Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    9308
    Posts
  3. சுவைப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8805
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2957
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/27/24 in Posts

  1. மக்களுக்கு சேவை செய'ய என்னமா அடி படுறானுங்கள்.
  2. வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By. Karunya
  3. தமிழ் மக்கள் பிரச்சனையின் தீர்வு முயற்சிக்கு இரு வகை சிந்தனைகள் உண்டு 1)இரத்தம் சிந்தித் தான் விடுதலை என்பது ஒரு சிந்தனை 2)சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வுக்கு இரத்தம் சிந்தாமல் வர முடியும் என்பது இன்னொரு வகையான சிந்தனை இப்போது சுமத்திரனை எதிர்பவர்கள் இதில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்? இரத்தம் சிந்தி போராடுவது தான் முதல் நிலைப்பாடு என்றால் அதில் ஒரு நேர்மை உண்டு. மதிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு சூழல் இல்லாத பொழுது இரண்டாவது சிந்தனை தான் சரி என்றாகும் பொழுது அப்பொழுதும் சுமந்திரன் வெறுப்பு என்பதற்கு காரணம் பின்வருமாறு 1) தமிழ் இனத்தை இப்படியே ஒரு பதை பதைப்பில் வைத்துக்கொண்டு பெரிய கனவுகளை காண சொல்லி நலிவடைந்த இனமாக எம்மை மாற்றுவது. 2) புலிகள் பெயரில் கொள்ளை அடித்த பணத்தை மக்கள் கேட்டு விடக்கூடாது என்ற பயம். 3) சரியாக பேசி விட்டால் நண்பகளை இழக்க வேண்டும் என்ற பயம்.அதனால் நாலு பேர் சொல்வதை வழிமொழிகிறேன் கூட்டம் 4) புலிகள், மாவீரர்கள் அவர்களின் தியாகம் ஆகியவற்றில் உள்ள பெரும் மதிப்பு. இவர்கள் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் நிலை புரிந்து கொள்ளத் தக்கது. ஆனாலும் காலம் இவர்களின் சிந்தனையை மாற்றி விடும். இது புதிய அரசியல் அமைப்பு சாசன மாற்றத்தில் திரு சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரோடு சேர்த்து இயங்கிய திரு ஜெயம்பதி விக்ரமரட்ண வின் செவ்வி. சிங்கள மக்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மிதவாதிகள் உண்டு. நம்பிக்கையோடு பயணம் செய்தால் நல்ல வளமான இலங்கையை கட்டி எழுப்பலாம்.
  4. பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை. பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம். பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
  5. இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்னாடி சீமான் தான் அதை பேசுபொருளாக்கி இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வந்திருக்கிறார்.. அதை தொடர்ந்து இன்று விஜை திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இருகண்கள் என்று சொல்லி இருக்கிறார்.. அவர் சொல்வது சரி பிழை வெல்வார் தோற்பார் என்பதற்கு அப்பால் ஒரு சினிமா பிரபலத்துடன் வந்திருப்பவர் ஓட்டு போடுரமோ இல்லையோ என்னதான் பேசுகிறார் என்று ஒட்டுமத்த தமிழ்மக்களும் உற்று பாத்துக்கொண்டிருக்ககூடிய ஒருவர் தமிழ்தேசியத்தை தனது வாயில் இருந்து உச்சரித்திருக்கிறார்.. தனது கொள்கைகள் இரண்டில் ஒன்று என்று சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு மக்களையும் தமிழ்தேசியம் என்ற சொல் சென்று சேர்ந்திருக்கும்.. உலகம் எங்கும் பரந்து வாழும் என்போன்ற உண்மையிலேயே மனசார சாதிபேதமற்ற தமிழ் தேசியத்தை நேசிக்கும் (பைத்தியக்கார கடும்போக்கு ஈழத்தமிழ் சுயநல தமிழ்தேசிய அல்லது விளக்கமில்லா விசருகள் அல்லது சுயநலத்துக்கு கடும்தேசியம் பேசும் புலம்பெயர் கூட்டத்தை அல்ல) என் போன்ற பலர் ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் இது.. இந்த உழைப்பு முழுவதும் சீமானை சாரும்.. அவருக்கு முன் தமிழ்நாட்டில் குழுக்களாக இயங்கிய இயங்கும் தமிழ்தேசிய இயக்கங்களையும் சாரும் என்றாலும் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தியதில் சீமானைத்தான் சாரும்.. இப்படி இன்னும் பல தமிழ்தேசியக்கட்சிகள் இனி வரும்.. தமிழ் தேசியத்துக்கு இனி ஏறு முகம்தான்..💪
  6. அவருடைய DNA யில் சாவகச்சேரி யின் அடி இருக்கிறதாம். மற்றையது, அவருடைய பூட்டனாருக்கு மட்டுவில் கத்தரிக்காயும் கொட்டடிச் சந்தை வீச்சு மீனும் நல்லாப் பிடிக்குமாம். 😉
  7. அதனை ஏன் செய்யவில்லை??? காரணம் சுமத்திரனால். செய்ய முடியாது எவராலும் செய்ய முடியாது ஆனால் இது தான் வழி இப்படி தான் செய்யலாம் அதற்கு பாராளுமன்றம் போக வேண்டும் எனவே… உங்கள் வாக்குகளை எனக்கு போடுங்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் புலுடா விட்டு உயிர் உள்ளவரை பாராளுமன்றம் போவது இப்படியே வாழ்க்கையை நடத்துவது ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் போய் என்ன செய்கிறாய் என்று தட்டி கேட்டால் ...சமத்திரனை ஏன் வெறுக்கிறார்கள் என ஆராய்ச்சி வேறு நடத்தப்படுகிறது?? உண்மையில் சுமததிரனை அல்லது வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை வெறுக்கவில்லை எங்களை தமிழ் மக்களை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டவகையில் ஏமாற்றுவதை வெறுக்கிறோம். ஒருமுறை அல்லது இரண்டு முறை பாராளுமன்றம் போய் செய்ய முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போகதீர்கள். மற்றவருக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் அவர்கள் முயன்று பார்க்கட்டும். அவையாலும். ஏலாது விடில் மீண்டும் புதியவர்களை அனுப்புங்கள். சுமத்திரன். போன்றோர் பாராளுமன்றம் போவதையோ வாழ்க்கையாக. கொண்டிருக்கவேண்டும். ?? இதை தான் வெறுக்கிறோம். மாறாக சுமத்திரன். போன்ற தனிமனிதர்களை இல்லை 🙏🤣🙏
  8. ஐயா ..... தேர்தலில் போட்டியிடுபவர்கள், முதலில் தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை குற்றம் சுமத்துவதற்காக நாமே வலிந்து அதற்குள் அகப்படலாமா? அவர்கள் சும்மாவே கைது செய்யும் கூட்டம் என்பதற்காக நம்மை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக வலியப்போய் பொறியில் தலையை மாட்டலாமா? உங்களையுந்தான் நிராகரிக்க போகிறார்கள், நீங்களும் போட்டியிடாமல் தள்ளி நில்லுங்கள், பகிஸ்கரியுங்கள். இருப்பவன் சரியாய் இருந்தால் சிரைப்பவன் சரியாக செயற்படுவான். நீங்கள் சரியாக செயற்படவில்லை உங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு. எங்களைத்தவிர வேறு யாருக்கும் வாக்குபோடக்கூடாது என கட்டளையிட நீங்கள் யார்? உங்களால் சாதிக்க முடியாவிடில் விலகுங்கள். மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே போய்விட்டது, தேர்தலுக்கொரு கட்சியில் போட்டியிடுகிறீர்கள். ஒரே கட்சியாக ஒரே கொள்கையாக வாருங்கள், சொல்வதை செயலில் காட்டுங்கள், நீங்கள் சொல்லவே தேவையில்லை மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென. தமிழ் தேசியம் எனும் மாயையை வைத்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அலைக்கழிக்காதீர்கள் உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக.
  9. இவர் ஆட்சி மாற்றத்தில் பலே கில்லாடி...என்ற காரணத்தால் இவர் தொடர்ந்து சிறிலங்காவில் பணி புரிய அமேரிக்கா உத்தரவிட்டுள்ளது போல கிடக்கு .....அடுத்த ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் இவ்ர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியோ தெரியல்ல‌
  10. இவர் முன்னாடி டக்கிளசின் கட்சியில் இருந்தவர் அல்லோ?
  11. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  12. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வரிசையில் நின்று அரச வைத்தியசாலையில் மருந்து எடுத்திருப்பார்களா? இல்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு வரிசையில் இருந்திருப்பார்களா? அவர்களுக்கு சாதாரண மக்களுடைய பிரச்சினை தெரியாது. ஆகவே எமது வர்க்கத்தை சேர்ந்தவர் தற்போது ஜனாதிபதியாகி இருக்கின்றார். இதிலிருக்கும் கணிசமானவர்கள் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக இருக்கலாம். பெரும்பாலனவர்களது வீடுகள் சேதமடைந்திருக்கலாம். அதேபோல் அனுர குமார திஸாநாயக்கவின் வீடு 1979 ஆம் ஆண்டு இராணுவத்தால் தாக்கப்பட்டிருந்தது. யுத்தத்தினால் உற்றார், உறவினர்கள் உயிரிழப்புக்களை சந்தித்திருக்கலாம் அதேபோல் அனுர அவர்களது ஒரேயொரு அண்ணா டயர் கொளுத்தி கொலை செய்யப்பட்டார். யுத்தம் மிகவும் வித்தியாசமான யுத்தம். யுத்தத்தின் போது சாதாரண சிங்கள, தமிழ் மக்கள், இளைஞர்கள் தான் கொல்லப்பட்டார்கள். சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்த ஒருவரே ஜனாதிபதி ஆகியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தி வடமாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல கட்சிகள் அவதூறுகளை பரப்பிகொண்டு வருகின்றார்கள். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். அனுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும். டீல் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம். அடுத்த அரசாங்கத்தில் அடுத்த அமைச்சர்களாக பதவியேற்பதும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் நேர்மையான ஊழலற்ற நபர்களே என்பதை உறுதியாக கூறுகின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகின்றார். அதேபோல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வருகின்றார். அக் கூட்டங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அடுத்த 14 ஆம் திகதி தேர்தலுக்கு பின்னர் மிக வேகமாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா, வன்னி தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளர் யோகராசா சிவரூபன், யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/197261
  14. சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .
  15. ஆந்திராவின் NTR உம் உதவினார். வைகோ போன்றவர்களை தெலுக்கன் என்று ஏசும் அதே கூட்டம் தான் இங்கே சுமத்திரனை தமிழின விரோதி என்கிறது. தனது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் தனக்கு நன்மை செய்ய விரும்புவனுக்கு எதிராக வாள் சுற்றும் கூட்டம் அது.
  16. இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம். இதை எவராலும் தவிர்கக முடியாது. தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே. சீமான் அடிக்கடி புகழும் தமிழ் தேசியவாதியான மபொசி போராளிகளை ஏறெடுத்தும் பார்ககவில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து திரும்பியபோது மபொசி வலிந்து சென்னைத்துறைமுகம் சென்று அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றார்.
  17. திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.
  18. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம். 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம். 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம். 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம். 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை. 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம். 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை. 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை. 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை. 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம். 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம். 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம். 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) ஆம். 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம். 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம். 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம். 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம். 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம். 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம். 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி. 3 இடங்கள். 28) வன்னி தமிழரசு கட்சி. 3 இடங்கள். 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி. 2 இடங்கள். 30)திருமலை தேசிய மக்கள் சக்தி. 2 இடங்கள். 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 3 இடங்கள். 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி. 11 இடங்கள். 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 இடம். 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0. ஒன்றும் இல்லை. 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) அர்ச்சுனா இராமநாதன். வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி. 39) உடுப்பிட்டி தேசிய மக்கள் சக்தி. 40) ஊர்காவற்றுறை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி. 42) மன்னார் தமிழரசு கட்சி. 43) முல்லைத்தீவு. தேசிய மக்கள் சக்தி. 44) வவுனியா. தேசிய மக்கள் சக்தி. 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி. 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி. 47) திருகோணமலை தேசிய மக்கள் சக்தி. 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி. 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி. 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 5 இடங்கள். 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 இடங்கள். 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி. 1 இடம். 54)தமிழரசு கட்சி 7 இடங்கள். 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடம். 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 இடம் 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 14 இடங்கள். 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 54 இடங்கள். 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 138 இடங்கள். 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 2 இடங்கள். போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  19. சுரேஷ் துரோகியென்று யாரும் எழுதினார்களா தெரியவில்லை. ஆனால், சுரேஷ் அப்பாவித் தமிழர்களைக் கொன்று வயிறு வளர்த்த ஒரு கொலைக்குழுத் தலைவர். இது வரை அவர் தன் கொலை பாதகங்களுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. உங்கள் "இறைவன்" அவரை மன்னித்தவுடன் அவர் சுத்தமாகி விட்டார் என்று நீங்கள் நம்ப உங்கள் "பக்தி" காரணம். ஏனையோருக்கு அவரை மன்னித்துப் போற்ற வேண்டிய அவசியம் இல்லை!
  20. கதை நல்லதுதான் முதல்பாதி நன்றாகச் சொல்லப்படிருந்தது. இரண்டாவது பாதி இழுவை. குறும் படத்துக்கான கதையை 2.30 மணித்தியாலத்துக்கு நீட்டி இருக்கிறார்கள். ஆனாலும் மோசமில்லை. பார்க்கக் கூடிய படம். அவரவர்களுக்கு தந்த பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
  21. நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள் எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை.
  22. 1969 க.பொ.த. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் பரீட்சை எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்” என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார். அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே. எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள். ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்” என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்” என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.
  23. அப்போ.... அவர்களின் பணியை இவர் தொடர்கிறார் என்று சொல்கிறீர்கள்? ஒத்துகொண்டமைக்கு நன்றி! கவனம், பாதுகாப்பு கொடுப்பவர்களே போட்டுத்தள்ளிவிட்டு, புலம்பெயர்ந்தோர் செய்தார்கள் என்று சொல்வார்கள். அதற்குத்தானே புலனாய்வு பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று கேட்டால், மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து விட்டது என்றும் மாற்றுவார்கள்.
  24. அங்க என்ன தெரியுது . ..........! 😂
  25. வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். - Karunya -
  26. அருமையான கவிதை தொடருங்கள் . .........! 👍
  27. “ஆண்டாள் மாலை” கோதை என்ற இயற் பெயரை கொண்ட, தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் [Andal], சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப் பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விஷ்ணுசித்தர் [Vishnucitta / பெரியாழ்வார்] கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் கண்ணனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையை கழற்றி மீண்டும் அதே இடத்தில், அதேமாதிரி திரும்பவும் கொண்டு போய் வைத்து விடுவார். ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் இப்படி செய்து வந்தாள். அது மட்டும் அல்ல, மாலையை கழுத்தில் போட்டு, மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத, முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய் தொங்கும் பந்தலின் கீழ், தன் மச்சான் நம்பி மதுசூதனன் தன்னிடம் வந்து, தன் கைகளைப் பற்றுவதாக கனவுகளும் கண்டாள். "மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்" சிலவேளை கண்ணனுக்காக காத்திருந்து, அவன் கனவில் வரவில்லையே என்று கொதித்து எழுந்தாள். தன் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப் பட்டாள் “கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும் அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே” இப்படி அவள் தினம் தினம் சூடிய அந்த மாலைகளே கண்ணனுக்கும் [விஸ்ணுவுக்கும்] சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு விஸ்ணு [Sri Vishnu] அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் மகிழ்வானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் 'இறைவனையே ஆண்டவள்' என்ற பொருளில், ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். இதையே - ஆண்டாள் சூடிய அந்த மாலையையே - 'ஆண்டாள் மாலை' [Andal garland] என்கின்றனர். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு, இன்றும் நாள்தோறும் ஒரே ஒரு மாலை மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்த மாலை பின் மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, விஸ்ணுவுக்கு சாற்றப்படும். பிறகு, கோதையை துளசிச் செடியின் கீழ் கண்டு எடுத்து வளர்த்த பெரியாழ்வாருக்குச் சாற்றப்படும். இந்த ஆண்டாள் மாலை பொதுவாக, குருக்கத்திப்பூ [Cinnamon flower], சாமந்தி [Chrysanthemum / செவ்வந்திப்பூ], சேத்தி என்று வழங்கப்படும் விருச்சிப் பூ, தாழம்பூ [Fragrant Screw Pine], செங்கழுநீர்ப்பூ [செங்குவளை / Red Waterlily], 'இருள் வாசி' எனப்படும் இருவாட்சி மலர் [Bisexual flower], பாதிரி [Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens] ஆகிய ஏழு மலர்களால் தொகுக்கப் படுகிறது. என்றாலும் இடத்துக்கு இடம் மலர்களின் தொகுப்பில் வேறுபாடு இருக்கலாம் ஏன் என்றால், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்கு சாத்துவதற்காக வருடந் தோறும் அனுப்பப்படுகிறது. இந்த மலர் மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் [tulasi, sevanthi and sampangi flowers] தொடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும் மனிதர்களின் மூச்சுக்காற்றோ, எச்சிலோ மாலையின் மீது படாதவாறு மூக்கையும் வாயையும் துணியினால் கட்டிக்கொண்டு, பொதுவாக, மிக ஆசாரத்துடன் மாலை தொடுப்பார்கள். ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெற்று, ஏதேனும் தோஷத்தாலோ தடையாலோ திருமணம் தள்ளிப்போகிறவர்கள் அணிந்து கொண்டால், விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இதனால் தான் பெண்களின் பூப்புனித நீராட்டுவிழாவில் ஆண்டாள் மாலை சூட்டப்படுகிறது. அதாவது, அந்த பெண் கருவுறும் நிலையை அடைந்து விட்டாள், ஆகவே அவளுக்கு இனி திருமணம் இனிதாக நிறைவேற, ஆண்டாள் மாலையை அணிவிக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு புராண கதைகளின் அடிப்படையில் எழுந்த நம்பிக்கை மட்டுமே ! சீதை என்றுமே ஒழுங்காக ராமனுடன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை, அது மட்டும் அல்ல தனிப்பெண்ணாக பிள்ளைகளை வளர்த்து எடுத்து, இரண்டாம் தடவையும் அவளின் புனிதத்தை பரிசோதிக்க தீயில் குளிக்கும் படியும், அதில் வெற்றி அடைந்து உலகத்துக்கு காட்டி, அதன் பின் தன்னுடன் வாழ வரும்படியும் கணவன் ராமன் கேட்டதற்கு, வாழ்ந்து பட்ட துன்ப வாழ்வு இனி போதும், உன்னிடம் வந்து வாழ்வதை விட சாவு மேலானது என கருதி, பூமியிற்குள் குதித்து தற்கொலை செய்கிறாள். ஆனால் இன்றும் 'இராமன் - சீதை போல வாழ்க !' என வாழ்த்துவதை காண்கிறோம், அப்படித்தான் இந்த ஆண்டாள் மாலையின் கதையும். விஸ்ணுவுக்கு பூதேவி மற்றும் ஸ்ரீதேவி என இரு மனைவிமார்கள் இருப்பதாக புராணம் கூறுகிறது. ஆகவே இரண்டு மனைவிகள் உள்ள ஒரு குடும்பத்தரான விஷ்னுவை தான் தன கணவராக - அதாவது அவரின் மூன்றாவது மனைவியாக தன்னை நினைத்து - விஸ்ணுவுக்கு சாத்த தொடுக்கப்பட்ட மாலையை தன் கழுத்தில் போட்டு கனவு காண்கிறாள் ஆண்டாள் என இதனால் அறிகிறோம். மற்றது, எமக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்றின் படி, ஆண்டாள் கனவில் கற்பனையில் மட்டுமே தன் திருமணத்தையும் திருமண குடும்ப வாழ்வையும் விஸ்ணுவுடன் கழிக்கிறாள். என்றாலும் புராணக் கதையின் படி, ஒரு நாள், ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாக பெரியாழ்வார் கேள்விப்பட்டு, ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி, பல்வகை இசைக்கருவிகள் இசைத்து, ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தை அடைந்தனர். அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க, பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலின் கருவறைக்குள் சென்று, அவனைக் கண்களாரக் கண்டு இறைவனுடன் கலந்துவிட்டாள் அல்லது அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள் என்று கூறுகிறது? அதே நூற்றாண்டை சேர்ந்த [ஏழாம் நூற்றாண்டு] திருஞான சம்பந்தர், மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்றவை கூறுகின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட சமணர்கள், அவர்கள் திட்டமிட்டபடி சம்பந்தரின் திருமணம் ஆலயத்தில் நடந்தவேளையில் ஆலயத்திற்கு தீ வைத்து சம்பந்தரையும் ,கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களையும் தீயுடன் ஐக்கியமாக்கி சமணர் பழி வாங்கிக் கொண்டதனை 'இறைபதம் அடைந்தனர்' என புராணம் அதே காலத்தில் கூறியதை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அப்படி என்றால் இந்த ஆண்டாள் மாலையை தம் மகளுக்கு சூடுவதால் அல்லது ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெறுவது மூலம் உண்மையில் எதை பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் ? புரிந்தவர்கள் இதற்கும் மற்றும் 'இராமன் - சீதை போல வாழ்க !' என்பதற்கும் சரியான பதில் தருவார்கள் என்று எண்ணுகிறேன் நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  28. theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான். உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம். சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது. இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  29. இந்த தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கு வந்து அப்படி செய்வோம் இப்படி செய்வோம் எனும் ஆட் கள் தான் எம்மக்களுக்கு தேவை என்கிறீர்கள். கடந்த 15 வருடத்தில் சுமந்திரனின் சாதனைகள் எவை? ஓகோ. தற்போது கட்சியில் உள்ளவர்கள் சொக்க தங்கங்கள். அப்படித்தானே?? இதனை எப்படி மக்கள் அறியாமல் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலரையும் பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்களே. அப்போ மக்கள் மூடர்களா??
  30. நல்ல பயனுள்ள செய்திகளை தருவதற்கு மாறாக சரி தவறு என்பதை தாண்டி ஒருவர் தனிப்பட்ட இவ்வாறான விடயங்களை பொது வெளியில் செய்தியாக்குவது விரும்பத்தக்கது அல்ல. தலைப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
  31. இது ஒரு தொடக்கம் தான். மிச்ச கட்சிகளுக்கும் பார்த்து பாராமல் வெளுத்து வாங்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
  32. ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர வீரர்கள் தான்....
  33. நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள் 🤣🤣 அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏
  34. பின்னூட்டங்கள், பெயர்கள் இலக்கங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கிறது.....🤣 (பெருமாளும் பேட்டியைக் கேட்கவில்லை, சிறியரும் பேட்டியைப் பார்க்கவில்லை,.....ஆனால் பின்னூட்டங்களில் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள்,...🤣)
  35. அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂
  36. பாக்கிஸ்தான் தொட‌ரை வென்று விட்ட‌து..............................
  37. "வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். " ஏன் முழுமையாக ஒப்புக்கொண்டால் இனத்துவேசம் என்ற வலையை பாவித்து வேலைத்தளங்களில் இருந்து பொது இடங்களில் வரை இவர்களின் நடத்தைக்கு உங்களால் காரணம் கட்பிக்க முடியாது என்பதாலா? அல்லது சக இந்தியர்களே இவர்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை முழுக்க புதைக்க இந்த கதையா? இவர்கள் வெள்ளையர்கள் பெருமான்மையான நாடுகளில் மாத்திரமா இப்படி செய்கிறார்கள்? சிங்கப்பூரில் இந்திய உல்லாசப்பயணிகளின் நடத்தை எவ்வாறுள்ளது? பாலி (Bali), இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள்? அந்த நாட்டு மக்களோடு கதையுங்கள். அவர்கள் இந்தியர்கள் தங்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவதை வெறுக்கிறார்கள். வெறுப்பவர்கள் மேலை நாட்டவர்கள் அல்லர். நான் இலங்கையர் என்று அறிந்ததும் உற்ற நண்பன் போல பழகுவார்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களாகள், நான் இந்து என்பதட்காக என்னை வேறுபடத்தவில்லை. மாறாக தங்களது வாகனத்தில் ஏத்தி பல இடங்களுக்கும் கொண்டு போவார்கள். வாகனத்துக்கு பணமும் வேண்டமாட்டார்கள். நாங்கள் உணவு, பொருட்கள் என்று அவர்களுக்கு வேண்டி உபசரிப்போம். அவர்களிடம் இருந்து பலவற்றை அறிந்துளோம். வெட்கப்படுகிறோம் (personally embarrased). "இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். " தவறு. முதலில் உலகில் ஓரி பில்லியனுக்கு மேல் சனத்தொகை உள்ள நாடுகள் 2. இந்த நாடுகளில் இருந்து வந்து குவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதனால் அதிகம். அதேசமயம் அதிக எண்ணிக்கை என்பதனால் அவர்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மிக கூடுதலான அளவு காலத்தை அந்த சமூக பின்னலுக்குள் தான் செலவழிக்கிறார்கள். அந்த வலையை விட்டு பெரும்பான்மை சமூகத்துடன் அவர்கள் தொடபு கொள்வது கூடுதலாக தொழில் மற்றும் பல்கலைக்கழகம் என்று அமைகிறது. பாடசாலைகள் கூட இவர்கள் நிறைந்து வாழும் பகுதி என்றால் அந்த கலாச்சார மாணவர்களையே கூடுதலாக கொண்டுள்ளது அவர்களது சமூக கலாச்சார இணைப்புகளும் அப்படியே. தொழில் இடங்களிலும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதைவிட தொடர் புலம்பெயர்தல் (chain migration) இந்த சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படியில் மிக அதிகம். இதன் விளைவு தாய்நாடு கலாச்சாரம், பண்புகள், நடத்தைகள் மேலும் மேலும் வேரூன்றுகின்ற நிலைமை. எனவே இவர்கள் புலம்பெயர் நாட்டின் நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும் பாதை மிக நீண்டது. இந்தியர்கள் தங்கள் நாட்டை ஒரு வல்லரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு ஏன் இடம்பெயருகிறார்கள்? ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொண்டு எதட்காக பிரஜாவுரிமைக்க 10-20 வருடம் வரிசையில் நிக்கிறார்கள்? எல்லாவற்றிக்கும் காலனித்துவ ஆடசியா காரணம்? காலனித்துவ ஆட்சியில் இருந்து இரண்டாம் உலகமாகயுத்தையும் கண்ட சிங்கப்பூர் எப்படி உயர்ந்தது? அதே ஆட்சியில் இருந்து விடுபட்ட ஸ்ரீலங்கா எப்படி சின்னாபின்னமானது? நாங்கள் எப்பவும் எங்களை பாதிக்கட்டவர்கள் என்ற மனநிலையில் (victim mentality) வைத்துக்கொண்டு எங்களை பின்னோக்கி கொண்டு செல்கிற பழக்க வழக்கங்களையும், அரசியல் சமூக கலாச்சார வழிமுறைகளையும் விடமாட்டோம் என்றால் எங்கள் எதிர்காலம் எப்படி மாறும்? நாங்கள் விட்டு வந்த நாடுகள் எப்படி மாறும்? நாங்கள் வந்து குடியிருக்கிற நாடுகள் எப்படி பயனடையும்? நாங்கள் புலம்பெயர்ந்த நாடும் நாங்கள் விட்டு வந்த நாடுகள் போலாகிவிடுமல்லவா ? அதனால் எங்களது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் என்ன செய்துவிட்டு போகிறோம்
  38. இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள சொத்தில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார். டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க சொத்து எழுதி இருக்கிறார். இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம். இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அத்தோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படும். https://www.virakesari.lk/article/197093
  39. வியாபாரிகளுக்கு எங்கே முதலிட வேண்டும் என்பது தெரியும். அவர்களுக்கு தேசியமும் புண்ணாக்கும் வியாபாரப் பண்டமே.
  40. யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார். என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏
  41. நீங்கள்…. தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இந்தியாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லி, சுமந்திரனின் தான் தோன்றித்தனமான செய்கைகளை நியாயப் படுத்தப் படுத்துவது… உங்களை நீங்களே ஏமாற்றுவதற்கு சமனானது. பிரிந்தவர்கள் எல்லோரும் இந்திய விசுவாசிகள் அல்ல. சுமந்திரனின் கடந்த கால செய்கைகளே… அவரை பலரும் எதிர்க்க முக்கிய காரணம். போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் இருந்து அவரின் பல செய்கைகள் அரசை காப்பாற்றுவதாகவே இருந்துள்ளதை யாழ்.கள செய்திகளை தேடி வாசித்தீர்களானால் சுமந்திரன் எப்படிப் பட்ட வஞ்சகர் என்பது புரியும். சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வதை… பெருமையாக பீத்திக் கொண்டு திரிந்தவர் தமிழரசு கட்சியிலேயே இருக்க லாயக்கு இல்லாதவர்தான் சுமந்திரன். தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த தமிழரசு கட்சியின் அடிப்படை கொள்கைகளை சிதைக்காமல், சிங்கள கட்சியில் இருப்பதே சுமந்திரனின் கொள்கைக்கு நல்லது.
  42. ’மெய்யழகன்’ திரைப்பட விமர்சனம் Casting : Karthi, Aravind Swamy, Raj Kiran, Sri Divya, Swati Konde, Devadarsini, Jayaprakash, Sriranjani, Ilavarasu, Karunakaran, Saran Shakthi, Rachel Rebecca, Antony, Rajsekar Pandian, Indumathy Directed By : C.Prem Kumar Music By : Govind Vasantha Produced By : 2D Entertainment - Jyotika and Suriya சொந்தங்களின் துரோகத்தால் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் சென்று, சென்னையில் குடியேறும் அரவிந்த்சாமியின் குடும்பம் 20 வருடங்களாக சொந்த ஊர் மற்றும் சொந்தங்களின் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது. மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்லும் அரவிந்த்சாமிக்கு, உறவினர் கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல், தெரிந்தது போல் அவருடன் பழகும் அரவிந்த்சாமி, கார்த்தியின் மூலமாக தன்னைப் பற்றியும், உறவுகளின் உண்ணதத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள நேரிடும் பயணம் தான் ‘மெய்யழகன்’. ’96’ திரைப்படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த இயக்குநர் பிரேம்குமார், இதில் உறவுகளின் மேன்மை பற்றியும், மனிதம் பற்றியும் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்திருக்கிறார். டெல்டா இளைஞராக நடித்திருக்கும் கார்த்தி, நடிப்பு, பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம் என அனைத்து உனர்வுகளையும் மிக அழகாக வெளிக்காட்டி மெய்யழயகன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி, அதற்கான தோற்றத்தில் தன்னை கச்சிதமாக பொருத்திக்கொள்ளும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மூலம் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மக்கள் மனதில் மிக எளிதாக நுழைந்து விடுவார், அப்படி தான் மெய்யழகன் என்ற இளைஞராக பசை போட்டு ஒட்டிக்கொள்பவர், தனது நடிப்பு மூலமாக ரசிகர்களை பல இடங்களில் சிரிக்க வைத்து கண்கலங்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் அருள்மொழி என்ற வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சொந்த ஊர் மீது இருக்கும் ஈர்ப்பும் ,ஏக்கமும் தன் மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டுபவர், கார்த்தியிடம் சொல்லாமல் அவரை விட்டு விலகும் காட்சிகளில் நடிப்பில் தஞ்சை கோபூரம் போல் உயர்ந்து நிற்கிறார். கார்த்தியின் மனைவியாக நடித்த ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதை எந்தவித குறையும் இன்றி செய்து மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா கதைக்களத்தின் அழகை மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிபாக மெய்யழகன் மற்றும் அருள்மொழி கதாபாத்திரங்களின் மகிழ்ச்சி, சோகம், நெகிழ்ச்சி ஆகிய அனைத்து உணர்வுகளும் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா உணர்வுகளை காட்சிப்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி மென்மையாக பயணித்திருக்கிறது. இளையராஜா தன்னை சாடினாலும் தான் அவரது தீவிர ரசிகன் என்பதை கோவிந்த வசந்தா இந்த படத்திலும் நீரூபித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ், இயக்குநரை காட்டிலும் காட்சிகளை அதிகம் ரசித்திருக்கிறார் என்பது காட்சிகளின் நீளத்தை பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குநரின் கற்பனை எவ்வளவு நீளமாக இருந்தாலும், படம் பார்க்கும் பார்வையாளர்களின் பக்கம் இருந்து அதை பார்க்காமல், இயக்குநர் பக்கம் நின்று அவர் பார்த்திருப்பது படத்திற்கு சில இடங்களில் பலவீனமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் சி.பிரேம்குமார் ஒரு இரவு பயணத்தின் மூலம் உறவுகளையும், உணர்வுகளையும் மக்களிடம் கடத்தும் கதைக்கு திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்த விதம் மிக மென்மையாக இருப்பதோடு, ரசிகர்களை இளைபாற வைப்பது போல் இருக்கிறது. ஆனால், அதில் திடீரென்று தமிழர்களின் வரலாறு, வீரம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஈழத்தமிழர்கள் படுகொலை என்று சமூக கருத்துகளை பேசுவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை படத்துடன் ஒட்டாமல் பயணித்திருக்கிறது. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரது நடிப்பு மற்றும் திரை இருப்பு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்திருப்பதோடு, சிரிக்க வைத்து ரசிக்க வைக்கவும் செய்கிறது. ஆனால், அவை படம் முழுவதும் வராமல் ஆங்காங்கே வருவதாலும், இருவருக்குமான உரையாடல் வேறு தலைப்புகளை நோக்கி செல்வதாலும் சில பார்வையாளர்கள் சற்று ஏமாற்றம் அடையவும் செய்கிறார்கள். இருவரை மட்டுமே வைத்துக்கொண்டு இயக்குநர் சி.பிரேம்குமார் கையாண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான திரைக்கதை பார்வையாளர்கள் மனதுக்கு நெருக்கமாக பயணித்தாலும், சில காட்சிகளின் நீளம் பார்வையாளர்களுக்கு இருக்கமான மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. அந்த நீளமான காட்சிகளை சற்று பொருத்துக்கொள்பவர்கள் நிச்சயம் படத்துடன் ஒன்றிவுடுவதோடு, கொண்டாடவும் செய்வார்கள். மொத்தத்தில், ‘மெய்யழகன்’ மனதுக்கு நெருக்கமானவன். ரேட்டிங் 3.8/5 https://www.cinemainbox.com/movie-reviews/1017.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.