Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1569
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/24/24 in Posts

  1. 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு இடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 61 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 57 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) வில்லவன் - 52 புள்ளிகள் 6) வீரப்பையன் - 51 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 9) அல்வாயான் - 50 புள்ளிகள் 10)நிலாமதி - 50 புள்ளிகள் 11) goshan_che = 49 புள்ளிகள் 12) நிழலி - 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 97)
  2. தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார் இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anura-govt-allowed-to-commemorate-maaveerar-naaal-1732445376#google_vignette
  3. ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை. சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்? அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்? உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார். உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன, நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம். அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை. எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும். பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல, ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி எதுவேணும் என்றாலும் சொல்லலாம் எனும் பாணியில் இப்போது சுமத்தப்படும் குற்றங்கள் மிகவும் கண்ணியக்குறைவானது. இவர்கள் செய்தி உலகறிஞ்ச விஷயமானாலும் இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.
  4. ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
  5. வாங்கோ நிலாந்தன் , நீங்க முள்ளிவாய்க்காள் இறுதி நாளிலும் புலிகள் பதுங்குவது எதற்கு மிக பெரிய பாய்ச்சலுக்காகதான் என்று எழுதிய அந்த நிலாந்தனா? பழைய ஆய்வாளர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக மறுபடியும் கிளம்புகிறார்கள். அது நிற்க உலக வரலாற்றில் கட்சி ஆரம்பிச்சு அடுத்த மாசமே பாராளுமன்றம் சென்ற முதல் ஆள் அர்ச்சுனாவாகதான் இருக்குமெண்டு நினைக்கிறேன். சத்தியபிரமாணம் செய்யும்போது இலங்கை,அரசியலமைப்பியும் ஒருமைப்பாட்டையும் தேசியம் தேசிய கொடி எல்லாம் ஏற்றுத்தானே பதவி பிரமாணம் செய்கிறீர்கள், பின்பு எப்படி புலிகள் பிரபாகரன் தெய்வமென்றெல்லாம் பாராளுமன்றத்துக்குள் நின்று பேசி திரிகிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகிறீர்களா சிங்கள மக்களை ஏமாற்றுகிறீர்களா? சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை வெளிக்கொண்ணந்தமையினால் அர்ச்சுனா ஒரு நேர்மையான மனிதர் என்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சாவகச்சேரி மக்களால் அர்ச்சுனா பாராளுமன்றம் அனுப்பப்பட்டார், பாராளுமன்றத்துக்கு போன வேலைய பாக்காம , முன்பு வெளிநாட்டுக்கு புதுசா வந்தவர்கள் காருக்கு முன்னால் நின்று படம் எடுத்து அனுப்புறமாதிரி இப்படி நேரடி ஒளிபரப்பு வெட்டி வீர வசனம் என்று காமெடி பண்ணிக்கிட்டிருந்தா அர்ச்சுனாவை அகற்ற சிங்களவன் தேவையில்லை அதே சாவகச்சேரி மக்களே அடுத்த தேர்தலில் அகற்றுவார்கள். அர்ச்சுனாவின் ஓவர் அலட்டலால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டார், இன்னொரு அரச பதவியான மருத்துவர் பதவியில் இருந்து கொண்டு எம்பியாகவும் செயற்படுகிறார் என்று இதுவரை இரண்டுமூன்று முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு செய்யப்பட்டிருகின்றன, எதிர்காலத்தில் விசாரணை கோர்ட் எண்டுபோய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அர்ச்சுனாவின் பதவி நீடிக்க அனுமதிக்கப்படுமா என்பது காலத்திற்கே வெளிச்சம். அப்படி ஒரு நிலமை வந்தா அதற்கு முழுகாரணம் ரஜனி ஸ்டைல்ல அர்ச்சுனா சும்மா பரபரப்பு அரசியல் செய்ய வெளிக்கிட்டதுதான்.
  6. பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்குவதில் பிசியோ? பார் சிறியை போல ஒண்டுக்கும் உதவா உதாவாக்கரை தலைவரை தமிழினம் இதுவரை கண்டதே இல்லை.
  7. மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅
  8. அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் கொட்டுகின்ற காசை தங்களிட்ட கொண்டு வந்து தரட்டாம்.
  9. அனுர தமிழர் பிரச்சனையை தீர்த்தால்??????? நரி மட்டுமல்ல ஹிந்தியனும் இலங்கையில் வாலாட்ட முடியாது.
  10. ரகுமானின் டைவேர்ஸ் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது . இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்' என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, "அப்பா... அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா" என்றாள். 'மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே.. அது அதைவிட ''சந்தோஷம்' என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான். பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆ லோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், "அப்படியே செய்கிறேன் குருவே!" என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?" என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்... அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை" என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன். மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, "உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி. செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான். இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள். ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.' மகளை நோக்கி, "போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்" என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு" என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு ஏற்பாடானது. முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். "கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி" என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்" என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும் என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று "வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். "வேண்டாம்... எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்...." “பரவாயில்லை... அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா.." என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி... "வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு" என்று அச்சத்தில் தயங்கினாள். "பயப்படாதே... நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் "வீல்" என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. "எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?" "அப்பா... எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்." என்றாள். என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் "என்ன செய்யலாம்? நீயே சொல். "எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்". "சரியம்மா... உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்." என்றான். தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே... எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள். "என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?" என்றான் மகளை நோக்கிய அரசன். "இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்". அரசன் சொன்னான்... "முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன் திறமைசாலி, ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் எதுவும் இல்லை". இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது." மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்! "நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை." "ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!" என்றார். “வாழ்க்கை துணை' என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே 'வாழ்க்கைத் துணை' என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கி கொண்டிருக்கிறார்கள் , அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்..
  11. இங்கே பிரிந்த இருவருமே பாலியல் தொடர்புகள் இட்டு குறை ஏதும் சொல்லவில்லை. நாம்தான் புதியதாக எம் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை புனைகிறோம். அவர்கள் இருவரும் சொன்னது - காதல் இருந்தும் தமக்குள் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி வந்து விட்டது என்பதை மட்டுமே. இது மிக இயல்பான காரணமாக எனக்கு தெரிகிறது. 29 வருடம் என்பது நீண்ட காலம் எனிலும், ஈர்ப்பு இல்லாத போது, கிடந்து ஏன் உழலுவான் என்று நினைத்துள்ளனர் போலும். நாம் வாழும் நாடுகளில், 50 வயது தாண்டிய எத்தனை பேர் நாட்டில் 6 மாதம், புலம்பெயர் நாட்டில் 6 மாதம் என இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் புலம்பெயர் நாட்டில்தான் இருப்பார்கள். ஊரில் கூட பல உறவுகள், கணவன் முன் அறையில் தானே போட்டு சாப்பிடுவார், மனைவி வீட்டில் என்ற நிலையில் 80 களிலேயே நான் கண்டதுதான். இவையும் கூட அறிவிக்கப்படாத டிவோசுகள்தான். இப்படி சமூக ஓப்பனைக்காக இழுத்து கொண்டு போவதை விட, பிரிந்து வாழும் முடிவு அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே முடியும். பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இருவருக்கும் இனிவரும் வாழ்க்கை மனம்போல அமைய வாழ்த்துக்கள்.
  12. (நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும். 17 வயதின்கீழ் இலங்கை குழாம் கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த https://www.virakesari.lk/article/199461
  13. யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.
  14. நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது. எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு - "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை. இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம். ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள். சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும். பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/1AXBekspxj/
  15. என்ன சகோ பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்?? யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.? இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே? 1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும்.
  16. தங்கம்ஸ் பாராளுமன்றம் போற அளவுக்கு சனத்தை வெறுப்பேத்தினது ஆர் ஆக்கள்? கொஞ்ச நஞ்சமே எழுபது வருசம். 🙃 சும்மா பாராளுமன்றம் போய் திண்டுட்டு குடிச்சுப்போட்டு கிடந்திருக்கிறானுகள்...😡 அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....😂
  17. மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு! சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப்பொதியும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. https://akkinikkunchu.com/?p=300348
  18. அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..
  19. நன்றி ..அனைவருக்கும்...கனடாவில் உள்ள..சிங்கள அனுதாபிகளுக்கு இது ஒவ்வாதே... பார்ப்போம் எதிர்வை
  20. நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சீமான் ரஜனியைச் சந்தித்தது எனக்கு உடன்பாடில்லை என்பது.ரவீந்திரன் துரைச்சாமி ஒரு பாஜக இ ரஜனி ஆதரவாளர். நாம்தமிழரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர். ஆனால் ரஜனியை அரசியல்ரீதியாக சீமானுடன் இணைக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்
  21. கொழும்பு விஸ்ணு கோவிலில் சனத்ஜெயசூரியாவைக் கண்டேன். சாதாரணமாக வந்து வழிபட்டுவிட்டு சென்றார். ஐயரும் அவருடன சேர்ந்து போட்டோ எடுத்தார். மத நம்பிக்கைகள் தனிமனிதர்களைப் பொறுத்தது. அடிமை மனோ நிலை மதநம்பிக்கைகள் நடிப்புத்தான்.தங்கள் சிசுவாசத்தைக்காட்டுவதாகத்தான். இவர்களோடு ஒப்பிடுகையில் அர்ச்சுணா எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ரணகளப்படுத்தியது எவ்வளவோ மேல்.
  22. வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣
  23. இன்றுவரை இலங்கையில் இனவாதம் இருந்ததையும் அது தமிழர்களுக்கு தொடர்ந்தும் அடக்குமுறையை ஏற்படுத்தியது என்பதையும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்.
  24. ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்! Nov 24, 2024 14:54PM IST ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார். உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்! அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்! கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்! என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார். https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/
  25. "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. நீரின்றி அமையாது உலகு எனும் வள்ளுவன் வரியில் இருந்து பிறந்த கவிதை நன்று. மழையை நீலக்கண்ணீர் என்பதும் இம்மழைக்காலத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பிரிவின் வலியும் உணர்த்தப்படுகிறது.
  27. ஆமாம் அண்ணா மாற்றத்தை நானே தொடக்குகிறேன். சம்பிரதாய பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அதை நாமே செய்யவேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதன் மூலம் தமிழ் மற்றும் இனம் சார்ந்த சிலவற்றை நாம் தொடர்ந்து காப்பாற்றலாம் என்று நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள் வாங்காத மொழியும் இனமும் அழிந்து போகும். ஏன் ஐயர் என்றால் இப்போதைக்கு தாலி கட்ட அவர் தேவைப்படுகிறார். ஆனால் என் பூட்டன் கலியாணமே செய்யப்போவதில்லை. எனவே ஐயரும்......?
  28. நல்ல படிப்பினையாக உள்ள குறுங்கதை . .........! 😂 நன்றி பெருமாள் .......!
  29. விருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை
  30. மிகமிக அழகான பாடலுடன் வருகை தந்ததற்கு நன்றி நுணா ........! 💐
  31. சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 'இதில் யாருக்கு என்ன பிரச்சனை?
  32. தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர். அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.
  33. செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் நான்கு கில்லாடிகள் படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்.... வேதாவின் அற்புதமான இசை, கவியரசரின் அழகான வரிகள், டி. எம். எஸ்.+பி. சுசீலாம்மா இருவரின் குரலினிமைகள்.
  34. ஏன்? யாரும் எங்கேயும் அமரலாம் எனும் போது…அங்கே எதிர்கட்சி தலைவருக்குரிய கதிரை என்பதே இல்லை…. இன்னொரு விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை என கேள்விப்பட்டிருப்பீர்கள்….எம்பிக்களை சபாநாயகர் மட்டுமே ஒழுங்கு படுத்த முடியும். இந்த ஊழியர் யார் ஒரு எம்பியை ஒழுங்கு படுத்த? இதில் முழு உடன்பாடே.
  35. என்னால் இதை நம்ப முடியவில்லை… நம்ம கப்ஸ் ஆ எழுதியது 🤔
  36. அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால், உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁
  37. சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.
  38. வீட்டிலை... யாரும் இல்லையா? படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம் கதவை திறங்க.
  39. தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன - எம். ஏ. நுஃமான் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மக்கள் எழுச்சியின் (அரகலய) தொடர்ச்சி என்றே சொல்ல வேண்டும். பாரம்பரிய அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மீதான மக்களின் வெறுப்பும்; தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்ததுபோல் அரசியலிலும், நாட்டிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இந்த வெற்றியின் அடிப்படை என்பதில் ஐயமில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பல. ஊழலை ஒழிப்பதிலிருந்து அடிப்படையான அரசியல் மாற்றங்கள் வரை இதில் அடங்கும். “வளமான நாடு அழகான வாழ்க்கை“ என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றை நான் இங்கு பட்டியல்படுத்த வேண்டியதில்லை. அவை எல்லாவற்றையும் அடுத்துவரும் அவர்களின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்களால் நிறைவேற்றமுடியும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவற்றுள் சுமார் 25% வீதத்தையாவது அவர்கள் நிறைவேற்றினாலே மக்கள் இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்ததன் பயனை அடைந்தவர்களாவார்கள் என்பதில் ஐயமில்லை. 1994ல் சந்திரிகா பண்டாரநாயக்க பல வாக்குறுதிகளை அளித்து 62% வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப் பட்டபோது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவருடைய பத்தாண்டுகால ஆட்சியில் அவற்றுள் எதையும் அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை. அதற்குரிய தற்துணிபு அவருக்கு இருக்கவில்லை என்பது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை என்பதையும் ஒரு சமாதானமாகக் கூறலாம். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அந்தச் சிக்கல் இல்லை. மக்கள் பூரணமான ஆணை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு இவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லை. இதுவரை எல்லாம் நன்றாகவே முடிந்திருக்கின்றது. சில சர்ச்சைகள் மேற்கிளம்பினாலும் உயர் கல்வித் தகைமை பெற்ற பலர் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன? என்பதையே அரசாங்கம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதுபற்றியே நான் இங்கு சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். 1. பொருளாதார வங்குறோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்தல் அரசு நிறைவேற்ற வேண்டிய முக்கியமான சவாலாகும். மக்கள் பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியமைக்கு அடிப்படைக் காரணமே தங்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களின் வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. ஆனால், இது இலகுவான காரியம் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். முன்னைய அரசாங்கங்கள் சேமித்துவைத்த பல்லாயிரம் கோடி உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமை இந்த அரசாங்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச வட்டிக் கடைக்காரரிடம் நாடு ஏற்கனவே அடகுவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஹமில்ரன் றிசேவ் வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த்வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு ஒருமாத அவகாசம் வழங்கியுள்ளதாக தற்போது ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அரசாங்கம் இத்தகைய அழுத்தங்களி லிருந்து மீள்வது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. நாம் பூகோள மயப்படுத்தப்பட்ட பெருமுதலாளித்துவ யுகத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு வளர்முக நாடும் நிதிமூலதன வல்லரசுகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப் படுத்தப்படுகின்றது. நமது சுயாதீனமான வளர்ச்சிக்கு அதுவே பிரதானமான சவாலாகும். அதை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது காலப்போக்கில்தான் தெரியவரும். 1977ல் இருந்து நடைமுறையிலிருக்கும், இன்றைய சமூக அரசியல் நெருக்கடிகளுக்கெல்லாம் மூல காரணமான திறந்த பொருளாதாரக் கொள்ளையிலிருந்து நாம் விடுபடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆயினும், இறக்குமதிப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி சுயசார்புப் பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்படுவது நாட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அவசியமாகும். அதில் இந்த அரசு அக்கறை செலுத்தும் என்று நம்புகின்றேன். 2. இன ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது இந்த அரசின் முன்னுள்ள பிறிதொரு முக்கிய சவாலாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாட்டில் மேலோங்கிவந்த இனவாதமும், இனமுரண்பாடும், மோதல்களும், பிரிவினைவாத யுத்தமும் இன்றைய இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கு பிரதானமான காரணிகளாகும் என்பதைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். நீண்ட கால இனப்பாகுபாடும், முரண்பாடுகளும், முப்பது ஆண்டுகால யுத்தமும் சிறுபான்மை மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்களை மாற்ற இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி, குறிப்பாக அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இனவாதத்துக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் அதிகம் பேசினார். வட கிழக்குத் தமிழ் மக்கள் உட்பட இலங்கை முழுவதிலும் வாழும் அனைத்துச் சிறுபான்மை மக்களும் அவர்மீது நம்பிக்கை வைத்து பெருமளவில் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. இலங்கையின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவத்தையும், பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, தாங்கள் அன்னியப்படுத்தப்பட்டவர்கள் என்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகாதவகையில் அவர்களையும் அரசியலில் பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தாத வரையில் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசு செயலில் காட்டவேண்டும். இது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை நான் இங்கு சுட்டிக்காட்டலாம். 1. வட கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்றுதல் அல்லது மட்டுப்படுத்துதல். 2. ராணுவம் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை விடுவித்தல். 3. காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்த்துவைத்தல். 4. அகதிகளின் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தல். 5. சட்டபூர்வமற்ற குடியேற்றங்களைத் தடுத்தல் 6. ஆட்சிமொழிச் சட்டத்தை நாடுமுழுவதிலும் சரியாக அமுல்படுத்துதல் 7. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு /மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துதல் 8. பாராபட்சமற்ற தொழில்வாய்ப்பு. அரச தனியார் தொழில் வாய்ப்புகளில் இனவிகிதாசாரத்தைப் பேணுதல் 9. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல். 3. 1994 ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து, கோட்டாபாய ராஜபக்ச தவிர்ந்த, எல்லா வேட்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், பதவிக்கு வந்தபின் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கவும், ஆட்சிக்காலத்தை நீடிக்கவும் முயன்றார்களே தவிர, அதை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது “இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல்“ என்று கூறியிருக்கின்றார். தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் அடுத்த தேர்தல் பாராளுமன்றத் தேர்தலாக இருக்கவேண்டுமே தவிர ஜனாதிபதி தேர்தலாக இருக்கக் கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவுக்குவரமுன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையற்ற, ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்ற, இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற, மக்கள் நல அரசை உருவாக்குகின்ற ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம். ஏற்கனவே 2000, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் புதிய யாப்புத் திருத்தத்துக்கான யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வது அவசியமாகும். 4. ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் கவர்ச்சிகரமான ஒரு தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. பழம்பெரும் அரசியல் வாதிகளின் பாரிய ஊழல் மோசடிகள் பற்றியே அவர்கள் அதிகம் பேசினார்கள். அவற்றைக் கண்டுபிடித்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்தான். ஆனால், லஞ்சமும், ஊழலும் அரச நிருவாகத்தின் எல்லா மட்டங்களிலும் ஆழ வேரோடி உள்ளது. அதை அகற்றுவதற்கான, அல்லது மட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது முக்கியமானது. இந்த ஆட்சிக்காலத்தில் அது செயற்பட வேண்டும். இலங்கை உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் வரிசையைவிட்டு, ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் சேரும் காலம் விரைவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 5. பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் பற்றி ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சுவையாகப் பேசினார். பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் என்பது ஊழல் மிகுந்த பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய அரசியல்வாதிகளால் பாராளுமன்றத்தை நிரப்புவது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதியவர்களும் பழையவர்கள்போல் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளாக ஆகமுடியாத, சட்டபூர்வமான ஒரு புதிய சூழலை உருவாக்குவதாகவே அது இருக்கவேண்டும். தொழில்ரீதியான அரசியல்வாதிகள் (Professional Politicians) உருவாக முடியாத ஒரு சூழலை உருவாக்குவது அதன் பொருளாக இருக்கவேண்டும். வேறு தொழில் எதுவும் இல்லாது, அல்லது தனது தொழிலைக் கைவிட்டு, பாராளுமன்றப் பதவியையே தன் வாழ்நாள் தொழிலாகக் கொள்பவர்தான் தொழிலரீதியான அரசியல்வாதி எனப்படுகிறார். பின்னர், அது அவருடைய குடும்ப உரிமையாகிறது. அது அவர்கள் சொத்துக் குவிப்பதற்கான வாயிலாகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட தொழில் ரீதியான அரசியல்வாதி பிரச்சினைக்கு உரியவர்தான். தொழில் ரீதியான அரசியல்வாதிகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம், வயது, கல்வித்தகைமை என்பன பற்றி சட்டரீதியான வரையறைகள் வேண்டும். தங்களைப் பாதிக்கும் சட்டரீதியான இத்தகைய வரையறைகளைச் செய்ய பதவியிலுள்ள எந்த அரசாங்கமும் முன்வருமா என்பது ஐயத்துக்குரியது. இவற்றை மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தைச் சுத்திகரிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதுதான். அடுத்துவரும் ஐந்தாண்டு காலத்துள் நல்லது நடக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு By Nuhman Mohamed https://www.facebook.com/share/p/14shYgdhRe/?mibextid=WC7FNe
  40. அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.
  41. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  42. சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.
  43. ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது. (இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)
  44. கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
  45. ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.