Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2137
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/02/24 in Posts

  1. இப்படியான ஒரு வாய்ப்பிற்காக இஸ்ரேல் எத்தனை வருடங்கள் தவமிருந்தது. ஈரானின் அணு உலைகள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், மின்னிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வாய்ப்பை ஈரானே இஸ்ரேலுக்கு கொடுத்து விட்டது. முல்லாக்களின் அட்டகாசம் கன நாட்களுக்கு தொடரப் போவதில்லை. அமெரிக்க தேர்தலில் தீவிர வலதுசாரியான ட்றம்ப் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் ஈரானுக்கு. தன் முதலாவது ஆட்சியிலேயே ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அவர்களின் அணு விஞ்ஞானியை கொன்று இருந்தார்.
  2. ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.
  3. அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
  4. பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.
  5. விரும்பியோ விரும்பாமலோ சிங்களவருடனே இலங்கையில் சேர்ந்து வாழ்கின்றோம், சேர்ந்து வாழ்வோம். தமிழர் எனும் ஒரே காரணத்திற்காக அயோக்கியர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேசமயம் சிங்கள அரசியல்வாதிகள் யோக்கியர்கள் என்றும் இல்லை. நீங்கள் இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் வாழவேண்டும். அப்போது பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.
  6. தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன‌ - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..
  7. தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!
  8. "காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் நீ இழக்காதே! நல்லதை இணையத்தில் நன்கு தேடி நன்மை பெற்றிடு நலமாய் வாழ்ந்திடு!" "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "மடியில்சாய்ந்து மனதை பறிக்கும் மங்கையே கூடிக்குலாவி கொஞ்சி சிணுங்கும் மரகதமே ஆடிப்பாடி அழகு கொட்டும் மயிலே தேடியென்னை வந்து அணைத்தது எனோ? நொடிப்பொழுதில் என்னை கவர்ந்தது எதற்கோ?" "மீசைதொட்டு கண்கள் இரண்டாலும் காதல்சொல்லி ஓசையில்லாமல் செவ்விதழால் முத்தம் பதித்து இசையும்தோற்கும் இனிய குரலால் அழைத்து அசையாநெஞ்சை உருக வைத்த பெண்ணே! ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. சுமந்திரம் புகழ் சுமந்திரன் உந்த விசயத்திலை பேய் காய்.
  10. எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....
  11. என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது சரியானது.
  12. பந்தி பந்தியாய் விளக்கம் கொடுப்பதை வட நாலு வரியில் நச்சென்று நன்றி விசுகர் அண்ணா .
  13. மனித வாழ்வின் இயல்பே நிறைந்துள்ள நினைவுகளும் அதனை அசைபோடுவதும் மட்டுமே. தன்னந்தனியே அமைதியாக சாளரம் வழியே பார்க்கும்போது எம்மைத் தொடர்வதும் நினைவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. இந்தியாவினுடைய முகவர்கள் இந்தியாவை அனுசரிக்காது எப்படி இலங்கையில் அரசியல் செய்வது. சுகபோகமாக வாழ்வது.முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் குருதி வழிந்தோடியவேளை இந்தியாவில் இருந்து மௌனம்காத்தவர்களை இன்னுமா நம்புகிறீங்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இவர்கள் எங்கே ஒன்றாக, ஒரே கட்சியாக நின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிப் பின்னர் காயந்த இலைகளாக உதிர்ந்து துகள்காளகப் போயுள்ளனவே. த.தே.கூட்டமைப்பின் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனத் தொடங்கி தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பாகி நிற்கிறது. தனித் தனி மனிதர்களே கட்சிகளாக நிற்கின்ற நிலை . எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்ற ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புகள் அருகியே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி திருத்தம்
  15. பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠ ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள். குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள். ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள். எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும். https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220 ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?! பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.
  16. 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்) வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
  17. தங்களின் விருப்ப ஊடகங்களை யாழ் கள உறவுகளுக்கு தெரிவிக்கலாமே?
  18. ஈரான் பக்கமும் ஒரு நியாயம் இருக்குது தானே.......... தாங்களும் அந்த இடத்தில் ஒரு சண்டியர் என்று அவர்கள் இருந்து கொண்டு, கையாட்களும் வைத்துக் கொண்டு இருக்க, இஸ்ரேல் அவர்களின் வீடு புகுந்து ஈரானின் கையாட்களை போட்டுத் தள்ளியது ஈரானுக்கு கொஞ்சம் மன உளைச்சலை கொடுத்து இருக்கும் தானே....... அந்த மன உளைச்சல் தீர அணுகுண்டு செய்யப் போகின்றோம் என்று ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கலாம், ஈராக்கிற்கு மெல்லிசா அடிச்சிருக்கலாம்.......... இப்படி ஏதாவது செய்து நிலைமையை ஒப்பேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு ஏவுகணைகளை இஸ்ரேலிற்குள்ளேயே விடுவதா........... இஸ்ரேல் சில நிறைபோதையில் நடக்கும் மனிதர்கள் போல......... போதை உச்சிக்கு ஏறியதும் நேராக பாரிலிருந்து போய் எதிரிப் பங்காளியின் வீட்டின் கதவைத் தட்டுவார்கள்......... நமக்கேன் வம்பு என்று ஊரும் ஒதுங்கிவிடும்............. ** இப்ப கொஞ்ச நாளா 'பார்' என்ற சொல் எங்கே போனாலும் பின்னாலேயே வந்து கொண்டிருக்கின்றது.............
  19. கல்வியறிவு என்றால் என்ன என்பது தொடர்பாக திரு செல்வின் அவர்கள் தெரிவித்த கருத்தை இங்கே இணைத்திருக்கிறேன். தலைப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லாவிடினும் உபயோகமான காணொளி. https://www.facebook.com/JaffnaJet/videos/1189968685601502/?mibextid=ngobeXctTp5pD3Zm
  20. சென்ற சனிக்கிழமை நான் மேற்கொண்ட அந்தப் பதிவுக்குப் பின் இன்றுதான் (புதன்கிழமை) 'மெய்யழகன்' படம் எங்கள் ஊர் அரங்கில் பார்த்தேன். படம் பற்றிய எனது சுருக்கமான பார்வை (சுருங்கிய பார்வையல்ல என்று நினைக்கிறேன்) : இயக்குநர் பிரேம்குமார் திறமையானவர் என்பதில் ஐயமில்லை. நான் பெரிய முக்கியத்துவம் தராத, என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு உணர்ச்சிப் பெருக்கை நானே ரசித்துப் பார்க்க வைப்பதில் வல்லவர். மசாலாப் படங்களைத் தவிர்த்து ஓரளவு நல்ல படத்தைத் தருகிறார். தமிழில் இப்போதெல்லாம் இவர் போல் சில திறமையான இயக்குநர்கள் தமிழ் ரசிகர்களின் ரசனையைப் பக்குவப்படுத்தித் திருப்ப முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று. நான் படம் பார்க்கச் சென்ற இன்று முதல் சுமார் பதினெட்டு நிமிடங்கள் படத்தைக் கத்திரித்து விட்டார்கள். படத்தின் நீளம் கருதிக் குறைத்ததாகப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. ஆனால் நேற்று அரங்கில் (வடக்குக் கரோலினாவில்) படம் பார்த்த என் மகள் சொன்ன தகவல் - படத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், ஈழப்போரில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியம்/துரோகம் இவை பற்றிய உரையாடல்களில் கத்திரி வைக்கப்பட்டுள்ளது என்பது. அப்படியானால் படத்தின் நீளம் கருதியா குறைத்திருப்பார்கள் ? இவை பெரும்பாலும் இந்திய ஒன்றிய அரசின் நெருக்குதலால் நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழத்தில் இறுதிப் போர் நிகழும் போது கலைஞர் ஆட்சியின் நிகழ்வுகளையும், தற்போது சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் இன்றைய மாநில அரசு சாம்சங் நிர்வாகத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் பார்த்தால், இவர்களும் நெருக்கடி தந்திருக்கலாம். எல்லாம் முதலாளித்துவ அரசுகள்தாமே ! எது எப்படியோ, அனைத்து அடக்குமுறைக்கும் உள்ளாகி மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் போல் எழுந்து நிற்பதே தமிழினம் என்பதை வரலாறு மட்டுமல்ல, 'மெய்யழகன்' படம் கூட நினைவுறுத்துகிறது.
  21. இதில் ஒரு சிறிய திருத்தம்: இலங்கையில் சட்டக் கல்லூரியில் முடிக்கும் சட்டக் கல்வியின் பட்டம் LLB- இளமாணிப் பட்டம். இது இருந்தால் இலங்கையில் சட்டத் தொழில் செய்யலாம். மேலே தரப்பட்டிருக்கும் LLM என்பது சட்ட முதுமாணிப் பட்டம் - இதனை அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலையில் பெற்றார். இன்னொரு தகுதியைக் குறிப்பிட மறந்திருக்கிறீர்கள். "ஜனாதிபதி சட்டத்தரணி-President's Counsel" என்ற கௌரவம் சும்மா "பள்ளிக் கூடம் ஒதுங்காத"😎 ஆட்களுக்குத் துக்கிக் கொடுக்கும் நிலை இன்னும் இலங்கையில் ஏற்படவில்லை. சுமந்திரன், கனக ஈஸ்வரன் , சிவா பசுபதி, கமலசபேசன் , எங்கள் விக்கி ஐயா ஆகிய சில தமிழ் சட்டத்தரணிகள் இந்த கௌரவம் பெற்றிருக்கிறார்கள். பி.கு: கல்வித் தகுதிகளில் ஆர்வம் மிகுந்த விசயகாரரான பெருமாள் transcripts கேட்பார்! றெடியாக வைச்சிருக்கிறீங்களா😂?
  22. என்ன தம்பி எல்லாத்தையும் பக்காவா கிண்டி மறைச்சிட்டியள் போலை கிடக்கு. குரல் உயருது
  23. என்ன சார் நெத்தன்யாகுவை எல்லாம் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கின்றீர்கள். நீங்கள் ரொம்ப பயங்கரமான ஆள்தான் போல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபெற்ற உத்தமர் இவர்தானே?
  24. மாஜ வலைக்குள் விழும் மான்கள். தில்லை நீங்க கதைகளோ கவிதைகளோ எழுதும்போது எதற்கேற்ப படங்களையும் சுட்டு இணைத்துவிடுகிறீர்கள். பிரமாதம்.
  25. Bar license பிரச்சனையை மறைக்கிறதுக்கு பயபுள்ள எப்பிடி ஓடுது பார் (இதிலும் "பார் " தானா 😁) விரைவில் இந்திய அரசியல் வியாதிகள் எங்கள் அரசியல் வியாதிகளிடம் பாடம் எடுக்க வேண்டி வரலாம்,..🤨
  26. சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். மனது சுத்தம் இல்லாத மனிதன். வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.
  27. இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் - இரண்டு விமானதளங்களை இலக்குவைத்தது ஈரான் - சிஎன்என் 02 OCT, 2024 | 08:09 AM இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் தலைமையகத்தின் மீது அல்லது அதற்கு அருகில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதையும் நெவட்டிம் விமானப்படைதளம், டெல் நொவ் விமானப்படை தளம் ஆகியவையும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதையும் வீடியோக்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இந்த இலக்குகளை ஈரான் தாக்கலாம் என அமெரிக்க இஸ்ரேல் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர், ஈரான் தனது மூன்று விமானப்படை தளங்களை தாக்கலாம் என இஸ்ரேலிற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன, என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்எனிற்கு தெரிவித்துள்ளன. விமானப்படை தளங்கள் கட்டளை பீடங்களை ஈரான் இலக்குவைக்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இஸ்ரேலிற்கு தெரிவித்தனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரின் கிலிலொட் பகுதியில் உள்ள மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் இரண்டு ஏவுகணைகள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன. இது ஒரு குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நெகெவ் பாலைவனத்தில் உள்ள நெவட்டிம் தளத்தில் ஈரானின் பல ரொக்கட்கள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன. இஸ்ரேலின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் உள்ள டெல்நொவ் தளம் தாக்கப்பட்டுள்ளதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/195283
  28. 70, 80 களில் சிறுவனாக இருந்தபோது நான் இவரின் தீவிர ரசிகன். இவருடைய அனேக‌ படங்கள அக்காலத்தில் வீடியோவில் (VHS) பார்த்துள்ளேன். (சண்டை காட்சிகளை பார்த்துவிடடு அதேபோல் பாடசாலையில் சென்று அடிபடுவது) பல படங்கள் இன்னும் மனதில் நிற்கின்றன. மூன்று முடிச்சு,காளி,தீ, மூன்று முகம், கர்ஜனை, தனிக்காட்டு ராஜா, தர்ம யுத்தம், அன்புக்கு நான் அடிமை.. புவனா ஒரு கேள்விக்குறி என பல.. கழுகு ஒரு நல்ல திரில்லர் படம். 90 களுக்கு பிறகு எனோ இவரை பிடிப்பதில்லை. இப்பொழுது யாருடைய ரசிகனும் அல்ல அஜித் படங்களை சற்று விரும்பி பார்ப்பேன். வயது போக போக மனம் இவற்றில் பெரியளவு நாட்டம் கொள்வதில்லை. சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.
  29. கொசிறுத் தகவல்: சட்டவாளர்களின் கல்வி தராதர குறியீடுகளில் சட்டம் (Law) என்பதை ஒருமையில் L என்றும் சட்டங்கள் (Laws) என்று பன்மையில் LL என்றும் குறியிடப்படும். உதாரணமாக LLB (அல்லது LL.B) படிப்பை Bachelor of laws என்றும் LLM (அல்லது LL.M) படிப்பை Masters of laws என்றும் வழங்கப்படும். அதேவேளை Bachelor of Civil Law என்று ஒருமையில் குறிக்கப்படும்போது BCL (அல்லது B.C.L) என்றழைப்பது வழமை.
  30. 🤣.... உண்மையான தமிழர்கள் இதை எல்லா இடங்களிலும் பகிர்வார்கள், இளைஞனின் விபரத்துடன்......🤣.
  31. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  32. கொஞ்சக் காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.
  33. தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
  34. எல்லை தாண்டிய பயங்கரவாதம். அன்னிய நாட்டை ஆக்கிரமித்தல்.ஆக்கிரமிப்பு. பொதுமக்கள் அழிவு. நாட்டு சுதந்திரங்கள். இதெல்லாம் உங்கள் லிஸ்ரில் இருக்கா இல்லையா விசுகர்
  35. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  36. உங்கள் பழைய சிங்கள நண்பி இடதுசாரி அல்லது ஜேவிபி ஆ?
  37. இது பெரிய மானம் மரியாதைப் போட்டி, சிறி அண்ணா. இந்த இருவரும், ரஜனியும் விஜய்யும், நானா நீயா 'நம்பர் ஒண்ணு' என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ரசிகர்களும் அப்படியே. இதில் ஈழத்தவர்களும் உண்டு........🫣. விஜய்யின் GOAT நல்லா ஓடியதா, இப்ப 'வேட்டையன்' அதைத் தாண்டிப் போக வேணும் என்று தலைகீழாக நிற்பார்கள் ரஜனியும், அவரது ரசிகர்களும். 120 ரூபாய் டிக்கட்டை 2000 ரூபாய்க்கு விற்பதை, 5 ரூபாய் பாப்கோர்னை 25 ரூபாய்க்கு விற்பதை இருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் ஊழலை அழித்து, ஒரு புதுச் சமூகத்தை இருவரும் உருவாக்குவோம் என்பார்கள்..........🤣. கருட புராணத்தில் பாப்கோர்ன் மெஷினுக்குள் ஆட்கள் போடுவது மாதிரியும் ஏதும் தண்டணை இருக்குதோ என்று தேடிப் பார்க்கவேண்டும்................
  38. உங்களின் 'நட்பென்ன உறவென்ன!' என்னும் அந்தப் பதிவை வாசித்தேன். மிகவும் அருமை, 'வாழுங்கள்...', அவர்களால், இவர்களால் உங்களின் வாழ்க்கைகளை தொலைத்துவிடாதீர்கள்...........👍.
  39. இனி ரஜனி…. இட்லி சாப்பிட்டார், இடியப்பம் சாப்பிட்டார் என்று எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப் போறதை நினைக்கத்தான் வயித்தை கலக்குது. 😂 இன்னும் ஒரு கோஷ்டி… ரஜனி நலம் வேண்டி மண்சோறு சாப்பிடும். கொஞ்சக் காலத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கப் போகுது. 🤣
  40. Bar license எடுத்துக் கொடுத்தது மறைந்த சுவாமி பிறேமானந்தாவின் வடமராட்சி ஆச்சிரமத்தின் உரிமையாளரின் மகளுக்காம். அவருக்கு ஏற்கனவே அங்கே வேறு பார்களும் உண்டாம். 🤣
  41. யாழ்கள உறவுகளே இந்த திரியை உங்கள் பாடசாலை, பல்கலை, ஊர் உறவுகள் னூடாக பகிர்ந்தால் அதில் ஒருவராவது அந்த பிள்ளையின் மருந்துவ உதவிக்கு கரம் நீட்டுவார்🙏
  42. இந்தியாவுக்கு முதுகை( back side)காட்டி கொண்டு இவர்களுடன் வேலை செய்யவேண்டும் வட மாகாணசபை ,கிழக்கு மாகாணசபை தேர்தல்களை வைத்து முதலமைச்சர்கள் நினைத்தவற்றை(சட்ட திட்டத்திற்கு அமைவாக) செய்து முடிக்க கூடியதாக இருக்க வேணும் மத்திய அரசாங்கம் தேவையில்லாமல் தலை போடாமல் இருக்க வேண்டும்...தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயல் படுவதை நிறுத்த வேணும்....சோசலிச கொள்கையை அவர் சுதந்திரமாக கடைப்பிடிப்பது போல தமிழ் தேசியத்தை தமிழர்கள் பின் பற்ற விட வேண்டும்
  43. இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.