Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10202
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87979
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1836
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19097
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/30/24 in all areas

  1. நேற்று உரிக்காமல் பொச்சோட 280 தேங்காய் 105 ரூபாய்ப்படி முப்பதாயிர சொச்சத்துக்கு குடுத்தன்.. உரிக்காத தேங்காயே இந்த விலைபோகுது.. அதுவும் வீட்ட வந்து எடுத்துக்கொண்டு போகிறார்கள்.. அவ்வளவு தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கு இப்ப.. நிற்க.. இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன.. எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை.. நீ ஜயரா இரு இல்லா ஆட்டுக்குடீயா இரு .. எனக்கென்ன.. எண்ட மனநிலை.. மிகச்சிறந்த மாற்றம்.. இது தொடரவேண்டும்.. இப்படி பரம்பரையாக மீன்பிடிப்பவர்கள், தச்சுவேலை செய்பவர்கள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் எல்லாம் தம் தம் குலத்தொழிலை விட்டு மாறி வேறு வேலைகள் படிப்பு என்று பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.. இது சாதி அமைப்பின் தலையில் ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடிகளில் பலமான ஒரு அடியாக இருக்கும்.. மீன் தேவை எண்டால் மீனவர்கள் அல்லாத வெள்ளாளரும் மற்றைய சமூகத்தவரும் மீன்பிடிக்க போகனும்.. தேங்காய் வேணும் என்றால் கோயிலுக்கு புக்கை பொங்கவேணும் எண்டால் ஜயர் ஏறிபுடுங்கட்டும்.. வெளிநாடுகளில் தொழில்கள் சாதிமுறை இல்லாமல் லாபம் பார்த்து விரும்பியவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.. முடிதிருத்த யாரும் படிக்கலாம்.. அதுபோல ஊரில் இன்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகள் படிப்பு, வெளிநாடு என்று போய் பொருளாதரத்தில் மேம்படட்டும்.. எங்கள் தலைமுறையில் இல்லை எண்டாலும் இன்னும் ஒரு மூன்று நாலு தலைமுறையில் கிழடுகள் ஆரும் வாங்கில இருந்து கொண்டு ரைம்பாசுக்கு பழையகதை பேசுற விடயமாகட்டும் சாதி.. புதுத்தலைமுறை உதுக்கு நேரமில்லாமல் இருக்கட்டும்..
  2. ஆட்களின் வடிவை கேலி செய்யக்கூடாது. என்றாலும் வட மாகாணத்தின் பெண்ணழகி படத்தை பார்க்க ஓடிவருபவர்களுக்கு ஏமாற்றம் தான் போல.
  3. பெரிய தென்னை தோட்டங்களில் மரத்தில் ஏறி தேங்காய் புடுங்குவதில்லை அதற்கென வேலையாள்களும் இருப்பதில்லை, விழுகின்ற தேங்காய்களையே விற்பதாக கேள்விப்பட்டுள்ளேன். யாழ்பாணிய சாதியம் என்பது (தற்போதுள்ள சாதிய கட்டமைப்பு) கிட்டதட்ட 200 வருட பழமை கொண்டதாக இருக்கலாம், அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த வாலறுந்த நரியினை மத, மொழி தொண்டராக பேணுவதன் உள்நோக்கமே இந்த சாதியத்தினை பேணுவதற்குதான். சாதியம் அழிந்தால் இனம் முன்னேறும், நாடு முன்னேறும் ஆனால் அந்த சாதியம் இல்லாவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள், அதனால் சாதியம் அழியாமல் காப்பார்கள்.
  4. ப்ரோ…. கைய குடு ப்ரோ….இந்த கருத்தை எழுதின கைக்கு @Nathamuni மோதிரம் போடுவார் நான் ஒரு முத்தம் கொடுத்துகிறேன். இப்ப வெளி நாட்டில் பறை அவையவை தானே அடிக்கிறம்… வெள்ளை அவையவை தானே கட்டுறம் செலவு படையலை அவையவைதானே தூக்கி போய் முன் சந்தியில் வைக்கிறம். அதே நிலை ஏனைய தொழிகளுக்கும் ஊரில் வர வேண்டும். வந்து கொண்டுள்ளது. வந்து விடும். பிகு ஆரும் யாழில் ஆசாரவாதிகள் போர்வையில் மறைந்திருக்கும் சாதியவாதிகள் பாரம்பரிய தொழில் அழிவதாக கவலைப்பட்டால் - அவர்கள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி இந்த தொழில்களை நடத்த சொல்லலாம். ஏறுபட்டி, தளைநார் எண்ட செலவு.
  5. பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொறுப்புகள் குறைவாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் காலம். நண்பர்களுடன் விளையாடுவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என பலவும் இந்தக் காலத்தில் நிகழ்கின்றன. பள்ளிக்காலத்தில் நாம் பல அனுபவங்களைப் பெறுகிறோம். பள்ளியில் உருவாகும் நட்புகள் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் நண்பர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். பாடசாலை வாழ்க்கையை முடித்து தொழில் கல்வி பயின்று கொழும்பில் வேலை செய்து கொண்டு இருந்தான் இனியவன். இந்தியன் ராணுவம் எம் நிலங்களை ஆக்கிரமித்து இருந்த காலம் அது. வீட்டில் ஒரு விசேஷத்திக்காக பல தடைகளை தாண்டி ஊர் வந்தான். திடீரென ஒரு நாள் சுற்றி வளைப்பு, அவனும் பெரிய அண்ணனும் உட்பட பல இளைஞர்களை கூடி சென்று கடைக்கரையில் உட்கார வைத்தார்கள். எல்லோரிடமும் வழக்கமாக கேட்கும் கேள்விகளை கேட்டு விட்டு தலையாட்டி முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அவனின் போதாத காலம் அவனை நோக்கி தலையாட்டியின் ஆள் காட்டி விரல் நீண்டது. சினிமாவில் விஜய் தலை ஆட்டுவது போல் மேலும் கீழும் ஆட்டினான். கதைப்பதுக்கு வார்த்தைகள் வரவில்லை அவர்களுடன் கூட்டி செல்லப்பட்டான். தென்னை மரத்தின் கீழ் இருக்க சொல்லி பணித்தார்கள். ராணுவத்துடன் சேர்ந்திருந்த சில இளைஞர்கள் முகாமில் இருந்து வெளியே நோக்கி வந்தார்கள். இளம் கன்று பயம் அறியாது என்பர். எம் நிலத்தில், மறவர்களின் கால் பதிந்த நிலத்தில் இவர்களுக்கு என்ன வேலை. இனியவன் கூனி குறுகி நிற்கிறான். "டேய் எழும்படா, நீயெல்லாம் அவர்களின் ஆக்கள் அல்லவா" என்றான் ஒருவன். ஊதி விட்டால் பறந்து விடுவான், ஆனால் அவனிடம் இடுப்பில் பொருள் இருந்தது. மரியாதையாக "இல்லை அண்ணா நான் கொழும்பில் வேலை செய்கிறேன்" என்றான் இனியவன். “உந்த பம்மாத்து கதையெல்லாம் வேண்டாம் நட முகாமிற்கு” என்றான். வக்கற்றவனாய் தான் பாடசாலை காலங்களில் பேருந்து ஏறும் தரிப்பிடத்தை ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் மஞ்சள் நிற மேல் அங்கியுடன் ஒருவர் இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார், இனியவனின் பெரியண்ணா தான் அவர். நட்டாற்றில் விழுந்தவனுக்கு ஒரு சிறு மர கட்டை கிடைத்த மாதிரி உணர்வு தோன்றியது. அவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை, அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். நேரம் போக போக இனியவனின் நம்பிக்கையும் மறைய ஆரம்பித்தது. கிடைத்த மர கட்டையும் கை நழுவி போவதை உணர்ந்தான். ஒரு புறம் வேடன் என்கிற இந்திய ராணுவம் மறுபுறம் நாகம் என்கிற எங்களது நரகத்து முள்ளுகள். மானுக்கு நேரம் தேவைப்பட்டது. எடுத்துக்கொண்டு அருகாமையில் இருக்கும் தமிழ் கடவுள் கந்தவன கடவுளை நினைத்து பார்த்தான். யாமிருக்க பயமேன் என்று நெஞ்சை நிமிர்த்தி வேலுடன் முருகன் நிற்கும் காட்சி அவன் மனத்திரையில் ஓடியது. கூட வந்தவர்கள் எல்லாம் வீடு திரும்பிக்கொண்டிருக்க இன்னொரு உருவம் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது, இம்முறை அவனால் யாரென்று அடையாளம் காணமுடிவில்லை, அவனுள் மீண்டும் சிறு நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்தது. உருவம் கிட்ட வர வரத்தான் புரிந்தது அது சாந்தன் என்று. சாந்தன், இனியவனுடன் ஊர் பாடசாலையில் ஒன்றாக படித்த சக மாணவன். கணித பாடத்தில் தேர்ந்த இனியவன் பல்வேறு தருணங்களில் சாந்தனுக்கு கணக்கு சொல்லி கொடுத்து இருந்திக்கிறான். சில வேளைகளில் சண்டையும் பிடித்து இருக்கிறான். அவர்கள் சண்டை அவர்களுடனையே முடிந்து விடும், அவர்களே சமரசம் செய்து கொள்ளுவார்கள் . ஆசிரியர்கள் என்ற மூன்றாம் தரப்பு ஊடுருவ விட்டதில்லை. பாடசாலை முடிவில் பலரது பாதை திசை மாறி போனது. சாந்தனும் விதி விலக்கல்ல. போராட புறப்பட்டு தவறானவர்களின் இயக்கத்தில் சேர்ந்து, அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட பொழுது, தளபதியின் அறிவுறுத்தலில் ஊரில் இருந்து தனது தந்தையின் தொழிலை செய்து கொண்டிருந்தார். சாந்தன் மாற்று இயக்கத்தில் இருந்தததனால் ஊரில் நிலை கொண்டிருந்த பலரை அவருக்கு தெரியும். அவன் இனிவனின் நண்பன், அவர்களுடன் வாதாடி ஒருவாறாக இனியவனை மீட்டு அவனது பெரியண்ணயிடம் ஒப்படைத்தான். எந்த சூழ் நிலைக்கும் காலம் என்பது பதில் சொல்லும், நம்பிக்கை இழக்க வேண்டாம். குறள் “காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்” கலகத்திக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையே வென்று காட்டுவார்கள் முற்றும் அகஸ்தியன்
  6. அண்ணை இதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பலகாரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.. 1) சுத்தமான நீர் குடிக்கவேணும் எண்ட அதிகளவான விளிப்புணர்வு.. முன்னர் அதைப்பற்றி மக்களுக்கு விளக்கமில்லை.. மாற்றுவழிகளும் இல்லை.. இப்பொழுது போத்தல் தண்ணீர் வருகை, வெள்நாட்டு உறவுகளின் அறிவுரை, அதிக சிறுநீரகப்பிரச்சினைகளால் அறிந்தவர்,தெரிந்தவர், உறவினர் ஊரார்களின் அதிக அண்மைக்கால மரணங்கள் மக்களிடம் ஏற்படுத்திய விளிப்புணர்வு.. 2) கிணற்று நீர் கல்பிரதேசம் அல்லாத யாழின் மணல் பிரதேசங்களில் சவர்(மணல் கலந்த சிவப்பு நீர்) ஆக மாறிவருகின்றன.. இந்த பிரச்சினையால் அதிகம பாதிக்கப்படுவது தென்மராட்சி மற்றும் யாழ்நகரின் கடலை அண்டிய பிரதேசங்கள்.. 3) கல் பிரதேசங்களில் நிலத்தடி நீர் வற்றி வருவது, போதுமான தண்ணிர் கோடைகாலங்களில் கிடைக்காமல் போகிறது.. கிணறுகள் வற்றி சேறு சுரி மட்டத்தில் தண்ணி போய் நிற்கிறது குடிக்க முடியாமல் 4) இன்னும் ஆழமாக அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளில் உப்பு நீர்தான் அண்மைக்காலமாக அடிக்கப்பட்ட பெரும்பாலான குழாய்க்கிணறுகளில் உப்புத்தண்ணி வருகிறது..எங்கள் வீட்டில் கூட அண்மையில் அடித்த குழாய்க்கிணற்றில் இருந்து உப்பு நீர்தான் வந்தது.. பிறகு அதுக்குள் கல் மண் எல்லாம் கொட்டி ஆக ஆழத்தில் இருந்த ஊற்றை அடைத்த பொழுது உப்பில்லா தண்ணி மேல் ஊற்றில் இருந்து வருகுது.. அதுக்கு கிணத்து தண்ணியே வழமைபோல பாவிச்சிருக்கலாம்.. கிணத்து தண்ணியும் மேல் ஊற்றில் இருந்துதான் வருகிறது.. ஆனா அந்த தண்ணி(கிணறு, குழாய்க்கிணறு) தடிப்பு அதிகமாகவும் ஒருவித கடினசுவையுடனும் இருக்கு.. அநேகமாக எனக்கு தெரிந்த பலர் அடித்த குழாய்க்கிணருகளில் இதுதான் நிலமை.. உப்புத் தண்ணி.. இதன் அர்த்தம் நிலத்தடி நீர் உப்பாகிக்கொண்டு வருக்கின்றது யாழில் என்பதுதான்.. இன்னும் மிகக்குறுகிய காலத்தில் இது யாழ்முழுவதும் வந்துவிடும்.. ஏனெனில் நிலத்தடி நீர் ஓட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.. முந்திய காலத்தில் குழாய்க்கிணற்றில் உப்பு நீர் வருவது அரிதிலும் அரிது.. எங்கயாலும் ஒண்டுக்குதான் வரும்.. ஆனால் இப்ப 4 குழாய்க்கிணறு தோண்டினா 2 உப்புத்தண்ணி..
  7. பாஞ் அவர்களே! தலையங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒரே பிரச்சனை? எப்போதுமே தலையங்கத்தை குறை பிடிக்கிறீர்களே? தலையங்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் போலுள்ளதே. ம்... திரிஷாவை அங்கம் அங்கமாக ரசித்திருக்கிறார்.
  8. ஏன்….முன்பு கொழும்பில் சப்பாத்து பொலிஷ் போடும் தொழில் இருந்தது… சாப்பாடு வீட்டில் கட்டி எடுத்து போய் வேலையிடத்தில் கொடுக்கும் தொழில் இருந்தது… இலண்டனில் பஸ் கண்டக்டர் தொழில் இருந்தது, கரிசுரங்கத்தொழில் இருந்தது… பின் இல்லாமல் போனது. ஊரில் இப்போ மாட்டு வண்டி ஓட்டும் தொழில் இல்லை. எல்லாமும் மாறும், அழியும். சிலது அழியாது….சிகை அலங்காரம் போன்றவை…ஆனால் அதை எல்லோரும் செய்யும் தொழில் ஆக்காவிடில் அதுவும் அழியும். இப்போ சவரம் நாமே செய்வது போல் ஆகும் அல்லது வெளிநாடு போல் அதை சகல சாதியினரும் கற்று தொழிலாக செய்யும் நிலை வரும்.
  9. இப்படி ஒரு புத்திரனைப் பெற உங்கள் அப்பா அம்மா என்ன புண்ணியம் செய்தார்களோ?🙌
  10. உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் துடையமைப்பு அழகி போட்டி!
  11. அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார். ஒரு கருத்து என்பது அந்த நேரத்தில் அவர்கள் சொல்கின்ற கருத்துக்கு விமர்சனமே தவிர தனிநபர் விரமர்சனம் அல்ல. சீமான் அதை; சரியாகத் தான் செய்கின்றார். அண்ணாமலை, ஸ்ரானின் சொல்லுகின்ற, செய்கின்ற செயல் சரியாக இருப்பதாக அவர் நம்பினால் அதை ஆதரிகின்றார். இல்லை என்றால் எதிர்க்கின்றார். முத்தரசன் போல திமுக கொத்தடிமையாக திமுக செய்கின்ற அனைத்து தவறுகளையும் வாங்கிய 25 கோடிப் பணத்துக்காக அடவு வைக்கவில்லை
  12. உலகில் வாழும் அனைவருமே தமது வாழ்வில் ஓரிரு முறை முட்டாள்த் தனமான காரியங்களை செய்தே இருப்பார்கள். அது இயல்பானது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவித்த பின்னர் தமது வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நெகிழ்சசி தன்மையுடன் புத்திசாலித்தனத்தை பாவிப்பர். தனது இளவயதில் இளமைத் துடிப்பில் தெருவில் வேகமாக காரோட்டுவதன் மூலமோ drink and drive மூலமோ தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்த ஒருவர் பின்னர் கல்யாணமாகி தனது பிள்ளைகளுடன் காரில் செல்கையில் அவ்வாறு ரிஸ்க எடுத்து வேகமாக செல்லாமல் நிதானமாக வாகனமோட்டுவர். அது அவருக்கு அனுபவம் கொடுத்த பொறுப்புணர்சசி ஆகும். ஆனால், பிள்ளைகளுடன் செல்கையிலோ அல்லது ஒரு பொது போக்குவரத்து வாகனத்தை ஓட்டுகையிலோ, தன்னை நம்பி தனது வாகனத்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உருவாக்கும் வகையில் அதாவது தனது இளவயதில் நடந்து கொண்டதை போல் செய்பவரே முட்டாள் ஆவார். புதிய ஆண்டில் மகிழ்ச்சியுடன் பிரவேசிக்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கந்தையா.
  13. மற்றவனும் பழகத்தானே வேண்டும்.
  14. ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி நல்லாச் சவர்க்காரம் போட்டு பொச்சுமட்டைத் தும்பினால் முழங்கால் பகுதியை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டு வந்திருக்கலாம்!👀
  15. இந்த வருடத்தின் மிக மோசமான போட்டோசொப் படம். 😂 இதனை தயாரித்தவனுக்கு 100 சவுக்கடி கொடுக்க வேண்டும். 🤣
  16. 29 DEC, 2024 | 02:05 PM சீன அரசாங்கத்தினால் "சீனாவின் சகோதர பாசம்" என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன. சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார். திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/202448
  17. இலங்கையில்... வெள்ளம் வந்தது, இந்தியாவுக்கு தெரியாது போலை இருக்கு. 😀 தெரிந்திருந்தால்... அள்ளிக் கொட்டியிருக்கும். சீனாக்காரனின் சுறு சுறுப்பு... இந்தியரிடம் இல்லை. 🤣
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி குரோவர் பதவி, பிபிசி நியூஸ் டஹிடி தீவில், அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது. மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன? கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து? யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? அமெரிக்காவில் சூரிய கிரகணம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. முழு சூரிய கிரகணத்தின் ஊடாகப் பறக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அமைப்பு சூரியனின் (கொரோனா) பிரகாசமான வெளிப்புற விளிம்புக்கு இணையாக இருண்ட கோடுகளாகத் தெரியும். நிச்சயமாக, ஒரு விமானம், சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு குறுக்காகச் செல்வது இது முதல் முறை அல்ல. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. கடந்த 1925-ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். லாஸ் ஏஞ்சலஸ் கப்பலில் இருந்து தொலைநோக்கிகள் மற்றும் ஏழு விஞ்ஞானிகளுடன் வானூர்தி ஒன்று சூரிய கிரகணத்தை நெருக்கமாகப் பார்க்கும் நோக்குடன் பறந்தது. இந்த நிகழ்வு வரலாற்றில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்ட கிரகணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. நிலத்தில் இருந்து அமெரிக்க ஓவியர் ஹோவர்ட் ரஸ்ஸல் பட்லர் அந்தத் தருணத்தை, கலைஞர்களுக்கு ஓவியம் வரைய பயன்படுத்தும் ஈசல்(Easel) எனும் பொருளுடன் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் மூன்று குறிப்பிடத்தக்க கிரகணங்களை (1918, 1923, மற்றும் 1925) வரைந்து பின்னர் அவற்றை ஒன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சூரியனுடன் ஒன்றாக பிறந்த இரட்டையராக பார்க்கப்படும் இன்னொரு நட்சத்திரம் எங்கே?28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பாரிஸ் 2024 தொடக்கத்தில் டியோனிசியோ பட மூலாதாரம்,THOMAS JOLLY படக்குறிப்பு, பாரிஸ் 2024 தொடக்க விழாவில் நடந்த காட்சியை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதால் பல சர்ச்சைகள் கிளம்பின. கலையின் வரலாற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று. சில கிறிஸ்தவர்கள் மற்றும் பழமைவாதிகள் இந்த புகைப்படம் 'தி லாஸ்ட் சப்பர்'-ஐ சித்தரிக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு, மத நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துவதாகவும், புண்படுத்தும் படமாகவும் அதனை கருதினர். இந்தக் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டுக் குழு, இது லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்பை நினைவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், மாறாக 1635ஆம் ஆண்டு ஜான் வான் பிஜ்லெர்ட்டின் ஓவியமான "தி ஃபீஸ்ட் ஆஃப் தி காட்ஸ்" ("The Feast of the Gods") என்ற கிரேக்கக் கடவுளான டியோனிசஸை நினைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்தியது. சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 தெற்கு சூடானின் போக்குவரத்து மையம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வண்ணமயமான அச்சுகளுடன் கூடிய ஆடை தெற்கு சூடானில் பாரம்பரியமானது. பிப்ரவரியில் தெற்கு சூடானின் ரெங்க் பகுதியில் உள்ள போக்குவரத்து மையத்தில் நெரிசலான வரிசையில் சூடான் அகதிகள் உதவிக்காகக் காத்திருந்தார்கள். சூடானிய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தெற்கு சூடானில் கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. பலருக்கு அவசர உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டன. புலம்பெயர்ந்தோர் அணிந்துள்ள பிரகாசமான வண்ணத் துணிகள் அவர்களின் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் கஷ்டங்களுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை காட்டுகின்றன. இந்தப் புகைப்படம், புகழ்பெற்ற சூடானிய கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹுசைன் ஷெரிஃபின் படைப்புகளை நினைவூட்டுகிறது. அவரது ஓவியங்கள் அவற்றின் வடிவங்கள் மற்றும் செழுமையான அமைப்புகளுக்காக அறியப்பட்டவை. அவை காட்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான எல்லைகளை மங்க வைக்கும் கவிதை உணர்வை உருவாக்குகின்றன. இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 இந்தோனீசிய எரிமலை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இந்தோனீசிய எரிமலையான மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதாக அமைந்தது. எரிமலை அதன் சக்தி வாய்ந்த வெடிப்புகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வந்துள்ளது. சூடான எரிமலைப் பொருட்கள் மற்றும் சாம்பல், வானத்தில் தூக்கி எறியப்படுவதைக் காட்டும் சமீபத்திய புகைப்படம் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் மார்ட்டின் வரைந்த வியத்தகு மற்றும் தீவிரமான காட்சிகளைப் போலவே உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மார்ட்டின் தனது அபோகாலிப்டிக் ஓவியமான "தி டிஸ்ட்ரக்ஷன் ஆஃப் பாம்பீ அண்ட் ஹெர்குலேனியம்" எனும் ஓவியத்துக்காக கி.பி. 79இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பதைப் போலக் கற்பனை செய்தார். 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 டிரம்ப் மீதான தாக்குதல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். சில புகைப்படங்கள், குறிப்பிடத்தகுந்த நினைவுச் சின்னங்களாக மாறும் என்ற கணிப்பில் இயற்கையாகவே தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய தீவான ஐவோ ஜிமாவில் அமெரிக்க கொடி உயர்த்தப்பட்டது அல்லது 1968ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் வெற்றிக் களிப்பில் கைகளை உயர்த்தியது ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். அந்த இரண்டு படங்களையும் நினைவூட்டும் வகையில், ஜூலை மாதம், அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில், தனது வலது காதில் தோட்டா துளைத்ததைத் தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனது கரத்தை உயர்த்தியபடி தோன்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் இருந்த கொடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தருணமோ என்று பலரையும் வியக்க வைத்தது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 காஸாவில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023இன் பிற்பகுதியில் இருந்து, காஸாவில் பாலத்தீனர்களின் இடப்பெயர்வு பெரிய அளவில் உள்ளது. பிப்ரவரி 29 அன்று தெற்கு காஸாவில் நெரிசலான அகதிகளின் கூடாரங்களை அலங்கரிக்கும் விதமாக இரண்டு பாலத்தீன சிறுமிகள், ரமலான் பண்டிகைக்குத் தயாராகி, விளக்குகளை ஏற்றினர். அந்த விளக்குகளின் பிரகாசம், தொலைதூரத்தில் மறையும் சூரியனின் அமைதியற்ற இருளுக்கு எதிராக நின்றது. கோடையில் காஸாவின் 90% மக்கள் (சுமார் 20 லட்சம் மக்கள்) போரினால் இடம்பெயர்ந்தனர். சிறுமிகள் விளக்கு ஏற்றும் இந்தக் காட்சி ஜான் சிங்கர் சார்ஜென்ட்டின் புகழ்பெற்ற ஓவியமான "கார்னேஷன், லில்லி, லில்லி, ரோஸை"(Carnation, Lily, Lily, Rose) நினைவுபடுத்துகிறது. தென்மேற்கு பிரிட்டனில் அந்தி நேரத்தில் தென்படும் ஒரு நண்பரின் மகள்களை அந்த ஓவியம் சித்தரிக்கிறது. அவர் 1885ஆம் ஆண்டின் இலையுதிர்க் காலத்தில் பல மாதங்களாக அதை வரைந்தார், ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் வேளையில் அதன் ஒளியைச் சரியாகக் கவனித்து அதை வரைந்தார். அந்த ஓவியத்தில் விளக்குகளை ஏற்றும் இரண்டு இளம் பெண்கள் பசுமையான பகுதியில் மலர்களால் சூழப்பட்டுள்ளனர். அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற பச்சைப் புல், காட்டுப் பூக்கள் மற்றும் அமைதி மட்டும் இந்தப் புகைப்படத்தில் இல்லை. மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 டஹிடி தீவில் ஒலிம்பிக் சர்ஃபிங் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்பாராத விதமாக, மதீனாவின் புகைப்படம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்த ஒன்றாக மாறியது. ஜூலை 29 அன்று பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள டஹிடி தீவில் பிரேசிலியன் கேப்ரியல் மதீனா என்பவர் ஒரு பெரிய அலையில் சர்ஃபிங் செய்த பிறகு உயர எழும்பி வானத்தில் மிதப்பது போன்று செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் உடனடியாக வைரலானது. சர்ஃபிங் செய்யும் போது கேப்ரியல் மதீனா சிரமமின்றி காற்றில் மிதப்பது போன்று செய்தது மேற்கத்திய கலை வரலாற்றின் முக்கியமான பல மத கலைப் படைப்புகளை நினைவுபடுத்துகிறது. ஜியோட்டோ, ரெம்ப்ராண்ட், இல் கரோஃபாலோ மற்றும் சால்வடார் டாலி போன்ற கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும். அவரது வலது கை மற்றும் ஆள்காட்டி விரல், மதீனாவின் தடகள செயல் திறனுக்கும் மத நம்பிக்கை பற்றிய பார்வைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பைப் படம் பிடிக்கிறது. அவர் வானத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது, அவரது உடல் மற்றும் ஆவி இரண்டையும் மேல்நோக்கி வழிநடத்துவது போலத் தோன்றுகிறது. பசையை மென்று சாப்பிட்டு ஆதிகால மனிதன் கண்டுபிடித்தது என்ன?24 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 ஸ்பெயினைத் தாக்கிய டானா புயல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, நவம்பரில் டானா புயல் ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் எண்ணற்ற அழிவையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 30ஆம் தேதியன்று கடுமையான மழை காரணமாக வலென்சியா நகரம் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தது. ஒரு பெண் தனது பால்கனியில் இருந்து கீழே தெரிந்த காட்சியைப் பார்த்தார். அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிடந்தன. தெருக்களில் காணப்படும் காளைகளின் நெரிசலைப் போன்று அக்காட்சி தோற்றமளித்தது. புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. அக்டோபர் 30 அன்று, வெறும் எட்டு மணி நேரத்தில் 500 மிமீ மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான நிகழ்வுகளை உற்றுநோக்கும் பெண்ணின் இக்காட்சி, இத்தாலிய கியூபிஸ்ட் ஓவியரான கார்லோ காராவின், 1912ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓவியமான லா டோனா அல் பால்கோனின் சைமெல்டனெய்தா என்ற ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பில்லி எலிஷின் தோற்றம், நியூயார்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில்லி எலிஷ் நியூயார்க்கில் ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட் எனும் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். நியூயார்க்கில் இந்த ஆண்டின் மே மாதத்தில், தனது புதிய ஆல்பமான "ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட்" ஆல்பத்தை பில்லி எலிஷ் வெளியிட்டார். அந்த விழாவில், எடுக்கப்பட்ட பில்லி எலிஷின் புகைப்படம், ஒளி மற்றும் புகையால் சூழப்பட்டு, கனவில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரது உடல் மங்கலாகி, ஏறக்குறைய, கண்ணுக்குத் தெரியாத நிழற்படத்தை உருவாக்கியது. இந்தப் புகைப்படம், ஜே.எம்.டபிள்யூவின் புகழ்பெற்ற லைட் அண்ட் கலர் - தி மார்னிங் ஆஃப்டர் தி டெலுஜ் என்ற ஓவியத்தை நினைவூட்டுகிறது. சிரியாவில் நடந்த சிலை உடைப்புச் சம்பவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 9 2024 அன்று, சிரியாவில் முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை ஒரு பிரிவினர் காலால் உதைத்தனர். டிசம்பர் 9 2024 அன்று, முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை காலால் உதைத்து ஒரு பிரிவினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிரியாவில் பஷார் அல்-அசத் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த பஷர் அல்-அசத்தின் தந்தையான ஹஃபீஸ் அல்-அசத்தின் சிலைகள் வீழ்த்தப்பட்டன. அதிகாரத்தை இழந்துவிட்ட ஆட்சியாளர்களின் சிலைகளைக் கவிழ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒரு வகையான வகுப்புவாத உணர்வு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 டான்சர்ஸ் மீட்டிங், நியூயார்க் பட மூலாதாரம்,BESS ADLER படக்குறிப்பு, நியூயார்க்கில் 350 நடனக் கலைஞர்கள் இணைந்து கின்னஸ் சாதனை படைத்தனர். நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 350க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் போஸ் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர். பங்கேற்பாளர்களில் பலர் போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் நேர்த்தியையும் ஆற்றலையும் படம் பிடித்தது. எட்கர் டெகாஸ் எனும் பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் கலைஞர், பல இளம் பெண்கள் நடனமாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருப்பார். திறமையான நடனக் கலைஞர்களைப் பார்த்து மகிழ்ந்தது மட்டுமின்றி, அவர்கள் நடனமாடும் போது அவர்களின் மூட்டுகள் "உராய்வதால்" ஏற்படும் ஒலிகளிலும் அவர் ஒரு விசித்திரமான ஆர்வம் காட்டினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 சியோல் தேசிய சட்டமன்றத்தில் காவலர்களை எதிர்கொண்ட பெண் பட மூலாதாரம்,OHMYTV VIA AP படக்குறிப்பு, அஹ்ன் க்வி-ரியோங் தென் கொரிய காவலர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். தென் கொரிய பெண்ணான 35 வயது, அஹ்ன் க்வி-ரியோங், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். அஹ்ன் க்வி-ரியோங், சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்த ஒரு வீரரின் துப்பாக்கியை தைரியமாகப் பிடித்தார். அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தடுக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து அஹ்ன் க்வி-ரியோங் அவர்களுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது. "எனது ஒரே எண்ணம் நான் அவர்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான்" என அங்கு நடந்த மோதலைப் பற்றி அஹ்ன் பின்னர் கூறினார். "நான் அவர்களைத் தள்ளிவிட்டு, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்" என்றும் அவர் கூறினார். அஹ்ன் க்வி-ரியோங்கின் அசைக்க முடியாத உறுதியும், அவரது ஆடைகளின் பிரகாச ஒளியும் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் கில்பர்ட்டின், ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் வாட்டர் கலர் ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dqlnyy48eo
  19. உண்மையில் இது அவமானம் தான். ஆனால், இவ்வாறான சில்லறைகளை ஊக்குவிப்பதே விடுதலை போராட்டம் என்ற மாயை சில குறுகிய மனம் கொண்ட புலம் பெயர் வரட்டு தேசியம் பேசும் இனவாதிகளால் பரப்பப்படுகிறது. பாராளுமன்றத்தில் லூசுத்தனங்களை செய்துவிட்டு முகநூல் நேரலையில் “தமிழேன்டா” என்று கொலரை இழுத்து விடுகையில் அதற்கு விசிலடிக்கும் கூட்டம் அதே போல் ஒரு சிங்கள உறுப்பினர் பாராளுமன்றில் இதே போல “சிங்களவன்டா” என்று கொலரை இழுத்து விட்டிருந்தால் “ ஐயோ! ஐயோ! இனவாதம் என்று மூக்கால் அழுதிருக்கும். இவ்வாறான பித்தலாட்ட அரசியலே தமிழர் பிரச்சனை 75 வருடங்களாக இழுபடுவதற்குஉரிய காரணங்களில் முக்கியமானது.
  20. இப்படி கதைத்து இதை பெருப்பிக்காமல் ( இப்படி செய்தால் அர்ஜுனா மற்றும் அவரது எஜமான்களுக்கு வேலை சுலபமாகிவிடும்) பிரயோசனமாய் கதையுங்கோ. மேலே யாரோ சொன்னமாதிரி… யாழ்ப்பாண நிர்வழத்தை அதிகரிக்கிறமாதிரியான கதைகளை கதையங்கோ.. - குழாய்கிணறுகளை முற்றிலுமாக தடைசெய்தல் - ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மழைநிர் வாய்க்கால்கழை தூர்வாரி புனரமைத்தல் ( அம்பட்டன் பால வாய்க்கால் which takes the water to nanthavil) - ந்ந்தாவில் மாதிரியான இயற்கை retention basin’s கனவளவை மாறாமல் காத்தல் - இப்ப காணிகளின் அளவு குறைந்து வருவதால் கழிப்பிடங்கள், கிணறுகளுக்கு அருகாமையில் கட்டப்பட்டு கிணற்று நீரை மாசு படுத்திகிறார்கள், இதை தடை செய்ய வேண்டும் அதற்கு, permanent sewerage systems need to be implemented rather have septic system.
  21. ஐயா! நீங்கள் கூறியதற்குத்தான் பதிலளித்தேனே தவிர அதைவிட தவறாக நானேதும் கூறவில்லையே. ம்..... செய்வது மனித படுகொலை. இதில ஜீவ காருண்யம் பேச்சு, செய்த தவறுகளை மறைக்க. போகப்போக உலகநாடுகளுக்கு தர்ம சிந்தனை போதிக்குது இலங்கை. ஐ . நாவிலே தனது குற்றத்தை மறைத்து பேய்க்காட்டிக்கொண்டு.
  22. யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.
  23. ஆரோ ஒருத்தன் மணியாய் யோசிச்சிருக்கிறான் 😂
  24. அர்ச்சுனாவையும், அண்ணாமலையையும் ஒப்பிடுவது… பெருமாளையும், பெருச்சாளியையும் ஒன்றாக ஒப்பிடுவதற்குச் சமனானது போல் தோன்றுகிறது.🤪
  25. எம்.ஜி.ஆரின் சமாதிக்குள் இருந்து, மணிக்கூடு "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக... இன்றும் ஒரு நம்பிக்கை உள்ளது ரசோதரன். 😂 ####### ########### ##### எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-1136951
  26. கிந்தியா இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் தான் வல்லரசு.😋 சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அல்ல... மாலை தீவுகூட கிந்தியாவை மதிப்பதில்லை. 😁
  27. தமிழருக்குள் சண்டையை மூட்டி குளிர் காயும் நபர்கள் சார்ந்து மிக மிக கவனமாக இருங்கள்.
  28. தமிழருக்குள் கொம்புசீவுவதில் வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  29. குரங்கு ஏற்றுமதியை அரசு பரிசீலிக்கும்… அமைச்சர் லால் காந்த. https://www.dailymirror.lk/breaking-news/Govt-ready-to-resume-discussion-on-exporting-Toque-monkeys-Minister/108-297900 பிகு அடுத்த முறை ஊருக்கு வலு அவதானமா போகவேணும். பிடிச்சு சைனாவுக்கு ஏத்தி போடுவாங்கள்🤣.
  30. எப்படி இந்த பிபிசி கணக்கெடுத்தது. குளிரிலும்,இஸ்ரேலின் குண்டிலும் மடியும் இதுபோன்ற குழந்தைகளை உலகுக்குத் தெரியவில்லையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.