Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    11531
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46790
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/11/24 in all areas

  1. மனிதம் இன்னும் ..... அண்மையில் சென்ற வெள்ளிக் கிழமை சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை கவனமாக நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு அவர் கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். மனைவி கைத்தடியுடன் நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட போது வயதான மனைவி என்னை ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார் . பெண்மணியும் வாருங்கள் உள்ளே செல்வோம் என அழைத்து, உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென்று பாதணியைக் கழற்ற வேண்டும் உதவி செய்கிறேன் என்றார் . அவரை இருத்தி (buckle )கழற்ற முற்படும்போது தனக்கு வெறுங் காலோடு நடக்கமுடியாது . காலுறைபோடவேண்டும் என்று கூறி கைப்பையில் இருந்த புதிய காலுறையை எடுத்தார். பரவாயில்லை தாருங்கள் என்று கூறி முழந்தாளிட்டு மெதுவாக காலுறையை மாட்டி விடடார். வயதானவர் நன்றி சொல்லி நிமிர்ந்த வேளை , ஒருவாறு தேடி காரை தரிப்பிடத்தில் விட்டு பதறியவாறு (மனைவி எங்கே என்று ) .வந்தவருக்கு அவருக்கு உதவி செய்யும் பெண்மணியை கண்டதும் திரும்ப திரும்ப நன்றி சொன்னார்.அவரும் பரவாயில்லை. பெரியவிடயமல்ல. என் தாய்க்கு செய்வதுண்டு என்றார் . தூரத்தே பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு, முன் பின் தெரியாத ஒருவருக்கு , பளபளக்கும் பட்டுச்சாரி கசங்கும் என எண்ணாது உதவி செய்தமை , " இன்னும் மனிதம் வாழ்கிறது "என எண்ணிக் கொண்டேன். .அந்த பெண்மணி நல்ல, பண்புள்ள உதவும் மனப்பான்மையுள்ள பெற்றவர்களால் வளர்க்க பட்டுள்ளார் என மனதார வாழ்த்திக்கொண்டேன். பெரியவர்களின் ஆசி என்றும் வாழவைக்கும். .
  2. நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். குடி போதையில் சிலபேரோ அருகில் வந்து அமருறார் கொஞ்சநேரம் போன பின்பு குரங்குப் புத்தியை காட்டுறார். கைபேசி பேசிக்கொண்டு-சில சாரதியோ ஓடுறார். சடும் பிறேக்கு போட்டுப் போட்டு சனத்தை சாவடிக்கிறார். ஐம்பதற்கு மேற்பட்டோர் இருந்த பஸ்சில் ஒருநாள் ஏந்தம்பி மெதுவாயோடு-என எழுந்ந்து நானும் சொன்னேன் என்கருத்தை ஏற்றுக்கொண்டு இருவர் மட்டும் எழுந்தார் ஏன் சோலி என்றதுபோல் மற்றவர்கள் உறைந்தார். விபத்தொன்று நடந்தபின்பு விம்மி அழுதென்ன விளிப்போடு நாமிருந்தால் விடியும் எங்கள் நாடு. தொடரும்… அன்புடன் -பசுவூர்க்கோபி.
  3. பாக்கிஸ்தானுக்கு இப்ப தன்மானப்பிரச்சனை எகிறிப்போய் நிக்கிது. 😎 கலோ சிறிலங்கா உங்களுக்கு குலைப்பன் அடிக்க வைக்க எங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை காணும். லெக்சன் வேற வருது.கவனம். இப்படிக்கு பாக்கி பாக்கிஸ்தான்
  4. அட .....இது எங்கு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை . .......நானும் அவளும் (கவனிக்கவும் நாங்கள் அல்ல) கலந்திருந்தால் இப்ப கார் அவளின் கராஜில் நின்றிருக்கும் . ......இவர்கள் கூறிய பொருத்தமில்லாத பொருத்தங்களை விட எனக்கும் அவளுக்கும் ஒன்று கூட அதுதான் செவ்வாய் பொருத்தமும் பொருந்தவில்லை . ....... இனி வாழும் காலத்திலும் நானும் இவளும்தான் சீனியர் புரியுதா . ........! 😴
  5. போரின் போது... ஸ்ரீலங்காவுக்கு உதவி செய்த பாகிஸ்தானை புறக்கணிப்பது சரியல்ல. இந்தியர்களுக்கு சலுகை காட்டி... பாக்கியை ஓரம் கட்டுவது நன்றி மறந்த செயல். இதை இலங்கை முஸ்லீம்கள் தட்டி கேட்க வேண்டும். 💪 வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி என்ன நித்திரையா கொள்ளுகிறார். 😂 கமோன் சிலோன் முஸ்லீம்ஸ்... பாகிஸ்தானுக்கு ஆதரவாக கை கோருங்கள். 🤣 ஓட்டகத்தையும், பாகிஸ்தான் காரனையும் அண்ட விடக் கூடாது என்று பழமொழியும் உண்டு.
  6. அவர்கள்.... பழம் தின்று, கொட்டை போட்ட முதியோர்கள் ஐயா.... அதை பார்த்து ரசிக்க என்ன இருக்கு? 😂 உங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. 🤣
  7. தேர்தல் என்று வந்து விட்டால், தமிழருக்கு எதிராக வீராவேசமாக கத்தி கூட்டம் நடத்துவார்கள், அப்போதும் அவர்களுக்கே வாக்களித்தோம். இப்போ நயவஞ்சகமாக ஏதும் தராமலேயே வாக்கு போடும்படி வற்புறுத்துகிறார்கள், அப்பவும் அடிமைகள் சிங்களத்துக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன கண்டோம்? கூண்டோடு அழித்துவிட்டு வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்கிறார்கள். தமிழரின் வாக்குகளை வீணாக, எந்த நிபந்தனையுமில்லாமல், இனாமாக வாங்கிக்கொடுத்து அவர்களின் உணர்வுகளையும் நிலங்களையும் பறிகொடுத்து பலவீனமாக்கியதே தமிழரசுக்கட்சிதான். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்பதை இல்லாதொழிக்கவே சுமந்திரன் புகுத்தப்பட்டார். இந்ததேர்தலோடு அவரும் அவரது அரசியலும் இல்லாமல் போகவேண்டும். பொது வேட்ப்பாளர் தோற்றாலென்ன வென்றாலென்ன எதுவும் நமக்கு குறையப்போவதில்லை, ஆனால் இனிமேல் எங்களை வைத்து தேர்தலில் வெற்றியடையும் ஏமாற்றும் தந்திரம் நிறுத்தப்படும். அதோடு சிங்கள மக்கள் எதிர் காலத்தில் நமக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் சிங்களத்துக்கு தொடர்ந்து வாக்களிக்க முடியுமென்றால், அவர்கள் ஏன் நமக்கு அளிக்கக் கூடாது? குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன் எனும் நிலை மாறவேண்டும்.
  8. அப்படித்தான் ஒன்றாக இருந்தோம், விசுகு ஐயா. உங்களுக்கு இங்கிருக்கும் பலரை விட மிக நன்றாகவே எங்களின் வரலாறு தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரதேசம் பல கூறுகளாகப் பிரிந்தே கிடந்தது. என்னுடைய ஊரே இரண்டாகப் பிரிந்து இருந்தது. பின்னர் ஒன்றாகியது. ஒரு தலைமை, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம், அதை விட முக்கியமாக அந்த தலைமையின் அந்த இலட்சியத்தை அடைந்து விடலாம் என்று நாங்கள் எல்லோரும் அன்று நம்பியது, இவை தான் அந்த ஒற்றுமைக்கு காரணம். இன்று அப்படியான ஒரு நம்பிக்கையை கொடுப்போர் என்று எவரும் எங்கள் மத்தியில் இல்லை..............😌.
  9. நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
  10. பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,"சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும். இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்" என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, https://www.facebook.com/100042065541571/videos/859387266158952/? https://tamilwin.com/article/tamil-general-candidate-prapoganda-jaffna-1726065769#google_vignette
  11. தேசிய தலைவரின் தலைமையின் கீழ் புலிகள் இருந்த போது இப்படி நடக்கவில்லையே. பிறகேன்.. புலிகள் மீது இப்பவும் காழ்பை கொட்டுவதில் குறியாக அலைகிறீர்கள் நீங்கள் சிலர். பங்கு பிரிப்பதில்.. இந்தக் குழுக்கள் மட்டுமல்ல.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ.. தமிழர் விடுதலை கூட்டணி.. ஈபி.. என்று எந்த தமிழ் குழுவும்.. பாரபட்சமின்றி வெளிநாட்டு வீதிகளில் அடிபட்டதை காணவில்லையோ..! அது உங்கள் இனத்தின் ஜீன். புலிகளின் தவறல்ல. புலிகள் மீதான தடை அடாத்தானது.. அநாவசியமானது.. மொத்த ஈழத்தமிழர்களையும் அடிமையாக்கியது.. இதனை செய்த மேற்குலகம்.. ஏதோ ஒரு வகையில்.. ஈழத்தமிழர்களுக்கு எதிராக பெரும் இன அழிப்பு அநியாயத்தை செய்யவும் அடக்குமுறை கோலோஞ்சவும் தான் வழி சமைத்துள்ளன. இதில்.. உக்ரைனில்.. நேட்டோவுக்காக.. வக்காளத்து.
  12. ஒருக்கால் கட்டின சாறி இரண்டாம் தரம் கட்டுற பழக்கம் உங்களிட்ட இருக்கா? 😄
  13. அண்ணா அவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
  14. விசுகர்! தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் தாங்கள் தென்பகுதி கடலுக்குள் தள்ளப்பட்டு விடுவோம் என சிங்களம் இன்றும் நினைக்கின்றது.
  15. நாட்டின் பஸ்பயண கொடுமையை பயங்கரமாய் சொல்லியிருக்கிறியள்.
  16. சிறுவயதில் பாடசாலைக்கு சென்ற அனுபவங்கள் நினைவிற்கு வந்தது. கவிதைக்கு நன்றி.
  17. ஒரு தமிழன் ஜனாதிபதி ஆவதை இந்த கூட்டம் விரும்பவில்லை போலும்.நாங்கள் யார் என்று காட்டும் தருனம் இது.😆
  18. அது ஒரு 39 + இருக்கும் . .........அரசமரத்தை சுத்த ஆண்டவன் தந்தது மூன்று . .....! 😂
  19. பொதுவாகவே சண்டை போடுபவர்கள் இருவரும் ஒரு சமாதான நிலைக்கு வந்து விட்டால், அங்கே மூன்றாம் தரப்பிற்கு இடம் இல்லாமல் போய்விடும். புடின் தான் சண்டையை நிறுத்த வேண்டும். புடின் ஏன் இதுவரை நிறுத்தவில்லையென்றால், இது இப்போது ஒரு தன்மானப் பிரச்சனை ஆகிவிட்டது அவருக்கு. இரண்டு வாரங்கள், இரண்டு மாதங்கள், இரண்டு வருடங்கள் என்று நீண்டு கொண்டிருக்கின்றது. புடின் சண்டையை நிற்பாட்ட மாட்டார் என்றே நினைக்கின்றேன். ஒன்றில் அவர் வெல்ல வேண்டும், அல்லது அவர் இல்லாமல் போகவேண்டும். அதுவரை அவர் தொடர்வார்.
  20. உண்மை சொல்வதில் அக்கா ஒரு "அரிச்சந்திரி " வாழ்க வாழ்த்துக்கள் . ......! 😂
  21. சாறி கசங்கி விடும் என்ற சுய நலம் தான். 😄
  22. ட்ரம்ப், கமலா இருவரில் யாருக்கு வாகு போடுவீர்கள் என கேட்ட எனது 9 வயது குழந்தையிடம், அது அமெரிக்க் தேர்தல் அதில் நாங்கள் வாக்கு போட இயலாது என கூறினேன். உண்மையில் உலகில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு போடும் உரிமை வழங்க வேண்டும்😁, விரும்பியோ விரும்பாமலோ உலகின் தலைவிதியினை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கா உள்ளது, இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அது போல ஒரு யுத்தம் தோன்றக்கூடாது எனும் நோக்கில் ஐநா போன்ற பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, சில நேரத்தில் ஒப்புக்கு சப்பாணியாக (?) இந்த் அமைப்பினூடாக அனுமதியினை (திணிப்பினை) பெற்று பிற நாடுகளை ஆக்கிரமித்த அமெர்க்கா தற்போது தன்னிச்சையாக எதுவும் செய்யும் நிலைக்கு வந்துள்லது, ஒரு புறம் இந்த அமைப்புகளை தான் விரும்பும் நாடுகளுக்கெதிராக தீர்மானம் எடுத்தால் அதனை கண்டிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, குறிப்பாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல் விடயத்தில் அமெரிக்காவின் பங்கும் அதில் இஸ்ரேலினை பாதுகாக்க எடுக்கும் முயற்சியினையும் குறிப்பிடலாம். தற்போது உலகை ஒரு 3 ஆம் உலகப்போரினை நோக்கி நகர்த்தும் நிலை ஏற்படுவதற்கு காரணமான ஐ நாவின் கையறு நிலை தோன்றுவதற்கு ஒரு நாட்டின் நலன் சார் நேச நாட்டுக்கொள்கைகள் காரணமாகி விட்டது. அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தநிலையில் மாற்றம் ஏற்படது, ஆனால் அமெரிக்க ஒற்றை உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பல் துருவ உலக ஒழுங்கில் ஐநாவின் பங்கு முதன்மை படுத்தப்பட்டால் அதற்கான சூழல் உருவாகலாம்.
  23. தகவலுக்கு நன்றி, கந்தையா அண்ணை. அப்ப... ரணிலின் கண்ணசைவின் படி, சுமந்திரன் தன்னிச்சையாக, தமிழரசு கட்சியின் மத்திய குழுவையும் மீறி... சஜித்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். வருகின்ற 15´ம் திகதி மக்களுக்கு இன்னும் ஒரு பொய்யும் பிரட்டும் சொல்லப் போகின்றார்கள். மக்கள் அவ்வளவு முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் போலுள்ளது.
  24. செய்தியில் பார்த்தேன் சஜித் க்கு ஆதரவு என்று முடிவு எடுத்த இரண்டாவது நாள் இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது
  25. சாணக்கியனை விட சுமந்திரனுக்கு ஏன் காசு குறைய கிடைத்தது என யோசித்தேன். 100 கோடி என்று நீங்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ளக் கூடியதே. சாணக்கியன் இன்னும்... சுமந்திரனிடம் கற்க நிறைய உள்ளது.
  26. இதனை நீங்கள் சிரிக்காமல் சொன்னதுதான்.... சிறப்பு. "Go Home Gotha" அரகலய போராட்டத்தின் போதே... கிழவன்களை கூட நிர்வாணப்படுத்தி ரசிக்கும் கூட்டத்தையும் பார்த்தோமே.... 😂
  27. 1 - நீங்கள் ரசிய எல்லை மற்றும் இறையாண்மை பற்றி கவலைப்படும் அளவுக்கு உக்ரைன் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி கவலை கொள்ளவதாக தெரியவில்லை. 2 - பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி பல சகாப்தங்களாக ஒரு முடிவை எட்ட முடியாத இந்தியா பற்றிய உங்கள் கருத்து?????
  28. கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்) அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........! 😴
  29. உண்மைதான் மனிதம் வாழ்கிறது . ....... அது மென்மேலும் வாழவேண்டும் . .......! 👍
  30. தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்.. தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்.. இப்படிஅமைந்த பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்தபடி எப்படி ஒற்றுமை வகுப்பை எடுக்க முடியும்..?
  31. கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். ஆனால் வடமராட்சியில் இப்போது மூன்று லீக்குகள் இருக்கின்றதென்று நினைக்கின்றேன் - வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு. இதில் யாரைக் கூப்பிடுவது, யாரை விடுவது என்று அது வேற ஒரு பிரச்சனை இருக்குது. ஏன் தேவையில்லாத வம்பு என்று தான் உடுப்பிட்டியில் பரிசளிப்பு விழா நடத்தவில்லை போல.........
  32. இதில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாரை தமிழரசு கட்சியில் இடைநிறுத்தி வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள் சிறிதரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கபட வேண்டும்
  33. ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/prxb4BYdqQSjydXq/
  34. இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣
  35. ஒரு கட்சிக்குள், சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி. ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி. பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி. சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம். தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.
  36. உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள். “ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும். கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம். இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை . எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்; “ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே” “ வேணாம் மாமி” “ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்” “அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ….. “அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும். உடன மகனுக்கு கோல்; “என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க; மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை. வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர். கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம். மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம். ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது. அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம். அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  37. இறந்த உடல்களை நிர்வாணப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களில் அகப்படுகின்றவர்களின் ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தி, இன்பம் காணும் அளவுக்கு டிசிப்பிளின் மிக்கவர்கள் அவர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.