Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88820
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20351
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19667
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/05/24 in Posts

  1. முதல்தடவையாக மனைவியும் நானும் தபால் மூலமாக வாக்களித்தோம். கிழக்குக் கரையோரங்களில் இரவு 8 -9 மணிக்கு முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிடும். மேற்குக்கரைகளில் உங்கள் நேரம் நாளைக் காலை 6 மணிக்கு தான் முடிவுகள் சொல்வார்கள். பல மாநிலங்களில் சமபலம் உள்ளதால் நீண்ட நேரமோ காலமோ எடுக்கலாம்.
  2. போட்டு புளந்துட்டானுவோ…🤣 ஆனால் சங்கவியோ, அங்கவியோ, இங்கவியோ…. எந்த பெண்ணும் அவராக வந்து விஜை, உதய், ஸ்டாலின் மீது பொது வெளியில் புகார் சொன்னதில்லை. அப்படி சொல்லாதவரை, இந்த மாரிதாஸ் (இவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறி ரொம்ப நாளாச்சு) சைக்கோ கிஷோர் போன்ற முத்திரை குத்தப்பட்ட சங்கிகளின் வீடியோக்கள் எல்லாம் வெறும் கிசு கிசு….அவ்வளவே. நம்ம அண்ணனுக்கு என்ன பிரச்சனைன்னா விஜி அண்ணி நேரா களத்துக்கு வந்து…..அழகு தமிழில்.. டேய்… தே… பொ… என 🤣 ஆசையாய் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான்🤣. இந்தளவுக்கு வேறு எந்த சினிமாகாரரோ, அரசியல்வாதியோ அசிங்கபட்டதில்லை. தமிழகத்தில் மட்டும் அல்ல, நானறிய உலகில் எந்த நாட்டிலும் ஒரு தமிழ் அரசியல்வாதி இப்படி நாறியதில்லை🤣. இதுவரை தமிழ் நாட்டில் ஒரு பெண் வந்து என்னை சீரழித்து விட்டார் என கண்ணை கசக்கவிலை. சீமானைத்தவிர. மூப்பனார் பண்ணாத சோக்கா🤣. தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஸ்ணமூர்த்தி, இப்படி ஆபாசபேச்சாளர்கள் முன்னர் இருந்தார்கள், அவர்களின் இன்றைய சமூக வலை கால வடிவம்தான், மாரிதாஸ், சாட்டை, மைனர், கிசோர் போன்றோர். கொஞ்சம் மட்டமான ரசனை உள்ளவர்களை கிளுகிளுப்பாக்கும், அவ்வளவுதான்.
  3. காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
  4. சில மாதங்கள் முன்பு பொதுவெளியில் ஹிஜாப் அணியாததால் ஒரு மாணவியை காவல்துறை அடித்தே கொன்றார்கள் பின்பு அது ஈரான் முழுவதும் பெரும் கலவரமானது. அதுக்கே அப்படியென்றால் அரை நிர்வாணமாக நின்றதுக்கு பொதுவெளியில் தூக்கிலிடுவார்களா, அல்லது தலையை வெட்டுவார்களா, இல்லை ஏற்கனவே வெட்டிவிட்டார்களா என்றே தோன்றும். ஐரோப்பா அமெரிக்கா பக்கம் அகதியா வரும் இஸ்லாமிய ஆண்கள் வந்து முதல் வேலையாக ஒரு வெள்ளைக்கார பெண்ணை பிடிப்பதுக்கு அவர்கள் மதத்தில் ஹராம் என்று சொல்லப்படும் பப் கிளப், பார், மேற்கத்திய இசை நிகழ்ச்சி என்று முழுமூச்சாக அலைவார்கள், ஆனால் அவர்களின் பெண்கள் கண்களைகூட தெளிவாக பார்க்க முடியாதபடி கறுப்பு உடையினால் மூடவேண்டுமென்றும் குரானை படித்தபடி அறைக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆண்களை ஊர்மேய விட்டுவிட்டு பெண்களை மட்டும் மதத்துக்காக ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து கொல்வது எந்தவகை இறைநம்பிக்கை என்று எழுத்துகூட்டி படிச்சாலும் புரியாது. உடை என்பது மதத்தை கொண்டோ கலாச்சாரத்தை கொண்டோ எவர்மீதும் திணிக்கப்படுவது ஏற்புடையதல்ல, உடைகள் கண்ணியமானதாக இருந்தாலே போதுமானது. பெரும்பாலான ஈரான் ஈராக், ஆப்கான் பெண்கள் மேற்கத்தைய நாடுகளுக்கு வந்ததும் ஜீன்ஸ் ரீஷேர்ட்ட்க்கு மாறிவிடுகிறார்கள், ஒரு சிலர் மூடிக்கொண்டு திரிகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயவிருப்பு கிடையாது மதவெறியினால் வீட்டில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்திலேயே தம் விருப்பை வேறு வழியின்று வெளிக்காட்ட முடியாமல் வாழ்கிறார்கள். ஏற்கனவே பலரை சொந்த அம்மா அப்பா சகோதரர்களே கொன்றும் இருக்கிறார்கள், பெரும்பாலான ஈரான் ஈராக் ஆப்கான் நாட்டு மக்கள் பிறருடன் நட்பாக பழக கூடியவர்கள், உலக நாகரிகத்துடன் சேர்ந்து கல்வி தொழில் என்று தமதுபாட்டில் நிம்மதியாக வாழகூடியவர்கள், அவர்களை மதவெறியூட்டி நாசமாக்குவதே இந்த பள்ளிவாசல் தொழுகைகளில்தான், இஸ்லாமியர்கள் அனைவருமே தமது மதம்தான் பெரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லாதவர்கள்,தமது மதம்தான் உலகத்தை ஆளனும் என்று மனசுக்குள் நினைப்பவர்கள் ஆனால் எல்லோருமே அதை பிற சமூகத்தில் திணிக்க நேரடியாக முயற்சிக்காதவர்கள். நம்மில் அல்லுலூயோ கோஷ்டி என்று ஒரு கூட்டம் நல்லாயிருக்குறவனை பிடிச்சு ஆண்டவர் வருகிறார் அடுத்த பஸ்ஸில எண்டு சொல்லி தண்ணிக்குள்ள தலையை முக்கியும் மேளங்களை அதிக ஒலியில் காதுக்கு கிட்ட கொண்டுப்போய் அறைந்தும் மனநோயாளி ஆக்குவார்கள், ஆனால் ஒரிஜினல் கத்தோலிக்கர்கள் எந்த மதவெறியுமில்லாது அவர்கள் வழிபாடு வாழ்க்கை, நட்புறவு என்று இருப்பார்கள். அதேபோல்தான் இந்த கூட்டமும் பலவீனமானவர்களை மதவெறியூட்டி மண்டையை கழுவி அடுத்த மதக்காரனை கொல்லவும், சக உயிர் என்று சிந்திக்காமல் தமது உறவு பெண்களை ஆயிரம் கட்டுப்பாடுகள் போட்டு கொல்லவும் செய்கிறார்கள். ஈரானை பொறுத்தவரை கொமேனி எனும் மதவெறி தலைவன் காலமாகும்வரை அடிப்படைவாதத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள் நிலமை கவலைக்கிடம்தான், அவரின் காலத்தின் பின்னர் ஓரளவாவது குறையும் வாய்ப்பு உண்டு என்பதே உலக மக்கள் எண்ணம்.
  5. இங்கே இந்துக் கோவிலோ, மத நம்பிக்கைக்கு எதிராகவோ அல்லது அதன் உடமைக்கோ எதிராக எந்தவிதமான தாக்குதலும் இடம்பெறவில்லை. அங்கே இடம்பெற்றது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆதரவாளர்களுக்குமிடையிலான அடிதடி. இது புரியாமல் மனம்போனபோக்கில் இந்து, அடிதடி, அன்பே சிவம் என்று அவிழ்த்து விடுதல் நன்மையானதல்ல. (-1 போட்டதற்குக் காரணம் என்ன? அல்லது அதுவும் மனம் போன போக்கில்தானா? 😏)
  6. இந்த தோல்விக்கு ரி20 போல் விளையாடியதுதான் காரணம் என குற்றம் சாட்டும் இவர்கள்தான் வங்க தேசத்துடனான போட்டியினை இந்தியா; கிரிக்கட் உலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தினை தோற்றுவித்தாக தமதணியின் வெற்றியினை மிகைப்படுத்தி கொண்டாடினார்கள், தற்போது தோல்வி ஏற்பட்டவுடன் எதனை மெச்சி புகழ்ந்தார்களோ இப்போது அதனை குற்றம் கூறுகிறார்கள். அதே போல கம்பீர் மீதான குற்றச்சாட்டும். டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் விளையாடவேண்டும் என கூறுவதற்கு சில காரணம் இருக்கும் ஆனால் தனிப்பட்ட ரீதியில் ஒவொரு வீரருக்கும் இயல்பான ஆட்டம் இருக்கும் சிலருக்கு டெஸ்டில் விளையாடுவது போல லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளைத்தான் சுவீப் விளையாட வேண்டும் என்றோ அல்லது சுழலுக்கு எதிராக விளையாட கூடாது எனும் வழமையான மாதிரியினைத்தான் பின் பற்ற வேண்டும் என்றில்லாமல் தமது இயல்பான ஆட்டத்தினை விளையாடினால் போதும்., முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களை (குறைந்தது) எடுப்பதுதான் இலக்கு . நியுசிலாந்து முதலாம் தர சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக (இந்தியா எதிர் கொண்டதனை போல இரண்டாம் மூன்றாம் தர சுழல் பந்து வீச்சாளர்கள் அல்ல) சுவீப், ரிவர்ஸ் சுவீப்களை விளையாடித்தான் வென்றுள்ளது. அதனை எவ்வாறெடுத்தால் என்ன? இதே போல் விளையாடி வென்றிருந்தால் இதனைப்பற்றி கதைக்கமாட்டார்கள்,தோற்றபின் இவ்வாறன இவ்வாறான காரணங்கள் கூறுவதனை நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பார்கள்.
  7. உண்மை தான் ஆனா கடைசில அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த முடிவை நினைக்கத்தான் பக்கின்னு இருக்கு. Prashanthan Navaratnam
  8. இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான், தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன். சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்? இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும் யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும். சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும், ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார், இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன. ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல ,கடந்தகால தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும். தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது? அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம் கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில் நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில் மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.
  9. அவர் பஸ்சில் வரமாட்டார் ....... நண்பர் பாஞ்ச்சுடன் காரில் வருவார் . ......கொண்டுவருவது தூள் தூளா பறக்கும் வெடிப் பக்கட்டுடன் ........கொண்டு போவது பலகாரப் பெட்டியுடன் . ........! 😂
  10. @goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன் ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.
  11. வரலாற்றில் இருந்த எல்லா வல்லாதிக்கங்களும் போலவே இந்த நாடும், அண்ணை............... காலமாற்றத்தில் இன்றைய உலகில் சில விடயங்களை வெளிப்படையாக செய்ய முடியாது என்பதே உண்மை...............
  12. ராமதாசை பெரிய மாங்கா என்றும் அன்புமணியை சின்ன மாங்கா என்றும் குறிப்பிடுவது என் வழக்கம்!😂
  13. உங்க‌ட‌ பார்ட்டில‌ நானும் வாறேன் ஒட்டு மொத்த‌ யாழ்க‌ள‌மே எங்க‌ட‌ பார்ட்டிய‌ பார்த்து அதிர்ந்து போகும் அள‌வுக்கு இருக்கனும் மைக்ஜ‌க்ச‌ன் இல்லாத‌து குறை தான்...... அவ‌ருக்கு ப‌தில் 50ரிசென்ட‌ பாட்டுக்கு அழைப்போம் அமெரிக்காவில் இருந்து..................................... தென் ஆபிரிக்காவில் இருந்து மொட‌ல் அழ‌கிய‌லை வ‌ர‌ வைப்போம் அவேன்ட‌ ஆட்ட‌த்தை பார்த்து பாட்டிக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் அச‌ந்து போக‌னும் ஓக்கே தாத்தா செய்யிறோம் அச‌த்துகிறோம்😁👍...........................
  14. 'பத்திற்குள்ள நம்பர் ஒன்று சொல்லு..................' என்று கோலி பாடிப் பாடி விளையாடி இருக்கின்றார் போல........ கோலிபாய் எம்பிபிஎஸ்........... அந்த நாளில், 80, 90 களில், எவ்வளவு மோசமான இந்திய அணிகளை பார்த்திருக்கின்றேன்............. ஆனாலும் இது வேற லெவல் அணி.......... மகா கேவலம்............ வீட்டிலிருக்கும் நால்வருடன் இன்னும் ஒரு எட்டுப் பேரை அக்கம்பக்கத்தில் கூட்டி அள்ளிக் கொண்டு போய் நானும் ஒரு மாட்ச் கேட்கலாம் என்றிருக்கின்றேன்..........
  15. உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலில் உடைத்து வெளியேறியவர் யார் எதற்காக போன்ற விடயங்களை தெளிவாக கூறுகின்றார்.
  16. காலைவரை பொறுக்க மாட்டீர்களோ? வென்றால் நாங்களும் சேர்ந்து சொல்லலாமில்ல.
  17. 🤣............... குடும்பஸ்தர் ஆனாலே இப்படியான ஒரு சிக்கல் இருக்கின்றது போல........... முந்தி என்னத்தை மிக நல்லாகச் செய்தோமோ, அதை இப்ப செய்ய முடியாது & செய்யக் கூடாது. முந்தி நல்லாகச் செய்த அந்த விசயத்தை ரசித்து, பிடித்து தான் மனையாள் மனைக்கு வந்திருப்பார்........... ஆனால் பின்னரும் அதையே செய்து கொண்டு இருக்கக்கூடாது...................🙄. (இதே அர்த்தத்தில் அராத்து வேறொரு இடத்தில் இப்படி எழுதியிருந்தார் ...............)
  18. ஒரு கூட்டம் அரசியலில் வெறி நாய். மற்ற கூட்டம் சினிமாவில் வெறிநாய். அரசியலில் இதை சாதுவாக இருக்க அதன் ஓனர் முயற்சிப்பதாக படுகிறது. அந்தப்பயம் இருக்கணும்🤣
  19. அப்படி எல்லாம் அவர் நினைத்தபடி அவர் ஓய்வை அறிவிக்க நாங்கள் விடமாட்டோம்............. இவர் ஓய்விற்கு போய் விட்டால், மற்ற அணிகள் சிரமப்படுமே............🤣. ரோகித்தை தீக்குளிக்க வைத்தாவது கோலியை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்............. கோலியை தீக்குளிக்க வைத்து ரோகித்தை விளையாட வைத்தாலும் பரவாயில்லை தான்.........😜.
  20. ஓ வெறி நாய் குலைப்பது போலவே இருக்கும் ஒரு வெறிநாய் இன்னுமொரு வெறிநாயை கண்டு பயப்படுகிறது. இல்லை தன்னுடைய Rabies Symptom ஐ மறைக்க பகீரதப் பிரயத்தனப்படுகிறது என்று எடுக்கலாமா...? Rabies Symptom ஐ மறைத்தாலும் வெறிநாய் வெறி நாய் தானே...?
  21. Because he has a firm belief that he will succeed! ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லுகிறார். எப்படி வேணுமானாலும் எடுத்துக்கலாம்.
  22. ஆம் இதுக்கு முதலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது பக்கத்து வீட்டுக்காரி நடத்திய பாரிய ராணுவ தாக்குதல் அது, இப்போ இது இரண்டாவது தாக்குதல் , அவர் யாருக்கு என்ன தீங்கு செய்தார் அந்த சொக்கநாதரின் திருவிளையாடலை ரவிராஜின் மனைவிமீதா காட்டணும்? இப்படிப்பட்ட கொலைவெறி தாக்குதல் கண்ணாடிக்கு பக்கத்தில நடந்தும் கண்ணாடில சிறுவெடிப்புகூட ஏற்படேல்ல போல? இது ஒரு மெடிக்கல் மிராகிள், நம்ம காரில எல்லாம் ஒரு கல்லு குறுணி பட்டானே வெடிப்பு விழுது.
  23. இவாண்ட பரதநாட்டிய அபிநயங்கள் இன்னும் எலக்சன் நெருங்க நெருங்க கூடும்!😂
  24. நீலன், சுமந்திரன் போன்றோர் அரசியலமைப்பை மாற்றச் செய்த முயற்சிகளில் தனிநாடாக உருவாவது உள்ளடக்கப் படவில்லை. ஆனால், ஒற்றையாட்சிக்குள் சில உரிமைகளைப் பெறும் அம்சங்கள் இருந்தன. தமிழ்நெற் ஆசிரியர் தமிழ் தேசியத்தின் ஆதர்சமான (ideal) விடயங்களை மட்டும் முன்வைத்துப் பேசுவது அதியசமோ, "அதிரடிச் செய்தியோ" அல்ல! ஆனால், ஆதர்சமான விடயங்கள், அப்படியே ஆதர்சமாக மட்டும் தான் இருக்கும். மணிக்கணக்காகப் பேசலாம், பந்தி பந்தியாக எழுதலாம். தாயகத்தில் ஒரு துரும்பையும் இந்த ஆதர்ச நிலைப்பாடுகள் அசைக்க உதவாது. எப்படி ஆதர்ச நிலைப்பாடுகளை தாயகத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கக் கூடிய தொட்டுணரக் கூடிய (tangible) விடயங்களாக மாற்றுவது என ஒரு திரியை கோசான் ஆரம்பித்து, இறுதியில் பலருக்கு ஆர்வம் இல்லாமையால் அது அணைந்து போயிருக்கிறது. அந்தத் திரியிலே கூட தீவிர தமிழ் தேசியர்கள் சிலர் வந்து எழுதினார்கள், "இது கடைசியில் எங்கே போகுமென்று தெரியும், எனவே இதில் நாம் பேச ஒன்றுமில்லை" என. பாவனைப் பயனைப் பார்ப்பதை விட மேலாக, பகட்டைப் பார்த்து கார், வீடு, உடை, நகைகள் வாங்குவது போலவே, தீவிர தமிழ் தேசியர்களும் வெளியில் என்ன தோற்றமென்று பார்த்துத் தான் தீர்வை எடை போடுகிறார்கள். உள்ளடக்கம், நடைமுறை நன்மைகள் என்னவென்று யோசிப்பது குறைவு.
  25. கொலை வெறி தாக்குதலில் வாகன சிக்னல் லைட் உடைஞ்சு சசிக்கும் உரசல் காயமாம்🤣. பக்கத்து வீட்டு மனுசியோட பிடிக்கிற எல்லை தகராறு எல்லாம் எலக்சன் வயல்ன்ஸ் எண்டு கதை அளக்கிறா அன்ரி.
  26. பிள்ளையையும் நுள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.
  27. பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக எனக்குக் கிடைத்தது
  28. முதலமைச்சராக இருந்த போது இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்திருக்கலாமே?? ஆனால் சொத்துக்கள் மட்டும் அளவு கணக்கில்லாமால். சேர்க்க முடிந்து உள்ளது
  29. 🤣 இல்லை. அது SLES educational service. யாம்SLPS Public Service.
  30. என்னவோதெரியலை எனக்கு இந்த அம்மணி மேல் ஒரு பிடிப்பும் மரியாதையும் இருக்கிறது.
  31. தமிழ்நாட்டை பொறுத்தவரை.... எம்ஜிஆர்-கருணாநிதி வரலாறு தெரியாதவர் இப்படியும் எழுதுவர். அப்படியும் எழுதுவர்.எப்படியும் எழுதுவர். ஏனென்றால் சீமான் அவர்களுக்கு புதிசு கண்ணா புதிசு. பழசுகள் வரலாறுகள் அவர்களுக்கு தெரியாது கண்ணா....😎
  32. எப்படி இருந்த மனிசன். ஒரு காலத்தில் ரஜனியை கதறவிட்டவர். மகனுக்காக மாறி மாறி கூட்டணி வைத்து, கட்சியில் இருந்து பலரை வெளியேற்றி…இப்போ விஜைக்கு நூல் விடும் நிலை. ஆனால் விஜை ஏற்க வேண்டும். திருமா…இல்லன்னா (காடுவெட்டி) குரு மா🤣.
  33. வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பிற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக மருத்துவர் ஐயாவின் மக்கள் சிலர் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பண்டார வன்னியன் வேற இருந்துவிட்டார்.............. இப்ப மாம்பழமும் உள்ளே வந்ததால், அசைக்க முடியாத வரலாற்று உண்மை என்று கொண்டாடப் போகின்றார்களே...............🤣.
  34. அப்பன் 50சென்ற் வேண்டாம் ஆள உள்ளுக்கு தூக்கி போடப்போறாங்கள் போல கிடக்கு...🤣 ஏனெண்டால் அவற்ற கூட்டு பயங்ங்ங்கரமான ஆளாம்.. 🙃 ஆள் உள்ளுக்கை எண்டு தெரியும் தானே🤣
  35. அநேகமாய் அனைவரும் 2 வது கேள்விக்கு இல்லை என்றே பதில் அளித்திருக்கிறார்கள் ....... அதை விடுங்க ........அது தோழர் புரட்சிக்கும் நன்றாகத் தெரிந்திருக்கு . ....... அம்மணி பார்த்தால் ரொம்ப கவலைப் படப் போகிறார்கள் .........! 😁
  36. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் தோழ‌ரே...................
  37. 28) வன்னி - இரண்டு முறை எழுதியிருக்கிறீர்கள். முதலில் எழுதிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி 1 என்ற பதிலை ஏற்று கொள்கிறேன்
  38. பொது நல அறிவிப்பு கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், தம்பிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.
  39. சிறியர், குருவி தலையில பணியாரம் வைக்கலாம் .. பனங்காய் வைக்கலாமா!! 😄 இந்த அரசியல் சாணக்கிய கேள்விகள் எல்லாம் 8ஆம் வகுப்பு பொடியனுக்கு A/L பேப்பர் தந்து, எக்ஸாம் எழுதச் சொன்னதை போல இருக்கு!!! சரி பார்ப்போம் ஒரு 5 கேள்வியாவது சரிவரும் தானே.
  40. பாரதியார் பாடல் என்றாலே கற்கண்டு, அதிலும் இது தேனில் தோய்ந்த கற்கண்டு. பின்வரும் பந்தியை அல்சைமர் நோயுடன், வயோதிபத்துடன் பொருத்தி பார்த்தால் - பாரதி எப்பேற்பட்ட பெருங்கவி என்பது உறைக்கும். அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?
  41. புலிகள் வலிமையோடு இருந்தபோது அவர்கள் இல்லாதுவிட்டால் எல்லாம் தருவர் சிங்களவர்கள் என்ற கோஷ்டி இது. இன்று என்ன கிழிக்குது என்றால் கச்சையை யும் கழட்டி ஜேவிபி யிடம் கொடுத்தால் மட்டுமே எல்லாம் கிடைக்கும் தருவர் என்கிறது. தமிழரை ஒன்றுமில்லாமல் உரிச்சு விடும் பணி முடிவுற வேண்டும் அல்லவா.
  42. முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈
  43. புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு.... இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.