Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    2954
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    488
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/26/24 in all areas

  1. ‘யாருக்கு குத்துறது?’ என்ற கேள்வியிலேயே கோளாறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஜனாதிபதித் தேர்தல். மக்கள் தங்களது வாக்குகளை யாருக்குப் போட வேண்டும் என்று அவர்களே தீர்மானிப்பார்கள். எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் கூட்டம் என்ற அரசியல்வாதிகளின் நிலை மாற வேண்டும். ஆயுதப் போராட்ட நேரத்திலும் அதற்கு முன்னரும் ஏன் இப்பொழுதும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பது அவர்கள்தான். அரசியல்வாதிகள் எப்படியோ தங்களது சொகுசான வாழ்க்கைக்குப் போய்விடுவார்கள். மக்களை சிந்திக்க விடுங்கள். சேர்ந்திருப்பதோ, பிரிந்திருப்பதோ, பேசாமல் இருப்பதோ எது சரியென அவர்களுக்குத் தெரியும். தங்கள் அரசியல் இருப்புக்காக குட்டைகளைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதிகளைவிட விசமானவர்கள்.
  2. இசைந்து வரும் ஏனம் -----சுப.சோமசுந்தரம் முதலில் ஏனம் என்பது பன்றியைக் குறிக்கும் சொல் என்ற விளக்கம் தந்து ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தேவைப்படும் ஒன்று. சமீபத்தில் வெளிவந்த 'மாமன்னன்' திரைப்படம் பலவகையில் பரபரப்பானது; சாதனையும் படைத்தது. படத்தில் குறிக்கப்பட்ட விலங்கான பன்றி ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடு என்றே கொள்ளலாம். படத்தில் நன்கு படித்தவர்களாக வரும் நாயகனும் நாயகியும் பன்றியைப் பேணுவது புதுமை காரணமாக வியப்பை ஏற்படுத்தினாலும், சமூக மாற்றத்துக்கான வித்து என்ற வகையில் மகிழ்வைத் தருவது. படத்தின் நாயகன் சமூக அளவில் பன்றி வளர்த்துப் பழகியவன்தான். நாயகி அவ்வாறு இல்லாத போதும் யாதொரு மனத்தடையும் இல்லாமல் அவள் பன்றியைக் கொஞ்சுவது, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாயகனிடம் காதல் கொள்வதில் அவளுக்கு யாதொரு மனத்தடையும் இல்லாததன் குறியீடு. மாறிவரும் சமூக அமைப்பிற்குக் கட்டியம் கூறுவது அல்லது மாற வேண்டிய சமூகத்திற்கான அறைகூவலாய் ஒலிப்பது. இந்த சாதி பேதங்கள் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததற்கான குறிப்பு எதுவும் சங்க இலக்கியங்களில் இல்லை. சங்க காலம் ஒரு பொற்காலம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக அடுக்கலாம். சனாதனம், மனுநீதி, வர்ணாசிரமம் இவையெல்லாம் தமிழ் மன்னர்களை மூளைச்சலவை செய்து சமூகத்தில் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 'வர்ணத்திற்கு ஒரு நீதி' சட்டம் நடைமுறைப் பட்டதை சோழர்காலக் (குறிப்பாக இராசராச சோழன் காலத்தவை) கல்வெட்டுகள் குறிக்கின்றன. வேதாந்தத்திற்கு எதிர்வினையாகத் தோன்றியவையே பௌத்தம், சமணம், சைவ சித்தாந்தம் முதலியவை என்பதே பெரும்பான்மையான சான்றோர்தம் கருத்து. இவற்றில் சைவ சமயத்தார் சிலர் இத்தோற்றுவாய் பற்றிய புரிதலின்றி வேதாகமத்தில் உள்ள சாத்திர சம்பிரதாயங்களுக்கு அடிமையாகி சனாதன வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிப்பது சமய அரசியலின் அவலம். இருப்பினும் அக்காலத்தே சைவ சமயக் குரவர் பலர் சமூகத்தில் புகுத்தப்பட்ட வருணாசிரமத்திற்கு எதிரான கலகக் குரல் எழுப்பியது வரலாற்றுச் சிறப்பு. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?" (நாவுக்கரசர் தேவாரம்; திருக்குறுந்தொகை; பாடல் 1674) என்று சனாதனவாதிகளை வினவுகிறார் திருநாவுக்கரசர். "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப் பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை....." (திருவாசகம்; கண்ட பத்து பாடல் 5) என்று "சாதி குலம் பிறப்பென்னும் சுழலில் சிக்கித் தடுமாறிய ஆதரவில்லா நாய்" என்று அடக்கத்துடன் தம்மையே தாழ்த்திக் கொள்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்தில் பன்றி சாதியக் கொடுமையின் குறியீடானதைப் போல், 'சாத்திரம் பல பேசும் சழக்கர்'களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது சாதிய வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதின் குறியீடாகக் கொள்ளலாம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் பண்பாட்டு வெளிப்பாடு. நாவுக்கரசர் தேவாரத்தின் திருவையாறு பதிகத்தில் முதற்பாடலில் சிவ-சக்தியைப் பாடிக்கொண்டே சிவனடியார்களுடன் திருவையாறு அடைகின்றார். அடைந்தவுடன் அவர் முதலில் காண்பது பிடியுடன் (பெண் யானையுடன்) களிறு (ஆண் யானை) இணையாய் எதிர்வரும் காட்சி. அந்த இணைப்பில் அவர் அம்மையப்பனைக் காண்கிறார். அப்பாடலிலும் தொடர்ந்து அப்பதிகத்தில் வரும் ஏனைய பாடல்களிலும் 'கண்டறியாதன கண்டேன்' என்று திருநாவுக்கரசர் நிறைவாகக் குறிப்பது தத்துவார்த்தமான ஒன்றாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான செய்தியைத் தருவதாய் அமைகிறது. இங்கு நமது கருதுகோளுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பினும், அப்பாடலைக் கையிலெடுத்த படியால் எனக்கு அவ்வரி அளித்த செய்தியைப் பதிவு செய்துவிட்டுக் கடந்து செல்வது இதனை வாசிப்போர் சிலருக்குப் பயனுள்ளதாய் அமையலாம். இப்பூவுலகின் இயக்கத்தில் இயற்கையின் ஒரு தலையாய நோக்கமாவது இனப்பெருக்கம். பெருகிய இனம் தனக்கென அமைத்துக் கொண்ட சமூக வாழ்வில் இனப்பெருக்கம் எனும் இயற்கையின் நோக்கத்தை அம்மையப்பன் எனும் வடிவிலேயே நிறைவேற்றிக் கொள்கிறது. எனவே நாவுக்கரசர் அம்மையப்பன் வடிவை ஒவ்வொரு உயிரினத்திடமும் காண்கிறார். சமணம் போன்று சில சமயங்களில் இல்லற வாழ்விலிருந்து பயணித்துத் துறவறத்தில் வாழ்வு நிறைவுறக் காணலாம். சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் துறவற நிலையிலிருந்து மாறாமல் நின்று, அறம் சார்ந்த இல்லற மேன்மையைக் குறிக்க எண்ணினாரோ என்னவோ ! பறவையினமும் விலங்கினமும் தத்தம் இணையோடு எதிர்வந்து அவருக்கு இப்பொருள் உணர்த்துதலையே 'கண்டறியாதன கண்டேன்' எனக் கூறுவதாய்க் கொள்ளலாம். திருவையாறு பதிகத்தின் முதற்பாடலில் யானையைக் கண்டவர் அடுத்து வரும் பாடல்களில் பேடையொடு சேவலையும், குயிலையும், மயிலையும், அன்றிலையும், நாரையையும், பைங்கிளியையும், பன்றியையும், ஏறையும் காண்கிறார். முன்னர் குறிப்பிட்டதைப் போல் பன்றியை நாவுக்கரசர் வேறுபாடற்ற மனநிலையில் அணுகுவதை 'மாமன்னன்' திரைப்படப் பின்னணியில் குறிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாதலால், திருவையாறு பதிகத்தின் திறப்புக் களமான யானை வரும் பாடலையும் ஏழாவது பாடலான ஏனம் (பன்றி) வரும் பாடலையும் ரசித்துப் பார்ப்போமே ! "மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்" (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1) பொருள் விளக்கம் : மாதர்பிறை - அழகிய பிறையினை; கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை; மலையான் மகளொடும் பாடி - மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி; போதொடு - மலர்களோடு; நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி; புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்; யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது - திருவையாறு அடைகின்றபோது; காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு; களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்; கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டறியாத பொருள் விளக்கம் கண்டேன். இனி இக்கட்டுரைக்கான மெய்ப்பொருள் ஏந்தி இசைந்து வரும் ஏனம் பற்றிய பாடல் : "கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் அடியினை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது இடிகுர லன்னதொர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்" (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 7) பொருள் விளக்கம் : கடிமதிக் கண்ணியினானை - யாவரும் விரும்பும் சிறப்புடைய பிறையினைத் தலையில் அணியாகச் சூடியவனை; காரிகையாளோடும் பாடி - அழகுடைய உமையாளோடு துதித்துப் பாடி; வடிவோடு வண்ணம் இரண்டும் - இரண்டும் ஒன்றான வடிவோடு விளங்கும் அம்மையப்பனை; வாய் வேண்டுவன சொல்லி வாழ்வேன் - விரும்பியவாறெல்லாம் வாயினால் வாழ்த்திப் பாடி வாழ்வேன்; அடியினை ஆர்க்கும் கழலான் - தனது திருவடியால் காக்கும் பாதம் உடையோனின்; ஐயாறு அடைகின்ற போது - திருவையாறு அடைகின்ற போது; இடிகுரல் அன்னதோர் ஏனம் - உரத்த குரலெழுப்பும் பன்றி; இசைந்து வருவன கண்டேன் - துணையுடன் வருவது கண்டேன்; கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்; கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டு அறியாத பொருள் விளக்கம் கண்டேன். சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சாடியோர் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்ற சைவ சமயக் குரவர். சாதியத்தைச் சாடிய 'மாமன்னன்' திரைப்படம் சாதியக் குறியீடாகப் பன்றியைத் தெளிவாகக் கையிலெடுத்தது. சாதியச் சழக்கர்களைச் சாடிய திருநாவுக்கரசர் பன்றியை அம்மையப்பனாகக் கையாண்டது தற்செயல் நிகழ்வோ என்னவோ ! இது தொடர்பில் எனது பதிவு இத்துடன் முற்றுப்பெற்ற நிலையில் என்னுயிர்த் தோழர் பேரா.ந.கிருஷ்ணன் அவர்கள் மாணிக்கவாசகரும் திருவாசகம் திருவார்த்தை பதிகம் ஆறாவது பாடலில், சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு சமநிலை பாராட்டியதைச் சுட்டினார். சைவ சமயத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்திற்கான மேலும் ஒரு சான்றினை எடுத்தளித்த பேரா.கிருஷ்ணனின் சான்றாண்மை - குறிப்பாக, சைவ இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் அவருக்கான ஆழ்ந்த புலமை - நமக்கான பேறு. அத்துடன் பாடலையும் உரையையும் எனக்கு அனுப்பித் தந்தார். மேலும், அதனை எனது இப்பதிவிலேயே இணைப்பது வாசிப்போருக்கு நலம் பயக்கும் எனக் குறிப்பிட்டார். எனவே அவர் சார்பாக நான் மணிவாசகரின் பாடலையும் அவ்வுரையினை எனது பாணியிலும் இத்துடன் இணைக்கிறேன் : "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய; செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய; எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்; தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல; எம்பிரான் தான் வேடுவனாய் - என் பிரானாகிய சிவன் தான் வேடனாக; கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர; இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்; ஏவுண்ட பன்றிக்கு - (அம்பு அல்லது வேல்)ஏவப்பட்டதால் இறந்த பன்றிக்கு; இரங்கி - கருணை மேலிட; ஈசன் அன்று - இறைவன் (சிவனார்) அன்று; கேவலம் - தானே; கேழலாய் - பன்றியாய் ஆகி; பால் கொடுத்த கிடப்பு அறிவார் - (இறந்த பன்றியின் குட்டிகளுக்கு) பால் கொடுத்த திருவுளத்தை உணர்ந்தவர்கள்; எம் பிரான் ஆவாரே - (அவர்களும் வணங்குவதற்குரிய) எம் தலைவர் ஆவாரே. இறுதியில் அத்தகைய அடியார்க்கும் தாம் அடியார் என்ற மணிவாசகர்தம் கூற்று உணர்ந்து நோக்கத்தக்கது. பன்றிக்குத் தாயும் ஆனார் பெருந்துறை இறைவன். எனவேதான் மாதொருபாகனான தம் சிவபெருமானை, "தாயாய் முலையைத் தருவானே" என திருவாசகம் ஆனந்தமாலை பதிகம் ஐந்தாம் பாடலில் குறிப்பிட்டு அவனருள் வேண்டி நிற்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்திலும் கதாநாயகனின் தாய், தாயை இழந்த பன்றிக் குட்டிக்குப் புட்டிப் பால் தந்து பேணுவதான காட்சியமைப்பு மேற்குறிப்பிட்ட திருவாசகக் காட்சியைக் கண் முன் நிறுத்துகிறது. திரையில் வரும் அத்தாய் உமை என்றால், படத்தில் தோன்றும் மாமன்னன் அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலாய்க் கொள்ளலாமே ! சமூக நீதியை இறைவழிக் காணும் ரசிகன் இப்படித்தான் சிந்திப்பானோ, என்னவோ ! இந்த ஒப்பீடு ரசனைக்குரியதாகவே தோன்றுகிறது. வைணவத்தில் திருமாலின் வராக அவதாரத்தை இந்த சமூகப் பார்வையில் திருப்புவது மிகைப்படுத்துதல் ஆகிவிடுமோ ! சரி விடுங்கள், வேறு ஒரு சூழலில் அந்தப் பன்றியை ஆட்கொள்வோம்; அப்பன்றியினால் ஆட்கொள்ளப் படுவோம்.
  3. Dr முரளி வல்லிபுரநாதன் வாட்ஸப்பில் இருந்து.. மருத்துவ அலட்சியத்தால் நேரிடும் மரணங்களும் ஊடகங்களது சமூகப் பொறுப்பும். மருத்துவ அலட்சியத்தால் மன்னாரில் இறந்த இளம் தாயின் கணவர் நீதி தாமதிக்கப்பட்ட நிலையில் தவறான முடிவினை எடுத்த தகவலானது மனதைப் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. தவறான முடிவுகள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதுடன் ஊடகங்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய தரப்பினர் மேலும் பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த அநாவசிய இறப்புத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 2014 இல் முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு 2017இல் மேம்படுத்தப்பட்ட தற்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாரிய பொறுப்பை மீண்டும் நினைவு படுத்துகிறேன். குறிப்பாக தற்கொலையை நியாயப்படுத்துவது, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளை வெளிப்படுத்துவது, மற்றும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரங்களை வெளியிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஏனையவர்களையும் தற்கொலை செய்யத் தூண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். மன்னாரில் இளம் தாயின் சாவைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகர்கள், வலையொளி (Youtube) ஊடகர்கள் எனப் பலரும் ஊடக ஒழுக்க நெறியினைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக மீறியுள்ளனர். முக்கியமாக இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து "யார் குற்றவாளி" என்று கருத்து வெளியிடும் நீதிபதிகளாக ஊடகவியலாளர்கள் குறிப்பாக Youtube பதிவாளர்கள் செயல்படுவது ஏற்கனவே குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் மனவேதனையை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி அவர்களை மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயல்படும் ஒரு சிலரைத்தவிர ஏனைய Youtube பதிவாளர்களையும் சமூக ஊடகர்களையும் பொறுப்பற்ற- தமது இலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்- பிணந்தின்னிக் கழுகுகளாக கருத வேண்டியுள்ளது. அத்தோடு இவ்விடயத்தில் நேரடியாகத் தன்னார்வ அடிப்படையில் தலையிட்ட ஒரு வைத்தியர் வைத்தியத்துறையின் மீதான தனது நம்பிக்கையீனங்களை சமூகமயப்படுத்தியதால்- அதாவது 'வைத்தியர்களைத் தான் குறைகூறியதால் அவர்கள் தமக்குப் பாதகம் செய்துவிடுவார்கள்' என்ற கருத்தைக் கூறி, 'தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதாகவும் தொடர்ச்சியாகக் கூறி வருவதால்'- சமூகத்தில் வைத்தியத்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் அச்சத்தால் வைத்திய சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாக 'வைத்தியருக்கே ஆபத்து வருமானால் நாம் எல்லாம் எம்மாத்திரம்' என்று அஞ்சி உரிய சிகிச்சைகளைப் பெறாது மக்கள் மரணிக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. குறித்த கணவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட பயம் காரணமாக, மருத்துவ உளவளத்துணை எதனையும் நாடாது மரணித்திருக்கக் கூடும். ஆகவே, தாமே குறித்த பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறித்திரியும் அதே வைத்தியர் உண்மையாகவே அக்குடும்பத்தின் நலன்களில் அக்கறை காட்டியிருந்தால் தகுந்த உளவள ஆற்றுகைககள் ஊடாக இந்த மரணத்தினைத் தவிர்த்திருக்கலாம். மறுபுறம் இளம் தாயின் இறப்பு தொடர்பான விசாரணையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களை ஊடகங்கள் எந்தவித சுய கட்டுப்பாடும் இன்றி வெளிப்படுத்தி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பணி இடைநீக்கம் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை ஆகும். இரண்டு மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன்பின் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு .குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பலர் பின்னர் முறையான விசாரணையில் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை நான் அவதானித்து இருக்கிறேன். எனவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை அவர் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் வெளிப்படுத்தி சமூகத்தில் குற்றவாளியாக வெளியே நடமாட முடியாதவாறு செய்வது ஊடகங்களின் ஒழுக்க நெறியை மீறிய அராஜக செயலாகவே கருத வேண்டியுள்ளது. இவரது மரணத்திற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை இன்னொரு தரப்பினருக்கும் சம அளவில் உண்டு. கர்ப்பகாலத் தாயார் ஒருவரது இழப்பு எவராலும் ஈடுகட்டமுடியாத இழப்பு. அதனால் குறித்த தாயாரது குடும்பத்தவர்கள் நெருங்கியவர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையினரது உளவள மருத்துவப் பிரிவினர் மற்றும் தாய்சேய் நலப்பிரிவினர் ஆகியோரால் நெருக்கமான அரவணைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உள ஆற்றுப்படுத்துகைக்குச் சென்ற உளவளத்துணையாளர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், சுகாதாரதுறையினர் தொடர்பில் வழங்கப்படும் எதிர்மறையான தகவல்களால் சுகாதாரப் பணியாளர்களை எட்ட வைத்திருக்கவே அக்குடும்பத்தினர் விரும்பினர் என்றும் தெரியவருகிறது. குறித்த செயற்பாட்டால் சுகாதாரப் பணியாளர்கள் மனச்சோர்வடைந்தும், பொறுப்பற்ற ஊடக வசைச் சொற்களால் அச்சமடைந்தும் போனதால் அக்குடும்பத்தைத் தமது அரவணைப்பில் வைத்திருக்காது விலகியிருக்கலாம். அதேபோல் ஒரு இணையத் தளத்தில் மன்னார் இறப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்தியர் செந்தூரனின் குடும்பப் புகைப்படங்களுடன் பாலியல் ரீதியாகக் கொச்சைப் படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவது ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத ஒட்டுண்ணிகளால் இயக்கப்படும் ஊடக மாபியாவின் செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது. இது போலவே GMOA மாபியா குழு உறுப்பினர்களினால் இயக்கப்படும் அநாமதேய முகநூல் பதிவுகள், கருத்துக்களைப் பதில் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியாகத் தாக்கும் கேவலமான செயலாக எடுத்துக்கொள்ளலாம். இவை ஒருபுறம் இருக்க, மன்னார் இளம் தாயின் அநியாயச் சாவுக்காக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது அனைவரின் மனதிலும் பெரும் கிலேசத்தினை எழுப்பியுள்ளது. ஏனைய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் மருத்துவ அலட்சியத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் மன்னாரைச் சேர்ந்த சட்டவாளர்களும் ஏனைய மன்னார் சமூக செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் ஏழைகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்காத இந்தக் கேவலமான நிலையை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் [Justice delayed is justice denied] என்பது ஒரு சட்ட அறம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் மனத்தில் இருத்தி விரைவான நீதியைப் பெற முற்படுவதே இழந்த உயிர்களுக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் செய்யும் கைமாறாக இருக்கும். வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.. மருத்துவ அற நெறியை [medical ethics] கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் நான் எப்போதும் எனது பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான எழுச்சி பாதிக்கப்படும் பிராந்தியங்களில் இருந்து உருவாக வேண்டும். அதன் மூலமாகவே வவுனியா உட்பட வட பகுதியில் தொடர்ச்சியாக கவனக்குறைவு காரணமாக இடம் பெறும் தாய் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்படலாம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 25.8.2024
  4. மாபெரும் அரசியல் சாணக்கியரான நிலாந்தன் மாஸ்டர், வன்னியில் வாழ்ந்த காலத்தில் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் புலிகளின் அழிவைத் தடுத்திருக்கலாம்! மீண்டும் நிலாந்தன் மாஸ்டருக்காக
  5. அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது. நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.
  6. தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு இவையாவும் தலைவரின் மெய்க்காவலராகக் கடமையாற்றிய பிரியன் என்ற ராதா வான்காப்புப் படையணிப் போராளின் வாக்குமூலம் ஆகும். பெயர் (பதவி நிலை) சிலம்பு/சிலம்பரசன் (ராதா வான்காப்புப் படையணியின் முன்னாள் சிறப்புக் கட்டளையாளர். ஆனந்தபுரம் முற்றுகையினை உடைத்து உணாவில் களித்தரைப் பகுதிக்குள்ளால் பிரிகேடியர் பானுவுடன் வெளியேறியோரில் இவரும் ஒருவர். எனினும் ஆனந்தபுரத்தில் காயமடைந்திருந்தார்.) செந்தில் (ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர். சிலம்பரசன் அவர்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.) சுவர்ணன் (வட்டப் பொறுப்பாளர்) ரட்ணம் மாஸ்டர் சேந்தன் (ஜேசுதாஸ் தாக்குதல் அணியின் நிதிப் பொறுப்பாளர்) குறிஞ்சிக்குமரன் (தலைவரின் முதன்மை மருத்துவர்) ஈழவாணன் (தலைவரின் தனிப்பட்ட உதவியாளர்) வண்ணம் (இரண்டாம் வட்டப் பொறுப்பாளர்.) இகைவேந்தன் (தலைவரின் முதன்மை சமையல்காரர்) தென்றல் (தலைவரின் சமையலோடு தொடர்புடையவர்) பெருவாணன் (தலைவரின் சமையல்காரர்) நக்கீரன் (இரண்டாம் வட்டப் போராளி) அழகரசன் (இரண்டாம் வட்டப் போராளி) தயாளன் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர். தேவைப்படும் நேரங்களில் இரண்டாம் வட்டப் போராளியாகவும் கடமையாற்றினார்.) ஈகை விடியல் (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்) கதிரேஸ் (பெறுநர்/ தலைவருக்கு வருபவற்றை பெற்றுக்கொள்பவர்) வள்ளுவன் மாஸ்டர் (சமையளாராகவும் நீண்ட காலம் தலைவரின் மெய்க்காவலராகவும், பின்னர் முதலாம் வட்டப் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்) இளங்கோ (முதன்மை மெய்க்காவலர்களில் ஒருவர்) புரட்சி காசி அறிவுமாறன் வள்ளல் (தலைவரின் முதன்மை நிழற்படக்காரர்) பொன் (மெய்க்காவலர்களில் ஒருவர்) முரசு (மெய்க்காவலர்களில் ஒருவர்) தென்னவன் (மெய்க்காவலர்களில் ஒருவர்) மொழியறிவு (மெய்க்காவலர்களில் ஒருவர்) ஐயன்னா அமரர் பி. மதிவதனி அவர்களின் வழங்கல் போராளி: இளந்தீ எண் 1 முதல் 17 வரையுள்ள போராளிகள் யாவரும் இறுதிநாளில் விழிமூடினர். 17 முதல் 28 வரையுள்ள போராளிகள் ஒடுவில் நிலைக்கு முன்னரே சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் புலிகளின் படைமுகாம்களினுள் வித்தாகினர். இவர்களில் சிலம்பரசன் அவர்கள் ஏற்கனவே விழுப்புண் அடைந்திருந்து மே 16இற்குப் பின்னர் வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன். ரட்ணம் மாஸ்டர் அவர்களோடு வண்ணம் அவர்களும் மே 17 அதிகாலை நடைபெற்ற கேப்பாப்புலவு நோக்கிய ஊடறுப்புச் சமரில் வீரச்சாவடைந்தார். வள்ளுவன் மாஸ்டர் வீரச்சாவடைந்த அந்நிகழ்விலேயே இளங்கோவும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். வள்ளல் அவர்கள் ஏற்கனவே ஒருகாலை இழந்திருந்த நிலையில் தான் களமாடிக்கொண்டிருந்தார். ஆனந்தபுரத்தில் நடந்த சமரொன்றில் காயப்பட்டதால் முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கேயே விடுபட வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஆதாரம்: மெய்ப்பாதுகாவலர் கூறும் அதிர்ச்சி தகவல் தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  7. ஓஓஓஓ இதுக்காகத் தான் அரசியல்வாதிகள் கட்சிகள் மாறுகிறார்களோ?
  8. ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM |
  9. யேர்மனியில், பன்றி சேமிப்பின் ஒரு அடையாளம்
  10. சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த மடைத்தனத்தை தானே திரும்ப திரும்ப செய்கிண்றீர்கள் ...
  11. மற்றொரு மெய்க்காவலரின் பெயர் லெப். கேணல் செங்கையான். இவர் தலைவரின் மெய்க்காவலராகவும் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்பு கட்டளையாளராகவும் கடமையாற்றினார். இறுதி நாளில் வித்தாகினார். பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் மண்ணிலவன் மெய்க்காவலர்களில் ஒருவர் புலிவீரன் முதலாம் வட்ட மருத்துவர்களில் ஒருவர் பிரியன்
  12. எந்த சிங்கள வேட்பாளருக்கு போட்டாலும் புத்த பிக்குகளை விலத்தி ஒன்றுமே செய்யப்போறதில்லை. அதைவிட ஒருபக்கத்தால் பிக்குகளையும் ராணுவத்தையும் ஏவிவிட்டு புத்தர் சிலை வைக்கிறது, காணி பிடிக்கிறது எண்டு செய்துபோட்டு மற்றப்பக்கத்தாலை தான்நல்லவன் என்று காட்ட அதுக்கு ஏதாவது தீர்வு தருவது போலநடிப்பது. எப்பவும் இது கொதிநிலையிலேயே இருக்கும். வேறை ஒண்டும்நடக்கப் போவதில்லை. இதுக்கு பொது வேட்பாளருக்கே போடலாம்.நான் கேள்விப்பட்டதன் படி யாழ்ப்பாணத்தில் 2லட்சம் வாக்குகளாவது பொது வேட்பாளருக்கு கிடைக்கும். மற்ற இடங்கள் பற்றி வடிவாக தெரியாது.
  13. தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன் “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். ஒரு இடதுசாாரியாக இருந்தவர். 1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது. காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது. அப்புறக்கணிப்பை தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார். இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை. யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால், அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும். அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும். ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார். தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார். அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது. தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது. அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும். இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும். கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும். தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும். அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார். அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள். அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள். தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம். ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல, அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய, அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள். அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள். அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள். ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை. ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிறகெப்பொழுதும் தரப்போவதில்லை. எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம். ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பகிஸ்கரிப்பும் உண்டு. அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார். கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார். இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும். தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும். எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான். ஒன்று, தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது. இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது. https://www.nillanthan.com/6872/
  14. 1) காணொளியை பார்க்கவும்”. 2) கற்பூரப் புத்தியையா உங்களுக்கு லபக்கெனப் பற்றிப்பிடித்துவிட்டீர்கள். 🤣 இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடமே நான் கேட்பது. 🤣
  15. பாடல்: ஆண்டவனின் தோட்டத்தில் படம்: அரங்கேற்றம் இசை: வி. குமார் பாடியவர் : பி. சுசீலா வரிகள்: கண்ணதாசன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் ஹா... வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
  16. தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவில்லை என்பதனை பன்னாட்டுச் சமுகத்துக்கு காட்டவேண்டும் என்றமுனைப்பில் நல்லதொரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது! அரியத்துக்கு 25% வாக்குகள்கூடத் தேறாது!
  17. இவ… இந்திய இராணுவத்தின் மகளிர் அணித் தலைவியாக இருக்குமோ… 😂 🤣
  18. Sandmya விற்கு கைகுடுக்க இளிக்கிற சிங்களவனையும் அதை ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கிற சிங்களவனையும் பார்க்க சிரிப்பாக உள்ளது. அது சரி இவ மட்டும் ஏன் தனிபொம்பிளையா வந்தவ?
  19. சரத் பொன்சேகாவின்... எல்லா கூட்டத்திற்கும் பிக்கு ஒருவர் தவறாமல் போகின்றார். யார் பெத்த பிள்ளையோ... பாவம். அவருக்கு என்ன வேண்டுதலோ.... 😂
  20. ஆஹா, அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பெரியண்ணாவுக்கும் சர்வதேச ஜனநாயகவாதிகளுக்கும் தமிழர்களது பலத்தையும் ஒற்றுமையையும் காட்ட அரிதான சந்தர்ப்பம் கிடைத்துருக்கிறது. எல்லோரும் ஒன்றாக, குறிப்பாக பொது வேட்பாளர், அவரை முன் மொழிந்த முதிர்ந்த பழுத்த அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் வித்தகர் நிலாந்தன் எல்லோரும் வாருங்கள். 30ந் திகதி வீதியில் இறங்கிப் போராட ஒன்றாகத் திரண்டு வாருங்கள். எந்த மக்களை ஒற்றுமையாக ஓரணியில் திரளச் சொன்னீர்களோ அவர்களே உங்களை அழைக்கிறார்கள். வாருங்கள். வந்து மக்களுக்காகப் போராடுங்கள். ஒருவேளை நீங்கள் வருவீர்களானால், 50 வீத வாக்குகள் கிடைக்கும் என்று சிவசக்தி ஆனந்தன் சொன்ன மாதிரி இல்லாமல் 80 வீதமான வாக்குகளோ அதற்கு மேலான வாக்குகள் கூடக் கிடைக்க வாய்ப்பிருக்கு. வெல்க தமிழ் என்று முழங்கு சங்கே
  21. யேர்மனியில் நான் வசிக்கும் நகரில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நூறன் பேர்க் நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்த ஊரவன் ஒருவர் ஊருக்குப் போவதாக சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தான். அப்பொழுது நாட்டில் நிலமைகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை என்பதால் நான் போவதை தவிர்த்திருந்தேன். ஊருக்குப் போய் மூக்கு முட்ட கள்ளு குடிக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. ஊருக்குப் போய் திரும்பி வந்து அலைபேசியில் தொடர்பு கொண்டான். ஊர் விடையங்களைப் பற்றி நிறையக் கதைத்தான். கள்ளு குடித்ததைப் பற்றி ஒரு வரி கூட அவன் சொல்லவில்லை. ஆனால் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “கள்ளுக் குடிக்கலாம் எண்டு ஆசையாத்தான் இருந்தது. கூட வாறதுக்கு இரண்டு மூன்று பேர் தயாராகவும் இருந்தினம். ஆனால் எனக்குள்ளை ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. கள்ளுக் குடிச்சு வெறி ஏறினாப் போலே, ‘வெளிநாட்டுக்குப் போயிற்று வந்தால் பெரிய நினைப்பு. நாங்களெல்லாம் அவரிட்டை கள்ளுக் குடிக்க ஊம்போணுமோ?’ எண்டு எனக்கு அவங்கள் இரண்டு சாத்து சாத்தினால் என்ன செய்யிறது எண்டு பயம் வந்தது. எதுக்கு வில்லங்கம் எண்டு நான் கள்ளுக் குடிக்கப் போக இல்லை” இந்த நினைவை மீட்ட வைத்தது இந்தச் செய்தி
  22. அண்ணா இங்கே எழுதப்படுவை பொருத்தமே அற்ற உளறல்கள் மட்டுமே. உதாரணமாக எமது வாக்களிப்பை சர்வதேசத்திற்கு காட்டி இதுவரை எதை சர்வதேசம் கிழித்தது எமக்கு என்று சொல்லும் அதே வாய்கள் தான் தமிழர்கள் தமிழருக்கு வாக்களிக்கவில்லை என்பதை உலகுக்கு காட்டிவிடப்போகிறோம் என்றும் எழுதுகிறார்கள்.
  23. மக்கள் உண்ணும் உணவைப் பார்க்க ஏன் சங்கடமாக இருக்க வேண்டும், நண்பரே ! (நம் உணவுப் பழக்கம் வேறாக இருந்தாலும் கூட). மேலும் கலை நயத்துடன் (with ambience) உணவு படைக்கப்பட்டுள்ளது.
  24. யார் அதிகம் பிச்சையிடுவார்களோ அவர்கள் பக்கம் சாயவேண்டும் என்றாகிவிட்டது ஈழத்தமிழர் நிலைமை. ☹️
  25. மோதிரக் கையால் குட்டுவாங்கும் பாக்கியம் ஒருசிலருக்கே கிடைக்கிறது. அந்த ஒருசிலரில் நானும் ஒருவன்.😁🙏
  26. பட மூலாதாரம்,UGC AND AKKINENI NAGARJUNA/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா பதவி, பிபிசி செய்தியாளர் 41 நிமிடங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) ஹைதராபாத்தில் மடப்பூர் பகுதியில் உள்ள ‘என் கன்வென்ஷன்’ (N Convention Center) மையத்தை இடித்தது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை ஆறு மணியளவில், ஹைட்ரா முகமை, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் கழகம்- ஜிஹெச்எம்சி, நீர் வடிகால், நகரத் திட்டமிடல், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘என் கன்வென்ஷன்’ மையத்தை அடைந்தனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் குளத்தில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகள் அதனை இடித்து அகற்றினர். இந்த பகுதி ஹைதராபாத் ஷில்பரம் எதிரே உள்ள சாலையில் உள்ளது. ‘என் கன்வென்ஷன்’ மையத்துக்கு சொந்தமான வளாகங்கள், விழாக் கூடம் மற்றும் இதர கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டன. இந்த பணி மதியம் வரை தொடர்ந்தது. இதையொட்டி காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மையத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் வராதவாறு தடுத்துள்ளனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் இடிக்கப்பட்டதன் பின்னணி பட மூலாதாரம்,AKKINENI NAGARJUNA/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் நாகார்ஜுனா செரிலிங்கம்பள்ளி மண்டலம் கானாமேட் வருவாய் துறைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 29.6 ஏக்கர் பரப்பளவில் தம்மிடிகுண்டா குளம் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளால் குளத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டதாக தெலுங்கானா நீர் வடிகால் துறை கூறுகிறது. இந்த குளத்தை ஒட்டி சர்வே எண் 11/2ல் சுமார் மூன்று ஏக்கர் பட்டா நிலத்தில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டுள்ளது. இங்கு நிகழ்ச்சி வளாகம், அலுவலகம், வைர மண்டபம் உள்ளிட்ட சில கட்டமைப்புகள் உள்ளன. `என்’ கன்வென்ஷன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, இது N3 என்னும் நிறுவனத்தால் கட்டப்பட்டது. N3 எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனம் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நல்லா ப்ரீதம் ரெட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இருவரும் கூட்டாக `என்` கன்வென்ஷன் மையத்தை நடத்துகிறார்கள். தம்மிடிகுண்டா குளத்தின் எஃப்டிஎல் (முழு நீர்த்தேக்க மட்டம்) மற்றும் இடையக மண்டலத்திற்குள் (buffer zone), நிரந்தரக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘என் கன்வென்ஷன்’ நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த சர்ச்சை நீண்ட நாட்களாக நீடித்தது. இதே விவகாரம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹைட்ரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ‘என் கன்வென்ஷன்’ இடிக்கப்பட்ட காட்சி அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி கடிதம் தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள்-கட்டிடங்கள் துறை அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார். "தம்மிடிகுண்டா குளம் எஃப்.டி.எல் மற்றும் பஃபர் மண்டலத்திற்குள் ‘என் கன்வென்ஷன்’ மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டது. இந்த கட்டமைப்பு முழு நீர்த்தேக்க மட்டத்தின் கீழ் வருகிறது. குளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது." என்று அவர் கூறியிருந்தார். அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி தன் கடிதத்தில் குளம் மணலால் மூடப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி எஃப்டிஎல் வரைபடம் மற்றும் கூகுள் எர்த் வரைபடத்தை ஹைட்ரா கமிஷனருக்கு அனுப்பினார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஹைட்ரா அதிகாரிகள் சனிக்கிழமை காலை கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ‘என் கன்வென்ஷன்’ மைய அலுவலகம் தவிர மற்ற அனைத்து கட்டடங்களும் இடிக்கப்பட்டன. எஃப்டிஎல் (FTL), இடையக மண்டலம் என்றால் என்ன? படக்குறிப்பு, தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏவி ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார் பொதுவாக ஒரு குளத்திற்கு தண்ணீர் சேமிக்கப்படும் பகுதி அல்லது தண்ணீர் பரவலாக நிற்கும் பகுதி `முழு நீர்த்தேக்க மட்டம்’ (Full Tank Level) எனப்படும். அதே போன்று குளத்தின் அளவைப் பொறுத்து சில மீட்டர்களுக்கு ஒரு இடையக மண்டலம் (buffer zone) அமைந்திருக்கும் . ஹைதராபாத் நகரத்தில் உள்ள சில குளங்களின் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலங்களில் பட்டா நிலங்களும் இருக்கும். தம்மிடிகுண்டா குளம் அருகே சில பட்டா நிலங்கள் உள்ளன. ‘என் கன்வென்ஷன்’ மையமும் அத்தகைய நிலத்தில் தான் அமைந்திருந்தது. இருப்பினும், குத்தகைக்கு விடப்பட்ட நிலமாக இருந்தாலும், நீர் மற்றும் வடிகால் துறை விதிகளின்படி, எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தில் நிரந்தர கட்டமைப்புகளை கட்டக் கூடாது. குளம் இருக்கும் பகுதியில், தனியார் அல்லது பட்டா நிலமாக இருந்தாலும், விவசாயம் அல்லது நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. எந்த ஒரு கட்டமைப்பையும் நிரந்தரமாக அங்கு எழுப்பக் கூடாது. எவ்வாறாயினும், தம்மிடிகுண்டா குளம் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் `என்’ கன்வென்ஷன் என்ற பெயரில் நிரந்தர கட்டுமானங்களை உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஹைட்ரா தற்போது இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த கால சர்ச்சைகள் ‘என் கன்வென்ஷன்’ மையம் தொடர்பான தகராறு பத்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2014-ல் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குருகுல அறக்கட்டளை நிலங்களில் ஐயப்ப சொசைட்டி கட்டப்பட்டதாகக் கூறி அங்குள்ள சில கட்டிடங்களை அரசு இடித்தது. அதே நேரத்தில், "ஏரியின் முழு நீர்த்தேக்க பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ மையத்தின் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றும் புகார்கள் வந்தன. அதே ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தம்மிடிகுண்டா குளம் சுற்றுவட்டாரத்தில் எச்.எம்.டி.ஏ., நீர் வடிகால் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ‘என் கன்வென்ஷன்’ மையத்தின் சில கட்டமைப்புகள் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் கீழ் வரும் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர். இது தொடர்பாக அப்போது எல்லைகள் முடிவு செய்யப்பட்டன. எச்எம்டிஏ நடத்திய சர்வே நடவடிக்கை மீது ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அதன் பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹைட்ரா கமிஷனர் ரங்கநாத் கருத்து ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத் தம்மிடிகுண்டாவில் நடந்த இடிப்பு பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தம்மிடிகுண்டா எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் எல்லைகளுக்குள் ‘என் கன்வென்ஷன்’ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, அவற்றுக்கு அனுமதி இல்லை, என்றார். 2014 இல், எச்.எம்.டி.ஏ தம்மிடிகுண்டா குளம் தொடர்பாக எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தை அடையாளம் காணும் பூர்வாங்க அறிவிப்பை வெளியிட்டது. இறுதி அறிவிப்பு 2016ல் வெளியிடப்பட்டது. "2014 இல் முதற்கட்ட அறிவிப்பு வழங்கப்பட்ட பிறகு, `என்’ கன்வென்ஷன் மைய நிர்வாகம் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியது. எஃப்டிஎல் நிர்ணயம் என்பது சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, மீண்டும் ஒருமுறை அந்த ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகத்தின் முன்னிலையில் குளத்தின் முழு நீர்த்தேக்க மட்டப் பகுதி அளவீடு நடத்தப்பட்டது. அந்த நிர்வாகத்திடம் ஆய்வு அறிக்கையும் கொடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், `என்’ கன்வென்ஷன் மையம் இந்த ஆய்வு அறிக்கை மீது மியாபூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்கும் தடை ஆணை (ஸ்டே ஆர்டர்) கொடுக்கப்படவில்லை" என்றார் ரங்கநாத். "‘என் கன்வென்ஷன்’ நிர்வாகம் குளத்தின் எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை மேற்கொள்வதன் மூலமும் அரசு சட்டத்திட்டங்களை மீறப்பட்டுள்ளன." என்றார். "எஃப்டிஎல்லின் கீழ் 1.12 ஏக்கரிலும், இடையக மண்டலத்தில் 2.18 ஏக்கரிலும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு, கட்டிட ஒழுங்குமுறை திட்டம்-பிஆர்எஸ் கீழ் `என்’ கன்வென்ஷன் நிர்வாகம் விண்ணப்பித்தது, ஆனால் அதிகாரிகள் அதை நிராகரித்தனர்," என்று ரங்கநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,UGC நாகார்ஜுனா என்ன சொன்னார்? "‘என் கன்வென்ஷன்’ மையத்தை இடிப்பது சட்டவிரோதமானது. இது வருத்தமளிக்கிறது." என்று திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தடை உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு மாறாக,N-Convention தொடர்பான கட்டுமானங்களை இடிப்பது வேதனை அளிக்கிறது. இது ஒரு பட்டா நிலம். குளத்தின் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம். இடிப்பதற்கு முன் வழங்கப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி கட்டிடத்தை இடித்துள்ளனர். இது சட்டத்திற்கு எதிரானது" என்று நாகார்ஜுனா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு முன்னதாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது இப்படி செய்வது முறையல்ல. சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், நான் அதை ஏற்றிருப்பேன்”என்று நாகார்ஜுனா ட்வீட் செய்துள்ளார். இடிக்கும் பணிகளுக்கு தடை ஆணை ஒருபுறம், ‘என் கன்வென்ஷன்’ மையத்தில் கட்டடம் இடிக்கப்பட்டு வந்த நிலையில் மறுபுறம், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜுனா சார்பில் ஹவுஸ் மோஷன் (house motion petition) மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி வினோத்குமார் அமர்வு, இடிக்கும் பணிகளை நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், இந்த உத்தரவுகள் வருவதற்குள் `என்’ கன்வென்ஷன் மையத்தில் இருந்த கட்டுமானங்கள் ஹைட்ரா அதிகாரிகளால் இடிக்கப்பட்டுவிட்டன. தம்மிடிகுண்டா கட்டடங்கள் இடிப்பு ஹைட்ரா அதிகாரிகள் தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள என் மாநாட்டு மையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வேறு சில கட்டுமானங்களையும் இடித்துத் தள்ளினார்கள். அந்த பகுதியில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. வேறு சில தனியார் கட்டடங்களும் இருந்தன. அவை அத்தனையும் இடிக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன? `என்’ கன்வென்ஷன் மையத்தை இடித்தது குறித்து தெலங்கானா துணை முதல்வர் பாட்டி விக்ரமார்கா செய்தியாளர்களிடம் பேசினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை என்றும், குளங்களை பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார். “அவை முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டன என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அரசு செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் நோட்டீஸ் கொடுத்து வருகிறார்கள். குளங்களில் நேரடியாக கட்டடங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார். "2014ஆம் ஆண்டுக்கு முன் எத்தனை குளங்கள் இருந்தன, 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி மூலம் வரைபடத்தை எடுத்து வருகிறோம், அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்" என்றார். மறுபுறம், "குளங்களை பாதுகாக்க அரசு ஹைட்ரா முகமை அமைத்துள்ளது என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கப் பட வேண்டும். அரசு நேர்மையாக செயல்படுகிறது எனில் குளங்களின் பாதுகாப்பு மண்டலங்களில் முந்தைய கணக்கெடுப்பின்படி ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்தால் இடித்து தள்ளப்பட வேண்டும்' என்றார் ரகுநந்தன ராவ். https://www.bbc.com/tamil/articles/clyn9j59z3jo
  27. ஜேர்மன்காரரின் காலை, மதியம், மாலை நேர உணவு நேரத்தில்... பன்றி இறைச்சி முக்கிய இடத்தை பிடிக்கும். 🙂 முரண்நகை என்னவென்றால்... கோவம் வந்தாலும், பன்றியையும், நாயையும் சேர்த்து Schweinehund என்று திட்டுவார்கள். 😂 ஆனால், அவர்கள் மிக விரும்பும் விலங்குகளில்.. பன்றியும், நாயும் முதல் இடத்தில் இருக்கும். 🤣 பிற் குறிப்பு: திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே... தங்களுக்கு இந்தப் படங்களைப் பார்க்க சங்கடமாக இருந்தால்... தயவு செய்து சொல்லுங்கள், உடனே நீக்கி விடுகின்றேன். 🙂
  28. நல்லதொரு ஆழமான பார்வை நன்றி கட்டுரைக்கு.
  29. இந்த கூற்றை நிலாந்தனும் விளங்கியிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.
  30. சமுதாய மருத்துவ நிபுணர் Dr. வல்லிபுரநாதன் அழகாகச் சொல்லி இருக்கின்றார். வைத்திய சிகிச்சையில் தவறு நடந்தால் கேட்கப்படல் வேண்டும்.கண்டிக்கப்பட வேண்டும். இனி அதுபோல் தவறுகள் நிகழாத நிலை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கே எங்களிடம், பாதிக்கப்பட்டவர், அவர் உறவுகள் பற்றிய அக்கறைகள் பின் தள்ளப்பட்டு விடுகிறது. பிரச்சினையை மட்டும் தூக்கிப் பிடித்து ஊதிப் பெரிதாக்கி சமூகமாக நாங்கள் செய்ய வேண்டிய மற்றவைகளை மறந்து போகிறோம். உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679 தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது.
  31. திரு. சுப.சோமசுந்தரம் அவர்களே! ஒரு சிறு காளாக்காயைப் போடும் அளவிற்குக் கூட இல்லாத என் அறிவுச் சிறு பையில், பெரும் பலாப்பழத்தையே நீங்கள் போடத்தந்தால் நான் என்செய்வேன்.??😩
  32. நாங்கள் ஒரு கல்லை வைத்து இதுதான் ஜனநாயக கட்சி என்று சொன்னால், அதற்கும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போம் அது கமலாக்காவாய் இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன 🤣🤣🤣
  33. அருமையான கட்டுரை 👍 சுப.சோமசுந்தரம் அவர்களே. நீங்கள் கணிதப் பேராசிரியராக இருந்து கொண்டு, தமிழிலும் சிறப்பான ஆளுமை உங்களிடம் உள்ளதை எண்ணி வியந்தேன். 🙂
  34. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான் பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு பெண் : ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு ஆண் : பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு ......! --- கருப்பான கையாலே என்ன புடிச்சான் ---
  35. 25 AUG, 2024 | 06:09 PM சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயம் இப்போது படிப்படியாக சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்கள் பலவிதமாக சிந்தித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் பலவிதமான கேள்விகளையும் எங்களை நோக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த காலத்தில் 8 ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இருக்கின்றோம். அது விருப்பமாக இருக்கலாம், விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், முதல் தடவையாக தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற சிந்தனையை 83 சிவில் சமூக கட்டமைப்புகள் கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை களத்தில் இறக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் இதனோடு தமிழ் தேசியக் கட்சிகள் ஏழு கட்சிகள் பயணிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். இதேவேளை கட்சி அரசியலுக்கு அப்பால் இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி இன்னும் முடிவு சொல்லவில்லை. என்றாலும் யாரையும் எதிர்க்கின்ற தன்மையை அவர்கள் ஏற்படுத்தி கொள்ளவில்லை. யாரை ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக முடிவெடுக்கவில்லையே தவிர யாரையும் எதிர்க்கச் சொல்லி அவர்கள் முடிவு சொல்லவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன என்றார். https://www.virakesari.lk/article/191956
  36. மொத்தத்தில் தமிழ் தேசிய அரசில்வாதிகளின் பைத்தியகார செயல்களை, தமிழர்களை குண்டுசட்டிக்குள் வைத்திருக்கும் முயற்சியை விளக்கும் கருத்து படங்கள் 👍
  37. பாலிஸ் பூட் பாலிஸ் . ........! 😍
  38. மோடி ரசியாவில் நின்றபோது யுக்ரெனுக்காக கெஞ்ச போய் இருக்கிறார் என்றார்கள் இன்று ரசியாவுக்காக கெஞ்ச போயிருக்கிறாரா? அப்படியானால் ரசியா....????
  39. நீங்கள் இப்படித் தான் தொப்பியை தலையில் போட்டு கொண்டு அலைகிறீர்கள் பாவம் யார் பெத்த புள்ளையோ? 😷
  40. இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்குப் பிடித்த செய்தி இதுதான். 😂 இந்தப் படங்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது. 🤣 பொன்ஸ்சுக்கு.... இந்த இரண்டு கையையும் தூக்குற வியாதி, கனகாலமாக இருக்குது போலை. 😂 🤣
  41. சுவையான நூல்கோல் பொரியல் . .........! 👍 காரச்சட்னி .........! 👍
  42. இரவு முடிந்து விடும் . .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.