Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/24/24 in all areas

  1. "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..
  2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார். 11 வேட்பாளர்கள் இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின் படி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய ட்ரம்ப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/kennedy-withdrew-from-the-us-presidential-election-1724435571 இலங்கை அரசியலைப் பார்த்தோ என்னவோ அமெரிக்காவிலும் பதவி ஆசையால் ரம்புடன் கை கோர்த்துள்ளார். கென்னடி குடும்பத்திற்கென்றே கொங்ச வாக்குகள் உள்ளன. ரம்பை நம்பி போன பலரை ஏமாற்றியுள்ளார். பார்ப்போம் என்ன தான் நடக்கப் போகுதுதென்று.
  3. சுமந்திரன் இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தால்.... அரியநேந்திரன் 18% வாக்கு எடுத்ததை பார்த்து, மாரடைப்பு வந்தாலும், வந்து விடும். 😂 🤣
  4. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி, யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலம் கல்வெட்டில் இருந்த தகவலின் படி ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம், அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாலயமானது 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயமென்பதுடன் ஆலயத்தின் பெயர் பிரகேதீஸ்வரர் என்பதனையும் இக்கல்வெட்டில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. மிகத் தொன்மையான முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள்உருவாக்கம் செய்வதற்கு நீண்ட காலம் முயற்சி எடுக்கப்பட்டது. இநநிலையில், குறித்த ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் முக்கிய பணியில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முன்னாள் உத்தியோகத்தர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/400-year-old-shiva-temple-under-renovation-jaffna-1724482692
  5. கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ. விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396985
  6. நீங்கள் சொல்வது போதிதர்மா (தர்மன்). அவர் சமாதி அடைந்தது சீனாவில் என்றும், அதன் பின் பலகாலத்துக்கு பின் சமாதி அடைந்த இடத்தை சேர்ந்த வணிகர் போதிதர்மனை வடக்கு சீனாவில் ஒரு பாதணியுடன் கண்டதாகவும், வியப்படைந்த வணிகர் அவரை சோதிக்க (போதிதர்மன் தானா என்று) மற்றைய பாதணி பற்றி கேட்க போதிதர்மன் அவரின் சமாதியை தோண்டி பார்க்க சொன்னதாகவும், பின் வணிகர் சமாதியை அடைந்து தோண்டி பார்த்த போது மற்றைய பாதணி சமாதிக்குள் இருந்ததாகவும், அனால் எந்தவொரு மனித எச்சங்களோ இருக்கவில்லை என்றும். போதிதர்மன் சீனாவில் தொடங்கியதே இப்பொது shaolin temple என்றும் நம்பப்படுகிறது (பொதுவாக ஏற்றுக்கொள்ளபடுவது) அங்கிருக்கும் மலையில் இருக்கும் போதி தர்மா குகையை (இதில் போதி தர்மா தவம் இருந்ததாக), youtube இல் இருக்கிறது. இணைப்பை பார்க்கவும், வேறு youtube விடீயோக்களும் இருக்கலாம். மற்றது, போதி தர்மன் பரப்பியது chan பௌத்தம் என்பது பொதுவாக நம்பப்படுவது மற்றது போதிதர்மன் உடல்வலுவை தற்கப்பு ஆயுதமாக பாவிக்க கற்று கொடுத்த்த கலையே இப்பொது kung fu ஆக உருவெடுத்து இருப்பது என்று நம்பப்படுவதும், shaolin temple ஆல் ஏற்றுக்கொள்ளப்படுவதும். மற்றது போதிதர்மன் பல்லவ அரச பரம்பரை (தமிழில்) போதிதர்மா காலம் , சீனாவில் கி.பி 400 - 550 களுக்கு இடையில். போதி தர்மா இப்போதைய ஜப்பான் இலும் பௌத்தத்தை பரப்பியதாக, அது zen பௌத்தம் என்ற பெயரில். அனால், போகர் சமாதி அடைந்தது பழனியில். இதில் மிகவும் தெளிவு போகர் தமிழில் இயற்றிய நூல்கள் உள்ளன. போகாரின் சீடர் புலிப்பாணி சித்தர். போகரின் காலம் கி.மு. சீனாவிலும் போகரை (ஒத்தவரின் ) காலம் கி.மு. போகரின் பரம்பரை அரச பரம்பரை இல்லை. இப்படி பல வேறுபாடுகள் இவர்களை சொல்லும் சீன குறிப்புகளின் காலமும் வேறு. (இப்போதைய) சீனர்களுக்கு தெரியாது, ஏனெனில் cpc (குறிப்பாக mao) படித்தவர்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லி அழிப்பும், cpc ஐ பொறுத்தவரை தெரிந்தெடுக்கப்பட்ட வரலாறை படிப்பிப்பதும். அனால், இப்பொது சீனா திறந்து இருக்கிறது அதன பழைய வரலாற்று குறிப்புகளை.
  7. இது எப்படி என்று விளக்க முடியுமா புலவர்? பதிவு செய்ப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக ( 2023 ஆண்டு கணக்கெடுப்பு படி) யாழ் மாவட்டம்: 583,752 வன்னி மாவட்டம்: 300,675 மட்டக்களப்பு மாவட்டம்: 438,264 திருகோணமலை (தலை நகரம் மட்டும்): 102,298 மொத்தம்: 1,424,989 வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மொத்த வாக்களர்கள் அனைவரும், ஒருவர் விடாது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், மொத்த வாக்குகளின் எண்ணிக்கை: 1,424,989 இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885 ஆகவே இலங்கையின் மொத்த வாக்களர்களுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் விகிதம்: 8.77 இந்த 8.77 எப்படி கடும் போட்டியைக் கொடுக்கும்? இவ் 8.77 இல் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலையின் தலை நகரம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அடங்கும். முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்குப் போடப் போவதில்லை என்பதால் இவ் 8.77 விகிதமும் குறையும். அத்துடன் அனைத்து தமிழ் மக்களும் பொது வேட்பாளருக்கு போட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது 7 வீதமாவது பொது வேட்பாளர் பெறுவார். இந்த 7 வீதத்தை வைத்துக் கொண்டு கடும் போட்டியை கொடுக்க முடியுமா? இந்த யதார்த்தத்தை நீங்கள் மறுக்கின்றீர்களா? வாக்காள எண்ணிக்கை தரவுகளின் மூலம் https://elections.gov.lk/en/voters/voters_statistics_E.html
  8. எப்படிப் பார்த்தாலும் 50 வுpதத்திற்கு மேல் யாருக்கும் கிடைக்கவில்லை. 2வது சுற்று விருப்பு வாக்கெடுப்பு எண்ணப்பட வேண்டும் என்று இந்தக்கருத்துக்கணிப்பு சொல்கின்றது.. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் 2வது விருப்பு வாக்ககை எண்ணும் நிலை வந்தால் ரணில் சுத்துமாத்திப் பண்ணி ஜனாதிபதியாக வருவார.(( சுமத்திரன் போன தடவை வென்றது போல(
  9. பங்குபற்றிய அனைத்து இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் . ..........! 👍 சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் நம்நாட்டு செய்திகளை நயம்பட பதிவிடும் ஏராளனுக்கு நன்றிகள் . ........! 💐
  10. பெரிய பெரிய கருப்பு ஆடுகள் எல்லாம் திட்டமிட்டு நாடு நகரங்களையெல்லாம் எதையோ நோக்கி நகர்த்திக் கொண்டுருக்கிறார்கள் போல் இருக்கின்றது . .......களவு , கொலைகள் , கொள்ளைகள் , வன்புணர்வுகள் , போதைப்பொருள் பாவனைகள் ,சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயம் மற்றும் குடும்ப அமைப்புகள் இவையெல்லாம் உலகநாடுகளில் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்கின்றன . ........! 😴
  11. ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக அதிக கத்திக்குத்துக்கள் நடைபெறுகின்றன. இது அகதிகளாக் வந்த ஒரு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகின்றது. இவற்றை கவனிக்கும் போது யார் யாருக்கெல்லாம் பரிதாபக்கூடாது.கவலைப்படக்கூடாது.உதவி செய்யக்கூடாது. நியாயபூர்வமாக நடக்கக்கூடாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.
  12. M.B. ஶ்ரீ நிவாசன் என்ற தெலுங்கு இசையமைப்பாளரும் 60 வது தொடக்கம் 89 வரை சில தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். இவரின் பெயரை பட்டியலில் காணவில்லை. இவரின் முதல் தமிழ் படம் ஜெயகாந்தனின் "பாதை தெரியுது பார்". இப்படி வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்களும் ஒரு கணிசமான தொகை இருக்கலாம். பட்டியல் தொடங்கும் வருடத்தை திட்டவட்டமாக குறிப்பிடுவது அவசியம். அத்துடன் மறைந்த இசையமைப்பாளர்களின் காலத்தை "தற்போது" என்று குறிப்பிடுவதும் தவறு. உதாரணம் பவதாரிணி ராஜா.
  13. பகுத்தறிவு சிந்தனைகள் பற்றிய தெளிவு எமது சமூகத்தில் மிக குறைவாக உள்ளதாக கருதுகிறேன், அறிஞர் அண்ணாவை பற்றியோ பெரியாரை பற்றியோ அறியாதவனாகவே இது வரை உள்ளேன், அதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறமுடியாது, நாமாகவே அந்த முயற்சிகளை தவிர்த்துவிடுகிறோம் பூனைகலை போல கண் மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட வேண்டும் என்று விருபுகிறோம். டொமினிக் ஜீவா போன்றோரின் இலக்கியங்கள் வெளி வந்திருந்தாலும் அது வாசகர்களுக்கு ஏனோ எட்டவில்லை, அதற்கு காரணம் என்ன என தெரிய்ஃவில்லை (நானும் வாசிக்கவில்லை). ஆனால் மறு வளமாக ஆதிக்க வெறியர்களை பாடசாலை கல்வி புத்தகத்தில் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பொதுவாக ஆதிக்க வெறியர்கள் தம்மால் அடக்கப்படும் சமூகத்தில் பெண்கள் மேற்கொள்ளும் வன்முறைகளை ஒரு ஆதிக்க அடையாளமாக பயன்படுத்துகிரார்கள், இதற்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை சமூகம் போலவோ அல்லது சில சமூகங்கள் செய்ததை போல தமிழ் சமுகம் தமக்குள்ளேயே ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்த்தியதாக இந்த இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பெண்களின் கல்வி இந்த ஆதிக்க சமூகத்தில் குறைவாக இருப்பதே இது போன்ற நிலை நிலவுவதாக நம்புகிறேன், திட்டமிட்டே ஆணாதிக்க சிந்தனையூடாக பெண்களின் கல்வி மறுக்கப்படும் அதே சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளை நலவழிப்படுத்த முடியாத ஒரு உடைந்து போன சமூகத்தினை இந்த பெண்கள் விட்டு செல்லுகின்ற நிலை காணப்படுகிறது. பாடசாலைகளில் கூட இந்த ஆதிக்க வெறியர்களின் சாதனை ( யாழ்பாணிய சாதியத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றவர்) என சைவத்தினை வளர்க்க வேற்று மதத்தினருடன் வாதித்ததாக கூறப்படுவதற்கு (அந்த கதை பாட புத்தகத்தில் இல்லை) ஆசிரியர்கள் கூறும் முகம் சுழிக்க வைக்கின்ற கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாதவர்களுக்காக பாடப்புத்தகத்தில் போற்றப்படும் மனிதர் ஒரு கல்லில் அமர்ந்திருந்த நேரம் அவ்வழியாக சென்ற பிரித்தானிய நண்பர் அவரை பார்த்து நீங்கள் கல்லை வழிபடுகிறீர்கள் தற்போது அதே கல்லில் அமர்ந்திருகிறீர்களே என கேட்டாரம் அதற்கு இவர் இதற்கான பதிலை சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன் என கூறினாராம். பின்னொரு நாள் அதே பிரித்தானியர் அவரது மனைவி மற்றும் மக்ளுடன் போகும் போது இவர் அந்த பிரித்தானியரை அவரது அந்த கேள்வியினை நினைவு படுத்திவிட்டு அவரது குடும்ப உறவை இழிவு படுத்தும்விதமாக பிரித்தானியரை பார்த்து கேள்வி ஒன்றினை கேட்டதாக ஆசிரியர்கள் பெருமையாக கூறும் நிலை கானப்படும் சமூகத்தில் இருக்கிறோம். இவ்வாறு உடைந்து போன சமூகங்களில் பெண்கள் கல்வி நிலை மேம்பட்டாலே ஏதாவது மாற்றம் நிகழலாம்.
  14. இது விக்கிபீடியாவில் இருந்து. உருமாற்றம் செய்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/இசையமைப்பாளர்களின்_பட்டியல் பெயர் முதல் படம் வருடங்கள் பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973 ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963 கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992 எம். எஸ். விஸ்வநாதன் பணம் 1945 - 2013 சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952 சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990 டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004 வேதா மர்ம வீரன் 1956 - 1971 ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989 சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது வி. குமார் நாணல் 1965 - 1976 டி. கே. ராமமூர்த்தி பணம் 1966 - 1986 குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008 இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010 கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - 2020 வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது எஸ். ஏ. ராஜ்குமார் சின்னபூவே மெல்லபேசு 1987 - தற்போது எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007 ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது ஆதித்யன் அமரன் 1992 - தற்போது ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது கார்த்திக் ராஜா பாண்டியன் 1992 - தற்போது சிற்பி கோகுலம் 1993 - தற்போது மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002 சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் 1997 - தற்போது பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது பரணி பெரியண்ணா 1999 - தற்போது ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது தினா அன்னை 2000 - தற்போது ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது டி. இமான் தமிழன் 2002 - தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது ஏ. ஆர். ரைஹானா மச்சி 2004 - தற்போது ஜோசுவா சிறீதர் காதல் 2004 - தற்போது விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது பவதாரிணி அமிர்தம் 2006 - 2024 சுந்தர் சி. பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது போபோ சசி குளிர் 100 2009 - தற்போது எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது பேரரசு திருத்தணி 2012 - தற்போது நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போது ஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போது தர்புகா சிவா கிடாரி (2016 திரைப்படம்) 2015- தற்போது வரை அனிருத் ரவிச்சந்திரன் 3 2013-தற்போது வரை யுவன்ஸ்ரீ தயாநிதி உன் நினைவுகள் 2022-தற்போது வரை ஹிப் ஹாப் தமிழா ஆம்பள 2015-தற்போது வரை
  15. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை. தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது. சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம். கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது. தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்! கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி. பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும். வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in
  16. எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் தற்போது ஒருவரும் உண்மை பேசுவதில்லை. ஆதலால்தான் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா என்று கேட்டேன். 😁
  17. 22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் உடையார்கட்டு மகா வித்தியாலயம் தங்கம்: பி. மதுஷன், ஜே. கலைநிலா, வெள்ளி: ஆர். டிலக்சிகா, ரி. பேரிசை, வெண்கலம்: ரி. தனுசன், எஸ். கிரி, கே. புகழ்மாரவன், கே. கஜந்தன். வட்டப்பாலை மகா வித்தியாலயம் தங்கம்: எஸ். யதுர்சன், எஸ். கேதுக்ஷன், ஆர். ராஜ்குமார், ஜே. புவிதரன், வெண்கலம்: கலையரசன். தண்ணீரூற்று தமிழ் வித்தியாலயம் தங்கம்: கே. கவிபிரியன், வெள்ளி: ஜே. இசைபிரியன், எல். ஷர்மிசன். வித்தியானந்தா கல்லூரி தங்கம்: எஸ். சோபிசனன், வெண்கலம்: எம்.ஆர்.எம். பர்சின். முல்லைத்தீவு மகா வித்தியாலயம் தங்கம்: கோபிகன் இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலை தங்கம்: ஜே. தனுஜன் சிலாவத்துறை மகா வித்தியாலயம் தங்கம்: ஈ. சுரேஷ், வெண்கலம்: ஜே. பிரியந்தன். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வெண்கலம்: சதுர்சன் கொக்குதொடுவாய் மகா வித்தியாலயம் தங்கம்: கே. கொனிலா, வெள்ளி: கே. புகழரசன், வெண்கலம்: ஐ. திவ்வியன். வல்லிபுரம் மகா வித்தியாலயம் வெள்ளி: கிருஷாந்தன். வட மாகாண பாடசாலை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பயிற்சிகளை வள்ளுவன், தேசிந்தன், நிதீஷ் ஆகியோர் வழங்கினர். https://www.virakesari.lk/article/191693
  18. பாலிஸ் பூட் பாலிஸ் . ........! 😍
  19. ஒன்லைன்ல வாக்குப்போட்டது புலம்பெயர்ஸ் என்று சொல்லுவார் அண்ணை! நானும் பொதுவேட்பாளருக்கு தான் போட்டனான் என்று சொல்லிப்போடவேணாம்! எனக்கென்னமோ இப்ப இருப்பவருக்கு பில்டப் குடுக்கினமோ என சந்தேகமாக இருக்கு!
  20. Solingen நகரம் கத்தி தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. அங்கு தயாரிக்கப் படும் கத்தி, கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்கள் சற்று விலை அதிகம் என்றாலும்.... அதன் பாவனையில் திருப்தியான தரம் இருக்கும். அங்கு வாங்கும் கத்திகள் தலைமுறை தாண்டியும் பாவிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும் என்பது சிறப்பு. இந்தக் கத்திகளின் சிறப்பை அறிந்த அநேகமானவர்கள் ஜேர்மனிக்கு வரும் போது... இங்கிருந்து ஒரு கத்தியையாவது வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். கத்திக்குப் பெயர் போன நகரத்தின் 650´வது ஆண்டு விழாவில் கத்திக் குத்து நடந்தமை சோகமான விடயம்.
  21. பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், கருப்பு நிற தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங்கிலேயர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடைக்கு பதிலாக இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளலாம் எனவும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழாவிற்கான உடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396943
  22. ஆமா, இதெல்லாம்.... கருத்துக் கணிப்பில் சொல்லிப் போட்டு செய்யிற விஷயம் இல்லை. 😂 🤣
  23. மொத்த சனத்தொகையில் ஒரு வீதம். வெளிவராதது என்னும் எத்தனை வீதம்?
  24. அப்ப நம்ம மறவன் புலவு சச்சியர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
  25. சிறப்பான முயற்சி . .......இப்போதாவது இறையருள் கூடிவந்ததே பெரும்பாக்யம் .......! 🙏
  26. உதயநிதியை முதலமைச்சர் ஆக்க முதல், விஜய் கட்சி தொடங்கினால்... 200 ரூபாய் உடன்பிறப்புகள் பதற்றம் அடையத்தானே செய்வார்கள்.
  27. போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி, நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣
  28. சும்மா குடும்ப கௌரவத்துக்காகவாவது போட்டியில் இருந்திருக்கலாம் . .........! 😁
  29. வெளிவந்தது இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்: அதில் இரு தமிழர் யார் தெரியுமா? - 6 years ago local news இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES" சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள். நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா. இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள். முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்) இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்) மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்) நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்) ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்) ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்) ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்) எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்) ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்) பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் தகிடுதம் பண்ணும் ஒரு முக்கிய முஸ்லீம் அமைச்சரின் பெயரும், குதிரை பெட் கம்பனி நடாத்தும் சிங்கள அரசியல்வாதியின் பெயரும் இதில் இல்லாமை ஆச்சரியமான விடயம் தான். தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் நமது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஏமாளிகள் தான்.
  30. இசை ஞானி இளையராஜா இசைப் புய‌ல் ஏ ஆ ர் ர‌குமான் தேனிசை தென்ற‌ல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாக‌ர் வ‌ர‌த் வாஜ் யுவ‌ன் ச‌ங்க‌ர் ராஜா ஹ‌ரிஷ் ஜெய‌ராஜ் விஸ்வநாதன் தமன் அனிருத் சந்தோஷ் நாராயணன் ஜி.வி. பிரகாஷ் ------------------- நன்றி - வீர பையன்26 ரசோதரன் அண்ணா எப்போதும் தமிழன்
  31. அமெரிக்காவின் அழுத்தமாக கூட இருக்கலாம். போலந்திடம் பல வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதே முக்கிய நோக்கம் என நினைக்கிறேன். மலசல கூடங்கள் இம்முறையாவது கட்டுவாரா மோதி என அமெரிக்காவும் ரஸ்யாவும் உற்று நோக்குகின்றனர்.🙂
  32. ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?. பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும். அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை. மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே ஜனாதிபதியாகத் தெரிவாவார். . எவ்வளவு அதிகமாக வாக்களிக்கப்படுகின்றதோ அவ்வளவு வாக்குகளில் அவர் 50 வீதத்துக்கு மேல் பெறவேண்டும். ஆனால் பகிஸ்கரிப்பதன் மூலம் குறைந்த வாக்குகளே அளிக்கப்படும் என்பதால் குறைந்த வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் ஒருவர் குறைந்த அளவு வாக்குகளுடன் இலகுவாக ஜனாதிபதியாகிடுவார். எனவே, நாடளாவிய ரீதியாக பதியப்பட்ட மொத்த வாக்குகளில் ஈழத் தமிழர் கொண்டுள்ள பதியப்பட்ட வாக்குகளின் விகிதம் 11 சதவீதத்திற்கு மேலாகும். இந்தப் 11 சதவீதத்திற்கு மேலான ஈழத் தமிழரும் வாக்களிக்காது பகிஸ்கரித்தால் மிகுதி வாக்குகள் 89 வீதமாகும். இந்த 89 சதவீதத்தில் அளிக்கப்பட்டுச் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் என்ற வகையிலேயே முதலாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பு இருக்கும். வாக்கு வீதம் இதன்படி பகிஸ்கரிப்பதன் மூலம் எதிரி பதியப்பட்ட மொத்த வாக்குகளில் அளிக்கப்பட்ட குறைந்த வித வாக்குகளோடு இலகுவாக ஜனாதிபதியாக முடியும். அதன்படி பகிஸ்க்கரிப்பு என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க உதவியதாகவே அமையும். இதன் மூலம் தேர்தல்ப் பகிஸ்கிரிப்பானது வெல்லப்போகும் ஒரு சிங்கள ஜனாதிபதிக்கு திட்டவட்டமாக சேவை செய்யும் ஒரு முறையாகவே அமையும். உதாரணமாக பதியப்பட்ட மொத்த வாக்குகளை 100 என்று எடுத்துக்கொள்வோம். நாடு தழுவிய ரீதியில் மொத்தத்தில் 80 வீதத்தினரே வாக்களித்தனர் என்று எடுப்போம். அப்படியாயின் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 80. இதில் இரண்டு வாக்குகள் செல்லுபடி அற்றவை என்று எடுப்போம். எனவே அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியான 78 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். இதில் 50 வீதம் என்பது 39க்கும் மேற்பட்ட வாக்குகள் ஆகும். அதன்படி 39 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஜனாதியாவார். இந்த அழிக்கப்பட்ட மொத்தம் 80 வாக்குகளில் தமிழரின் வாக்குகள் 10 என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த 10 வாக்குகளையும் அளிக்காது பகிஸ்கரித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 70 ஆகும். இந்த அளிக்கப்பட்ட 70 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை. எனவே செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் 68. இந்த 68 வாக்குகளில் 50 வீதம் என்பது 34 வாக்குகளுக்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் முதலாவது சுற்றிலேயே ஜனாதிபதியாக தெரிவாவார். அதாவது 39 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வேண்டிய ஒருவர், பகிஸ்கரிப்பின் வாயிலாக 34க்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் இலகுவாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். அதேவேளை சிங்கள தரப்பில் பலம்வாய்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு அவருக்கு வாக்களிக்கப்படும் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளராலும் முதல் சுற்றில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியாது. அப்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட மாட்டாது. பின்பு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிகழும். இதிலும் யாரும் 50சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய சூழல் இல்லை. ஏனெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்குகளை சிங்கள கட்சிகள் எதுவும் மக்களிடம் கோருவதும் இல்லை. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படி இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை அளித்த நடைமுறை அரசியல் வரலாறும் இல்லை. இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் எந்த ஒருவரின் வாக்கு அளவிலும் மாற்றமேற்பட இடமில்லை. ஜனாதிபதி பதவி அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்படுகின்ற முதலாவது சுற்று, இரண்டாவது சுற்று ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை (Absolute majority) பெறமுடியாது. அடுத்து அறுதிப் பெரும்பான்மையற்ற சாதாரண பெரும்பான்மை ( Simple majority ) வாக்குகளை மட்டும் கொண்ட ஒரு பலவீனமான ஜனாதிபதியே தெரிவாக முடியும். அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி என்ற அரசியல் யாப்பின் முதலாவது இரண்டாவது விருப்பங்களை இது தோற்கடித்து விடுகிறது. ஆதலால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அளிக்கப்படும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிங்கள அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதியை கொண்டுவர வழிவகுக்கும். மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மலிந்திருக்கும் இலங்கை அரசியலில் ஓர் அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதி பதவிக்கு வருவது என்பது ஈழத் தமிழருக்கு சாதகமானது. எதிரி பலவீனம் அடைவது போராடும் இனத்துக்கு இலாபகரமானது. பகிஸ்கரிக்க கோருபவர்கள் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ளவேண்டும். அதாவது வேறு எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்காது சங்குக்கு மட்டும் வாக்களித்து கொள்வது பெரிய பகிஸ்கரிப்பாகும். தமிழ் வேட்பாளருக்கு முதலாவது வாக்கையளித்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகளை சிங்கள வேட்பாளருக்கு அளிக்காதுவிட்டால் அது சாதாரண பகிஸ்கரிப்பை விடவும் ஓர் உயர்ந்த கட்ட பகிஸ்கரிப்பாய் அமையும். சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் இரண்டாம் மூன்றாம் விருப்பத்தெரிவு வாக்குகளை அளிக்காது சங்கு சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கூறுகிறார். அதனால் சங்குச் சின்னத்தை ஆதரித்து அதற்கு மட்டுமே வாக்களித்து விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்காமல் விடுவது நேர்கணிய ரீதியான ஒரு பலம் பொருந்திய பகிஸ்கரிப்பாகும். இரண்டும் மூன்றும் கூட்டினால் ஐந்து ( 2 + 3 = 5 ), மூன்றில் இரண்டடை கழித்தால் ஒன்று ( 3 - 2 = 1 ) என்பது மூன்றாம் வகுப்பு எண் கணிதம் படித்த ஒரு குழந்தைக்குக்கூடப் புரியக்கூடிய கணக்கு. இதனை தமிழ்த்தேசியம் பேசுவோர் புரியவில்லை என்றால் அவர்கள் சிங்களத்தடன் கள்ள உறவில் உள்ளார்கள் என்பதே அர்த்தம். இவற்றிற்கு அப்பால் தமிழர் தம்மை பலப்படுத்த பொது வேட்பாளர் பெரிதும் துணைபுரிகிறது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பேராதரவுடன் அத்தேர்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22 தமிழ் ஆசனங்கள் கிடைத்தன. தமிழ் மக்கள் இப்பின்னணியில் விடுதலைப் புலிகள் வெறுனே ஓர் ஆயுத இயக்கம் மட்டுமல்ல அது பரந்த மக்கள் ஆதரவை கொண்ட ஒரு இயக்கம் என்பதும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியான தேசிய அபிலாசைகளை கொண்டவர்கள் என்பதும் புலனாகியது. ஆதலால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தால் மட்டும் போதாது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அளிப்பதற்கு ஜனநாயக ரீதியான தமிழ் ஐக்கியத்தை சீர்குலைப்பதை தமது முதன்மையான இலக்காகக்கொண்டு முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் ஈழத் தேசிய ஐக்கியத்தை முதலில் கட்சி ரீதியாக சிதைக்கும் நடவடிக்கையை எதிரி மேற்கொள்ள தொடங்கினார். தமிழ் தேசியத்திற்கு இருந்த 22 ஆசனங்களை சுமாராக அரைவாசியாக வெட்டித் தறிப்பதில் எதிர் வெற்றியீட்டியுள்ளதுடன் தமிழ் தேசியம் பேசும் இருக்கக்கூடிய ஆசனங்களையே எதிரி பல கூறுகளாக உடைத்துள்ளார். இதன் மூலம் பலமற்றதாய் காணப்படுவது மட்டுமல்ல அது அழிந்து கொண்டு போகிறது என்ற ஓர் அரசியல் அலையை உள்நாடாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்துவதில் எதிரிகள் அரைவழி வெற்றி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி, அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான சட்ட சூழலை பயன்படுத்தி அவரது நிர்வாகத்தில் நடக்கும் தேர்தலையே எமக்கு சாதகமான ஒரு களமாக மாற்றுவோம். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு வரப்பிரசாதமாய் உள்ளது. ஈழத் தமிழரால் ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது. களநிலையில் அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆனால் எதிரியின் தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்கள் அவாவுறும் தமிழ்த் தேசியம் - ஐக்கிய - ஒருமைப்பாடு என்ற மூன்றும் ஒன்று திரண்ட அரசியல் வாழ்வியல் பலத்தை வெளிக்காட்ட முடியும். நான் - நீ, அவன் - இவன், அது - இது என்று தன்முனைப்புக் கொண்டு எமக்கிடையே சண்டையிட்டுத் தமிழ் தேசியத்தை பலியிடாது, அது - இது என்று முட்டையில் மயிர்பிடுங்காது தமிழ்த் தேசியத்துக்கான ஒரு பொதுக் குரலாய் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமுகப்பட்டு சங்கச் சின்னத்தை முதன்மைப்படுத்தி பெருவெற்றி ஈட்ட வேண்டும். எதிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பு. ஒன்றுமே பூரணத்துவமாய் ஆரம்பிக்கப்படுவதில்லை. குறைபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அந்த வளர்ச்சி போக்கில் குறைகளை கடந்த முன்னேறும். மேலும் ஒரு தத்துவார்த்த கோட்பாடு உண்டு. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு செயல்பாடு புள்ளியில் அவை இரண்டு அணிகளாகவே பிளவுண்டிருக்கும். இதில் நடுநிலை என்பதும் செயற்படு அர்த்தத்தில் வெல்லும் பக்கமாகவே அமையும். எனவே நடுநிலை என்பதற்கு இங்கு இடமில்லை. பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது என்பது தமிழ் தேசியம் இல்லாவிடில் எதிர்பக்கம் என்கின்ற இரண்டு அணிகளுள் தமிழ் தேசியத்தின் எதிரியோடு கூட்டிச் சேர்வதாகவே அவையும். இதுதான் அரசியல் தத்துவம் சொல்லும் அடிப்படை உண்மை. ஈழத் தமிழ் மக்கள் ஐக்கியம் , ஒற்றுமை , ஒருமைப்பாடு என்ற உன்னதமான தேசிய அபிலாசையை சொல்லிலும், செயலிலும், தோற்றத்திலும் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளரை ஆதரித்து அதனை முன்னெடுப்பதானது முள்ளிவாய்க்காலுக்கு பின்னானகால வீழ்ச்சியில் இருந்து எழப்போகிறோம் என்ற செய்தியை பறைசாற்றுவதாகும். பேரினவாத ஒடுக்குமுறையால் மூன்று இலட்சம் அப்பாவி மக்களை இழந்துள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைகள், தாய்மார் கர்பிணித்தாய்மார், பெண்கள், நோயாளிகள், முதியோர், இளையோர் என இனப்படுகொலைக்கு உள்ளானபோதிலும், 3, 46,000 இராணுவ இரும்பு சப்பாத்திக்கு கீழும், விதைத்து விட்டார் போல் இருக்கும் மேலதிக பொலிஸ் படைகளின் ஒடுக்கு முறைகளுக்கு கீழும்„ பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வுப் படைகளின் கழுகுச் செயற்பாடுகளில் கீழும், எதிரியினாலும் எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழ் தலைவர்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்ன பின்னமாய் உடைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்கள் தம் தேசிய அபிலாசையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழக்கத் தயார் இல்லை என்பதை உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்ட , தம்பலத்தை தாம் உணர்ந்து முன்னேற தமிழ் பொது வேட்பாளரை பெரு வெற்றியடையச் செய்ய வேண்டும். சங்கை தமிழ் தேசியத்தின் நாதமாய் ஒலித்துக் காட்ட வேண்டும். https://tamilwin.com/article/essay-on-sri-lankan-election-1724360461
  33. இந்த கொடியின் நிறங்கள் விடுதலைப் புலிகளின் கொடி போலவே உள்ளன.
  34. யாருக்கு வாக்களிப்பது என்று, வீட்டுக்குள் அடிபிடி. 😂
  35. ஏன் பேச விரும்பவில்லை? முட்டாள்களின் செயல்களைவிட, நல்லவர்களின் மெளனம் அதிக சேதத்தை விளைவிக்கும். 🤦🏼‍♂️ கந்தையருக்கு தான் என்ன சொல்கிறேன் என்பதே தெரியாமல்தான் கதை அளக்கிறார். ஜேர்மனியில் ஒருபோத்தல் தண்ணீர் கூட இலவசமாகக் கிடைக்காதபோது சிறீலங்கன் கடவுச்சீட்டு மட்டும் உவருக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டுமாம் 🤣 (கனடாவில் ஒரு Sri Lankan கடவுச்சீட்டு $380 (முன்னைய கடவுச் சீட்டின் பிரதியுடன்.) முன்னைய கடவுச்சீட்டு இல்லாவிட்டால் $480 )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.