Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்13Points20012Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points87990Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்12Points31968Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/08/24 in all areas
-
யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா
நீதிபதி இளஞ்செழியனையும் தேசிய மக்கள சக்தி களமிறக்க முயல்கின்றனர் என ஊரில் உள்ளவர்கள் சொல்கின்றனர். அப்படி அவரை இறக்கினால் நல்லது என நினைக்கிறேன்.3 points
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஈராக்கை , ஈரான் கூட அமெரிக்கனோ இஸ்ரேலோ ஒப்பிட்டு பார்த்தால் அழிவு வேறு மாதிரி இருக்கும் ஈரான் மேல் உள்ள கோவத்தை லெபனான் மீது இஸ்ரேல் காட்டுது இது முற்றிலும் கோழைத் தனம் நெத்தனியாகு தானே ஊடகம் முன்னாள் துணிந்தவர் யார் சொல்லையும் கேக்க மாட்டார் அதென்ன அமெரிக்கா தேர்தல் முடிவுக்காக காத்து இருக்கினம் என்று பாட்டி வட சுட்ட கதை சொல்லுகினம் ஆய்வாளர்கள் ஹா ஹா😁................................... ஈரானுக்கு பின்னால் சில அவரபி நாடுகள் ரஸ்சியா வடகொரியா பாக்கிஸ்தான்......................ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள் இந்த மூன்று நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஈரான் வேற அணுகுண்டு செய்து விட்டார்கள் என்று கதை அடி படுது வெளிப்படையா அறிவித்தால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மூத்தா போகும்😛....................3 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
அனேகமாக எல்லோரும் மதுபானசாலை அனுமதி பெறவில்லை என்று… தமது சுய விளக்கத்தையும், மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்கள். 👍🏽 👏🏻 சுமந்திரனும், சாணக்கியனும் தான்… திருட்டு முழி முழித்துக் கொண்டு “பம்மிக்” கொண்டு இருக்கின்றார்கள். 😂 ஓறிஜினல் சாராய வியாபாரிகள்…. சுமந்திரனும், சாணக்கியனும் தான் போலுள்ளது. 🤣3 points
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞2 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
அவரின்ட தோழர் (தலிவர்)சுழியன் பெளத்த அடையாளங்களை பாதுகாத்து சிறிலங்காவை பெளத்த நாடாக ஊழல் அற்ற நாடாக மாற்ற பாடுகிறார் ...அவரின்ட தமிழ் தோழர்கள் தமிழ்மொழியையும் அழித்து ,மத அடையாளங்களையும் அழிக்க தீயா வேலை செய்யினம்2 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
தேசியக் கட்சிகள் செய்தவேலை.2 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
இனப்பிரச்சனை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகின்றது. இலங்கையின் தலையாய பிரச்சனை ஊழல்பிரச்சனை என்பது போல் முடித்து விடுவார்களோ?2 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
புத்தன் ஆளுநர் மகேசன் சொல்வதை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். வேறு ஜனாதிபதி இந்தப் பதவியை ஏற்குமாறு கேட்டிருந்தால் ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஏதோ ஒரு பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவே தெரிகிறது.2 points
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
இதை விடபெரிய தோண்டல் எல்லாம் இருக்கு ஏன் இப்ப இதை அந்தரப்பட்டு தோண்டுகிரார்.... ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடங்கிய படியால் ....இதையும்தொடங்குகின்றார் போல...2 points
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
அண்ணை, தேசியப்பட்டியல் மூலம் நேரடி தேர்தலில் போட்டியிட முடியாத மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களிற்கு மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் வழங்கப்பட வேண்டும்.2 points
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
ஈழப்பிரியன்.... கீழே உள்ள ஐந்து செய்திகளும், கடந்த மூன்று நாட்களில் தமிழரசு கட்சியில் இருந்து விலகியவர்களின் தலைப்புடன் யாழ். களத்தில் உள்ள செய்திகளே. நிலைமை படு மோசம் போல் தெரிகின்றது. தமிழரசு கட்சி சேடம் இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. 👇 👇 👇2 points
-
ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 அக்டோபர் 2024 நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது ப்ரோக்கோலியில் அப்படி என்ன இருக்கிறது? முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற இலைதழை மிக்க ஒரு காய்கறிதான் (cruciferous vegetable) ப்ரோக்கோலி. பார்ப்பதற்கு பச்சைநிற காலிபிளவர் போன்ற இதற்கு புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை இருக்கிறது, என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரேகன் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி, நாம் உண்ணும் உணவில் சிறிய அளவில் ப்ரோகோலியைச் சேர்த்துக்கொள்வதுகூட புற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தெரியவந்துள்ளது. அந்த ஆராய்ச்சியின்படி, ப்ரோக்கோலியின் முளைப்பயிரில் (broccoli sprouts) புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகம் இருப்பதாகவும், அதற்கு சல்ஃபரோஃபேன் (Sulforaphane) என்னும் சேர்மம்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ப்ரோக்கோலியில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் கூறுகள் உள்ளதாகவும் நார்ஃபோக்கில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், மார்பக எக்ஸ்-ரேக்களில் இயல்புக்கு மாறான அறிகுறிகளைக் கொண்டிருந்த பெண்கள், தினமும் ஒரு கப் ப்ரோக்கோலி முளைப்பயிரைச் சாப்பிட்டு வந்தவுடன், இயல்புக்கு மாறான உயிராணுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோகோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன், PTEN இல்லாத செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது ப்ரோக்கோலி எப்படி புற்று நோயைத் தடுக்கிறது? ப்ரோக்கோலி போன்ற இலைதழைமிக்க காய்கறிகளில் இருக்கும் இந்த சல்ஃபரோஃபேன் சேர்மம், நமது DNAவில் ஏற்படும் மாறுபாடுகளை தடுக்கிறது. அதன்மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. ப்ரோகோலி குறித்து நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆய்வு செய்த ஒரு குழு, ‘அதிகளவில் ப்ரோகோலி உட்கொண்டவர்களுக்கு, ப்ரோகோலியைக் குறைவாக உட்கொண்டவர்களையோ, ப்ரோகோலியே உட்கொள்ளாதவர்களையோ விட, பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக’ தரவுகள் கூறுகின்றன என்கிறது. ஆனால், இந்தத் தொடர்பினை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ப்ரோகோலியில், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடண்டுகள், மற்றும் கரோடினாய்டுகள் என்ற நிறமிகள் ஆகியவை உள்ளன. இந்தக் காய்கறியை உண்பவர்களுக்கு மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறைகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் ஒரு கப் ப்ரோகோலி முளைப்பயிரைச் சாப்பிட்டு வந்தவுடன், இயல்புக்கு மாறான செல் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருந்தது ப்ராஸ்டேட் புற்றுநோய்த் தடுப்பு ப்ரோக்கோலி புற்று நோயைத் தடுக்க வல்லது என்பதை 2010-ஆம் ஆண்டு நார்ஃபோக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த அவர்கள், ப்ரோக்கோலியில் சல்ஃபரோஃபேன் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த சல்ஃபரோஃபேன், PTEN (phosphatase and tensin homolog) என்ற மரபணு குறைவாக இருக்கும் செல்களின் வளர்ச்சியைக் கடுப்படுத்துகிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது. இந்த PTEN மரபணு குறைவாகவோ, செயலிழந்தோ காணப்பட்டால், ப்ராஸ்டேட் புற்றுநோய் பரவும். மனித ப்ராஸ்டேட் தசைகள் மற்றும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், சல்ஃபரோஃபேன் புற்றுநோய் செல்களாக மாறக்கூடிய செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது கண்டறியப்பட்டது. PTEN என்பது புற்றுநோயைத் தடுக்கும் மரபணு, அது அழிந்தோலோ, செயலிழந்தாலோ அது ப்ராஸ்டேட் புற்றுநோயை ஊக்குவிக்கும், என்று நோர்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரிச்சார்ட் மித்தென் பிபிசி-யிடம் கூறியிருந்தார். ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன், PTEN இல்லாத செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் PTEN இருக்கும் செல்களின் மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, என்று அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோகோலி, வாழைப்பழம், ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நமது குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுக்கின்றது ப்ரோக்கோலியின் பிற நன்மைகள் என்ன? இது தவிர, ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன் ஆர்த்ரைட்டிஸ் நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று ஏஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். மனித செல்கள் மற்றும் எலிகள் மீதான சோதனைகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலிருக்கும் சல்ஃபோராபேன், குருத்தெலும்புகளைச் சேதப்படுத்திக் கேடுவிளைவிக்கும் ஒரு நொதியைத் (enzyme) தடுக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், லிவர்பூல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது. ப்ரோக்கோலி, வாழைப்பழம், ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நமது குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுக்கின்றது என்று கண்டறிந்தது. பிபிசி தளங்களில் வெளியான பல்வேறு செய்திகளில் இருந்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன https://www.bbc.com/tamil/articles/cwyv16gxnqxo2 points
-
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
2 pointsJasprit Bumrah now holds the second-best bowling average among bowlers with 400 international wickets, just after the legendary Joel Garner!2 points
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
ஓம்...சரியான நடவடிக்கை தான். குஞ்சு குருமன் எல்லாம் கட்சியை குடிசை கைத்தொழில் மாதிரியே தொடங்கி விட்டார்கள்.2 points
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
புத்த பிக்குமாரை. எழுந்து நிற்க வைத்தது ஒரு சாதனை தான் 5%. க்கு குறைவான வாக்குகள். பெறும். கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும்.2 points
-
"ஆதிக்க சாதி வெறி"
1 point"ஆதிக்க சாதி வெறி" கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும். அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம் என்கிறது . கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் / பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: அதிகாரம்-8 ,சுலோகம்-4,14 , அடிமைத்தனம் சூத்திரருடன் பிறந்தது. அதில் இருந்து எவராலும் அவர்களை விடுவிக்க முடியாது. அதிகாரம்-19 ,சுலோகம்-413 , பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும். அடிமையாகவே வாழவேண்டும். அடிமையாகவே சாகவேண்டும் . "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது இந்த ‘மனுதர்மம்’. "இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எப்படி பட்டவன் என்று கூற இயலும். மனுநீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே.? வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே." -திருநாவுக்கரசர் (தேவாரம்) உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம். இவரது இனத்தை புலையர் என்பார்கள். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார். நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ ?யார் அறிவார் ? நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கருத்து பாருங்கள். இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ? பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மனுதர்மத்தை [மனுஸ்ம்ருதி] நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற மனுதர்மத்தை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும். ஒரு சூத்திரன் சூத்திரருக்கு என வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள், அந்த வர்ண சாத்திர எல்லைக்குள், நல்லவனாக செயல் பட்டால், அவன் அடுத்த பிறவியில் பிராமணனாக பிறக்கலாம். ஆனால் இந்த பிறவியில் ஒரு போதும் இல்லை. இதன் பொருள் என்ன ? இது ஒரு மிகவும் புத்திசாலித்தனமான சமயத்தின் பெயரில் தீட்டப்பட்ட திட்டம் . இன்னும் ஒரு "பிரெஞ்சுப் புரட்சி (French Revolution,]" நடை பெறாமல் தடுக்க ? நன்றி1 point
-
"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ"
1 point"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" "சூரியன் மறைய, தனிமை வாட்டுதா சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா சூதுவாது தெரியா, அழகு தேவதையே சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்" "நேர்த்தியான சுருள்முடி, தோளைத் தழுவ நேரே வந்து, புன்முறுவல் எனோ நேரார் வருமுன், நான் அணைக்கவா நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்" "புத்தன் சொன்ன, கருனை இரக்கம் புரிந்தோர் சொற்பர், இன்று இருக்கினம் புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்" "அரசு தராத, பேச்சு சுதந்திரம் அழகி உன்னில், நான் காண்கிறேன் அக்கம் பக்கம், யார் இருந்தாலும் அச்சம் இன்றி, காதல் பேசு" "உன் கன்னத்தில், ஒருவன் அறைந்தால் உன் மறுகன்னத்தை, காட்டு என்றான் உகவை கொண்டு, கன்னத்தில் தந்தேன் உலோபி இல்லாமல், மறுகன்னம் காட்டாயோ " "வலிந்த குடியேற்றமும், காணாமல் போக்குவதும் வளமான ஜனநாயக, அரசின் செயல்பாடோ வளைத்துநெளித்து, மனதை காணாமல் போக்குவதும் வனப்பான எழில் மேனியின், செயல்பாடோ" "அதிகாரம் குவிய, இருபதாம் திருத்தமாம் அற்பன், தொப்பி பிரட்டி கைதூக்கினான் அன்பு குவிய, உள்ளம் திருத்தி அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [சூசகம் - மறைமுகம், நேரார் - பகைவர், புங்கலம் - ஆத்துமா, உலோபி - கருமி]1 point
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
நவம்பர் வருகிறதல்லோ,....... அனுரவையும் வெருட்டி வைக்க வேண்டுமல்லோ,......😁1 point
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
கோத்தபையன் எல்லாவற்றையும் கொண்டுபோய சேர்த்துவிட்டார். இனித் தோண்டுபவர்களுக்கு எலும்புக் கூடுகள் தான் கிடைக்கும்.1 point
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
நீண்ட நாள் யாழ் கள வாசகர் என்ற முறையில் உங்கள் ஆதங்கம் புரிகின்றது...நீங்கள் கூறுவதுதான் உண்மையும்...1 point
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
1 point
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
4.6 வலுவான நிலநடுக்கம் என்றால் @ரசோதரன் னும் @நீர்வேலியான் னும் தினம்தினம் இதே அளவில் குலுங்குகின்றனரே? அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி? அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி?1 point
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
குளவிக்கூட்டிற்கு கல்லால் எறிவது போல........ கல்லால் எறிந்து விட்டு, ஈரான் ஓடிப் போய் பதுங்கிவிடும். பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனமும், லெபனானும் தான் குளவியிடம் கொட்டு வாங்கவேண்டும்.......1 point
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
விருப்பமில்லாவிட்டாலும் இதுதான் நடக்கப் போகுது அன்றைய தேர்தலில் ஏதோ சதித்திட்டங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை. தேவாலய குண்டுவெடிப்புகள் இப்போது வெளிவருவது போல என்றாவது ஒருநாள் உண்மைகள் வெளிவரலாம். எல்லாம் சேரந்த கலவையே தமிழரசின் சேடம்.1 point
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
இது பதில் இல்லையே? ஏன் ஒரு கருத்தைத் திரித்து விளங்கிக் கொள்கிறீர்கள் என்று தான் கேட்டிருந்தேன். இப்படியே பொய் வதந்திகளையும், சதிக்கதைகளையும் நம்பிப் பட்டாசு கொழுத்திக் கொண்டிருந்தால், நவம்பர் 16 இற்குப் பின்னர் அனுர அணி வடக்கு கிழக்கில் கொண்டாடுவார்கள் பட்டாசு கொழுத்தி! சேடம் இழுப்பது தமிழரசு மட்டுமல்ல, தீவிர தேசிய பட்டாசு ரீமும் தான்😂!1 point
-
அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள்
எங்களுக்கு இந்த நல்ல ஆட்சி வேண்டாம். 😛 மதுபானசாலைக்கு அனுமதி தரும் ரணிலின் ஆட்சிதான் வேண்டும். 🤣 - தமிழ் பா.உ.க்கள். - 😁1 point
-
யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா
நல்ல விடயம். இதன் மூலம் தமிழசுக்கட்சியையும் கஜே கஜே கும்பலையும் சங்கு கோஷடியையும் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும். பதிலாக ஆற்றல் மிக்க சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும்.1 point
-
கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
கம்பகாவில் பிடிபட்டதை விட இது வேறு ஒரு அணி போல இருக்கே? இன்னும் எத்தனை எத்தனை அணிகள் தான் இருக்கிறதோ?1 point
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வசி, பார்க்கலாம், இவரது ஆட்சியில் என்னதான் தமிழருக்குக் கிடைக்கிறதென்று தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உடைக்க முயல்வார்கள். தலைவரின் இடத்துக்கு இவரைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கும். முடிந்தபின் வேதாளம் முருங்கைமரம் ஏறும்.1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சும்முக்கு, காசு வருகுது என்றால்..... புனிதமானது மண்ணாங்கட்டியாவது. 😂 எல்லாம்... திருட்டு கூட்டங்கள். இந்தத் தேர்தலுடன்... பின்னங்கால் பிடரியில் பட... ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். 🤣 💪1 point- தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
இவர்… பாராளுமன்றில் பேசியதாக ஒரு செய்தியும் நான் வாசித்ததில்லை. சில வேளை… பாராளுமன்ற “கன்டீனில்” சாப்பிட்டு விட்டு, “நித்தா” கொண்டு விடுவாரோ… 🤣1 point- சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு
அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் கட்டி எழுப்பியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறுகிறார் Published By: VISHNU 08 OCT, 2024 | 02:03 AM (நெவில் அன்தனி) கிரிக்கெட் அரங்கில் சகலமும் தன்னம்பிக்கை, மற்றையவர் மீதான நம்பிக்கை, கொஞ்சம் அதிர்ஷ்டம் என்பனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 'நான் எப்போதும் கூறுவது என்னவென்றால், தன்னம்பிக்கை, மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல் என்பதாகும். இதனை அணிக்குள் ஏற்படுத்தியுள்ளேன். அது மிகவும் முக்கியமாகும். இதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். நாம் எவ்வளவு கடினமாகவும் உழைக்கலாம். ஆனால், சிலவேளைகளில் அதிர்ஷ்டமும் நமக்கு தேவை' என அவர் குறிப்பிட்டார். 'வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடவேண்டும் என்பதில் அர்ப்பணிப்படன் இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் அவர்கள் எதை எதிர்கொண்டனர் என்பதை அறிவர். அவர்கள் துவண்டு போயிருந்தனர். இதனால் இலங்கை வீரர்களை ஆதரிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் குழுவினராவர். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்களுக்கு நான் நம்பிக்கை ஊட்டினேன். நான் அவர்களுடனேயே இருக்கிறேன். அவர்கள் என்னோடு எதையும் கலந்துரையாடலாம்' என சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார். 'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் வீரர்களுடன் இலகுவகாக கலந்துரையாட முடியும் என்பது முக்கிய விடயமாகும். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னுடன் சுதந்திரமாக பேசலாம். அதனைத் தீர்த்துவைப்பது சுலபமானது. அதனை செய்வதற்கான தன்னம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நான் என்னவகையான கிரிக்கெட் விளையாடினேன் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே நான் முன்வைக்கும் பெறுமதியான விடயங்களை அவர்கள் அறிவார்கள், 'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. எனக்கு விருப்பமானர்கள் என யாரும் இல்லை. பாரபட்சம் எதுவும் என்னிடம் இல்லை. சுயாதீனமாக செயற்படுவதையே விரும்புகிறேன். எனக்கு பின்னர் உள்ளூர் பயிற்றுநர் ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பதை நான் அறிவேன்' என்றார் அவர். பயிற்சிகளின்போது நாங்கள் வித்தியாசமானவற்றை முயற்சி செய்வோம். அவர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வோம் எனவும் அவர் கூறினார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார். ஆனால், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 3இல் வெற்றிபெற்றாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்., 'இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இலங்கையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளும் உள்ளன. இந்த நான்கு போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றால் இலங்கையினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடியதாக இருக்கும். 'தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பனிலும் போர்ட் எலிஸபெத்திலும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த இரண்டு மைதானங்களும் இலங்கைக்கு சாதகமானவையாகும். எனவே இலங்கை அணி முழு த் திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிக்கும். அதற்காக இலங்கை அணியை தயார்படுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் எமது சொந்த நாட்டில் நடைபெறவுள்ளன. எனவே இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்றார். இது இவ்வாறிருக்க, தலைமைப் பயிற்றுநர் பணியானது சவால்மிக்கது என அவர் குறிப்பிட்டார். 'இந்தப் பதவியை நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு சவால் மிக்க பணி என்பதை நான் அறிவேன். அது ஒரு இலகுவான தொழில் அல்ல. ஆனால், அந்த சவாலை ஏற்று இலங்கை அணியினருடன் முன்னோக்கி நகர்வேன்' என சனத் ஜயசூரிய தெரிவித்தார். இது இவ்வாறிருக்க, 'வெளிநாட்டுப் பயிற்றுநர்களுக்கு போன்றே சனத் ஜயசூரியவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இப் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த 3 தொடர்களில் இலங்கைக்கு சனத் ஜயசூரிய சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொடுத்துள்ளதால் அவரையே முழு நேரப் பயிற்றுநராக நியமிப்பதற்கு எமது நிறைவேற்றுக்குழு தீர்மானித்தது' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய கடமையாற்றி இருந்தார். https://www.virakesari.lk/article/1957221 point- ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையுமா?
புரோக்கோலி… எனக்குப் பிடித்த உணவு. அதனை ஒரு முக்கால் அவியலில் வறை செய்து சாப்பிடும் போது அதன் சுவையே தனி. இப்போ அதன் அறுவடைக் காலம் என்பதால் எங்கும் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றது. இங்கு 500 கிராம் 99 சதம் விற்கின்றார்கள். 🙂1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்பொருநாள், நீங்கள் ஊரில் போய் மோட்டார் சைக்கிள் சாகசம் காட்ட ஆர்வப்படுவதாக எழுதிய நினைவு, அது என் மனதில் வந்து எனக்கு கிலியை ஏற்படுத்திச்சு. விரக்தியில் எதையாவது செய்து தொலைச்சு போடுவியளோ என்றுதான். அப்பாடா ..... இப்பதான் போன உயிர் வந்த மாதிரி இருக்கு.1 point- தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அந்த காலம் மலையேறிவிட்டது 😂 இப்போது இலங்கையில் இடதுசாரி ஆட்சி நடக்கிறது ..திறமைசாலிகள்……………… மதிக்கப்படுகிறார்கள். தர்மலிங்கம் பாஸ்கரன் என்னும் பொறியியலாளருக்கு இன்று பதவி உயர்வு வீடு தேடி வந்துள்ளது 🙏. அவருக்கு தகுதி இருந்தும் அரசியல் செல்வாக்கு இல்லை எனவே பல திறமையற்றவர்களுக்கு கீழே வேலை செய்துள்ளார்1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
பெடி! நூல் விட்டு பாத்திருக்கே ஒழிய.....மற்றும்படி மீண்டும் தளம் இறாங்காது. 😎1 point- தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
தமிழ் மக்களின் ஆதரவு தன்னைத்தானே ஆள வேண்டும் என்பதற்கே.அதுதான் தாரக மந்திரமும் ..... அதை குப்பன் சுப்பன் வந்து சொன்னாலும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.1 point- பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத் தருமாறு கேட்பார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு பொருத்தமானவை அல்ல. அத்துடன் இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துவந்த பெரும் ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக் காட்டியதைப் போன்று இலங்கையின் முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள். ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம் இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன. அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும் இல்லை. ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும். ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது ஆனால், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும் மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது. ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின. இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும் அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன. எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் அக்கறை கொண்டவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய புதிய வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை. அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை விடவும் அது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள் பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவததை நோக்கிய முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும். இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம் தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின் அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது. இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றிவிட்டன. இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது. ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. https://www.virakesari.lk/article/1956741 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
1 point- தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
மகேசன் பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்த்தீர்களா? இல்லை என்றால் ஒருமுறை பாருங்கள். இங்கு வீரகேசரி தினக்குரலைத் தவிர வேறு எதுவும் இணைக்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வையுங்கள். மகேசனைப் பற்றி இப்போது தான் எழுதியிருந்தீர்கள். நான் அந்தநேரம் வந்த செய்தியை சொன்னேன். வரவர உங்களுக்கு விளக்கம் குறைவாக போய்விட்டது.1 point- பிறவிப் பெருங்கடல் - T. கோபிசங்கர்
பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும். அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது. என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும். பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்1 point- பாதியைத் தாண்டிவிட்ட அனுர மீதியையும் தாண்டுவாரா?
கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி அவரது அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகித்து ஆட்சி செய்ய முடியாது. அவரது ஆட்சிக்குத் தேவையான சட்டங்களை ஆக்குவதற்கு மட்டுமன்றி நிதியொதுக்கீடுகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகும். அதுவும் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வழமைக்கு மாறான மிகக் கடினமான பல தீர்மானங்களை அவர் எடுக்கவேண்டியுள்ளதால் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மட்டுமன்றி மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையும் அவருக்கு அவசியமாகும். குறைந்தது சாதாரண அறுதிப் பெரும்பான்மையான 113 ஆசனங்களை அவரது கட்சி பெற்றால் மட்டுமே அனுர தனது ஜனாதிபதி பதவியை நிலைப்படுத்த முடியும். அவ்வாறு பெறமுடியாத நிலை ஒன்று உருவாகுமானால் நாடு உறுதியற்ற ஒரு குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சி அல்லது அதனது வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அளவைக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி பெறக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையளவை எதிர்வுகூற முடியாது. ஜனாதிபதிப் பதவியை வென்ற கட்சிக்குச் சார்பான கருத்துநிலை ஒன்று இயல்பாகவே மக்களிடத்து உருவாகும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் சதவீத அளவைவிட கூடுதலான அளவு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்றாலும் அது நிச்சயமான ஒன்றெனக் கூறமுடியாது. ஏனெனில் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகள் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றுக்கு அமைய வெவ்வேறு தேர்தல்களில் வெவ்வேறு வகையான காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கை முழுவதும் ஒரு தொகுதியாக கருதப்படும் தேர்தல் முறையாகும். இதில் உள்ளூர் அல்லது பிரதேசம் மற்றும் தனிநபர் சார்ந்த சிறப்புக் காரணிகளின் செல்வாக்கு மிகக் குறைவாகும். தேசிய நோக்கில் நாடு தொடர்பான காரணிகளின் தாக்கமே அதிகளவில் இருக்கும். உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன மக்களின் தெரிவில் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியது போல இவ்வாண்டுத் தேர்தலில் கடந்த கால ஆட்சியாளரின் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள், பொருளாதாரப் பாதிப்புகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாலும் இலங்கையில் பல்லினத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வதாலும் அத்தேர்தலில் பிரதேச மற்றும் தனிநபர் சார்ந்த காரணிகள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இனம், மதம், மொழி போன்ற காரணிகளுடன் வேட்பாளர் தொடர்பான தனிநபர் செல்வாக்கு, பிரதேச கட்சிகளின் செல்வாக்கு போன்ற பல காரணிகள் மக்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அக்கட்சிக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கப் போவதில்லை. பதிலாக வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கும். அதேபோல, இத்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 2.57 ஆகும். இதற்கமைய இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும். ஆனால் அவ்வாறு இருக்கப்போவதில்லை. அதைவிடக் கூடுதலான உறுப்பினர்களை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ளும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகளில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகள் சுமார் 42% ஆகும். இதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 97 உறுப்பினர்கள் அக்கட்சிக்கு கிடைக்கவேண்டும். இந்தளவு கிடைக்குமா? அல்லது இதைவிடக் கூட கிடைக்குமா? அல்லது இதைவிடக் குறையுமா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாக இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதே வழமையாக உள்ளது. அந்த வகையில் அறுதிப் பெரும்பான்மையை (113) அல்லது மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையை (151) அக்கட்சிகள் பெற்றிருக்கின்றன. அந்தவகையில் தேசிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 ஐ விட கணிசமான அளவு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய காரணிகள் தேசிய மக்கள் சக்திக்குச் சார்பானவையாக உள்ளன. ஒன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் சார்பாக மக்களின் கருத்து நிலையில் ஏற்படும் மாற்றம். இதன்மூலம் அக்கட்சிக்கான வாக்குகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது, மாவட்ட ரீதியிலான சிறப்பு ஒதுக்கீட்டு (போனஸ்) உறுப்பினர்கள். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் கட்சிக்கு ஒரு உறுப்பினர் ஒதுக்கப்பட்ட பின்னரே ஏனையவை விகிதாசார அடிப்படையில் பங்கிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த அந்த 15 மாவட்டங்களிலும் அதேயளவு வாக்குகளை அக்கட்சி பெறுமிடத்து பங்கீட்டுக்கு மேலாக 15 உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இதேபோலவே தேசியப் பட்டியலிலிருந்தும் கூடிய உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வழிகளில் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அறுதிப் பெரும்பான்மையை (113) விட சற்றுக் கூடுதலான உறுப்பினர்களை இலகுவாக பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்விடயத்தில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கான வாய்ப்புக் குறைவாகும். ஏனெனில் அவரின் கட்சி ஏழு மாவட்டங்களில் மட்டும் முதன்நிலை பெற்றிருப்பதுடன், அவை வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மாவட்டங்களாக உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இக்கட்சி முதன்மை பெறுவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதற்கப்பால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இம்மாவட்டங்களில் மிகக் குறைவாகவே இருக்கும். இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் முதல் சுற்றிலேயே 50 % இலும் கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதிகள் தெரிவாகியிருந்தனர். ஆனால் இம்முறை 50% இலும் குறைவான வாக்குகளையே அனுர பெற்றிருந்தார். எனினும் அவரது நேர் எதிர்ப் போட்டியாளரை விட 13 இலட்சம் அதிகப்படியான வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இது 10% உயர்வானதாகும். 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்ஷ தனது நேரெதிர் போட்டியாளரைவிட 14 இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். அத் தேர்தலிலும் இருவருக்கிடையில் 10% வேறுபாடே இருந்தது. எனினும் அதன்பின் 2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோதாபயவின் பொதுஜன பெரமுன கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 145 உறுப்பினர்களைப் பெற்றபோது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி 54 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. இக்குறைவுக்கு ஏலவே சுட்டிக்காட்டியது போல அத்தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களே அதிகளவில் சஜித்துக்கு வாக்களித்திருந்ததன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதிகளைச் சேர்ந்த பிரதேசக் கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்கள் அதிகம் கிடைக்காமல் போனமையாகும்.இதேபோன்ற ஒரு காட்சி இம்முறையும் தோன்றினால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் உறுதியான பலம் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனினும் இந்த வாய்ப்பானது எதிரணிகளின் வியூகங்களால் மட்டுப்படுத்தப்படுவதற்கான நிலைமைகளும் உண்டு. அவ்வியூகங்களில் முக்கியமானதொன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பாகும். உண்மையில் இவ்விரு கட்சிகளும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றதுதான். இவ்விரண்டும் சேர்ந்து மோதகமாகவோ அல்லது கொழுக்கட்டையாகவோ அல்லது இன்னொரு பெயரிலோ ஒன்றிணைவதற்கான சாத்தியம் அதிகமுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே எலும்புக்கூடாகிவிட்டது. ரணிலின் ஆட்சியைத் தக்கவைத்தவர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள். அவர்களில் கணிசமானவர்களும் முக்கிய புள்ளிகளும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் பின்னால் நின்றவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்று கூறுவது கடினம். பலர் மீண்டும் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு திரும்பக்கூடும். எனினும் அக்கட்சியின் நிலை இறங்குமுகமாக இருப்பதால் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும்போது அவர்களில் கணிசமானவர்களும் அதில் இணையக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு கட்சி, கொள்கை என்பவற்றைவிட பதவி முக்கியம். இவ்வாறான ஒரு இணைவு ஏற்பட்டாலும் அல்லது கணிசமானவர்கள் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் அது நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் அனுர பெற்றது 42%, சஜித் பெற்றது 32%, ரணில் பெற்றது 17%. சஜித்தும் ரணில் தரப்பும் இணையும்போது அது 49% ஆக மாறும். இது அனுரவைவிட 7% அதிமானது. அதனால் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பு தேசிய மக்கள் சக்தியைவிட அதிகஆசனங்களைக் கைப்பற்றும் என வாதிடமுடியும். ஆனால் புள்ளிவிபரங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மைநிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியுடனான ஏனைய கட்சிகளின் கூட்டு அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனான கூட்டு அப்படியே தொடர்வது நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோலவே ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை, எதிர்காலத்தில் கூட்டுக்களில் மாற்றம் அல்லது புதிய கூட்டுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எதுவாயினும் தேசிய மக்கள் சக்தியுடன் பலமுள்ள வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் எதிர்த்தரப்புகளின் திரட்சி அக்கட்சிக்கு சவாலாக அமையலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியுள்ள இன்னொரு சவால், வேட்பாளர்கள் தொடர்பானது. எதிர்த்தரப்புகளால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது அவர்களைப் போன்ற பிரபலமானவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் புதியவர்களாக அல்லது ஒப்பீட்டு ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலம் குறைந்தவர்களாகவே இருக்கப்போகிறார்கள். இவ்வேட்பாளர்கள் படித்தவர்களாக, நேர்மையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் வெல்வதற்கு அத்தகைமைகள் மட்டும் போதுமானவையல்ல. ஏலவே சுட்டிக்காட்டியது போல இதில் தனிமனிதக் காரணிகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தக்கூடியன. ஒரு தொகுதியில் ஏலவே அரசியலில் பதவிகளை வகித்து கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒருவரை அவர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எதிர்த்து கூடிய வாக்குகளை புதிய ஒருவர் பெறுவது இலகுவான ஒன்றல்ல. மாற்றத்துக்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்ததுபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவற்றுக்கு மேலாக அனுரவின் வெற்றியை விரும்பாத பலதரப்புகள் இச்சந்தர்ப்பத்தில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றன என்பதையும் நிராகரிக்க முடியாது. உள்நாட்டைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அரசியல் அதிகாரத்தையும் அதனுடன் இணைந்து அளவுக்கதிகமான வசதி வாய்ப்புகளையும் அனுபவித்த மேற்றட்டு அரசியல்வாதிகள், இவர்களுடன் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்ட முதலாளிகளும் நிறுவனங்களும், எல்லை கடந்து அனுரவின் கையில் அதிகாரம் செல்வதை விரும்பியிருக்காத இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றன நாடாளுமன்றத்தினூடாக அனுரவுக்கு குடைச்சல் கொடுத்து தமக்கு வசதியாக மீண்டும் பழைய நிலைக்கு நாட்டை கொண்டுவர முயற்சிப்பர் என்பதையும் நிராகரிக்க முடியாது. இது போன்ற பல தடைகளையும் திரைமறைவு முயற்சிகளையும் எதிர்கொண்டே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால் நாடாளுமன்றத் தேர்தலில் எழக்கூடிய புதிய சவால்களையும் அது வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியும். இலங்கை என்ற வண்டிலின் எருதுகளை அனுரவிடம் கொடுத்த மக்கள் அவற்றின் நாணயக் கயிற்றையும் அவரிடம் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என நம்பலாம். பாதியைத் தாண்டிய அனுர மீதியையும் தாண்டுவதற்கான வாய்ப்புகளே அதிகமுண்டு. இல்லையெனில் அதன்விளைவுகளை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிடும். https://thinakkural.lk/article/3100881 point- விண்ணைத் தொடும் தேங்காய் விலை
1 pointமுட்டை விலை அதிகரிப்பு நல்ல விடயம் தானே??? நம்ம சனம் போத்தல் விலை எவ்வளவு கூடினாலும் சத்தமே வராது. ஆனால் உள்ளூர் முட்டை என்றால் காட்டுக்கத்தல்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இனவழிப்பிற்கான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு 2004 ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளிக்கட்சியாகவிருந்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே சரியானது என்று தொடர்ச்சியாக கோரி வந்தது. சமாதான தீர்விற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களுக்கு விடாப்பிடியாக முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த இக்கட்சி ஈற்றில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. 2003 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்திற்கெதிரான பேரணியில் அநுரவும் கலந்துகொண்டிருந்தார் சமாதான முயற்சிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாடு, யுத்த முஸ்த்தீபுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்விற்கான எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பை பிரித்தமை, சமஷ்ட்டிக்கு எதிர்ப்பு ஆகிய தீவிர தமிழர் விரோத செயற்பாடுகளால் மக்கள் விடுதலை முன்னணி தென்மாகாணங்களில் கிராமப்புர மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்காக்கும் சதியே என்று தெற்கின் சிங்கள மக்களை நம்பவைத்த ரோகண விஜேவீர, ஈழத்தமிழருக்கெதிராக சாதாரண சிங்கள மக்களை நீண்டகாலப்போக்கில் இனவன்மம் ஏற்றுவதில் வெற்றிகண்டார். இருமுறை அரசாங்கத்திற்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களின் கொலைகளுக்குக் காரணமாகவிருந்தபோதிலும் கூட மக்கள் விடுதலை முன்னணி ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து அனுதாபத்தினையோ அல்லது அவர்களின் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினையோ ஒருபோதும் கொடுக்க நினைத்ததில்லை. தமிழரின் போராட்டக் காலம் நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி செய்ததெல்லாம் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரங்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க மறுத்து வந்தமை மட்டும்தான். இக்கட்சியிலிருந்தே இலங்கையின் சரித்திரம் கண்ட பல சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்டவேளை பாராளுமன்றத்தில் இதனைக் கடுமையாகச் சாடிய ஒரு சிலரில் அநுரகுமார திசாநாயக்கவும் ஒருவர். "புலிகள் இலங்கையில் தனிநாடு ஒன்றினை நிறுவ அடித்தளம் இட்டுவிட்டார்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அநுர குமார திசாநாயக்க சமாதான முயற்சிகளுக்கெதிராக கடுமையான எதிர்ப்புணர்வைக் காட்டிவந்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த பல பேரணிகளுக்குத் தலைமைதாங்கியதோடு, 2003 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கண்டி முதல் கொழும்பு வரையான ஐந்துநாள், 116 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயண ஆர்ப்பாட்டப் பேரணியை அநுர குமாரவே முன்னின்று நடத்திச் சென்றார். 2004 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதான முயற்சிகளுக்கெதிராக அநுரவும் அவரது கட்சியினரும் மேற்கொண்டுவந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியொன்றினை உருவாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கூட்டணி ஆட்சியில் அநுரவுக்கு விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசண அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. அவ்வருடம் இடம்பெற்ற இந்துசமுத்திர சுனாமி இயற்கை அநர்த்தத்தின்போது இலங்கையில் சுமார் 35,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் மூன்றில் இரு பங்கினர் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க புலிகளுடன் இணைந்து அமைப்பொன்றினை உருவாக்க அரசு எத்தனித்தபோது அநுர குமார திசாநாயக்க அதனைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார். இதனால் வடக்குக் கிழக்கிற்கென்று வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியும் நிவாரணப் பொருட்களும் கொழும்பிலேயே தங்கிவிட்டன. "நாம் அரச சார்பற்ற அமைப்புக்களை வீதியில்க் கண்டால் அவர்கள் மேல் காறி உமிழவேண்டும். உதவி வழங்கும் நாடுகளும் அவர்களது உதவி அமைப்புக்களும் எமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அவர்களே இப்போது புலிகளுடன் இணைந்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி வற்புருத்துகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச 2005 இல் கொழும்பு கூட்டமொன்றில் பேசும்போது முழங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென்று உதவி வழங்கும் நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை இலங்கை அரசாங்கம் போரில் ஒரு கருவியாகப் பாவித்து தமிழ் மக்களைத் தண்டிக்கிறது என்று சர்வதேசத்திடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. 2005 மார்கழியில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நா செயலாளர் நாயகம் கொபி அனான் வடக்குக் கிழக்கிற்கும் செல்ல முயன்றபோது மக்கள் விடுதலை முன்னணியினரின் அழுத்ததுடன் இலங்கையரசு அதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அநுர குமாரவும் ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர். பின்னர் யுத்தநிறுத்தத்தை நிறுத்தியே தீருவது, போரை மீளவும் ஆரம்பித்து இராணுவத் தீர்வு நோக்கி நகர்வது என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கத் தொடங்கியபோது அநுரவும் அவரது கட்சியும் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மகிந்தவுக்கு 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுக்க முன்வந்தனர். யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்கவென்று 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் "நாட்டைக் காக்கும் இணைந்த முன்னணி" எனும் அமைப்பின் உருவாக்கப்பட்டபோது அநுரவும் அதில் பங்காற்றியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போருக்கெதிராக மகிந்த ராஜபக்ஷ மிகப்பெரும் அளவில் யுத்தத்தினை ஆரம்பித்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கு பலத்த ஆதரவினை வழங்கியதோடு, சிங்கள மக்களை போருக்கு ஆதரவாக அணிதிரட்டும் கங்கரியத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துகொண்டு மகிந்த போரைத் தீவிரமாக நடத்திவருகையில், அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் அமைந்திருந்த அனைத்து மேற்குநாட்டு தூதரகங்களுக்கும் முன்னால் பாரிய கண்ட ஆர்ப்பாட்டங்களை அநுரவின் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக நடத்திவந்தது. 2002, 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சமாதானத்திற்கெதிராகவும், போரை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்குசெய்த ஆர்ப்பாட்டங்களில் சில. இரத்திணபுரியில் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னிலையில் பேசும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் லால்காந்த, "ஜாதிக்க ஹெல உறுமயவின் தீவிரவாத எண்ணம் கொண்ட பெளத்த பிக்குகளும், மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாமும் இணைந்து நடத்திய செயற்பாடுகளாலேயே பிரிவினைவாதிகளின் பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக அழிக்க முடிந்தது" என்று கூறினார். "சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன பெரமுனவோ அல்லது எந்தக் கட்சியோ போரை முடிவிற்குக் கொண்டுவரவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாமும், ஜாதிக்க ஹெல உறுமயக் கட்சிட்யினரும் இணைந்து எடுத்த தீர்மானமான "நாம் தமிழரின் பிரச்சினையினை போரின் மூலமே தீர்க்கவேண்டு, ஏனென்றால் அதற்கு வேறு தீர்வுகள் கிடையாது என்பதற்கமைய போரில் வெற்றிகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன் என்கிற சூளுரை போர்க்குற்றவாளி அருனா ஜயசேகர இலங்கை இராணுவம் ஆடிமுடித்த தமிழினக் கொலையில் 167, 679 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். போர்வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கான உணவையும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களையும் அரசு தடை செய்தது. வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்குவைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களுக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வுகளை பரந்துபட்ட அளவில் போர்காலம் முழுவதும் இலங்கை இராணுவம் நிகழ்த்தியது. சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனக்கொலையில் நடத்தப்பட்ட பாரிய மனிதவுரிமைகள் மற்றும் மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்கள் இலங்கை அரசிற்கெதிராக நிறைவேற்றப்பட்டன. அப்படியான இன்னொரு தீர்மானம் இப்போதும் ஐ நா சபையில் கொண்டுவரப்படவிருக்கிறது. இத்தீர்மானங்களும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சர்வதேச விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாரியளவில் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்தன. ஆனால் சர்வதேசத்தினதும் தமிழ் மக்களினதும் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமார திசாநாயக்க, "போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றோ, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றோ எவரையுமே நாங்கள் தண்டிக்க அனுமதிக்கப்போவதில்லை" என்று ஆவணி 2024 இல் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அரசியல் இராணுவத் தலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில் "பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கோரவில்லை" என்று சிங்கள மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தினை அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டார். அதேவேளை, அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, போர்க்குற்றவாளிகள் என்று அறியப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிகளை தமது பாதுகாப்புக் கொள்கை வகுப்பில் இணைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அருன ஜயசேகர என்பவன் தமது பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் பிரதானியாக அநுர குமார திசாநாயக்க அமர்த்தியிருக்கிறார். இந்த அருண ஜயசேகர என்பவன் ஹெயிட்டி நாட்டிற்கு அமைதிகாக்கும் சேவையில் ஐ நா வினால் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் மூன்றாம் படையணிக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தவன். இவனது படைப்பிரிவே 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் சிறுவயதுச் சிறுமிகளை பாலியல்த் தொழிலுக்காகக் கடத்திவந்ததாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.1 point- கருத்து படங்கள்
1 point1 point- முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
பும்ரா சிறந்த வேக பந்து வீச்சாளர்......................1 point- அனுரவின் வெற்றியும் தமிழ் அதிகார வர்க்கத்தின் பிதற்றலும்…
வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள் இல்லையா ? சாதி வெறியர்கள் இல்லையா? ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே வென்றிருக்கிறார். சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கிறீர்கள் 1971 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே 60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள். ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ....... நான் அவற்றை எழுத விரும்பவில்லை தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள். கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள். 1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் . பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர். "கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்" எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே. ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார். சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். '' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் - ''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா." "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது. "அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்". "மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது." "மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார். " 'பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக் கூறினார். "1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. "ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. என்கிறார் கலாநிதி போபகே. கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும்.1 point- தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை.
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி1 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.