Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    27
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3054
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19122
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/12/24 in all areas

  1. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @nirmalan அன்பான யாழ்.கள உறவுகளே... மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து வாக்களிக்கப் போகும் கட்சிக்கு முன்னே உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி வாக்களிக்க முடியும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂
  2. மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேதமில்லை எல்லோரும் மீண்டும் போய் விட்டனர் வந்த வழியே ஓங்கி வளர்ந்து உள்ளே ஆழ வேர் விட்டு நித்தியம் என்று நின்ற மரங்களே பொத்தென்று விழ இங்கே மன்னர்கள் மட்டும் நிலைக்கவா போகின்றார்கள் மூப்பும் நோயும் பிணியும் பிரிவும் காலத்தில் வர அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும் காலம் விடவில்லை பதினொரு மன்னர்களையும் மாமன்னன் அலெக்சாண்டரே கடைசியில் மண்டியிட்டாராம் இந்த தெருவில் இப்போது நான் ஒரு மன்னன்.
  3. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1
  4. James Webb Space Telescope Discoveries · Rejoindre Science & Space · · One of the best image of the Andromeda galaxy
  5. இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  6. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் 'ரெண்டு கிழமையா புல்லு வெட்டல்ல புல்லை வெட்டுங்கோ...........' உள்ளிருந்து வந்தது எப்பவும் அன்பாக அதட்டும் ஒரே குரல் கற்பனை கலைந்தது.
  7. இதுவே ஒரு சாதாரன ரோசம் மானம் சோத்தில் உப்பு போட்ட மனிதர்களுக்கு நடந்து இருந்தால் தனக்கு தானே தூக்கு போட்டு செத்திருப்பான் .
  8. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை 02) சசிகலா ரவிராஜ் ஆம் 03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - ஆம் 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம் 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - ஆம் 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம் 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம் 18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம் 19) துரைராசா ரவிகரன் - இல்லை 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறிநேசன் - இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - - ஆம் 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 14 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தேசிய மக்கள் சக்தி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 02 52) தேசிய மக்கள் சக்தி ===> 10 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 02 57) இலங்கை பொதுஜன முன்னணி 48 59) தேசிய மக்கள் சக்தி ===>130 60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06 தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை )
  9. எனக்கு செய்தி பார்த்து தான் கூட்டம் பற்றி தெரியும் அண்ணை! மேலுள்ள காணொளியில் ஒருத்தர் கேக்கிறார், சரியாக விளங்கவில்லை. போனமுறை தும்புபறக்க ஒருத்தர் கேட்டவர், இப்ப அவர் உயிரோடை இல்லை. ஐயையோ சத்தியமாக எனக்குத் தெரியாதண்ணை. எஸ்கேப்....
  10. சுமந்திரன் இணுவிலில் நடத்திய பிரச்சார கூட்டத்திற்கு ஐந்து பேர் மட்டுமே போயிருக்கின்றார்களாம்.😂 பங்கு பற்றியோர் விபரம். 1) பந்தல் ஓனர். 2) லைட் ஓனர். 3) கதிரை ஓனர். 4) ஒலிபெருக்கி ஓனர். 5) சுமந்திரனின் வாகன சாரதி. சுத்துமாத்து சுமந்திரன்.... கம்பத்தின் உச்சியில் நின்று "குறளி வித்தை" காட்டினாலும், காசு வாங்க... கீழே இறங்கித்தான் வர வேணும். 🤣
  11. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. சுறாக்கள் இரண்டு மீன் சமுதாயங்களது வாழிடங்களையும் ஒன்றாக்கின. இடையிலிருந்த தடைகளை அகற்றின. காலம் செல்லச்செல்ல சுறாக்களுக்கு இந்தச் சிறிய ஏரியை வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை எனத் தோன்றவே மீண்டும் தமது கடலுக்கே சென்றுவிடலாம் என அவை முடிவெடுத்தன. இப்போது ஏரி ஒரே ஏரி ஆகிவிட்டது. எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிய மீன்கள் ஏரியில் சுறாக்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆளத் தொடங்கின. பெரிய மீன்கள் அடிக்கடி சிறிய மீன்களின் இடத்திற்குள் நுழைந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய மீன்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய தடுப்பு வேலியை உருவாக்க முயன்றன. அது சிறிய மீன்களின் பிரதேசத்தை பெரிய மீன்களிடமிருந்து ஓரளவு பாதுகாத்தது. ஆனால் இந்த தடையை அடிக்கடி உடைத்து பெரிய மீன்கள் சுதந்திரமாக நீந்தி வந்து சிறிய மீன் சமூகத்தினரில் அதிகளவானோரை விழுங்கி வந்தது. சிறிய மீன்களுக்கோ வேறு வழிகள் இருக்கவில்லை. காலப்போக்கில் சிறிய மீன்கள் நியாயத்தை கோர ஆரம்பித்தன. தங்கள் பகுதியில் பயமின்றி வாழ்வதற்கான உரிமை மற்றும் சம உரிமை எனப் பேசத் தொடங்கின. பெரிய மீன்களுக்கு தமது கோரிக்கையை முன்வைத்தன. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பெரிய மீன்கள் எதிர்பாராத மற்றும் தைரியமான முன்மொழிவு ஒன்றைச் சொன்னது. "உங்கள் துயரை நாங்கள் உணர்கின்றோம். உங்களுக்கு நீதி வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பெரிய மீன்கள் கூறின. "இன்று முதல் நாம் அனைவரும் சமம். யாரும் மற்றவரை விட உயர்ந்தவர்கள் இல்லை இனிமேல் சிறிய மீன்களும் பெரிய மீனாகிய நம்மைப் போலவே உரிமைகளைப் பெறுவர். இனி நாம் இருவரும் சமமாக இருப்பதால் ஏரியில் தனித்தனி பிரதேசங்களோ தடுப்பு வேலிகளோ தேவையில்லை. நாங்கள் இனி ஒரு பெரிய இணக்கமான சமூகமாக வாழலாம்” எனக் கூறின. “முழு ஏரியிலும் இரு பகுதியினரும் சுற்றித் திரியலாம்" என்றெல்லாம் கூறின. முத்தாய்ப்பாக பெரிய மீன்கள் "இவ்வளவு நாளும் பசி வந்தால் நாங்கள் மட்டும்தான் உங்களைச் விழுங்கினோம். இனி உங்களுக்குப் பசித்தால் நீங்களும் எங்களை விழுங்கலாம். அந்த உரிமை இனி உங்களுக்கும் உள்ளது. ஆகவே இனி அனைவருக்கும் சம உரிமை." என கூறின. சிறிய மீன்கள் அப்பாவியாகவும் நம்பிக்கையுடனும் பெரிய மீன்கள் மாறிவிட்டன. அவர்கள் முன்னம்போல் இல்லை என ஏனைய சிறிய மீன்களிடம் கூறின. இறுதியாக நீதி கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் நம்பின. ஆம் கடைசியாக சம உரிமை கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் கருதின. புதிதாகக் கிடைத்த வாக்குறுதிகளுக்காக பெரிய மீன்களைத் தடுக்கும் இயற்கையான தடுப்புகளை சிறிய மீன்கள் அகற்றின. தடைகள் நீங்கியதும் பெரிய மற்றும் சிறிய மீன்கள் இரண்டும் சுதந்திரமாக ஏனையவர்களது பிரதேசங்களுக்குள்ளும் நீந்திச் சென்றன. ஆனால் யதார்த்தம் பயங்கரமாக இருந்தது. பெரிய மீன் எந்தத் தடையும் இன்றி சிறிய மீன்களின் வீட்டு வாசல்களில் வந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் தமக்குக் கிடைத்த சம உரிமைக்கு அமைய பெரிய மீன்களை விழுங்க முயன்றன. ஆனால் அவற்றின் சின்னஞ்சிறிய வாய்களால் பெரிய மீன்களை விழுங்கவே முடியவில்லை. சமத்துவம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்பதும் பெரிய மீன்கள் எதையும் மாற்றாமல் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியைச் செய்து அனைவருக்கும் சம உரிமை என்று பேசி தங்களை ஏமாற்றி விட்டதாக காலஞ்செல்லச் செல்ல சிறிய மீன்கள் புரிந்து கொண்டன. எனவே ஏரியின் வரலாறு முன்பு போலவே தொடர்ந்தது. ஆனால் இப்போது சிறிய மீன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.😢 https://www.facebook.com/share/p/128h6yV5HDH/
  12. ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும். உங்கள் வாக்கையும் இறுதி எண்ணிக்கையில் சேர்கிறேன். இப்போதைக்கு மாம்பழம் 1 (கிருபன் ஜி)
  13. எவர் தான் அமெரிக்காவின் அதிபராக வந்தாலும், ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் சொல்லை ஏன் கேட்க வேண்டும்............... இது ஒரு அடிப்படைக் கேள்வி அல்லவா. புடினின் நோக்கம் என்று ஒன்று இருக்கின்றது. அதை அடையாமல் அவர் ஓயப் போவதில்லை. ஆகக் குறைந்தது தன்னுடைய நோக்கத்தை அடைந்து விட்டேன் என்று அவர் சொல்லிக் கொள்ளும் வரை இந்தச் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். உக்ரேனுக்கு இது தங்கள் மண்ணை காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம். இன்னும் நீண்ட தூரம் போகும், அமெரிக்கா என்ன தான் செய்தாலும், செய்யா விட்டாலும்..........
  14. ஒப்பீட்டளவில் ஒரு யூகே மாணவன் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போவதை விட சற்றும் கடினமானதல்ல இலங்கை மாணவன் ஒருவன் பல்கலை கழகம் போகும் வழி. போனபின், நல்ல பல்கலை கழகம் எதுவென்றால் அது வேற கேள்வி. ஆனால் எனது அனுபவத்தில் யூகேயில் முதல் 10,15 யூனிக்கு போவதும், இலங்கையில் எந்த ஒரு யூனிக்குப் போவதும் ஒரே அளவு கஸ்டமான விடயம்தான். யூகேயில் மத்திய, கீழ தர வரிசை யூனிக்கெல்லாம் படுத்து கொண்டே போகலாம்🤣. ஆனால் நரி LLB (பல்கலை படிப்பு) இல்லை என நினைக்கிறேன் Attorney At Law (சட்ட கல்லூரி படிப்பு) மட்டும்தான்?
  15. இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ! செய்தி & கேமரா - ஷாகித் ஷேக் வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c704jkpj4nro
  16. இல்லை........ இல்லை, பையன் சார். உங்களின் தெரிவுகள் மற்றோரின் தெரிவுகள் போலவே. நான் சொன்னது வேறொரு நண்பனின்/ உறவின் தெரிவுகள்..............
  17. 👍................ இந்தப் போட்டி எல்லாருக்குமே கொஞ்சம் சிக்கலானது தான், பையன் சார். ஆனாலும், இதுவரை வந்துள்ள 25 போட்டியாளர்களில் எவர் 25வதாக வரப் போகின்றார் என்று மட்டும் ஓரளவிற்கு தெரிகின்றது.............😀.
  18. ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣 எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎
  19. நன்றி, பையன் சார். தோற்கும் வரை நாம தானே வெற்றியாளர்..........🤣. அந்த கிரிக்கட் களப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கொடி பிடித்தது போல, இந்தப் போட்டியில் ஒரு தமிழ்க் கட்சிக்கு எதிராக கொடி ஏற்றியிருக்கின்றேன்............ என்னுடைய அதிர்ஷ்டப்பிரகாரம் அவர்கள் தோற்கப் போகின்றார்கள்..............😜.
  20. 🤣.................. ஒரு மாதிரி இழுத்து இழுத்து வெட்டி விட்டேன், அண்ணை. சொல் கேட்ட அக்கணமே புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி.......... என்ன உரு எடுக்க வேண்டுமோ அந்த உரு எடுத்து............ காலால் இட்ட பணிகளை தலையால்............. அடுத்த பிறவியில் செய்வதாக உள்ளேன்........😜.
  21. புல்லு வெட்டியாச்சோ....? 😂
  22. யாழ்மாவட்டத்தில் போனசும் சேர்த்துத்தான் 6 பேரை தெரிவு செய்வார்கள்
  23. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் குருநாதா............................
  24. @கந்தப்பு இவை என்னுடைய தெரிவுகள். போட்டியை ஒழுங்கு செய்து நடத்துவதற்கு மிக்க நன்றி.................❤️. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) இல்லை 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி, 3 இடங்கள் 28) வன்னி தமிழரசு கட்சி, 3 இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி, 3 இடங்கள் 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி, 2 இடங்கள் 31)அம்பாறை ஐக்கிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி, 5 இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி, 11 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) ஶ்ரீதரன் 38) மானிப்பாய் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னர் தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 8 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 11 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 11
  25. 🤣........... பார்ப்பவை பலதும் அப்படியே படங்களாக மனதில் ஓரளவிற்கு நிற்கும், அல்வாயன்........... அதை வைத்து தான் என் காலமே ஓடிக் கொண்டிருக்கின்றது. எம்ஜிஆர் சிலை இருக்கும் இடத்தில் அவரைத் தவிர வேறு எவருக்கும் இடம் இல்லை........ அந்தப் பகுதியை உங்களுக்கு தெரியும் தானே...... ஆதிசக்தி விளையாட்டுக் கழகம்........ நல்லவர்களுக்கு மட்டுமே அவர்கள் நல்லவர்கள்..............
  26. வாள்வெட்டு எல்லாம் சண்டித்தனம், சுழிபுரம் அப்படி இல்லை, ஆனால் ஆண்களும் பெண்களும் தனிமனித தைரியம் உடையவர்கள். அனுபவத்தில் சொல்கிறேன். பேய்காட்ட முடியாது. வடகம்பரை அம்மன் கோவிலில் கிருபாநந்தவாரியாரையே குறுக்கு கேள்வி கேட்டவர்கள்.
  27. என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை. ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே. முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.
  28. அரசனை நம்பி புருசனை கைவிடலாமா? எனக்கு கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் எனது விருப்ப தெரிவு தமிழரசு கட்சி. ஆட்கள் எனில் சுமந்திரன், சிறீதரன், டக்லஸ் தேவானந்தா. எனக்கு அழைப்பு அனுப்பியதற்காக சிறியர் தலையில் அடித்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.😁
  29. யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்… பத்திரிகை + அதிஷ்டலாப சீட்டுக்கள் விற்கும் “வைர மாளிகை” விளம்பர உடை அணிந்த மனிதரை எனக்கு நன்கு தெரியும். அவரின் உயரமும், அகலமான மார்பும், கணீரென்ற குரலையும் லேசில் மறந்து விட முடியாது.
  30. ஏராளன்.... டாக்டர் அர்ஜுனாவின் வலது கை என்று எமது புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. 😂 அப்ப... கூட்டிக் கழித்துப் பார்க்க, புலநாய்வு அங்கைதான் போய் நிற்குது. 🤣
  31. நீங்கள் சொல்வது சரி வளவன். புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க இந்தக் கணிப்பு உதவும் என்பது உண்மை.
  32. கிருபன் ஜி சொல்றார்.. பழம்…பழம்… தமிழர்களின் முக்கனி மாம்பழமாம்🤣
  33. தமிழர்களின் நிலையை சிறிய மீன் களுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இணைப்புக்கு நன்றி.
  34. அருச்சுனாவின் கட்சிக்கு - அருச்சுனாவுக்கு அல்ல, வாக்களித்துள்ளேன். இதுவரை எந்த இலங்கை தேர்தலிலும் நான் வாக்களித்தில்லை. இடாப்பில் பெயர் பதியும் வயது வந்துவிட்டிருந்தாலும், பதிய முன்னமே நாட்டை விட்டு கிளம்பியாகிவிட்டது. ஆகவே மானசீக தேர்தல் எனிலும் இலங்கைக்கு இது என் முதல் தேர்தல்😎. அருச்சுனா குழுவை தமிழ் தேசிய வழி நிற்பார்கள், திம்பு அடிப்படையில், இப்போதைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை பகிர கோரும் அரசியலை வினைத்திறனுடன் முன்னெடுப்பார்கள் என நம்பி வாக்களிக்கிறேன். நீண்டகால நோக்கில் ஏனைய சகல தமிழ் தேசிய கட்சிகளிடம்பிருந்தும் இவர்கள் தமிழ் தேசிய அரசியலை மீட்டெடுப்பார்கள் என்பதற்கு வாய்பிருப்பதாக நினைக்கிறேன். இதை செய்ய முடியாவிடினும், புதியவர்கள் மக்களுக்கான உடனடி தேவை அரசியலையாவது வினைதிறனுடன் மேற்கொள்ள வாய்புள்ளது. என் கை என்பிபி க்கு மேலால் ஊசலாடியது உண்மை. ஆனால் - ஏனோ முடியவில்லை.
  35. மனது வைத்து எந்த தேர்தல் கட்சிகளிலும் துளிகூட நாட்டமில்லை. தமிழ்சிறியின் அழைப்புக்காகவும் கோஷானின் கருத்துக்கணிப்புக்காகவும் மதிப்பு கொடுத்து ஒரு வாக்கை தட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இந்த வாக்களிப்பு தெரிவில் தேர்தலை புறக்கணிக்கிறோம் அல்லது இந்த தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை என்றொரு தெரிவை ஏன் நீங்கள் வைக்கவில்லை கோஷான்? ஏனெனில் எந்த தேர்தலிலும் அந்த முடிவை எடுக்கும் கணிசமான பிரிவினர் உண்டு.
  36. வாக்களித்துவிட்டேன். அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேன்!
  37. இப்படித்தான் 20 களில் என்னவிட்டா யாரு, எண்டும் இருபதிலதான் நான் இருப்பன் எண்ட நினைப்பில நானும் வாழ்ந்திருக்கிறன்.. 30 களின் இறுதியில் யதார்த்தம் மூஞ்சையில் அடிக்க ஆரம்பிக்கிறது.. இதுதான் வாழ்க்கை.. நல்ல ஒரு கவிதை.. எவ்வளா பெரிய ஒரு வாழ்க்கை தத்துவத்தை வாழ்வின், நிலையாமையை, அதுவும் முப்பது நாப்பது வருசத்து அனுபவத்துக்கு பிறகு வரக்கூடிய ஒரு பெரிய காலப்பகுதியை ஒரு நாலுவரிக் கவிதையில் மின்னல்போல ஒளியின் வேகத்தில் கடந்துபோக வைத்திருக்கிறீர்கள்.. நீண்ட நாளைக்கு பிறகு எதேச்சையா இந்தப்பக்கம்(கவிதைப்பக்கம்) வந்தப்போ ஒரு நல்ல அனுபவம்..ஒரு நல்ல கவிதை.. ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் எனக்கு பிடித்த முற்றத்து மாமரத்துக்கு கீழ் இளையராஜா பாடலுடன் மிக்சரையும் தேநீரையும் சுவைத்தபடி கயித்துக்கட்டிலில் கடந்து வந்த காலங்களை அசைபோட்டது போல ஒரு அனுபவக்கிளர்ச்சி.. கறுப்பு வெள்ளையாக, கலர் கலராக ஆயிரம் ஞாபகம்கள் எழுந்து விழுந்து எழுந்து அலைகின்றன கடல் அலைகளைப்போல மனக்குளத்தில்.. என்னைப்போல இந்தக்கவிதையை படித்த எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும்.. அதுதான் ஒரு நல்ல கவிதை செய்யக்கூடியது.. ஒரே ஒரு அம்மாவின் பழைய சேலை வாசம் கிளர்த்தும் ஓராயிரம் நினைவுகளை போல பல படிமங்களை பலகாட்சிகளை ஒரு கவிதையில் கொண்டுவந்து கொட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும்.. ❤️❤️👏👏 🫡 ரசோதரன்..
  38. தமிழ் தேசிக்காய்களின் முக்கிய content creator இவரை போன்ற சிங்கள தேசிக்காய்கள் தான். எனவே தான் தமிழ் தேசிக்காய்களின் ஆதர்சன ஊடகமான லங்கா ஶ்ரீ இதனை தேடி எடுத்து இந்த சிங்கள தேசிக்காயின் நகைச்சுவை செய்தியை வெளியிட்டுள்ளது. 1948 ம் ஆண்டில் இருந்து இவ்வாறான சிங்கள- தமிழ் இனவாதிகள் தான் இன்றைய நிலைக்கு நாட்டை கொண்டு வந்தவர்கள்.
  39. தனித்திரியாக கேளுங்கள். பலர் பதில் அளிப்பார்கள். நான் இலங்கையில் இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன்.
  40. அவர் இலங்கைப் பல்கலைக்கழகம் போய், பின்னர் சட்டக் கல்லூரி பரீட்சை எழுதினார் என்று தான் விபரங்கள் இருக்கின்றது, கோஷான். நீங்கள் சொல்வது சரியானதே, இலங்கையில் பல்கலைக்கழகம் போவதென்பது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றாவது ஓரளவு பரவாயில்லை, பல வருடங்களின் முன்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இலங்கையில் நான்கு வருட பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஒரு சில மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியும், காமன்வெல்த் நிதியுதவியும் கிடைக்கும். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் பொறியியல் பீடத்தில் இருந்து ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். பேராசிரியர் துரைராஜா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் மேற்படிப்பை படித்தவர்கள். இந்த வகையில் வருடத்தில் ஒரே ஒருவர் என்னும் போது அதற்கு தகுதியடைபவர் மிகச் சிறப்பானவர் என்று இலங்கையில் கருதப்படுகின்றது. ரணிலையும் இந்த வகைக்குள் கொண்டுவர முயற்சிப்பதையே நான் மேலே சொல்லியிருந்தேன்...............
  41. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம்: தேசிய மக்கள் சக்தி 2 28) வன்னி: தேசிய மக்கள் சக்தி 2 29) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 2 30)திருமலை: தேசிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா: தேசிய மக்கள் சக்தி 3 33)அம்பாந்தோட்டை: தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு: தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 40) ஊர்காவற்றுறை: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி: தமிழரசு கட்சி 42) மன்னர்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு: தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா: தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு: தமிழரசு கட்சி 47) திருகோணமலை: தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் கூட்டணி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி: 2 52) தேசிய மக்கள் சக்தி: 7 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 4 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 154 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 4
  42. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
  43. வன்னியருக்கு ஒரு பெண்பிள்ளைதான் சசி அவருக்குத் திருமணமாகி குடும்பப் பெண்ணும் ஆகிவிட்டார். அழவேண்டாம்.😩😢
  44. ஈழம் பற்றி ஈழத்தில் பிறந்த எங்களுக்கே தெரியாத பல விடயங்களை அவர் தெரிந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளேன். மகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை.😌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.