ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!
  9. @வாத்தியார், நாளைக்கு மீண்டும் இந்த வசனத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும்👻
  10. சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (19 ஜூன்) முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் தென்னாபிரிக்கா (D1) USA எதிர் SA 12 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் தவறான கணிப்பின் மூலம் இந்தியா (A2) இப்போட்டியில் உள்ளதாகக் கணித்தவர்களுக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி SA நிலாமதி SA குமாரசாமி SA தியா IND தமிழ் சிறி SA புலவர் IND P.S.பிரபா SA நுணாவிலான் IND பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் IND கிருபன் PAK ரசோதரன் SA அஹஸ்தியன் PAK கந்தப்பு SA வாத்தியார் SA எப்போதும் தமிழன் SA நந்தன் IND நீர்வேலியான் PAK கல்யாணி PAK கோஷான் சே SA நாளைய போட்டியில் 12 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?
  11. கடைசியில் வெறும் கை தான்.
  12. ஒரு முன்னாள் முதல்வர் என்ற மரியாதை கூட இல்லாமல் 5ம் வரிசையில் உக்காத்திருக்கானுகளே🤣.
  13. உண்மையில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றால் சந்தோசமாக வாழ்வார்கள். இது சாதாராண ஆண்- பெண் சோடிகளுக்கும் பொருந்தும். என்ன வித்தியாசமெனில் தத்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் இறப்புக்கு ரொரன்டோவில் கூடிய சனத்தொகை தான் இன்றும் அதி கூடிய சனத்தொகையாக உள்ளது. இதுவும் ஒரு வித்தியாச்ம் தான். இவர்களுக்கும் ஓரின சேர்க்கைக்கும் சம்பந்தமே இல்லை இல்லை இல்லை.
  14. புனித திருமணம் என்று சொல்லபடுகின்ற மதகுரு வந்து கழுத்தில் செயின் கட்டி தமிழ் ஆண் v பெண் செய்த திருமணத்திலேயே அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் 20 வயதில் அவர்களை வேண்டாம் என்று விட்டு தனியா சென்று வசிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.
  15. பொழுது போகாத போது மேற்கு ஊடகங்களை கேட்பதுண்டு. உடனே நேரெதிராக சிந்தித்தால் உண்மை நிலை புரிந்து விடும்.
  16. சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎 போற போக்கைப் பார்த்தால் சாமியார் மோதிரம் போடமாட்டார்… மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋
  17. என்ன திகதி???? அட. இவர் போட்டிக்கு வந்து விட்டார் ??? இங்கே பலகாரங்களை இலவசமாக எடுக்க முடியாது எனவேதான் உங்களை அழைக்கவில்லை ஐயா 🤣 இப்படியாக மோதிரம். போட்டுக் கொண்டு போனால் மனைவிமாரின். எண்ணிக்கை கூடிட்டே போகும் 🤣
  18. நிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள்வது? நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்பதும் லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததும் பல்லாயிரம்பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் ஏனென்று இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. உலகமெங்கும் கையேந்திக் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல் நாட்டின் வளங்களும் பிறருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும் இனவாதத்தைக் கைவிடுவதற்கு யாரும் தயாரில்லை. பழைய பிரச்சினைகளோடு, புதிதாகப் பல பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மந்தைகளின் மேய்ச்சற்தரை தொடக்கம், பௌத்த அடையாளங்கள் என்ற பேரில் நிலங்களையெல்லாம் அபகரிக்கிறது. (இலங்கையில் சிங்களமும் பௌத்தமும் ஒடுக்குமுறைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது). மாறாக யுத்தத்திற் கொல்லப்பட்டோருக்கான இழப்பீடோ, நிவாரணமோ, வழங்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்கு முடிவில்லை. இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகளைப் பற்றிய எந்தச் சேதிகளும் பதிலும் இல்லை. யுத்தத்தின்போது உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கான உதவித்திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் முப்பது ஆயிரத்துக்கு மேலுண்டு. அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லை. யுத்தத்தில் அழிவடைந்த பிரதேசங்களில் புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்படவில்லை. ஏன் நாட்டிலேயே தொழிற்சாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பௌத்த விஹாரைகளைக் கட்டுவதிலேயே அரசின் கவனம் உள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளான பொறுப்புக்கூறல், மீள நிகழாமை, பகை மறப்பு, சமாதான முன்னெடுப்பு, அமைதித்தீர்வு எவையும் நடக்கவில்லை. என்பதால் இதுபோன்ற பல பிரச்சினைகளோடுதான் தமிழ் பேசும் மக்கள் வாழ வேண்டியுள்ளது. இதற்குள் நாட்டை உலுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி வேறுண்டு. முஸ்லிம் மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘சகரானின் குண்டுத் தாக்குதல்’* இன்னொன்று. ஆக சிங்கள மக்களை விட இரட்டிப்பு நெருக்கடியோடு தமிழ்பேசும் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், அபாயங்களின் மீதே தமிழ்பேசும் சமூகங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டம், நீதிபரிபாலனம், ஆட்சிமுறை எல்லாம் இனஒடுக்குமுறையை – இனப் பாரபட்சத்தை – மிக நுட்பமாக மேற்கொள்வற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யார் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த அடிப்படையில் மாற்றமில்லை என்பதே சுதந்திர இலங்கையின் வரலாறும் நடைமுறையுமாகும். ஆட்சிக்கு வருவதும் அதிகாரத்தில் இருப்பதும்கூட எப்போதும் சிங்களர்களே. அவர்களே பெரும்பான்மையினர். என்பதால், அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் உண்டு. அதைக் கடந்து பிற சமூகத்தினர் (தமிழ் பேசும் தரப்பினர்) ஆட்சிக்கு வரவே முடியாது. அதற்கான பெரும்பான்மையும் இல்லை. பிறரை ஏற்றுக் கொள்ளும் உளநிலையும் உருவாகவில்லை. பன்மைத்துவ அரசியற் பண்பாடு, பல்லினத்துக்குரிய அரசியல் நடைமுறை இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மேற்கொள்ளக் கூடியவாறு இன அடிப்படையில், இன அடையாளத்தோடுதான் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்தேசியக் கட்சி, தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணி எனத் தமிழ்த்தரப்புக் கட்சிகள். இதற்கு நிகராக – போட்டியாக ஜாதிக ஹெல உறுமய, சிங்கள மகாசம்மத பூமிபுத்திரக் கட்சி, சிங்கள மகாசபை போன்றவற்றோடு வெளிப்படையாக இன அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாத பெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) எனச் சிங்களக் கட்சிகள். அடுத்த பக்கத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பல முஸ்லிம் கட்சிகள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி எனப் பல மலையகக் கட்சிகள் (இவை இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை). இவை அனைத்தும் அந்தந்த இனங்களையே பிரதிநிதிப்படுத்துகின்றன. ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக் கொண்டே தமது இன அடையாள – இனவாத – அரசியலை மேற்கொள்கின்றன. மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தத்தமது இனக் கட்சிகளுக்கே ஆதரவளிக்கின்றனர். இதைக் கடந்து, பன்மைத்துவமாகச் சிந்திக்கக் கூடிய அளவுக்கு, இந்த நெருக்கடிகளைத் தீர்க்கக் கூடியவாறு இலங்கையில் எந்தத் தரப்பும் இல்லை என்பதே துயரம். மிக நீண்ட யுத்தத்தையும் அதனால் ஏற்பட்ட பேரழிவையும் சந்தித்த பிறகும் எவருக்கும் படிப்பினைகள் ஏற்படவில்லை. “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்” என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல போர்த்தளபதிகளும் உருவாக்கப்பட்டனர். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? எல்லோரும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இனவாதத்திலேயே எல்லோருடைய அரசியலும் நடக்கிறது. அதற்கான நியாயங்களையும் நியாயப்படுத்தல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஆனால், இதுவோ (Post – War period) போருக்குப் பிந்திய காலமாகும். போருக்குப்பிந்திய காலம் என்பது, போர் உண்டாக்கிய அழிவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகும். அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் பகை மறப்பு, மீளிணக்கம், சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய காலமாகும். உலகமெங்கும் போருக்குப் பிந்திய காலம் என்பது கற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் முரண்களைக் களைந்து, புத்தாக்கத்தை உருவாக்கும் காலமாகவே இருக்கிறது. இந்த யதார்த்தத்தின்படி, இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் புதிய அரசியலை – புத்தாக்க அரசியலை – மேற்கொள்ள வேண்டும். அது இனவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடவேண்டிய அரசியலாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எவரும் – எந்தத் தரப்பும் தயாரில்லை. இதனால்தான் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்த்தலைமைகளாலும் எந்த ஆறுதலையும் கொடுக்க முடியாதிருக்கிறது. விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து மாபெரும் தியாகங்களைச் செய்த – அந்தப் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த மக்களுக்கான களப்பணிகளை ஆற்ற வேண்டும் என்று இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடியாதிருக்கிறது. “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபடுகின்றன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைக்கின்றனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு (Declaratory politics)த் தாவிச் சென்று விட்டனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல் (Declaratory politics) தானே வசதி! இனவாதத்தை அல்லது இன அடையாளத்தை விட்டு விட்டால் தமக்குத் தோல்வி ஏற்பட்டு விடும். மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் இந்தக் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. அதை மீறிச் செயற்படுவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இவர்கள் தயாரில்லை. இன எல்லைகளைக் கடந்து அனைத்துச் சமூகங்களிடத்திலும் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற எந்தப் பேராளுமையும் இலங்கையில் எழுச்சியடையவில்லை. என்பதால் தொடர்ந்தும் மலிவான முறையில் இன உணர்வைத் தூண்டித் தமது அரசியல் ஆதாயத்தை எட்டி விடுகிறார்கள். இதற்குப் போர்க்காலப் பாதிப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கிறார்கள். நம்பிக்கையீனம் பெரியதொரு நோய்ப்பாதாளமாக விரிந்து கொண்டே செல்கிறது. இதே உளநிலையில்தான் இலங்கையின் ஊடகங்களும் உள்ளன. அறிஞர்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் அந்தந்தச் சமூக – இன – எல்லையைக் கடந்து சிந்திப்பதேயில்லை. எனவே நாடு இனவாதத்திலேயே கட்டுண்டு கிடக்கிறது. இதற்குப் புறம்பாக மாற்றுச் சிந்தனையைக் கொண்ட – சமாதானத்தை விரும்புகின்ற தரப்புகளும் உண்டு. அவை சிறியவை. அவற்றுக்கு அதிகாரப் பெறுமானமோ சமூகச் செல்வாக்கோ, ஊடக அங்கீகாரமோ கிடையாது. ஆகவே, யுத்தம் முடிந்தாலும் நிலைமையில் மாற்மும் முன்னேற்றமும் உண்டாகவில்லை. யுத்தம் உருவாகுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களும் யுத்த கால நிலவரங்களை ஒத்த போக்கும் நீடிப்பதால் நாட்டை விட்டுப் பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு தமிழர்களே அதிகளவில் புலம்பெயர்ந்தனர். இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியினால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வெளியேறுகின்றனர். இதெல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், இனவாதமும் ஒடுக்குமுறை அரசின் செயற்பாடுகளும்தான் என்று தெரிந்தாலும் அதைப் புரிந்து கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வளவுக்கும் இலங்கை இயற்கை வளத்தை அதிகமாகக் கொண்ட அழகிய நாடு. அதைப் புரிந்து கொள்ளாமல் பிச்சைக்காகக் கை ஏந்துகிறது. தனக்குள்ளே முரண்பட்டு முரண்பட்டு அழிகிறது. இந்தக் கவலை பலருக்கும் உண்டு. ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் தங்களுடைய நியாயமான கவலைகளையும் சுய அறிவையும் தூக்கித் தூர எறிந்து விட்டு இனவாதத்திற்குப் பின்னே அணிவகுத்து விடுகிறார்கள். இது இலங்கைச் சமூகங்களைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. இதைத் தமக்கான நல் வாய்ப்பாகக் கொண்டு வெளிச்சக்திகள் இலங்கையில் ஆக்கிரமிப்பைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இன்னொரு நிலையில் நாட்டை, மீளமுடியாப் பெருங்கடனில் மூழ்கடிக்கின்றன. அதற்கு வட்டி வட்டியாகக் கட்ட வேண்டிய இடர்நிலை வேறு. இனமுரணும் பொருளாதார நெருக்கடியும் ஊழலும் மோசமான அரசியற் சூழலும் இதற்கெல்லாம் தாராளமாக உதவுகின்றன. இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டக் கூடிய அளவுக்கு இலங்கையில் அறிஞர்களோ பல்கலைக்கழகத்தினரோ ஊடகங்களோ இல்லை. ஆக மொத்தத்தில் இனவாதத்துக்கே எல்லோரும் வழிவிடுகிறார்கள். இதை மீறுவோர் – மாற்றுப் பார்வையுடையோர் -“துரோகிகள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்படுகின்றனர். இது படுபயங்கரமான ஜனநாயக மறுப்பாகும். ஆனால், அதை யாரும் அப்படிக் கருதிக் கொள்வதில்லை. பதிலாக குறித்த விடயம் அல்லது குறித்த ஆள் தமது இனத்தேசியத்திற்கு எதிரானவர் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படியே இந்தப் பாசிஸக் கூறு வலுப்பெற்றுள்ளது. வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இனவாதச்சிந்தனை என்றாலே அது எந்த நிலையிலும் வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். தமிழர்கள் முஸ்லிம்களை நம்புவதில்லை. முஸ்லிம்கள் தமிழர்களை நம்புவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவரை நம்புவதில்லை. சிங்களவர்கள் தமிழரையும் முஸ்லிம்களையும் நம்புவதில்லை. இப்படியே ஒருவரையொருவர் சந்தேகிக்கும்போது, எப்படி நாட்டில் ஒருங்கிணைந்த தீர்மானங்களை எடுப்பது? எப்படி ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்? இதற்கெல்லாம் மூல விதையைப் போட்டது சிங்களவர்களே. நாடு சுதந்திரமடைந்த 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை இன்றுவரை பராமரிக்கின்றனர். இதைத் தணிக்கும் உபாயத்தை வகுத்துக் கொள்வதற்குப் பதிலாகத் தாமே இந்த எரியும் தீக்கு ஆகியாகியது தமிழ்த்தரப்பு. சிங்கள இனவாதத்திற்குப் பதில் தமிழ் இனவாதம் என்ற போட்டியாக்கம் பெரும் தீமையில் வந்து முடிந்திருக்கிறது. இதேவேளை தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) இவை கொண்டிருக்கின்றன. சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. நாட்டிற் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்கள், ஒருபோது தாமே பெரும்பான்மையினர், தம்மிடமே ஆட்சி அதிகாரம் உண்டு, தாமே பெரும்பான்மையினர் எனத் தம்மை உயர்வானோராக (superiority complex) க் கருதுகின்றனர். மறுநிலையில், இலங்கையில் மட்டுமே சிங்களம் இருப்பதால், தாம் இந்த உலகத்தில் சிறுபான்மையினர், இந்தியா தமக்கு எப்போதும் எதிராகவே இருக்கிறது, அருகில் உள்ள தமிழ்நாடு தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழரையும் விடத் தாம் குறைந்தவர்கள் என தாழ்வுணர்ச்சிக்கு (inferiority complex) உள்ளாகின்றனர். இப்படித்தான் தமிழர்களின் உளநிலையும் செயற்படுகிறது. இலங்கையில் தாம் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழகத்தோடு இணைத்து, தம்மைப் பெரிய தரப்பாகக் காட்ட முற்படுகின்றனர். இதனால் எப்போதும் குழப்பமும் பதட்டமும் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வும் இரண்டு தரப்பையும் சூழ்ந்திருக்கிறது. எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனையே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கிறது என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகிக் கொள்வது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது, எதையும் மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கிறது. இதனால்தான் இந்திய, நோர்வே நாடுகளின் சமாதான (இணக்க) முயற்சிகளும் தோற்றன. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வசதியே. அவர்கள் சமூக எதிர்நிலை உணர்வுக்குத் தலைமையேற்பதாகக் காட்டி, தமது நலனுக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். சமூக முரண்கள், இன முரண்கள் மேலும் கூராக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகளும் உருவாகியிருக்கும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்க வேண்டும்? எந்த அடிப்படையில் இணக்கத்திலும் சமாதானத்திலும் நம்பிக்கை வைப்பது? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இனவாதத்தை ஆரம்பத்தில் உருவாக்கியது யார்? அவர்கள் ஏன் இதற்கான பொறுப்பேற்றலைச் செய்யவில்லை? அதற்கான பரிகாரங்களைக் காணவில்லை? இப்படிச் சில அடிப்படையான – நியாயமான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். சிங்களத் தரப்பு (ஐ.தே.க. வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) இனவாதத்தைத் தூண்டியது உண்மையே. அதற்கான விலையையும் அவை கொடுத்துள்ளன. அவற்றின் தலைவர்கள் பலர் இனவாதத்திற்கு பலியாகியுள்ளனர். ஆனால், அதற்குப் போட்டியாகத் தமிழ்த் தரப்பும் பிறகு இனமுரணில் ஈடுபட்டது. இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றே காலம் நிர்ப்பந்திக்கிறது. இனவாதத்தைக் கடந்த அரசியலை மேற்கொள்வதற்கு இலங்கைத்தீவில் சிறியதாயினும் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்கள் நோக்குகின்றனர். ஊடகங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவற்றுக்கு எப்போதும் எரியும் பிரச்சினைகளே வேண்டும். இதையெல்லாம் கடந்து அந்தச் சக்திகள் வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் எளிதாக வளர்ச்சியடைய முடியாது என்ற சூழலை ஆழமாக உணர்வோரினால் புரிந்து கொள்ள முடியும். அப்படி அந்தத் தரப்பு வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு விதையைப்போலவே அமைதிக்கான தரப்புகள் ஓர்மத்துடன் முளைத்தெழ வேண்டும். பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் பலருடைய மனதும் எதிர்ப்பில், பகைமையில்தான் திளைக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை எல்லாம் தவறு என்று தெரிந்தாலும் அதைக் கடக்க விரும்பாமல் திளைப்பதைப்போன்றதே இதுவும். அது ஒரு போதையாகி விட்டது. பிறரை எப்போதும் எதிர்த்தரப்பாக நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் பகையைக் கடந்து நிற்கிறார்கள். இன்று யப்பானும் அமெரிக்காவும் பகையைக் கடந்த நிலையில் இணைந்து செயற்படுகின்றன. கிரோஸிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் தாக்கம் இன்னும் யப்பானில் உண்டு. ஆனால், அதைக் கடந்து செல்வது யப்பானுக்கு அவசியமாக இருந்தது. இப்படிப் பகையைக் கடந்த பல செழிப்பான உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கும் முன்மாதிரியாகக் கொள்வதற்கும் யாரும் தயாரில்லை. இலங்கையில் இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை ஏற்கனவே மக்கள் தோற்கடித்து விட்டனர் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு, இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கொள்வதற்குத் தமிழர்களால் முடியாதிருக்கிறது. அரசு பல வகையில் அதைத் தடுக்க முற்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கிறார்கள். “அந்த வேட்பாளர் ஒரு போதுமே வெற்றியடைய மாட்டார் என்றாலும் பரவாயில்லை, தமது எதிர்ப்பின் அடையாளமாக இருக்கட்டும்” என்று சொல்கிறார்கள். இப்படி நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு அவர்கள், தமிழ்பேசும் ஏனைய தரப்புகளான முஸ்லிம்களிடமும் மலையக மக்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இப்படித்தான் அறிவீனமாக அனைத்தும் சிந்திக்கப்படுகிறது. புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டுவதிலேயே பலருடைய கரிசனையும் உள்ளது. ஆனால், எதிர்ப்பரசியலின் யுகம் விடுதலைப் புலிகளுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவர்களே அதனுடைய உச்சம். எதிர்ப்பரசியலைப் புலிகள் பல பரிமாணங்களில் மேற்கொண்டனர். தமக்கான ஆட்சிக்கான நிலப் பரப்பு, ஆட்சி, படையணிகள், தாக்குதல்கள், தொடர்ச்சியான போர், அதை எதிர்கொள்ளும் ஆற்றல், மக்கள் ஆதரவு, அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தல், சர்வதேசக் கவனத்தை ஈர்த்தல் எனப் பலவாக இருந்தது. இனி ஒரு எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், புலிகளைக் கடந்து நிற்க வேண்டும். அது சாத்தியமானதா? அதை யார் முன்னெடுப்பது? இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். அதுவே இனவாத அரசையும் அதன் ஒடுக்குமுறையை இயந்திரத்தையும் உடைப்பதற்கான உறுதி மிக்க ஆயுதம். இதுதான் உலக மொழி. https://arangamnews.com/?p=10877
  19. இது கோலார் தங்க வயலில் பிறந்து வளர்ந்த தமிழரான பெஜவாடா வில்சன் அவர்களின் பேட்டி. 'அருஞ்சொல்' இதழிற்காக ரா. செந்திகுமார் வில்சனை பேட்டி எடுத்திருந்தார். கைகளால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாள குடும்பம் ஒன்றில் பிறந்த மதிப்புக்குரிய வில்சன் அவர்களுடனான இந்த உரையாடல் அறியாத பல வேதனையான நிகழ்வுகளையும், சமூகக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு எடுத்து வருகின்றது. பேட்டியில் இருக்கும் ஒரு பகுதி: "மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன்." ******************************************************************************** சந்திராயன் சரி; சாக்கடை சுத்தத்துக்கு இயந்திரம் இல்லையே! பெஜவாடா வில்சன் பேட்டி ரா.செந்தில்குமார் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினருடனான சந்திப்பிற்காக ஜப்பான் வந்திருந்தார் பெஜவாடா வில்சன். அவரை அழைக்க விமான நிலையம் சென்றிருந்தோம். பழைய காக்கி நிறத்தில் ஒரு குர்தா அணிந்து, காலில் சாதாரண செருப்புடன், தோளில் ஒரு சிறிய பையுமாக வெளியே வந்தார் பெஜவாடா வில்சன். ஜப்பானிலிருந்த மூன்று நாட்களுமே இதேபோன்ற எளிய உடைதான் அணிந்திருந்தார். பர்ஸ், காசு என எதுவும் கையில் வைத்துக்கொள்வதில்லை. ‘இந்தியாவில் இருக்கும்போது, கூட இருப்பவர்கள் செலவுசெய்வார்கள், எனவே பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை’ என்று சிரிக்கிறார். எந்தச் சமயத்திலும் உரையாடுவதற்குத் தயாராக இருக்கிறார். பேச்சில் சிறிய கிண்டல் கலந்த நகைச்சுவை எப்போதும் இருக்கிறது. ரமோன் மகசேசே விருதுபெற்ற மதிப்பிற்குரிய பெஜவாடா வில்சன் உடனான பேட்டியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்! கோலார் தங்க வயலில்தான் என்னுடைய பெற்றோர்கள் வேலைப் பார்த்தனர். எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு அக்கா இருந்தனர். நான்தான் வீட்டில் கடைசி பிள்ளை. ஐந்தாம் வகுப்புவரை எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த தோட்டி ஸ்கூல் என்று அழைக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளியிலேயே படித்தேன். அந்த வயதில் என்னுடைய சுற்றத்தினர் அனைவருமே ஒரே மாதிரியான ஏழ்மையான வாழ்க்கை சூழலைத்தான் கொண்டிருந்தனர். எனவே, ஆரம்பத்தில் சமூகப் பிரிவினைகள் குறித்தும், பாகுபாடுகள் குறித்தும் நான் பெரிய புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. கோலார் தங்க வயலில் என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் நிலவியது? அங்கு வேலைப் பார்த்தவர்களின் சமூகப் பின்னணி எப்படி இருந்தது? அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க தமிழர்கள்தான் வேலைப் பார்த்தனர். அதிலும் தலித் மக்கள்தான் அதிகம். எனவே, கர்நாடகா அரசியல் குறித்தெல்லாம் யாருக்கும் அங்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘தினத்தந்தி’, ‘மாலை மலர்’, ‘தினகரன்’ போன்ற பத்திரிகைகள்தான் டீக்கடைகள் எங்கும் கிடைக்கும். தமிழ்நாட்டுச் செய்திகளைத்தான் அனைவரும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ் சினிமாக்கள்தான் தியேட்டரில் வரும். ஓய்வு நேரங்களில் டீக்கடையில் அமர்ந்துக்கொண்டு பள்ளி மாணவனான என்னைக் கூப்பிட்டு செய்திதாளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். அப்படிக் கேட்கும் ஆள்களுக்கு என்ன மாதிரியான செய்திகள் படித்தால் பிடிக்கும் என எடை போட்டு அவற்றை மட்டும் படிப்பேன். தங்கச் சுரங்கத்தில் என்ன மாதிரியான வேலைச் சூழல் இருந்தது? மிகக் கடினமான வேலை அது. மண்ணுக்கு அடியில் பத்தாயிரம் அடி ஆழம் வரை கீழே சென்று பார்க்க வேண்டிய வேலை. அவ்வளவு ஆழத்தில், மிக வெக்கையாக இருக்கும். ஆக்ஸிஜன் மேலிருந்துதான் செலுத்தப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. இரண்டு மணி நேரம் வேலை, பிறகு ஒரு மணி நேரம் ஒரு மூலையில் உட்கார்ந்து அரட்டை, பிறகு மீண்டும் வேலை என அது தொடரும். ஆண்கள் மட்டுமே அங்கே வேலைப் பார்த்தனர். வெக்கை கொடுமையானதாக இருக்கும் என்பதால் உள்ளே சென்ற பிறகு ஆடை எதுவும் அணியமாட்டார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தில் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் வரை அங்கு பணிபுரிந்தனர். அதில் மூவாயிரம் பேர் வரை துப்புரவுத் தொழிலாளர்கள். சுரங்கத்துக்குள் தோண்டியபடி உள்ளே செல்லும்போது, திடீரென்று பின்பகுதியில் மண் இடிந்து விழுந்துவிட்டால், முன்பக்கம் வேலைசெய்துகொண்டிருந்தவர்களை மறந்துவிட வேண்டியதுதான். மண்ணை முழுவதுமாக எடுத்து வழி ஏற்படுத்த எப்படியும் 10 நாட்கள் ஆகும். அதற்குள் மாட்டிக்கொண்டவர்கள் இறந்திருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் அங்கு உயிரழப்புகள் ஏற்படும். லிப்ட் போன்ற அமைப்பில்தான் சுரங்கத் தொழிலாளிகள் எல்லாம் உள்ளே செல்ல வேண்டும். வெளியே வரும்போது அனைவரையும் கடுமையான சோதனை செய்துதான் வெளியே அனுப்புவார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள், ‘சுரங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கும், எங்களுக்கும் மட்டும்தான் தனி லிப்டு’ என்று. ஆம், மலம் அள்ளிய வாளியுடன் அவர்கள் மட்டும் தனியாக லிப்டில் வெளியேற முடியும்? ஒரு டன் மண் வெட்டியெடுத்து அதில் இரண்டு கிராம் தங்கம் எடுக்க முடிந்தால் அது லாபகரமானச் சுரங்கம் என்பார்கள். கோலார் தங்க வயல் லாபகரமானச் சுரங்கமாக பல வருடங்கள் இயங்கியது. ஆனால், அந்தத் தங்கத்தை எடுப்பதற்குத் தொழிலாளர்கள் படும் துன்பங்களை நேரில் கண்டால் தங்கத்தின் மீதான ஆசையே போய்விடும். எந்த வயதில் சமூகப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொண்டீர்கள்? ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்காக, ஆந்திர பகுதியிலுள்ள குப்பம் என்னும் ஊரிலிருந்த சமூகப் பள்ளியில் நான் சேர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பாகுபாடுகள் குறித்தெல்லாம் அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். விடுமுறைக்குக் கோலார் தங்க வயல் வரும்போது, அக்கம்பக்கத்தினர் என்ன வேலை செய்கின்றனர் போன்றவற்றை அறிந்துகொள்ள முயன்றேன். அனைவருமே கோலார் தங்க வயலில் வேலை பார்ப்பதாக கூறினாலும், என்ன மாதிரியான வேலை என்பதைப் பொதுவாக சொல்ல மாட்டார்கள். அப்படி ஒருநாள் ஊருக்கு வந்திருந்தபோது, விளையாட்டில் சண்டை வந்து ஒரு நண்பன் என்னை, ‘தோட்டிப் பயலே’ என்று திட்டிவிட்டான். அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் “ஏன் நம்மை தோட்டி என்று திட்டுகிறார்கள்?” என்று கேட்டேன். “அது ஒண்ணுமில்லைப்பா, நம்பவூட்டாண்டே குப்பைத் தொட்டி ஒண்ணு இருக்குலே, அதான் தொட்டினு சொல்றாங்க நீ போய் விளையாடு” என்று சொல்லிவிட்டார். எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகளிடம் இந்த விஷயங்களைப் பேசாமல் முடிந்தவரை தள்ளிபோடுகிறார்கள் என்றே நினைக்கிறேன். குழந்தைமையை அப்படி எல்லாம் தற்காத்துக்கொள்ள சமூகம் விடுவதில்லையே. உங்களுடைய பெற்றோர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் என்று எப்போது தெரியவந்தது? என்னுடைய அப்பா மட்டுமல்ல, சகோதரரும் மலம் அள்ளும் தொழிலைத்தான் செய்துகொண்டிருந்தனர். அண்ணன் என்னைவிட இருபது வயது மூத்தவர். எங்களுடைய சொந்த ஊரில் போய் திருமணம்செய்துகொண்டுவந்தார். பெரும்பாலும் அப்படி திருமணம்செய்யும்போது கேஜிஎஃபில் வேலைசெய்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், என்ன வேலை என்று சொல்ல மாட்டார்கள். அண்ணி திருமணம் ஆகிவந்த பின்பு, அண்ணனின் உடைகளைத் துவைக்கும்போது ஒருவித துர்நாற்றம் வருவதை உணர்ந்தார். ஏன் இப்படி நாற்றம் வருகிறது என்று அவர் கேட்டபோது அண்ணன், ‘குப்பை லாரி ஓட்டுவதால் அப்படி இருக்கலாம்’ என்று கூறிவிட்டார். இது மாதிரியான சூழலில்தான், எனது அப்பா என்ன வேலை செய்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். அவரிடம் கேட்டால் அழைத்துச் செல்லமாட்டார் என்பதால் அவருடைய சக தொழிலாளர்களிடம் கேட்டு, அவர்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு நேரில் சென்றேன். அவர்கள் வாளிவாளியாக மலம் அள்ளிக்கொண்டிருந்தனர். எடுப்புக் கக்கூஸில் இருந்து மலம் அள்ளி டேங்கரில் கொட்டிக்கொண்டிருந்தனர். இந்த வேலையைத்தான் எனது பெற்றொர்களும் செய்கிறார்கள் என்பது உரைக்க, உரத்த குரலில் அழுதேன். “என்ன செய்கிறீர்கள்? நிறுத்துங்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். “எங்க வேலையை கெடுக்காதே, அந்தாண்ட போ” என்று அதட்டி அனுப்பினார்கள். நம்ப முடியாமல் அழுதுகொண்டே நின்றேன். அங்கிருந்த ஒரு அம்மா விளக்குமாறை கீழே போட்டுவிட்டு என் அருகே வந்து, “நீ என்கிட்டே சொல்லு ராசா நான் கேட்குறேன்” என்று சொன்னார். அந்த அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதேன். உங்கள் 16, 17 வயதில் அந்த நிகழ்ச்சி மாபெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அது என்ன மாதிரியான மனநிலையை உண்டாக்கியது? மிகச் சிறிய வயதில் ஒருமுறை அம்மா என்னிடம் ‘ஒருபோதும் நீ விளக்குமாறை கையில் எடுக்கக் கூடாது’ என்று என்னிடம் சத்தியம் செய்து தரச் சொன்னார். அதன் அர்த்தம் அவர்கள் செய்யும் வேலையை நேரில் கண்டபோதுதான் புரிந்தது. கோலார் தங்க வயலில் எங்கள் வீட்டருகே ஒரு குறுங்காடு இருந்தது. யூக்கலிப்டஸ் மரங்கள் சூழந்த அந்த இடத்தில், மனதிற்குக் கஷ்டமான நேரங்களில் போய் தனியாக அமர்ந்திருப்பேன். தனியாக பேசியபடி, அழுதபடி பல மணி நேரம் அங்கே உட்கார்ந்திருக்கிறேன். மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில் மலம் அள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலை காட்சிக்கு திரைப்படம் பார்க்கப் போவார்கள். பிற்பகலில் குடிப்பார்கள். இப்படி இவர்கள் சோம்பேறிகளாக, குடிகார்களாக இருப்பதனால்தான் இந்த வேலையை சமூகம் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் அவர்களிடம் வெறுப்புதான் வந்தது. சுற்றத்தாரிடம் எரிந்து விழுவேன். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று திட்டுவேன். பிறகு, பாபாசாகேப் அம்பேத்காரைப் படித்தபோதுதான், அவர்கள் மீது பிரியம் வந்தது. இது அவர்களுடைய பிழையல்ல என்பது புரிந்தது. அவர்கள் செய்யும் தொழில், அவர்களுடைய தேர்வல்ல. அவர்கள் மீது சாதியின் பேரால் இது திணிக்கப்பட்டது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகுதான் உண்மையான நேசத்துடன் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பழகத் தொடங்கினேன். இப்படி ஒரு தொழில் திணிக்கப்பட்டதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக எங்கள் மக்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பேரால் இந்தச் சுரண்டலைப் புனிதப்படுத்தும் முயற்சிகள்தான் நிகழ்ந்தன. மகாத்மா காந்தி, ‘நாம் குழந்தையாக இருக்கும்போது நம்முடைய அன்னைதான் மலத்தைத் துடைத்துச் சுத்தம் செய்கிறார். எனவே, மலம் அள்ளும் பெண்கள் எல்லாம் நமது அன்னை போன்றவர்கள்’ என்றார். இவையெல்லாம் எந்த மாறுதலையும் எங்கள் சமூகத்தில் கொண்டுவரவில்லை. ஹரிஜனம் என்பதும், வால்மீகி என்பதும் எந்தவிதக் கேள்வியுமின்றி அதே தொழிலை தொடரவே எங்களது மக்களைத் தூண்டின. ஆனால், பாபாசாகேப் அம்பேத்கார்தான் யாரையும் இந்தத் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று கொந்தளித்தார். அதுவே எங்களை இதிலிருந்து விடுதலையடைய தூண்டியது. இந்தியாவை விடுங்கள். நாடு பிரிவினையின்போது, முகமது அலி ஜின்னா நேருவிற்கு கடிதம் எழுதினார். பாகிஸ்தானிலிருந்து மற்ற இந்துக்களை அனுப்பிவிடுகிறோம். ஆனால் துப்புரவு தொழிலில் ஈடுப்பட்டுள்ள தலித் இந்துக்களை அனுப்ப இயலாது. அனுப்பினால் எங்கள் நாட்டில் துப்புரவுசெய்ய ஆள் இல்லாமல் போய்விடும் என்று எழுதியிருந்தார். கல்வி எந்தளவுக்கு இந்தச் சமூகச் சூழலிலிருந்து விடுபட உதவுகிறது? நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த வேலைவாய்ப்பு அலுவகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று தகவல்களை எழுதிக் கொடுத்தேன். அவரோ செய்ய விரும்பும் தொழில் என்னும் கேள்விக்கு, ‘தோட்டி’ என்று அவராகவே எழுதினார். அதை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பிறகு பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை. உங்களுடைய போராட்டம் எப்படி ஆரம்பமானது? நான் சொன்னேன் அல்லவா, உண்மையான அன்புடன் என்னுடைய மக்களிடம் நான் நெருங்கியபோது அவர்களும் அதே விதமான உணர்வுடன் என்னிடம் நெருங்கிவந்தார்கள். மனிதனின் கழிவை மனிதனே அகற்றுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ் (Drylatrine) முறையை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டப் போராட்டம் தொடங்கினேன். அப்படிதான் 1993ஆம் ஆண்டு எடுப்புக் கக்கூஸ் முறையைச் சட்டரீதியாக தடைசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிறகு நாங்கள் ஒரு இயக்கமாக நாடு முழுவதும் உள்ள எடுப்புக் கக்கூஸ்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினோம். சட்டம் இயற்றிய பின்பு எடுப்புக் கக்கூஸ் முறையை ஒழிக்க முடிந்ததா? இது 1993ஆம் ஆண்டு சட்டம் இயற்றிய பின்பும் பெரிதாக நிலைமை மாறவில்லை. எனவே, 2003ஆம் ஆண்டு, 7 துப்புரவுத் தொழிலாளர்களை வழக்குதார்களாகக் கொண்டு இந்திய ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுகளை எதிர்த்து உடனடியாகச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கறிஞர் முரளிதரன் எங்களுக்காக வாதாடினார். கூடவே, களத்தில் நேரடியாகச் சென்று, இப்படி எடுப்புக் கக்கூஸ்கள் உங்கள் ஊரில் இருக்கிறதா என்று உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்போம். பெரும்பாலும் இல்லையென்றுதான் சொல்வார்கள். பிறகு, நாங்களே அப்படி உள்ள கக்கூஸ்களைக் கண்டுபிடிப்போம். ஒருநாள் கூட்டமாகக் கூடிச் சென்று அதை இடித்துத் தள்ளத் தொடங்கினோம். உடனடியாக காவல் துறையுடன் அரசு அதிகாரிகள் ஓடிவந்தார்கள். ‘இப்படிக் கக்கூஸ்களை இடிப்பது தவறு’ என்றார்கள். ‘நீங்கள்தான் எடுப்புக் கக்கூஸ்களே இல்லையென்றீர்களே? இல்லாத கக்கூஸ்களை நாங்கள்எப்படி இடிக்க முடியும்’ என்று கேட்டோம். தொடர்ந்து இதைச் செய்தது மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தோம். அதன் மூலம் ஓரளவுக்கு இந்த முறையை ஒழிக்க முடிந்தது. ஆனால், இன்னமும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த முறை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு நினைத்தால் ஒரே நாளில் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லி அதை நிறைவேற்ற முடிகிறது. ஆனால், 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தடைச் சட்டத்தை இன்றளவும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது? சாஃபய் கரம்சாரி அந்தோலன் (Safai Karamachari Andolan) எப்படித் தொடங்கப்பட்டது? எடுப்புக் கக்கூஸ் மட்டுமல்ல பிரச்சினை. செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் அதைச் சுத்தம் செய்யவும் மனிதர்களை அழைக்கிறார்கள். அவர்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாது அந்தக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். பாதாள சாக்கடைகள் அடைத்துக்கொண்டால் இதே துப்புரவுத் தொழிலாளர்கள் அதனுள் இறங்கி மாண்டுபோகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்தை நமது நாடு கொண்டிருக்கிறது. ஆனால், ரயிலில் கக்கூஸ் போனால், அப்படியே மலம் வெளியே வந்து தண்டவாளத்தில் விழுகிறது. இதையும் துப்புரவுத் தொழிலாளர்களே சுத்தம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தால்தான் போராட முடியும் என்பதற்காகவே சாஃபய் கரம்சாரி அந்தோலன் அமைப்பை சில நல்ல மனிதர்களின் துணையுடன் தொடங்கினேன். நாடு முழுவதும் தொடர்ந்து போராடிவருகிறோம். 1993 எடுப்புக் கக்கூஸ் தடைச் சட்டம் போலவே 2014ஆம் ஆண்டு நீங்கள் போராடி பெற்றுத் தந்த நஷ்டஈடு தொகைக்கான சட்டமும் மிக முக்கியமானது, அதைப் பற்றிச் சொல்லுங்கள்! 2013ஆம் ஆண்டு, சாக்கடையைச் சுத்தம் செய்யவும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யவும் என்று அதில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்துபோகும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை தர வேண்டும், அப்படி ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்திய வீட்டு முதலாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். 2014ஆம் ஆண்டு நீதிபதி சதாசிவம் இதற்கான தீர்ப்பை வழங்கினார். உடனடியாக 1993ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இப்படி இறந்துபோன தொழிலாளர்களின் விவரம்கேட்டு அரசை நாடினோம். ஆச்சரியமாக அவர்களிடம் எந்தத் தகவலும் இல்லை. ‘எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்கெடுப்பது எங்களது வேலை அல்ல’ என்று சென்ஸஸ் அமைப்பு சொல்லிவிட்டது. எனவே, அவர்களுக்கு இந்த உதவித் தொகையைப் பெற்றுத் தருவதில் சிக்கல் நீடிக்கிறது. நாங்களே பிறகு இந்தக் கணக்கெடுப்பைச் செய்கிறோம். மொத்தம் 2378 பேர் இப்படிச் சாக்கடைகளில் இறங்கி இதுவரை இறந்திருக்கிறார்கள். ஒரு பெரிய போரில்கூட இத்தனை பேர் சாக மாட்டார்கள். உண்மையில் அவர்கள் சாகவில்லை. நாம்தான் கொன்றிருக்கிறோம். சாதிய கொடுமைகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் வாழ்ந்துதான் என்ன ஆகிவிடப்போகிறது என்று ஏறக்குறைய தற்கொலை மனநிலையில்தான் அந்தத் தொழிலாளர்கள் செப்டிக் டேங்கிலும், சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய இறங்குகிறார்கள். இனியாவது உயிர்கள் போகாமல் காக்க வேண்டும் என்று போராடுகிறோம். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6,500 தன்னார்வலர்கள் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தி நாங்களே இத்தகைய பணியில் ஈடுபட்டுவருகிறோம். தமிழ்நாட்டில் நிலைமை எப்படி உள்ளது? தமிழ்நாடு பொதுவாகவே விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக ஊடகத் துறை அங்கு பலமாக இருக்கிறது. சாக்கடை மரணங்கள் நேர்ந்தால், உடனடியாக ஒரு பெரிய செய்தியாக அது அங்கு மாறுகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தந்தை பெரியார் போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கம் அது. இந்தியாவில் சில மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தால் அது செய்தியாகக்கூட வருவதில்லை. தமிழ்நாட்டிலும், நகரங்களில் பாதாள சாக்கடை முழுவதுமாக நிர்மாணிக்கபடவில்லை. இது உடனடியாக அரசு செய்ய வேண்டிய பணி. ஜப்பானில் நீங்கள் பார்த்தவரை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலைமை எப்படியிருக்கிறது? ஜப்பானில் எத்தனையோ முன்னேறியிக்கிறார்கள். நாடு முழுவதும் பாதாள சாக்கடைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யும்முறை முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டிருக்கிறது. முன்பிருந்த ஒரு குறிப்பிட்ட புரோக்குமின் சாதியினர் மட்டும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் முறையும் இப்போது பெரும்பாலும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செய்யக்கூடிய தொழிலாக மாறிவருகிறது. இங்கிருக்கும் இயந்திரமுறை சுத்திகரிப்பை இந்தியாவில் காட்டி, இதைச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கதான் நான் ஜப்பான் வந்தேன். என்னுடைய நண்பர் பேராசிரியர் ராம்மகாலிங்கம் ஜப்பானிலுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் கஷ்டங்களைப் புரிந்துவைத்திருக்கும் ஜப்பான் நாட்டுத் துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் எங்களுக்கு உதவுதாகக் கூறியிருக்கிறார்கள். சந்திராயன் ராக்கெட்டை நிலவுக்கு விடுகிறீர்களே, சாக்கடை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இல்லையா என்று என்னிடம் ஜப்பானியர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? இந்திய அரசு நினைத்தால் இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் இதற்கென கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவர்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் படும் துன்பம் அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. அவ்வளவுதான். https://www.arunchol.com/bezwada-wilson-interview-by-r-senthil-kumar
  20. அதுவும் இன்னும் 10 ,15 வருடங்களுக்குதான் .....எங்கன்ட தலைமுறையினரின் பணம் அனுப்பும் படலம் முடிவடைந்த பின்பு வேறு மத நிறுவனங்களின் பணம் அதிகமாக கிடைக்க பெற்றால்...மக்கள் அங்கே தஞ்சமடைவார்கள்
  21. உண்மைதான், இவங்கள் மூன்றுபெரும், சக நாட்டுக்காரனான என்னை கையைவிட்டுவிட்டு, மேலே இருந்துகொண்டு ஞாயம் பிளந்துகொண்டு இருக்கிறார்கள். இனி வரப்போகும் போட்டிகளுக்கான எனது தெரிவுகளை பார்த்தால் எனக்கு ரத்த ஆறு ஓடப்போவது தெரிகிறது. இதைப்பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது
  22. இலங்கை ஒரு இனம் வாழும் நாடல்ல. பிறப்பு விகிதம் எந்த இனத்தில் குறைவடைந்துள்ளது?? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.😳
  23. தொடர்ந்து களவு எடுத்து கொண்டு வந்தால் தங்களுக்கே சொந்தமாகிவிடும் என்று நம்புகிறார்கள் போலும்
  24. அவர் சமாதான பொதியை கொண்டு போனார் தானே அது தான் தவறு அதனால் தான் அடிவருடி போர் முழக்கம் செய்தால் அவர் தமிழ் தேசிய பிரமுகர்.
  25. அப்படி சிக்கலை உருவாக்கி தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி என்ன சிக்கல் வந்து விட போகிறது. ஒரு சிக்கலும் வராது. இவர்கள் மாற மாட்டார்கள். இப்படி சொல்லி கொண்டே இருப்பார்கள்.
  26. புள்ளிகள் கேட்கலாம் ஆனால் அதுக்கென்று ஒரு ஞாயம் வேண்டாமா நீர்வேலியான் ........ நாங்கள் ஒதுங்கி உங்களுக்கு வழி விட்டாலும் அதுக்கும் மேலே 3 அமெரிக்கன்ஸ் எல்லைக்கு வேலி போட்ட மாதிரி நிக்கினம், அவர்கள் வழி விடுவார்களா ......! 😂 நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 91 2 ரசோதரன் 91 5 ஈழப்பிரியன் 83 9 நீர்வேலியான் 79
  27. நீர்வேலியான் அண்ணா த‌ன்ட‌ சொத்தை எழுதி த‌ர‌ சொன்னால் கூட‌ எழுதி த‌ந்து விடுவார் ஆனால் புள்ளியில் ஒரு புள்ளி மிஸ் ஆனால் கூட‌ வ‌ருத்த‌ப் ப‌டுவார் லொல்😁..............................
  28. இருந்தாலும், நான் பட்ட மன உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂
  29. கந்தையர் உங்களுக்கு இப்போதைய ட்ரெண்டிங்கே தெரியவில்லை ......... பாரிசில் "சின்னவீடு" என்று ஒரு உணவகம் உள்ளது.......சிறு சிறு கொண்டாட்டங்களை அங்கு வைத்து செய்வது வழக்கம் ...... அதில் என்ன விசேஷம் என்றால் ஒரு நீளமான மேசையில் நீளத்துக்கு வாழையிலை விரித்து பின் சீமெந்து குழைக்கும் வண்டிலில் அந்தப் பெரிய கரண்டியால் உணவுகள் சகலதும் ஒன்றாய் போட்டு குழைத்து (கடல் உணவு, மாமிச, மரக்கறி எல்லாம்) அவற்றை அந்தக் கரண்டியால் வாழையிலை மீது பரப்பி பரிமாறுகிறார்கள்.....எல்லோரும் நீளத்துக்கு அமர்ந்திருந்து விரும்பியதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான் .........! கூகுளில் (chinna veedu le bourget ) என்று தேடித் பாருங்கள் விவரங்கள் கிடைக்கும்......அவசரப்பட்டு வேறு ஏதாகிலும் நினைத்துக் கொண்டு போகக் கூடாது ........உணவு மட்டும்தான் ........! அதாவது இப்போது எல்லாவிதமானவைகளும் வந்து விட்டன......நீங்கள் வேண்டியளவு துட்டை தட்டில் வைத்து நீட்டினால் போதும்........! 😂
  30. "விலைவாசி" [இரட்டைக் கிளவி] "கிசுகிசு ஒன்றைக் வானொலியில் கேட்டேன் கிறுகிறு என்று தலை சுற்றுதே! மலங்கமலங்க விழித்து சம்பளத்தைப் பார்த்தேன் வெடுவெடு என நடுக்கம் வந்ததே!" "நறநற என்று பல்லைக் கடித்தேன் குளுகுளு அறைக்கு விடை கொடுத்தேன் கரகரத்த குரலில் மனைவியைக் கூப்பிட்டேன் பரபரக்க வைக்கும் செய்தியைச் சொன்னேன்!" "கிடுகிடு என்று விலைவாசி கூடிற்று தகதக மின்னும் உன் மேனியும் நொகுநொகு என்று மாவை அரைக்கணும் மாங்குமாங்கு என தினம் உழைக்கணும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  31. 🤣..... இந்த த்ரிலிங்குக் காரணமே அந்த சிறீலங்கா தானுங்க......அவங்க மட்டும் வென்றிருந்தா, நான் அடியில நின்றிருப்பன்..........
  32. 🙏..... தேர்தலில் ஒவ்வொரு வாக்குப் பெட்டியையும் எண்ணி எண்ணி முடிவை சொல்லிக் கொண்டு போவது போல, நல்ல த்ரிலிங்காக போகுது......
  33. இதுக்கு பிறகும் இவங்களை யாராவது கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்களா?
  34. கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️
  35. 16வது இடத்திலும் ஒரு அமெரிக்கன் 🤣
  36. ஒரு நேரத்தில் உறவுகள் விலகியபோதும் விலகாதிருப்பது வளர்த்த பிராணிகளும் நட்டுவைத்த மரங்களும்தான்.......! 🙏
  37. இந்தத் திரி லட்டுப்போல் மிகவும் சுவையாகப் போகின்றது ........ தொடருங்கள் ......! 😂
  38. https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
  39. நீங்க வேற.. அவருக்கு அவரது வீட்டில் இது பயங்கர குடைச்சல். அந்த கோபத்தை தான் இப்படி காட்டுகிறார்.
  40. மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் West Indies (6 ov) 92/1 4வது overல் மட்டும் 36 ஓட்டங்களை எடுத்தது 3.6 6 Azmatullah to Pooran, SIX runs 3.5 6 Azmatullah to Pooran, SIX runs 3.4 4 Azmatullah to Pooran, FOUR runs 3.3 4lb Azmatullah to Pooran, 4 leg byes 3.2 • Azmatullah to Pooran, no run 3.2 5w Azmatullah to Pooran, 5 wide 3.2 5nb Azmatullah to Pooran, (no ball) FOUR runs 3.1 6 Azmatullah to Pooran, SIX runs
  41. ஆப்கான் எதிர்பார்த்ததை விட நன்றாக விளையாடுகிறார்கள். தற்செயலாக ஆப்கான் வென்றால் நான் எஸ்கேப். @goshan_che அப்புறம் தொல்லை தாங்க முடியாது. அப்புறம் தொல்லை தாங்க முடியாது.
  42. சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎
  43. அப்பிடியே என்னென்ன பலகாரங்கள் பிடிக்கும் என்று சொன்னால் அடித்து வைத்திருக்கலாம். பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂 வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால் கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎 @Kandiah57 அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.
  44. ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.