Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்19Points46783Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
Paanch
கருத்துக்கள உறவுகள்6Points8133Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/10/24 in all areas
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
8 pointsநான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல் நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற் நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால் மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் இன்னும் சாதி பாப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன் இப்படிக்கு கறுவல் குமாரசாமி8 points
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
3 pointsதமிழரசுக் கட்சியின் அனுமதி இல்லாமல்… கட்சிக் கட்டுப்பாட்டை மீறி… சுமந்திரன், நாமலை சந்தித்த படியால்… மாவையர்… இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேணும். 😂 இப்ப… மாவையர், “கோமா”விற்கு போயிருப்பார் என நினைக்கின்றேன். 🤣3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கல்கி குமுதம் ஆனந்தவிகடன் என்று இந்திய வெளியீடுகள் என் மனைவியை இந்திய நாட்டுக்கலாச்சாரத்தைப் பின்பற்ற வைத்திருந்ததை அறியமுடிந்தது. கணவன் வேலையால் வந்ததும் அவர்பாதணியைக் கழற்றி சேவைகள் செய்யவேண்டும், அவர் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் இப்படி பல எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டவர். இப்போது உங்கள் சிந்தனையில் உதித்த ஊட்டத்தைப் பார்த்ததும் என்னை நோக்கி செருப்பைக் கழற்றினாலும் பரவாயில்லை இரும்பு லாடம் அடித்த தனது பழைய குதிக்கால் செருப்பை பரணில் தேடுகிறா.😳3 points
-
"மா.. பிலக வெங்கடேசு.."
2 pointsஇந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..2 points
-
குறுங்கதை 29 -- கறுப்புச் சட்டை
2 pointsகறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலமாகும் போது கடைசிக் காரணம் என்னவென்று பார்த்தால் கார்டியாக் அரெஸ்ட் என்றே பலரின் மரண அறிக்கையிலும் இருக்கும். புற்று நோயால் அவதிப்பட்டு முடிந்த ஒருவரின் அறிக்கையில் கூட இப்படியே இருந்தது. இவருக்கும் அப்படித் தான் இருந்திருக்கும். பெரிய உடம்புக்காரர். கடும் நீரிழிவு கூட இருந்திருக்கலாம், அப்படியே கடைசியில் கார்டியாக் அரெஸ்ட். மனைவியின் பெயர் இருந்தது. அவரையும் பார்த்திருக்கின்றேன். இவருக்கு 55 என்றால், அவருக்கு ஒரு 50 அளவில் தான் இருக்கும். சராசரி வாழ்நாள் என்று எடுத்தாலே, இவர் இன்னும் ஒரு 20 வருடங்களாவது தனியே, வாழ்ந்த நாட்களின் நினைவிலேயே வாழப் போகின்றார். வேறு எவராலும் பகிரப்பட முடியாத வலி இவருக்கு. உற்றம் சுற்றத்தின் ஆறுதல்களும், வார்த்தைகளும் தீர்ந்து போன பொழுதுகளில், இவரை அழுத்தப் போகின்றன வாழ்ந்த நினைவுகள். 'நீங்கள் சுகமாக போய்ச் சேர்ந்துவிட்டீர்கள்.......... நான் இங்கே கிடந்து படுகின்றேன் பாடு..........' என்று பிரியம் இம்மியளவும் குறையாமல் அடிக்கடி இவரும் சொல்லப் போகின்றார். மூன்று பிள்ளைகள். அவர்களின் வயதுகளின் வரிசைப்படி தான் போட்டிருக்கின்றார்கள் என்றால், அப்படித்தான் மரண அறிவித்தலில் பொதுவாகப் போடுவார்கள், முதல் இருவரும் ஆண் பிள்ளைகள், மூன்றாமவர் பெண் பிள்ளை. அந்தப் பெண் பிள்ளை அப்பாவின் செல்லமாகவே வளர்ந்திருப்பார். எவருக்கும் அடங்காத பிடிவாதம் கொண்ட மனிதனாக அவர் இருந்திருந்தால் கூட, அந்தச் செல்ல மகள் ஒரு சொல்லால், ஒரு பார்வையால் இவரை கட்டுக்குள் வைத்திருந்திருப்பார். இப்பொழுது மகள் முழுவதும் உடைந்து போயிருப்பார். கண்கள் வற்றியிருக்கும். அம்மாவின் தோளிலேயே சாய்ந்து சாய்ந்து ஒட்டி ஒட்டி இருப்பார். நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் அவரின் இரு மகள்களும் அவர்களின் அம்மாவின், விவேக்கின் மனைவியின், இரண்டு பக்கங்களிலும் இருந்த அந்தக் காட்சி, வீட்டு மண்டபத்தில் கொழுவி இருக்கின்ற ஒரு படம் போல மனதில் அப்படியே தங்கிவிட்டது. ஏன் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்கள் மூவரும் வெளியே காட்டிய நிதானமாகக் கூட இருக்கலாம். ஆண் பிள்ளைகள் இலேசில் அழமாட்டார்கள். ஆண்கள் அழக்கூடாது என்று சமூகத்தில் சொல்லியும் வைத்திருக்கின்றார்கள். அழுகையைப் பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த ஒருவர் எல்லோரையும் நல்லாக அழுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். அழுவதே ஒரு பெரிய சிகிச்சை என்றும் சொல்லியிருக்கின்றார். ஆனாலும் ஆண்கள் காலம் காலமாகவே அழுகையை அடக்கி, அதை மறைக்கவே முயன்று கொண்டிருக்கின்றார்கள். பெரிய மகன் தான் இனி எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எப்படியும் ஒரு 25 வயதுகள் ஆகியிருக்கும். ஆகியிருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. 25 வயதுகள் என்றால், இங்கே படிப்பு முடிந்து மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகியிருக்கும். எப்படியும் ஒரு வேலையில் இருப்பார். இவர் குடும்பத்தை ஒப்பேற்றி விடுவார். ஆயுட்காப்புறுதியும் செய்திருப்பார்கள் தானே. தனியே என்று ஒரு காப்புறுதி எடுக்கா விட்டாலும், வேலை செய்யும் இடத்தில் ஒன்று கொடுத்திருப்பார்கள். மற்றபடி இங்கே இந்த அரசாங்கம், இந்த வயதுகளில் எதுவும் கொடுக்காது. இளைய மகனும் படித்து முடித்திருக்கக் கூடும். மருத்துவம் படிக்கின்றார் என்றால், இங்கே இன்னும் பல வருடங்கள் படிக்கவேண்டும். மூன்று பிள்ளைகள் இருந்தால், ஒருவராவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற விருப்பம் பல குடும்பங்களில் இருக்கும் ஆசை. விருப்பம் இருக்குதோ இல்லையோ என்று பார்க்காமல், ஒரு பிள்ளையையாவது எப்படியாவது தயார் செய்து விடுவார்கள். இங்கு மருத்துவ படிப்பு செலவு எப்படியும் கடன் தானே. காலமானவருக்கு சில சகோதரங்கள் இருக்கின்றனர். அடைப்புக்குறிக்குள் அவர்கள் எந்த எந்த நாடுகள் என்று போடப்பட்டிருந்தது. எல்லோரும் வேறு வேறு நாடுகளில் இருக்கின்றனர். இவர் மட்டும் இந்த நாட்டிற்கு வந்திருக்கின்றார். இங்கே மேலே படிக்க என்று வந்தவராக இருக்கும், பின்னர் அப்படியே இங்கேயே தங்கி இருக்கக்கூடும். இறுதிச் சடங்கிற்கு எல்லோரும் வந்து சேர்வார்கள். ஒரு மாதம் அளவில் ஆட்கள் மாறி மாறி நிற்பார்கள். பின்னர் எல்லோரும் போய்த் தானே ஆகவேண்டும். அடூர் கோபலாகிருஷ்ணனின் 'எலிப்பத்தயம்' என்னும் படம் ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் எதை எதையோ விரும்பி, அங்கேயே தங்கிவிடுகின்றனர். படத்தில் கடைசியில் ஒரு எலியின் ஆன்மா கையெடுத்துக் கும்பிடும். அடூர் கோபாலகிருஷ்ணன் எப்பொழுது, எப்படி இறந்தார் என்று எனக்கு ஞாபகமில்லை. அந்தச் செய்தியை முற்றாகவே தவற விட்டிருந்தேன். இன்னும் பல உறவினர்களின் பெயர்களும், நாடுகளும் அறிவித்தலில் இருந்தன. அறிவித்தலின் இறுதியில், வார நாள் ஒன்றில் காலை ஒன்பது மணியில் இருந்து மதியம் வரையான நேரத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என்றிருந்தது. அன்று அதிகாலையிலேயெ உடம்புக்கு முடியவில்லை என்று அலுவலகத்திற்கு ஒரு செய்தியை மறக்காமல் அனுப்பி விடவேண்டும். அப்படியே அந்தக் கறுப்பு சட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். போன மாதம் போய் விட்டு வந்து, தோய்க்கும் இயந்திரத்தில் போட்டு எடுத்தபடியே அப்படியே வீட்டில் எங்கேயோ தொங்கிக் கொண்டு இருக்கும் அந்தக் கறுப்புச் சட்டை. ஏன் வாங்குகின்றோம் என்று தெரியாமலேயே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று, பல வருடங்களின் முன் வாங்கப்பட்டது இந்தக் கறுப்புச் சட்டை.2 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சீதனம் வீடுவளவு கேக்கிறாரோ தெரியேல்ல. எதுக்கும் சிறித்தம்பியர இடைத்தரகராக போடுவம் என்ன...😄 @Paanch @தமிழ் சிறி2 points
-
புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள்
புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள். இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம். வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என திணைக்கள மயப்படுத்தப்பட்ட தரவுகள் காண்பிக்கின்றன. இவை அனைத்திலும் மகோற்சவம் அல்லது அலங்கார உற்சவம் என சராசரியாக 10 நாட்களுக்கு குறையாத திருவிழா நாட்களை காண்கின்றன. தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகள் வடபுலத்தில் மாத்திரம் அண்ணளவாக 6000 புரோகிதர் குடும்பங்கள் வாழ்வதாக தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது. அதில் தொழில் முறை புரோகிதத்தினை 2850 பேர் அளவிலேயே மேற்கொண்டு வருகின்றனர். இக் கோவில்கள் அனைத்தும் பக்தர்களுக்கு அமைவாக குறித்த காலப்பகுதிகளில் பாலஸ்தானம் செய்யப்பட்டு முறையாக கும்பாபிசேகம் காண்கின்றன. சாராசரியாக ஒவ்வொரு வருடமும் 60 கோவில்களுக்கு வடபுலத்தில் மாத்திரம் இராசகோபுரம் கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை தவிர அயல் நாட்டு செண்டி மேளம் தொடக்கம் இசைக் கச்சேரி வரைக்கும் இசைத்து நாகரீகமாக கொண்டாடப்படுகின்றது. இவைகள் அனைத்தும் ஒரு சிறிய பகுப்பாய்வுச் சுட்டிகளாக எடுத்து நோக்க வேண்டியதொரு நிலையில் இருக்கின்றோம் என்பதன் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகளில் 70 வீதமானவைகள் கோவில்களை மையப்படுத்தி மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் ஊடாக பன்னிரண்டு இலட்சத்தினை அண்மித்த வடக்கு மாகாண வாழ் மக்களுக்குள் வெறும் 25000 பேருக்கு உட்பட்டவர்களுடைய அதாவது ஆலய நடவடிக்கைகளில் நேரடியாக ஊதியம் அல்லது நிதி பெறும் தரப்பினர் ஆனவர்கள் உடைய பயனுக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியில் 70 சதவீதமானவை முன்னுள்ள இருபத்தைந்து வருடங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை தொகுத்து நோக்கும் போது எவ்வளவு பாரியதொரு தொகை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காண முடியும். வங்கிகளில் வைப்புக்கள் மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய நிர்மாணிப்பில் வடபகுதியில் உள்ளவர்களது பாவனையில் இல்லாத வங்கிக் கணக்கு நிலுவைகளில் தான் கட்டப்பட்டதாக ஒரு கதையும் உண்டு ஆனால் இதனை உத்தியோகபற்றுடைய வகையில் உறுதிசெய்ய முடியவில்லை. இதில் தெளிவாக நாங்கள் அறிய வேண்டிய விடயம் யாதெனில் வங்கிகளில் வைப்புக்கள் இடுவதை மாத்திரம் முதலீடு எனக் கருதும் சமூகம் வடபகுதியில மாத்திரம் செறிந்திருக்கின்றது என்பது கண்கூடு. ஒரு பொருளாதாரத்தில் நிதி உட்பாய்ச்சல் ஏற்படும்போது அது உண்மையில் உள்ளகத்தில் புரளும் வேகத்திலும் கனதியிலும் தான் அதன் அனுகூலங்களை ஒரு சமூகம் அதியுச்சமாக அடைய முடியும். ஆனால் வரும் நிதியானது குறைந்தது இரண்டு அல்லது மூன்று கொடுக்கல் வாங்கல்களுடன் ஒரு இடத்தில் அடங்கி உறக்கம் கொள்கின்றது. இந்த வடபுலத்து நிதி வருகையால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது. அதனை யாரும் மாற்றிவிட முடியாது அது நியமமானது. அடுத்த தளத்தில் குறித்த நிதியானது ஒரு மிக குறுகிய சனத்திரளுக்குள் மாத்திரம் உட்புகுந்து கொள்கின்றது. அது அவர்களது அதியுச்ச நுகர்வுகளுக்கு வெளிப்படுபவைகள் தவிர வேறு எங்கோ ஒரு வகையில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன. இந்த நிதியானது புரள்வுக்கு உட்படும் ஒரு தொழில்துறையில் அல்லது சமூகத்திற்கு நிதியளிக்கும் தொழில்முயற்சியில் உட்புகுத்தப்படவில்லை. அரசுக்கு வரி அனைத்துக்கும் மேலாக வருமானத்தினை காண்பித்து அரசுக்கு வரி செலுத்தும் வகைக்குள் கூட அகப்படுவதில்லை. வட பகுதியை நோக்கி புலம்பெயர் சமூகங்களில் இருந்து நகர்த்தப்படும் ஒவ்வொரு நிதியும் ஒரு திறனற்ற நிதியாக இருப்பதற்கு இந்த ஆலயங்கள் என்ற விடயம் பிரதானமான காரணமாகின்றது. கோவில் என்பது மத சூழலில் மத சடங்குகளை பின்பற்றுவதற்குரிய ஒரு அடிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவும், வரலாற்றுக்காகவும், புனிதத்திற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு விடயதானமுமாகும். தற்போதைய வாழ்க்கை முறைக்கு பக்தர்களுக்கு வழிபட நேரம் இல்லை ஆனால் கோவில்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் பௌதீக வளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை பரிபாலனம் செய்யும் முகமைகள் திறன் வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளில் நுழைகின்றன. பல்வேறு தொழில் நுட்ப உதவிகளுடன் அவ்வளங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். கடவுள் இருக்கும் ஆலயத்தினையே கண்காணிப்பு கமராவால் கட்டுப்படுத்த வேண்டிய முரண்நிலை தத்துவத்திற்குள் நகர்கின்றது. இவை அனைத்திற்கும் காரணம் அவசியமற்ற வளவிருத்தியாகும். ஆலயங்களில் மணி அடிக்க ஆள் இல்லாததால் தானியங்கி மணி மேளம் செட் வாங்கி வருகின்றோம். சமூக வளர்ச்சி சுவாமி சுற்றுவதற்கு ஆட்கள் இல்லாததால் புதிதாக சிறிய சிறிய பாரம் குறைந்த வாகனங்கள் செய்து வருகின்றோம். இன்னும் சில நாட்களில் வீதி வழித்தடத்திற்கு சேக்கிட் இட்டு அதில் ஒரு தொகுதியைப்பொருத்தி சுவாமியைச் சுற்ற விட்டு சூம் இல் திருவிழா பார்க்கும் ஒரு சமூக வளர்ச்சியில் நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம். அனைத்து விகாரைகளிலும், அனைத்து பள்ளிகளிலும், அனைத்து தேவாலயங்களிலும் பூசைகள் மற்றும் அனுட்டானங்கள் ஒரு நியம நேரத்தில் இடம்பெறும் ஆனால் அனைத்து கோவில்களிலும் ஒரு நியம நேரத்தில் பூசை பார்க்க முடிவதில்லை, காரணம் புரோகிதர் தட்டுப்பாடு, ஒவ்வொரு கோவிலாக தான் அவரால் தரிசனம் செய்ய முடியும், ஆலயத்தில் சுவாமி தரிசனம் பார்ப்பதை விடவும் புரோகிதர் தரிசனம் பார்ப்பதே நெருக்கடியாக மாறிவருகின்றது. ஆலயம் கூட்டுவதற்கு சம்பள ஆள், அன்னதானம் சமைப்பதற்கு சமையலாளர், சாப்பிடும் நபர்களுக்கு நிலத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாத உடல்வாகு, நெகிழிப் பைகளில் வீடுகளுக்கு அனுப்பும் துர்பாக்கியம், உண்மையாக உணவுக்கு நெருக்கடியாக சமூகம் இன்னமும் எங்கோ ஒருபுறம் வடக்கிலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது. ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இவ்வாறான 500 பேருக்கு குறையாத தொகையுடைய அதிவறுமைக் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் உண்கின்றன. ஒவ்வொரு பாடசாலைகளிலும் காலை உணவினை பொருளாதார நெருக்கடி காரணமாக தவிர்த்து வரும் மாணவர்கள் 5 சதவிகிதம் பேர் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு தனிலும் எங்களது சமூகத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை. பொது விடயங்களில் உதவி செய்கின்றோம், ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று பல பல நிறுவனங்கள் அமைப்புக்கள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் முளைவிட்டு இருக்கின்றன. அரசியல் தீர்வுகள் ஆனால் இன்றுவரை முறையான முன்னேற்றத்தினை எமது சமூகத்தில் காண்பிக்க முடியவில்லை என்பது வருத்தமானது. இதனை பொறுப்புடன் பகுப்பாய்வு செய்து உத்தியோகபற்றுடைய வகையில் தரவுகளை வெளியிடவேண்டிய பல்கலைக் கழகங்கள் அரசியல் முனைவாக்கம் செய்கின்றன, ஆலயங்கள் அத்திரட்சியால் நிதி காண்கின்றன, அரசியல்வாதிகளுக்கு இவ்விடயதானம் தெரியவே இல்லை, அவர்கள் வாழ்க்கையை வாழவே முடியாத ஒரு சமூகம் இருக்கும் போது அதன் அரசியல் தீர்வுதேடி அலைகின்றார்கள். அதனை நாட்டிலும் பற்றாக்குறைக்கு சர்வதேசத்திலும் தேடிச் சென்று ஆற்றுப்படுத்த முனைவதாக காண்பிக்கின்றார்கள். கோவில்கள் மீதான அனைத்து நிதியீட்டங்களும் ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டு கிரமப்படுத்தப்பட்டு முதலீடுகள் தொடர்பாக மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும். மிக முக்கியமாக பொது வேட்பாளர் நிறுத்துவது தொடக்கம் அரசியல் தீர்வுகளை பெற்றுத்தருபவர்கள் முதல் வடக்கு கிழக்கினை கனவுகாண்பவர்கள் வரைக்கும் சற்றே விழிப்படைந்து கனவில் இருந்து வெளிவந்து ஒரு முழுமையான சமூக பொருளாதார ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். அதனை ஒரு சிறந்த நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் சமூகம் ஒற்றுமையாக ஒரு திட்டம் வகுத்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்ற வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பை கோரும் தமிழ் தரப்பு முறையானதொரு சமூக பொருளாதார ஆய்வினை முறையான வகையில் மேற்கொண்டு அவற்றின் அடைவுகளின் பால் செயலாற்றினால் பதினொரு சதவீத மக்களது கைகளில் இலங்கையின் பொருளாதாரத்தினை தங்கியிருக்க வைக்க முடியும். முழுமையுமாக பொருளாதார போசாக்கின் ஊடாக தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை அணுகப்பட வேண்டும். இலங்கை அரசினால் தமிழ் மக்களது செயற்பாட்டினை முடக்கிவிட முடியாது காரணம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களது தொகையிலும் கணிசமானவர்கள் சர்வதேசங்களிலும் வாழ்கின்றார்கள். புத்தியுடைய ஒரு சமூகமாக ஒற்றுமையாக நாம் பயணிப்போம் ஆனால் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தகுதி உடையவர்களாக தமிழர்கள் ஆகிய நாமே மாறிவிட முடியம். இல்லையேல் செண்டி மேளத்திற்கும் இராச கோபுரத்திற்கும் திருவிழாக்களில் தமன்னாக்களிற்கும் நிதி வழங்கும் ஒரு சமூகமாக தான் வாழ்வோம். https://tamilwin.com/article/zero-impact-investments-by-diaspora-tamils-17232659382 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எல்லாத்துக்கும் அவசரம் . ........அவர் சொல்லுவார்தானே . ...... சரி . .....சரி அவருக்காக அதை சொல்லி விடுங்கள் . ..........! 😂2 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு திருமணம் செய்து வைப்போம் ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள் 😂🤣2 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂2 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவர் என்ன நினைத்து வேண்டாம் என சொன்னாரோ எனக்கு தெரியவில்லை.அதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை. அது என் பழக்க தோஷம்.உண்மையில் என் வீட்டுக்கு வருபவர்களிடம் நான் இன்றுவரை சாப்பாட்டு விடயத்தில் எந்தவொரு குறையும் வைத்ததில்லை. எனது கொண்டாட்டங்கள் உட்பட..... அது எந்த உணவாகினும் படைத்து போட்டிருக்கின்றேன். அதே குணத்துடன் சிறித்தம்பியரையும் கேட்டேன்.அந்த நேரத்தில் பாஞ்ச் ஐயா கொஞ்சம் எட்டத்தில் நின்று வேறு யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தான் என நினைக்கின்றேன். சரியாக தெரியவில்லை. இருந்தாலும் வேண்டாம் என்று சொன்ன சிறித்தம்பியிடம் பலகாரம் கட்டிக்கொண்டு போவது சரியில்லை என நினைக்கின்றீர்களா என கேட்டேன். அதற்கு அவர் சொன்ன வார்த்தை......!!!!!2 points
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன்
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன் இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள். அந்தவகையில் சிவில் அமைப்புகளும், காட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் அவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற தரப்புக்கள், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடை செய்கின்ற நோக்கத்தோடு இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியனேந்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். https://thinakkural.lk/article/3076091 point
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 pointம்..... பெட்டிகளோடு காணாமற் போகப்போகிறார். கவனம்! பந்தோபஸ்த்தை அதிகரியுங்கள். மக்களைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாதவர், அவர்களின் வாக்கை வைத்து பேரம் பேசித்திரிகிறார்.1 point
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 pointவேறொன்றுமில்லை பெரியவரே...சுமந்திரனைவிட உங்கடைவருமானம் அமோகம் என்பதால்தான் வயிறெரியுது....உங்களுக்கும் எல்லாப் பக்கத்தாலும் வருகுதே..1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஅமெரிக்கா கூடை பந்து வீரர்கள் போராடி வென்று விட்டினம்🙏🥰....................... நான் ஹரியின் தீவிர பான்ஸ்🙏🥰 இன்றையான் வெற்றிக்கு ஹரியின் புள்ளி முக்கியமாய் அமைந்தது கடசி இரண்டு மச்சிலும் ஹரி நல்லா விளையாடினார்🙏🥰......................1 point
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 point@வீரப் பையன்26 பையா…. நீங்கள், குமாரசாமி அண்ணை… அஜித் மாதிரி… தக்காளிப்பழ நிறத்திலை இருப்பார் என்று சொன்னீங்கள். எல்லாம் பொய்யா… பையா… 😂 🤣1 point
-
பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?
கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர் விசாவில் வர ரெடியாகிட்டினம்..1 point
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 pointசுமந்துவுக்கு குருமாற்றம் நல்லா வேல செய்யுதுபோல எல்லாப் பக்கத்தாலும் கொட்டுது....1 point
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
ஆமாம் ஆமாம்.. ஆனையிறவை விட்டு ஓடினது.. மாங்குளத்தில் அடி விழ ஆரம்பிச்சதும் சீனாவில் போய் பதுங்கிக் கிடந்தவர் எல்லாம்.. ஊழலை அல்ல.. சொறீலங்காவில் உள்ள எலிகளைக் கூட ஒழிக்க முடியாது. சும்மா வெறுவாய் சப்பிட்டு சிங்கக் கொடி கூட்டாளி.. சம்பந்தன் பாதையில் போய் சேர வேண்டியான். புலிகளை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை.. ஹிந்திய- அமெரிக்க - மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சூழ்ச்சிக்குள் கொண்டு வந்த கதிர்காமர் போன்றவர்கள் தான் அழித்தார்கள் என்றால் மிகையல்ல. இதில் சர்வதேச சதியே அதிக பங்களித்தது. கோத்தாவோ.. மகிந்தவோ.. சரத்தோ.. உரிமை கோருவதில் அர்த்தமில்லை.1 point
-
தமிழ்நாடு: குற்றம் செய்து சிறை செல்ல விரும்பும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
அண்ணை அப்பிடி என்றால் இது போலத்தான் முன்னுக்கு கட்டிட்டு ஓடவிடணும்!1 point
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointஓ நீங்கள் வெள்ளைப்பாண் 😁 ஒணாண்டியார் பிறவுண் பாண்😂 நான் கறுத்த பாண் 😎1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஇன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 33 41 39 113 2 China 36 27 23 86 3 France 15 21 22 58 4 Great Britain 14 20 24 58 5 Australia 18 17 14 49 6 Japan 16 9 13 38 7 Italy 11 12 14 37 8 Netherlands 13 6 11 30 9 Republic of Korea 13 8 8 29 10 Germany 12 9 8 29 11 Canada 8 6 11 25 12 Hungary 5 7 6 18 13 Brazil 3 6 9 18 14 New Zealand 7 7 2 16 15 Spain 5 3 8 16 16 Ukraine 3 4 4 11 17 Sweden 3 4 3 10 18 Belgium 3 1 6 10 19 Uzbekistan 5 1 3 9 20 Romania 3 4 1 8 21 Iran 2 4 2 8 22 Poland 1 2 5 8 22 Switzerland 1 2 5 8 24 Greece 1 1 6 8 25 Ireland 4 0 3 7 26 Bulgaria 3 1 3 7 27 Cuba 2 1 4 7 27 Kenya 2 1 4 7 29 Israel 1 5 1 7 30 Kazakhstan 1 3 3 7 31 Denmark 1 2 4 7 32 Croatia 2 1 3 6 33 Jamaica 1 3 2 6 33 Thailand 1 3 2 6 35 Chinese Taipei 1 0 5 6 36 Turkey 0 3 3 6 37 DPR Korea 0 2 4 6 38 India 0 1 5 6 39 Azerbaijan 2 2 1 5 40 Austria 2 0 3 5 41 South Africa 1 2 2 5 42 Mexico 0 3 2 5 43 Czech Republic 3 0 1 4 44 Norway 2 1 1 4 44 Serbia 2 1 1 4 46 Hong Kong 2 0 2 4 46 Philippines 2 0 2 4 48 Ecuador 1 2 1 4 48 Georgia 1 2 1 4 50 Lithuania 0 2 2 4 51 Kyrgyzstan 0 1 3 4 51 Moldova 0 1 3 4 53 Slovenia 2 1 0 3 54 Indonesia 2 0 1 3 55 Ethiopia 1 2 0 3 56 Argentina 1 1 1 3 56 Tunisia 1 1 1 3 58 Dominican Republic 1 0 2 3 59 Colombia 0 3 0 3 60 Armenia 0 2 1 3 60 Portugal 0 2 1 3 62 Tajikistan 0 0 3 3 63 Algeria 2 0 0 2 64 Bahrain 1 1 0 2 64 Chile 1 1 0 2 64 Saint Lucia 1 1 0 2 64 Uganda 1 1 0 2 68 Guatemala 1 0 1 2 68 Morocco 1 0 1 2 70 Kosovo 0 1 1 2 71 Grenada 0 0 2 2 71 Malaysia 0 0 2 2 73 Botswana 1 0 0 1 73 Dominica 1 0 0 1 73 Pakistan 1 0 0 1 76 Cyprus 0 1 0 1 76 Fiji 0 1 0 1 76 Jordan 0 1 0 1 76 Mongolia 0 1 0 1 80 Cape Verde 0 0 1 1 80 Egypt 0 0 1 1 80 Peru 0 0 1 1 80 Singapore 0 0 1 1 80 Slovakia 0 0 1 1 80 Zambia 0 0 1 11 point
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎1 point
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அது நீங்கள் குடுக்கத் தேவையில்லை . ...... வீதக் கணக்கை விட்டுட்டு வீக்கக் கணக்கில வீட்டில குடுப்பினம் . .........! 😂1 point
-
விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா
இவருக்கு வாக்குப்போடச்சொன்ன கூட்டமைப்பையும் வாக்குப் போட்ட தமிழ்மக்களையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இந்தமுறையும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் சில யாழ்கள உறவுகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது.1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே ..........! 😍1 point
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointஎமது சமூகத்தில் கருப்பு வெள்ளை என்பதெல்லாம் அடி மட்டத்தில்தான் இன்னும் இருக்கின்றது . ...... ஏதாவது ஒரு விதத்தில் தமது திறமையால், புகழால், பணத்தால் உயர்ந்து விட்டால் அவை கவனிக்கப் படுவதில்லை . .........இன்றைய ஐரோப்பிய கால்பந்து, கூடைப்பந்து அணிகளைப் பார்த்தால் புரியும் . ......நான் இங்கு வந்தபோது பெயருக்கு ஓரிருவர் மட்டும் அணிகளுக்குள் இருப்பார்கள் ........இப்போது நிலைமை அப்படியில்லை . ........ முக்கால்வாசிப் பேர் கருப்பு இனத்தவர்கள்தான் விளையாடுகின்றனர் . ........! ஆனால் நம்ம கு. சா அவர்கள் எமக்கேயுரிய கலாச்சார விழுமியங்களுடன் வாழ்ந்து வருவது பெருமையாய் இருக்கின்றது . .......! 😂1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஇவர்களை போன்ற பலரின் மனவலிமையும் அந்த ஓர்மமும்தான் ஒரு சில சாதனைகள் என்றாலும் செய்ய வைக்கின்றது . ....... பாராட்டுக்கள் . ......! 👍1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- தமிழ் பொது வேட்பாளர் மலையக மக்களை கண்டுகொள்ளவில்லை -வேட்பாளராக களமிறங்கும் திலகர்
தமிழ் பொது வேட்பாளர் மலையக மக்களை கண்டுகொள்ளவில்லை -வேட்பாளராக களமிறங்கும் திலகர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்குகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/13952691 point- மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது - சம்பிக்க
தானும் பங்காளியாக மற்றவருக்கு செய்யும்போது ரசிப்பு, இப்போது தனக்கு வந்ததால் படிப்பினை. "செயின் பிற்பகல் விளையும்." "முற்பகல் செயின் பிற்பகல் விளையும்."1 point- "மா.. பிலக வெங்கடேசு.."
1 pointபாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடலை கேட்க இனிமையாக உள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு. 👍🏽 இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன்.1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
எந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை விட ஜேவிபி இன் அனுரவுக்கு வாக்களிக்காமல் விட்டால் நல்லது என்பது என் நிலைப்பாடு. ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்டு கொண்டிருக்கும் கடும் இனவாத கட்சி மட்டுமல்லாமல் சீனாவின் பக்கம் மீண்டும் இலங்கை யை சாய வைக்க கூடிய கட்சி. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்களின் வாழ்வும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. அனைத்தும் இழந்து போயிருக்கும் எம் சமூகத்துக்கு சிறுக சிறுக பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நாவூறு/கண்ணூறுக்கு நாம கட்டி தொங்க விடுமமெல்லே 😂1 point- கவாய் (Hawaii)பயணம்.
1 pointஇந்த பெரிய தீவுக்கு 30 மைல்கள் தூரத்தில் இன்னுமொரு தீவு கடலுக்கடியில் உருவாகி வருவதாக சொல்கிறார்கள். இன்னும் 500-1000 ஆண்டுகளில் அதுவும் பெரிய தீவாகி மக்கள் குடியேறியிருப்பார்கள். இந்த தீவுகளை ஆங்கிலேயரே முதலில் கைவசப்படுத்தி வைத்திருந்தார்கள். இடையில் கொஞ்சகாலம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருந்த போதுதான் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அமெரிக்க பாதுகாப்புக்கு பிரச்சனை என்று எண்ணி அமெரிக்க பிரதேசமாக சிலகாலம் வைத்திருந்து பின்னர் 1959 இல் அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொண்டனர். இது ஒரு பின்தங்கிய பிரதேசமாகையால் 4.5 வீதமான வரியே அறவிடுகிறார்கள். இப்போதும் நிறைய ஜப்பானியர்கள் வியாபார நோக்கோடு வந்து அள்ளிக்கட்டிக் கொண்டு போகதாக சொல்கிறார்கள்.1 point- முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு
எப்பிடியும் லண்டன்,பாரீஸ்காரர் சிலோன் கள்ளு போத்திலை டச் பண்ணியிருப்பார்கள் எண்டு நினைக்கிறன் 😄 வின்ரருக்கு பியர் அடிச்சாலும் சளி பிடிக்கும் எண்டுறாங்கள். நாங்கள் என்ன விரதமா இருக்கிறம்...? 😂1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம். ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.1 point- இலங்கைக்கு 24.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது அமெரிக்கா
வெள்ளவத்தை கடற்கரையில நிண்டு உந்த டீசல் ரயில் எஞ்சின்கள் கஷ்ரப்பட்டு இழுக்கிறதை பாத்தால் கண்ணால தண்ணி வரும்? 😁1 point- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இதே 1990ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சுக்களில் (aerial bombing) ஏராளமான முஸ்லிம்கள் (நான் முழுமையாக எண்ணவுமில்லை, அதில் நாட்டமுமில்லை. எனினும் செய்திகளை எடுத்து வைத்துள்ளேன்) கொல்லப்பட்டனர். புத்தளத்திலும் 70களில் முஸ்லிம்கள் சிலர் சிங்களக் காடையரால் பள்ளிவாசல் சாரான இடமொன்றில் வைத்துக் கொல்லப்பட்டனர். (விதப்பான இடம் வலம் ஞாபகமில்லை) . தமிழர் கண்டனம் தெரிவித்தனர் அதன் பின்னர் இலங்கையில் மொசாட் மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் உள்ளதை எதிர்த்து 1984ம் ஆண்டு சூன் மாதம் 9,10ம் திகதிகளில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை முன்னணி காத்தான்குடியில் நடாத்திய கடையடைப்புப் போராட்டத்தின் போது 30 முஸ்லிம்கள் சிங்கள-இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலுக்கு புளட் அமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு "தமிழ் முஸ்லிம்களுக்கு" தோழமை தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் இவற்றிற்கெல்லாம் பின்னாளில் ஒருக்காலும் முஸ்லிம்கள் கண்டனமோ நினைவோ கூர்ந்ததில்லை. ஏனெனில் செய்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களின் பரம வைரியும்!!! செய்தால் என்ன நடக்குமென்று புரிந்திருக்கிறது; நீங்கள் சொன்னது போன்றே அவர்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை கெட்டுவிடும்! அளவாக ஆக்களுக்கு ஏற்ப தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக, என்னால் இயன்றளவு செய்கிறேன். விரும்பியவர்களும் எடுத்துச் சென்று செய்யலாம்.1 point- இலங்கைக்கு 24.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது அமெரிக்கா
அய்ய்.......... விகாரை கட்ட, காசு வந்திட்டுது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு தருணம் வர பாஞ்ச் ஐயா அவர்கள் சரி வெளிக்கிடுவம் என ஒரு சமிக்கையை காட்ட நானோ இருங்கள் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என சொல்லிவிட்டு பார்க்க அவர்களோ சம்பிரதாய தட்டுக்களுடன் வரிசையில் நின்றிருந்தார்கள். நிலமையை எடுத்துக்கூற அவர்களும் பொறுமையுடன் இருந்தார்கள். இருந்தாலும் பாஞ்ச் ஐயா அவர்களுக்கு ஏற்கனவே ஒரு நிகழ்ச்சி போகவேண்டி இருந்ததை நானும் உணரவில்லை.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱1 point- ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
இனிக் கொஞ்சம் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சொம்புகளும் ரணிலுக்கு வாக்கு பெடாவிட்டால் நாமல் வந்து விடுவார். ஆகவே ரணிலுக்கு வாக்குப் போடுங்கள் என்று கிளம்புவார்கள்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஆளாளசுந்தரம், தர்மலிங்கம் கொலைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், புளொட் அமைப்பும் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொணடனர். இரு நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 2 ஆம் திகதி, 83 படுகொலைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்த இரு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கும் கல்வியங்காடு பகுதியில், பிரதான வீதியில் இருந்து உள்ளாகச் செல்லும் ஒழுங்கையில் அமைந்திருந்த ஆளாளசுந்தரத்தின் வீட்டிற்குச் சென்ற இளைஞர்கள் சிலர் அவரது கதவைத் தட்டினர். ஆளாளசுந்தரம் கதவினைத் திறக்கவும், "அண்ணை, உங்களோட ஒரு முக்கியமான விசயம் பற்றிக் கதைக்க வேணும், எங்களோட வாங்கோ" என்று அவரை அழைத்தனர். இளைஞர்கள் கேட்டதற்கமைய வீட்டினுள் சென்று உடைகளை அணிந்துகொண்டு ஆளாளசுந்தரம் அவர்களுடன் வெளியேறிச் சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டிறு அருகில் இருக்கும் பற்றைகளுக்குள் இருந்து நெற்றியில் இரு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருமதி அமிர்தலிங்கத்துடன் இணைந்து சுவரொட்டிகளை ஒட்டும் தர்மலிங்கம் - 1972 அதேநேரத்தில் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்தை இன்னொரு இளைஞர் குழு அழைத்துச் சென்றது. மறுநாள் அவரது உடலும் தலையில் சூட்டுக் காயங்களுடன் சேமக்காலை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஒருவரால் எழுதப்பட்ட இரு காகிதங்கள் இருவரது உடல்களுக்கருகிலும் காணப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் துரோகத்திற்காகவே இவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடியில் "சுய கெளரவம் மிக்க தமிழர்கள்" என்று கைய்யொப்பம் இடப்பட்டிருந்தது. இந்தச்க் கொலைகள், குறிப்பாக தர்மலிங்கத்தினது கொலை இலங்கை மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேசமெங்கும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தர்மலிங்கம் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி. மிகுந்த பணக்காரரான தர்மலிங்கம் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்பதுடன், சோசலிஷ அடிப்படைகளை ஏற்று நடந்தவர். சோவியத் - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மிக முக்கிய உறுப்பினராக விளங்கியவர். முதலாளித்துவவாதிகளாகவும், தமக்குள் மோதுண்டும் வந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடையே சோசலிஷவாதியாக அவர் வலம் வந்தார். ஆளாளசுந்தரம் என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்.என்னிலும் வயதில் இளையவர். தர்மலிங்கத்தை 1957 ஆம் ஆண்டிலிருந்தே எனக்குத் தெரிந்திருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிக்கையான தினகரனுக்காகப் பாராளுமன்றச் செயற்பாடுகளை செய்தியாக்க நான் செல்லும்பொழுது அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். பழைய பாராளுமன்றக் கட்டடத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் நூலகத்தில் தர்மலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து பாராளுமன்ற உணவகத்தில் தேநீர் அருந்துவதற்காக நாம் இருவரும் மிந்தூக்கியில் நுழைந்து கீழ்த் தளத்திற்குச் சென்றோம். நாம் தூக்கியில் நுழைந்தபொழுது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயார் ஜெயவர்த்தனவும் இன்னொருவரும் அதற்குள் இருந்தனர். எம்மைக் கண்டதும் ஜெயாருடன் இருந்தவர் அவரைப் பார்த்து, "சேர், தர்மா (தர்மலிங்கம்) யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கவும், "இதில் அதிசயம் என்னவிருக்கிறது, அவர் ஒரு சோசலிஷவாதியல்லவா?" என்று சிரித்துக்கொண்டே ஜெயார் பதிலளித்தார். இதனைக் கேட்டதும் தர்மலிங்கம் விழுந்து விழுந்து சிரித்தார். நான் இச்சம்பவத்தை தர்மலிங்கத்தின் மகனும், திம்புப் பேச்சுக்களில் புளொட் சார்பாகக் கலந்துகொண்டவருமான சித்தார்த்தனுடன் தொடர்புபடுத்துவதற்காகவே கூறுகிறேன். என்னுடன் பின்னாட்களில் பேசிய சித்தார்த்தனும் ஜெயார் கூறிய விடயம் குறித்து தனது தந்தையார் வீட்டில் கூறிச் சிரித்ததாக கூறியிருந்தார். மக்களால் மதிக்கப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தவே, அவர்களின் இறுதி நிகழ்வுகளில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மக்களும், யாழ் பொலீஸாரும், புலநாய்வுத் துறையினரும் இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக கூறத் தொடங்கினர். ஆளாளசுந்தரம் மீது புலிகள் சிலகாலமாகவே விமர்சனங்களை முன்வைத்து வந்ததை யாழ் மக்கள் அறிந்திருந்தனர். யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஆளாளசுந்தரம் பதவி வகித்த காலத்தில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தார். இதற்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவரது பாதத்தில் புலிகள் ஒருமுறை சுட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஏக பிரதிநிதிகளாக செயற்படுவதையும் பிரபாகரன் கடுமையாக எதிர்த்து வந்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீது 80 களின் நடுப்பகுதியில் இருந்தே பிரபாகரன் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்த இந்தியாவின் இராணுவ உதவியை அமிர்தலிங்கம் எதிர்பார்த்து வந்தது பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல்க் கையாலாகத்தனத்தை கடுமையாகச் சாடி அறிக்கையொன்றினை அவர் விடுத்திருந்தார். போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த அறிக்கையில் முன்னணியினர் மீதான பிரபாகரனின் கடுமையான அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.............. இதை வாசித்து நான் சிரி சிரி ....என்று சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள ஜாம்பவான்களின் பகிடிகளில், இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எங்கள் மூன்றுபேரின் சந்திப்புக்கும் வந்த வாழ்த்துக்ககளயும் வரவேற்புகளையும் காணும்போது….. யாழ்கள உறவுகள் அனைவரையும் அழைத்து ஒரு கொண்டாட்ட விழா வைக்கலாமோ என்று தோன்றுகிறது. 🤪 சாமியார் மோதிரம் மாத்தி முடிந்ததும், சிறியர் முறுக்குச் சாப்பிட்டு முடிந்ததும் வைக்கச் சொல்லி ஒரு பட்சி சொல்லுது.😆1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம். இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
0 pointsஉள்ளதை தான் சொன்னேன் கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும் அவர் நான் கருவல். என்று சொல்லலாம் என்றால் எனது நிறத்தை நான் ஏன் சொல்ல கூடாது ?? உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும்0 points- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
0 pointsஓ நினைப்பு வேறையோ.. வந்திருக்கிறது அடுத்தவன்ர கோடிக்கை இதிலையும் தான் எங்கள் எல்லாரையும் விட மேலையாம்.. எல்லாரும் கேளுங்க இதை.. தமிழன்ர நாய்க்குணம் இதுதான்.. இதுதான் எங்கடைஆக்களிற்ற குணம்.. தனக்குள்ளயே தன்னை கொஞ்சம் மேலை எண்டு நினைக்கிறது.. சாதி மாதிரி.. ஆனால் வெள்ளைக்கு ஆசியன் பூர சிமெலிங் டேற்றி சிற் தான்.. இது விளங்கினாத்தான.. எண்ணம் மட்டும் பெரிசு..0 points - தமிழ் பொது வேட்பாளர் மலையக மக்களை கண்டுகொள்ளவில்லை -வேட்பாளராக களமிறங்கும் திலகர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.