Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88827
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46977
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    35001
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/22/24 in all areas

  1. லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள். இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. உலகின் மிக விலையுயர்ந்த பிராண்ட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்! இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்! எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன். நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்! ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள். ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை. நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன். ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு. நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள். எந்த வசதியும் எனக்கு உதவவில்லை. அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை. ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை வாழ வைக்கின்றன. இதுதான் வாழ்க்கை. எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள். எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும். நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌 -லதா மங்கேஷ்கர்,,, Joseph Anthony Raj
  2. உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
  3. வீட்டில் அனுமதி கேட்பவர்களை எமது சங்கத்தில் சேர்ப்பதில்லை. ஆசை கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை 🤣
  4. விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால் அவதிப்படும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். காசா மக்களிடம் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி.... ஆபிரிக்க நாடுகளில் போய் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி... விசுகர்! அறத்தையும் நன்றிக்கடனையும் ஒரே தராசில் வைக்க முடியாது.
  5. ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதையே வெளியில் சொல்லாமல் இருந்திருக்கவும் கூடும். எட்டு வருடங்கள் ஆகி விட்டாலும், வெறும் கருத்துகளால் மனங்களில் மாற்றங்கள் உண்டாகும் வயதை அதற்கு முன்னேயே நாங்கள் தாண்டி விட்டோம், ஆகவே அவர்கள் இன்றும் அப்படியே இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இப்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் ஏதும் வித்தியாசம் இருக்கலாம், உட்பொருளிலும் தெரிவுகளிலும் அநேகமாக எந்த மாற்றமும் இருக்காது. கமலா ஹாரீஸ் ஒரு எழுத்தாளராக முயற்சிக்கலாம். அவரிடம் அப்படியான ஒரு திறமை இருப்பது போலவே தெரிகின்றது. ஒரு வித 'தத்துவ அலட்டல்கள்' போன்றே அவரின் பேச்சுகள் இருக்கின்றன. இதுவே நடுநிலையில் நிற்கும் மக்களை அந்நியப்படுத்த போதுமானது. என்னுடைய இங்கு வாழும் இலங்கை மற்றும் இந்திய நண்பர்களில் மிகப் பெரும்பாலானோர் ஜனநாயக் கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் நேற்றிலிருந்து ஒரு புது உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். ஆனாலும் கலிஃபோர்னியா தேர்தல் கணக்கில் இல்லவே இல்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும். அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது அமெரிக்க அதிபர்களால் உண்டாக்கப்படுவதில்லை. அமெரிக்கா முதலாளிகளால், முதலாளிகளுக்காக மாற்றப்பட்ட ஒரு நாடு. ஆதிக்கம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றது. இன்று உலகில் கண்ணுக்கெட்டியவரை ஒரு மாற்று இல்லை என்பதே நிஜம். ஒரு பங்குச் சந்தை சரிவு, கோவிட் தொற்று, டாலரின் வீழ்ச்சி, கடைசியாக வந்த Antivirus என்று ஒவ்வொரு தடவையும், 'கதை முடிந்து விட்டது.........' என்று வெளியிலிருந்து பலரும் சொல்வார்கள். ஆனால் மாற்று கிடையாது. அமெரிக்காவின் ஆதிக்கம், அது பல வேளைகளில் மனிதாபிமானம் அற்றது தான், குறைக்கப்பட வேண்டும் என்றால், அது மற்றைய ஒவ்வொரு நாட்டிலிருந்துமே ஆரம்பிக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருக்கும் உறவும், ஊடலும், தேவைகளும் போலவே உலகில் பல நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது. இங்கு எவர் அதிபரானாலும் அதில் மாற்றம் இல்லை.
  6. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும். வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன. இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)
  7. உற்சாகப் படுத்தியதற்கு நன்றி. ஆனால் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதான்
  8. 🤣...... நித்தி அப்பவே சேலத்தில் விநோத உடைப்போட்டியொன்றில் பங்கு பற்றியிருக்கின்றார். அவசரத்தில் பெரிய ஒரு தடியாக கையில் கொடுத்து விட்டார்கள்.......... 'கம்பி கட்டுகிற கதை....' என்று சொல்வது இன்று, அன்றைய நித்தியின் கதை 'கரண்ட் அடிக்க வைத்த கதை.......'. கைலாசாவில் மனிசனிடம் இருந்த தங்கத்தை கூட இருந்த இரண்டு அமெரிக்கர்கள் சுருட்டி விட்டதாகச் சொல்கின்றார்கள். வரவு = செலவு ..................
  9. கைலாசா போகும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போலுள்ளது.
  10. அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் மறந்து விடுகின்றோம். அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் நியாயங்களையும் மறந்து விடுகின்றோம். 😄
  11. இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣 தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂
  12. இவரை எப்படி இந்திய வம்சாவளி கூற முடியும்? இவரது தகப்பன் ஜமேக்கா. தாய் இந்தியா. வம்சம் என்று தகப்பன் வழியைத்தானே கூறுவார்கள்.
  13. இன்று இந்த மறைந்த அரசியல்வாதிக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மக்களை ஒருங்கிணைக்கதவறியமை. 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வின் மூலம் தமிழ் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்கிய பின் இங்கு சிட்னியில் இலங்கை தொலைக்காட்சி படப்பிடிப்பினை மேற்கொண்டது (ஒவ்வொரு வளர்ந்த நாடுக்ளிலும் இவ்வாறு படப்பிடிப்பினை மேற்கொண்டதாக கூறப்பட்டது). அந்த படப்பிடிப்பின் நோக்கம் இலங்கை உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது அடுத்தது இவ்வாறு வளர்ச்சி அடைவதுதான் என்பதாக அவர்களது கருத்தாக இருந்தது. சிறுபான்மை தமிழர்களின் உரிமையினை இரும்புக்கரம் கொண்டு அடக்கி 15 வருடங்களின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலமையிலிருந்து வெளிவருவது பற்றி கதைப்பதிலேயே காலம் போகிறது. மக்களை பிளவுபடுத்துவதால் அரசியல் இலாபம் பெறலாம் ஆனால் அதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீமைதான் ஏற்படும். சிறுபான்மை சமூகமாகிய நாம் பல பிரிவுகளாக பிரிந்திருப்பதால் மேலும் பலவீனமாகிறோம், ஆனால் அதற்கு எமக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யாமல் குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார் அதற்கு பலிக்கடா இந்த அரசியல்வாதி.
  14. 1) ட்ரம்பின் துப்பாக்கி சூட்டின் போது... தாக்குதலாளி 120 மீற்றர் தூரத்தில் இருந்து சுடுகின்றார். 2) அதனை விட குறைந்த தூரத்தில் பாதுகாப்பு பிரிவினர் இன்னொரு கூரை மீது இருக்கின்றார்கள். 3) அவர்கள்... துப்பாக்கி சூடு நடத்தும் மட்டும், தாக்குதலாளியைக் காணவில்லையாம். 4) ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மறுகணம், தாக்குதலாளியை சுட்டுக் கொல்கிறார்களாம். 5) கூரை மீது இருந்த தாக்குதலாளி, மற்றைய கூரை மீது இருந்த அரச பாதுகாப்பு பிரிவினர், ட்ரம்ப் பேசிய மேடை மூன்றும்.... சாதாரண கண்ணால் பார்க்கக் கூடிய தூரத்தில் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அப்படி இருந்தும் முன்பே கண்டு பிடிக்காமல் இருந்தார்கள் என்பதை நம்பும் படியாக இல்லை. மயிரிழையில், சில மில்லி மீற்றர் தலை அசைவுடன்.. ட்ரம்ப் உயிர் தப்பியமை அதிசயம் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய மாதிரி இன்னுமொரு தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. அப்படி நடத்தி விட்டு... பழியை வேறு யார் மீதாவது போட்டு தப்புவதும் அமெரிக்காவுக்கு முதல் முறை அல்ல.
  15. Westக்கு அறம் என்பது அறவே இல்லை. அது தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். வரலாறு அதைத்தான் சொல்கிறது. Trump மீது இன்னுமொரு கொலை முயற்சி இடம்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. சற்று யோசித்துப் பாருங்கள்,. Secret Service ன் மேலதிக பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. கேட்டும் அது மறுக்கப்படுகிறது. தாக்குதலாளி எல்லோர் முன்னிலையிலும் கூரை மீதேறி துவக்குச் சூட்டை நடாத்துகிறார். த்Trump மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அவர் சற்றே இடதுகையால் ஊன்றி உடம்பை வளைத்து தலையைத் திருப்புகிறார். தலைக்கு வந்த துப்பாக்கி ரவை காதைத் துளைத்துச் செல்கிறது. ஒரு படுகொலை தவிர்க்கப்படுகிறது. Trump தலையைத் திருப்பியிருக்காவிட்டால் ......... உலக வரலாற்றில் இட்பெற்ற இன்னுமொரு அரசியல் படுகொலையை நாங்கள் கண்களால் கண்டிருப்போம். உடனே தாக்குதலாளி கொல்லப்படுகிறார். File closed. இப்போது Biden போட்டியிலிருந்து விலகுகிறார்,... இது சிரிப்பை வரவழைக்கவில்லையா? 😏 America வீழ்ச்சியடைய வேண்டும் என்கிற தங்கள் ஆதங்கம் புரிகிறது,....😁
  16. அமெரிக்கர்கள் ஒரு போதுமே பெண் ஒருவரை தம் சனாதிபதியாக தெரிவு செய்யப் போவதில்லை. அப்படி தெரிவு செய்வதற்கான மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.
  17. பாவம் கிழவன். கடவுளாலும் தன்னை போட்டியிலிருந்து விலக வைக்க முடியாது என்று விடாப்பிடியாக நின்ற ஆளை… “கோவிட் - 2024” வந்து விலகப் பண்ணிப் போட்டுது. 😂 கபிதன்… நீங்கள் வேறு ஒரு திரியில்… பைடனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று இருந்த போது… ஆளை மாற்றப் போகின்றார்கள் என்று முன்பே கூறிய உங்கள் கணிப்பிற்கு பாராட்டுக்கள். 👍🏽 சென்ற வியாழக்கிழமை (18.07.) அன்றே நீங்கள் கணித்தது இன்னும் சிறப்பு. 😁
  18. எனக்கென்னவோ… விக்கியர் “டபிள் கேம்” விளையாடுற மாதிரி ஒரு பீலிங். 😂 🤣
  19. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை நாடுவதற்கு எதிராக முடிவு செய்ததை நினைவு கூர்ந்தார் - இருப்பினும் பிடனின் முடிவு ஜான்சனின் அறிவிப்பை விட சில மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்தில் வந்தது. இது ட்ரம்பின் உயிருக்கு எதிரான முயற்சியை உள்ளடக்கிய ஒரு மிக அதிகமான அரசியல் பிரச்சாரத்தின் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியாகும். ஆனால் படுகொலை முயற்சி மற்றும் பந்தயத்தில் அதன் கொந்தளிப்பான விளைவு கூட காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரிடையே பிடென் எதிர்கொள்ளும் ஆதரவின் இழப்பை இடைநிறுத்த முடியாது, அவர்கள் நவம்பரில் ஒரு துடைப்பம் தங்கள் வாக்குச் சீட்டுப் போட்டிகளையும் மூழ்கடிக்கும் என்று பெருகிய முறையில் உறுதியாக நம்பினர். https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html
  20. ஆயுதங்களை கொடுத்து பலஸ்தீனியர்களை கொல்ல வைப்பது. பிறகு பலஸ்தீனியர்களுக்கு உணவு கொடுப்பது போல் பாசாங்கு பண்ணி உளவு பார்ப்பது. உக்ரேனியர்களை கொல்கிறார்கள் என்று ஒலிம்பிக்கில் ரஸ்யாவை தடை செய்வது. 37 ஆயிரம் பலஸ்தீன குழந்தைகள், பெண்களை கொன்றவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பங்கு பற்றலாம்?
  21. உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவும் நீதியான நாடுகள் எவை என்பதை இலங்கை தமிழர்கள் பெருந் தொகையாக குடியேறி உலகத்திற்கே அடையாளம் காட்டி உள்ளார்கள் 👍 இலங்கை தமிழர்கள் குடியேறாத நாடுகள் அறம் அற்றவை தீயவை என்பது உள்ளங்கையில் உள்ள உதைபந்து.
  22. உண்மையில் இது நல்ல விடயம்........! --- சிறு தொழில்கள் ஊக்குவிக்கப் பட்டு தொழில் முனைவர்கள் உருவாக வாய்ப்புண்டு........! --- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.......! --- வேலை வாய்ப்புகள் அதிகமாகும்........! பகிர்வுக்கு நன்றி பிழம்பு .......! 👍
  23. கந்தையருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 🤦🏼‍♂️
  24. இளமை திரும்பிவிடும் சந்தேகமே இல்லை ஆனால் செலவழிக்க இளமை இருக்க வேண்டுமே ........! 😴
  25. ஆமாம் உண்மை .. சட்டத்தின் ஆட்சி அறமில்லைய?? அறம் இல்லாமல் எப்படி சட்டத்தின் ஆட்சியை கொடுக்க முடியும்?? மேற்கின். பிழை யாதுவெனில். ரசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வடகொரியா, ...........போன்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதற்காக உழைப்பது இது அறமற்ற. செயலாக. தெரிகிறது அவ்வளவுதான் மேற்கு. அமைதியாக பார்த்து கொண்டிருந்தால் அனேகமான. இடங்களில் குறிப்பாக கண்டிப்பாக சட்டத்தின் ஆட்சி இல்லாத இடங்களில் அனுதினமும். முள்ளிவாய்க்கால் ஆக இருக்கும் பிறகும்,....... .. மேற்கை தான் குற்றச்சாட்டுவீர்கள். ஏன் முள்ளிவாய்க்கால் தடுக்கவில்லையென்று உங்களின் நிரந்தரத் தொழில் மேற்கை குற்றச்சாட்டுவது அது மேற்கு என்ன செய்தாலும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது 🙏
  26. இதில் ‘அனைத்தும்’ என்பது பிடிச்சிருக்கு.போகலாமா என்று யோசிக்கிறேன். வயது கொஞ்சம் தடுக்கிறது.
  27. அண்ணை இந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சொல்லச் சொல்ல எழுதினதோ?!
  28. அந்த குற்றச்செயல்களுக்கு இன்றுவரை ஏதாவது விசாரணைகள் வழக்குகள் நடந்ததா?
  29. எல்லாம்... இந்தியாவின் மீது உள்ள கோபம்தான் விசுகர். 😂 அந்தக் கோபம்... கமலாவின் மீது, திரும்பி விட்டது. 🤣
  30. 🤣..... ரஜனியும், விஜய்காந்தும் சிங்கப்பூரில் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார்கள்..... எங்களின் விதி ஒருவரைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது....😀
  31. இணைய‌த்தில் இந்த‌ பாட்டை அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி கேட்க்கின‌ம் பிள்ளைக்கு சிறுவ‌ய‌து அருமையான‌ குர‌ல்.....................இந்த‌ பாட்டை நானும் ப‌ல‌ வாட்டி இன்று கேட்டு விட்டேன்🙏🙏🙏🥰..................பாடின‌ பிள்ளைக்கும் பாட‌லுக்கு இசை அமைத்த‌ இசை அமைப்பாள‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏...............................பாட‌ல் வ‌ரி மிக‌ அருமை🙏🙏🙏..............................
  32. நம்ம கமலாக்கா மீது என்ன கோபம் உங்களுக்கு???🤣
  33. Now you all know how the suitcases have been exchanged from TDA to Dr. Lal Panapitiya. He is working for GMOA and for the TDA. The GMOA is backing him up and the TDA is flourishing him up to cover up the cost. Well done. Timely needed info. I knew that very well. Dr. Lal Panapitiya should be taken to the police custody and his bank details including his relatives and his past monetary transaction should be analysed. I have a call recording that I shall share with time. Further Dr. Lal Panapitiya DDG MS1 is the one who signed the removal letter of my post in Sinhalese and assigned Dr. Rajeev as Acting MS BHC while I was on leave. The string hoppers are unwind on its own. We will see all in the court. Please arrange a room with Dr. Keheliya for Dr. Lal Panapitiya and Dr. Priyantha Attapattu (Director, TCS) ONE more thing. He is the person who took my phone on the last ministry meeting and threatened me jointly with Dr. Asela Gunawardena ( DGHS) and Dr. Palitha Mahipala sir ( Secretary Health) for removing me from the post of Medical Administration and even told me to go and work at pullmotai. Wait for the news. More immunoglobulins to be unearthed. Time will tell. *முக்கிய அறிவித்தல் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை* *21/07/2024* இன்று 21/07/2024 ஞாயிற்று கிழமை அன்று Dr Lal Panapitiya (The Deputy Director General of Sri Lanka Health Service) அவர்களிற்கும், ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது, சேவைகளின் தாமதத்தால் தென்மராட்சி மக்கள் அடையும் இன்னல்கள், சுகாதார சேவைகள் மீது தென்மராட்சி மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, இந்த சேவையின் அவசியம் அவசரம் மீளவும் தெளிவுபடுத்தப்பட்டு சத்திரசிகிச்சை நிலையத்தை இயங்க வைக்க பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. நீண்ட நெடிய கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் வாக்குறுதிகளை Dr Lal Panapitiya அவர்கள் ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களுக்கு வழங்கியிருந்தார். 1. சைனாவில் இருந்து பெறப்பட்ட, தற்போது துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளின் அனுமதிக்கு காத்து இருக்கும் Generator 400 KW இன்னும் மூன்று தினங்களில் 24/07/2024 அன்று பொருத்தப்பட்டு சேவைக்கு வரும். 2. யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு Surgeon, ஒரு Obstetrician, மற்றும் தேவையான தாதிகள் தற்காலிக திட்டத்தில் வழங்கப்பட்டு, சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிரைவில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற ஆவன செய்யப்படும். ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உடனடியாக Dr Lal Panapitiya அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தினார். Dr Lal Panapitiya அவர்கள் கொடுத்த தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட சேவைகள் வெகுவிரைவில் இயக்கு நிலை பெறும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதுமட்டுமல்லாமல் இந்த முடிவுகளை உத்தியோக பூர்வ அறிக்கையாக செய்தி ஊடகங்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறுமாம் Dr Arumugam Puvinathan அவர்கள் Dr Lal Panapitiya அவர்களிடம் வேடுகோள் ஒன்றயும் விடுத்தது இருந்தார். இதுசம்பந்தமாக இடம்பெறும் மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் தென்மராட்சி மக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். *நன்றி,* *தென்மராட்சி அபிவிருத்தி கழகம்.* Ramanathan Archchuna 10h Dr. Lal Panapitiya to be questioned for working against the current government; backed by GMOA; represented GMOA in SLMC election. All reactions Ramanathan Archchuna The gift for the work I have done for your session. Thank you sir. We will never meet again. It's a shame.
  34. பலகாரங்களை எப்படி ஆட்டையைப் போடுவது என்பதைப் பற்றியும் ஒரு காணொளி போடவும் ஐயா. எதிர்காலத்தில் முயற்சி பண்ணத் தான். இங்கே வரியைக் காணலையே? கப்பமாகவே தெரிகிறது. இது நம்ம இலங்கை அரசு போலவல்லவா இருக்கிறது.
  35. ஏனய்யா இந்த வன்மம்? வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்துவிட்டீர்களா? டாக்ரர் அர்சுனா எழுதிய குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு அவரை அங்கொடைக்கு அனுப்பினால் பிரச்சனை முடிந்ததா? இதைத் தானே வைத்திய மாபியாக்களும் விரும்புகிறார்கள்.
  36. AMIS DES ARBRES Iny Vaini · 1 j · L'impressionnant arbre de Ceiba en Amérique du Sud ! ஒரு கலைமான் போலப் படுத்திருக்கு......! 🙏
  37. ஊரே கை எடுத்துக் கும்பிட்டபடி எப்படி இருந்தவர்கள் இன்று சார் என்று கூப்பிடு என்ற நிலையில்......
  38. மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மூலம் வெளிப்படும் சமூகப் பார்வை எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘2.0’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின் ‘இந்தியன் 2’ வெளியாகியுள்ளது. தனது கடைசி 2 படங்களில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக ரோபோடிக் பற்றி பேசியிருந்தார் ஷங்கர். தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னோக்கி சிந்தி்க்கும் அவர் 2024-ம் ஆண்டிலும் சமூகம் குறித்த சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது ‘அப்டேட்’ ஆகாத தன்மையை மட்டுமல்லாமல் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘இந்தியன் 2’-வில் என்ன பிரச்சினை? - மொத்தப் படமுமே பிரச்சினை என்றாலும், ஷங்கரின் முந்தையப் படங்களில் இருக்கும் எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள் மீதான அவரது மோசமான பார்வை இன்னும் மாறவேயில்லை என்பதை இப்படம் உறுதி செய்கிறது. படத்தில் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஒருவரை தனது வர்மக் கலையால் கொல்கிறார் கமல். கொல்லப்படுவதற்கு முன், வர்மத்தால் பாதிக்கப்படும் தொழிலதிபரின் உடல்மொழி ஒருவித நளினத்துடன் மாற்றம் பெறுகிறது. திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் கேலியாக சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சி அபத்தமானது. அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கொல்லப்படும்போது, அவர்கள் மிருகங்கள் போன்ற உடல்மொழியால் பாதிப்புக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகினறனர். அப்படியென்றால் ஆண், பெண்ணைப் போன்ற நளினத்துடன் மாறுவது மிகப் பெரிய தண்டனையா? அவமானமா? இதைப் பார்க்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் மனநிலை குறித்த இயக்குநர் ஷங்கரின் பார்வை என்ன? சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு முன்னேற்றம் காண போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஷங்கர் மட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்? அவரது இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திலும் திருநங்கைகள் குறித்த இதே மனநிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் அமைத்திருந்தார். மட்டுமின்றி நேரடியாக திருநங்கைகளை தாக்கும் வசனங்களையும் இடம்பெறச் செய்திருந்தார். இத்தனைக்கும் அப்படம் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வெளியானதல்ல. சமூக வலைதளங்கள் மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் வெளியானதுதான். ஊழலில் இருந்து மக்கள் விடுபடுவது இருக்கட்டும், முதலில் இப்படியான மனநிலையில் இருந்து இயக்குநர் ஷங்கர் விடுபட வேண்டும். அதேபோல, மற்றொரு காட்சியில் கமல் ஆன்லைனில் ஊழல் தொடர்பாக நீண்....ட வகுப்பெடுத்து கொண்டிருப்பார். அப்போது கலரிங் அடித்த தலைமுடியுடன் வட சென்னையைச் சேர்ந்த மக்களின் மொழி மற்றும் உடல் பாவனைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் சிலர், கமலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கமென்ட் இடுவார். அதற்கு பதிலளிக்கும் கமல், ‘கழிப்பறை சுவர்ல எழுதிட்டு இருந்தவங்கல்லாம் ஃபேஸ்புக் சுவர்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?’ என கேட்பார். இதன் அர்த்தம் என்ன? எளிய மக்களின் சமூக வலைதள பயன்பாடு உங்களை ஏன் அசசுறுத்துகிறது? அதே எளிய மக்கள் தைரியமாக சமூக ஊடகங்களில் பேசுவதால்தான் பல சமூக பிரச்சினைகள் வெளியே தெரிகின்றன. ஆன்லைன் அப்யூசர்களாக அவர்களை மட்டும் குறிப்பிட்டு தனித்து காட்சிப்படுத்தி புளங்காகிதம் அடைவது ஏன்? ‘இவங்கள்ளாம் வந்துட்டாங்களே’ என்ற மொழிநடையின் மாற்று முகம்தானே மேற்கண்ட வசனம்? ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது. பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின. இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம். சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம். மேலும், கிட்டத்தட்ட படத்தில் வரும் அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குபவர்கள் தான்; மருந்துக்கு கூட ஒரே ஒரு ஊழியர் கூட நல்லவராக காட்டப்படவில்லை. பொதுமக்களோ, இயக்குநர்களோ, அரசியல்வாதிகளோ அனைவருமே ஒருகாலத்தில் புரிதல் இல்லாமல் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் வாசிப்பு, பரந்த பார்வை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் அவற்றை மாற்றிக் கொள்வதே இயல்பு. ஷங்கரின் இனி வரக்கூடிய படங்களிலாவது ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மீதான அவரது பார்வை மாறும் என்று நம்பலாம். மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! | question to director shankar on kamal haasan starrer indian 2 movie explained - hindutamil.in
  39. இந்தியன் 1 இல் தந்த கிறக்கத்தால் இரண்டு தரம் அகன்ற திரையில் படத்தைப் பார்த்தேன்😻 இந்தியன் 2 இல் நித்திரைதான் வந்தது! இப்போது மனிஷா இப்படி இருக்கா!
  40. சங்கருக்கு சரக்கு தீர்ந்து போயிட்டுது. எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் பின், அவர் எடுத்த படங்கள் எல்லாம் குப்பை. சிவாஜியில் தொடங்கிய சறுக்கல், எந்திரன் 1, ஐ (கொடுமையான படம்), எந்திரன் 2 என்று நீண்டு இன்று இந்தியன் 2 இல் முழுமையாக சறுக்கி விட்டார் என்று தெரிகின்றது. இடையில் நண்பன் படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் (அது இந்திப் படம் 3 idiots இன் remake என்பதால்) கமல் என்னும் நல்ல கலைஞன், அரசியல் கோமாளி ஆகிய பின், இன்னும் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார் என நினைக்கின்றேன். சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இப்படி சினிமாவை, அரசியலை விமர்சிக்கின்றவர்களை, கக்கூஸில் முன்னர் கிறுக்கியவர்கள் என சங்கர் வசனங்கள் வைத்தமையால் சலங்கை கட்டி ஆடுகின்றார்கள். நான் இன்னும் இந்தியன் 2 இனைப் பார்க்கவில்லை. OTT இல் வந்தால் கூட அநேகமாக பார்க்க மாட்டேன் என நினைக்கின்றேன் கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் பெரும் செலவில் எடுக்கப்படும் இப்படியான சினிமாக்கள் தோற்று, குறைந்த செலவில் கதையை மட்டும் நம்பி எடுக்கப்படும் கருடன், மஹாராஜா போன்ற படங்கள் வெல்லும் காலம் இது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.