Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2951
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    4040
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1747
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/13/24 in all areas

  1. ஒருவேளை அநுர மூன்றில் இரண்டுக்குமேல் பெரும்பான்மை பெற்று எவர் கூட்டணியுமின்றி இலங்கை ஆட்சியை கைப்பற்றினால், அநுரவா டக்ளசா என்று வந்தால் இந்தியா அநுர பக்கமே நிக்கும். காலம் காலமாக இந்தியா தமிழர் நலனுக்காக இலங்கையுடன் முட்டிமோதி நின்றதேயில்லை, தனது நலனுக்காகவே அது நின்றிருக்கிறது. இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் வாங்கி தந்திருப்பார் என்று இன்றும் நம்பும் தமிழர்கள் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள், பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவுக்கு திமிர்காட்டிக்கொண்டு ,சோவியத் நட்புறவு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவையே அழிக்கப்பார்த்த அமெரிக்கா பக்கம் அதி நெருக்கம் காட்டிய ஜேஆரை தனது பிடிக்குள் கொண்டுவரவே இந்திராகாந்தி இலங்கை தமிழர் பிரச்சனையை அக்கறையாக கையிலெடுத்தார், மற்றும்படி தமிழருக்கு தமிழீழம் வாங்கிதர என்பதெல்லாம் கிடையாது. இந்தியா தனது பிராந்திய நலனுக்காக இலங்கையில் எப்போதுமே சிங்களவன் பக்கமே நிக்கும், சிங்களவன் இந்தியாவை மதிக்கவில்லையென்று தெரியவந்தால் இலங்கை தமிழர் பிரச்சனையில் திடீர் பாசம் காட்டும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்.
  2. உண்மை ஒருவர் மீது மட்டும் தவறு இருந்தால் அவருக்கு எதிராக உள் இருந்தே நடவடிக்கைகளை எடுத்து இருக்கவேண்டும். அதுவும் சரிவராதபோது அனைவரும் ஒன்றாக வெளியேறி ஒன்றாக ஒரு அமைப்பையாவது உருவாக்கி பலத்தை தங்க வைத்திருக்க வேண்டும். ஆனால் நமது தவறுகளை திருத்திக்கொள்ள முயலாமல் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அல்லது கண்டு பிடித்து பலபிரிவுகளாகி எம் இனத்தின் பலத்தை சிதைப்பது எவராக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. தூர நோக்கற்று ஒரு இனத்தின் இருப்பையே சிதைக்கும் எவரும் தமிழர்களுக்கு நன்மை செய்வர் என்று எதிர்பார்க்க முடியாது.
  3. விசாரணை என்பது நல்ல விடயம். ஆனால், இது ஒரே கல்லிற் பல மாங்காய்களை வீழ்த்தும் விசாரணை நகர்வு. கிழக்கிலே மக்கள் விடுதலை முன்னணி(ஜனதா விமுக்தி பெரமுன) என்ற தேசிய மக்கள் சக்தி(ஜாதிக பலவேகய)க்கான பலமேற்றலுக்கு முரளீதரன் மற்றும் சந்திரகாந்தன் போன்றோரது கட்சிகள் இடையூறாக அமையும் என்ற நோக்கிலே நகர்த்தப்படும் விசாரணையாகவும் நோக்கலாம். உண்மையில் ஊடகவியலாளர்களின் கொலை குறித்த விசாரணை நிமலராஜன் போன்றவர்களில் இருந்து தொடங்கப்படுவதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களாயிருந்த மாமனிதர்களான திரு. ரவிராஜ் மற்றும் திரு.பரராசசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். குறிவைத்து நகரும் விசாரணைகளா அல்லது பொதுமையான நியாயம் தேடும் விசாரணையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது. மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே.
  5. கோட்டபாய ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பெரும்பான்மையின் அப்போதயகுறிக்கோள் இஸ்லாமியர்கள், கோட்டபாயவினை 52% வாக்குகளினால் வெற்றி பெற 52 விகிதமான ஆதரவு வாக்குகளை வழங்கியிருந்தார்கள், அவருக்கு போட்டியாளராக இருந்த சயித்திற்கு 42% வாக்குகள் கிடைத்தது அதே அளவிலே அனுரவிற்கு தற்போது கிடைத்துள்ளது, இதன் மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அனுரவின் ஊழலற்ற ஆட்சி, சமூக நல அடிப்படையான பொருளாதார கொள்கை என்பது இலக்காக இருந்தால் ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொண்டால் போதுமானது, ஆனால் சமுகநல பொருளாதார கொள்கை எனும் போதுதான் சிக்கல் ஆரம்பமாகும், அதனை நடைமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது அனுரவிற்கே தெளிவாக தெரியும். முதலில் ஆட்சியினை பிடிக்க வேண்டும், அதற்கு பின் எப்படியாவது காலத்தினை ஓட்ட வேண்டியதுதான், மக்கள் பொருளாதார பிரச்சினைக்குள்ளாகி குழம்பும் போது வேறு ஏதாவது மடைமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டியதுதான், இதுதான் இலங்கை சோசலிச ஜனநாயக நாட்டின் ஆட்சி மாதிரி.
  6. இவர் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மக்களுக்காக தன் இளமையை, வளமான வாழ்வை அர்ப்பணித்தவர். இறுதி நாட்களில் இந்தியாவில் ஆங்கில ரியூசன் சொல்லி கொடுத்து தன் வாழ்வாதாரத்தை தேடினார் என்பது என்னை மிகவும் கண் கலங்க வைத்தது. ஆனாலும், அவர் எந்த மண்ணுக்காக எல்லாவற்றையும் இழந்தாரோ, அந்த மண்ணில் அவரது இறுதியாசை, இறுதி மூச்சை நிறுத்தியது மன மகிழ்வைத்தந்தது. அவர் பிறந்த இடம் கரம்பன் என நினைக்கிறன். அவரது இறப்பில் சொந்தங்கள் கூட இல்லை, உறவுவழிக்காரர் வாரிசுகள் இறுதிக்கிரிகையை நடத்தியதாக கேள்வி.
  7. ஏற்கனவே தமிழரசுக் கட்சி உதிரிக் கட்சிகளோடு இணையவிரும்பவில்லை. இப்பொழுது வேட்பாளர்கள் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு எல்லாம் சேர்ந்து, வீட்டுக்கு கல் எறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிய எல்லாம் அமர்ந்து விடும். கட்சியை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே சங்கு ஊதிக் கொள்வார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம் சிறீதரன் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.
  8. Kiri 'Zi அதென்ன எல்லாருக்கும் கட்சி சீட் தரேல்ல எண்டவுடன மட்டும் கோவம் வந்து கட்சிய விட்டு கோவமா வெளியேறுறீங்கள் 🤣 இந்த பதிவிற்கு முகநூலில் வந்த மேல் பின்னூட்டம் "தமிழரசு மீது கோபக் கனல் கக்கும்" ஆட்களின் முகத்திரையைக் கிழித்து விடுவது போல் இருப்பதால் இணைத்திருக்கிறேன். உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?
  9. சிவராமை போட்டது கருணா இல்லை புளொட் என்றே பேச்சு உண்டு தமிழ்சிறி., அதேபோல பத்திரிகையாளர் நிர்மலராஜனை சுட்டுக்கொன்ற வழக்கை எடுத்தால் டக்ளஸ் மாட்டிக்கொள்வார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை துரிதபடுத்தினால் பிள்ளையான் & கருணா இனியபாரதி என்று அப்படி நீண்டுகொண்டே போகும். பொது தேர்தலின் பின்னர் எப்படி போகுமோ தெரியாது, ஆனால் கருணாவில் மிக கடுமையாக சிங்களவன் கை வைக்கமாட்டான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் சிங்களத்துக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. இல்லாவிட்டால் அரந்தலாவ பிக்குகள் படுகொலை மற்றும் சரணடைந்த 600 பொலிசார் கொலைக்கு கருணாவுக்கு எப்போதோ ஆப்படிச்சிருப்பார்கள். அநுர தண்டனை வழங்குறானோ இல்லையோ, பொது தேர்தலில் தமிழர் பகுதியில் இவர்கள் ஆதரவில்லாமல் அநுர கட்சி பெரும்பான்மை பெற்றால், இவர்களினதும் பாரம்பரிய தமிழர் அரசியல்கட்சிகளினதும் அரசியல் அஸ்தமனம்தான்.
  10. அண்மைய கால அரசியல் நிகழ்வுகளை. ஒரே பார்வையில் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளார் நிலாந்தன் மாஸ்ரர். ✔️ 👍 இங்குள்ள சிலர் தமது அரசியல் அறிவை வளர்க்க, இதனை வரிக்கு வரி வாசித்து... புத்தி தெளிய வேண்டும். வாசிக்க கஸ்ரமாகத்தான் இருக்கும்... எழுத்துக் கூட்டியாவது வாசித்து அரசியல் தெளிவை பெறுங்கள். 😂 கட்டுரையை இணைத்த கிருபன் ஜீக்கும், அருமையான கட்டுரையை எழுதிய நிலாந்தன் மாஸ்ரருக்கும் நன்றிகள். 🙏
  11. இல்லை தகுதி அற்றவகளையும். சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து,......... தவராசாவைவிட சிவமோகனைவிட இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட சுமத்திரன். நியமித்தவர்கள் அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’ முடியுமா??? இல்லை உங்களால் ஒருபோதும் முடியாது எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்க்கவும் 🙏
  12. சாச்சா..... உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள், உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர்.
  13. டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்..... டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன். இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை. பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது. இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார். இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற 'சேர்ட்டு'டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை. அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கவனம் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. தமிழர் உரிமைகள் விடயத்தில் இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது. ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும். Navaratnam Giritharan
  14. இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? இரா.செந்தில் கரிகாலன் 6 Min Read தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த ஜனநாயகத் தேர்தல் என்று அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிற நடைமுறை கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. Published:05 Aug 2020 12 AMUpdated:05 Aug 2020 12 AM இலங்கை நாடாளுமன்றம் கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை, (17,85,964) ஹம்பகா தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது . மிகக் குறைந்த வாக்காளர்களை, (2,87,024) வன்னி தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது. நாடு முழுவதும்,12,984 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் சுயேட்சை குழுக்கள் சார்பில் 3,800 பேரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 75,000 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைவுதான் என்றாலும், மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு மையங்களை அதிகரிப்பட்டுள்ளன. வாக்களிக்கும் நேரமும் ஒருமணிநேரம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒட்டுமொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில், 196 பேர் வாக்களிப்பின் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியாவைப் போல, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி, குறைந்த வாக்குகள் பெற்றவர் தோல்வி என்கிற நடைமுறை இலங்கையில் இல்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவப் படியே உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். இலங்கையில் 1978-ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் இப்படி மாறிவிட்டன. தெற்காசியாவிலேயே ஜனநாயகமான மிகச்சிறந்த தேர்தல் முறையாக இலங்கையில் பின்பற்றப்படும் தேர்தல்முறை கருதப்படுகிறது. அதுகுறித்து, விரிவாகப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. ஆனால், தேர்தலுக்காக இவை, 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் இருக்கும். அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக, 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களில் இருந்தும், மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர் இடங்கள் இருக்கும். குறைந்தபட்சமாக திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அதிகட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் மாவட்டங்கள் நம் நாட்டைப் போல, ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் சார்பாக ஒருவர்தான் போட்டியிட முடியும் என்கிற நடைமுறையும் அங்கு இல்லை. உதாரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து, 7 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். ஆனல், இந்த மாவட்டத்தில் ஒரு கட்சியில் இருந்தே 10 பேர் போட்டியிடலாம். பத்துக்கும் குறைவாக உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்களில், 3 பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில், ஆறு பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். உதாரணமாக, திரிகோணமலை மாவட்டத்தில், ஏழு வேட்பாளர்களையும், கொழும்பு மாவட்டத்தில் 22 வேட்பாளர்களையும் ஒவ்வொரு கட்சி/சுயேச்சை குழுக்கள் சார்பில் நிறுத்தவேண்டும். தேர்தல் நடைமுறை: ஒரு வாக்குச் சீட்டில் மேலே கட்சிகளின் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். அதில் நமக்கு விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களிக்கலாம். அடுத்ததாக, அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கையும் அளிக்க முடியும். ஆனால், இது கட்டாயமல்ல. அதாவது, தான் விரும்பும் கட்சிக்கு மட்டுமல்லாது, அந்தக் கட்சிக்குள்ளும் யாரை உறுப்பினராகக் கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்களே தேர்வு செய்யும் ஜனநாயகமும் இலங்கை தேர்தல் நடைமுறையில் உண்டு. கீழே உள்ள வாக்குச்சீட்டு யாழ் தேர்தல் மாவட்டத்துக்கானது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பத்துபேர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று முதல் பத்து வரை ஒரு எண் வழங்கப்படும். வேட்பாளர்கள் `நான் இந்தக் கட்சி, என் எண் இது’ என்று சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள். வாக்களிக்கும்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஒருவர், கீழே உள்ள பத்து இலக்கங்களில் அகில இந்தியக் காங்கிரஸில் தங்களின் விருப்பத்துக்குரிய 3 வேட்பாளர்ளை டிக் செய்து தேர்வு செய்ய முடியும். யாழ்ப்பாண தொகுதி வாக்குச் சீட்டு எழுச்சி முகநூல் பக்கம் தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கை கணக்கீடுகள் எல்லாம் ஒரு தேர்தல் மாவட்டம் என்கிற அளவில்தான் நடைபெறும். ஒரு மாவட்டத்தில், முதலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். பிறகு சுயேட்சைக் குழுக்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு மீதமுள்ள வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்ததாக, ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி/சுயேச்சை அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு இடம் முதலில் வழங்கப்பட்டுவிடும். உதாரணமாக, ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவேண்டிய ஒரு தேர்தல் மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளாக, கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற 10,000 வாக்குகள் என வைத்துக்கொண்டால் அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கபப்டும். மீதமுள்ள 90,000 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில், கட்சி (அ) 17,000 வாக்குகள், கட்சி (ஆ) 38,000 வாக்குகள், கட்சி (இ) 15,000, கட்சி (ஈ) 20,000 வாக்குகள் பெறுகிறார்கள் என வைத்துக்கொண்டால் முதலில், 38 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி (ஆ) வுக்கு ஒரு உறுப்பினர் வழங்கப்பட்டுவிடும். மீதமுள்ள, 5 இடங்களை ஒட்டுமொத்த வாக்குகளான 90 ஆயிரத்தை வகுக்க, 18,000 வரும். இதுதான் ஒரு உறுப்பினரைத் தேர்தெடுக்கத் தேவையான வாக்குகள். அதன்படி, முதல் சுற்றில் கட்சி (அ) வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஆ) வுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் (மீதம் 2000), கட்சி (இ) வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஈ) வுக்கு ஒரு இடம் கிடைக்கும் (மீதம் 2000). ஒட்டுமொத்தமாக உள்ள 5 இடங்களில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இப்போது மீதமிருக்கும் 2 இடங்களுக்கான தேர்வு. யாழ்ப்பாணம் 2015 தேர்தல் முடிவுகள் இப்போது, கட்சி (அ) 17,000 வாக்குகளுடனும், கட்சி (ஆ) 2,000 வாக்குகளுடனும், கட்சி (இ) 15,000 வாக்குகளுடனும் கட்சி (ஈ) 2,000 வாக்குகளுடனும் இருப்பார்கள். இதில் அதிகமான வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். அதன்படி கட்சி (அ) வுக்கும், கட்சி (இ) வுக்கும் ஒவ்வொரு இடங்கள் கிடைக்கும். இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் எந்த வேட்பாளருக்கு என்று பார்க்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல 29 தேசிய இடங்கள் தேர்வு செய்யும் முறையைப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 1.62 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.5 கோடிப்பேர் ஒட்டுமொத்தமாக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது அப்படியே 29 ஆல் வகுக்கப்பட்டால், 5,17,241 வாக்குகள் வரும். ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளில் இதை வகுக்க எவ்வளவு வருகிறதோ அவ்வளவு இடங்கள் ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும். அதற்குப் பிறகும் இடங்கள் மீதமிருந்தால், மேலே குறிப்பிட்டதைப் போல, அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மேலிருந்து கீழ் வரிசையில் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும். இன்று மாலையில் இருந்தே வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிவிடும். வாக்குகளை எண்ண, 71 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கில், ஒட்டுமொத்தமாக 29 உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மையான இடங்கள் சிங்களப் பகுதிகளில் இருந்தே தேந்தெடுக்கப்படுவதால், சிங்களக் கட்சிகளுக்கிடையேதான் பிரதான போட்டி இருக்கும். இதுவரை ராஜபக்சேவின் அணிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த, சஜித் பிரேமதேசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கிறார். சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளாக நின்றே தேர்தலைச் சந்திக்கின்றன. தமிழ்த்தேசிய கொள்கையுடைய கட்சிகளே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன. சண் மாஸ்டர் இந்தத் தேர்தல் குறித்து, சென்னையில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பேசும்போது, ``இராஜபச்சே குடும்பத்தைப் பாதுகாத்து இன்று கோத்தபாய இலங்கையின் அதிபராக வருவதற்கான சூழ்நிலையை சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்கிய சூழலில் இந்தத் தேர்தல் எம் மக்கள் முன் வந்துள்ளது. இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவும், பொதுவாக்கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளவர்களைத்தான் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய வேண்டும். அதுவே இலங்கை தீவில் தமிழர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் உதவும்'' என்றார் அவர். தொடர்ந்து, ஜெனிவாவிலிருந்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பேசும்போது, ``கடந்தகாலத் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுத்து, தமிழின அழிப்பை பன்னாட்டு சமூகத்துக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர். இனி வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாவது தமிழர் நலன் கருதி தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்த் தேசியத்துக்கு எதிர்த்திசையில் நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், நீதிக்கான செயற்பாடுகளையும் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றழித்தவர்களையும், சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவர்களின் அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களையும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். அடுத்ததாக, தமிழின அழிப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையிலும், இலங்கை வடக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பன்னாட்டுப் பாராளுமன்றங்கள் மத்தியில் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழின அழிப்பு, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த பேரினவாத இலங்கை அரசும் அதன் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் அவர். பொஸ்கோ பொதுவாக இலங்கையில் அதிபர் தேர்தலோ, பிரதமர் தேர்தலோ, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சிகளுக்குக்கான சிங்களர் ஒருவரை அதிபராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகத்தான் இருக்கும். மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே தமிழருக்கான குறைந்தபட்ச அதிகாரத்துக்கான தேர்தலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை என்பதைத்தாண்டி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதே ராஜபக்சே சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான், ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரத்தைக் குறைக்க, மைத்திரிபால சிரிசேனா ஆட்சியில் செய்யப்பட்ட 19-வது சட்டத்திருத்தத்தை மாற்ற முடியும். அதற்காகவே கொரோனாவை இராணுவத்தின் துணைகொண்டு ஒழித்த கையோடு தேர்தலையும் நடத்திவிடத் துடித்தார்கள்... அவர்கள் விருப்பப்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறுகிறார்களா, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்களின் ஆதர்ச அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக களமிறங்கியிருக்கும் அணியினரை தமிழ் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களா என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்துவிடும்." என்றார். https://www.vikatan.com/government-and-politics/a-detailed-explainer-for-sri-lankas-parliamentary-electoral-process
  15. நூற்றுக்கு நூறு வீதம் எம்மிடத்தில் பிழைகளை வைத்துக்கொண்டு சிங்கள அரசியல் தலைவர்களை திட்டுவதில்/வசைபாடுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
  16. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு) 4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்) 5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன். 6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். 7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா. (சின்னம்: வீணை) # தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) # மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும். # அங்கஜன் இராமநாதன் எந்தக் கட்சியில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. # அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன். # சிறீரெலோ என்னும் கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. # சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.
  17. சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக்கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள். ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ? ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்” என்ற வசனம் அது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக,சிவஞானம் கூறுவதுபோல “அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக” சிதறிப்போகிறது என்று பொருள். அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை. வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவராசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி. தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல. திருடர்கள், அயோக்கியர்கள், சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சிதான் தேசம். முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக்கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம். தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோகநிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி சிதையும்போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை. அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன்மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவவீகரிக்கப் பார்க்கின்றது. சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இப்பொழுது இல்லை. அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை. எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல. சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சங்கச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா? சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத் திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப்போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா? கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு. எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரிய நேத்திரனுக்காக சிறீ நேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது. மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை. மாறாக தவராசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேச்சைக் குழுவுக்குத்தான் அதிகமாக விழும். அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாக நிற்கும் தமிழர் சம உரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா? இதுதான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள். அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச விசுவாசம், ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது. மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை. பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரச்சாரப் பணிகள் தொடங்கிய போது “எமக்காக நாம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் “எனக்காக நான்” என்பதுதான் நடைமுறையாக உள்ளது. அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும். தொகுத்துப்பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம். இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால், குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம். ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை. ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது. சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது. எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் “இப்படியே சிதறிப்போனால் சனங்கள் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்” என்று சலிப்படையக்கூடுமா? https://www.nillanthan.com/6934/
  18. அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! ”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. குறித்த ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் ” சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் ”சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும், அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், பொலிஸாரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403853
  19. எல்லோரும் அந்த வகைக்குள் இல்லை, புலிகளை ஆதரித்த பலரும் பால பாடத்தைக் கற்றுக்கொண்டு சுமந்திரன் வழியை ஆதரிக்கின்றார்கள்.
  20. வீட்டை அவர் அப்பவே வாங்கிட்டார் எண்டு நினைச்சன். கட்டுரை லேற்றா வந்திருக்கிறது.
  21. அரலந்தலாவை போன்ற பல படுகொலைகளை நாம் கடந்து செல்ல விரும்புவதைப் போல அநுராவும் இலங்கை இராணுவம் செயத படுகொலைகளை கடந்து செல்ல விரும்புவார் என்பதையே கூறினேன். புரிகிறதா?
  22. இவரது பொது வேட்பாளர் படு தோல்வியடைந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நிலாந்தன் குழம்பி போயுள்ளார். “கடந்த 15 வருடங்களாக” என்ற வார்ததையை நிலாந்தன் அடிக்கடி உச்சரிக்கிறார். தமிழர் போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை மறந்துவிட்டாரா? 2009 க் கு முன்பு தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்(NTT) பிரபல அரசியல் ஆய்வாளராக இவர் இருந்த போது அன்றைய தலைமைக்கு எந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ மக்கள் பேரழிவை தடுக்க வேண்டிய இடித்துரைப்போ செய்யாமல் வெறும் ஜால்ரா போடும் ஆய்வுகளை மட்டும் செய்ததேன்? அவ்வாறு அன்று நேர்மையான விமர்சனங்களை செய்திருந்தால் தனது வாழ்வுக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் பாரிய மக்களை அழிவை விட தனது இருப்பே முக்கியம் என்று இவர் நினைத்திருக்கிறார். இவ்வாறு சுயநல நோக்கில் மக்கள் அழிவுகளை வேடிக்கை பார்தத இவர் இப்போது தனது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்ற துணிவில் மற்றவர்களை சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுகிறாராம்.
  23. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தப் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். – இவ்வாறு வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன். “வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடி செய்ததால் அமைச்சரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சத்தியலிங்கம் தற்போது வன்னி மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக் கட்சி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால், இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஓர் ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018இல் தேர்வு செய்யப்பட்டது. அதில் சட்டத்தரணி தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், நான் உட்பட நான்கு பேர் அந்தக் குழுவில் இருந்தோம். இந்தநிலையில் திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன், சேயோன், ரஞ்சினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது. தான் மட்டும் வன்னியில் வெல்ல வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரின் டம்மி விளையாட்டே இது. எனவே, பதில் பொதுச்செயலாளருக்கு எதிராக நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளைச் செய்வார்கள். இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். தோல்வியடைந்தவர்களை வேட்பாளராகப் போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக் குழுவிலும், மத்திய குழுவிலும் இல்லை. கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல். எப்படி இந்தச் சதிவேலையைத் திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள். தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும், நியமனக் குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும், சுமந்திரனும் கருதுகின்றார்கள். தமிழரசுக் கட்சி அதுவல்ல. இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது. ஒருவரைத் தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள். இவர்களால் எப்படி வெல்ல முடியும்? இன்று வன்னியில் புதிதாகப் போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர். ஆஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர். வேட்பாளராக என்னைத் தெரிவு செய்யுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. எனக்குப் பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே நான் பரிந்துரை செய்தேன். கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியை இன்று கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப் பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர். ஆனால், அந்தப் பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகின்றோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை. உங்களுக்குள்ளேயே பிரித்துக்கொள்ளவா இந்தக் குழுவைப் போட்டோம். தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை. ஆனால், தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் அதனை மட்டும் எப்படி கொடுக்க முடியும்? யாழ்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியப்பட்டியல் என்று அங்கு ஒருவர், இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார். கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு? பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கே தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும். ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார். தமிழரசுக் கட்சி தெரிவு செய்த வன்னி வேட்பாளர் சத்தியலிங்கம் ஊழல், மோசடிக்காரர். வடக்கு மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்துக்குச் சென்று தான் நியாயவாதி என்று இன்று வரை நியாயப்படுத்த முடியாதவர். இவர்தான் ஊழல்வாதிகள். அவர் வன்னியில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள். ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர். இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர். அவர் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியுமா? அடுத்தவர் விடுதலைப்புலிகள் காலத்தில் ஊழல், மோசடிக்காக அடைத்து வைக்கப்பட்டவர். இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல், மோசடியில் சிக்கியவர். இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும். நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையைத் தனித்தனியாக தாக்கல் செய்வேன். இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அது? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில்தான் பிரச்சினைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது. பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்தக் கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக் குழுவின் பணி. அந்தக் கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்க அதற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கின்றார் என்றார்கள். அதனால் கூட்டம் இரத்தாகியது. அந்தப் பதில் செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்துக்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்? அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களைத் தர வேண்டும். ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது. நீங்கள் போய் அவரிடம் கேட்டுப் பாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியினாலேயே அந்தத் தெரிவுகள் போட்டிக்குச் சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது. எனவே, பதில் செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு இராஜிநாமா செய்யவேண்டும். அடுத்தது ஊடகப் பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்ல வேண்டும். தனிப்பட்ட கருத்தை அவர் சொல்ல முடியாது. ஊடகப் பேச்சாளர் அந்தத் தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்பட வேண்டும். நாம் பயந்தவர்கள் அல்லர். இறுதி வரை தமிழரசுக் கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம். உயிர் இருக்கும் வரை தமிழரசுக் கட்சியோடுதான் பயணிப்பேன்.” – என்றார். https://thinakkural.lk/article/310592
  24. நல்ல விடயம். இதனை அரசியல் ரீதியாகத் தீர்க்கவேண்டும். ஆனால், இதனை அரசியலாக்காது, இது மீனவர்களது வாழ்வாதாரத்திற்கானதென்ற அடிப்படையில் தீர்வுகள் தேடப்பட்டுப் பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்படுவதோடு, ஒருவரை ஒருவர் தாக்கும் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேணடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. தமிழ்சிறியவர்களே நன்றி. நிச்சயமாக வாசித்தறிகின்றேன். அரசியல் தளத்தில் மட்டுமல்ல ஊடகத் தளத்திலும் தமிழ்தேசியம் மீதான தெளிவான நோக்குநிலை மற்றும் செய்திகளைத் துணிவோடு வெளிக்கொண்டுவந்தோர் எனத் திட்டமிட்ட அழிப்புகள் சிங்களப் புலனாய்வால் செய்யப்பட்டவையே. ஆனால், அவற்றைத் தற்போதைய சிங்கள அரசு தோண்டி எடுத்து விசாரணை செய்து நீதிவழங்குமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விசாரணைகள் ஊடாக மேற்குலக்கும், நாம் முன்னைய அரசுகள் போன்ற கடும்போக்காளரல்ல என்ற செய்தியைச் சொல்வதற்கான களம் திறக்கப்பட்டு உள்ளக விசாரணையை நோக்கித் தமிழரது அழிப்புக்கான நீதிகோரலையும் திருப்பி உள்நோக்கி இழுத்துவரும் நுண்நகர்வாகவும் கொள்ளலாம். எனவே சிங்கள அரசியற் சடுகுடு ஆட்டத்தையும், அதனது இனவாத முகத்தையும் எமது முன்னோரும், நாமும் கண்டுவருகின்றோம். தமிழினத்திற்கான அரசியல் உரிமையும் அமைதியான வாழ்வும் ஏக்கங்களாகவும், ஏமாற்றங்களாகவும் கடந்த 110 ஆண்டுகளாக கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இலங்கை விடுதலைக்கான முயற்சிக்காலத்தில் கண்டியச் சிங்களவர் சமஷ;டியைக் கேட்டபோது, ஒரேநாடாகச் சிந்தித்தவர்கள்(சேர்.பொன். அருணாசலம்) தமிழ்த் தலைவர்கள். ஆனால், எம்மை தமிழீழம் நோக்கித் தள்ளியது சிங்களம். உலகம் வேகமாக மாறிவருகிறது. அந்த வெளியக மாற்றத்தை உள்வாங்கிக் குறைந்தபட்சம் ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்துச் சிங்களம் சிந்திக்குமாயின் அப்போதுதான் இலங்கைத்தீவிற்கான உண்மையான வாழ்வாக அமையும். அதனை சோல்பரியின் காலம்தவறிய வருத்தமும் சுட்டுகிறது. கீழுள்ள தகவலைத் தமிழீழக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வரலாறு சொல்லும் பாடம்,, என்ற நூலில் இருந்து இணைத்துள்ளேன். சோல்பரியின் காலந்தவறிய வருத்தம் பீ.எச்.பாமர் எழுதிய "சிலோன் ஏ டிவைடட் நேசன்,, என்ற நூலுக்கு முகவுரை எழுதியபோது அதில், சோல்பரி இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தியா,பாகிஸ்தான்,மலாயா,நைஜீரியா போன்ற நாடுகளுக்கான அரசியற்றிட்டங்களில் செய்ததுபோல, சிறுபான்மையினரின் உரிமையை உறுதிசெய்யும் வலிய காப்பீடுகளை இந்த(இலங்கை) அரசியற்றிட்டத்திற்குப் பரிந்துரை செய்யாமல் விட்டது பெரும் பிழையென்று இப்போது நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு(சிங்களவர்,தமிழர்)சமுதாயங்களுக்கிடையிற் காலங்காலமாக நிலவும் முரண்பாடுகள் பற்றிய மேலெழுந்தவாரியான புரிதலே எமது ஆணைக்குழுவுக்கு அப்போது இருந்தது. சிறுபான்மையினரின் மனநிறைவும், நலனும் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த நலனுக்குத் தேவையானது என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியுமென்றே ஆணைக்குழு அன்று திருப்திப்பட்டுக் கொண்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதற்கான களமுனைகளைத் துரிதப்படுத்துவதிவருவதைக் காணக்கூடியதாகவே உள்ளது. நாசபக்சர்கள், ரணில் மற்றும் விமல் வீரவன்ச எனத்தொடர்கிறது. இன்னும் யார்யாரெல்லாம் பின்வாங்குகிறார்களோ தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  26. 90 % ஆட்களில் ஒரு யோக்கியனைக் காட்டுங்கள்? சுமந்திரன் பிழை என்றா ஒன்று சுமந்திரனை வெளியேற்ற வேண்டும் அல்லது எல்லோரும் ஒன்றாக வெளியேறி ஒரே தலைமையின் கீழ் போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லையே,..... அப்படியானால் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரே நோக்கம் நாடாளுமன்றக் கன்ரீனில் சாப்பிடுவதுதான். இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தமுறை தமிழ்த்தரப்பு ஒரே கூரையின் கீழ் களமிறங்க வேண்டிய நேரம். அதில் சந்திரகாந்தன் முரளீதரன் உட்பட. ஆனால் உந்த களிசறைக் கூட்டம் என்ன செய்கின்ற? உந்தப் இந்திய அடிவருடி, சாதி வெறி,!சமயவெறிக் கூட்டம் எல்லாம் தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பார்கள் என்று நம்பும் முட்டாள்களை என்ன செய்வது?
  27. சரியாக சொன்னீர்கள் நொச்சி. ஒட்டுக் குழுக்கள்... கொலைகளை செய்து விட்டு அரச செல்வாக்குடன் பாராளுமன்றம் கலைக்கப் படும் வரை சுதந்திரமாக நடமாடி திரிந்தார்கள். இது பாவப் பட்டவர்களுக்கு மறுக்கப் பட்ட நீதி ஆகும். அவை எல்லாவற்றையும் தோண்டி எடுத்து நீதி வழங்குவதே சரியான முறை ஆகும். அத்துடன்... சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர என்ற நேர்மையான அதிகாரி மீண்டு சேவையில் இணைக்கப் பட்டுள்ளார். முன்னேற்றகரமான நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதே எமது விருப்பம். அவர் சம்பந்தமான தகவல்களை கீழுள்ள இணைப்பில் நேரம் இருந்தால் பாருங்கள். பல தமிழர்களின் கொலைகளையும் வெளியே கொண்டு வந்த திறமைசாலி. 👇 👇
  28. எல்லாப் பக்கம் இருந்தும் சுமந்திரனை சுழட்டி அடிக்கின்றார்கள். 90 வீதமானவர்கள் குற்றம் சாட்டும் ஒருவனை... நல்லவன், என்று வாதாடும்... ஒரு சிலரின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று அறிய முடிகிறது. 😎
  29. சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 😁
  30. கண்டிப்பாக இருக்கிறது சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள் தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏
  31. அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? இப்படி வேண்டுமானால் சொல்லலாம், தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை
  32. முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அப்போ தான் அது தமிழ் மக்களின் கட்சியாகும். தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது பதவி வெறியர்கள் இருக்க கூடாது சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது
  33. உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.
  34. எனக்கு தெரியும் நீங்கள் கூறும் நடுநிலையான ஊடகங்கள், நாசகார அழிவாயுதம் இல்லாத நாட்டில் அழிவாயுதம் உள்ளெதென கூறின ஊடகங்களும், அமெரிக்கா ஒரு நாட்டினை ஆக்கிரமித்தால் அது பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம், அதே செயலை இன்னொரு நாடு செய்தால் அது ஆக்கிரமிப்பு என க்கூறும் ஊடகங்கள் இவற்றினைத்தானே உண்மையேன பார்க்கிறோம், அவற்றிலும் இடது சாரி ஆதரவு ஊடகம் வலதுசாரி ஆதரவு ஊடகம் என எமக்கு விருப்பமான ஊடகங்களையே பார்க்கிறோம். இவை திட்டமிட்ட முறையிலான பிரச்சார ஊடகங்களா அல்லது தற்செயலாக நிகழ்கிறதா, அனைத்து ஊடகங்களும் எதோ ஒரு வகையில் பிரச்சார ஊடகங்கள்தான், அவ்வாறிருக்க தமிழ்நெற் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகளைத்தானே வெளியிடுகிறது. இதில் ஊடகங்களில் பிரச்சினை இல்லை, அதில் வரும் விடயங்கள் எமக்கு ஒவ்வாமையாக இருப்பதே பிரச்ச்சினையாக உள்ளது.
  35. எல்லோருடைய நம்பிக்கையும் அதுவே . நன்றி
  36. எல்லோருக்கும் நன்றிகள் எனது அடுத்த அலசல் "மதமும் மரணமும்" [இஸ்லாம்]
  37. இந்தப் பாரத்தை எப்படி பின் ரயர் தாங்குகிறது? கொஞ்சமாவது ரயர் நசிந்திருக்க வேண்டாமா? எனவே ...இது றலி சைக்கிளுக்கான விளம்பரமே,....🤣
  38. உங்களுடைய குருவின் கச்சையில்😅 சராசரி வயசு 42 ஆம் ....யோவ் சராசரி வயசு பட்டியலே இப்ப முக்கியம் ... ஒருத்தன் சோனி டி.வி வாங்கினால் ஊரில இருக்கிறவ்ன் எல்லோரும் சோனி டி,வி வாங்கிறமாதிரி தான் உங்கன்ட அரசியலும் ...ஒரு கட்சி சராசரி வயசை சொன்னால் இனி எல்லாரும் அதேயே சொல்லி கொண்டு திரிய போறீயல்
  39. மாம்பழத்து வண்டு வாசமலர்செண்டு யார் வரைவை கண்டு வாடியது இன்று ஹோ சுமெ அண்ட் சிறி கோஸ்டியை கண்டு வாடியதே இந்த வணடு
  40. சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் இருந்து போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி வெள்ளிக்கிழமை, 21 மாசிமாதம் 2003 புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி தீவிரவாத சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நிலத்தில் இருந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னால் அலரி மாளிகை நோக்கிச் செல்ல எத்தனித்த இக்கும்பலினை பொலீஸார் அதிரடியாகக் கலைத்துப் போட்டமையினையும் கண்டித்தும் இவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தநிறுத்தத்தை இரத்துச் செய், பொலீஸ் அடாவடித்தனத்தை நிறுத்து போன்ற பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் அமர்ந்திருந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்திருப்பதாக அவர்கள் கோஷமிட்டனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8394
  41. அமெரிக்காவில் எங்களுக்கு உகந்த இடங்களில் இவை இரண்டுமே சிறந்தவை, கொழும்பான். இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், நான் கலிஃபோர்னியாவே சிறந்தது என்று சொல்வேன். வேலை வாய்ப்புகளில் கலிஃபோர்னியாவே ஆகச் சிறந்த மாநிலம். செலவு அதிகம் தான். ஆனால் பொதுவாகவே இங்கு சம்பளமும் அதிகம். வீட்டு விலைகள் இரண்டு மாநிலங்களிலும் அதிகம் என்றாலும், கலிஃபோர்னியாவில் வீட்டு விலை எக்கச்சக்கமாக கூடிப் போயிருக்கின்றது. இது ஒரு பெரிய பிரச்சனையே. கலிஃபோர்னியாவின், குறிப்பாக தென் கலிஃபோர்னியாவின், வருடம் முழுவதுமான காலநிலை மிகச் சிறந்தது. வருடத்தில் பத்து மாதங்கள் வெறும் ரீ சேட்டுடன் இரவு பத்து மணிக்கும் கிரவுண்டில் பந்து அடிக்கக் கூடிய காலநிலை. அமெரிக்காவின் மேற்குக்கரை ஒப்பீட்டளவில் துவேஷம் குறைந்த பிரதேசம். பொதுவாகவே இந்தப் பக்கம் உள்ள மக்கள் இறுக்கமும், பழைய நம்பிக்கைகளும் குறைந்தவர்கள். இரண்டுமே அழகானவை. இந்து சமுத்திரத்திற்கும், அத்திலாந்திக் சமுத்திரத்திற்கும் (புளோரிடா கரைகள்) அவ்வளவாக வித்தியாசம் இல்லை. ஆனால் பசுபிக் சமுத்திரம் (கலிஃபோர்னியா கரைகள்) எப்போதும் ஓங்கி ஓங்கி அடிக்கும். அத்துடன் எப்போதும் குளிரான கடல், அலாஸ்காவுடன் தொடர்பு இருப்பதால். நீண்ட, அகன்ற கடற்கரைகள், மலைகள், வெளிகள், தோட்டங்கள். கடைசியாக 1994ம் ஆண்டு பெரிய ஒரு பூமியதிர்வு கலிஃபோர்னியாவில் வந்தது. இங்குள்ள வீடுகளும், தெருக்களும், பாலங்களும், எல்லாமே பெரிய அதிர்வையும் தாங்கக் கூடிய வகைகளிலேயே கட்டப்படுகின்றன. என்னுடைய தெரிவு கலிஃபோர்னியா............. மிக நீண்ட நாட்களாக, 27 வருடங்கள், இந்த மாநிலத்தில் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
  42. இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
  43. வடிவாகக் கவனியுங்கள். அவர் கடிதத்தில் கூறியதெல்லாம் இந்தியத் திட்டங்கள். அவர் வடபகுதி மக்களின் கூட்டாளியாகக் காட்ட முயற்சிக்கிறார். அனுர சரியான ஒன்றைச் செய்ய விரும்பினால் EPDP உட்பட துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அத்துடன் டக்கியரை சூளைமேடு(?) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையொட்டி அவரை நாடு கடாச வேண்டும். 🙄
  44. 🤣🤣🤣.............. முப்பத்திமூன்றா.................. நீங்க தான் கடை ஓனரா, டக்ளஸ் அண்ணே........ தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு கடிதம் எழுதிய, எழுதும் எல்லோரும் உங்களிடம் தோற்றார்கள் போங்கோ............. உங்களின் தேர்தல் பணிக்கு என்னுடைய பங்களிப்பு: 34. பலாலி விமானநிலையத்தை விரைவாக விரிவுபடுத்தி, சர்வதேச விமானங்களை இறக்கு ஏற்றுதல். 35. பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையை புனரமைத்து, இரசாயனங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலவாணியை கொண்டு வருதல். 36. வடக்கு கடற்கரைகளில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை புதுதாக அமைத்தல். 37. இறல் பண்ணைகளை தீவுகளில் அமைத்தல். 38. கடல் அட்டைத் தொழிலை விருத்தி செய்தல். 39. யாழ் உப்பு நீரேரியின் ஒரு பகுதியை நன்னீர் ஏரியாக மாற்றுதல். 40. இரணைமடுவில் கிடைக்கும் உபரி நீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்கல். 41. வடக்கு மருத்துவமனைச் சீர்கேடுகளை விரைவாகக் களைய ஒரு ஆணைக்குழுவை அமைத்தல். இப்படியே போனால் 108 திட்டங்கள் வந்திடும் போல இருக்குதே..........🤣......... அப்புறம் என்னையும் ஒரு சுயேட்சைக்குழுவில் சேர்த்து விடுவார்கள் போல............😜.
  45. பிக்பாஸ் தொடங்கிவிட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு வரவேண்டுமென்ற மெனக்கெடல் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நோக்கமாக அவர்கள் எதனை சொன்னாலும் பின்னால் இருப்பது பணம் புரளும் சந்தையாக இதனை மாற்ற வேண்டும். 2030ல் உங்களுக்கு புரியும். நான் பார்க்கிறேன் பார்க்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி அது உங்களை வந்தடையும். ஒன்று எதிர்வினை. இல்லை ஆதரவு என்றே அது தன்னை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் கடந்து செல்வதாக சொல்லி கொண்டால் எழுதவில்லை என்று வேண்டுமானல் சொல்லி கொள்ளமுடியும் தெரியாது என சொல்ல முடியாது. இது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வோர் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “ தான் வேடிக்கை பார்க்கு நாம்..... ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எறிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எறி.. உனக்கு ஒரு டாலர் தருவேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக் கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அதுதான் நாம் தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியையும் சொல்லமுடியும். வரலாற்றில் அந்த நிகழ்ச்சிகளை தடை செய்த பிறகு தான் மானுட அன்பு கொஞ்சம் புரிந்தது. மீண்டும் சிதைக்க இப்படியான நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகிறது. காலம் என்பதே அப்படித்தான்.. முன்னும் பின்னுமாய் அலைக்கழிப்பது.... உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். எந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பங்கேற்பாளராக இருக்காதீர்கள். எந்த நிகழ்ச்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அதுதான் அவர்களின் மூலதனம். அவர்கள் பொய்யாக ஒரு எண்ணிக்கையை சொல்லுவார்கள்... ஒரு கோடி பேர் வாக்களித்தார்கள் என்பார். நாமும் இவ்வளவு பேரா ? என யோசித்து கையில் இருக்கும் அலைபேசியில் ஒரு பிரஸ் தானே என அமுக்குவோம். அங்கே தான் எல்லாம் தொடங்குகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அது பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நிலை.. ஆனால் அவர்கள் டார்கெட் நாம் தான். கொஞ்சம் தெளிவாக வேடிக்கை மட்டும் பாருங்கள்... எல்லாமே தலைகீழாகும்... இது நடக்க வாய்ப்பில்லைதான்... ஆனாலும்.. முயற்சிப்போம்.. முகநூலில் வந்தது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.