Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்19Points87990Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்13Points7051Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46790Posts -
நியாயம்
கருத்துக்கள உறவுகள்6Points2138Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/14/25 in Posts
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தம்பி, கேக்கிறது தனிபட்ட தேவைக்காக இல்லை. நீங்கள் எப்ப ஊரில் இருந்து புலம் வந்தீர்கள்? 2010??😎3 points
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
😂🤣 அருமையான காரணம்! 2009 இலும் நீங்கள் சிறுவனா? அந்தக் காலப் பகுதியில் தானே ஆட்கள் காணாதென்று புலிகள் வலுக்கட்டாயமாக ஆட் சேர்த்தார்கள்? வெளிநாட்டிலிருந்து கூட சிலர் போனார்கள் என்று அறிந்தேன். இந்த சொத்தைக் காரணங்களை வைத்துக் கொண்டு "ஏனையோர் தப்பி வந்த கோழைகள், நான் சின்னப் பையன்" என்று அளக்காதீர்கள். சீமான் என்ற வாய்வீச்சு, தமிழக சராசரி அரசியல் வாதியை, நேரடியாக ஆயுதம் தூக்கா விட்டாலும் கூட துன்பங்களை அனுபவித்த ஈழவர்களோடு ஒப்பிட்டு ஈழ மக்களை அவமானம் செய்யாதிருங்கள்.2 points
-
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” !
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும் உரைவடிவில் எழுதியும், உரைச்சித்திரமாக வெளியிட்டும், சிலப்பதிகாரம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், பட்டி மன்றங்களை, வழக்காடு மன்றங்களையும் நடத்தியும் உள்ளவன் என்பதால், அந்த ஒப்பற்ற காப்பியத்தில் எனக்குள்ள ஒரளவு பரிச்சியத்தின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடனும், அங்கலாய்ப்புடனும் இரண்டாம் நாள் அரங்கேற்றத்தின்போது, மண்டபத்தின் மத்தியில் வசதியான பார்வைக் கோணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். குறிப்பிட்டபடி, சரியாக பி.ப. 5.30 மணிக்கு, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவித்தல் கம்பீரக் குரலில் ஒலித்தது. மங்கல விளக்கேற்றும் சம்பிரதாயமான நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறைவு பெற்றதும், “திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ் அம்கண் உலகு அளித்த லான்” என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப்பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்! மேடையில் அடுத்ததாக என்ன நடைபெறவிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் காட்சிகளுக்கு இடையே கதைசொல்லியாக பேச்சுக் கலையில் திறமைமிக்க இரண்டு இளம்பெண்கள், ஒருவர்மாறி ஒருவர் தோன்றி, தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம்கொடுத்துக்கொண்டிருந்தனர்.இடையிடையே, கூத்தில் கட்டியங்காரன் வருவது போல, நடனமணிகளின் நடனம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே, பின்னணிப் பாடல்களுடன் அழகிய காட்சிப்படுத்தலாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. சிலப்பதிகாரம் உண்மையில் ஒரு நாடகக் காப்பியமே. அதன் முதலாவது அங்கம் கோவலன் கண்ணகி திருமணமே!அவ்வாறே, இந்த நாடகமும், இனிய பாடல்களின் பின்னணியோடு அழகாக நடனம் ஆடியவாறு நடனமணிகள் அந்தத் திருமண அறிவித்தலைப் பூம்புகார் நகர மக்களுக்கு அறிவிப்பதில் இருந்து தொடங்குகிறது. திருமண அறிவிப்பு சிறப்பாக நடந்தது. “கோவலன் வந்தான் அவைக்குக் கோவலன் வந்தான் என்றும், கண்ணகி வந்தாளே அவைமுன்னே கண்ணகி வந்தாளே”என்றும் கோவலனும் கண்ணகியும் முதன்முதலில் மேடையில் தோன்றும்போது, கூத்து மரபின் அடிப்படையில், பாடிக்கொண்டே தம்மை அறிமுகம் செய்து ஆடிவருகின்ற காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. திருமணத்தின் பின்னர் கோவலனும் கண்ணகியும் மங்கல மன்றலில் மகிழ்ந்திருக்கும் வேளையில், கோவலன் கண்ணகியைப் புகழ் மொழிகளால் பாராட்டுவது சிலப்பதிகாரத்தில் மிகவும் சிறப்பான பகுதி. அப்போது கோவலன் சொல்வதாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாடல், “மாசறு பொன்னே வலம்புரி முத்தே…”என்று தொடங்குகின்றது. இந்தப்பாடல் காதல் உணர்வோடு பாடப்படவேண்டியது. காதல்பாடல்களுக்குரிய மெல்லிசையில் பாடல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணமாக “தர்பாரி கானடா” இராகத்தில் பாடியிருக்கலாம். அதற்கேற்றவாறு, மிகவும் இயல்பான முகபாவமும், மிகைப்படாத அபிநயமும் இருந்திருந்தால் காட்சிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். கூத்துப்பாடல் போலத் துள்ளல் இசையில் பாடலும், அதற்குரிய அபிநயமும் இடம்பெற்றிருப்பது முதலிரவன்று கோவலனும் – கண்ணகியும் கதைபேசி மகிழ்ந்து குலாவியிருக்கும் காட்சியோடு ஒன்றிணையவில்லை என்பதுடன், பாடலின் பொருளுக்கும் பொருந்துவதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இற்றைக்கு 1800 வருடங்களுக்கு முன்னர், காவிரிப்பூம் பட்டினம் என்று சொல்லப்படும் பூம்புகார் என்ற துறைமுக நகரத்தில், இந்திரவிழா எப்படி நடைபெற்றது என்பதை, சிலப்பதிகாரத்தை நன்கு படித்தறிந்தவர்களும்கூடக் கற்பனை செய்திருக்க முடியாத அளவுக்கு, மேடையிலே அழகாக, கச்சிதமாக, என்றுமே மனதை விட்டு அகலாத வகையில் நம்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்திர விழாக்காட்சியைப் பார்க்கிறோமா அல்லது அதில் கலந்துகொண்டிருக்கிறோமா என்ற மயக்க உணர்வில் சிலநிமிடங்கள் நம்மை நாமே மறந்திருந்தோம். இந்திரவிழா, மாதவி தாளம்பூவின் மடலில் கோவலனுக்குக் கடிதம் எழுதி வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்பும் காட்சி, கோவலன் – கண்ணகி மதுரைப் பயணம், காளி கோவில் காட்சி, கோவலனை அடையாளம் காண்பதற்காகக் கௌசிகன் மாதவிக் கொடியிடம் பேசுவதும், அடையாளம் காணலும், குரவைக்கூத்து, கண்ணகி அரண்மனை செல்லல், பாண்டிய மன்னனின் அரண்மனைக் காட்சிகள், எல்லாம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தன. கோவலனுக்குச் சோறு படைக்கும்போது, “பனை ஓலையிலே செய்யப்பட்ட பாயிலே கோவலனை அமரவைத்து, நிலத்தின் வெப்பத்தைப் போக்க நீர் தெளித்து, அதில் வாழை இலைபோட்டு, அந்த வாழை இலையிலே சோறு படைத்தாள்”என்று சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதை அப்படியே காட்சியாகக் காட்டியிருப்பது அற்புதம். ஆம்! பாயிலே கோவலன் அமர்ந்திருக்கிறான், அந்தப் பாயிலே இலை போடப்படவில்லை. இலை தரையிலே போடப்பட்டிருந்தது! இவ்வளவு நுணுக்கமாக சிலப்பதிகாரத்தின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்தியிருப்பதை எண்ணும்போது எப்படிப் பாராட்டுவது என்று வார்த்தைகளைத் தேடவேண்டியிருக்கிறது. கொலைக்களக் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்தது. கோவலன் கொல்லப்பட்டபோது பார்வையாளர்களைப் பரிதவிக்க வைத்துவிட்டது. கோவலனும், பொற்கொல்லனும், காவலர்கள் அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருந்தார்கள். யாராவது ஒருவரின் செயற்பாடு கண் இமைக்கும் பொழுதாயினும் முந்திப் பிந்தி ஆகிவிட்டிருந்தால் முழுக் காட்சியுமே நகைப்புக்கு இடமாகிவிடக்கூடிய, சவாலான விடயங்களை, மிகவும் வெற்றிகரமாக நிறவேற்றியிருந்தார்கள். கோவலனை வெட்டிய காவலனை மறக்க முடியவில்லை. (கண்டால் யாரும் வரச்சொல்லுங்கள்!) கோவலன், கண்ணகி பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். அதிலும், இந்த நாடகத்தின் கோவலனைப் பார்த்த பின்னர், இது வரையில் கற்பனையாக நம் உள்ளத்தில் நீண்டகாலமாக இருந்த கோவலனின் உருவமும், பூம்புகார் திரைப்படத்தில் கோவலனாக நாம் பார்த்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களது தோற்றமும் நம் மனதை விட்டு மறைந்து விட்டதுடன் இந்தக் கோவலனின் உருவமே அழுத்தமாகப் பதிந்துவிட்டது. சற்றுக் குனிந்தவாறான நடையும், பக்கவாட்டில் தலைசாய்ந்து நோக்கும் சுபாவமும் கொண்ட இந்த நடிகரின் தோற்றமும், அவரது இயல்பான அழுத்தமான நடிப்பும், அந்தக் கோவலனும்இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற உணர்வை நாடகத்தைப் பார்க்கும்போது தந்தது மட்டுமன்றி இப்போது நிலையாகவும் நம் நெஞ்சத்தில் பதிந்து விட்டது. கண்ணகி பாத்திரத்தை ஏற்றிருந்தவரை, கண்ணகியைத் தவிர்த்துத் தனியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. மாதவியிடம் இருந்து மீண்டு திரும்பிவரும் கோவலனை விரும்பி உபசரிக்கும் போதும், ஏதும் அறியாதவளாகக் கோவலன் பின்னால் மதுரைக்குச் செல்லும்போதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து, வெம்பி வெடித்து, வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த போதும், சின்னச் சின்ன உடல் மொழிகளைக்கூட அற்புதமாக அவர் வெளிப்படுத்தியிருந்தமை, இந்தச் சிறிய வயதில் இப்படியோர் அசாத்தியத் திறமையா என்று வியந்து பாராட்டவைத்தது. மதுரையை எரித்த காட்சியின்போது, கண்ணகியோடு கையிலே எரிதழல் கொண்டு நாமும் உடன் செல்வதுபோன்ற உணர்வில் காட்சியிலும் கானத்திலும் கலந்துவிட்டிருந்தோம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் தரவேண்டியது சொல்லவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன். அதாவது, கோவலன் பிரிந்து சென்ற பின்னர், “மங்கல நாண் மட்டுமே” இருக்க மற்றெல்லா நகைகளையும் கண்ணகி துறந்தாள்” என்று நாடகத்தில் பாடலில் சொல்லப்படுவதை “மங்கல அணி மட்டுமே” என்று மாற்றுவது நல்லது. “மங்கல அணியின், பிறிது அணி மகிழாள்……….” என்றுதான் சிலப்பதிகாரம் சொல்கிறது. மங்கல நாண் என்றால் அது தாலி என்று பொருள் படுகிறது. திருமணத்தில் கண்ணகிக்குத் தாலி கட்டப்பட்டதாகவோ, வேறெந்த ஒரு சமயத்திலாவது அவள் தாலி அணிந்திருந்ததாகவோ செய்திகள் இல்லை. மாதவி சிலப்பதிகாரத்தில் பெரிதும் பேசப்படவேண்டிய தனித்துவம் மிக்கதொரு பாத்திரப் படைப்பு. இந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்த மாதவிக்கான பகுதிகளை, அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் சிறப்பாகப் பூரணப்படுத்தியிருந்தார். அதிலும், கோவலனின் பாடலைக் கேட்டு, மாதவி சந்தேகப்படும் போது அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நாடகத்தில், மாதவியின் நாட்டியப் பகுதி போதுமானதா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது. இந்திர விழாவில் மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற ஆடற்கலைச் சிறப்பின் உச்சம். எனவே, பார்வையாளர்கள், மண்டபத்தை விட்டு வெளியேறும்போது கண்ணகியின் சீற்றத்தை மட்டுமல்லாமல், மாதவியின் ஆட்டத்தையும் நெஞ்சில் சுமந்து செல்லக்கூடியதாக விறுவிறுப்பான ஒரு நடனத்தைக் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது அதில் இடம் பெறவைத்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு நமக்கு வருகிறது. பாண்டிய மன்னனும், பாண்டிமாதேவியும் அரண்மனையில் நடன நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியிலும், கண்ணகி வழக்குரைக்கும் போதும், பாண்டியன் உயிர் துறக்கும் போதும், பாண்டிய மன்னனின் நடிப்பு அருமையாக இருந்தது. பாண்டிமாதேவியின் கண் அசைவும், முகபாவமும், நடையழகும் மிகச் சிறப்பாக இருந்தன. இரண்டு பாத்திரங்களையும் ஏற்றிருந்தவர்கள் அந்தப் பாத்திரங்களின் கனதியை நன்கு உணர்ந்து, உள்வாங்கி, வெளிப்படுத்தியிருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் வில்லன் பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அரண்மனைப் பொற்கொல்லனே அந்த ஒரேயொரு வில்லன். அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பொருத்தமானவராகவே இருந்தார். தனக்குள்ள சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, ஒரு விடயத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சற்று நகைச்சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஊட்டக் கூடியவிதமாக அவரின் உடல் மொழிகள் சில இடங்களில் வெளிப்பட்டமை பொருத்தமாக இருக்கவில்லை. “கோவலன் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவனை மரண தண்டனைக்கு ஆளாக்கிவிடவேண்டும், அதன்மூலம், தான் களவு செய்த சிலம்பைத் தனக்கே சொந்தமாக்குவதுடன், தனக்கு வரக்கூடிய உயிராபத்திலிருந்து தப்பிக்கொள்ளவும் வேண்டும்” என்று நன்கு திட்டமிட்டுத் தன் பேச்சாலும், செயலாலும் இயங்கிக்கொண்டிருக்கும் பொற்கொல்லனது மகா வில்லத்தனத்தைப் பார்த்து, பார்வையாளர்களின் உள்ளங்களில் அவன்மீது கடுமையான கோப உணர்ச்சி மட்டுமே எழவேண்டும். அவரைப் பார்க்கும்போது யாருக்கும் ஒரு சிறு புன்னகை வருவதற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதுதான் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம். நாடகத்தின் காட்சிகள் நகரும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தன. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைக் களங்கள் நமது மனக்கண்களில் தோன்றுவதைப்போலவே அப்படியே மேடையில் காட்சியமைப்புகள் அமைந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பாக என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மேடையில் பின்னணிக் காட்சிகள் அழகான வண்ணங்களில் மிகவும் நேர்த்தியாக இருந்தன. இசையமைப்பு இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னுமளவுக்கு அருமையாக இருந்தது. காட்சியமைப்பும், இசையமைப்பும் பெரும்பாலும் எல்லாக் காட்சிகளிலுமே, உயிரோட்டத்துடன், மிகவும் அருமையாக இருந்தமை பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. இன்றைய சமூகத்திற்கு, சிலப்பதிகாரத்தை, அதன் உண்மைத் தன்மைகளை அப்படியே உணர்த்தும் வகையில், உயிரோட்டமுள்ள காட்சிகளாக வெளிக்கொணர்ந்தமை ஒரு சாதனையே! சிலப்பதிகாரம் என்ற அந்தச் சிறப்பான காப்பியத்தில் உள்ள முக்கியமான எந்த காட்சியும் நழுவி விடக்கூடாது என்றும், மூலக் காப்பியத்தின் செய்திகளுக்கு எந்த வழுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் மிகவும் கவனமாகவும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், இயன்றவரையில், அக்கறையெடுத்து இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் அடங்கியதாக இந்தப் படைப்பை ஆக்கியளித்திருக்கிறார்கள். அத்துடன், எண்பதுக்கு மேற்பட்ட கூத்து மெட்டுப் பாடல்களின் ஊடாக, இந் நாடகம் நகர்த்திச் செல்லப்பட்டிருகிறது என்பதும் ஒரு வியத்தகு செயற்பாடாகும். நாற்பதிற்கும் மேற்பட்ட நடிகர்களும், இருபதிற்கும் அதிகமான இசை, வாத்திய மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களும் இந்த நாடகத்தில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பின் உச்சத்தில் முக்கில் விரல் வைத்து நிற்கின்றோம். இத்தனை பேரையும், அதுவும் இந்தநாட்டில்…..எப்படி? இதுவும் ஒரு சாதனையே…..உண்மையில் இதுதான் பெரிய சாதனை! இந்த நாடகத்தில், பங்குபற்றி, தமது பாத்திரங்களை உணர்ந்து, அதற்கான பயிற்சிகளிலும், ஒத்திகைகளிலும், ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இறுதியில் எல்லோரும் பெருமைப்படும்படியாக நடித்த நடிகர்கள், பண்பட்ட பின்னணிப் பாடகர்கள், திறமையான இசைக் கலைஞர்கள், மிகச் சிறந்த காட்சியமைப்பு விற்பன்னர்கள், கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர்கள், அனுபவம் மிக்க ஓலி, ஓளிக் கலைஞர்கள் என்போருடன், அக்கறை யோடு செயற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய எல்லோரும் விருப்புடன் உவந்தளித்த பங்களிப்பின் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பியத்தை, மேடையிலே வெற்றிகரமாக உலவவிட்டுச் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை இதன் வெற்றி நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. இதனை எழுதித் தயாரித்தவரான பாரதி பள்ளி நிறுவனரும், பிரபல நாடகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன் அவர்களையும், இதனை நெறியாள்கை செய்திருந்த பகீரதி பார்த்திபன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இத்தகைய சிறப்பான படைப்புக்காக அவுஸ்திரேலியத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லோரதும் நன்றி கலந்த பாராட்டுக்கு இவர்கள் எல்லோரும் உரித்துடையவர்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” ஆகிய மூன்று பெரும் அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது. இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம். இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு கலைப் படைப்பைப் பார்க்கக் கிடைத்த பாக்கியசாலிகள். பார்க்காதவர்கள், பார்க்கக்கூடிய இடத்தில் மீண்டும் இந்த நாடகம் மேடையேற்றப்படுமானால், தவறாமல் சென்று பார்த்து மகிழுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க தமிழ், வாழ்க சிலம்பின் புகழ்! https://arangamnews.com/?p=116142 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
புறநானூறில் இருந்து சங்க கால தமிழர் பொங்கல். புறநானூறு 168 வது பாட்டு அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும். காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர். அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை அதில் ஊற்றிப் புன்கம் (பொங்கல்) சமைப்பர். சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும். வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.2 points
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
2 pointsஅதாவது பதிவு செய்து நான் சென்றால் ஸ்டாலின் மேடையின் ஓரத்திலும் நான் மேடையின் நடுவில் விழாத்தலைவரின் பக்கத்திலும் நிற்போம் என்கிறீர்கள்? விமானங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வரை பணத்திற்கேற்ப படிநிலை வரிசை இருக்கும் போது உங்களுக்கு புங்குடுதீவு அதுவும் 80 களில் நடந்தது ஞாபகம் வருகிறது என்றால்..... அதுவும் புங்குடுதீவு முதலாளி. இதன் அர்த்தம் எனக்கு மட்டுமல்ல இங்கே எல்லோருக்கும் தெரியும். இனி மேல் மதம் சாதி பிரதேசவாதம் சார்ந்த கருத்துருக்களை எழுதும் தகுதியை இழந்தநிலையை நீங்களாகவே ஏற்படுத்தி விட்டீர்கள். இந்த பழிவாங்குவது மற்றும் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவது எல்லாமே உங்கள் தவறை மறைக்க தொடரும் நாடகங்கள் தான். அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனங்கள் பெரிதாக உறைப்பதில்லை காரணம் நீங்கள் அதுக்கு முதலே இங்கே அதை விட பலமடங்கு அதிகமாக எல்லோருடனும் சொறிந்துள்ளீர்கள். தொடருங்கள். நீங்கள் அம்மணமாக நிற்கும் வரை.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கை அகதிகள் விடயத்தில் இந்தியாவின் செயல்கள், கொள்கை இந்தியாவிற்கே அவமானம்.2 points- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
2 pointsஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பாவித்து கொள்ள வேணும் என்று பாடம் எடுப்போம் ...அப்படி அவர்கள் முண்டியடித்து படம் எடுத்தால் உடனே திட்டுவம் ... அணுராவுக்கு மத்திய அரசு செம்கம்பள வர்வேற்பு கொடுத்தல்லோ ...அப்ப எங்கே போனது கடற்தொழிலார்களின் ஆவேசம் ,கோபம்,காட்டம் எல்லாம் எங்கன்ட எம்.பி மாருக்கு இந்த வ்ரவேற்பை ஸ்டாலின் கொடுத்ததே பெரிய விடயம்.. .. அன்று எம்.ஜி.ஆர் தொடக்கம் இன்று ஸ்டாலின் வரை தமிழ் மக்களை பொறுத்தவரை ..படம் எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது...2 points- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சரியாகச் சொன்னீர்கள்👍. இலங்கையில் இருந்து பல்வேறு விசாக்கள் வழியாக அமெரிக்கா வந்து (சிலர் அசைலம் மூலம் கூட வந்து, மாமன் மச்சானையெல்லாம் கூப்பிட்டு, பல்கிப் பெருகியிருக்கின்றனர்) பிரஜையான எம்மவர் பலர், ட்ரம்பிற்கு வாக்குப் போட்டிருக்கின்றனர். காரணம் குடியேறிகளைப் பிடிக்காது என்கின்றனர். "கமலா கறுப்பினம்" என்பதால் பிடிக்காதாம் என்றும் சிலர் சொல்கின்றனர். "1960 களில் MLK Jr. உயிரைக் கொடுத்துப் பெற்றுத் தந்த சிவில் உரிமைகள் சுவறியதால் தான் நீங்களே இன்று பாதுகாப்பாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்!" என்று சுட்டிக் காட்டினால் இல்லையென்று மறுக்கும் அளவுக்கு "அறிவிழந்த, வாசிப்புமற்ற" வெற்று மண்டைகளாக விழிக்கின்றனர்😎!2 points- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 pointsஇது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை. SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள். எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம்.2 points- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வெளிநாடுகள் அகதிகளாக ஏற்றுகொண்ட மக்களுக்கு நிரந்தர வதிவுடமை, குடியுரிமை ஆகியவற்றை கொடுக்கின்றன. இந்தியா இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்த வாய்ப்புக்களை வழங்கவில்லை. இந்தியா தனது இந்த கொள்கையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.2 points- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இலங்கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கல் கொண்டாடுவதில்லை. இதுதான் என்னுடைய செய்தி. பண்டைய கிரேக்கர்களும் எகிப்தியர்களும் சூரிய வணக்கம் செய்தார்களே ஒழிய வேறொன்றும் இல்லை. சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் என்றால் அது சைவர்களுக்கே உரியது.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
கருநாநிதிக்கும் இடை சுகம் விருப்பமாம். அதிலும் குஷ்புக்கு என்றால் ஸ்பெசல் விருப்பமாம்... 😁1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
புகையிலைக் கன்றுக்கு தலைப்பு முதல் முறிக்கும் பொழுதும் பொங்கல் வைப்பது எங்கள் ஊரில் வழமை. விவசாயீகள் அடிக்கடி போங்குவார்கள். உழவர்திருநாள்தானே பொங்கல். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.1 point- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
நான் நினைக்க வில்லை புத்தன் மாமா அனுராவை ரம் அழைக்க வேண்டிய அவசியம் ரம்புக்கு இல்லை என நினைக்கிறேன் கொழும்பில் பாதி நிலபரப்பு சீனாவின்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் போட்டி மோதல்கள் இனி வரும் காலங்களில் இலங்கை எப்பவும் சீனா பக்கம் தான்.....................மகிந்தாவையே உபாமா சும்மா பார்த்து விட்டு அனுப்பி வைச்சவர் அங்கு இலங்கை அரசுக்கு ராஜ மரியாதை கிடைப்பதில்லை😁.................................1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஓம் பையன். பாம்பு படம் எடுக்கிற கதை எனக்கும் சொன்னவை. 😂 மேலே படத்தில் உள்ள மாதிரித்தான்... பாம்பு படம் எடுத்து வைத்திருக்கும் என்று, கனகாலம் நம்பிக் கொண்டு இருந்தனான். 🤣1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இன்னும் முடியவில்லையா இந்த பஞ்சாயத்து.😂1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஇங்கே சிலர் பாலர் பாடசாலையை எட்டித்தானும் பார்க்கவில்லை என்று புரிகிறது. 🥺1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஓ.... இப்படி செல்பி எடுப்பதைத்தான், இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக... சுமந்திரனும், சாணக்கியனும் ஊருக்குள் சொல்லிக் கொண்டு திரிகிறார்களா. அவர்கள் இலங்கைக்கு திரும்பி வருவதற்குள், அவர்களின் தில்லாலங்கடி செய்திகள் வேகமாக... தாயகத்தை நோக்கி வந்து விட்டமை மகிழ்ச்சி. இது இணையத்தள காலம். எங்கும் பேய்க்காட்ட முடியாது என்பதை... அவர்களுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது! பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை உருவான கதை: பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியைஇ புதுப்பானையில் பொங்கலிட்டுஇ தோட்டத்தில் விளைந்த இஞ்சிஇ மஞ்சள்இ கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்துஇ நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டுஇ பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள். பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள். பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாளில் போகி பண்டிகையும் இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையும் மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கலும் நான்காவது நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதற்கமைய போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை – இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்ற பெயரும் உள்ளது. புதுப்பானை எடுத்துஇ மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டிஇ புதுப் பாலில்இ புது அரிசியிட்டுஇ வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். மாட்டு பொங்கல்: உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்துஇ வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கபடுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். காணும் பொங்கல்: காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள்இ உறவினர்களை சந்திக்கும் நாளாகும். பெண்கள் தங்களுடைய சகோதரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கன்னி பொங்கல்இ கணு பொங்கல்இ காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். பொங்கல் விளையாட்டு: பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று காலம் காலமாக கபடிஇ சிலம்பம்இ உறியடிஇ மாட்டு வண்டி பந்தயம்இ ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும். தமிழர்களின் திருநாளாக உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைஇ தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால்இ தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன்இ தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். https://athavannews.com/2025/14162891 point- பொங்கல் சிரிப்புகள்.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
பல வருடங்களாக எந்த வித ஆதரவும் இல்லாமல் சிறிலங்காவுக்கு தங்களை திருப்பி அனுப்ப கேட்டவர்களையே அனுப்பவில்லை தமிழ்நாடு அரசு. இதற்குள் எமது அரசியல் வியாதிகளின் செல்பிக்கு மட்டும் குறைவு இல்லை.1 point- புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
Mobile phone app ஆகப் பாவிக்கக் கூடிய வகையில் இந்த அடையாள அட்டையை தயாரிக்கவும்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதாவது தொடர்சசியாக துப்பாக்கிகளுடன் நின்று தான் தமிழரிடம் அரசியல் செய்ய முடியும் என்று நீங்கள் கூறும் அளவுக்கு ந்தமிழ் சமூதாயம் நாகரீகமற்ற சமுதாயம் என்று நான் நம்பவில்லை. துப்பாக்கியுடன் நின்றே ஒரு இனத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த இனத்துக்கு தன்னாட்சிக்கான எந்த தகுதியும் இல்லை.1 point- உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் முரண்டு பிடித்த 'ஹிட்லர்' - என்ன நடந்தது? படக்குறிப்பு,மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த ஹிட்லர் என்ற மாடு 14 ஜனவரி 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 12 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இரண்டாவது சுற்றில் காளை குத்தியதில் இடுப்பில் காயமடைந்த மாடு பிடி வீரர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டில் 12 பேர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்பது நபர்கள் வீடு திரும்பி விட்டனர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி தற்போது வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம் 10 நாள் விடுமுறை, 10 படங்கள்: பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்களும் அவற்றின் கதையும் தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன்? தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது? முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். இரண்டாம் சுற்றில் விளையாடிய திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவர் இடுப்பில் காலை குத்தியதில் காயமடைந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சேது ராஜன் என்பவர் வாடிவாசலில் தனது காளையை அவிழ்க்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக காலில் அரிவாள் வெட்டியதில் காயமடைந்தார். தற்போது அவனியாபுரம மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறிய அளவில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். ஜல்லிக்கட்டு விதிகளை மீறி 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மாடு பிடிக்கும் வீரர்கள் இடையே இருப்பதை கண்டறிந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை வெளியேற்றினர். படக்குறிப்பு,மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6:30 மணிக்கு துவங்கியது. 'ஹிட்லரால்' அரைமணி நேரம் தடைபட்ட ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த 'ஹிட்லர்' என்ற மாடு வாடிவாசல் பாதையில் 10 நிமிடம் படுத்துக்கொண்டதால் கால் மணி நேரம் மாடுகள் வெளிவருவதில் தடங்கல் ஏற்பட்டது. வெளியே வந்த பின்னும் படுத்துக்கொண்ட அந்த மாட்டை காவல்துறையினர் வெகு நேரம் போராடி வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்நடை பராமரிப்பு துறையின் அவசர சிகிச்சை வாகனம் கொண்டுவரப்பட்டு மிகுந்த சிரமத்துக்குப்பின் மாடு ஏற்றிச் செல்லப்பட்டது. முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. படக்குறிப்பு,முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. போட்டி நேரம் நீட்டிக்கப்படுமா? அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும். டிராக்டர், கார் - காத்திருக்கும் பரிசுகள் போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரு அண்டா, ஒரு வேஷ்டி பரிசாக வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் உற்சாகம் போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால மருத்துவ தேவைக்காக குழுக்களும், கால்நடை மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgrn0q1r791o1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தமிழில் படித்து விட்டு, அப்பாவின் கட்சி மேடை ஏறாமல் வேறு தொழில் செய்தால் இரெண்டு விமர்சனமும் வராதே உறவே.1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointசீமான் ஏன் மனம் உடைந்து போகனும்....................சீமானை முதல் கரும்புலி மில்லரின் அம்மா தொட்டு மற்றும் சில அரசியல் வாதிகள் கடந்த காலங்களில் சந்திச்சு இருக்கினம் இந்த கேப்மாரியல் ஸ்டாலின சந்திச்சு ஈழ மண்ணில் ஏதும் நன்மை நடந்துவிடப் போகுதா முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அத்தனை ஆன்மாக்களும் இவங்களை மன்னிக்காது😉.................................1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஇதுதான் தமிழனுக்கு வந்த சோதனை.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அருமை.... இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர். கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஇப்படி ஸ்டாலினுடன் படம் எடுப்பதற்கு ஈழதமிழர்களின் தலைவர்கள் முண்டியடிப்பதை சீமான் பார்த்தால் மிகவும் மனம் உடைந்து போய்விடுவார் தானே1 point- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
1 pointஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு. அழைப்பிதழில் ஒருவரது பெயர் போட அவரது அனுமதி பெறவேண்டும். ஒரு விழாவில் பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர், விழாத்தலைவர் என்பதெல்லாம் அதற்கேற்ப விழா ஒழுங்கமைப்பாளர்களால் படிநிலை மரியாதை கொடுக்கப்படல் வேண்டும். இதெல்லாம் தெரியாமலா நீங்கள்??? அப்புறம் வாசலில் காவலில் நிற்பவர்களுக்கு இன்னன்னாரை வாசலில் நிறுத்த வேண்டும் என்றும் விழா ஒருங்கிணைப்புக்குழு ஆணையிடுதலும் உண்டு. அதை சிரட்டை என்று நீங்கள் நினைத்தால் அதுவே. கடைசியாக என் மீதான உங்கள் கோபக்கணல் என் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவதில் வந்து நிற்கிறது. என்ன செய்வது அறப்படிச்சவர் எல்லாம் இப்ப இப்படி தான் திரிகிறார்கள் இங்கும் பாராளுமன்றத்திலும். ஆனால் இந்த சீண்டுதல் மற்றும் இழிவு படுத்துதல் என் ஊர் மற்றும் தேசம் மீதான பற்றை அதிகப்படுத்தவே இதுவரை உதவி இருக்கிறது. தொடருங்கள். நன்றி.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நலமா பையன் சார்........ பல நாட்களாக உங்களைக் காணவில்லை. அடிக்கடி நினைப்பில் வருவீர்கள்.......... அங்கே நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் நல்லகண்ணு ஐயா, வெங்கடேசன், ரவிக்குமார் மற்றும் இன்னும் சில இடதுசாரிகளையும் சொல்லலாம். பிரபல அரசியல்வாதிகளில் தொல். திருமா, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், பரவாயில்லை என்றே தோன்றுகின்றது....................... ஆனால் கடுமையான நேர்மை என்பது வெறுங்கையால் முழம் போடுவது போல அரசியலில்............... கடந்த ஒரு வருடத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, நாதக இந்த நான்கு கட்சியைச் சேர்ந்தவர்களின் மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளுக்காக நானும், பலரும் பெரியாரை ஆதரிக்கவில்லை. நீங்கள் சொல்வது சரியே........ இவர்களில் எவரும் பெரியாரின் வழியில் நிற்பவர்கள் என்று நானும் நினைக்கவில்லை. திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் போடும் மக்களும் பெரியாருக்காக போடுவதேயில்லை. சமூக நீதி என்பது ஒரு கோட்பாடும், வாழ்க்கை முறையும். பெரியாரின் வழியே தான் அது எங்கும் பரவியது. தமிழ் மீண்டும் பாரதியின் மூலம் உயிர் பெற்றது போல................... பெரியாரையும், பாரதியையும் தெரியாது............ ஆனால், அவர்கள் நட்ட மரங்களின் கீழ் தான் நாங்கள் இருக்கின்றோம்..........1 point- இங்கிவனை யான் பெறவே
1 pointஇங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்கங்கே மட்டும் நரைத்திருந்த அவன் தலை முடியில் அது தெரியவே இல்லை. கருநிற ஆடை சில இடங்களில் பொசுங்கிப் போய் அவன் வெண்ணிற உடல் சிதைகளின் ஒளியில் பளிச்சிட்டது. அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் துரியோதனன்தான் சிதைக்கு தீ மூட்டப் போகிறான், விருஷகேது அஸ்தினாபுரத்திலிருந்து வரப் போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னும் துரியோதனன் தீ வைக்க எழவில்லை. இரண்டு நாழிகை காத்திருந்த பின்னர் சகுனி அருகில் சென்று துரியோதனனின் தோளில் கை வைத்து ஏதோ சொல்ல முற்பட்டார். துரியோதனன் கீழ் ஸ்தாயியில் உறுமினான். சகுனி கைகளை விலக்கிக் கொண்டு பின்வாங்கிவிட்டார். போருக்கு முன்னரே இடுகாட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் எப்போதோ தீர்ந்துவிட்டிருந்தன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே சந்தனக் கட்டைகள் என்று விதி வகுத்தும் தேவையான சந்தனக் கட்டைகள் இல்லை. இரண்டு நாளாக நெய்யும் தீர்ந்துவிட்டிருந்தது. இன்று இடுகாட்டில் உடைந்த தேர்த்தட்டுகளும், சக்கரங்களும்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. விழுந்திருந்த யானை, குதிரைகளின் உடல் கொழுப்புதான் நெய்யாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தது, ஆனால் சில நிமிஷங்களில் பழகிவிட்டதால் அதை யாரும் உணரக் கூட இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. சுபாகு சகுனியிடம் “நீங்கள் இன்னொரு தடவை சொல்லிப் பாருங்கள்” என்று மெதுவாகச் சொன்னான். சகுனி பெருமூச்செறிந்தார். “இல்லை, அவனை அவன் போக்கில் விட்டுவிடுவோம். துச்சாதனனின் இறப்பைக் கூட ஏற்றுக் கொண்டுவிட்டான், ஆனால் அவனால் கர்ணன் இனி இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. எப்போது அவன் மனதில் அது பதிகிறதோ அப்போது தீ வைக்கட்டும். அவனைத் தனிமையில் விடுவோம், நாம் கிளம்புவோம்” என்று சொன்னார். மரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்த அஸ்வத்தாமன் கிருபரை லேசாக உலுக்கினான். நின்ற நிலையிலேயே கண்ணயர்ந்துவிட்ட கிருபர் சிறு அதிர்ச்சியோடு விழித்துக் கொண்டார். “அரசரை அவர் போக்கில் விட்டுவிடுவோம், பாசறைக்குச் செல்வோம் என்கிறார் காந்தாரர்” என்று அவன் முணுமுணுப்பான குரலில் சொன்னதும் கிருபர் தலை அசைத்தார். அனைவரும் சத்தம் வராமல் பின்வாங்கி பாசறை பக்கம் நடந்தனர். துரியோதனனின் மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் சென்றது அவனுக்குத் தெரியவும் தெரிந்தது, அதே நேரத்தில் தெரியவும் இல்லை. அவன் மனதின் ஒரு சரடு உடன் பிறந்தவனும், தனது நிழலானவனுமான துச்சாதனன் மறைவு கூட தனக்கு இத்தனை பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்து வியந்தது. திடீரென்று அவன் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு நிமிஷம் கழித்து பெரிய குரலெடுத்து அழுதான். அழ ஆரம்பித்ததும் சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் இன்னும் பெரிய குரலெடுத்து விம்மினான். “துச்சா! “ என்று அலறினான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். தாவி எழுந்தான். கர்ணனின் சிதை அருகே சென்று கர்ணனின் கைகளை எடுத்து தன் கண்ணோடு ஒற்றிக் கொண்டு அழுதான். “சுயோதனா!” என்று துயர் ததும்பிய ஒரு பெண் குரல் கேட்டது. தீயை மிதித்தது போல துரியோதனன் அதிர்ந்து திரும்பினான். புதர் மறைவிலிருந்து குந்தியும் யுதிஷ்டிரனும் வெளிப்பட்டனர். துரியோதனன் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். “அன்னையே!” என்று அலறியபடியே குந்தியை அணைத்துக் கொண்டான். அடிபட்ட காட்டு மிருகம் போல கதறினான். குந்தி அவன் மார்பளவுதான் உயரம், அவன் அணைப்பில் மூச்சுத் திணறினாள். யுதிஷ்டிரன் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். “தருமா!” என்று அழுதபடியே திரும்பி அவனையும் தழுவிக் கொண்டான். “யுதிஷ்டிரா, ஏன் வஞ்சமும் போட்டி மனப்பான்மையும் ஆணவமும் அகங்காரமும் உள்ள க்ஷத்ரியராகப் பிறந்தோம்? வேடனாக, மீனவனாக, இடையனாக, குதிரைச் சூதனாக பிறந்திருந்தால் நூற்றைவரும் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்? அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால்…” என்று துரியோதனன் விம்மினான். தருமன் ஒன்றும் பேசவில்லை. வெறுமனே துரியோதனன் கைகளைப் பிடித்துக் கொண்டான். குந்தி துரியோதனன் முதுகை நீவிக் கொடுத்தாள். “குதிரைச் சூதனாகப் பிறந்த இவனையும் நான் நிம்மதியாக வாழவிடவில்லை, அவனையும் அரசனாக்கி இந்த க்ஷத்ரிய நரகத்தில் ஆழ்த்திவிட்டேன்!” என்று துரியோதனன் விசும்பினான். மெதுமெதுவாக துரியோதனனின் மார்பு குலுங்குவது அடங்கியது. மீண்டும் தரையில் சரிந்து உட்கார்ந்தான். யுதிஷ்டிரனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். தழுதழுத்த குரலில் “உனக்கு ஆயிரம் கொடுமை இழைத்த எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கிறாய், உன் பெருந்தன்மை யாருக்கு வரும்! துஷ்யந்தனும் பரதனும் யயாதியும் ஹஸ்தியும் குருவும் அல்ல, நீயே குரு வம்சத்து அரசர்களில் அறச்செல்வன்!” என்று துரியோதனன் மேலும் அழுதான். “நான் அத்தனை உத்தமன் அல்லன்” என்று யுதிஷ்டிரன் முனகினான். குந்தி பேச வாயெடுத்தாள்.அவளுக்கு வார்த்தை திக்கியது. மீண்டும் மீண்டும் அவள் தொண்டை ஏறி இறங்கியது. இப்படியே சில நிமிஷங்கள் போனதும் அவள் யுதிஷ்டிரன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். யுதிஷ்டிரன் இரண்டு கட்டை விரலும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டிருந்த கர்ணனின் பாதங்களையே நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவை குந்தியின் பாதங்கள் போலவே தோற்றம் அளித்தன. அவன் பார்த்த வரையில் கர்ணன், குந்தி இருவருக்கும்தான் பாதத்தின் இரண்டாவது, மூன்றாவது விரல்கள் கட்டை விரலை விட நீண்டவை. திடீரென்று குந்தி தெளிவான, உறுதியான குரலில் “கர்ணன் என் மைந்தன், அவனே நூற்றைவருக்கும் மூத்தவன், அஸ்தினபுரி அரியணை அவனுடையது” என்றாள். களைப்பால் மூடி இருந்த துரியோதனன் விழிகள் சட்டென்று திறந்தன. குதித்து எழுந்தவன் கால் தடுமாறி கீழே விழப் போனான். தருமன் அவனைப் பிடித்துக் கொண்டான். “உன் சிறிய தந்தையை மணம் புரிவதற்கு முன்பே அவனைப் பெற்றேன். பழி அச்சத்தால் அவனை கைவிட்டேன். அவனை என் மகன், அஸ்தினபுரியின் வாரிசு என்று சொல்ல எனக்கு வாய்ப்புகள் இருந்தன, ஆனால் என் தயக்கங்களால் நான் அவற்றை நான் கை தவறவிட்டேன். இந்தப் போருக்கு முன் அவனிடம் உண்மையைச் சொன்னேன், மூத்த பாண்டவனாக அரியணை ஏறும்படி கேட்டேன். கொடை வள்ளல் இரவலனை மறுத்த ஒரே தருணம் அதுதான், துரியோதனனுக்காக மட்டுமே போரிடுவேன் என்று என்னை மறுத்துவிட்டான்” என்று குந்தி தொடர்ந்தாள். துரியோதனனின் மார்பு விம்மி விரிந்தது. “எனக்காக குருதி உறவையும் துறந்தானா?” என்று மெல்லிய குரலில் முனகினான். குந்தியின் குரல் தாழ்ந்தது. “அவனும் என்னிடம் ஒரு வரம் கேட்டான். அவன் இறந்தால் அவன் என் மகன் என்பதை ஊரறியச் சொல்ல வேண்டும், யுதிஷ்டிரன் அவனுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டும்” என்றாள். துரியோதனனின் மனம் குந்தியின் முந்தைய சொற்களிலேயே சுழன்றுகொண்டிருந்தது. “ஒரு தாய் மக்கள் என்று அறிந்திருந்தும் என் பக்கமே நிலை மாறாது நின்றானா? அட என் சொந்தச் சகோதரன் யுயுத்ஸு கூட எனக்கு எதிராக போரிடுகிறானே!” என்றான் “விசுவாசத்துக்கு, நட்புக்கு இலக்கணம் இவன்தான்! வரலாறு என்னைப் பற்றி நல்லபடியாக ஏதாவது சொல்லும் என்றால் அது நான் கர்ணனின் நண்பன் என்பது மட்டும்தான்” என்று துரியோதனன் சிரித்தான். சில நிமிஷங்கள் முன் வரை துக்கத்தில் முழுகி இருந்த துரியோதனனா இவன் என்று யுதிஷ்டிரன் வியந்துகொண்டான். “நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவனை கிண்டல் செய்வேன், உனக்கு அர்ஜுனனின் மூக்கு, யார் கண்டது அர்ஜுனனின் தந்தைதான் உனக்கும் குருதித் தந்தையோ என்னவோ, உன் தாய் உன்னை ஆற்றிலே விட்டுவிட்டாள், அர்ஜுனனின் தாய் அவனை முழுமையாக ஏற்றிருக்கிறாள் என்பேன். அவன் எனக்கு அர்ஜுனன் மூக்கு அல்ல, அர்ஜுனனுக்குத்தான் என் மூக்கு என்று சொல்லிச் சிரிப்பான். ஒரே தந்தை அல்ல, ஒரே தாய்!” குந்தி விம்மினாள். “நான் பீஷ்மரையும் துரோணரையும் என்றும் அஞ்சியதில்லை. அவர்கள் என் மைந்தரை வெல்லலாம், ஆனால் ஒரு நாளும் அவர்கள் கையால் என் மைந்தருக்கு இறப்பில்லை. நான் எப்போதும் அஞ்சியது கர்ணன் ஒருவனைத்தான். உண்மை தெரிந்தால் அவனையும் அஞ்ச வேண்டி இருக்காது என்று நினைத்தேன், ஆனால் உங்களுக்கு ஆறு மைந்தர் எப்போதுமில்லை, ஐந்து மட்டும்தான் என்பதுதான் உங்கள் ஊழ் என்று சொல்லிவிட்டான்” துரியோதனன் திரும்பினான். “இன்னும் என்ன ஒளிவு மறைவு? வாருங்கள்” என்று அழைத்தான். பீமனின் பேருருவம் முதலில் வெளிப்பட்டது. சீரான காலடிகளோடு அவன் முன்னால் வர, மற்ற மூவரும் தயக்கத்துடன் அவனைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பின்னால் வந்த திரௌபதியின் கூந்தலில் அங்கங்கே சிவப்பு நிறம் திட்டுதிட்டாகத் தெரிந்தது. கடைசியாக சிறிதும் மாசில்லாத உடையுடனும் மயில் பீலியுடனும் கிருஷ்ணனும் வந்தான். பீமனின் கண்களில் கேள்வி தெரிந்தது. துரியோதனன் தன் மூக்கின் அடியில் விரல்களை சுழற்றிக் கொண்டான். “உண்மை, நீ காட்டு விலங்குதான், உன் ஓங்கிய உடலையும் உன்னால் புலி மறைந்திருப்பது போல மறைத்துக் கொள்ள முடியும்தான். ஆனால் இடுகாட்டிலும் உன் உடலிலிருந்து வரும் நிண நாற்றம் தனியாக தெரிகிறது பீமா!“ என்று துரியோதனன் சொன்னான். பீமன் புன்னகைத்தான். “என்னடா இது வெறும் தசை மலையான உன்னிடம் விற்போரில் எப்படி பதினான்காம் நாள் தோற்றான் என்று வியந்து கொண்டிருந்தேன், இன்றுதான் புரிகிறது, அவனுக்கும் தானாடாவிட்டாலும் தன் சதை ஆடிவிட்டது” என்று துரியோதனன் சிரித்தான். பீமன் புன்னகைப்பதை நிறுத்தவில்லை, ஆனால் அவன் கண்ணோரம் ஈரம் தெரிந்தது. “தம்பியர் உயிர் அவன் கொடுத்த கொடை! உன் உயிர் கூடத்தான் பார்த்தா!” என்றான். அர்ஜுனன் தன் தலை முடியை சிலுப்பிக் கொண்டான். கண்ணன் அவன் காதருகே ஏதோ முணுமுணுத்தான். “ஆம் எனக்கு இப்போதுதான் எல்லாம் புரிகிறது. என் தோழனின் வள்ளன்மையைப் பற்றி உனக்கு ஏதாவது ஐயம் இருந்தால் உன் தோழனிடம் கேட்டுக் கொள்! அவன் நினைத்திருந்தால் போருக்கு வந்த முதல் நாளே உன்னைத் தேடி வந்து போரிட்டிருக்கலாம், சக்தி ஆயுதம் உன்னைக் கொன்றிருக்கும். ஒரு வேளை உன் சாரதி அன்று நீங்கள் நேருக்கு நேர் போரிடுவதைத் திறமையாகத் தவிர்த்திருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் அவன் சம்சப்தகனாக உன்னை எதிர்த்திருக்கலாம், இந்த மாயவனாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஜயத்ரதனை நீ தேடி வந்தபோது உன் தமையன் உன்னைக் கொன்றிருக்கக் கூட வேண்டாம், உன்னோடு நேரடியாகப் போரிட்டிருந்தாலே போதும், உன்னால் அவனை மீறி ஜயத்ரதனை அணுகி இருக்க முடியாது, நீயே தீக்குளித்து இறந்திருப்பாய், உன் உயிர் அவன் போட்ட பிச்சை!” துரியோதனன் குரல் ஓங்கி ஒலித்து அடங்கியது. அவனுக்கு மூச்சிரைத்தது. பாண்டவர்களும் திரௌபதியும் குந்தியும் குனிந்த தலை நிமிரவில்லை. கண்ணன் மட்டுமே புன்னகை மாறாத முகத்தோடு துரியோதனை நேருக்கு நேர் பார்த்தான். துரியோதனனின் முகம் பிரகாசித்தது. அவனது நெஞ்சுக் கூடு மேலும் விம்மி விரிந்தது. அவனது ஒரு மயிர்க்காலிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சுடர் விட்டன. “இவனும் பீஷ்மரும் துரோணரும் இருந்தும் தோற்கிறோமே என்று என் மனதில் இருந்த உறுத்தல் இப்போதுதான் தீர்ந்தது. என் தோழன் போட்ட பிச்சைதானா உங்கள் வெற்றி! இனி நீங்கள் வென்றால்தான் என்ன?!” என்று சிரித்துக் கொண்டான். நாலடி எடுத்து குந்தியின் அருகே சென்றான். குந்தியின் மோவாயில் கையைக் கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். “அது எப்படி அன்னையே? பிறந்ததும் அவனை ஆற்றில் விட்டீர்கள். அவனிடம் ஒரு வார்த்தை கருணையுடன் பேசியதில்லை. குதிரைச் சாணத்தின் நாற்றம் வீசுகிறது என்று இந்த பீமன் இழித்துரைக்கும்போது தமையன் என்று சொல்ல உங்கள் ஆசைகள் உங்களைத் தடுத்தன, சரி. ஆனால் இது முறைமை அல்ல, அவனை இழிவாகப் பேசாதே என்று பட்டும் படாமலும் அறிவுரைக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லையே! போர் உறுதியான பிறகு மட்டுமே புத்திரபாசம்! நீ மூத்தவன், அரியணை உனக்குத்தான் என்று ஆசை வேறு காட்டி இருக்கிறீர்கள்! இதோ இந்த பாஞ்சாலி உனக்கும் துணைவி ஆவாள் என்று கூட சொல்லி இருப்பீர்கள்! இதெல்லாம் இந்தக் மாயக்கண்ணனின் ஆலோசனையாகத்தான் இருக்கும், இருந்தாலும் உங்கள் நா கூசவில்லையா அன்னையே!” என்று மெல்லிய குரலில் கேட்டான். பீமன் மடிந்து தரையில் அமர்ந்தான். “என் தமையன்! அவனை, அவன் ஆற்றலை என்றும் பழித்திருக்கிறேன். பதிலுக்கு பதிலாகக் கூட உன் மேல் அடுப்புக்கரி வாசம் என்று அவன் சொன்னதில்லை” என்று அழுதான். குந்தியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. துரியோதனன் புன்னகைத்தான். “அவன் கேட்டிருக்க மாட்டான், அவனுக்காக நான்தான் கேட்க வேண்டும். நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?” குந்தியின் வாய் சிறிய வட்ட வடிவில் திறந்தது. அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்ணீர் கூட நின்றுவிட்டது. துரியோதனன் சுற்றுமுற்றும் பார்த்தான். பீமனின் அருகே சென்று முழந்தாளிட்டான். “நீயும் நானும் அவனும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள். பீமன் கௌரவனாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் அடிக்கடி சொல்லுவான், அவன் – நானும் – நெருக்கமாக உணர்ந்த எதிரி நீயே, என்றாவது நீ வீர சுவர்க்கம் போனால் உன்னை மெய் தழுவி வரவேற்கப் போகும் முதல் வீரன் அவனாகத்தான் இருப்பான். நாம் நம் வஞ்சங்களுக்கு அடிமையானோம், ஆனாலும் அவன் ஆசி – என் ஆசியும் – உனக்கு எப்போதும் உண்டு” என்று அவன் தலையைத் தொட்டான். பீமன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பினான். துரியோதனன் எழுந்தான். கர்ணனின் உடலருகே சென்று அவன் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.“செத்தும் கொடுக்கிறாய் கர்ணா! நானும் உன் பின்னால் தொடரத்தான் போகிறேன், ஆனால் உன் நண்பன் என்ற பெருமிதத்தோடு இறப்பேன். அற்பர்களால் உன்னை நேர்மையான போரில் வெல்ல முடியுமா என்ன?” என்று தழுதழுத்தான். பிறகு யுதிஷ்டிரன் பக்கம் திரும்பினான். “யுதிஷ்டிரா, அவனைத் திட்டமிட்டு கொன்ற உன் அன்னை இன்று வந்து கண்ணீர் வடிப்பது நீலித்தனம். நீங்களே அவனைக் கொன்றுவிட்டு கொள்ளியும் வைப்பீர்களா? அவனே வரமாகக் கேட்டிருந்தாலும் சரி, உனக்கு இவன் சிதைக்கு தீயூட்டும் தார்மீக உரிமை இல்லை. நீங்கள் போகலாம்” என்று திட்டவட்டமாக அறிவித்தான். பிறகு மீண்டும் திரும்பி கர்ணனின் உடலை நோக்கினான். இரண்டு நிமிஷத்தில் அவன் தோளில் ஒரு கை படிந்தது. நீளமான அழகிய கருமை நிற விரல்கள். எதுவுமே நடக்காத மாதிரி துரியோதனன் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவன் உடல் இறுகியது. அவன் உதடுகள் அழுந்தின. “இல்லை கண்ணா, என் உறுதி மாறாது” என்றான். “கர்ணனின் உடலுக்கு யார் தீயூட்டுவது என்பது உன் முடிவு மட்டுமே. நானோ, அத்தையோ, யுதிஷ்டிரனோ அதைத் தீர்மானிக்க முடியாது. கர்ணனே தருமன்தான் தன் உடலுக்கு தீயூட்ட வேண்டும் என்று அத்தையிடம் வரம் கேட்டிருந்தாலும் அதையும் மாற்றும் உரிமை உனக்குண்டு” என்று மிருதுவான குரலில் துரியோதனனின் தோளை அழுத்திக் கொண்டே கண்ணன் சொன்னான். துரியோதனன் திரும்பி கண்ணனை கண்ணீருடன் பார்த்தான். “அவன் அபூர்வமாக இன்னொருவரிடம் ஒன்றைக் கேட்டிருக்கிறான், அதையும் அவனுக்கு மறுக்கிறேனே” என்றான். “வீர சொர்க்கத்திலிருந்து அவன் உன் முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், உனக்கு எந்த யோசனையும் வேண்டாம்” என்று கண்ணன் புன்னகையோடு சொன்னான். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!” என்று துரியோதனன் மிருதுவான குரலில் புலம்பினான். கண்ணன் அவனை அணைத்துக் கொண்டான். யுதிஷ்டிரனுக்கு கண் காட்டினான். அவர்கள் மெதுவாக இடுகாட்டை விட்டு விலகத் தொடங்கினர். கண்ணனும் தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நகுலனிடம் “இது பெரும் துக்கம். ஒரே நாளில் துச்சாதனனும் இவனும் இறந்திருக்கக் கூடாது” என்று சொன்னான். துச்சாதனனின் பேரைக் கேட்டதும் துரியோதனனின் முகம் இறுகியது. அவன் தாவி கண்ணனின் வலது கையைப் பிடித்தான். கண்ணன் திரும்பி தன் கண்களாலேயே என்ன என்று வினவினான். துரியோதனன் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் மனதில் ஏதோ தீவிர சிந்தனைகள் ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. பாண்டவர்கள் காத்து நின்றனர். ஒரு நிமிஷம் கூட சென்றிராது, ஆனால் அது ஒரு யுகமாகத் தெரிந்தது. துரியோதனன் “அடப்பாவி” என்று முனகினான். மீண்டும் மௌனமானான். கண்ணனைத் தவிர்த்த மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். மேலும் இரண்டு நிமிஷம் கழித்து வலுத்த குரலில் “துரோகி!” என்று உறுமினான். அருகே இருந்த நெய்ப்பந்தத்தை எடுத்து யுதிஷ்டிரனை நோக்கி எறிந்தான். பீமன் பாய்ந்து அது தருமன் மீது படாமல் பிடித்துக் கொண்டான். “அவன் என் தோழன் அல்லன், உங்கள் தமையன் மட்டுமே!” என்று கத்தியபடியே தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து கொண்டான். “தன் தம்பியரின் உயிரைக் காக்க என் தம்பியரை, ஏன் என்னையே பலி கொடுத்துவிட்டான்!” சிங்கத்தைப் போல உறுமிக் கொண்டே அருகில் இருந்த அடிமரத்தை உதைத்தான். மரம் ஆடி மீண்டும் நிலை கொண்டது. “நான் இவனைத்தான் முழு மனதாக நம்பினேன், பீஷ்மரையும் துரோணரையும் நம்பி போர் தொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் தன்னை நிராகரித்த அன்னை ஒரு வார்த்தை சொன்னதும் மற்ற நால்வரையும் கொல்லேன் – அதுவும் என்னைக் கொல்லப் போவதாக சூளுரைத்திருக்கும் இந்த பீமனையும் கொல்லேன் – என்று வாக்களித்திருக்கிறான். அர்ஜுனனைக் கொல்லக் கிடைத்த வாய்ப்புகளையும் அவன் வேண்டுமென்றேதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அன்னை என்று தெரிந்த அன்றே பாண்டவர் வெல்ல வேண்டும், நான் தோற்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான், தன் மேல் பழி வரக்கூடாது என்பதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான். பீமனிடமிருந்து இவனைக் காக்க எத்தனை தம்பியர் அன்று ஒரே நாளில் உயிர் இழந்தனர்? அடப்பாவி! இதுதானா உன் செஞ்சோற்றுக்கடன்? குதிரைச் சாணம் பொறுக்க வேண்டிய உன்னை அரசனாக்கி தோழன் என்று மார்போடு அணைத்து கொண்ட எனக்கு நீ காட்டிய விசுவாசம் இதுதானா? சுப்ரியையை சேடியாக அல்ல, சகோதரியாகவே கருதினாளே பானு! உங்கள இருவருக்கும் எத்தனை விமரிசையாக திருமணம் செய்து வைத்தாள்? அவளுக்கும் துரோகமா? உன்னை நம்பி மோசம் போனேனே! துச்சா! துச்சா!” என்று அலறினான். “அய்யோ! அய்யோ!” என்று தலையில் அடித்துக் கொண்டான். ஓநாய் போல ஊளையிட்டான். சகதேவன் தவிர்த்த மற்ற பாண்டவர்களும் குந்தியும் திகைத்து நின்றனர். யாருக்கும் வார்த்தையே எழவில்லை. கிருஷ்ணன் தனது வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தான். சகதேவன் மட்டும் முன்னகர்ந்து துரியோதனனை அணைத்துக் கொண்டான். துரியோதனன் சகதேவன் தோளில் சாய்ந்து அழுதான். சகதேவன் துரியோதனனின் தலை முடியைக் கோதினான். “உங்கள் துக்கம் எங்களுக்கும் உண்டு அண்ணா! என்ன செய்வது, இவை அனைத்தும் சூதாட்டத்தின்போதே முடிவாகிவிட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் அடி மனதில் இன்னும் பாசம் வற்றவில்லை. இரண்டாமவரின் ரத்தத்தை தலையில் பூசிக் கொண்டபோது பாஞ்சாலியும் கண்ணீர் உகுத்தாள் என்பது உங்களுக்கு வியப்பளிக்கலாம், ஆனால் உண்மை” என்றான். துரியோதனன் நிமிர்ந்து திரௌபதியைப் பார்த்தான். பெருங்குரலெடுத்து அழுதான். “உயிர் நண்பன் என்று நம்பியவன் துரோகம் செய்துவிட்டான். நான் இழிவுபடுத்திய எதிரிகள் என் மீது பாசம் காட்டுகிறீர்கள்” என்று விக்கிக் கொண்டே சொன்னான். தருமன் தன் கச்சையிலிருந்து ஒரு மதுக் குப்பியை எடுத்து நீட்டினான். துரியோதனன் விம்மிக் கொண்டே இரண்டு மிடறு மதுவை அருந்தினான். மது அவன் வாயோரம் கொஞ்சம் வழிந்தது. பீமன் திடீரென்று கடகடவென்று நகைத்தான். “அவன் உடலுக்கு தீயூட்டும் தார்மீக உரிமை எங்களுக்கு இல்லைதான். ஆனால் உனக்கும்தான் இல்லை. இறந்த பிறகும் அவனுக்கு விடிவுகாலம் இல்லை. அவன் உடலை நாயும் நரியும் தின்னத்தான் விடப் போகிறோம்! உன் விதி அதிசயமானதுதான் அண்… அண்… அண்ணா!” அதே மூச்சில் அவன் நகைப்பு அழுகையாக மாறியது. துரியோதனன் புரியாமல் தலையை உயர்த்தினான். “மூடா, எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, விருப்பம்தான் இல்லை. அவன் வாழ்வே நான் போட்ட பிச்சை” என்றான். “பிச்சை போட்டிருக்கிறாய். அதாவது, நீ புரவலன், அவன் இரவலன். நீ எஜமானன், அவன் பணியாள். சமமான தோழர்கள் இல்லை” என்று பீமன் முகத்தை சுளித்தான். துரியோதனன் அடிபட்டது போல தள்ளாடினான். “இல்லை…” என்று வாயெடுத்தான், உடனே மௌனமானான். “அவனை அரசனாக்கினேன், க்ஷத்ரியன் என்று ஏற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுகிறாயே, நீ ஏன் துச்சளையை அவனுக்கு மணம் செய்து வைக்கவில்லை? அவன் வீரமும் கவசமும் குண்டலமும் கொடையும் குணமும் அப்போது உன் கண்ணில் படவில்லையா?” “இல்லை… அதாவது… வந்து… தந்தையும் அன்னையும் மறுத்திருப்பார்கள்” “ஓ! தந்தை சொல்லை மீறமாட்டாய்! அப்புறம் எப்படி கண்ணன் தூதை மறுத்தாய்?” “கர்ணன் துச்சளைக்கு சகோதரன் முறை, அவனுக்கு எப்படி துச்சளையை…” “அது இப்போதுதானே உனக்குத் தெரியும்!” துரியோதனன் மௌனமானான். ஆனால் பீமன் நிறுத்தவில்லை. “சரி ஏதோ உள்ளுணர்வால் உறவு முறையைப் புரிந்து கொண்டிருந்தாய் என்றே வைத்துக் கொள்வோம். நூற்றுவரின் மனைவியர் எவருக்கு தங்கைகள் இல்லையா? நீ அழுத்தம் கொடுத்திருந்தால் மறுக்க முடிந்திருக்குமா என்ன? அது என்ன சூதப் பெண்ணும் சேடிப் பெண்ணும்தான் அவனுக்கு மனைவியரா? உன் பட்டமகிஷியின் சேடியை அவனுக்கு மனைவி ஆக்கி இருக்கிறாய்! நாய் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம்தான், ஆனால் அதற்காக நாயை நம் இலையிலிருந்தே சாப்பிடவிடுவதில்லை. அவனை நீ நாயாகத்தானே பார்த்திருக்கிறாய்?” துரியோதனன் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தை நோக்கினான். “உண்மையைச் சொல், அவன் ஏறக்குறைய அர்ஜுனனுக்கு சமமான வீரனாக இல்லாவிட்டால் உன் தோழன் என்று சொல்லிக் கொண்டிருப்பாயா?” துரியோதனன் குனிந்த தலை நிமிரவில்லை. பீமன் தொடர்ந்தான். “அவன் வாழ்நாள் முழுவதும் தேடியது அங்கீகாரம். உனக்கு அவன் தோழன் அல்ல, வெறும் தொண்டு செய்யும் அடிமை. அவனை ஒரு க்ஷத்ரியனாக நீயும் முழு மனதாக ஏற்கவில்லை. எங்கள் கதையோ, என்னத்தைச் சொல்ல! பிதாமகர் அவனை நல்ல வீரனாக அங்கீகரிக்கவில்லை. துரோணர் அவனை நல்ல மாணவனாக அங்கீகரிக்கவில்லை. பரசுராமரைப் பற்றி சொல்லவே வேண்டாம். உன்னிடம் கிடைத்த குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக, வெறும் சோற்றுக் கடனிற்காக உயிரைக் கொடுத்திருக்கிறான். என் தாய் தானம் கேட்டபோது அவனால் வாழ்க்கையில் முதல் முறையாக சூதன் என்ற இடித்துரைப்புகளிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் தர அவன் தயாராக இருந்திருக்கிறான்” என்று கசப்போடு நகைத்தான். கண்ணனே பீமனை வியந்து நோக்கினான். பீமனின் முகம் இறுகிக் கிடந்தது. “அவனை இத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது, கண்ணா! ஆனால் இந்த நால்வரையும் எத்தனை தூரம் அறிவேனோ அதே போலத்தான் இப்போது இவனையும் அறிந்திருக்கிறேன். மூத்த பாண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!” என்று பீமன் விரக்தியோடு நகைத்தான். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பிறகு துரியோதனன் அங்கிருந்த பந்தத்தை எடுத்தான். பீமனின் உடல் தன்னிச்சையாகத் துள்ளியது. ஆனால் துரியோதனன் சிதை பக்கம் போகவில்லை, பந்தத்தை யுதிஷ்டிரனிடம் கொடுத்தான். யுதிஷ்டிரனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் திருப்பி பந்தத்தை துரியோதனனின் கையிலேயே திணித்தான். துரியோதனன் யுதிஷ்டிரனின் கையோடு சேர்த்து பந்தத்தைப் பிடித்துக் கொண்டான். இருவரும் முன்னகர்ந்து ஒன்றாக சிதைக்கு தீயூட்டினர். குந்தி பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள். https://solvanam.com/2024/10/13/இங்கிவனை-யான்-பெறவே/1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
எம்ஜிஆருக்காக இரண்டு பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கின்றார். அதில் ஒன்று இது. நீதிக்குத் தலை வணங்கு திரைப்படத்தில் புலமைப் பித்தன் பாடலுக்கு எம்எஸ்வி இசை அமைத்திருப்பார்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமானின் கட்சி, "புத்திசாலிகளால் முட்டாப் பீசுகளுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சி" என்ற விம்பம் வலுவாக உருவாகி வருகிறது. "யாரும் பெரியார் நூல்களைப் பதிப்பிக்கலாம்" என்ற திறந்த பதிப்புரிமை இருக்கிறதாம். ஆனால், "பெரியாரின் வெளிப்படுத்தல்களை அரசுடைமையாக்கி வெளியிட்டால் தான் அதை ஏற்போம்!" என்று உடும்பாவனம் கார்த்திக் சொல்லியிருக்கிறாராம்😂. பிபிசி, விடுதலை பத்திரிகை மூலப் பிரதியை அப்படியே வெளியிட்ட பின்னரும், சீமானின் பொய்யை முரட்டு முட்டுக் கொடுத்து தாங்கும் வேலையைச் செய்வோர், 'தமிழ் மொழிக் காதலர்கள்" என்று நம்ப முடியவில்லை!1 point- பொங்கல் சிரிப்புகள்.
1 point1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சாப்பிட்டபின் வயிற்றை தடவினால் வயிறு பெருக்கும்😂 பெண்கள் பச்சையாக அரிசி சாப்பிட்டால் கல்யாண தினமன்று நல்ல அடை மழை பொழியும் (எந்த மழை😂)1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உண்மை. 2008 ல் போர் உச்சதில் இருந்த போது ஜெயலலிதா பேசினார். இந்த கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் அட்டகாசம் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கி இருப்பேன் என்று. அவரை தான் ஒரு சில ஆண்டுகளில் சீமான் ஈழத்தாய் என வர்ணித்து அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள்.1 point- பொங்கல் சிரிப்புகள்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக இருப்பாரென நம்புகிறேன். பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார். "சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointஇந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..1 point- திண்ணை
1 pointகணக்க விசயம், இருக்கு, நியாயம் பிளக்க. ஒரு அலுவலா பிசி. முடிச்சிட்டு வாறன். 👍! வன்னியர், கவ் ஆர் யூ? 😜 உடான் சுவாமியார் ஆசீயோட, நித்தியானந்தா சுவாமிகள் ஆசீரமத்தில நீண்ட நிஸ்டையில் இருந்தேன். கனவில் வர சிஸ்சைகள் விட்டிருக்காகினமே 🤔1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- புலம்பெயர் இலங்கை ஏதிலிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!