Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3057
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    4042
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/10/24 in all areas

  1. கடைசி எட்டு நாட்கள் ---------------------------------- ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்களாக எழுதினேன் என்று ஷெஹான் சொல்லியிருக்கின்றார். மூன்று தடவைகள் எழுதியவற்றை கிழித்துப் போட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். அவரின் முயற்சிக்கும், முழுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அவர் பெற்ற விருது. பௌத்த தர்மம் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அதன் உடல் இறந்த பின், இங்கே பூமியில் மிகக் கறாராக மேலதிகமாக ஏழு நாட்கள் மட்டுமே கொடுக்கின்றதாம். இது தான் நாவலின் சுருக்கம். அசத்தலான ஒரு வரிக்கதை, ஒரு வரிக்கதை என்று தமிழ் திரையுலகில் அடிக்கடி சொல்வார்கள். ஷெஹான் அதை செய்து காட்டியிருக்கின்றார். வெகு நாட்கள் முன்பு, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த பின், இரண்டாம் நாள் இரவில் அவர் வாசல் கதவடியில் வந்து நின்றதாக ஒரு முறை யாரோ சொன்னது ஞாபகமிருக்கின்றது. அவர்கள் சொன்ன விதத்தில் குலை நடுங்கியது. இருக்கும் பொழுது அவ்வளவு அன்பாக இருந்த மனிதர்கள் இறந்த பின் ஆவியாக வந்து கடித்துக் கொல்லப் போகின்றார்களா என்ன, ஆனாலும் பயம் என்பது தர்க்கம் அறியாதது. எல்லோரும் உறங்கிய பின், குசினியில் ஒரே சத்தம் கேட்டது என்பதும் ஏழு நிலவுகளில் நிச்சயம் ஒரு நிலவில் ஆவது ஒவ்வொரு இழப்பு வீட்டிலும் நடக்கும் சம்பவம். கூட்டமும், அழுகையும் ஓயாமல் இருக்கும் இடத்தில் வளர்ப்புப் பூனை வேறு எப்பத்தான் சாப்பிட வருவது, அதற்குப் பசிக்காதா என்ன? எட்டுச் சடங்கு என்று சொன்னாலும் அதை நாங்கள் ஐந்து அல்லது ஏழு நாட்களிலேயே செய்து முடிக்கின்றோம். ஒற்றைப் படை நாட்கள் என்னும் சம்பிரதாயத்தின் படி. ஆவியோ அல்லது ஆன்மாவோ ஆகிய நீங்கள் எட்டு ஆட்கள் இங்கே அலைய வேண்டாம், ஐந்து நாட்களிலேயே விண்ணகம் போய் விடுங்கள் என்னும் எங்களின் நல்லெண்ணம் இன்னொரு காரணம். கதையில் மாலி அல்மேடாவிற்கு அவர் இறந்து ஏழு நாட்களில் அவர் எப்படி இறந்தார் என்ற உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். புக்கர் பரிசு ஏன் அவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து கொள்ள, புக்கர் பரிசை இதுவரை வென்றவர்கள், இறுதிச் சுற்றில் இருந்தவர்கள், ஆரம்பச் சுற்றில் இருந்தவர்கள் என்ற தகவல் நிரலைப் பாருங்கள். விக்கிபீடியாவில் முழுவதும் உள்ளது. உங்களுக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். வாயடைத்துப் போவீர்கள், ஒருவர் கூட இல்லை. அனுக் அருட்பிரகாசம் 2021ம் வருடம் இறுதிச் சுற்றில் இருந்தார். சமூக ஊடகங்களில் இவரைப் பற்றி பதிவுகள் நிறையவே வந்தன. 'வடக்கிற்கான ஒரு பாதை' என்னும் அவரின் நாவலுக்காக. அவர் இதை மூன்று வருடங்கள் எழுதினார், அத்துடன் கொலம்பியா பல்கலையில் கலாநிதிப் பட்டத்திற்கும் படித்துக் கொண்டிருந்தார். அவரின் பேட்டியும் பல இடங்களில் உள்ளது. ஷெஹானிற்கும், அனுக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளது போலவே தெரிகின்றது. இருவரும் தினமும் எழுத வேண்டும் என்கின்றனர், தினமும் வாசிக்க வேண்டும் என்கின்றனர். அடடா, இதனால் தான் நம்மில் எவருக்கும் இந்த புக்கர் பரிசு இன்னமும் கிடைக்காமல் இருக்கின்றதோ என்று எண்ணவும் முடியவில்லை ஏனென்றால் எனக்கு பரிச்சியமான சில தமிழ் எழுத்தாளர்கள் 24 மணி நேரமும் எழுதுகின்றனர். இஸீரு சாமர சோமவீர என்று ஒரு இளம் இலங்கை எழுத்தாளர் இருக்கின்றார். அவருடைய சில கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 'திருமதி. பெரேரா' என்னும் ஒரு சிறுகதையை தேடி வாசித்துப் பாருங்கள். இஸூரு என்ன சொல்லுகின்றார் என்றால் அவர் சில வேளைகளில் ஆறு மாதத்திற்கு எதுவும் எழுதுவதே இல்லையாம், எதுவுமே அவருக்குத் தோன்றாது என்கின்றார். ஒரு முக்கால் சைக்கிள், டெனிம் டவுசர், ரீசேட், காலில் செருப்பு, கன்னத்தில் மெல்லிய தாடியுடன் இருக்கும் இவரின் பேட்டியில் இருந்த இன்னொரு, மறக்க முடியாத, வசனம், 'மன்னிக்க வேண்டும். எல்லோருடனும் உரையாடுவதற்காக நான் எழுதுவது இல்லை.' பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் ஒரு அற்புதமான கேரள எழுத்தாளர். அவர் ஒரு சிந்தனையாளரும் கூட. அவர் வீட்டுப் பக்கம் வாசகர்கள் என்று யாரும் போனாலேயே, கல்லால் எறிந்து கலைத்துவிடுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிரகம். எட்டுச் சடங்கில் மிகப் பிடித்த விசயம் என்னவென்றால், எங்கள் மரபில் அது அசைவம் படைக்கும் ஒரு சடங்கு, அத்துடன் வகை வகையான அசைவங்கள், எங்களின் பழக்கத்தில் உள்ள அத்தனையும் படைப்பார்கள். எதை தொடுவது, எதை விடுவது என்று தெரியாது. இந்த ஷெஹான், அனுக், இஸூரு, பி.கே. பாலகிருஷ்ணன் போல. ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.
  2. அமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின்றது என்று செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பயப்பட வேண்டாம், இது எல்லோரையும் தாக்காது என்கின்றார்கள். மூளை இருப்பவர்களை மட்டும் தான் இது தாக்கும் என்று சொல்ல வருகின்றார்களா என்று குறுக்குமறுக்காக யோசிக்கக்கூடாது. அழுக்கு நீரில் குளித்தால், அதுவும் அதில் ஒருவரையோ அல்லது மிகச் சிலரையோ மட்டுமே இது தாக்குகின்றது. அழுக்கு நீரில் இருக்கும் அமீபா மூக்கினூடு அல்லது வாயினூடு உள்ளே போய், மூளை வரை போகும் என்கின்றனர். மாரியில் பெய்யும் மழை தான் ஊர்க் கோவில் குளங்களின் ஒரே ஒரு நீர் ஆதாரம். எந்தக் குளத்திலும் இயற்கையாக நீர் ஊற்று இருந்ததை நான் காணவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெய்யும் மாரி மழையில் கோவில் குளங்கள் நிரம்பும். சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம். குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தில் ஏறிக் குதிப்பது, கோவில் கூரையில் ஏறிக் குதிப்பது, எல்லாப் படிகளையும் நீளவாக்கில் தாண்டிக் குதிப்பது என்று மூளை கெட்ட தனமாக பலவற்றைச் செய்திருக்கின்றோம். ஒரு குளத்தின் அருகில் நின்ற கத்தேக்க மரத்தில் உயரத்தில் பலகையை கிடையாக கட்டி, அதில் இருந்து துள்ளிக் கூட குதித்திருக்கின்றோம். அமீபாவும் அங்கு குடியிருந்திருக்க வேண்டும் இப்பொழுது தெரிகின்றது. நிற்கும் அழுக்குத் தண்ணீர், இளஞ்சூடு என்று அமீபா வளர்வதற்கேற்ற எல்லா காரணிகளும் சரியாகப் பொருந்துவது மட்டும் தான் ஒரு காரணம் என்றில்லை. 'உன்ரை மூளையும் இரும்புச் சூளையும் ஒன்று............' என்று திட்டுகள் பல தடவைகள் விழுந்திருக்கின்றது. அமீபா தான் ஒரு பகுதியை எடுத்து விட்டதோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கின்றது. 'உங்களுக்கு மூளையே இல்லை.............' என்று இன்று அடிக்கடி வரும் வரியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. ஐந்தாம் வகுப்பில் இருந்த வருடம். ஒரு கோவிலின் ஐயர் மகனும் எங்களின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பெரிய கோவில் ஒன்றிலும், சில சின்னக் கோவில்களிலும் அவர்களின் குடும்பம் பூசை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய கோவில் குளத்தில் எங்களுடன் குளித்தான். பல மணி நேரங்களின் பின், போதும் என்று நாங்கள் வெளியில் வந்து விட்டோம், அவன் வரவேயில்லை. குளித்துக் கொண்டேயிருந்தான். பின்னர் சில நாட்கள் சின்ன ஆஸ்பத்திரி, பெரிய ஆஸ்பத்திரி என்று படுக்கையில் கிடந்தான் ஐயர் நண்பன். அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டான். சன்னி ஆக்கி விட்டது என்று ஊரில் சொன்னார்கள். சிறுவர்களுக்கு என்று இருக்கும் இடுகாட்டில் ஒரு பெரிய சமாதி அவனுடைய பெயரில் கட்டினார்கள். இன்றும் அது அங்கே இருக்கின்றது. சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.
  3. அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார். ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார். உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும். நபர்களுக்கு. ஆயுள் கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம் என்று வாசித்து உள்ளேன் உண்மையோ தெரியவில்லை நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏
  4. நுhலகங்களைக் கொழுத்தி பழகியவர்கள் பழக்க தோசத்தில் தங்கடையையோ கொழுத்திப் போட்டார்களோ?
  5. உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமையாய் நினைந்து பயனை எதிர்பாராமல் இக் கடிதத்தைப் பொது வெளியில் எழுதுகிறேன். வயதும், அனுபவமும் காலப்போக்கில் பலரையும் வலிமைப்படுத்தும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவை உங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக வக்கிரப்படுத்தி வருவதாகவே தோன்றுகிறது. அந்த எனது முடிவின் கடைசிச் சான்றாக, கடந்த 04.07.2024ஆம் திகதி உங்களது உதயன் பத்திரிகையில் வந்திருந்த தலைப்புச் செய்தி அமைந்து போயிற்று. அச் செய்தியைக் கண்டு மற்றைய தமிழர்களைப் போலவே நானும் பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த தினங்களில் பயணம் ஒன்றில் இருந்ததால், உடன் எழுத நினைத்த கடிதத்தை, இப்பொழுதான் எழுத முடிகிறது. “செஞ்சொற்செல்வர்” கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களையும், அவர் நடாத்தி வரும் மகளிர் இல்லத்தினையும், இழிவு செய்யும் நோக்கத்தோடு அச் செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆறு.திருமுருகன் அவர்களைப் பற்றியும், அவரது சமய, சமூக, தமிழ்ப் பணிகள் பற்றியும் நான் சொல்லித்தான் உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. தனி ஒரு மனிதாக நின்று, தன் சுயமுயற்சியால் அவர் செய்து வரும் அளப்பெரும் பணிகளை எடுத்துரைப்பதானால், இக் கட்டுரை பல பக்கங்களாக நீண்டுவிடும் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த அந்த விடயங்களை இங்கு மீளவும் வரிசைப்படுத்தாமல் விட்டுவிடுகிறேன். சுருங்கச் சொல்வதானால், பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த உங்களைப் போன்றவர்கள், அரச நிதியில் சமூகத்திற்காகச் செய்த பணிகளைவிடப் பலமடங்கு பணிகளை ஆறு.திருமுருகன் நம்மினத்திற்காகச் செய்திருக்கிறார். தெல்லிப்பழை துர்க்கையம்மன்ஆலயத்தில் தொடங்கிய அவரது பணிகள், பின்னர் யாழ்ப்பாணம் அளவாய் விரிந்து, இன்று இலங்கை பூராகவும் பரவியிருக்கிறது. இந்த உண்மையைச் சாதாரண ஒரு தமிழ்ப் பாமரனும் அறிந்துள்ள நிலையில், பத்திரிகைத் துறை சார்ந்த உங்களுக்கு அவரது பெருமை தெரியாமல்ப் போனது ஆச்சரியம் தருகிறது. ஆறு.திருமுருகனின் பெயரை வலிந்து இணைத்தும், அவரது தனி ஒழுக்கம் பற்றி மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படும் வகையிலும், மிகக் கொடூரமான வக்கிரத்துடன், உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்றை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருந்தீர்கள். சமூகத்தின் முக்கியமான ஒருவர் பற்றிய, உறுதிப்படுத்தப்படாத செய்தியை, தலைப்புச் செய்தியாக இடுமளவிற்குத்தான், உங்களது பத்திரிகைத்துறை அனுபவம் இருக்கிறதா? என நினைந்து ஆச்சரியப்படுகிறேன். பத்திரிகையை நீங்கள் சமூக வளர்ச்சிக்காக அன்றி உங்களின் வளர்ச்சிக்காகவே நடாத்தி வருகிறீர்கள். சமூகமா?, வீடா? என்ற ஓர் நிலை வந்தால் சமூகத்தைத் தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டை வளர்க்கத் துணிபவர் நீங்கள். உங்களின் இந்தச் சுய உருவம் இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியிட்ட ஆறு.திருமுருகன் பற்றிய வக்கிரச் செய்திக்குப் பின்னாலும் கூட, வீட்டை வளர்க்கும் உங்களது சுயநலம் பதிவாகியிருப்பதை நான் அறிவேன். போர்க் காலத்தில், டாக்டர் யோகு பசுபதி அவர்களின் பலகோடி பெறுமதியான இல்லத்தை, இயக்கங்களிடம் இருந்து காப்பாற்றித் தருகிறேன் எனக் கூறி, வாடகைக்கு எடுத்த நீங்கள், போர் முடிந்த பின்பு அவரது வாரிசுகள் அவ் வீட்டு உரிமையை மீளக் கேட்டபோது, அதனை அவர்களிடம் கொடுக்காமல் அச் சொத்தை “விழுங்கிவிட” முற்பட்டீர்கள். ஒன்றும் செய்ய முடியாத அக்குடும்பத்தினர், அந்த வீட்டை அறப்பணிகளுக்கு எனத் திருமுருகனின் “சிவபூமி” அறக்கட்டளைக்கென எழுதிக் கொடுத்துவிட, அச் சொத்தை விழுங்கிவிட நினைத்த உங்களது எண்ணம் கனவாயிற்று. அதன் பின்பும் அச் சொத்தைச் தரமாட்டேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்க, அண்மையில்த்தான் திருமுருகன் உங்களுக்குத் தனது சட்டத்தரணி மூலம் “நோட்டீஸ்” அனுப்பியிருந்தாராம். உங்களது “சுத்துமாத்து” வேலைகளுக்கு அஞ்சாமல் உறுதியாய் நின்ற திருமுருகன் மேல் உங்களுக்கு ஏற்பட்ட கோபமே, இப்போது உங்களது பத்திரிகையின் தலைப்புச் செய்தியாய் வெளிவந்திருக்கிறது. நண்பரே! உங்கள் பத்திரிகையின் ஊடாக மட்டுமே மக்கள் உலகத்தைப் பார்த்து வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையத்தளங்களில், நிமிட நேரங்களில் “சுடச்சுடச்” செய்திகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், பத்திரிகைகள் எல்லாம் தேவையற்ற விடயங்களாய் அன்றாடம் மாறிவரும் உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனால்த்தான் அரசியற் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், நிறுவனத் தலைவர்கள், பொது நிறுவனங்கள், அறிஞர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உங்கள் பத்திரிகையின் பொய்ச் செய்திகளால் மிரட்டி, அடிபணிய வைத்துக் “கோலோச்சிய” காலம் முடிந்துவிட்டதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள். கடந்த காலங்களில், பழிவாங்கும் பொய்மைச் செய்திகளால் மற்றவர்களை வீழ்த்திக் காரியம் சாதித்துப் பழக்கப்பட்ட உங்களுக்கு, ஊடகங்கள் மக்கள் வயப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இனி அது நடக்காத காரியம் எனும் உண்மை புரியவில்லை. அது புரியாத காரணத்தால்த்தான், “காலாவதி” ஆகிவிட்ட அதே பழைய அஸ்திரத்தை இன்னும் உங்களது எதிரிகள் மேல் ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத ஓர் செய்தியைத் தலைப்புச் செய்தியாய் இட்ட நீங்கள், வேண்டுமானால் பலராலும் பேசப்படும் பின்வரும் செய்திகளைக் கூட உங்கள் பத்திரிகையின் தலைப்புச் செய்திகள் ஆக்கலாமே!. உங்களுக்காக அச்செய்திகளைச் சுருக்கித் தருகிறேன். • “ஷப்றா” நிதிநிறுவனம் என்ற ஒன்றை ஆரம்பித்து, ஏழை மக்களின் பணத்தை “ஏப்பம்” விட்டு, சரவணபவன் வாழ்ந்து வருகிறார் என்பது அச்செய்தியில் ஒன்று. • தங்களது பெண்பிள்ளைகளின் கல்யாணத்துக்காகச் சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தை “ஷப்றா” நிறுவனத்தில் இட்ட பலர் அது தொலைந்துபோக, துயரம் தாழாமல் தூக்கிட்டுக் கொண்டார்கள் என்பது மற்றொன்று. • சரவணபவன், மக்களை ஏமாற்றியதோடு அல்லாமல், “ஷப்றா” நிதிநிறுவனத்தை ஆரம்பித்துத் தன்னிடம் ஒப்படைத்த, மைத்துனரைக் கூட ஏமாற்றி “மொட்டை” அடித்து ஊரை விட்டு ஓடச் செய்தார் என்பது இன்னொன்று. • சரவணபவன், ‘உதயன்’ என்கின்ற பத்திரிகையை ஆரம்பித்ததன் மூலம், ஊடக அதிகாhரத்தைக் கையில் வைத்து, பலரது வாய்களையும் அடைத்து, தன்னைப் பற்றிய இரகசியங்கள் வெளிவராமால் பார்த்துக் கொண்டார் என்பது வேறொன்று. • சரவணபவன், பத்திரிகைத் துறையில் அனுபவமும், ஆற்றலும் கொண்டிருந்த வி;த்தியாதரனை, ஆபத்து வரும் போதெல்லாம் தனக்குக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார் என்பது மற்றொன்று. • தன்னை விட்டு வித்தியாதரன் விலகி விடமால் இருப்பதற்காகவும், அவர் ஆற்றலை முழுமையாய் உறிஞ்சிக் கொள்வதற்காகவும், மிகக் கெட்டித்தனமாக அவரது தங்கையையே திருமணம் செய்து, உறவுச் சங்கிலியால் அவரையும் கட்டிப் போட்டார் என்பது இன்னொன்று. • போர்க்காலத்தில் எல்லாம் வித்தியாதரனை முன் தள்ளிவிட்டுப் போர் முடிந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைச் சரவணபவன் தான் அபகரித்துக் கொண்டார் என்பது வேறொன்று. • இனத் துரோகிகள் பலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்;டிருந்த அவ் வேளையில், வி;த்தியாதரனது உறவைப் பயன்படுத்திப் புலிகளை வளைத்துப் போட்டு, சரவணபவன் தப்பித்துக் கொண்டார் என்பது பிறிதொன்று. • நிதிநிறுவனத்தை மூடிய சரவணபவனுக்கு புதிய பத்திரிகை நிறுவனத்தைத் தொடங்கப் பணம் கிடைத்ததன் மர்மம் என்ன? அப் பணத்தை நிதிநிறுவனத்தால் நஷ்டப்பட்டவர்களுக்கு அவர் ஏன் பகிர்ந்தளிக்கவில்லை? இப்படிப்பட்ட துரோகிகளை புலிகள் மன்னித்தது எப்படி? என்பது வேறொன்று. • புலிகளின் தலைவர் பிரபாகரனையே உதயன் பத்திரிகைக்கான விளம்பரதாரியாகவும் பயன்படுத்திய மர்மத்தின் பின்னணி என்ன? என்பது மற்றொன்று. • யாழில் வெளிவந்து கொண்டிருந்த வேறுசில தமிழ்ப் பத்திரிகைகளின் மூடு விழாவிற்கு சரவணபவனே காரணராய் இருந்தார் என்பது இன்னொன்று. • போர் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நடந்த தேர்தலில், தனது பத்திரிகைப் பலத்தைக் காட்டித்தான் கூட்டமைப்புக்குள் தனக்கான ஓர் “சீற்” றையும் சரவணபவன் பெற்றுக் கொண்டார் என்பது வேறொன்று. • அக் கட்சிக்கும் சரவணபவன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தனக்குப் பிடிக்காத, தன் அணி சார்ந்த மற்றவர்களைக் கூடத் தோற்கடிப்பதற்குத் தனது பத்திரிகையை அவர் பகிரங்கமாகப் பயன்படுத்தினார் என்பது பிறிதொன்று. • சிங்களத் தலைவர்களுடனான தொடர்பு சிரச்சேதத்திற்கு உரிய குற்றம் என்னுமாற்போல் எழுதியும், பேசியும் வந்த சரவணபவன், சிங்கள ஐனாதிபதியை அழைத்து, யாழ்ப்பாணத்தில் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வைத்தார் என்பது மற்றொன்று. இப்படியாக ஊகத்தின் அடிப்படையில் இடக்கூடிய இன்னும் பல தலைப்புச் செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. உங்களைச் சந்திக்க வருகிறவர்களிடம் பத்திரிகைத் தர்மம் பற்றி வகுப்பெடுக்கும் உங்களது பத்திரிகைத் தர்மம், எப்படியானது என்பதை எடுத்தக்காட்ட இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்லாமல் விடுவதற்காக, அவர்களை ஏமாற்ற நினைத்து நீங்கள், புரட்டாதிச் சனிக்கு எள் எரிக்கக் கோயிலுக்குப் போகும்படி வெளியிட்ட பத்திரிகைச் செய்தி இன்றும் இளைஞர்களால் நையாண்டியாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவும் ஏன்? உங்களை எமது நண்பராக நினைத்திருந்த எங்களுக்குக்கூட நீங்கள் வஞ்சனை செய்யத் தவறவில்லை. கொழும்பில் நாங்கள் ஆலயம் கட்டியபோது அதற்கென நிதியுதவி வழங்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையைப் பயன்படு;த்தி, அவருக்கு நாங்கள் விலைபோய் விட்டதாகச் செய்திகள் வெளியிட்டு, எங்களை இனத் துரோகிகளாக அடையாளப்படுத்த முயன்றீர்கள். அந் நிகழ்வின் உச்சகட்டமாக, “டக்ளஸ்” அவர்கள் எங்களின் இடத்திற்கு வருகை தந்திருந்த புகைப்படங்களை, உங்கள் பத்திரிகையில்; ஒரு பக்கம் நிறைய வெளியிட்டு, அவருக்கு நாங்கள் வாழ்த்துச் சொல்வதாக ஓர் பொய்யான விளம்பரத்தைத் தயாரித்து, அதனை நாங்கள் தான் வெளியிட்டோம் என மக்களை நினைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன்கீழ் “கம்பன் குடும்பத்தார்” எனப் பெயரிட்டு நீங்கள் செய்த வக்கிர வேலைக்கு நிகரான ஓர் செயலை வேறு எந்தப் பத்திரிகையும் செய்திருக்குமா? என்று தெரியவில்லை. இப்படி வஞ்சகமாக நீங்கள் செய்த திருவிளையாடல்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களைப் பொறுத்தவரை ஆற்றலாளர்கள் எவரானாலும் அவர்கள் உங்கள் கால்களை “நக்கிக்” கொண்டு உங்களிற்கு கீழேதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது பிச்சையாக இட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களை மீறி அவர்கள் செயல்ப்படத் தலைப்பட்டால் பின்னர் எந்த வகையிலேனும் அவர்களை “வேரறுக்கத்” தயங்க மாட்டீர்கள். இதுதான் உங்களது பாணி. நண்பரே! ஒன்றை மறந்து போகாதீர்கள்! சிலரைச் சில பேர் சில காலம் ஏமாற்றலாம். பலரைப் பலபேர் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எக்காலத்திலும் எவராலும் ஏமாற்றிவிட முடியாது!. இவ்வுண்மையை வெகுவிரைவில் நீங்கள் உணரப் போகிறீர்கள். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்” என்றும் “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றும் நம் தமிழ்ப்புலவர்கள் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. திருமுருகன் மீதான உங்களது பழிவாங்கும் படலத்தில் பொது மக்களுக்குப் பல ஐயங்கள் எழுந்துள்ளன. இரண்டு நிறுவனங்களை மூடும்படி “கவர்னர்” உத்தரவிட்டதாய் நீங்கள் வெளியிட்ட செய்தியில், திருமுருகனது பெயரையும் அவரது நிறுவனத்தினது பெயரையும் வலிந்து சேர்த்திருக்கும் நீங்கள், மற்றைய நிறுவனத்தின் பெயரையோ, அதை நடத்துபவர்களின் பெயரையோ வெளியிடாமல் விட்டிருப்பது ஏன்? என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இல்லங்களை மூடும் படி கவர்னர் உத்தரவிட்டதாக நீங்கள் வெளியிட்ட செய்தியினை, மறுநாளே “கவர்னர்” மறுத்திருக்கிறார். அதிலிருந்து அச்செய்தி பொய்ச் செய்தி எனத் தெரியவருகிறது. முக்கிய பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, தலைப்புச் செய்தியாக இட்டிருக்கும் உதயன் பத்திரிகையின் மீது இலங்கையின் ஊடக நிறுவனம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அறிய மக்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். தான் சொன்னதாக ஓர் பொய்ச் செய்தியை வெளியிட்ட “உதயன்” பத்திரிகை மீது “கவர்னர்” இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கமாலிருப்பது ஏன்? மக்கள் கேட்டு நிற்கிறார்கள். ஒரு வேளை பலரும் சொல்லுமாற்போல் மதம் சார்ந்த ஒரு அரசியலுக்குள் கவர்னர் அகப்பட்டிருக்கிறார் என்பது நிஐம்தானா? இது மக்களின் அடுத்த கேள்வியாய் இருக்கிறது. திருமுருகனிடம் பல வகையிலும் பயன் பெற்ற பலரும், இன்று அவர்மேல் வீண்பழி சூட்டப்பட்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து நிற்பது வேதனை தருகிறது. நம் தமிழ்ச் சமூகம் யார் எதைச் செய்தாலும், “வீரமிலா நாய்களாய் நெட்டை மரங்கள் என நின்று புலம்பும் பெட்டைப் புலம்பல்” செய்வதை விட வேறெதுவும் செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள் போல. மக்களின் அமைதி, புயலுக்கு முன் வரும் அமைதி. அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படாதீர்கள்.! பின்னால் வரப்போகும் புயலை நீங்கள் தாங்க மாட்டீர்கள். இன்று நீங்கள் பத்திரிகை நிறுவனத் தலைவர், சிறந்த வியாபாரி என்ற நிலைகளைத் கடந்து விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் பிரதிநிதியாகவும் மாறியிருக்கிறீர்கள். அதை நினைந்து நீங்கள் நடப்பதாய்த் தெரியவில்லை. உங்களது கேவலமான செயல்கள் உங்கள் கட்சியையும் பாதிக்கப் போவது நிச்சயம். நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். திருமுருகனை வீழ்த்தவென நீங்கள் போட்ட சுருக்குக் கயிற்றில் இப்போது உங்களது கால்களே மாட்டிக் கொண்டிருக்கிறன. அண்மைக் காலமாக “வலம்புரி” யினது எழுச்சியையும், “உதயனது” வீழ்ச்சியையும் மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் உங்களது இழி செயல்களால் நீங்கள் தொடங்கிய “உதயனுக்"கு நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்! எனக் கேட்டுக் கொள்கிறேன். இக்கடிதம் உங்களை நிறையக் காயப்படுத்தும் என்பது நிச்சயம். இதிலி ருக்கும் “செவிகைக்கும் சொற்களை” ஏற்றுத் திருந்தினால் அது உங்களுக்கு நல்லது. அதைவிடுத்து ஜெயராஜு க்கு எதிராக அடுத்த என்ன சூழ்ச்சி செய்யலாம்? என நினைக்கத் தொடங்குவீர்களே ஆனால், தர்மத்தின் சாட்டையடிக்கு விரைவில் ஆளாவீர்கள் என்பது மட்டும் நிச்சயம். அன்பன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் (Facebook)
  6. சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂
  7. 👍.... நீங்கள் சொல்லியிருப்பது தான் சரி என்று நினைக்கின்றேன், ஏராளன். அவருக்கு இது விருப்பம், அது விருப்பம் என்று சொல்லி சொல்லியே செய்வார்கள். எங்களின் பக்கத்தில் 31 நாட்களுக்கு தினமும் விளக்கடியில் வைப்பதும் அவருக்கு விருப்பமான உணவு மற்றும் சிற்றுண்டிகளையே. 🤣........... வாசலில் வந்து நின்றாலும் நின்று விடுவார்.........
  8. அவர் சிந்தனை வாழ்க! இன்னும் சம்பந்தருக்கு எட்டு வைக்கவில்லை என்பதால், தொடர்ந்து ‘வைச்சு செய்யலாம்’ என்கிறீர்கள். எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம். உங்கள் முகம் தனியானது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
  9. முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள்ளது. இந்நால் தமிழ் நிலத்திற்கு அப்பால் உள்ள வாசகர்க்கும் ஆனதால், பெரியாரின் நிகரற்ற வாழ்வு பற்றிய குறிப்பும் வரையப் பெற்றுள்ளது. முன்பு பேரா. தில்லைநாயகம் அவர்கள் தமது திருக்குறள் தமிழ் உரை மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்குத் தமிழில் அணிந்துரை தர அடியேனுக்கு அன்புக் கட்டளையிட்டது போல், இந்நூலுக்கு ஆங்கிலத்தில் அறிமுகவுரை தரப் பணித்தது எனது எழுத்துக்கான வெகுமதி. இனி அந்த அறிமுகவுரையும் இறுதியில் நூலின் அட்டையும் : PREFACE This book by Prof. S.Thillainayagam is in two parts, the first part is the English translation of the eight chapters of the book Materialism (Porulmudhalvaadham) penned by Periyar in Tamil and the second a brief sketch on Periyar's life and times. The target reader is obviously the non-Tamil speaking common man in India and outside and hence the author has naturally come out with a simple but powerful language befitting Periyar's message to the world at large. As the book is mainly for the non-Tamils, Thillainayagam has found it imperative that a chapter on Periyar is appended. The first part Materialism deals with Periyar's down to earth philosophical reflections on god, religion, soul, I (who am I ?), heaven and hell etc… Periyar, being a man for all, cannot afford to be an abstruse philosopher catering only to the elite. He comes down heavily on the society's stereotypical notions on religious charity, sin, virtue and good conduct in simple words and examples from day-to-day life. Atheism and rationalism were the be-all and end-all of his life. The title 'Periyar' bestowed upon him means 'Great Man' in Tamil. The first part Materialism shows Periyar as 'Periyar' in his own words and the second part Periyar’s Life, in the words of Thillainayagam, shows why and how Periyar is 'Periyar' in his deeds. A brief but perfect picturisation of Periyar right from his boyhood is a deserving tribute to the man he was, besides being a wholesome introduction to someone who had sown the seeds of the Self-Respect Movement in Tamil Nadu and had seen it within his lifetime, grow and blossom as the most humanitarian movement. The problems Periyar faced in his struggle for the oppressed classes were multifaceted. He had to fight not just against the regressive forces in the Brahminical camp but even against people of great stature, the likes of Mahatma Gandhi and Rajagopalachari who were steeped in the varnashram and the Manu dharma evils. Thillainayagam has taken great efforts to prove his point with facts and figures. I'm sure that this will earn him kudos from all progressive-minded people. S. Somasundaram, Professor of Mathematics (Retd.) Manonmaniam Sundaranar University Tirunelveli. https://www.facebook.com/share/p/yE43CLxhY4yCMXTU/?mibextid=oFDknk
  10. அதுதானே பார்த்தன், ஒருநாளும் வராத சொர்ணமக்கா அண்டைக்கு கனகரின்ரை எட்டுக்கு வந்து, எட்டுப் படையலுக்குப் பக்கத்திலை கன நேரமாக ஏன் இருந்தவ எண்டு.
  11. 🤣........ எங்களிடம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குதே........ இதில் பலருக்கு போகிற வயதும் வந்து கொண்டிருக்கின்றது............ 🤣......... எங்களின் கவிஞர், கார்ட்டூனிஸ்ட் @Kavi arunasalam ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார் நேற்று. அதைப் பார்த்த பின் தான் இதை எழுதும் எண்ணம் வந்தது..............
  12. ஒவ்வொருவருக்கும் எழுதுற கருத்தைப் பார்த்தா குடும்பத்தை பிரிக்கிற மாதிரியே இருக்கு.
  13. இங்கிலாந்து இறுதி நிமிடத்தில் ஒரு கோலை போட்டு இறுதி போட்டியில் ஸ்பெயினை சந்திக்கிறது.
  14. அநேக ஜேர்மனியர்களின் விருப்பம் நெதர்லாந்து வெற்றியடைய வேண்டும் என்பதே....இன்று மட்டுமல்ல இறுதி போட்டியிலும்....
  15. இது தெரியாமல் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலும் போராடினார்களா. ??? 1983. இலும். இப்படியான நினைவுடன். இருந்த பல பேரை. வெட்டினாதும். நீங்கள் சொல்லும் சிங்களவர்கள். தான் 🤣🙏 தமிழர்களுக்கு மறதி அதிகம்
  16. எமது வலியை அவர்கள் உணர்ந்தால் போதும். புத்தகங்கள் எரிவதில் உடன்பாடில்லை. அவை எந்த மொழியில் இருந்தாலும் பொக்கிஷங்களே.
  17. மெஸ்ஸியின் கையில் குழந்தையாக ஸ்பெயினின் 16 வயது ஹீரோ லாமைன் யமால் - வைரல் புகைப்பட பின்புலம் யூரோ கோப்பை அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சை 2-1 என்று வீழ்த்தி இறுதிக்குச் சென்றதன் பின்னால் ஹீரோவாக எழுச்சி பெற்றார் 16 வயது லாமைன் யமால். கால்பந்தாட்டத்தின் உலக ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸி கைக்குழந்தை ஒன்றை கைகளில் சுமந்தபடியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. மெஸ்ஸியின் கைகளில் தவழும் அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, இன்று அதிகாலை யூரோ 2024 அரையிறுதியில் பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பும் ஸ்பெயின் அணியின் பிரமாதமான சமன் கோலை அடித்த லாமைன் யமால் என்ற 16 வயது ஹீரோதான்.மெஸ்ஸி கையில் எப்படி இன்றைய ஹீரோவான குழந்தை வடிவ லாமைன் யமால் என்றால், பார்சிலோனா கிளப்பில் எப்போதும் ஒரு சடங்கு உண்டு. காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் அப்போது எடுத்த புகைப்படத்தில் மெஸ்ஸி கையில் எதேச்சையாக தவழ்ந்தது இன்றைய நட்சத்திரம் லாமைன் யமால்தான். லாமைன், பிரான்ஸை வெளியேற்றிய அந்த சமன் கோலை அடித்த நிலையில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ள சூழலில், இந்தப் புகைப்படம் இன்று வைரலாகியுள்ளது. யார் இந்த லாமைன் யமால்? - ஒரு சுருக்கமான பின்னணி: கேட்டலோனியாவில் 2007-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிறந்தவர் லாமைன் யமால். மொராக்கோ தந்தைக்கும் ஈக்வட்டோகினியா தாய்க்கும் பிறந்தவர் யமால். இவருக்கு 7 வயதாக இருக்கும் போது இவரது குடும்பம் பார்சிலோனாவுக்குக் குடிபெயர்ந்தது. இவர் பார்சிலோனா இளையோர் கால்பந்து அகாடமியில் சேர்ந்தார். யமால் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முழுப்பெயர் லாமைன் யமால் நஸ்ரவ்யி இபானா. 16 வயதிலேயே பார்சிலோனாவுக்கு ஆடிய இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவர் யமால். ஸ்பெயின் யு-15, யு-16 அணிக்கு முதலில் ஆடினார். 2023 யூரோ யு-17 தொடரில் 4 கோல்களை அடித்தார். அதில் பிரான்ஸுக்கு எதிராக செமி பைனலில் நேற்று அடித்தது போல் அதே இடத்திலிருந்து அதே போல் கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரான்ஸ் அன்று 3-1 என்று வெற்றி பெற்றது. நேற்று 2-1 என்று ஸ்பெயின் வெற்றி பெற்றது. இளம் வயதிலேயே பல சாதனைகளுக்கு உரியவராக திகழ்கிறார் யமால். இவர் பெரும்பாலும் இடது கால் ஆதிக்கம் கொண்ட வீரர் ஆவார். அசாத்தியமாக பந்தை எதிரணி வீரர்களிடம் இருந்து கடைந்தெடுத்துச் செல்பவர். இவரது தனிச்சிறப்பு என்னவெனில் சென்டர் பார்வர்ட், அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். அல்லது குறிப்பாக வலது ஓர விங்கர் என்று எந்த நிலையிலும் அசத்தக்கூடியவர். வெகுவேகமாக ஆடக்கூடியவர். மின்னல் வேகத்தில் எதிரணியினரின் தடுப்பு வீரர்களைக் கடந்து வளைந்த ஷாட்களை கோலுக்குள் தொலை தூரத்திலிருந்து அடிக்க கூடியவர். பிரான்ஸுக்கு எதிரான அந்த அற்புத கோல்: பிரான்ஸ் முதல் கோலை அடித்தவுடன் சற்றும் கலங்காது ஸ்பெயின் அதிவேகக் கால்பந்தாட்டத்தை ஆடியது. அப்போது 21வது நிமிடத்தில் பந்து ஸ்பானிய, பிரான்ஸ் வீரர்கள் இருவர் காலிலும் பட்டு யமாலிடம் வந்தது. இடது புறத்திலிருந்து அவர் விறுவிறுவென பிரான்ஸ் கோலுக்குள் நுழைய முயன்றார். ஆனால் கோலுக்கு அருகில் 25 அடியில் பிரான்ஸ் வீரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். யமாலுக்கும் பிரான்ஸ் கோல் கீப்பர் மைக் மைக்னனுக்கும் இடையே 7 பிரான்ஸ் வீரர்கள் மறித்துக் கொண்டிருந்தனர். முதல் டச்சில் ஷாட் ஆடப்போகிறார் என்று பிரஞ்சுப் படை உஷாரானது. ஆனால் பந்தை வலது புறம் விரட்டி கொண்டு சென்றார். உடனேயே 2 பிரான்ஸ் வீரர்கள் இவரை மறித்தனர். ஆனால் இவர் மறுபடியும் இடது புறம் நகர்ந்தார். அடுத்த நகர்வு கொஞ்சம் ஸ்பேஸ் கிடைத்தவுடன் தனது வழக்கமான இடது முன் பாதத்தில் இடி போல் ஒரு ஷாட்டை தூக்கி அடிக்க அனைத்து பிரெஞ்ச் வீரர்களும் கோல் கீப்பரும் அண்ணாந்து பார்க்க கோல் போஸ்ட்டைத் தடவிய படி கோலுக்குள் நுழைந்தது பந்து. இந்த ஷாட்டை அடிக்கும் முன் இரண்டு பிரான்ஸ் வீரர்களுக்கு இடது, வலது, வலது இடது என்று போக்குக் காட்டியது அற்புதம். லாமைன் யமாலின் இந்த கோல் பல கால்பந்து யுகங்களுக்குப் பேசப்படும் என்று நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். 25 அடியிலிருந்து பிரான்ஸின் உலகின் சிறந்த கோல் கீப்பர் மைக்னன் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அடித்த ஷாட் திகைப்பூட்டும் ஷாட் ஆகும். அதுவும் அவரது இடது பாதத்திலிருந்து உயரே எழும்பி வளைந்து கோல் போஸ்ட்டை தடவி கோலுக்குள் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் கோலின் பிரமையிலிருந்து மீள்வதற்குள் அடுத்த 5 நிமிடங்களில் யமாலின் ஒரு மின்னல்வேக ஆட்டம் பிரான்சின் உட்பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது யமாலின் உதவியுடன் ஆல்மோவின் கோலாக, வெற்றி கோலாக அமைந்தது. இளம் வயது சாதனை: 16 வயது 362 நாட்களே ஆன யமால், இளம் வயதில் யூரோ அரையிறுதி ஆடிய வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார். 1958 உலகக்கோப்பையில் இதே பிரான்சுக்கு எதிராக பிரேசிலிய கால்பந்து மேதை பீலே அரையிறுதியில் ஆடும்போது அவருக்கு 17 வயது 244 நாட்கள். அதேபோல் இளம் வயதில் யூரோ அரையிறுதியில் கோல் அடித்தவரும் யமால்தான், இவருக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 வயது 245 நாட்களில் யூரோவில் கோல் அடித்து சாதனையை வைத்திருந்தார். இந்த வெற்றியோடு அரையிறுதி அல்லது இறுதியில் ஸ்பெயின் 5 முக்கியத் தொடர்களில் தோற்கடிக்கப்பட்டதே இல்லை என்ற சாதனையை வைத்துள்ளது. யூரோ கோப்பை அரையிறுதியில் லாமைன் யமால் என்னும் உலக நட்சத்திரம் உதயமானார் என்றால் அது மிகையானதல்ல. https://www.hindutamil.in/news/sports/1277363-messi-pose-with-baby-lamine-yamal-details-about-the-viral-photo-explained-3.html
  18. முன்னை இட்ட தீ, முப்புரத்திலே… பின்னை இட்ட தீ, தென் இலங்கையிலே. - பட்டினத்தார்.-
  19. எனக்கும் இந்தக் கதையை வாசிக்கும் போது, சம்பந்தரின் நினைவுதான் வந்து போனது. 😂
  20. "ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, commonly used in poetry அ =எட்டு அ = அழகு ஆ =பசு ஈ =ஒரு பூச்சி, கொடு உ =சிவன் ஊ =தசை ஐ =ஐந்து ஓ=மதகு, நீர் தாங்கும் பலகை கா =சோலை கு =பூமி கூ =பூமி கை =கரம் சா =இறப்பு சே =அழிஞ்சில் மரம், எருது சோ =மதில் தா =கொடு து =பறவை இறகு தே =நாயகன் தை =ஒரு மாதம் நா -நாக்கு நௌ =மரக்கலம் பா =பாட்டு பூ =மலர் வை =வைக்கோல் பே =மேகம் பை =பாம்புப் படம், உறை மா =மாமரம், பெரிய மீ= ஆகாயம் மூ =மூன்று மை =அஞ்சனம் யா =அகலம் வீ=பறவை தீ =நெருப்பு து= உணவு நீ = முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல் கோ = அரசன் என்று பொருள் போ = கட, முன்னேறு, போய்விடு, புறப்படு
  21. இதில் சில சொற்கள் தெரிந்தாலும் சில சொற்கள் புதிதாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி தில்லை.
  22. நல்ல கேள்வியுடன் தொடங்கிய நல்ல கவிதை.
  23. 🤣........... பலரின் மனநிலைகள் எனக்கும் விளங்குது சிறி அண்ணை, ஆனாலும் ஏதோ 'சரி... விடுங்கப்பா......' என்று சொல்ல வேண்டும் போலவும் இருக்கின்றது. இதுவரை எழுதிய பதினொரு குறுங்கதைகளில் இரண்டு அவரை நினைத்து எழுதியது........ இலேசில் விட்டுப் போக மாட்டார் போல.......
  24. இளைஞர் வேளாண் தொழில்முனைவோர் கிராமம் திட்டத்தின் கீழ் வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஒரு லீற்றர் தேங்காய் நீர் 14 ரூபாவாகக் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், தேங்காய் நீரின் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மில்லியன் டொலர் வருமானம் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 13,348 மெற்றிக் தொன் தேங்காய் நீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 11.16 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு (2023) இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் நீரின் அளவு 11,365 மெற்றிக் தொன் ஆகும். இதற்கமைய, ஒரு தேங்காயில் 250 முதல் 300 மில்லி மீற்றர் வரை தண்ணீர் உள்ளதுடன், மிகச்சிறிய தேங்காயில் சுமார் 150 மில்லி மீற்றர் தேங்காய் தண்ணீர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தேங்காய் நீரின் செறிவு இந்தோனேசியாவில் தென்னையில் காணப்படும் தேங்காய் நீரை விட இலங்கையில் தேங்காய் நீரின் செறிவு அதிகமாக இருப்பதாகவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். மழைக்காலத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், வறட்சி காலத்தில் உற்பத்தி குறைவதாகவும் அவர் கூறியுள்ளார். https://tamilwin.com/article/multi-million-dollar-income-from-coconut-water-1720401188
  25. யாழ் வீடுகளில் வீணாவதில்லை, கோவில்களில்தான் வீணாவது அதிகம், அத்துடன் கேவில்களில் வீணாகும் பாலையும் சேர்த்திருக்கலாமே 🤣
  26. கோப்பிச் செடி மலர்களுடன் .........! 😁
  27. கருட புராணமும் இவைபோல பல விடயங்களையும் கூறுகின்றது.........! 👍 நல்லாயிருக்கு...... தொடர்ந்து எழுதுங்கள்........!
  28. பொதுவா முதல் அண்ணன்தான் பொறாமையில் அடிப்பார்.......காரணம் 1 - அப்ப அவருக்கு திருமணம் ஆகியிருக்காது..........காரணம் 2 - மணமாகியிருந்தால் டேய் தம்பி நான் படும் துன்பத்தை நீ படாதையடா என்னும், பாசத்தில்.....! மூன்றாவது அண்ணனை ஒரு அண்ணானாகவே மதிப்பதில்லை.......நீ ....வாடா போடா நாயே பேயே என்று ஒரு நண்பனாகத்தான் புழங்குவது ........அவரே பூசை போடுறார் என்றால் ரொம்ப ரொம்ப பொறாமை போல .......! 😂
  29. இதை நாம சொல்லுறது தாமரைக்குளம்..பொடிநடையாய்..ஞாயிற்றுக் கிழமைகளில் போய் ..தாமரைக் குளத்தில் குளித்து விட்டு... (நீச்சல் கதைமட்டும் கேட்காதேங்கோ) கேணியில் அள்ளி ஊத்தின சந்த்தோசம் சொல்லில் அடங்காது...ஆழ்வானில் காதலியிடம்(மனிசியுடன்)கடலை போட்டதைக்கண்ட ...மூன்றாவது அண்ணனிடம் பூவரசம் தடிப்பூசை...இன்னமும் மறக்கேல்லை..
  30. இதுதான் இவர் செலக்ட் பண்ணுப்பட முக்கிய காரணம்...எழுதுங்கோ நல்லயிருக்கு..
  31. கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை பழிவாங்கி, தன்னை புனிதராக காட்ட முயற்சிக்கிறார் போலும்.
  32. அட நம்ம கும்பன் வாந்தி இவரு உலக மகா கள்ளன் எல்லோ
  33. நன்னீர் மீன்கள் பங்களாதேசிகள் அதிகம் வாழும் லண்டனின் கிழக்குப் பகுதிக் கடைகளுக்குத் தினமும் வரும். வயிறு கடல் மீனை விட மிகவும் பெரிதாக இருக்கும். கடல் பேத்தை மீன்களைப் போலவே இவை இருக்கும். பங்களாதேசிகள் காத்திருந்து வாங்குவார்கள். சுவையாகத் தான் இருக்க வேணும் என நினைக்கிறேன்.
  34. தனக்கு தனக்கு என்றால், சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம் 🤣😂😂😂😂😂😂😂 இவ்வளவும் தகவல்களையும் தெரிந்த, அறிந்த, புரிந்த ஜெயராஜ் இத்தனை நாள் நித்திரையிலோ இருந்தார்? எல்லாக் கள்ளர்களது நிறமும் வெழுக்கத் தொடங்கியிருக்கிறது,.... 😏
  35. ஓ இதுக்கு தான் 8 நாட்களாக இருந்து திட்டி அனுப்புகிறார்களா?
  36. உங்களுக்கு எல்லாம் ஒரு அறிவு வேணாமா...தள்ளாத வயதில் இறந்து போன ஒரு சீவனப் பற்றி பக்கம், பக்கமா எழுதி என்ன செய்யிறீங்கள்...இறந்தவர் உயிர்த்து வந்து தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ள போறாரா..ஒரு மனித தன்மை வேணாமா....🙏
  37. மூவரையும் படத்திலும், இருவரிடம் போனிலும், ஒருவரை இரு முறை நேரிலும் சந்தித்துள்ளேன். அனைவரும் பழகுவதில் தங்கப் பவுன் தான்..🙏
  38. சம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. கிட்டத்தட்ட பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர். அது ஒரு புறம் இருக்க.... சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி கட்டுக்கோப்புடன் வைத்திருந்திருக்கலாம்.
  39. நோயாளிகளை விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா? - போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கேள்வி Published By: VISHNU 09 JUL, 2024 | 12:16 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தமது சிறிய வயது காலத்தில் இருந்து இந்த வைத்தியசாலையை பயன்படுத்தி வருகிறோம். இங்கு வைத்தியர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தற்போதைய வைத்தியர் அர்சுனா வெளிப்படுத்தியதன் மூலம் நாம் அறிந்து கொண்டோம். நாங்கள் சிகிச்சைக்கு வரும்போது வைத்தியர் இல்லை என பலமுறை திரும்பிச் சென்றிருக்கின்றோம், ஆனால் இங்கு இருபதுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருக்கும் விடயம் தற்போது தான் எமது மக்களுக்கு தெரியவந்தது. இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் பலர் வைத்தியசாலைக்கு வராது வீடுகளிலும் தனியார் வைத்திய சாலைகளிலும் கடமையாற்றுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் கடவுளுக்கு நிகராக வைத்திய துறையை கருதி சேவை செய்து வரும் நிலையில் சிலர் அவர்களையும் குழப்பி தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக வைத்தியர்கள் குறித்த வைத்திய சாலையை விட்டு வெளியேறச் சென்று இருக்கிறார்கள். அவர்களுடன் வைத்தியசாலையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத வைத்தியர்களும் நிர்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருப்பதை நாம் அறிகிறோம். வைத்தியர் ஒருவர் வைத்திய சாலையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியதற்காக ஏழை நோயாளிகளை கைவிட்டு விட்டு சென்ற வைத்தியர்கள் தமது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் போராட்டம் என கூறி வெளியேறிச் செல்வீர்களா என குறித்த பெண் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/187993
  40. பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கு வெற்றி கிடைத்திருந்தால் அது ஐரோப்பிய நாடுகளுடையே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கும். இது அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சாட்டையடி. 240 இடங்களுக்கு மேல் எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 143 இடங்களே கிடைக்கப்பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டனர். தேர்தல் நெருங்கிவர மக்கள் இவர்களின் உண்மையான முகத்தை உணரத் தொடங்கினர். மக்றோனின் 64 வயது ஓய்வூதிய எல்லையைக் கலைத்து 60 வயது ஆக்குவோம் என்றனர். ஆனால் படிப்பு முடிந்து 23 வயதுக்கு பின் வேலையில் சேர்பவர் 66 வயதுவரை வேலை செய்ய வேண்டும் என்பதை மறைத்தனர். 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருமான வரிக் குறைப்பு செய்வோம் என்றனர். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவர்கள் அதிக வரி கட்ட வேண்டுமென்பதை வெளிப்படுத்தவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் துன்பத்திலுள்ள எமதருமை பிரெஞ்சு மக்களுக்காக… என்று பதிலளிக்கும் இவர்களின் திட்டங்கள் யாவும் பணக்காரர்களுக்கே மறைமுகமாகச் சார்பானதாக இருந்தன. பெயரளவிலேயே பெண்களுக்கான சமவுரிமை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்தன. ஊனமுற்றவர்கள் என்ற சொல்லே இவர்களது விஞ்ஞாபனத்தில் இருக்கவில்லை. கக்கூஸ் துப்பரவு செய்ய கருப்பு தோல் வேண்டும். உயர் பதவிகளுக்கு மண்ணின் மைந்தர்களான வெள்ளைத்தோல் வேண்டும் என்பது இவர்களது வெளிப்படையான கொள்கை. இக் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்களின் நடத்தை பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 300 வேட்பாளர்களில் 4 அல்லது 5 பேர் தவறு செய்தவர்களாக இருப்பது சகஜம், விசாரிப்போம் என்று கட்சித் தலைவர் தெரிவித்துருந்தார். இன்றைய ஒரு செய்தியின்படி சிறுவர் பாலியல் குற்றவாளி, பணயக் கைதியாக ஒருவரைப் பிடித்து தண்டனை கிடைத்தவர் போன்ற குற்றவாளிகள் முதல் கறுப்பினத்தவர் ஒருவரை மிருகத்துடன் ஒப்பிட்டு படம் போட்டவர், நாசிகளின் சின்னத்துடன் முகப்புத்தகத்தில் படம் போட்டவர் வரை 26 பேர் இக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர். இதுதான் தீவிர வலதுசாரிகளின் உண்மையான முகம்.
  41. கூர்ப்பியலில் இருக்கும், மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கும் பல புதிர்களில் பறவைகளின் பேச்சுக் கற்கும் திறனும் (vocal learning) ஒன்று. பேச்சைக் கற்றுக் கொள்ளும் இன்னொரு குடும்பமான மனிதக் குடும்பத்திற்கும், பறவைக் குடும்பத்திற்கும் 150 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், பல பறவையினங்களில் பேச்சுக்குக் காரணமான ஜீன்கள் மனிதக் குடும்பத்திலும் இருக்கின்றன. பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், கிளி மட்டுமல்லாமல், பாடும் இயலுமை உடைய பல பறவை இனங்களிலும், மைனா (Starlings), கிளிக் குடும்பங்களிலும் பேச்சு அந்த மாதிரி வரும். கிளிகளின் புத்திக் கூர்மையும் சேர்ந்து கொண்டால், அவையிட பேச்சு அந்த மாதிரி இருக்கும்😂! இதைப் பற்றிய மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகளை செய்த எரிக் ஜார்விசின் ஒரு ஆய்வுக் கட்டுரை இணைப்பு: https://www.jneurosci.org/content/24/13/3164.long
  42. மருத்துவர் கோபிஷங்கரை நேற்று எட்ட இருந்து பார்த்தேன். அவருடைய பெறாமகளின் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தார். இவர் வருவார் என்று தெரிந்ததுமே சந்தித்துப் பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு தான் போயிருந்தேன். பின்னர், நான் ஏதும் அர்த்தமில்லாமல் உளறி வைக்க, என்னையும் தன் பகிர்வுகளில் ஒரு பாத்திரமாக்கி விடுவாரோ😂 என்ற அச்சத்தில் பேசாமல் இருந்து விட்டேன்.
  43. இயங்காத X-Ray கூடத்தில் வேலை செய்யும் Radiographerக்கும் மற்றும் மருந்தகமே இல்லாதமருந்தகத்தில் வேலை செய்யும் மருந்தாளருக்கும் எப்படி over time கிடைக்கின்றது. அதிஸ்டசாலிகள் அல்லவா?
  44. போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்டதையடுத்து 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனா். அவர்களை உடனடியாக அம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1391243

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.