Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்24Points38756Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்6Points3055Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்5Points16477Posts -
புலவர்
கருத்துக்கள உறவுகள்5Points5832Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/30/24 in all areas
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 127 2 ஈழப்பிரியன் 120 3 கந்தப்பு 119 4 குமாரசாமி 114 5 ரசோதரன் 113 6 நீர்வேலியான் 113 7 சுவி 111 8 வீரப் பையன்26 108 9 கோஷான் சே 108 10 தமிழ் சிறி 107 11 கிருபன் 107 12 நிலாமதி 104 13 வாத்தியார் 104 14 எப்போதும் தமிழன் 103 15 வாதவூரான் 100 16 அஹஸ்தியன் 99 17 நந்தன் 99 18 தியா 97 19 P.S.பிரபா 96 20 ஏராளன் 94 21 கல்யாணி 85 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இருந்து தொடர்ந்தும் முன்னணியில் நின்றும், வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @பிரபா USA க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @ரசோதரன் க்கும், கடைசி நாட்களில் முன்னிலைக்கு வந்த @கந்தப்புக்கும், @குமாரசாமி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கும், அதிலும் @ஈழப்பிரியன் ஐயா பேத்திக்கு நீச்சல் தடாகத்தில் நடந்த விபத்துக்கு மத்தியிலும் திரியில் தொடர்ச்சியாக கருத்துக்கள் வைத்ததற்கும், நன்றி பல.11 points
-
சம்பந்தர் காலமானார்
6 pointsதமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டிக்கு ஆட்களை தேடிப்பிடித்து சேரச் செய்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல! 70 பக்கங்கள் வரை நீளச் செய்ய ஓய்வில்லாமல் பதிவுகள் பல போட்ட @வீரப் பையன்26க்கு யாழ்களப் போட்டியின் Cheerleader 📣 விருது கொடுக்கப்படுகின்றது!4 points
-
சம்பந்தர் காலமானார்
3 pointsஅமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பலவித வேலைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியின் கேள்விக் கொத்தை தயாரித்து, உடனுக்குடன் புள்ளிகளை வழங்கிய @கிருபன் ஜீக்கும், போட்டியில் முன்னிலையில் வந்த @பிரபா, @ஈழப்பிரியன், @கந்தப்பு விற்கும்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றைய உறவுகளிற்கும்… போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன், @suvy ஆகியோருக்கும்… 1700 பதிவுகளுக்கு மேல், 70 பக்கம் தாண்டி பார்வையிட்ட 55,000 பார்வையாளர்களுக்கும், யாழ் களத்திற்கும் நன்றிகள். 🙂3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டுப் போட்டி என்றாலே முன்னின்று நடத்தி வேலைப்பளு மத்தியில் நேரம் ஒதுக்கி தரப்படுத்தி சிறப்பாக பதிவேற்றும் கிருபனுக்கு யாழ் களம் சார்பாக என் பாராட்டுக்களும் நன்றிகளும். போட்டிக் களத்தை உற்சாகமாக நேரலை வர்ணனை போல் தகவல் தரும் வீரப்பையன், பிரியன் ...ரசோதரன் ...குறும்பு கதை சொல்லும்குமார் சாமியார் ..மற்றும் கூட்டாளிகளுக்கு என் நனறிகளும் பாராட்டுக்களும் . வீரப்பையனின்..ஆடுகளத்தை சிறப்பிக்க அழைப்பு விடுவதும் கிருபனுக்கு அடுத்ததாக கவனமெடுப்பதும் சிறப்பானது. இனி வரும் காலங்களிலும் யாழ் களத்துக்கு போட்டிப் பதிவுகள் மூலம் உயிர்ப்பாக வைக்க வேணுமென பங்குபற்றியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். முதலிடத்தில் நிற்கும் USA பிரபாவுக்கு என் பாராட்டுக்கள். .3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி, வெற்றி, வெற்றி வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் ஈழப்பிரியன், பையன் மற்றும் கிருபனையே சேரும். வாதவூரானுக்கு பாராட்டுகள். எல்லா அணிகளையும் தொடர்ந்து கவனித்து வருபவராலேயே இது கணிக்கமுடியும்.3 points
-
குறுங்கதை 4 - நீர்க்கடன்
2 pointsநீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங்கள் அம்மாக்களுக்கு நீர்க்கடன் செய்யாதோர் அதைச் செய்ய இது ஒரு நல்ல இடமும், நேரமும் என்றனர். எனக்கு இந்த நடைமுறை முற்றிலும் புதியதாக இருந்தது. இங்கு இப்படி எதுவும் நான் இங்கு இருந்த காலங்களில் நடந்ததேயில்லை. அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் ஒரு தடவை, 84 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், இராணுவம் எங்கள் ஊரையும், அயல் ஊர்களையும் சுற்றி வளைத்தது. பல இளைஞர்களை இராணுவம் கைது செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருந்தது. கைது செய்து கொண்டு வந்தவர்களை அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் அரைச்சுவர்க் கட்டிடத்தில் ஒரு சுவரைப் பார்த்து முழங்காலில் இருக்க வைத்திருக்கின்றது. பின்னர் அவர்கள் எல்லோரும் அந்த இராணுவத்தால் சுடப்பட்டார்கள். இதில் ஒருவர், சுடப்படுவதற்கு முன் அல்லது சுடப்பட்ட பின், அன்று அங்கு எவருமே உயிர் தப்பாதபடியால் எது உண்மை என்று என்றும் தெரியப் போவதில்லை, ஓடிப் போய் தீர்த்தக் கடலில் விழுந்து இறந்திருந்தார். நாங்கள் போய் பார்க்கும் போது கடலின் நிறம் அதன் நீல நிறமாகவே இருந்தது. அது தன்னை உடனேயே சுத்தப்படுத்தி விட்டு, கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. தீட்டே இல்லாத கடல். புரோகிதர் ஒரு தர்ப்பையை என் விரலில் கொழுவி விட்டு, இன்னொன்றை என் இடுப்பு வேட்டிக்குள் செருகி விட்டார். அப்படியே கடலில் இறங்கி, கிழக்கே பார்த்து அம்மாவை நினைத்து கும்பிட்டு விட்டு, இடுப்பில் இருக்கும் தர்ப்பையை கடலில் விடச் சொன்னார். கங்கா, யமுனா, காவேரி என்று ஏதோ சொன்னார். ஒரே கூட்டமாக இருந்தபடியால், ஒதுங்கி ஒரு ஓரமாகவே இறங்கினேன். நிமிர்ந்தால் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தது. அம்மாவை எப்படி கும்பிடுவது என்று தெரியவில்லை. தோட்டங்களுக்குள்ளாலும், ஒழுங்கைகளுக்குள்ளாலும் என்னை துரத்திக் கொண்டு பள்ளிக்கூடம் வரை கொண்டு வந்து விட்டுப் போன அம்மாவின் முகம் மட்டும் தான் மனதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளும் அடி விழவேயில்லை. இடுப்பில் இருக்கும் தர்ப்பையை எடுத்து கடல் நீரில் விடும் நேரத்தில், அதே இடத்தில் அன்றொரு நாள் முகம் குப்புற ஒருவர் மிதந்து கொண்டிருந்தது ஞாபகமும் வந்தது. அந்த நினைவையும் கலைக்காமல், அப்படியே தர்ப்பையை கடலில் விட்டேன்.2 points
-
சம்பந்தர் காலமானார்
2 pointsமுள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை. இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை. எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை. இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான்.2 points
-
சம்பந்தர் காலமானார்
2 points1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியனை முந்த முடியவில்லையே என்று அடித்திட்டுப் படுத்தவர் இன்னும் எழும்பவில்லை.2 points
-
சம்பந்தர் காலமானார்
2 pointsசம்பந்தர் மட்டுமல்ல இதுவரை தமிழர் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே தோல்வியடைந்தவர்களாகவே மரணத்தை தழுவினர் என்பதே வரலாறு. அந்த வரிசையில் இப்போது சம்பந்தர். அன்னாரிர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியை அழகாக நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற பிரபா (USA),முன்னிலையில் இருந்த ஈழப்பிரியன், யசோதரன் , குமாரசாமிக்கும் வாழ்த்துகள். கிருபன் நடாத்திய இரண்டு போட்டிகளிலும் எனக்கு 3 இம் இடங்கள் 😄 .2 points
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!
*இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் ஜூலை 2024* இலங்கை வம்சாவளி வேட்பாளர்கள் *கன்சர்வேட்டிவ் கட்சி* *ரணில் ஜெயவர்தன* ஹாம்ப்ஷயர் வட கிழக்கு 2015 முதல் எம்.பி *கவின் ஹரன்* Southend மற்றும் ரோச்போர்டில் தெற்கு *தொழிலாளர் கட்சி* *உமா குமரன்* ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் வில் *கிறிஷ்னி ரெஷஹரன்* சட்டன் மற்றும் சீம் *தாராளவாத ஜனநாயகவாதிகள்* *கமலா குகன்* ஸ்டாலிபிரிட்ஜ் மற்றும் ஹைட் *பசுமைக் கட்சி* *சரித் குணவர்தன* சவுத்கேட் மற்றும் வூட்கிரீன் *நரணி ருத்ரராஜன்* ஹேம்னர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் *சீர்திருத்த UK* *மயூரன் செந்தில்காந்தன்* எப்சம் மற்றும் ஈவெல் *லூசியன் பெர்னாண்டோ* ஹேஸ்டிங்ஸ் மற்றும் ரை2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் மூவராய் வந்த பிரபா usa , பிரியன்,கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்....... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் , கருத்துக்களும் நகைசுவைகளுமாய் கலகலப்பாக்கிக் கொண்டிருந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி......! 👍 கிருபன் .....ம் சொல்லி வேலை இல்லை .....சூப்பர்.........! பையனுக்கு கிருபன் குடுத்த பரிசு சிறப்பானது....... அப் பரிசைப் பெறுவதற்கு அவர் தகுதியானவர்தான் .......!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றியாளர் முதல்வர் @பிரபா USAவுக்கும். தொடர்ந்து முன்னிலை வகித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு போட்டியை மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில்திறம்பட நடாத்தி அணிகள் குழம்பிய நிலையில் புள்ளிகள் போடும் முறையில் தீர்மானம் எடுத்து போ;டடி முடிவுகளையும் தரவரிசைகளையும் பலசிரமங்களுக்கு மத்தியில் உடனுக்குடன் அறிவித்த @கிருபன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போட்டிகளுக்கு ஆட்களைச்சேர்பதற்கு ஊக்கமளித்து போட்டியை சுவராஸ்யமாக நடத்துவதற்க அதிக கருத்துகளைப்பதிவு செய்து பேட்டியைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற அன்புத்தம்பி பையனுக்கு@வீரப் பையன்26வாழ்த்துகள். அவருக்கு போட்டியின் சிறந்த கருத்தாளர் விருதை வழங்குமாறு கிருபன்ஜிக்கு சிபாரிசு செய்கிறேன்.2 points
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
2 pointsரோகித் சர்மா நேற்று அணிய வழி நடத்துவதில் பல தவறுகள் விட்டவர்.....................சுழல் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அதிக ரன்ஸ்ச விட்டு கொடுக்க அவர்களிடமே திருப்ப திருப்ப பந்தை கொடுக்கிறார் எனக்கு ரோகித் சர்மாவின் நடவடிக்கை வெறுப்பை வர வைச்சது பாண்டியாவின் முதலாவது ஓவரில் மூன்று டொட் பந்தை போட்டார் அப்ப புரிந்து விட்டது இது வேக பந்துக்கு சாதகமான பிச் என்று சிவம் டூவி இன்னொரு வேக பந்து வீச்சாளர் கைவசம் இருக்க அவருக்கு சர்மா ஒரு ஓவரும் போட விட வில்லை மூன்று வேக பந்து வீச்சாளர்களால் தான் இந்தியா வென்றது அதோட கடசி ஓவரில் மில்லர் தூக்கி அடிச்ச பந்தை சூரிய குமார் ஜடாவ் அருமையான கைச் பிடிச்சார் அந்த கைச் பிடிச்ச படியால் தான் இந்தியாவால் கடசியில் வெல்ல முடிந்தது முதலாவது பந்து 6க்கு போய் இருந்தால் பதட்டம் அதிகரித்து இருக்கும் கடசியில் பாண்டியா துல்லியமாய் போட்டு அணிக்கு வெற்றிய தேடி கொடுத்தார்..................................2 points
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இல் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை 34 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும் விராட் கோலியின் நிதானமான அரைச் சதத்தினதும், அக்சர் படேல், சிவம் டுபேயினதும் அதிரடி ஆட்டங்களாலும் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இரு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், ஓட்ட விகிதத்தில் பின்தங்கவில்லை. ஹென்றிக் க்ளாஸனின் நெருப்படியான அரைச் சதத்துடன் ஒரு கட்டத்தில் 30 பத்துகளில் 30 ஓட்டங்கள் வெற்றி இலக்காகி இருந்தது. எனினும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின், துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2024 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் இங்கிலாந்தின் வெற்றியை சரியாகக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது! இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 குமாரசாமி 114 4 ரசோதரன் 113 5 கந்தப்பு 113 6 சுவி 111 7 நீர்வேலியான் 110 8 கோஷான் சே 108 9 தமிழ் சிறி 107 10 கிருபன் 107 11 வீரப் பையன்26 105 12 நிலாமதி 101 13 எப்போதும் தமிழன் 100 14 நந்தன் 99 15 வாத்தியார் 98 16 வாதவூரான் 97 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?2 points
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கீழ நிண்ட நான் எப்பிடி கிடு கிடுவெண்டு உங்களுக்கு கிட்ட வந்தனான் பாத்தியள் தானே. ஏனெண்டால் கணிப்பு அந்தமாதிரி.....😎 அடுத்த போட்டியில அடி தூள் இடி மின்னல்.....அப்ப சந்திப்பம்.1 point
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
நீங்கள் நகைசுவையாக இப்படி கூற கந்தையா அண்ணா வந்து நகைசுவையாக மனிதர்களை அழிக்கும்சர்வாதிகரிகளையும் இனவாதிகளிடமும் உங்களுக்குள்ள கவர்சிக்கு காரணம் அவர்கள் மக்கள் தொகையினை குறைப்பதால் உங்களுக்கு அவர்களில் கவர்ச்சி உள்ளது என கூறிவிடுவார்😁.1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point
- குறுங்கதை 4 - நீர்க்கடன்
1 pointஏதோ ஆட்டுப் பாலை குடிக்கிற மாதிரி ஆலம் பாலை குடிக்கப் போகிறேன் என்று சொல்றீங்க..... அது பால் இல்லைங்க....... கல்லால் குத்தி அப்படியே காய விடவேண்டும்.........பேசாம ஒரு சூயிங்கம் பக்கற்றை வாங்குங்கோ.........🤣.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரிப்பீட்டட் ஆடியன்சஸ் கொஞ்சம் அதிகம் தான்........ நீங்களும், பையன் சாரும், நானும் சேர்ந்தே ஒரு 30,000 விசிட்ஸ் வரும் போல..............😜.1 point- பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் 😂 இந்தியாவின் மக்கள் தொகையை பெருக்கி பெருக்கி மக்கள் வாழ்வதற்கு கட்டங்கள், வீடுகள், உணவு , குடிநீர் பற்றா குறையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய கொள்கை மீது கந்தையா அண்ணாவுக்கு ஒரு கவர்ச்சி உண்டு.1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இங்கிலாந்தும் இன்றைக்கு வெளியயே போக இல்லை 😄 கால் இறுதி ஆட்டத்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து 2 - 1 சிலோவாக்கியா இது வரை ஸ்பெயின் 1 - 1 யோர்ஜியா1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி போட்டி முடிந்து ஒரு நாள் ஆகி விட்டது 4ம் இடத்தை பிடிச்ச சாமி தாத்தா தனது சந்தோஷத்தை இன்னும் வெளிப்படுத்த வில்லை ஹா ஹா😁..........................1 point- சம்பந்தர் காலமானார்
1 point- ரி20 உலக சம்பியனானது இந்தியா
1 pointராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார். இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது. டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo1 point- 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தபின், ஒன்றாகக் கருணைக்கொலை செய்துகொண்ட தம்பதி - நெகிழ்ச்சிக் கதை
படக்குறிப்பு,ஜான் (70) மற்றும் எல்ஸ் (71) இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், லிண்டா பிரஸ்லி பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூன் 2024, 10:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இந்த கட்டுரையில் மரணம் குறித்த விவரணைகள் உள்ளன. அவை சிலரைச் சங்கடப்படுத்தலாம்.] தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என்கின்றனர். இந்த அரிதான சம்பவம் அங்கு சட்டப்பூர்வமானது தான். ஒவ்வொரு ஆண்டும், அதிகமான டச்சு தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தானாக முன்வந்து இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜான் மற்றும் எல்ஸ் வாழ்ந்துவந்த வாகனம் நெதர்லாந்தின் வடக்கே ஃப்ரைஸ்லேண்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரிய ஒளியில் கடற்கரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயணங்களை விரும்பும் தம்பதிகள், அவர்களது திருமண வாழ்க்கையின் பெரும்பகுதியை மோட்டார் ஹோமில் அல்லது படகுகளில் கழித்தனர். நான் அவர்களைச் சந்திக்கும்போது, ஜான் மகிழ்ச்சியாகத் தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார். "நாங்கள் ஒரு சமயம் கற்களின் குவியல் போன்று இருந்த வீட்டில் வாழ முயற்சித்தோம், ஆனால் அது வேலை செய்யவில்லை," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். 70 வயது ஜான், அவரது வாகனத்தின் டிரைவிங் சீட்டில் ஒரு காலை அவருக்குக் கீழே வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இதுவே அவரது தொடர்ச்சியான முதுகு வலியைப் போக்க ஒரே வழியாகும். 71 வயதான அவரது மனைவி எல்ஸ், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வாக்கியங்களை உருவாக்குவதே கடினமாக உள்ளது. படக்குறிப்பு,ஜான் தனது மகனுடன் 1982 இல் எடுத்த புகைப்படம் "இது நன்றாக இருக்கிறது" என்று தனது உடலை சுட்டிக்காட்டி சொல்லும் எல்ஸ், தன் தலையை சுட்டிக்காட்டி "இது மோசமான நிலையில் இருக்கிறது,” என்றார். ஜான் மற்றும் எல்ஸ் அவர்கள் படித்த மழலையர் பள்ளியில் சந்தித்த பிறகு நீண்டகால நண்பர்களாக ஆனார்கள். ஜான் தன் இளமை காலத்தில் நெதர்லாந்தின் தேசிய இளைஞர் அணிக்காக ஹாக்கி விளையாடினார், பின்னர் விளையாட்டுப் பயிற்சியாளராக ஆனார். எல்ஸ் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இருப்பினும், அவர்களை ஒன்றிணைத்தது படகுகள் மற்றும் தண்ணீரின் மீதான அவர்களின் பரஸ்பர காதல் தான். பட மூலாதாரம்,ELS VAN LEENINGEN படக்குறிப்பு,1968 இல் எல்ஸ் புகைப்படம், பிற்காலத்தில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டார் 'இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்' ஒரு இளம் ஜோடியாக அவர்கள் ஒரு படகில் வசித்து வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு சரக்குப் படகை விலைக்கு வாங்கி நெதர்லாந்தின் உள்நாட்டு நீர்வழிகளைச் சுற்றிப் பொருட்களைக் கொண்டு செல்லும் வணிகத்தை உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கிடையில், எல்ஸ் அவர்களின் ஒரே மகனைப் பெற்றெடுத்தார் (அவர் மகனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்). அவர் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும்படியான போர்டிங் பள்ளியில் படித்தார். வார இறுதி நாட்களை தனது பெற்றோருடன் கழித்தார். பள்ளி விடுமுறை நாட்களில், ஜான் மற்றும் எல்ஸ் தங்கள் குழந்தை படகில் இருந்தபோதும், ரைன் ஆற்றங்கரை அல்லது நெதர்லாந்தின் தீவுகள் போன்ற சுவாரசியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிரீதியான பயணங்களைத் தேர்வு செய்தனர். 1999-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுக் கப்பல் தொழில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஜான் பத்து வருடங்களுக்கும் மேலாக அதிக உழைப்பாளியாக வேலை செய்து வந்தார். இதனால் அவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அவரும் எல்ஸும் நிலப்பகுதிக்குக் குடியேறினர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஒரு படகில் வசிக்கத் தொடங்கினர். அது பொறுக்க முடியாத அளவுக்கு முடியாத அளவுக்கு ஆனதும், அவர்கள் தங்கள் விசாலமான கேம்பர்வேனை (வீடு போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு நான்கு சக்கர வாகனம்) வாங்கினார்கள். ஜானுக்கு 2003-இல் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை சரியாகவில்லை. அவரால் வேலை செய்ய இயலவில்லை. மேலும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். எல்ஸ் கற்பிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தார். சில நேரங்களில் அவர்கள் கருணைக்கொலை பற்றி உரையாடினர். வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் விவாதித்த தருணங்கள் இருந்தன. ஜான் தனது உடல் ரீதியான தடைகளைக் கருத்தில் கொண்டு நீண்ட காலம் வாழ விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் விளக்கினார். இந்த நேரத்தில்தான் தம்பதியினர் 'NVVE' என்னும் நெதர்லாந்தின் 'இறப்பதற்கான உரிமைகள்' அமைப்பில் சேர்ந்தனர். "நீங்கள் நிறைய மருந்துகளை உட்கொண்டால், நீங்கள் ஒரு நடைபிணமாக போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்," என்று ஜான் என்னிடம் கூறினார். "எனவே, என்னுடைய உடல் உபாதைகள் மற்றும் எல்ஸின் நோயால், இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்," என்றார். "முடித்து கொள்ள நினைக்கிறேன்" என்று ஜான் குறிப்பிட்டது அவர்களின் வாழ்க்கையை! 2018-இல், எல்ஸ் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அப்போது டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தது. ஆனால் மருத்துவரைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டார். ஒருவேளை எல்ஸ் தனது தந்தையின் நிலை மோசமடைந்து, அல்சைமர் நோயிலிருந்து காலமானதைக் கண்டதால் அந்த நோய்க்கு சிகிச்சை பெற விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அறிகுறிகள் அதிகமாகி, புறக்கணிக்க முடியாத ஒரு சூழல் வந்தது. இரட்டை கருணைக்கொலை நவம்பர் 2022-இல், டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, எல்ஸ் தனது கணவரையும் மகனையும் விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனை அறையை விட்டு வெளியேறினார். "எல்ஸ் மிகவும் கோபமாக இருந்தார்,” என்று அந்த தருணத்தை ஜான் நினைவு கூர்ந்தார். எல்ஸ் தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை அறிந்த பிறகு, அவரும் ஜானும் தங்கள் மகனுடன் இரட்டை கருணைக்கொலை பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இருவரும் ஒன்றாக இறக்க திட்டமிட்டனர். நெதர்லாந்தில், கருணைக்கொலை மற்றும் தற்கொலை செய்துகொள்வது சட்டப்பூர்வமானது. நெதர்லாந்தில், நோயாளி தானாக முன்வந்து கோரிக்கையை விடுத்து, அவர்களின் உடல் அல்லது மன துன்பம் 'தாங்க முடியாதது' என்று மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டால், அது குணமடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், தற்கொலை மற்றும் கருணைக்கொலை அங்கு அனுமதிக்கப்படுகிறது. தற்கொலைக்கு உதவி கேட்கும் ஒவ்வொரு நபரும் இரண்டு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், இரண்டாவது மதிப்பீடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது. டிமென்ஷியா நோயாளிகளுக்குக் கருணைக்கொலை 2023-ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் 9,068 பேர் கருணைக்கொலையால் இறந்தனர் - மொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் இது 5% ஆகும். 33 இரட்டை கருணைக்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, எனவே 66 பேர் இதனால் இறந்துள்ளனர். கருணைக்கொலை கோரும் தம்பதியில் ஒருவருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருந்தால், அவர்களின் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்பதால் சூழல் சிக்கலாகும். ராட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தில் உள்ள முதியோர் மருத்துவரும், நெறிமுறை நிபுணருமான மருத்துவர் ரோஸ்மரிஜ்ன் வான் ப்ரூச்செம் கூறுகையில், “டிமென்ஷியா நோயாளிக்கு கருணைக்கொலை செய்வதைப் பற்றி யோசிப்பதை கூட நிறைய மருத்துவர்கள் விரும்பவில்லை,” என்கிறார். இது ஜான் மற்றும் எல்ஸின் நிலை. மருத்துவர்களிடையே உள்ள அந்த தயக்கம் கருணைக்கொலை புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. 2023-இல் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் 336 பேருக்கு டிமென்ஷியா இருந்தது. டிமென்ஷியா நோயாளிகளின் 'தாங்க முடியாத துன்பத்திற்கான' சட்டத் தேவையை மருத்துவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? ஆரம்ப நிலை டிமென்ஷியா பிரச்னை உள்ள பலருக்கு, உடல்நலனில் எப்படி முன்னேற்றம் இருக்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையே அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றி சிந்திக்க வழிவகுக்குகிறது என்று மருத்துவர் வான் புருசெம் விளக்குகிறார். "என்னால் முக்கியமான விஷயங்களை இனி செய்ய முடியாமல் போகுமோ? என்னால் இனி என் குடும்பத்தை அடையாளம் காண முடியாமல் போகுமோ? என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தால் போதும். கருணைக்கொலை செய்யத் தயாராக இருக்கும் மருத்துவர் மற்றும் மனத் திறனில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஆகிய இருவருக்குமே நோயாளிகள் சொல்வது புரிந்தால், கருணைக்கொலையைப் பரிசீலிக்க வேண்டும்," என்றார் இரட்டைக் கருணைக்கொலையில் உள்ள சிக்கல்கள் அவர்களின் குடும்ப மருத்துவருக்கு இதில் ஈடுபாடு இல்லாததால், ஜான் மற்றும் எல்ஸ் ஒரு கருணைக்கொலை கிளினிக்கை (mobile euthanasia clinic) அணுகினர் - கருணைக்கொலை குறித்த நிபுணத்துவ மையம் அது. இது கடந்த ஆண்டு நெதர்லாந்தில் 15% கருணைக்கொலை இறப்புகளை மேற்பார்வையிட்டது. சராசரியாக அது பெறும் கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்கிறது. ஒரு தம்பதி தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க விரும்பினால், ஒரு இணையரின் முடிவு மற்றவரை பாதிக்கவில்லை என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இருவருக்குமே சம்மதம் இருக்க வேண்டும். மருத்துவர் பெர்ட் கெய்சர் இரண்டு இரட்டைக் கருணைக்கொலை கோரிக்கைகளைக் கையாண்டிருக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான தம்பதியை நினைவுக்கூர்ந்தார். அந்த நபர் தனது மனைவியை கருணைக்கொலைக்கு வற்புறுத்துகிறாரோ என்று மருத்துவருக்குச் சந்தேகம் வந்தது. அடுத்த சந்திப்பின் போது, மருத்துவர் கெய்சர் அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினார். "அவர் பல திட்டங்களை வைத்திருப்பதாக சொன்னார்," என்று மருத்துவர் கெய்சர் கூறுகிறார். அந்தப் பெண் தனது கணவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெளிவாக உணர்ந்தார், ஆனால் அவருடன் இறக்கும் திட்டம் அந்தப் பெண்ணுக்கு இல்லை. மருத்துவர் இதனை அறிந்ததும் அவர்களின் கருணைக்கொலை செயல்முறை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் நோய்வாய்பட்டு இறந்தார். அவருடைய மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறார். படக்குறிப்பு,எல்ஸ் மற்றும் ஜான் அவர்களின் திருமண நாளில், 1975 'வேறு தீர்வு இல்லை' புராட்டஸ்டன்ட் தியாலஜிகல் பல்கலைக்கழகத்தின் சுகாதார நெறிமுறைகள் பேராசிரியரான டாக்டர் தியோ போயர், நெதர்லாந்தில் கருணைக்கொலையை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். அவர் , நோய்த்தடுப்பு சிகிச்சையின் முன்னேற்றம் கருணைக்கொலை பயன்பாட்டின் தேவையைக் குறைக்கிறது என்று நம்புகிறார். “என்னைப் பொறுத்தவரை மருத்துவரால் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியும். இருப்பினும், அது மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்,” என்கிறார். டாக்டர் போயர் மேலும் கூறுகையில், “கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரும் அவரது மனைவியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தம்பதியாக இறப்பதைத் தேர்ந்தெடுத்து, உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிறகு அதன் தாக்கம் மேலும் அதிகரித்தது. "கடந்த ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளை நாங்கள் பார்த்தோம், மேலும் ஒன்றாக இறப்பதை போற்றும் (hero-ify) போக்கு உள்ளது," என்றார். ஜானும் எல்ஸும் தங்கள் கேம்பர்வேனில் காலவரையின்றி வாழலாம். அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா? "இல்லை, இல்லை, இல்லை - என்னால் அதைப் பார்க்க முடியாது," என்று எல்ஸ் கூறுகிறார். அவரது கணவர், "எனக்கு இனி வலி வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்," என்று பதிலளித்தார். "நாம் வழிநடத்திய வாழ்க்கை நம்மை முதுமையாக்குகிறது. அதன் காரணமாக மட்டுமே அது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார். இன்னும் ஒரு பிரச்னை இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களால் எல்ஸின் மதிப்பீட்டின்படி, அவரது டிமென்ஷியா மோசமடைந்தால் அது மாறக்கூடும் என்றாலும், தன் வாழ்க்கையை எப்போது, எப்படி முடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர் இன்னும் பெற்றிருக்கிறார். ஜான் மற்றும் எல்ஸின் மகனுக்கு, இவை எதுவும் எளிமையானதாக இல்லை. "உங்கள் பெற்றோரை இழக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்," என்று ஜான் விளக்குகிறார். "எனவே மகன் கண்ணீர் விடுவார் தான். அவர் 'நல்ல காலம் வரும்' என்றார். ஆனால் எனக்கு வருத்தம் இல்லை,” என்கிறார் ஜான். எல்ஸ் அதையே உணர்கிறார். "வேறு தீர்வு இல்லை," என்பதே அவர்களின் நிலைபாடு. இறுதி நாள் கருணைக்கொலை செய்ய மருத்துவர்களுடன் அவர்கள் சந்திப்புக்கு முந்தைய நாள், எல்ஸ், ஜான், அவர்களது மகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஒன்றாக இருந்தனர். நல்ல நிலையில் இருக்கும் தன் கேம்பர்வேனின் தனித்துவத்தை ஜான் விளக்க விரும்பினார், எனவே அது விற்பனைக்குத் தயாராக இருக்கும். "நான் என் அம்மாவுடன் கடற்கரையில் நடந்து சென்றேன்," என்று அவர்களது மகன் கூறுகிறார். "குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், வேடிக்கையான தருணங்கள் இருந்தன... அது மிகவும் வித்யாசமான நாள்,” என்கிறார். "நாங்கள் இரவு உணவு சாப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அந்த இறுதி இரவு உணவை சாப்பிடுவதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது,” என்கிறார். திங்கள்கிழமை காலை, அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் கூடினர். தம்பதியரின் சிறந்த நண்பர்கள், ஜான் மற்றும் எல்ஸ் இருவரின் சகோதரர்களும், அவர்களின் மருமகளும் தங்கள் மகனுடன் இருந்தனர். "டாக்டர்கள் வருவதற்கு முன்பு நாங்கள் இரண்டு மணிநேரம் ஒன்றாக இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் எங்கள் நினைவுகளைப் பற்றி பேசினோம் ... நாங்கள் இசையைக் கேட்டோம்." "இறுதி அரை மணி நேரம் கடினமாக இருந்தது," என்று அவர்களின் மகன் கூறுகிறார். "டாக்டர்கள் வந்தார்கள், எல்லாம் சீக்கிரமாக நடந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள், பின்னர் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்,” என்கிறார். எல்ஸ் வான் லீனிங்கன் மற்றும் ஜான் ஃபேபர் ஆகியோருக்கு மருத்துவர்கள் மரணமடையும் மருந்துகளை வழங்கினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை ஒன்றாக அவர்கள் இறந்தனர். அவர்களின் கேம்பர்வேன் இன்னும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. எல்ஸ் மற்றும் ஜானின் மகன் அதைச் சிறிது காலம் தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதில் விடுமுறைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். "காலம் வரும்போது அதை விற்பேன்," என்று அவர் கூறுகிறார். "முதலில் நான் என் குடும்பத்திற்குச் சில நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்," என்கிறார் தீர்க்கமாக. https://www.bbc.com/tamil/articles/cjk318y0325o1 point- குறுங்கதை 4 - நீர்க்கடன்
1 pointஇல்லை சுவி ஐயா, இது என்னூரில் இருக்கும் இடம். முன்னர் இங்கு இப்படி நடப்பதில்லை. பாண்டவர்கள் நீர்க்கடன் முடித்த பின்னரயே பாஞ்சாலி கூந்தலை அள்ளி முடித்தார் என்று ஒரு சிறுகதை சில வருடங்களின் முன்னர் வாசித்திருந்தேன். அன்றிலிருந்து இந்தச் சொல் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. வீரப்பனின் கதை முடிந்தது சந்தியில் இருக்கும் அரச மரத்தடியில்....... ஏராளமான கதைகள் இரண்டு மரத்தடிகளிலும் இருக்கின்றன........👍1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்த்துக்கள் கந்தப்பு அண்ணா 3நம்பருக்கும் உங்களுக்கும் நல்ல ராசி போல் இருக்கு🥰🙏......................... ஜபிஎல்ல முதல் இடத்தை பிடிச்ச கல்யாணி மற்றும் நுனா அண்ணா இவரும் இந்த உலக கோப்பையில் கடசி இடத்தில்☹️ உண்மையை ஒத்து கொண்டு தான் ஆகனும் . பெரிய அணிகள் பல கைவிட்டதால் புள்ளிகளை அள்ள முடிய வில்லை........................அப்படி இருந்தும் நீங்கள் மூன்றாம் இடம் வந்தது பாராட்ட தக்கது👏👏👏👏👏👏👏 பின் குறிப்பு முதலாம் இடத்தை பிடித்த பிரபா அண்ணாவையும் இரண்டாம் இடம் பிடித்த ஈழப்பிரியன் அண்ணாவையும் பெரியப்பர் கடசி முடிவு போட முதலே இருவரையும் வாழ்த்தி விட்டேன் கூட்டி கழிச்சு பார்தேன் இவர்கள் இரண்டு பேரும் தான் முதல் இடமும் இரண்டாம் இடமும் வருவினம் என்று🥰🙏......................................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள் போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியை ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடத்தும் கிருபன் அண்ணைக்கு எனது நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற பிரபா அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளையும் வாழ்த்துகிறேன்.1 point- ரி20 உலக சம்பியனானது இந்தியா
1 pointஆடுகளத்தின் ஈரப்பதன் (மைதானத்தின் ஈரப்பதன் அல்ல) சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், முதலாவதாக பந்து விசிய தென்னாபிரிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் அதனை சரியாக பயன்படுத்தினார்கள், அந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக மேலெழுந்து வந்ததால் மகாராஜ் பந்து வீசும் போது அளவு குரைந்த பந்தினை துல்லியமாக இறுக்கமான பகுதியில் தொடர்ந்து வீசினார் ஆனால் சம்சி மற்றும் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டினை எடுப்பதற்காக அளவு கூடிய பந்தினை வீசினார்கள். இந்தியணியினர் பந்து வீசும் போது மைதான ஈரலிப்பு குறைந்து பந்து சுழல்பந்துவீச்சிற்கு ஒப்பீட்டளவில் குறைவான தாக்கத்தினை செலுத்தினாலும் விக்கெட் எடுப்பதற்காக அளவு கூடிய (தூக்கி போடும்) பந்ட் கினை வீசினார்கல் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களை இலக்கு வைத்து தாக்க தொடங்கிய போது அளவு குறைந்த் பந்துகளை வீசினாலும் கிளாசன் அதனை அனாயசமாக தூக்கி அடித்தார். இவ்வாறு மேலெழும் ஆடுகளத்தில் துடுப்பாட்டக்காரர்கள் இறங்கி வந்தடிக்கும் தவறினை செய்யமாட்டார்கள், குல்தீபின் பந்து வீச்சில் குவின்டன் இறங்கி வந்தாட முயற்சித்து ஆட்டமிழக்காமல் தப்பிவிட்டார் அதனை ரிசாப் பண்ட் குறிப்பிட்டு காட்டுவார், கிளாசன் அந்த தவறினை செய்யவில்லை. தென்னாபிரிக்காவின் வெற்றி வாய்ப்பினை குறைந்தளவிலேயே எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தென்னாபிரிக்க அணி இவ்வளவு சிறப்பாக ஆடும் என நினைக்கவில்லை, ஆனால் அழுத்தம் நிறைந்த போட்டியினை சமாளிக்கும் நிலைக்கு தென்னாபிரிக்க அணி இல்லை என்பதால் தமது வெற்றியினை இந்தியாவிற்கு தூக்கி கொடுத்துவிட்டார்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கேட்ட உடனே வீரப்பையனுக்கு விருதைக் கொடுத்த அந்த மனசிருக்கே!அது சொர்க்கத்தங்கம். @கிருபன் அதுவும் சின்னப்பையனுக்கு சியர்ஸ் கேர்ள்ஸ் விருது நல்ல பொருத்தம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 127 தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @பிரபா வுக்கு வாழ்த்துக்கள். எவ்வளவோ குழப்பங்கள் வந்த போதும் குழம்பாமல் எல்லோரையும் சமமாக புள்ளிகள் எப்படி போடலாம் என்று திட்டம் போட்டு போட்டியை நடாத்தி முடித்த தம்பி @கிருபன் க்கு மிகுந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த உறவுகளுக்கும் முக்கியமாக @வீரப் பையன்26 @ரசோதரன்க்கும் பாராட்டுக்கள்.1 point- போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள பேரரசுகளின் வீழ்ச்சியின் விழைவாக பேரழிவு ஏற்படுவதே உலக வரலாற்றின் பக்கங்களாக இருக்கின்றது உரோம பேரரசின் வீழ்ச்சி ஐரோப்பாவின் இருண்டகாலம் என கூறுகிறார்கள், மொங்கோலிய பேரசின் வீழ்ச்சி, ஒட்டமன் பேரரசின் வீழ்ச்சி என நீண்டு செல்கிறது இதில் இரண்டு உலகப்போர்களை பேரரசின் வீழ்ச்சி உருவாக்கி விட்டது அடுத்து அமெரிக்காவின் வீழ்ச்சி தற்போது 3ஆம் உலகப்போரினை உருவாக்கி உலக அழிவிற்கு வழிவகுக்க உள்ளதாக கருதுகிறேன். பனிப்போர் காலத்தில் உலகில் ஒரு பல சமச்சீர் நிலை காணப்பட்டது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அமெரிக்காவினை ஏகாதிபத்தியத்தின் அடித்தளமிட அமெரிக்கா பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் பல தவறான முடிவுகள் எடுத்து தற்போதுள்ள பலவீனமான் அமெரிக்காவினை உருவாக்கி விட்டது. அமெரிக்க உலக ஒழுங்கு ஒரு அணுகுண்டு தாக்குதலுடன் அமெரிக்காவினால் தொடங்கி வைக்கப்பட்டதனை போலவே அதனது முடிவு காலமும் அணுகுண்டு போரிடன் முடிவடையலாம் என கருதுகிறேன். பனிப்போர் காலம் தொடர்ந்திருந்தால் அமெரிக்கா இவ்வாறு பலவீனமாகியிருக்கும் என நான் கருதவில்லை.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) WI 218/5 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் தியா வாத்தியார் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா WI தமிழ் சிறி IND புலவர் IND P.S.பிரபா IND நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் IND ஏராளன் IND கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் IND கந்தப்பு ENG வாத்தியார் WI எப்போதும் தமிழன் AUS நந்தன் IND நீர்வேலியான் IND கல்யாணி SA கோஷான் சே SL 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UGA 39/10 சரியாகக் கணித்தவர்கள்: P.S.பிரபா அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PNG வீரப் பையன்26 CAN சுவி OMA நிலாமதி CAN குமாரசாமி CAN தியா CAN தமிழ் சிறி PNG புலவர் PNG P.S.பிரபா UGA நுணாவிலான் NED பிரபா USA NEP வாதவூரான் PNG ஏராளன் PNG கிருபன் CAN ரசோதரன் PNG அஹஸ்தியன் UGA கந்தப்பு UGA வாத்தியார் OMA எப்போதும் தமிழன் UGA நந்தன் PNG நீர்வேலியான் UGA கல்யாணி UGA கோஷான் சே PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rahmanullah Gurbaz (AFG) - 281 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Rachin Ravindra வீரப் பையன்26 Virat Kohli சுவி Travis Head நிலாமதி Virat Kohli குமாரசாமி Yashasvi Jaiswal தியா Virat Kohli தமிழ் சிறி Babar Azam புலவர் Rachin Ravindra P.S.பிரபா Daryl Mitchell நுணாவிலான் Glenn Phillips பிரபா USA Virat Kohli வாதவூரான் Travis Head ஏராளன் Virat Kohli கிருபன் Mohammad Rizwan ரசோதரன் Brandon King அஹஸ்தியன் Virat Kohli கந்தப்பு Travis Head வாத்தியார் Virat Kohli எப்போதும் தமிழன் Virat Kohli நந்தன் Travis Head நீர்வேலியான் Travis Head கல்யாணி Virat Kohli கோஷான் சே Rachin Ravindra 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Rahmanullah Gurbaz (AFG) - 281 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் AUS வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா IND தமிழ் சிறி PAK புலவர் NZ P.S.பிரபா NZ நுணாவிலான் NZ பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் IND கிருபன் IND ரசோதரன் WI அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG வாத்தியார் IND எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Fazalhaq Farooqi (AFG) - 17 Ave: 9.41, Econ: 6.31 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Jason Holder வீரப் பையன்26 Jasprit Bumrah சுவி Jasprit Bumrah நிலாமதி Jasprit Bumrah குமாரசாமி Jasprit Bumrah தியா Jasprit Bumrah தமிழ் சிறி Jasprit Bumrah புலவர் Jasprit Bumrah P.S.பிரபா Jasprit Bumrah நுணாவிலான் Sam Curran பிரபா USA Jasprit Bumrah வாதவூரான் Wanindu Hasaranga ஏராளன் Trent Boult கிருபன் Adam Zampa ரசோதரன் Pat Cummins அஹஸ்தியன் Jasprit Bumrah கந்தப்பு Jasprit Bumrah வாத்தியார் Jasprit Bumrah எப்போதும் தமிழன் Jasprit Bumrah நந்தன் Adam Zampa நீர்வேலியான் Jasprit Bumrah கல்யாணி Matheesha Pathirana கோஷான் சே Mark Wood 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Fazalhaq Farooqi (AFG) - 17 Ave: 9.41, Econ: 6.31 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி ENG நிலாமதி IND குமாரசாமி IND தியா IND தமிழ் சிறி IND புலவர் IND P.S.பிரபா IND நுணாவிலான் ENG பிரபா USA IND வாதவூரான் SL ஏராளன் NZ கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் SA கந்தப்பு IND வாத்தியார் IND எப்போதும் தமிழன் AUS நந்தன் AUS நீர்வேலியான் ENG கல்யாணி SL கோஷான் சே IND கேள்விகள் 79) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 117 3 கந்தப்பு 116 4 குமாரசாமி 114 5 ரசோதரன் 113 6 நீர்வேலியான் 113 7 சுவி 111 8 கோஷான் சே 108 9 தமிழ் சிறி 107 10 கிருபன் 107 11 வீரப் பையன்26 105 12 எப்போதும் தமிழன் 103 13 நிலாமதி 101 14 வாத்தியார் 101 15 அஹஸ்தியன் 99 16 நந்தன் 99 17 தியா 97 18 வாதவூரான் 97 19 P.S.பிரபா 96 20 ஏராளன் 94 21 கல்யாணி 85 22 புலவர் 80 23 நுணாவிலான் 781 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த ஜரோப்பா விளையாட்டுடன் ஜேர்மன் அணியின் சிறந்த வீரர் Toni Kroos இந்த ஜரோப்பா விளையாட்டுடன் ஜேர்மன் அணியின் சிறந்த வீரர் ஓய்வை அறிவுத்து உள்ளார் அடுத்த உலக கோப்பை வரை விளையாடி இருக்கலாம் இப்ப தான் 34 வயது மெஸ்சி 36 . ரொனால்டோ 38 இவர்களுடன் ஒப்பிடும் போது 34வயது கம்மி 10வருடம் இஸ்பேனியன் முன்னனி கிலப்பானா Real madridக்கு விளையாடி இருக்கிறார்.....................1 point- தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா?
ஈழத்தமிழர்கள் இலங்கையில் வீட்டோடு மாப்பிளை தானே (வெகு அருமையான விதிவிலக்குகளை தவிர )? இப்போதும் இது இலங்கையில் தொடர்கிறது தானே?1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
இந்த தடவை இஸ்ரேல் - பலஸ்தீன சண்டை ஆரம்பித்த போது, 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரைத் தொடர் வந்திருந்தது. ஐந்து பாகங்கள், சிறிது நீண்ட கட்டுரைகள். பல ஒற்றுமைகள் இருக்கின்றன, ஆனால் நாங்கள் பொதுவாக இதுவரை நினைத்திருக்கும் கோணத்தில அல்ல. இது இன்னொரு பார்வை. https://www.arunchol.com/karthik-velu-on-israel-history1 point - குறுங்கதை 4 - நீர்க்கடன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.