Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    88827
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    19669
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12791
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/17/24 in Posts

  1. வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள். 24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள். 1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள் 25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 15 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
  2. ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ் மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது.
  3. யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
  4. சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கவில்லை. இந்த தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு கிடைத்தது. அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.
  5. யாராவது... வேலியில் போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂
  6. தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ. மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ. 60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ. மக்கள் மீள வருவர்கள்.
  7. ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை. உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும் சமீப காலமாக காண முடிகிறது. இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂) இல்லை இல்லை கிட்டத்தட்ட பாழாகிய பின்னர் வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.
  8. சுமந்திரன்... கடைசி நிமிடம் மட்டும், பின் கதவால் பாராளுமன்றம் போக போராடிப் பார்த்தார். ஸ்ரீதரன் கடுமையாக நின்று அதனை தடுத்து நிறுத்தியதை அடுத்து, சுமந்திரனின் ஆள்.. சத்தியலிங்கம் தெரிவு செய்யப் பட்டுள்ளார். சுமந்திரனை பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததே பெரிய விடயம். அப்பாடா... இப்ப தான், நிம்மதி.
  9. இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும். இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள். இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.
  10. மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய, தேசியப் பட்டியல் ஆசனத்தை எடுத்து விட்டு... மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் அதனை திருடி... சுகபோகம் அனுபவிக்க அடிபடுகிறார்கள். அதனை ஒரு பெண் உறுப்பினருக்கோ, மட்டக்களப்பு மைந்தனுக்கோ கொடுப்பதுதான்... நியாயமானது.
  11. பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
  12. சுமந்திரன் ஒருவரால் தான்…. தமிழரசு கட்சியில் இவ்வளவு பிரச்சினைகளும், பிழவுகளும் ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தலிலும் தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்ததற்கு சுமந்திரனின் செயல்களே முக்கிய காரணம். அதனை மக்களே “தேவை இல்லாத ஆணி” என்று அவரை வாக்குகளால் தோற்கடித்து காட்டி விட்டார்கள். இப்போ கட்சியை விட்டு சுமந்திரனை வெளியே அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழரசு கட்சியிடமே உள்ளது. 💪 சுமந்திரனை தூக்கி வெளியே போட்ட அடுத்த நிமிடமே… தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு அணியாக திரளும். ✅ அதை விட்டுட்டு…. போகாத ஊருக்கு, வழி சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
  13. என்ர‌ சொந்த‌ சித்தி நான் பிற‌ப்ப‌துக்கு முன்பே கொழும்பில் ப‌டிச்ச‌ கால‌த்தில் சிங்க‌ள‌ ந‌ப‌ர் உட‌ன் காத‌ல் வ‌ந்து அது க‌லியாண‌த்தில் போய் முடிந்த‌து என‌து சித்தி அர‌சாங்க‌ பாட‌சாலையில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌டிப்பிச்ச‌வா சித்தியின் மூத்த‌ ம‌க‌ன் 1988க‌ளில் போராட்ட‌த்தில் இணைந்து 1990க‌ளில் வீர‌ச்சாவு த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் சிங்க‌ள‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்து இருக்கின‌ம் புத்த‌ன் மாமா....................... ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை என்ற‌ மாதிரி யாழ்ப்பாண‌த்தார் வெளி நாட்டு மாப்பிளைக்கு க‌ட்டி வைக்க‌வே விரும்புவின‌ம் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ...................சில‌து அவ‌ர்க‌ளுக்குள் காத‌ல் வ‌ந்து திரும‌ண‌த்தில் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய‌ ஏலாது............... என‌து சித்தின்ட‌ க‌ன‌வர‌ தெரியாது நான் நேரில் பார்க்க‌ வில்லை 1990க‌ளில் வீர‌ச்சாவு அடைந்த‌ அண்ணாவையும் நேரில் பார்க்க‌ வில்லை அக்கா மார் இர‌ண்டு பேரையும் பார்த்தேன் 1995ம் ஆண்டு இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ வ‌டிவு புத்த‌ன் மாமா.............................. என்ன‌ தான் சித்த‌ப்பா சிங்க‌ள‌வ‌ராய் இருந்தாலும் ம‌க‌ன் எம் இன‌த்துக்காக‌ போராடி வீர‌ச்சாவு அடைந்த‌ மாவீர‌ர்🙏🥰............................
  14. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  15. @வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.
  16. @MEERA @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂
  17. அச்சம் என்பது மடமையடா... படம் : மன்னாதி மன்னன் இசை : M.s.v, ராமமூர்த்தி பாடல் : கண்ணதாசன் பாடியவர் : T.M.S அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா (அச்சம்) கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்) கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்) வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) http://tamiloldlyrics.blogspot.com/2016/09/blog-post_0.html
  18. ஆளில்லா விமானத்தை மொஸ்கோவரை அனுப்பி குண்டுவீச்சு நடத்தும் போதே சாத்துப்படி இருக்கு என்று யோசித்தேன்.
  19. ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவில் பல உயிர்களை காப்பாற்றிய பொழுதுபோக்கு வானொலி சாதனம் பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, வாக்கி டாக்கி போன்ற சிறிய ஹாம் ரேடியோ கருவி கொண்டு களத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஹாம் ரேடியோ அமைப்பினர் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் ஜூலை 30, 2024. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்தனர். அங்குள்ள வீடுகள், கடைகள் எனப் பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கியவர்களை காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மீட்டனர். கடும் வானிலையால் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு வகை வானொலியைப் பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்புப் பணி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன. அதுதான் ஹாம் ரேடியோ. வயநாட்டில் சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் (Sultan Bathery DX Association) உறுப்பினர்கள் சேர்ந்து ஹாம் ரேடியோ கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல்கள் தெரிவித்தனர். தகவல் தொடர்பு எப்படி இருந்தது? வயநாட்டில் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் காலையில்தான் மீட்புப் பணிகள் தொடங்கின. "பேரிடர்க் காலத்தில் மின்சாரம், செல்ஃபோன் நெட்வொர்க் என எதுவும் இருக்காது. அதனால் முதல்கட்ட தகவல் தொடர்புக்கு மிகவும் எளிதான ஹாம் ரேடியோ முறையைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அது தக்க உதவியாகவும் இருந்தது," என்று கல்பேட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி அருண் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். “ஜூலை 30ஆம் தேதியன்று காலையில் எங்கள் அமைப்பிற்கு கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மீட்புப் பணியில் உதவுமாறு அழைப்பு வந்தது. உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் அங்கு சென்று கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் மிகவும் விரைவாக ஹாம் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை அமைத்தனர்” என்று பிபிசி தமிழிடம் பேசிய சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் தலைவர் சாபு மேத்யூ தெரிவித்தார். சூரல்மலை, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பு ஹாம் ரேடியோ நிலையங்களை அமைத்தனர். “மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆன்டெனா கொண்ட நிலையங்கள் அமைத்து எங்கள் குழுவினர் வாக்கி டாக்கி போல இருக்கும் சிறிய ஹாம் ரேடியோ கருவிகளைக் கொண்டு மீட்புக் குழுவினரோடு களத்திற்குச் செல்வோம், அதில் எப்போதும் ஃபோன் பேசுவது போலவே நாம் பேச இயலும்” என்றார். களத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பற்றிய தகவல்கள் ஹாம் ரேடியோ நிலையங்களுக்குப் பரிமாற்றப்பட்டு, அதிகாரிகள் அதற்கு ஏற்றது போல மீட்பு வசதிகள் செய்து மக்களைக் காப்பாற்றியதாகவும் விவரித்தார். வயநாடு பகுதியில் ஏற்கெனவே தகவல் தொடர்புக்கு வி.ஹெச்.எஃப் ரிபீட்டர் (VHF repeater) என்னும் ஆன்டெனா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது மலைகள் நிறைந்த பகுதி என்பதால் அது ஒன்றை மட்டும் பயன்படுத்தி நீண்டதூரம் தொடர்புகொள்ள முடியாது. இதனால் பல இடங்களில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். இந்தக் குழுவினர் வயநாடு நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் 7 நாட்கள் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 'வாழ்நாளில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு' பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, களத்தில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைத்து தகவல் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது “இயல்பாகவே வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகவல் தொடர்பு செய்வது சற்றுக் கடினமாகவே இருக்கும். ஆனால் அந்த மழையில், தகவல் தொடர்பு முற்றிலுமாகத் தூண்டிக்கப்பட்டு நாங்கள் மீட்புப் பணிகளைச் செய்வது மிகவும் கஷ்டமான நிலை இருந்தது. பல மணிநேரம் மக்கள் மண்ணுக்குள் சிக்கிய நிலையில் இருந்தனர். அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் பணிகளைத் தொடங்கினோம்” என்று இந்த ஹாம் ரேடியோ அமைப்பைச் சேர்ந்தவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவருமான நிதீஷ் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “முண்டக்கையில் ஹாம் ரேடியோ நிலையம் அமைத்தபோது இரண்டு மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து இருந்ததைக் கண்டோம்” என்றார். “அந்த மசூதியின் தலைவரின் உடலை மீட்க ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹாம் ரேடியோ கொண்டு தகவல் தெரிவித்தோம். மீட்புப் படையினர் அவரது உடலை மண்ணுக்குள் இருந்து எடுக்க வந்தபோது, நிலச்சரிவு பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மசூதியில் தஞ்சம் புகுந்த ஏராளமான மக்களின் சடலங்களை மண்ணுக்குள் இருந்து எடுத்தனர்” என்று நிதீஷ் கனத்த குரலுடன் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் பல மணிநேரம் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்ததாகவும், இது அவரது வாழ்நாளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார். இது நடந்த பின்னரே, மசூதி அமைந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மக்களை மண்ணுக்குள் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றியதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். நிலச்சரிவு நடந்த சில நாட்களுக்குப் பிறகு தகவல் தொடர்புக்காக அரசுத் தரப்பில் இருந்து செல்போன் டவர் வைக்கப்பட்டதாகவும் அதுவரை ஹாம் ரேடியோ கொண்டு மட்டுமே தகவல் தொடர்பு நடந்ததாகவும் நிதீஷ் கூறினார். ஹாம் ரேடியோ என்றால் என்ன? பட மூலாதாரம்,SABU MATHEW படக்குறிப்பு, கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஹாம் ரேடியோ நிலையம் அமெச்சூர் ரேடியோ அல்லது ஹாம் ரேடியோ என்பது லாபம் ஈட்டும் நோக்கமின்றி பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு வானொலி சேவை. “தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மக்கள் வானொலி சேவைகளைத் தானே கற்று, ஆராய்ந்து அதில் புதுமைகளைக் கண்டுபிக்க ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம். ஆனால் முறையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஹாம் ரேடியோவை இயக்க முடியும். இவர்கள் ‘ஹாம்ஸ்’ என்று அழைக்கப்படுவர்” என்கிறார் சென்னை பல்கலைகழக்கத்தின் இதழியல் துறை பேராசிரியரும், ஹாம் ரேடியோ ஆர்வலருமான முனைவர் ஜெய் சக்திவேல். இந்தியாவில் 12 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சம் இதற்காக நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று ஹாம் ரேடியோ இயக்குவதற்கான உரிமத்தைப் பெறலாம். உரிமம் பெற்ற அனைவருக்கும் ‘Call sign’ எனப்படும் தனித்துவமான ஒரு பெயர் வழங்கப்படும். அழைப்பு தொடங்கப்படுவதற்கு முன் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கான ‘Call sign’-ஐ சொல்லியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வர். அமெச்சூர் வானொலியின் தேசிய நிறுவனத் தரவுகளின் படி, உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹாம் ரேடியோவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் 15,000 ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் உள்ளனர். ஹாம் ரேடியோ எவ்வாறு இயங்குகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹாம் ரேடியோ கருவிகள் “பொதுவாக வானொலியில் ஒரு வழித் தொடர்பு மட்டுமே நடத்த இயலும். ஆனால் ஹாம் ரேடியோவில் ஒரு தொலைபேசி அழைப்பு போல அனுப்புநர், பெறுநர் என இருவரும் தொடர்புகொள்ளலாம். ஹாம் ரேடியோ கொண்டு உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுடனும் தொடர்பு கொள்ளலாம்” என்று முனைவர் ஜெய் சக்திவேல் தெரிவித்தார். இரண்டாயிரம் ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கருவிகள் உள்ளன. ஒரு பேட்டரி கொண்டு மட்டுமே இந்த ஹாம் ரேடியோ பல மணிநேரங்கள் வரை இயங்க முடியும். முன்பு ஹாம் ரேடியோவில் ‘மோர்ஸ் கோட்’ (morse code) எனப்படும் பிரத்யேக குறியீடு கொண்டு தகவல் பரிமாற்றம் நடக்கும். ஆனால் தற்போது தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக செல்போனில் பேசுவது போலத் தொடர்புகொள்ள முடியும். மொழி தெரியாதவர்களுடன் பேசுவதற்காக மட்டுமே மோர்ஸ் கோட் பயன்படுத்தப்படுகிறது. “இதனால் உலகம் முழுவதும் மொழி தடையாக இல்லாமல் மக்கள் கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளலாம். ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட பொழுபோக்குகளுள் (hobbies) ஹாம்ரேடியோ ஒன்றாகும்” என்றும் அவர் தெரிவித்தார். “ஆனால் ஹாம் ரேடியோ பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே மக்களுக்கு இதன் பயன்பாடு பற்றித் தெரிய வருகிறது” என்கிறார் முனைவர் ஜெய்சக்திவேல். கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2015 சென்னை வெள்ளம், 2018 கேரளா வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் ஹாம் ரேடியோ தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj9j9y9jvm3o
  20. கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி. உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?
  21. இதில் பாதிப்பேர் அனுரவின் பஸ்சில் ஏறி பைலா போட ஆரம்பித்து விட்டார்கள். மீதி பாதிக்கு subscription expired ஆகிய கேபிள் டீவி நேயர்கள் நிலைதான். சுமன் அரசியலை விட்டு முற்றாக நீங்க வேண்டும் என நான் நினைக்க 2 காரணங்கள். 1. அவரின் சுத்து மாத்துக்கள் இராது 2. சுமனை சாட்டி, ஶ்ரீக்கும் அனுரவிற்கும் ஆள் பிடிக்கும் பார்த்தசாரதிகளால் அப்படி செய்ய முடியாமல் போகும். சுமன் இலண்டன் வந்தால் நிச்சயம் பார்த்தசாரதி அடிப்பார். ஆனால் பார் லைசன்ஸ் ஶ்ரீ வந்தால் ஏர் போர்ட்டில் இறங்கி மீள ஏறும் வரை அவருக்கு சாரதி வேலை பார்ப்பார். துடைத்து விடாத குறைதான். (சாப்பிட்ட பின் வாயை சொன்னேன்).
  22. தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂 இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂
  23. ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் . பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏 ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔 இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶
  24. சும்மா இருங்க கோசான்… இங்க வந்து நிம்மதியாய் இருக்கிற எங்களுக்கும் ஆப்பு வைப்பார்.
  25. இன்றைய நாளின், சிறியரின் பிரதான எதிரி தேர்தல் ஆணையாளர் நாயகம்தான். 🤣
  26. இப்படி ஒரு அணி தேர்தலில் போட்டியிட்டதா? யார் முதன்மை வேட்பாளர்.
  27. இந்த மானசீக வாக்கெடுப்பு யாழ், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பெரிதும் ஒத்திருக்கிறது. உண்மையில் யாழ் களம் போல இதுவரை கடும் தமிழ் தேசியம் பேசியவர்கள், வடமாகாணத்தவர் அநேகர் இருக்கும் ஒரு தளத்தில் கூட என் பி பி 27.4% எனும் போது - அது யாழ் வன்னி மாவட்டங்களில் வரவிருக்கும் நிஜ தேர்தல் முடிவை ஆரூடம் கூறியது என்பதே உண்மை (யாழ் மாவட்டத்தில் என் பி பி 25%). அத்தோடு புலம்பெயர் தேசத்தில் த.தே.ம.மு வுக்கு இருக்கும் அதீத ஆதரவு, நாட்டில் இல்லை என்பதை கருத்த்தில் எடுத்து பார்க்கும் போது….இந்த “புலம்பெயர் எப்பெக்ட்” ஐ கழித்து விட்டு பார்த்தால் வரவிருந்த முடிவுக்கான க்ளூக்களை இந்த மானசீக தேர்தல் கொடுத்திருந்தது, ஆனால் நாம் (நிச்சயமாக நான்) அதை அப்போது உணரவில்லை என நினைக்கிறேன். அருச்சுனாவுக்கு 1 சீட் (13.5%) அப்படியே நிஜத்தேர்தலில் பலித்துள்ளது. —/—— ஆனால் கிழக்கின் 3 மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து மானசீக தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இதற்கு பிரதான காரணம் சிறிய மாதிரி அளவு (சாம்பிள் சைஸ்) என நினைக்கிறேன். வாக்களிப்பில் பங்கு கொண்டோரில் மிக சிறிய அளவிலானோரே கிழக்கு மாகாண பூர்வீகத்தினர் என நினைக்கிறேன். கலந்து கொண்டும், திரியில் எழுதியும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
  28. 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள் இந்த முறை வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
  29. இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
  30. அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.
  31. அதைத்தான் நான் எல்லா இடங்களிலும் சொல்கிறேன்.ஒட விட்டு பார்ப்போம்.அவர் பாதை பிழையானால் நாம் எம் பாதையில் தொடர்ந்து நடப்போம். ஆக்க பொறுத்திருந்த நாம் ஆற பொறுத்திருந்தும் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம். 70 வருடத்தை போராட்ட வருடங்களாக கட்டிப்பிடித்த நாம் அடுத்த நான்கு வருடங்கள் எப்படி இருக்கின்றது என பார்க்கலாம்.
  32. இதை விட உங்களை அவுஸ்ரேலிய தூதுவராகவே அனுரகுமார திசநாயக்க நியமித்துவிடுவார்
  33. நாதாயோ… நாதாயோ…. அபி லங்கா பெள ழே நாதாயோ 🤣 ————- @Nathamuni எங்க சாமி போய்டீங்க… யாழில் 90% ஆட்கள் உங்கள் வழிக்கு வந்து விட்ட இந்த அரிய காட்சியை வந்து பாருங்க தெய்வமே. ——— சிறு வயதில் பைபிளை பிரட்டும் போது வாசித்த ஒரு விடயம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. தனது கைதுக்கு முன் யேசு தன் 12 சீடரையும் பார்த்து சொல்வாராம்… நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் நாட்களில் என்னை 3 தரம் மறுதலிப்பீர்கள் என. இது தமிழ்தேசியத்தின் மறுதலிப்பு காலம் போலும். இதுவும் கடந்து போகும்.
  34. இரண்டு தடவை இருந்து என்ன செய்தவர் ...அந்த இரண்டு தடவை காணும் என சந்தோசமாக இளைப்பாறி புதுமுகத்துக்கு வழிவிட்டிருக்க வேணும்... நீங்கள் எல்லாம் ஒருமாதத்தில் புது கட்சி உருவாக்கி அதில் வெற்றி பெறலாம் என நினைத்ததே தப்பு ....சுமத்திரனுடன் பகை என்றால் விலகியிருக்க வேண்டும் ....அதைவிடுத்து புது கட்சி உருவாக்கி அதில 6 பேரை உள்வாங்கி .....இப்ப சுமாமி,அலை ....
  35. இதென்ன பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி இருக்கே.
  36. சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்! இணையக்குப்பை பதிவில் இருந்து சில பகுதிகள் சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும் அ. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல. ஆ. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும். இ. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும். ஈ. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறு ‘துணைச்சமூகமாக‘ நாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும். அதற்கான வழிமுறைகள் அ. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது. ஆ. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம்‘ என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மா‘ இருக்கையில்தான் கவனம் சிதறுகிறது. இ. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது. https://www.jeyamohan.in/206616/
  37. இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂
  38. இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.