Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    14
    Points
    15791
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3314
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/06/24 in all areas

  1. இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில் இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும். வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை. ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள். இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. இங்கு நடப்பதும் victim blaming தான்.
  2. சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர். அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
  3. அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா? எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
  4. பீன்ஸ் மோர் கூட்டு .........! 👍
  5. அப்பிடியில்லை விசுகர், நாங்கள் வேண்டாப்பெண்டாட்டி என்றாலும் அணைத்துக்கொண்டுதான் படுப்பம், மேலேயுள்ளவன் பார்த்துக்கொள்வானேன்றுவிட்டு நிரைக்கு பெத்துப்போடுவம்!!
  6. உரிமைகளை கேட்பது முட்டாள்தனம் அல்ல, அது அவரவர் உரிமை, ஆனால் அந்த உரிமையினை வழங்கமாட்டேன் என கூறி தமது உரிமைகளை இழப்பதுதான் முட்டாள்தனம், அதனைத்தான் சிங்களம் செய்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். நான் நம்புகிறேன் ஒரு காலத்தில் தமிழர்களின் காலில் விழுந்து உரிமைகளைத்தருகிறோம் என கெஞ்சுவார்கள் ஆனால் அப்பொது அவர்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் (அவர்களே உரிமை இல்லாமல் பிரித்தானியரின் காலனித்துவ காலத்தில் இருந்த நிலையில் இருப்பார்கள்).
  7. பொதுவேட்பாளர் வந்ததால்த் தான் கட்சிகளுக்குள் பிளவு என்று ஒரு கதையைக்கட்டி பொதுக்கட்டமைப்பின் மேல் பழியைப் போட முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கட்சிகள் எல்லாமே சிதறுண்டு போய் இருக்கிறது. இதே சந்தர்ப்பத்தை வைத்து பொதுக்கட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து இளையவர்களையும் புதியவர்களையும் உள்வாங்கி அடுத்தடுத்த தேர்தல்களில் களமிறங்க வேண்டும்.
  8. தற்போதும் பெரும்பான்மை இனம் போரினால் தமிழர்களை வென்று விட்டோம் இனி தீர்வு கொடுக்கத்தேவையில்லை எனும் மனப்பான்மையில் உள்ளார்கள் என்பதனை உங்கள் கருத்தின் மூலம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள், இலனக்யின் பொருளாதார நிலை தற்போது பிரச்சினை இல்லை எனும் எண்ணப்பாடே பெரும்பான்மையான இலங்கையர்களிடையே நிலவுகிறது, ஆனால் அது உண்மையல்ல. அண்மையில் எங்கோ வாசித்தாகநினைவுள்லது இந்தியா இலங்கையினை தரைப்பாதையினூடகவோ அல்லது வேறு வகையிலோ (சரியாகநினைவில்லை) இதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினை 3 விகிதமாக அதிகரிக்க முடியுமென இந்தியா அறிவித்திருந்தது. இது இலங்கைக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் இவ்வாறு இந்தியா இலங்கையில் எப்போதும் கரிசனையாக இருப்பது எதனால். இந்த தரைப்பாதை மட்டும் திறந்தால் இந்தியா இலங்கையினை காவு கொண்டுவிடும். இந்திய எல்லை நாடுகளான பாகிஸ்தான், சீனா(தரைப்பகுதி இணைப்பு கொண்ட) ஆகிய நாடுகளைத்தவிர்த்து மற்ற நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை உருவாக்கி விடுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது, இலங்கையில் இனி வரும் காலங்களில் முழுமையான தனது பிடியினை இந்தியா இறுக்கவுள்ளது. குரங்கு அப்பம் பிரித்தனை போல இந்தியா இனவாதம் கண்ணை மூடி நிக்கின்ற ஒரு நாட்டினை ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு ஆயுதம் வழ்ங்கி உள்நாட்டு போரை தீவிரப்படுத்தி பின்னர் அதனை அழித்து பெரும்பான்மையினரது இன வெறியினை இந்தியா காப்பாற்றி விட்டது என எண்ணத்தில் தற் போது படிப்படியாக தமது இறைமையினை இழக்கின்றனர். யார் ஆட்சி கட்டிலேறினாலும் முதலில் போய் எயமானனின் காலில் விழும் நிலைக்கு பேரினைவாதம் உள்ளது, இறுதியில் எனக்கு மூக்குப்போனாலும் எதிர்க்கு சகுனப்பிழையாக வேணும் (தமிழருக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்ற சந்தோசம்) எனும் நிலையில் தமிழர்களின் நிலைக்கு தமது உரிமைகளை இந்தியாவிடம் அடகு வைக்கும் நிலைக்கு வரும் நிலை வந்து கொண்டிருக்கிறது. சகல சமூகங்களும் சம அந்தஸ்துடன் வாழ்ந்தால் நாடு அபிவிருத்தி பாதையில் பயணிக்கமுடியும் அதை விடுத்து தொடர்ந்தும் பிற்போக்குவாத சிந்தனைகளோடு மற்ற சமூகங்களை அடக்கமுற்பட்டால் வேறு யாருக்கல்லாமோ அடிமையாகலாம் ( நாடுகள் மட்டுமல்ல நிதி நிறுவனங்களிடமும்). இந்தியா பல் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவது பின்னர் அதற்கான பாதுகாப்பு என இலங்கையில் நுழைவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என கருதுகிறேன். இதில் இந்தியா உடன் சீனா ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டால் நாடு இரண்டுபட்டுவிடும்.
  9. ஒருபோதும் முடியாது 2015 இருந்து 2019 வரை இணந்து தான் இருந்தார்கள் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை டக்ளஸ் தேவானந்தா அன்று தொடக்கம் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணந்து இருக்கிறார் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை அவர் வாழும் வரை இணந்தே இருப்பார் ஆனால் தீர்வை உருவாக்க போவதில்லை இலங்கை அரசாங்கம்கள் எதுவானாலும் வடக்கு கிழக்கு இல் தேர்தல் வைக்கமால். ஒரு பொம்மை சுயாட்சியை நியமிக்கலாம். அவர்களின் சொல்லைஎல்லாம் கேட்கும் டக்ளஸ் கருணா. . ... போன்றோருக்கு மாகாண அமைச்சர் பதவிகளை கொடுத்து நியமித்துவிட்டு பொம்மை சுயாட்சி நிறுவ முடியும் அவர்கள் விரும்பவில்லை .. . அவர்கள் செய்வது… எல்லாம் பேச்சுவார்த்தைக்கு முதலே பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பது சர்வதேசத்தை குழப்பியடிப்பது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் தலைவர்களை குழப்பியடிப்பது தமிழ் மக்களை குழப்பியடிப்பது இலங்கை பாராளுமன்றத்தில் தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிறுத்த முடிவதில்லை முடியாது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையற்றது ஏராளன். குறிப்பிட்டது போல் இது சிங்கள நாடு என்று நினைப்பவர்கள் எப்படி தமிழருக்கு சுயாட்சி தருவார்கள்??? தமிழர்கள்,. .. தடுத்தார்கள் எதிர்த்தார்கள் முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை பிழை விட்டு விட்டார்கள் ஆதரவு வழங்கவில்லை சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குமாயின் தமிழர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்று சொல்லி கொண்டு வாழ்வார்கள். தீர்வு கிடைக்கமைக்கு தமிழன் தான் காரணம் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை தீர்வு கிடையாது 🙏
  10. திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது. நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣
  11. 06 SEP, 2024 | 05:35 PM ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஆயுர்வேதத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய, ஆயுர்வேத, சித்த, யூனானி, ஹோமியோபதி வைத்தியர்கள், உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறையினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். உள்நாட்டு மருத்துவத்துறையின் முன்னேற்றத்துக்கான யோசனையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "2022ஆம் ஆண்டு சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி தற்போது எழுந்து நடக்கிறார். குணமடைந்த நபரை மீண்டும் நோளாளியாக்குவதற்கு தகுதியற்ற வைத்தியர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் பிரயோசனமற்ற மருந்தை அவர் குடித்தால், அந்த நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது. அதனால் அந்த மருந்தை குடிப்பதா இல்லையா என்பதை குணமடைந்த நபரே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் நோயாளியை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்தே எமது நோக்கமாகும். ஒரு நாட்டு இப்படி ஒரு நோய் வருவது நல்லதல்ல. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்தும் சில வைத்தியர்களை வரவழைக்க வேண்டியிருந்தது. வொஷிங்டன், டோக்கியோ உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தோம். இப்போது புதிய வைத்தியர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் தரப்போவதாகச் சொல்லும் மருந்துகளை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது. அது குறித்து முழுநாடும் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டதோடு அவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசிகிறோம். உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை. உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அதற்கான மதிப்பும் கிடைத்தது. இந்த சுகாதார முறமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் 1000,2000 ஆண்டுகள் பரலாக காணப்பட்டது. இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை. எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க ஆயுர்வேதத் திணைக்களம் மாத்திரம் போதாது. ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப, சுதேச வைத்தியத் முறையின் மறுசீரமைப்பு குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்து முன்னோக்கிக் கொண்டு செல்வோம். ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். இது இந்தியாவில் செயற்படுகிறது. அந்த முறையை நாமும் பின்பற்ற வேண்டும். நமது சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம். அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும். எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி: சுதேச வைத்தியத் துறையின் வளர்ச்சி மூலம் தேசியப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பல்வேறு சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை நன்றியுடன் நினைவுகூர விரும்புகின்றேன். அதன் மூலம் சுதேச வைத்தியத் துறையை ஏற்றுமதி வருமானம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். 300 மில்லியன் டொலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணியை ஈட்டும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமான மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் சுதேச வைத்தியத் துறையை வெட் வரி இன்றி பேணுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெறப்பட்ட வாய்ப்பைப் பாராட்ட வேண்டும். அத்துடன், பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளை இங்குள்ள அனைவர் சார்பாகவும் நினைவுகூறுகிறேன். சுதேச வைத்தியத் துறையின் மேம்பாட்டிற்காக நீங்கள் காட்டும் அக்கறையும், அதன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க சுதேச வைத்தியத்துறை ஆதரவளிக்கும்" என்றார். பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, சதேச மருந்து உற்பத்தியாளர்கள், கைத்தொழில்துறையினர், மருந்தக உரிமையாளர்கள், மருந்து சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய, யூனானி, சித்த மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட சுதேச வைத்தியத் துறையின் பிரதிநிதிகள், பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/193024
  12. சறம் கட்டிய நாலு பொடியள் என்ற மிதப்பில் இருந்த நேருவின் பேரன் கிழட்டு நரியிடம் மூடிய அறைக்களுக்குள் எதைப் பற்றி பேசினார்கள் என்ன ஒப்பந்தம் போட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது தான்.
  13. ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.
  14. தேனீ கொட்டினால் வாதம் வராதாம் அண்ணை.
  15. அண்ணை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாவிற்கு கொஞ்சம் கூட அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் மதிய உணவுப் பார்சல் 250 ரூபா, காலை, மாலை உணவிற்கு 250 ரூபா, சவர்க்காரம், பற்பசை, உடுப்புத் தோய்க்க சவர்க்காரத் தூள் 17000 - 18000 ரூபா வரை குறைந்த பட்சம் மாதம் தேவை. கைதடியில் மாகாண சபையால் நடத்தப்படும் இலவச முதியோர் காப்பகம் உள்ளது. அங்கு டிசம்பர் வரை பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதால் புதிதாக ஒருவரையும் சேர்க்கவில்லை என தந்தையார் கூறினார். எமது கிராமத்தில் திருமணஞ் செய்யாத நடமாடித் திரியக் கூடிய முதியவர் ஒருவர் இருக்கிறார். அவரை கிராமசேவகர் ஊடாக கைதடி முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்றபோது மேலுள்ள தகவல் கிடைத்தது.
  16. தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோர் மட்டுமல்ல, கூட்டமைப்பில் இருக்கும் எல்லா கட்சிகளும், ஒவ்வொரு முறையும் இந்திய தூதரை மட்டுமல்ல, வேறு நாட்டு தூதுவர்களை சந்திக்கும் போதும் 13 இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையாவது இலங்கை அரசு தமக்கு வழங்க்கச் சொல்லி தொடர்ந்து கேட்டு வருகின்றனர். 13 பிளஸ் பற்றியும் உரையாடுகின்றனர். கஜேந்திரனும் அவரது கட்சியும் மாத்திரமே அதற்கு அப்பால் சென்று தீர்வை கேட்கின்றனர் (ஆனால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார்கள்). மக்களுக்கு முன் மேடைப் பேச்சிலும், ஊடக சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளிலும் வீராவேசமாக கதைத்து விட்டு, ராஜதந்திர மட்டத்தில் கதைக்கும் போது நடைமுறைக்கு ஓரளவேனும் சாத்தியப்படக் கூடிய விடயங்களையே கோருகின்றனர். இந்த பொலிஸ், காணி அதிகாரங்கள் கூட வழங்க மறுக்கும் இலங்கை பெளத்த பேரினவாதம், ஒற்றையாட்சியை நீக்கி, தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த நிர்வாக அலகை, எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாத இன்றைய நிலையில் வாரி வழங்கும் என நினைப்பது கண்கள் இரண்டையும் திறந்து வைத்து இருந்து காணும் பகல் கனவு.
  17. தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. அவை இலாவிடடால் பூக்கள் காயாகி கனிந்து வர முடியாது. அதனால் தான் தேனீ க்கள் அவசியம் சிறீ தேனீக்களை கலைக்க வேண்டாம் . வருடத்தில் ஒரு இரு தடவைகள் தானே மரம் வெட்டுவீர்கள். கிட்ட போகாவிட்டால் குத்தாது . இருந்து விட்டு போகட்டுமே...அவைகளும் பசியாறட்டும்.😄
  18. விதி விலக்குகள் உண்டு. என்னுடன் படித்த இருவர், இருவரும் மருத்துவர்கள் முதியோர் காப்பகங்களை கொழும்பில் / தெற்கில் நடாத்தி வருகின்றனர். என் நண்பர்களின் வயதான தந்தைமார்கள் சிலர் அங்கு தான் இருக்கின்றனர். ஊரில் அவர்களது உறவினர்கள், தந்தைமார்களின் சகோதரங்கள் பலர் இருப்பினும், இக் காப்பகங்களில் தான் உள்ளனர். மிகவும் தரமான, சுத்தமான காப்பகங்கள் இவை. வயோதிபர்களை நன்றாக பராமரிக்கின்றனர். இங்குள்ள (கனடா) காப்பங்களை விட நன்றாக உள்ளன. அண்மையில் மாமியார் மருமகள் பிரச்சனைகளால் என் நண்பர் ஒருவரின் அம்மாவை இங்கிருந்து அங்கு தான் கொண்டு போய் விடும் நிலை ஏற்பட்டது. தாயார் பம்பர்ஸ் கட்ட மறுத்து வீடு முழுக்க மலசலம் கழிப்பார். நண்பனும், அவன் மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரின் கழிவுகள் தான் வரவேற்கும். இப்ப அங்கு போய், பம்பர்ஸ் அணிகின்றார்.
  19. ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 37 வருடங்கள், அதன் பங்குதாரர்கள் இந்திய இலங்கை அரசு. அது இன்று நடைமுறை படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அப்படியென்றால் 1987 இல் இரு நாட்டு தலைவர்களும் கைச்சார்த்திட்டது வெண்டிக்காய் முருக்கங்காய் ஏற்றுமதி ஒப்பந்தமா? அதுசரி இன்றும் கூட அதை தலையில் தூக்கி பிடித்துக்கொண்டு பாராளுமன்றில் அது சார்ந்தே தீர்வு என்று பேசும் நபர்கள் , அரசியல்வாதிகள் யார்? மாகாண சபையாம்.. அதுக்கொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனராம் .. அவர் நினைத்தால் எதையும் எப்பொழுதும் முடக்கக் கூடிய அதிகாரமாம்... இதுதான் தீர்வாம்!!! இந்திய ராணுவம் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் பின்னர், எப்படி எல்லாம் தமிழர் பிரதேசங்களில் நடந்து கொண்டது என்பது மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு பக்கத்தில் புலிகளிடம் ஆயுதத்தை ஒப்படைக்க சொல்லிவிட்டு, மறு பக்கத்தில் ஒட்டுக்குழு, ஓணான் குழுவுக்கு ஆயுதம் வழங்கி அவர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து அரவணைத்து, அவர்களை வைத்தே புலிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக வேட்டையாடியது, ஈழநாதம் பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து தகர்த்தது, திலீபன் அண்ணா உண்ணாவிரத கோரிக்கைகள், அவரின் இழப்பு, குமரப்பா , புலேந்திரன் போன்ற தலைவர்களின் கைதில் இந்தியாவின் வகிபாகம் .. பட்டியல் இன்னும் நீளும். உங்கள் வசதிக்கு கருத்தெழுத்தாமல் முடிந்தால் உண்மையை பிரதிபலித்து எழுதுங்கள். கேட்பவர்கள் ஈழத்தில் வாழ்ந்த மக்கள்.
  20. தேவையில்லை பெட்டி வேண்டி வைக்கலாம் தேனும். எடுக்கலாம் ஆனால் அனுமதி பெற வேண்டி வரலாம். வெள்ளை நிற நேற். உண்டு” கால்வரை மூடி நிற்கும் முகமும் மூடி இருக்கும் கடையில் வேண்டலாம் எனது முதலாளி ஒருவன் தேனீ வளர்த்தவன் பெட்டி பெட்டி ஆக வானில் கொண்டு வருவான் அதற்குள்ளே பத்து பதினைந்து தட்டுகள். இருக்கும் அதை மெசினில். போட்டு புளிவது நான் தான் பிறகு 500 கிராம். போத்தல்களில் அடைப்பதுண்டு தேனீகள். இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது காரணம் மறந்து விட்டேன் எனவே… தேனீயை வளர்ப்பது நல்லது 🙏
  21. முதன் முதலில் 1845-ல் ராபர்ட் தாம்சன் என்பவர் காற்றடைத்த டியூப் மூலம் சிறிய சைக்கிளை ஓட்ட முடியும் என்று கண்டுபிடித்திருந்தார். ஆனால், அவரால் அது முழுமையானதாக இல்லை அது அந்த அளவு மேம்படுத்தப்படவில்லை மற்றும் பிரபலமாகவில்லை என்பது John Boyd dulop ஜான் பாய்டு டன்லப்புக்குத் தெரியாது. அவர் குதிரை வண்டிகள் மற்றும் சைக்கிள் போன்றவற்றில் இதுபோன்ற டியூபில் காற்றடைக்கும் தொழில்நுட்ப முறையை தனது மகனின் மரத்தாலான சைக்கிளுக்கு தான் சோதனை செய்தார். பிறகு காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888-ல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890-ல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த டபிள்யு. ஹெச். டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது. டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடைய வில்லை. தனது காப்புரிமையை 1896-ல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார். ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888-ல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன. இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895-ல் முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900-மாவது ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. இன்று இந்த உலகில் டியூப்லெஸ் டயர்கள் எனப்படும் டியூப் இல்லாத டயர்கள் வந்துவிட்டாலும் இன்றைய உலகின் அனைத்து போக்குவரத்து தொழிற்சாலை உற்பத்தி போன்றவற்றில் இவரது பங்களிப்பு மனிதகுலத்திற்கே உதவியது 🙏 படத்தில் 1945ல் வெளிவந்த ஒரு டன்லப் விளம்பரம். இராம ஸ்ரீநிவாஸன் இராம ஸ்ரீநிவாஸன்
  22. சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா? ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே? அவரைப் பராமரிக்க செலவு? கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?
  23. சேவை மனப்பான்மையுடன் இயங்கும் முதியோர் இல்லங்கள் இவரை சேர்ப்பதற்கு ஏன் தயங்குகின்றன. சிலவேளை குழப்படிகாரராக இருப்பாரோ.
  24. இந்த தேனீ, எமது தோட்டத்துக்குள் மறைவாய் எங்ககையோ கூடு கட்டியிருக்கு. சென்ற மாதம்.... மரங்களின் வளர்ந்த கொப்புக்களை வெட்டும் போது, அதன் கூடு, ஆடுப் பட்டு விட்டது போலிருக்கு. திடீரென்று ஊய்... என்ற படி ஒரு 50 தேனீ என்னை சுற்றி வளைத்து, 5,6 இடங்களில் குத்தி ஒரே நோ. அதுக்குப் பிறகு இதை கண்ணிலும் காட்டக் கூடாது. இதன் கூட்டை கலைக்க, ஏதாவது இலகுவான வழி இருக்கா. மிளகாய்த்தூள் தண்ணி, சவர்க்கார தண்ணி.... எல்லாம் கரைத்து ஊற்றியும் போகுது இல்லை. நெருப்பு வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றபடியால்... என்ன செய்வது என்று தெரியவில்லை.
  25. Published By: RAJEEBAN 06 SEP, 2024 | 02:13 PM கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என தெரிவித்துள்ளது. கனடா நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது,கருத்துசுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாக தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. எனினும் அந்த அமைப்பின் வேண்டுகோளை நிராகரித்துள்ள ஒன்ராரியோ மேல்முறையீட்டு நீதிமன்றம் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. இந்த சட்டம் சிங்களபௌத்தர்களிற்கு எதிரான வெளிப்படையான இனவேறுபாட்டை கொண்டுள்ளது என திருஹேவகே சமர்ப்பித்துள்ளதை நாங்கள் நிராகரிக்கின்றோம், என கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் முன்னுரையில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை கொள்கைகள் என குற்றம்சாட்டப்படும் கொள்கைகள் சிங்கள பௌத்த மையப்படுத்தப்பட்டவை என்றே குறிப்பிடப்படுவதாகவும், சிங்கள பௌத்தர்கள் ஒரு இனக்குழுவாக அதற்கு பொறுப்பாளிகள் என தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192996
  26. நன்றி நண்பரே,. . இலங்கை அரசிடம் தீர்வு இல்லை இதனை நாமல் அழகாக சொல்லி உள்ளார் தமிழர்கள் குப்பினார்கள். தமிழர்கள் நிராகரித்தார்கள். இல்லையென்றால் இலங்கை தீர்வை தந்து விட்டிருக்கும். என்பது மிகப்பெரும் பிழையான. கருத்துகள்,.....இது தான் நான் சொல்வது உங்களால் இதை எதிர்த்து உறுதியாக கருத்துகள் வைக்க முடியவில்லை கவலையளிக்கிறது என்னை பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் வணக்கம்… 🤣🤣🤣😀😂🤪🙏
  27. @Kandiah57 உங்கள் கருத்துக்கள் உறுதியானவை. உறுதியான, வெட்டி விழுத்தமுடியாத, உயர்ந்து நிற்கும் ஆலமரமாக உங்கள் மண்டைக்குள் உள்ள மூளைக்குள் வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து புறப்படும் உங்கள் கருத்துக்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பது சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது. சாதாரணமாக கருத்துகளில் தெரிவிக்கப்பட்ட முழுமையான அர்த்தத்தை, செய்தியை விடுத்து வசனங்களை இரண்டாகப் பிரித்தும், சொல்லு சொல்லாக அதை வாசித்தும் அதற்கு பதிலெழுதும் தங்கள் பாணியே ஒரு அழகுதான். இவை அனைத்தும் உங்களது உறுதியான ஆலமரமாக வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து பிறப்பெடுப்பவை. தொடர்ந்தும் அப்படியே உறுதியாக இருங்கள்.
  28. பூங்குயில் பாடுது .......! 😍
  29. இந்த மாத ஆரம்பத்திலிருந்து மிகச் சிறிய முதலீட்டுடன் மறுபடி பங்குச் சந்தையில் இறங்கியுள்ளேன். நான் தேர்ந்தெடுத்த சந்தைகளுக்கான காலப்பகுதி பிழையாகி விட்டது. OIL, EURJPY, NASDAQ ஆகியன நான் தேர்ந்தெடுத்தவை. கடந்த 3 நாட்களாக SPX500 / NASDAQ சரிவுடன் பெற்றோல் விலையும் இந்த வருடத்தில் என்றுமில்லாத அளவு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில முதலீடுகளின் SL வரயறைகளைக் கூட்ட வேண்ட்டியதாகி விட்டது. இன்று இவற்றின் விலைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
  30. ஆமாம் நிச்சயமாக அது தான் நடக்கும்,....வருகின்ற தேர்தலில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அற்ற. கட்சி. என்று பதிவு செய்யப்படும் 🙏🤣
  31. தமிழ் தரப்பின் வங்குரோத்து அரசியலின் விளைவு இது. எதை நிராகரித்து, நிராகரித்ததை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து, ஈற்றில் எம்மால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை எமக்கு தாருங்கள் என 37 வருடங்களின் கேட்கும் வங்குரோத்து நிலையில் நாம் இன்று.
  32. நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும். இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதலே அதை முற்றாக நிராகரித்து அதை அமுல்படுத்த விடாமல் தடுப்பற்கான தமது போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தது வெள்ளிடை மலை. தனி தமிழீழத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என முழு வேட்கையுடனும் உத்வேகத்துடனும் புலிகள் அன்று இருந்ததும் இந்த ஒப்பந்தத்தை அதற்கு வந்த இடையூறாக புலிகள் கருதியதும் எல்லோருமே அறிந்த விடயம் தான். புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது ஒப்பந்தத்தை அமுல் படுத்த அல்ல. மாறாக இந்திய இராணுவத்தை வெளியேற்றி இலங்கை இராணுவத்திடன் தமிழீழத்துக்கான போரை தொடர்ந்து நடத்துவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதையே பின்னர் செய்தனர். பிரேமதாசவுடன் பேச்சுவார்ததை ஆரம்பித்ததும் இந்திய இராணுவத்தை வேளியேற்றும் அரசியல் நகர்வுகளுக்காகவே. அது பற்றி அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். நான் அந்த நடவடிக்கையில் சரி, பிழை கூறவில்லை. அது தொடர்பாக சாதகமான பாதகமான வாத பிரதிவாதங்களுக்கு இடம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல போதாமைகள் இருந்தன. அதற்காக அதில் பல நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் உள்ளதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்று தமிழர்கள் விரும்புவதில் இருந்தே அதை அறியலாம். ஆனால், அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று தமிழ் தரப்பு விரும்புவதும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
  33. 52 வயது என்பது ஒரு மனிதன் பேரன் பேத்திகளை காணும் வயசு. இந்த வயசில் 25 வயசு பெண் தனக்கு மாட்டிவிட்டது என்று நினைத்து ஏகப்பட்ட லட்சங்களை என்ன ஏது என்று சரியாக விசாரிக்காமல் எடுத்து விசுக்கியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய சபலம்? இவர்களை பருவ வயதில் இருக்கும் பெண்கள் வீட்டுக்கு அங்கிள் தாத்தா என்று சொல்லி வரவேற்பதுகூட மிக அபாயகரமானது. கல்யாணம் என்பது சிலருக்கு அந்தந்த வயதில் தவறிபோகலாம், ஆனால் வசதியும் வதிவிட உரிமையும் உள்ள இவர் விதவைகளாக , இனி வாழ்வு எங்கே சென்று முடியும் என்று தெரியாமல் கல்யாண வயதை கடந்தும் இன்றும் முதிர் கன்னிகளாக ஏழைகளாக வாழ்விழந்து போயிருக்கும் ஏகப்பட்ட நடுத்தர வயது பெண்கள் வாழும் எம் மண்ணில் சட்டப்படி அணுகி திருமணம் செய்திருந்தால் இவரை வாழ்த்துவதற்கு வரிசையில் பலர் நின்றிருப்பார்கள். இவரை குறிப்பிடவில்லை, எல்லோரையும் குறிப்பிடவுமில்லை பெரும்பாலும் இவர் வயதையொத்த வெளிநாட்டில் நீண்டகாலம் திருமணம் செய்யாதவர்களில் பெரும்பாலோனோர் ஆபத்துக்குரியவர்கள். வாலிப வயது முழுக்க வேலைக்கும் போகாமல் கஞ்சா, தண்ணியடி, காட்ஸ் விளையாட்டு , அடுத்தவன்கிட்ட கடன் வாங்கிவிட்டு குடுக்காமல் விடுறது, காலம் முழுக்க ஆபாச படங்களுடன் காலம் கழிப்பது,கடன் அட்டை ஏமாத்துவேலை என்று வயதுகளை தவற விட்ட பின்னர் வாழும் நாட்டில் இவர்களைபற்றி தெரிந்து விடுவதால் நாடுகள் கடந்து யாரையாவது காசையும் விசாவையும் காட்டி வலையில் விழுத்தி நாசமாக்க பார்ப்பார்கள். இவர்களை மோசடிபேர்வழிகளே மிக இலகுவில் வலையில் வீழ்த்துவார்கள் அந்த வலையில் ஐயாவும் தன்னை சொருகி கொண்டார். செக்ஸ் என்பது மனிதனின் வாழ்வியலின் ஒரு அங்கம் வழிமுறை தவறி போகாதவரை அது ஒன்றும் கொலை குற்றமும் அல்ல,, இப்படி ஏமாளியாகி அள்ளியிறைத்த பணத்திற்கு மேற்குநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பாலியல் நிலையங்கள் சென்று பல வருடங்கள் தமது உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இப்படி எல்லாத்தையும் பறி கொடுத்து யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் செய்திகளை ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு இவரின் செய்தியை பிரதானமாக்கும் அளவிற்கு போயிருக்க கூடாது.
  34. மைன்ட் வொய்ஸ்-சுமந்திரன் சாணக்கியன். வந்தவேலை முடிந்தது வண்டியை கிளப்பு. ஐயா சிறிதரன் லண்டனில அசைலம் அடிப்பதே சிறந்த தெரிவு.
  35. எந்த நேர்மையில் சுமந்திரனும் , சாணக்கியனும் சஜித்தை ஆதரிக்கிறார்கள்? கட்சியில் முடிவு எடுக்கப்படவில்லயே. தான் தோன்றி தனமாக எடுக்கும் முடிவு நேர்மையானதா? சஜித்தின் உறுதி மொழிகள் என்ன? அவை எழுத்தில் கொடுக்கப்பட்டதா? தாங்களே கட்சி ஒழுங்கை மீறி விட்டு அரியநேந்திரனை நோக்கி கையை காட்டுவது எவ்வகையில் நியாயம்?
  36. TNA எனும் பிரேதப் பெட்டியின் கடைசி ஆணியும் இறுக அடிக்கப்பட்டுவிட்டது. சனாதிபதித் தேர்தலுடன் எல்லாமே முடிவுக்கு வரும். ☹️
  37. இலங்கை தமிழ் அரசு கட்சி.
  38. இந்தா மேசையில அடிச்சு சொல்லுறன்....😄 14 வயது பொடியன் மனநலம் குன்றியவன் எண்டு வாற கிழமை தீர்ப்பு வரும் பாருங்கோ...😎
  39. 84 பக்கங்கள் கொண்ட பி டி எப் இல் 20 பக்கத்தில் உள்ள சந்தை வட்டம் படம் AUDJPY முதல் இரண்டு நாள் நிலவரம் இந்த முறைமியினை Market makers method என அழைக்கிறார்கள் இந்த முறைமயினை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரிவ் மாரோ என்பவர், தற்போது இதே முறைமையினை ICT முறைமையில் வேறு பெயரில் அழைக்கிறார்கள் இரண்டு விதமும் யூ ரியூப்பில் குறித்த நபர்களால் தரவேற்றப்பட்டுள்ளது. முதலாவது படத்தில் சந்தை வட்டம் விளக்கப்பட்டுள்ளது. சந்தை வட்டம் 3 நிலைகளை கொண்டது 1. Accumulation (வாரத்தின முதல் நாள் ஆசிய சந்தை நேரம், சந்தையின் முதல் நாள் ஆசியநேரத்தினை இரண்டாவது படத்தில் சிகப்பு பெட்டியினால் குறிப்பிடப்பட்டுள்ளது) 2.Manipulation 3.Trend release வாரத்தின் முதல் நாள் ஆசிய சந்தையில் தமக்கு தேவையான பங்குகளை சந்தையினை உருவாக்குபவர்கள்(Market Makers) வாங்குவார்கள், இதனை Accumulation என கூறப்படுகிறது. அடுத்து இரண்டாவதுநிலை ஆரம்பமாகிறது அதனை Manipulation phase என கூறப்படுகிறது இந்த நிலையில் சாதாரண வாடிக்கையாளர்களாகிய என்னை போன்ற வர்த்தகர்களை (Break out traders) கவர்ந்திழுக்க சந்தையின் தவறான பக்கத்தில் விலையினை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்வார்கள் AUDJPY இல் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதனை பின்பற்றி நானும் வாங்கி இழப்பு ஏற்பட்டது. அடுத்த நிலை சந்தையினை சரியான திசையில் கொண்டு செல்லல்(Trend release) இதன் படி பார்த்தால் குறைந்தது அடுத்த இரண்டு நாளைக்கு விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது வார இறுதியில் விலை உயர்வடையலாம் அல்லது அவ்வாறு நடக்காமலும் விடலாம். முதலாவது உதாரண மாதிரி Up trend இற்கானது, ஆனால் AUDJPY இந்த வாரம் down trend (Mirror image மாற்றி பார்ககவும்) பி டி எப் மற்றும் யுர்யூப்பில் இது தொடர்பான விளக்கங்கள் உள்ளது. இத படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.
  40. முதலாவது வர்த்தகம் அதன் stop loss இனை எட்டி விட்டது, பொதுவாக திங்கள்கிழமை வர்த்தக நேரத்தின் குறைந்த விலையினை விட குறைந்தால் விலை கீழிறங்க வாய்ப்புள்ளது, ஆனால் மெல்லிய சாம்பல் நிற பெட்டி குறித்த தின ஆசிய நேரத்தினை விட 25 புள்ளி குறைவாக குறைந்த விலையிலிருந்து ஆரம்பித்து அடுத்த 25 புள்ளியில் முடி வடையும் 25 புள்ளிகள் கொண்ட பெட்டி, இது market makers stop hunt அளவாக கூறப்படுகிறது. https://forex-station.com/attach/file/3481774 இந்த இணையத்தளத்தில் உள்ள பி டி எப் இல் இந்த வர்த்தகம் தொடர்பான விபரம் உள்ளது.
  41. மலர்கள் கேட்டேன் & நிலா காய்கிறது -- சுகன்யா வரதராஜன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.