Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்17Points20018Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38756Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்5Points2954Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/24/24 in Posts
-
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள் நீதிகோரி போராட்டம்!
5 points
- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் நெருப்படி விளாசலான 41 பந்துகளில் 92 ஓட்டங்களுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 76 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தாலும், பிற துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து ஆடாததால், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பிறருக்குப் புள்ளிகள் கிடையாது. 51வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 107 2 ரசோதரன் 105 3 ஈழப்பிரியன் 101 4 சுவி 98 5 கந்தப்பு 97 6 கோஷான் சே 97 7 நந்தன் 95 8 நீர்வேலியான் 93 9 குமாரசாமி 92 10 கிருபன் 92 11 எப்போதும் தமிழன் 92 12 தமிழ் சிறி 90 13 P.S.பிரபா 89 14 வாதவூரான் 88 15 வாத்தியார் 88 16 நிலாமதி 87 17 அஹஸ்தியன் 87 18 வீரப் பையன்26 86 19 ஏராளன் 85 20 தியா 80 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் தோற்றதிற்கு இவர் தான் காரணம்...... இவர் விளையாடுகின்றார் என்று நினைத்து தான் நான் அந்த அணியை தெரிவு செய்தனான்.......😜.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
இதோ 6மணித்தியாலம் முந்தியே வீரப்பையன் 26 கிளம்பிவிட்டார்👇😆2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது. 49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 105 2 ரசோதரன் 103 3 ஈழப்பிரியன் 97 4 சுவி 96 5 கோஷான் சே 95 6 கந்தப்பு 93 7 நந்தன் 93 8 நீர்வேலியான் 91 9 கிருபன் 90 10 எப்போதும் தமிழன் 90 11 P.S.பிரபா 89 12 குமாரசாமி 88 13 தமிழ் சிறி 88 14 வாத்தியார் 88 15 அஹஸ்தியன் 87 16 வாதவூரான் 86 17 நிலாமதி 85 18 வீரப் பையன்26 84 19 ஏராளன் 83 20 தியா 80 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 732 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி
1 pointஇலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி - பொருளாதார தடைகள், இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிப்பது சாத்தியமில்லை : கென்சவேர்ட்டிவ் கட்சி Published By: RAJEEBAN 24 JUN, 2024 | 05:00 PM tamil guardian பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கு நீதி பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர். தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர். கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட்இபசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே ஆகியோர் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமாரும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார். ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம் இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார். தடைகள் இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது. தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். எனினும் முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார். பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல் கனடா நாடாளுமன்றம் மே 18 ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் குறிப்பிட்ட நினைவுநாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார். குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார். இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது அதன்போது மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார். பரந்துபட்ட தடைகள் இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர் வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார். நாங்கள் கருத்துவெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார். சுயநிர்ணய உரிமை சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார். ஆனால் ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார். ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன்இஇலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தொழில்கட்சி இதேவேளை தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார். மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது எனினும் அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் எங்களிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார். இரண்டுவாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதார தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார். அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர் தமிழ் சமூகம் தங்களிற்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c9wwzrpkd1lo1 point- மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள் நீதிகோரி போராட்டம்!
தவறுகளை ஏற்று அதனை எதிர்காலத்தில் தவிர்க்க முயற்சி எடுக்கும் மன நிலை கூட இலங்கையினாலும் முடியவில்லை, அந்த மனநிலைக்கு மக்களும் தயாராகவில்லை ஏனென்றால் அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது நேரடி பங்காளர்களாகவும் அதனை வரவேற்ற நிலையில் இருந்தவர்களுமே பெரும்பான்மையானவர்களாக இருந்துள்ளாகள். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இது நிகழ்கிறது பச்சிளம் குழந்தைக்லள கொதிக்கும் தாரில் போடுவதும் அடுப்பில்லிருந்த சூடான தோசை கல்லில் போட்ட பெளத்த தர்மத்தினை பின்வற்றுபவகளாக அதே நேரம் எங்கோ காசாவில் நிகழும் படுகொலைகளுக்காக கவலைப்படும் மிக மனித நேய சமூகமாக பாசாங்க் காட்டும் அதே வேளை மிகவும் மோசமான மிருகத்தனமாக தனது பிராந்தியத்தில் ஒரு பிரிவு மக்களின் மேல் நடந்து கொண்ட மிருகங்கள் வெளிநாடுகளில் நடக்கும் மனித உரிமைகளுக்காக முக்ட்லை கண்ணீர் வடிக்கும் போலி மனிதர்கள் நிறைந்த தேசமாக இந்த காட்டுமிராண்டி தேசம் உள்ளது. இலங்கையினை பொறுத்தவரை இவை சாதாரண நிகழ்வுகள் எனும் மன நிலையில் இருக்கும் இவர்களால் எவ்வாறு காசாவிற்காகவும் உக்கிரேனிற்காகவும் தாய்வானிற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்க முடிகிறது, முதலில் மனிதர்களாக நடிப்பதையாவது குறைந்த பட்சம் நிறுத்தவேண்டும்.1 point- தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
இருப்பதில் சரியான அணுகுமுறை. சும்மா சாதி இல்லை (அல்லது புலிகள் போல தடை செய்து) என்று சட்டம் போட்டு செய்யும் விடயம் அல்ல. அப்படி செய்வது (அள்ளது புலிகள் செய்தது) சாதியை பதுங்கு குழிக்குள் தள்ளியது, காற்றழுத்தமாக அடைத்தது ; அந்த காற்றழுத்த மூடியான புலிகள் அகன்றவுடன் வீறு கொண்டு எழுந்துள்ளது. தமிழ் நாட்டில் எல்லா சாதிகளும் அவை பிற்றப்படுத்தப்பட்டவை என்ற அரச முத்திரையை வலிந்து வரவேற்றுக்கும் போக்கு இருக்கிறது. ஏனெனில், இட ஒதுக்கீடு, சலுகைகளுக்காக. எனவே, உண்மையாக (பொருளாதாரத்தில்) பின்னுக்கு சமூக மட்டத்தில் இருக்கும் சாதிகளை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.1 point- துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம்
1 pointசுவிஸ் தொலைக்காட்சியில் போலி துவாரகா sudumanal கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு. நிதி சேகரித்து பிடிபடுகிற எல்லா பொறுப்பாளர்களும் தப்பித்தலுக்காக எல்லாவற்றையும் அந்த போலித் துவாரகா மீது கட்டிவிட எத்தனிக்கிறார்களா அல்லது அந்தப் பெண் இந்தப் பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது வெளிச்சத்தில் இல்லை. 70’000 பிராங்குகளை கொடுத்த நபர் இப்போ அதிகாலையில் செய்திப் பத்திரிகைகளை வீடுவீடாக போடுகிற வேலையை செய்துவிட்டு, பின்னர் தனது வேலைத்தளத்துக்கு போய் வேலைசெய்து தான் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானதாக சொல்கிறார். அவரது அதிகாலை பத்திரிகை விநியோக கடமையின்போதே அந்த வீதியில் வைத்தே அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணும் தான் 68’000 பிராங்கினை வங்கியில் பெற்று கொடுத்ததாக சொல்கிறார். போலித் துவாரகா தனது பிள்ளை மாற்றுத்திறனாளியாக இருப்பதாக சொல்லி பணம் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் கூறுகிறார். இப்படி வங்கிகளில் பல ஆயிரக் கணக்கில் பலர் கடனெடுத்துக் கொடுத்து தமிழீழத்துக்கான தமது கடமையை செய்வதாக நினைத்துக் கொண்டது உண்மை. அவர்களில் பலரும் தமது கடன்களை அடைக்க இன்றுவரை மிகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அதிகாலையில் பனி குளிர் எல்லாம் தாண்டி நித்திரையிழந்து வீடுவீடாக செய்திப் பத்திரிகைகள் விநியோகித்துவிட்டு, பின் தமது வேலைத்தளத்துக்குச் சென்று நூறு வீத வேலை செய்கிறார்கள். இன்னும் சிலரோ இந்த இரு வேலைகளோடும் வாரத்தில் கிடைக்கும் மிச்ச இரு நாள் லீவுக்கும் முன்றாவது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துள் விடப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடும் நிலையும் இருக்கிறது. குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் இப்படி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தப் பணமோசடியில் ஈடுபட்டவர்களும் பாதுகாப்பான நிலை எடுக்க எத்தனிக்கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. இவர்கள் சொத்துக்களை மட்டுமல்ல மிகை ஆடம்பரமாக பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்துவது மற்றும் விலையுயர்ந்த கார்கள் என பவுசு காட்டி அலைய, கடனெடுத்து பணத்தை பெருமளவில் கொடுத்தவர்கள் விடுதலையை நம்பிய ‘குற்றத்திற்காக’ தமது வாழ்க்கையை வேலைக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் யார். இதில் போலித் துவாரகாவின் பாத்திரம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாது. அவரையும் ஊடகவியலாளர் சந்தித்து கேட்கிறார். அவர் தன்மீது பழி போடப்படுவதாகவும் தான் ஒருபோதும் நிதிச் சேகரிப்பில் ஈடுபடவில்லை எனவும் மறுக்கிறார். பணத்தை கையாண்டவர்கள் இந்த பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முன்வராமல் எல்லாவற்றையும் அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முனைகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராவது நீதிமன்றம் போக நேர்ந்தால் பல உண்மைகள் கண்டறியப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த விவகாரம் சுவிஸ் பொலிசாரால் கையாளப்படும் பட்சத்தில் மாவீரர் உரையை தயாரித்ததிலிருந்து அதை ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு என தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஊடாக இதன் சூத்திரதாரியாக நின்றவர்கள் வரை கண்டறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் அப்***. அவர் எதிர்பார்த்திராத வகையில் ஊடகவியலாளர் அவரை தேடிப்போய்ச் சந்தித்து சில கேள்விகளைக் கேட்கிறார். “மாவீரர் உரைக் காணொளியில் வந்தது பிரபாகரனின் மகள் தான். நான் தொலைபேசியில் அவருடன் உரையாடி இருக்கிறேன். 14 வருடமாக எந்த அரசியல் தீர்வும் வராததால் இனி என்ன செய்யலாம்” என தாம் உரையாடியதாகவும் சொல்கிறார். ஆனால் தான் பணச் சேகரிப்பில் ஈடுபடவில்லை என்கிறார். தொலைக்காட்சிக்குக் கசிந்த அப்***வின் தொலைபேசி உரையாடல் ஒன்று காட்டப்படுகிறது. அதில் அவர் “எமது நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பணக் கட்டுமானம் தேவை. அரசியல் ரீதியில் நாடுகளின் ஆதரவுடன் அழுத்தத்தைக் கொடுத்து நாட்டைப் பிரிக்கலாம்” என யாருடனோ உரையாடுகிறார். இதுகுறித்து நேரில் தொலைக்காட்சி நிருபர் கேட்டபோது அப்***வோ “அது நானில்லை” என மறுக்கிறார். தான் யாரையும் நிதிப் பங்களிப்பு கேட்கவில்லை என (ச்ச்)சொல்கிறார்.. இந்த விவகாரம் தொலைக்காட்சிவரை வரும் என்று அவர்கள் எதிர்பாராமல் இருந்திருத்தல் கூடும். வெளியே சொல்லத் தகுந்த எல்லைவரைதான் இச் செய்தியை சுவிஸ் தொலைக்காட்சி பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது என ஊகிக்கலாம். தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரது மீள் வருகைக்கும் குடும்பத்துக்கும் என அந்தப் பெண் பணம் சேகரித்ததாகச் சொல்கிறது தொலைக்காட்சி. 380’000 பணத்தை கொடுத்து தான் ஏமாந்ததாகச் சொல்லும் நபர் அந்தப் பெண் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை தான் நம்பி பணத்தை கொடுத்ததாகக் கூறுகிறார். 68’000 பிராங்கைக் கொடுத்த அந்த நபர் (பெண்) தனது பிள்ளை சுகவீனமாக இருப்பதாக (போலித்) துவாரகா உதவி கேட்டதால் கொடுத்ததாகச் சொல்கிறார். இவர்களுக்கு வெளியே இன்னும் பலர் இருக்கச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறான பெருந்தொகைப் பண விடயத்தில் இந்த “கேட்டார்… கொடுத்தேன்” என்றவாறான காரணங்கள் அவர்கள் சொல்வதை உண்மையென உறுதிப்படுத்துவதை விடவும் அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பதை அல்லது மறைப்பதையே அதிகம் வெளிப்படுத்தும் வலுக்கொண்டனவாக இருக்கின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதைவிடல் (போலித்) துவாரகாவிலிருந்து தொடங்கியதல்ல. 2009 இலிருந்தே உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்ட கதையாடல் அது. பட்டையடி அடித்து உழைத்த பணத்தையெல்லாம் தமிழீழ மீட்புப் போருக்கான தத்தமது பங்களிப்பாகக் கொடுத்தனர் பல தமிழர்கள். அவர்களின் பணத்தை மில்லியன் கணக்காக சுருட்டி, 2009 புலிகளின் வீழ்ச்சியுடன் தத்தமதாக அபகரித்த பொறுப்பாளர்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க முன்வந்தால் தனக்குத் தானே குழிவெட்டுவதாக அமையும். இந்த கள்ள மௌனமும் கூட்டுக் களவாணித்தனம் அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்கு புலத்துப் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுமல்ல புலம்பெயர் புலிகளின் பீடமும் அரசியல் ரீதியில் பெரும் பங்கு ஆற்றியது. நந்திக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல் வந்து மீட்கும் என தலைமைக்கு நம்பிக்கை ஊட்டுமளவுக்கு, அதை நம்புமளவுக்கு விடுதலை அரசியலானது புலத்திலும் புகலிடத்திலும் பலவீனமாக இருந்தது. நிதிப் பொறுப்பாளர்கள் 2009 இல் அவசரகால நிதி என்ற பேரில் பெருநிதியை சேர்த்தனர். அதுக்கு என்னவானது எனத் தெரியாது. ஒருவகையில் இந்தக் கும்பல் அந்தப் பணத்தை தமதாக்கிக்கிக் கொள்ள புலிகளின் அழிவை கள்ளமாக விரும்பினார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை இவர்கள் குறித்து ஒருவர் முன்வைக்க முடியும். இந்த புலம்பெயர் புலிகளின் பணம் சேர்க்கும் வழிவகைகள், கையாடல்கள் என்பன குற்றத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது என மதிப்பிடலாம். இந்தக் குற்றத்தன்மையானது சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் எமது போராட்டம் குறித்த எடுத்த நிலைப்பாட்டில் அவர்களது சூழ்ச்சிகரமான பூகோள அரசியலை மறைக்க உதவியது. அதாவது புலிகளின் ஆயுதப் போராட்டம் குற்றத்தன்மை கொண்டதாக சர்வதேச ரீதியில் ஆக்கப்பட்டதற்கு புலிகளின் குற்றத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் சாதகமாக அமைந்தது. எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்டம் வரலாறாகிக் கொண்டிருந்த அதேநேரம், புலிகளின் தோற்றத்திலிருந்து அதன் அழிவுவரை அவர்கள் மேற்கொண்ட தனிநபர் அழிப்பு, கூட்டுக் கொலை, மாற்று இயக்க அழிப்பு, உட்கொலை, சக இனங்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள், மாற்றுக் கருத்தின்மீதான அராஜகம் மற்றும் ரஜீவ்காந்தி, பிரேமதாச இருவரையும் கொன்றமை என அவர்களது நடவடிக்கைகள் குற்றத்தன்மை கொண்டதாகவும் வளர்ந்துகொண்டுமிருந்தன. இந்த குற்றத்தன்மைப் போக்கின் நீட்சியாக புகலிட புலிகளின் குற்றத்தன்மையான செயல்களை நோக்க முடியும். அது புகலிடத்தில் மாபியாத்தனமான நடவடிக்கைகளுக்கும், எவ்வழியிலாவது பணம் சேர்க்கும் முனைப்புகளுக்கும் இட்டுச் சென்றது. 2009 புலிகளின் அழிவின் பின்னரும் தொடர்ந்து பணம் கறக்கும் வேலைக்காகவும், கொள்ளையடித்த பணத்தை எவரும் கணக்குக் கேட்டுவிடக்கூடிய கொதிநிலையை படிப்படியாக இல்லாமலாக்கும் கள்ள நோக்குடனும் (பிரபாகரன் கொலையுண்டது தெரிந்தும்) “தலைவர் உயிரோடு இருக்கிறார்” எனக்கூறி அவரை மாவீரராகக்கூட அறிவிக்காமல் இழுத்தடிக்குமளவுக்கு இவர்களின் குற்றத்தன்மையான மனநிலை இவர்களை வழிநடத்தியிருக்கிறது. இதற்கு தமிழக தமிழின உணர்வாளர்கள் சிலர் பிழைப்புவாத நோக்கில் துணைபோயினர். ஒருபுறத்தில் விடுதலை அரசியல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரம், இன்னொரு புறத்தில் கிரிமினல்தன்மை கொண்ட போக்கும் அதன் தொடர் வளர்ச்சியும், முடிவும் போராட்டக் குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது. 23062024 Thanks: SRF Link: https://www.srf.ch/play/tv/rundschau/video/spendenaffaere-um-tamil-tigers-lebt-der-anfuehrer-noch?urn=urn:srf:video:ff1fd8c5-b11e-47cf-9b1f-96a1828a73b0 (இச் செய்தியில் 33 வது நிமிடத்தின்பின் குறித்த காணொளி வருகிறது. https://sudumanal.com/2024/06/23/சுவிஸ்-தொலைக்காட்சியில்/#more-60941 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் உலகத்தை நினைச்சார் .......சிரிக்கிறார்..........! 😂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி ஈழத்து அரவிந்தசாமி புள்ளி பட்டியலில் முன்னேற்றம்😁............................................. நாட்டுக்கு கிலம்ப போகினம்...................... இந்தியா தான் கோப்பையை வெல்ல போகுது ரோகித் சர்மா தனது வேதனையை மூன்று மாதத்துக்கு முதலே வெளிப் படுத்தி இருந்தார் தனது தலமையில் உலக கோப்பை வெல்வதை தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்தார் . வார கிழமை கோப்பையுடன் டெல்லி போய் இறங்குவினம்.......................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இஞ்ச பாருங்கோ பிள்ளைகள் அப்படி இப்படி கதைத்து அவுஸை ஹவுசுக்கு அனுப்பிப் போடாதையுங்கோ என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ....... அப்புறம் அழுதுடுவேன்.......! 😢1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12வருடத்துக்கு முதல் யாழில் அப்கானிஸ்தான் அணி வளந்து வருது என்று எழுத என்னை நக்கல் நையாண்டி செய்தவை பழைய உறவுகள் பையா உவங்கள் பந்துக்கு பதில் குண்டை கொண்டுவந்து விளையாட மாட்டாங்கள் தானே என்ற கோனத்தில் எனக்கு தெரிந்த அண்ணா யாழில் எழுதினார் ஹா ஹா அப்கானிஸ்தான் அணி 20 ஓவர் விளையாட்டில் மட்டும் தான் அவர்களின் திறமை 5நாள் விளையாட்டு 50ஓவர் விளையாட்டு இப்படியான தொடர்களில் படு தோல்விய சந்திக்கும் அணி........................தென் ஆபிரிக்கா வீரர் இங்லாந்துக்கு விளையாடி இப்போது அப்கானிஸ்தான் அணியின் கொச்சா இருக்கிறார் இவரின் வருகைக்கு பிறக்கு அப்கானிஸ்தான் அணி நல்ல முன்னேற்றம்.........................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்க முடிவெடுத்தா சரியோ? நாங்களும் முடிவெடுக்க வேணுமல்லோ. @வீரப் பையன்26 னை தீ குளிக்க பண்ணாதேங்கோ.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எந்த டீம்ல யாரு விளையாடுறானு கூட தெரியாது.. Vijay Vj1 point- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி அர்ச்சனை செய்கின்றவர்கள் அப்படியே செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஈற்றில் அவர்களை எவரும் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்காமல் விட்டு விட ஒரு ஓரத்தில் இருந்து புலம்பி புலம்பி பின் ஓய்ந்து விடுவார்கள்.1 point- "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 09 குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதை பற்றிய முழு வீச்சான ஆய்வுகள் அல்லது முயற்சிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி பலரின் மனதில் எழுவது இயற்கையே? இந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின் [ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட தகவல்களையும் கிழே தருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக் கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன. கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000 - 2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும். உதாரணமாக, புறநானுறு 9, 6 & 67, கலித்தொகை 4 & 7 மற்றும் தொல் காப்பியமும், 1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9) சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த [குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும். "வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்" (புறம் 6) வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது. "முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின் " [புறம் 67] முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது. "மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப் புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்" (கலித். 104) முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது. "வட வேங்கடந் தென்குமரி" [தொல்காப்பியம்] "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:19-22) கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது. ராவணனின் பேரரசு, 25 மாளிகைகளுடனும் 400000 வீதிகளுடனும், வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில் [இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது. சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலிலும் பின்னர் "ராஜாவலிய" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. ஆனால் 2004 சுனாமியின் தாக்குதலின் பின், இந்த உப கண்டத்தில் இன்று எலோருக்கும் நன்றாகத் தெரியும் சிலப்பதிகாரம் , கலித்தொகை, ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய 'கடற்கோள். என்றால், எப்படி இருந்து இருக்கும் என்று என நம்புகிறேன். நாம் மேலே சுட்டிக்காட்டியவாறு, பண்டைத்தமிழ் இலக்கியம், ஆகக் குறைந்தது 14 இடங்களில், கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது. அது மாட்டு அல்ல, எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம், ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அல்லது கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதேயாகும். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம். இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம். அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம், அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம். அது மட்டும் அல்ல, இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம், சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும். இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே ஆகும். ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதாகும். இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதாகும். அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக கூட இருக்கலாம் ? இவைகளை உறுதிப்படுத்த எம்மிடம் இன்னும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இது வரை, குமரி கண்டத்தை பற்றிய ஏதாவது நேரடியான தகவல்கள் இலக்கியம் மற்றும் இதிகாசங்களில் உள்ளனவா என்று பார்த்தோம். ஆனால், மகாவம்சத்தையும் மற்றும் 'Daily News 2020/08/10 › features › இல் We were here before the arrival of Vijaya' என்ற கட்டுரையையும் பார்த்தபின், ஏன் நாமும் மறைமுகமாக அவை மேலும் எதாவது கூடுதலாக சொல்கின்றனவா என தேடக் கூடாது என்று யோசிக்கிறேன் உதாரணமாக, மகாவம்சத்தில், விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம் [clan] வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் இயக்கர், நாகர், தேவர் மற்றும் அரக்கர் [Yaksha (Yakku), Naga, Deva, and Raksha (Rakus)] ஆகும். இது அவர்களின் தொழிலை குறித்து காட்ட ஒரு உருவகமாகக் [metaphorically] கூறப்படுகிறது எனலாம். உதாரணமாக, இயக்கர்கள் இரும்பை உருக்கி வார்பவர்களாகவும் [mould iron], நாகர்கள் வர்த்தகர்களாகவும் [traders], தேவ[ர்] மக்கள் ஆட்சியாளர்களாகவும் [rulers], அரக்கர்கள் விவசாயிகளாகவும் [ farmers] நம்பப்படுகிறது. [Yakshas can be believed lived on mountains where they had used monsoon wind to mould iron, because a derivative from the word yakka is yakaḍayā / යකඩයා means the iron. Rakshas (Sanskrit: राक्षस, rākṣasa: Pali: rakkhaso) were supposed to be farmers who used the steel products of the Yaksha people in their farming endeavours (the name Raksha is derived from the two syllables ra+kus. In Sinhala, kus means stomach [කුස් - Stomach];] மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள் அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம். மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் 'வேடர்' ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன். இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள். மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி துணி நூற்பதைக் காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து ,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது. இவைகள் எல்லாம் இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது ! மேலும் ஒரு உதாரணமாக நாகர்கள் யார் என்று கொஞ்சம் ஆழமாக பார்ப்போமானால், கார்த்திகேசு இந்திரபாலா (Karthigesu Indrapala, பிறப்பு: 22 அக்டோபர் 1938) போன்ற அறிஞர்கள் அவர்களைப் பழங்கால பழங்குடியினராகக் கருத்துவதுடன், அவர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைந்தனர் என்கிறார். வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒலியர், பரதவர், மறவர், பறையர் மற்றும் எயினார் [The Oliyar, Parathavar, Maravar, Paraiyar and Eyinar ] ஆகியோர் நாகர் பழங்குடியினர் ஆவார்கள். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம் என்கிறது. சங்க இலக்கியங்களுக்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாகா முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு. உதாரணம்: மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகனார், முப்பேர் நாகனார் .... நாகர்கள் என்பவர்கள் தென்னிந்திய வம்சாவளியினரை சேர்ந்த பாம்புவை வணங்கும் மக்களாகும் என்றும் எச். பார்க்கர், [H. Parker] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும், "பண்டைய சிலோன்" [“Ancient Ceylon”] ஆசிரியருமான இவர், நாகர்களை கேரளாவின் நாயர்களின் கிளையினராகக் கருதுகிறார். இவை எல்லாம் காட்டுவது, விஜயன் என்ற புராண தலைவன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட முன் அங்கு தமிழர்களும் பூர்விக குடிகளாக வாழ்ந்தனர் என்பதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 10 தொடரும்1 point- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
1 pointடி20 உலகக்கோப்பை: 10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர்-8 சுற்றில் போராடித் தோற்றது. மாறாக 10 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தோல்வியை சந்திக்காத அணி தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடினாலும், 2 முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. 2009-ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா 2014-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இந்த இருமுறையைத் தவிர அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி தகுதி பெறவில்லை. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை என்ற பெயரை தென் ஆப்ரிக்க அணி காப்பாற்றி வருகிறது. தற்போது மேற்கிந்தியத்தீவுகளை வென்றதன் மூலம் குரூப்-2 பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குரூப்-1 பிரிவில் யாருடன் மோதல் ? ஆனால், அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2வது இடத்துக்கு வரும் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதும். ஆனால், இன்று நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் முதலிடம் பெற்று அரையிறுதி செல்லும். ஆனால், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதாது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனாலும் அரையிறுதியை எந்த அணியும் உறுதி செய்யாது. ஏனென்றால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், குரூப்-1 பிரிவில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தே யார் அரையிறுதி செல்வார் என்பது முடிவாகும். இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசரவ் நாள் இல்லை, மாறாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், இந்திய அணி அரையிறுதி செல்லும், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும், ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லும். ஆதலால் மழைதான் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்க அணி. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் மழைக் குறுக்கிடவே தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு திருத்தப்பட்டு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, 123 ரன்களைத் துரத்திய தென் ஆப்ரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது. 10 ஆண்டுகளுக்குப்பின் 2014-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியை இறுதிப்போட்டிவரை எய்டன் மார்க்ரம் கொண்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் சீனியர் அணியை அரையிறுதிவரை மார்க்ரம் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் மார்க்ரம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீசத் தொடங்கி, 4 ஓவர்களை முழுமையாக வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளித்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஷம்சி, கேசவ் மகராஜ் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்துவீசியிருந்தனர். தென் ஆப்ரிக்கா என்றாலே வேகப்பந்துவீச்சில்தான் பலம் என்ற நிலையை மாற்றி, சுழற்பந்துவீச்சுக்கு மார்க்ரம் மாற்றியுள்ளார். இந்த போட்டியில் 12 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷம்சி 3 விக்கெட், மார்க்ரம், மகராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பேட்டிங்கில் படுமோசம் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் 58 டாட் பந்துகளை விட்டுள்ளனர். இது ஏறக்குறைய 9.4 ஓவர்களுக்கு சமம். அதாவது 10 ஓவர்களில்தான் 135 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் கெயில் மேயர்ஸ்-ரஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் அணியை ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்தது. இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். சேஸ், மேயர்ஸ் தவிர இருபேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்று ஆட்டமிழந்தனர். டிபெண்ட் சாத்தியமில்லை மிகக்குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பது அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் சாத்தியம். ஆனால், ஆன்டிகுவா, பர்படாஸ் போன்ற பேட்டர்களுக்கு சாதகமான விக்கெட்டில் சாத்தியமில்லை. இருப்பினும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தி, தொடக்கத்திலேயே தென் ஆப்ரிக்காவின் 2 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர். ஆனால் மழைக் குறுக்கீடு முடிந்து ஆட்டம் தொடங்கியபின், மார்க்ரம் (18), ஸ்டெப்ஸ் (29), கிளாசன் (22) ஆகியோரின் கேமியோ ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் போராடினாலும் கடைசி நேரத்தில் யான்சென் 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சரியான உத்தி இல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES யான்சென் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இல்லை. அவரை கடைசிவரை நிலைத்து ஆடவும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. யான்சென் பலவீனத்தை அறிந்து சரியான பந்துவீச்சாளரைப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், சரியான உத்திகளை மேற்கிந்தியத்தீவுகள் செயல்படுத்தாமல் விட்டதால் வெற்றியை இழக்க நேரிட்டது என்ற கூற முடியும். தென் ஆப்ரிக்கா மோசமான பீல்டிங் தென் ஆப்ரிக்கா என்றாலே பீல்டிங்கிற்கு பெயரெடுத்தவர்கள். கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோனியே, கல்லினன், மெக்மிலன் என பலரைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். கேப்டன் மார்க்ரம், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேசவ் மகராஜ் என 4 பேரும் கேட்சுகளை கோட்டைவிட்டனர். ரபாடாவை பயன்படுத்தாத மார்க்ரம் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு சிறப்பாக ஒத்துழைத்ததால் கடைசிவரை ரபாடாவை பந்துவீச மார்க்ரம் அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் 18-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். 62 டி20 போட்டிகளில் விளையாடிய ரபாடா இதுபோன்று கடைசிவரை பந்துவீசாமல் இருந்ததில்லை. இதற்குமுந்தைய 61 ஆட்டங்களில் தொடக்கத்திலேயே முதல் 4 ஓவர்களிலேயே ரபாடா பந்துவீசிவிடுவார். ஐபிஎல் தொடர்களில் ரபாடாவை 10 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5வது ஓவருக்குப்பின் ரபாடா ஒருமுறை பந்துவீசியுள்ளார். ஆனால், இதுபோன்று 18-வது ஓவர்வரை முதல் ஓவரைக்கூட வீசாமல் ரபாடா இருந்ததில்லை. ஆனாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 7 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மழை சென்டிமென்ட் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டைஇழந்து மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணியின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடுகிறதோ என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர், 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படுமா என்று நினைத்தனர். ஆனால், 75 நிமிடங்கள் தாமதத்துக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது. பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம் தோல்வி அடைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பாவெல் கூறுகையில் “கடைசி வரை போராடிய எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டும். நடுப்பகுதியில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது ரன் ஸ்கோர் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு ஆளாகினோம்,” என்றார். "பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 135 ரன்களையும் டெபெண்ட் செய்ய முடியும் என்று போராடினர். தரவரிசையில் 9வது இடத்தி்ல் இருக்கும் அணிக்கும், 3வது இடத்தில் இருக்கும் அணிக்கும் இடையிலான மோதல் சிறப்பானதாக இருந்தது. கரீபியன் வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது, தொடர்ந்து குழுவாக செயல்பட்டு, மக்களை பெருமைப்படுத்த முயல்வோம். மக்களும் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இரவுவரை இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ஆன்டிகுவா மக்கள், கரீபியன் மக்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cxeeelk03m1o1 point- கொஞ்சம் ரசிக்க
1 point- கொஞ்சம் ரசிக்க
1 pointஇப்ப விளங்குதா ......யாழ் ஏன் 24 மணி நேரமும் தடையின்றி இயங்குது என்று.......! 😂1 point- ரணில் பக்கம் சாய்வதற்காக, மார்ஷல் பதவியா..?
இவருக்கு தமிழ் அரசிய்வாதிகளின் பேச்சை கேட்டு வாக்களித்து உயர்ந்த கவுரவம் ஈழ தமிழர்கள் பலர் ஏற்கெனவே வழங்கி கௌரவித்துவிட்டனர்.1 point- தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன்
அர்ச்சனை செய்பவர்களுக்கு தொழில்களை கட்டியெழுப்புவது என்பது கண்ணில் காட்ட கூடாது. இலங்கை தமிழ் பிரதேசங்கள் கள்ளக்குறிச்சியாக மாறினாலும் கவலை இல்லை.1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
நியாயமான கேள்வி, இதே கேள்வி எனது மனதிலும் எழுந்தது ஆனால் பினர் அந்த நிறுவனம் அமைக்கும் நில அளவு 46 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகையால் இது மிக பெரிய நிறுவனம் அதனால் அதன் அடிப்படை கட்டுமான செலவும் அதிகமாக இருக்கலாம், முன்னர் கூறிய சிறிய நிறுவனத்தின் வருவாய் 20 மில்லியன், அடிப்படை கட்டுமான நில அளவின்படி பார்த்தால், இந்த நில அளவில் இந்த பெரிய நிறுவனம் அமைக்க இந்திய பணப்பெறுமதியில் 60 கோடி தொடக்கம் 120 கோடி வரை செலவாகலாம், ஆனால் மிகுதிப்பணம் என்னவாகிறது என்பது நீங்கள் கூறுவது போல ஒரு சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது, இந்த விடயத்தில் எதையும் நாங்களாக ஊகித்து கருத்து வைப்பது சரியாக இருக்காது . (அத்துடன் எனக்கு இந்த விடயத்தில் பெரிதாக எதுவும் தெரியாது அத்துடன் இந்த கணிப்பு முன்பு செய்யப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தின் கணிப்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது, எனது கருத்து தவறாக இருக்கலாம்). மன்னிக்கவும் வார இறுதி வேலை இருந்ததால் நேரமின்ன்மையால் பதிலிட முடியவில்லை, ஆய்வு (research & Development), சந்தைப்படுத்தல் (Marketing) என்பவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ளது, உங்களுக்கு இதில் முன்னனுபவம் அல்லது துறைசார் புலமை உள்ளது என புரிகிறது, உங்கள் அனுபங்களை பகிர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்வு நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது, அதனுடைய நுணுக்கங்கள் நினைவில்லை, ஆனால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதிற்கான செலவு காலப்போக்கில் அதிகரிக்கும் என்பதாகவும், உறபத்தி செலவு குறைப்பு, புதிய சந்தை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு அலகு உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறல்கள் செய்யப்பட்டதாக நினைவுள்ளது.1 point- இலங்கை அரசை கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
இந்த வேலை நிறுத்தம் கால வரையறையின்றித் தொடர வேண்டும்…! எமது மீனவர்களும் வாழ வேண்டும்…!1 point- அதிசயக்குதிரை
1 point- போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
ஓம் தெரியும்......நோர்வே எரிவாயுவும் எரியும் எண்டு தெரியும். அமெரிக்கன் எரிவாயுவும் எரியும் எண்டு தெரியும். அந்த எரிவாயு எரியும் எண்டு தெரிஞ்ச பிறகும் என்ன கோதாரிக்கு இரண்டு எரிவாயு பைப் லைன் ரஷ்யாவிலை இருந்து ஜேர்மனிக்கு தாட்டவையள்? வாற வருசம் அல்லது அடுத்த வருசம் பொறுத்திருங்கள். கதைகள் மாறும் காலம். ஏனென்றால் இந்த உலகில் எரிசக்தி அரசியல் மிக மிக முக்கியமானது. அதை வைத்தே இந்த உலகம் இயங்கின்றது. அப்போது சந்திப்போம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 105 வாழ்த்துக்கள் முதலமைச்வரே. கருணாநிதி மாதிரி கதிரையைப் பிடித்துக் கொண்டிருக்காமல் @goshan_che மாதிரி விட்டும் கொடுக்கணும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் உருவாகிறார்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது நடக்காது நான் இருக்கிறேன் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் லொல்..............................1 point- கருத்து படங்கள்
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ம் ஏலுமெண்டா பிடித்து பாருங்கோ. நுணாவிலானும் கல்யாணியுமாக சேர்ந்து எவரையும் வரவிடாமல் காவல் காக்கிறார்கள். நீங்க போய் காவல் தெய்வங்களைக் குழப்ப வேண்டாம். குரூப் 1 இல் இரண்டு நல்லது இரண்டு பரவாயில்லை. ஆதலால் அவுசுக்கும் இந்தியாவுக்கும் வேலை சுலபமாக போய்விட்டது. குரூப் 2 இல் 4 அணிகளுமே சமனானவையாக இருக்கிறது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நுணாவிலானைத் துரத்திப் பிடிப்பதே என் நோக்கம் 🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தங்கையே! இதுபோதும் உங்கள் தலையும் எங்ளுடன் சேர்ந்து உருள.😆🤪1 point- கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
இலங்கை முஸ்லிம்கள் யோகாவை இன்னும் ஹராம் என நினைத்துக் கொண்டு இருப்பவர்கள். சவூதி கூட யோகா வகுப்புகள் மீதான தடையை எடுத்த பின்னும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதை ஹராம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். சவூதி, எகிப்து ஆகியன யோகா மீதான தடையை எடுத்ததுடன், அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இலங்கை சோனகர்கள் ஒரு புதினமான இனத்தினர்!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
குளிர்பான நிறுவனம் அமைக்க இவ்வளவு செலவாகுமா ? செய்தியில் உள்ளது போல் 230 கோடி தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக இருக்கலாம். பின்னர் அடுத்த வருடங்களில் குறிப்பிடப்படும் தொகை வேறு முதலீடுகளாக இருக்கலம். நேற்று Nvidia நிறுவனம் அப்பிள், மைக்ரோசொஃப்ட் நிறுவனங்களையெல்லாம் தாண்டி மூவாயிரம் பில்லியனுக்கு மேல் பங்குச் சந்தை மதிப்பைப் பெற்றது. ஆனால் இத்தனை பில்லியன் பெறுமதியான ஒன்றும் இந்த நிறுவனத்திடம் இல்லை. இதுபோல் வெளியாரின் முதலீட்டினை எதிர்வரும் வருடங்களில் 1400 கோடியாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கலாம்.1 point- மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சிவலிங்கம் தான் உள்ளது என்று கேள்வி. அதுவும் பீடம் இல்லாத சிவலிங்கம். சிவலிங்கம் அகிலத்தின் வடிவம். அதற்குப் பீடம் அமைத்து அசிங்கமாக்கியவர்கள் பார்ப்பனர்கள் தான்..!1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பூந்திலட்டிலை எம்மாம் பெரிய புழுகள் நுழைந்து துள்ளுதுகள் இதைப்பார்த்த பின்னரும் பார்சல் கட்ட மனம் வருமா? இதைச் செஞ்சவரை கொஞ்சத்தான் மனம்வருமா?? மூஞ்சைகழுவி எவ்வளவு நாளாச்சோ??? 😟 பெரிசு! நீங்கள் சாமியாரைத் தவறாக எண்ணவேண்டாம்!! சைனாவிலோ, கொரியாவிலோ நீங்கள் புலம்பெயர்ந்து இருப்பதாக அவர் பிழையாக எண்ணிவிட்டார்போல!!!.😳1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே.. ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ மூவருக்கும்!1 point- "திருந்தாத உள்ளம்"
0 points"திருந்தாத உள்ளம்" "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர். நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்! அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை. பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்? ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார். நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது! 'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார். தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார். 'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார். 'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர், 'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார். 'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார். 'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன். அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான். யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார். இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை. "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]0 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அல்லது இந்தியா இந்த இரண்டு அணிகளுக்கு நல்ல சர்ந்தப்பம் தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இரட்டை மகிழ்ச்சி இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக இந்திய அணிய தெரிவு செய்தேன் அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிடம் தோக்க கூடும் மிஸ்சில் ஸ்ராக் இரண்டு விளையாட்டில் விளையாட வில்லை காயம் போல............................0 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைக்கு அவுஸ்திரேலியாவும் வெளியே போனால் அவ்வளவுதான்!! மழை வேற வரும் என்று சொல்லுறாங்கள்!!0 points - நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.