Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19122
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/10/24 in all areas

  1. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் 'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல புல்லை வெட்டுங்கோ...........' உள்ளிருந்து வந்தது எப்பவும் அன்பாக அதட்டும் ஒரே குரல் கற்பனை கலைந்தது.
  2. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஈழபிரியன். எனது திருமணம் நடந்து முடிந்து சில மாதங்களில் நிகழ்தது. அதனால் எனக்கு பையன் பிறந்தால் அப்பெயரை சூட்டுவது என்ற முடிவில் இருந்தேன். அப்படியே பெயரும் வைத்தேன்.💐 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சிறீ.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஏராளன்💐🙏 வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மணி.💐🙏 தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வாதவூரான். 💐🙏
  3. நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று சர்வதேச நாடுகள் முன்னிலையில் புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து புலிகளின் ஆயுத களைவையே முதலில் முன்னிறுத்தியும், மறுபக்கம் மறைவில் புலிகளின் சர்வதேச வலைபின்னலையும், ஆயுத கடத்தலையும் நிதி சேகரிப்பையும் முடக்கும் கைங்கரியங்களிலும், புலிகளை இரண்டாய் பிரிக்கும் ஒரு பொறியை வைத்தது இலங்கை அரசாங்கம், அதாவது உயிருக்கும்போதே உள்ளுக்குள் கைவிட்டு குடல்தொகுதியையே வெளியே பிடுங்கி எடுக்கும் நடவடிக்கை அது. அதிலிருந்து ஒவ்வொருமுறையும் விலகி சென்றார்கள் புலிகள் அதுவே உங்கள் கண்ணில் சர்வதேசத்தை புறக்கணித்ததாய் தோன்றியிருக்கலாம். ஆனால் புலிகளை நேசித்த மக்களுக்கு அன்றும் இன்றும் அது தவறானதாக இல்லை. அது தவறென்றால் முள்ளிவாய்க்காலில் இறுதிநாள்வரை நின்ற மக்களும் போராளிகளு,உறவுகளை இழந்த எம் பல லட்சம் மக்களும் ம் இன்றுவரை எம் தலைமை எமக்கு செய்தது தவறென்று சொன்னதில்லை, சொல்லும் ஒருசிலர் யாரென்பது யாவரும் அறிந்தவர்களே. முள்ளிவாய்க்கால் முடிவென்பது தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும்,சிங்களவர்களுக்கு ஒத்தூதிய டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி உட்பட அனைவருமே எதிர்பார்த்திராதது. கடைசிவரை சிங்களவன் எம்மை வெல்லமுடியாது என்று நாம் நம்பினோம், கடைசிவரை சிங்களவனுடன் ஒட்டியிருந்து வண்டி ஓட்டிவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள், இறுதியில் இருபகுதி நம்பிக்கையும் தோற்றுபோனது, அவர்களின் நம்பிக்கையில் ஈனம் இருந்தது, எம் நம்பிக்கையில் மானம் இருந்தது அவ்வளவுதான் வித்தியாசம். நாம் மொக்குதனமாய் தோத்தவர்களல்ல, இனவிடுதலைக்காய் முயன்று பார்த்து தோத்தவர்கள், முயற்சி செய்து தோற்பது பாவமும் அல்ல கேவலமும் அல்ல.
  4. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
  5. இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.
  6. இங்கு பலரும், தாய்லாந்து மசாஜுக்கு இரகசியமாக போய் வந்தது தெரிய வந்துள்ளதால்... அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று, பிலிப்பைன்ஸ் மசாஜுக்கு "ரிக்கற்" போட்டுள்ளோம். அவர்களுக்கும், அனுபவம் புதுசா... இருக்கட்டுமன். 😂 🤣
  7. நல்ல கருத்துக்கள்.. உறவாடிக் கெடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. சீமானும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து பின் தன் திட்டங்களை நிறைவேற்றலாம்.. சீமான் தமிழ்தேசியாதில் விடும் தவறுகளை தான் விடக்கூடாது எண்டு விஜய் வந்திருப்பதுபோல் தெரிகிறது.. மகிழ்ச்சி.. உறவாடித்தான் வெல்ல வைக்க வேண்டும் தமிழ்தேசியத்தை.. தமிழ்தேசியத்தில் நான் விரும்பும் ஒரு தமிழ்த்தேசியவாதி அண்ணன் காட்டூனிஸ்ட் பாலா.. தமிழ்தேசியவாதிகள் பிழை விட்டாலும் அதை விமர்சித்து திருத்தும்படி சொல்பவர்.. நீங்கள் எழுதிய கருத்தின் சாராம்சத்துடன் ஒத்துப்போகும் அவரின் இன்றைய பேட்டி..
  8. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  9. 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.
  10. வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் பெயர்கள் R.H. Upali Samarasinghe District Organizer S. Thilakanadan Veterinary A. Mailvaganam Jegadishwaran Teacher M.A. Pathima Hajistha Social Activist V.A. Don Priyankara Premarathne Student Scientist Mahaweli Authority Yogaraja Sivaruban Farmer J. Ragar Anton Kamalasragar Businessman A. Raizdin Principal Teacher Ramaiya Radha Krishnan Agricultural Insurance (Field Division Officer) திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை Arun Hemachandra District Organizer M.A. Mohammed Rafique Teacher P. Indika Priyadarshana Paranawithana Farmer A.G. Roshan Priyanjana Teacher Karunanayakage Shila Social Activist M. Niyaz Mohammed Sabraan Assistant Manager Yevugan Irajendran Businessman அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. L.P.G. Wasantha Piyathissa Full-Time Politician A.M.M. Muthumanike Rathwatte Retired Army Mohammed Sultan Saththar Teacher Abubakar Adambavah Teacher M. Meemana Sugath Ratnayake Teacher M.M. Priyantha Kumara Wijerathna Lawyer A. Muhaideen Rameesh Farmer S.M. Buhari Mohammed Rizad Teacher R. Morris Anton Retired Principal K.M. Tilak Kithsiri Regional Environment Officer
  11. உண்மைதான். நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார். அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே. இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50. ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன். ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.
  12. என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும், அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும், சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான இணக்கப்பாட்டை மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள் தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி அதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும். ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய Eligibility யில் ஒன்று கூட இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள்.
  13. முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......! இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......!
  14. அண்ணா, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, இறக்குமதி வரிகளைக் கூட்டி அமெரிக்கப் பொருட்களின் சந்தையை அகலமாக்கி வேலை வாய்ப்புகளை வழங்குவது, பதிவுகள் இன்றி நாட்டில் தங்கியிருக்கும் பதினொரு மில்லியன் மக்களை வெளியேற்றி வீடுகளின் விலைகளை குறைப்பது, இன்னும் அதிக துளைகள் போட்டு மலிவு விலையில் எரிபொருட்கள் வழங்குவது, ........... இப்படியானவற்றை நம்பித்தான் இங்கு வாக்களிக்கப்பட்டது. நேட்டோ, ரஷ்யா, இஸ்ரேல் இவை போன்ற சமாச்சாரங்களுக்காக அல்ல. இங்கு உள்ளூரில் இவை போதைக்கு தேவையான ஊறுகாய்கள் போல மட்டுமே. எதுவும் முன்னரும் நடக்கவில்லை. எதுவும் இனியும் இவர்களால் நடக்கப் போவதில்லை. அதுவாக உலக ஒழுங்கில் நடந்தால், அவரவர் என்னால் தான் நடந்தது என்று சொல்லி பெருமைகளை அடுக்கிக் கொள்ளலாம். பில் கிளின்டனுக்கு கிடைக்காத பெருமைகளா............ எங்கள் வீட்டுப் புல்லை நாங்களே வெட்டினால் தான் உண்டு........ இங்கு அநேகமாக எல்லோரும் மாதம் 50 டாலர்கள் கொடுத்து புல்லு வெட்டிக் கொள்கின்றனர். வெளியேற்றப் போகின்றோம் என்று சொல்லப்படும் அந்த பதினொரு மில்லியன் மக்கள் தான் இவர்களின் புற்களை மாதம் 50 டாலருக்கு வெட்டிக் கொடுக்கின்றனர். திறமை அடிப்படையில் இங்கு முறையாகக் குடியேறியவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் புல்லு வெட்டும் மெஷினுடன் வெளியே வரட்டும்........எனக்கும் ஒரு கூட்டணி வேண்டும் தானே..........😜.
  15. இப்ப தாய்லாந்தை மறந்துட்டீங்களோ? மசாச் மசாச் சான்விச் மசாச்.
  16. பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல் தான் ஆண்கள் கோவிலுக்கு மேலாடையில்லாமல் செல்லும் நடைமுறை. யார் பூநூல் போட்டவர் யார் பூநூல் போடாதவன் என்பதை கண்டு பிடிப்பதற்காக...... பூநூல் என்பது சாதி வேற்றுமையை விட மிக மோசமானது . அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. பார்ப்பனியன் தேரில் அமர்ந்திருக்க வெள்ளாளர் தேர் இழுக்க வேண்டும் என்றால் அந்த பார்பனியன் யார்? இதைப்பற்றி யாருமே கணக்கிலெடுக்க மாட்டார்கள்.😡
  17. வாழவேனும் என்று முடிவெடுத்தால் எந்த நிலையிலும் வாழலாம் ........! 👍
  18. நவம்பர் 15 பின்னர் யாழ் களமும் திசைகாட்டி என்.பி பி ..என மாற்றப்படுமா என்பதே எனகிருக்கும் சந்தேகம்..
  19. இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது? அதை விட பல இடங்களில் நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது. இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி? அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும். இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக இருக்கும்.
  20. அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்
  21. இது அரசியல்வாதிகள செய்ய வேண்டிய செயல் அல்ல அவர் அனுராவின் பக்கம் நிற்கின்றார் என்பதால் அணுராவுக்கு சொல்லி அவர் உடனடியாக பொலிசுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய் அவசியம் இல்லை... பொலிஸ் அதிகாரிகள் செய்ய வேண்டிய விடயம்...வடபகுதி பொலிஸ் அதிகாரி செய்ய வேண்டிய கடமை....ஆட்சியில் இருப்பவர்கள் இப்படியான செயல்களை செய்ய வேணும் என நினைப்பது தவறு... அரசாதிகாரிகள் ,பொலிசார் போன்றவர்களும் மாற வேண்டும் ...இல்லை என்றால் நல்லிணக்கம் சாத்தியமில்லை ....இனவாதம் அரசியல்வாதிகள் பேசுவார்கள் ..ஆனால் நடைமுறைப்படுத்தி இனவாதத்தை வளர்த்ததில் சிறிலங்கா பொலிசாருக்கு முக்கிய பங்கு உண்டு...
  22. பார்க்க கண் வேர்க்குது . .......! 😢
  23. தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. வழமையாக புலம் பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகைப் பணம் தேர்தல் நேரம் அங்கு ஆறாக பாயும். இம்முறை... அதிலும் துண்டு விழுந்து விட்டது என நினைக்கின்றேன். அல்லது... தோற்கிறதுக்கு, எதுக்கு வீணாக செலவழிப்பான் என நினைத்து விட்டார்களோ. 😂
  24. போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣. தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.
  25. தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் கடமைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கிறது.
  26. @பாலபத்ர ஓணாண்டி @ரசோதரன் @வாலி இந்த திரி திசை திருப்பபடும் முன், கஸ்தூரி. ஏன் தன்னை நாடார் என்றும், பிராமணர் என்றும் அடையாளப்படுத்துகிறார் என நாம் கதைத்தோம். இந்த பேட்டியில் ஏஸ் வி சேகரும் நாடார்…என எதுவோ சொல்ல வந்து விட்டு…பின்னர் அப்படியே விட்டு விடுகிறார். இந்த பேட்டியில் ஒன்று தெரிந்து கொண்டேன். இப்போ கஸ்தூரி தெலுங்கில் செம பிசியான நடிகையாம்🤣. இந்த பேச்சுக்கு பிறகு🤣🤣🤣. லூசு கூ முட்டைன்னு கேள்விபட்டிருக்கேன்…இந்தளவுக்குன்னு தெரியல்ல🤣. பிகு ஆங்கிலத்தில் zeal of the convert என்பார்கள். கிறிஸ்தவ மதத்தில் பரம்பரையாக பிறந்தவன் சும்மா இருக்க, முந்தநாள் மதம் மாறியவன் - ஆ..ஊ…பிரசாதம் பேய்க்கு படைத்தது என பேயோட்டுவார்கள். இதைத்தான் அப்படி சொல்வார்கள். இந்த சாதி, இன விடயத்திலும் இதை காணலாம்…. தமிழனாக பிறந்து, தமிழருக்கு போராடி, தமிழருக்காக குடும்பத்துடன் சாவடைந்த தலைவர் நான் தமிழண்டா என ஒரு போதும் இன இறுமாப்பு பூண்டதில்லை. ஆனால் தெலுங்கு வம்சாவழி கருணாநிதி, மலையாள வம்சாவழி எம் ஜி ஆர், மலையாள வம்சாவழி சீமான் தமிழ் தமிழ் என கதறுவது மட்டும் இல்லாமல், ஏனையோருக்கும் இனத்தூய்மை டெஸ்ட் எடுப்பார்கள். கஸ்தூரியும் இப்படித்தான். அவரே நாயர், நாடார் என பலதும் கூறுகிறார்கள். தானே நாடார் என தொனிபட எழுதியுள்ளார், கணவன் தெலுங்கு வழி என்கிறார். ஆனால் நான் பிராமணண்டா என உதார் விடுகிறார்….அக்மார்க் பிராமணன் எஸ் வி சேகர் - எல்லோரும் மனிதர்தான் என்கிறார்.
  27. அமெரிக்க அதிபரை நம்பினோர்....
  28. வழக்கம் போல்... பொய் வாக்குறுதிகளுடன் நடக்கும் தேர்தல். ஏமாந்த மக்கள்... மீண்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். வேறு வழி...? நல்ல தொரு கவிதைக்கு நன்றி ரசோதரன். கவிதையின் முடிவு அருமை. 😂
  29. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.வாத்தியார்💐🙏 தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.நுணாவிலன்.💐🙏 தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு. குமாரசாமி💐🙏 பரிமளம் அம்மணியும் தங்களோடு இணைந்து வாழ்த்தியதாக எடுத்துக்கொள்கிறேன்..!😉💖 தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.புங்கையூரன்.💐🙏 தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.மோகன்.💐🙏
  30. இது எப்பிடியிருக்கு.....? 🤣 கனடா ரமில்ஸ்
  31. இதுக்கு ஏன் இவளவு புடுங்குப்படுவான்.வசியம் என்னவென்டால் ஆண்கள் தங்கள் மேலாடை இன்றி இருக்கும் போது அவர்களின் அகன்ற மார்பையும் அதில் உள்ள உரோமங்களையும் கானும் மங்கையர்களை மயக்கத்தான்.😄
  32. நான் கபிதன்கிட்ட மாட்ட மாட்டேனே satan, இனி இந்த பக்கம் வந்தாதானே, நீங்கள் எடுகோள் காட்டியதால் மட்டும் வந்தேன், ஆனால் கபிதன் சர்சைகளும் வரவேற்கதக்கது, ஒரு கருத்து களத்தை தொடர் இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.
  33. அப்படியானால் அப்படி முயன்று பார்த்து றிஸ்க் எடுத்தோம் அதனால் மக்கள் பேரழிவைச் சந்தித்தோம் என்பதை நேர்மையாக வெளிப்படையாக கூற வேண்டும். அதை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு நன்றி. அடுத்தவர் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்க கூடாது என்பதே எனது கருத்தின் சாராம்சம். உலக அரசியல் பிராந்திய அரசியல் என்பவை எமது தனி நாட்டுக்கு கோரிக்கைக்கு முழுமையாக எதிராக இருக்கிறது என்பது ஏதோ ஒன்றும் இரகசியம் அல்ல. அது வெளிப்படையானது என்பது, உலக அரசியலை நீண்ட காலமாக அவதானிக்கும் சாமான்யர்கள் கூட அறிந்த விடயம் தான்.
  34. இல்லை கந்தையர்! ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கம், எல்லோரும் மக்களை ஏமாளிகளாக பயன்படுத்துகிறார்கள் என்கிற வருத்தம், அதிலும் பலமிழந்த மக்களை ஏமாற்றும் சொந்த மனிதர்கள் மேல் உள்ள கோபம், இதுவரை ஆட்சி செய்யாத கட்சி, நம்மைப்போல் வருத்தங்களையும், தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்த கட்சி. எனது தாயார் சொல்வார், இவர்கள் அனுபவித்த வேதனைகள் பற்றி, அங்கங்கு சடலங்கள் மிதந்ததும், வீட்டுக்கு அனுப்பி வைத்ததும். ஆகவே அவர்களுக்கு எங்கள் தாகம் வருத்தம் புரியும். உண்மையாகவே விடுதலைக்காக போராடியவர்களென்றால் எங்கள் உணர்வுகளை மதிப்பர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு தனது கரத்தை நீட்டுவார். இல்லை சர்வாதிகாரத்துக்கு போராடியவர்களென்றால் எந்த மாற்றமும் நிகழாது. ஆனால் அநுர மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது, எடுக்கவும் விட மாட்டார்கள், பொறுத்திருந்து பாப்போம்! எல்லோராலும் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள், இனியும் ஏமார இடமில்லை.
  35. அப்போ ..... உங்களுக்கு இதுபற்றி நிறைய தெரிந்திருக்கு என்று அர்த்தம் கொள்ளலாமா? எத்தனையோ விடயங்களை அலசி ஆராயும் உங்களுக்கு, இது தெரியவில்லையா? உங்களுக்கு தெரிந்ததை பதிவிட வேண்டியதுதானே, அதை விட்டு, ஏன் சமராடிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் மரக்கறி சாப்பிடுபவன், மாமிசம் சாப்பிடுபவனிடம் போய், நீ ஏன் மாமிசம் சாப்பிடுகிறாய் என்று கேள்வி கேட்டு அடம் பிடிக்கலாமா? பிடிக்காவிட்டால் விலத்தி போக வேண்டியது. நீங்கள் அறிந்து கொள்வதற்காக கேள்வி கேட்ப்பதில்லை, உதெல்லாம் உங்கள் குசும்பு. கபிதனுக்கு விளக்கம் போதுமா? எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்காது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். அவர் ஒன்றும் விளங்காமல் கேட்கவில்லை, தகராறு பண்ணுவதற்கென்றே வந்திருக்கிறார். நீங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு விதண்டாவாதம் செய்வார். பொறுமை அவசியம்! பின்னர் உங்களையே தலையை பிச்சுக்கொண்டு ஓட பண்ணுவார்.. நான் எடுத்துச்சொன்னால் யாரும் கேட்பதில்லை, பதிலை கொடுத்து மாட்டிக்கொண்டீர்கள். இனி மீண்டு பாருங்களேன், துரத்தி துரத்தி கேள்வி கேட்பார்.
  36. இவ்வளவு நாளும் தமிழ் கட்சிகளிடம் ஏமாந்து விட்டார்களாம் தட்டி கேட்க ஆள் இல்லாமல் இருந்ததாம் இப்போது தட்டி கேட்க அனுரகுமார திசநாயக்க வந்துவிட்டாராம் 😒
  37. பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார். https://www.virakesari.lk/article/198152
  38. வினா 27 - 34 வரை இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன். முதல் கேள்விக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள் 1) பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)2)எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 1 வது கேள்விக்கு நீங்கள் பதில் அளித்த அணி எத்தனை இடங்களை பிடிக்கும் ?
  39. 🤣.......... உங்களுக்கு கனடாவில் சூரனுடனும், ஐயருடனும் நின்ற சிலரை தெரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன்............ நீங்கள் ஒரு பகுதிநேர துப்பறிவாளர்.........😜. முக்கியமாக ஐயர் விழும் போது ஐயருக்கு பக்கத்தில் நின்றவர்........ 'ஏண்டா, ஐயரை தள்ளி விட்டாய்.........' என்று இப்பொழுது சில இடங்களில் அந்த ஆளை பகிடி பண்ணுகின்றனர். 'அரை மண்டியில் ஆயத்தமாக நில்லுங்கோ...........' என்று செட்அப் வாலிபாலில் ஒரு நாள் நான் சொல்ல, 'இது என்ன இன்றைக்கு புதுசா ஒன்று..........' என்பது போல பல பார்வைகள் தான் பதிலாக வந்தது.............😄.
  40. இராசவன்னியரின் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் . ......... மணமக்கள் எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகின்றோம் . .......!
  41. மிக்க மகிழ்ச்சி! தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
  42. யாழ்கள உறவு இராசவன்னியன் அண்ணாவின் மகன் செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) மருமகள் செல்வி அருந்ததி B.E., இருவருக்கும் திருமண வாழ்த்துகள்.
  43. இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏
  44. நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/
  45. பூசணிக்காயில் படகு சவாரி செய்து கின்னஸ் சாதனை பூசணிக்காய் என்ற உடன் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்துக்கள் இறை வழிபாடுகளில் பயன்படுகிறது. ஹாலோவீன் தினத்திற்கு பயன்படுகிறது என்று தான் நாம் கேட்டு அறிந்து இருப்போம். ஆனால் எங்காவது பூசணிக்காயில் படகு சவாரி செய்த சம்பவம் குறித்து அறிந்து இருக்கிறோமா இல்லை. ஆனால் தற்போது அந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. பூசணிக்காய் மீது அலாதி பிரியம் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் 555 கிலோ பூசணிக்காய் வளர்த்து அதை படகாக பயன்படுத்தி 73.5 கிலோ மீற்றர் பயணித்துகின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரிய பூசணிக்காய்களை வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் பூசணிக்காய் படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு 2013 ஆம் ஆண்டு வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் நடத்தப்படும் பெரிய பூசணிக்காய் படகு போட்டி நிகழ்வில் (Giant Pumpkin Regatta-an event) கலந்து கொண்டபோது தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் கடந்த நான்கு ஆண்டுகளாக கலந்துகொண்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவ் ஆண்டு சரியான அளவில் பூசணிக்காயை வளர்த்து சாதனை புரிய தீர்மானித்தார். கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் பூசணிக்காய் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுபத்தப்பட்டு அக்டோபர் தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது. அதன் சுற்றளவு 429.26 சென்றி மீற்றரும் (169 அங்குலம்) நிறை 555.2 கிலோ கிராமும் இருந்துள்ளது. இது ஒரு பெரிய பெரிய பியானோ அல்லது ஒரு வயது ஒட்டகத்தின் நிறை என தெரிவிக்கப்படுகிறது. பூசணிக்காயை செதுக்கிய பின்னர் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அதற்கு "பங்கி லோப்ஸ்டர்" என்று பெயரிட்டார். பூசணிக்காயில் கமராவை பொருத்தி அவர் துடுப்பில் பயணம் செய்வதை காணொளியாக காட்டினார். கடந்த அக்டோபர் 12 முதல் 13 ஆம் திகதி வரை கொலம்பியா ஆற்றின் குறுக்கே 26 கடினமான மணிநேரங்களில் 73.50 கிலோ மீற்றர் தூரத்தை பூசணிக்காய் படகில் கடந்துள்ளார். அவருக்கு இந்த பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 56 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதோடு, அலைகளிலும் சிக்குண்டுள்ளார். "பங்கி லோஃப்ஸ்டர்" நன்றாக மிதக்க வேண்டும் என்பதற்காக, கேரி இரவிலும் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். பாதுகாப்பாக நங்கூரமிடக்கூடிய இடத்தைத் தேடி ஹேடன் தீவை நோக்கி செல்வதற்காக இரவுமழுவதும் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார். இறுதியாக வொஷிங்டனின் வான்கூவரில் தனது பூசணிக்காய் படகை நங்கூரம் இட்டார். அங்கு அவரை பத்திரிக்கையாளர் வரவேற்றுள்ளார். இதன்போது, நான் சாதனையை முறியடிக்கவில்லை என்றால், நான் நான் ஒரு நம்பமுடியாத சாகசத்தை செய்தேன் என தெரிவித்திருந்தார். கேரி இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட 63.04 கிலோமீட்டர் பூசணிக்காய் படகு பயண சாதனையை 73.50 கிலோமீட்டர் பயணத்தில் முறியடித்துள்ளார். ஆர்வம், விடாமுயற்சி மற்றும் பூசணியின் ஒரு சிறிய மாய சக்தி ஆகியன தனது வெற்றிக்கு காரணம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197963 இதனை வைத்து வேறு கற்பனைகளை வளர்க்கவேண்டாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.