Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்21Points19122Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8907Posts -
யாயினி
கருத்துக்கள உறவுகள்6Points10209Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்5Points1569Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/01/24 in Posts
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் இனவாதிகளிடமிருந்து வேறுபட்டவராக, மேம்பட்டவராக, முற்போக்குச் சிந்தனையுடையவராக நம்பியிருந்தனர். ஆனால் தானும் மற்றைய சிங்கள பெளத்த இனவாதிகளைப் போன்றே தமிழர்களின் நலன்களுக்கெதிரானவர்தான் என்பதை அவர் நிரூபித்தார். நல்லாட்சி அரசின் ஜனாதிபதியுடனான ரணிலின் பலப்போட்டி அவரை ஈற்றில் பிரதமர் எனும் பதவியிலிருந்து தூக்கியெறிந்ததுடன், 2018 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் தெற்கின் இனவாதிகளின் தலைவனும், இலட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலையின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்ஷவிடம் அப்பதவி கொடுக்கபட வழியமைத்துக் கொடுத்தது. ஆனால் நான்கு வருடங்களின் பின்னர் கொத்தாபய மற்றும் மகிந்தவின் காட்டாசியினால் களைப்படைந்த மக்கள் அவர்களைத் தூக்கியெறிய, அவர்களின் செல்லப்பிராணியான ரணில் மடியில் நாட்டின் ஜனாதிபதியெனும் பொறுப்பு வந்து வீழ்ந்தது. ரணிலினதும், மைத்திரியினதும் பொதுவான குணவியல்புகள் என்னவென்றால் தம்மை எத்தனை தூரத்திற்கு முற்போக்குச் சிந்தனைவாதிகள் என்று அவர்கள் காட்டிக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க முனைந்தாலும் , தாமும் ஏனையவர்களைப்போன்றே அதே சிங்கள பெளத்த பேரினவாத முகாமிலிருந்து வருபவர்கள் தான் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை. ரணில் ஜனாதிபதியாக வலம்வந்த காலத்திலும் நாட்டின் மிகவும் முக்கியமான இனப்பிரச்சினைக்கான தீர்வினை அவர் வழங்கவோ அல்லது அது தொடர்பான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தவோ அவர் சற்றேனும் விரும்பவில்லை. இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மிக எளிதாக அவர் புறங்கையினால் தட்டிவிட்டுச் சென்றார். இவை எல்லாவற்றையும் அவர் தனது ஆட்சியைப் பாதுகாக்கவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளைப் பாதுகாப்பதற்காவுமே செய்தார். இவரது அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்ட ஈழத் தமிழர்களும், சர்வதேச சமூகமும் செய்ததெல்லாம் இவர்மீதான அழுத்தங்களைப் பின்னுக்குத் தள்ளி, அவற்றால் உருவாகக் கூடிய விளைவுகளைத் தடுத்துவிட்டது மட்டும்தான். சர்வதேசத்திலிருந்து தனக்குக் கிடைத்த ஆதரவினைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்குவதற்குப் பதிலாக இனப்பிரச்சினை உருவாகக் காரணமாகவிருந்த அதே பேரினவாதச் சிந்தனைகளை அவர் முன்னெடுத்து வந்தார். 2015 ஆம் ஆண்டின் நல்லாட்சிக்கும் இன்றைய அநுரவின் ஆட்சிக்குமிடையிலான ஒற்றுமைகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. ஆனால் இந்த நச்சுச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வர அநுரவிற்கு இன்னும் காலம் இருக்கிறது. இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அவரது கட்சியால் காத்திரமான மாற்றங்களைச் செய்யும் அரசியற் பலம் இருக்கிறது. இதனைச் செய்து தன்னை நியாயமானவர் என்று நிரூபிக்கும் சுமை அவரிடம் ஏற்றப்பட்டிருக்கிறது. பேச்சுக்களில் மட்டுமே நின்றுவிடாது காத்திரமான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஆணைக்குழுக்களை, அடையாளத்திற்கான அமைப்புக்களை உருவாக்கி அவர் காலம் கடத்துவாராகில் அவரும் அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஏனைய பேரினவாதிகள் போன்றவர்தான் என்பதை மக்களுக்குக் காட்டப்போகின்றது. அவரது முன்னோடிகள் போல இவராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படவிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அநுரவினால் நிச்சயமாக தேவையான மாற்றங்களைச் செய்யமுடியும், அதற்கான அரசியட்பலமும் அவருக்கு இருக்கிறது. அவரது ஆட்சியின் ஆரம்பநாட்களில்த்தான் நாம் இன்னமும் நின்றுகொண்டிருக்கிறோம். ஆனாலும் அவரது ஆட்சி மற்றையவர்களினதைக் காட்டிலும் வேறுபட்டது என்று நம்புவதற்கான காரணங்களை அவர் இன்னமும் வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அவரது ஜனாதிபதி தேர்தல்ப் பிரச்சாரத்தின்போது அவர் வெளியிட்ட போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன், பெளத்த மதத்திற்கும் புத்த சாசனத்திற்கு அதியுயர் முன்னுரிமை வழங்குவேன் என்ற வாக்குறுதிகள் இன்னமும் தமிழ் மக்களின் காதுகளில் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. பதவிக்கு வருமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்துப் பேசிவந்த அநுரவின் அரசு இன்றோ அதிலிருந்து பின்வாங்கி வருகிறது. சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராகவே அதிகளவு பாவிக்கப்படும் இச்சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதனைச் சரியான வழியில் பாவிப்போம் என்று அநுரவின் தோழர்கள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் பல போர்க்குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்று சர்வதேசத்தால் அடையாளம் காணப்பட்ட பல போர்க்குற்றவாளிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருந்தோ அல்லது அதன் தூதரகங்களில் இருந்தோ மீளப்பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக மேலும் பல போர்க்குற்றவாளிகளை அவரது அரசு அரவணைத்து வருவதுடன் புதிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்க்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவினாலும் இன்னும் சில மேற்குநாடுகளினாலும் போர்க்குற்றவாளி என்று கண்டறியப்பட்டு பயணத் தடைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சவேந்திர சில்வா உள்ளிட்ட பேர்போன போர்க்குற்றவாளிகள் அநுரவின் அரச விழாக்களிலும், வைபவங்களிலும் தொடர்ச்சியாக அழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒரு அபாயகரமான, கவலைதரக்கூடிய ஆரம்பம் என்றுதான் படுகிறது. தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்குமான படிப்பினை தமிழர்களைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடம் மிகவும் தெளிவானது. வெற்று வாக்குறுதிகளும், அரசியல் நாடக மேடைகளும் ஒருபோதுமே காத்திரமான விளைவுகளைத் தராது. ஒருவரின் முன்னைய செயற்பாடுகளின் அடிப்படையில் அவர் குறித்து சந்தேகம் கொள்வதற்கும் அவரை தவறானவர் என்று கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குவதற்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாகப் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்ட பின்னணியில்த்தான் தமிழர்கள் சந்தேகம் கொண்டு இன்றைய அரசியலை அவதானிக்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். சிங்கள ஜனாதிபதியொருவர் தமிழர்களுக்கான நீதியினை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனும் ஆண்டாண்டு கால ஒடுக்குமுறையினூடான அநுபவத்தின் படிப்பினையினை 2105 இல் தமிழர்கள் மீண்டும் கற்றுக்கொண்டார்கள் அல்லது நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஆகவேதான் சிங்களவர்களிடமிருந்து வரும் இன்னுமொரு ஆட்சித்தலைமை மீது தமிழர்கள் மிக அவதானமான சந்தேகங்களைக் கொண்டிருக்கிறார்கள், கேள்விகளைக் கேட்கிறார்கள். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள், வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவ விலக்கு, சுய நிர்ணய உரிமை என்று பலவிடயங்கள் குறித்து அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் அநுர அரசின்மீது வைக்கப்படுகின்றன. சர்வதேசச் சமூகத்தைப்பொறுத்தவரை 2015 இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசு மீது அவர்கள் வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் வழிமுறை மாற்றப்படவேண்டும் என்பதையே அவர்களுக்கு உணர்த்தி நிற்கின்றது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் மேடைகளில் அள்ளிவீசப்பட்டும் பொய் வாக்குறுதிகளை அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதை அவர்கள் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். சர்வதேச பொறிமுறை ஒன்றினூடான விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள் என்பது சமரசமின்றி மையப்படுத்தப்பட்டு, இதனோடு இணைந்த ஏனைய அவசியமான விடயங்கள் குறித்த செயற்பாடுகளுக்கான அழுத்தம் கொடுக்கப்படுதல் முக்கியமானது. சர்வதேசத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பும், அழுத்தமும் இல்லாமற்ப் போகுமிடத்து தம்மை எவ்வளவு தூரத்திற்கு முன்னோடிகளாக, மாற்றுச் சிந்தனையாளர்களாக, மாற்றத்திற்கான அடிக்கற்கலாக காட்டிக்கொண்டு எந்தச் சிங்களத் தலைமை ஆட்சிக்கு வந்தாலும் அதனால் பெறப்படும் நண்மை எதுவும் இல்லையென்பதை சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆட்சிக்கு வரும் எவரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, அவர்களுடன் நல்லிணக்கத்தை வளர்த்துக்கொள்வதனூடாக போர்க்குற்றவாளிகளையும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளையும் மேலும் மேலும் பலப்படுத்தி பொறுப்புக்கூறலில் இருந்து விலக்களிப்பதுதான் சர்வதேசம் செய்யப்போகிறது, இதனையே 2015 இலும் அது செய்தது. இது உண்மையான செயற்பாடுகளுக்கான தருணமே அன்றி வெற்று வாக்குறுதிகளுக்கானது அல்ல. மீண்டும் மீண்டும் தவறுகள் நடக்க அனுமதிக்கப்படுமிடத்து அதன் விளைவுகள் முன்னையதைக் காட்டிலும் பாரதூரமாகவே இருக்கப்போகின்றது. முற்றும் நன்றி: கலாநிதி துஷியன் நந்தகுமார் தமிழ் கார்டியன் இணையத்தளம்4 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் வாக்குகளைப் பிரித்து விட்டால், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதகமான NPP வென்று விடலாம் என்று நான் சொன்ன போது, "அவர்கள் ஆட்சிக்கு வந்து பொருளாதாரம் சரிந்தால் நமக்கென்ன? இப்போது இருப்போரை விட அவர்கள் மோசமானவர்களா நாம் எதையும் இழப்பதற்கு?" என்று கேட்ட ரஞ்சித்தே இன்று ஜேவிபி யின் ஆபத்துகளைப் பற்றித் தேர்வு செய்த கட்டுரைகளை இணைப்பது காலம் எவ்வளவு மாறி விட்டதெனக் காட்டுகிறது. ஏனெனில், புலத்தில் இருக்கும் தீவிர தமிழ் தேசியர்கள் பலர் எதிர்பார்க்காத ஒரு புதிய வகையான ஆபத்து அனுர அரசிடமிருந்து வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தேர்ந்தெடுத்த சில பிரச்சினைகளை அவர்கள் உணரக் கூடிய வகையில் தீர்ப்பதன் மூலம், அனுர அரசை நோக்கி ஒரு soft corner ஐ உருவாக்குவது. அந்த நட்புணர்வை வைத்து தீவிர தேசியம் மட்டுமல்ல, தீ கக்காத தேசிய உணர்வின் பக்கமிருந்து கூட தமிழர்களை இழுத்தெடுப்பது, என இந்த மென் முயற்சிகள் தான் அந்த ஆபத்து. வடமாராட்சியில், யுத்த காலத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவர் இப்படித் தான் மக்கள் "அங்கிள்" என்று அழைக்கக் கூடிய வகையில் மக்களோடு நட்பாக இருந்தாராம். "இதயத்தை வெல்லுதல்" என்ற புதிய அணுகுமுறையைக் கைக்கொண்ட அந்த சிங்கள அதிகாரி மாற்றலாகிச் செல்லும் வழியில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப் பட்டார். தமிழ் மக்களின் சில பிரச்சினைகளை கொஞ்சம் பரிவோடு ஒரு சிங்களத் தரப்பு அணுகினாலே தமிழ் மக்களின் தரப்பில் இருக்கும் தீவிர தரப்பிற்கு தங்கள் இருப்புப் பறிபோய் விடுமென்ற அச்சம் வந்து விடும். இந்த அச்சத்தையும், படபடப்பையும் மேலே இருக்கும் கட்டுரையிலும், யாழுக்கு வெளியே கேள்விப் படும் உரையாடல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, நேற்று உள்ளூர் மாவீரர் தினம் இங்கே. இந்த தேர்தலைப் பற்றியும், தமக்கு உவப்பானோர் பலர் ஓரங்கட்டப் பட்டதைப் பற்றியும் விரக்தியோடு பேசினார்கள். அச்சம் அப்படியே வெளித்தெரிந்தது - palpable fear!3 points
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மிக மோசமாக இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனவாதத்துக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள் அண்ணை. பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து போகலாம் மக்கள் ஆதரவு இருப்பின். கியூபெக்கிலும் இதுவே நிலமை. ஆனால் இலங்கையில் ஒரு பா உ, பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து பாராளுமன்றின் உள்ளே கூட இதை பேச முடியாது. முடிந்தால் 6 ம் திருத்தத்தை நீக்கி விட்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம். பிரிந்து போகும் உரிமை கூட அல்ல, எமது மண்ணில் எம்மை நாமே ஆளவேண்டும் என்பதில், 13 ஐ முற்றாக அமல்படுத்துங்கள் என கோருவதில் எந்த உணர்சி அரசியலும் இல்லை. அதே போல் அரசியல் தலைவரின் படத்தை தரவேற்றுவது உணர்சி அரசியல் என்றால் - ரோகண விஜேவீரா படத்தை ஏற்றுவோரும் கைதால வேண்டும்.3 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்? 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியபோது தமக்கான விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணித் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அவர்களை தமது மீட்பர்களாக ஏற்றுக் கொண்டாடியமைக்கும் இன்று அநுர அரசைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கும் இடையே மிகவும் அபாயகரமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று இலங்கை அரசியலின் முன்னைய இருள்படிந்த அத்தியாயங்களிலிருந்து தம்மை முழுமையாக வெளியேற்றிக்கொண்டவர்களாக மைத்திரி ரணிலின் கூட்டணி அரசாங்கம் காட்டிக்கொண்டு மக்களின் முன்னால் வந்தது. இனவாதத்தைக் களைவதாகவும், புதியனவற்றை உள்வாங்கி முன்மாதிரியான ஆட்சியை வழங்குவதாகவும், நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகவும்,ஈழத் தமிழர்கள் உட்பட எல்லோருக்குமான நீதியை வழங்கப்போவதாகவும் அது உறுதியளித்திருந்தது. இதனையடுத்து இந்த நல்லிணக்க அரசாங்கம் தான் உறுதியளித்ததன்படி போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கினை நீக்கிவிடும், இறுதிக்கட்டப்போரில் நடந்த போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி, தண்டித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியினை வழங்கும், தமிழர்களின் நீண்டகால அரசியல்ப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கும் என்கிற நம்பிக்கையில் அன்று தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தம்மைக் காட்டிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேசமும் நல்லிணக்க அரசாங்கத்தை நிபந்தனையின்றி ஆதரவளிக்கும் முடிவினை எடுத்திருந்தன. ஆனால் அந்த நம்பிக்கைகள் எல்லாம் இறுதியில்ல் முற்றாகவே இல்லாதொழிக்கப்பட்டு சுவடுகளும் தெரியாமல் அழிந்துபோயின. கீழ்நோக்கிய நச்சுச் சுழற்சி தாம் எல்லாவற்றையும் தருவோம் என்று ஆட்சிப்பீடம் ஏறிய ரணில் மைத்திரி நல்லாட்சி எந்தவகையான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவோம், வடக்குக் கிழக்கை இராணுவ நீக்கம் செய்வோம், தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே மீளவும் வழங்குவோம், போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வழங்குவோம் என்று அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் சிறிது சிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு ஈற்றில் முற்றாகவே கைவிடப்பட்டுப் போயின. ஆனால் அந்த அரசாங்கம் மீது உள்ளூரிலும், சர்வதேசத்திலும் பெரும் எடுப்புடன் வளர்க்கப்பட்ட நற்பெயரை தனக்கெதிரான விமர்சனங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகவும், தான் செய்யப்போவதாக உறுதியளித்த விடயங்களைச் செய்யாது, இனப்பிரச்சினையில் பங்குகொண்ட இனங்களுக்கிடையிலான சமரசத்தையும், நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகிறோம் என்று கூறிக் கூறிக் காலத்தை விரயமாக்குவதற்காகவும் மட்டுமே பாவித்தது. 2015 இல் ஆட்சிக்கு வந்தவுடன் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையத்துடன் இணைந்து இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான தீர்மானத்தைச் சேர்ந்தே நிறைவேற்றியது, அல்லது அணுசரணை அளித்தது. யுத்தக் குற்றங்களை விசாரிப்பது தொடர்பான மனிதவுரிமைச் சபையின் தீர்மானத்தை நல்லாட்சி அரசு ஏற்றுக்கொண்டபோது அதனை மிகவும் தாராளமான, முன்னேற்றகரமான ஒரு படி என்றே சர்வதேசம் நம்பியது. ஆனால் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் தலைவர் சயிட் ராட் அல் ஹுஸ்ஸெயின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவது அவசியம் என்று கோரியபோது, நல்லாட்சி அரசாங்கம் அதனை நிராகரித்த தருணத்தில் அதுவரை அது தான் செய்வதாகக் கூறிய அனைத்து வாக்குறுதிகளுமே பொய்யானவை என்பது நிரூபணமாகியது. யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலினை உறுதிப்படுத்துவதற்கான நேர்மையான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்குப் பதிலாக காலத்தைக் கடத்தும் நோக்கில் காணாமலாக்கப்பட்டோரைத் தேடும் அமைப்பு எனும் பெயரில் மீண்டும் மீண்டும் தோற்றுப்போன உள்ளூர்ப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கியது. ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடித் தாருங்கள், கொல்லப்பட்டு விட்டால் அதுகுறித்த தகவல்களையாவது தாருங்கள் என்று இரைஞ்சிக் கொண்டிருக்கும் வேளை, அதனைச் சரிசெய்கிறோம் என்ற கோசத்தோடு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் காணமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆணைக்குழு நம்பகத்தன்மையினை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அரசியல் தலையீடுகளினால் சுயமாகச் செயற்படும் சுதந்திரத்தையும் அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இழந்துவிட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவை ரணில் - மைத்திரி அரசு உருவாக்கியதன் நோக்கமே சர்வதேசத்திலிருந்து வரும் அழுத்தங்களை மழுங்கடிக்கவும், தமக்கான கால அவகாசத்தை நீட்டித்துக்கொண்டு கறைபடிந்த அரசியலைத் தொடரவும்தான். இதில் வேதனை என்னவென்றால் இந்த ஆணைக்குழு உண்மையாகவே தமக்கான நீதியைப் பெற்றுத்தரும், காணமலாக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கையில் இதன் பின்னால் மன்றாடியபடி சென்ற தமிழ் மக்களின் பரிதாபகரமான ஏமாற்றம்தான். தமிழ் மக்கள் நீண்டகாலமாகக் கோரிவரும் சர்வதேசத் தலையீட்டுடனான விசாரணைகளைப் புறந்தள்ளி, உள்ளூர் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே தம்மால் எதனையும் செய்வது குறித்துச் சிந்திக்க முடியும் என்று பிடிவாதமாக நின்ற நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களுக்கான விசாரணையினையோ அல்லது அதற்கான நீதியையோ வழங்க எந்தப் பொறிமுறையினையும் பாவிக்க விரும்பாது ஈற்றில் கைகழுவி விட்டது என்பதே உண்மை. தனது ஆட்சிக்காலத்தின் முடிவில் தமிழரின் அவலங்கள் குறித்த எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது, தன்மீது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வைக்கப்பட்ட நம்பிக்கைகளைச் சிதறடித்து காலத்தை வீணடித்துச் சென்றது நல்லாட்சி அரசு. அதுமட்டுமல்லாமல் நல்லாட்சி என்கிற போர்வைக்குள் ஒளிந்திருந்த அதே பழைய பேரினவாதிகள் ஆட்சி கவிழ்ந்தபோது மீண்டும் தமது இனவாத முகங்களை மிக எளிதாக மக்கள் முன் காட்டிக்கொண்டு வெளியே வந்து, தமக்கு முன்னால் ஆட்சிபுரிந்த சிங்களப் பேரினவாதிகளுக்கும் தமக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் ஜனாதிபதியாக நல்லாட்சி அரசில் பணியாற்றிய மைத்திரிபால சிறிசேன தன்னை சிங்கள பெளத்த ஜனாதிபதி எனும் நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் விலக்கிக் கொள்ளவில்லை என்பதுதான். அதனாலேயே ரணிலுடனான முறிவின்போது மிக எளிதாக அவரால் தனது அதே சிங்களப் பேரினவாத முகத்தை மக்கள் முன் காட்டக் கூடியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் வெளியே வந்து பேசிய மைத்திரி, போர்க்குற்ற விசாரணைகள் என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனக்கொலை என்று தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பகிரங்காமாக அறிவித்தார். இத்தனைக்கும் அவரது நல்லாட்சி அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து போர்க்குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் ஒன்றினை உருவாக்க வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. எந்தச் சிங்கள பெளத்த இனவாதிகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தமிழ் மக்களின் அவலங்களுக்கான நீதியினைப் பெற்றுக் கொடுப்பார் என்று நம்பி ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவினைத் தேர்தலில் பெற்றுக்கொண்டும், சர்வதேசத்தின் முற்றான நம்பிக்கையினை பின்புலமகாகக் கொண்டும் ஆட்சிக்கு வந்தாரோ, அதையெல்லாவற்றையும் மிக எளிதாகத் தூக்கி எறிந்துவிட்டு மைத்திரியால் அதே சிங்கள பெளத்த இனவாதிகளின் கூடாரத்தில் இயல்பாகவே சென்று இணைந்துகொள்ள முடிந்தது. அவரது ஆட்சியின் கீழ் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன, அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல்கள் போன்றவை முற்றாகக் கைவிடப்பட்டன. தமிழர் தாயகம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும் வழமைபோன்றே அதிகாரத்துடன் நிலைநாட்டப்பட்டுத் தொடரலாயிற்று. மைத்திரியின் இந்தக் குத்துக்கரணத்தினால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டன. நல்லாட்சி அரசின் வருகையோடு பின்னுக்குத் தள்ளப்பட்ட பல சிங்களப் பேரினவாததிகள் மீண்டும் தலையெடுக்க வழி திறக்கப்பட்டது. இந்த இனவாதிகளின் மீள்வருகையோடு, சிங்களப் பெளத்த பேரினவாதத்தின் நவீன தந்தையர்களான ராஜபக்ஷே சகோதரர்கள் 2019 இல் பேரெழுச்சியுடன் ஆட்சிப்பீடம் ஏறவும் மைத்திரியின் நடவடிக்கைகள் வழிசமைத்துக் கொடுத்தன. தொடரும்...............2 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அது கொள்கையை மக்கள் நிராகதித்தமை அல்ல. ஜனாதிபதி தேர்தலில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என மக்கள் நினைக்கவில்லை. அத்தோடு தமிழரசு கட்சி அதை ஆதரிக்கவில்லை. இப்படியான நிலையில் இந்த மாதிரி ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியா, பிழையா என யாழில் நான் கேள்வி எழுப்பி - அப்படி நிறுத்தின் எல்லோரும் உடன்பட்டு நிறுத்த வேண்டும் என்று எழுதினேன். அதன் பின் வரவில்லை, ஆனால் @நிழலி தொடர்ந்து இது எதிர்மறையான விழைவைதரும் என எழுதினார். அதுதான் நடந்தது. சின்ன வயதில் படித்த ஒற்றுமை அற்ற எருதுகளின் கதைதான். நாம் ஒற்றுமையாக ஒரே அணியில் திரளாதவரை, வாக்குப்பலமும், செயல்பலமும், சிதறிக்கொண்டே இருக்கும்.2 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அனுப்புவம் என்று கட்ச்சி தொடங்கினால்( சும்மா ஒரு கற்படபனைக்கு சாத்தியம் எனடால்) அனுராவும் இல்லை தேசியம் பேசும் கட்ச்சிகளும் கட்டுக்காசு கூடக் கிடைக்காது.2 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நீங்கள் என்னை நோக்கி எழுதவில்லை என்பதை ஊகித்தே இருந்தேன். ஆனால் 75 வருடமாக சுயநிர்ண கோரிக்கையை போட்டடித்த படியால் இனி அதை கேட்ட கூடாது என்பது தர்க ரீதியான நிலைப்பாடாக எனக்கு தெரியவில்லை. ஒரு காலம் இருந்தது 2009 இன் பின்னர் கூட பல புலம்பெயர் ஆட்கள் தனி நாட்டு கனவில் இருந்தார்கள். ஆனால் இப்போ அவர்களே எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு, அனுர சரணம் கச்சாமி என்று பாடுகிறார்கள். ஆனால் 2024 தேர்தலிலும், எமது மக்கள் சுயநிர்ணயம் கோரும் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் பெரும்பான்மை வாக்கை அளித்துள்ளனர். வாக்குகள் சிதறின என்பதுதான் உண்மை. மக்கள், நீங்கள் இப்போ உந்திதள்ளும், அனுரவின் ஈரச்சாக்கு இலங்கை தேசியம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தே வாக்களித்துள்ளனர். இதைதான் மேலே கட்டுரை சொல்கிறது. நிலமை இப்படி இருக்க, உங்கள் நிலைப்பாடு ஊரில் உள்ள மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேடானாதாகவும் எனக்கு படுகிறது.2 points
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அனுராவின் பிளான் இது தான். இப்போதைக்கு தமிழ் இனப்பிரச்னை பற்றி கதைக்காமல் விடுவது, அல்லது இதே போக்கில் இன்னும் 4 வருடங்களுக்கு இழுத்தடிப்பது. அதே நேரத்தில் ஏனைய மக்கள் பிரச்சனைகளைக் கையாளும் விஷயத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது.இப்படியே நாளைக் கடத்தி தமிழ் மக்களின் இனப் பிரச்னை குறித்த கொதிக்கும் மனப்பாங்கினை ஓரளவுக்கு குளிர் நிலைக்கு கொண்டு வருவது. பின்னர் சிங்கள மக்களும் விரும்பும் தீர்வை வழங்குவது. 83 ம் ஆண்டில் பிரச்சனையை பார்த்த தமிழ் மக்களின் பெரும் எண்ணிக்கை 2014 இல் 70 வயதைக் கடந்து இருக்கும். புதிய தலைமுறை தமிழர்களிடம் பழைய தலைமுறைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு இல்லை. கிட்டத்தட்ட கொழும்பு தமிழ் லிபரலுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம் போல..2 points
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜேவிபி…. இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும். இது ஆரூடம் இல்லை. பட்டறிவு. நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும். இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும். அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.2 points
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
வசந்த முதலிகேயையும் மக்கள் விடுதலை முன்னணியையும் வேறு வேறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன இங்கு. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் , சிங்களத்தில் அந்தரே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மாணவர் அமைப்பின் பின்னால் இருப்பதே மக்கள் விடுதலை முன்னணி தான். சரி, விடயத்திற்கு வரலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்தார், சரி. இன்று நடப்பது அவரது மாணவர் அமைப்பின் பின்னால் இருக்கும் அரசுதானே? ஏன் நேரடியாக அரசிடமே இதனை நீக்குங்கள் என்று அவர் கேட்கக் கூடாது? ஆக, அவர் அன்றைக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் செயற்படும் தனது அமைப்பிற்கெதிராக ரணிலும், ராஜபக்சேக்களும் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் இன்றோ நிலைமை வேறு, தனது கட்சியே ஆட்சியில் இருக்கிறது, ஆகவே தடைச் சட்டத்தை நீக்கவேண்டிய தேவை அவருக்கில்லை, ஆகவே அவர் அதுகுறித்து இனிமேல் பேசபோவதுமில்லை. அடுத்தது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் "உங்களின் பிரச்சினை வேறு எங்களின் பிரச்சினை வேறு" என்று கூறினார்களாம். சரி, தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றுவரை கூறும் கட்சியின் பின்புலத்தில் செயற்படும் வசந்தவிடம் வேறு எதைத்தான் யாழ் மாணவர்கள் கூறுவது? இவ்வளவு காலமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரினவாதிகளிடம் அடிபடும் பொழுது இவரோ, இவரது அமைப்போ அல்லது பின்னால் நின்று இயக்கும் கட்சியோ என்ன செய்தது? ஆக தமக்கு அடிவிழும்போது, தம்மீது தடைச் சட்டம் பாயும்போது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அடையாளம் துறந்து இலங்கையர்களாக மாறுவோம், சிங்களத் தேசியத்திற்குள் இணைவோம் என்று கூப்பாடு போடுவோர் தாங்கள் தமிழர் இல்லை, தமக்கென்று தனித்துவமான அடையாளம் இல்லை, தமக்கென்று தனியான கலாசாரமும், தேசமும், பண்பாடும் இல்லை என்று வெளிப்படையாக இங்கே கூறிவிட்டு அதனைச் செய்யட்டும், மீதியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.2 points
-
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி!
இப்படியே உணர்ச்சி மிகு கட்டுரைகளை எழுதிக் கொண்டு தாமும் இன்பமடைந்து மக்களில் ஒரு சிறு பிரிவினரை ஏமாற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான். மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது தம் பிள்ளைகளை, சகோதரங்களை, நண்பர்களை, அவர் தம் தியாகங்களை மதிப்பதனால். அடுத்த வருடமும், இன்னும் பத்து வருடங்களின் பின்னும் மக்கள் இவ்வாறு அஞ்சலிப்பர். அதே நேரம் தமிழ் கட்சிகள், காத்திரமான முறையில் அரசியல் செய்யாது விடின், வடக்கில் இருந்து ஒரு சிங்களவரைக் கூட இதே தமிழ் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்ற த்திற்கோ மாகாணசபை க்கு அனுப்பி வைப்பர்.2 points
-
வணக்கம்
1 pointநான் இங்கே புதிதாக உறுப்பினராக இணைந்து இருக்கிறேன். ஆனாலும் யாழ் இணையத்துக்கு நான் பழையவன். இவள்ளவு நாளும் வெறும் ஒரு பார்வையாளனாக ஊர்புதினம் மற்றும் பல குழுக்களில் செய்திகளை வாசிப்பேன் நன்றி1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் முரண்பட முடியாது. ஆனால்…. இது உண்மையிலேயே தந்திரோபாயம் அல்ல. எழுதுபவகளின் குறைகளை விடுத்து விட்டு, அவர்களின் cherry picking ஐ தவிர்த்து விட்டு, அவர்கள் சொல்லும் விடயத்தினை மட்டும் அணுகுவதே நாம் செய்ய கூடியது என நினைக்கிறேன். அந்த விடயம் யாதெனில்… எல்லோரும் பிழை விட்டுள்ளார்கள், விட்டுள்ளோம். இதில் புலிகள் பிழை விட்டார்கள் என இவர்கள் சாகும் வரை ஏற்கப்போவதில்லை, அதை மீள, மீள சொல்லிக்கொண்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில் நிண்டு சுத்த வேண்டியதே. ஆகவேதான் அதை அப்படியே விட்டு விட்டு, ஒத்த கருத்துக்கள் மீது கவனம் வைக்கிறேன். நம்மை வேறுபடுத்தும் கருத்துக்களை மீள, மீள உரைக்கும் போது ஒன்றாக முன்பே போவது இயலாத காரியமாகிறது. யாழ் ஒரு சிறுதுளி. எம் இனத்தின் அரசியல் அதன் பெரிய ஸ்கேல்.1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் இருக்கும் ஒரு கடும்போக்கு தமிழ் இனவாதி அநுரா வருவதை வரவேற்று தனது முகநூலில் எழுதியிருந்தார்.(முன்பு ஒரு பதிவில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்) அநுர ஐனதிபதியாக வந்தால் பாரிய அடக்குமுறைகளை தமிழ் மக்கள் மீது செய்வார். எமக்கும் அது தான் தேவை. தமிழீழம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தனது புதிய பாய்ச்சலைத் தொடங்கும் என்று அநுர தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளவார் என அக மகிழ்ந்திருந்தார். அதே ஆட்கள் இப்போது பதட்டப்படுகிறார்கள் முன்பு 2005 ல் ரணில் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் கிடைக்காது, மகிந்தவை கொண்டு வந்தால் அவருடன் யுத்தம் புரிந்து தமிழீழம் எடுக்கலாம் என்று மகிந்தவை கொண்டு வந்த பின்னர் பதட்டப்பட்டதைப் போலவே இப்போது இவர்கள்பதட்டப்படுகிறார்கள். (ஐயோ தெய்வக்குற்றம் புரிந்துவிட்டேனோ!😳 escape😂1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
இது புரிந்தால் குற்றம்???1 point
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
பாலஸ்தினியர்களுக்கு வந்தால் இரத்தம் தமிழர்களுக்கு வந்தால் சட்னியா?1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி. இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது @பாலபத்ர ஓணாண்டி @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன். இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார். எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
நன்றி சகோ உண்மையில் இது போன்ற கருத்துக்கள் என் போன்றவர்களை ஒதுங்குங்கள் என்பது தான். ஆனால் நான் இருப்பது என் இனத்திற்கு எவ்வளவு பலம் என்பதையும் நான் விலகுவது (நான் மற்றும் என்னைச் சார்ந்த அடுத்த அடுத்த தலைமுறை) எவ்வளவு பலவீனம் என்பதையும் தூர நோக்கோடு சிந்திப்பதால் மட்டுமே தொடர்கிறேன். மற்றும்படி என் வாழ்வில் இனம் சார்ந்த எனது செயற்பாடுகளால் எனக்கு மன நிம்மதியை தவிர இழப்பு பல கோடி பணம் மற்றும் மணித்துளிகள் மட்டுமே.. எனவே என் போன்றவர்களை தூக்க படாதபாடு படுபவர்கள் யாருக்கு நன்மை செய்ய விளைகிறார்கள்.??? தமிழருக்கா???1 point
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
சாருஜன் சண்முகநாதன் சதம் விளாசி அசத்தல்! December 1, 2024 03:09 pm 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி Sharjah இல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக Sharujan Shanmuganathan 102 ஒட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் AM Ghazanfar 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=1967001 point
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இப்போ இருக்கும் சட்டத்தை வைத்து, இப்போ பேசியதற்க்காக, விமல், சரத், உதயவை இன்றே கைது செய்யலாம். ஐ ஆம் வெயிட்டிங் அனுர.1 point
-
பதியம்
1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மிகச்சரியான கூற்று வசி. கீழே இருப்பது 2019 மாவீரர்நாள். கோட்ட அபய பதவிக்கு வந்த 10 நாளில் மக்கள் நினைவேந்தியது. எம் உறவுகளை நினைவுகூற எவரின் அனுமதிக்கும் எம் மக்கள் காத்து நின்றதில்லை. இதை அனுர அனுமதிக்கவும் இல்லை. அனுமதிக்காவிடினும் நடந்திருக்கும். இது ஏதோ புதுவிடயம் போல் சிலர் அனுரவுக்கு காவடி எடுக்கிறனர்.1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் நினைவு கூறுதலில் எந்த விதமான சட்டப்பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை படையினரை நினைவு கூறுவதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை, எதிர்க்க போவதுமில்லை, அது சாதாரண மனித பண்பு ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வலவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பற்றிய கடந்தகாலத்தினை மறந்து விடுவார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் தாம் சார்ந்தவர்களை நினைவு கூறுவதற்கும் மற்றவர்களின் அனுமதியினை கோரும் நிலையில் உள்ளார்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முனையும் தரப்பிடமிருந்து நியாயம் கிடைக்கும் என நம்பும் நிலையில் நாம் இருக்கின்றோம்.1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
மேலே நீங்கள் இல்லை, ஒரு போதும் இல்லை என கூறியவற்றை விட அறவே வாய்ப்பில்லை சிங்களவர் எமக்கு சுயாட்சி தர.1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இனப்பிரச்சனை இலங்கையில் உருவாகி 75 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தமிழர் சார்பில் அரச அடக்குமுறைக்கு எதிராக தலைமை வகித்தோரால் எதையும் உருப்படியாக செய்ய முடியவில்லை. தலைமுறை தலைமுறையாக இளம் குருத்துக்களை அவர்கள் வாழவேண்டிய தில் பலி கொடுத்து, மக்களை கல்வி, பொருளாதார ரீதியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பலவீனப்படுத்தியதை தவிர இந்த வரட்டு தேசியவாதிகளால் எதையும் சாதிக்க முடியவில்லை. பந்தி பந்தியாக வரட்டு தேசியவாதம் பேசி புலம்பும் பேர்வழிகளுக்கு நான் கூறிக்கொள்வது என்ன வென்றால், தாயகத்தில் தமிழ் மக்கள் பிள்ளைகளை பெறுவது போராடி அழிந்து போக அல்ல. உங்களுடைய பிள்ளைகளை எப்படி புலம் பெயர் நாடுகளில் படிப்பித்து சொகுசாக வளர்கக விரும்புகின்றீர்களோ அதே போன்ற ஆசை அவர்களுக்கும் உள்ளது. தாம் ஜாலியாக வாழ்ந்து கொண்டு தமது சந்திதியையும் அப்படி வாழ வைத்துக்கொண்டு மக்களை அறிவு ரீதியாக சிந்திக்க விடாது உணர்சசி வசப்படுத்தும் வரட்டு தேசிய கருத்துக்களை எழுதி தாம் இறப்பதற்குள் அடுத்த தலைமுறைக்கும் அள்ளி வைத்துவிட்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பில் பந்தி பத்தியாக விஷ கருத்துக்களை விதைக்கும் சுயநலமிகள் இதை சிந்திக்க வேண்டும். இல்லை இல்லை அவர்கள் சிந்திக்க போவதில்லை. தமது வாழ் நாள் முழுவதும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் மன நோயாளர்களாகவே இவர்கள் இருப்பார்கள். எனவே இந்த மன நோயாளர்களின் பத்தி எழுத்துகளை முற்றாக புறக்கணித்து காலத்துக்கு ஏற்ப தம்மை தகவமைத்துகொண்டு அறிவுசார் ரீதியில் புதிய தந்திரோங்களின் அடிப்படையில் தாமாக சிந்தித்து செல்வதே புதிய தமிழ் தலைமுறையினருக்கு இப்போது உள்ள வழி. இதன் மூலமே புதிய தலைமுறை இலங்கையில் தமது இருப்பை பாதுகாத்து எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்.1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
தமிழர் விடுதலை கூட்டணி 1977 ஆம். ஆண்டளவில். இந்த தமிழ் ஈழம் ஆயுதப் போராட்டம் மூலம் எடுக்கிறோம். என்று ஊர் ஊராக. மேடைக்கு மேடை பேசி அனைத்து இளைஞர்களையும். உணர்ச்சி வாசப்படுத்தினார்கள் ஆனால் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆயுதமேத்தி போராடவில்லை பயிற்சி எடுக்கவில்லை ஏன் இது உரிமைக்கான போராட்டம் தமிழ் ஈழப்போராட்டம். என்று கூட சொல்லவில்லை மாறாக பயங்கரவாதிகள் என்று சொல்லி உள்ளார்கள் 1977 இல். இவர்களை சிறைப்படுத்தியே இருக்க வேண்டும் இளைஞர்கள் ஆயுதமேத்தியிருக்க. வாய்ப்புகள் இல்லை 35 இலட்சம் மக்கள் 20 லட்சம் ஆக. குறைத்து இருக்காது மீண்டும் ஒரு உணர்வு போராட்டம் எற்பட்டு 10 லட்சம் மக்களாக மாற முடியாது உணர்வை தூண்டுவோர். கண்டிப்பாக கைது செய்யப்பட. வேண்டும் 🙏1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அனுர அரசினை இனவாதம் பேசாமல் ஆட்சிக்கு வந்த அரசு என சிறுபான்மையினரால் பார்க்கப்படும் அரசு, அதே சிறுபான்மையினரின் உரிமைகள், போர் குற்ற நீதி, சமூக நீதி என வரும் போது அப்போதும் இதே நிலை எடுத்தால் அனுர அரசு தனது முழு பதவிக்காலத்தினை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களையும் எவ்வாறு எதிர் கொள்ளமுடியும் என தெரியவில்லை, மக்கள் திருட்டு பூனை கண்ணை மூடி பாலை குடிப்பது போல இருக்க விரும்புவது யதார்த்தத்தினை எதிர்கொள்ள விரும்பாத நிலை அல்லது ஒரு நப்பாசை அவர்களுக்கு முழுமையான ஆட்சி காலத்தினை முடிக்கும் வரை இலவு காத்த கிளியாக இருக்க விரும்புவதற்கு தயாரக இருப்பதற்கு தடையாக அனுர அரசின் மீது உள்ள குறைபாடுகளை கூறுபவர்களை மூர்க்கமாக எதிர்க்க முற்படும் இந்த வகை தீக்கோழி ஆபத்து வரும் போது மணலுக்குள் தலையினை புதைப்பது போன்ற ஒரு வகை நடவடிக்கையாகும். ஆனால் அனுர அரசிற்கு இவ்வாறான எந்த நெருக்குதலும் இல்லை, அவர்கல் தமது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்ன்னமே தெளிவாக கூறிவிட்டார்கள்.1 point
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள் : அநுர அரசின் பதிலடி நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் சரத் வீரசேகர (Sarath Weerasekara) ஆகியோர் விமர்சித்திருந்தனர். அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் விஜித ஹேரத் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும் போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். இனவாதக் கருத்துக்கள் ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது. நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது. நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் அது காவல்துறையினரின் கடமையாகும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/anura-gov-responds-to-weerawansa-and-gammanpila-1733009767#google_vignette1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
இல்லை இதை இப்படி பாருங்கள்: 1. இந்த தாயை ஏன் அழைத்தனர்? 3 மாவீரரின் தாய் என்பதால் 2. அப்போ கெளரவம் யாருக்கு? தாய்கா அல்லது அந்த 3 மாவீரருக்கா? 3 மாவீரருக்கானது, அவர்கள் சார்பில் அந்த கெளரவத்தை தாய் பெறுகிறார். 3. அப்போ அவரை தக்க முறையில் விளக்கம் கொடுக்காமல் திருப்பி அனுப்பினால், இன்னும் மன்னிப்பு கேட்காமல் தெனாவெட்டாக இருந்தால் யாரின் தியாகம் உதாசீனப்படுத்த படுகிறது? அந்த 3 மாவீரரின் தியாகம். 4. இது மாவீரர் தியாகத்தை எப்படி சுயநலமாக கிள்ளு கீரை போல் சிறி பாவிக்கிறார் என்பதை காட்டி நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்படவேண்டியது. 5. டி டே நினைவு நிகழ்வுகளில் பிரான்சில் இருந்து அரைநாளில் ரிசி சுனாக் திரும்பினார். ஒட்டு மொத்த நாடும் அவரை போட்டு தாக்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்டும், தேர்தலில் தோற்க இதுவும் ஒரு காரணம் ஆகியது. தமக்காக அதி உட்ச தியாகத்தை செய்தோரை இப்படித்தான் ஒரு நாடு/இனம் நடத்த வேண்டும். இதில் மன்னிப்பே கேட்காமல் இருக்கும் சிறியின் தெனாவெட்டை வைத்து - மாவீரர் தியாகத்தை இவர் எப்படி நோக்குகிறார் என்பது புரிகிறது.1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
கூப்பிட்டது கல்யாணவீட்டுக்கல்ல கோசான் எம்மை முதன்மை படுத்தவில்லையென்று மனம் வருந்தவும் மன்னிப்பு கேட்கவும் அவமானமாக உணரவும். தன் உடல்தசையிலிருந்து பிரித்து எம்மை உருவாக்கிய தாய்க்கு தன் பிள்ளைகள் தன்கூட இல்லையே என்ற கவலைதான் முதலில் நிற்கும் முதல்மரியாதை தரவில்லையென்ற மனவேதனை முன்னணியில் நிற்காது. இந்த தாயும் நிச்சயமாக எதையும் எதிர்பாரா தாயாகத்தான் இருப்பா. எனக்கு தற்கால எந்த தமிழ் அரசியல்வாதிகளையும் பிடிக்காது என்றாலும், இது சிறிதரனுக்கு எதிரான யாரோ அந்த தாயை தூண்டிவிட்டு பேச வைத்ததுபோலிருக்கு.1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அருமையான கேள்வி. ஜே வி பி மனதார இந்த சட்டம் மோசமானது என காணில், 2/3 கூட தேவையில்லை, சாதாரண பெரும்பான்மையோடு ஒரு நாளில் சட்டத்தை ரத்து செய்யலாம். போர் முடிந்து 15 ஆண்டுகள் கழித்தும் இதை வைத்திருப்பது தமிழர்களின் சுயநிர்ணய குரல்களை மேலே செய்தது போல் நசுக்கவே. The most radical revolutionary will become a reactionary, the day after the revolution. மிகவும் முற்போக்கான புரட்சிவாதி, புரட்சியின் மறுநாள் பிற்போக்குவாதி ஆகிவிடுவான் என்கிறார் ஹனா அரெண்ட். ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.1 point
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
காலத்துக்கு தேவையான கட்டுரை ரஞ்சித். இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் உங்கள் கேள்விக்கான பதில். இல்லை. அதை விட பன்மடங்கு கூடிய கண்ணை குருடாக்கி கொண்டு நம்பும் நம்பிக்கையை அனுர மீது வைக்கிறார்கள். குறிப்பாக புலம்பெயர் தமிழர்.1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
உங்களுக்கு எப்படியோ தெரியாது… கூப்பிட்டு விட்டு முகத்திலடிப்பது போல் திருப்பி அனுப்பினால் அநேக தமிழர்கள் அதை ஒரு அவமானமாகவே கருதுவர். மூன்று பிள்ளைகளை கொடுத்தவர் நாம் அட்வைஸ் எடுக்கும் அளவுக்கு இருக்கமாட்டார்தானே? ஆனால் என்ன செய்வது, பிள்ளைகளை போலவே கொஞ்சம் ரோசம் உள்ளவர் இந்த அம்மா என நினைக்கிறேன். ஏற்பாட்டில் பிழை என்பதல்ல தவறு…. அழைப்பை வழங்கியவர்தான்…தான் அந்த அழைப்புக்கு பொறுப்பு. கூப்பிட முதல் சரிபார்த்திருக்க வேணும், அல்லது இந்த அம்மா வரும் போது சிறி வாசலில் நின்று வரவேற்று , நடந்ததை விளக்கி அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவருக்கு வேறு ஒரு கெளரவத்தை கொடுத்திருக்கலாம். எதையும் செய்யாமல் இவர் கூப்பிடுவாராம்…போனால் யாரோ திருப்பி அனுப்புவார்களாம்…இவர் எம் பி தோரணையில் அதை கண்டுகொள்ளாமல் ராஜபார்ட்டில் இருபாராம்…. இந்த டாம்பீகத்தையிம், சொறி சேட்டைகளையும் யாரும் வேலை தேடி வருவோர் பொறுத்து கொள்ளலாம்…. எல்லாரும் அப்படி இல்லை.1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு… ஊத்தி கொடுக்குறவன் பேச்சு இரவே போச்சு🤣1 point
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
சரியான கருத்துக்கள்.1 point
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
சுமா, தயவு செய்து இந்த பொய் பித்தலாட்ட கதைகள் வேண்டாம். 1. மட்டகளப்புக்கு ஒரு யாழ் எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும், 2. நுவரலியாவுக்கு ஒரு மட்டகளப்பு எம்பியை ஒருங்கிணைப்பாளராக போடுவதும் எவ்வளவு பிழையோ அதை ஒத்த பிழைதான் இதுவும். இது அதிகாரபரவலாக்கம், localism சம்பந்தமானது. மாகாண அதிகாரம், மாநில சுயாட்சி கூட கொடுக்க வேண்டாம்….அந்த மாவட்ட மக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பை அந்த மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மேற்கொள்வதே முறை. இது ஜனநாயகத்தின் அடிப்படை. டக்ளஸ், அங்கயன், விஜயகலா எல்லோரும் அந்த மாவட்ட மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள். சந்திரசேகரன் அப்படியல்ல. இது குறித்து எழுதுவது பிரதேசவாதம் அல்ல - குறித்த மாவட்ட மக்களை மட்டம் தட்டி, மலையக மக்களோடு அவர்களை கோத்து விடும் கீழான பேரினவாத அரசியலை வெளிக்காட்டுகிறோம் அவ்வளவே. முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை ஏன்? ஏன் என்றால் தகுதியான முஸ்லிம் எம்பிகள் என் பிப்பியில் இல்லை. அதே போல் யாழிலும் ஒரு தகுதியான என் பி பி எம்பி இல்லை? யாழ்மாவட்டத்தில் ஒரு முன்னாள் MS இருக்கிறார். அவரோடு ஒப்பீடு செய்தால் சந்திரசேகரனின் நிர்வாக அனுபவம் என்ன? ஏன் அவரை போட முடியாது? இதுதான் கேள்வி. எனக்கு தெரியும் பல வெள்ளை இனத்தவர் அனுரவை விட ஜனாதிபதியாக தகுதி உள்ளவர்கள் - ஏன் அவர்களை இலங்கை ஜனாதிபதியாக்குவதுதானே? டக்லஸ் வச்சிருந்த அதே சொப்பன சுந்தரி கடற்தொழில் அமைச்சுத்தான் இவருக்கும். யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்றால் துரையப்பாவையே குத்த விட்டிருக்கலாம் இல்லையா? நாம் ஒவ்வொருவரும் நாட்டிலும், வெளிநாட்டிலும் அரிசி முக்கியமா, அபிலாசை முக்கியமா என முடிவுக்கு வரவேண்டும். பெரும்பான்மையின் முடிவு அரிசிதான் எண்டால் சரி ஏற்கலாம். உண்மையிலேயே மேலே சந்திரசேகரனை நியமித்ததன் பின்னால் உள்ள பிரித்தாளும் தந்திரம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாளைக்கு ஹிஸ்புல்லாவை யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்கினால் அதையும் வரவேற்று, எதிர்ப்போரை மதவாதிகள் என்பீர்களா?1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
1 point
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அப்படி தமிழர்களின் சமஷ்டியை ஏற்று கொண்ட அவரை எதிர்த்த தமிழ் தேசியவாதிகள் ஜனதிபதி தேர்தலில் ஒற்றை ஆட்சி அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதில் இருந்து மாண்புமிகு ஜனாதிபதியின் கீழ் தமிழர்கள் எல்லாம் ஸ்ரீ லங்கனாக வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறார்கள்1 point
-
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி!
நான் அறிந்தவரை எதிரிகளின் கல்லறைகள் கொண்ட இடத்தினை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இறந்தவர்களுக்குரிய குறைந்த பட்ச மரியாதை செய்வதனை கூட விரும்பாத இனமாக எந்த இனமும் இருந்ததாக அறியவில்லை, ஆனால் இந்த சிங்கள இராணுவத்தினர் தமது மூதாதையர் மிருகத்திலிருந்து வந்தவர்கள் எனும் அவர்கள் மகாவம்ச கதையினை உண்மையாக முயல்கிறார்களோ என கருதுகிறேன்.1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
@பாலபத்ர ஓணாண்டி அதையேவெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்.. 🤣🤣🤣🤣🤣 👍1 point
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
நசுக்கிடாக்கள்ளனுக்கு உதாரணம் பார் சிறியன்.. தவறோ சரியோ சுமந்திரனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை இந்த பார் சிறியிடம் இல்லை.. எல்லா ஓட்டுமாட்டையும் பிளக்கில செய்திட்டு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள வார கள்ளன் பார் சிறி.. அதையே வெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்..1 point
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
காலங்கள் சிலரை கண்முன்னே அடையாளப்படுத்தும் .அது அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்து தம்பி லவன் தவராஜா சிறு வயதில் இருந்து என்னுடன் மிக நெருங்கிய நண்பர், சகோதரர் . சமூக செயல் எது என்றாலும் முன்னின்று செய்பவர் சுனாமி நினைவேந்தலாகட்டும்,கதிர்காம பாதயாத்திரையில் யாத்திரீகர்களுக்கு குடிநீர் வழங்கியது முதல் இன்னும் பல சமூக சேவைகளை தாராளமனதுடன் செய்திருந்தார் ,தற்போது காரைதீவில் ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் எமது சகோதர சிறார்கள் தண்ணீரில் அள்ளுண்டு போனார்கள் என கேள்வியுற்றதும் களத்தில் நின்று எமது ஊரில் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது அவர்களுக்கு நாம் உதவ வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம் என படகுகளை தயார் செய்து தண்ணீரில் அள்ளுண்டு போன அம்மாணவர்களை தேட தொடங்கினார் ஏனென்றால் சுனாமி அனர்த்தத்தின் போது தண்ணீரில் தத்தளித்து சென்ற எமது ஊர் மக்களுக்காக சாப்பாடு ,குடிநீர் உடை என அள்ளி வழங்கிய ஊரல்லவா என சொன்னார். இதுதான் மனிதநேயம் செய்யும் உதவியை மறுகணமே மறக்கும் மனித வாழ்க்கையில் களத்தில் நின்று மக்களுக்காக சேவை செய்யும் இவர்களை ஊர் மக்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி Lavan Thavaraj All reactions: 93Jeyrajan Rajan, Vic Jeyathevan and 91 others முகநுhல் தனிக்காட்டு ராஜாவின் முகநுhலில் இருந்து.1 point
-
தேர்தல் முடிவினை வைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள் ; சீன தூதுவருக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பதில்
தேர்தல் முடிவுகளை வைத்து அது தமிழ்மக்கள் சிங்கள தலைமைகளை ஏற்று வாழ தயாராகிவிட்டார்களென்றோ, அல்லது தமிழர்களின் தேசிய உணர்வை மறந்து விட்டார்களென்றோ பல்கலைகழக மாணவர்களும் ஊடக சந்திப்பு நடத்த தேவையில்லை, சீன தூதுவரும் அறிக்கைவிட தேவையில்லை. சிங்கள கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட பெரும் வாக்குகள் சிங்கள கட்சிகளின் மேல் கொண்ட அன்பினால் அல்ல தமிழ்கட்சிகள் மேல் கொண்ட வெறுப்பினால் என்பதே யதார்த்தம். எம் மக்கள் எந்தவித ஆசை வார்த்தைகளுக்கும் சலுகைகளுக்கும் இனத்தை அடைவு வைக்க மாட்டார்களென்பதற்கு வடக்கிலிருந்து கிழக்குவரை புயல் பெருவெள்ளம் இடி மின்னல் நடுவே முழங்காலளவு தண்ணீருக்குள் நின்றபடி எம் இன மானம் காத்தவர்களை சாரை சாரையாக அணிவகுத்து வந்து நினைவு கூர்ந்ததே சாட்சி. அதேபோல சிங்கள கட்சிகளும் தமிழர்கள் இனிமே நிரந்தரமாக எம் பக்கம் என்று எக்காலமும் நினைத்திடலாகாது, வெறும் வாக்கு வங்கிகளாக நீங்கள் எம்மைபயன்படுத்தலாம் என்று கனவிலும் எண்ணக்கூடாது. அது மாவீரர் மண், அது எதற்காகவும் இனமானத்தை யாருக்கும் விற்காது என்பதற்கு பெருமெடுப்பில் நடந்த நிகழ்வேந்தலும், தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டமும், பெரும் எண்ணிக்கையில் மாவீரர், மற்றும் தலைவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையில் கைதாகும் எம் இளைஞர்களும் சாட்சி. இந்த ஐந்தாண்டு காலத்தில் இன அர்ப்பணிப்புள்ள உறுதியான தமிழ்தலைமை ஒன்று தமிழர் மத்தியில் உருவானால் அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணம் ஒட்டுமொத்தமா அநுர அரசை வடக்கிலிருந்து அகற்றிவிடும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்தலைமையோ அல்லது இன்று எஞ்சியிருக்கும் தமிழ்கட்சிகளோ இன்னமும் கடந்தகால வரலாற்றில் பாடம் படிக்காமல் ஊர் சுத்தி திரிஞ்சால் அடுத்த தேர்தலில் அநுர ஆறு ஆசனங்களையும் பெறும் வாய்ப்பிருக்கிறது அதையும் மறுப்பதற்கில்லை. அதுகூட அநுரதான் கடவுள் என்று அவர்கள் கொள்ளபோகும் அர்த்தமல்ல, நமக்கு வாய்த்ததுகள் இயமனுகள் என்ற வெறுப்புத்தான். தமிழர் மான தேசியத்தையும், தமிழர் தேசியம் என்று பேசி திரிந்து எம் முதுகில் குதிரையோடிய தமிழர் கட்சிகளையும் எம் மக்கள் ஒன்றாக்கி பார்க்கவில்லையென்பதே மாவீரர்நாள் நிகழ்வுகளும் இந்த தேர்தலில் அநுரவின் வடபகுதியின் அமோக வெற்றியும். அவர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் கடல்கடந்துவிட்ட எமக்கும் தேவை இனமான தேசியம், இனத்தை விற்று தமிழ்கட்சிகள் நடத்திய யாசகம் அல்ல.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர். அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை. ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.1 point- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்?1 point- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே.. அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ? தடுமாறுதோ? என்று சும்மா பகிடிக்கு 😄😄1 point- திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
முதலில் பொதுவாழ்வு எனப்படும் அரசியலில் ரஜனி செல்வாக்குள்ளவரா? அவரே தேர்தலில் குதிக்கபோகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் தொடை நடுங்கியதால் உடல்நிலை சரியில்லை அதனால் அரசியலில் இறங்கும் முடிவிலிருந்து விலகுகிறேன் என்று ஓடி போனவர் அவரை சந்தித்தால் எப்படி மற்றையவர்கள் செல்வாக்கு பெற முடியும்? அதற்குபின் வருடம் இரண்டுபடம் பறந்து பறந்து நடிக்கிறார் அதற்கு மட்டும் அவருக்கு உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கிறது. ஒரேயொருதடவை அக்கால கட்டத்தில் ஜெ’வும் சசியும் சேர்ந்து தமிழ்நாட்டையே மொட்டையடித்து ஆட்சி செய்த காலத்தில், பாட்ஷா பட விழாவில் பம்பாய் பட விஷயத்தில் மணிரத்னம் வீட்டுக்கு முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது. பின்பு அதே வாயால் கோயம்புதூர் குண்டுவெடிப்புகளை முஸ்லீம்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று ரஜனி சொல்லபோக 15 ஆயிரம் அவரோட ரசிகர் மன்றங்களே ரசிகர்களே கலைத்ததாக கதையுண்டு. ஜெயலலிதாவுக்கெதிராய் குட்டிகதை வேறு சொன்னார் ரஜனி, ’’ஒரு கம்பம் இருக்கிறது அதை நட முயற்சிக்கிறோம், அது ஆடிக்கொண்டிருந்தால் மறுபடியும் கல்லு மண்ணுபோட்டு அடிச்சு இறுக்கிகிட்டே இருப்போம், அதேபோல ஓவரா ஆடினா அடி விழுந்துகொண்டே இருக்கும்’’ என்றார் ரஜனி பின்பு அதேவாயால் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று வானளாவ புகழ்ந்தார். பின்பு நடந்த தேர்தல்களிலும் திமுக அனுதாபியாக ரஜனி இருந்தார் ஆனால் ரஜனி செல்வாக்கினால் எந்த தேர்தலிலும் திமுக வென்றதாக பதிவுகள் இல்லை. ரஜனி ஒரு சேற்றில் விழுந்த பன்றி என்று நேரடியாகவே மருத்துவர் ராமதாஸ் விமர்சித்து பாபா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டியபோது ரஜனிக்காக எந்த பிரமாண்ட கட்சிகளும் களமிறங்கவில்லை. அந்த கோபத்தில் அடுத்த தேர்தலில் நாம் யாரென்று காட்டுவோம் என்று முழங்கினார் ரஜனி , ஆனால் ரஜனியின் செல்வாக்கினால் அடுத்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக ஒரு துரும்புகூட நகரவில்லையென்பதே வரலாறு. சீமானும் அப்படித்தான் எவரையாவது திட்டிக்கொண்டே இருந்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கிறார், செயல்வடிவில் மக்கள் பணியாற்றி அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறாரா என்று பார்த்தால் செயல் என்று எதுவுமேயில்லை. எல்லோரிலும் குற்றம் கண்டுபிடிப்பார் பின்னர் அவர்களையே புகழ்ந்து தள்ளுவார், வாரிசு அரசியலை கடுமையாக கண்டிப்பார் பின்னர் என் அன்புதம்பி உதயநிதி என்பார். ஜாதி அரசியல் என்று சொல்லி அன்புமணி ராமதாசை திட்டி தீர்ப்பார் பின்பு என் அருமை அண்ணன் அன்புமணி என்பார். அதிமுகவை கண்டிப்பார், பின்பு ஐயா எடப்பாடி பழனிசாமி என்பார். ரஜனியை சத்ராஜுக்கு அடுத்ததா கிழித்து தொங்கபோட்டது சீமான் தான், இப்போ ரஜனி வீட்டில் போய் நிற்கிறார். இதுநாள்வரை விஜய்யை தன் கடைசிபிள்ளைபோல தூக்கி கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சியவர் இப்போது விஜய் கொள்கை எதிர்ப்பில் ஆவேசமாக இருக்கிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே விஜய் வீட்டில் ஒரு சில மாதங்களிலோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ ஒரு பூங்கொத்து பொன்னாடையுடன் மின்னலடிக்கும் வெண்மையான பற்களை விரிசலாய் காட்டியபடி கூட்டணிக்காக போய் நிற்பார் சீமான். தமிழர் தமிழ்தேசியம் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது எந்தகாலமும் வெற்றிபெறாது, ஏனென்றால் தமிழகம் மேற்குலக நாகரிகத்துக்கும், மொழி கலப்புக்கும், சினிமா, தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு என்பதற்கும், மறுபக்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்கள், வியாபாரம், உயர்பதவிகள், மத்தியபாதுகாப்பு படைகள், ஆட்சிக்கூட்டணி, கல்வி திட்டங்கள் மொழி கலவை, புராணகதைகள், வழிபாட்டு முறைகள் என்று வடநாட்டவர்களின் முழுகட்டுப்பாட்டில் என்றோ கையைமீறி போய்விட்ட தமிழகம் இனிஒருபோதும் மீண்டு வராது. சும்மா கூட்டங்களில் மட்டும் தமிழ் தமிழர் என்று முழங்கும்போது கைதட்டல்கள் வரும் விசில்கள் பறக்கும் ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக ஒருபோதும் மாறாது, அது சாத்தியமாக இருந்தால் கருணாநிதி நிரந்தர முதல்வராக இருந்திருப்பார், சீமானும் எப்போதோ முதல்வராகியிருப்பார்.1 point - முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.