Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2954
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/09/24 in all areas

  1. விசுகு,அவர்களது போராட்டத்தில் ஒரு தீர்வுதான் அது தமிழீழம். ஓரளவாவது என்று அவர்கள் உடன்பட்டிருந்தால் இத்தனை மாவீரர்கள் இல்லை. அரசியல் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் அனந்தியும் அடக்கம். மாவீரர்கள் மதிப்புக்குரியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது தியாகம் அளப்பரியது. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும், அரசியல் செய்வதும் ஏற்புடையது அல்ல. மாவீரர்களை எப்படி அனந்தி இதயத்தில் வைத்திருக்கின்றாரோ அது போல்தான் மற்றவர்களும். அனந்தி தனது சாக்கடை அரசியலுக்குள் புனிதமான மாவீரர்களை இழுத்து சேரடிக்காமல் இருக்க வேண்டும். பொது வேட்பாளரை மாவீரன் பிரபாகரனே ஏற்கமாட்டார்.
  2. 3 சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க சொல்லி அனந்தி கேட் கவில்லை என்று இங்கு சிலருக்கு கோபம் உள்ளது போலுள்ளது. சிங்கள வேட்பாளருக்கு பின் இந்தியா நிற்கிறது என்று என்றார்கள். இப்போ இந்தியா தமிழ் வேட்பாளருக்கு பின் நிற்கிறார்களாம். தனது கணவனை இழந்தவரை கண்டு பிடிக்க முடியாத சிங்கள அரசுக்கு வாக்களிக்கும் படி யாராவது கூறுவார்களா? அத்தோடு எளிலனும் ஒரு மாவீரர் என்பதால் அனந்திக்கு மாவீரர் பற்றி பேச உரிமை உண்டு. அத்தோடு தமிழர் மண்ணில் இருந்து பேசுகிறார். புலம் பெயர்ந்தவர்கள் அவருக்கு அரசியல் வகுப்பு எடுக்க தேவையில்லை என நினைக்கிறேன்.
  3. இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.
  4. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
  5. அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க. தமிழரசு கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய் சம்பாதியுங்கள். பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
  6. சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..
  7. தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்பது உலகறிந்த உண்மை தானே அண்ணா. பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் எனும் நம்பிக்கையில் முயன்று பார்க்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் ஒற்றுமையின்மை வெளிப்பட்டால் அதுவும் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும், இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.
  8. இதை விட மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்தி கொச்சைப்படுத்தி விட முடியாது. இலங்கையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் தலைவரான நிறைவேற்றதிகாரம் உள்ள ஒரு சனாதிபதியை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் தேர்தலில் பங்குகொள்ளும் ஒரு வேட்பாளருக்கு(இவரின் பின்னால் இருக்கும் பொதுச்சபை இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது என சந்தேகம் பரவ தொடங்கியுள்ள நேரத்தில்) , சுதந்திர தமிழீழத்துக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தை சொல்லி வாக்கு கேட்கின்றார் அனந்தி. அடுத்தது உள்ளூராட்சி தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் இலங்கையில் வரிசை கட்டி நிற்கின்றன. இத் தேர்தல்களின் போது இன்னும் அதிகமாக புலிகளின் தியாகத்தை கொச்சைபடுத்த போகின்றார். ஒரு பக்கம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரைச் சொல்லி, பங்கு பிரிப்பு சண்டை. இன்னொரு பக்கம், புலத்தில் அனந்தி போன்றவர்களின் கொச்சைப்படுத்தல்கள். சிங்களவர்களை விட நாம்தாம் புலிகளை இழிவுக்குள்ளாக்குகின்றோம்.
  9. இறுதி முடிவெடுப்பது தமிழ் மக்களே.மற்ற எவரும் இல்லை.
  10. அட . .....கந்தர்மட சந்தியில் கவுண்டு கிடந்த பேரூந்து உங்களின் வளவுக்குள் நிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சிறியர் . .........! 😂
  11. நீங்கள. கூறியது 100 வீதம் உண்மை. 2015 ம் ஆண்டுக்கு முன்பு இரு முறை அங்கு சென்ற போது முழுமையான இராணுவ ஆதிக்கம் இருந்தது. வாய் திறக்கவே மக்கள் பயந்தார்கள். பாடசாலைகளில் ஒரு விழா என்றால் கூட அப்பகுதி இராணுவ அதிகாரியை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை இருந்தது. நினைவேந்தல்கள் இல்லை. நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இன்று போல் எழுதும் சூழ்நிலை இருக்கவில்லை. இன்று வீரம கதைக்கும் பலர் 2015 ம் ஆண்டுக்கு முன்பு வாயே திறக்கவில்லை. ஆனால், 2016, 2018 ல் போன போது பாரிய இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே அன்று மைத்திரியை ஆதரித்தால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை. நன்மைகளையே பெற்றனர். 2015 ல் மைத்திரியை ஆதரித்ததால் நாம் எதையும பெறவில்லை என்று இன்று புலம்புபவர்கள் எவரும் 2015 ம் ஆண்டுக்கு என்ன செய்தனர்? அன்று செய்ததைப்போல் மக்களின் நடைமுறை பிரச்சனைகளை நிறைவேற்க் கூடிய வேட்பாளர்களோடு நடைமுறை பிரச்சனைகள் தொடர்பில் பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே உகந்தது. அரியநேந்திரன் போன்ற வெத்து வேட்டு கோமாளிகளுக்கு வாக்களிப்பதால் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஒரு bollot sheet waste. அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே.
  12. நல்லது நிழலி அப்போ யாருக்க வாக்கு போடலாம்? ஏன் போடவேண்டும்? அதனாலே கறையான்களை ஆதரிக்காமல் பேரினவாதிகளை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க.
  13. பொது வேட்பாளர் ஒரு குறியீடு மட்டுமே. அவர் ஜனாதிபதித் தேர்தலிலே வெல்ல மாட்டார் என்பது தெரிந்த விடயம். அது சிவாஜிலிங்கமா? அரியநேத்திரனா? என்பது பிரச்சினையில்லை. ஆனால் ஒரு கட்சிக்குள் அதுவும் மத்தியகுழு உறுப்பினராக இருந்து கொண்டு அந்தக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் பிற கட்சிகளுடன் இணைந்து ஒருவர் பொதுவேட்பாளராகப் போட்டியிடுகின்றார் என்றால் இங்கே யார் அறிவில் கீழே இருக்கிறார் என்ற கேள்வி ஒன்று வரத்தான் செய்கிறது. அதேநேரம் இவர்களுக்கு வந்த ‘பொது வேட்பாளர்’ என்ற எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சிவாஜிலிங்கத்துக்கு வந்திருக்கிறது என்றால் சிவாஜிலிங்கம் அறிவில் இவர்களுக்குள் உயர்ந்து நிற்கின்றாரல்லவா? என்ற கேள்வியும் இருக்கின்றது.
  14. 2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள். பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர். இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ). அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர். ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல்.
  15. இங்கேதானே பிரச்சினையே. அவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். மக்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்வார்கள். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் தலமையும் பாராளுமன்றம் போவார்கள். மக்கள் வழமைபோல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். திரும்ப தேர்தல் வரும் புதிதாக ஏதாவது கொண்டு வருவார்கள். சிங்கள அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம். இவர்களைப் பற்றி? தமிழினத்தை அரிக்கும் கறையான்கள்.
  16. 2005 போல தேர்தலை புறக்கணிப்பதாலும் பலனில்லை. 2010, 2015, 2019 கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்தும் பலனில்லை எனில் என்ன செய்யலாம் அண்ணை? வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறவருகிறீர்களா அண்ணை! அவர்களும் வென்றபின் எதுவும் தீர்வு தரவில்லையே? 2004இற்கு பிறகான பாரளுமன்ற வடகிழக்கு தமிழ்தேசிய பா.உ எண்ணிக்கையும் சரிவடைந்து கொண்டே போகிறது. பொது வேட்பாளர் என்பவர் ஆழ மூழ்கிறவனுக்கு கிடைத்த கயிறா விசப் பாம்பா என பொறுத்திருந்து பார்ப்போம்.
  17. சுமந்திரனும் சாணக்கியனும் சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல். சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர் ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.
  18. ஏற்கனவே தமிழரின் ஒற்றுமை கடந்த பொது தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. அங்கஜன், டக்ளஸ் , பிள்ளையான் இன்னும் பலர் கூட்டமைப்பின் ஆசனங்களை கைப்பற்றி தங்களின் ஒற்றுமையின்மையை காட்டியுள்ளார்கள். மீண்டும் நிரூபிக்க தேவையில்லை.
  19. இரண்டும் ஒரே சொல்ல மறந்த கதைகள் போல, விசுகு ஐயா. தனுஷின் திருமணம் முடிந்த பின், கஸ்தூரிராஜா குடும்பத்துடன் ஒரு தூரம் இருந்ததாகவே தெரிந்தது. எத்தனை செய்திகள் வந்தன. உண்மை பொய் தெரியப் போவதில்லை.
  20. ஒரு ஒன்றுகூடல் மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளுக்குகாக இங்கிருக்கும் வேறு ஒரு நகரத்துக்குப் போய், பின்னர் திரும்பி வர சில நாட்கள் ஆகிவிட்டது, ஏராளன். இங்கு ஒரே வெயில் வேற, போட்டிகள் முடிந்து வந்தும், அந்த வலியும், அலுப்பும் தீர சில நாட்கள் எடுத்து விட்டது.........👍.
  21. இவர்கள் எடுக்கும் முடிவை நாளை இவர்களால் நியமிக்கப்பட்ட மிக மிக சிறப்பு குழு கூடி ஆராய்ந்து அறிக்கை தரும். தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே?
  22. மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா? [TamilNet, Sunday, 18 August 2024, 11:27 GMT] இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, தேர்தல் அரசியல் தொடர்பான எண்ணங்களும் முடிவுகளும் மூன்று முனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முனைகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான கொள்கை சார் அரசியலில் இருந்து ஏற்கனவே வழுவியுள்ளன அல்லது அவ்வாறு வழுவுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலெழுந்தவாரியாக ஊடக அறிக்கைகளையும் உடன்படிக்கைகளையும் படிக்கும்போது ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான அடிப்படைகளைச் சரியாகக் கையாண்டிருப்பது போன்ற சொற்பொருட் தோற்றம் ஏற்படலாம். ஆனால், கொள்கைசார் விடுதலை அரசியல் பற்றிய அறிவோடு உற்று நோக்கும் போது இவற்றுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள பொறிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது விடுதலை அரசியலின் செல்நெறியை இனியாதல் சரியாக வழிப்படுத்த ஆக்கபூர்வமானதாக அமையும். ஆக்கிரமித்துள்ள இன அழிப்பு இலங்கை அரசின் தேர்தல் அரசியலுக்குள் நடைமுறைச்சாத்திய அரசியல் (pragmatic politics) செய்கிறோம் என்ற போர்வையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் அரசியலை (principled politics) அவ்வரசின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நிரந்தரமாகத் தொலைத்துவிடும் விளைவையே இந்த மூன்று முனைகளும் உருவாக்கிவருகின்றன. இதுவே இலங்கை அரசின் உத்தியும் கூட. இலங்கை அரசியலமைப்பிற்குள் எதைக் கையாள்வது என்பதை விட அதற்கு வெளியில் வைத்து எதைக் கையாள்வது என்பது பற்றிய தெளிவு ஈழத்தமிழர்களுக்கு முக்கியமானது. இது தந்தை செல்வாவின் காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் கூர்ப்புரீதியாகப் பொருத்தமான முறையிற் கையாளப்பட்டுவந்தது. 2009 ஆம் ஆண்டின் பின் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ் மக்கள் பேரவை போன்ற முன்னெடுப்புகள் ஊடாக விடுதலை அரசியல் மீண்டும் முளைவிட்டபோதும், அவையும் இறுதியில் அச்சுத்தவறின. 2016 ஆம் ஆண்டளவில் முற்றாக மங்கிவிட்டன. விளைவாக, இலங்கை அரசியலமைப்புக்கு வெளியே சுயநிர்ணய உரிமையை எடுத்தாளும் மூலோபாய அச்சில் இருந்து தாயகத்திலுள்ள ஈழத்தமிழர் அரசியல் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளது. அதே அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியலை எதற்கு, எவ்வாறு பயன்படுத்துவது என்ற தந்திரோபாயப் போக்கில் இருந்து அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் நிலைதடுமாறி விலகியுள்ளன. இந்த மூலோபாயக் குறைபாடுகளும் தந்திரோபாயக் குறைபாடுகளும் விரைந்து களையப்படவேண்டியவை. மூலோபாயக் குறைபாடுகள் எவை என்பதையும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் விரிவாகப் பார்க்க முன்னர், தந்திரோபாயக் குறைபாட்டையும் அதைத் தவிர்க்கும் வழிவகையையும் சுருக்கமாக நோக்குவோம். 1. தந்திரோபாயக் குறைபாடும் அதைத் தவிர்க்கும் வழிவகையும் இலங்கையில் தேர்தல் அரசியலைத் தனி வழியாகக்கொண்டு ஈழத்தமிழர் அரசியல் விடுதலையைக் காணலாம் என்று அரசியற் கட்சிகளின் தலைமைகள் கருதுவதும், மக்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதும், கொள்கை சார் விடுதலை அரசியலின் மூலோபாயத்துக்கு முரணானது. இலங்கை அரசோடு அரசியல் தீர்வு தொடர்பான முதன்மைப் பேச்சுவார்த்தையாளராகத் (Chief Negotiator) தாம் ஈடுபடுவதற்கான ஆணையைத் தமக்கு ஈழத்தமிழர் வாக்குகள் தருகின்றன என்று தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் சிந்திப்பதும், அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதும், பெரிய குறைபாடாகக் காணப்படுகிறது. தேர்தல் அரசியற் கட்சிகள் விடுதலை அரசியலுக்கும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் குந்தகம் விளைவிக்காது செயற்பட்டால் அதுவே பெரிய சாதனை என்பதாகத் தற்போதுள்ள நிலைமை காணப்படுகிறது. உண்மையில், ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய சக்திகள் தேர்தல் அரசியல் ஊடாக தமிழ் மக்களின் ஆணை பெற்ற பிரதிநிதிகள் போலத் தெரிவு செய்யப்பட்டு, ஈழத்தமிழர் தமது மக்களாணையின் பாற்பட்ட சுய நிர்ணய உரிமையை எடுத்தாள்வதற்குத் தடங்கலாக இடமளிக்கக்கூடாது என்ற தந்திரோபாயத்துக்காக மட்டுமே நல்ல சக்திகளாக ஈழத்தமிழ்த் தேசியப் பிரதிநிதிகள் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களில் பங்கேற்கவேண்டும். அன்றேல், தேர்தல் அரசியல் ஊடாக எவரும் தேர்ந்தெடுக்கப்படாவண்ணம் தமிழர்கள் முற்றிலும் தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கவேண்டும். இந்த இரண்டு தேர்வுகளில் எதை முன்னெடுப்பதென்றாலும் அதற்குத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், தேர்தல் அரசியல் கட்சிகளால் எதுவகையிலும் கட்டுப்படுத்த இயலாத பலமான ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படும். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் ஆணைக்குப் புறம்பாக இயற்றப்பட்டு நடாத்தப்படுகின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களிற் பங்கேற்போர் எவரும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் தீர்வைக் காணபதற்கான ஆணைபெற்ற ஏக பிரதிநிதிகளாகத் (sole representatives) தம்மைப் பாவனை செய்துகொள்ளாது, அவ்வாறான இலங்கை அரசியலமைப்புக்கு உட்படாத மூலோபாய நகர்வுக்குரிய ஏக பிரதிநிகள் யார் என்பதை நிறுவுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கும் பதிலாளிகளாக (proxies) மட்டுமே தம்மை, ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டுப் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் சரி, பாவனை செய்து கொள்ளவேண்டும். அரசியல் வேணவாவை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவது தொடர்பாக 1947 சோல்பரி அரசியலமைப்புக்குள் ஏதோ ஒரு வகையில் 1977 ஆம் ஆண்டு வரை நீடித்த சொற்பக் கருத்துச் சுதந்திர வெளியும் ஆறாம் சட்டத்திருத்தத்தின் ஊடாக 1983 ஆம் ஆண்டோடு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போதுள்ள தேர்தல் அரசியல் வெளி எதற்கு உதவும், எதற்கு உதவாது என்பதில் தெளிவான பொது நிலைப்பாடு இருக்கவேண்டியது அவசியம். சுயநிர்ணய உரிமையை மட்டுப்படுத்தாமல், அதாவது எதுவிதத்திலும் சுதந்திரத்தை (பிரிவினையை) மறுக்காமல் அல்லது குறைக்காமல் தமது பிரேரிப்புகளை தேர்தல் அரசியற் கட்சிகள் முன்வைக்கலாம். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமையொன்றுக்கான மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கலாம். இதற்கு முரணான அமிலப் பரிசோதனைகளில் தேர்தல் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. நடைமுறையில், தேசக்கட்டலுக்கு (nation-building) ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதைத் தமது உத்தியாகக் கொண்டு தேர்தல் அரசியற் கட்சிகள் செயற்படுவது நல்லது. தேசக்கட்டல் பற்றிய தெளிவான செயற்திட்டம் அவசியம். தாயகத்தில் சமூக விடுதலை, பிரதேச வேறுபாடுகளுக்கு மேலான ஒற்றுமை, சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருண்மியத் திட்டங்கள், கூட்டு நினைவுத்திறம் ஆகியவை மக்கள் மத்தியில் முறையாகப் பேணப்படாதுவிடின் ஆக்கிரமிப்பு அரசின் தேர்தல் அரசியல் மக்களைத் திண்டாட்டமான தெரிவுகளுக்குள் இட்டுச் செல்லும். ஈழத்தமிழர் தேசத்துக்கான சர்வதேச ஏக பிரதிநிதித்துவத்துக்குரிய கூட்டுத் தலைமையாகவோ தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களாகவோ இலங்கைத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தம்மை உருவகித்துச் செயற்படுவது கொள்கை சார் விடுதலை அரசியலுக்கு ஆபத்தைத் தருவதாகவே போய்முடியும். ஈழத்தமிழர் தேசம் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை மட்டும் கொண்டதல்ல, புலம்பெயர் சமூகத்தையும் இணைபிரியா அங்கமாகக் கொண்டது. தாயகத்திலான தேர்தல் அரசியலுக்குள் புலம்பெயர் சமூகமும் விடுதலை அரசியலைத் தொலைத்துவிட நிர்ப்பந்திக்காது தேசக்கட்டல் முன்னெடுக்கப்படவேண்டும். 2. மூலோபாயம் தொடர்பான குறைபாடுகளும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளும் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஐரோப்பிய காலனித்துவக் காலத்தை உள்ளடக்கியதான நியாயப்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நிறுவப்படுவது. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டபோது, அதன் சாசனத்தில், உலகில் அந்நிய காலனித்துவத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தன்னாட்சியை (Self-Government) எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதற்கு இரண்டு விதமாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு அப்போதிருந்த உறுப்பு நாடுகளிடம் அப் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்விரு பொறுப்புகளையும் ஐ.நா. சாசனத்தின் பதினோராம் அத்தியாயமான தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசங்கள் ("Declaration regarding Non-Self-Governing Territories") என்பதன் கீழுள்ள 73-74 வரையான உறுப்புரைகளாகவும், பன்னிரண்டாம் அத்தியாயமான சர்வதேச அறங்காவலர் அமைப்பு (International Trusteeship System) என்பதன் கீழுள்ள 75-85 வரையான உறுப்புரைகளாகவும் ஐ.நா. சாசனம் வகுத்திருந்தது. ஐ.நா.வின் பொறுப்பில் பொதுவாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படல் ஆகியவை மேற்குறித்த பொறிமுறைகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நிரலிடப்பட்ட உலகப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது என்பதாகவும், இதர பகுதிகள் சுய ஆட்சியைப் பெறும் பயணத்தில் ஏற்கனவே இருப்பதால் விரைவில் ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றுவிடும் என்ற அடிப்படையில் மேற்குறித்த நிரல்களுக்குள் அவை சேர்க்கப்படாத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்பொழுது, இலங்கையில் தன்னாட்சி ஜனநாயக முறையில் உருவாக்கப்படும் பொறிமுறைக்கான வேலைத்திட்டத்தை சர்வஜன வாக்குரிமையோடு பிரித்தானியா முன்னெடுத்துக்கொண்டிருந்தமையால் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் ஈழத்தமிழர் தாயகத்தை, பிரிட்டிஷ் இந்தியா உள்ளிட்ட வேறு பல உலகப் பகுதிகளைப் போல, அக் காலனித்துவ நாடு பாரப்படுத்தியிருக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசம் தனியான சுயநிர்ணய உரிமை அலகென்ற நடைமுறையையும் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஏற்கனவே இல்லாது செய்திருந்தது. மேற்குறித்த இரு பொறுப்புகளுக்குள்ளும் பாரப்படுத்தப்படாத பகுதிகளில், ஏற்கனவே காலனித்துவ தரப்புகளால் வகுக்கப்பட்ட நாடுகளுக்கான எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு தேசிய இனங்கள் தமக்கென்று தனிவேறான சுயநிர்ணய உரிமையைக் கோர இயலாது எனும் நடைமுறை ஐ.நா. மன்றில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பாக நோக்கவேண்டும். இதற்கான கோட்பாட்டு அடிப்படை நீலக் கடல் விதி (Blue Water Rule) அல்லது உப்புக் கடல் ஆய்வுரை (Salt Water Thesis) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 637 ஆவது தீர்மானத்தின் ஏழாம் உறுப்புரை 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதை வரைபுபடுத்தியுள்ளது. சட்ட மொழியில் இது uti possidetis juris என்ற இலத்தீன் மொழிக் கலைச் சொல்லால் சித்தரிக்கப்படுகிறது. இதன் ஆங்கில மொழியிலான விளக்கம் பின்வருமாறு இருக்கும்: “Emerging states presumptively inherit their pre-independence administrative boundaries.” ஒரு நாடு காலனித்துவத்தில் இருந்து ‘விடுதலை’ பெற்று ஐ.நா. உறுப்புரிமை பெற்றபின், அதன் எல்லைக்குள் இருக்கும் அனைவரும் ‘ஒரு மக்கள்’ என்றும் அந்த ஒரு மக்களுக்குப் பொதுவான ‘ஒரு சுயநிர்ணய உரிமை’ மாத்திரமே அதற்கு ஒட்டுமொத்தமாக இருக்குமென்றும், அந்த நாட்டின் முழுமையான பிரதேச ஒருமைப்பாட்டுடன் (territorial integrity) ஒத்துப்போவதாக மட்டுமே அந்தச் சுயநிர்ணய உரிமை கையாளப்படவேண்டும் என்பதே ஐ.நா. கடைப்பிடித்த ஈழத்தமிழருக்கு ஒவ்வாத நடைமுறை. இவ்வாறு, ஈழத்தமிழர் தாயகம் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் உள்ளடக்கப்படாமைக்கும் அல்லது தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகாகக் கருதப்படாமைக்குமான முழுப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கே இருக்கிறது. அதாவது, வேறுவிதமாக இதைச் சொல்வதானால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த முதலாவது சர்வதேசத் தரப்பு பிரித்தானியா ஆகும். பிரித்தானியா மேற்குறித்தவகையில் சுயநிர்ணய உரிமையை மறுத்த போது அதை எதிர்த்து ஈழத்தமிழர் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோரினார்கள். இதைச் சரியாக விளங்கியிருத்தல் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரதானமானது. ஈழத்தமிழர் டொனமூர் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை, பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் முடிவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இப்படியாக, இலங்கையில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் ஏற்பட முன்னரே அரசியலமைப்புத் தொடர்பான சமூக உடன்படிக்கை (social-contract) ஒன்று ஜனநாயக முறையில் உருவாக்கப்படாது புறக்கணிக்கப்பட்டது. ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை முதலில் மறுத்த பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் வரலாற்றுரீதியான பொறுப்புக்கூறல் இருக்கிறது. ஐ.நா. சபைக்கு இது தொடர்பில் நேரடிப் பொறுப்பில்லை. ஆகவே, ஐ.நா. சபையின் நடைமுறைகளதும் விதிகளதும் பிரகாரம் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையைக் கோருகிறார்கள் என்று மட்டுப்படுத்திச் சொல்லிக்கொள்வது ஈழத்தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு ஆபத்தானது. 1924 ஆம் ஆண்டிலே சுயநிர்ணய உரிமை அலகுக்கான நியாயப்பாடு ஈழத்தமிழர் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறபோதும் அதுகுறித்து அக் காலத்திலே பதியப்பட்ட நம்பகமான எழுத்து மூல ஆதாரங்கள் இதுவரை சரியாக முன்வைக்கப்படவில்லை. 1970களின் நடுப்பகுதியில் வெளியான சில நூல்களை அடிப்படையாகக் கொண்டு 1924 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை ஆதாரபூர்வமாகவும் சட்ட அடிப்படையிலும் எடுத்தாளமுடியாது. அவ்வாறு செய்ய முனைவது மகாவம்ச வரலாறு போல் ஆகிவிடும். உரிய காலத்திலே மேற்கொள்ளப்பட்ட பதிவு ஆதாரங்களே உலக நீதிமன்று போன்ற இடங்களில் ஏற்புடையதாகக் கருதப்படும் என்பதால் அவை உரியமுறையில் தேடிக் கண்டுபிடிக்கப்படவேண்டும் (இதைப் போல, இறுதித் தமிழரசனின் பிரதானிகளுடன் போர்த்துக்கேயக் காலனித்துவம் சார்பாக ஸ்பானிய மன்னனின் பிரதானிகள் 1612 ஆம் ஆண்டு நல்லூரில் வைத்து எழுதிய உடன்படிக்கையின் உள்ளடக்கம் எழுத்தாதாரமாக பொதுவெளியில் இல்லாதுள்ளது). இருப்பினும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை ஈழத்தமிழர்கள் மிகத் துல்லியமாக நிராகரித்தது மட்டுமல்ல, அப்போதே ஈழத்தமிழர் தலைவர்கள் தனித்துவமான தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகிறது. 1947 நவம்பர் 20 ஆம் நாள் தமிழர் தரப்பினர் பிரித்தானிய ஆளும் தரப்பை நோக்கி, “இப்பொழுது இருப்பதைப் போன்ற, சட்டசபை - மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை கோருகிறோம்,” என்ற செய்தியை எழுத்துமூலமாக வழங்கியிருந்தனர். இந்தவகையில், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் காலனித்துவத்துக்கு முன்னான ‘இறைமையை மீட்டுக்கொள்ளல்’ (Reversion to sovereignty) என்ற அடிப்படை எடுத்தாளப்படவேண்டியது என்பது குறிப்பாக நோக்கப்படவேண்டியது. பிரித்தானியாவுக்கு இதுதொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளது என்பதும் சிறப்பாக நோக்கப்படவேண்டியது. இலங்கையின் சர்ச்சைக்குரிய ‘சுதந்திரத்தின்’ பின், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைமைப் பேருரையில் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், தனித் தேசிய இனம், சுதந்திரத் தமிழரசு என்பவற்றோடு சமஷ்டி என்ற பெயரில் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளை அரசியற் தீர்வுக்கான மாதிரிகளாக எடுத்துக்காட்டியிருந்தார். ஐரிஷ் விடுதலைப் போராட்டத்தையும் முன்னுதாரணமாக செல்வநாயகம் எடுத்தாண்டிருந்தார். இதன் மூலம், தொடர்ச்சியாகச் சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் இணைப்பாட்சிக்கு ஒப்பான ஒரு கூட்டாட்சியைக் கொள்கையாக அவர் முன்வைக்க முற்பட்டமை தென்படுகிறது. அதை சமஷ்டி என்ற பெயரில் அப்போது அவர் குறிப்பிட்டுவந்தார். கனடாவும் சுவிற்சர்லாந்தும் அரசியலமைப்புகளை உருவாக்கிக்கொண்டமை கூட்டாட்சியை (Federation) விடவும் இணைப்பாட்சிக்கு (Confederation) உரிய முன்னுதாரணங்களாகும். இணைப்பாட்சி என்பது காலப்போக்கில் கூட்டாட்சி நோக்கி அல்லது சுதந்திரம் நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு வழிவரைபட அரசியலமைப்புப் பொறிமுறை. 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாம் தீர்மானத்தில் தனிவேறான தேசம் என்ற அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கவொண்ணா உரிமையாகச் சுயநிர்ணய உரிமை அடிப்படையானது என்பது குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொதுசன வாக்கெடுப்பும் அதே தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கும் மேல், அம் மாநாட்டின் இரண்டாம் தீர்மானம் சோல்பரி அரசியலமைப்புத் திட்டத்தை “அறிவுக்கொவ்வாததெனவும் தமிழ் பேசும் மக்களை அடிமைகொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது,” என்று கடுமையான தொனியில் நிராகரித்திருந்தது. இது ஆதாரபூர்வமான வரலாறு. இலங்கை ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றது 1955 ஆம் ஆண்டின் இறுதியிலாகும். அதைப் பெற்று ஒரு சில மாதங்களுக்குள் தனிச்சிங்களச் சட்டமும் இன அழிப்பு வேலைத்திட்டமும் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது. 1960 ஆம் ஆண்டு ஐ. நா. பொதுச் சபை சுயநிர்ணய உரிமை தொடர்பாக அடுத்த கட்டமாக 1514(XV) ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தின் இரண்டாம் உறுப்புரையானது அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டென்று அகலமாக வரையறை செய்துவிட்டு, அதை மட்டுப்படுத்தும் விதமாகத் தனது ஆறாம் உறுப்புரையில் வேறொரு விடயத்தைப் புகுத்தியது. அதாவது, ஏற்கனவே உறுப்புரிமை பெற்றுவிட்ட நாடுகளின் நாட்டு எல்லைகளை மாற்றும் வகையில் அந்த நாடுகளுக்குள் இருக்கும் எவரும் தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகொன்றைக் கோர முற்பட்டால் அது ஐ. நா. சாசனத்துக்கு முரணானது என்று கருதப்படும் என்றது அந்த ஆறாம் உறுப்புரை. ஆக, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது, ஐ.நா. நடைமுறைக்கும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டுக்கும் மாறாக, காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரிய தேசிய சுயநிர்ணய உரிமையாக (national self-determination) ஆரம்பத்திலேயே ஈழத்தமிழர்களால் வரையறை செய்யப்பட்டுவிட்டது. இலங்கை ஐ. நா. உறுப்புரிமை பெற முன்னரே, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பாக நோக்கப்படவேண்டியது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் பார்க்கப்படவேண்டியது. இந்தப் பின்னணியை மறைத்துவிட்டு, அல்லது வரலாற்றைக் கத்தரித்துவிட்டு, புதிய விளக்கங்களைச் சுயநிர்ணய உரிமைக்குப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பது அடிப்படையில் கோளாறானது. 2009 ஆம் ஆண்டில் இன அழிப்புப் போரினால் மெய்நடப்பு அரசும் இராணுவப் பலமும் அழிக்கப்பட்டதால், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான பௌதிக பலம் இல்லாது போய்விட்டதென்றும், அதனால் சுயநிர்ணய உரிமையை இனிமேல் ஏதோ ஒரு வகையில் மட்டுப்படுத்தித்தான் சித்தரிக்கவேண்டும் என்றும் சிந்திப்பது கோட்பாட்டு ரீதியாக மேலும் கோளாறானது. தந்தை செல்வா கூட்டாட்சி கோரிய காலத்தில் இருந்தது சோல்பரி அரசியலமைப்பு. அதை இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தவுடன் அந்த நகர்வை அவர் நிராகரித்து, தனது பிரதிநிதித்துவத்தைத் துறந்து, காங்கேசன்துறைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சூழலை உருவாக்கி, தமிழ் மக்களின் நிராகரிப்புக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துப் போட்டியிட்டு அதற்குரிய மக்களாணையை வென்றெடுத்துக் காட்டியிருந்தார் என்பதும் வரலாறு. 1972 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மீண்டும் ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆகிய இரண்டின் சட்டகங்களுக்குள்ளும் கூட்டாட்சிக் கோரிக்கையை தந்தை செல்வா முன்வைக்கவில்லை. அவர் தொடர்ந்து உயிர்வாழ்ந்திருந்தால் அவ்வாறு முன்வைத்திருக்கவும் மாட்டார். இந்தவகையில், தற்போது கூட்டாட்சி என்ற கொள்கையை மீண்டும் தூசிதட்டி எடுத்து முன்வைத்திருக்கும் இக்காலத்துத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் அரசியற் கட்சியினரும் தந்தை செல்வாவுக்கு நேர் விரோதமான அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவர்களே. கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இணைப்பாட்சி என்று கொள்கையை முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்தும் தக்கவைக்க இடமளிக்கும். இணைப்பாட்சி முறையூடாகப் பயணித்து, பின்னர் கூட்டாட்சியாக நீடிக்கும் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளையே தந்தை செல்வா கூட முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று. இணைப்பாட்சி என்ற வழிவரைபடத்தின் ஊடாகப் பயணிக்காது சமஷ்டி என்ற கூட்டாட்சியை சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி உருவாக்க முற்பட்டால், கூட்டாட்சி உருவாக்கப்பட்டாலும் சுயநிர்ணய உரிமையைத் தனியான அலகாகத் தக்கவைக்க இயலாத நிலைதான் ஏற்படும். இதனால், சுதந்திரத்தை (பிரிவினையை) ஒருபோதும் மறுக்காமல், அதேவேளை அதை நேரடியாகவும் கோராமல் தீவுக்குள் இருக்கும் தேர்தல் அரசியலைத் தந்திரமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டாட்சி என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களாணையை நிராகரிப்பது அடிப்படையிலேயே தவறானது. தந்தை செல்வாவின் அமைதிவழிப் போராட்டத்துக்கும் தலைவர் பிரபாவின் ஆயுதவழிப் போராட்டத்துக்கும் முற்றிலும் முரணானது. எனவே, முழுமையான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமூக உடன்படிக்கை ஒன்றின் பின்னரே அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும், அவ்வரசியலமைப்பிலும் தனி அலகுக்கான சுயநிர்ணய உரிமை முழுமையாகத் தக்கவைக்கப்படவேண்டும் என்றும் தெளிவான கொள்கை தாயகத்திலுள்ள பொது அமைப்புகளால் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஐ.நா. மன்றுக்குள்ளான uti possidetis juris என்ற நடைமுறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் ஈழத்தமிழர் சுய நிர்ணயக் கோரிக்கை முன்னெடுக்கப்பட ஏதுவாக இன்னோர் நியாயப்பாட்டினையும் எடுத்தாளலாம். தன்னாட்சியதிகாரத்துக்கான சமாதான வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு அவை ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள சூழலில், இறுதி வழிமுறையாக (last resort) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்பதாக சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தும் சர்வதேச வழமைச் சட்டத்தின் (Customary International Law) பாற்பட்டதே அந்த வழி. அதாவது, நேரடியாக எழுத்து மூலமாக யாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்துக்கு (codified International Law) அப்பாற்பட்ட சர்வதேச வழமைச் சட்டம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளையும் அடியொற்றிப் பின்பற்றப்படுவது. பிரித்தானியாவுக்கு எதிராக முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தோடு (Reversion to sovereignty) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்ற சர்வதேச வழமைச் சட்ட நியாயத்தையும் தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சேர்த்து இரட்டித்த நியாயப்பாடாக கூர்ப்பெய்தவைத்து சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தினார். அதேவேளை, அளப்பரிய தியாகங்களைச் செய்ய முன்வருமாறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களை வேண்டியது. இந்த மக்களாணை பெற்ற தீர்மான முடிவின் படி போராடிப் பெற்ற இறைமை (Earned sovereignty) என்ற அடிப்படை 2009 ஆம் ஆண்டுவரை ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைமையால் முன்னெடுக்கப்பட்டது. சோல்பரி யாப்பின் 29(2) உபவிதி தரும் குறைந்தபட்ச நீக்கப்படவியலாக் காப்புரிமை (entrenched safeguard) மீறப்பட்டது தொடர்பாக பிரித்தானிய கோமறை மன்றின் தீர்ப்புகளையும், அவற்றில் இருந்து தப்பும் முகமாக இலங்கை மேற்கொண்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளும் தந்தை செல்வா எடுத்தாண்ட பரிகாரப் பிரிவினைக்கு இடமளிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பலப்படுத்துகின்றன. இது தொடர்பாகவும் பிரித்தானியாவுக்கு ஈழத்தமிழர் தேசம் தொடர்பான பொறுப்புக்கூறல் உண்டு. இவை தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட Ceylon Independence Bill 1947, Sri Lanka Republic Act 1972 ஆகிய சட்டவாக்கங்கள் குறித்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது. இந்த அடிப்படைகளை உணர்ந்து, எந்தவிதத்திலும் சுயநிர்ணய உரிமையைக் கீழிறக்காமல் முழுமையானதாக அது எடுத்தாளப்படவேண்டும். காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறாமல், ஐரோப்பிய காலனித்துவம் சிங்கள காலனித்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பிரகடனம் செய்ததிலும், வரலாற்று இறைமை, பண்பாட்டு இன அழிப்பு என்பவற்றை எடுத்தாண்டதிலும், சர்வதேச வழமைச் சட்டத்தின் பாற்பட்ட பரிகாரப் பிரிவினைக்குரிய கடைசி வழியாக சுயநிர்ணய உரிமையை நிறுவியதிலும் முன்மாதிரியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் Magna carta. காலப் போக்கில், சர்வதேச வழமைச் சட்டத்தில் மீறவொண்ணா வழமை (jus cogens norm) என்ற அடுத்த கட்ட நியாயப்பாட்டு வளர்ச்சியை சுயநிர்ணய உரிமை பெற்றுவருகிறது. அதாவது, இன அழிப்பு தொடர்பான அரச பொறுப்பு எவ்வாறு விசாரணைக்கு உலக நீதிமன்றில் உட்படுத்தப்படலாமோ, அதேபோல சுயநிர்ணய உரிமையை ஆக்கிரமிப்பு அரசொன்று மறுத்துவருவது பற்றிய அரச பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் விரைவில் தோன்றும் வகையில் சர்வதேச நீதிச் சூழல் வளர்ச்சிபெற்று வருகின்றது. சுயநிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேசச் சட்டம் சார்ந்த, எமது வரலாற்று நிலைப்பாடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு அனைத்தையும் கூர்ப்பியற் போக்கில் ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்குப் பதிலாக, சுயநிர்ணய உரிமையில் “குறைந்தபட்சம் - அதியுச்ச பட்சம்” என்றவாறு அளவுகோற் பிரிப்பை மேற்கொள்வதும், ஆறாம் சட்டத்திருத்தம் என்ற பூச்சாண்டியைப் பார்த்து மிரளுவதும் கொள்கை சார் விடுதலை அரசியலுக்கும் ஈழத்தமிழர் தேசக்கட்டலுக்கும் முற்றிலும் முரணானது. 1947, 1972, 1978 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஆணையின்றி நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி இன அழிப்பு இலங்கை அரசின் அரசியலமைப்புக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தமோ, அல்லது கூட்டாட்சி என்ற கோரிக்கையை எழுந்தமானதாக முன்வைக்கும் நகர்வோ ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிப்பதாகவும், வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணைக்கும் திம்புக் கோட்பாடுகளுக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற தீர்வுத் திட்ட வரைபுக்கும் ஒவ்வாததாகவும் ஆகிவிடுகிறது. “சிந்தனையானது மொழியைக் கேடாக்கினால், மொழி சிந்தனையைக் கேடாக்கும்” (“But if thought corrupts language, language can also corrupt thought”) என்று ஜோர்ஜ் ஓர்வல் எடுத்தியம்பியது அரசியற் தமிழின் கேடுற்ற நிலையைச் சிந்திக்கையில் நினைவுக்கு வருகிறது. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாமையாலும், தமிழர்களுக்கென்று ஓர் அரசு இன்மையாலும், அரசியற் தமிழ் உலக வளர்ச்சிக்கேற்ப வளரவில்லை. இதனால், சர்வதேசச் சட்டங்களைப் புரிந்துகொள்வதும், அரசறிவியலில் தெளிவாகச் சிந்திப்பதும், சர்வதேச அரசியலின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்வதும் தமிழிலே சிந்திக்கவேண்டியவர்களிற் பலருக்குச் சரிவரக் கைகூடுவதில்லை. கிணற்றுத் தவளைகள் போல, தமக்குத் தாமே போட்டுக்கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவு எல்லைகளுக்குள்ளும் மொழிச் சிக்கலுக்குள்ளும் சிக்குண்டு, போதாமைக்குச் சமூக வலைத்தளங்களில் பரவுபவற்றில் நல்லது எது தீயது எது என்று பிரித்தறிய இயலாத நிலைக்குள் நின்று, தமக்குத் தெரிந்தது கைமண் அளவு என்பதை மறந்து, தற்செருக்கோடு செயற்படும் தன்மை பொது முயற்சிகளில் ஈடுபடுவோரிடையே பாரிய அவல நிலையாக உருவெடுத்துள்ளது. தேற்றங்களை நிறுவுதலைப் போன்று கொள்கைகள் வடிவமைக்கப்படவும், எழுதப்படும் வரிகளுக்கிடையில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்விரயமின்றித் தெளிவாகப் புரியவைக்கவேண்டியதைச் சர்வதேசத் தரப்புகள் புரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படுத்தவும், சிந்தனையும் மொழியும் பின்னிப்பிணைந்த, சட்டமும் அரசியலும் இணைந்த, மொழிப் புலமை முக்கியமானது. 2013-2014 ஆம் ஆண்டுப்பகுதியில் தமிழ் சிவில் சமூக நகர்வு முன்னெடுக்கப்பட ஆரம்பித்த போது இந்தத் திறமை முன்மாதிரியாக வெளிப்பட ஆரம்பித்திருந்தது. ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்குள் அந்தப் போக்கு மங்கிவிட்டது. சட்டம், கல்வி, ஊடகத்துறைகளில் இருந்து இராணுவத் துறைவரை “unambiguity”, “to the point”, “less is more”, “KISS (Keep It Simple, Stupid) method” என்று பலவிதமாக இந்த நுட்பம் எடுத்தியம்பப்படுகிறது. ஆங்கில மொழியில் வேண்டிய சுருக்கத் தன்மைக்கு இடமில்லாத போது, சட்டத்துறையில் இலத்தீன் மொழியிலான கலைச் சொற்களைக் கையாளும் வழமை இருப்பதை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில உதாரணங்கள் எடுத்துக்காட்டியிருக்கும். இவை சார்ந்த அறிவியற் திறமைகளை வளர்த்துக்கொள்ளாது, கொள்கைகளை நீட்டி விரித்து எழுதப் புறப்பட்டு, அவற்றைப் பலவாய் இலக்கமிட்டுப் பெருக்கி, புலம்பலாக ‘அலம்புவது’ புலமையற்ற செயற்பாடாகும். இந்தக் கைங்கரியத்தில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற அமைப்பு தற்போது களம் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதைத் திருத்தவேண்டியது அவ்வமைப்பில் ஈடுபடுவோருக்கும் ஈழத்தமிழர் சமூகத்துக்குமான ஒட்டுமொத்தச் சவாலாக அமைகிறது. அரசியற் தமிழ் மொழியின் நிலை கேடாயிருப்பதும், ஆங்கில மொழிப் புலமை குறைவாயிருப்பதும், திரிபுவாதத்தை கருவியாக்கி அரசியல் செய்யும் இரு மொழித் திறமை கொண்ட அரசியல்வாதிகளுக்கு மேலும் வாய்ப்பாகிவிடுகிறது. ஆதலால், மொழியிலும் சிந்தனையிலும் ஆழமான கரிசனையோடு கொள்கைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். புலம்பல்களாக அன்றி, தேற்றங்கள் போல அவை வெளிப்படவேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றே உறுதியும் இறுதியுமான ஈழத்தமிழர் அரசியல் வேணவா (அரசியல் அபிலாசை) பற்றிய மக்களாணை கொண்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். அதை விடுத்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதியுயர் இலக்கு என்றும் திம்புக்கோட்பாடுகள் குறைந்த இலக்கு என்றும் கூடியது-குறைந்தது (maximum vs minimum) என்று சுயநிர்ணய உரிமைக்கு அளவுகோலிடுவதும், ஈழத்தமிழர் சுய நிர்ணயத்தை வெளியகம்-உள்ளகம் என்று பிரித்துச் சித்தரிப்பதும், அரசியற் தீர்வு குறித்த புதிய மக்களாணை பற்றிப் பேசுவதும் ஜோர்ஜ் ஓர்வல் சொன்னது போல் ஊழற் சிந்தனையாகும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்தில் உள்ள எந்தப் பொது அமைப்பாயினும் முதலில் ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய அலகுக்குரிய (self-determining unit) மறுக்கவொண்ணா சுயநிர்ணய உரிமையைச் (inalienable right of self-determination) சரிவரப் புரிந்து கையாளத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு மூன்றுவிதமான இறைமைப் பின்னணிகள் உள்ளன: (1) வரலாற்றுவழிவந்த இறைமை, (2) போராடிப்பெற்ற இறைமை, (3) இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய (பரிகார) இறைமை. இதை ஈழத்தமிழர் இறைமைப் புரிந்துணர்வு எனலாம். இது 2012 ஆம் ஆண்டிலே வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. முழுமையான சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் வழியில் மூலோபாயக் கொள்கை இலங்கை அரசியலமைப்பின் எந்தக் கட்டுப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டதாக நியாயப்படுத்தப்படவேண்டும். ஈழத்தமிழர் தேசம் எனும் போது, புலம்பெயர் ஈழத்தமிழர் அதில் ஓர் இணைபிரியா அங்கம் என்பதும் வெளிப்படுத்தப்படவேண்டும். தீவுக்கு வெளியேயுள்ள தமிழீழரும், தமிழ் நாட்டவரும் ஏனைய உலகத் தமிழரும் வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணையின் படி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கோடு, ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் கூட்டாட்சி கதைக்கும் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒவ்வா நிலையை ஏற்படுத்துகின்றன. இதைப் போலவே, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பான நிலைப்பாடும் முக்கியமானது. இன அழிப்புக்கான நீதிகோரல் பற்றிய கொள்கை பேசப்படும் போது, அதன் சட்ட நியாயாதிக்கத்தை ஆள்புல நியாயாதிக்க (territorial jurisdiction) அடிப்படையிலும், காலவெல்லை நியாயாதிக்க (temporal jurisdiction) அடிப்படையிலும் செல்லுபடியாகும் உச்ச நியாயாதிக்கங்களை உள்ளடக்குவதாக வரையறுக்கவேண்டும். இன அழிப்புக்கான நீதிகோரலை மேற்கொள்ளும் போது அதற்குள் உள்ளடங்கும் ஏனைய குற்றங்களை (போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள்) அதற்குச் சமாந்தரமாக அதுவும் இதுவும் என்ற தோரணையில் அடுக்கக் கூடாது. அதைப் போலவே அவை அனைத்துக்கும் பொதுமையான பெருங்குற்றங்கள் (mass atrocities) போன்ற பொதுச் சொல்லாடலுக்குள் இன அழிப்பு என்ற அதியுயர்க் குற்றத்தைப் புதைத்தல் ஆகாது. தெளிவற்ற பலபொருள்படும் தன்மைக்கு (ambiguity) ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, ஐ.நா.வில் எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை வைத்து ஈழத்தமிழர் கோரிக்கைகளும் அவர்தம் கொள்கை சார் விடுதலை அரசியலின் படிமுறைகளும் வடிவமைக்கப்படல் ஆகாது. எமது விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்று நியாயப்பாடுகளின் வெவ்வேறுபட்ட படிநிலைகளின் கூர்ப்புத் தன்மையோடு உலகப் பரப்பை நோக்கிய கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும். சாத்தியமில்லை என்று வல்லாதிக்க உலக ஒழுங்கு கருதுவதைச் சாத்தியமாக்குவதே போராட்டமும் அதற்கான கொள்கை சார் விடுதலை அரசியலுமாகும். “பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் ஆரம்பம்”, “பதின்மூன்றுக்கும் மேலிருந்து ஆரம்பம்”, “கூட்டாட்சி”, “ஜனாதிபதி ஆட்சியென்றால் இணைப்பாட்சி, நாடாளுமன்ற ஆட்சியென்றால் கூட்டாட்சி,” போன்ற இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளை ஒவ்வொரு தரப்பும் தமக்கேற்ற வகையில் கையாண்டு பலபொருள்படும் தன்மையை சர்வதேச அரங்கில் உருவாக்குவதற்கு இனிமேலும் இடமளித்தல் ஆகாது. அத்தோடு, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பாகவும், காலத்துக்குக் காலம் ஈழத்தமிழர் தாயக எல்லைகள் குடியமைவை (demography) மாற்றும் நோக்கோடும், தமிழர் தாயக ஆட்சிப்புல ஒருமைப்பாட்டை (territorial integrity) சிதைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்ற காலனித்துவம் (Sinhala Settler Colonialism) தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமைக்குரியவர்கள் யார், எந்த ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதென்ற திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஆண்டுக்குப் பின்னர் குடியேறியவர்களும் அவர்வழி வந்தோரும் அவ்வாறான பொதுவாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவான எல்லைகளும் வரம்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் கொள்கைகளை சர்வதேச மட்டத்தில் ஏற்புடையதாக்கும் வகையில் படிநிலைச் செயற்பாடுகள் நடைபெற வேண்டும். இதற்கு ஏதுவான முதற்படியாக ஈழத்தமிழர் தாயகம் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம் (Occupied Homeland) என்பதைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர் தரப்புகளும் இணைந்து பிரகடனப்படுத்த முன்வர வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தாயகமும் அதன் தேசமும் எனப்படுவதன் நியாயப்பாடு நிறுவப்படவேண்டும். அடுத்த படிநிலையாக, நீட்சியான இன அழிப்புத் தொடர்பாக ஏற்கனவே வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை விட மேலும் தெளிவாகவும் கச்சிதமாகவும் நிறுவப்படுவதாக தாயகத்துக்கு உள்ளே முழுத் தமிழர் தாயகத்தையும் இணைத்ததாக அடுத்தகட்டத் தீர்மானம் வெளியாகவேண்டும். இந்த இரண்டு படிநிலைகளும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டால் பொதுவாக்கெடுப்பு (referendum) என்ற நிலைப்பாடு தீவுக்குள்ளிருந்து தெளிவாக வலியுறுத்தப்படுவது சாத்தியமாகும். கூட்டாட்சிக்குப் (federation) பதிலாக இணைப்பாட்சி (confederation) என்ற நிலைப்பாட்டை ஐயந்திரிபறவும் மனவுரத்தோடும் தீவுக்குள்ளிருந்து வலியுறுத்த இந்தப் படிமுறைகள் இடமளிக்கும். மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வது போலவோ, தற்போதுள்ள தமிழரசுக்கட்சி சொல்வது போலவோ எழுந்தமானமாகக் கூட்டாட்சி என்று கொள்கை வகுக்கப்பட்டால், சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்க முடியாத தீர்வுத்திட்டங்களே பிரேரிக்கப்படும். பல விதங்களில் மேற்குறித்த புரிதலோடும் திறமையோடும் தமிழ் சிவில் சமூகம், தமிழ் மக்கள் பேரவை ஆகிய முன்னெடுப்புகள் 2013-2014 காலப்பகுதியில் சிறப்பாக ஆரம்பித்திருந்தன. ஆனால், அவையும் நாளடைவில் மூலோபாய ரீதியில் தவறிழைத்தன. அதற்கு எடுத்துக்காட்டு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தின் அவசர கால அதிகாரம் பற்றிய உறுப்புரை 21.1. ஒருபுறம் சுயநிர்ணய உரிமையை எடுத்தாள்வதான எடுகோளுடன் எழுதப்பட்ட அந்தத் தீர்வுத் திட்டம் மறுபுறம் அதே சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது. எழுந்தமானமான கூட்டாட்சிக் கோரிக்கையும் தேர்தல் அரசியலும் ஈழத்தமிழரை எங்கே இட்டுச் செல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதையே இன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தீர்வுத்திட்டமாகச் செப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது விந்தையிலும் விந்தை! அதை நினைவுபடுத்தி இந்தக் கட்டுரையை முடிவுசெய்யலாம்: எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வரைபுகளை நாமே முன்வைப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. இவ்வாறான விஷப்பரீட்சைகளில் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது ஆக்கபூர்வமான திசையில் அதன் நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதை உறுதிப் படுத்திக்கொள்வது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகிறது. https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39988
  23. எண்ணப் 😂பறவை சிறகடித்து .........! 😍
  24. “தென்னை மரத்துல ஒரு குத்து…பனை மரத்துல ஒரு குத்து” 😂 🤣
  25. எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣 ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎
  26. ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஹிந்தியாவை கை கழுவிவிட்டாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய் விடும். இன்னுமொன்று.... ஹிந்தியர்களுக்கு இலங்கையில் தங்கள் ஆதிக்கம் இல்லாமல் போனால் ஏதாவது காரணம் கூறி மீதமாக இருக்கும் தமிழர்களை அழிக்கவும் தயங்கமாட்டார்கள். இந்த நாசமாய் போன ஹிந்திய தலையீடுகள் இல்லாதிருந்தால் விடுதலைப்புலிகள் காலத்திலேயே தமிழர்களுக்கு ஒரு விடிவு பிறந்திருக்கும். இதற்கு சிங்களமும் ஆயுத்தமாக இருந்ததாம். இடையில் புகுந்த ஹிந்தியெனும் மந்தி........😡
  27. சிங்கபூர் தொலைக்காட்சி மனதை உலுக்கிம் உக்கிரேன் உண்மை நிலவரங்களை காட்சிப்படுத்தியுள்ளது, வழமையான மேற்கின் பிரச்சாரம் போலல்லாமல் உண்மையான சமூக நலனுடன் சமூக பிரச்சினைகளை கூறுகிறது. வல்லரசுகளின் ஆதிக்க போட்டிக்கு பலிக்கடாவாகிய இன்னொரு தேசத்தின் உண்மை கதை.
  28. சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.
  29. எதுவுமே ஒருவரால் தான் தொடங்கப்படுகிறது. இந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக நம்பிக்கை தரும்.
  30. யாயினி அவர்களே! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இலங்கையில் கருணக் கொலைக்கான காப்புறுதி நிறுவனம் ஒன்று உருவாகும் என நம்பலாம், கவலை வேண்டாம்.😋
  31. சுமந்திரனும் சாணக்கியனும் இந்தியாவுக்கு ஊதியிருந்தால் போற்றப்பட்டிருப்பர் இல்லையா? இந்தியாவிற்கு கழுவும்வரை தமிழருக்கு விடிவு இல்லை. 😁
  32. முன்புள்ள ஓய்வு வயது என்ன? நான் அங்கு இருக்கும் போது ஆண்களின் ஒய்வு வயது 55. பெண்களின் ஒய்வு வயது 50 ஆக இருந்தது. இந்த ஓய்வு வயதுகளை ஜேர்மன்காரனுக்கு சொல்ல... விழுந்து, விழுந்து சிரிக்கிறான். இங்கே இப்போ... ஆண்களின் ஓய்வு வயது 67, பெண்களின் ஒய்வு வயதும் 67தான். போற போக்கில் 70´தில் கொண்டு வந்து விடுவார்கள் போலுள்ளது.
  33. 70 வயது நபர் 25 வயசு பொண்ணுடன் கதாநாயகனாக ஒரு படம் நடித்தால் அதை பார்த்து மகிழக்கூடியவர்கள் 52 வயது நபர் 25 வயசு பெண்ணிடம் மயங்குவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்? நமது 52 வயசு சுவிஸ் கீரோவை எங்கள் யூரியூப் தம்பிமார் பேட்டி கண்டு இணைத்தால் பலருக்கும் பிரயோசனப்படும். பல் உள்ளவன் பகோடா சாப்பிடுறான்.
  34. தேவியர் இருவர் முருகனுக்கு . .........! 😍
  35. ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை. அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.
  36. அப்பிடியில்லை விசுகர், நாங்கள் வேண்டாப்பெண்டாட்டி என்றாலும் அணைத்துக்கொண்டுதான் படுப்பம், மேலேயுள்ளவன் பார்த்துக்கொள்வானேன்றுவிட்டு நிரைக்கு பெத்துப்போடுவம்!!
  37. இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில் இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும். வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை. ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள். இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. இங்கு நடப்பதும் victim blaming தான்.
  38. அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......! 😂
  39. இலங்கை தமிழ் அரசு கட்சி.
  40. பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல் அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
  41. இனவாத செயல்களை கட்சி பேதமின்றி சகலரும் செய்வார்கள் ...83 இனக்கலவரத்கின் பொழுது முக்கியமாக தமிழர்களின்,மற்றும் இந்திய நிறுவனங்களை திட்டமிட்டு அழித்தவர்கள் ஜெ.வி.பியினர் ..அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களின் மீது தான் இறுதியில் முடிவடைவது வழமை..
  42. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர். --> புரட்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.