Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19134
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46791
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1569
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/09/24 in Posts

  1. அரசியல்வழியில் சிங்களவனிடம் தீர்வுகளை எதிர்பார்த்து காலம் காலமாக ஏமாந்த எம் சமூகம் பின்னாளில் ஆயுதம் ஏந்தி பிரிந்து செல்ல முற்பட்டது. சேர்த்து வாழாதவனிடம் இருந்து பிரிந்து செல்ல எத்தனிப்பது ஒன்றும் வரலாற்று தவறல்ல. பிரிந்து சென்று தனியரசு அமைப்பது என்ற இலட்சியத்துக்காகவே வடக்கு கிழக்கிலிருந்து பல ஆயிரம் இளைஞர்கள் நம்பிக்கையுடன் தமது உயிரை ஈந்தார்கள், அவர்கள் உயிரை மாகாணசபைக்கே தாரை வார்ப்பதற்கு பிரபாகரன் என்ற தனி மனிதனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, அதைத்தான் அவரும் செய்தார், அவர் வாயாலேயே தமிழீழம் என்ற கோட்பாட்டை கைவிட்டால் பிரபாகரனும் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவரே என்றும் சொன்னார். 1987 மாகாண சபை முறையினை ஒட்டுமொத்தமாக புலிகளுட்பட எவரும் புறக்கணிக்கவில்லை, காலத்தின் தேவைகருதி ஏற்றே கொண்டார்கள். ஆனால் அந்த தீர்வு திட்டத்தில்கூட வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பில்லை, பிரபாகரன் முதலமைச்சர் இல்லை, இந்திய ஆயுதங்களுடன் களமிறக்கப்பட்ட பிற ஆயுத குழுக்கள் பிரசன்னம், இந்திய விசுவாச கூட்டணியை உள்ளுக்குள் திணித்தல். எந்த அரசியல் கைதிகளும் விடுதலை இல்லை, மாறாக ஆயுதமின்றி இருந்த தளபதிகள் போராளிகளையும் ஆயுத குழுக்கள் இலங்கை அரசு வேட்டையாட அனுமதித்தது, சிங்கள குடியேற்றங்களை கண்டும் காணாமல் விட்டது, புலிகளிடம் ஆயுதங்களை கையளிக்க சொல்லிவிட்டு தமிழர் தேசமெங்கும் எந்த பாரிய சிங்கள ராணுவ முகாம்களையும் அகற்றாதது. மாறாக சிங்கள இந்திய ராணுவங்களால் மட்டுமே தமிழர் பிரதேசத்தை நிரப்பியது, அவசரகால சட்டத்தை நீக்காதது என்று இத்தனையும், இதைவிடவும் அதிக கொடுமைகள் இருந்த மாகாண சபை திட்டத்தில் என்ன இருக்கிறது, இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்று சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்திய இலங்கை ஒப்பந்தமென்று வந்தது அப்பட்டமாக இந்திய பிராந்திய நலன் கருதிய திட்டம், இல்லையென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வு திட்டமென்றால், சண்டைபோட்டவர்களுக்கு இடையில்தான் ஒப்பந்தம் நடந்திருக்கவேண்டும், அதெப்படி சம்பந்தப்படாத இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? அன்றே அது உப்பு சப்பில்லாதது என்று உறுதியாகிவிட்டது. ஆயிரக்கணக்கான எம் மக்களும் போராளிகளும் தம்மை ஆகுதியாக்கியது இன்னொரு நாட்டின் பிராந்திய நலனுக்கா? பிளேட் கையில் வெட்டினாலும், தலைவலி காய்ச்சல் வந்தாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கமுள்ள மனிதன், உயிரையும் உடல் அவயங்களையும் உரிமைக்காக போராட தந்து சிதைந்து போனபோது அவன் தியாகத்தை உருப்படியற்ற தீர்வுகளுக்கு பயன்படுவது வரலாற்று துரோகம் அதையே இயக்கமும் செய்தது. ஆயுதரீதியில் பலம் எம்மைவிட பலமடங்கு அதிகமானதால் சிங்களவனிடம் நாம் தோற்று போனோம், ஆனால் மண் ரீதியாக சிங்களவனிடம் நாம் தோற்றுவிட்டாலும், மண்ரீதியாக , சிங்கள தேசத்தில் அவர்கள் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை தமிழர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். அந்த அடிமனது துயரத்தை நீக்கும்வரை இலங்கை எனும் நாடு உருப்பட வாய்ப்பில்லை என்பது உலகுக்கும் தெரியும் மாறி மாறி ஆட்சி செய்பவர்களுக்கும் தெரியும் சிங்களவனுக்கும் தெரியும், எம்மில் சிலருக்குத்தான் எப்போதும் தெரிவதில்லை. வார்த்தைகளில் கண்ணியம் அவசியம். எம்மீது பிறர் ஏறி மிதித்து போவதைகூட மன்னித்துவிடலாம், ஆனால் எம் எதிர்கால கெளரவமான இருப்பிற்காக மட்டுமே போராடியதை தவிர வேறெந்த தவறும் செய்யாத எம் போராளிகள், தலைமையின் ஆன்மாவின் நெஞ்சு மீது ஏறி மிதித்து போகவோ மறைமுகமா ஏளனம் செய்யவோ எவருக்கும் அனுமதி இல்லை.
  2. அனுமதி என்றால் திரு.ஜஸ்டின் , சரி உங்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் யாழ்களம் என்ற ஒரு தளத்தில் சம்பாசணை செய்கிறோம் அதன் ஸ்தாபகர் திரு.மோகன், கண்காணிப்பாளர்களாக சில மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், கருத்து பகிர்வாளர்களாக நாங்களிருக்கிறோம் இங்கே அவரவர் கருத்துக்களை பகிரலாம் உரையாடலாம், அதை சக உறுப்பினர்கள் மறுக்கலாம், ஒத்துபோகலாம் அதுதான் விதியாம். ஆனால் உரிமைபோரில் உயிர் துறந்தவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சித்தால் அந்த கருத்துக்கள் மூர்க்கதனமாக எதிர்க்கப்படும், அதாவது உங்கள் கருத்துக்களை உங்கள் போக்கில் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதே சக கள உறுப்பினராகிய எனது கருத்து. தேசியதலைவர் போராளிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது தவிர்க்கப்படவேண்டிய யாழ்கள விதிகளில் ஒன்று என்றும் நினைக்கிறேன். ஆக அனுமதி என்றால் அதுதான் அர்த்தம், அலுவலகம் என்று அர்த்தமில்லை, அனுமதி வேறு அலுவலகம் வேறு . கருமங்களுக்கு அலுவலகம் தேவைப்படும் கருத்துக்களுக்கு அலுவலகமும் தேவையில்ல பாஸும் தேவையில்லை . அமெரிக்காவில் விலங்கியல் துறையில் மருத்துவராக கடமையாற்றும் திரு.ஜஸ்டினுக்கு அனுமதி என்று எதை அர்த்தப்படுத்தினோம் என்பது விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன். இல்லை விளங்கவில்லை அனுமதி என்றால் அலுவலகம் வைத்து பியோன் வைத்து மேசையில் ஒரு கொம்புயூட்டர் வத்து வளவன் பாஸ் கொடுக்கவேண்டும் அதுக்கு பேர்தான் அனுமதி என்று நீங்கள் இன்னமும் கருதினால் விதிவிட்ட வழி.
  3. யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்... நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான், வைத்தியர் அர்ச்சுனா... என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣
  4. முன்பு... டக்ளஸ் தேவானந்தா, திறந்த வீட்டிற்குள் நுழைந்த 🐕 நாலுகால் பிராணி 🐕‍🦺 மாதிரி போகாத அலுவலகமா? கல்விக்கூடமா? வைத்தியசாலையா...? அப்போ... ஒருவரும் காவல்துறையிடம் முறையிடவில்லையே, ஏன்..ஏன்... ஏன்...? 😂
  5. ஐலண்ட் தனக்கான வக்காலத்தை வாங்குவார். வாங்காது விடுவார். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இங்கே மாவீரர்களோ, போராளிகளோ அவமானப்படுத்தபட்டதாக எனக்கு தெரியவில்லை. 87 இலும் அதன் பின்னும்….இந்திய வல்லாதிக்கத்தை நாம் கையாண்ட முறை நையாண்டிக்கு ஆளாகியது. அது கூட கையாண்ட தலைவர் மீதான நையாண்டி அல்ல. அணுகுமுறை மீதான நையாண்டியே.
  6. ஓ ஓ ...விசயம் அதுவா?..ம்ம்ம்...லண்டனிலிலிருந்து யூ டியுப் பை தொழிலாக கொண்டு வாழ்வது என்பது இலகுவான காரியம் அல்ல...ஏதோ பிழைச்சு போகட்டும்
  7. @valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
  8. எனக்கு விளக்கிய போது யாழ் களத்தில் உங்கள் "எல்லை" உங்களுக்கும் போல விளங்கியிருக்குமென நினைக்கிறேன், அதைப் பின்பற்றினால் மகிழ்ச்சி! இந்தக் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்தவரை, இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய திரியில் அதன் கடந்த காலம் பற்றி ஐலன்ட் எழுதியிருப்பது பொருத்தமானதே. அதைப் "பேசுவதால் இப்போது பயனில்லை" என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. அப்போது தூக்கியெறிந்தது போல இப்போதும் நடந்து கொள்ளக் கூடாதென்ற கருத்து அங்கே வெளிப்படுகிறதல்லவா? அது தான் ஐலன்ட் கருத்தின் பயன். "இதைப் பேசுவதால் பிரபாகரனையும், மாவீரர்களையும் கொச்சைப் படுத்தினார்கள், நெஞ்சில் மிதித்தார்கள்" என்று நீங்கள் சொல்வது உங்கள் உணர்ச்சிமயமான புரிதலின் பாற்பட்டது. உங்கள் கருத்திற்கு ஆதரவு தந்திருப்போர் அனைவருமே நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாமல் ஒரு மூலையில் முடங்கும் போது இறுதி அஸ்திரமாக "மாவீரர்கள், போராளிகள், பிரபாகரன்" கொச்சை என்று சவுண்ட் விட்ட படி எஸ்கேப் ஆகும் உறவுகள் தான்😎. என் அபிப்பிராயத்தில், இப்படியான செயல்கள் செய்வோர் தான் மேற்சொன்ன தரப்புகளை அதிகம் மலினப் படுத்துகிறார்கள்.
  9. சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
  10. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது. Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1. Python for Beginners 2. Web designing for beginners 3. Python programming 4. Front-end web development 5. Server-side web programming 6. Professional practice in software development (Soft skills & Technical skills) பாடநெறி முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும். இன்றைய நாட்டு நிலைமையில் சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் IT படிக்கிறேன் என்று பணத்தை அள்ளி செலவழிக்காமல் இத்தகைய பெறுமதியான இலவச பாடநெறியை கருத்திற் கொள்ளவும். நீங்களும் இவ்விலவச பாடநெறியை கற்க விரும்பினால் கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். https://open.uom.lk உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்
  11. நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?
  12. நிச்சயமாக அது ஐலண்ட் ஒருவருக்கான பதிலும் மட்டுமோ கோபதாபமுமோ இல்லை ரஞ்சித், அதுபோன்ற எண்ணங்களைகாவி திரியும் அனைவருக்குமான ஒரு பதிவு. ஐலண்டின் எல்லா கருத்துக்களுடனும் எனக்கு முரண்பாடில்லை, சரியென்று தெரியும் சமூக ஒதுக்கல் பிரதேச வேறுபாடுகளுக்கெதிரான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் பல லட்சம்பேரின் ரணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் எள்ளிநகையாட கூடாது என்பதால் எழுதினேன். இனமானம் என்ற விடயத்தில் ரஞ்சித்துக்கு தெரியாத ஒன்றையா புதிதாக எழுதிவிட போகிறேன்.
  13. மறியாடொண்டு வேண்டப்போறன், அது குட்டிபோட்டு (அதுவும் கிடாய்க்குட்டியாய்ப் போடுமெண்டு நினைக்கிறன்), அது வளந்து அறுக்கிற நேரம் வரேக்கை, அவசரப்படாமல் ஆட்டை முழுக்க அறுத்துப் போட்டு ஆறுதலாய் "அதை" அறுக்கலாம் எண்டு நினைக்கிறன், இதில என்ன பிழை? 76 வருசம் காத்திருக்கையில்லையே, இன்னொரு 5 வருஷம் காக்கிறதில குடி மூழ்கிப் போகாது எண்டுறன்.
  14. இப்பிடியே இலவு பழுக்கும் எண்டு பாத்திருந்த கிளிபோலவும், காளை மாட்டில பால்கறக்கக் காத்திருந்த சோணகிரிகள் போலவும் 76 வருடங்களைக் காத்துக் காத்தே கடந்துவிட்டோம். கண்ணைமூடிக்கொண்டு காலில் விழுந்து வணங்கமுன் சிந்தியுங்கள் எண்டு சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?
  15. இவை எல்லாம் யாழில் பல வருடங்கள் முன்பே எதிரும் புதிருமாக பலமுறை விவாதிக்கப்பட்ட விடயங்கள் வல்லவன். உங்களை விட யாழில் வீரியமாக எழுதிய பலர் - இப்போ அனுரவிற்கு கொஞ்ச காலம் கொடுப்போம், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதிருப்போம், இனவாதத்தை கட்டுப்படுத்த பயங்கரவாத சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு இறங்கி வந்து விட்டார்கள். இதுதான் 87 இல் எடுத்த சாதுரியமற்ற முடிவுகள் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை, திம்பு கோட்பாட்டை கொண்டு வந்து விட்டுள்ள இடம். 2009 இன் பின் வந்த, வருகின்ற ஒவ்வொரு வருடமும், 87 இல் ஒரு இனமாக நாம் எந்தளவு பெரிய தவறை இழைத்தோம் என்பதை ஒவ்வொரு படி அதிகரித்தே காட்டி போகிறது. மண்டியிடாத வீரமும், விட்டு கொடாத கொள்கை பற்றும், குடும்பத்தையும் காவு கொடுத்த வீரமும் இன்ன பிற செயற்கரிய பண்புகளும் எவ்வளவு உண்மையோ அதே போலத்தான், நண்பர்கள் யாருமற்ற ஒரு சின்னம் சிறிய இனத்தின் தலைவருக்கு அத்தியாவசியமான நெகிழ்வுபோக்கு இல்லாமல் இருந்தது என்ற உண்மையும். இதை சொல்லும் பாங்கில் முரண்படலாம். செய்தியில் அல்ல.
  16. 👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவுறித்தினார்கள். ஆனால் ஒரு காலத்தில் தெரிந்தது அதை வைத்து நாக்கு ஊத்தை கூட வழிக்க முடியாது என...☹️
  17. மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துவது நல்லதே. 1987 ல் மாகாணசபையை உதைத்து தள்ளிவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீசை முறுக்கிய நாம் இப்போது அதற்கு கூட கெஞ்ச வேண்டிய நிலை. ஆகவே இதுவும் இல்லாமல் போக முதல் அன்று உதைத்து தள்ளியதை பொறுக்கி எடுத்துக்கொண்டு நடையை கட்டுவதே செயற்படு பொருள் 😂 முகத்தில் அசடு வழிவதை மறைக்கவும் 1987 ல் முறுக்கிய மீசையில் மண் ஒட்டியதை மறைக்கவும் வேண்டுமானால் சுமனை வைச்சு செய்யலாம். 😂
  18. இதுதான் சிங்களவர்களின் பிரச்சினை. ஆனால் தமிழர்களுக்கு இவற்றுடன் கூடவே இனப்பிரச்சினையும் அதன் உபபிரச்சினைகளான காணாமல்போனோர் பிர்சினை>காணிவிடுவிப்பு பிரச்சினை.குடியேற்றப்பிரச்சனை.தமிழ்ப்புகுதிகளில் அத்துமீறிக்கட்டப்படும் விகாரைகள் தொடர்பான பிரச்சினைமாவீரர்களை நினைகூருதல்தொடர்பான பிரச்சினை>அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை>தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினை>போர்குற்ற விசாரணை தெடர்பான பிரச்சினை முஸ்லிங்கள் தெடர்பான பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.
  19. இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
  20. மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் தமிழ்தரப்பு கட்சி ஆதரவு வழங்கியது. கோத்தபாயவிற்கு சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவு. அனுரவிற்கு அப்படியல்ல.தமிழ் கட்சிகள் அனுரவிற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழ் மக்கள் தாமாகவே உணர்ந்து தமிழ்கட்சிகளுக்கான தண்டனையாக அனுரவிற்கு வாக்களித்தனர். அனுரவும் ஏனைய சிங்கள அரசியல்வாதிகளைப்போல் அல்லாமல் உணர்ச்சிபூர்வமாக நியாயமான சிந்தனைகளுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 70 வருடமாக பொய்யர்களுக்கும் வெள்ளைவேட்டி கள்ளர்களுக்கும் வாக்களித்து தோல்வியடைந்த மக்கள் இந்த முறை தங்கள் வெறுப்பு அரசியலை செய்துள்ளார்கள். அதை நிவர்த்தி செய்ய வக்கில்லை. அனுரவின் அரசியலை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் தீவட்டி கோவிந்தன்கள் குத்துது குடையுது என்கிறார்கள்.
  21. 🤣................... 'இதுக்கு மேல நீ ஒரு எழுத்து வாசித்தாலும், நீ ஆள் குளோஸ்..............' என்று ஒரு டாக்டர் வந்து சொல்லும் வரை சகல செய்திகளையும் வாசித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம், கபிதன்................. நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும், குமாரசாமி அண்ணா. அசாத் போன்று பலர் வரலாற்றில் வந்து போயிருப்பார்கள். தொடர்ந்தும் அங்கேயே இருப்பார்களா............. ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே. அந்த நாட்களில் பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஜப்பானுக்கு சில புலமைப்பரிசில்கள் கிடைக்கும். எந்த நாட்டிலும் கிடைக்கும் பணத்தின் அளவை விட ஜப்பான் கொடுக்கும் பணத்தின் அளவு பெரும்தொகை. படிக்கும் போதே 'ஒரு பணக்காரன்' ஆகிவிடலாம். அத்துடன் ஐந்து வருடங்கள் தான் மேற்படிப்பு என்றால், ஜப்பானில் சரியாக ஐந்து வருடங்களில் அதை முடித்தும் விடுவார்கள். ஆனாலும் படிப்பு முடிந்தவுடன் அங்கு எவரும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. ஜப்பானியச் சமூகத்தில் அந்நியர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு இடம் இல்லை என்றே சொல்கின்றனர். அங்கே படித்து முடித்தவர்கள் சிலர் இலங்கைக்கு திரும்பிப் போனார்கள், பலர் மேற்கு நாடுகளுக்கு போனார்கள். இதையொட்டியே என் எண்ணம் இருந்தது.....................
  22. தற்கொலை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல லண்டன் கனக துர்க்கா அம்மன் அருள் புரியட்டும்... யூ டியுப் ,டிக்டொக் தொல்லை தாங்க முடியவில்லை...தடி எடுத்தவன் சண்டியன் என்ட மாதிரி கமரா வைத்திருப்பவன் எல்லாம் டிக்டொக்,யூ டியுப் ஜாம்பவான்கள் நிச்சயமாக பேச வேண்டும் ..அதில தப்பில்லை...ஆனால் எத்தனை தடவை எம்மவர்கள் பேசினார்கள் பலன் பூச்சியம் அதனால மக்கள் விரக்தி நிலையில் உள்ளார்கள்....இவர்களுடனும் பேசட்டும்...நல்லது நடக்கட்டும்...நாட்டுக்கு நல்லது நடக்க வேணுமென்றால் தேசிய இனங்கள் அங்கிகரிக்கப்பட் வேணும் ..
  23. ரவிகரன் இனவாதத்தை தூண்டுகிறார். - யாழ்.கொம் - அனுரகே ஹமுதாவ-
  24. 1993 என நினைக்கிறேன். இவரும் சிறீகாந்தாவும் சேர்ந்து தினமுரசுக்கு போட்டியாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தனர். அது சம்பந்தமாக வீட்டுக்கு வந்தார். எனது வேலை தேனீர் போட்டு கொடுப்பது மட்டும்தான். அப்போ இவர்கள் அரசாங்கத்தோடு என்பதால் நான் இவர் மேல் செம கடுப்பில் இருந்தேன். ஏனோதானோ என சீனியை அள்ளி போட்டு ஒரு டீ போட்டு கொடுத்துவிட்டு வீதிக்கு கிரிகெட் விளையாட போய்விட்டேன். போகும் போது, தம்பி தேத்தண்ணி நல்ல இனிப்பா இருந்தது எனக்கு டயபிடீஸ் ஆனாலும் குடித்து முடித்துவிட்டேன் என்பதாக சொல்லி சென்றார். பின்நாட்களில் செய்தியில் சில தடவை டயபிடிசால் ஆஸ்பத்திரியில் அனுமதி என செய்திகள் வரும் போது இதை நினைத்து கொள்வேன்.
  25. முன்பே சொல்லிப்போட்டு வந்தால் எப்படி கள்ளரை பிடிப்பது?
  26. 👍................ எனக்கும் இது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. சிறிதரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றார்கள், அதே நேரத்தில் சுமந்திரனை அதைவிட அதிகமாக வெறுத்துக் கருத்து எழுதுகின்றார்கள். இது வெறும் பிரச்சார மேடை போலத் தான் இருக்கின்றது............. ஒரு கருத்துக்களம் போல அல்ல..............
  27. ஆரம்ப தளம்பல்களின் பின், ஆட்சியாளர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். தனியார் முதலாளிகளின் அரிசிக் குடோன்கள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு இரகசியத் தகவல் அல்ல. ஆனால், அவற்றை அரசு கையகப்படுத்தலாமா, இல்லையா என்பதே சட்டச் சிக்கல்.
  28. இவை மிக முக்கியமான கருத்துக்கள், மீள மீள இங்கே பலராலும் வலியுறுத்தப் பட்டிருந்தாலும், இதைக் கவனிக்காமல் அடுத்த தலைமுறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்க வேண்டுமென்று "வனைதல்-molding" முயற்சியில் இருக்கிறார்கள். "புனிதம் செய்கிறோம்" என்ற போர்வையில் , பொய் வரலாற்றைக் கூட பரப்பும் முயற்சிகள் நடக்கின்றன. உதாரணமாக, மிகுந்த உணர்வோடு வளவன் எழுதிய கருத்தில் "புலிகள் உட்பட பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டனர்.." என்று இருக்கிறது. இது எவ்வளவு உண்மை? 1987 இல் இந்திய இராணுவம் பலாலியில் வந்திறங்கிய போது வீடு வீடாகப் புலிகளின் அரசியற்பிரிவினர் சென்று மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு நினைவிருக்கும். சுது மலையில் பிரபாகரனின் உரையில் கூட முழுமையாக ஏற்றுக் கொள்ளல் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அமிர் யாரால், ஏன் கொல்லப் பட்டார்? இவையெல்லாம், '87 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளங்கள் என்றால், வரலாறு "சுத்தம்" என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
  29. வருட இறுதியில் இரண்டு பேருக்கும் நல்ல போட்டி ஆரம்பமாகி இருக்கு. நத்தார், புதுவருடம், தைப்பொங்கல்... எல்லாம் சேர்த்து பிரமாண்டமான ஸ்பெஷல் தயாரிப்பு ஒன்று நடக்கப் போகுது. 😂
  30. இந்த வருடம் வைத்தியர்களின் ஆண்டு போல் தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் பைத்தியர் சாரி, வைத்தியர்களின் பேச்சாகவே உள்ளது. 😂
  31. சிறி ஜயா குரூப் சொல்கிறது கஞ்சா, கசிப்பை ஒழிக்க Bar ஓகேயாம்…இது பார் லைசன்ஸ்க்கு சிபாரிசு கொடுத்ததை நியாயப்படுத்த சொன்ன வார்த்தைகள்.. அதை உங்களைப்போல் பார்சிறி விசிறிகள் ஆமோதித்து நியாயப்படுத்துகினம்.. இது விபச்சாரத்தை ஒழிக்க மசாஜ் சென்ரருக்கு அனுமதிகொடுத்திருக்கிறம் என்று சொல்வதைப்பொன்றது.. பார் வந்ததால் கசிப்பு எங்க குறைஞ்சிருக்கு......? தேர்தலுக்கு முன்னர் பார் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்ற சில அல்லக்கைகளள தற்போது சிபாசு யார் செய்தார் என்ற உண்மை வரப்போகுது என்ற அச்சத்தில் அவரின் சில அடிவருடிகள் இப்பவே கூவ வெளிக்கிட்டாங்கள்… சிறி ஐயா விடம் வேலை வாய்ப்பு பெற்று தரும்படி யாரும் சென்றால் ஐயா கூறுவாராம் நாட்டின் நிலமை உங்களுக்கு விளங்கவில்லையா நாங்கள் இப்போ முக்கிய விடயங்களை பற்றி தான் பேசுகிறோம் தேசிய பிரச்சினை எவ்வளவு இருக்கிறது இந்த நேரத்தில் அவங்களிடம் வேலைவாய்ப்பு கேட்டால் ஒன்றும் நடக்காது என்று கூற கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம் என்று அனுப்பி விடுவாராம்… ஆனால் அவர்களிடம் bar போமீற்கள் வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்யலாம் அது பரவாயில்லை.. அடிப்படை தொழில் கேட்டு தனது வாழ்வாதாரம் நிமித்தம் போனவர்களுக்கு தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை… தமிழ்த் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தாரிடம் மக்கள் நலன்களை எதிர்பார்க்க முடியாது... தன்மானம் விற்று வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியென்ன அடுத்துவரும் 5 வருடங்களுக்கு நம்மை அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடுவார்கள்… **** உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் முற்று புள்ளி வைத்துவிட்டார்கள் இனி என்றாலும் ஏமாற்று வித்தையை நிறுத்துங்கள் *****…
  32. போட்டியின் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவுஸ் வெல்லும் என கூறினாலும் போட்டி ஆரம்பித்து முதலாவது இனிங்க்ஸ் பின்னர் நீங்கள் அவுஸ் வெல்லும் என கூறிவிட்டீர்கள், அந்த நேரம் எனக்கு உங்களவிற்கு நம்பிக்கை இருக்கவில்லை, முதல் நாள் மேக மூட்டமாகவும் இரண்டாம் நாள் அதிக வெய்யில் 3 ஆம் நாள் மழை என எதிர்வு கூறியிருந்தமையால் ஆடுகளத்தின் தன்மை மாற்றத்தில் ஒரு சந்தேகம் நிலவியிருந்தது, அவுஸின் இலகு வெற்றிக்கு இந்திய அணியின் பங்கும் இருந்தது. இந்த போட்டியில் இரு அணிகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சிராஜின் சின்ன பிள்ளைத்தனமான கொண்டாட்டத்தில் ஆரம்பித்துள்ளது, மிக சிக்கலான ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை எடுத்த ட்ராவிஸ் கெட்டிற்கு குடுக்க வேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தினை கொடுக்காமல் மிக கேவலமாக நடந்து கொண்டுள்ளது இந்திய அணி, அதனை இந்திய இரசிகர்களே இரசித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவுஸ் பார்வையாளர்கள் கூட மோசமாக நடந்து கொண்டார்கள்.
  33. நீங்கள் பாவிக்கும் வஸ்து எது என்பதை அறியத்தந்தால் நானும் இந்த சுகானுபவத்தை பெறலாம் 🤣
  34. இனவாதம் பேசி, தமிழருக்கு தீர்வு இல்லை, அதிகாரம் இல்லை, நாடு இல்லை என்று சிங்களமக்களை உசுப்பேத்தி வாக்கு சேர்த்த தேர்தல்கள் நடந்த இலங்கை வரலாற்றில், முதன்முதலாக இனவாதம், மதவாதம், வாக்குறுதி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையோடு ஜெயித்தவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரா அவர்கள்! அவர் போராட்டத்தின் இழப்பு, வலி தெரிந்தவர், அரச கொடூரம் அனுபவித்தவர், உறவுகளை இழந்தவர், நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர், எதை அரசு செய்திருந்தால் இழப்புகளை தவித்திருக்கலாம் என்கிற கொள்கை உடையவர். தமிழரை பற்றி சிந்திக்காத நாட்டில், தமிழர் படும் அவலங்களை உணர்ந்தவர், அதை வெளியில் சொன்னவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களும் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என எடுத்துச்சொன்னவர். இனவாதம் பேசி, தம்மை ஏமாற்றி, நாட்டை சூறையாடிய வெறுப்பு, விரக்தியினால் மட்டும் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் இவ்வளவு பெரும்பான்மையோடு வென்றிருக்க முடியாது. மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள். குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது. ஆகவே பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுக்கலாம். அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்? மக்களே மாற்றத்தை கொண்டு வந்தவர்கள், ஆகவே சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது, இனவாதிகளும் ஊடகங்களும் பொய்களையே பரப்பின, பொய்யான காரணங்களை கூறினர், திரித்த வரலாறுகளை கற்பித்தனர். அவை எல்லாவற்றையும் இங்கு எழுதிக்கொண்டிருக்க முடியாது. சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம். டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும். நாட்டுக்கு எப்போ பயங்கரவாத சட்டம் தேவையில்லையோ, அப்போ அது தானாக தேவையற்று போகும். முன்னைய அரசுகளில் இந்த சட்டம் தமிழருக்கெதிராக இயற்றி செயற்படுத்தப்பட்டது. இனிமேல் அது இயற்றியவர்களுக்கெதிராகவும் பாய இடமுண்டு. வாழ்க அனுர.
  35. உங்களுக்கு பிரெக்சிற், கியூபெக், ஈன்ச் தீமோர், ஸ்கொட்லாந்து இன்ன பல சர்வஜன வாக்கெடுப்புகள் கட்டாயம் தெரிந்து இருக்கும். ஆனால் இது புலிகளின் பிழை அல்ல. இந்த தீர்வை இப்படி திணித்தது இந்தியாதான். ஆனால் எமது தலைமையாக இந்த திணிப்பை புலிகள் எதிர்கொண்ட விதம் பிழை என்பதே என் நிலைப்பாடு.
  36. முதலாமவர் இரண்டு லட்சம் ருபா சரீரப் பிணையில் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உதயனில் நான்கு நாட்களுக்கு முன் செய்தி வெளியீட்டு இருக்கிறார்கள்..
  37. மந்தைதனமாக அனுரவை நம்பி, தமிழ் தேசியத்தை கைவிடாமல் காப்பாற்றலாம். எமக்கான காணி உரிமையை தராதவரை இவரும் இனவாதிதான் என்பதை நினைவூட்டலாம். நாம் பிரிந்து நின்றதாலே இவர் எமது பகுதியில் வெல்ல முடிந்தது என்பதை விளங்கபடுத்தி - எதிர்கால ஒற்றுமையை வலியுறுத்தலாம். மிக முக்கியமாக - இந்த அனுர பேய்க்காட்டல் பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87 ஒப்பந்தம், இடைக்கால நிர்வாக சபை போன்ற இன்னுமொரு பேரினவாத பேய்காட்டல் என்பதை புரிய வைத்து - தமிழ் தேசிய அரசியலே நிரந்ததர தீர்வை தரும் என்பதை உணர்த்தலாம். இவர்கள் இருவரும் இனவாதிகள். இவர்கள் ஒரு போதும் எமக்கு காணி, பொலிஸ் அதிகாரம் தாமாக தரபோவதில்லை. இருக்கும் 13 ஐயும் உருவ கூடியவர்கள். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து இவற்றை பெற போராட வேண்டும்.
  38. ஜே ஆர் சரியில்லை மகிந்த சரியில்லை அவற்ர தம்பியும் சரியில்லை மைத்திரி சரியில்லை சந்திரிக்கா சரியில்லை அவவிண்ட அப்பாவும் சரியில்லை அம்மாவும் சரியில்லை அனுரவும் சரியில்லை.... ஐ மீன் பசிக்கு பிய்ஞ்ச தோசை வேண்டாம். முழுத்தோசை தான் வேணும் 🤣
  39. இன்றைய சர்வதேச அரசியல் போக்கில் அனுர வந்தவுடன் எதிர் அரசியல் செய்து எதனை சாதிக்க முடியும்? சர்வதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் 90 நாட்களின் பின்னரே அதன் பிரதிபலன்களை ஆராய்வார்கள். அதற்கு முன் எதிர்வு கூறல்களை ஏற்க மாட்டார்கள். சரி. இப்போதே அனுர ஆட்சியை எதிர்ப்பதாலும் அவரின் பழைய அரசியல் கொள்கையை நினைவு கூர்வதாலும் தமிழினத்திற்கு வரப்போகும் பலாபலன்கள் என்ன?
  40. இப்படியான மெட்டுக்களோடு காதுக்கு இனிமையாக பாடல்களை தர இளையராஜாவால் மட்டுமே முடியும். ❤️
  41. என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானியா) பிறகு ஆருக்கு ஆயுதங்களை விக்கிறதாம்? 😎 அடி மடியிலையே கை வைக்கிறீங்கள் விசுகர்! நீங்கள் ஆகலும் மோசம் 🤣 😂
  42. நீங்கள் குறிப்பிடும் நாடுகள் மதம் பிடித்த நாடுகள். அவை அழிந்து தான் போகும் போகணும். என் விருப்பமும் அது தான். நான் சொல்ல வருவது நாளடைவில் என்று மட்டுமே அண்ணா. மக்கள் நலன் மற்றும் உலக பொருளாதாரம் சார்ந்து சிந்தித்தால் நாளடைவில் முன்னுக்கு நான் எழுதிய நாடுகளின் வரிசையில் வரலாம் எனது உறவினர்களே இங்கிருந்து குவைத்தில் சொத்து வாங்கி விடுகிறார்கள். எனவே நம்பிக்கை தரும் இடமாக உள்ளது அல்லவா?
  43. டாக்டர் "ஸ்டெதஸ்கோப்"பை காதில் வைக்க மறந்துட்டீங்க. 😂
  44. கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.