Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88820
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33368
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3125
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3670
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/24 in Posts

  1. சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.
  2. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://thinakkural.lk/article/314062
  3. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734943791
  4. நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂
  5. கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று இருந்ததால் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது. 😂 கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂 கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு 15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣 நுணா.... நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன். 😃
  6. தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும் அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார் அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்
  7. அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........! 😴
  8. சாராசுருதி, ஸ்ரீகாந்த் என்றென்றும் கப்டன் உங்க Voice-ல உருகிட்டோம் சார்.. ❤️ | Endrendrum Captain |
  9. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
  10. அவரையும் என்னையும் ஏனப்பா தொடுத்துவிடுகிறீர்கள்..................🤣. பெரிதாக அமெரிக்க உள்நாட்டில் மாற்றம் ஒன்றும் இருக்காது, பெயர் மட்டும் மாறி இருக்கும் என்று சொல்லவே நினைத்தேன்............... இங்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது, இந்த நாடு காலத்தால் மாறுகின்றதே தவிர இரண்டு கட்சிகளாலும் மாறவில்லை என்பதே என் அனுபவம்...............
  11. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr. சத்தியன், இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர் பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. ☹️
  12. எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
  13. அதிலும்... முதல் பிரயாணத்தை, @ஈழப்பிரியன் தானே தொடக்கி வைக்கின்றார். பிரயாணம் முடிந்து வந்த பின்... ஆண்மையில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டிருக்கோ... என்று, கேட்டு அறியலாம்தானே.
  14. நன்றி, இவ் வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வெளியாகவுள்ளது.
  15. முன்பொருநாள் நயினையில் ஒரு நினைவு . ........! 🙏
  16. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 👍 இலங்கையின் 10 வது ஜனாதிபதி. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.
  17. மெக்சிக்கோ புதிதாக ஒரு கால்வாய் தோண்டுகின்றார்களாம். அது அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் துறைமுகங்களுக்கு போட்டியாக.......................... என்ன, இந்த மனுஷனுக்கு அமெரிக்க மேற்கில் இருப்பவர்களை பிடிக்காது, அமெரிக்க மேற்கில் இருப்பவர்களுக்கும் இவருடன் ஒத்துவராது. அதனால், மெக்சிக்கோ தோண்டட்டும் என்று விட்டாலும் விட்டுவிடுவார்..................... எப்படி என்றாலும் பெரும்பாலும் எல்லாமே வெறும் படம் தான்...........😜.
  18. அடுத்த மாதத்திலிருந்து அமெரிக்க லிபரல் கிடையாது......... நாங்கள் கன்சர்வேட்டிவ் ஆகின்றோம்..... ஆதலால் தயவுடன் எங்களை உலகில் சிக்கலில் இருக்கும் லிபரல்களுடன் பின்னிப் பிணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.............. அத்துடன் அமெரிக்கா அடுத்த நான்கு வருடங்களுக்கு நாலு கால்களில் பாய முடிவெடுத்தும் உள்ளது (Make America Great Again and Again). இடையில் சிக்குபவர்கள் சின்னாபின்னமாக சிதறப் போகின்றார்கள்...........🤣.
  19. இல்லை நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள், நான் கூறியது நதி மூலம் ரிசி மூலம் பார்ப்பதினை.
  20. அவரின் புஸ்வானம் அவருக்கும் யூடியுப்பர்களுக்கும் சில நன்மைகளை கொடுக்கின்றது..மக்களுக்கு அல்ல 400 வெற்றிடங்கள் உண்டாம் (ஆளனி பற்றாக்குறை) அதை அரசாங்கம் நிறை வெற்ற முடியாமல் இருக்கின்றதாம் காரணம் பொருளாதார நெருக்கடி...இது யாழ் பொது வைத்தியசாலையில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைக்களில் இதே பிரச்சனை தானாம்...ஆகவே எனவே புலம்பெயர் அணுரா பிரிகேட் ஏதாவது உத்விகள் செய்து தோழரின் கனவை நனவாக்க முன் வரலாம் ...
  21. மதங்களை தமது அடையாளமாகவே (label) பார்க்கின்ற நிலை நிலவுகின்றது, மதம் மட்டுமல்ல இனம், சாதி என இது நீண்டு செல்கிறது. தாம் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு மிக மோசமாக அடக்குமுறைக்குள்ளாகும் அகதி நிலையில் உள்ள மக்களுக்கு பல தசாப்தங்களாக அகதி வாழ்க்கை (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்) வாழும் எங்களுக்குத்தான் மற்றவர்களை விட அதன் வலி தெரியும்.
  22. பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை எடுத்து கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன் .........ஏன் அதிகம் அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட. இடைத்தரகர்கள். வேண்டும் .....இன்று ஒரு உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும் அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது வாழ்த்துக்கள் அர்ச்சுனா 🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டுகள். வாழ வேண்டும் பைத்தியம் என்றார்கள் சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் விளம்பர பிரியனன். என்றார்கள் ..... .....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் மக்களுக்குக்காக. உழைக்கிறார். வாழ்த்துக்கள் 🙏 டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,.. மாவை சேனாதிராசா. விக்கினேஸ்வரன் சாணக்கியன் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை???? தெரியாத?? அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா ??? சத்தியமூர்த்தியை சந்திக்க முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும் ......அவரை கேள்விகள் கேட்க முடியாது இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை சந்திக்கிறார் தனியாக இல்லை பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் சத்தியமூர்த்தி மக்கள் பணி புரிபவர். அவரை மக்கள் எப்பவும் சந்திக்கலாம் மக்கள் தான் ஊதியம் கொடுக்கிறார்கள் எப்போது சத்தியமூர்த்தி வீட்டை போகிறீர்கள்?????. [🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣
  23. சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்... சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂 வருசம் முடியுற நேரம்... கூல் டவுன் புரோ... 🤣
  24. இதே Formula, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம் சுமந்திரனுக்கும் பொருந்தி வர வேண்டும் என்பதே எனது நத்தார் கால பிரார்த்தனை. 😂
  25. அது என்ன ""தட்டிக் கேட்டல் ""? அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர்.
  26. ரூமேனியாவையும் சேர்த்து கொள்ளலாம். அங்கு லிபரல் அரசா தெரியவில்லை.
  27. மேற்குலகின் லிபரல் அரசியல் மிகவும் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. Canada, Germany, France, Grorgia, USA என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
  28. புதிதாக எதைக் கட்டினாலும் அதை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம், புதிய பஸ் நிலையம் உட்பட, ஏதாவது காரணம் கண்டு பிடித்து பகிஸ்கரிப்போம்.
  29. வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்) இந்திய அரசுடன் அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால் ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை
  30. பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  31. Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024
  32. இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
  33. என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
  34. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
  35. முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
  36. நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
  37. ஏனெனில் இதைப் பற்றிப் பேசுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த ட்ரோன் பறப்புகள் முதலில் பிரிட்டனில் ஒரு விமானப் படைத்தளத்தினை அண்டிய பகுதியில் இரவில் காணப்பட்டதாக மக்கள் ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது போன மாதம். அந்த படைத்தளம் கூட அதைப் பற்றி அறிக்கையெதுவும் விடவில்லை - எனவே அவர்களுடைய பறப்பாகக் கூட அவை இருக்கலாமென விடயம் அடங்கி விட்டது. பின்னர் நியூஜேர்சி, ஒஹையோ செய்தியில் வந்தன. நியூ ஜேர்சி செய்திகளின் படி, சில ட்ரோன்கள் இரவில் பறந்ததை ஊடகங்கள் பகிரங்கப் படுத்தியதும், இவ்வளவு நாளும் இரவு வானத்தைப் பார்க்காத மக்கள் அண்ணாந்து பார்த்திருக்கிறார்கள். பறந்த சில பொலிஸ் ஹெலிக்ப்ரர்கள், சிறு விமானங்கள் கூட ட்ரோன்கள் என சிலர் அறிக்கை விட ஆரம்பித்து ஏதோ சதி நடப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "அமெரிக்க எல்லையில் தரித்து நிற்கும் ஈரானிய தாய்க்கப்பல்" ட்ரோன்களை அனுப்புவதாக ஒரு அரசியல்வாதி கற்பனைக் கதை வேறு வெளியிட்டிருக்கிறார்😂. உண்மையில்,அமெரிக்காவில் ட்ரோன்களை எந்த நேரத்திலும் FAA அனுமதி பெற்றுப் பறக்கலாம். பறக்கும் இடத்தின் முக்கியத்துவம் சார்ந்து அனுமதி இருக்கும். 2019 வரை, விமான நிலையங்களில் இருந்து 5 மைல் தொலைவில் அனுமதியின்றியே பறக்கலாம் என்பதை மாற்றி அதற்கும் முன் அனுமதி வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். ஆனால், பிரதான விமான நிலையங்கள் தவிர்ந்த ஏனைய தளங்களைச் சுற்றி இத்தகைய அனுமதி கோரும் முறை இருக்கவில்லை. நியூஜேர்சி, ஒஹையோ செய்திகளை அடுத்து அந்த மாநிலங்களின் ஆளுனர்கள் இப்போது பெருமளவு பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதித்திருக்கிறார்கள் - அதுவும் 1 மாதம் மட்டும் செல்லுபடியாகும்.
  38. "கடல் வள கொள்ளையர்" நல்ல தொரு தலைப்பு .
  39. நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.
  40. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள் தியா!
  41. அனைவருடனும் கதைக்க வேண்டும், சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில் இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும். உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது.
  42. இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.
  43. அவர்கள் ஏரிமீன்கள் அல்ல எங்கும் நகரமுடியாதபடி ஒடுக்கமான இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ தமக்கு கிடைக்கும் முடிவுகளை உண்டு பெரிய மீன்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வாழும் கிணற்று மீன்கள். ஏரிமீன்கள் நாம்தான் பரந்த நீர் பரப்பில் பரவலாக நீந்தியபடி கிணற்றுக்குள் சிக்கிய மீன்கள்பற்றி சுதந்திரமாக கருத்து சொல்ல முடிகிறது. வெள்ளை சுறாக்கள் திரும்பி போகும்போது பெரிய மீன்களுடன் சேர்ந்து வாழ சம்மதித்தது சிறிய மீன்கள்தான் என்ற கறை எப்போதும் எம் பக்கமிருக்கும்.
  44. வளைந்து நெளிந்து ஓடும் ஆறு மங்கை மேகக் கூந்தலோ .........! 😂
  45. குளிர்காலத்தின் காலை வேளையில் மரங்களும் அழகு.. மூடுபனியில் நனையும் கட்டிடங்களும் அழகு!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.