Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. valavan

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    1569
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7051
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/31/24 in Posts

  1. இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது. சஹ்ரான் சாகுமுன் வெளியிட்ட ஒரு வீடியோவில் இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும் மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் சொன்னான். அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் . பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே .அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும் சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே!
  2. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது 90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள், இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம், மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம் சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின. பாலஸ்தீன பிரச்சனையில் பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா? இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள். அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட. ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா? ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும் நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது. அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள் அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே. அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா? பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள். நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை. அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே!
  3. எனது இனம் கொத்து கொத்தாய் மடிந்ததுக்கு யுத்தவெற்றி வாழ்த்து சொன்ன எம்மைபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட பாலஸ்தீன மக்களுக்கு தலைமை தாங்கும் அதன் தலைமையை எந்த கூடையில் வேண்டுமென்றாலும் போடலாம் என்ற கருத்து கொண்டுள்ளேன், நீங்கள் அதே கூடைக்குள் அவர்களை போடாதிருப்பதில் மகிழ்ச்சி.
  4. பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள் பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? பாலசிங்கம் எங்கை இருந்தவர்?
  5. ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை. ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!
  6. அப்பிடியே இந்த 3 நாடுகளும் சேர்ந்து ஆரம்பித்த தாக்குதலில் இஸ்ரேல் இழந்த நிலப்பரப்பு எவ்வளவு எண்டும் ஒருக்கா எழுதி விடுங்கோ😂!
  7. 35 வருடங்களுக்கு முன்னரே அவர் தேர்ந்து கொண்ட பாதை, இப்படித் தான் முடியுமென்று அவருக்கே தெரிந்திருக்கும் - occupational hazard. நிலைமை இப்படி இருக்க ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு "அனுதாபங்கள்" என்று கண்ணீர் உகுப்போரைப் பார்த்து இந்த மரண வீட்டிலும் சிரிப்பே வருகிறது😂. இஸ்ரேல் ஒக்ரோபர் தாக்குதலுக்குப் பதிலடியாக இதைப் போன்ற குறி வைத்துப் போட்டுத் தள்ளும் வேலைகளைத் தான் செய்திருக்க வேண்டும், காசாவில் 40K மக்களைக் கொன்றதால் எதையும் இஸ்ரேல் அடையவில்லை. அதைச் செய்திருக்காமல் இப்படியான வேலைகளைத் தொடர்ந்தால் பயன் பல மடங்கு இருக்குமென நினைக்கிறேன்.
  8. இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது. சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!
  9. 20 லட்ச ரூபாய்க்காக ஒரு இளைஞன் கொலை. பெரும் தொகை பணத்துடன் செல்லும் போது இரகசியமாக கொண்டு செல்லலாமே. அது... மூன்றாம் ஆளுக்கு எப்படி தெரிய வந்தது. யாரோ... நன்கு அறிந்தவர்கள்தான் இதனை செய்து இருக்கின்றார்கள்.
  10. மிகவும் உண்மை. கொல்லப்பட்டவர் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் என்ற நல்ல செய்தியுடன் என் காலை விடிகின்றது. ஈரான் ஒரு செல்லாக்காசு. ஒரு அடையாள தாக்குதலை செய்து விட்டு, மீண்டும் பங்கருக்குள் பதுங்கிக் கொள்ளும்.
  11. இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது, நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா தலைமையும் போடப்படும் என்பதில் மாற்றமில்லை. எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.
  12. நான் அப்படி நினைக்கவில்லை ......இவர் சம்பந்தனைப்போல். பதவியில் ஒட்டி கொண்டு இருப்பார்,.......இதனால் இளைஞர்கள் திறமைசாலிகள்……………… தலைவர்கள் ஆகும் வாய்ப்புகளை இழந்து விடுவார்கள . , .... புதிய சிறந்த திறமையான தலைவர்களை உருவாகிறது இஸ்ரேல் 😂😂
  13. 👍.......... ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது. அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும். ஒருவர் தன்னை நன்றாக கவனித்த தனது அப்பாவுக்கு நினைவு அஞ்சலி கொண்டாடினாராம். அதை பார்த்த இன்னொரு தமிழர் அவருடைய அப்பா- அப்பாவோ அவைரை குடும்பத்தோடு கைவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டவர் இவர்களை கவனிப்பதே இல்லை அம்மா உணவுகள் செய்தும் உறவினர் உதவியுடன் வாழ்கை ஓடியது அவரும் தனது அப்பாவுக்கு பெரிய அளவில் நினைவு அஞ்சலி செய்து அப்பாவின் பாச பிணைப்பை பற்றி புழுகி உரை நிகழ்த்தினாராம். அதே மனப்பான்மை தான் புனைவுகளை வரலாறாக மாற்றி அடித்துவிடுவதும் குதுகலிப்பதும்.
  14. கிழிஞ்சுது இது எப்ப லெப்.கேணல் இம்ரான் சங்கரப்பிள்ளை சதானந்தன் கொக்குவில் யாழ்ப்பாணம் லெப்.கேணல் பாண்டியன் செல்லத்துரை சிறிதரன் பிரம்படி கொக்குவில் யாழ்ப்பாணம்
  15. இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்றும் அதையே சொல்லலாம். Countries Gold Silver Bronze Sum Soviet Union (USSR) 48 25 22 95 United States 33 31 30 94 East Germany 20 23 23 66 West Germany 13 11 16 40 Hungary 6 13 16 35
  16. முஸலிம்கள் எங்கள் போராட்டத்திற்கு எதிராக நின்றார்கள் என்ற காரனத்திற்காக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது செய்யும் கொடுரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.அப்படிப்பார்த்தால் எமது போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்நாடுகளை விட இஸ்ரேல் >அமெரிக்கா>இந்தியா உக்ரைன்உட்பட போன்ற நாடுகள் நேரடியாகவே பங்களித்தார்கள். எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான தடைகளைப் போட்டு மேற்குலகமும் ஆதரவைக் கொடுத்தது.பாலஸ்தீனியர்களுக்கு அவர்களது மண்ணில் உரிமையுடன் வாழ மறுப்பது அநீதி.
  17. யேர்மன் இப்போது மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது.இவர்களை கனடா யுஸ் பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது இவர்கள் தனி ஒரு இனமாக சாதித்துள்ளார்கள் அந்தவகையில் சாதனையாளர்கள் தற்போது தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா 8 7 3 18 2 யப்பான் 8 3 4 15 6 தென் கொரியா 5 3 3 12 8 இத்தாலி 3 6 4 13 10 யேர்மனி 2 2 1 5
  18. இதை விட ஒரு சிறந்த பதிவை ஜேர்மனியிலிருந்து கொண்டு ஜேர்மனியை கேவலப்படுத்தி பதிவு இடமுடியாது 🤣🙏 உண்மை தான் எனக்கும் விளங்கவில்லை மற்ற நாடுகள் வளர்ந்து விட்டதா??? அல்லது ஜேர்மனி விளையாட்டில் பின்நங்கிவிட்டத??
  19. இந்தியாவை விட ஜேர்மனி முன்னுக்கு நிக்குது எண்டு சந்தோசப் படுங்கோ. 😂 🤣
  20. அதிக பிரச்சனைகள் பலஸ்தீனத்தை அடிப்படையாக கொண்டது என்று மட்டும் தான் சொன்னேன். எல்லா பிரச்சனைகளும் என சொல்லவில்லை.மற்றும் படி அவைகள் மதத்துக்குள் நடக்கும் குழுச்சண்டைகள். பலஸ்தின பிரச்சனை போன்று சர்வதேச பிரச்சனை அல்ல.அதை விட தங்களுக்குள் அடிபட்டாலும் பலஸ்தீன பிரச்சனையில் ஒரு கோட்டில் தான் நிற்கின்றார்கள். அரபு வசந்தத்தை சிரியா எதிர்த்து நின்றது.அதுதான் மேற்குகிற்கு பிரச்சனை.அது சரி சிரியாவிலும் லிபியாவிலும் நேட்டோவிற்கு என்ன வேலை? உலகில் எத்தனையோ போர் அகதிகள் இருக்கும் போது மேற்குலகு சிரிய அகதிகளுக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்து வரவேற்க என்ன காரணம்? அவர்களின் போக்கும் குணங்களும் சரியென நான் எங்கும் வாதாடியதில்லை. ஆனால் சதாம் ஹுசைனும் கடாபியும் அசாத்தும் மேற்குலகிற்கு என்ன செய்தார்கள்? ஏதாவது கேடுகள் விளைவித்தார்களா? அவர்கள் நாடுகளில் அகதிகள் உருவாக யார் காரணம்? வினை விதைத்தவர்கள் வினைதான் அறுக்க முடியும் தினை அறுக்க முடியாது. அதெப்படி உங்களால் இப்படியொரு தீர்க்கதரிசனமான முடிவை சொல்ல முடிகின்றது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டால் தமிழ்நாடும் பிரிந்துவிடும்,சிங்களவர்களும் கடலுக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்பது மாதிரி...... அமெரிக்கா, யூதம், மேற்குலகு உட்பட முஸ்லீம் நாடுகளுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என சொல்ல வருகின்றீர்கள்?? நான் முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை. ஆனாலும் மேற்குலகத்தினர் சாதுக்கள் அல்ல.
  21. லொல்..ப்றோ😂! பலஸ்தீனம் இன்று இருக்கும் நிலையையும்,இஸ்ரேலின் நிலையயும் மனதில் வைத்து இந்த வரலாற்றுத் துணுக்குகளை வாசித்துப் பாருங்கள்: 1. ஓட்டோமான் (பழைய துருக்கி தேசம்) வீழ்ந்த நேரம் இஸ்ரேலுக்கு பல்போர் பிரகடனம் மூலம் நிலத்தை பிரிட்டன் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நேரம் பலஸ்தீன அரபுக்கள் நிராகரித்து வன்முறையை ஆரம்பித்தார்கள். இந்த வன்முறையை எதிர் கொள்ள யூதர்கள் உருவாக்கிய பராமிலிற்றரிக் குழு ஹகானா (Haganah) இஸ்ரேலிய இராணுவத்தின் (IDF) முன்னோடிப் படை இது தான். 2. சேர்ச்சிலுக்கு யூதர், இந்தியர், ஆபிரிக்கர் ஆகிய யாரையும் பிடிக்காது. அவர் பல்போர் பிரகடனத்தில் இருந்த இஸ்ரேல் நிலப்பரப்பைப் பிரித்து ஜோர்தான் நாட்டை உருவாக்கினார் (இதுவும் பலஸ்தீன அரபுக்களுக்குப் பிடிக்கவில்லையென்பது வேறு கதை). 3. 1947 இல், ஐ.நா வினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப் பட்ட போது, பல்போர் பிரகடனம் ஒதுக்கிய நிலப்பரப்பை விட குறைந்த நிலம் தான் இஸ்ரேலுக்கு வழங்கப் பட்டது. இப்போது ஹமாஸ் இருப்பது போல இஸ்ரேல் தரப்பில் இருந்த கடும்போக்காளர்கள் "இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அடித்துப் பிடிப்போம்!" என்ற போது இஸ்ரேல் தலைவராக இருந்த டேவிட் பென்கூரியன் "ஒரு மேசைத்துணி அளவிலான நிலம் கூட சர்வதேச அங்கீகாரத்தோடு கிடைத்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று இஸ்ரேலை உருவாக்கினார். 4. ஒருவாறாக இஸ்ரேலை உருவாக்கிய பின்னர் அதன் சனப்பரம்பலைப் (demography) பார்த்தால், இஸ்ரேல் நாட்டில் அரபுக்களுக்கும், யூதருக்கும் ஒரு லட்சம் சனத்தொகை அளவு தான் வித்தியாசம். அரபுக்களின் பிறப்பு வீதப் படி பார்த்தால், ஒரு தலைமுறையில் இஸ்ரேல் இன்னொரு அரபு நாடாகும் சாத்தியம் தெரிந்தது😂. இதைப் பார்த்து இஸ்ரேல் தலைவர்கள் கையைப் பிசைந்து யோசித்துக் கொண்டிருக்க, "இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போரை ஆரம்பித்து இஸ்ரேலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர் பலஸ்தீன அரபுக்கள். பின்னர் நடந்தது வரலாறு!
  22. இங்கே கொம்பு அல்ல சிக்கல். வருமானம். நாலு வருடங்கள் படித்த எஞ்சினியர் மார் பல லட்சக்கணக்கில் சம்பளத்தை எடுத்து முன்னேற வைத்தியர்கள் ஓடி ஓடி இரண்டு வேலை செய்தும் அவர்கள் போல் வசதியாக வாழமுடியாத நிலை. இது தான் ஊழல் மற்றும் பிற தூண்டுதல் களுக்கு காரணம். இங்கேயும் அதே நிலை தான். எனது மகள் மருத்துவப் படிப்புக்கு சென்ற யூனியில் முதல் வகுப்பில் சொன்னது. அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இங்கே யாரும் இருந்தால் இப்பொழுதே எழுந்து சென்று அதற்குரிய படிப்பை தெரிவு செய்து கொள்ளலாம் என்று.
  23. அமெரிக்கா 7ஆம் இடம் தங்கம் கூட வாங்கிய பட்டியலில்!
  24. முதலில் மருத்துவர்கள் கொம்பர்கள் என்ற நிலை மாற வேண்டும்.
  25. மக்கள் தமிழ் கட்ச்சிகளின் பேச்சைக் கேட்க்காமல் தாங்கள் யோசிச்சு வாக்களிக்க வேணும்.
  26. உலகில் பலஸ்தின பிரச்சனையை வைத்துத்தான் அதிக பிரச்சனைகள் நடக்கின்றன. அதை தீர்க்க நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் தயார் இல்லை. எனவே முஸ்லீம்கள் அடங்கப்போவதில்லை.
  27. இல்லையே அப்பாவுக்கு ஒரு teats தான்......! 😁
  28. நீங்கள் நினைத்தது தான் சரி அண்ணை. Lionesses have four (4) teats.
  29. இஸ்ரேல் ஆதரவாளர்கள் இஸ்ரேல் செய்யும் அழிவுகளையும் ஆக்கிரப்புகளையும் கொலைகளையும் கண்டுகொள்வதுமில்லை.கண்டிப்பதுமில்லை. கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.
  30. இலங்கை மருத்துவர்களை வெளிநாடுகள் வாங்கோ வாங்கோ என்று வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை. தமது தகுதி. நிதி நிலவரங்களை காட்டி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா என இவர்கள் குடிபெயரலாம். ஆனால் அங்கே சாதாரண மருத்துவர்களாக பணியாற்றும் தகுதியை குடிபெயரும் எத்தனைபேர் பெறுகின்றார்கள் என்பதே சந்தேகம். பலர் வெளிநாடு வந்து மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றார்கள். இலங்கை திரும்பி செல்லும் மருத்துவர்களும் உண்டு. இலங்கை வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் எப்படி பணியாற்றுகின்றார்கள் என நான் நேரடியாக அவதானித்துள்ளேன். மருத்துவம் இது ஒரு பதவியாக பயன்படுத்தப்படுகின்றது. பணியாக செய்யப்படுகின்றதா என்பது சந்தேகம்.
  31. ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்? கிஸ்புல்லாவை வைத்து செய்ய வேண்டியதை செய்வார்கள். நாங்கள் மொக்குதனமாக முஸ்லிம்களை அடித்துவிரட்ட சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளில் புலிகள் முஸ்லிம்களை அடித்து கலைக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பலாபலன் தான் அது.
  32. இவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர். ஆயுதப் பிரிவுக்கு அல்ல. இவரைப் படுகொலை செய்ததன் உண்மையான நோக்கம் ஈரானை எப்பாடுபட்டாவது போருக்குள் இழுத்துவிடுவதுதான். ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.
  33. உங்கள் கருத்திற்கு நன்றி, நிங்கள் கூறுகின்ற காரணங்களுடன் பல காரணங்கள் உள்ளது(அனைத்து நிறுவன கொடுக்கல் வாங்கலுக்கான இரசீதுகள் -invoices டொலரில் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றது, SWIFT, Eurodollar, Petrodollarஎன கூறிக்கொண்டே செல்லலாம்) ஆனால் இங்கு உலக இருப்பு நாணய கருத்தினை கூறவரவில்லை ஆனால் அந்த கருத்து எழுப்பப்படும் போது அதுவும் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்பதனாலேயே அது பற்றி கேட்டேன். Eurodollar பாதிப்பினால் ஒரு ஜப்பானிய வங்கி ஒன்றிற்கு2025 இல் கிட்டதட்ட 10 பில்லியன் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது தவிர பல அமெரிக்க வங்கிகள் கிடதட்ட 540 பில்லியன் காகித இழப்புகளை அமெரிக்க பணமுறிகளினால் ஏற்பட்டுள்ளது, இது 2008 பொருளாதார சரிவிற்கு பின்னால் ஏற்பட்ட பதில் நடவடிக்கையால் ஏற்படுகிறது(Basel3 Accord) உலக பொருளாதார சரிவின் முன்னரான காகித இழப்பு கிட்டதட்ட 75 பில்லியன் இருந்ததாக கூறப்படுகிறது அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை ஆனால் அதன் பின்னர் பொருளாதார சரிவினால் 700 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தை பொருளாதாரத்தினால் சந்தை சரிவு 10 மடங்காக மாறியது) 540X10=5trillion? தற்போது உள்ள அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட உள்ள பாதிப்பு 1929 இல் வந்த பொருளாதார பாதிப்பிற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள், GFC தனிய வீட்டு சந்தையில் ஏற்பட்டதாக்கம், தற்போது குறைவடைந்து செல்லும் m2 பண வழங்கள், சொத்து குமிழிகள், வங்கி திரவத்தன்மை, அரச கடன் சுமை(இது 1929 இருக்கவில்லை) இவை அனைத்தும் சேர்ந்து ஒரு பொருளாதார சரிவினை ஏற்படுத்த உள்ளது, இதன் போது பெரிய நிறுவனங்கள் தப்பிவிடும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. மிக சுருக்கமாக கூறியுள்ளேன் முன்பு விபரமாக எழுதுவதுண்டு, அதன் முலம் மற்றவர்கள் நான் கூறவருவதனை புரிந்து அதனை எதிர்த்து ஆக்கபூர்வமான எதிர்கருத்தின் மூலம் எனது கருத்தினை குறை கூறுவதன் மூலம் புதிய விடயங்களை புரிந்து கொள்ளலாம் எனும் ஒரு ஆசைதான். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எல்லாம் இல்லை அதற்கு காரணம் டோல்ஸ்ரொய் கூறும் காரணமாக இருக்கலாம், Leo Tolstoy - “The most difficult subjects can be explained to the most slow-witted man if he has not formed any idea of them already; but the simplest thing cannot be made clear to the most intelligent man if he is firmly persuaded that he knows already, without a shadow of doubt, what is laid before him.”
  34. 1) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். தமிழ் ஆண்களைக் கொன்றுவிட்டு பெண்களைத் துப்பாக்கி முனையில் மதம் மாற்றம் செய்தார்கள் 2) 100% ✅ 3) 100% ✅
  35. வணிகம் விசித்திரமானது......! 😁
  36. எனக்கு அம்மாள் வருத்தம் வந்தபோது அம்மா பனங்கள்ளு ஊற்றித் தந்தவ, அக்கா குழந்தைபெற்று இருந்தபோது சாராயம் ஊற்றிக் கொடுத்தவ. மதுவை அளவுக்கு மிஞ்சாமல் அளவோடு உடல் நலத்திற்கு ஏற்ப எடுக்கவேண்டும் என டாக்டர் சொல்லவந்ததுபோல் தெரிகிறது.😌
  37. இந்த தடவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் பல மாற்றங்கள் தெரிகின்றன. வழமையாக தங்கங்களை அள்ளும் அமெரிக்கர்கள் இந்த தடவை பின்னிற்கின்றார்கள். நோர்வே நாட்டுக்கு இன்னும் ஒரு பதக்கம்தானும் கிடைக்கவில்லை. பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பங்கேற்பதாக தெரியவில்லை. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்காக உள்ளது.
  38. இதுவரை மனிதப் பிறவிகள் மீட்டியதால் இனிய சுரம் தந்து நொந்த மனதுக்கு மருந்திட்டது யாழ். இப்போ அல்லாததுகளும் புகுந்து மீட்ட அபசுரம் பிறந்து மனதை அலைக்கழிக்கிறதே? யாழுக்கு நெய் ஊற்றும் மட்டுறுத்தினர்கள் நித்திரையா? கூடுபத்தி எரிகிறதே தெரியவில்லையா??😳
  39. உங்கள் சிந்தனையில் எங்கடையதுகள் குண்டியை ஒழுங்காக கழுவாவிட்டாலும் அதன் காரணம் சிங்களவன் தண்ணீர் கொடுக்கவில்லை என்பதாகத்தான் அமையும். இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான எங்கடை மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் எப்படி வேலை செய்யிதுகள் என நீங்கள் நேரில் சென்று பாருங்கள்.
  40. சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி. அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..? போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது... பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில் தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன். இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான் யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.? சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும். எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.
  41. அங்கு, அந்த வைத்தியசாலையில் இரவு நேரம் மருத்துவர்களே இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அனேகமாக மாலை 6 மணிக்கு வந்து வேலைக்கு வந்ததாக ஒப்பமிட்டுவிட்டு வீட்டை போய் நித்திரை கொண்டு இருப்பார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.
  42. வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முயற்சி என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.
  43. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 3 8 9 20 2 France 5 8 3 16 3 China 6 5 2 13 4 Japan 6 2 4 12 5 Republic of Korea 5 3 2 10 6 Great Britain 2 5 3 10 7 Australia 5 4 0 9 8 Italy 2 3 3 8 9 Canada 2 1 2 5 10 Hong Kong 2 0 1 3 11 Kazakhstan 1 0 2 3 11 South Africa 1 0 2 3 13 Brazil 0 1 2 3 13 Sweden 0 1 2 3 15 Germany 2 0 0 2 16 Belgium 1 0 1 2 17 Turkey 0 1 1 2 18 India 0 0 2 2 18 Moldova 0 0 2 2 20 Azerbaijan 1 0 0 1 20 Romania 1 0 0 1 20 Serbia 1 0 0 1 20 Uzbekistan 1 0 0 1 24 Fiji 0 1 0 1 24 Kosovo 0 1 0 1 24 Mongolia 0 1 0 1 24 DPR Korea 0 1 0 1 24 Poland 0 1 0 1 24 Tunisia 0 1 0 1 30 Croatia 0 0 1 1 30 Egypt 0 0 1 1 30 Hungary 0 0 1 1 30 Ireland 0 0 1 1 30 Mexico 0 0 1 1 30 Slovakia 0 0 1 1 30 Spain 0 0 1 1 30 Switzerland 0 0 1 1 30 Ukraine 0 0 1 1
  44. சாரி விசுகர், 1) உங்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் குறைவு என்பதை உணர்த்தியதற்கு நன்றி. 2) சருகு புலிக்கும் விடுதலைப் புலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும். 3) இந்தக் கேள்விகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை என்பது எனது குறைபாடு அல்ல. பின் குறிப்பு. ஒரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள் Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம், தடை நீக்கத்திற்கு ஆதரவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ கொள்கை முடிவோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம்.
  45. அனேகமாக எல்லோர் வீடுகளிலும் மாறியும் மலிபனும் தான். அன்றிலிருந்து இன்றுவரை தரமாக உள்ளது. அதுவே பெரிய வெற்றி தான்.
  46. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க.. போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர் மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாங்க. நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான். அந்த வீட்டு ஆள் வந்து "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவராத் தெரியுது. வாங்கையா... வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார். நம்ம ஆளுக்கு நல்ல பசி தான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறு தான் ஜெயித்தது. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியைக் கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போடச் சொன்னார். கை கால் சுத்தம் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறணும்"னு சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும் போது அந்த அம்மா ஓடி வந்து "ஐயா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பத்திரமா எடுத்துட்டுப் போனாங்க. இதைப் பார்த்த நம்ம ஆளு "தூர வீசி எறியப் போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தான். என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரே ஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம். நீங்க வந்து வாழை இலையில் தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களைப் பட்டினியாப் போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கிட்ட மாதிரி ஆகிப் போச்சு. சரி. இந்த கறுமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்துத் தூங்கினான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்து விட்டு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க" என்றான். அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் இவனுக்குச் சாப்பாடு வைத்தாள். திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சு. இதைப் பார்த்ததும்... அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது . "என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில் தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே"ன்னு அலறுச்சு. நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கறுமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனைச் சாப்பிடச் சொன்னாள். இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத் தான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள். "ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம் தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல... "பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத் தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டுக் கடிக்க முடியாமே எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்"ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சா. நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்குப் போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இது தான் ஆசாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை...! 😂 🤣 பழமையும் புதுமையும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.