Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    15740
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3054
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/29/24 in all areas

  1. முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் . மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ? அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ? முதலில் சிங்களவர்களுக்கு நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது . நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ போயிட்டினம் . சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் . ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ? இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .
  2. ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார். மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார். சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார். நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள். அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும். மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
  3. நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் . முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .
  4. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03
  5. ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣
  6. ஐரோப்பாவில இப்ப பரவலாய் கத்திக்குத்துகள் நடக்குது... போற போக்க பார்த்தால் இனி வெங்காயம் வெட்டுற சின்ன கத்தி வாங்கிறதெண்டாலும் லைசன்ஸ் வரும் போல கிடக்கு 🤪
  7. பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .
  8. 1980க்குப் பின் புத்தகங்கள் வாசிப்பது முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லலாம்.வேறுவேறு சோலிகள் பின்பு வேலை. யாழுக்குள் வந்த பின்னரே சிறிது வாசிக்கத் தொடங்கினேன். அதிவும் மேலே இருந்து கீழேவரை இழுத்து எந்தளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பது. சிறிய கதைகள் கட்டுரையாக இருந்தால் வாசிப்பது. உங்கள் கதைகள் கட்டுரைகள் ஒரு அளவோடு இருப்பதால் பொறுமையாக வாசிக்கலாம். பொறுமையை தோதித்துப் போடாதேங்கோ. இதே வேளை எனது தகப்பனார் எனக்கு விபரம் தெரிந்தது முதல் கல்கி கலைமகள் வாங்கி வாசித்து சேர்த்து கதைகள் முடிய புத்தகமாக கட்டிகட்டி வைத்திருந்தார். அந்தநேரம் புத்தகம் கட்டியபின் வாசிப்பேன். அப்பா காலமாக ஒவ்வொருவராக வந்து வாசித்துவிட்டு தருகிறேன் என்று கொண்டு போனவர்கள் போனது தான். மிகுதி இருந்தவைகளை 95 இல் இடப்பெயர்வின் போது ராணுவம் துடைத்தெடுத்துவிட்டது.
  9. மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம். ‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது. அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது. காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை. மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது. அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார். அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள். மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே! மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay Sethupathi starrer maharaja movie review - hindutamil.in
  10. 👍........... சிங்கள மொழி ஒரு செப்பனிடப்பட்ட மொழி. நல்ல அழகான ஓசை, தமிழ் போலவே, அங்கேயும் இருக்கின்றது. வன்மம் வெல்ல, மொழியும் மனிதனும் தோற்றன இலங்கையில். பாண் அருமையான சாப்பாடு. ஆனால் தினமும் எதையும் சாப்பிட முடியாது, அதுவும் சகிக்க முடியாத கூட்டுடன்.......😃. அவர்கள் பாண்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். வட பகுதியில் அவர்கள் பல பேக்கரிகளில் ஆரம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல சிறுகதையும் இருக்கின்றது. அந்தக் கதையில் அப்படியான ஒருவர் காணாமல் போகின்றார்.............
  11. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
  12. 🤣............. தற்போதைய கள நிலவரப்படி 27ம் இடத்திற்கு தான் கடும் போட்டி போல.........ஒரு 150 நாடுகளுக்கு மேல அந்த இடத்தில் கூட்டமாக நிற்கினம்......
  13. எண்ணிக்கையில், விகிதத்தில் மிகவும் குறைந்து விட்டோம், விசுகு ஐயா. ஒன்றாக நின்றாலும் முதல் இரண்டு இடங்களிற்குள் எங்களின் வேட்பாளர் வர முடியும் என்று தோன்றவில்லை. மலையக மக்களும், இஸ்லாமியர்களும், நாங்களும் நாடு முழுவதும் ஒன்றாகச் சேர்ந்தால்................ இதை விட பூமி வெடித்து, விண்கல் விழுந்து, இப்படி உலகமே அழிந்து விடுவதற்கு சாத்தியம் கூட..........
  14. எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல் எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.
  15. அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.
  16. புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣
  17. மத்திய கிழக்கில் உள்ள தண்டணைகள் சட்டங்களை வரவேற்கின்றேன். அவிட்டு விட்ட எருமை மாடுகள் மாதிரி காணாததை கண்டவர்கள் இன்னும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள். ஜனநாயக நாடுகளுக்கு வந்து உள்ள சுதந்திரங்களை துர்பிரயோகம் செய்யும் கேடு கெட்டவர்கள். 😡
  18. மிக்க நன்றி, தில்லை ஐயா. அந்த மனிதர் சொல்லும் பல வார்த்தைகள், உடல்/முக அசைவுகளில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 'கள்' என்னும் சொல்லை அதே அர்த்தத்திலேயே சொன்னார்........👍.
  19. நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு, இப்போ அந்த மரத்திலேயே குடை பிடிக்கின்றார்கள்.
  20. வீரப்பையன், “அம்மே மேக்க அய்த்தி ஒயாட்ட!” எண்டு எழுதியிருக்கு.
  21. ஒலிம்பிக்கில் மற்றுமொரு சம்பவம் – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை! 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்று வருகின்றன. கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியின்போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை இசைத்தமைக்காகவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின்போது தென்கொரிய அணியைத் தவறுதலாக வட கொரியா என அழைத்தமை தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியிருந்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்று கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. எனினும் இந்நிகழ்வு கத்தோலிக்க மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை எனவும் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் பாரிஸின் ஒலிம்பிக் செய்தித் தொடர்பாளர் ஆன் டெஸ்காம்ப்ஸ் கூறியிருந்தார். https://thinakkural.lk/article/306983
  22. ல்சமூகம்இலக்கிய வக்கிர வணிகம் சோம. அழகு நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் அப்போது. பத்து வருடங்கள் கழித்து அப்பாவின் மனநிலை இப்போது முழுவதுமாகப் புரிகிறது. அப்பாவினுள் தேவை இல்லாமல் விதைக்கப்பட்டுக் கொண்டே இருந்த பதைபதைப்புதான் ஒவ்வொரு முறையும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. திரைத்துறையைப் பொறுத்த வரை எல்லாமே seasonalதான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேய்ப் படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். பிறிதொரு காலத்தில் உருவக்கேலியை நகைச்சுவை என நம்ப வைக்க முயற்சிக்கும் படங்களாக வரும். திடீரென கார்ப்பரேட் முதலைகளிடம் இருந்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் படங்கள் வரிசையாக வந்து திணறத் திணற அடிக்கும். சர்வகாலமும் எடுக்கப்படும் அடிதடி படங்கள்(gangster movies), தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி தேசபக்தியை நிலைநாட்டும் படங்கள், ஏதேனும் ஒரு விளையாட்டை மையமாக வைத்து வரும் படங்கள், ஒரே formulaவுடன் ‘முந்திரி பக்கோடா’, ‘திரிமுந் டக்கோப’, ‘ரிதிமுந் படாக்கோ’, ‘கோப திரிமுந்டா’, ‘பக்கோ முந்டாதிரி’…. என வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் என வகைப் படுத்திக் கொண்டே போகலாம். ஒவ்வொரு வகையறாவிலும் ஒன்று பார்த்தாலே போதும்தான். ஆனால் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தாலும் பிரச்சனையில்லை. Good, OK, So So, Boring என அங்கேயே அப்படியே மறந்துவிடலாம். பொழுதுபோக்கைத் தவிர இவற்றில் மனதைப் பதம் பார்க்கும் விஷ(ய)ம் எதுவும் இருக்காது. தற்காலத்தில் புதிதாக ஒரு கதைக்களம். குழந்தை வன்புணர்வு. வாசிக்கும் போதே நடுக்கம் வருகிறதல்லவா? இதை வைத்து ஏதோ ஒரு படம் (strictly one!) என்றால் பரவாயில்லை, அதுவும் கூட அது பாதிக்கப்பட்டவரின் குரலாகவோ அவருக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பேசும் படமாகவோ இருந்தால் மட்டுமே. ஆனால் மீண்டும் மீண்டும் இந்தக் கதைக் கருவை வைத்து எடுக்கப்படுபவை சுற்றியுள்ளவர்களின் வேதனையைப் பேச, பிற கதாபாத்திரங்களின் நற்பண்புகள் பாசம் கோபம் ஆகியவற்றைக் காட்ட, நீதியை நிலைநாட்ட, சில மனங்களின் கோளாறுகளை(psychological disorders) வெளிச்சம் போட்டுக் காட்ட முயலும் படங்களாகத்தான் உள்ளன. இதற்கு ரசிக்கவில்லை, பிடிக்கவில்லை என்றெல்லாம் மென்மையான சொற்களைப் பயன்படுத்த விருப்பமில்லை. ஒரு படைப்பு நம்மை அழ வைக்கலாம்; சிரிக்க வைக்கலாம்; வருத்தப்பட வைக்கலாம்; நெக்குருக வைக்கலாம்; ஓர் அழகிய நல்லுணர்வை விட்டுச் செல்லலாம்; ஒன்றுமே தோன்ற வராமல் அமைதியாகக் கூட இருக்கச் செய்யலாம். ஆனால் இவ்வகைப் படங்கள் முடிந்த உடன் பயம் கலந்த பதற்றம் கரிய இருளாகக் கவிந்து கொள்கிறது. குழந்தைகளை, ஓடோடிச் சென்று வாரி அள்ளி நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு விடுவிக்கத் துணிவில்லாமல் தவிக்க வைக்கும் அச்சம் படர்ந்து அகல மறுக்கிறது. எந்த கலை வடிவமும் விட்டுச் செல்லக் கூடாத உணர்வு இது. கார்கி, செம்பி, வான் மகள், சித்தா, பொம்மை நாயகி என நீளும் இப்பட்டியலின் உச்சமாக மகாராஜா. மகாராஜா திரைப்படத்தின் நேரியல் அல்லாத(nonlinear screenplay) சுவாரஸ்யமான திரைக்கதை அத்திறமையான இயக்குநரின் சாதூர்யத்தைக் காட்டுகிறது. ஆனால் எல்லாம் தவிடுபொடியாகும் வண்ணம் அவர் படைத்த எதிர்மறை கதாபாத்திரங்கள் குழந்தை வன்புணர்வை துளியும் உணர்வில்லாமல்(height of insensitivity) அணுகியிருப்பது அதிர வைக்கிறது. நடிகர் சிங்கம் புலி கதாபாத்திரத்தின் வசனங்கள்… எப்படி ஒருவரால் அவ்வளவு வன்மம் தெறிக்கும் வார்த்தைகளை யோசிக்க முடிந்தது? எவ்வித உறுத்தலும் இல்லாமல் எப்படி எழுதி படமாக்க முடிந்தது? ஏன் அல்லது எப்படி வந்தது அத்துணிவு? அக்காட்சியில் நடிக்க எப்படி ஒருவரால் ஒப்புக்கொள்ள முடிந்தது? இந்தப் படத்தில் வரும் ஒருவருக்குக் கூடவா வீட்டில் குழந்தைகள் இல்லை? கதாபாத்திரங்களின் மீதான வெறுப்பு அத்தனி மனிதர்களின் மீது திரும்பியதில் வியப்பேதும் இல்லை. ‘அவ்வளவு திறமையாக நடித்திருக்கிறார்கள். கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார்கள்…’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து இங்கு பெருமைப்பட ஒரு மண்ணாங்கட்டியும்(எழுத்து நாகரிகம் கருதி வன்சொற்களைத் தவிர்த்திருக்கிறேன்!) இல்லை. அக்குற்றம் ஒரு முறை நிகழ்ந்ததைப் பதிவு செய்வதே கொடூரம். “எப்படியும் கொல்லத்தான் போறோம்… அதுக்குள்ள இன்னொரு வாட்டி… போயிட்டு வந்துரட்டுமா?” (எழுதும் போதே விரல்கள் நடுங்குகின்றன) என இரண்டாம் முறையில் மனசாட்சியோடு அறத்தையும் முற்றிலுமாகக் குழி தோண்டி புதைத்து விட்டார் போலும் இயக்குநர். இந்த அளவிற்கு அருவருக்கத்தக்கதாகக்(sick) காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? சிங்கம் புலி விஜய் சேதுபதியை மறைமுகமாக மிரட்டுவது, இறுதிக் காட்சியில் அனுராக் கஷ்யப் அக்குழந்தையிடம் திமிராகப் பேசுவது என சில இடங்களில் கதாபாத்திரங்கள் இம்மி அளவு குற்றவுணர்வைக் கூட உணராமல் மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் அரக்கத்தனம் தேவைதானா? முழு படத்தின் விறுவிறுப்பையும் இக்காட்சிகள் மொத்தமாக விழுங்கியதில் கசப்பும் பயமும்(anxiety) தாம் மிஞ்சி நின்றன. போதாக் குறைக்கென்று அக்குழந்தை தன்னை அந்நிலைக்கு ஆளாக்கியவனை நேரில் காண வேண்டும் என்று கேட்டு அவனை மிகத் தைரியமாக எதிர்கொண்டு தன்னம்பிக்கை மிளிரப் பேசும் சினிமாத்தனம் எல்லாம் சுத்த அபத்தம். ஏதோ கை கால் அடிபட்டு விழுந்ததைப் போல் இதைக் கையாண்டிருப்பதெல்லாம் ஹாஃப் பாயில்தனமாக இருக்கிறது. ‘கார்கி’ சாய் பல்லவி சுக்கு நூறாக உடைந்த போதிலும் நியாயத்தின் வழி நின்றதைப் பேசுகிறது. ‘செம்பி’யில் அக்குழந்தையை நாசம் செய்த அம்மூன்று மிருகங்களும் வெற்றிக் களிப்பில் திளைப்பது போலவும் ஒவ்வொரு வாரமும் அதே போன்று செய்ய வேண்டும் என அவை உறுதி ஏற்கும் காட்சிகளையும் காண்பித்துதான் அவர்களின் மனப்பிறழ்வை பிரகடனப் படுத்த வேண்டுமா? ‘பொம்மை நாயகி’யும் கூட கிட்டத்தட்ட இப்படித்தான். நிமிஷா சஜயனின் மனப் போராட்டத்தை ஒரே ஒரு காட்சியில் போனால் போகிறது என வைத்து விட்டு சித்தார்த்தின் கோபத்தையும் வில்லனின் கொடூரச் செய்கைகளையும்தான் பூதக்கண்ணாடியில் காண்பித்தது ‘சித்தா’. வான் மகளில் துயரில் உழலும் அக்குழந்தையின் பெற்றோர்; ஊருக்குப் பயந்து எதுவும் அறியாத பாதிக்கப்பட்ட தன் பிள்ளையை மலை மேல் இருந்து தள்ளி விடுவாதாகக் கற்பனை செய்து பின் அதன் மடமையை உணரும் தாய் கதாபாத்திரம்….. இப்படியாக ஒவ்வொருவர் கோணத்திலும் இருந்து காண்பிப்பதற்கு இது ஒன்றும் விளையாட்டோ லேசான விஷயமோ அல்ல. என்னதான் மற்றவர்களைச் சுற்றி காட்சிகள் அமைத்து கதையை நகர்த்தி மையப்புள்ளியில் இருந்து திசைதிருப்ப முயன்றாலும் ஆழ்மனதில் அக்குழந்தைகளின் பறஅதிர்ச்சி(trauma) பற்றித்தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியொரு ரணம் நடந்ததாகச் சொன்னாலே எங்களுக்கு நெஞ்சம் இறுகி வயிற்றைப் பிசையும். அதை அப்படியே காட்சிப் படுத்த ஏன் வரிந்து கட்டிக் கொண்டு அலைகிறார்கள்? எல்லா படங்களிலும் குற்றவாளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறதுதான். ஆனால் அவைகளின்(என்ன மரியாதை வேண்டிக்கெடக்கு?) இறப்பு கூட போதுமான தண்டையாகத் தோன்றாத அளவிற்கு என் ஆங்காரமே முந்திக் கொண்டு நிற்கிறது. மீண்டும் மீண்டும் இது போன்ற படங்களைத் தயாரித்துத் திரையில் இதையும் சாதாரணமாகக் கண்டு கடந்து செல்ல மக்களைப் பழக்கப் போகிறார்களா? ‘இவ்வளவு நீளப் படத்தில் அந்த ஒன்றை மட்டும் ஏன் பிடித்துத் தொங்க வேண்டும்? மற்றபடி படம் உணர்வுப்பூர்வமாக நன்றாகத் தானே இருந்தது?’ – ‘வேக வைத்த தண்ணீர் மட்டும்தானே கழிவுநீர்? மற்றபடி பிரியாணி நன்றாகத்தானே இருந்தது?’, இரண்டிற்கும் ஆறு வித்தியாசம் சுட்டுக! ‘எதார்த்தம்(Reality)… அன்றாடம் நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார்கள்’ என மொன்னைத்தனமான வாதம் எல்லாம் வேண்டாம். புகை பிடிப்பது, மது குடிப்பது, பெண்களைக் கேலி செய்வது, அவர்களின் பின்னாலேயே பொறுக்கித்தனமாகச் சுற்றுவது, பெண்கள் எவ்வாறெல்லாம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என பக்கம் பக்கமாக வசனம் பேசுவது – ஒரு கதாநாயகனின் குறைந்தபட்ச தகுதியாக இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகம் இப்படித்தான் பிதற்றும். அப்பெருந்தகைகளிடம் கேட்டால் ‘Hero இல்லை… protagonist’ என்றும் உருட்டுவார்கள். திரையில் காணும் பல அக்கிரமங்களையும் கொடூரங்களையும் மிக இயல்பாகவும் சில சமயம் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு எங்களை மெருகேற்றியதற்கு நன்றி! அதற்காக ‘வக்கிரம்’ நன்றாக வியாபாரம்(!) ஆகிறது என வரிசையாக இக்கருவைக்(concept) கொண்டு கல்லா கட்ட முனைவது குரூரம் இல்லையா? It’s not a bloody selling concept! அல்லது எப்படியேனும் புகழைச் சம்பாதிக்கும் முனைப்பா? இதைக் கையில் எடுக்கும் இயக்குநர்கள் அப்படங்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் எனச் சம்பந்தப்பட்டிருக்கும் ஒவ்வொருக்கும் நிச்சயம் கொடூரமான உளப்பிறழ்ச்சி இருந்தாலொழிய இக்கதைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ‘அடுத்தது? அடுத்தது? அடுத்தது?’, ‘இன்னும் வேறு எப்படி எடுத்தால் மக்களை ஆழமாக உலுக்கும்?’, ‘படத்தில் இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது?’, ‘பழிவாங்கலுக்கு என்ன காரணத்தை வைக்கலாம்?’ என எல்லாவற்றிற்குமான சர்வ ரோக ‘நோயாக’ இதைப் பயன்படுத்துவதற்கெல்லாம் முதலைத் தோல் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். அதிலும் இப்போது வழக்கமாக்கப்பட்ட கொடூரங்களில் அசிங்கத்தைக் கலந்து கொடுத்தால்தான் மக்களுக்கு மழுங்கிப் போய்விட்ட adrenaline, cortisol நன்றாகச் சுரக்குமாம். பார்த்துக் கொண்டே இருங்கள். அண்ணன்-தங்கை, பெற்றோர்-குழந்தைகள் என எந்த உறவையும் விட்டு வைக்கப் போவதில்லை இவர்கள். தணிகைக் குழுவும் இப்போது முகச்சவரத்தில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதால் அவர்கள் கவனத்தில் இருந்து எல்லாம் தப்பி விடுகிறது…. ஹூம். என்ன செய்ய? ‘அறம்’ என்று ஒரு வார்த்தை இருப்பது இவர்களுக்குத் தெரியுமா? எதார்த்தத்திற்கு மிக அருகில் நின்று அறத்தோடு சமரசம் செய்து கொள்ளாமலும் திரைப்படம் எடுக்கலாம். அது நிச்சயம் நல்ல திரைப்படமாகத்தான் அமையும். இயக்குநர் மாரி செல்வராஜின் ஒவ்வொரு படமும் ஆகச் சிறந்த சான்று. ‘பரியேறும் பெருமாள்’ல் ஆணவக் கொலை செய்யும் தாத்தா கதாபாத்திரம், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் – இவ்விருவரும் கொலை செய்யப்படுவதைப் போல் காண்பித்திருந்தால் சராசரி மனிதனின் மனது நிச்சயம் நீதி வழங்கப்பட்டுவிட்டதாகக் கூத்தாடியிருக்கும். ஆனால் பார்வையாளனின் மனதில் வெறியைத் தூண்டுவதோ வெறுப்பை விதைப்பதோ மாரி அவர்களின் நோக்கமல்ல. “இனிமே நீ துப்பாக்கிய தூக்கி மிரட்டுனா கூட அவனவன் அவனவன் திசையை நோக்கி ஓடிட்டுதான் இருப்பான்” என்று அமைதியாக ஆனால் வலிமையாக ஃபகத் பாத்திரத்தின் தோல்வியைக் காண்பித்திருப்பார். அதிகாரப் போக்கைச் சாடி அடக்குமுறைக்கு ஆளானவர்களின் கம்பீரமான எழுச்சி குரலாக ஒலிக்கும் இவ்வகை கண்ணியமான படங்கள்தானே சமூகத்தைப் பண்படுத்துவதாக இருக்க முடியும்? அவ்வகையில் எளியவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ‘விசாரணை’ போன்ற உண்மைச் சம்பவங்களை இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் தம் திரைப்படங்களின் மூலம் பதிவு செய்வதும் அவசியமான ஒன்றே! இயக்குநர் மணிகண்டனின் ஒவ்வொரு படமும் கூட எதார்த்த வாழ்வியலோடு கலந்ததுதான். பெரிய பெரிய கருத்துகளை மிக எளிதாக ஆணித்தரமாக அவரால் தமது படங்களின் மூலம் சொல்ல முடிந்திருக்கிறதே? இவ்விருவரையும் போல் அழகியல் ததும்பத் ததும்ப எடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ ஹலீதா ஷமீம் அவர்களை எப்படி மறக்க முடியும்? திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். மக்களின் ரசனையை மீட்டெடுக்க ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த என இவர்களைப் போன்றோர் போராடிக் கொண்டிருக்கையில்….. ஐயா கனவான்களே! எவ்வளவு அறுவையாகக் கூட படம் எடுங்கள். பிடிக்காவிட்டாலும் பார்த்துத் தொலைகிறோம். தயவு செய்து பிள்ளைகளை மட்டுமாவது விட்டுவிடுங்கள். இயக்குநராக நடிகராகத் தோற்கலாம்; மனிதனாக அல்ல. அதிலும் கண்டிப்பாக மனிதத்திடம் அல்ல. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/07/29/வக்கிர-வணிகம்/
  23. இது என் மகள் சோம.அழகுவின் எழுத்து, நண்பரே ! உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
  24. திருப்பூர் டைலர்கள் சங்கம் · Rejoindre Rajesh Guna · 4 j · 100 கோடி சம்பளம் வாங்கினாலும் 1000.கோடி சொத்து இருந்தாலும் அவனுக்கும் வெளிய சொல்லமுடியாத வருத்தம் இருக்கும்!.......!
  25. இல்லை அண்ணை, இன்னமும் ஒன்றும் எடுக்கவில்லை. நீச்சலில் அப்படி எவரும் இருப்பதாகவும் நான் அறியவும் இல்லை........... 👍........... இரண்டு வழிகளிலும் நிரல் படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன், ஏராளன். உலகம் ஒரு வழியில் போனால், கண்டிப்பாக அமெரிக்க இன்னொரு வழியில் தான் போகும்..........🤣. நான் ஒரு அமெரிக்க தளத்திலிருந்தே எடுத்துப் போடுகின்றேன், அவர்கள் போடும் அதே வரிசையிலேயே.
  26. நான் இந்தப் படத்தை பார்க்க முன்னரேயே அராத்து இப்படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டேன். அராத்து எழுத்தில், சொற்களில் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும், நெறிகளுக்கும் அடங்காதவர். மிகமிக நேரடியாகவே ஒரு தாண்டவம் ஆடியிருந்தார். நீங்களும் எழுதியிருப்பதை, உங்களின் பார்வையையும் வாசித்த பின், நான் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன என்று தெரிகின்றன. மிக்க நன்றி..........🙏.
  27. 🙏........ ஒரு நாவலுக்கும் மற்றைய சிறு வடிவங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற உரையாடல் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. நாவலில் நிலம் வேண்டும், மனிதர்கள் வேண்டும், தேடல் வேண்டும், அலைக்கழிப்புகள் வேண்டும் என்று இருக்க வேண்டிய விடயங்களின் பட்டியல்கள் நீளமானது. சிறு வடிவங்களில் ஒரு கணம் அல்லது ஒரு புள்ளி மட்டுமே இருந்தால் போதும் என்று சொல்வார்கள். சில வேளைகளில் அந்த ஒரு புள்ளியே மனதிற்குள் இந்தப் பிரபஞ்சம் போல வெடித்தும் பரவலாம்...........👍.
  28. பொது கழிப்பறைகள் பொதுவாக கடற்கரை, பூங்காக்களில் உண்டு. அதை தேடி போக வேண்டும். இந்தியர்களுக்கு இது சரிவராது. “ நடு வீட்டில்” என்றொரு பழமொழி தெரியும் தானே அண்ணை.😂
  29. எங்களுக்கு இதெல்லாம் சரிவராது ஈழப்பிரியன் தம்பி சொன்னதுபோல்👇
  30. மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு என்றே நம்ப வேண்டி இருக்கிறது.
  31. நன்றி அண்ணை உங்கள் ஆக்கத்திற்கு. எனக்குப் பிடித்த வரிகள் தடித்த எழுத்தில். நீங்கள் ஒரு சிறந்த வாசகரும் கூட.
  32. சிங்கள இனவாதம் இலங்கையில் இல்லாதிருந்தால் உலகின் சுற்றுலாவிற்கான முதலிடத்தில் இலங்கை இருந்திருக்கும்.
  33. கடவுள் என்பது ஒரு இயற்கை. உலகில் எத்தனை இனங்கள் இருக்கின்றதோ அத்தனைக்கும் ஒவ்வொரு மதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அதில் சைவமும் ஆபிரிக்க தென்னமரிக்க நாடுகளில் வாழும் மக்கள் வழிபாடுகள் இயற்கையை முதன்மைப்படுத்தியதே. மற்றும் படி அந்த இயற்கையை மீறி ஆறறிவு படைத்த எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது.
  34. நான் இந்த‌ ஆசியா கோப்பை தொட‌ங்க‌ முத‌லே சொன்னேன் .இந்தியா இல‌ங்கை தான் பின‌லுக்கு வ‌ரும் அதில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று ஆனால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி 15 வ‌ருக்கு பிற‌க்கு அடிச்ச‌ அடிய‌ பார்த்து விய‌ந்து போனேன் அடிச்ச‌ ப‌ந்துக‌ள் கூட‌ சிக்ஸ்6 ம‌ற்றும் போர்4......................... இள‌ம் பெண்க‌ளின் விளையாட்டு மிக‌ அருமை............................ இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு கோப்பையை வென்ற‌துக்கு ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் கொடுத்த‌வை...................இன்றைய‌ ஆட்ட‌ நாய‌கிக்கு 25ஆயிர‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர்..............................
  35. சரித்திர வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி
  36. புதன்கிழமை சம்பந்தனின். 31 ஆவது நாள் 12 மணிக்கு சாப்பிட வருமாறு முகநூலில். அழைத்து இருக்கிறார்கள் 🤣
  37. போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் என்றால் அதற்கு நிச்சயம் நான் கொள்ளி வைப்பேன்.
  38. விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.
  39. பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா. எனக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் மலிபன் பிஸ்கட்டுகள் தான். இங்கு குக்கீஸ் என்ற பெயரில் கனடியன் பிஸ்கட்டுகளை விற்பார்கள். அவற்றின் சுவைக்கு நாக்கு பழக்கப்படவில்லை என்பதால், பிடிப்பதில்லை. மலிபன் மாரி தான் இவற்றில் மிகவும் பிடித்தது. பால் தேத்தண்ணிக்குள் லாவகமாக நனைத்து, அப்படியே சொத சொத என்று வாயுக்குள் போடும் போது, அப்படி ஒரு சுவை. லெமன் பப் (Lemon puff) பில் இருக்கும் கிரீமில் உடலுக்கு ஒவ்வாத விடயங்கள் உள்ளன என ஒரு முறை எங்கோ கேள்விப் பட்டமையால் அதைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். க.பொ.த உயர்தரம் படிக்கும் போது, இதனருகில் இருந்த ராஜேஸ்வரி institute எனும் ரியூட்டரியில் தான் ரியூசனுக்கு சென்றேன். மலிபன் கம்பெனியில் இருந்து வரும் வாசனை மூக்கை துளைத்து பசியை உருவாக்கும். மலிபன் கம்பெனியின் இன்றைய சரியான பெயர் Little lion ஆகும். பெயரில் சிங்கம் உள்ளது
  40. பாம்பின் கால் பாம்பு அறியும். 😂 வாஸ்து பார்க்கின்ற நல்ல அனுபவசாலிகள், எங்கு குழி தோண்ட வேண்டும் என்று வாசனையை வைத்தே கண்டு பிடித்து விடுவார்கள். இதில் இந்தியர்கள், பலே… கில்லாடிகள். 🤣
  41. கையால குழி தோண்டுற இடத்திலை ஏற்கனவே ஒருத்தர் தோண்டி கடன்களை கழிச்சிருந்தால்......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.