Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38756
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2954
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/26/24 in all areas

  1. கருத்துப்படம் போட்டுவிட்டு அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் கருத்தாடலுக்கு நான் பதில் கொடுக்க வேண்டி வரும். அது இன்னும் ஒரு ஆக்கத்தை உருவாக்குவதற்கு எனக்கு சிரமத்தைத் தரலாம், நேர விரயத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் கூடுதலாக எனது கருத்துப்படங்களுக்கு நான் விளக்கம் அளிப்பதில்லை. தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு எனக்கு இல்லை. நகைச்சுவைக்காக எப்போதாவது கிறுக்குவது உண்டு. ஆனால் சீமான் விடயம் வேறு. அவர் எங்களது பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் பார்க்கிறார். அதைக்கூட விட்டுவிட்டுப் போய்விடலாம். எங்களது கடல் விவகாரத்தில் மூக்கை நுளைக்கும் போது என்னால் பேசாமல் இருக்க முடியாது. றோலர் மூலம் மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின் புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள். கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததால்தான் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிரம்மையை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வரும் இடங்களோ நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறை… போன்ற கடல் பகுதிகளாக இருக்கின்றன. தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், வீதிக்கு வந்து போராடுகிறார்கள், இந்திய, இலங்கை அரசுகளுக்கு அறிக்கை தருகிறார்கள். இங்கே சீமானின் பேச்சுக்கள், தமிழக மீனவர்களை உசுப்பேற்றி விடும் வகையில்தான் இருக்கின்றன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைக் காண்பித்து, “நான் இவரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவன். நெய்தல்படையை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன். ஆறு பேர் போகும் படகில் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ஏத்து. தொட்டால் தூக்கு…” என்றெல்லாம் பேசுகிறார். இங்கே பிரபாகரனைக் காட்டி ஈழத்தமிழர்களுக்கு சீமான் ஊறு செய்கிறார் என்பது வெளிச்சமாகவே தெரிகிறது. முன்பும் ஒரு தடவை கருத்தொன்றுக்கு எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். தமிழக அரசியலில் சீமான் என்ன செய்கிறார் என்பதோ மேடையில் தனக்கு வேண்டாதவர்களை ஏக வசனத்தில் அவர் பேசுவதோ, அவரது கடந்து வந்த அரசியல் பாதைகளோ எனக்குத் தேவையில்லாதது. ஈழத்து மக்களின் பிரச்சனைகளை வைத்து, அவர்களின் போராட்ட எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் பயன் படுத்தி அரசியல் நடாத்துவதும், ஈழத்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதும் தொடருமாயின் என்னால் முடிந்த சிறிய வேலையான சீமானுக்கு எதிரான கருத்துப்படங்கள் வரும். அது சிலருக்கு கசப்பாகவும் என்மேல் வெறுப்பையும் தரலாம். சீமானின் கட்சியைப்பற்றி என்னிடம் கருத்துக்கள் இல்லை. அவர் தனித்தோ அல்லது தம்பி தளபதி விஜய்யோடு சேர்ந்தோ ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானாலும் எனக்கு எந்தவித உணர்வுகளும் இருக்கப் போவதில்லை. தமிழகத் தலைவர்களாலும், முதலமைச்சர்களாலும் ஈழத்தமிழர்களது பிரச்சனைகளை முடித்து வைக்க முடியாது என்பதை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நிறைய ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வைத்து அவர்கள் தங்களது அரசியலைச் செய்யட்டும். எங்கள் ஈழ மீனவர்களுக்கு அவர்கள் துன்பம் செய்யாமல் இருக்கட்டும்.
  2. கேள்விகள் 67) க்கும் 70) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இறுதியாக வரும் அணியாக ஐக்கிய அமெரிக்கா அல்லது பங்களாதேஷைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. பங்களாதேஷ் - மூன்று பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா ஒரு புள்ளி வழங்கப்படுகின்றது. 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SL வீரப் பையன்26 SA சுவி BAN நிலாமதி SL குமாரசாமி SL தியா SL தமிழ் சிறி SL புலவர் ENG P.S.பிரபா SL நுணாவிலான் ENG பிரபா USA SL வாதவூரான் AFG ஏராளன் SL கிருபன் BAN ரசோதரன் BAN அஹஸ்தியன் SL கந்தப்பு SL வாத்தியார் SL எப்போதும் தமிழன் SL நந்தன் SL நீர்வேலியான் SL கல்யாணி WI கோஷான் சே SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PAK வீரப் பையன்26 PAK சுவி AFG நிலாமதி PAK குமாரசாமி PAK தியா SA தமிழ் சிறி PAK புலவர் AFG P.S.பிரபா PAK நுணாவிலான் AFG பிரபா USA AFG வாதவூரான் NZ ஏராளன் AFG கிருபன் NZ ரசோதரன் PAK அஹஸ்தியன் WI கந்தப்பு PAK வாத்தியார் PAK எப்போதும் தமிழன் PAK நந்தன் AFG நீர்வேலியான் PAK கல்யாணி NEP கோஷான் சே PAK கேள்விகள் 70) வரைக்குமான பதில்களின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 4 கந்தப்பு 110 5 சுவி 108 6 கோஷான் சே 108 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 கிருபன் 99 12 நந்தன் 99 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @பிரபா USA தொடர்ந்தும் முன்னணியில் நிற்கின்றார். அவருக்கு பின்னால் இரண்டு அமெரிக்கர்கள் மரதன் ஓட்டம் போல தொடர்ந்தும் வருகின்றனர். எனினும் @கந்தப்பு பலரை முந்திக்கொண்டு நான்காவது நிலை வரை முன்னேறியுள்ளார்! யாழ்களப் போட்டியில் யார் வெற்றி பெறக்கூடும்?
  3. கன்னிப்பிறப்பு கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல் (Parthenogenesis) எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா படிமுறையையும் குறிக்கும். கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள்,[ "Female Sharks Can Reproduce Alone, Researchers Find", Washington Post, Wednesday, May 23, 2007; Page A02] நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.[Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs"] பெரும்பாலான உயிரினங்களில் ஒரு ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து கரு உருவாகுகிறது. ஆண், பெண் உயிரணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கரு வளச்சியடைவைதன் மூலம் தான் புதிதாக ஓர் உயிரி ஜணிக்க முடியும். இதில் ஆண் உயிரினத்தின் துணையின்றிப் பெண் உயிரினமே கரு உருவாக்குவதை தன்கருவுறுவாதல் என்பர். உதாரணமாக குருட்டுப் பாம்பு எனும் புழுப் பாம்பு (Worm Snake) இனத்தில் ஆணே கிடையாது. பெண் மட்டும்தான் உள்ளது. பெண் பாம்பே தானாகக் கருவை உருவாக்கிக்கொள்ளும். மேலும் ஊர்வன வகைகளில் பெரும்பாலும் ஒருமுறை ஆணுடன் இணை சேர்ந்துவிட்டது என்றால் தங்களின் கருப்பாதையில் உள்ள குழாயில் விந்தணுக்களை நீண்ட காலம் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனக்குச் சாதகமான சூழல் வரும்போது கருசேர்ந்து முட்டைகளிட்டோ, குட்டிகள் ஈன்றோ புதிய உயிரை உருவாக்கும். ஊர்வனவற்றில் இது மிகவும் இயல்பானது. மேலும் தன் கருவுறுவாதல் எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற முதுகெலும்பு அற்ற உயிரினங்களில் இது இயல்பாக உள்ளது. கலவியற்ற இனப்பெருக்க வகைகள் 1] உயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission) 2] அரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding) 3] பதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction) 4] நுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis) 5] துண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation) 6] பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis) [பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் என்பது ஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழ்தலாகும் . இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம். கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.] உதாரணம்: ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை ஆண் முதலையின் துணை இல்லாமலேயே பெண் முதலை கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் முதல்முறையாக கோஸ்டா ரிகாவில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்றில் பதிவாகியுள்ளது. 99.9% மரபணு ரீதியாக தன்னைப் போலவே ஒரு கருவை இந்த பெண் முதலை உருவாக்கியுள்ளது. "தன் கருவுறுவாதல்" என்று அழைக்கப்படும் நிகழ்வு பறவைகள், மீன் மற்றும் பிற ஊர்வனவற்றில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் முதலைகளில் தற்போதுதான் முதன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பண்பு ஒரு பரிணாம மூதாதையரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்றும் எனவே டைனோசர்களும் சுய-இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ராயல் சொசைட்டி இதழான பயோலஜி லட்டர்ஸ்சில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. On human parthenogenesis [மனிதரில் கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்] Spontaneous parthenogenetic and androgenetic events occur in humans, but they result in tumours: the ovarian teratoma and the hydatidiform mole, respectively. with the creation of viable bi-maternal mice in the laboratory based on minor genetic interferences, raises the question of whether natural cases of clinically healthy human parthenotes have gone unnoticed to science?? சிறிய மரபணு குறுக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வகத்தில் சாத்தியமான இரு தாய்வழி எலிகளை [bi-maternal mice] உருவாக்கி இருப்பது, மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான மனிதனில் கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்களின் இயற்கையான நிகழ்வுகள் அறிவியலுக்கு கவனிக்கப்படாமல் போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது?? மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்ததை கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க . என்றாலும் இது உண்மையா ? கற்பனையா என்பதை அறிவியல் தீர்மானிக்கட்டும் அதே போல, மகாபாரதத்தில் கர்ணன்: குந்தி தன் திருமணத்திற்கு முன்னரே , அதாவது ஆணுடன் குடும்ப உறவு வைக்காமலே பெற்றவர் தான் கர்ணன் என்று கூறுவதைக் காண்க. அதற்கான காரணம் , எதோ கற்பனையில் புனையப்படுள்ளதை, அறிவியல் தீர்மானிக்கட்டும்
  4. 15 வருடங்களில் காலம் எப்படி மாறி விட்டது! எம் கடல்பரப்புகளில் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பறிப்பதில் முன்னுக்கு நின்ற இலங்கை கடற்படை இன்று வாழ்வாதாரத்தை காக்கின்றவர்களாக எம் மீனவர்களால் போற்றப்படும் ஒரு காலத்தில் நாம் வந்து நிற்கின்றோம். 15 ஆண்டுகளுக்கு முன் உடலில் குண்டைக் கட்டி தற்கொடை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை தமிழ் கடல் பரப்புகளில் இருந்து அகற்றிய அதே இனம் இன்று கடற்படை சிப்பாயின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவுக்கும் நிலையில் வந்து நிற்கின்றது. சிங்களமும், இந்தியமும், இவர்களுக்கு எடுபிடிகளாக இருக்கும் டக்ளஸ் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த 'இந்திய மீனவக் கொள்ளையர்களின்' அத்துமீறல்களை கட்டுப்படுத்த காத்திரமான செயல்களை செய்யாமல், திரைமறைவில் ஊக்குவிப்பதும் இதே நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான். காலம் எவ்வளவு கொடுமையானது.
  5. கவி அருணாசலத்தின் AI படங்களுக்கெல்லாம் இவ்வளவு பதில் எழுதி நேரத்தை விரயமாக்க வேண்டுமா? யாழ் களத்தில் சீமான் மீதான விமர்சனம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக வருகிறது. குழந்தையால்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். தமிழக மீனவர்களின் அத்துமீறலை சீமானுக்கெதிரான விடயமாக மாற்றும்போது மட்டுறுத்தினர் அதனைக் கண்டும் காணாமல் விடுகிறார்கள்.
  6. முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுப்பதில் இருந்து தொடங்க வேணும்.இங்குள்ள இறுக்கமான நடவடிக்கைகள் பற்றி சொன்னால் அங்குள்ளவர்கள் தாங்கள் ஏதோ பிரச்சனை இல்லாத நாட்டில் இருப்பது போலும் நாங்கள் எல்லா விடையங்களுக்கும் கஸ்ரப்பட வேன்டிய நிலையில் வாழ்வதாகவும் நினைக்கிறார்கள்.பலன் இப்படியான விபத்துக்கள்.பிலியானவர்களுக்கு அஞசலிகள்.
  7. உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லை.. நான் யாழை நோக்கித்தான் அந்த கேள்வியை முன்வைத்திருக்கிறேன்.. சீமான் மட்டும்தான் எங்களது பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறாரா?சீமான் பேசினால் மட்டும்தான் உங்களுக்கு அரசியல் லாபமா..? சீமானுக்கு முன்னாடியே பலவருடங்களில் இருந்து இன்றுவரை வைகோ, தொல்திருமாவளவன், திமுக, அதிமுக, ராமதாஸ்,வேல்முருகன்,ect.. செய்வதெல்லாம் தக்காளி தொக்கா..? சீமானுக்கு மட்டும்தான் யாழில் நக்கல் நையாண்டி கருத்துக்கள் கருத்துபடங்கள் வரும் அனுமதிக்கப்படுமா..? சீமான் என்று வந்தால் இங்கு பலருக்கு தமிழக அரசியலில் ஈடுபாடு வந்துவிடும் மற்றும்படி தமிழக அரசியலில் அவர்கள் நவதுவார்ங்களையும் பொத்திக்கொண்டு தீக்கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துவிடுவார்கள்.. லங்காபுவத்துபோல் பொய்யை மூலதனமாக்கி உங்கள் வெறுப்பை போகிறபோக்கில் அடித்து விட்டிருக்கிறீர்கள்.. யாழில் எழுதுபவர்கள் வாசிப்பவர்கள் பேபிகள் அல்ல.. கருத்துக்கள் இல்லாமல் தான் திரிக்கு திரி சீமானுக்கு படங்கள் வரைகிறீர்கள்.. நம்புகிறோம்.. இதுக்கு ஸ்டாலினுக்கு மோடிக்கு கருணாநிதிக்கு ஜெயலிதாக்கு வைகோவுக்கு, ராமதாசுக்கு, திருமாக்கு என்று தலா ஒவ்வொரு கருத்துப்படம் போட்டுவிடுங்கோ.. சீமானுக்கு அல்ல.. ஆட்சியில் இருந்தவர்கள் இருப்பவர்கள், பங்கெடுத்தவர்கள் பங்கெடுப்பவர்கள் இவர்களே.. ஆமியை அடித்த மீனவன் சீமான் உசுப்பேத்திதான் நான் அடிச்சேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா? அவனுக்கும் அந்த ஆமிக்காரனுக்கும் என்ன தள்ளுமுள்ளோ..? யாருக்கும் ஏன் என்று தெரியாது ஊரில் முன்பு இயக்கம் றோட்டில் ஆமிக்கு குண்டெறியும்போது கண்டபாட்டுக்கு சுட்டுவிட்டு செத்த அப்பாவி மக்களை குண்டெறிந்த புலிகள் என்று சொல்வதுபோல் இருக்கு உங்கள் உருட்டும் பிரட்டும்.. எதோட எதை கோத்து விடுறியள் உங்கள் வெறுப்பை நியாயப்படுத்த.. ஒரு சிங்கள ஆமி செத்ததுக்கு எவ்வளவு ரத்தம் துடிக்குது உங்களுக்கு.. ஒரு சகதமிழனுக்கு நக்கல் நையாண்டி.. ம்ம்ம்… காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது.. எப்பவுமே பல்வீனமானவர்களைத்தான் எல்லோரும் நக்கலடிப்பார்கள்.. ஒரு வகுப்பில் கூட ஏழைமாணவன் அல்லது படிப்பு கொஞ்சம் குறைவான மாணவனைத்தான் எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.. இதுவே அவனிடம் பணம் இருந்தால் அல்லது ஆஜானபாகுவாக இருந்தால் மூச்சும் காட்டமாட்டார்கள்..இது மனித இனத்தின் உளவியல்.. இங்கு யாழிலும் பலர் ஆட்சியில் இருந்த இருக்கும் கட்சிகளை விட்டு விட்டு சீமானை பிடித்து தொங்கும் காரணமும் அதுதான்.. காலம் மாறும் அப்போ சந்திப்போம்..
  8. வாகனம் பழுது பட்டு நின்றால்... அந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மேலே காட்டியபடி எச்சரிக்கை முக்கோணம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அதனை இவர்கள் பின்பற்றி இருந்தால் மூன்று உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  9. நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற நாடுகள் தோற்றபோது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் 5 க்கு முட்டை வாங்கினேன். அவுஸ்திரேலியாவும் தோற்றுவிட்டது. மறுபடியும் கனக்க முட்டைகள் கிடைக்கப்போகுது. 😀
  10. அப்ப‌டியா ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி.....................................
  11. ர‌சித் ஹான் த‌மிழிழ‌ க‌தைச்ச‌துக்காவ‌து நாளைக்கு அப்கானிஸ்தான் வெல்ல‌னும்🙏🥰.............................
  12. @குமாரசாமி கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ ந‌ம்ம‌ட‌ தாத்தாவை காண‌ வில்லை😁 சாமி தாத்தா ச‌வுக்கிய‌மா..............................
  13. Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 12:18 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற 22 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இன்று வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187006
  14. 🤣...... நாங்களும் தான் இப்ப முட்டை முட்டையாக வாங்கிக் கொண்டிருக்கின்றோமே...... ஆனா, அதை எல்லாம் அடை வைச்சிருக்கிறம். அடுத்த களப் போட்டியில் பேடும், சேவலுமா இறங்கி ஓடும் பாருங்கோ..........🤣. இன்னும் நாலு நாளில நாங்க நொந்து போகக் கூடாது என்றால், ஆப்கான் கோப்பையை வெல்ல வேணும்.... எனக்கு அந்த ஆப்கான் கோச் மேல நல்ல நம்பிக்கை இருக்குது..... அவர் கிரிக்கெட்டை தாண்டியும் யோசிக்கிறார்...... ஆடல், பாடல், ஆவேசம், நடிப்பு என்று வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.......😜.
  15. வளவன், நான் இது தொடர்பாக தமிழ் மீனவர்களைக் குறை கூறியுள்ளேனா? இலங்கை, இந்திய, மற்றும் தமிழக அரசுகள் இந்த பிரச்சனையை தீர்க்க காத்திரமான செயற்பாடு எதையும் செய்வதில்லை. அத்துடன் திரை மறைவில் இதனை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். இந்த நிலையை தோற்றுவிக்க காரணம் என்னவென்று பெரிதாக ஆராயக் கூடத் தேவையில்லை. எப்படியாவது தமிழக மீன் கொள்ளையர்களையும் எம் தாயக மீனவர்களையும் மோதல் நிலையிலேயே வைத்து இருப்பது அவர்களிற்கு தேவையானது. இதன் மூலம் தமிழகத்துடனான தாயக மக்களின் உறவில் சில ஆழமான கீறல்களை உருவாக்கி கொள்வது அவர்களுக்கு பல விதங்களில் அனுகூலமாக அமைகின்றது. இந்த நிலையைத் தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்த நிலையைத் தான் நான் கொடுமையான கால மாற்றம் என்று எழுதியுள்ளேன். நன்றி
  16. Ricky Ponting ஒன்றும் பிழையாக கூறவில்லைத் தானே.. அவர் விளையாடிய காலத்தில் Australia ஒரு பலமிக்க அணியாகத் தானே இருந்தது.. இப்போ எதோ கஷ்டகாலம் கொஞ்சம் தடுமாறினம்.. West Indiesம் கூட கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலம் உண்டு.. இப்ப பார்த்தா ஏதோ கொஞ்ம் விளையாடினம்.. அப்படி விளையாட்டில இதெல்லாம் சகஜம்😊 தோல்வி பரவாயில்லை ஆனால் யாரிடம் தோற்றோம் என்பதே பிரச்சனை. நாங்களே நொந்து போயிருக்கிறம்😔
  17. தீயா, வேலை செய்யணும் குமாரு... 😂
  18. இந்த விசைப்படகுகளெல்லாம் ஆளும் கட்சி பிரமுகர்களின் பினாமிகளுடையது என்று எல்லோருக்குமே தெரியும்போது இங்கு ஓரிருவருக்கு மாத்திரம்தான் கபித்தான் சொன்னமாதிரி ஒரே கால் உயருது!! என்ன செய்யிறது யாழ் களம் சிலருக்கு அறிவாளிகளென்று கொம்பு சீவி விட்டிருக்கிறது!!
  19. ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது. ஐசிசி உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியை, கிரிக்கெட் ஆர்வலர்கள் எப்படி பார்க்கின்றனர்? ஆப்கன் கிரிக்கெட் வரலாறு என்ன? 1839-ம் ஆண்டு ஆங்கிலோ- ஆப்கன் போரின் போது கிடைத்த இடைவெளியில் பிரிட்டன் துருப்புகள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுதான் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் கிரிக்கெட் போட்டியாகும். இருப்பினும், 1990 களின் நடுப்பகுதியில் தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் வேரூன்றத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் வளர்ந்த ஆப்கானியர்கள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆப்கன் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான படையினர் 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான் சேர்ந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபன்களின் கொடிக்கு பதிலாக, கருப்பு, சிவப்பு, பச்சை நிறம் கொண்ட கொடியை அணிந்தே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நஸீப் கான் என்பவரை ஆப்கன் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமித்தது. ‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/SACHIN TENDULKAR ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் டிம் மூடி,’’ வாவ், என்னவொரு போட்டி. விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வாழ்த்துக்கள்’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘’வாவ் ஆப்கானிஸ்தான். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது. என்னவொரு முயற்சி. இதைதான் முன்னேற்றம் என்பார்கள். வாழ்த்துகள்’’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வாழ்த்தியுள்ளார். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என பலரும் ஆப்கானிஸ்தானை வாழ்த்தியுள்ளனர். ’’தாலிபன்கள் அரையிறுதிக்கு நுழைந்து, உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. நவீன் உல்ஹக்கின் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் அதன் சிறந்த நிலையில் உள்ளது’’ என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றி கொண்டாட்டத்தில் ரஷித் கான் பாகிஸ்தானில் இருந்தும் வாழ்த்து முன்னாள் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல், ரஷித் கான் மற்றும் நவீன் உல்ஹக்கை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ’’அரையிறுதிக்கு நுழைந்த ஆப்கனுக்கு வாழ்த்துகள். அருமையான கிரிக்கெட். என்னவொரு சாதனை. பந்துவீச்சாளர்களின் அருமையான திறன்’’ என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபவாட் சவுத்ரி,’’ காபுல் மற்றும் கந்தகார் பாய்ஸ், உலகில் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.’’ என வாழ்த்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/czkk03x4ppno
  20. றோலர் மூலமான மீன்பிடிக்கு தடை செய்யப்பட்ட லைலா வலை என்ற வலையை பயன்படுத்தி ஆழங்குறைந்த பாக்குநீரிணைக் கடலின் அடி மடி வரை வழித்துத் துடைப்பதால் மீன் குஞ்சுகளில் இருந்து பவளப்பாறைகள் வரை அழிக்கப்படுகின்றது.
  21. அருமை, அருமை, அருமை! நீங்கள் சொல்வது மிகச் சரி ஐயா.
  22. இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது. இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்
  23. நன்றி ஐயா ....... உங்களைப் பார்த்தால் ஏதாகிலும் சிறு ஞாபகங்கள் வரக்கூடும் ........!
  24. ரஷ்யா ஒரு சிறுபகுதிதான் ஜரோப்பாவில் உள்ளது மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் உள்ளது.. பல ஆசிய பூர்வீக இனங்களை விழுங்கி உருவானதுதான் ரஷ்யா.. ரஷ்யா என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ரஷ்யர்கள்தான்.. ஆனால் அதுவல்ல நிஜம்.. ரஷ்யா பல ஆசிய மக்களின் முகங்களை விழுங்கி உருவாகி உள்ளது( நான் சொல்வது சப்பட்டை என்று நம்மாளுகள் சொல்லும் தென்கிழக்காசிய மக்கள்).(தமிழர்களை முழுங்கி உருவான சிறீலங்கா போல்) ஆக உண்மையில் ரஷ்யா ஜரோப்பாவா ஆசியாவா,,?
  25. கூட்டாளி முன்னுக்குபோய்க் கொண்டிருக்கிறார். கலைச்சு பிடியுங்கோவன் 😁
  26. வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.
  27. போய் விட்டு வந்து என்னவானது என்று சொல்லக் கூடியவற்றை சொல்லுங்கள். நலமே நடக்கும் என்பது என் நம்பிக்கை.....🙏. இங்கும் சிலரை இந்த நிலையில் பார்த்து இருக்கின்றேன். இது போகப் போக மிகவும் கொடிய நிலையாக மாறும். நினைவுகளுடன், உடல் உறுப்புகளும் அவற்றின் வழமையான தொழிற்பாடுகளை, இயங்கங்களை படிப்படியாக மறந்து விடும்........😔.
  28. கேள்விகள் 66) க்கும் 69) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் முதலாவதாக வரும் அணிகளாக இந்தியா அல்லது தென்னாபிரிக்காவைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும். இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இரண்டாவதாக வரும் அணிகளாக ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்தைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இந்தியா - 10 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தென்னாபிரிக்கா - நான்கு பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. இங்கிலாந்து - 10 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் WI IND வீரப் பையன்26 IND WI சுவி IND ENG நிலாமதி WI IND குமாரசாமி IND AUS தியா WI PAK தமிழ் சிறி IND WI புலவர் PAK NZ P.S.பிரபா ENG IND நுணாவிலான் PAK NZ பிரபா USA IND WI வாதவூரான் IND ENG ஏராளன் PAK ENG கிருபன் AUS IND ரசோதரன் WI IND அஹஸ்தியன் AUS IND கந்தப்பு IND ENG வாத்தியார் IND AUS எப்போதும் தமிழன் AUS IND நந்தன் PAK WI நீர்வேலியான் IND ENG கல்யாணி SA IND கோஷான் சே WI IND 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 2A - ? (3 புள்ளிகள்) #அணி 2B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் SA ENG வீரப் பையன்26 SL ENG சுவி IRL AUS நிலாமதி ENG NZ குமாரசாமி SA ENG தியா IND ENG தமிழ் சிறி ENG NZ புலவர் AUS IND P.S.பிரபா AUS WI நுணாவிலான் AUS IND பிரபா USA AUS SA வாதவூரான் SL AUS ஏராளன் AUS IND கிருபன் ENG PAK ரசோதரன் AUS NZ அஹஸ்தியன் ENG SA கந்தப்பு AUS SA வாத்தியார் WI SA எப்போதும் தமிழன் ENG SA நந்தன் AUS IND நீர்வேலியான் WI AUS கல்யாணி PAK NZ கோஷான் சே SA ENG கேள்விகள் 66) வரைக்கும் 68, 69) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 கந்தப்பு 110 4 ரசோதரன் 109 5 கோஷான் சே 108 6 சுவி 107 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 நந்தன் 99 12 கிருபன் 98 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78
  29. கேள்விகள் 65) க்கும் 68) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இந்தியா - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. தென்னாபிரிக்கா - 09 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. இங்கிலாந்து - 17 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் A1 B2 C1 D2 ஈழப்பிரியன் IND WI வீரப் பையன்26 IND WI சுவி IND ENG நிலாமதி IND WI குமாரசாமி IND AUS தியா PAK WI தமிழ் சிறி IND WI புலவர் PAK NZ P.S.பிரபா IND ENG நுணாவிலான் PAK NZ பிரபா USA IND ENG வாதவூரான் IND ENG ஏராளன் PAK ENG கிருபன் IND AUS ரசோதரன் IND WI அஹஸ்தியன் IND AUS கந்தப்பு IND ENG வாத்தியார் IND AUS எப்போதும் தமிழன் IND AUS நந்தன் PAK WI நீர்வேலியான் IND ENG கல்யாணி IND SA கோஷான் சே IND WI 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் A2 B1 C2 D1 ஈழப்பிரியன் ENG SA வீரப் பையன்26 ENG SL சுவி IRL AUS நிலாமதி ENG NZ குமாரசாமி ENG SA தியா IND ENG தமிழ் சிறி ENG NZ புலவர் IND AUS P.S.பிரபா AUS WI நுணாவிலான் IND AUS பிரபா USA AUS SA வாதவூரான் AUS SL ஏராளன் IND AUS கிருபன் PAK ENG ரசோதரன் AUS NZ அஹஸ்தியன் ENG SA கந்தப்பு AUS SA வாத்தியார் WI SA எப்போதும் தமிழன் ENG SA நந்தன் IND AUS நீர்வேலியான் AUS WI கல்யாணி PAK NZ கோஷான் சே ENG SA கேள்விகள் 65) வரைக்கும் 68) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 115 2 ஈழப்பிரியன் 109 3 ரசோதரன் 109 4 கந்தப்பு 105 5 கோஷான் சே 103 6 சுவி 102 7 எப்போதும் தமிழன் 100 8 நந்தன் 99 9 குமாரசாமி 98 10 கிருபன் 98 11 நீர்வேலியான் 97 12 தமிழ் சிறி 96 13 நிலாமதி 93 14 P.S.பிரபா 93 15 அஹஸ்தியன் 93 16 வீரப் பையன்26 92 17 வாதவூரான் 92 18 வாத்தியார் 92 19 ஏராளன் 89 20 தியா 86 21 புலவர் 80 22 கல்யாணி 79 23 நுணாவிலான் 78
  30. ஆரம்ப துடுப்பாட்டத்தைப் பார்க்க 10 ஓவர்களில் வென்று அரையிறுதிக்கு போவார்கள் போல இருந்தது. அப்புறமா நாங்களும் போக மாட்டோம்.உங்களையும் விட மாட்டோம் என்று தான் விளையாடினார்கள். ஆனாலும் ஆப்கான் ஏதோ எல்லாம் பண்ணி வென்றுவிட்டது. ஆப்கான் கோச் கதவெல்லாம் அடித்து சாத்தி வெளியேறினார். திரும்ப வந்து கையைக் காட்டினார் கீப்பருக்கு பக்கத்தில் நின்றவன் விழுந்து துடித்தான். இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள். நொண்டி நொண்டி வந்தவர் ஓடிஓடி பந்து வீசினார். எல்லாமே ஒரு குறளிவித்தை மாதிரி இருந்தது. அவுஸ் கவிழ்ந்ததோட அவரும் கவிழ்ந்திடுவார். அவுசை கன பேர் நம்பியிருந்தவை. முழுசிக் கொண்டிருக்கிறார்கள். பையன் வியாளனுடன் இந்தியா மூட்டைகட்ட அவரும் சரி. மேற்கிந்திய தீவுகள் போனதோட நாங்க கவிழ்ந்ததை யாரிடமும் சொல்லிடாதேங்கோ. அடபாவி முதலே சொல்லியிருந்தா பிபி க்கு குளிசை போடமல் விட்டிருக்கலாம்.
  31. நீங்க இருக்க வேண்டியது இங்க. Ruban Kamsi
  32. இன்றைய இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மெதுவான ஆடுதளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக DLS முறையில் குறிக்கப்பட்டது. எனினும் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்த லிற்றன் டாஸைத் தவிர அனைவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் வெற்றி, அவர்களுக்கு அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் தகுதியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் (DLS method) வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது. சுப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 109 2 ரசோதரன் 107 3 ஈழப்பிரியன் 103 4 கந்தப்பு 99 5 சுவி 98 6 நந்தன் 97 7 கோஷான் சே 97 8 கிருபன் 94 9 எப்போதும் தமிழன் 94 10 நீர்வேலியான் 93 11 குமாரசாமி 92 12 தமிழ் சிறி 92 13 நிலாமதி 89 14 P.S.பிரபா 89 15 வீரப் பையன்26 88 16 வாதவூரான் 88 17 வாத்தியார் 88 18 அஹஸ்தியன் 87 19 ஏராளன் 85 20 தியா 82 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 முதல் மூன்று நிலைகளிலும் கடைசி நான்கு நிலைகளிலும் மாற்றமில்லை!
  33. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் நெருப்படி விளாசலான 41 பந்துகளில் 92 ஓட்டங்களுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 76 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தாலும், பிற துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து ஆடாததால், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பிறருக்குப் புள்ளிகள் கிடையாது. 51வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 107 2 ரசோதரன் 105 3 ஈழப்பிரியன் 101 4 சுவி 98 5 கந்தப்பு 97 6 கோஷான் சே 97 7 நந்தன் 95 8 நீர்வேலியான் 93 9 குமாரசாமி 92 10 கிருபன் 92 11 எப்போதும் தமிழன் 92 12 தமிழ் சிறி 90 13 P.S.பிரபா 89 14 வாதவூரான் 88 15 வாத்தியார் 88 16 நிலாமதி 87 17 அஹஸ்தியன் 87 18 வீரப் பையன்26 86 19 ஏராளன் 85 20 தியா 80 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!
  34. ஆட்டோவில் பெரிய குளிர்சாதனப் பெட்டி கொண்டு போகும் திறமை.
  35. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது. 49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 105 2 ரசோதரன் 103 3 ஈழப்பிரியன் 97 4 சுவி 96 5 கோஷான் சே 95 6 கந்தப்பு 93 7 நந்தன் 93 8 நீர்வேலியான் 91 9 கிருபன் 90 10 எப்போதும் தமிழன் 90 11 P.S.பிரபா 89 12 குமாரசாமி 88 13 தமிழ் சிறி 88 14 வாத்தியார் 88 15 அஹஸ்தியன் 87 16 வாதவூரான் 86 17 நிலாமதி 85 18 வீரப் பையன்26 84 19 ஏராளன் 83 20 தியா 80 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 73
  36. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவில் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி அடித்தாடமுயன்று விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன . சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. 47வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 99 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கோஷான் சே 93 6 கந்தப்பு 91 7 நந்தன் 89 8 நீர்வேலியான் 89 9 கிருபன் 88 10 வாத்தியார் 88 11 எப்போதும் தமிழன் 88 12 P.S.பிரபா 87 13 குமாரசாமி 86 14 தமிழ் சிறி 86 15 அஹஸ்தியன் 85 16 வாதவூரான் 84 17 நிலாமதி 83 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 80 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  37. 🤣....... நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜 நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.
  38. கிரிக்கட் விற்பன்னர் பையனுக்கும் 12 புள்ளிகள் எனக்கும் கடைசியாய் வந்த கோஷானுக்கும் 12 புள்ளிகள்.என்னப்பா நடக்கது இங்கே!
  39. 🤣......... ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......
  40. ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”. “தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். 1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேளையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ” தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டோம். 2: முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டோம். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.) 3: வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடலங்கள் வந்த போது பலவற்றில் அடையாளத்தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தி னூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் எம்மால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் உடலங்களை எம்மால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்ப ங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்வி களை சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அணைத்துக் கொண்டோம். இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட போது இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழ தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப் படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடை யது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாள ங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை கொடுத்து மனவேதனையை உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டார். இவ்வாறாக எங்கள் உணர்வுகளோடும் உதிரத்தோடும் ஒன்றிவிட்ட தமிழீழ தாயக மீட்பு போரில் வீரச்சாவடைந்த இந்த உன்னதமானவர்களை அடையாளப்படுத்தும் சொல்லாடலை ஒரு கட்டுரைக்காக நினைவு படுத்திய போது அதை மறந்து தவித்த மருத்துவ போராளி ஒருவர் என்னிடம் கேட்க நான் என் போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வேறு போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப என்று எம் நினைவுக்கிடங்கை கிளறி பார்த்து அதை உறுதிப்படுத்தி கொள்ள கிட்டத்தட்ட 25 பேருடைய நினைவகங்களை தேட வேண்டிய தேவை எழுந்தது. இது தமிழீழ தேசத்தை நேசித்த / நேசிக்கும் எமக்கு ஆரோக்கியமானதல்ல. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுத முனைகள் மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையில் இந்த புனிதமான சொல்லாடல் கூட நினைவில் இருந்து மறைந்து போய்விட்டது என்றால் எதிர்காலத்தில் எமது விடுதலைப்போராட்டம் என்று ஒன்று நடந்தது என்பதையும் எம் வீரசெம்மல்களின் உயிர் தியாகங் களையும் எம் மக்களின் வலிகளையும் எதிரியின் இனவழிப்பையும் எம்மால் எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? எம் இளைய தலைமுறைக்கு அல்லது அடுத்த தலைமுறைக்கு எம் மீது திணிக்கப்பட்டு எம்மால் எதிர்கொள்ளப்பட்ட இந்த போரின் வடுக்களை எவ்வாறு கூறப்போகிறோம்? அவர்களுக்கு எங்கள் தியாகங்களை எவ்வாறு கூறப் போகிறோம்? என எழும் பல நூறு வினாக்களுக்கு விடையில்லை. அனைத்தையும் மீறி ஒரு பெரும் வினா எழுந்து நிற்கிறது. “நாம் அடுத்த தலை முறைக்கு எதை விட்டுச் செல்கிறோம்…?” இந்த இடத்தில் புலம்பெயர் அமைப்பு க்கள் மற்றும் ஈழப்படைப்பாளிகளுக்கு அன்பான வேண்டுகை ஒன்றையும் விட்டுச்செல்கிறேன். அன்பானவர்களே…! ஆண்டுதோறும் தங்களால் முன்னெடு க்கப்படும் “மாவீரர் நினைவேந்தல் ” நிகழ்வுகளில் தங்களால் காட்சிப் படுத்தப் படும் உணர்வுமிக்க கல்லறைகளாக இருக்கட்டும் திருவுருவப்படங்களாக இருக்கட்டும் பதாதைகளாக இருக்கட்டும் எந்த வடிவமாயினும் அந்த வடிவத்தில் “தியாகசீலம்” என்று ஒரே ஒரு பகுதியை உருவாக்கி மக்களுக்கு அது தொடர்பான தெளிவை கொடுங்கள். அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்தது என்பதை வரலாறாக கொடுங்கள். படைப்பாளிகளே: உங்கள் படைப்புக்களை நினைவுகள் சுருங்க முதல் எழுத தொடங்குகள் வரலாறாகி விட்டவர்களின் தியாகங் களை வரலாறாக்குங்கள் அந்த தியாக சீலர்களும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்கள். நன்றி – வி.இ. கவிமகன் https://www.uyirpu.com/?p=7211
  41. ---> jude prakash (ஜூட் பிரகாஷ்) எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்!
  42. பையா எனக்கு இந்தக் கேள்விக் கொத்தைப் பார்க்கவே தலை தானா சுத்துது......பிரியன் கூகுள் சீற்றால் பதிந்து இருக்கிறார் ..... எனக்கு அது கொஞ்சம் சிரமம்..... யாராவது சாதாரண கேள்விக் கொத்தில் பதியும்வரை பார்த்திருக்கிறேன்....... பின் நான் அதில் இருக்கும் அணிகளை அழித்து விட்டு எனது மண்டைக்குள் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து வைத்திருக்கும் அணிகளை இறக்கலாம் என்று இருக்கின்றேன்.......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.