Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    2166
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15791
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/02/24 in all areas

  1. வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம் தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க. 'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை. திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை. ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய முந்தைய புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ? "படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ? சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை. மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது. https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk
  2. தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை. இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை. அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை. அதை விடுத்து சுய நலத்துக்காக வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து காட்டுவது எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும். அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை.
  3. சிறி கவனம், இவரின் இந்த வார்த்தை எனக்கு பயமாக இருக்கு, பின்னுக்கு கஷ்டபடுவியல்
  4. இந்த தளபதியினை ஒரு மாதம் கூட தனது பதவியினை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை, முப்படைகளின் தலமையாக உள்ள செலன்ஸ்கி புதிய தொழில்னுட்பங்களும் பயிற்சிகளும் போரில் மாற்றம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார், உக்கிரேன் படையினருக்கு நேட்டோவின் அதி சிறந்த இராணுவ தளபாடங்களுக்கும் இராணுவ பயிற்சிகளும் வழங்கி போரினை முன்னெடுத்தாலும் போரில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை, அதற்கான காரணக்களை உதவி வழ்ங்கும் நாடுகளுக்கு கூற வேன்டிய நிலையில் இவ்வாறான பலிக்கடாக்கள் தேவைப்படுகிறது. பல தளபதிகளை வேலை நீக்கம் செய்து தவறு தளபதிகளின் மேல் என்பதாக காட்ட முயற்சிப்பது ஒரு புறம் இராணுவ முக்கியத்துவம் அற்ற சாகச இராணுவ நடவடிக்கைகளை ஒரு சினிமா சாசகசம் போல செய்து மென்மேலும் இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது என ஒரு குழப்பகரமான் சூழ்நிலைக்குள் உக்கிரேனிய படையினரை வைத்துள்ளார், ஒவ்வொரு மேற்கு இராணுவ தளபாடம் வரும் போது அது தொடர்பான மிகைப்படுத்தலுடன் போரில் குதிக்கும் உக்கிரேனிய படைகளை சோவியத் கால இராணுவ சாதனங்களை வைத்தே இரஸ்ஸியா, அவற்றினை வெற்றி கொள்வதற்கு T72 இரக டாங்கிகளின் சாதனைகளை உதாரணமாக கூறலாம். புதிய தளபாடங்களும் பயிற்சிகளும் ஆரம்பத்தில் ஊடக கவனம் பெற்றாலும் காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு காரணம் இரஸ்சியாவின் தகவமைப்பு திறமைதான் காரணம். போரில் இந்த தளபாடங்கள் உக்கிரேனிய துருப்பினர்களை குழப்பத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள். இறந்துபோன உக்கிரேனிய F-16 விமானி ஒரு அனுபவமிக்க விமானி என கூறுகிறார்கள், அவர் F-16 பயிற்சி பெற்றவர், உக்கிரேன் கூறுவது போல விமானியின் தவறு என கூறி அந்த வீரரை அவமானப்படுத்தியுள்ளார்கள், அதற்கான நொண்டிச்சாட்டாக இரு வேறுபட்ட கருவிகளின் அமைப்புகளுக்கு தகவமைக்க முடியாமை என ஒரு புறம் கூறினாலும் வானிலிருந்து வானிற்கு பாயும் ஏவுகணை தாக்குதலை வேறுபட்ட வேக இலக்குகளின் மீதான தாக்குதலை சரியாக கணிக்கமுடியாமையினாலேயே இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது, இவ்வாறான குற்றச்சாட்டு இதுதான முதல் தடவை அல்ல, இவரைப்போல ஒரு சிறந்த விமானியின் இறப்பிற்கும் இவ்வாறான குற்றச்சாட்டே முன்னரும் வைக்கப்பட்டிருந்தது, இது ஒரு உக்கிரேனிய வழமையான நொண்டிச்சாட்டாக உள்ளது போல இருக்கிறது. மறுவளமாக மேற்கு தன்னிடம் உள்ள அனைத்து சிறந்த அதி நவீன ஆயுதங்களையும் உக்கிரேனிற்கு வழங்கிவிட்டு அதற்கான பலனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது, இது மேற்கின் பொறுமையினை சோதிப்பதாக உள்ளது, மேற்கிற்கு நேரடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பல சிறந்த வீரர்களை அவர்கள் இறந்த பின்னரும் அவமானப்படுத்துவதும் தளபதிகளை மாற்றுவதும் தொடர்வதால் ஒரு கட்டத்தின் பின் மேற்கு பொறுமையிழந்து போரை முடிவிற்கு கொண்டு வர முனையலாம், ஆனால் கரீசு அம்மையார் (இவர்தான் வெல்வார் என நான் கணிக்கிறேன்) தொடர்ந்து உக்கிரேனிற்கான உதவி தொடரும் என கூறியுள்ளார். இந்த போரை மேற்கு நாடுகள் அனுசரிப்பதற்கு காரணம் அமெரிக்க நிர்பந்தம், இந்த போரில் யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் அனுப்புகின்ற ஆயுதங்கள் ஒரு நாள் தம் தாய் நாட்டிற்கே திரும்ப வரும்.
  5. https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/ வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார். 3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
  6. சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள். மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறோம்.
  7. சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!
  8. இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂 எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣
  9. உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள். “ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும். கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம். இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை . எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்; “ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே” “ வேணாம் மாமி” “ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்” “அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ….. “அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும். உடன மகனுக்கு கோல்; “என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க; மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை. வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர். கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம். மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம். ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது. அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம். அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  10. இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும். ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination). எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.
  11. நீங்க குறை கூறாத ஆட்கலே உலகத்தில் கிடையாது போல் உள்ளது .
  12. நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே. அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல.
  13. பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும். இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன் தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது. என்னைப்பொருத்தவரை இப்படி மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.
  14. கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலும் எடுக்காமல் விடமாட்டானுக. 😀
  15. சொல்லி கொண்டு இருக்காமல் முதலில் துரத்தி விட்டு அறிக்கை விடுங்கள் .
  16. Canada உங்களை அன்புடன் வரவேற்கிறது. (நான் பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)
  17. நத்தனியாகுவுக்கு எதிராக ரெல் அவிவில் ஊர்வலம்
  18. Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 02:36 PM தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் தமிழரசுக் கட்சி தமிழருடைய உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயல்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார், பல உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம். தமிழரசு கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன் ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன? தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ, அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை, எமது கட்சித் தலைவர்களே போதும். தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து, எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும் நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும். வாக்குப் போடுவது மக்களாகிய நாங்கள். ஆனால் இவர்கள் எப்போது மக்களை சந்தித்து, மக்களது கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே இவர்கள் மக்களது பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்? வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை காட்டுகின்றது. எனவே மக்களே நீங்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பாதீர்கள். நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம். தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும். அப்பொழுது இந்த அரசியல் காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள். எனவேதான் நாங்கள் கூறுகின்றோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192636
  19. தொடர் "ஆனந்த விகடனில் " இருக்கிறது . ......!
  20. நன்றி ஐயா உங்களின் நேர்மையான பகிர்வுக்கு . ........! மாறி செல்வராஜ் அவர்கள் "சம்படி ஆட்டம் " என்னும் தலைப்பில் தன் சுயசரிதமாக தொடர் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறார் . ........நான் அதை தொடற்சியாக வாசித்துக் கொண்டு வருகின்றேன் . ........ஆயினும் அத் தொடரில் உள்ள பல சுவையான சம்பவங்கள் படத்தில் இல்லை....ஒருவேளை திரைக்கதையின் சுருக்கத்திற்காக அவைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .......சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை .........முடிந்தால் "சம்படி ஆட்டம்" படித்துப் பாருங்கள் . ........ நன்றாக இருக்கும் .......!
  21. வயதான காலத்தில் அங்கே போய் வாழலாம்” என்று பார்த்தால் நீங்கள் இப்படி சொல்லி எல்லாவற்றையும் குழப்பி போட்டீர்கள் 🙏🙏🤣
  22. சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு.
  23. குறித்த துறவி ஒரு மன நோயாளியாக கூட இருக்கலாம்.மிகுதியாக இருக்கும் காலத்திலாவது அந்தப் பெண் சுதந்திரமாக வாழ்ந்து விட்டு போகட்டும்.😏
  24. No no no no,......No NO ❌ தாங்கள் போனால் நான் யாருடன் சண்டை பிடிப்பது?
  25. உலகில் துறவிகளால் தான் ஆபத்து 😄
  26. இப்படி ஒருவர் புளோறிடாவில் (என நினைக்கிறேன்) சில காலங்களுக்கு முன் பிடிபட்டவர். இதுவும் ஒரு மன நோய் தான்.
  27. அவனையும் தனிமைச் சிறையில் தள்ளிவிட வேண்டும். Mirror response.
  28. தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா?? முஸ்லிம்களும் ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.
  29. சுமந்திரனே.... செல்லாக் காசு. அவரே... திருமதி ரவிராஜின் வெற்றியை தட்டிப் பறித்து பாராளுமன்றம் போனவர். இதுக்குள்ளை... அவர் சஜித்துக்கு போடச் சொல்லி சிபாரிசு பண்ணுகிறாராம். 😂 இவங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. 🤣
  30. ரணிலின்… 60 கோடியை அமுக்கி விட்டார்கள். தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂
  31. யாழ் நல்லூர் முருகன் தேர் இன்று sep1,2024
  32. மனசிருக்கணும் மனசிருக்கணும் . ........நல்ல படிப்பினையான பாடல் . .........! 😍
  33. உண்மை ....இனக்குழுக்கள் சுயநிர்னய உரிமையை பற்றி சிந்திக்காமல் இருக்க ..... சிறிலங்கா என்ற சிந்தனையுடன் ஆட்சி செய்தவர்கள் செயல் பட்டிருக்க வேணும் ஆனால் தவறிவிட்டார்கள் ,அடுத்த தலைமுறையினரும் தவறிகொண்டே செல்கின்றனர்... சிங்களவர்,தமிழர்கள் ,முஸ்லீம்கள் ,கிறிஸ்தவர்கள் என அடையாள அரசியலை செய்கின்றனர் அவர்களுக்கு வெளிநாடுகள் பக்க துணையாக நிற்கின்றன தங்களது மதம்.அரசியல் செல்வாக்கை நாட்டில் புகுத்த...
  34. நீயா நானா பகுதியில் வாழைக்குலைக்கு பக்கத்திலிருந்தே வாழை திரைப்படம் பற்றி,,மாரி செல்வராஜ்
  35. தேசத்துரோகி வித்தகன் தான் அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் 09/10/2004 அன்று கப்டன் யூட் எ பார்த்தீசனை கைச்சுடுகலனால் சுட்டுக்கொன்றவன் (ஈழநாதம் 12/10/2004)
  36. தேசத்துரோகி கருணாவின் குழுவில் முக்கியமான தேச வஞ்சகர்கள் சரணடைந்து சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2004): இனிதன்/ ஜிம்கலி தாத்தா, ராபேட்/ரொபேட், துரை, விசு, கடாபி மாஸ்ரர், திருமால், நிசாம், சுதா, நிஷா, அக்கினோ, ராசாத்தி மற்றும் ஈஸ்வரநாதன் சரணடைந்து சிறைப்படுத்தப்பட்டு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2009): சப்தகி/ நிலாவினி/ சாளி, தீந்தமிழ், பிரேமினி, லாவண்யா சரணடைந்து சாவொறுப்பு பெற்று விடுவிக்கப்பட்ட தேச வஞ்சகர்: சயந்தினி தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (கொழும்பில் வைத்து): குகனேசன், காஸ்ட்ரோ, கேசவன், ரூபன், அட்பரன், விக்கி, விமல்காந்த் தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (காட்டுக்குள் வைத்து): ரெஜி (லெப். கேணல்) , துமிலன் (லெப். கேணல்), எழில் தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: குணராசா ராஜேந்திரன், ரவிக்குமார் அ ஜூட் (ஈழநாதம் 12/10/2004) தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: தவராசா கணபதிமூர்த்தி, கணபதிப்பிள்ளை ரவி, நல்லையா சிவராசா, கணபதிப்பிள்ளை சின்னராசா, ராஜன் அ ராஜா (ஈழநாதம் 12/10/2004) தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) இயற்பெயர்: ஐயாத்துரை சதீஸ் (மங்களன் மாஸ்டர்) மற்றும் இவனின் மெய்க்காவலரான சின்னமுத்து ரவீந்திரராசா (மாறன்), கந்தசாமி தேவராசா (யாழ் களம் 2: 03-20-2005) தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) : 2 பேர் அழிக்கப்பட்டனர். எனினும் பெயர் விரிப்பு தெரியவில்லை எஞ்சிய தேச வஞ்சகர்கள்: ஜெயம், மார்க்கன் (சுடப்பட்டு தப்பினான்), சின்னத்தம்பி, இனியபாரதி (சுடப்பட்டு தப்பினான்), ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா, பிரதீபன்/ பிரதீப் மாஸ்ரர், பிள்ளையான், சிந்துஜன், அஜித் (சுமன்), மலரவன், மதுசன் (சித்தா), மங்களன்/ மங்களன் மாஸ்ரர், முகிலன், சூட்டிதரன், சுதன், ராஜசீலன், வித்தகன்
  37. எதுவுமே.. பயனற்றது அல்ல. 🤣
  38. தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).
  39. "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..
  40. கடினமான கற்களால் கட்டப்பட்ட மூன்று மீற்றர் நீளமும் மூன்று மீற்றர் அகலமுமான சிறிய அறை. உள்ளே இருந்த சிறிய யன்னலும் செங்கற்களால் கட்டப் பட்டிருந்தது. இரும்பினால் செய்யப்பட்ட கதவு. அந்தக் கதவைத் திறக்க முடியாதவிதமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. அந்த அறையில் மின்சாரமும் இல்லை, தண்ணீரும் இல்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஆண் (35) ஒருவர், 30 வயதுடைய இளம் பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளாக, இந்த சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஜேர்மன் எல்லையில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் மேற்கு போலந்தில் உள்ள Głogów (Glogau) அருகே 200 பேர்கள் வாழும் சிறிய கிராமம்தான் Gaika. இந்தக் கிராமத்தின் முடிவில் ஒரு பழைய பண்ணை தோட்டம் இருக்கிறது. இந்தப் பண்ணைத் தோட்டத்தில்தான், கிடைத்த எந்த வேலையையும் செய்யக்கூடிய தொழிலாளியான மேட்யூஸ், தனது வயதான நோய்வாய்ப்பட்ட பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தத் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில் பயங்கரமான சூழ்நிலையில் ஒரு பெண் இருந்தது, அவனது பெற்றொருக்கும் தெரியவில்லை என்கிறார்கள். Gaika கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தவள்தான் மால்கோர்ஸற்றா (Małgorzata). 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்லைன் மூலமாக மேட்யூஸ்வைச் சந்தித்தபோது அவளுக்கு வயது 25. இருவரும் சில மாதங்கள் தொடர்பில் இருந்தார்கள். ஒருநாள் மால்கோர்ஸற்றாவை அந்த அறையில் வைத்து மேட்யூஸ் பூட்டிவிட்டான். அந்த நாள் எப்போது என்பது அவளுக்கு நினைவில் இல்லை. கடைசிவரை தான் எங்கே சிறைப்பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் கர்ப்பமாகி பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டிய தருணத்தில் மருத்துவ மனைக்கு அவளைக் கூட்டிச் சென்ற போதும் பல அச்சுறுத்ததல்களை விடுத்தே அவளை மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறான். யாருடனும் கதைப்பதற்கு அவளுக்கு மேட்யூஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. பிறந்த குழந்தையையும் வைத்தியசாலையில் தத்துக் கொடுத்துவிட்டு அவளை அழைத்து வந்துவிட்டான். “பல்வேறு பொருள்களைக் கொண்டு மால்கோர்ஸற்றாவின் முகத்திலும் உடலிலும் மேட்யூஸ் தாக்கியிருக்கிறார். அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவளை பட்டினி போட்டிருக்கிறார், சித்திரவதைகள் செய்து வன் புணர்வு செய்திருக்கிறார். மிகவும் மோசமாக பலமைறை தாக்கப்பட்டிருக்கிறாள். கடந்த வாரம் மேட்யூஸ் தாக்கியதில் மால்கோர்ஸற்றா கைகள் மற்றும் கால்கள் உடைந்த நிலையில் அவள் இறந்துவிடுவாளோ என்ற பயத்தில் நோவா சோலில்( Nowa Sól )உள்ள மருத்துவமனைக்கு 27ந் திகதி மேட்யூஸ் அழைத்துச் சென்றிருக்கிறார்” என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். நோவா சொல் மருத்துவமனையில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மருத்துவத் தாதிக்கு தனது நிலையை மால்கோர்ஸற்றா சொல்ல, கடந்த புதன் கிழமை (28.08.2024) மேட்யூஸ் கைது செய்யப்பட்டான். “எனது மகன் ஏறக்குறைய ஒரு துறவி போலவே வாழ்ந்தவன். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் இப்படி ஒரு சம்பவத்தைச் செய்திருக்க மாட்டான். அத்தோடு எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கட்டிடத்தில் ஒரு பெண் அடைக்கப் பட்டிருந்ததையோ, சித்திரவதை செய்யப்பட்டதையோ நாங்கள் பார்க்கவில்லை” என மேட்யூஸ்வின் தாய் பத்திரிகைகள் கேள்வி கேட்ட போது சொல்லியிருக்கிறார். இப்படியான குற்றச் செயலுக்கு 25 வருட சிறைத்தண்டணை கிடைக்கலாம் என அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார். போலந்துப் பத்திரிகையில் வந்த செய்தி இந்தப் பக்கத்தில் இருக்கிறது. மொழி தெரியாவிட்டாலும் படங்களைப் பார்க்கலாம். https://myglogow.pl/pl/11_dzieje-sie/160049_zwyrodnialec-wiezil-kobiete-cztery-lata-byla-torturowana-i-gwalcona.html
  41. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; போலியோ முகாமிற்கு முன்னால் 49 பேர் பலி காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர். தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. https://thinakkural.lk/article/308836
  42. துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........! 😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.