Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2951
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/27/24 in all areas

  1. இது இன்னொரு திரியில் பேசப்பட்ட, 2020 தேர்தல் முடிவுகளோடு தொடர்பானது என்பதால் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்: யாழ் அரச அதிபர் வேதநாயகம் 2020 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர் அரசினால் இடம் மாற்றப் பட்டார். அந்த வேளையில் இடமாற்றத்தை இடை நிறுத்தும் படி பாராளுமன்றத்தில் வற்புறுத்தியது சுமந்திரனும், சரவணபவனும். பின்னர் வந்தவர் தான் அரச அதிபர் மகேசன். 2020 தேர்தல் நேரம், இவர் தான் யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுலவலர். 2020 இல் வாக்குகள் திருடப் பட்டன/மாற்றப் பட்டன என்று முறையிடும் நபர்கள், உண்மையில் மகேசனைத் தான் விசாரிக்கத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால், அரச அதிபர் மகேசனோ நேர்மையான ஒரு நிர்வாகி எனப் பெயர் பெற்றவர். நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் கறாராக இருந்த ஒருவர். இதனால் தான் டக்ளஸ், அங்கஜன் ஆகியோரின் தூண்டுதலால் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக அனுப்ப ப்பட்டார் என நம்பப் படுகிறது. இங்கே பொயின்ற் என்னவென்றால்: அரசியல் காழ்ப்புணர்வினால் பரப்பப் படும் போலித் தகவல்கள், வதந்திகள் victimless crimes அல்ல! "2020 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் முறைகேடுகள் நடந்தன" என கதை பரப்புவோர், மகேசனின் நேர்மையையும் களங்கப் படுத்துகிறார்கள். நூற்றுக் கணக்கான தேர்தல் பணியாளர்களின் சேவையையும் களங்கம் செய்கிறார்கள்.
  2. ஏனப்பா எப்ப பாத்தாலும் புடுங்குப்படுறியள்.பகல்ல சங்கை வைச்சிருங்கோ .. இரவில குத்து விளக்க வைச்சிருங்கோவன் 😎
  3. புதிதாக பதவியேற்ற அநுர என்பவர் தற்போது வீசும் அநுர அலையை தக்க வைக்கவேண்டுமென்றால், திடீரென தமிழ் மக்களிடம் அவர் பக்கம் வீச தொடங்கிய நன்மதிப்பை தக்க வைக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தமிழர் சார்பில் பாராளுமன்றத்திலும், அரசிலும் அங்கம் வகித்த எவரையும் தனது அரசவையிலோ மக்கள் நிர்வாக சேவைகளிலோ சேர்த்து கொள்ளவே கூடாது. அதுவே தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.
  4. சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
  5. பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠ ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள். குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள். ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள். எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும். https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220 ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?! பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.
  6. "தோஷமும் விரதமும்" / பகுதி 01 மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதையும் கூறலாம். இதனால் தான் இது அந்த காலத்தில் மதத்துடன் இணைத்து இருக்கலாம்? மதம் என்பது அன்று திக்கு திசை இல்லாமல், ஆடு மாடு போல நாகரிகம் அடையாமல் திரிந்த மனிதர்களை ஒரு வழி படுத்தி, ஒரு ஒழுங்கை நிலை நாட்ட ஏற்படுத்திய ஒன்றாகும். என்றாலும் காலப்போக்கில் அது தன் முதன்மை நோக்கை இழந்து பல மதங்களாக பரிணமித்து, ஒவ்வொரு மதமும் தன் இருப்பை வைத்துக்கொள்ள போட்டிகளிலும், வியாபாரங்களிலும் ஈடுபட்டன. ஆகவே இன்று விரதங்களின் விளக்கம் மதத்துக்கு மதம் வேறுபடுகின்றன எனலாம். மேலும் மனிதனின் பலவீனத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரதத்தை ஒரு ஆயுதமாகவும் மத குருமார்கள் பாவிக்க தொடங்கினார்கள். உதாரணமாக தோஷம் மற்றும் பரிகாரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு தோஷத்துக்கும் அல்லது குற்றத்துக்கும் விரதத்துடன் சேர்ந்த ஒவ்வொரு பரிகாரத்தையும் எடுத்துக் கூறி தம் இருப்பையும் வியாபாரத்தையும் அதன் மூலம் வலுப்படுத்தி கொண்டார்கள் என்று கூறலாம். ஆறுமுகநாவலர் விரதம் என்பது, "மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்" என்கிறர். இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் "ஒருவேளை உண்பான் யோகி இருவேளை உண்பான் போகி மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் பாவி" என்று கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. விரதம் இருப்பது மத நம்பிக்கை என கருத்துக்கள் இருந்தாலும், விரதத்திற்கு பின்னால் இருப்பது உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானம் என்பதை இந்த பாடல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள் பொதுவாக. நமது வயிறு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருக்கா, ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனை யொட்டித்தான் எல்லா மதங்களுமே விரத்தை கடைபிடிக்கின்றன எனலாம். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது. இது ஒரு ஆரோக்கியமான வழி முறை ஆகும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். அதேபோல, ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்து மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி எனவும் மற்றும் பல வகையான விரதங்கள் ஒவ்வொரு மாதமும் காணப்படுகின்றன. விரதத்தை இரண்டு முக்கிய வகையாகவும் பிரிகிறார்கள். ஒன்று எதிர் பார்ப்புடன் கடைபிடிப்பது. மற்றது எதிர் பார்ப்பு இன்றி கடைப்பிடிப்பது. உதாரணமாக தோஷ பரிகாரமாக செய்வது முதல் வகையாகும். குறிப்பிட்ட தோஷத்திற்கான பரிகாரத்துடன் கூடிய விரதங்களை தவிர, வாரத்தின் ஏழு நாட்களுக்கும் கூட விரதம் உண்டு. உதாரணமாக, திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் முழுமையான அன்பையும், செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீக்கவும், புதன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நோய் தீரவும், வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறவும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் செல்வம் பெருகவும், ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறவும் அல்லது நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்கிறது இந்து மதம். மேலும் ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்றும் கூறுகிறது. இந்த விரதங்களில் ஒன்றை கவனித்தீர்களா ?, மனைவியின் நீண்ட ஆயுளை வேண்டியோ அல்லது மனைவியின் முழு அன்பை வேண்டியோ ஒரு விரதமும் இல்லை. இது என்னத்தை காட்டுகிறது ? விரதங்கள் எல்லாவற்றிற்கும் விதி முறைகளும் உண்டு. உதாரணமாக, விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும். அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று என்கிறது. மேலும் ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகளும் உண்டு. மாதவிலக்கான பெண்கள், குழந்தை அண்மையில் பெற்ற பெண்கள், அண்மையில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பத்தினர் போன்றோர் விரதம் கடைபிடிக்க முடியாது என்கிறது. அது மட்டும் அல்ல, விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது என்றும் ஒரு ஒழங்கையும் வரையறுக்கிறது. விரதங்களை மேற்கொள்வதால், மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை அது மேலும் அதிகமாக்கிறது. அதேநேரம் அது ஓழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. உடல் ஆரோக்கியமும் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது பிரச்சினைகள் குறைகின்றன. தனிமனிதன் நன்மை பெறுவதனால் அவன் குடும்பம் நன்மை பெறுகிறது. இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விஞ்ஞான முறைப்படியோ அல்லது எந்த முறைப்படியோ ஆராய்ந்தாலும் விரதங்கள் நமக்கு ஒரு போதும் விரோதமான நிலைமைகளைத் தரவில்லை என்பது மட்டும் உறுதி. [தோஷமும் விரதமும் பிராமண இந்து சமயம் பெரும்பாலும் புகுத்தியதால், இங்கு பல சோதிடர்கள் கையாளும் சமஸ்கிரத சொற்கள், அப்படியே இந்த கட்டுரையில் உள்வாங்கப் பட்டுள்ளன] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
  7. நற்பேறு ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது. ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகு முன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கை கொண்டிருப்பது தான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது, மனைவி, பிள்ளைக்கு கொடுப்பது என இளமை முதல் வயோதிகம் வரை ஆண்கள் தம் உழைப்பை பணமாகவும் சொத்தாகவும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எப்போதுமே இதைச் சுரண்டலாகப் பார்ப்பதில்லை - வரதட்சிணையை எடுத்துக்கொள்ளுங்கள். கொடுக்க முடியாததால் துன்பப்பட்ட பெண்ணுக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நாம் அதைக்கொடுக்க தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்து போண்டியாகும் அப்பாவுக்காக வருந்துவதில்லை. சொத்து, பணம், பண்பாடு, சட்டம், நடைமுறையென்று வந்துவிட்டால் உண்மையில் இது ஒருவிதத்தில் பெண்ணாதிக்க சமூகம்தான். ஆண்களுக்குப் பேசத் தெரியாது, அவர்கள் அடிப்படையில் முட்டாள்கள் என்பதால் இதை உணரவோ, பிறருக்கு உணர்த்தி நியாயம் கேட்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஓரமாகப் போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்கள். நான் கடந்த சில ஆண்டுகளில் நான் இத்தகைய ஆண்களை ஏகத்துக்குப் பார்த்திருக்கிறேன் - என் நண்பர் ஒருவருக்கு விவாகரத்தானபோது அவரது ஊடகவியலாளர் மனைவி அவர் தான் இருபதாண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பிலும் திரைக்கதை எழுத்திலும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே குழந்தையைத் தருவதாக பேரம் பேசிப் பெற்றுக்கொண்டார். இதையே அவர் அப்பெண்ணுக்கு செய்திருந்தால் சிறையில் தள்ளியிருப்பார்கள். நம்மூர் சட்டம் சொல்வதென்னவென்றால் குழந்தை பெறுவது, கூட வாழ்வது போன்ற பெண்கள் ஆற்றும் சேவைகளுக்காக ஆண்கள் தம் ஒட்டுமொத்த சொத்தை பணத்தை மொத்தமாகவோ பாதியோ கொடுத்து சரணடைய வேண்டும் என்று. இதுவரையிலும் இது மறைமுகமாக பேரமாக நடக்கிறது. இனிமேல் விரைவில் இது சட்டமாகப் போகிறது என்று சட்டமறிந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது உண்மையிலே ஜாலியாக இருக்கும் - இப்போது பெண்ணிய கொடி தூக்கும் பல ஆண்களுக்கு ஆசனத்தில் நெருப்பு வைத்து ஓடவிடுவார்கள். பல மோசடித் திருமணங்கள் இதற்காகவே நிகழும். சரி ஜெயம் ரவி விவகாரத்துக்கு திரும்ப வருவோம் - ஒருவிதத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் உண்டு. அவரது மனைவி நினைத்தால் மாதத்திற்கு சில லட்சங்கள் கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குப் போகலாம். நீதிபதியும் நிச்சயமாக அத்தொகையை அனுமதித்து ஆணையிடுவார். ஆனால் ஜெயம் ரவி தரப்பு தன்னை படத்தயாரிப்பின் பேரில் ஏமாற்றிச் சுரண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்குப் போடுவார். இந்த வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். கடைசியில் சமரசம் பண்ணிக்கொள்வார்கள். ஜெயம் ரவி மீதமிருக்கும் காரையும், குடும்ப சொத்தையும் விற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கவில்லை என்பது அவரது நற்பேறு. Posted Yesterday by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_26.html
  8. 2015 இல் எதிர்க கட்சித் தலைவராக இருந்த சம்பந்தன் ஐயா பதவியை இழந்த பின்பும் கடைசிவரை எந்த வீட்டையும் வாகனத்தையும் கொடுக்கவே இல்லை என்று சொன்னார்கள். இப்போது ஐயா இருந்திருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?
  9. பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு. கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401306
  10. சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது. இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின் இதுதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி! ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம். அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம். எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும். தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது. இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1401122
  12. உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி.... சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅
  14. போலந்திடம் அணுவாயுத நாடு அல்ல. உங்கள் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள்.
  15. இங்கும் இதே நிலை தான்.சிலர் விழுந்து , விழுந்து சாமி கும்பிடுவார்கள் ஆனால் விரத நாள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரே மச்ச சாப்பாடாக இருக்கும்.நமக்கு அதைப் பார்க்கும் போது அருவருக்கும்..ஆனாலும் எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சூழ் நிலை கைதிகள் தான்.
  16. இதை சிரிப்போடு சிந்திக்கவும் . ...... இப் பதிவை எங்கு பதிந்தால் எல்லோரையும் சென்றடையும் என்று யோசித்து இங்கு பதிவிடுகிறேன் . .......ஒரு வைத்தியரின் நகைச்சுவையுடன் கூடிய பொருள் பொதிந்த பேச்சு . ........ உங்களின் செலவில்லாத ஆரோக்கியத்திற்காக சில நிமிசம் ஒதுக்கி பார்க்கலாம் . ........ 😂
  17. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களில் மகேசன் என்ற பெயரும் இருந்தது: Mr. K. Mahesan -- Secretary Ministry of Sports and Youth Affairs
  18. முத‌லாவ‌து இனிங்சில் 182 ர‌ன்ஸ் அடித்து நொட் அவுட் விட்டால் 200 அடிச்சு இருப்பார் அல்ல‌து அத‌ற்க்கு மேலையும்😁 இவ‌ர் நேற்று 50 அடிக்க‌ முத‌ல் நியுசிலாந் வீர‌ர் இவ‌ரின் க‌ச்ச‌ விட்டு விட்டார் அத‌னால் தான் இல‌ங்கை 602 பெரிய‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம்......................இல‌ங்கை வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்தில் நியுலாந் வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவின‌ம் வெற்றி இல‌ங்கைக்கு தான் நியுசிலாந் அணி வீர‌ர்க‌ளால் மூன்று நாள் தாக்கி பிடிக்க‌ முடியாது..................காலி மைதான‌ பிச் 4ம் நாள் 5ம் நாள் மாறுப‌டும் அப்பேக்க‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் ஆட்ட‌ம் இழ‌ப்பின‌ம்.................ம‌ழை வ‌ந்தாம் விளையாட்டை ச‌ம‌ நிலை ஆக்க‌லாம்....................................
  19. இல‌ங்கை அணி பெரிய‌ இஸ்கோர‌ நீண்ட‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு அடிச்சு இருக்கின‌ம் நியுசிலாந் ஒன்றில் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ பார்க்க‌னும் இல்லையேன் இல‌ங்கை வென்று விடும்..............................................
  20. பொதுவேட்பாளராக களமிறங்குபவர் இனிமேல் எந்த தேர்தல்களிலும் பங்குபெற மாட்டார் என்ற உத்தரவாதத்துடனேயே களமிறக்கப்பட்டார். இதனாலேயே பலரும் பின் வாங்கினார்கள். ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். என்னையா இரவில் விளக்கை அணைத்துத் தானே பழக்கம். இதென்ன சாட்சி வைத்து காதல் பண்ணுற பழக்கம்? வடக்குக்கு பழைய அரச அதிபர் மகேசனுக்கே பதவி கொடுத்துள்ளனர். இவர் மகத்தான சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் அங்கயனும் டக்கிளசும் அவர்கள் கைக்குள் போட முயன்று முடியாமல் போக அவரை மிகவும் மிரட்டியே வெளியே விட்டார்கள் என்கிறார்கள். இதுபற்றி மேலதிக தகவல்கள் யாருக்கும் தெரிந்திருந்தால் சொல்லலாம்.
  21. அப்பாடா, அன்றாட சாப்பாட்டுக்கு மொய் எழுதியாச்சுது . ........! 😂
  22. நியாயம் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இப்படியான குற்றத்திற்கு மரண தண்டனை, ஆயுள்தண்டனை. ஒரு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கும், மேல்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனை அல்லது தண்டனைக்கால குறைப்பு செய்யும். பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன பலர் தண்டிக்கப்பட்டுமுள்ளனர். அவர்களுக்குகாக வாதாட அவர்களை விடுவிக்க பல பிரபல வழக்கறிஞர்களே முன்வருகிறார்கள். விசாரணை தாமதம், மேல்நீதிமன்றம், அதற்கு மேல் நீதிமன்றம், குடியரசுத்தலைவரின் கருணை என்று முறையீடுகள், மனுக்கள் போட்டு தண்டனை குறைப்பு அல்லது தப்பித்தல் என்று வெளியே வந்து, மீண்டும் அதே குற்றமிழைக்கிறார்கள், பயம் விட்டுப்போய். ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒரு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தீர்ப்பை இன்னொரு நீதிமன்றம் மாற்றியமைப்பது என்பது. அப்படியென்றால் நீதிமன்றத்துக்கு என்ன மதிப்பிருக்கிறது? மாறி மாறி நீதிமன்றம் சென்று காலம், பணம், சக்தி விரையம் செய்து, தீர்ப்பை நீர்த்துபோகச்செய்வதை விட்டு ஒரே நீதிமன்றமாக செயற்பட்டால் காலவிரயம் இல்லாமல் ஒரே முறையில் தண்டனையை நிறைவேற்றலாம். நீதிமன்றம் மேல் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நம்பிக்கையுமிருக்கும்.
  23. ஒரு மீனை உண்ண.... பாம்புக்கும், கொக்குக்கும் போட்டி.
  24. அரியத்தாருக்கு இடம் கிடைக்குமா? அல்லது பலிகொடுக்கப்பட்டாயிற்றா? 🤣 சிச்சுவேசன் சாங் 👍 என்ஜாய் மக்களே
  25. பாடசாலைகளில் உள்ள கட்டடங்கள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களையும் நீக்கிவிடவேண்டும். அத்திவாரம் போட்டார், திரைநீக்கம் செய்தார், திறந்து வைத்தார், அடிக்கல் நாட்டினார் இவர் அவர் என பாடசாலைகளில் உள்ள கல்வெட்டுக்கள், நினைவு பதிவுகளையும் நீக்கம் செய்வார்களா?
  26. சந்திரிக்கா ஆட்சிக்கு வந்த போது ஒரு இறாத்தல் பாணின் விலை சரியாக நினைவில்லை 3.50 ? என நிர்ணயித்து சிறிது காலம் அதனை நடைமுறைப்படுத்தியுமிருந்தார் என்பதாக நினைவுள்ளது, அதாவது அடிப்படை அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை குறைப்பு (மானியங்கள் மூலம்) தற்போதய நிலையில் நடைமுறை சாத்தியமில்லை, ஐ எம் எப் விலைகள் மிதக்க விடப்பட்ட நிலையினையே விரும்புகிறது, அத்துடன் அரச பாதீட்டில் மேலதிக சுமையினை செலுத்தும் இது எதிர்காலத்தில் கடன் மீழழிக்கும் போது நாட்டை முற்றாக கையறு நிலைக்கு தள்ளும். வேணுமென்றால் பாராளுமன்ற தேர்தல் வரை குறுங்காலத்திற்கு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் ஆனால் அது கூட பொருளாதார அழுத்தத்தினை அரசின் மேல் சுமத்துவதுடன் ஐ எம் எப் உடனான உடன்படிக்கையினை மீறுவதற்கு ஒப்பானது அதனால் ஐ எம் எப் இலங்கைக்கான கடனை இரத்து செய்யும் நிலை ஏற்படலாம். இலங்கை பிரச்சினை தொடர்பான புரிதல் இவருக்கு இல்லையோ என தோன்றுகிறது, அடிப்படை பிரச்சினைதான் இலங்கையினை இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது, தனிச்சிங்களம் என ஆரம்பித்த இந்த பிரச்சினைக்களை உருவாக்கின பெரும்பான்மை சமூகத்தில் மன மாற்றம் ஏற்படாது ஆனால் அடிப்படை கட்டமைப்பில் (அரசமைப்பு சட்டம், மற்றும் சமூக சட்டங்களில்) சீர் திருத்தம் கொண்டு வரவேண்டும். இவருடைய கருத்துகள் பெரும்பான்மையினரை பின்பற்றவேண்டும் என்பதாக உள்ளது, இலங்கை அரசியலில் ஏற்கனவே சிறுபான்மையினர் கொடிகள் போல பெரும்பான்மை எனும் மரத்தின் மேல் படர்ந்திருக்க வேண்டும் என கருத்து கூறியவர்கள் இருகின்றார்கள், அவர்களை விட எந்த விதத்திலும் இவர் வேறுபட்டவராக தெரியவில்லை. இவரும் ஒரு வழமையான இலங்கை அரச தலைமை போலவே இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன ஏதாவது அதிர்ஸ்டவசமாக இவரது ஆலோசனையாளர் திறமையாக இருந்தால் சில வேளை மாற்றத்தினை எதிர்பார்க்கலாம். பொதுவாக இடது சாரி அரசுகள் மக்கள் நலன் திட்டங்களில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு ஒரு தற்காலிக நலன் இவரது கட்சியால் கிடைக்கும் என கருதுகிறேன். அதனால் இலங்கையின் லீ குவான் ஆக இவர் நிட்சயமாக இருக்கமாட்டார், இவரும் ஒரு வழமையான இலங்கை அரசியல்வாதிதான். சிறந்த தலைவர்களிடம் big picture கண்ணோட்டம் இருக்கும், எப்படி பொருளாதாரத்திற்கு ஒன்றுக்கும் உதவாத மூலகங்களை கொண்ட சிங்கப்பூரைசிங்கப்பூரை வளர்தெடுத்த லீ குவான் போல இலங்கையினை முன்னகர்த்த தேவையான அடிப்படை பண்புகள் ஏதாவது இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம் (தற்போது அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை)
  27. அவர்கள், இத்தனை காலமும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டாலும் கொள்கை ஒன்று, ஆட்கள் மாறி மாறி வெல்லும் கட்சியில் உட்காருவார்கள். இப்போ மட்டும் ஏன் கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள்? அதிகாரம் தங்களது கைவிட்டு போனால், இனிமேல் தங்களுக்கு அரசியல் கிட்டாது என்று தெரிந்து விட்டார்கள் போலும். தமக்குள்ளே மாறி மாறி வைத்திருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். எங்கே, தட்டுத்தவறி தமிழருக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து விடுவாரோ, பின் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை என்பதும் கவலையாயிருக்கும்.
  28. இது தான் நிதர்சனம். அதை விட்டுட்டு பலம்பெயர் சிங்னளவர் எப்படி இப்படி அனுராக்காக பாடுபட்டு அரசை அமைத்துள்ளார்கள் என்பதெல்லாம் வெறும்கதை. தமிழர்களை போரில் வென்ற கோத்தாவை வெல்லவைக்க வெளிநாட்டு புலம்பெயர் சிங்களவர் போய் வாக்கு போட்டு வெல்ல வைத்ததே சாதனை.
  29. 🤣........... அவ்வளவு பெரிய பொதுநலவாதிகள் வெளிநாடுகளில் இருப்பது போல தெரியவில்லை........ ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்த்லுக்கு 11 பில்லியன் ரூபாய்கள் தேவை என்று தேர்தல் ஆணையாளர் கேட்டிருக்கின்றார். இரண்டு தேர்த்லுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு. பெரிய செலவு தான்............ இது மக்களின் பணம் தான். ரணில் தான் இருப்பில் ஐந்து பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக விட்டுச் செல்கின்றேன் என்று அவரது கடைசிப் பேச்சில் சொல்லியிருந்தார்........... அங்கேயிருந்து தான் எடுப்பார்கள் போல.
  30. ஒரு விடயம் எதற்காக எழுதப்பட்டது, எந்த கேள்விக்கு பதிலாக எழுதப்பட்டது போன்ற விடயங்களை வாசித்து விளங்க முயற்சிக்க வேண்டும். புரிதல் கடினமாக இருந்தால் அதனை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும். அப்போதும் புரியவில்லை என்றால்…… no comment. That my attitude .
  31. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை கவனியுங்கள். ஜேவிபி போர் அழிவுளை விட்டு சென்றதாலோ பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின் தியாகத்தினாலோ மட்டும் அநுர ஜனாதிபதியாக தெரிவாகவில்லை. சிங்கள மக்களும் அதற்காக வாக்களிக்கவில்லை. போர் அழிவுகளுக்கு பின்னர் அவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சியாக ஜனநாயக பாதையில் மிக நீண்ட காலம் வேலை செய்தார்கள். பல படித்த இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்கினார்கள். அவர்களுடன் பல கலந்துரையாடல்களை செய்து தமக்குள் உள்ள முரண்பாடுகளை கருத்தியல் ரீதியில் அணுகி கட்சியை கிட்டத்தட்ட மக்கள் பணிக்கு தயாராக உள்ள கல்வியாளர்கள் குழுவாக மாற்றினார்கள். இறந்த தமது போராளிகளை மதித்தாலும் அவர்களின் தியாகத்தை வைத்து அவர்களின் பெருமைகளை மட்டும் பேசி கட்சி நடத்தவில்லை. ஜேவிபின் தவறுகளை நியாயப்படுத்தவில்லை. மாறாக தாம் ஆயுதப்போரட்ட காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டார்கள். அத்துடன் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசினார்களேயொழிய இறந்த போரளிகளை பற்றி தினமும் பேசவில்லை. முக்கியமாக ஆயுத போராட்ட காலத்தில் தாம் செய்த தவறுகளை நியாயப்படுத்தவில்லை இவர்களை தமிழர் அரசியலுடன் பொருத்தி பாருங்கள். தம்மை காலத்துக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் வெறும் கோஷங்களையும் கருத்து முர்ணபாடு வரும்போது அவர்களை துரோகிகள் என்று திட்டுவது பொய்களை புனைந்து வசைமாரி பொழிவது ஆயுத போராட்டதில் போராளிகள் செய்த தவறுகளை இன்றும் நியாயப்படுத்துவது முதலியவற்றுடன் இறந்த போராளிகளை வைத்து அரசியல் செய்வதையுமே இன்றும் தாயக/ புலம் பெயர் அரசியலளர்கள் செய்கின்றனர். இவர்களின் அரசியல் சுயநல அரசியல் பிழைப்புக்காக தமது இறந்த தலைவரை கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் இரண்டையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்?
  32. ரஜீவ் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். மேலே சொன்னதை போல எமது தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சார்ந்தே இவரது அரசியல் இருக்கிறது. சிறிதுங்க விஜயசூரியவோடு சேர்ந்து வேலை செய்கிறார் என நினைக்கிறேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட அரசியல் முன்னெடுப்பு அது.
  33. உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்). என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.
  34. மன்னிக்கவும் உங்கள் கருத்துகள் ரொம்ப சரியானது ஆனால் அந்த சொல்பவர்கள் முட்டாள் இல்லாமல் இருக்க வேண்டும் ஒரு முட்டாள் மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால் உண்மையில் அவர்கள் புத்திசாலிகள் தான் 🙏🙏🙏
  35. தனி நபர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு அரசின், அரச இயந்திரத்தின் தன்மையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது. சந்திரிகா வர முதல், அவரை சமாதான தேவதை என்று போற்றினர். தனிப்பட்ட ரீதியில் அவர் இனவாதி அல்ல என்றனர். வன்செயல்களால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி என்பதால் அவர் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றனர். அவரும் அவ்வாறு தான் தன்னை வெளிக்காட்டி இருந்தார். ஆனால் இலங்கை அரசும், அரச இயந்திரமும் முற்றிலும் பெளத்த பேரினவாதமயப்படுத்தப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல், தனி நபர்களின் குணாதிசயங்களால் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. அதனால் தான் இனவாதி அல்ல என்று அறியப்பட்ட சந்திரிக்கா ஈற்றில் போரில் கடும் உயிர்பலிகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த குமார் பொன்னம்மபலத்தைக் கூட பாலபெட்டபெந்தியி மூலம் படுகொலை செய்தார். அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரம், தமிழ் மக்களிற்கு இன்று இருக்க கூடிய சில நெருக்கடிகள் மேலும் குறையும்.
  36. கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான். நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும். இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர். தக்கண பிழைக்கும்.
  37. ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசியதை தலைவருக்குக் கூட சொல்லவில்லை என்று தான் எழுதினேன். நீங்க தான் பின்கதவைத் திறந்துவிட்டுட்டு இப்போ யார்யாரையோ எல்லாம் சாட்சிக்காக இழுத்துக் கொண்டு திரிகிறீர்கள்.
  38. தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி. நாங்கள் இன்னமும் தமிழர்களின் சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப் பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும். யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச் செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான். தமிழர் ஒருங்கிணைப்பானது விடுதலைப் புலிகளின் சகல நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம் ‘புலிகள் புராணம்’ பாடுவதைத் தவிர வேறு பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன். இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்
  39. மிரளவைக்கும் தமிழ் பேச்சு ........! 👍
  40. துருக்கிகளின் அடுத்த தலைமுறையின் ஒரு பகுதி நன்றாக கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். மற்றைய பகுதி முஸ்லீம்களுக்கே உரிய வியாபாரம், சிறு தொழிற்சாலைகள் என்று நிறுவி... பணம் கொழிக்கும் தொழிலை செய்கின்றார்கள். ஆனால்...அவர்களின் அடிப்படை முஸ்லீம் வாதம் என்றுமே மாற மாட்டாது. என்றாலும்... சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற மோட்டு முஸ்லீம்களை விட அவர்கள் திறம். (ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்ததால்.. ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.) சிரியன் மாதிரி... கண்டவுடன் கத்தியை தூக்கும் பழக்கம் துருக்கிகளிடம் இல்லை. அப்படி செய்தால்.. ஜேர்மன் சட்டம் என்ன செய்யும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால்... என்னைப் பொறுத்தவுரை எந்த இடத்திலும் .... ஒரு முஸ்லீம் தனியே இருந்தால், நல்லவன் போல் இருப்பான். இன்னொரு முஸ்லீம் அங்கு வந்து சேர்ந்தால் முதல் நின்றவனும் தனது மதத்தைப் பற்றி நியாயம் பிளக்க வெளிக்கிட்டுடுவான்கள். பிறகு அவங்களை கையிலேயும் பிடிக்க ஏலாது. 😂
  41. அட ......வீதியை லைட் இருக்கும் பக்கம் போட்டிருக்கலாம் . ........இது கூடவா தெரியாது ........! 😴
  42. கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்) அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........! 😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.