Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3054
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/19/24 in all areas

  1. நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் பல Services கள் இயங்காமல் உள்ளது. பல ஆயிரம் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன இங்கு. போர், இயற்கை சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றால் மட்டுமல்ல, தொழில் நுட்ப கோளாறால் கூட உலகம் முடக்கப்படக் கூடிய சூழல் ஒன்றில் வாழ்கின்றோம்.
  2. அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள் தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்) முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான் பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு இது நம்ம ஏரியாக் கதை இது.. பட்டென்று புடுங்கி..பச்சையாய் தாற அடி ..இன்னும் சுவையாய் இருக்கும் ... எனக்கு நிறைய அனுபவம்
  3. 1997 இல் உருவாக்கப்பட்ட ரஷ்சியாவின் Kaspersky சைபர் செக்குரிட்டி மென்பொருளுக்கு அமெரிக்காவில் தடை. நேற்று அது அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டது. இன்று.. உலகமே பெரிதும் அறியப்படாதிருந்த அமெரிக்க.. crowdstrike க்கு பயங்கர விளம்பரம். ஒரே நாளில் உலக அறிமுகம். இணையத்தை 1990 களில் அமெரிக்க இராணுவப் பாவனையில் இருந்து வியாபார மற்றும் உளவு நோக்கத்திற்காக திறந்துவிட்ட போதே.. ஒரு நாள் இது நிகழும் என்று அப்பவே எதிர்வு கூறியோர் பலர். மக்களை மந்தைகளாக்கி மேற்குலகின் வழியில் கொண்டு சென்றவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்த இடத்தில் புலிகளை நினைவு கூறுவது சிறப்பு.. புலிகள் தந்தி இல்லாத தொலைபேசிகளை பாவிப்பினும்.. தந்தி உள்ளதையும் மீளமைத்து பாவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தப்ப முடிந்தது. எப்போது அவர்கள் மேற்குலக சற்றலைட்டுக்கள் சார்ந்த தொழில்நுட்பத்துக்குள் நுழைந்தார்களோ.. அப்பவே அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுவிட்டார்கள்.
  4. பூவரசம் கட்டையில்தான் இடியாப்ப உரல் செய்வது....... அதன் வேரில் இடியாப்ப உரல் செய்வது எல்லாம் எமது தாத்தன் காலத்துடன் போச்சுது ....... இப்ப ஒரு உரல் செய்யுமளவு வேருள்ள பூவரசு எங்கு இருக்கு......அந்தளவு வைரமான வேருள்ள பூவரசு வளர குறைந்தது 50 வருடமாவது இருக்க வேண்டும்...... அதெல்லாம் நாங்கள் தறித்து மதில்கள் கட்டி விட்டம் .......! ஒரு வீட்டில் யாராவது மோசம்போனால் முதல் வேலையாக எல்லையில் நிக்கும் பெரிய பூவரசு ரெண்டைத் தறித்து சுடலைக்கு அனுப்பி விடுவார்கள்......! நெஞ்சாங் கட்டை சறுக்கினால் பிணம் சுருண்டு எழும்பிவிடும் ......பிறகென்ன கட்டையால் அடித்து வளத்தி எரிப்பார்கள் ........ அவரும் சமத்தாக ஒரு பிடி சாம்பலாவார் ......! ஒரு தகவல்: இப்பவெல்லாம் வீர விறகுகள் வைத்துத்தான் எரிப்பது.......எதை வைத்து எரித்தாலும் மனித உடலின் சாம்பல் ஏனையவற்றில் இருந்து தனியாகத் தெரியும்......வாளியால் தண்ணீர் ஊற்றி அலசும் போது ஏனைய சாம்பல் கரைந்து கலைந்து போக இது மட்டும் எலும்புகளும் உக்கி தனியாக வெள்ளையாய் தெரியும் ...... அவற்றைச் சேகரித்துத்தான் கடல், குளம், ஆற்றிலோ விட்டு காடாத்து செய்வார்கள்.....! இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியக்கூடியவாறு பல தகவல்கள் இதை வருகின்றன......நன்றி ரசோ ........! 👍
  5. கள்ளப்பந்து ------------------ கட்டுப்பந்தில் தான் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரே பந்தை தைத்து தைத்து ஒரு வருடம் கூட வைத்திருப்போம். காற்று உடனேயே போகுது என்று தெரிந்தால், உள்ளுக்குள் இருக்கும் பிளாடரை வெளியே எடுத்து, தண்ணீர் வாளிக்குள் அமுக்கி, எங்கே ஓட்டை என்று கண்டுபிடித்து ஒட்டுவோம். ஒரு பந்தின் மேற்பகுதி முப்பத்தி இரண்டு துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும். அதில் இருபது அறுகோண துண்டுகள், பன்னிரண்டு ஐங்கோண துண்டுகள். ஒவ்வொரு துண்டையும் நாங்கள் 'ஓ' என்ற பெயரில் தான் சொல்லுவோம். 'ஓ' பிய்ந்து விட்டது, 'ஓ' மாற்ற வேண்டும், இப்படித் தான் முப்பத்தி இரண்டில் எந்த துண்டும் குறிப்பிடப்படும். ஏன் ஒரு துண்டை 'ஓ' என்று சொல்கின்றார்கள் என்று இன்று வரை தெரியாது. அத்துடன் ஊரில் பயன்பாட்டில் இருக்கும் சில சொற்களுக்கு நான் வேறெங்கும் விளக்கமும் கேட்பதில்லை. 'இது தமிழா....... நீ தமிழனா........' என்ற மாதிரி பார்த்து விடுவார்களோ என்ற பயம். பின்னர் ஒட்டுப்பந்து வந்தது. கப்பலில் போய் வருவோர் கொண்டு வந்து கொடுத்தனர். அதுவும் பெரிய கழகங்களுக்கு மட்டுமே கொடுத்தனர். எல்லோருக்கும் ஒரு பெரிய கழகமும் இருந்தது. அங்கே போய் அந்த பந்தை விளையாட கொடுங்கள் என்று கேட்டால், இலேசில் கொடுக்கவும் மாட்டார்கள். ஒட்டுப்பந்தில் விளையாட சில மேலதிக விதிகளும் இருந்தன. முதலாவது, கண்டிப்பானது, ஒட்டுப்பந்தை சுவரில் அடிக்கக் கூடாது. ஒட்டுப்பந்தில் தையல் இல்லை. ஒட்டுப் பிரிந்தால் பந்தை தூக்கி எறிய வேண்டும் என்ற நிலை ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் ஒட்டுப்பந்தை அது பிரிந்தால் எப்படி ஒட்டுவது என்று உள்ளூரிலேயே ஒரு வழி கண்டுபிடித்தனர். 2010ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பை நடந்தது. அடிடாஸ் நிறுவனம் ஒரு பந்தை அந்த உலகக் கோப்பைக்காக தயாரித்திருந்தார்கள். பலருக்கும் அந்தப் பந்து இப்பொழுதும் ஞாபகம் இருக்கும். அந்தப் பந்தை எல்லா உலகக் கோப்பை விளையாட்டு வீரர்களும் திட்டித் தீர்த்தனர். மொத்தமே எட்டுத் துண்டுகளால் தான் அந்தப் பந்து செய்யப்பட்டிருந்தது. அடித்த பந்து வளையாமல் நேரே போனது, வேகத்தை வேறு மாதிரி இழக்கின்றது என்று அந்தப் பந்தில் பல குற்றச்சாட்டுகள். கடைசியில் நாசாவும் அந்தப் பந்தை வைத்து சில பரிசோதனைகள் செய்து ஒரு அறிக்கை வெளியிட்டது. எண்ணற்ற தடவைகள் தைத்தும், ஒட்டியும் விளையாடிக் கொண்டிருந்த எங்களின் பந்து கடைசியில் மோசம் போய்விட்டது. அப்பொழுது பருத்தித்துறையில் இருந்த யுனைடெட் புத்தக சாலையில் பந்து விற்பார்கள். ஒரு பந்திற்கு அவர்கள் சொன்ன மிகக் குறைந்த விலையே எங்களை விற்றாலும் வராது. பக்கத்து ஒழுங்கையில் போய் ஒரு மாட்ச் விளையாடுவோமா என்று கேட்டோம். விளையாடலாம், ஆனால் நாங்கள் பந்து கொண்டு வர வேண்டும் என்றார்கள். ஏன், உங்கள் பந்திற்கு என்ன நடந்தது என்று கேட்டோம். எங்கள் பந்து மோசம் போன கதையை சொல்லாமலேயே. அவர்களுடைய பந்தில் பல இடங்களில் 'ஓ' பிய்ந்து விட்டதால், கடையில் தைக்கக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள். உடுப்பிட்டி வீதியில் உடுப்பிட்டிச் சந்திக்கு அருகில் செருப்புகள், பந்துகள் போன்றன தைக்கும் கடை இருந்தது. அடுத்த நாள் நாங்கள் சிலர் அங்கே போய், பந்து தைக்க கொடுத்தோமே, முடிந்து விட்டதா என்று கேட்டு, அந்தப் பந்தை வாங்கி வந்துவிட்டோம். பின்னர் பக்கத்து ஒழுக்கைக்காரர்கள் போய் அதே பந்தைக் கேட்டிருப்பார்கள் தான். அவர்கள் சில மாதங்கள் ஒரு பந்தில்லாமல் வெறுமனே சுற்றித் திரிந்தார்கள். அந்தப் பந்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் பந்தில் 32 துண்டுகள் இருக்கவில்லை. அந்த பந்து தைப்பவர், அடிடாஸ் நிறுவனம் போலவே, தானே ஒரு புது டிசைனில் பந்துத் துண்டுகளை செய்து தைத்திருந்தார். அவை அவரிடம் மிஞ்சி இருந்த துண்டுகளாகவும் இருந்திருக்கும். அந்த உலக கோப்பை பந்தைப் பற்றி ஒரு வீரர் அன்று சொன்னது: இந்தப் பந்தை செய்தவர் வாழ்நாளில் கால்பந்து விளையாடவில்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
  6. உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்... "உங்களைவாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு .. ஃபெமி கூறினார்: "நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்." 1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை. 2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. 3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை. 4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள். என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன். ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன். அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர். அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது, நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா? இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது. அந்த குழந்தை கூறியது இது தான்: ‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.... பழமையும் புதுமையும்
  7. மனீஷா ஒரு நல்ல போராட்ட குணம் கொண்டவர். புற்றுநோய் வந்து, தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, அதற்கு எதிராக போராடி மீண்ட பெண்மணி. இவர் புற்றுநோய் பீடிக்கப்பட்ட காலத்தில் வெளி வந்த புகைப்படங்களில் தலை மொட்டையாக, மிகவும் மெலிந்து காணப்பட்டார் (அதனையும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்த கூட்டம் ஒன்று இருந்தது) அண்மையில் வெளிவந்த Heeramandi web Series இல் அட்டகாசமாக நடித்து இருந்தார்.
  8. ஆரம்பத்தில் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது உண்மைதான் . பொது மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் அவர் போகப் போக தன்னை ஒரு ஹீரோவாக எண்ணத்தலைப்பட்டு விட்டார்.அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கின்ற விடயங்கள் தான். சாவகச்சேரி வைத்திய சாலையில் இருந்த 28 வைத்தியர்களில் ஒரு வைத்தியர் கூட நல்லவரில்லையா? ஏன் அவருடைய கருத்துடன் ஒத்துப் போகாமல் முரண்படுகிறார்கள்.பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசக்கல்வியைப்படித்து விட்டு வெளிநாடுகளுக்குப் போய் சொகுசு வாழ்க்கை வாழ முயலாமல் தாயகத்திலேயே கடமையாற்றும் வைத்தியர்களை ஒருசில வைத்தியர்கள் விடும் பிழைக்காக ஒட்டுமொத்த வடமாகாண வைத்தியர்களையே பிழையெனக் கூறுவதும் அதனை வைத்தியர் சங்கத்தில் சொல்லிப் பேசித் தீர்க்காமல் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் போட்டு விளம்படுத்துவதும் அவர் விளம்பரப் பிரியர் என்பதைக்காட்டுகிறது. என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அட்டகாசமாக சிரித்தாரோ அன்றே அவர் மேல் இருந்த மதிப்பு குறையத் தொடங்கி விட்டது. சாவகச் சேரி வைத்திய சாலைக்கு வீடியோக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து வைத்தியர் ரஜீவை வெளியேறச் சொல்லி அவர் கதிரையில் இருந்து கால்மேல்கால் போட்டு இருந்தாரோ அது ஒரு படித்தவன் செயலாகத் தெரியாவில்லை. ஒர வெறித்தான சினிமா பைத்திய ரசிகனாகவே அவரை அடையாளம் காட்டியது.இத்தனைக்கும் வைத்தியர் ரஜீவ் ஆத்தரப்படாமல் நிதானம் காட்டியது பேற்றத்தக்கது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தேவையற்ற வித்தில் அரசியலைக்கலந்து அரசியல்வாதிகளை உள்ளே இழுத்துப் பேசுவது. அவர் கொஞ்சம் உளவியல் ஆலோசனை தேவைப்படும் ஒருவராக மாற்றியுள்ளது.
  9. போறது மட்டுமில்லை... கமல் ரசிகர்கள் ரஜனியை நக்கல் அடிப்பினம் ரஜனி ரசிகர்கள் கமலை வழிச்சு ஊத்துவினம் விஜய் ரசிகர்கள் அஜித்த கன்னா பின்னா எண்டு திட்டுவினம் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு மண்டையில தலமயிரே இல்லை எண்டுவினம் இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்... ரஜனிக்கு கமல்காசனை மாதிரி டான்ஸ் ஆடவே தெரியாது எண்டுறன்... 😄 நீச்சல்தெரியாதவன் தண்ணீக்க நிண்டு தத்தளிக்கிற மாதிரி ஒரு டான்ஸ்! 🤣 தேவையா இது? 😂
  10. எல்லாத்தையும் டிஜிட்டலுக்கு மாத்துறம் எண்டு சொல்லி ஒரு செக்கன்ட்ல எல்லா அழிவு வேலைகளையும் செய்ய சந்தர்ப்பம் கொடுக்கின்றார்கள்..... எங்கையோ இருக்கிற ஒருத்தன் பட்டனை தட்ட..... வீடுகளுக்கு தண்ணியும் வராது.கரண்ட்டும் வராது.கீற்றர்,கூலர் ஒண்டும் வேலை செய்யாது. ரெலிபோனும் வேலை செய்யாது. சாப்பாடும் சமைக்கேலாது. இப்பிடியே கனக்க சொல்லிக்கொண்டு போகலாம்...... 😀 ரஷ்யா.......😎
  11. இந்த வைத்தியர்களை இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பினால் சில பதக்கங்களாவது கிடைக்கும்.
  12. மிகவும் தேவையான அறிவுரைகளில் முக்கியமானது. அதே போன்று ஆசிரியர்களை கடவுளாக நினைப்பதையும் கைவிட வேண்டும்.
  13. CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்.... நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄
  14. உடுப்பிட்டி சந்தியில் தைத்துத் தந்தவர் கால்பந்து விளையாடாமல் இருந்திருக்கலாம். அடிடாஸ் நிறுவனத்துக்கும் தெரியாமல் இருந்திருக்குமா? என்னது அடுத்த ஒழுங்கைக்காரன் பந்தா ? ‘இட்டார் கெட்டார்’ குறுங்கதையை இன்னுமொருக்கால் போய் வாசித்து விட்டு வருகிறேன்.
  15. இவற்றில் இருக்கும் பல விடயங்களை ஒரே இரவில் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. ஆனால், ஒரு தலைமுறையில் மாற்றலாம். செய்ய வேண்டிய சில விடயங்கள் இவை தான்: 1. "மருத்துவர் தான் கடவுள்" என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். "உலகத்திலேயே ஒரேயொரு மருத்துவர் தான் எனக்கு இருக்கிறார்" என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும். சில இடங்களில் பொருளாதார நிலை இதை அனுமதிக்காது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும், இதை ஊக்குவிக்கவும் , பரவலாக்கவும் வேண்டும். 2. ஆரோக்கியம் பற்றிய கல்வியும் அறிவும் (health literacy) எல்லோருக்கும் இருக்க வேண்டும். நீரிழிவு என்றால் என்ன, தொண்டையில் புற்று நோய் என்றால் என்ன, என்பது போன்ற ஒவ்வொரு விடயமும் பயனாளருக்குத் தெரிய வேண்டும். எல்லோரும் செல்போனோடு திரியும் காலத்தில் இது சாத்தியம். விடயம் தெரிந்தால் கேள்வி கேட்கலாம். 3. மருத்துவ தேவை சார்ந்து சில சட்டங்களை இயற்றும் முயற்சியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். நோயாளியின் உரிமைகள் எவை, நோயாளி பற்றிய தகவல்கள் (medical records) யாருக்குச் சொந்தம், ஆகக் குறைந்த சேவை நியமம் (minimum standard of care) என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு சட்டங்கள் மூலம் பதில்கள் வழங்கப் பட வேண்டும். இந்த சட்டப் பதில்களை வைத்துக் கொண்டு மருத்துவ சேவையின் பயனர்கள் நிவாரணம் தேட முடியும். இந்த வழிகளில் முன்செல்லாமல், முகநூல் பதிவுகளில் கோபத்துடன் எழுதுவதால் பயன்கள் இருக்காது. ஆற்று நீரில் போட்ட இலை போல அடிபட்டுப் போய் விடும் இந்தப் பதிவுகளெல்லாம்.
  16. இதைவிட மதிப்புள்ள வசனத்தை எழுத முடியவில்லை........! 🙏
  17. 22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392818
  18. 🤣.......... அதுவும் சரி தான், சிறி அண்ணை.......... நாளைக்கு ஆதவன் ஒன்று போடுவார்கள் பாருங்கள்........... CrowdStrike என்பதை 'கூட்டத்தின் தாக்குதல்' என்று மொழிமாற்றம் செய்யும் அளவிற்கு அவர்களிடம் ஆட்கள் இருக்கின்றார்கள்......🤣.
  19. 🤣........... மூன்றாம் உலகப் போரை தொடங்காமல் விட மாட்டோம் போல...... CrowdStrike நிறுவனத்தின் தலைவரே என்ன நடந்தது என்று விளக்கம் அளித்து விட்டு, மன்னிப்பும் கேட்டுள்ளார். இங்கேயும் புடினா........ அமெரிக்காவின் பெரிய 500 நிறுவனங்களில் அரைவாசி நிறுவனங்கள் CrowdStrike இன் Anti-Virus Software உபயோகிக்கின்றார்கள். அதில் மைக்கிரோசாப்ட்டின் ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளவர்கள் மட்டுமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மற்றவர்கள் நாங்களும் ஏன் CrowdStrike மென்பொருளை எங்கள் நிறுவனத்தில் பாவிக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்......... வெள்ளிக்கிழமை வேற.........
  20. யாழ் முன்பை விட‌ இப்ப‌ வேக‌மாக‌ இய‌ங்குது ஒரு பிரச்ச‌னையும் இல்லை அண்ணா..........................
  21. பொழுதெல்லாம் பேசச்சொல்லும் ........! 😍
  22. யாழ்ப்பாண புலனாய்வு அர்ஜூனாவின் போராட்டம், புலம் பெயர்ந்தோருக்கு ஒரு அருமையான பாடம் ..... வடக்கில் பிறந்து, வடக்கு - கிழக்கு - தெற்கை புரிந்து, ஏற்கனவே தான் வாழ்ந்து, பணியாற்றிய இடத்துக்கு சேவை செய்ய நினைத்து, அங்கு போனால் ஊழல் அம்மணமாக ஆடுகிறதை காண முடிகிறது. அதை மாற்ற நினைத்தால் பிரச்சனை மேல் மேல் பிரச்சனை. பிரச்சனையை சமூக ஊடகங்களில் வெளியிடும் போது , மக்கள் ஆதரவு மட்டுமல்ல , மக்களும் , தமது பிரச்சனைகளை சொல்வதோடு , வீதிக்கும் வருகிறார்கள். அரகலய போல ஒரு ஆரம்பம் போல தெரிந்தது. வைத்தியசாலையில் என்ன பிரச்சனை என அர்ஜூனா கொடுத்த விளக்கம் போதவில்லை. அதை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு , தனது பின்னணியை அதிகம் பேசியது சலிப்பான விடயம் ஆனதோடு , பிரச்சனையை விட்டு அவர் குறித்த பேச்சும் மாறியது. ஊழல் விவகாரங்களை வெளியிட அவரை தயார்படுத்திக் கொள்வதற்கு முன் மக்கள் வீதிக்கு வந்ததால் நிலை தடுமாறினாரோ என தெரியாது. ஆனால் அதுவே அவருக்கு பெக் பயரானது. சைகோவா என எல்லாம் பேச வைத்துவிட்டார்கள். சிலரது உசுபேத்தல்கள் , நதிமூலம் , ரிசி மூலம் தேடுவோருக்கு பதிலழிப்பது போன்றவற்றால் சனம் திசைமாறி போனது. கெப்டன் அவுட் ஒப் த சிப். சொல்ல வேண்டியதை , வரிசையாக சொல்லாத, 1. வைத்தியசாலையில் இருக்க வேண்டிய வைத்தியர்கள் , வேலை நேரத்தில் வெளியே செல்வது. 2. எத்தனை வைத்தியர்கள் இருக்கிறார்கள் என அங்குள்ள மக்கள் அறியாத நிலை. (25 பேரளவு இருந்தும் 2 - 3 பேரே இருந்துள்ளனர் என்பது) ஆளணி பற்றாக் குறை பொய்கள். 3. பல கோடி பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் பாவிக்கப்படாமல் இருந்தது. 4.அங்கு வரும் நோயாளிகளை , வைத்தியர்கள் இல்லை என அம்பியுலன்சில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்புவது. 5. அங்கு வரும் நோயாளிகளை , தனியார் மருத்துவமனைகளுக்கு போகுமாறு பரிந்துரை செய்வது. 6. இறந்தவர்களது உடல்களை கொடுக்க ரேட் பேசி காலதாமதம் செய்தது. 7. பிரசவ வோட் பிரச்சனை. 8.மின்சார பிரச்சனை. 9. உபகரணங்களின் உதிரிப்பாக பிரச்சனை. இப்படி அநேக தவறுகள் அல்ல கரிசனை கொள்ளாத விடயங்கள் தொடர்ந்து நடந்தே வந்துள்ளன. அதை வெளிக்கொணரப் போனதே கொந்தளிப்புக்கு காரணமாகும். இவை அர்ஜூனாவால் சரியாக முன்வைக்கப்படவில்லை. அவை மக்களிடம் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியாகியிருந்தால் , அந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். பலமாகியிருக்கும். பிரச்சனை எல்லோருக்கும் தெரியும் என , பிரச்சனையாளர்கள் நினைப்பதுதான் , பெரிய பிரச்சனை. வைத்தியருக்கு நோயை நாம் என்ன என சொல்லவா வேண்டும் , அவர்கள் அதுக்குதானே படித்திருக்கிறார்கள் என சொல்வது போலத்தான் இதுவும். போராட்டத்தின் இடையே அர்ஜுனா கொழும்புக்கு போனது ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. அதற்குள் யாழிலிருந்த மாபியா கூட்டம் தங்களுக்கு ஏற்ற விதத்தில் பரப்புரைகளை செய்து மக்களை சோர்வடையச் செய்து விட்டார்கள். அதிலும் வைத்தியர்களை எதிர்த்துக்கொண்டு மக்கள் வாழ முடியாது எனும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டார்கள் அல்லது அச்சம் இயற்கையாகவே ஏற்பட்டது. வைத்தியர்களோடு பகைத்துக் கொள்ளக் கூடாது எனும் ஒரு நிலை அடிப்படையிலேயே ஏற்படலாம். இது யதார்த்தமானது. எனவே ஆரம்பத்தில் கூடிய அந்த கூட்டம், அர்ச்சுனா கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது காணக் கூடியதாக இல்லை. அங்கே youtubers மட்டுமே அதிகமாக குழுமி இருந்தார்கள். இது ஒரு பின்னடைவுதான். அதிலிருந்து போராட்டம் பலம் இழக்க தொடங்கியதை அவதானிக்க முடிந்தது. GMOA என்பது இலங்கையில் உள்ள ஒரு மாபியா மருத்துவ தொழிற்சங்கம் என்பது அனைவரும் அறிந்ததே! அநுருத்த பாதெனிய காலத்தில் மிக மோசமாக செயல்பட்டது. அவர்களது ஆதரவு வைத்தியர்களுக்கு இருந்தமையால் , அவர்களால் பணிபகிஸ்கரிப்பு நாடகத்தை அரங்கேற்றுவது இலகுவானது. அதை வைத்துத்தான் வைத்தியர்கள் தம்மை காத்துக் கொண்டனர். அதிலும் அநேக வடக்கு அரசியல்வாதிகள் , வைத்தியர்களுக்கு சார்பாக இருந்தது , சுகாதார அமைச்சர் வந்த போது வெளிப்படையாக தெரிந்தது. வயதான காலத்தில் , வைத்தியர்களை பகைத்துக் கொள்ள முடியுமா? மாபியா சட்டத்தரணிகள் மக்கள் மீது மிக கரிசனை உள்ளது தெரிந்தது. அதிலும் வெளியே பேசுவது தேசியம்? சுகாதார அமைச்சர் கூட , பிரச்சனைக்குரிய வைத்தியசாலைக்கு சென்று உள்ள நிலைமையை அவதானிக்காமல் , யாழ் வைத்தியசாலையில் மரம் ஒன்றை புடுங்கிவிட்டு , நிலமை சுமூகமாக இருப்பதாக தண்ணி தெளித்துவிட்டு கடந்து போனார். தங்கையை காட்டி அக்காவை கொடுப்பது போல , அவருக்கு யாழ்பாணத்தைத்தான் சாவக்கச்சேரி என காட்டினார்களோ? அருகே நின்ற பொம்மை அரசியல்வாதிகள் , படத்துக்கு போஸ் கொடுத்தார்களே தவிர , பிரச்சனைக்குரிய சாவக்கச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பார்வையிடவாவது அழைக்கவே இல்லை. ஒருவரின் ஆசை வந்த அமைச்சருக்கு கூழ் செய்து கொடுக்கவில்லை என்பதாகும். ஆனால் இதே அரசியல்வாதிகள் , பாராளுமன்ற பேச்சுரிமையை வைத்து மைக் டைசன்களாக கத்துவதெல்லாம் வெறும் வேசம்தான். இவர்களை மக்கள் அடையாளம் காண இது ஒரு நல்ல தருணம் என நினைக்கிறேன். ஆனால் சனம் தங்கள் அரசியல்வாதிகளை விட்டுக் கொடுப்பார்களா என்பது சொல்லத் தெரியாது. காரணம் இவர்களது தொழிலே போலி அரசியல்தானே? கோஷம் மட்டும் தான் ஆட்டம் கிடையாது. விசில் மட்டும் தான் யாரும் ஓட மாட்டார்கள். இதைப் புரிந்து கொள்ள எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது. சாவக்கச்சேரியில் நடந்த பிரச்சனைகளை அல்லது, மக்களின் நிலையை அழைத்து சென்று காட்ட , அவர்களுக்கு தைரியம் இல்லை. இதற்கு அமைச்சர் வராமலே இருந்திருக்கலாம். இவற்றுக்கு அரசு காரணமல்ல, வடக்கு பிரதிநிதிகள்தான் காரணம். அவர்களும் மாபியா வைத்தியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன. தம்பிராசா என்பவர் மட்டுமே பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டு போலீசாரால் அகற்றப்பட்டார். பொதுவாக தென்பகுதிகளில் இப்படி கேள்வி கேட்ட ஒருவரை போலீசார் இழுத்துக் கொண்டு போக முயன்றால், அருகே இருப்பவர்கள் உடனடியாக பாய்ந்து தடுக்க முற்படுவார்கள். ஆனால் இங்கிருந்தவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் வித்தியாசம். அந்த நேரத்தில் ஒரு சிலராவது தடுத்து, தம்பி ராசாவை கைது செய்து கொண்டு போக விடாது சமரசம் செய்திருக்கலாம். இதனால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பொது மகனும், இப்படியான இடங்களில் குற்றங்களை எதிர்த்து பகிரங்கமாக கேள்வி கேட்க முன்வர மாட்டான். இது ஒரு பலவீனமான நிலை. அவரது ஆதரவுக் கட்சியாளரான அரசியல்வாதி தவறாசா அவர்களும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. அரசை எதிர்க்கும் அத்தனை அரசியல்வாதிகளும், திறப்பு விழா ஒன்றுக்கு வந்த அமைச்சரை வரவேற்க வந்தது போலவே செயல்பட்டார்கள். உண்மையான பிரச்சனையை எவருமே முன் வைக்கவில்லை. ஏதோ யாழில் உள்ள பொது பிரச்சனைகளை பேசி மாபியா வைத்தியர்களை காப்பாற்றி விட்டார்கள். இந்த அரசியல்வாதிகள் எவருமே மக்கள் பக்கம் இல்லை. அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா இவர்களை விட இவ்வளவு மேல் என சொல்லலாம். அவரது முன்னைய கருத்துக்கள் அர்ஜுனாவை மீண்டும் பதவியில் வைக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை அவருக்கு செய்ய முடியாது என நினைத்திருக்க வேண்டும். அதனால் அன்றைய தினம் அவர் அங்கு வருவதை தவிர்த்திருக்க வேண்டும்? அரசுக்கு இருக்கும் பிரச்சனை நாடு முழுவதும் வேலை நிறுத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது இதனால் வடக்கிலும் வைத்திய வேலை நிறுத்தம் ஒன்று ஏற்பட்டால் அது நிச்சயம் தெற்கிலும் பரவ வாய்ப்புள்ளது. அதுவும் தேர்தல் காலத்தில் ..... எனவே அரசு மாபியாக்களை கண்டுகொள்ளாது நேர்மையான அர்ஜுனாவை கொழும்புக்கு திருப்பி அழைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இந்த பிரச்சனை தெரியாமல் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் வைத்திய சங்கத்தோடு முரண்பட விரும்ப மாட்டார்கள். வடக்கு அரசியல்வாதிகளும் அமைதி காக்க, மக்களும் அமைதி காக்க, யாழ் வைத்தியசாலை நன்றாக இருக்க, கூழ் குடிக்காத குறையாக , சுகாதார அமைச்சர் மகிழ்ச்சியோடு எல்லாம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார். அங்கு இருந்தவர்கள் கூழ் குடித்து இருப்பார்கள். அர்ஜுனாதான் வெறுத்துப் போய் வடக்கே வேண்டாம் என ; இந்த பழம் புளிக்கும் என சொல்லிவிட்டு வந்த வழியே திருப்பி ஓட்டம் எடுத்தார். இறுதியாக அவர் எடுத்த முடிவு மிகச் சரியானது. இவர்களுக்காக வீதியில் இறங்கி உயிர் விடுவதை விட, கொழும்புக்கு போய் சிங்களப் பகுதிகளில் சிறப்பாக வாழ்வார். அதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் ஒன்று அவருக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும். அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார் என, வடக்கை திருத்த கனவு கண்ட அர்ச்சுனா, இனி அவரது புதிய நியமன இடங்களில் இந்த அனுபவத்தோடு சிறப்பாக செயல்படுவார். இறுதி நேரத்தில் அவரது பேட்டிகள் கூட மிகவும் யதார்த்தமாக மாறிப் போயிருந்தது. அவர் வடக்கை விட்டு வெளியேறியது வடக்கு மக்களுக்கு பெரியதொரு இழப்பாகும். அவருக்கு இனித்தான் நல்ல காலம். புலம்பெயர் நாடுகளில் இருந்து அனேகர் தாயகம் சென்று மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கனவும் ஆசையும் கொண்டு பேசுவது அனைவரும் அறிந்ததே. இலங்கையில் போர் பகுதிகளிலும், சிங்களப் பகுதிகளிலும் வாழ்ந்த, மூன்று மொழிகள் தெரிந்த, ஒரு கல்வியாளருக்கே வடக்கில் இந்த நிலை என்றால், புலத்திலிருந்து அங்கு போய் மாற்றங்கள் செய்ய நினைத்தால் உங்களுக்கு என்ன நடக்கும் என நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை. அங்கு போய் உங்களால் செய்யக்கூடிய ஒரே ஒரு விடயம் கோயிலுக்கு போவது , கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, இவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முயற்சி செய்யாதீர்கள். அப்படி மாற்றம் ஒன்றை செய்ய நினைத்து நீங்கள் அங்கு போனால் அர்ஜுனாவை விட மோசமான விளைவுகளை தான் நீங்கள் சந்திப்பீர்கள். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நன்றி - ஜீவன்
  23. தமிழர்கள் இந்தமுறை யாருக்கு வாக்குப் போட வேணும் என்று சொல்ல சம்பந்தரும் இல்லை.
  24. 👍..... இவை எல்லாமே எனக்கு புதிய தகவல்கள், அல்வாயன்..... கும்பமுனி என்ன பாட்டெழுதி வைத்திருக்கின்றாரோ.... அவருக்கும் பூவரசு அறிவு அரைகுறை போல.....🫢. 👍..... துவரம் தடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பார்த்ததில்லை...... ஊரில் மரங்கள், வேலிகள் குறைவு தான் ஒப்பீட்டளவில்.....
  25. மிகவும் நல்ல அறிவூட்டல் ஆக்கம். நன்றி…!
  26. ஆமாம் சில பொது மக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் முள்ளிவாய்காலின் தமிழின அழிப்புக்கு துணபோன கருநாய்களும், அவர்கள்போன்ற சிலரும் உண்மையில் இன்று ஹீரோக்களாகவே மாறி விட்டார்கள்.😳
  27. சுழி போட்டு செயல் தொடங்க வைத்தவா.... வேளாண்மை பெருக்கிய நெல் முத்து நாயகா...🙏
  28. போன‌ முறையும் கோப்பா அமெரிக்கா க‌ப்ப‌ ஆர்ஜன்டீனா தான் வென்ற‌து................... 2022 உல‌க‌ கோப்பை . 2024 கோப்பா அமெரிக்க‌ கோப்பை இப்போது உள்ள‌ ஆர்ஜன்டீனா அணி மிக‌வும் ப‌ல‌மான‌ அணி 2026 உல‌க‌ கோப்பையையும் தூக்க‌ கூடும் பிரேசிலின் க‌தை 2002ஓட‌ முடிந்து போய் விட்ட‌து..................கால்ப‌ந்து ம‌ன்ன‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ சோத‌னை...................... பிரேசில் வீர‌ர்க‌ள் ஜ‌ரோப்பா கில‌ப்புக‌ளில் அதிக‌ கோல்க‌ள் அடிப்பின‌ம் தாய் நாட்டுக்காக‌ விளையாடும் போது ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு ........................... colombia அணி இந்த‌ முறை எதிர் பார்த்த‌தை விட‌ ந‌ல்லா விளையாடினார்க‌ள்...............................
  29. நான்தான் பிழையாக விளங்கி விட்டேன். Gunஐ கண் என்று நினைத்துவிட்டேன். கண்கள் என்று பன்மையில் வந்ததால் வந்த குழப்பம் அது.
  30. மிக்க நன்றி ஏராளன். பிளாஸ்டிக்கால் புற்றுநோய் வருகுது என்று சொன்ன பின், யார் சொன்னார்கள் என்று நான் தேடிப் பார்க்கவில்லை, இங்கு பல விதமானவற்றால் செய்த பல பொருட்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நான்ஸ்டிக் பாத்திரங்களும் புற்றுநோயை உண்டாக்கும் என்ற செய்தி வந்து அவையும் பின்னுக்கு போய்விட்டன. எவர் சில்வர் பாத்திரங்கள் பற்றி இன்னமும் செய்தி எதுவும் வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். முடிந்தளவிற்கு மரம், நார், ஓலை போன்றவற்றால் செய்த பொருட்களை பாவித்தால், இவர்களின் ஆராய்ச்சிகளை நாங்கள் ஆராயத் தேவையில்லை............👍.
  31. இவரை வைத்து கள அலுவல்களும் பார்க்கலாம். நாய்கள் வளர்ப்பது எஜமான்களின் பாதுகாப்புக்கே.
  32. அவர் மருமகனுக்கும் பெறாமகனுக்கும் முன்னால வாயில வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்! சீமான் அண்ணன் பாணியில் இது பனம்பால்!! பனை மூலிகைச்சாறு!! என்று பலவிதமாகச் சொல்லியும் மறுத்துவிட்டார்.
  33. கள்ளு 1 போத்தல் 200ரூபா, சொல்லி வைச்சு ஒரு பனைக்கள்ளும்(வெறிக்காது) வாங்கலாம். ஆனால் முன்னர் போல இளைஞர்கள் கள்ளு இறக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை.
  34. முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 02 உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது. பார்வைக் குறைபாடுகள் (Visual impairment) தொடங்கும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் [diabetes] இருப்பவர்கள் கட்டாயம் ஒரு ஒழுங்காக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். பார்வைக் குறைபாடுகளில் (Visual impairment) பொதுவானதும் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சினைகளை பற்றி இனி ஆராய உள்ளோம். அவைகளில் முதன்மையானவை 1] வெள்ளெழுத்து அல்லது கிட்ட பார்வைக் குறைவு [Presbyopia], 2] கண் அழுத்த நோய் (Glaucoma), 3] வறண்ட கண்கள் [dry eyes], 4] வயதுசார் விழித்திரை தேய்மானம் அல்லது சிதைவு [age related macular degeneration], 5] கண்புரை [cataract], & 6] தற்காலிக தமனி அழற்சி [ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் / temporal arteritis or Giant cell arteritis] ஆகும். முதியோர்களின் கண் பார்வையை பாதிக்கும் இவைகளின் தாக்கங்களை சுருக்கமாக பார்ப்போம் 1] வயதுசார் விழித்திரை தேய்மானம் [age related macular degeneration] -- மங்கலான பார்வை, விம்பத்திரிவு [image distortion], விழித்திரையின் நடுவிலுள்ள குருட்டுத்தன்மை [central scotoma]. 2] கண் அழுத்த நோய் [Glaucoma] -- பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இதனால், சிறிது சிறிதாக கண்பார்வை குறைவு ஏற்படுகிறது 3] கண்புரை [cataract] -- நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம். மங்கலான பார்வை, கண் பிரதிபலிப்பு அல்லது கூசுதல் [glare], ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை அல்லது இரட்டை நோக்கு குறைபாடு [monocular diplopia] ஆகும் [டிப்ளோபியா [diplopia] நோயாளி என்பது, அவர் அருகில் உள்ள பொருள் இரண்டு உருவங்களாக தோன்றும் ஒரு காட்சி குறைபாடு ஆகும். இது இரண்டு வகையாகும். அதில் ஒன்றுதான் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை குறைபாடு ஆகும்] 4] நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறு [diabetic retinopathy] -- மங்கலான பார்வை, வீரியமான ஒளிபுகாநிலைகள் [கண் மிதவைகள் / floaters], காட்சி புலம் இழப்பு அல்லது குறைபாடு [உங்கள் காட்சி புலத்தில், ஒரு பகுதியை இழத்தல், உதாரணமாக பக்கப்பார்வையிழப்பு / Visual field loss is when you have lost an area of vision in your visual field], மோசமான இரவு பார்வை. [உங்கள் கண்களில் மிகவும் சிறிய புள்ளி போன்ற மிதவைகள் (Floaters), கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும். சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். இதனால் உங்கள் பார்வை பாதிக்கப்படும். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம்] கண் தனக்கு வேண்டிய பிராணவாயுவை [ஆக்ஸிஜன் / oxygen] கண்ணில் உள்ள நீர் கலந்த திரவத்தின் [aqueous] மூலம் பெறுகிறது. மேலும் கண்ணின் கருவிழிக்கும், வில்லைக்கும் மற்றும் விழித்திரைப்படலத்துக்கும் [கதிராளி; கருவிழித்திரை] உணவூட்டுதல், [கார்னியா, லென்ஸ் மற்றும் ஐரிஸ்], வில்லையினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை அகற்றுதல், உள்விழி அழுத்தத்தை [intraocular pressure] கட்டுப்படுத்துதல் அல்லது சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கண்ணின் வடிவத்தை பராமரித்தல் போன்றவை இவைகளின் வேலைகளாகும். ஒரு ஆச்சிரியம் என்னவென்றால், மூளையில் இருக்கும் பகுதிகளில் கண் ஒன்றே, நேரடியாக பார்க்கக் கூடியது. உதாரணமாக, கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, 'டைலடேஷன்' [Dilatation] எனப்படும் விரிவாக்கம் செய்து, ஒரு கண்அகநோக்கி [ஆப்தல்மஸ்கோப் / ophthalmoscope] மூலம் நேரடியாக கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக கண் மருத்துவரால் பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை இப்படித்தான் கண் பரிசோதனை செய்து அறிகிறார்கள். நீங்கள் பூமியை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு மைலுக்கும் எட்டு அங்குலம் வளைகிறது. எனவே உங்கள் கண், தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது என்று வைத்தால், நீங்கள் பார்க்க கூடிய ஆக்க கூடுதலான தொலைதூர பூமியின் விளிம்பு மூன்று மைலாகும். எமது கண்ணில் உள்ள வில்லை ஒரு குவி வில்லையாகும் [convex lens]. இது நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும். மனிதர்கள் பலதரப்பட்ட பொருட்களை, நிறங்களை பார்க்கும் இயல்பு உள்ளவர்கள். கட்புலனாகும் நிறமாலை [visible spectrum] என்பது, மின்காந்த நிறமாலையில் [electromagnetic spectrum] உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும். இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic radiation] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" [visible light or simply light] எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண், வளியில் 380 தொடக்கம் 780 நானோமீட்டர் [nanometres / 0.000000001 m] அலைநீளம் கொண்ட கதிர்வீச்சுக்களைப் பார்க்கக் கூடியது. ஆகவே ஒரு பொருளில் இருந்து இந்த அலை நீளத்தில் வெளியிடப்படும் ஒளி, எங்கள் கண்ணில் நுழைந்து, கண் வில்லையினூடாக கடந்து, எங்கள் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் விழும் பொழுது, நாம் பொருட்களை காண்கிறோம் எனலாம். ஆகவே விழித்திரையில் பொருட்களின் விம்பம் முதலில் சரியாக விழவேண்டும். அப்ப தான் பொருட்கள் எமக்கு தெரியும். எனவே தான், கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பொதுவாக கண்ணாடி அணிகிறோம். உதாரணமாக, கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி வில்லை (கான்கேவ் லென்ஸை / concave lens) இதற்கு பயன்படுத்தப் படுகிறது. அதே போல, தூரப் பார்வை எனும் குறைபாட்டில், விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி வில்லை (கான்வெக்ஸ் லென்ஸ் / convex lens) அணிய வேண்டும். மனிதன் பெறத்தக்க அறிவுகளுள் ஒன்று கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதை தொல்காப்பியர், தனது நூற்பாவில், “ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே” என்று 'நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே' என குறிப்பிடுகின்றார். அதே போல, மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதை திருவள்ளுவர், கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர் என “கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் – 393) என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலனை “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. “வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்” (சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76) அதேபோல, தாலாட்டு பாடல் ஒன்று கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என் கானகத்து வண்டுறங்கு” என கூறுகிறது. இப்படி பெருமை பெற்ற கண்ணை, அறிவின் நுழைவாயில் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். ஆகவே, உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள் ஆகையால், அதை முழுமையாக அறிந்து பாது காப்பது மிக மிக அவசியம். [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  35. சங்கருக்கு சரக்கு தீர்ந்து போயிட்டுது. எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் பின், அவர் எடுத்த படங்கள் எல்லாம் குப்பை. சிவாஜியில் தொடங்கிய சறுக்கல், எந்திரன் 1, ஐ (கொடுமையான படம்), எந்திரன் 2 என்று நீண்டு இன்று இந்தியன் 2 இல் முழுமையாக சறுக்கி விட்டார் என்று தெரிகின்றது. இடையில் நண்பன் படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் (அது இந்திப் படம் 3 idiots இன் remake என்பதால்) கமல் என்னும் நல்ல கலைஞன், அரசியல் கோமாளி ஆகிய பின், இன்னும் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார் என நினைக்கின்றேன். சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இப்படி சினிமாவை, அரசியலை விமர்சிக்கின்றவர்களை, கக்கூஸில் முன்னர் கிறுக்கியவர்கள் என சங்கர் வசனங்கள் வைத்தமையால் சலங்கை கட்டி ஆடுகின்றார்கள். நான் இன்னும் இந்தியன் 2 இனைப் பார்க்கவில்லை. OTT இல் வந்தால் கூட அநேகமாக பார்க்க மாட்டேன் என நினைக்கின்றேன் கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் பெரும் செலவில் எடுக்கப்படும் இப்படியான சினிமாக்கள் தோற்று, குறைந்த செலவில் கதையை மட்டும் நம்பி எடுக்கப்படும் கருடன், மஹாராஜா போன்ற படங்கள் வெல்லும் காலம் இது.
  36. உண்மை தான் இவரது இயக்கத்தில் வடமாகாணத்துக்கு பொருப்பாக். எக்கவுனடன். நல்லையாவின். மகன் தயாபரன். இருந்தான். பொறியியல் இரண்டாவது ஆண்டு மாணவன் படிப்பை விட்டுட்டு இயக்கத்தில் சேர்ந்தவன். இயக்கப்பெயர் சந்திரன் இயக்கத்திலிருந்துமிடையில். விலகி விட்டான். கைதடி சொந்த ஊர் இப்போது கனடா இல் குடும்பமாக வாழ்கிறார்கள் மற்றும் எனது நண்பன் சண்முகம் சாவகச்சேரி பொறுப்பாளர் அவன் தனது நண்பனுக்கு. எனக்கும் நண்பர்கள் தான் கடிதம் எழுதினான். எல்லோரும் பச்சை கள்ளன்கள் ஆயுதம் ஆள்கள் இருந்தும் போரடவில்லை காலம் வீணணாகப். போய்க் கொண்டுருக்கிறது புளட்டை சேர்ந்த இரண்டு பேரை அடைக்கலம் கொடுத்து கைதடியில். வைத்து இருந்ததை கண்டு பிடித்து சண்முகம் மற்றும் தர்மலிங்கம் இருவரையும். சுட்டு விட்டார்கள் இருவரது தாய்மாரும். தெரு தெருவாக. அழுது திரிந்தார்கள் உமா இடம் பேச்சு எற்ப. செயல்கள இல்லை இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டங்களை செய்யும் அமைப்புக்கு இல்லை அதுக்கு பிரபாகரன் தான் சரியான ஒரே நபர் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.