Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3057
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    7596
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/04/24 in all areas

  1. மண்சோறு ----------------- ஜெயலலிதா இறந்து விட்டாராம் என்று செய்தி பரவி ஊரே கதவுகளை அடித்து மூடிக் கொண்டிருந்தது. வெளியில் எங்கும் போகாதே என்றும், தான் இப்பொழுது என் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் மாமி தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தார். மாமியின் வீடு திருச்சியின் மாநகரப் பகுதியில் ஒரு எல்லையில் இருந்தது. நான் தங்கி நிற்கும் வீடு, போன வாரம் வரை அங்கு உயிருடன் இருந்த என் தந்தையின் வீடு அது, நகரின் இன்னொரு எல்லைப் பகுதியில் இருந்தது. மாமி என் தந்தையின் கடைசி தங்கை. ஊர் இருக்கும் இந்தப் பதட்டத்தில், ஏன் இந்தப் பதட்டம் என்றும் எனக்கு விளங்கவில்லை, இவர் ஏன் நகரின் குறுக்காக வருகின்றார் என்றும் எனக்கு தெரியவில்லை. 'உனக்கு என்ன தெரியும்......... இவங்கள் கொளுத்திப் போடுவாங்கள்......' என்று விளக்கம் சொன்னார் மாமி. கடையை, வாகனத்தை, ஆட்களைக் கூட கொளுத்துவார்களாம். ஒரு பஸ்ஸுடன் சில பிள்ளைகளுக்கு நடந்தது எனக்குத் தெரியாது என்றார். தெரியும் என்று சொல்வதை விட, தெரியாது என்று சொல்லி, அவர் சொல்வதைக் கேட்பது ஒப்பீட்டளவில் இலகுவான ஒரு விடயம். பின்னர் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இன்னும் இறக்கவில்லை என்ற செய்தி வந்தது. முதல் வந்தது வதந்தி என்றனர். அப்பலோவில் அன்று அவர் இட்லி சாப்பிட்டதாகவும் செய்தி வந்து கொண்டிருந்தது. மாமி அதை நம்பவில்லை. இவங்கள் பொய் சொல்கின்றனர் என்றார் அவர். என்னை விமானச் சீட்டை மாற்றிக் கொண்டு உடனேயே அங்கிருந்து கிளம்பச் சொன்னார். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும், நான் அங்கு நின்று செய்வதற்கு ஒரு காரியமும் இல்லை என்பதும் அவரின் இன்னொரு நியாயம். அடுத்த நாள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அந்த நபரை முன்னர் எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்று தோன்றியது. அவரே ஞாபகப்படுத்தினார், சில வருடங்களின் முன் அவர் என் அம்மாவின் இறப்பு சான்றிதழ் எடுத்து தந்த உதவியை. நல விசாரிப்புகளின் பின், சும்மாவா வந்தீர்கள் என்று கேட்டேன். இல்லை, மாமி தான் வரச் சொல்லியிருந்தார் என்றார். என் விமானச் சீட்டை மாற்றுவதற்கு மாமி ஏற்பாடு செய்கின்றார் போல என்று மெல்லிய சிரிப்பு வந்தது. வந்த மாமி, இவர் என் தந்தையின் மரண சான்றிதழ் எடுத்து தருவார் என்றார். அது எனக்கு தேவையே இல்லை, அதை வைத்து நான் என்ன செய்ய என்று வேண்டாம் என்று சொன்னேன். இங்கு எல்லோரும் அதை எடுப்பார்கள், எடுத்துக் கொண்டு போவார்கள், கட்டாயம் எடுக்கத்தான் வேண்டும் என்றார் மாமி. அம்மாவின் சான்றிதழை எடுத்ததை நினவு கூர்ந்தார். அது இப்பொழுது எங்கே இருக்குதோ. சரி, ஏதோ உங்களின் விருப்பம் என்று ஒதுங்கினேன். ஒரு பிரபல நடிகர் அரசியலில் இறங்கியிருந்த காலமும் அது. அவர் இந்த பிறப்பு, இறப்பு மற்றும் பல சான்றிதழ்களைப் பெற எவ்வளவு இலஞ்சம், எப்படி கொடுக்கப்படுகின்றது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார். ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்றது என்றார். ஆதாரங்கள் இருந்தால், அதை எடுத்துக் கொண்டு கவர்னரிடம் போகலாம் தானே என்று சில பத்திரிகையாளர்கள் அங்கேயே கேட்டு இருந்தனர். மக்கள் தான் என்னுடைய கவர்னர் என்று சொல்லியிருந்தார் அந்த நடிகர். அவர் என்ன சொன்னாலும் எவருக்கும் எதுவுமே புரியாது என்பது அவரின் தனித்துவம். நடிகர்கள் மட்டுமே புது அரசியல் கட்சிகள் தொடங்கும் தேசம் அது. அதுவே ஒரே விதமான கொள்கை மற்றும் அறிக்கைகளுடனேயே ஆரம்பிப்பார்கள். ஊழலற்ற, இலஞ்சமற்ற, சமத்துவ சமுதாயம்.........என்று அந்த அறிக்கை போகும். அந்த நபரை எவ்வளவு காசு என்று கேட்டார் மாமி. என்ன காசு, அது தான் அந்த பிரபல நடிகர் இதிலிருக்கும் இலஞ்சம் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்து விட்டாரே, இனிமேல் என்ன காசு என்றேன் நான். மாமி அருகில் நின்றபடியால் சில வார்த்தைகளை முழுதாகச் சொல்லாமல் விழுங்கிய அந்த நபர், இப்பொழுது ஒவ்வொரு சான்றிதழுக்கும் முன்பிருந்த இலஞ்சத்தை விட இரண்டு மடங்குகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
  2. சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.
  3. இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம் எங்கள் ஆசிரியர் சங்கமான MUTA வின் புலனக் குழுவில் (WhatsApp group) பேரா. நீலகிருஷ்ண பாபு அவர்கள் வழக்கம் போல பேரா. சுப.வீரபாண்டியன் அவர்களின் ஒரு நிமிடச் செய்தி ஒலி நாடாவைப் பதிவு செய்திருந்தார். அப்பதிவு கீழேயுள்ள இணைப்பில் உள்ளது. தயவு கூர்ந்து அதனைக் கேட்ட பின் அச்செய்தி என்னுள் எழுப்பிய நினைவலைகளை வாசிப்பது (வாசிப்பதாக இருந்தால்) வாசிப்போரின் உடலுக்கும் (!) உள்ளத்திற்கும் நலம் பயப்பது : நீங்கள் (மக்கள்) விரும்பும் மனிதர் ஹிட்லராக இருந்தால், அவருக்கும் 'இரும்பு மனிதர்' என்று பெயரிட்டுக் கொண்டாடலாம். சர்தார் வல்லபாய் படேல் கதையைக் கையிலெடுத்து இக்கருத்தை நுட்பமாக (with subtlety) வெளிப்படுத்தும் சொல் ஆளுமை சுபவீ அவர்களுக்கே உரியது. ஒலிப்பதிவில் உள்ள படேல் பற்றிய கருத்து மட்டுமே சுபவீ க்கு உரியது. எனது எழுத்தில் உள்ள பிற்சேர்க்கை அடியேனது. அவரது கருத்தில் எனக்குத் தோன்றியவற்றைக் குழைத்து அடிக்கும்போது இந்த எச்சரிக்கை அறிவிப்பு அவசியமாகிறது. இந்திரா காந்தி அம்மையார், 1947 ல் சாம்ராஜ்யங்களுக்குத் தரப்பட்ட உறுதிமொழியை மீறி, ஒரு தலைமுறை அவகாசம் கூடத் தராமல் மன்னர் மானியத்தை (royal purse or privy purse) 1971 ல் ஒழித்தபோது அவரை இரும்புப் பெண்மணி என்று சிலர்/பலர் கொண்டாடினர். மன்னர்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும் என்ற முற்போக்கு (!) சிந்தனையோ என்னவோ ! அந்த மன்னர்களில் பெரும்பாலானோர் 1967 தேர்தலில் அப்போதைய இந்திரா காங்கிரஸுக்கு எதிராக வேலை செய்ததால், அஃது அவர்களுக்கு அம்மையாரின் அன்புப் பரிசு என்பதையெல்லாம் சமூகம் கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் முதலில் நீதிமன்றத்தில் அம்மையார் தோற்றுப் போனதும், உடனே மக்களவையைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவகுத்தார். அசுர பலத்துடன் மீண்டு வந்து 1971 ல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மன்னர் மானியத்தை ஒழித்தார் (நல்ல வேளை இம்முறை பாசிச பாஜகவுக்கு அசுர பலம் கிடைக்கவில்லை). அலகாபாத் நீதிமன்றம் 1975 ல் இந்திரா காந்தியின் தேர்தலுக்கு எதிரான தீர்ப்பு வழங்கியபோது, நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தார் அந்த இரும்புப் பெண்மணி (!). நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யாமலேயே சுதந்திர அதிகாரம் பெற்ற அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் கையிலெடுத்து மாற்றுக் கட்சி மாநில முதல்வர்கள் வரை சிறைக்குள் வைத்து எதேச்சாதிகாரத்தை அரங்கேற்றலாம் என்று யோசிக்கும் அளவிற்கு இந்திரா அம்மையார் அப்போது முன்னேறி இருக்கவில்லை, பாவம் ! காஷ்மீருக்கு அளித்த உறுதிமொழியை மீறி Article 370 ஐ ஒழித்ததில் மோடி - அமித்ஷா கூட்டணி 'இரும்பு மனிதர்கள்' என்று வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறலாம். இவர்களெல்லாம் வெறும் இரும்புதான். அரசுக்கு எதிராகப் போராடிய 1.7 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த ஜெயலலிதா அம்மையார் தங்கத் தாரகையே ஆனார். அடாவடித்தனங்களுக்கு இரும்புக் கரம், இரும்பு மனிதர் என்றெல்லாம் பெயரிட்டால், உறுதிப்பாட்டிற்குக் குறியீடான இரும்பு என்னும் உலோகத்தின் மீது மக்கள் சமூகம் கொண்ட மதிப்புதான் என்னே ! https://www.facebook.com/share/v/axwDsBoGut4WFpgs/?mibextid=oFDknk
  4. இவர்க்கெதிராக மறவன் புலவு போராட்டத்தில் குதிப்பாரா...? இல்லை போர்த்துக்கீச பறங்கிப்படை தமிழர்கள் மட்டும் தான் கண்ணுக்குத்தெரியுமா
  5. ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின் கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள் எங்கிருந்து கோரிக்கை வைத்தார்களோ அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர் சந்தித்து ஆறுதல் சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின் கீழ் மக்களுக்காக அரசியல் செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல் யாசகர்கள் ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும்.
  6. காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது.
  7. துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும்.
  8. ஐயையோ என் புருஷன் இல்லையா...சாரி.. 😂
  9. இவ‌ரின் இழ‌ப்பு த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் சிறு தாக்க‌த்தை கூட‌ உண்டாக்கா வில்லை..............இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ ஆள் என்றால் இவ‌ரை சிங்க‌ள‌வ‌ன் எப்ப‌வோ போட்டு த‌ள்ளி இருப்பான் தாத்தா......................இவ‌ர் உயிருட‌ன் இருந்த‌ கால‌த்தில் காணொளிக‌ள் மூல‌ம் இவ‌ரை பார்க்கையில் க‌டும் கோவ‌ம் வ‌ரும்................... இவ‌ர் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழ்ப்பாண‌ம் வ‌ந்த‌ போது வாக‌ன‌த்தை விட்டு கீழ‌ இற‌ங்க‌ வில்லை. ம‌க்க‌ளின் எதிர்பு அதிக‌மாய் இருந்த‌து.................... யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா சிங்க‌ள‌ காட‌ய‌ர்க‌ளால் சுட்டு கொன்ற‌ போது த‌மிழ‌ர்க‌ள் க‌ண்ணீர் வ‌டித்தவை..................யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா ந‌ம்மோடு இல்லா விட்டாலும் ஜ‌யாவை அதிக‌ம் நினைக்கிற‌ நான்☹️😥 த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் யோசப் பரராஜசிங்கம் ஜ‌யாவுக்கு புலி கொடி போத்தி இறுதி அஞ்ச‌லி செய்த‌வ‌ர்.....................த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர் தான் யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா........................... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் / யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா🙏🙏🙏.........
  10. மன்னிக்கவும். நான் வேறொருவருக்கு பதில் எழுதுவதாக நினைத்து உங்களை உள் இழுத்து விட்டேன். மன உழைச்சல் ஏற்படுத்தியமைக்கு வருந்துகின்றேன்.
  11. தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வஞ்சம் தீர்க்கும் உணர்வு இது??
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய உணர்வு என்னிடமிருந்து பாய்வதால் நான் பிரார்த்தனை செய்கிறேன். அது (பிரார்த்தனை) கடவுளை எந்த வகையிலும் மாற்றாது. ஆனால் என்னை மாற்றுகிறது," என்று அவர் ஒரு முறை கூறினார். பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான Crowdscience-இன் ரசிகையான ஹிலரி, பிரார்த்தனை செய்யும்போதும் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும் இதேபோன்ற ஒன்றை உணர்வதாகக் கூறுகிறார். "நான் பிரார்த்தனை செய்யும்போது, கடவுளுடன் ஒரு தொடர்பை உணர்கிறேன். ஆனால் பிரார்த்தனையில் பல வகைகள் உள்ளன. அது ஒரு கணத்தின் அமைதியில் நிகழலாம், அது வார்த்தைகளற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் அது தேவாலயத்தில் ஒரு குழு பிரார்த்தனையாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பிரார்த்தனை செய்ய உட்காரும்போது ஒரு கேள்வி அவர் மனதில் எழுகிறது: “பிரார்த்தனை, மூளை மற்றும் மனநலம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?” பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பிரார்த்தனை செய்பவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களுடன் ஆலோசனை செய்யும் பணியை க்ரவுட்சயின்ஸ் குழு மேற்கொண்டது. இந்த வழிமுறை மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையதா அல்லது ஒருவேளை அது தியானம் செய்பவர்களிடமோ அல்லது ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை நடத்துபவர்களிடமோ உள்ளதா என்பதை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன? நாம் பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போது மூளையின் முன்மடல் (ஃப்ரண்டல் லோப்) ஒளிர்கிறது. ஆனால் ஆழ்ந்த பிரார்த்தனையில் அதன் செயல்பாடு மீண்டும் குறைகிறது. நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க், அமெரிக்காவில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்தில் உள்ள மார்கஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசனின் ஆராய்ச்சி இயக்குநர் ஆவார். தனது நோயாளிகளின் மனநலனில், பிரார்த்தனை மற்றும் பிற மத நடைமுறைகளின் விளைவுகளை ஆய்வு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். பிரார்த்தனை செய்யும் நபரின் மூளையின் பகுதிகள் செயல்பட துவங்குவதை எம்ஆர்ஐ மூலம் அவரது குழுவால் பார்க்க முடிந்தது. "பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பொதுவான வழி ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதாகும். மேலும் இதுபோன்ற செயலை ஒருவர் மேற்கொள்ளும்போது மூளையின் முன்பகுதி அதாவது ஃப்ரண்டல் லோப் செயல்பட ஆரம்பிக்கிறது," என்று ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் விளக்கினார். இது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது. மக்கள் 'ஆழமான பிரார்த்தனை' என்று உணரும்போது என்ன நடக்கிறது என்பதே நியூபெர்க்கை ஆச்சரியப்படுத்தும் விஷயம். "பிரார்த்தனையின் ஆழம் அதிகரிப்பதாக ஒரு நபர் உணரும்போது முன் மடலின் செயல்பாடு உண்மையில் குறைகிறது. இந்த அனுபவத்தை தாங்கள் உருவாக்கவில்லை, வெளியில் இருந்து இந்த அனுபவம் தங்களுக்குள் நிகழ்கிறது என்று தனிநபர்கள் உணரும்போது இது ஏற்படுகிறது,” என்று ஆராய்ச்சியாளர் கூறினார். ஆழ்ந்த பிரார்த்தனை, மூளையின் பின்பகுதியில் உள்ள பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது என்று நியூபெர்க் கண்டறிந்துள்ளார். இந்த பகுதி உடலில் இருந்து உணர்ச்சித் தகவலைப் பெறுகிறது மற்றும் அதன் காட்சி பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது. பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவது, ஆழ்ந்த பிரார்த்தனை செய்பவர்களால் வெளிப்படுத்தப்படும் 'ஆழ்நிலை உணர்வுகளை’ விளக்குகிறது என்கிறார் நியூபெர்க். "இந்த பகுதியில் செயல்பாடு குறையும்போது, நாம் தனிப்பட்ட சுய உணர்வை இழக்கிறோம். மேலும் அந்த ஒற்றுமை, இணைப்பு உணர்வைப் பெறுகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். 'மத நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES பிரார்த்தனை செய்யும்போது தங்களைத் தாண்டிய ஏதோ ஒன்றின் அங்கமாக தாங்கள் இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். தியானம் செய்பவர்களும் இதையே உணர்கின்றனர். ஹிலரிக்கு நியூபெர்க் அளிக்கும் விளக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தான் பிரார்த்தனை செய்யும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதுடன் அவர் அதை தொடர்புபடுத்துகிறார். ”நான் ஆழமான பிரார்த்தனையில் இருக்கும்போது, தனிப்பட்ட சுய உணர்வை இழப்பது அல்லது அந்த உணர்வை, கடவுளுடனான தொடர்பு என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் விளக்கினார். ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஹிலரிக்கு அது ஏதேனும் அமைதியான இடத்தில் உட்காரும்போது அல்லது இயற்கை சூழலில் நடக்கும்போது அது ஏற்படுமானால், மற்றவர்களுக்கு அது கடவுளுடன் உரத்த உரையாடலாக இருக்கலாம். முழுமையான மௌனம் அல்லது ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதால் இது நிகழலாம். எந்த மத அடிப்படையும் இல்லாமல் செய்யப்படும் பிரார்த்தனை போன்ற நடைமுறைகள், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் உணரும் அதே விளைவுகளை ஏற்படுத்த முடியுமா? நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ள, தியானம் மற்றும் ஒருமுகப்படுத்தல் நடைமுறைகளில் நிபுணரான டெஸ்ஸா வாட், ’நிகழ்காலம் மற்றும் நாம் அனுபவிக்கும் உணர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும்’ என்று குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "பிரார்த்தனை மற்றும் ஒருமுகப்படுத்தல் ஆகிய இரண்டும் ஒரு நபரை அமைதிப்படுத்த உதவுகின்றன என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக அவர்களுக்கு தங்களுக்கென அதிக நேரம் கிடைக்கும் மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தையும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்" என்று வாட் விளக்குகிறார். நரம்பு மண்டலம் இரண்டு தனித்துவமான தன்னியக்க அமைப்புகளால் ஆனது. அவை உடலின் பெரும்பாலான தானியங்கி பதில்வினைகளை கட்டுப்படுத்துகின்றன. ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உடலில் இருந்து விரைவான எதிர்வினைகள் தேவைப்படுகின்றன. அதை ஓர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், உடலின் 'ஓய்வு மற்றும் செரிமானம்' தொடர்பான பணிகள் பாராசிம்பேடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. "இதன் பொருள் என்னவென்றால், ஆழ்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பதில் வினைகளை அமைதிப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக ஆகிறீர்கள்" என்று வாட் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'கடவுளுடனான உறவு' நமது பராமரிப்பாளர்களுடனான உறவு, கடவுளுடன் நாம் வைத்திருக்கும் (அல்லது இல்லாத) உறவுகள் உட்பட பிற உறவுகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். வலுவான மதச் சூழலில் வளரும் சிலருக்கு கடவுளுடனான உறவு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் அவர்கள் வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான உறவுகளைப் பிரதிபலிக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள வெஸ்ட்மாண்ட் கல்லூரியின் சமூகவியலாளர் பிளேக் விக்டர் கென்ட் பிபிசியிடம் கூறினார். "பிரார்த்தனை பலனளிக்கும். ஆனால் நீங்கள் வெவ்வேறு காரணிகளை குறிப்பாக நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக கடவுளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார். பிளேக் முன்பு ஒரு போதகராக இருந்தார். மக்களின் வாழ்க்கையில் மதம் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போது அவர் ஆய்வு செய்து வருகிறார். "மற்றவர்களை நம்புவதில் சிரமம் உள்ள சூழலில் இருந்து நீங்கள் வந்திருந்தால் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார். பிளேக் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள, உளவியலில் உள்ள இணைப்புக் கோட்பாட்டைப் பற்றி நாம் பேச வேண்டும்: மனிதர்கள் தங்கள் ஆரம்பகால பராமரிப்பாளர்களுடன் (பெற்றோர் உள்பட) வைத்திருக்கும் உறவு எதிர்காலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளின் வகையை வரையறுக்கிறது. நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் போது நம்பகமான, நல்ல கவனிப்பை அளிக்கும் பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வயது வந்தவராக ஆகும்போது 'உறுதியான' உறவுப் பிணைப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சீரற்ற முறையிலான பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வளரும்போது நம்பிக்கையை வளர்ப்பது கடினம். நம்பிக்கை என்பது நிச்சயமாக மதநம்பிக்கைக்கு முக்கியமானது. எனவே கடவுளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் மிகவும் அதிகமான மதச்சூழலில் வாழ்ந்திருந்தால், அதை வளர்த்துக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியை அவர்கள் உணரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது வெறுமையாகவும், ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருப்பதாக உணர்கிறேன்" என்று பிளேக் கூறுகிறார். பிளேக் தன்னை 'கவலையுடன் கூடிய உறவுகளை’ ஏற்படுத்திக்கொண்ட நபராக விவரிக்கிறார். தான் பிரார்த்தனை செய்யும் போது ஏதோ சரியாகச் செய்யவில்லை என்ற உணர்வு போதகராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்டது. "மதச்சபைகளில் உள்ள பலருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அது அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் அல்லது கடவுள் அவர்கள் மீது வருத்தமாக இருப்பதாக உணர வைக்கிறது. அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தமடைகிறார்கள்.” என்கிறார் பிளேக். கடவுளுடன் உறுதியற்ற உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என்றாலும் அந்த பாதுகாப்பின்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது அதை கடந்துவர உதவும் என்று பிளேக் கூறுகிறார். கூடுதலாக உளவியல் சிகிச்சை மூலம் உறவுகளின் நிலையை மாற்றியமைக்க முடியும். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 'படைப்பாற்றல், பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஆழமான பிரார்த்தனையைப் போலவே நம்பமுடியாத அளவிற்கு ஒத்ததாக இருக்கும் வேறு வகையான தருணங்கள் இருப்பதை எம்ஆர்ஐ ஸ்கேன்களில் உள்ள மூளையின் படங்கள் வெளிப்படுத்தியதாக நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் கூறினார். "மிகவும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் இசையின் ஆழத்திற்குள் செல்லும்போது தங்கள் மூளையின் முன் மடல்களின் செயல்பாட்டை மெதுவாக்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் சுவாரசியமான ஆய்வுகள் உள்ளன. மேலும் சிலர் கடவுள் தன்னிடம் வருகிறார் என்று நினைக்கும் அதே வழியில் இசை அவர்களிடம் வருகிறது,” என்றார் அவர். "தெய்வ நம்பிக்கை உள்ள வாழ்க்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்பாற்றல் என்பது பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம். மேலும் அவை தொடர்புடையவை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் மூளையில் மதத்திற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட பகுதி இல்லை.” என்றும் அவர் கூறுகிறார். கடவுளுடன் பேசுவது அல்லது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனியைக் கேட்பது போன்ற ஆழ்நிலை அனுபவங்கள் மூலம் நமது மூளையின் உணர்ச்சி மையங்கள் தூண்டப்படுகின்றன என்று நியூபெர்க் விளக்குகிறார். "மத மற்றும் ஆன்மீக நடைமுறைகளுடன் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் காலம் காலமாக அவற்றை பின்பற்றுவதையும், அரசியல் மாற்றங்கள் அல்லது கலாச்சார மரபுகளுக்கு அப்பால் அவை எவ்வாறு தொடர்கின்றன என்பதையும் நீங்கள் கருத்தில் கொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும்.” தனது அனுபவங்களையும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதையும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டபின் தன்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்று ஹிலரி பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் எனக்கு ஒரே மாதிரியான ஆனால் வித்தியாசமான அனுபவம் இருப்பதை என்னால் அடையாளம் காண முடிகிறது. நான் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கடவுளுடன் தொடர்பு இருக்கிறது. ஆனால் நான் பாடுகையில் அதே போன்ற உணர்வை அனுபவிக்கும்போது அது இசையுடனான தொடர்பு என்பதை புரிந்துகொண்டேன்.” "நான் கடவுளிடம் பேசும்போதும், குழுவாகச் சேர்ந்து பாடும்போதும் அது ஒரு ஆன்மீக உணர்வாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்," என்கிறார் ஹிலரி. https://www.bbc.com/tamil/articles/cpv3ze49w25o
  13. இதனால்த் தான் ஜெயலலிதா இரும்புப் பெண் ஆனாரோ?
  14. 🤣......... 'தோழர் இரும்பு' என்று சிறுகதையை இங்கே 'அகழ்' இதழில் இருந்து எடுத்துப் பகிர்ந்திருந்தேன். வேறு ஒரு விதத்தில் நன்றாக இருந்தது.
  15. சம்பந்தனின் அஞ்சலிக்கு... இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து.. அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை. நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை. மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம்.
  16. அதெல்லாம் 2000 க்கு முன் .......... இப்போதெல்லாம் ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள்தான் பாவம்......! 😢
  17. இது அப்படியொன்றும் பெரிய பாரமில்லை.........! 😂
  18. மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு; ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை! சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட் டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள். அதுதொடர்பில் தமது பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவு செய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருத்துமாறு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டதையடுத்து, அறிக்கைகளின் பிரகாரம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதி பெறாத மற்றொரு இல்லத்தையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர் மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். (ச) https://newuthayan.com/article/மாணவிகள்_குளிக்கும்_வீடியோக்கள்_பதிவு;_ஆறு.திருமுருகனால்_நடத்தப்படும்_சிறுவர்_இல்லம்_இழுத்துமூடல்!
  19. காத்திருந்த கண்களே ........! 😍
  20. ரொம்ப அப்பாவியாக இருக்கிறீங்களே? வீட்டில் எப்படி காலம் தள்ளுகிறீர்கள்?
  21. வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் ....... மைதானத்தில் மட்டும் வேலி தாண்டி ஓடி ஓடி பதக்கங்கள் பெறவும்......! 😂
  22. மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!
  23. ஐரோப்பா வெளிநாட்டவர்களை வெறுப்பதற்கும் வெளியேற்ற ஆசைப்படுவதற்கும் , எனதுநாடு எனக்கே என்று ஆவேசப்படுவதற்கும் 70%மான காரணம் எவனையாவது கொன்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற இனிய மார்க்க இஸ்லாமியர்களே. ஏனைய காரணங்கள் மீதம்.
  24. அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂 மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.
  25. எதிர்க்கட்சி யார் என்பதுதான் மேட்டர்.. எப்படி பிரிட்டனில் வலதுசாரிகள் இம்முறை எதிர்க்கட்சி ஆகின்றனரோ அதேபோல் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பார்கள்.. பிரான்சிலும் இப்படித்தான் படிப்படியாக வலர்ந்து இன்று ஆடையை கைப்பற்றுகின்றனர்.. அமெரிக்காவில் டிரம்ப்.. இதேதான் அடுத்து ஜேர்மனியிலும் நிகழும்.. உலகின் வல்லரசு நாடுகள் முழுவதும் இனி அவர்கள் ஆட்சிதான்.. இதற்கு இடதுசாரிகள் மற்றும் மையவாதிகளின் கட்டற்ற குடியேற்ற கொள்கை ஒரு புறம் என்றால் உக்கிரேன் போரிற்கு அள்ளி அள்ளி குடுத்து உள்ளூர் மக்களை உணவு வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நில்கவைத்தது இன்னொரு பெரிய தவறு.. இனியாவது இடதுசாரிகள் தம்மை சீர்திருத்தம் செய்யவேண்டும்..
  26. தேர்தலை வைத்து பிரெஞ்சுமக்களை துவேசிகளாக்காதீர்கள். இங்கே வந்தவரும் கலந்தவரும் தான் அதிதீவிர வலதுசாரி. இதில் நம்மவர்களும் அடக்கம்.
  27. சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம். வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா? தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்? முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர். இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர். அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும். டொட்.
  28. மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல.
  29. செவ்வானத்தில் ஒரு நட்ஷத்திரம்.......! 😍
  30. என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து. ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர் தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட. இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால், ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது, தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்!
  31. ஓராயிரம் பார்வையிலே ........! 😍
  32. வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள் போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.